Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3057
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7051
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8907
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/05/24 in all areas

  1. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில் முன்வைத்தார். மாணவிகள் கால் முதல் தலைமுடியின் நுனி வரை பற்றியெரியும் கோபங் கொண்டு அம்மாணவனைத் தனிப்படத் தாக்கத் தொடங்கினர். நீ தான் அப்பிடி நினைக்கிறாய், மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை என்று சொன்னார்கள். ஏனைய ஆண் மாணவர்கள் மெளனம் காத்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச், சொல்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டேன். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பார்வைகளைச் சொல்லத் தொடங்க மாணவிகள் எதிர்நிலைக்குச் சென்று கடுமையாக எதிர்வினையாற்றினர். மாணவிகளிடம் நீங்கள் இவ்விதம் பேசினால் அவர்கள் தங்கள் தரப்பில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ந்தும் அத்தகைய மனநிலைகளிலேயே இருப்பார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வேண்டுமா? என்ற கேள்வியினால் அமைதியாகி ஆண்கள் சொல்வதைக் கேட்டார்கள். ஆண்கள் தமது பொதுப்புத்திப் பார்வைகளைச் சொல்லி முடித்ததும் பெண்களிடம் பெரிய சோர்வு உண்டாகியது. கோபம் அடங்கி சலிப்பு மேலிட்டது. பின்னர் ஒவ்வொருவராகக் கேள்வியுடன் எழுந்தார்கள். சிலர் அழுதனர். அந்த உரையாடல் மூன்று நாட்கள் நீண்டது. இறுதியில் ஆண்களில் பெரும்பான்மையான மாணவர்கள், பெண்களின் உடையில் இல்லை தங்களின் பார்வையில் தான் பிரச்சினை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு, வெளிப்படுத்தி, தம்மைச் சீர்படுத்தத் தொடங்கினர். எனது பணியென்பது, இதனைப் பாதுகாப்பாகவும் தனித்தாக்குதலாகவும் கதாப்பாத்திரப் படுகொலையாகவும் மாறாமல் காப்பதே. முதல் நாள் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் இரண்டாவது நாள், காலை ஆறு மணி வகுப்பிற்கு, அனைவரும் நேரம் பிந்தாமல் வந்து சேர்ந்தனர். அனைவரையும் எழுந்து நின்று கண்களை மூடச் சொல்லி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளிற்கு நேர்ந்த கொடூரங்களைச் சொன்னேன், அவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்கள் தம்முன் நிகழ்ந்த அந்தக் கொடூரங்களைச் சில கணங்கள் நினைத்த பின் அவர்களின் உரையாடலில் பொறுப்புணர்வு கூடியிருந்தது. ஆறு வயதுச் சிறுமியை வன்புணரும் போது அவரணிந்திருந்தது ஒரு பாடசாலை உடை. கழுத்தில் டையினால் நெருக்கிக் கொல்லப்பட்டார். ஆடை என்னவாகியது என்ற கேள்வியுடன் உரையாடல் தொடங்கியது. பின்னர் அடுத்த நாள் உரையாடல்களுடன் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் முன்முடிவுகள் ஓரளவு தீர்ந்து சமநிலையை, ஒரு புதிய நியாயத்தை அவர்களாகவே கண்டடைந்தார்கள். இதற்கான வெளியை உருவாக்குவதே முக்கியமானது. பெண்கள் ஆண்களை அறிய வேண்டும். ஆண்களும் பெண்களை எதிர் கொள்ள வேண்டும். நியாயங்கள் சந்தேகங்கள் பகிரப்பட வேண்டும். அதிலிருந்து அவர்கள் கேள்விகளற்று ஆக வேண்டும். ஒரு தியானம் நிகழ்வது போல. ஆரம்பத்தில் எழும் மனக்கூச்சல்கள் அடங்கி, தன்னை அறிவதன் தொடக்கம் நிகழ வேண்டும். * சில மாதங்கள் கழித்து ஒரு மாணவன் ‘சேர், ஒரு பிரச்சினை’ என்று வந்தார். தங்களது நண்பர்களில் ஒருவருடன் தமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்தார் என்று சொன்னார். நான் அந்த பாதிக்கப்பட்ட மாணவனுடன் நான்கு தடவைகளுக்கு மேல் விரிவாக உரையாடி, அவருடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவருக்கு நிகழ்ந்தவற்றை அறிந்தேன். இதை வெளிப்படுத்த மூன்று வழிகளைப் பரிந்துரைத்தேன். முதலாவது, உங்களது வீட்டில் சென்று பெற்றோருடன் இது தொடர்பில் அறியப்படுத்துங்கள், அவர்களிடம் உரையாட மனத்தடையிருந்தால் நானும் வந்து உதவுகிறேன். இரண்டாவது, பாடசாலைக்கு இது தொடர்பில் அறிவிக்கச் சொன்னேன், மூன்றாவது, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை அல்லது கல்வி மேலிடங்களுக்கு அறிவிக்கலாம். அதற்கும் நான் உடனிருக்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு மூன்று வழிகளிலும் இதைத் தொடர மனத்தடை இருந்தது. ஆகவே உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். அந்த ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தலைத் தொடரக் கூடாது. அவர் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னார். சில நாட்களின் பின் எனக்குத் தகவல் சொன்ன மாணவனும் அதே காலப்பகுதியில் அந்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட முனைந்தமை பற்றி என்னிடம் சொன்னார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் இதனால் தனக்கு படிக்க முடியவில்லை. அவர் தன்னை நெருங்கிய அந்த நேரம் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருகிறது. பதட்டம் வருகிறது. வியர்த்து வழிகிறது. இதனை வெளியில் சொல்ல முடியவில்லை. யோசினையாக் கிடக்கு என்று சொன்னார். இருவருடனும் ஆறு தடவைகளுக்கு மேல் உரையாடி அவர்கள் பிரச்சினையை அவர்களே நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான மனநிலையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கினேன். சமூகத்தில் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது எவ்விதம் அவை எதிர்கொள்ளப்படும் என்பதை ஓரளவு அறிவேன். கீழ்மட்ட அதிகாரங்கள் அவற்றை எவ்விதம் கையாளும் என்ற என் அனுபவத்திலிருந்து பெற்ற அறிவைக் கொண்டு, மாணவர்கள் மனதளவில் தயாரானதும், மேல்மட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நானே நேரில் சென்று புகாரளித்தேன். அவர்கள் அடுத்த நாளே அந்த ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து வெளியேற்றி விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். அன்றே மாணவர்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்ததை வீட்டில் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவருக்கு ஆதரவாக நின்று அவர்களைப் பேச வைத்தனர். அந்த ஆசிரியர் இன்னொரு பாடசாலைக்கு விசாரணையின் பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு இடம்மாற்றப்பட்டார், அவர் புதிதாகப் பணியாற்றப்போன பாடசாலைக்கும் இத்தகவல் பகிரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிப்படுத்தப்படாது, பாதிப்பு நிகழ்த்தப்பட்டது யாரால் என்ற செய்தி ஊரெல்லாம் பரவியது. ஊர் மக்கள் அந்த ஆசிரியரை அடிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காமல் அனுப்பியது தவறு என்று என்னிடம் முரண்பட்டு நின்றனர். ஒன்று, இதைச் சட்ட ரீதியில் நாம் கையாள வேண்டும். அதற்கு அந்த மாணவர்களின் மனநிலையும் பெற்றோரும் விரும்பவில்லை. இரண்டு, வன்முறையைப் பிரயோகிப்பது சமூக அச்சத்தை உண்டாக்குவது மட்டும் இப்பிரச்சினைகளில் முக்கியமில்லை. இது தொடர்பில் ஊராக நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திப்பதே அவசியமானது என்று கூறினேன். நான் எவ்வளவு சொல்லியும் ஊர் மக்களில் சிலர், அடிப்பது தான் சேர் வழியென்று சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த வழிமுறை, மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் என்பதைச் சொல்லி, அவர்களுடனும் விரிவாக உரையாடி நிலமையைத் தணித்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கிறது என்ற தகவலை மாணவிகள் கொணர்ந்தனர். மாணவர்களுடைய நடவடிக்கைகளில் நாங்கள் மாற்றங்களை அவதானிக்கிறோம். இதை எப்படிக் கையாள்வது என்று கேட்டார்கள். மீளவும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடல்களை நடத்தினேன். ஆண்கள் சிலர் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு இவை நிகழ்கின்றன என்று பேசிய பின், போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பட்டியற்படுத்தினோம். பதினாறு பேருக்கும் மேல் நீண்ட பட்டியலது. அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்களது பெற்றோருக்குத் தகவல்களைச் சொன்னேன். அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க வைத்தேன். சிலரது குடும்பச் சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்களது குடும்பத்துடன் உரையாட முடியாத சூழல் எனக்கும் இருந்தது. ஆனால் மாணவர்கள் எல்லோரும் என்னுடன் உரையாடத் தயாராயிருந்தார்கள். தங்கள் மேலுள்ள தவறுகளைத் திருத்த வழி கேட்டனர். மாதக்கணக்கில் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது. ஒருசிலரைத் தவிர அனைவருமே அப்பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்கள். சிலரைக் கட்டுப்படுத்துவது இயலவில்லை. அவர்கள் குடும்பங்களும் கூட அதை ஒரு பிரச்சினையாக கவனமெடுக்கவில்லை. அவர்களை வகுப்புகளிலிருந்து நீக்கினோம். ஆனால் நான் தனிப்பட அவர்களுடன் உரையாடிக்கொண்டேயிருந்தேன். தவறுகளைச் செய்துவிட்டுத் தாங்களாகவே வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை உங்களைத் திருத்திக் கொண்டாலே போதும் என்று பலதடவைகள் கேட்டேன். அவர்கள் குறைத்துக் கொண்டார்களே தவிர, முழுமையாக விலகினார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரம் சக மாணவர்களிடமும் சிறியவர் முதல் பெரியவர் வரை இது பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இடைவிடாது உரையாடிக் கொண்டிருந்தேன். * பிறகொரு நாள், இவை பற்றி ஒரு வீதி நாடகம் ஒன்று செய்வோம். தொடர்ந்து எழும் சிக்கல்கள் தொடர்பில் சமூகத்துடன் உரையாடலை விரிவாக்குவோம் என்று கோரினேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலைகளில் ஈடுபட்டார்கள். காலை முதல் இரவு வரை ஏராளமான பணிகளைச் செய்தனர். துஷ்பிரயோகங்கள், தண்டனைகள், போதைப்பொருள், ஆடைக் கட்டுப்பாடு, மாணவர் உரிமைகள் என்று அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சொந்தப் பிரச்சினையும் தான் அவர்களது நாடகத்தின் கருக்கள். அவர்கள் உண்மையில் பேசிய, எதிர்கொண்ட ஒவ்வொரு உரையாடலும் தான் அவர்களது வசனங்கள். அவ்வூரின் வீதியெங்கும் தாங்களே கைகளால் வரைந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். குயர் அரசியல் தொடர்பில் சாதரண தமிழ்க் கிராமமொன்றில் அங்குள்ள மாணவர்களால் அவ்வரசியல் உள்வாங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவரொட்டி வரையப்பட்டு ஒட்டப்பட்டமை அதுவே நானறிந்து முதல்முறை. நாடகத்திற்குத் தயாரானார்கள். உரையாடி, சமநிலை பெற்ற அந்த நாடகம் அவ்வூரில் ஆக்கபூர்வமான கவனிப்பைப் பெற்றது. மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பேசும் வகையறிந்தார்கள். ஆனால் இது முழுமையானதல்ல. அவர்கள் மீளவும் தவறுகளில் ஈடுபட வாய்ப்புண்டு. இன்னமும் சரிசெய்யப்படாத சிக்கல்கள் அவர்களிடமுண்டு. இத்தகைய சிக்கல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளும் வழிவகைகளை, அதற்குத் தேவையான ஒற்றுமையை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தினேன். அவர்களது அன்றாட அனுபவத்திற்கு வெளியே சில மாணவர்களின் வாழ்க்கையிலும் பார்வையிலுமாவது அவை செல்வாக்குச் செலுத்தும். அதுவே என்னால் இயலக்கூடியது. அந்த வீதி நாடகம் சூரியன் செம்மஞ்சளெனச் சரிந்திறங்கிய பின்மாலையொன்றில் நிகழ்ந்தது. வன்புணரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளினதும் படங்களைத் தங்களது கைகளாலேயே மாணவர்கள் வரைந்தனர். அதை நாடகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தோம். நிகழ்வு முடிந்த பின்னர் நன்றாக இருட்டி விட்டது. அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் நின்று மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் தாய், என்னிடம் வந்து என்ன சேர் படிக்கிறானா என்று கேட்டார். ஆள் குழப்படி தான், ஆனால் இப்ப கொஞ்சம் படிக்கிறான் என்று சொன்னேன். அவன் படிக்காட்டியும் பரவாயில்லை சேர், நல்ல பிள்ளையா இருந்தாக் காணும் என்றார். நான் சிரித்து விட்டு, அவன் நல்ல பெடியன் தான் என்றேன். வீதியில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் சில கணங்கள் அவரது கண்கள் தெரிந்தது, கலங்கி விழியில் நீர் சேர்ந்து விழத் தொடங்கியிருந்தது. நீங்கள் அவங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி சேர். என்ர பிள்ளை என்ன விட உங்களைத் தான் நம்பிறான் என்று சொல்லிக் குரல் தழுதழுத்த பொழுது, அருகே, மாணவர்கள் சிலர் வெளியேறி வந்து கொண்டிருந்தனர், அதெல்லாம் எப்பையோ முடிஞ்சுது அம்மா, அவன் கடந்து வந்திட்டான். நீங்கள் வீட்ட போங்கோ என்று சொன்னேன். தங்யூ சேர் என்றார். வாழ்நாளில் நான் நேரில் கேட்ட சில அரிதான நன்றிகளில் ஒன்று அது. * நிகர் வாழ்விலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ ஒரு மனிதர் தனக்கு நிகழும் அநீதிகளையோ துஷ்பிரயோகங்களையோ உரையாடுவதும் அதற்கான நீதியைப் பெற முனைவதற்கும் நாம் உடனிருப்பது ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை. இத்தகைய அநீதிகளும் அவை நடைபெறும் முறைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடையப்பட நாம் உதவ வேண்டும். அதுவே பிரதானமானது. பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை முன்வைக்கு ஒருவர் பக்கத்திலிருந்தே நாம் பிரச்சினைகளை அணுகும் நேரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டதினாலேயே அவர் சொல்பவை உண்மைகள் என்ற நிலையைச் சென்று சேர்வது, உண்மையைக் கண்டறிவதிலும் நீதியைப் பெற்றுத்தருவதிலும் தடைகளை ஏற்படுத்தும். அவர்களது மனநிலைகளும் நெருக்கடிகளும் அவர்களை உண்மைகளை விழுங்கவோ அல்லது வேறு விதமாக முன்வைக்கவோ தூண்டும். அவர்கள் சொல்வது பெரும்பாலும் பகுதியளவு உண்மைகள் என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், சாதி, இனம், வர்க்கம், உளவியல் நிலை என்று பலவிடயங்கள் அந்தப் பாதிப்பின் வகைமையில் அதற்கான நீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எல்லா விக்டிம்களும் ஒரே வகையானவர்கள் அல்ல. அவர்கள் விரும்புவதும் ஒரே வகையான தீர்வுகளை அல்ல. சிலர் தாமாகவே தம்மைச் சரிசெய்யக் கூடியவர்கள். சிலருக்கு உதவி தேவைப்படலாம். சிலர் தன் மேல் பாதிப்பு நிகழ்த்தியவரை தண்டிக்க விரும்பலாம். சிலர் மன்னிக்கலாம். சிலர் விலகலாம். இப்படிப் பலவகையான வழிகளில் சமூகச் சிக்கல்களும் அதன் தரப்பினர்களும் வித்தியாசங்கள் கொண்டவர்கள். இத்தகைய வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நார்சிஸ்ட் உளவமைப்பு உடையவர்களாக இருப்பின் அவர்களை அணுகுவதைப் பற்றிய உளவியல் வேறுவிதமானது. கீழே இருக்கும் விக்டிம் நார்ஸிஸ்ட் பற்றிய அவதானிப்புகள், இணையத்தில் உள்ள உளவளத் தளங்களின் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டது. நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும், நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது. முதலில் விக்டிம் பிளேமிங் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது தொடர்பில் ஓரளவு பரவலான அறிமுகம் நம் சமூகத்தில் ஏற்கெனவே உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபராக ஒருவர் தன்னை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கிச் சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் நபரை அல்லது அவரது முன்னுரிமையைப் பாதுகாப்பது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நிர்பந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டவரை நிர்ப்பந்தித்தல் என்பவற்றை விக்டிம் பிளேமிங் என்று சுருக்கமாக வரையறுக்கலாம். இதில் பல்வகைமையான பின்னணிகளைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பு இருக்கும். ஒருவர் ஒரு தன்னிலையில் பாதிக்கப்பட்டவராகவும் இன்னொரு தன்னிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க முடியும். வன்புணர்விலோ அல்லது உடலியல் துஷ்பிரயோகங்களிலோ இவை இன்னும் அதிகமாகச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தப்படும். ஆனால் எப்பொழுதும் முதற்கரிசனை பாதிக்கப்பட்டவரின் சொந்தக் குரலுக்கே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவராக ஒருவர் தன்னை முன்வைக்கும் போதுதான் இந்த விக்டிம் பிளேமிங் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பதிலாக வேறு ஒரு நபர், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தனது தரப்பிலிருந்து சந்தேகங்களையோ அல்லது கேள்விகளையோ மட்டுமே முன்வைக்கலாமே தவிர, பாதிப்பைச் செலுத்தியவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட முடியாது. அல்லது அந்த நோக்கிலிருந்து உரையாடலைத் தொடரக் கூடாது. குற்றத்திற்கான ஆதரங்களை அவர் முன்வைத்தே ஆகவேண்டும். அதற்காக அவர் எந்த வெளியைத் தீர்மானிக்கிறாரோ, அதிலேயே அது வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் ஒரு வழக்கினைப் பதிகிறார் என்றால் அதற்குக் குறைந்த பட்ச ஆதாரமாவது தேவை. ஒன்று பாதிக்கப்பட்ட நபர், அல்லது அப் பாதிப்புத் தொடர்பான ஏதாவதொரு ஆதாரம். சமூக வலைத்தள பொலிஸ் நிலையத்திற்கு இது எதுவும் தேவைப்படாது, அதற்கு ஊகங்களே குற்றவாளியை முடிவு செய்யப் போதுமான ஆதாரம். அல்லது திரிபுபடுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட அல்லது விழுங்கும் உண்மைகளே போதுமானது. சமூக வலைத்தளமோ நேர் உரையாடல்களோ கூடப் பாலியல் குற்றச் சாட்டுகளிலோ அல்லது எந்த வகையான குற்றச்சாட்டுகளிலோ அவற்றிலுள்ள உண்மையை அறிவதென்பது சிக்கலானது என்ற அடிப்படையைச் சமூகத்தில் சிறு தரப்பினராவது உள்வாங்க வேண்டும். * சமூகவலைத்தளங்களில் உருவாகியுள்ள அரியவகை முன்னேறிய பிரிவொன்றை ‘அம்பலப்படுத்தளாளர்கள்’ என்று சுட்டலாம். ஒரு சமூகத்தில் வைத்தியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் போல் இதுவும் ஒரு வகைமை. கொஞ்சம் புதியது. சாதாரணமாக ஊர்களில் இப்படிப் புறணி பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த வகைமைக்குள் அடக்க முடியாது. அம்பலப்படுத்தலாளர்களின் சேவையும் அணுகுமுறையும் புதியது. ஆகவே குறைபாடுகள் இருக்கும். வழிமுறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு நபர் மீதோ அமைப்புகளின் மீதோ இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் வழிமுறை அவற்றுக்கான தீர்வினை அடைவதற்குத் தடைகளை உருவாக்குகிறது. குழப்புகிறது. ஆகவே அம்பலப்படுத்தலாளர்கள் தங்கள் நோக்கமான பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத்தருதல் என்பதில் கூடிய கவனத்தை உருவாக்க இன்னும் உழைக்க வேண்டியும் அவை தொடர்பில் வாசித்து அறிவார்ந்து விவாதித்து தங்களது சமூகப்பணிகளைத் தொடரவும் வேண்டும். மேலும், இத்தகைய ஒரு அரிய வகைமுயற்சி தொடர்பிலும் அதன் வரலாறு, முன்னோடிகள் தொடர்பில் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கி பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இன்னும் பல அம்பலப்படுத்தலாளர்கள் உருவாக அதுவொரு விதையாக இருக்கும்😉 அம்பலப்படுத்தலாளர் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு உதாரணத்தினை இப்போது பார்க்கலாம். பாதிக்கப்பட்ட விக்டிம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொணரும் போது, அவர்கள் கேட்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையானது, அவற்றுக்கு வேறு பக்கங்களே இருக்காது போன்ற முன்முடிவுகளை எடுக்கக் கூடாது. எனது அனுபவத்தில் பாதிக்கப்பட்டவரோ பாதிப்பைச் செலுத்தியவரோ இரு தரப்பும் தன்னிலையிருந்தே தகவல்களை வெளிப்படுத்துவார்கள். அதைக் கொண்டு ஒருவர் எந்த முடிவுக்கும் வருவதும், தீர்வை நோக்கிய வழிமுறைகளைப் பொறுப்பற்றுக் கையாள்வதும், அதன் மூலம் மேலும் பாதிப்பினைப் புதிய வகைகளில் வேறு நபர்களுக்கு உண்டாக்குவதும் தவறான அணுகுமுறை. ஒரு பாதிக்கப்பட்ட நபர் நார்ஸிஸ்ட் மனநிலை கொண்டவர் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படிக் கையாள்வது, அல்லது அவர் வேறு வகையான பாதிக்கப்பட்ட நபர் என்பதாக இருந்தால் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் இன்னும் விரிவாக நாம் உரையாட வேண்டும். நாங்கள் எல்லோருமே இவற்றைக் கையாள்வதில் புரிதல் குறைபாடுள்ளவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நான் நம்புவதே சரியானது என்று முன்னகர்ந்தால் நீதிக்கான வழிகள் அடைபடும். நார்சியஸ் என்பது ரோமானியக் கவிஞர் ஒருவர் பயன்படுத்திய ஒரு புராணக்கதை. தனது சொந்தப் பிரதிபலிப்பை நீரில் பார்த்து அதைக் காதலிக்கும்படி சபிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியது. நார்சியஸ் தனது சொந்தப் பிரதிபலிப்பால் தன்னைத் திரும்பக் காதலிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் இறந்து போகிறான். டபொடில்ஸ் மலர்களை நார்சியஸ் தன்மைக்கான குறியீடாக ஓவியங்களில் பயன்படுத்துவார்கள். (நார்சியஸ் தன் பிரதிபலிப்பைப் பார்த்தல்) * போகன் சங்கர் விக்டிம் நார்சிஸம் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சமாக எழுதிய குறிப்பில், “தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”. விக்டிம் நார்ஸிசிட்கள் ஐந்து வகையாக உருவாகக் கூடும். துஷ்பிரயோகம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரியவர்களாகிய நார்ஸிஸ்டுகளாக வளர வாய்ப்புள்ளது. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் முதல் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது வரை இதில் அடங்கும். புறக்கணிப்பு அவர்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால், இது அவர்களை வெறுமையாகவும் தனியாகவும் உணர வைக்கும், இது பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அக்கறையக் கோருவதற்கு வழிவகுக்கும். கொடுமைப்படுத்துதல் அவர்கள் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்பட்டால், அது அவர்கள் வளரும் போது பாதிக்கப்பட்ட மனநிலையை வளர்க்க வழிவகுக்கும், அங்கு அவர்கள் தங்கள் பாதையைக் கடக்கத் துணிந்த எவருக்கும் எதிராக, தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரின் நார்ஸிசம் அவர்களின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நார்சிஸ்டுகளாக இருந்தால், அந்தச் சூழலில் வளரும் குழந்தை வாழ்வதற்கு இதே போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக அழுத்தங்கள் இந்த நாட்களில் வெற்றிபெற தனிநபர்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது, மேலும் அவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று நினைக்கும் ஒருவருக்கு, நார்சிஸ்டிக் நடத்தைகளை நாடாமல் இருப்பது கடினமாக இருக்கும். உளநல ஆலோசகர்கள் இத்தகையவர்களின் இயல்புகளைப் பின்வருமாறு அவதானிக்கின்றனர். மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல் விக்டிம் நார்சிஸ்ட்டுகள் உள்ளார்ந்து மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தங்கள் தவறுகளையோ பிழைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாகத் தங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுடன் அவர்கள் மேல் தான் தவறு என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்குவார்கள். எல்லாமே நான் தான் எப்பொழுதும் தங்கள் மேலேயே கவனம் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். தான் சொல்வதை ஒரு சொல் பிழையில்லாமல் மற்றவர்கள் நம்ப வேண்டும். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் ஆகவே நான் சொல்வது மட்டும் உண்மை. நம்பவில்லையென்றால் நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குச் செல்வார்கள். அப்பாவிக் கதாபாத்திரம் தன்னை எந்த நிலையிலும் அப்பாவியாகவே முன்வைத்தல். ஒருவரை நம்ப வைக்க உண்மையைக் குழப்பவும் திரிக்கவும் கூடியவர்கள். உதாரணத்திற்குத் தானறியாத ஒரு நபரின் பாலியல் தொடர்பில் தனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்ப எதையாவது ஒரு பொய்யை உருவாக்குதல். பரப்புதல். விமர்சனத்தை ஏற்காமை ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் பார்வைகளைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அவர்கள் தங்கள் உளம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கொள்வார்கள். அதிலிருந்து மீள எதிர்த்தரப்பின் மீது எந்த நிலைக்குச் சென்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவார்கள். தற்காத்துக் கொள்ளலும் குற்றச்சாட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தலும் தன் மீது கேள்விகள் எழும் போது தன்னைத் தற்காத்துக்கொண்டு எதையும் அல்லது யாரையும் பலி கொடுக்கத் துணிவார்கள். அதையிட்டு குற்றச்சாட்டுகளை வகைதொகையில்லால் அள்ளியிறைப்பார்கள். பொறுப்பை ஏற்க மறுத்தல் அவர்கள் விக்டிம்கள் என்ற பாவனையில் விளைவுகளுக்கான எந்தப் பொறுப்பையும் தான் ஏற்கத்தேவையில்லை என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பார்கள். நான் அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று தப்பித்துத்துக்கொள்ள முயல்வார்கள். அதே நேரம் தாங்கள் செய்த தவறுகளுக்கும் சேர்த்து, நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். அது அவர்களைத் தாங்கள் செய்தது சரிதான் என்று தங்களையே நம்ப வைக்கத் தேவையானது. பின்வழித் தோற்றத்தை உருவாக்குதல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காண்பதற்கு முக்கியமான குறியீடு, அவர்கள் குற்றங்களைப் பிற நபர்கள் மீது சுமத்துவதிலும் அதை நம்ப வைப்பதிலும் மாஸ்ட்டர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகுந்த உணர்ச்சிவசத்தினதும் கண்ணீரினதும் மூலமும் கூட கேட்பவரைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கித் தன் பக்கம் நிற்க வைக்கத் தூண்டுவார்கள். விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காணல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட் தொடர்ந்து தன் வாழ்வில் தனக்கு நிகழ்பவற்றுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் தொடர்ந்து தங்கள் நட்பிலோ காதலிலோ உறவுகளை இழக்கிறார்களா? தங்களுடைய இலக்குகளை அடைவதற்குச் சிரமப்படுகிறார்களா? கழிவிரக்கம், கவலை, பொறுப்புணர்வு இந்த மூன்றும் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் ஒரு நார்சிஸ்ட். மேற்சொன்னவற்றைக் கண்டுகொண்டால் விலகி விடுவதே உங்களின் உளநலனைப் பாதுகாக்க முதல் வழி. * ஒருவர் தன்னையொரு விக்டிம் நார்சிஸ்ட்டாக உணர்ந்து கொண்டால் அவர் பின்வரும் வழிமுறைகளை அணுகலாம் என்று உளமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிகிச்சை பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கான சிறந்த சிகிச்சையானது, மற்றவர்களை எப்படி மீண்டும் நம்புவது, கருணையை வளர்ப்பது மற்றும் அவர்களின் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது எப்படி என்பதை அறிய உதவும் ஒரு சிகிச்சையாகும். இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஆனால் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரின் உதவியுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும். சுய உதவி பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கு சுய உதவி மற்றொரு சிறந்த வழி. அவர்களின் உணர்வுகள், தொடர்புத் திறன் வகைகள், உறவுகளில் எல்லைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிய உதவும் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இந்தச் சிக்கல்களைத் தாங்களே எதிர்கொள்ளும் வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்கும். அன்போ சக மனிதர் மீது நம்பிக்கையோ இல்லாததால் தனிநபருடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவர், சிகிச்சையாளர் அல்லது பிற நிபுணரைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். மருந்துகள் இது மனநல மருத்துவர்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடமிருந்து ஒரு பொருத்தமான இடத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட வேண்டும். அங்குதான் அந்தச் சோதனைகள் பாதுகாப்பாகவும் மேற்பார்வையிலும் செய்யப்படும். * விக்டிம் நார்சிஸ்ட்டை எதிர்கொள்ளுதல் முதலாவது, விக்டிம் நார்சிசம் பற்றித் தேடி வாசித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல். நார்சிஸ்ட்டுகளின் தந்திரங்களும் கையாளுகைகளையும் அறிந்து அவர்கள் திரிபுகளையும் பொய்களையும் ஆயுதமாக்கித் தம்மை எவ்விதம் தக்க வைக்கிறார்கள் என்பதை அறிவார்ந்து விளங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, உங்கள் உணர்வுகளை மதியுங்கள். உங்களுக்கும் சொந்தமான பார்வைகள் உணர்ச்சிகள் உண்டு அவையும் உண்மையானவை என உணருங்கள். மூன்றாவது, உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உங்களை Manipulate பண்ண முடியாது என்பதை உணர்த்துங்கள். நான்காவது, நிதானமாகி அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவது, இத்தகையவர்களை எதிர்கொள்ள உளநல நிபுணர்களை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஆறாவது, நார்ஸிஸ்ட்களிடமிருந்து தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக உங்கள் சொந்த வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இவை உளவியலாளர்கள் மற்றும் உளவள ஆலோசகர்கள் விக்டிம் நார்சிஸ்ட்டுகளுடன் உறவிலிருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள். பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு உதாரணத்திற்கு இவ்வளவு விரிவு இருக்குமென்றால் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் எவ்வளவு விரிவான உரையாடலையும் அறிதலையும் கோரக்கூடியவை என்பதை நாம் கொஞ்சமாவது மனம் திறந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அம்பலப்படுத்தலாளர்கள் introverted narcissist என்றால் என்ன என்பதையும் தேடி வாசித்து அறிய வேண்டும். * எந்தவொரு குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரையாடுவதாகவே இருக்க வேண்டும். அவற்றை எல்லாத் தரப்பினரும் தங்கள் புரிதல்களிலிருந்து முன் வைக்க வேண்டும். இதில் தனி நலன்களோ, பழி தீர்க்கும் உணர்ச்சிகளோ உள்நுழையாமல் தவிர்க்க வேண்டும். அதுவே ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பாதிப்புகளைத் தாமே முன்வந்து உரையாடும் பாதுகாப்பன வெளிகளை உருவாக்க உதவும். நான் என்னளவில் கையாளும் வழிமுறைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பல வகையான மானுடரும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடிகளும் நிலமைகளும் உண்டு. எங்களுக்கு நிபுணத்துவமோ குன்றாத செயலூக்கமோ இல்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, எங்களின் ஆதார விசைகள் முழுமையாக ஒன்றி நேர்நிலையான மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்க்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. எதிர்மனநிலை கொண்டவர்கள் சூழ் காலங்களில் புயற் காற்றுள் லாந்தர் வெளிச்சமென நம் அகச்சுடரைக் காப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரினதும் முதன்மையான பணி. “செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” https://kirishanth.com/archives/827/
  2. (குறுங்கதை) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் -------------------------------------------------------------- அன்று அவன் காரை அதன் தரிப்பிடத்தில் நிற்பாட்டும் போது அங்கு பல கார்கள் ஏற்கனவே நின்றிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்பொழுதும் காலை ஏழு அல்லது ஏழரை மணி அளவில் வேலைக்கு வந்து விடுவான். அங்கு பெரும்பாலானவர்கள் பத்து மணிக்கு பின்னரே வேலைக்கு வருவார்கள். ஒருவர் மட்டும், பெரும் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக, அதிகாலை ஐந்து மணிக்கு வந்து விடுகின்றார். இது அவரே சொல்லும் ஒரு தகவல். இதுவரை அதை எவராவது உறுதிப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. அமெரிக்கரரான அவர் மதியம் உணவை முடித்துக் கொண்டு, ஒரு மணி அளவில், இன்றைய வேலை முடிந்தது என்று தினமும் கிளம்பி விடுவார். வேலை தளத்தில் பலர் ஏற்கனவே வேலையில் மூழ்கி இருந்தனர். இப்படியொரு திங்கள் காலையா என்று நினைத்தவன் உறை நிலையில் இருந்த அவனின் கணினியை தட்டி எழுப்பினான். இந்த நிறுவனத்தில் அவன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருக்கின்றது. இதுவரை அவன் இங்கு வேறு சில நிறுவனங்களில் பல வருடங்கள் வேலை செய்துள்ளான். ஆனால் இங்கே தான் முதன் முதலாக பெரும் எண்ணிக்கையிலான தமிழ்நாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுடன் வேலை செய்கின்றான். இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருள் திட்டம் ஒன்றிற்காக இந்தியாவின் முன்னணி கணினி தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுத்துள்ளார்கள். அதில் சில நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து இங்கு வந்துள்ளனர். அங்கிருந்து இப்படி வருபவர்கள் முதலில் ஆறு மாதங்கள் மட்டும் இங்கே இருந்து பணி செய்யும் ஒப்பந்தத்துடன் வருவார்கள். சிலர் ஒரு வருடம், இன்னும் சிலர் சில வருடங்கள், பல வருடங்கள் என்று அப்படியே தங்கி விடுபவர்களும் உண்டு. இப்படியான நிலைகளில் ஒரு அளவிலான பணியாளர்களை, இங்கே குடி உரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களை, வேலைக்கு எடுக்க வேண்டும் என்ற ஒரு முறையும் இங்கே இருக்கின்றது. அவனை அப்படியே எடுத்திருந்தார்கள். 'ஏன் விக்னேஷ், எத்தனை மணிக்கு வேலைக்கு வந்தீர்கள்?' என்று கேட்டான். விக்னேஷ் சென்னையை சேர்ந்தவன், இங்கு இரண்டு வருடங்களாக வேலை செய்கின்றான். 'இல்ல சார், நாங்க நேற்றிலிருந்தே இங்க தான் உட்கார்ந்திருக்கிறம்.' இவர்கள் சிலருடன் இருக்கும் ஒரு பெரிய தொல்லை இது. எவ்வளவு தான் சொன்னாலும் இவர்கள் இந்த சார் என்று கூப்பிடுவதை விடவே மாட்டார்கள். இவர்களிடையே வேலைத் தளத்தில் இராணுவத்தில் இருப்பது போன்ற பதவி வரிசைகளும், அதற்கான ஒழுங்கும், மதிப்பும் இருக்கும். இங்கு மற்றவர்களிடையே பொதுவாக அப்படியான ஒரு ஒழுங்கோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட பணிவோ இருப்பதில்லை. அவரவர் தங்கள் வேலையை செய்து கொண்டு, மிகச் சாதாரணமாக இருப்பார்கள், பழகுவார்கள். இங்கு சேர்ந்த புதிதில் அவனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. 'நேற்று ஞாயிறில் இருந்தா, ஏன்?' 'ஆமாம் சார். வாற சண்டே ப்ராடக்ட் ரிலீஸ் என்று டெட் லைன் போட்டு விட்டார்கள். அதால சென்னையிலும், இங்கேயும் எங்க டீம் ஒண்ணா உட்கார்ந்து வேலை செய்யிறாங்கள்.' அங்கு மிச்சமாக விடப்பட்டிருக்கும் பீட்சா துண்டுகளை அவன் அப்பொழுது தான் கவனித்தான். விக்னேஷிற்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது. ஆறு மாதங்களின் முன் விக்னேஷின் மனைவியை மருத்துவரிடமும், பின்னர் மருத்துவமனைக்கும் கூட்டிப் போக வேண்டி இருந்தது. முடிவில் தனிமையும், மன அழுத்தமுமே காரணம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். இவர்கள் வேலைக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. காரணம் கேட்டால் அங்கே இஎம்ஐ கட்ட வேண்டும் என்பார்கள், இப்படி சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பார்கள், இப்படி ஏதேதோ சொல்வார்கள். 'உங்க டீம் பண்ணி முடிச்சிட்டாங்களா, சார்?' 'தெரியல விக்னேஷ், இனித்தான் பார்க்கணும்.' விக்னேஷும், இவனும் வெவ்வேறு அணியில், மென்பொருளின் வெவ்வேறு பகுதிகளில் வேலை செய்பவர்கள். இவனுடைய அணியின் முதன்மைப் பொறியியலாளன் இவன் தான். விக்னேஷிற்கு அவர்களின் ஊரைச் சேர்ந்த கணேஷ் என்னும் ஒருவர் மேற்பார்வையாளராக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் அவருக்கு மேலிருப்பவர்களை எப்படி ஆச்சரியப்பட வைக்கலாம் என்று யோசிப்பவர் கணேஷ். இவனுக்கு கணேஷுடன் பெரிதாக ஒட்ட முடியவில்லை. சுருக்கமாக் சொன்னால், ஒரு நவீன கங்காணியாகவே இவன் கணேஷைப் பார்த்தான். கணேஷிற்கும் அது தெரியும். தன் இடத்தில் வந்து அமர்ந்து, வந்திருந்த மின் அஞ்சல்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் நூறுக்கும் மேற்பட்டவை வந்திருந்தன. 'நேற்றும், முந்தா நாளும் தொடர்பு கொள்ளவே முடியவில்லையே' என்றபடியே முருகன் வந்தார். இந்த திட்டத்திற்கு அவர்களின் பக்கத்தில் இருந்து வந்திருக்கும் திட்ட மேற்பார்வையாளர் அவர். அப்படியா என்றபடி இவன் கைத்தொலைபேசியை வெளியில் எடுத்தான். 'சனி ஞாயிறு ஆளைப் பிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆமா, சனி ஞாயிறில் வேறு ஒரு உலகத்துக்கே போய் விடுகின்றாயா, என்ன?' சிரித்து சமாளித்துக் கொண்டே ஏதோ வீட்டு வேலையில் இருந்து விட்டேன் என்றான். அப்படி ஒன்றும் வீட்டில் வெட்டி நிமிர்த்துவது கிடையாது. ஆனாலும் இவர்களுடன் சேர்ந்து கண் மண் தெரியாமல் ஓடுவதில்லை என்ற முடிவை அவன் எப்பவோ எடுத்திருந்தான். முருகன் கொஞ்சம் வயதானவர். அவர் இவனுடன் ஒரு மாதிரியும், அவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இன்னொரு மாதிரியும், கொஞ்சம் கடுமையாகவும், நடந்து கொள்வார். அவர்கள் இரவு பகலாக வேலை செய்தனர். சொன்னபடியே அந்த ஞாயிறன்று புதிய மென்பொருள் பரீட்சாத்தமாக வெளியிடப்பட்டது. பின்னர் இரண்டு வாரங்களில் அது வாடிக்கையாளர்களுக்கு, சில பிழை திருத்தங்களின் பின், வெளியிடப்பட்டது. இங்கு எந்த மென்பொருளையும், எல்லாவற்றையும் படைத்தவர் என்று ஒருவர் இருந்து, அவரே வந்து உருவாக்கி, எழுதினாலும் அதில் பிழைகள் வந்தே தீரும். பில் கேட்ஸின் விண்டோஸ் என்னும் மென்பொருளில் இந்த உலகம் பார்க்காததா? அவரை ஒரு ஜீனியஸ் என்று சொல்வார்கள். ஆரம்ப நாட்களில், பல வருடங்களின் முன், அந்த மென்பொருள் இடையிடையே கணினித் திரையை அப்படியே முழு நீலமாக மாற்றி விட்டு, அப்படியே நின்றும் விடும். முழு நீலம் ஒரு குறியீடு போல, நடுக்கடலில் உன்னை தள்ளி விட்டுள்ளோம், இனி நீயாகவே நீந்திக் கரை சேர் என்று சொல்வதற்கான ஒரு குறியீடு. இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருளும் வாடிக்கையாளர்களின் கைகளில் பலத்த அடி வாங்கியது. ஆனால் அதற்கு முன்னேயே புதிய மென்பொருளை சொன்ன நேரத்தில் வெளியிட்டதற்காக பெரும் விழா ஒன்று நடந்து முடிந்திருந்தது. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்கள் பலருக்கு மட்டும், இவன், கணேஷ் உட்பட, சன்மானமும் கொடுத்திருந்தனர். விக்னேஷிற்கோ அல்லது அவர்களின் பக்கத்தில் இருந்து எவருக்குமோ எதுவும் கொடுக்கப்படவில்லை, வெறும் 'தாங் யூ சோ மச்' என்ற வார்த்தையைத் தவிர. பின்னர் சில நாட்களில் இந்த புதிய மென்பொருளின் தோல்வியாலும், நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தினாலும் பலரை வேலையிலிருந்து நீக்கும் முடிவை நிறுவனத்தின் மேல் நிர்வாகம் எடுத்தது. இவனையும் நீக்கினார்கள். கணேஷையும் நீக்கினார்கள். 'என்ன சார், இப்படி அநியாயம் பண்ணிட்டாங்கள். உங்களை ஏன் சார் தூக்கினாங்கள்?' என்று கடைசி நாளான அன்று வந்து நின்றான் விக்னேஷ். அவர்களின் நிறுவனத்திலிருந்து எவரையும் வேலையிலிருந்து, இன்னமும், நீக்கவில்லை. இந்த நிறுவனத்திடம் வேறு ஒரு புதிய மென்பொருள் ஆரம்பிக்கும் திட்டம் ஒன்றும் முன்னமே இருந்தது. 'இதில என்ன இருக்கு, விக்னேஷ், தூக்க வேண்டும் என்று முடிவு செய்து எல்லாரையும் ஒன்றாக தூக்கினார்கள்.' 'நீங்க எப்படி சார் இப்படி ஈசியா இருக்கிறீர்கள். கணேஷ் சார் எங்களுடன் பேசவே இல்லை, அழுதிருப்பார் போல.' 'இதெல்லாம் இங்க சாதாரணம், விக்னேஷ்.' 'உங்களுக்கு இஎம்ஐ எதுவும் இல்லையா, சார்.' 'வீட்டிற்கு இருக்குது, இரண்டு காருக்கும் இருக்குது, இன்னும் எவ்வளவோ இருக்குது.' 'என்ன பண்ணுவீங்க, சார்?' 'அடுத்த வேலையை தேட வேண்டியது தான். இந்த துறையில் இங்க வேலை இல்லாமல் இருப்பவர்கள் என்று எவருமில்லை.' விக்னேஷ் ஆச்சரியமாகப் பார்த்தான். கை கொடுத்தவன் அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொண்டான். இருவரும் ஒருவரின் கண்களை மற்றவர்கள் பார்ப்பதை தவிர்த்தனர். அப்படியே திரும்பி நடந்த விக்னேஷை இவன் கூப்பிட்டான். 'என்ன, சார்' என்று விக்னேஷ் திரும்பினான். 'குடும்பத்தை பார்த்துக் கொள், விக்னேஷ்' என்றான் இவன்.
  3. பலஸ்த்தீனத்தையும், இஸ்ரேலையும் உங்களால் எப்படி ஒரே தராசில் சமமாகப் பார்க்க முடிகிறது? மகிந்தவுக்கு வாழ்த்துச் செய்தியனுப்பியதும், அவனின் பெயரை தமது உள்ளூர் வீதியொன்றிற்கு இட்டதையும் தவிர உங்களுக்கு பலஸ்த்தீனர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கெடுதிகள் என்ன? ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பாலஸ்த்தீனத்திற்கு எதற்காக எமது போராளிகள் சென்று வந்தார்கள்? சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேல் எமக்கெதிரான இனக்கொலையில் ஆற்றிய, ஆற்றிவரும் பங்கென்ன? 1980 களின் ஆரம்பத்தைலிருந்தே இஸ்ரேல் எமக்கெதிரான இனவழிப்பில் நேரடியாகப் பங்குபற்றி வருவது உங்களுக்குத் தெரியுமா? சிங்களக் காட்டேறிகளான விசேட அதிரடிப்படையினை உருவாக்க இஸ்ரேல் வழங்கிய உதவி தெரியுமா? பத்துத் தமிழர்களைக் கொல்லுங்கள், அதில் ஒரு புலி இருப்பான் என்கிற கொள்கையினை சிங்களத்திற்குச் சொல்லிக் கொடுத்தது யார்? ஒவ்வொரு இராணுவத்தினனின் மரணத்திற்கும் பத்துத் தமிழர்களை பழிவாங்குங்கள் என்கிற கொள்கையினை இலங்கைக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? தமிழர்களின் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, அவற்றிற்குக் காவலாக இராணுவ முகாம்களை அமையுங்கள், சிங்கள் குடியேற்றக்காரர்களை ஆயுததாரிகளாக்குங்கள் என்று அறிவுரை கொடுத்தது யார்? இன்று காசாவிலும் மேற்குக்கரையிலும் நடக்கும் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்களும், ஆயுதமயமாக்கப்பட்ட யூதர்களும் உங்களுக்கு நினைவுபடுத்துவது எதனை? இன்றுவரை தமிழர்களுக்கெதிரான யுத்தத்தில் கிபிர், டோரா, கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், பயிற்சிகள் என்று சிங்கள ஆக்கிரமிப்பாளனுக்கு உதவுவது யார்? இந்த உதவிகளும், பலஸ்த்தீனன் மகிந்தவைப் பாராட்டியதும் சமனாகத் தெரிகிறதா உங்களுக்கு? புலிகள் கொடூரமானவர்கள் இல்லை. ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். பெண்களை மதிப்பவர்கள். ஆகவே ஹமாசின் கொடூரங்களுடன் புலிகளை ஒப்பிட முடியாது. ஆனால், சிங்களக்குடியேற்றங்களைக் கலைப்பதற்கு அவற்றின் மீது புலிகளும் தாக்குதல் நடத்தினார்கள். ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக்காரர்களைக் கொன்றார்கள். பதின்ம வயது பெளத்த பிக்குகளும்ம் புலிகளால் இலக்கு வைக்கப்பட்டார்கள். இவைகூட பழிவாங்கலுக்காகவும், சிங்களக் குடியேற்றங்களைக் கலைப்பதற்காகவும் நடத்தப்பட்டவைதான். கமாஸ் அக்டோபர் 7 ஆம் திக தி தாக்குதல் நடத்தியதும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியேற்றமாக மாற்றப்பட்ட, ஆயுதமயமாக்கப்பட்ட குடியேற்றக் காரர்கள் மீது தான். ஆனால், அவர்களின் மதமும், வெறியும் ஆயுதமயமாக்கப்பட்ட யூதர்கள்மீது அட்டூழியங்களைப் புரிய தூண்டியது. கமாசும், புலிகளும் ஒன்றல்ல. ஆனால், குடியேற்றங்கள் மீதான தாக்குதல்களின் நோக்கங்கள் ஒன்றுதான். கமாசைப் பழிவாங்கவும், அழிக்கவும் பலமான இஸ்ரேல் செய்துவரும் இனவழிப்புச் சரியென்று நாம் வாதாடினால், எம்மீது நடத்தப்பட்டதைச் சிங்களவன் சரியென்று வாதாடும்போது நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விடும்.
  4. ஒரு தேன்கூடு வீட்டில் கட்டப்பட்டுவிட்டது. தேனீக்களை குறை சொல்வது நியாயம் இல்லாத ஒரு செயல். இங்கு என்றும் எங்கும் பூக்கள். தேனீக்கள் பூக்களை காய்களாக்கின்றன. அவை பழங்கள் ஆகின்றன. அதிலிருந்து பறவைகள் காடுகளை உருவாக்குகின்றன, பூமி வாழத் தகுந்த இடமாக தொடர்ந்தும் இருக்க தேனீக்களும் பறவைகளும் விடாமல் பாடுபடுகின்றன. கூட்டைக் கட்டிய தேனீக்கள் பக்கத்து வீட்டில் கட்டியிருந்தால் நல்லாயிருக்குமே என்றும் தோன்றுகின்றது. வீட்டில் இருவருக்கும் தேனீக்கள் கொட்டிவிட்டன. புளியா அல்லது சுண்ணாம்பா என்ற விஞ்ஞான விளக்கம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. வீக்கமும், நோவும் நின்று, பின்னர் மூன்று நாளில் போனது. கொல்லப்படக்கூடாத பிறவிகள் இவை. மெதுவாக தண்ணீர் அடித்தால் ஓடி விடும் என்றனர். தண்ணீரில் குளித்து இப்பொழுது சுத்தமாக கூட்டில் நிற்கின்றன. உள்ளி கரைத்து ஊற்றினால், அந்த மணத்திற்கு ஓடி விடும் என்றனர். உள்ளித் தண்ணீரை குடித்து விட்டு இப்பொழுது ஆரோக்கியமாக பறந்து திரிகின்றன. இனிமேல் எஞ்சி இருக்கும் வழிகள் எல்லாம் அவைகளின் உயிர்களுக்கு ஆபத்தானவையே. ஆனால் மனமில்லை. இதைத் தெரிந்து தான் இவை என் வீட்டில் கூடி கட்டியிருக்கின்றன போல என்று நினைத்திருக்க, ஞானக்கூத்தனின் இந்தக் கவிதையைக் கண்டேன். ************** தேனீ (ஞானக்கூத்தன்) ---------------------------------- வண்டின் மென்மையான ரீங்காரம் செவியில் ஒலித்தது எங்கே வண்டென்று தேடினேன் வரவேற்பறை முழுவதும் பறந்து பறந்து சுற்றிப் பார்த்த அந்தத் தேனீ என்னையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தது பால்கனிப் பக்கம் பின்னர் பறந்தது சில நாட்கள் சென்றதும் வாரணாசி சாது சன்யாசி ஒருவர் பால்கனியில் தலைகீழாய்த் தொங்கி விளையாட்டுக் காட்டினாற் போல ஒரு பெரிய தேன்கூடு எண்ணற்ற தேனீக்கள் சுற்றின தேனீ கொட்டும் கொட்டினால் கடுக்கும் சருமம் தடிக்கும் என்றார்கள் மலையில் கட்டப்பட வேண்டிய தேன்கூடு என் வீட்டுப் பால்கனியில் கட்டப்பட்டது ஆட்களை ஏவி தேன்கூட்டைக் கலைக்கச் சொன்னேன் அவர்கள் கூட்டைக் கலைத்த பாங்கு எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை கவலைப்பட்டவாறு உட்கார்ந்திருந்தேன் வண்டின் மென்மையான ரீங்காரம் செவியில் ஒலித்தது சட்டென்று என்னை அறியாமல் மன்னி என்றேன் சொல்லிவிட்டுத்தானே கட்டினேன் என்பது போலக் காதில் அருகில் முரன்றது தேனீ.
  5. என்று கூறி, இந்தக் கட்டுரை சொல்ல வந்ததுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம. தமது வழக்கமான புலி எதிர்ப்பு / தலைவர் மீதான காழ்ப்புணர்வு அரிப்பை சொறிந்து சுய இன்பம் கண்டார் இதை எழுதிய ராகவன். சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் இன்று இல்லையே என்பதால் அவர் எனக்கு (மட்டும்) சொன்னார், காதில் குசுகுசுத்தார், என்று இப்படி இன்னும் எத்தனையும் எழுதலாம். இந்த வருடாந்திர இலக்கிய கூட்டம் என்பதே புலி எதிர்ப்பு காச்சலாம் நன்கு பீடிக்கப்பட்டு புலிகள் இல்லாமல் போய் 15 ஆண்டுகள் போன பின்னும் கூட, இன்னும் அந்த காச்சலின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அதிகம் கொண்ட கூட்டத்தால் நிகழ்த்தப்படும் நிகழ்வு.
  6. இந்தக் கட்டுரையை எழுதிய கிரிசாந்த்தின் வலைப்பூவில் இந்த விபரம் இருக்கின்றது: கிரிசாந். பிறந்தது, 14. 01. 1994. யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலி என்னும் ஊரில் பிறந்தவர். அப்பா : சிவசுப்பிரமணியம், அம்மா : பாக்கியலட்சுமி, துணைவி : பிரிந்தா. ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மயான காண்டம் என்ற கூட்டுத் தொகுப்பில் சில கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. யாழ். இலக்கிய குவியம், யாழின் கரங்கள், விதை குழுமம் ஆகிய சமூக அமைப்புகளில் செயற்பாட்டாளராக செயற்பட்டிருக்கிறார். விதை குழுமம் வெளியீடான ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.
  7. கணவனும் மனைவியும் சண்டையிட்டனர், மறுநாள் காலையில் அவள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டாள். கணவன் எழுந்து, பால் காய்ச்சி, காபி கலந்து, காலை உணவு தயாரித்து, குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்தினான். மதிய உணவைக் கட்டிக் கொண்டு, குழந்தைகளை பள்ளிக்கு விடுவதற்காக கணவர் புறப்படும் போது... அவள் சொன்னாள், இன்று ஞாயிற்று கிழமை! 😂 படித்ததில் பிடித்தது.
  8. இந்த 10 இடங்களில் பெரும்பாலான இடங்களுக்குப் போயிருக்கிறேன், அதிலும் சொந்தக் காசு செலவில்லாமல். இலங்கையில் மிருக வைத்தியராக இருப்பதன் பல அனுகூலங்களில் ஒன்று, இந்த இடங்களுக்கெல்லாம் அரச வாகனத்தில் பணி நிமித்தம் செல்லக் கிடைத்தமை. அம்பேவல, நுவரெலியா தாண்டி இருக்கும் ஒரு அழகிய பிரதேசம். பல தடவைகள் அம்பேவல பால் பண்ணை போய், நாள் முழுவதும் சாணத்தில் குளித்து வேலை செய்த பின்னர், மாலையில் நுவரெலியாவில் இறங்கி பியர் , கொத்து ரொட்டி எடுத்துக் கொண்டு வாகனத்தில் தூங்கியபடியே வந்தால் கண்டியில் வீட்டு வாசலில் இறக்கி விடுவர். ஹோர்ட்டன் சம வெளியும், அதற்கு அண்மையாக இருக்கும் பம்பரகந்த (??) நீர் வீழ்ச்சியும் முழு நாளும் பார்த்து ரசிக்க கூடிய இடங்கள். நுவரெலியா போகும் வழியில் மல்லியப்பூ சந்தியில் இருக்கும் உணவகத்தில் பெரும்பாலும் பஸ்கள் உணவுக்கு நிறுத்துவர். அந்த சந்தியில் இருந்து மலையழகை ரசித்தவாறே சுவையான உணவை அனுபவிக்கலாம். இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. அனுராதபுரம் கொஞ்சம் காய்ந்த இடம் தான் என்றாலும், அங்கே பெலிமல் என்ற ஒரு தேனீர் போன்ற பானம் விற்பார்கள். சூடான அந்தப் பானம் குடிக்கும் போது வயிறு குளிர்வதை உணரலாம்.
  9. இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்| exercise to reduce knee pain Dr Karthikeyan
  10. மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முற்றான முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு, செயற்கையான பட்டினிச்சாவினை எதிர்நோக்கியிருக்கும் மில்லியன் கணக்கான பாலஸ்த்தீனர்களுக்கு நிவாரணம் வழங்கவென வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சென் (World Central Kitchen) எனும் நிவாரண அமைப்பு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் பகுதியில் இயங்கி வருகிறது. அடைபட்டிருக்கும் பலஸ்த்தீனர்களின் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்திருக்கும் இவ்வேளையில், இப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணியிலேயே இப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரு வாகனங்களில் புறப்பட்ட இப்பணியாளர்கள், தமது வாகன விபரங்கள், அடையாளங்கள், செல்லுமிடம் போன்ற அனைத்து விபரங்களையும் இஸ்ரேலிய இராணுவத்திடம் அறிவித்த பின்னரே தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், தமக்கு வழங்கப்பட்ட வாகன அடையாளங்களை வைத்தே இஸ்ரேலிய விமானப்படை இவ்வாகனங்களை யுத்த சூனிய வலயம் என்று இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்ட பகுதியில் வைத்துத் தாக்கியழித்திருக்கிறது. இத்தாக்குதலில் 4 மேற்குநாட்டு பணியாளர்கள் உட்பட ஏழு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க கனேடிய பிரஜாவுரிமை பெற்ற ஒருவர், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போலந்து நாட்டவர் என சிலர் அடக்கம். இந்த நிவாரணப் பணியகத்தின் நடத்துனர் இத்தாக்குதல் குறித்துப் பேசுகையில், நாம் வழங்கிய வாகன விபரங்களைக் கொண்டே எமது பணியாளர்களை இலக்குவைத்து இஸ்ரேல் படுகொலை செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். வழமை போல இத்தாக்குதல் குறித்து தகவல் ஏதும் இல்லை, வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் கூறியிருக்கிறார். சுமார் 2.2 மில்லியன் பாலஸ்த்தீனர்களை செயற்கையான பட்டினிச் சாவிற்கு தள்ளிச் சென்றிருக்கும் இஸ்ரேல், வேண்டுமென்றே இம்மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் அளவை குறைத்து அனுமதித்து வருவதுடன், அத்தியவசியமாகத் தேவைப்படும் மருந்துப் பொருட்களையும் தடை செய்திருக்கிறது. 2008 - 2009 இல் வன்னியில் சிங்கள மிருகங்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த 420,000 தமிழர்களுக்கு வெறும் 25 வீதமான உணவுப்பொருட்களை மட்டுமே அனுமதித்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வைத்தியசாலைகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிடப் புள்ளிகளைப் பயன்படுத்தியே அவ்வைத்தியசாலைகள் மீது இலக்குவைத்து தாக்கி பல நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்ட, சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களை ஒத்தவை இத்தாக்குதல்கள். பாலஸ்த்தீன மக்கள் மீதான அப்பட்டமான இனக்கொலையில் இதுவரை இஸ்ரேலிய மிருகங்கள் 33,000 அப்பாவிகளைப் படுகொலை செய்திருக்கின்றன. இஸ்ரேலிய இனக்கொலையினை ஆதரிக்கும் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம். https://edition.cnn.com/2024/04/01/middleeast/world-central-kitchen-killed-gaza-intl-hnk/index.html
  11. நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள். நியூயோர்க் வாழ் மக்கள் ஏதாவதொரு சிறிய விடுமுறையில் போனால் திரும்ப வந்து அவர்களது வீட்டில் குடியிருக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் சிப்பிலியாட்டுகிறது. நாளாந்தம் ஏதோ ஓர் மூலையில் இந்தப் பிரச்சனை நடக்கிறது. மெக்சிக்கோ எல்லையால் வருபவர்களை ரெக்சாஸ் மாநிலம் அத்தனை பேரையும் தனக்கு(நாளாந்தம் 10000 பேர்வரை)இருப்பிட சாப்பாட்டு வசதிகள் செய்ய முடியாதென்று முடிவெடுத்து எல்லையால் வருபவர்களை ஒவ்வொரு பேரூந்துகளைப் பிடித்து சிகப்பு கட்சி நகரங்கள் அதாவது (Sanctuary City)சரணாலய நகரம் என்று சொல்லப்படுகின்ற வாசிங்டன் டிசி,நியூயோர்க்,இலினேஸ்,கலிபோர்ணியா போன்ற நகரங்களுக்கு அனுப்புகிறார்கள். ஆரம்பத்தில் நகரபிதாக்களில் இருந்து சகல பிரமுகர்களும் வரும் பேரூந்துகளை வரவேற்றார்கள்.நாளாந்தம் பேரூந்துகளின் தொகை கூடக்கூட வரவேற்பவர்களின் தொகையும் குறைந்துவிட்டது. சரி வந்தவர்களை தங்க வைக்க என்று 2-3-4-5 ஸ்ரார் கொட்டல்களில் விட்டு நல்ல சாப்பாடுகளும் கொடுத்தார்கள்.வந்தவர்களின் தொகை கூடிக்கூடி ஒரு லட்சத்தைத் தாண்டும் போது தான் நிலமை மேசமாகிக் கொண்டு போவதை உணர்ந்தார்கள். மத்திய அரசோ மாநில ஆளுநரோ இதற்காக மேலதிக பணம் ஒதுக்கவில்லை. கட்டிப் போட்டு பராமரிக்க பணம் இல்லை.எல்லோரும் விரும்பியபடி ஊர் சுற்றுகிறார்கள்.எங்கே போனாலும் களவு.பொலிசுக்கு கூப்பிட்டால் சம்பவம் நடந்து பலமணி நேரத்தின் பின்பே வருகிறார்கள். கையும் களவுமாக கள்வனைப் பிடித்தாலும் நீதிமன்றம் கொண்டு போனால் பிணை இல்லாமலே வெளியே வருகிறார்கள். அண்மையில் நியூயோர்க் நகரத்தில் 4-5 பேர் சேர்ந்து 2-3 பொலிசாருக்கு அடித்துவிட்டார்கள்.அவர்களைப் பிடித்து நீதிமன்றம் கொண்டு போனால் உடனேயே பிணை இல்லாமல் விடுவிக்கப்பட்டார்கள். வெளியே வந்தவர்கள் பொலிசாருக்கு நடுவிரலைக் காட்டிக் கொண்டு போகிறார்கள். அடுத்தடுத்த நாள் மக்களின் கொந்தளிப்பால் அவர்களைத் தேடினால் கலிபோர்ணியா போய்விட்டார்கள்.பின்பு அங்கு எங்கோ ஒரு மூலையில் வைத்து பிடித்தார்கள். பெரிய பிரச்சனை பகலில் தெருத்தெருவாக கூட்டமாக திரிபவர்கள் திடீர் திடீர் என்று ஆள்அரவமற்ற வீடுகளுக்குள் கதவுகள் யன்னல்களை உடைத்து உள்ளே போய் களவும் எடுக்கிறார்கள் அப்படியே தங்கவும் செய்கிறார்கள். வீட்டுக்காரர் வந்து பார்த்து அவர்களைக் கலைக்க பொலிசைக் கூப்பிட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது நீ நீதிமன்றம் போய் முறையிடு. அதேநேரம் வீட்டின் தண்ணீரையோ மின்சாரத்தையோ சமையல் காசையொ நிற்பாட்ட முடியாது.அப்படி நிற்பாட்டினால் உங்களை கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள். இன்று நியூயோர்க் பிரவுன்ஸ் என்னும் நகரத்தில் சந்தேகத்தில் ஒருவரை துரத்த ஒரு வீட்டு நிலக்கீழ் அறைக்குள் ஓடியிருக்கிறார்.பின்னே சென்ற பொலிசார் உள்ளே போனால் 7 பேர் உள்ளே.போதை வஸ்துகள் குண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வெற்றுத் துப்பாக்கி ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தேடப்படுபவர் அத்துடன் ஒரு 7 வயதுக் குழந்தை. அத்தனை பேரையும் நீதிமன்றம் கொண்டு போனால் கொலை வழக்கில் தேடப்பட்டவரைத் தவிர மற்றையோரை விடுவித்துள்ளார் நீதிபதி. வீட்டுக்காரர் மாதக் கணக்காக நீதிமன்றுக்கு அலைவதாக சொல்கிறார்கள். https://abc7ny.com/eight-suspected-migrants-arrested-in-the-bronx-after-police-found-them-squatting-with-guns-and-drugs/14605864/ Child found among guns, drugs in Bronx home occupied by several squatters. NORWOOD, The Bronx (WABC) -- Police have arrested several suspected migrants who they found squatting with guns and drugs in the basement of a Bronx home. The big bust happened last Wednesday when police received a call about a man with a gun just footsteps away from a school. Officials say they chased 24-year-old Hector Desousa Villata, who is believed to be from Venezuela, into the home on Hull Avenue. That is where police arrested him, long with seven other suspected migrants. One man, 22-year-old Javier Alborno, tried to flee with a weapon but was soon arrested. When authorities obtained a search warrant, they found two more loaded guns, three loaded extended magazines, ammunition, and a bag of ketamine mixed with cocaine. A 7-year-old child was also found in the home. "Two of the people with the guns had open cases, one for an attempted murder in Yonkers, and one walking around with an open gun indictment, walking around," said NYPD Chief of Patrol John Chell. A neighbor spoke out Tuesday and said the group had been squatting. "They're squatters and the owner has been trying to get them out of the apartment for the longest period of time," said neighbor Alfred Munoz. "I think he has a court date set, apparently because they're squatters for more than 30 days..... they came, they were a disruptive force mainly because there were a lot of them. You didn't know who was staying, not staying there, and the owner of the building had a hell of a time trying to get them out." Desousa Villata and the others were charged with criminal possession of a weapon, criminal possession of controlled substance and acting in a manner injurious to a child. Officials say all of the men, but two were released without bail. Desousa Villalta was already charged with attempted murder for shooting another person in the leg during an argument in Yonkers. The extent of the criminal activity at the house is the subject of investigation here while six of the suspects are out on release. The suspect accused of shooting someone in the leg in Yonkers is out on supervised release. Some of the suspects are also under investigation in connection with a robbery pattern in Bergen County. இந்தச் செய்தியை கூகிளில் மொழிபெயர்த்து போடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் பண்டிதர் தம்பி @இணையவன் க்கு கூகிள் தமிழ் விளக்கம் குறைவாம்.அதனால் மொழிபெயர்ப்பை விட்டுவிட்டேன். இந்த செய்திகள் பற்றி @ரசோதரன் @நீர்வேலியான்இன் அனுபவங்கள் தகவல்களை அறிய விரும்புகிறேன்.
  12. எனக்கு New York பற்றி தெரியாது ஆனால் பிரம்டன் பற்றி சொல்வதில் அநேகமானவை உண்மை தானே? நானே அனுபவப் பட்டுள்ளேன். Walmart போன்ற இடங்களில் வாகனத்தை வாகன பதிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வெளியே எடுப்பது என்பதே கடும் சிரமம். அத்துடன் மிக மோசமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அங்கு தவிர வேறு எங்கும் நான் காணவில்லை. இங்கு அநேகமாகன வீடுகளிலும் ஆக குறைந்தது 10 பேராவது வாடகைக்கு இருப்பர். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பெரும் திருட்டு அல்லது சூட்டுச் சம்பவம் நிகழ்கிறது. ஒப்பீட்டளவில் அங்குள்ள பஞ்சாபி இனத்தவர்களே இவற்றில் ஈடுபடுகின்றனர். Common sense என்பது என்னவென்று தெரியாதவர்கள் பெருமளவு அங்குள்ளனர். என் நான்கு நண்பர்கள் குடும்பம் தொடர்ந்து அங்கிருக்க பயத்தில் விற்பி யிற்கு நகர்ந்துள்ளனர்.
  13. 🤣😂எங்கே எடுத்தீர்கள் இந்த விரிவாக்கத்தை? Sire என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்தது தான் Sir என்கிறார்கள். மரியாதையோடு விளிக்க பல நாடுகளில் பயன்படுகிறது, பிரிட்டனில் Knighthood வழங்கப் பட்டவர்களை விளிக்கவும் பயன்படுகிறது. பதில் அவசியமில்லை. சமூக வலையூடகங்களில் யாரோ பொங்கல் வைத்திருக்கிறார்கள் என்று இந்த fact-check இணைப்பு சொல்கிறது. https://factly.in/slave-i-remain-is-not-the-full-form-of-the-word-sir-sir-is-originated-from-an-old-french-word-sire/
  14. 2009 இல் வன்னியில் நடத்தப்பட்ட மனிதப் பேரவலமும், இன்று காசாவில் நடத்தப்படும் பேரவலமும் ஒப்பிடப்படுதலுக்கான காரணங்கள், 1. ஆக்கிரமிப்பாளனினால் முற்றான முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு, தம்மிடமிருக்கும் அனைத்துக் கனரக ஆயுதங்களாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டனர். 2. உணவும், அத்தியாவசிய மருந்துப்பொருட்களும் ஆக்கிரமிப்பாளனினால் அடைபட்டுப்போயிருந்த மக்களுக்கு வழங்கப்படுவது தடுக்கப்பட்டது. ஐ.நா உட்பட சர்வதேச நிவாரண அமைப்புக்களால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் கூட, ஆக்கிரமிப்பாளனினால் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடப்பட்டே அனுமதிக்கப்பட்டது. வன்னியில் வெறும் 25 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான உணவும், காசாவில் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான உணவும் உள்ளே அனுமதிக்கப்பட்டது. 3. முற்றுகைக்குள்ளான மக்கள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் அட்டூழியங்கள் வெளித்தெரியாதவாறு இருக்க முதலில் செய்தியாளர்கள் தடுக்கப்பட்டனர் அல்லது குறிவைத்துக் கொல்லப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டுக் காணமலாக்கப்பட்டனர். 4. ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அச்சுருத்தல் விடுக்கப்பட்டு கொலைக்களத்திலிருந்து அவர்கள் அகற்றப்பட்டனர். வன்னியில் இயங்கிய சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திற்கோ ஐ.நா வுக்கோ, சர்வதேச மருத்துவர் குழுவிற்கோ எம்மால் பாதுகாப்புத் தரமுடியாதென்று கூறியும், ஐ.நா அதிகாரிகள் தங்கியிருந்த பகுதிக்கு அண்மையாக குண்டுவீசியும் அவர்களை வன்னியில் இருந்து அப்புறப்படுத்தியது சிங்களம். காசாவில் வேண்டுமென்றே ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் பணியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் இஸ்ரேலிய இனக்கொலையாளிகளால் இலக்குவைத்துக் கொல்லப்பட்டார்கள். 5. ஐ.நா வினாலும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினாலும் அகதி முகாம்கள், பவைத்தியசாலைகள், யுத்த சூனிய வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் மீது தாக்குதலை நடத்தவேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அந்த அடையாளங்களைக் கொண்டே வைத்தியசாலைகள் மீதும், அகதிகள் முகாம்ம்கள் மீதும், யுத்த சூனிய வலயம் மீதும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். காசாவில் சர்வதேச நிவாரணப் பணியாளர்கள் தமது வாகன விபரங்களை இஸ்ரேலிய இனக்கொலையாளிகளிடம் கொடுத்துவிட்டு கிளம்பியபோதே அவர்களது வாகன‌ங்கள் அதே அடையாளங்களைக் கொண்டு இலக்குவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. காசாவில் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகளும் ஒன்றில் முற்றாகவோ அல்லது பாதியாகவோ அழிக்கப்பட்டிருப்பதுடன், பல நூற்றுக்கணக்காணோர் அங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். யுத்த சூனிய வலயத்தில் வைத்தே சர்வதேச நிவாரணப் பணியாளர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொன்றிருக்கிறார்கள். 6. வன்னி யுத்தத்திலும், காசா யுத்தத்திலும் பாலியல் வன்புணர்வுகள் யுத்தத்தில் ஒரு ஆயுதமாகப் பாவிக்கப்பட்டிருக்கின்றது. 7. மனிதாபிமான யுத்தம் என்கிற பெயரில் வன்னியில் நடந்தேறியது இனக்கொலை. காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அப்பாவிகளை ஆயிரக்கணக்கில் கொன்றுவருகிறது இஸ்ரேல். 8. வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களை அருகிலிருந்தே சுட்டுக்கொன்றது சிங்களப் பேரினவாதம். காசாவிலும் இதுவே இன்று நடக்கிறது. வெள்ளைக்கொடியுடன் அருகே வாருங்கள் என்று கூறிவிட்டு வயோதிபப் பெண்கள், சிறுவர்கள் என்று பாரபட்சம் இன்றிச் சுட்டுக் கொல்கிறது இஸ்ரேலிய ராணுவம். எங்களைப்போன்ற, விடுதலை வேண்டிப் போராடும் ஒரு இனத்திற்கு நடக்கும் அவலத்தைக் கண்டும் காணாதது போல கடந்து சென்றுவிட வேண்டும் என்று கேட்பவர்கள், தமக்கு நடந்த கொடூரங்கள் குறித்துப் பேசும் தகுதியை இழந்து விடுகின்றனர்.
  15. 😂 எந்த செய்தி ஊடகம் என்பதைப் பொறுத்து கதை மாறு படும். கீழே இருப்பது நியூ யோர்க் போஸ்ற் எனப்படும் "ட்ரம்ப்" ஆதரவு, சிவப்பு கட்சி ஊடகம். https://nypost.com/2024/02/13/opinion/migrant-crime-is-turning-cities-into-war-zones/ இவர்களைப் பொறுத்த வரை, பதிவு செய்யாத குடியேறிகள் நியூ யோர்க் தெருக்களில் போவோர் வருவோரையெல்லாம் துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள் என்று எழுதுவர். சி.என்.என், இதைப் பற்றி எழுதுப் போது கொஞ்சம் புள்ளி விபரங்களோடு சேர்த்து எழுதுகிறது. இவர்கள் சொல்வதின் படி, நியூ யோர்க் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும், பெரும் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவதில் குடியேறிகளுக்கு பாரிய பங்கு இல்லை. https://www.cnn.com/2024/02/15/us/border-migrants-crime-cec/index.html மேலே நியூ யோர்க்கில் குடியேறிகளின் குற்ற வீதம் பற்றி இணைக்கப் பட்டிருக்கும் செய்திகளைப் பார்த்தீர்களானால், எவையும் ஒழுங்கான ஊடகங்களாக இருக்காது. இவற்றை "குட்டிச் சுவர் ஊடகங்கள் - fringe media" என்று அழைப்பர். ஒரு அல்லது இரு சம்பவங்களை எடுத்து, பந்திகள் எழுதி, அமெரிக்காவில் இருக்கும் 12 மில்லியனுக்கு மேற்பட்ட தென்னமெரிக்கரில் அரை வாசிப்பேர் கிருமினல்கள் எனக் காட்டியிருப்பர். குற்றங்கள் நியூ யோர்க் மட்டுமன்றி சகல பெரிய அமெரிக்க நகரங்களிலும் நடக்கின்றன (உண்மையான தரவுகளின் படி, 90 களில் இருந்து அமெரிக்க நகரங்களில் மோசமான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தே வந்திருக்கிறது என்கிறது FBI). பதிவு செய்யாத குடியேறிகளின் பங்களிப்பு இந்தக் குற்றங்களில் மிகக் குறைவு. பெரும்பாலானவை இங்கேயே பிறந்து வளர்ந்த "மண்ணின் மைந்தர்களால்" நிகழும் குற்றங்கள். மேலதிகமாக, கீழ் இணைப்பில் நியூ யோர்க்கில் பதிவு செய்யாத குடியேறிகளால் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றனவா என்ற நேரடியான கேள்விக்கு புள்ளி விபரங்களோடு பதில் தந்திருக்கிறார்கள். https://abc7ny.com/us-politics-immigration-study-migrants-not-driving-violent-crime-rates/14618231/
  16. வணக்கம் @goshan_che பயணக்கட்டுரை அருமை. நாட்டின் நிலமைகளை சிறப்பாக தந்துள்ளீர்கள். சிறந்த மொழி நடையுடன் நாட்டின் ஜதார்தத நிலையை படம் பிடித்து எழுத்தில் தந்தமைக்கு நன்றி. 👍👍 நுவரெலியா, எல்லே போன்ற அழகான இடங்களுக்கு சென்றீர்களா? புலம் பெயர் தமிழ் இளைய தலைமுறை அதிகமாக விரும்பி போகும் ரம்மியமான பிரதேசங்கள். இந்த YouTube தளத்தில் இலங்கையின் சுற்றுலாபிரதேசங்களை அடிக்கடி பார்த்து ரசிப்பேன்.
  17. அண்ணை எங்களுடைய வீட்டில் சோலார் பொருத்திய நிறுவனம் கிறீன் சண்பவர் எனர்ஜி https://greensunpowerenergy.com/contact/ . JA பனல், 550 Watts. 10Kw மொத்தமாக 20 பனல்கள் பொருத்தவேண்டுமாம். ட்ரான்ஸ்போமருக்கு கிட்டவாக(100-300மீற்றர்களுக்குள்) பொருத்தும் இடம்(வீடு) இருந்தால் கூடுதல் Kw பொருத்த மின்சாரசபை அனுமதிப்பார்கள். 5Kw மேல் எடுப்பதென்றால் 3பேஸ் இணைப்பு எடுக்கவேண்டும். 10Kw சோலார் பொருத்த ஏறத்தாழ 20லட்ச ரூபா தேவைப்படும். பற்றி பக்கப் செய்வதென்றால் கூடுதல் செலவாகும். ஹைபிரிட் இன்வேட்டர் பொருத்துவதற்கும் கூடுதல் செலவாகும். 30/40Kw பொருத்தும் போது சராசரிச் செலவு குறைவு. இது தான் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விபரங்கள். மேலே இணையப் பக்கத்தில் தொடர்பிலக்கம் உள்ளது, மேலதிக விபரங்களை கேட்கலாம்.
  18. இந்த பிரச்சனைக்குள் வன்னியை இழுத்து ஒப்பீடு செய்யவேண்டிய எந்த அவசியமும் இல்லை. அயல்நாடுகளின் உதவியுடன் கமாஸ் போல வன்னியிலிருந்து ஒரேநாளில் 5000 ரொக்கட்டுகளை ஏவியபடி சிங்களவன் தேசத்திற்குள் நுழைந்து 1300 பேரை பாலினம் வயசு பாராமல் வகை தொகையின்றி கொன்று குவிக்கவில்லை, இசை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்த எந்த வகையிலும் யுத்தத்திற்கு சம்பந்தமில்லாத மக்களை ஓட ஓட கொல்லவுமில்லை. அப்பாவி சிங்கள பெண் ஒருவரை நிர்வாணபடுத்தி என்னை கொல்லாதீர்கள் என்று கெஞ்ச கெஞ்ச கொன்று உடல்மேல் எச்சி துப்பி அவள் உடல்மேல் உக்கார்ந்து இருந்து சுற்றி வர நின்று கொண்டாடவுமில்லை. தள்ளாடும் முதியவர்களிலிருந்து தளிர்கள் வரை பயணகைதிகளாக பிடித்து வந்து இன்றுவரை கொடூரமாக அடைத்து வைக்கவுமில்லை, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் இருந்து மேற்குலகில் நடத்தப்படும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளை பாலஸ் தீனர்கள் பண்ணுவதுபோல் கொடிகளை கைகளில் ஏந்தியபடி பெண்கள்ள் சிறுவர்கள் அனைவரும் உற்சாக கோசமெழுப்பியபடி கொண்டாடியதும் இல்லை. எம் மண்ணை அபகரிக்க முனைந்தவர்களுடன் இறுதிவரை போரிட்டோம் அதுதான் வரலாறு,அதேபோல் தம் மண்ணை அபகரித்த இஸ்ரேல் ராணுவத்துடன் எவ்வளவு கொடூரமாக கமாஸ் மோதியிருந்தாலும் பிடிக்குதோ பிடிக்கலையோ அவர்கள் வீரத்தை பாராட்டியே தீருவோம். அதைவிட்டு கிழடு கட்டைகளிலிருந்து பச்சிளம் குழந்தைகள்வரை ஒரேநாளில் கொன்று பணயகைதிகளாக்கி வீரம் காட்டினால் வலிமையுள்ள எதிரி நிச்சயமாக போர் தொடுத்தே ஆவான், ஆனால் இஸ்ரேல் எல்லை தாண்டி ருத்ரதாண்டவம் ஆடுகிறது அதை மறுப்பதிற்கில்லை ஆனால் எம் பிரதேச பிரச்சனைகளை இவர்களுடன் ஒப்பிட வேண்டியதில்லை. இவர்களுக்கான அநீதியை கேட்க, அத்தியாவசிய பொருட்கள் வழங்க, பேச்சு வார்த்தைக்கு ஒழுங்கு பண்ண, இவர்களுக்காக போர் தொடுக்க, ஆயுதங்கள் , நிதி மருத்துவம் வழங்க மேற்குலகிலிருந்து அரபுநாடுகள்வரை தோள் நிற்கின்றன, ஆனால் நாம் எவரும் இல்லாமல் உரிமை மட்டும் கேட்ட ஒரே காரணத்துக்காக பூட்டிய அறையினுள் வைத்து கொல்லப்பட்ட மூட்டை பூச்சிபோல் நசுக்கி கொல்லப்பட்டோம் இன்றுவரை எவரும் பெரிதாக ஏனென்று கேட்கவில்லை, அப்பப்போ மனித உரிமை ஐநா பொறுப்புகூறல் என்பதோடு எம் கொலைகள் கணக்கிலெடுக்கப்படாது விடப்பட்டுவிட்டது. ஆனால் போர் ஆரம்பித்தநாளிலிருந்து அவர்களைபற்றி பேச அவர்களுக்காக வாதிட ஒட்டுமொத்த சர்வ வல்லமை பொருந்திய உலகநாடுகளும் போர் ஆரம்பித்த அடுத்த நாளிலிருந்தே அணியில் நிற்கின்றன, அதை இஸ்ரேல் செவிமடுக்கிறதா இல்லையா என்பது வேறு பிரச்சனை எங்கள் பிரச்சனை அல்ல, ஏனென்றால் எந்த துணை வலிமையும் இல்லாமையினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் நாங்கள். அதனால் வலிமையுள்லவர்களுக்கிடையிலான பிரச்சனைபற்றி நமது கருத்துக்கள் சபையினில் எடுபடாது. ஆனால் எமது பிரச்சனையும் அவர்கள் பிரச்சனையும் ஒன்றல்ல என்பதுபற்றி மட்டும் வாதிட முடியும். அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் சக மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அப்பாவி வன்னி மக்கள் கொல்லப்பட்டதை இறுதி போருக்கு வாழ்த்து சொல்லி சிங்களத்துடன் கை குலுக்கிய வரலாறு பாலஸ்தீனத்துக்கு உண்டு. சொல்லபோனால் மூன்று மாதத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் தொகையைவிட மூன்றேநாளில் கொன்றொழிக்கப்பட்ட எம்மக்கள் தொகை இரண்டு மூன்று மடங்கு அதிகம், இஸ்ரேலிய இனகொலைகளை எவரும் ஆதரிக்க போவதில்லை, ஆனால் எம்மீதான இனகொலையை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சேர்ந்து வாழ்த்தியது என்பதே கடந்தகாலம், கணப்பொழுதில் கடந்தவைகளை மறந்துபோகும் எமக்கு இதுவும் பத்தோடு பதினொன்றுதான். மறுபடியும் உரக்க சொல்வதானால் மக்கள் கொலைகள் கண்டிக்கப்பட வேண்டியது, ஆனால் மீண்டும் ஒருமுறை எம் மக்கள்மீது ஒரு படுகொலை நடத்தப்பட்டால் பாலஸ்தீனம் ஒருபோதும் எமக்காக குரல் கொடுக்காது, அவர்கள் மதத்தை சார்ந்தவர்களுக்கு ஏதும் என்றால் மட்டுமே குரல் கொடுப்பார்கள், அநியாயம் அக்கிரமம் என்பார்கள், பிறருக்கு வரும் வலிகளை சிரித்துக்கொண்டே கடந்துவிடுவார்கள் இது அவர்களின் சுயரூபம் என்பதை உலகமே பார்த்திருக்கிறது இனியும் பார்க்கும் கேட்க நாதியின்றி அழிந்துபோன நாம் ,கேட்க பலர் இருக்கும் இவர்கள் போரை மெளனமாக கடந்து போவதை தவிர நம்மால் ஆவது ஒன்றுமில்லை , நாம் வழமைபோல வன்னியையும் பாலஸ்தீனத்தையும் ஒப்பிட்டு சிறந்த மனிதாபிமானிகளாக தொடர்ந்து செல்வோம். கொல்லப்பட்ட அனைத்து தரப்பு அப்பாவிகளுக்கும் கொல்லப்பட்டுவிட்ட ஒரு இனத்தின் சார்பில் அஞ்சலிகள்
  19. மணிவாழையூடே மனம்கவரும் மலர்கள் ........! 😍
  20. அமெரிக்கா வாழ் உறவுகள் அடிக்கடி வந்து ஒரு கலோ சொல்லிட்டு போனால் நலமோடு இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.🖐️
  21. பினிட்டீங்க ...சார்... ரசோதரன்...நன்றாகவே உள்ளது..அனுபவம் பேசுது..
  22. ஈழப்பிரியன்....Justin...ரசோதரன்...மற்றும் அமெரிக்கவாழ் உறவுகளே உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்...ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..
  23. மிகப் பிரபலமான ஒரு வரிக்கதை இது. இங்கு களத்தில் முன்னரே இது வந்ததா என்று தெரியவில்லை. Cuando despertó, el dinosauro todavía estaba allí (When he awoke, the dinosaur was still there ) என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி பெயர்ப்பு எடித் கிராஸ்மனுடையது. When I woke up, the dinosaur was still there என இதாலோ கால்வினோ இதே கதையை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இது மட்டுமின்றி இதே கதைக்கு நாலைந்து வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அவன் கண்விழித்துப் பார்த்தபோது டைனோசர் அங்கேயே இருந்தது. என மொழியாக்கம் செய்யலாம். கதையில் வருவது அவனா, அவளா என மான்டெரோசா சுட்டவில்லை. கவனமாக அதைத் தவிர்த்து எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை ஆங்கில மொழியாக்கத்தில் அவன் அல்லது அவன்/ அவள் என்றே குறிப்பிடுகிறார்கள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறிய கதை என்று இதனைக் கொண்டாடுகிறார்கள். கதையில் வருவது உண்மையான டைனோசரா. அல்லது சர்வாதிகாரம் தான் டைனோசராகச் சுட்டிக்காட்டப்படுகிறதா. எதிர்பாராத நிகழ்வு என்பதன் அடையாளமாக டைனோசரைக் குறிப்பிடுகிறாரா, கதாபாத்திரம் உறங்கும் போது என்ன நடந்தது என இக்கதை குறித்த நிறைய விளக்கங்களை இணையத்தில் காண முடிகிறது. இக்கதை குறித்து அகஸ்டோ மான்டெரோசோவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் it isn’t a short-story, it is actually a novel. https://www.sramakrishnan.com/ஒரு-வரிக்கதை/
  24. ஆனால் வடக்கு, கிழக்கில் வாழும் சகோதர்களுக்கும், அவர்களின் பிரச்சனைகளுக்கும் என்னிடம் எந்தத் தீர்வும் இல்லை, என்னால் எதுவும் கொடுக்கவும் முடியாது.
  25. ஒரு புதுவிதமான அணுகுமுறையை கண்டெடுத்திருக்கிறார்கள். யாராவது ஒருத்தரை தயார்பண்ணி வழக்கைப் போடுவது. பின்னர் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவைகளை அதனூடாக அமுல்படுத்துவது. ஊயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய அண்மைய வழக்கும் இப்படித் தான் திட்டமிட்டு ஒருவர் மைத்திரிக்கு எதிராக வழக்கு போட்டு திரும்பவும் விசாரணை என்று கிண்டி ஒரு தரப்பினரை வெறுக்கச் செய்யும் அரசியல் சூழ்ச்சியாகவே தெரிகிறது. ஐயா ரணில் இதில் வல்லவராச்சே.
  26. இவை எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது நியூ யோர்க்கில் அதிகரித்து விட்ட பதிவு செய்யாத குடியேறிகளால் தான் இவை நடக்கின்றன என்பது தரவுகளால் நிறுவப் படாத ஒரு கற்பிதம் என்றே சொல்கிறேன். பெரிய நகரங்கள் - சான் பிரான், பிலாடெல்பியா, பொஸ்ரன், LA இவற்றில் எல்லாம் இப்படியான குற்றங்கள் எப்போதும் நடந்தே வந்திருக்கின்றன. உள்ளூர் செய்திகளில் மட்டும் வரும், யாரும் கவனிப்பதில்லை. ஆனால், இப்போது சந்தேக நபர்கள் பதிவு செய்யாத குடியேறிகள் என்றதும், இதை பல யூ ரியூப் வழி செய்தி ஊடகங்களில் நாடு முழுவதும் பகிர்கிறார்கள். இந்தப் பகிர்வின் பின்னால் இருக்கும் எதிர் பார்ப்பு எல்லா வன்முறைக் குற்றங்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்பதை விட, பதிவு செய்யாத குடியேறி என்றால் கொஞ்சம் அதிகமாகத் தண்டிக்க வேண்டுமென்பதாக இருக்கிறது. இந்த எதிர்ப் பார்ப்பில் உணர்வு ரீதியான நியாயம் இருந்தாலும், சட்ட ரீதியில் அமெரிக்காவில் இது சாத்தியமில்லை- இப்படி குற்றம் சாட்டப் பட்டவரின் குடிவரவு நிலை, இனம் என்பன பார்த்து சட்டம் பாய ஆரம்பித்தால் விரைவில் நியூயோர்க் போர்க்கால கொழும்பு போல மாறி விடும். பிணை (bail) என்பது அமெரிக்காவில் இன்னும் நீதிபதியின் தெரிவாக (discretion) பெரும்பாலும் இருக்கும் ஒரு முடிவு. இப்படியான simple assault கேஸ்களுக்கு பிணையில்லாமல் வெளியே விடும் இளகிய நடைமுறை பெருந் தொற்றுக் காலத்தில் நியூ யோர்க்கில் கொண்டு வரப் பட்டது. பதிவு செய்யாத குடியேறிகளுக்கு இதை இறுக்கமாக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது. ஆனால், இவர்களைப் பிணையில்லாமல் வெளியே விட்ட நீதிபதியின் செயல் இனி மீளாய்வுக்குள்ளாகும். ஏன்? குற்றமொன்றில் சந்தேக நபரான ஒரு குடியேறியை, ஒரு குறிப்பிட்ட காலம் தடுப்புக் காவலில் வைத்து விட்டு, உள்ளூர் ICE இற்கு அறிவித்து குடிவரவுச் சட்டப் படி நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது தான் வழமையாக நடப்பது. இனி நீதிபதிகள் விழித்துக் கொள்வர் என நினைக்கிறேன்.
  27. 1) உக்ரேனிய யுத்தத்தை நான் ஆதரித்து எழுதிய ஒரு வரியைத்தானும் உங்களால் இங்கே இணைக்க முடியுமா? ரஸ்ய - உக்ரேனிய யுத்தத்திற்கான காரணங்களின் ஒரு பக்கக் கதை மட்டுமே இங்கே இணைக்கப்படுவதால் அதன் மறுபக்கத்தைக் காட்டுவதற்காக தேவை என்று நான் கருதுவதை இங்கே இணைத்து வந்துள்ளேன். 2) இறந்தவர் அனைவரும் இராணுவத்தினரும் போராளிகளும் என்று தாங்கள் கூறுவதனூடாக அந்தக் கொலைகளை தாங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று கொள்ளலாமா? ஆதரிக்கிறீர்கள் ! 😁
  28. நீளமான ஆங்கிலச் செய்திகளை வாசிக்காமலே திரிகளில் கொண்டு வந்து ஒட்டிவிட்டுப் போவதைவிட ரஞ்சித் செய்திக் குறிப்பைத் தமிழில் எழுதி அதனுடன் தொடர்புடைய ஆங்கிலச் செய்தியின் இணைப்பையும் கொடுத்துள்ளார். இதனை ஊக்குவிப்பதற்கான விருப்புப் புள்ளி முக்கிமான காரணம். திரிகளில் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு விவாதத்துக்கு மத்தியில் இரண்டு வரியில் நக்கலாக எழுதும் கருத்துகளுக்கு விருப்புப் புள்ளி போடுவதை விட ஊக்குவிப்பும் பாராட்டும் சிறந்தது. புரிகிறதா ?
  29. a எமது அழிவுக்கு நேரடியாக உதவியவனுக்கும் மறைமுகமாக வாழ்த்தியவனுக்கும் என்ன வித்தியாசத்தை உங்களால் உணர முடிகிறது? இனவழிப்பு சரியென்று எந்த இடத்திலும் நான் கூறவீல்லை, ஆனால் எமது இன அழிப்பை எதிரியுடன் கை குலுக்கி கொண்டாடியவர்களின் மோதலை அவர்கள் பிரச்சனை என்றுவிட்டு கடந்து செல்வேன். அது பெரிய குற்றம் என்று நான் கருதவில்லை. நோர்வேயின் அனுசரணை பேச்சுவார்த்தை ஒன்றிற்கு அப்புறம் ஒரு மாவீரர்நாள் உரையில் திருவாளர் அன்ரன் பாலசிங்கம் ஒரு கருத்தை சொன்னார், ''இந்த உலகம் நான் உனக்கு மூஞ்சையை பொத்தி அடிப்பேன் நீ என்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடு என்று சொல்ல வருகிறது, அதை எம் இனம் ஏற்காது'' பலமான சிங்களவன் பலவீனமான எம்மீது நடத்திய அழித்தொழிப்பு தாக்குதலை சரியென்று சொல்லி பலவீனமான பாலஸ்தீனம் எப்போதோ வாழ்த்து தெரிவித்துவிட்டது . ஆனால் எமது இனம் பலவீனமான பாலஸ்தீனமக்கள் அழிவது சரியென்று எவர்கூடவும் கை குலுக்கவும் இல்லை கொண்டாடவும் இல்லை, மெளனமாக கடந்து செல்ல எமக்கு உரிமை இருக்கிறது ஏனென்றால் நாம் அழுதபோது ஊர் வரவில்லை, ஊர் அழுகிறபோது எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை, அவ்வளவுதான். ரஞ்சித்தின் பல கருத்துக்களுடன் எப்போதுமே எனக்கு உடன்பாடு உண்டு , ஆனால் நிச்சயமாக இந்த விசயத்தில் உங்கள கருத்துடன் ஒருபோதும் மனம் ஒன்றி போகாது. இதற்குமேல் நாங்கள் விவாதித்தால் அது கருத்து மோதலாகிவிடும். கருத்து மோதல்களில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லாததால்தான் தனியே புலம்புறமாதிரி பொதுவாக கருத்தெழுதிவிட்டு செல்வது வழமை. எனது தனிப்பட்ட கருத்தாய் ஒன்றை கூறி முடிக்கிறேன், முஸ்லீம்கள் என்பவர்கள் தமது மதத்தவரை தவிர உலகில் எவன் செத்தாலும் அழிந்தாலும் ஒருபோதும் அவர்களுக்காக அனுதாபபடவோ கவலைபடவோ மாட்டார்கள், அவர்கள்போல் நாம் இருக்கவேண்டிய அவசியமில்லை, அதனால் கொல்லப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் மீண்டும் அஞ்சலிகள்.
  30. "எனக்காக பிறந்தவள்" "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால் அரம்பை தேசவில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள் கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் துடிக்குள்அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள் துட்டன் அரண்மனைக்குக் கட்டும் கதலிவாழைத் தொடையினாள் [ குற்றால குறவஞ்சியில் நாயகியின் வர்ணனை] நான் வேலை செய்யும் பணிமனையில், எனக்கு ஒரு உதவியாளராக ஒரு பெண் நாளை தனது பதவியை ஏற்பார் என்றும், அவர் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி என்றும், இது அவரின் முதல் வேலை என்றும், ஆகவே அவருக்கு வேலையை பற்றிய அறிமுகமும், பயிற்சியும் வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்கை செய்யும் படி எனக்கு அமைச்சில் இருந்து கடிதம் வந்து இருந்தது. அதில் அவரின் படம், மற்றும் சில விபரங்களும் இருந்தன. வழமையாக எனக்கு கீழ் வேலை பார்க்கும் அணி தலைவரிடம் கொடுத்துவிடுவேன். நான் அதில் நேரடியாக பங்குபற்றுவதில்லை. ஆனால், அவளின் படம், வயது, படிப்பு எனோ என்னை இம்முறை கவர்ந்து விட்டது. நான் பொறியியலாளர் என்றாலும், பொழுது போக்காக இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவன் என்பதால், அவளின் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க, குற்றாலக் குறவஞ்சி ஞாபகம் தான் வந்தது. என் கற்பனையில், எனக்காக ஒருவள் கட்டாயம் பிறந்திருப்பாள், அவள் எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்தேனோ, அதைவிட, குற்றாலக் குறவஞ்சியை விட, அவள் உயர்வாக தெரிந்தாள். 'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி' யாய் .. 'பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்' என இருந்தாள்! முதல் முதலாக அன்று இரவு முழுவது அந்த, அவளின் படம் தான் கண்ணில் வந்து கொண்டே இருந்தது. இது என்ன கொடுமை ? எனக்கு புரியாத ஒரு உணர்வு ? அது என்ன ? அவள் யார் ? அந்த படமும், சிறு குறிப்பும் ஒருவரை அறிய கட்டாயம் காணாது, அப்படி என்றால் ஏன் என் மனம் அதை நம்பவில்லை, 'அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்' அப்படி ஒன்றும் இன்னும் நடை பெறவில்லையே, மனதை தேற்றிக்கொண்டு கொஞ்சம் உறங்க முயன்றேன். "உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து , இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்," புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே; கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு; அவற்றுள் ஒன்று துயர் தரும் மாலைப் பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்தது போல, என்னை திடீரென வாட்டும் இந்த எண்ணமும் மறையட்டும் என்று போர்வையை இறுக மூடிக்கொண்டு கொஞ்சம் அயர்ந்து தூங்கினேன். "சிறு கண் யானை உறு பகை நினையாது, யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப, அருள் புரி நெஞ்சம் உய்த்தர இருள் பொர நின்ற இரவினானே." சிறு கண்களை உடைய மதம் கொண்ட யானை பற்றி பொருட் படுத்தாது, பூ மாலை அணிந்த அன்பு உள்ளம் உடையவளே, எப்படி நீ என்னை காண இந்த கரும் இருட்டில் வந்தாய்? என கேட்டபடி, ஆனால், திடீரென அவள் எதிரே வந்துநின்றதால், எனக்கு கைகால் பதறி. மேலும் பேசுவதற்குச் சொற்கள் வராமற்போகத்தான் தெரிந்தது இது கனவென்று, எனக்கே என் மேல் கோபம் கோபமாக வந்தது. நேரத்தை பார்த்தேன் காலை ஆறு தாண்டி விட்டது. அவசரம் அவசரமாக, காலைக்கடன் முடித்து, நேற்று வாங்கி மிகுதியாக இருந்த இரண்டு பாண் துண்டுகளை வாழைப் பழத்துடன் அருந்தி, சுடச் சுட ஒரு காபி குடித்துவிட்டு, என்னிடம் இருந்த உடுப்புகளில், சிறந்த ஒன்றை தெரிந்த்தெடுத்து கம்பீரமாக பணிமனைக்கு என் மோட்டார்வண்டியில் கொஞ்சம் முந்தியே சென்றேன். "இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என, யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, தான் செய் குறி நிலை இனிய கூறி, ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி, விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?" சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ என்று அவளை வரவேற்று சொல்ல வேண்டும் போல் இருந்தாலும், அவளுக்கு எப்படி என்னை தெரியும், என் உருவமோ, வயதோ, படிப்போ அவளுக்கு தெரியாதே ! அவள் என்னையோ, என் படத்தையோ பார்த்தது இல்லையே ? அவளுக்கு ஆண் நண்பர் இருக்க இல்லையா, அது கூட எனக்கு தெரியாதே? நான் என்னையே நொந்தேன். என்றாலும் என் நெஞ்சு அவள் எனக்காக பிறந்தவள் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. "சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ" கண்களில் இருந்து வெளிப்படுகின்ற ஒளி இரண்டும் சூரிய கதிர்கள் போலும், குளிர்ந்த நிலாவொளி போலும் ஒளிர்கிறதே! தூய்மையான, கருமையான வானம் போலே வட்ட வடிவில் அழகிய கருமையான கண் விழிகளுடன் அவள் அன்ன நடை நடந்து, புது இடம், புது மனிதர் என்பதால் அச்சம், நாணம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் சாதாரணமாக எமது பணிமனையின் வரவேற்பில் காத்து நின்றாள். எதோ அவர்களுடன் கதைப்பதும், அவர்கள் என் அறையை காட்டுவதும் எனக்கு தெரிந்தது. என்றாலும் ஏதும் தெரியாதது போல், என் கோப்புகளை எடுத்து, அதில் மூழ்கி இருப்பது போல இருந்தேன். என்றாலும் கண் என்னை ஏமாற்றிக்கொண்டே இருந்தது. "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும்" கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று விட்டனவோ?. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறந்தனவோ? என மனதில் என்னை அறியாமலே கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தன. வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட" மூங்கில் போல் திரண்டிருக்கும் தோளினையும். மணத்தால் வெறியூட்டும், ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட, வளர்ந்த கூந்தலையும், மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும் . மயில் போன்ற சாயலையும், நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும், கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் தோன்றித் தோன்றாத, கண நேரத்தில் யாதென்றே தெரியாத, அந்த மெல்லிய இடையாளை கண்கள் நாடி சென்றன என் கண் கோப்புக்குள் இருந்ததால், போலும் வரவேற்பில் சிறிது நேரம் காத்திருக்க சொல்லி இருக்கவேண்டும். அவள் எம் பணிமனைக்கு முன்னால் இருந்த தோப்புக்குள் மேய போய்விட்டாள். நான் வண்டு என்றால் அங்கு போயிருப்பேன். என்ன செய்ய ? என்ன கொடுமை? நானும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் ? இதைத்தான் விதி என்பதோ ? யான் அறியேன் பராபரமே! என் ஒரு ஊழியர் உங்களுக்கு ஒரு கடிதம் என்று அந்த நேரம் கொண்டுவந்து தந்தார். அது அம்மாவின் கடிதம். ஒவ்வொரு முறையும் யாரோ ஒரு பெண் பற்றி, இப்ப கொஞ்ச நாளாக வரும். மகனே பார்த்து சொல்லு என்று. அத்துடன் ஒரு புலம்பலும் இருக்கும், எனக்கும் வயது போகிறது. இம்முறையானது சரி என்று சொல்லாயோ என்று ஒரு அதட்டலுடன். சரி அதை அவள் வரும் மட்டும் பார்ப்போம் என்று அதை திறந்தேன். என்ன ஆச்சரியம் அதற்குள் இருந்தது அவளின் இரு படங்களே! அவள் குடும்பத்தை பற்றிய சிறு குறிப்புடன், அவள் பல்கலைக்கழகம் முடித்து, இப்ப வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள் என்றும் அதில் இருந்தது. அது வாசித்து முடிய, அவளும், என் ஒரு ஊழியர் சகிதம் உள்ளே வர சரியாக இருந்தது. நான் விதியை, அதிர்ஷ்டத்தை நம்புபவன் அல்ல. என்றாலும் அவள் வருகையும், அம்மாவின் கடிதமும், அதில் அவளின் படமும் எனோ ஒன்றாக அமைந்து விட்டது. அவள் வந்து அமர்ந்ததும், என் ஊழியர் தன வேலைக்கு திரும்பிவிட்டார். நான் அமைதியாக அவளிடம் சிலகேள்விகளை கேட்டு, எம் வேலைகளைப் பற்றியும் அதில் அவளின் பங்கு பற்றியும் தெளிவு படுத்தினேன். அவளும் ஆவலாக கேட்டது மட்டும் அல்ல, பல கேள்விகளும் கேட்டு மேல் அதிகமாக அறிந்தாள். அது வரவேற்கத் தக்க ஒரு நடத்தையாக இருந்தது. பிறகு பணிமனையை சுற்றி காட்ட மற்றும் சக ஊழியர்களை அவளுக்கு அறிமுகப்படுத்த என் அணித்தலைவருடன் அனுப்பவேண்டியதே மிகுதி, என்றாலும் அதற்கு இடையில் சிறு ஓய்வு எடுத்து, அவளுக்கு காப்பி, பிஸ்கட் பகிர்ந்து நானும் அருந்தினேன். அந்த இடைவெளியில் அவளின் அம்மா அப்பா பற்றி, முன்னமே அம்மாவின் கடித்ததால் அறிந்து இருந்ததால், எதோ அவர்களை முன்னமே தெரிந்தது போல் சில கேள்விகள் கேட்டேன். அவள் திடுக்கிட்டே விட்டாள். அந்த நேரம் பார்த்து, அம்மாவின் கடிதத்தை எடுத்து, அவளின் படத்தை வெளியே எடுத்தேன். தன் படம் என்று அறிந்துவிட்டாள். நானும் விபரமாக அம்மாவின் கடிதத்தை கூறினேன். அவள் கண்களில் எங்கிருந்தோ ஒரு ஒளி பிரகாசித்தது. கூடவே நாணமும் அவளை கவ்வியதை கண்டேன். அது அவளின் சம்மதத்தின் அறிகுறி. இனி கட்டாயம் அவள் எனக்காக பிறந்தவளே! என் உள்ளம் எதோ ஒரு மகிழ்ச்சியில் திளைத்தது. அவளை பார்த்தேன், அவள் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது !! "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  31. இந்த நிறுவனத்தின் சூரிய மின் தகடுகள் இங்கும் பொருத்துகிறார்கள், நல்ல தரமான சூரிய மின் தகடு, அவுஸ்ரேலியாவினை விட இலங்கையில் உள்ள சூரிய மின் தகடு பொருத்துனர்கள் புதிய சூரிய மின் தகடுகளை பொருத்துகிறார்கள், ஆனாலும் விலை கிட்டதட்ட ஒரே அளவில் உள்ளது. (தற்போதும் அதிக பட்சமாக 400W வினத்திறன் கொண்ட மின் தகடுகளே இங்குள்ள நிறுவனங்கள் பொருத்துகிறார்கள் என கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்), இங்கு பெரும்பாலும் இந்தியர்கள் இந்த வகை நிறுவனங்களை பெரும்பாலும் நடத்துகிறார்கள்.
  32. சொல்ல மறந்து விட்டேன். அந்த பயிற்சியில், முழங்கால் சற்று உயர்ந்து நிற்பது கடினம் என்றால், முதலில் அப்படி முழங்காலை நிலத்தில் வைத்தே ஆரம்பத்தில் செய்யலாம் . மற்றது, முழங்காலை சற்று உயர்த்தும் போது , காலால் அல்லாமல், நெஞ்சு, வயிற்று பகுதி தசைகளை (core ) பாவித்து (engage) தூக்க வேண்டும். இதற்கு என்று, நெஞ்சு, வயிற்று பகுதி தசைகளை பாவிப்பதற்கு (engaging core) பயிற்சி இருக்கிறது யோகாவில், calisthenics (உடம்பு திணிவை தடையாக பாவித்து செய்வது) மற்றும் isometric (அசையாமல் தசை நார்களை குறுக்குவது, நீட்டுவது, அமுக்குவது, திருப்புவது ), isotonic (அசைவின் மூலம் தசை நார்களை குறுக்குவது, நீட்டுவது, அமுக்குவது, திருப்புவது) பயிற்சிகளிலும் இருக்கிறது ஆனல் குறைவு. நாளாந்த வாழ்க்கையிலும், உடற்பயிற்சியிலும் பல சந்தர்ப்பங்களில் வலிகள் ஏற்படுவது, இந்த நெஞ்சு, வயிற்று கோறை தசைகளை உரியமுறையில் பாவிக்காமல் விடுவதால் (not properly engaging core). இது யோசித்து தன் செய்ய வேண்டும் உரிய, முறையான உடற்பயிற்சி இல்லவிட்டால். உரிய, முறையான உடற்பயிற்சி செய்யும் போது பழகி கொள்வீர்கள், சிறிது காலத்தில் இயல்பாகவே நெஞ்சு, வயிற்று கோறை தசைகளை உங்களை அறியமலே பாவிப்பீர்கள். சிறிது நேரம் செய்தாலும், முறையை இயலுமான அளவு ஒற்றி செய்தால் போதும். இது உடற்பயிற்சியின் தாரக மந்திரம், பல இடங்களில் கேட்டு விட்டேன். மற்றது, சிறிது வலி என்றாலும் உடனடியாக நிறுத்தி, சிறிது ஓய்வு எடுத்து மீண்டும் ஆரம்பிக்கவும். வலி தொடருமாயின் நிறுத்தவும். அல்லது பயிற்சியை மாற்றவும் ஒரு போதும் வலியை சகித்து, உடற்பயிற்சி செய்யக்கூடாது, தொடரக்கூடாது. உடற்பயிற்சி உங்கள் வாழ்க்கையில் ஒர் அங்கமாகி விட்டால், பொதுவாகவும், குறிப்பாகவும் (உங்கள்) உடலை பற்றி பல விடயங்களை அனுபவம் மூலம் அறிவீர்கள்.
  33. வருகைக்கும், கருத்துக்கும், அழகிய வீடியோவுக்கும் நன்றி ஐலண்ட். நீங்கள் இணைத்த வீடியோவில் வரும் இடங்களில் எனக்கு 10/10😎. எல்லே, நுவர-எலிய சிறு வயதிலும், வெளிநாடு வந்த பின்பும், சில தடவைகள் போயுள்ளேன். இந்த முறை போகவில்லை. எல்லே கேப், அழகிய ரயில் பாலம் viaduct, என மனதை கொள்ளை கொள்ளும் ஊர் எல்லே. கொழும்பில் இருந்து பதுளை செல்லும் உடரட்ட மினிகே யின் கடைசி பெட்டியில் ஒப்சவேர்சன் சலூன் என பெரிய கண்ணாடி களால் ஆன பெட்டியை இணைப்பார்கள். 1st class டிக்கெட் விலைதான். ஆனால் கடைசி நான்கு இருக்கைகள் கிடைப்பது முயல்கொம்பு. பெட்டியில் எங்கோ ஒரு இருக்கை கிடைத்தாலே போதும். ரயில் பாதை எங்கும் பொல்கஹாவலவில் இருந்து பதுளை வரை கண்பூத்து போகும் அளவுக்கு இயற்கை அழகு தித்திக்கும். இந்த வீடியோவில் வரும் ஹோர்ட்டன் பிளைன்சில்தான் வேர்ல்ஸ் எண்ட், எனும் அழகிய இடம் உள்ளது.
  34. இனி வரும் காலங்களில் பேசாமல் ஒதுக்குப்புறமாக உள்ள சிறிய ஊர்களில்ப் போய் இருப்பது தான் சிறந்தது என்று நினைக்கின்றேன். வீட்டு விலையும் குறைவு, அதே நேரம் லூசுகளின் பிரச்சினையும் குறைவு, வெள்ளைகளின் இனத்து வேசத்தை சகித்துக் கொள்ளலாம், ஆனால் அடங்காப்பிடாரிகளோடு வாழ முடியாது
  35. நாங்க வெளிநாடு…. இதையும் கேட்டுப் பாருங்கள்…. https://m.facebook.com/story.php/?id=100064830332991&story_fbid=807641231406881
  36. ஆக்கம் "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
  37. "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில்" "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில் ஓட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன் காட்டின் நடுவே கேம்ப் போட்டு காட்டாத வாழ்வை கனவு கண்டேன்" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது பாட்டா சொல்லி தேவதை வந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டி கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு வானத்தில் இருந்து கூட்டி வந்து இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க முட்டி மோதி நிமிர்ந்து நடந்து பொட்டக் குட்டி பாட்டி பெயரில் லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது" "கட்டு மரமாக வாழ்வில் மிதந்து ஆட்டி படைத்த நினைவுகளை எறிந்து குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து எட்டு திக்கும் துள்ளி குதித்தேன்" "ஊட்டி வளர்த்த அறிவு எல்லாம் வெட்டி எடுத்த அனுபவம் எல்லாம் போட்டி போட்டு மோதிப் பாரென சிட்டுக் குருவி சிறகு அடிக்குது" "ஒட்டி உடையில் அழகு காட்டி சட்டம் போட்டு திமிரு காட்டி பாட்டு படித்து இனிமை காட்டி புட்டி பாலூட்ட மடியில் உறங்குது" "எட்டி உதைத்து செல்லம் காட்டி கட்டி அனைத்து இன்பம் காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தொட்டில் ஆட்ட நொடியில் உறங்குது" "நட்சத்திரம் மறைய கதிரவன் எழ கூட்டம் சேர ஆரவாரம் எழ சொட்டை தலையில் சூடு எழ வெட்கம் கொண்டு கனவும் பறந்தது" "தட்டி தடவி வெளியே வந்து மீட்டு எழுந்து வீடு போய் கூட்டி குழைத்து சுவைத்த கனவை காட்சி படுத்தி தினமும் மீட்டேன்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  38. மதில் மேல் பூனை.. எந்தப் பக்கம் போவது என யோசிக்கிறதோ🤔
  39. உஸ் ........ பிள்ளைகளுக்கு ஒழுக்கம் போதிக்கப் படுகிறது........! 😂
  40. விக்கி அய்யா பொது வேட்பாளர் என்றால்...கடைசி நாள் கடைசி நேரத்தில்..ரணிலுக்கு என் ஆதரவு..என்வே எம் மக்களே... ரணிலுக்கு உங்கள் வோட்டை போடுங்கள் என்று சொன்னால் ஆச்சரியப் படுவதற்கில்லை..
  41. இதை பற்றி அறிய வேண்டுமானால் இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று தகவல்கள் அடங்கிய அறிந்து கொள்ளும் நூல்களை நீங்கள் வாசிப்பது அவசியம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வியில் உரிமை மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான அடக்கப்பட்ட மக்களை மேலே தூக்கி விட இட ஒதுக்கீடு அவசியம். இதை உங்கள் தலைவர் சீமான் அடிக்கடி முஷடியை உயர்த்தி மேற்கோள் காட்டும் புரட்சியாளர் அம்கேத்கார் கூட வலியுறுத்தியுள்ளதுடன் இந்திய அரசியல் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. இலங்கையில் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும் அவ்வாறே அதை அடிப்படையாகக் கொண்டதே. இதன் மூலம. பின்தங்கிய பிரதேச மாணவர்கள் பலன் பெற்றனர். என்ன பெயரால் அழைத்தாலும் ஒரு மக்கள் கூட்டதின் மீது மேலாதிக்கம் மேற்கொண்டால் அது ஒன்றே தான். இனம் என்று அழைத்தாலென்ன சாதி என்று அழைத்தாலென்ன. சாதிப்பிரச்சனை காலப்போக்கில் அகன்றுவிடும் அதை தூக்கி பிடிக்க வில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இனப்பிரச்சனையும் அப்படியே தானாக போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  42. எண் சாண் உடம்படியோ.. ஏழிரண்டு வாயிலடி.. பஞ்சாயக் காரரைவர்.. பட்டணமும் தானிரெண்டு.. அஞ்சாமற் பேசுகிறாய்.. ஆக்கினைகுத் தான் பயந்து.. நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா.. நிலை கடந்து வாடுறண்டி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.