Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 03/22/24 in all areas
-
நானும் ஒரு அடிவிட்டன்
9 pointsநானும் ஒரு அடிவிட்டன் எண்பத் தைந்துகளின் பிற்பகுதி பள்ளிக்கூடக் காலத்தில் கலக்கல் கோலி… கொழும்பில் இருந்தாலும் அவசர அழைப்பில் அல்வாயில் நிற்கும் காலம்… இறுதி ஆட்டமொன்று.. இறுக்கமான இரண்டு குழுவும்… இடையில் நடுவராக உடுப்பிட்டியின் உயர்ந்த ஜம்பாவான்…. ஆறடிக்கு மேல் உயரம்… அதுதான் பரவாயில்லை.. பிரதம அதிதி. பொலிசு அதிகாரி… அம்பயரின்…மைத்துனரம்.. அதுவும் பெரும்பான்மை இனம்.. மோதும் அணி இரண்டும் ஏலவே பிக்கல் புடுங்கல் உள்ளவை நடத்தும்..அணியும் நமக்கெதிரானதுதான்…. ஆட்டம் ஆரம்பம்…. அடி உதையும் நடக்குது…. முதல் கோல் நமக்கு… அம்பயரோ…ஆஃப்சைடு என்கிறார்…. கோல் அடித்தவனோ..இல்லை கோல் அம்பயர் ..மறுக்க அடிதடி… கோலிக்கு நின்ற எனக்கு கோபத்தின் உச்சம்… கோதாரி விழுந்தது.. கோலிக்கு நின்ற நான் ஹோலி யாகமாறி.. ஆறடி அம்பயரின் பிடரியில் அசத்தலான அடிவிட்டேன்.. ஆட்டமே அல்லோல கல்லோலம் அம்பயர் சொன்னார் ஆரடித்தாலும் பரவாயில்லை அலிஷ்பாண்ட் போட்ட பிளேயர் அடித்ததுதான் பொறுக்க முடியவில்லை.. அந்த பொலிசு அதிகாரியும் அம்பயர்…என் மைத்துனன் அவனை என் கண்முன்னால் அடித்த அந்த பிளேயர் ஆரென்றாராம்… ஆரவாரம் இப்ப டி இருக்க.. ஆட்கள் என்னைப் பிடித்து அலிஸ்பாண்டையும் பறித்து ஆளையும் உருமாற்றி அல்வாயுக்கு அனுப்பிய கதை.. அப்புறம் ஆறடி அம்பயர் என்றால்.. அந்தப் பக்கமே அடியேன் இல்லை…9 points
-
புலம் பெயர்ந்த புகை
8 pointsநாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன. சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. ******************** புலம் பெயர்ந்த புகை ---------------------------------- இங்கு வந்த நாங்கள் இப்பொழுது இறக்க தொடங்கி விட்டோம் கடைசியில் ஒரு இடு வீட்டில் ஒரு வாரம் விறைப்பாக கிடந்து அங்கிருக்கும் புகை போக்கியால் எரிந்த மெய் புகையாக போகின்றது நாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது இன்றே ஏன் வாழக்கூடாது எவருக்கும் சொல்லத் தெரியவில்லை இன்று அவர் ஓடுகின்றார் ஆகவே இவரும் ஓடுகின்றார் இன்று அவர் வாங்குகின்றார் ஆகவே இவரும் வாங்குகின்றார் பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை திடீரென பெய்த மழையில் கொத்தாக குருவிகள் ஒதுங்கின வீட்டுக் கூரைக்குள் கிச் கிச் கீச்சென்று ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன துளி விழுந்து துள்ளி ஓடி வந்தது வெளியே போன குஞ்சு ஒன்று அகமும் விழியும் இருந்தால் இந்த வாழ்க்கை சமமே இங்கும் அங்கும்.8 points
-
கண்டால் வரச் சொல்லுங்க…
5 pointsகண்டால் வரச் சொல்லுங்க… கார் களவெடுக்கும் தம்பி… கண்டால் வரச் சொல்லுங்க… கனடா…கார் களவெடுக்கும் தம்பியை.. கண்ட இடமும் அலையாமல் நேராய் வரச் சொல்லுங்க.. முத்தத்தில் மூணுகாரு.. மினுக்கிக் கொண்டு நிற்கும்… முதல் ஆளு..கமரி பார்க்கப் பளபளப்பா நிற்பார்.. பற்ரறி மாத்தவேணும்.. மூணு நாளைக்கு ஒருக்கால் ஒயில் விடவேணும்.. பார்ட்ஸ் எல்லாம் பழசு.. பார்த்துத் தூக்கு தம்பி.. அக்கூரா அடுத்து நிற்பார்.. ஆளு வாட்ட சாட்டமாய் இருப்பார்.. இப்பதான் அடிவாங்கி ஆசுபாத்திரியால் வந்திருக்கார்.. அவர் சுக நலம் இன்னும் எனக்கே தெரியாது… பார்த்து எடுடா தம்பி… பார்ட்ஸ் ஏதாவது கழண்டும் விழலாம்.. பலமான அடிவாங்கிய ஆள் தம்பி.. மூணாவது பி .எம் டபிள் யு.. தளுக்கி மினுக்கி சும்மா தகதக வென்று .. மினுங்குவார்… இவர் ..சுக நலம் நானறியேன்… வந்து மூன்று நாள்தான். என்னைக்கேட்டால் எதுவும் தெரியாது.. ஏனெனில் அது நிலக்கீழ் வீட்டுகாரனுடையது…. கராச்சுக்குள் .. இரண்டுபேர் நிக்கினம்.. இரண்டு பேரும் புது இறக்குமதி… தொட்டால் சுள்ளிடும்.. கிட்டப் போனாலே குய்யோ முறையோ என்று சத்தமும் போடுவினம்… அதைவிட … இந்தக் கார்களில் நீ கைவைத்தால் நான்தான்…வாங்கிக் கட்ட வேணும்.. அதாலை நான் நைற் வாச்சர். யாராவது ..கண்டால் வரச்சொல்லுங்க கனடா கார் கள்ளனை கண்டவுடன்… நான் இதில் சொன்னதையும் சொல்லிவிடுங்க….அவனை கண்டால் வரச்சொல்லுங்க.. காண ஆசையாய் ..இருக்கென்று.. வேண்டாமிந்த விபரீத ஆசை (யாவும் கற்பனையே)5 points
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை. யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும். எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது. இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும். இங்க என்ன பேச வேண்டும் என்ன பேசக் கூடாது என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.3 points
-
யாழ்ப்பாணம் - A melodic Tale
3 pointsசாம் சூசைட் பண்ணப் போறான் எனும் நகைச்சுவை குறும்படத்தை எடுத்தவர்களின் அடுத்த படைப்பு. பார்த்து விட்டு பகிருங்கள்.3 points
-
ஒரு பொய்
2 points(குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.2 points
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத திரிபு சொல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை. அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க சமக்கிருத அறிஞர்கள் மனு ஸ்மிரிதி , பிரஸ்னோத்தர ரத்னமாலிக்கா போன்ற சமக்கிருத இலக்கியங்களில் பயன்படுத்திய சொல். ஆதி சங்கரர் மண்டல மிஸ்ரா வுடன் வாது புரிகையில் தன்னை "திராவிட சிசு" என்று அறிமுகம் செய்கிறார். அதைப்போலவே ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை (இவரும் ஒரு பிராமணர்) சுட்டுகையில் திராவிட சிசு என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். நால்வரில் மற்றவர்களை அப்படி சொல்லவில்லை. மனு ஸ்ம்ரிதி தமிழர்களை சுட்ட சோழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது , திராவிட என்ற வார்த்தையை அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க பயன்படுத்துகிறது. நான் பல இடங்களில் சொன்ன உதாரணம் தான் மட்டை பந்து ஆட்டக்காரர் ராகுல் திராவிட் , மயிலை சமக்கிருத கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட் சாஸ்திரிகள் இவர்கள் அனைவரும் பிராமணர்கள் , திராவிட் என்பது அவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த குடும்ப பெயர். பிராமணர்களை பொதுவாக பஞ்ச திராவிட என்றும் பஞ்ச கௌட என்றும் இரு கூறுகளாக பிரிப்பர். இதில் பஞ்ச திராவிட என்பது தென்னகத்து பிராமணர்களை குறிக்கிறது, பஞ்ச கௌட வட பிராமணர்களை குறிக்கிறது. திராவிட மேட்ரிமோனி என்று பிராமணர்களுக்கான தெலுங்கானாவில் பதிவு செய்த இணையங்களும் உள்ளன. ராபர்ட் கால்டுவேல் என்ற மொழியியல் அறிஞர் பின்னாளில் தமிழ் மொழிக்குடும்பங்களை சுட்ட தமிழ் மொழி அல்லாத ஒரு பெயரை வைக்கும் எண்ணத்தில் சமக்கிருதத்திலிருந்து "திராவிட" என்ற பதத்தை எடுத்து தவறாக தமிழ் மொழி குடும்பத்தை சுட்ட பயன்படுத்தினார். இதையே நீதிக்கட்சிக்கு பெயர் மாற்றம் செய்யும் வேளையில் கிஆபெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரிடம் வற்புறுத்தியும் 'தமிழர் கழகம்' என்று வைக்காமல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றினார். திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல். தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? , அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம். சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது? ஆரியத்தை தமிழர்களை விட வேறு யாரும் வரலாற்றில் இதுவரை எதிர்த்தது கிடையாது , ஆரியத்திற்கு அடிபணியாத ஒரே மொழி இனம் அது தமிழினம், ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன் , செங்குட்டுவன் என்று அந்த வரிசை நீள்கிறது. ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து, ஆரியம் திராவிடத்தின் பங்காளி, "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு". ஆரியத்தை தமிழர்கள் தான் 2000 வருடங்களாக எதிர்த்து வந்துள்ளனர் , தமிழை மிதித்து ஆரியர்களை கோயில்களில் அனுமதித்து தெலுங்கையும், சமக்கிருதத்தையும் தலையில் வைத்து ஆடியது நாயக்கர்கள், தங்கள் பெயருக்கு முன் ‘வருணாசிரம தர்மங்கனுபாலித்த’ என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர், இவர்கள் வழி வந்த திராவிடர்கள் தான் சாதியை ஒழிக்கப்போகிறார்களா, சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டப்போகிறார்களா ? அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வட வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை , தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை! தமிழன் தமிழனே!2 points
-
புலம் பெயர்ந்த புகை
2 pointsபின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை இது தான் உண்மை . ( வந்தவர் எல்லாம் தங்கி விடடால் இந்த மண்ணில் இடம் எது .... வாழ்கை என்பது வியாபாரம் வருவதும் போவதும் செலவாகும். .....போனால் போகட்டும் போடா........... )2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மழைக்காலம் வந்தால் மண்வாசனை.... தேர்தல் காலம் வந்தால் தார்வாசனை.... காத்துவாக்கில் வந்தது...😎2 points
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
சைவம் தமிழை ஒருபோதும் வளர்க்கவில்லை. தமிழை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சைவம் தமிழைத் தன்னுடன் இணைத்து உரிமை கோருவதன் மூலம் மக்களிடமிருந்து அந்நியப்பட வைக்கிறது. தமிழுக்கு மதம் கிடையாது.2 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 points2 points
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்லவர்களை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும் கெட்டவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் அப்போது தான் நல்லது கெட்டது நமக்கு தெரிய வரும்.2 points- கனடாவில் கார் களவு.
2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsஈழத்தமிழர் தொடர்பான இந்தியக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் டெசோ அமைப்பும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அதே நேரம், தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் ஒன்று உருவாகத் தொடங்கியிருந்தது. ரஜீவுடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்த மாற்றத்திற்கான அடித்தளத்தினை ஜெயார் இட்டிருந்தார். இந்திரா காந்தியின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த ஜெயவர்த்தன, தன்னை இந்தியாவிந்தும், நேரு குடும்பத்தினதும், இந்திய மக்களினதும் உண்மையான நன்பன் என்றும், பெளத்தத்தினை கடைப்பிடிக்கும் நேர்மையான முதிர்ந்த அரசியல்வாதியென்றும், இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் நலன்களை, குறிப்பாக தமிழ் மக்களின் நலன்களைக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட அரசியல்த் தலைவர் என்றும் காட்டுவதில் ஈடுபட்டிருந்தார். ரஜீவ் காந்தியுடனான தனது முதலாவது சந்திப்பில் தான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன் என்றும், நேருவின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவன் என்று ஜெயவர்த்தன கூறினார். 1941 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஒழுங்குசெய்திருந்த ராம்கார் நிகழ்விலும் அவர் பங்குபற்றியிருந்தார். ஜவர்ஹல்லால் நேரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை அவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்கு நேரு அனுப்பிய பதில்க் கடிதங்களையும் நேரு தொடர்பான ஆவணக் காப்பகத்திற்கு ஜெயார் அனுப்பிவைத்திருந்தார். ரஜீவுடன் பேசிய ஜெயார், தமிழர் பிரச்சினை தொடர்பாக சாதகமான தீர்வொன்றினை வழங்க தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும், ஆனால் தன்னைச் சுற்றியிருக்கும் தீவிரவாத அமைச்சர்கள் அதற்குத்தடையாக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழ் ஆயுதக் குழுக்கள் நடத்திவரும் பயங்கவாதத் தாக்குதல்கள் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கும் தனது முயற்சிகளை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு ஏதுவான நிலைமையினை இலங்கையில் உருவாக்குவதற்கு ரஜீவ் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார். மேலும், ரஜீவின் தாயாரான இந்திரா காந்தியும் தமிழ்த் தீவிரவாதிகளால் சூழப்பட்டிருந்ததாக ரஜீவிடம் கூறினார் ஜெயவர்த்தன. அதனாலேயே தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திரா காந்தி பக்கச்சார்பான நிலையினை எடுத்திருந்தார் என்றும் ஜெயார் கூறினார். இந்தியாவின் இந்த பக்கச்சார்பான நிலைப்பாட்டிற்கு ஒற்றைக் காரணமாக பார்த்தசாரதியை ஜெயார் குற்றஞ்சாட்டினார். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பார்த்தசாரதி வகித்த பாகம் தொடர்பாக சிங்கள மக்கள் பலத்த சந்தேகங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் ரஜீவிடம் கூறினார். ஆகவே, புதிய இந்திய அதிகாரிகளை சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரை செய்தார். மேலும், இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடலாம் என்கிற அச்சம் காரணமாக இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது கடிணமானதாக மாறியிருப்பதாகவும் அவர் கூறினார். ரஜீவிடம் மேலும் பேசிய ஜெயவர்த்தன, இனப்பிரச்சினைக்கு நீதியானதும், இறுதியானதுமான தீர்வொன்றினைக் காண்பதற்கு தான் உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பதகாவும், இதனைச் செய்வதற்கு இந்தியா தற்போது எடுத்திருக்கும் தமிழருக்குச் சார்பான நிலையிலிருந்து விலகி, பக்கச்சார்பின்றிச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவுடனான உறவினைப் புதுப்பிக்க தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். அரசியலிலும், இராஜதந்திரத்தில் கற்றுக்குட்டியாகத் திகழ்ந்த ரஜீவ் காந்தி ஜெயார் விரித்த வலையில் அகப்பட்டுக்கொண்டதுடன், ஜெயாருக்கு நான்கு வாக்குறுதிகளையும் அளித்தார். 1. இந்தியா ஒருபோதும் இலங்கையினை ஆக்கிரமிக்காது. 2. பேச்சுவார்த்தைகளில் தூதராகச் செயற்படும் பார்த்தசாரதியை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த இந்தியா விருப்பம் கொண்டிருக்கிறது. 3. இலங்கையுடனான உறவைப் புதுப்பிக்க இந்தியா நாட்டம் கொண்டிருக்கிறது. 4. இலங்கையில் இறையாண்மையும், ஒருமைப்பாடும் இந்தியாவினால் பாதுகாக்கப்படும். ஆனாலும், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே தீர்வு அமைந்திருக்க வேண்டும் என்று ஜெயவர்த்தனவிடம் அழுத்தமாகக் கூறினார் ரஜீவ். அவ்வாறு இல்லாதபட்சத்தில், இனப்பிரச்சினை நீண்டு சென்று, இறுதியில் இலங்கை பிளவுபடுவது நடக்கும் என்றும் ஜெயாரை அவர் எச்சரித்தார். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயார், "உங்களுக்கும் அருகிலிருக்கும் சிறிய நாடுகளின் நம்பிக்கையினை பெற்றுக்கொள்ள முயலுங்கள், நீங்கள் இளமையானவர், பெரியதொரு நாட்டிற்குத் தலைவராக வந்திருக்கிறீர்கள், நீங்கள் நிச்சயம உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறினார்.2 points- என் இந்தியப் பயணம்
1 pointநான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்1 point- அப்பா உள்ளே இருப்பது நீதானா?
1 pointயாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமைகளில் அன்றியாவுக்குச் சொந்தமான, ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரோறண்ட்டுக்கு ஓய்வுநாள். வாரம் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக ரெஸ்ரோறண்ட்டில் இருக்கும் அவளுக்கு, வாரத்தில் திங்கள் ஒருநாள் மட்டும்தான் ஓய்வு. ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட், அவளது தந்தை அல்போன்ஸோ அவளுக்கு விட்டுப்போன சொத்து. ‘ஒரு உணவு விடுதி பத்து வருடங்கள் நன்றாகப் போகும் அதற்குப் பின்னால் ஆட்டம் காணத் தொடங்கும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்ரோறண்ட் முப்பது வருடங்களாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. உழைப்பை மட்டுமல்ல தனது ஆயுளையும் அதற்குத்தான் அல்போன்ஸோ அர்ப்பணித்திருந்தார். ‘அரக்கனின் உயிர் ஏழு கடல்தாண்டி, ஒரு பெரிய மலையில் ஒரு பொந்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது’ என்று சின்ன வயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் அல்போன்ஸின் உயிரும், ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான் அது இருந்தது. அல்போன்ஸுக்கு, பொழுது புலர்ந்து மறைவது எல்லாம் டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான். ஒருநாள் வேலை முடிந்து நள்ளிரவில் அல்போன்ஸ் வீட்டுக்கு வந்த போது, பத்து வயதான அவனது மகள் அன்றியா தனது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனது மனைவி அஞ்சலிக்கா வீட்டில் இல்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு இன்னொருவனிடம் போய்விட்டாள் என்று அல்போன்ஸுக்கு அடுத்த நாள்தான் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அன்றியாவுக்கு எல்லாமே அல்போன்ஸ்தான். “அப்பா அது நீ இல்லையா? எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நம்பினேனே? ஏமாந்து விட்டேனா?” அன்றியாவால் அதற்குமேல் படுக்கையில் புரள முடியவில்லை. எழுந்து கொண்டாள். கட்டிலின் அருகே இருந்த அலுமாரியில் இருந்து அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டாள். வரவேற்பறையின் ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையிலேயே இருந்தது. அந்தப் குடுவைக்குள்தான் அல்போன்ஸ் இருந்தான். அதற்குள்ளேதான் அன்றியாவும் தன் உயிரை வைத்திருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் இறந்து போய்விட, அன்றியா தன் பலம் எல்லாம் இழந்து விட்டதை உணர்ந்தாள். எத்தனைபேர் வந்து ஆறுதல் சொல்லி இருப்பார்கள். அத்தனையும் அவளைத் தேற்றவில்லை. அவளது அப்பா இல்லாத வீடு அவளுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என யோசித்து, தனியாக, சோகத்தில் விழுந்திருந்த போதுதான், தன் தந்தையின் உடலை அடக்கம் செய்வதில்லை, மாறாக எரித்து விடுவது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாம், “அடக்கம் செய்து விடு” என்று சொல்லிப் பார்த்தார்கள். அன்றியா, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் குடுவைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல்க் குடுவை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலோ,ஆறுகளிலோ கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயலாகும். “இது சட்டப்படி பிழையானது. பிடிபட்டால் பெரும் சிக்கலாகி விடும்” இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனத்தின் முதலாளி ஜோகன், அன்றியாவுக்கு அறிவுரை சொன்னார். “என்னால் உங்களுக்கு ஒரு சிக்கலும் வராது” சொல்லிக் கொண்டே தனது பணப்பையை அன்றியா திறந்தாள். அல்போன்ஸின் உடல் எரிக்கப்பட்டு, அவனது சாம்பல் அழகான ஒரு குடுவைக்குள் அடக்கப்பட்டு அவளிடம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து அன்றியாவின் கட்டிலோடு சேர்ந்திருந்த அலுமாரிக்குள் அவளது தந்தை அல்போன்ஸ் இருந்தார். வெள்ளி,சனிக்கிழமைகளில்தான் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்டோரண்ட் நிறைந்திருக்கும். மற்றைய நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள்தான் உணவருந்த வருவார்கள். ஞாயிற்றுக் கிழமையான அன்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லை. அன்றியா, உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த செய்தி அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் செய்தியைச் சொன்னவர் உணவருந்த வந்த ஒரு வாடிக்கையாளர். “ கேள்விப் பட்டனீயோ அன்றியா? ஜோகனை அறெஸ்ற் செய்திட்டாங்களாம்” “எந்த ஜோகன்?” “இறுதிச் சடங்கு நடத்துற ஜோகன்” “ஏன்? அவருக்கு என்ன பிரச்சினை?” “தில்லு முல்லுதான். ஏகப்பட்ட விசயங்கள். நூறு யூரோப் படி சவப் பெட்டிகளை வாங்கி, அப்பிடி இப்பி டி சோடிச்சு, ஏமாத்தி ஆக்களைப் பாத்து விலையை ஆயிரம், இரண்டாயிரம் எண்டு கூட்டிக் குறைச்சுக் குடுத்துப் பணம் பாத்திருக்கிறான்..” “இதிலை என்ன பிழை இருக்கு? அது வியாபாரம். வாங்கிறாக்களை அவர் ஒண்டும் கட்டாயப் படுத்த இல்லையே” “இல்லைத்தான். ஆக்களுக்கு நல்ல விலையான சவப்பெட்டிகளைக் காட்டிப் போட்டு, அடக்கம் செய்யிற போது சாதாரண பெட்டியை மாத்திப் போடுவான். சவப் பெட்டிக்கான காசும் கொம்பனிக் கணக்குக்குப் போகாது. அவன்ரை தனிப்பட்ட எக்கவுண்டுக்குத்தான் போகும்” “அப்பிடி இருக்குமெண்டோ? என்னைப் பொறுத்த வரையிலை அவர் ஒரு நல்ல மனுசன்” “ நீ அப்பிடிச் சொல்லுறாய். கனக்க விசயம் இருக்கு அன்றியா. உடலை எரிச்சுப் போட்டு, ஆக்களின்ரை அவசரத்துக்கு, ஆளாளுக்கு சாம்பல்களை மாத்தியும் குடுத்திருக்கிறான். அங்கை வேலை செய்தவன் பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டான். ஆள் மாட்டிட்டான்” ஷோபாவில் இருந்த அன்றியாவின் பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையில் இருந்தது. “அப்பா உள்ளே இருப்பது நீதானா?” இது ஒரு உண்மைச் சம்பவம் “ஸ்வேபிஸ் ஹால் நகரத்தைச் சேர்ந்த, இறுதிச் சடங்கு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜோகன் (33), அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளில், மலிவான சவப்பெட்டிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்தார் என்பதும், 60 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு இறந்தவர்களின் சாம்பல்களை மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்பதும், நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது மனித நேயம், உணர்வுகள், உறவினர்களின் துக்கம் பற்றியது. இவை அனைத்தும் இங்கே மதிக்கப்படவில்லை, குற்றவாளி உறவினர்களின் நம்பிக்கையை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். 102 குற்றங்களை அவர் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவற்றுக்காக மூன்று வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறது” என்று தலைமை நீதிபதி 15.10.2014, புதன்கிழமை தனது தீர்ப்பில் கூறினார்1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாடு மேலோட்டமாக முன்னேறி இருக்கின்றது. இது நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கமே தவிர வேறு எதுவுமில்லை. ஆனால் தமிழ்நாட்டு பாமர மக்களின் வளர்ச்சியோ அல்லது அந்த நாட்டின் மூட நம்பிக்கைளை இந்த திராவிடத்தால் எதுவுமே செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இன்றுமே அந்த திராவிட கொள்கையாளர்கள் வீபூதி பொட்டு பிறை அர்ச்சனை தட்டு சகிதம் கோவில் கோவில்களாக ஏறிவருகின்றார்கள் என்பதே வெளிப்படையாக தெரிகின்றது.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஊழல் கொள்ளை மோசடி தேர்தல் நேரம் பொய்யான வாக்குறுதி இயற்கை வளங்களை மற்ற மானிலங்களுக்கு வித்து கோடி கோடியா அதில் கொள்ளை அடிச்சு குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பது தான் எனக்கு தெரிந்த திராவிடம்............. தேமுதிக்க அதுவும் திராவிட கட்சி.......... ஆனால் திமுக்கா மற்றும் ஆதிமுக்கா போல் அவர்கள் ஊழல் பண்ணி நாட்டை கெடுக்க வில்லை................கப்டன் நல்ல மனிதர் 2004ஈழத்தில் சுனாமி வந்த போது ஈழ தமிழர்களுக்கு உதவின நல்ல உள்ளம் படைச்ச மனிதர்.............அதனால் அன்று தொட்டு எனக்கு கப்டனை பிடிக்கும்.................அவரின் அரசியலை அழித்தது திமுக்கா...........ஊடகத்தை கையில் வைத்து கொண்டு கோமாளி போல் கப்டனை சித்தரித்து அவரின் அரசியலை நாசம் ஆக்கினது திமுக்க மற்றும் ஆதிமுக்கா...............கப்டன் ஊழல் செய்யாத மனிதர் ஈழ தமிழர்களுக்காக பல தியாகங்களை செய்தவர்...................................................................1 point- ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
வேறை நாடுகளிலை இப்பிடி சொல்லிப்போட்டு வீட்டுக்குள்ள நிம்மதியாய் இருக்கேலாது. ஆளை ஒரே அமுக்காய் அமுக்கி ஜெயிலில் போட்டு விடுவார்கள். 🤣1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointவயசாளி டோனியின் அணி வென்றது நமக்கும் கடுப்புத்தான்! ஒரு மினி போட்டி (கடைசி நாலு போட்டிகளையும் மட்டும் வைத்து) நடாத்தலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் அடுத்த வார இறுதிதான் தயாரிக்கமுடியும்!1 point- யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!
1 pointசிங்களவர்களுக்கு யாழில் காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் கொடுத்தார்.1 point- புலம் பெயர்ந்த புகை
1 pointநாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது.....! இவைதான் நிதர்சனமான உண்மைகள்........! 👍 நன்றி ரசோதரன்.......!1 point- ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
1 point- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
தமிழுக்கு மதம் இல்லை என்பது எந்த அளவுக்கு சரியானதெனத் தெரியவில்லை. ஆனால் சைவசமயத்தை வளர்க்க மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் தமிழை வளர்த்தன என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.1 point- சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர
இப்போதைக்கு பொருளாதார மீட்சி கிடையாது இப்படியே பாரளுமன்றத்தில் இனவாதம் கத்தி கொண்டு இருக்கவேண்டியதுதான் வெளியாலை சிங்களம் கோவணத்தையும் வித்து அந்த காசிலைதான் கஞ்சி குடிக்கபோகுதுகள் .1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointரஜீவின் கூற்றினைத் தமக்குச் சார்பாகப் பாவித்த சிங்கள இனவாதிகள் அத்துலத் முதலியுடன் மேலும் பேசிய ரஜீவ், அதிகரித்த இராணுவத்தினரின் பிரசன்னத்தினால் தமிழ் அகதிகள் பிரச்சினை உருவாகியிருக்கிறது என்று கூறினார். 1983 ஆம் ஆண்டு இனக்கொலையின் பின்னர் சுமார் 50,000 தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் இராணுவத்தினரின் அட்டூழியங்களால் மேலும் பல தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்குத் தப்பி வரும் சூழ்நிலை தோன்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது அதிகாரிகளின் கூற்றுப்படி சுமார் 9 நீண்ட மணித்தியாலங்கள் கடலில் பயணம் செய்து காலை புலரும் முன்னர் இராமேசுவரம் கடற்கரையினைத் தமிழ் அகதிகளின் படகுகள் அடைய ஆரம்பிக்கின்றன என்று கூறினார் ரஜீவ். மாசி மாதம் 5 ஆம் திகதி மட்டுமே ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 21 தமிழ் அகதிகள் இராமேஸுவரத்தை அடைந்திருந்தார்கள். மாசி மாதம் 9 ஆம் திகதி அதிகளவான தமிழ் அகதிகள் அங்கு வந்து சேர்ந்தனர். இராமேசுவரம் தனுஷ்கோடி ஆகிய கடற்கரைகளில் அன்று மட்டுமே வந்திறங்கிய அகதிகளின் எண்ணிக்கை 363 ஆகும். மாசி 10 முதல் 12 வரையான மூன்று நாட்களில் நாளொன்றிற்குச் சராசரியாக 300 இலிருந்து 400 வரையான தமிழ் அகதிகள் தமிழ்நாட்டை வந்தடைந்திருந்தனர். இந்த எண்ணிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்று தனது அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகவும், இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலைமையினை ஏற்படுத்தும் என்றும் அவர் லலித்தை எச்சரித்தார். லலித்தின் மூன்றாவது நோக்கம் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆயுதப் பயிற்சியினையும், ஆயுதங்களையும் நிறுத்துவதும், தமிழ் நாட்டிலிருந்து வரும் அழுத்தத்தைச் சமாளிப்பதும் ஆகும். இவ்விடயத்தின் தனக்கு உதவுவதற்கென்று உதவிப் பொலீஸ் மா அதிபர் சிறில் ஹேரத்தையும் அவர் அழைத்துச் சென்றிருந்தார். இப்பயணத்தின்போது தமிழ்நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாம்கள், இந்தியப் பயிற்றுவிப்பாளர்களின் பெயர் விபரங்கள், பயிற்சிகளின் போது பாவிக்கப்படும் ஆயுதங்களின் வகை மற்றும் எண்ணிக்கை தொடர்பான பல விடயங்களை சிறில் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். இந்த விடயங்களை தம்மால் கைதுசெய்யப்பட்ட ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களிடமிருந்தும், இலங்கையரசிற்குப் பணத்திற்காக தகவல்களை விற்கும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் பெற்றுக்கொண்டதாக சிறில் கூறினார். சிறில் முன்வைத்த ஆவணங்களில் தமிழ் நாட்டில் போராளிகளின் பயிற்சிகளுக்குப் பொறுப்பாகவிருந்த இந்திய உளவு அமைப்பின் அதிகாரியான மலையாளி உன்னிகிருஷ்ணன் மற்றும் இன்னொரு மலையாளியும் தமிழ்நாட்டு உளவுத்துறையின் தலைவருமான மோகன் தாஸ் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ் அதிகாரிகள் இருவரும் இலங்கையரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதை போராளி அமைப்புக்களும் உறுதிப்படுத்தியிருந்தன. பின்னாட்களில் அமெரிக்க உளவு அமைப்பினருக்கு இந்தியாவின் இரகசியங்களை விற்றார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ரோ அதிகாரி உன்னிகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தம்மால் சேகரிக்கப்பட்ட இவ்விடயங்களை ரஜீவ் காந்தியின் முன்னால் வைத்த லலித், "இவை தொடர்பாக நீங்கள் அறியாமல் இருக்கலாம்" என்று அப்பாவித்தனமான முறையில் ரஜீவைப் பார்த்து வினவினார். கலவரமடைந்த ரஜீவ் காந்தி, "இதுகுறித்து நிச்சயம் விசாரிக்கிறேன்" என்று பதிலளித்தார். மேலும், இலங்கை கோரியிருந்த பாக்கு நீரிணையில் இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டு ரோந்து குறித்து தான் ஆராயப்போவதாகவும் அவர் உறுதியளித்தார். ரஜீவ் காந்தி, லலித் அதுலத் முதலி மற்றும் ஜயவர்த்தன ரஜீவ் காந்தியுடனான லலித்தின் சந்திப்பு அரசாங்கத்திற்குள்ளும், ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களுக்குள்ளும் புதிய உத்வேகத்தினையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது. இந்திய இலங்கை உறவுகளை புதுப்பிக்கும் நிகழ்வு இது என்று பல அரசியல் அவதானிகள் கருதினர். இந்திய அரசாங்கத்தினதும், கொள்கை வகுப்பாளர்களினதும் மனமாற்றம் என்று இதனை வர்ணித்து டெயிலி நியூஸ் பத்திரிக்கை ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது. இந்தியாவின் வெளியுறவுத்துறையின் இராஜாங்க அமைச்சர் குர்ஷெட் அலாம் கான் பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கையில், இலங்கையில் ஏற்பட்டுவரும் நெருக்கடியான சூழ்நிலை மற்றும் அவற்றால் இந்தியாவில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள் குறித்து ரஜீவ் காந்தியும் லலித் அதுலத் முதலியும் விரிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டார். மேலும், லலித்திடம் பேசிய ரஜீவ் காந்தி, இலங்கை வேண்டிக்கொண்டால் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு இந்தியா உதவக் கூடும் என்றும் ஆனால், இனப்பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வினை இலங்கை அரசாங்கமே கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறியதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழர்களின் வாழிடங்களில் அதிகரித்துவரும் இராணுவப் பிரசன்னம். அதனால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அகதிகள் பிரச்சினை குறித்து ரஜீவ் இந்தியாவின் கரிசணையினை லலித்திடம் பகிர்ந்து கொண்டதாகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைச் சுட்டு கொல்லுதல், காயப்படுத்துதல் மற்றும் கைதுசெய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கெதிராக கடுந்தொணியில் தனது கண்டனத்தினை லலித்திடம் முன்வைத்ததாகவும் அவ்வறிக்கை மேறும் கூறியது. பாக்கு நீரிணை பாக்கு நீரிணைப் பகுதியைத் தடைசெய்யப்பட்ட வலயமாக இலங்கை அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்ததிலிருந்து இலங்கைக் கடற்படைக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையிலான பிணக்கென்பது ஆரம்பமாகியிருந்தது. இதனைச் சந்தர்ப்பமாகப் பாவித்த தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வரலாயினர். மேலும், பொருட்களைக் கடத்துதல், தமிழ்ப் போராளி அமைப்புக்களின் போராளிகளையும் பொருட்களையும் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கொண்டுசேர்த்தல் ஆகிய செயற்பாடுகளிலும் தமிழ்நாட்டு மீனவர்களின் ஒருபகுதியினர் ஈடுபட்டு வந்தனர். ஐப்பசி மாதத்தில் மட்டும் 74 தமிழ்நாட்டு மீனவர்களைக் கைதுசெய்த இலங்கை கடற்படை, அவர்களுக்குச் சொந்தமான 17 ட்ரோலர் படகுகளையும் பறிமுதல் செய்திருந்தது. அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ட்ரோலர்களின் நடத்துனர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 1985 ஆம் ஆண்டு தை மாதத்தின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் இரு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரு இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றதற்காக தில்லியில் இருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். இதற்குப் பதிலளித்த இலங்கை அதிகாரிகள் கொல்லப்பட்ட இரு மீனவர்களும் இலங்கையின் கடற்பரப்பிற்குள் மீன்பிடித்துக்கொண்டு நின்றார்கள் என்று நியாயப்படுத்தியிருந்தனர். இந்திய மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கரையோர ரோந்துப் படையினரை இந்தியா நிறுத்தியது. இந்தியாவின் கடற்பரப்பிற்குள் நுழைந்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரின் ரோந்துக் கப்பல் ஒன்றினைக் கைப்பற்றிய இந்திய கடலோர ரோந்துப் படை, இலங்கைக் கடற்படைக் கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகளைக் கைதுசெய்தது. பாக்கு நீரிணையில் தனது ரோந்துகளையும் இந்தியக் கடற்படை அதிகரித்தது. இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமது கடற்படை அதிகாரிகளையும், கைப்பற்றப்பட்ட ரோந்துக் கப்பலையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. பதிலளித்த இந்திய அதிகாரிகள், இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ட்ரோலர் உரிமையாளர்களையும் 17 ட்ரோலர்களையும் உடனடியாக விடுவித்தால் மாத்திரமே இலங்கைக் கடற்படை அதிகாரிகளும் அவர்களது ரோந்துக் கப்பலும் விடுவிக்கப்படும் என்று கூறவும், இரு நாடுகளும் இணங்கி பரஸ்பர விடுவிப்பு இடம்பெற்றது. இந்தப் பிணக்கினைத் தனக்குச் சார்பாகப் பாவிக்க நினைத்த ஜெயவர்த்தன, இலங்கை - இந்திய கடற்படையினர் இணைந்து ரோந்துக்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், போராளிகள், அவர்களுக்கான ஆயுதங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் என்பன கடத்தப்படுவதை இதன் மூலம் தடுத்துவிடலாம் என்றும் ரஜீவிடம் கூறினார். ஆரம்பத்தில் இதுகுறித்துச் சிந்திக்க இணங்கிய ரஜீவ் பின்னர் அதனை நிராகரித்துவிட்டார். தில்லியில் தன்னைச் சந்தித்து, ஜெயாரின் கோரிக்கைக்கு இணங்கவேண்டாம் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதையடுத்தே ரஜீவ் ஜெயாரின் கோரிக்கையினை நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கூட்டு ரோந்தினை ரஜீவ் நிராகரித்து விட்டதனால் கொழும்பில் நிலவிவந்த உற்சாகச் சூழ்நிலை சற்றும் மாறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் ரஜீவ் கூறிய "மாவட்ட சபைகளை இணைக்கத் தேவையில்லை, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரத்தினை எவ்விதத்திலும் பகிர்ந்தளிக்கத் தேவையில்லை" போன்ற கூற்றுக்களைப் பயன்படுத்த நினைத்ததுடன், "மாவட்ட சபைகளுக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு எதனையும் தரமாட்டோம்" என்கிற தமது நிலைப்பாட்டை மீண்டும் தூக்கி நிறுத்த முடிவெடுத்தார்கள். தமது நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க பாரிய பிரச்சாரமொன்றினை ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுத்தனர். இப்பிரச்சாரத்தின் முக்கிய இலக்கே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புது தில்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை ஆளமாக்குவதுதான். தில்லி மத்திய அரசின் நிலைப்பாடு இலங்கையரசாங்கத்திற்குச் சாதகமானதென்றும், வடக்குக் கிழக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதென்பது இலங்கைக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் நலன்களுக்கும் பாதகமாக அமையும் என்றும் இலங்கை பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. பிரேமதாஸ இன்னொரு படி மேலே சென்று, "அவர்கள் பிரிவினைவாதிகள் மட்டுமல்ல, மார்க்ஸிஸ சிந்தனை கொண்ட பிரிவினைவாதிகள். ஆகவே அவர்கள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படுதல் அவசியம்" என்று முழங்கினார். பின்னணியில் பிரமாண்டமான வாத்திய இசை முழங்க பிரேமதாச இனவன்மத்தைக் கக்கும் பேச்சுக்களைக் கொழும்பின் மேடைகளில் நிகழ்த்தி வந்தார். அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த சிறில் மத்தியூ உடனடியாக பாரிய யுத்தம் ஒன்றினை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாராளுமன்ரறத்திற்குள்ளேயும், வெளியேயும் தொடர்ச்சியாக பேசிவந்த அவர், தமிழ்ப் போராளிகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார். தன்னால் முடுக்கிவிடப்பட்ட இனவன்மம் மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதையடுத்து அதனைப் பாராளுமன்றத்திற்குள் எடுத்து வந்த ஜெயார், தனது மாசி 20 ஆம் திகதிய பேச்சில் "தமிழ்ப் பிரிவினைவாதிகள் முடிவானதும், இறுதியானதுமான தாக்குதலுக்குத் தயாராகிறார்கள்" என்று கூறி தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் உணர்வினை மேலும் பற்றியெரியச் செய்தார். இதனால் தமிழர்கள் அச்சத்துடன் வாழ ஆரம்பித்தனர். ஏக காலத்தில் ஜெயவர்த்தனவின் அடியாட்களாகச் செயற்பட்ட காமிணி, லலித் ஆகியோரும் தமிழர்களுக்கெதிராக சிங்களவர்களைத் தூண்டிவிடும் இனவன்மப் பேச்சுக்களைத் தொடர்ச்சியாக நிகழ்த்தத் தொடங்கினர். மாசி மாதம் 24 ஆம் திகதி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய லலித் அதுலத் முதலி தமது இறுதி யுத்தத்தை பங்குனி அல்லது சித்திரையில் நடத்த தமிழ்ப் போராளிகள் தயாராகி வருவதாகக் கூறினார். "நாம் அந்த யுத்தத்திற்குத் தயாராகவே இருக்கிறோம். அவர்களைத் தோற்கடித்து, நாம் வெற்றிபெறுவோம்" அன்று அவர் அங்கு கர்ஜித்தார்.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointநாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=2718221 point- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
இந்தியா தலைவர்களின் சிலைகள் மட்டுமல்ல எமது மண்ணில் ஆக்கிரமிப்பு செய்த சகலரும் சிலைகளையும் தங்களது கருத்துக்களையும் நன்றாகவே நிலைநாட்டி சென்றுள்ளனர் .. ...இந்தியாவிலும் அதே நிலை தான் ... இருந்தும் இந்தியா ஓரளவு பூர்வீக மக்களை அங்கிகரிக்கின்றது .. நீங்கள் கூறும் இந்தியா கருத்துக்களையும் இந்தியா சிலைகளையும் ஒர் இனம் கடைப்பிடிக்கின்றது என்ற காரணத்தால் அவர்களை இனசுத்திகரிப்பு செய்ய வேணும் என்ற வாதம் ஏற்புடையதல்ல.. உலகம் பூராவும் இது நடை பெற்று கொண்டு தான் இருக்கின்றது ..அரபிய மொழி,அரபிய மதம் தங்களது அடையாளத்தை நிலை நாட்டுகிறது,மேற்கத்தைய நாகரீகம் கிறிஸ்தவ அடையாளங்களை பரப்பி கொண்டு தான் இருகின்றனர் ...அவர்களின் அடையாளங்களும் சிறிலங்காவில் உண்டு ஆகவே இந்தியாவின் அடையாளன்களை நாம் உப யோகிப்பதால் சிங்களவர் கோபமடைகின்றனர்,இன சுத்திகரிப்பு செய்கின்றனர் என்ற வாதம் ஏற்புடையது அல்ல ..1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
நோகாமல் நுங்கு குடிக்கலாம் என சில பேர் வருயினம் அவையள் தான் வெளிநாடு சரியில்லை என போய் யூ டியூப் காரர்களுக்கு பேட்டி கொடுக்கினம் .... உலகத்தில் மூலைமுடக்கில் எல்லாம் இருந்து அடிபட்டு கொண்டு உழைக்க வாராங்கள் .....சிறிலங்காவில் இருக்கிற சிலருக்கு ....மட்டும் ....கொழு.......1 point- அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!
அப்புறம் என்ன உலக பொலிசே சொல்லியாச்சே. எல்லாம் போ,போ,போ மாறு,மாறு. அமெரிக்கா சொன்னாலும் ஐக்கிய நாடுகள் சபை சொன்னாலும் ஒன்று தான்.1 point- சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணு நெருக்கம்
பாத்துப்பேசுங்கோ பெருமாளு! காதில விழுந்திடப்போகுது, பிறகு, உங்களையும் இனவாதியாக சித்திரித்து ரசிக்கப்போகிறார்கள். இனவாத செயல்களும் பேச்சுகளும் இன்னும் முற்றுப்பெறவில்லை, ஆனால் அதை சுட்டிக்காட்டுவோரை இனவாதிகள் என முத்திரை குத்தி ரசிக்கினமாமெல்லே. தமிழர் தான் இனவாதிகளென வெகுசீக்கிரத்தில் நம்மவர்களே அறிக்கை விடுவினம் பாருங்கோ1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்திய தேர்தல்களில் குளறுபடிகள் இல்லை என நம்பும் சமுதாயம் இந்த விஞ்ஞான அறிவுள்ள உலகிலும் இருக்கின்றனர். வருங்கால சமுதாயத்தின் எதிர்கால நலன் கருதி ஆமை வேகத்தில் முன்னேறும் அமைப்புகளுக்கு என் வாழ்த்துகள்.1 point- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
உண்மைகளை ஒரு புறம் வைத்துவிட்டு அரசியல் வெற்றிக்காக கிந்தியும் சிங்களமும் கை கோர்த்து நிற்கும்..1 point- அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
நீங்கள் கந்தையா அண்ணைக்கு தானே சிகப்பு புள்ளி போட்டிருக்கிறீர்கள் 🤔 கெட்ட காணொளி இங்கே இல்லை 🙏1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
உண்மையா தான் அண்ணா சொன்னேன். நம்பிக்கையானவர்கள் சொன்னது. ரஷ்யா தனது விமானத்தில் இலவசமாக ஐரோப்பா வுக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும் இப்படி சொல்ல முடியாதே இப்படியும் சொல்வார்களா பிரசாரம் செய்வார்களா என்று தான் முதலில் தோன்றியது. இப்போது எல்லாம் இல்லை. ------------------------------------------ வேறு இனத்தை சேர்ந்த தோழி சொன்னார், அவரது மதத்தை சேர்ந்த மதவாதிகள் சொன்னார்களாம் தங்கள் கடவுளால் கொடுக்கபட்ட பொருளாதார கொள்கைகளை ஐரோப்பியர்கள் களவு எடுத்து செயற்படுத்தி இன்று நல்லநிலையில் வாழ்கின்றார்கள். கடவுள் சொன்னதை சரியாக பின்பற்றாத தாங்கள் ஏழைகளாக துன்பபடுகின்றவர்களாக உள்ளோம் என்று.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்.........! புனர்ஜென்மம்..... சுமார் 40 வருடங்களுக்கு முன் வந்த படம் என்று நினைக்கிறேன்.......அப்பவே இப்படி எடுத்திருக்கிறார்கள்.......!1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமாவட்டங்களை இணைத்து மாகாணங்களை உருவாக்குவதோ, மாவட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்களை வழங்குவதோ தேவையற்றது - ரஜீவ் காந்தி மிகுந்த விவாத் திறமை கொண்டவரான லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவின் வாழ்த்துக்களுடன் ரஜீவைச் சந்தித்து, சர்வதேச அளவில் மிகப் பெரும் தலைவராக ரஜீவ் வருவார் என்று ஜெயார் வாழ்த்தியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியவாறே ரஜீவ் பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்தார். மேலும், நேருகுடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியில் ரஜீவிற்கு ஜெயவர்த்தன வழங்கிய ஆலோசனைகளைச் செவிமடுத்ததற்காகவும் அவருக்கு லலித் நன்றி கூறினார்.அடுத்ததாக, இதுவரை காலமும் இந்தியா இலங்கை தொடர்பாகக் கைக்கொண்ட நடைமுறை காரணமாக சிங்கள மக்களிடையே இந்தியா ஆக்கிரமிப்பில் இறங்கப்போகிறது என்கிற எண்ணம் வேரூன்றி பெரு விருட்சமாக வளர்ந்து விட்டிருப்பதாகவும் கூறினார். ஜெயாரும், லலித்தும் விரித்த வலையில் ரஜீவ் வீழ்ந்து போனார். இலங்கை மீது இந்தியா எக்காலத்திலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாது என்று லலித்திடம் உத்தரவாதம் அளித்தார் ரஜீவ். இதன் மூலம் ஜெயவர்த்தனவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதுவரை தான் கொண்டிருந்த சாட்டையினை இந்தியா இழந்தது. அதன் பிறகு தனது இரண்டாவது கோரிக்கைகள் குறித்துப் பேச்சை ஆரம்பித்தார் லலித். பேச்சுவார்த்தைகளை புதிதாக ஆரம்பிப்பதும், பார்த்தசாரதியை பேச்சுக்களில் இருந்து முற்றாக அகற்றுவதும் தான் அவை. லலித் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பத்தை ரஜீவே அவருக்கு வழங்கினார். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் திடீரென்று கலைத்துப்போட்டது தொடர்பான இந்தியாவின் ஏமாற்றம் குறித்து ரஜீவ் பேசியபோது, சிங்கள மக்களின் பங்களிப்பும், ஆதரவுமின்றி சர்வகட்சி மாநாட்டினைத் தொடர்ந்து நடத்துவது இயலாத காரியம் என்று லலித் கூறினார். எதிர்க்கட்சித் தலைவியான சிறிமாவின் நடவடிக்கைகள் சர்வகட்சி மாநாட்டினை ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாக லலித் கூறினார். மேலும் சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வினை பார்த்தசாரதி ஜெயார் மீது திணிப்பதாக லலித் குற்றஞ்சாட்டினார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றுபற்றி கலந்தாலோசிக்க புதிதாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பார்த்தசாரதி மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வருவதாக சிங்கள மக்கள் நம்புவதாகவும், ஆகவே புதிய பேச்சுவார்த்தைகளில் சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமானால் பார்த்தசாரதி பேச்சுக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் லலித் வாதிட்டார். ரஜீவினால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி - ஐப்பசி 31, 1985 லலித் கேட்டுக்கொண்டபடியே பேச்சுவார்த்தைகளைப் புதிதாக ஆரம்பிக்க ஒத்துக்கொண்ட ரஜீவ், அவை நடுநிலையானவையாகவும், இலக்கை அடையும் நோக்கிலும் நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தார். மேலும், தனது புதிய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரியே பேச்சுவார்த்தைகளுக்கு பொறுப்பாக இருப்பார் என்றும் கூறினார். ஜெயாருடன் தொடர்பாடுவது குறித்து பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களையும், எச்சரிக்கைகளையும் ரஜீவ் முற்றாக நிராகரித்ததுடன், அவரை அரசியல் விவகார குழுவிற்கு இடமாற்றம் செய்தார். ஜெயவர்த்தனவை சிறிதும் நம்பாத பார்த்தசாரதி, கிளட்டு நரியின் கபடத்தனம் குறித்து ரஜீவ் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால், ஜெயவர்த்தனவை மிகச் சிறந்த இராஜதந்திரியென்றும், உண்மையான பெளத்தன் என்றும் எடைபோட்ட ரஜீவ், பார்த்தசாரதியின் எச்சரிக்கையினை எள்ளளவும் கண்டுகொள்ளவில்லை. லலித்திடம் பேசிய ரஜீவ், ராணுவத்தினரின் பிரசன்னத்தை தமிழர் பகுதிகளில் குறைத்து, அவர்களால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளை நிறுத்தி, தமிழர்களுக்கு ஓரளவிற்கான தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவது இலங்கைக்கு நண்மை பயக்கும் என்று கூறினார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்த் தீர்வுகுறித்து ரஜீவும் லலித்தும் நீண்டநேரம் பேசினார்கள் என்று கூறப்படுகிறது. ரஜீவுடன் பேசும்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கோரும் மாகாணசபைகளை வழங்கும் நிலையில் தமது அரசாங்கம் இல்லையென்று லலித் கூறினார். மாவட்ட சபைகளே அரசாங்கத்தல் வழங்கப்படக் கூடிய அதிகபட்ச அதிகார அலகு என்று கூறிய லலித், தேவையேற்படின் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்களை மீள்பரிசீலினை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார். லலித்தின் கூற்றுடன் ஒத்துப்போன ரஜீவ், மாவட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து மாகாணங்களாக உருவாக்கவேண்டிய தேவை இல்லை என்று கூறியதுடன், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொறுப்பினை அவற்றிற்குக் கொடுக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறினார். "லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இந்திரா காந்தி கொண்டிருந்த அறிவைக் காட்டிலும், ரஜீவ் காந்தி பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தார்.மேலும், மாவட்ட சபைகள் ஒன்றிணைக்கப்பட்டு மாகாணங்களாகச் சேர்க்கப்படுதல் அவசியமில்லையென்கிற நிலைப்பாட்டையும் ரஜீவ் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம், இலங்கை அரசாங்கத்தின் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டுடன் ரஜீவ் ஒத்துப் போவதும், பார்த்தசாரதியின் நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகிச் செல்வதும் தெரிந்தது. மேலும், லலித்தும் ரஜீவும் மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தார்கள். மேலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் போன்றே மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் கொடுக்கப்படத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை ரஜீவும் கொண்டிருந்தமை லலித்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. மேலும், பஞ்சாப் விவகாரத்தில் இந்தியா இதே தவறை இழைத்திருந்தது என்றும், ஆகவே இனிமேல் இவ்வாறான தவறுகள் ஏற்படாது என்று ரஜீவ் உறுதியளித்தார்" என்று ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி.சில்வாவும், ஹவார்ட் ரிக்கின்ஸும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் கொலைகள் குறித்து இலங்கை அரசாங்கத்தை தான் எச்சரித்ததாக ரஜீவ் காந்தி லொஸ் ஏஞ்ல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நீங்கள் பயங்கரவாதிகளைக் கொல்லலாம், அது பரவாயில்லை, ஆனால், பயங்கரவாதிகள் அல்லாத பொதுமக்களைக் கொல்லும்போது இந்தியாவில் ஏற்படும் உணர்வுகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படும் வேளை எம்மால் உதவுவது கடிணமாக இருக்கும் என்று லலித்திடம் நான் கூறினேன்" என்று ரஜீவ் மேலும் தெரிவித்தார்.1 point- வல்வை மண்ணில் பிரித்
1 pointபுலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்... ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்.. வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார். ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.) இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??! இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது.. நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை. நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே. நயினை நாகபூசனி அம்மன் கோவில்... தற்போது. அம்மனை தரிசிக்க வந்த கணவாய். நாகபூசனி அம்மனுக்கு அருகில் வந்துவிட்ட புத்தர். வெள்ளைவெளேர் என்று பரந்து காட்சி அளிக்கிறார்... சாரி காலை நீட்டி படுத்திருக்கிறார். தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள்.1 point- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
1 pointஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின் ‘திருவிளையாடல்கள்’ என்ற பதத்துக்குள் அடங்கிவிடும். அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பி, யாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால் ‘வதம்’ செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும். அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்’ என்ற தகவல் அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டான். காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்) செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது. இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான். இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை. அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம். ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.1 point- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஆமைகளின் வழித்தடத்தை பின்பற்றி கடல்வழிகளை கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப்பயணம் மேற்கொண்ட தமிழனின் பெருமை அறியாதோர் ஆமையினை இழிவாக பார்ப்பர். ஆமையினது வாழ்க்கை முறைகளை அறியாதோர் அதனை கேவலமாக பார்ப்பர். நாம் தமிழர் கட்சிக்கு ஆமை சின்னம் பொருத்தமானதே. ஏனெனில் அது இயற்கையோடு ஒன்றி வாழும் உயிரினம். யாருக்கும் தீங்கு செய்யாத உயிரினம்.ஆறறிவு படைத்த மனிதனை விட நீண்ட காலம் வாழும் உயிரினம். ஆயிரம் முட்டைகள் போட்டாலும் அமைதியாய செல்லும் உயிரினம். ஆமையிடமிருந்து மனிதன் இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை படிக்க வேண்டும்.1 point- ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.
"தேர்தல்- election" என்றால் என்னவென்று கூகிளில் தேடிப்பார்க்க கொஞ்சம் காலமெடுத்துக் கொண்டாராம்😎!1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஈழத்தமிழருக்காக இலங்கையுடன் முரண்பட முடியாது என்று அமிர்தலிங்கத்திடம் கூறிய ரஜீவ் காந்தி 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 1 ஆம் திகதி இந்தியாவின் பிரதமராக ரஜீவ் பதவியேற்றுக்கொண்டார். 1944 ஆம் ஆண்டில் பிறந்த ரஜீவ் காந்தி, 1980 ஆம் ஆண்டு ஆனி 23 ஆம் திகதி அவரது சகோதரர் சஞ்ஜய் காந்தி விமான விபத்தில் இறக்கும்வரைக்கும் அரசியலில் இருந்து விலத்தியே வைக்கப்பட்டிருந்தார். சஞ்ஜய் காந்தியின் இறப்பினையடுத்து, தனது தாயாரான இந்திரா காந்திக்கு அரசியலில் பக்க பலமாக இருக்கும்பொருட்டு ரஜீவ் அரசியலுக்குள் நுழைந்தார். 1981 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரஜீவ், தனது தாயாரை அடுத்து நாட்டின் பிரதமாராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்றார். கார்த்திகை 4 ஆம் திகதி தனது அமைச்சரவையினைத் தேர்வுசெய்த ரஜீவ், தனது தாயாரின் கீழ் அமைச்சர்களாகவிருந்த பலரைத் தனது அமைச்சரவையிலும் அமர்த்திக்கொண்டார். தனது தாயாரின் மறைவினால் ஏற்பட்ட அனுதாபத்தினை தனது அரசியல் இலாபத்திற்காகக்ப் பாவிக்க நினைத்த அவர், பாராளுமன்றத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். மார்கழி 24 முதல் 28 வரையான 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், 538 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 409 ஆசனங்களை காங்கிரஸ் கட்சி தனதாக்கிக் கொண்டது. தை மாதம் 2 ஆம் திகதி ரஜீவின் வெற்றியை வாழ்த்தி, ஈழத்தமிழர் சார்பாக அவருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பினார் அமிர்தலிங்கம். மேலும் தனது கடிதத்தில், இலங்கையில் வாழும் மூன்று மில்லியன் தமிழர்களினதும் வாழ்வு கடந்த இரு வாரங்களில் மிகவும் இக்கட்டான நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும், ஜெயவர்த்தன திடீரென்று சர்வகட்சி மாநாட்டினை முடித்துக்கொள்வதாக அறிவித்துக்கொண்டதையடுத்து, அவரது கட்சியினரும் ஏனையோரும் தான் முன்வைத்த அரசியல்த் தீர்விற்கான பரிந்துரைகளை முற்றாக உதாசீனம் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் கடந்த ஒன்றைரை வருடங்களாக இந்தியா முன்னெடுத்து வந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். "தமிழர் தாயகத்தில் இன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதத்தினை முடிவிற்குக் கொண்டுவர கிடைக்கப்பெற்றிருந்த சந்தர்ப்பமும் இதனால் இல்லாதுபோயிருக்கிறது" என்றும் அமிர்தலிங்கம் கூறினார். "முன்னாள்ப் பிரதமர் இந்திராவின் உண்மையான அக்கறையே ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த இனக்கொலையினை முடிவிற்குக் கொண்டுவரும் அரசியல்த் தீர்வு முயற்சிகளை முன்னெடுக்க ஏதுவாக்கியிருந்தது. ஈழத்தமிழரின் பிரச்சினையினைத் தீர்ப்பது தொடர்பாக நீங்கள் எடுத்திருக்கும் உறுதிப்பாட்டினையும், தமிழர்கள் மீதான அட்டூழியங்களைக் கண்டிக்கும் முகமாக நீங்கள அண்மையில் பேசிய பேச்சுக்களையும் நாங்கள் நன்றியுடன் வரவேற்கிறோம். இந்தியாவினால் பேச்சுவார்த்தைகளுக்காக வழங்கப்பட்ட உதவிகளையும் தமிழர்களும், அரசாங்கமும் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், இன்று இலங்கை அரசு நடந்துகொள்ளும் விதம் இந்தியாவின் உதவிகளை உதாசீனம் செய்வதாக உள்ளது. எமக்கு உதவுவதற்கு இந்தியாவைத் தவிர வேறு எவரும் இல்லை. உதவியற்ற தமிழர்கள் இன்று இந்தியாவின் தயவினால் தாம் முகம் கொடுத்துவரும் இனக்கொலையில் இருந்து தம்மைக் காப்பற்றிக்கொள்ள வேண்டுமென்று இரைஞ்சுகின்றனர்" என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பார்த்தசாரதியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட அமிர்தலிங்கம், புதிய அரசாங்கத்தில் தமிழர் பிரச்சினை தொடர்பான நிலைப்பாடு என்னவென்பதையும் அறிய முற்பட்டார். இதனையடுத்து ரஜீவ் காந்தியுடனான சந்திப்பொன்றிற்காக புதுதில்லி வருமாரு அமிர்தலிங்கத்திற்கு அழைப்பு விடுத்தார் பார்த்தசாரதி. தை 13 ஆம் திகதி முன்னணியின் தலைவர்கள் பார்த்தசாரதியைச் சந்தித்தனர். அவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, இலங்கைத் தமிழர் தொடர்பான தனது அரசாங்கத்தின் புதிய கொள்கையினை ரஜீவ் காந்தி வரைந்துகொண்டிருப்பதாகக் கூறினார். புதிய கொள்கையின் வரையறைகள் பின்வருமாறு அமையும் என்று அமிர்தலிங்கத்திடம் அவர் மேலும் குறிப்பிட்டார். 1. இலங்கையுடனான உறவில் கட்டாயப்படுத்தலைக் கைவிட்டு இணக்கப்பாடான போக்கினை இந்தியா கடைப்பிடிக்கும். 2. பேச்சுவார்த்தைகளில் தமிழ் ஆயுத அமைப்புக்களையும் உள்வாங்கிக்கொள்ளுதல். 3. பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கும் இடையே யுத்த நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துதல். 4. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்ய முயலுதல். இந்தியாவின் புதிய கொள்கை தொடர்பான தனது அவநம்பிக்கையினை அமிர்தலிங்கம் பார்த்தசாரதியிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவை நம்பமுடியாது என்று பார்த்தசாரதியை அமிர் எச்சரித்தார். அதற்குப் ப்தைலளித்த பார்த்தசாரதி தானும் ஜெயவர்த்தனவை நம்பவில்லையென்றும், இதனை ரஜீவிடம் தான் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், தனது ஆலோசனைகளை ரஜீவ் முற்றாகப் புறக்கணித்து வருவதாகவும், விரைவில் தன்னை அவர் ஓரங்கட்டி விடுவார் என்று தான் நம்புவதாகவும் அமிர்தலிங்கத்திடம் கூறினார் பார்த்தசாரதி. ஆகவே, ரஜீவை நேரில் சந்தித்து தனது அவநம்பிக்கைகள் குறித்து அமிர் பேசவேண்டும் என்று பார்த்தசாரதி கேட்டுக்கொண்டார். மறுநாள் ரஜீவ் காந்தியைச் சந்தித்தார் அமிர்தலிங்கம். அமிருடன் பேசும்போது, தான் இந்தியாவின் அயல் நாடுகள் அனைத்தோடும் சிநேகபூர்வமான உறவைப் பேண விரும்புவதாகவும், தமிழருக்காக தான் இலங்கையைப் பகைத்துக்கொள்ள முடியாதென்றும் கூறினார். "ஜனாதிபதி ஜயவர்த்தனவுடன் கடுமையான பேரம்பேசலுக்கு தயாராகுங்கள்" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கூறினார் ரஜீவ் காந்தி. அதன்பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய அமிர்தலிங்கம், இலங்கையில் மேலும் அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் ரஜீவைக் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். ரஜீவ் காந்திக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி கொண்டது. தனது அதிருப்தியினை இந்தியாவுக்கும் அது தெரியப்படுத்தியது. அரச பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "நாட்டினை கூறுபோடும் கனவுடன் திரியும் சிலர், கடந்த ஒன்றரை வருடங்களாக சர்வகட்சி மாநாட்டில் எட்டப்பட்ட முடிவுகளை புறக்கணித்துவிட்டு, தமது திட்டத்தினை நிறைவேற்ற வெளிநாட்டு அரசுகளுடன் பேசி வருகின்றனர். இதனை நாம் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம்" என்று கூறினார். இந்த வாரத்தில் தமிழ் ஆயுத அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பார்த்தசாரதி சந்தித்தார். இலங்கை பிரச்சினை தொடர்பாக இந்தியக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றம் குறித்து அவர்களை எச்சரித்தார். என்னுடன் பேசிய ஈரோஸ் அமைப்பின் சங்கர் ராஜி, தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கான உதவியினை இந்தியா வெகு விரைவில் நிறுத்திக்கொள்ளும் என்றும், ஆகவே அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து பொதுவான முன்னணியொன்றினை அமைப்பதன் மூலம் தமது கோரிக்கைகளை பலமாக முன்வைக்கலாம் என்றும் கூறியதாக என்னிடம் தெரிவித்தார். 1985 ஆம் ஆண்டு தை மாதம் பார்த்தசாரதியுடனான தனது சந்திப்புக் குறித்து பாலசிங்கம் தான் எழுதிய போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தை மாதம் 13 ஆம் திகதி அமிர்தலிங்கத்திற்கும், பார்த்தசாரதிக்கும் இடையிலான சந்திப்பு முடிவடைந்த பின்னரே ஆயுத அமைப்புக்களின் பிரதிநிதிகளை பார்த்தசாரதி சந்தித்தார் என்று பாலசிங்கம் எழுதுகிறார். "1985 ஆம் ஆண்டு தை மாதத்தில் பார்த்தசாரதியை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் தோற்றுப்போனவராகவும், உற்சாகமின்றியும் காணப்பட்டார். இந்திரா காந்தியின் அகால மரணமும், ரஜீவின் எதேச்சதிகாரமான, அலட்சியமான போக்கும் வயது முதிர்ந்த அந்த இராஜதந்திரியை வெகுவாகப் பாதித்திருந்தது.ரஜீவின் அரசாங்கம் கைக்கொள்ளவிருக்கும் புதிய கொள்கை தொடர்பாக எனக்குப் புரியப்படுத்த அவர் முயன்றார். கட்டாயப்படுத்தலின்றி, இணக்கப்பாடான போக்கையே இலங்கையுடன் இந்தியா இனிக் கடைப்பிடிக்கும் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் வசீகரமான பேச்சுக்களால் கவரப்பட்ட ரஜீவ் காந்தி சமாதான வழிகளில் தமிழரின் பிரச்சினையினைத் தீர்க்கலாம் என்று வெகுவாக நம்பினார். பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், பேரம்பேசலினூடாகவும் இதனைச் செய்ய அவர் உறுதிபூண்டார். பேச்சுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்பட்டவே இந்தியா விரும்புவதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். மேலும், போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்திராவின் இரகசியத் திட்டம் முற்றாகக் கைவிடப்படுவதோடு, பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடியாக யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஜெயவர்த்தனவின் தந்திரமான, சூட்சுமமான, குள்ளநரித்தனத்தை ரஜீவிடம் புரியவைப்பதில் தான் தோற்றுப்போய்விட்டதாக என்னிடம் கூறி அவர் வருத்தப்பட்டார். இறுதியாக, ஈழத்தமிழருக்கான நீதியான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதிலிருந்து தான் விலக்கப்படுவது உறுதி என்றும் தனிப்பட்ட ரீதியில் என்னிடம் அவர் கூறினார். தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரு முன்னணியாக தமது கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம், நடக்கப்போகும் மிகவும் சவாலான சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு முகம்கொடுக்க ஆயத்தமாகுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். ரஜீவின் நிர்வாகம் தொடர்பான புதிய கொள்கைகளை இந்தியாவின் புலநாய்வுத்துறை அதிகாரிகள் வெகு விரைவில் போராளி அமைப்புக்களுக்குப் புரியவைப்பார்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார்".1 point- புளுகுப் போட்டி
1 pointபுளுகுப் போட்டி -------------------------- மேடைப் பேச்சு சம்பந்தப்பட்ட எல்லாக் கலைகளும் யுத்த காலத்தை தாண்டியும் நன்றாகவே வளர்ந்து விட்டிருந்தாலும், 'புளுகுப் போட்டி' என்ற கலை வடிவம் ஏறக்குறைய முற்றாக அழிந்து போனது நெடுங்காலம் ஒரு கவலையாக இருந்தது. எந்த எந்த ஊர்களில் இந்தக் கலை வடிவம் அந்நாட்களில், 80களின் தொடக்கத்தில், இருந்தது, வளர்ந்தது என்று தெரியவில்லை, ஆனால் நான் வளர்ந்த ஊரில் அன்று மிகவும் செழிப்புடன் இது வளர்ந்து கொண்டிருந்தது. மூளையிலுள்ள நியூரான் நெட்வொர்க் போன்றதொரு மிகச் சிக்கலான ஒழுங்கைளின் வலைப்பின்னலால் உருவாக்கப்பட்டது என்னூர். ஊரில் சில ஒழுங்கைகளின் முடிச்சுகளில் காணாமல் போய், அப்படியே இன்னுமொரு முடிச்சில், நேர விரயம் ஏதும் இல்லாமல், தோன்றுவது என்பது மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. ஆரம்ப நாட்களில் ஆட்களைத் தேடி வந்த போலீஸ்காரர்கள் ஒழுங்கைகளில் கால்களை வைக்காமல், வீடுகளின் சுவர்களில் நடந்து திரிந்தனர். அவர்கள் ஒழுங்கை ஒன்றில் இறங்கினால், அவர்களையும் காணாமல் போனோர் கணக்கில் சேர்க்க வேண்டி வந்தாலும் வந்திருக்கும். அந்தளவு ஒழுங்கைகளும், பின்னல்களும் நிறைந்தது ஊர். ஒவ்வொரு ஒழுங்கைக்கும் ஒரு சிறிய விளையாட்டுக் கழகம் இருந்தது. பெரிய விளையாட்டு கழகங்கள் அல்லது தாய் விளையாட்டு கழகங்கள் என்றும் இருந்தன. மொத்தத்தில் ஏராளமான கழகங்கள். சிறிய கழகமோ, பெரிய கழகமோ அவர்களின் விளையாட்டுப் போட்டி வருடா வருடம் நடக்கும். கழக அங்கத்தவர்களுக்கான விளையாட்டுகள் மற்றும் பொது விளையாட்டுகள் என்று இரண்டு வகையான போட்டிகள் நடைபெறும். பொது விளையாட்டுகள் என்ற வகையில் புளுகுப் போட்டி வரும். யாரும் பங்கு பற்றலாம். மேடையில் ஏறி புளுகித் தள்ளவேண்டும். ஒரு கோர்வையாக, தொடர்ச்சியாக விடயம் இருக்கவேண்டும். கூட்டம் கைதட்டும். நடுவர்கள் புள்ளிகள் போடுவார்கள். இறுதியில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்று அறிவித்து பரிசுகள் வழங்கப்படும். வயதுக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. சிறுவர் முதல் பெரியோர் வரை அனுமதிக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, என் வயதை ஒத்த, அன்று சிறுவன், மேடையில் ஏறி, ஒரு சமயம் தன்னை யாரோ எங்கோ ஒரு வீட்டில் அடைத்து வைத்து விட்டார்கள் என்று ஆரம்பித்தான். தான் மெதுவாக ஒரு யன்னல் கம்பியை உடைக்க ஆரம்பித்தால், அது லட்டால் செய்யப்பட்டிருந்தது என்று தொடர்ந்தான். தான் அதை சாப்பிட்டு விட்டு, உடைப்பதை தொடர்ந்தால், வீடு முழுவதுமே லட்டால் கட்டப்பட்டிருந்தது என்றான். முழு வீட்டையுமே தான் சாப்பிட்டு விட்டேன் என்று சொன்னான். அன்றிலிருந்து அவனின் பெயரே மாறிவிட்டது. இதையே தொடர்ந்திருந்தால் சிலரின் இயல்பான திறமைகள் வெளியே வந்து, நன்றாக வளர்ந்தும் இருப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்தக் கலையில் ஒரு அடிப்படைத் திறமை, அறிவு கிடைத்திருக்கும். தொடர்ச்சியாக அடித்து விடுவது என்பது அரசியலிலும், சில சேவை வியாபாரங்களிலும் இருப்பவர்களுக்கு மிகத் தேவையான ஒரு திறமை. ஆந்திரா, தெலுங்கு, கன்னட, மலையாள நண்பர்களிடம் மிக மெதுவாகக் கேட்டுப் பார்த்ததில், திராவிட நாட்டில் இது வேறு எங்குமே காணப்படவில்லை என்றும் தெரிகின்றது. மலையாளிகளிடம் வேறு வேறு விதங்கள் இருக்கின்றன. ஒரு கட்ட சாயா, தட்டையுடன் (பிளேன் டீ, தட்டை வடை) அவர்கள் நாலு மணித்தியாலங்கள் உலக அரசியல் பேசி, இறுதியில் அமெரிக்காவை அரை உயிருடன் அடுத்த நாளுக்காக விட்டு வைப்பார்கள். மலையாளிகளுக்கு உலக அரசியலில் தான் ஆர்வம் அதிகம். மற்றும் அவர்கள் பொதுவாக சிவப்புச் சட்டை, சால்வைக்காரர்கள். இயல்பாக வந்த ஒரு திறமையை மறைப்பதென்பது கடினம். அது தும்மல் போன்று, விக்கல் போன்று எப்பவும், எங்கேயும் கொஞ்சம் அமுங்கியாவது வெளிப்படும். சமூக ஊடகங்களில் இன்று இந்தக் கலை வடிவம் நன்றாகவே வெளிப்படுகின்றது. ஆனால் எல்லா நாடுகளிலும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், சாமியார்களும் இன்று தூள் கிளப்புகின்றனர். பத்து பன்னிரண்டு வயதில் விட்டுப் போன புளுகுப் போட்டியை இன்று மீண்டும் அரசியல் மேடைகளில் எங்கும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகள் புளுகுப் போட்டியில் நிகர் இல்லாமல் அசத்துகின்றார்கள், முதலாம் இடம் அவர்களுக்கே.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointதமிழக அரசியல் எமக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை. 👎🏿1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 point1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு.......... 15. வாமன் சாதாரணமாய் அஞ்சலா வீட்டுப்பக்கம் போய்வர நேர்ந்தால் அவளோடும் தாயாருடனும் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான்.அது அவர்களுக்கும் பிடித்தமானதாயும் பொழுதுபோக்காகவும் இருந்தது. அன்றும் அப்படி ஒருநாள் போனபோது அஞ்சலா மிகவும் சோகமாய் இருந்தாள். என்ன இன்று மிகவும் கவலையுடன் இருக்கிறீர்கள்..... அதொன்றுமில்லையடா வாமு, "மழை விட்டும் தூவானம் போகேல்ல" என்ற மாதிரி என் நிலைமை இருக்கு. என்னெண்டு சொல்லுங்கோ.......இவற்ர இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான் எல்லோ அவன்தான் அன்று இவற்ற செத்தவீட்டில் என்னோடு குழப்பம் செய்தவன். சரி ....அதுக்கென்ன....... இப்ப அவர் என்னை கடத்திக் கொண்டுபோய் அவற்ர நண்பனுக்கு மணமுடித்து விடுகிற பிளானில் இருக்கிறார் என்று அவர் பாரில் தன் நண்பர்களுடன் கதைத்ததை எனக்கு நம்பகமான ஒருத்தர் அங்கிருந்து கேட்டுவிட்டு வந்து சொன்னவர்.அதைக் கேட்டதில் இருந்து மனம் ஒரே குழப்பமாய் இருக்கு. என்ன பணம் சொத்து எல்லாம் இருந்தால் என்ன எல்லாம் அவங்கட கையில் இருக்கிறமாதிரி நடக்கிறாங்கள். வாமனும் ....இல்ல நான் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் ஏன் நீங்கள் அவர் சொல்லுற இடத்தில கலியாணம் செய்யக்கூடாது. அதுக்கில்ல.....எனக்கு அது விருப்பமில்லை....விட்ட படிப்பைத் தொடரலாமா என்றும் ஒரு எண்ணம் எனக்கு வருகுது.....அதுக்குள்ளே இவன் இந்தமாதிரி வேலை பார்க்க நிக்கிறது எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல. இவற்ற சம்சாரமோ மூத்தப்பிள்ளையோ வந்து கதைத்தால் கதைத்துப் பார்க்கலாம்.அதை விட்டிட்டு கடத்திக் கொண்டு போக நினைப்பதெல்லாம் துப்பரவாய் சரியில்லை. ஓம்.......நீங்கள் சொல்லுறதும் சரிதான்..... நான் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து இரண்டு முறைதான் இந்தப் படலையைத் தாண்டி இருக்கிறன். அவற்ர செத்தவீட்டுக்கும், மயிலம்மா வீட்டுக் கலியாணத்துக்கும்தான். எனக்கென்ன தெரியும் அவங்களை மீறி நான் என்ன செய்ய முடியும். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ......அவன் என்ன செய்யுறான் என்று நானும் பார்க்கிறன். இன்னும் இரண்டு நாளில் சுந்துவும் விடுமுறையில் வருகிறான். நான் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். எதையும் யோசித்து செய்யலாம். அதுக்குள்ள ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறன். அப்படி பிரச்சினை என்றால் உங்கட தொலைபேசியால் அரசு விதானைக்கு அறிவியுங்கோ. அல்லது அங்கு போய் இருங்கோ. அநேகமான நேரங்களில் நானும் அங்குதான் இருப்பேன்.இப்ப போய் நானும் அவரிடம் சொல்லி வைக்கிறன். பின் வாமன் அரசு விதானையிடம் சென்று விஷயத்தை சொல்கிறான். அதற்கு அவர் நீ ஒன்றுக்கும் யோசிக்காத. ஆர் அந்த யோகிபாபுதானே, அவன் ஒரு மொக்கன். அவனைத் தெரியும் எனக்கு. வைத்தி இருக்கேக்க அவரை ரெண்டு கேசில இருந்து காப்பாற்றி விட்டனான். மூத்தவன் விவேக் கொஞ்சம் நல்லமாதிரி சொன்னால் கேட்பான். விடு அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஏன்டா நீ அவளுக்காக இவ்வளவு கரிசனைப் படுகிறாய்...என்ன விசயம் சொல்லு. அப்படி ஒன்றுமில்லை அண்ணா ....அந்தப் பிள்ளை எங்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கு. நல்ல பிள்ளை அதுதான்.... சரி....சரி.....அப்படி ஏதாவது இருந்தாலும் சொல்லு செய்திடலாம் யோசிக்காத.... ஒன்று சொல்லுறன் கேள், பிறகு விதானைக்கு பொம்பிளை தர மாட்டாங்களாடா.......சும்மா சொல்லுவாங்கள் அரச உத்தியோகம்.....நல்ல வேலை என்று எல்லாம்....... பொம்பிளை கேட்டுப் போனால்தான் தெரியும்.....ஹா .....ஹா என்று வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். அடுத்து வந்த சில நாட்களில் சுந்து விடுமுறையில் வருகிறான். வாமன் சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்து அவன் வீட்டில் விடுகிறான்.அங்கு அவன் தனது தாய் சகோதரங்களுடன் வழமையான குசலங்கள் விசாரித்து விட்டு, அம்மா நான் வாமனுடன் வெளியே போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி அவனின் அலுவலக அறைக்கு சென்று அவனையும் அழைத்துக் கொண்டு இருவருமாக மோட்டார் சைக்கிளில் வெளியே போகிறார்கள். அப்போது வாமன் ஏதோ யோசனையில் இருப்பதை சுந்துவும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவர்கள் வழமையாகப் போகும் "பாரு"க்கு சென்று அரைப்போத்தல் சாராயமும் தண்ணிப் போத்தலும், கணவாய்ப் பிரட்டலும் வாங்கிக் கொண்டு வந்து ஒரு கதிரையில் அமருகிறார்கள். இப்போது வாமன் விதானையாகிய பின் எங்கு சென்றாலும் அவனுக்கு தனி மரியாதை கிடைக்கின்றது. அப்போது அங்கு ஒரு குடிமகன் போதையில் தள்ளாடியபடி வந்தவர் வாமனைப் பார்த்துவிட்டு தம்பி புது விதானையார் எனக்கொரு சந்தேகம்..... கொஞ்சம் விளக்க முடியுமோ..... வாமனும் என்ன அண்னை சொன்னால் தானே தெரியும்......சரி.....நீங்கள் மாளிகைக் கடைக்குப் போனால் என்ன செய்வீங்கள்..... சாமான்கள் வாங்குவோம் .......பிறகு .......பிறகு பணம் குடுப்போம். .... முடி வெட்டப் போனால் ......முடி வெட்டுவோம் ....பிறகு பணம் குடுப்போம் .... உடுப்புகளை சலவைக்குப் போட்டால் ........இதென்ன கேள்வி கொண்டு வந்து தந்தபின் பணம் கொடுப்போம். தேனீர் சாப்பாட்டுக் கடைக்குப் போனால் .......சாப்பிட்டுட்டு பணம் கொடுத்து விட்டு வருவோம்......சரி......சரி......ஆனால் ஒரு பாருக்கு போனாலோ, சினிமாவுக்கு போனாலோ அல்லது விலைமாதிடம் போனாலோ என்ன செய்கிறீர்கள் .......பக்கத்தில் குடித்துக் கொண்டிருந்த ஒரு வண்டிச்சாரதி சொல்கிறார் .....ஹா....ஹா.....இது நல்ல கேள்வி..... முதலில் பணத்தைக் குடுத்து விட்டுத்தான் பொருளை நுகர்கிறோம்....சரியா .....மெத்தச் சரி...... விதானைத் தம்பி நீயே கேள் இவனிட்டை ஒரு கால் போத்தல் தாடா நாளைக்கு காசு தருகிறேன் என்றால் தராமல் விரட்டுறான். அங்கிருந்த எல்லோரும் சிரிக்கிறார்கள்.....வாமனும் சிரித்து விட்டு சரி அண்ணை நான் சொல்லுறன் நீங்கள் போய் வாங்குங்கோ நான் அவரிட்டை சொல்லுறன். அவர் தள்ளாடி கும்பிட்டுக்கொண்டு போகிறார். சுந்து சொல்லுறான், டே வாமு ஆனாலும் விதானை வேலை ரெம்பக் கஷ்டமடா.........! 🦚மயில் ஆடும்............. 15.1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........... 14. நேரே மயிலம்மா வீட்டுக்கு வந்தவன் முன்னால் இருந்த அம்மன் கோயிலில் வண்டியை நிப்பாட்டி விட்டு சென்று அம்மனைக் கும்பிட்டு கற்பூரம் ஏற்றி ஒரு சிதறுதேங்காயும் உடைத்து மூன்று பட்டும் ஒரு மஞ்சள் பட்டுச் சேலையும் அவ காலடியில் வைத்து விட்டு, சைக்கிளுடன் வீட்டுக்குள் வருகிறான். அவனைக் கண்டதும் மயிலம்மாவுக்கு முகம் மலர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் ஏன்டா வாமு இப்பதான் உனக்கு வழி தெரிஞ்சதோ. இத்தனை நாளா உன்னை இங்காலுப் பக்கம் காணேல்ல. சும்மா கோவப்படாதையுங்கோ மயிலம்மா.ஒரு நல்ல செய்தி உங்களிடம் சொல்ல வருகிறன் என்று சொல்ல.......பின்ன எனக்கு கோவம் வராதா கல்யாண வேலைகள் தலைக்கு மேல் கிடக்கு உன்னையும் காணேல்ல நான் என்னெண்டு நினைக்கிறது எதையென்று நினைக்கிறது சொல்லு. முதல்ல எனக்கு கிராமசேவகர் வேலை கிடைத்திருக்கு மயிலம்மா.நீங்கள் அப்போது வீட்டுக்கு வந்ததா அம்மா சொன்னவ. எனக்கு இப்ப விதானையாருடன் வேலை அதிகம். விடிய வெள்ளன அவரோடு போனானான் பின்னேரம்தான் வீட்டை வந்தனான் என்று சொல்லி தான் அஞ்சலாவிடம் மோட்டார் சைக்கிள் வாங்கியதுவரை எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறான். உண்மையா வாமு நான் கொஞ்சம் பயந்திட்டன்டா. சரி ஏதோ பொல்லாத காலம் அதெல்லாவற்ரையும் மறந்திடுவோம். அதென்ன கையில் பார்சல் என்று கேட்கிறாள். இது மயிலம்மா உங்களுக்குத்தான் எடுத்து வந்தனான்.அவளும் அதை அங்கேயே பிரித்துப் பார்க்க அதில் சுந்துவுக்கு ட்ரவுசர் சேர்ட் பனியன், பூவனத்துக்கு மூன்று சுடிதார் ஹீல்ஸ் செருப்பு, மயிலம்மாவுக்கு நாலு சேலைகள் சட்டைகள் பாவாடைகள், உள்ளாடைகள் அத்துடன் பாட்டா உட்பட ரெண்டு சோடி செருப்பு எல்லாவற்றுடனும் இனிப்பு சொக்கிலேட் எல்லாம் இருக்கு. அதெல்லாம் பார்த்த மயிலம்மாவுக்கு மனம் நெகிழ்கின்றது. பின் அதில் இருந்து ஒரு சேலையும் சுடிதாரும் தனியாக எடுத்து வைத்து உள்ளே சென்று ஒரு புது வேட்டியையும் கொண்டு வந்து அதோடு சேர்த்து சொக்கிலேட் மற்றும் இனிப்புகளும் வைத்து அவனிடம் இதை நீ கனகத்திடம் குடு. நாங்கள் ஒன்டுக்க ஒன்டாய் பழகிறானாங்கள். அவர்களும் சந்தோசப் படுவினம். பின் அவள் சிறிது தள்ளிச் சென்று கனகத்தைக் கூப்பிட அவளும் தன் வீட்டில் இருந்து எட்டிப்பார்த்து விட்டு வருகிறாள். கனகத்திடம் தனக்கு வேலை கிடைத்ததை சொல்லிய வாமன் பார்சலை அவளிடமும் தர அவளும் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறாள். அடுத்து செய்யவேண்டுய வேலைகள் பற்றி மயிலம்மாவும் வாமுவும் கலந்துரையாடி ஒரு கொப்பியில் எழுதுகின்றனர்.பின் மயிலம்மா அவனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று அந்த ஒரு லட்சம் ரூபா பணத்தில் இருந்து இருபத்தையாயிரம் ரூபாவை தனியாக எடுத்து அவனிடம் தர அவனும் என்ன மயிலம்மா இது எதுக்கு எனக்கு என்று கேட்கிறான். டேய் இது உனக்கென்று தரவில்லையடா. நான் ஒரு எழுபது எழுபத்தைஞ்சுக்குள் இந்தக் இந்தக் கலியானச் செலவுகளை முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கையில அதிகம் பணம் இருந்தால் கண்டபடி செலவு செய்யத் தோன்றும். மேலும் உனக்கு பூவனத்தைப் பற்றி தெரியும்தானே. என்ர மகள்தான் ஆனால் இந்தப் பணத்தைக் கண்டால் பெரிசாய் சிலவு செய்து கலியாணம் கட்ட நிப்பாள் அல்லது இந்தப் பணத்தை அப்படியே தனது புருஷன் வீட்டுக்கு கொண்டுபோக அடம்பிடிப்பாள். அம்மா படும் கஷ்டத்தைப் கொஞ்சமும் நினைக்க மாட்டாள். என்ர பிள்ளையைப்பற்றி எனக்குதான் தெரியும். இதை நீ கவனமாய் வீட்ட கொண்டுபோய் வைத்துக்கொள். அந்தப்பிள்ளை எவ்வளவு நம்பிக்கையுடன் நகைகளைக் கூட எடுக்காமல் நம்பிப் பணம் தந்தது. அதனால் எப்படியும் ஆறுமாதத்துக்குள் கடன் அடைச்சுப்போட வேணும் என்கிறாள்.அவனுக்கும் அது சரியென்றே தோன்றியது. அன்று அந்தச் சம்பவம் வெய்யிலில் வானவில் தோன்றி மறைவதுபோல் தற்செயல் நிகழ்வாய் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதிலிருந்து மயிலம்மா மது பாவிப்பதை அறவே விட்டிருந்தாள். வாமனும் தனது வேலையின் நிமித்தம் ஆங்காங்கே கொஞ்சமாவது பாவிக்க வேண்டிய அல்லது பாவிப்பதுபோல் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்குது. அவனால் அவளைபோல் அறவே விட முடியவில்லை. பூவனத்தின் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சுந்துவும் வந்து விட்டான். அவர்கள் ஒரு வாடகைக்காரில் பெரியகடைக்கு சென்று தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள்.வாமுவும் மற்றவர்களும் சுந்துவோடு அவன் இல்லாத சமயத்தில் நடந்த சம்பவங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.வாமனுக்கு கிராமசேவகர் வேலை கிடைத்தது பற்றி கதை வந்தபோது பூவனம்தான் சொல்கிறாள் அண்ணா அவன் அலுவலகம் திறக்க இடம் பார்க்கிறான் இன்னும் சரியா அமையவில்லை. சுந்துவும் என்னடா இவள் சொல்வது உண்மையா, நீ எனக்கு சொல்லவில்லை. அதெடா சுந்து இடத்தை பிடிச்சுட்டு சொல்லுவம் என்று இருக்கிறன் என்கிறான். கொஞ்ச நேரம் யோசித்த சுந்து ஏண்டா நீ எங்கட முன் அறையைப் பாவிக்கக் கூடாது. தங்கச்சியும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிடுவா, நானும் இங்கில்லை, அம்மாவும் தனியாய் இருக்கிறா.நீ இங்கிருந்தால் அவவுக்கும் துணையாய் இருக்கும். நாங்களும் பயமில்லாமல் இருப்பம். நீ என்னம்மா சொல்கிறாய் என்று தாயாரைக் கேட்கிறான். அவளும் நான் அதைப்பற்றி நினைக்கவில்லை, நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யலாம் என்கிறாள். வாமு நீ என்னடா சொல்கிறாய் என்று கேட்க அதில்லடா சுந்து விதானையின் அலுவலகம் எண்டால் நாலுவிதமான ஆட்களும் வந்து போவினம்.அது மயிலம்மாவுக்கு இடைஞ்சலாய் இருக்கும் இல்லையா..... அது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. உனக்கு வேறு நல்ல இடம் கிடைக்கும் வரை கூட நீ இதைப் பாவித்துக் கொள்ளலாம். அப்போது பூவனம் நீ விதானையானால் அலுவலகத்துக்கு தொலைபேசி தருவார்கள் எல்லோ. ஓம் தருவார்கள்....அப்ப நாங்கள் அண்ணனுடன் கதைக்கலாம் என்ன.... பின் எல்லோரும் கலைந்து போகிறார்கள். உற்றார் உறவினர் நண்பர்களுடன் பூவனத்தின் கல்யாணம் அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்துக்கு அரசு விதானையும் அஞ்சலாவும் கூட வந்திருந்து அன்பளிப்புகள் கொடுத்து சிறப்பித்திருந்தார்கள். சுந்துவும் சமயத்தில் அவள் செய்த உதவிக்கு மனதார நன்றியைத் தெரிவித்து கொண்டான்.அடுத்து வந்த இரு நாட்களில் அவன் எல்லோரிடமும் சொல்லி விடை பெற்றுக்கொண்டான். அவன் வாமுவுடன் புகையிரத நிலையத்துக்கு செல்லும்போது அடுத்த மாதம் எனக்கு ஒரு மாத விடுமுறை வருகிறது அப்ப சந்திக்கலாம் என்று சொல்லி வந்த வண்டியில் ஏறி கையசைத்து விடை பெற்றுக்கொள்கிறான்........! 🦚 மயில் ஆடும்........! 14.1 point - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.