Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்12Points46979Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points88827Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்10Points19670Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்5Points39346Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/17/24 in Posts
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும் இருந்தும், வேறு எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள்" என்றே. இதனால் என்ன பயன்? போர்க் குற்ற விசாரணை எல்லாம் நடக்குமா? எனக் கேட்டால், கண்டிப்பாக இல்லை. ஆனால், ஆகக் குறைந்தது ஒரு சிலருக்காவது, இலங்கை எனும் சொர்க்க புரியில், ஒரு இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்றதா என கேள்விகளாவது மனசில் எழும். நீங்கள் யாழ்ப்பாணம் போனால், வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்று அவர்கள் புரிந்து கொண்டால், முச்சக்கர சாரதியில் இருந்து தின்னவேலி சந்தையில் காய்கறி விற்பவர் வரைக்கும் நன்றாக ஏமாற்றுவார். கேள்வி கேட்டால், போருக்கு பயந்து ஓடிப் போனவர் தானே என்றும் சிலர் நக்கலடிப்பர்.4 points
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
மின்னம்பலம் திமுகவினது இல்லை. எல்லாக் கட்சிகளும் விளம்பரங்களைப் போடுவதைப் பார்க்கின்றேன். கருத்துக்கணிப்பு தெளிவாகச் சொல்வது என்னவென்றால் எவர் வெல்லும் கூட்டணியை அமைக்கின்றாரோ அவர் கட்சிக்கூட்டணியே வெல்லும். அதிமுக, பிஜேபி, பா.ம.க கூட்டணி அமைத்திருந்தால் திமுகவுக்கு பத்துக்குள்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது. கூட்டணி எப்போதும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். ஆனால் சுயநலத்திற்காகத்தான் தமிழ்நாட்டில் கூட்டணிகள் அமைவதும், பிரிவதும் உண்டு. எல்லாமே பகடை பன்னிரண்டுதான்! இப்போது 40 தொகுதிகளுக்குமான கருத்துக்கணிப்பு வந்துள்ளது. அண்ணாமலைக்கும் வெற்றி வாய்ப்பில்லை. ஆனால் கடினமாக முயன்றால் வெல்ல இப்போதும் சந்தர்ப்பம் இருக்கின்றது! வாய்ப்பில்லை ராஜா!😜 பிஜேபி கூட்டணி மூலம் வளர்ந்து வருகிறது. எப்படியும் அதிமுகவுடன் மீண்டும் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.3 points
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்3 points
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.3 points
-
பதவி விலகவுள்ள சிங்கப்பூர் பிரதமர்!
2 pointsதினக்குரல் குழப்புகிறது. பிரதமர் மீதல்ல அவர் கட்சி பாஉக்கள் இருவர் மீதே 2003 ஆரம்பத்தில் ஊழல் புகார் வைக்கப்பட்டது. 2003 இறுதியில் ஏலவே முடிவு செய்த பதவிக்கால நிர்ணய நிரல்படி, அடுத்த தேர்தலுக்கு புதிய தலைமையை கொடுக்கும் வண்ணம், 2024 இல் தான் பதவி விலகுவதாக பிரதமர் அறிவித்தார். வேணும் எண்டால், இதை தன் கட்சியினரின் மீதான குற்றச்சாட்டுக்கான தார்மீக பொறுபேற்றல் என கொள்ளலாம்.2 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வந்துடடேன் வந்துடடேன் என்று இன்னுமா வந்து முடியவில்லை ?😃2 points
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
2 pointsகொல்கத்தாவிடம் இருந்து 'நம்பமுடியாத' வகையில் வெற்றியைப் பறித்த பட்லர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 14-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று வர்ணனையாளர்களும், ரசிகர்களும் நம்பி கருத்துக்களைத் தெரிவித்தனர். கணினி கணிப்புகளும் 0.30 சதவீதம் மட்டுமே ராஜஸ்தான் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்தது. ஆனால், கடைசி 6 ஓவர்களில் தனிஒருவனாக இருந்து சாதித்த ஜோஸ் பட்லர் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும், வீரர்களுமே ஒரு கட்டத்தில் தோல்வியை ஏற்கும் மனநிலைக்குச் சென்றிருப்பார்கள். அத்தகைய சூழலில் இருந்து, கடினமான வெற்றியை பட்லர் சாதித்துக் காட்டினார். கடைசி 6 ஓவர்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வெற்றி தங்களின் கரங்களை விட்டு மெல்ல மெல்ல நழுவுகிறது என்பதை அறியாமல் கொல்கத்தா அணியினர் திகைத்துபோய் பந்துவீசியதைக் காண முடிந்தது. அணி நிர்வாகத்திடம் இருந்து அவ்வப்போது, அறிவுரைகள் வந்து கொண்டிருந்தன. ஆயினும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் இரு அணி வீரர்களுமே அதிக நுட்பங்களை, உத்திகளை போட்டியில் கையாண்டனர். எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்வது, யாரை எப்படி வீழ்த்துவது, திட்டங்களை எப்படி முறியடிப்பது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஆட்டம் அமைந்திருந்தது. பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது. 224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டை பொருத்தவரை பெரிதாக முன்னேற்றமில்லாமல் 0.677 என்ற அளவிலேயே 3வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே(0.726) அணியை விட குறைவாக இருக்கிறது. அடுத்துவரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால்தான் நிகர ரன்ரேட்டை உயர்த்த முடியும். அதேசமயம், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டைப் பொருத்தவரை, 1.399 என்று அனைத்து அணிகளையும் விட வலுவாக இருக்கிறது அந்த அணிக்கு பலவகையிலும் சாதகமாக அமையும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் 107 நாட்அவுட்(60 பந்துகள்,6 சிக்ஸர், 9பவுண்டரி) தவிர வேறு எந்த பேட்டரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. ரியான் பராக்(34), ரோவ்மென் பாவெல்(26) ஆகியோர் மட்டும் சிறிய கேமியோ ஆடினர். மற்றவகையில் அனைத்து பேட்டர்களும் ஏமாற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘ரியல் இம்பாக்ட் பிளேயர்’ ஜாஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரராக, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தனது ஆட்டத்தின் மூலம் “பெரிய இம்பாக்ட்டை” நிகழ்த்திவிட்டார். சதம் அடித்தபோதுகூட கொண்டாடாத பட்லர் அணியை கடைசிப்பந்தில் வென்று கொடுத்தபின்புதான் தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து வெற்றியைக் கொண்டாடினார். ராஜஸ்தான் அணிக்கு சாத்தியமில்லாத வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஜாஸ் பட்லர் இந்த ஐபிஎல் சீசனில் அடித்த 2ஆவது சதமாகும். இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக கோலி சதத்துக்குப் பதிலடியாக பட்லர் சதம் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிகசதம் அடித்த பேட்டர்களில் 7 சதங்களுடன் பட்லர் 2-ஆவது இடத்தில் இருக்கிறார். அதேபோல சேஸிங்கில் அதிக சதங்களை அடித்தவர்கள் வரிசையில் கோலிக்கு அடுத்ததாக பட்லர் 3 சதங்களுடன் உள்ளார். டி20 சதங்களைப் பொருத்தவரை அதிகமான சதங்களை அடித்த இங்கிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றார். இந்த 8 சதங்களுமே பட்லர் கடந்த 3 ஆண்டுகளுக்குள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 6 ஓவர்களில் ஜாஸ் பட்லர் அதிரடியாக பேட் செய்தார். அவரின் கண்களுக்கு வெற்றியைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்றே கூற வேண்டும். பட்லர் கடைசியாக சந்தித்த 27 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் சேர்த்து 240.74 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார். ஆனால் 7ஆவது ஓவர் முதல் 14-ஆவது ஓவர்வரை பட்லர் ஆமை வேகத்தில் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 22ரன்கள் மட்டுமே சேர்த்த்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘நம்பமுடியாத வெற்றி’ ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த வெற்றியால் பெருமகிழ்ச்சி. நம்பமுடியவில்லை. 6 விக்கெட்டுகள் சென்றபின் சிறிது நம்பிக்கையற்று இருந்தோம். ஆனால் பாவெல் களமிறங்கி சிக்ஸர்கள் விளாசியபின் நம்பிக்கை ஏற்பட்டது, போட்டி கையைவிட்டுச் செல்லவில்லை என்று எண்ணினோம். தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று அழகான நிகழ்வு, இதற்கு அதிர்ஷ்டமும் தேவை. நரைன், வருண் இருவருமே அற்புதமாக பந்துவீசி நடுப்பகுதி ஓவர்களில் எங்கள் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். இந்த விக்கெட் இருவருக்குமே அருமையாக ஒத்துழைத்தது.” “கடந்த 7 ஆண்டுகளாக ஜாஸ் பட்லர் எங்கள் அணிக்காக அற்புதமாக பேட் செய்து வருகிறார். அவரின் பேட்டிங் நிலைத்துவிட்டால் கடைசி 20 ஓவர்கள்வரை நின்றுவிளையாடுவார் என டக்அவுட்டில் பேசிக்கொள்வோம். பட்லரின் 20வது ஓவர் பேட்டிங், ரன் எடுக்காத அவரின் புத்திசாலித்தனம், யாராலும் அவரை தோற்கடிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியது” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் செய்த சாதனை 6 விக்கெட்டுகளை இழந்தநிலையில், கடைசி 6 ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் அணி 103 ரன்களைச் சேர்த்துள்ளது. 6-வது விக்கெட்டை இழந்தபின், 100க்கும் மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது. ராஜஸ்தான் அணி 15-வது ஓவரை பேட் செய்ய எதிர்கொண்டபோது வெற்றிக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. 36 பந்துகளில் 96 ரன்கள் என்பது சாத்தியமில்லாதது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்த முதல் அணி என்ற பெயரை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது. ராஜஸ்தான் அணி 14.1 ஓவர்களின்போது 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. கணினியின் வெற்றிக் கணிப்பின்படி, ராஜஸ்தான் அணி வெல்வதற்கு 0.32 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், அதன்பின் கூடுதலாக 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 96 ரன்களை சேஸிங் செய்தது ராஜஸ்தான் அணி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி ராஜஸ்தான் அணி சேஸிங் செய்த 224 ரன்கள்தான் அதிகபட்ச சேஸிங்காகும். பட மூலாதாரம்,SPORTZPICS கடைசி 6 ஓவர்களில் நடந்தது என்ன? ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்பட்டது. பட்லர் 42 ரன்களுடனும், பாவெல்2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வருண் வீசிய 15வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரிகளை விளாசி 17 ரன்கள் சேர்த்துதனது அரைசதத்தை நிறைவு செய்தார். கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 79 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை ஆந்த்ரே ரஸல் வீசினார். ரஸல் ஓவரில் பாவெல் ஒரு சிக்ஸரும், பட்லர் ஒரு சிக்ஸரும் விளாசி 17 ரன்கள் சேர்த்து பதற்றத்தைத் தணித்தனர். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 62 ரன்கள் தேவை. நரைன் வீசிய 17-வது ஓவரை பயன்படுத்திய பாவெல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி, 4வது பந்தில் கால்காப்பில் வாங்கி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பாவெல் சென்றபின் ராஜஸ்தான் அணியில் பெரிதாக பேட்டர்கள் யாரும் இல்லை என்பதால், பட்லரையும் தூக்கிவிட்டால் ராஜஸ்தான் தோல்வி உறுதி என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். கடைசி 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 46 ரன்கள் தேவை. அடுத்த 3 ஓவர்களையுமே பட்லர் தனி ஒருவனாக இருந்து களமாடி, கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்தார். கடைசி 3 ஓவர்களில் ஒரு பந்தைக் கூட ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கானுக்கு பட்லர் வழங்கவில்லை. 2 ரன்கள், கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தனது பக்கவே பட்லர் வைத்திருந்து பேட் செய்தார் . பட மூலாதாரம்,GETTY IMAGES மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய 18-வது ஓவரில் பட்லர் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் அடித்தார், அந்த ஓவரில் வைடில் பைஸ் 5 ரன்கள் என 18 ரன்கள் ராஜஸ்தானுக்குக் கிடைத்தது. ஆட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.இந்த ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து பட்லர் ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார். கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்சித் ராணா வீசிய 19-வது ஓவரில் பட்லர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் விளாசி கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. வருண் சக்ரவர்த்தி கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸரை விளாசி பட்லர் அதிர்ச்சி அளித்தார். அடுத்த 3 பந்துகளும் ரன் சேர்க்க வாய்ப்புக் கிடைத்தும் பட்லர் ஓடவில்லை, ஒரு ரன் எடுத்தால் ஆவேஷ் கான் ஸ்ட்ரைக்கில் வருவார், அவரை எளிதாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவார்கள் என்பதால் 3 பந்துகளையும் பட்லர் டாட் பந்துகளாக கழித்தார். 4வது பந்தில் லாங் ஆப் திசையில் தட்டிவிட்டு 2 ரன்களை பட்லர் சேர்த்தார். ஸ்கோர் சமநிலைக்கு வந்ததையடுத்து, ராஜஸ்தான் தோல்வியிலிருந்து தப்பியது. ஆனால், கடைசிப்பந்தில் ரன் அடிக்காவிட்டால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றுவிடும் என்பதால் ரசிகர்களும், வீரர்களும் பதற்றத்தில் இருந்தனர். வருண் வீசிய கடைசிப்பந்தை லெக் திசையில் தட்டிவிட்டு பட்லர் ஒரு ரன் எடுக்க ராஜஸ்தான் அணி ‘சாத்தியமில்லாத’ வெற்றியை பெற்றது. சதம் அடித்தபோதுகூட தனது பேட்டை உயர்த்தி பட்லர் கொண்டாடவில்லை, ஆனால், ராஜஸ்தான் வென்றவுடன், தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து பட்லர் வெற்றியைக் கொண்டாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நரைன் அடித்த முதல் சதம் வீணாகியது கொல்கத்தா அணி 223 ரன்கள் அடித்ததில் பெரும்பகுதி காரணம் சுனில் நரைன்தான். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 80 ரன்கள்வரை சேர்த்திருந்த நரைன் முதல்முறையாக சதத்தைபதிவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியிலும் சுனில் நரைனைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. கொல்கத்தா அணியில் இதுவரை 2 பேட்டர்கள் மட்டுமே சதம் அடித்திருந்தனர். முதலாவது மெக்கலம்(158), 2வதாக வெங்கேடஷ் ஐயர்(104), 3வதாக தற்போது நரைன்(109) சதம் அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் சதமும் அடித்து, பல விக்கெட்டுகளை 3 வீரர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். கிறிஸ் கெயில் இருமுறையும், ஷேன் வாட்சன் ஒருமுறையும் நிகழ்த்தினர், 3வது வீரராத நரைன் சதமும் அடித்து, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரரும், சதம் அடித்த வீரரும் என்ற ஒருசேரப் பெருமை பெற்றவர் சுனில் நரைன் மட்டும்தான். வேறு எந்த ஆல்ரவுண்டரும் சதம் அடித்திருந்தால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை, 5 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் சதம் அடித்தது இல்லை. இந்த இரு அம்சங்களை நிகழ்த்தியவர் நரைன் மட்டும்தான். 2வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் சேர்ந்து நரைன் 85 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய பார்ட்னர்ஷிப்பாகும். ரகுவன்ஷி(30) ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக பேட் செய்த நரைன் 29 பந்துகளில் அரைசதம் அடித்து, அடுத்த 20 பந்துகளில் அடுத்த 50 ரன்கள் சேர்த்து 49 பந்துகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். நரைன் தனது ரன் கணக்கில் 6 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சஹல், அஸ்வினை பந்துகளைப் பறக்க விட்ட நரைன் நரைன் தனது 109 ரன்களில் 67 ரன்கள் சஹல், அஸ்வின் ஓவர்களில் அடித்ததாகும். அஸ்வின்,சஹல் ஓவரை வெளுத்து வாங்கிய நரைன், சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். அஸ்வின் வீசிய ஓவரில் 17 பந்துகளைச் சந்தித்த நரைன் 34 ரன்களையும், சஹல் வீசிய ஓவரில் 11 பந்துகளில் 33 ரன்களையும் விளாசி, இருவரையும் ஓடவிட்டார். நரைன் கடைசியாக தான் சந்தித்த 14 பந்துகளில் மட்டும் 35 ரன்கள் சேர்த்தார். அஸ்வின், சஹல் இருவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். அஸ்வினைப் பொருத்தவரை இந்த சீசன் அவருக்கு தொடக்கம் முதலே மோசமாக இருந்துவருகிறது. மற்றவகையில் கொல்கத்தா அணியில் பேட்டர்கள் அதிகம் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ்(11), ரஸல்(13), வெங்கடேஷ்(8), பில் சல்ட்(10) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களும் கேமியோ ஆடி இருந்தால் ஸ்கோர் 250 ரன்களைக் கடந்திருக்கும். ரிங்கு சிங் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 9 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா கோட்டைவிட்டது எங்கே? கொல்கத்தா அணியின் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்து பந்துவீசியதால் ராஜஸ்தான் அணி சீராக விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால்(19), சாம்ஸன்(12), ஜூரைல்(2), அஸ்வின(8), பராக்34) என சீராக விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் 97 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. நரைன், வருண் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் ராஜஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்து, விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். இதனால் வெற்றி கொல்கத்தா பக்கம் என்றுதான் அனைவரும் நம்பினர். ஆனால், 15வது ஓவருக்குப்பின் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு படுமோசமாக மாறியது. குறிப்பாக 15வது ஓவரில் இருந்து ராஜஸ்தான் அணி சராசரியாக 17 ரன்களுக்குள் குறைவில்லாமல் சேர்த்தது, அந்தஅளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு மோசமாக இருந்தது. தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசிய நரைன், வருண் கடைசி ஸ்பெல்லில் பவுண்டரி, சிஸ்கர் வழங்கினார். மிட்ஷெல் ஸ்டார் கடைசி ஓவரில் பைஸ் உள்பட 18 ரன்கள், ராணவின் கடைசி ஓவர் என கொல்கத்தாவின் பதற்றத்தை பட்லர் பயன்படுத்தினார். https://www.bbc.com/tamil/articles/c4n1zvgd4vko2 points
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
இதெல்லாம் அவர்களின் பொழுது போக்கு நிகழ்வுகள் என்று விட்டு போக வேண்டியது தான்..அங்கு நடக்கும் அனேக சந்திப்புக்களை பேஸ்புக் போராளிகள் அவ்வப்போது போடும் போது பார்த்துட்டும் பார்க்காதது போலத் தானே கடந்து போக வேண்டி இருக்கிறது..கலந்துரையாடல் அது ஆக்க பூர்வமானதாக எண்டால்....அதன் பின் ஒரு சிற்றுண்டி பரிமாறல் இந்த கலந்துரையாடலின் பின் கூழ் பார்ட்டி.ஆ...இப்படியே கதைச்சு கதைச்சே காலத்தை கடத்துகிறார்களே தவிர அந்தப் புது இலக்கிய வாதிகள் சார்பாக பாதிக்கபட்ட இன்னும் அன்றாடம் சீவிப்பதற்பே இயலாமலிருக்கும் மக்களுக்கு ஏதாவது சிறு பங்களிப்பு..சொல்லிப் பாருங்கள்..அடுத்த மாதம் இதுவும் ஒரு சந்திபாக வைப்பார்கள்...பாவங்கள் விட்டு விடுவோம் புது இலக்கியவாதிகள் பேசிக் கொண்டே இருக்கட்டும்..2 points
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
புலி எதிர்ப்பு வாந்தி.. பிரபாகரன் வசைபாடல் எல்லாம் இப்ப புலம்பெயர் சும்மா இருப்பவர்கள்.. இலக்கியமாகி விட்டன. இவை 2009 மே முன் வேற மொழி பேசிச்சினம்.. மாற்றுக்கருத்து அரசியல்.. அதுக்கு என்னாச்சுப்பா. அதுவும் புலிகளோடு அழிஞ்சு போச்சுப் போல. இப்ப புலி எதிர்ப்பை இலக்கியமாக்கிட்டாங்கள்... வசதியாக தாம் சில கூடி வசைபாடி மகிழ.2 points
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
இன்று முதல் புதிய விசா முறை அமுல் Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 09:48 AM இன்று புதன்கிழமை (17) புதிய விசா முறை மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது. "புதிய விசா நடைமுறைகள், அதற்கான கட்டணங்கள், பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க முடியுமான காலப் பிரிவு என்பன இலக்கம் 2360/24 மற்றும் 2023.11.27 ஆம் திகதி விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படும் இணைய வழிமுறையான E-Visa முறைமை GBS Technology Service & IVS Global நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதோடு அந்த இணையத்தளத்தின் தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது. www.srilankaevisa.lk வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவரும் வகையில், புதிய இணைய வழிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் விரைவான மற்றும் திறமையான விசா விண்ணப்ப செயல்முறையை வழங்க உத்தேசித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/1812691 point
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர். குறுந்தூர பயணங்களுக்கு வாகன சாரதிகள் அதிக பணம் அறவிடுதல், உடமைகளைக் கொள்ளையடித்தல் சேவைக் கட்டணங்கள் மற்றும் விலைகளை அதிகரித்தல் போன்ற முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்கின்றனர். அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பில் குறித்த பயணி காணொளி மூலமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்ற மீண்டும் ஒரு இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார். இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கை மீளெழுவதற்கான பிரதான இலக்கு அண்ணியசெலாவணியை ஈட்டுவதாகும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகமான வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்ற நிலையில், இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும், சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் எமது நாட்டின் வருமானத்தையும் பாதிக்கின்றது. அத்துடன், இப்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது சுற்றுலா அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன. சுற்றுலாவுக்காக நமது நாட்டை நோக்கி வருகின்றவர்கள், எமது கலாசாரத்தையும், உணவு பழக்க வழக்கங்களையும், எமது பண்பாடையும் கற்றுக் கொள்ளவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் வருகின்றார்களேத் தவிர இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை அல்ல... https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail1 point
-
"போதும் இந்த நரகம்..!"
1 point"போதும் இந்த நரகம்..!" குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று குடியை போற்றுகிறது. அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமும் புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீ யும் மன்னே; பெரிய கட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று பெண் புலவரான ஒளவையார் புகழ்ந்து கூறுகிறார். அப்படி என்றால் "போதும் இந்த நரகம்..!" என, என் மனைவி என்னை திட்டுவது எனக்கு புரியவில்லை? ஒருவேளை அவள் ஒளவையார் ஆக இருந்து இருந்தால், அவளும் என்னுடன் சேர்ந்து குடிப்பாளோ, பட்டிணப்பாலை [106-110] சில அடிகளும் சேர ஒரு கற்பனை, எங்கள் அத்தியடி வீட்டின், முன் விறாந்தையில் இருந்த குந்தில் சாய்ந்த படி வந்தது. "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" அதாவது,தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந் திருந்த பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால், தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு, மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என ஒரு கூத்தே கனவில் வந்தது. கண்ணை திறந்து பார்த்தேன், அருகில் மனைவி, ஒரு திருக்குறள் ஒன்றை தூக்கி என் கண்முன் எறிந்தார். இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதே . சத்தப் போட்டு “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று பாடி காட்டினார். உறங்கினவர் இறந்த வரை விட வேறு பட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே என்று அவர் என்னை திட்டுவது எனக்கு அப்பத்தான் மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. என்னை எதுக்கும் தொட்டுப் பார்த்தேன். நான் இன்னும் சாகவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டேன். எனக்கு வள்ளுவரின் மேல் கோபம் தான் வந்தது. இவருக்கு ஏன் இந்த வேலை ? நேரம் போக ஒரே பசி, மனைவி அறை கதவை மூடிக்கொண்டு உறங்கி விட்டாள். இது மார்கழி முன்பனி காலம். குளிரும் என்னை வாட்ட தொடங்கிற்று. மெல்ல அடுப்படி கதவை திறந்து உள்ளே பார்த்தேன். அடுப்பு வெறிச்சோடி இருந்தது. சட்டி , பானை எல்லாம் கவுண்டு இருந்தன. என்ன செய்வது என்று புரியவில்லை. கிணற்றடிக்கு போய் , வாளியால் தண்ணீர் அள்ளி வயிற்றை கொஞ்சம் நிரப்பினேன். பின், எம் வீட்டுக்கு முன் நின்ற பாண்டி மாங்காயை தட்டி வீழ்த்தி, அதை கடித்துக்கொண்டு, அதே குந்தில், போர்க்கவும் துணி இன்றி கூனிக்குறுகி படுத்துவிட்டேன். "கதிரவன் காலில் ஒளி வீச, காற்று கொஞ்சம் முகத்தை வருட, வயிறு மெல்ல பசி எழுப்ப குந்தில் இருந்து எட்டி பார்த்தேன்!" அறைக்கதவு திறந்து இருந்தது, ஆனால் அவளைக் அங்கு காணவில்லை. அடுப்படி இன்னும் அவள் திறக்கவில்லை. ஆனால் கிணற்றடியில் குளித்த அடையாளம் கண்டேன். அப்படி என்றால் எங்கே ? அப்பத்தான் ஞாபகம் வந்தது, இன்று சனிக்கிழமை. அவள் சனிபகவானை எண்ணி விரதம் இருப்பது வழமை. பொதுவாக காலை எனக்கு சமைத்து தந்து விட்டு தான் ஆலயம் போவாள். இன்று எனோ நேற்றைய கோபம் போல்! நான் தினம் தினம் குடிப்பவன் அல்ல, கொண்டாடம்களில் மட்டும், அல்லது பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் நல்லாக குடித்து, என் கவலை தீர ஆடுவேன். அதில் என்ன தவறு. என் அறிவுக்கு புரியவில்லை, தேன் மதுவை விடவும் காட்டமான சுரா, சோம பானங்களை தயாரித்து அந்த காலத்திலேயே ஒரு கிளர்ச்சியூட்டியவர்கள் வேதாதி ரிஷிகள் ! அது போகட்டும், ”ஊக்கமளிப்பதும், உற்சாகமளிப்பதுமான இந்த சோமத்தை இந்திரனுக்கு அளியுங்கள்” என அன்று அறை கூவல் விட்டதையும் காண்கிறோம். ”சோமனே, நீ பல பாண்டங்களில் வைக்கப்பட்டிருக்கிறாய், பகல் வேள்வியில் பாலோடும், மாலை வேள்வியில் தயிரோடும் கலக்கப்படுகிறாய், நீ தீரனுக்கு மிக்க மதமளிக்கும் பானமாயிருக்கிறாய்”என்ற வரி எனக்கு நல்லாகவே பிடிக்கும். கொண்டாட்டங்களில் நான் முன்னின்று தீரனாய் இருப்பதும் அதனாலேயே! இது எல்லாம் எங்கே மனைவிக்கு புரியப் போகிறது? "போதை கொள்ளும் அழகை ரசிக்க பேதை உன்னை தினம் நாடி கோதை புனைந்த கூந்தல் வருட கீதை சொல்லி விரதம் இருப்பவளே!" "காதை பொத்தி கண்ணை மூடி கதை கதையாய் புராணம் சொல்லி புதைத்து விடுவாய் ஆசை எல்லாம் பதைத்த உள்ளம் தேடுதே போத்தலை!" போதும் இந்த நரகமென போத்தலில் வாழ்வு நான் காண, போதும் இந்த நரகமென ஆலயம் போகிறவளே, கொஞ்சம் நில் ! யாரால் யாருக்கு நரகம் ? ஏன் சிந்திக்க மாட்டாய்! இருவரின் வாழ்வும் புரிந்துணர்வு இல்லாமல் அழிகிறதே ! நரகம் நாடி போகிறதே!! இந்த உலகில் வாழ்வதே எவ்வளவு சிக்கலாக இருக்கிறது ? எத்தனை பிரச்சனைகள் ? ஒரு நாள் போல் இன்னொரு நாள் இல்லை. ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கிறது... இன்னொரு நாள் துன்பம் வருகிறது. இந்த உலக வாழ்வே இப்படி என்றால் நரக வாழ்வு எப்படி இருக்கும் ? "கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும், நள்ளேன் என் மனைவியோடு அல்லால்; நரகம் புகினும், எள்ளேன் அவள் அன்பாலே இருக்கப் பெறின்; தேவியே உள்ளேன் பிற மகளீர் உன்னை அல்லாது; என் உத்தமியே !" தேவியே, இந்திரன், திருமால், பிரமன் வாழ்வு எனக்கு வேண்டாம். என் குடியே (குடும்பமே) கெட்டாலும், வேறு ஒருவளுடன் உறவு கொள்ள மாட்டேன். என் மனவியைத் தவிர. நரக வாழ்வே கிடைக்கும் என்றாலும், அதற்காக வருத்தப் படமாட்டேன், அவள் அன்பு இருக்கப் பெற்றால். தேவியே, உன்னைத் தவிர, வேறு மங்கையரை நினைக்க மாட்டேன், எ ன் உத்தமியே என கத்த வேண்டும் போல் இருந்தது, அவள் காதில் விழும் என்றால் ? அப்பொழுது தான் அவள் ஆலயத்தால் வந்துகொண்டு இருந்தாள்! 'சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று நம்புபவள் என் மனைவி. சஷ்டி திதியிலே விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று ஒரு பிரசாங்கமே செய்வாள். பாவங்கள்! இவளிடம் கேட்கும் நண்பர்கள்? இப்படி எத்தனையோ விரதங்கள். சொல்லுவாள். ஆனால் நான் 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பதைத்தான், இப்படி ஏமாற்றி பிழைக்கிறார்கள் என்பேன். சட்டியும் அகப்பையும் சேர்ந்தால் தானே அதில் செய்ததை [விளைந்ததை] வெளியே எடுக்கலாம் என்பேன். இவன் குடித்து விட்டு உளறுகிறான் என, "போதும் இந்த நரகம்..!" என்பது போல, என்னை விட்டு போய் விடுவார்கள்? ஆமாம். எனக்கும் போதும் இந்த நரகம்..!, என்றவாறு ஒரு உயிரியல் புத்தகத்தை , அவள் வரும் காலடியில் விழும்படி தூக்கி எறிந்தேன். எனக்கு வேறு இனி இருப்பதாக தெரியவில்லை. புத்தகத்தை காலடியில் எறிவது பாவம் என்று குனிந்து எடுத்தவள், அவள் எடுத்த பக்கத்தின் படத்தினதும் அதன் விளக்கத்தையும் பார்த்தவுடன் , அப்படியே நின்று விட்டாள். எனக்கு ஒரே ஆச்சரியம்.. எட்டிப் பார்த்தேன். வெட்கத்தில் தலை குனிந்தபடி, காலால் எதோ தரையில் கிறுக்கினபடி, போதும் இந்த நரகம்..! என , அர்ச்சனை தட்டை , குந்துக்கு அருகில் உள்ள தூண் அருகில் வைத்துவிட்டு என்னையே கண்கலங்கி பார்ப்பதை கண்டேன்! "யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே." என்னுடைய தாயும் அவளுடைய தாயும் யார் யாரோ? என் தந்தையும் அவள் தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் அவளும் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல, அன்புடைய எம் நெஞ்சம் தாமாக முதல் முதல் ஒன்றுபட்டனவே! இதுவரை நிலவிய இருவரின் நரகமும் எங்கே என்று இருவருக்கும் தெரியவில்லை? "போதும் இந்த நரகம்..!" இருவரின் வாயும் ஒரே நேரம் ஒலித்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நிச்சயமாக இல்லை அண்ணா. அரசாங்கமே கொள்ளயடிக்கும் போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அதனால் தான் விலை கூட என்றாலும் நான் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி விற்கும் கடைகளை நாடுவது. நாங்கள் என்னதான் வேட்டியைக் கட்டி வெறுங்காலுடன் போனாலும் எம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஏற்கனவே பலர் கூறியது போல் கடை வைத்திருக்கும் நண்பன் கூறியது …..,. எமது தோல், வாசனைத் திரவியங்கள், கைத் தொலைபேசி & Cover, நகைகள், கைப்பைகள் ( உள்ளூர் கைப்பைகள் ஏதாவது ஓரிடத்தில் தேய்ந்து கறுப்பாக ஏதாவது ஒட்டி அல்லது சிப் இற்கு அண்மையாக சிறிதளவு தூசி படித்து இருக்கும்) , உடுப்புகளின் தன்மை ( சாரமோ வேட்டியோ புதிதாக இருக்கும்) அதேபோல் காலணிகள் ( பாட்டா செருப்பு என்றாலும் புதிதாக இருக்கும்) மிக முக்கியம் Self hygiene சுய சுத்தம். இப்படி பல….1 point
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
ஓம் மீரா கணக்கில் பிழை விட்டுள்ளேன். விசிட் வீசாவை தவிர மீதி எல்லாம் கொஞ்சம் ஓவராய்தான் தெரியுது.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாட்டு அரசியல் திரியில் சீமான் அரசியலை மட்டும் தாக்கும் போது சீமான் ஆதரவாளர் வருவது நியாயமானதே:1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சீமான் பச்சோந்தியென்றால்....? திராவிட வைரம் கருணாநிதி எப்படி? என்ன மாதிரி?? படங்களுடன் செய்திகளுடன் ஆதாரங்களை இணைக்கவா? இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் அதே ஆயுதத்தை தூக்குவேன். இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் நீங்கள் தூக்கும் அதே ஆயுதத்தை தூக்குவேன்.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வழக்கம் போல மாட்டை கொண்டு வந்து கட்டியாச்சு மரத்தை பற்றி கதைக்கும் போது எவர் சொன்னார் சீர்கேடு இல்லாத அக்மார்க் சுத்தமான தேர்தல் நடக்கும் என்று? ஆனால் உப்புடி சுத்துமாத்து நடக்கும் தேர்தலில் தான் சீமான் ஒவ்வொரு முறையும் நின்று டெபாசிட் காலியான பின் கதறுகின்றார் சேற்றைக் கண்டால் பசு விலகிப் போகும் பன்றி விலகாது சீமான் மிச்சப் பேர் மாதிரி மிச்ச அரசியல் கட்சிகள் மாதிரி பசு அல்ல. ஏனென்றால் அவருக்கும் பசிக்கும்ல1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்படியென்றால் இந்திய தேர்தலில் எந்தவொரு சீர்கேடுகளும் இல்லாத சுத்த ஜனநாயக தேர்தல் முறை என சொல்கின்றீர்கள் அப்படித்தானே?? 😁1 point
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஈழத்தமிழரின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதிகளின் போராட்டம் அல்லது தீவிரவாதிகளின் போராட்டம் என்றே வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கிணைய வடகிழக்கு தமிழர் பிரதேசங்கள் யுத்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வெளிநாட்டு உல்லாச பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்களா? சில வேளை சுற்றுலா பயணிகளையும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கு செல்ல அனுமதித்திருந்தால் படங்களும் காணொளிகளும் வெளியுலகிற்கு வந்திருக்கலாம். வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மற்றும் வடபகுதிகளுக்கு எந்தவொரு அசுமாத்தமும் தெரியவில்லை என்பது வேறு விடயம்.1 point
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
என்ன சொல்ல வருகிறீர்கள? நான் அரைகுறை வாசிப்பாளன் என்கிறீர்கள். அப்படித்தானே? உங்கள் விருப்பம்போலவே ஆகட்டும் 👍 தொடர்ந்தும் முட்டையில் மயிர் பிடுங்க வாழ்த்துக்கள் 😁1 point
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
@goshan_che ஊரில் நின்ற போது... எப்பிடி இருந்த கால் இப்பிடியாகி விட்டது @satan. 😂 🤣1 point
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
வெளிநாட்டுகாரரை எப்படித் தான் மணந்து பிடிக்கிறார்களோ தெரியாது. ஆனாலும் கண்டு பிடித்து விடுகிறார்கள். நான் சொல்வது ஒரு செல்போன் வைத்திருந்தால் வெளிநாட்டுக்காரன் இரண்டு போன் வைத்திருந்தால் உள்நாட்டுக்காரன். சிறி பாஞ்ச் எப்படி இருக்கிறார்? ஏன் யாழைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்.1 point
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
ஈழப்பிரியன்... சுகாதார அமைச்சில் இருந்து 679 வாகனங்கள் காணாமல் போயிருக்கும் போது ஆடு காணாமல் போவது சின்ன விசயம் போலுள்ளது. இனி மற்ற அமைச்சுக்களிலும் கணக்கு எடுத்தால்.... குத்து விளக்கில்தான் கனக்குப் பார்க்க வேண்டும்.ஏற்கெனவே... கோத்தா காலத்திலும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல வாகனங்கள் காணாமல் போனதாக செய்தி வந்திருந்தது.1 point
-
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!
கள்ளன்... பேராசை பிடித்து, அம்பிட்டுப் போனார். பிடிபடாமல் விட்டிருந்தால்... அவ்வளவு ஆடுகளையும் கொழும்புக்கு கொண்டு பொய்ய கொத்து ரொட்டி போட்டு விற்றிருப்பாங்கள்.1 point
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இலங்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் முதல்வேலை காணொளியாக எடுத்துடணும். ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் யாராவது தெரியாதவர்கள் வந்து கதைக்க தொடங்கினால் உடனேயே காணொளி எடுத்துப் போடு என்று மனைவிக்கு சொல்லி வைத்துள்ளேன். இதுவரை எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா🙏🥰.......................1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்த கருத்து கணிப்பில் இருந்தே நாம் தமிழர் கட்சிக்கு 4 இலிருந்து 12 வரை என்று இருக்கிறது. அப்படியானால் சராசரியாக 7 இலிருந்து 9 வரை வர வாய்ப்புள்ளதே.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
7/8 இந்த சதவீதம் மீதியை யூன் 4ம் திகதி இதே திரியில் விவாதிப்போம்......................2021சட்ட மன்ற தேர்தலில் பெற்ற வாக்கை தக்க வைத்து கொள்ளுவிம் எனக்கு நங்கு தெரிந்த விமர்சகர் அவர் கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சி பற்றி கணித்த அனைத்தும் சரியா வந்தது....................அவர் பலரை வைத்து ஒவ்வொரு தொகுதி உண்மை கள நிலவரங்களை அறியக் கூடியவர்........................ நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்களின் ஓட்டுத் தான் அதிகம் அதோட அவர்களின் பெற்றோர்களும் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவினம்.......................அது இந்த முறையும் நடக்கும்..........................................................நாம் தமிழருக்கு சைலஸ் ஓட்டு🙏🙏🙏🥰....................................................................... அதெல்லாம் உந்த போலி தேர்தல் கணிப்பென்ற பெயரில் கருத்து தினிப்பில் வராது..................................1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கருத்துக் கணிப்பின்படி ஒருசில இடங்களைத் தவிர அதிமுக பிஜேபி யைவிட முன்னணியில் உள்ளது. நாம் தமிழர் கட்சியால் பிஜேபி யின் வாக்குகளைக் கூடக் கவர முடியவில்லை. மொத்தமாக நாதக 4 முதல் 5 வீதமான வாக்குகளையே பெறும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் வாக்கு இயந்திரத்தைக் குறை கூறுவதிலேயே நிற்கிறீர்கள்.1 point
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஒரு மெளன செய்தி ( இன்று படித்ததில் பிடித்தத்து. ) 100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்மா பரிமாறப்பட்டது. அந்த 100 பேரில் 80 பேர் தினமும் உப்மாவுக்கு பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்மா சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள 80 பேர் உப்மாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர். இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் விடுதி காப்பாளர் வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது. இதன்படி எந்த டிபன் அதிக ஓட்டு வாங்குகிறதோ அந்த டிபன் அன்றே சமைக்கப்படும். உப்மா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர். மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 - மசாலா தோசை 16 - ஆலு பரோட்டா & தாஹி 14 - ரொட்டி & துணை 12 - ரொட்டி & வெண்ணெய் 10 - நூடுல்ஸ் 10 - இட்லி சாம்பார் எனவே, வாக்குப்பதிவு முடிவுகளின்படி, உப்மா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது. பாடம்: 80% மக்கள் சுயநலவாதிகளாகவும், பிரிந்து சிதறியவர்களாகவும் இருக்கும் வரை, 20% பேர் நம்மை ஆள்வார்கள்.1 point
-
கொஞ்சம் சிரிக்க ....
1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point
-
துபாய்: வெள்ள நீரில் மிதந்த விமான நிலையம்
சோதனைகளும் துன்பங்களும் எங்குதான் இல்லை.......இவர்களது துன்பங்களை பார்க்கும்போது என்னுடைய கஷ்டமெல்லாம் வெறும் தூசு போலத் தெரியுது.........! 😴 வன்னியன் சார் கவனம்...........!1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் மற்றய ஆட்களைவிட உடம்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.வெற்றி அடைவீர்கள் உறவே 👍1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣1 point- எனது அறிமுகம்
1 pointஅகவை என்பது ஒரு எண்ணிக்கை அவ்வளவுதான்! முக்கியம் வேண்டியது ஆரோக்கியமும் வலிமையையும் நல்ல சிந்தனையும் கருத்தாடலும் அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே ஆகவே நான் மௌனமாகிறேன்1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு முன்னர் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி யாழ்களத்தில் நடக்கும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😀 @suvy, @ஏராளன், @Eppothum Thamizhan, @MEERA, @தமிழ் சிறி, @kalyani, @சுவைப்பிரியன், @வாதவூரான், @வாத்தியார், @nunavilan, @பிரபா, @Ahasthiyan, @புலவர், @நீர்வேலியான், @நந்தன், @முதல்வன், @nilmini, @ஈழப்பிரியன், @நிலாமதி, @குமாரசாமி, @goshan_che, @கறுப்பி, @Kandiah571 point- தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அட பேராண்டி இன்னுமா மர உச்சியில் நிக்கிறீங்க லண்டனில் எட்டு மணியாகுது பிடிவாதத்தை விட்டு விட்டு இறங்கி வா ராசா சொன்னா கேட்கணும் 😀1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மேற்குலகு என்பவர்கள் யார்? அவர்கள் இதுவரை எங்களுக்காகச் செய்தது என்ன? 1. 80 களில் இருந்து எம்மைச் சோசலிசவாதிகள் என்று அழைத்து எமது போராட்டத்தை அழிக்கத் துணைபோனவர்கள். 2. எமக்கெதிரான இனக்கொலைக்கு 80 களின் ஆரம்பத்திலிருந்தே ஆயுதமும், பயிற்சியும், ஆலோசனையும், கூலிப்படைகளும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள். 3. உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாம் மேற்கொண்ட உயிர்ப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று அழைத்து உலகெங்கும் எம்மை முடக்கியவர்கள். 4. 2009 வரை இனக்கொலைக்கான சகல உதவிகளையும் செய்து, தமிழர்களின் போராட்டம் முற்றான அழிவையும், தமிழ் மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்படுவதையும் உறுதிப்படுத்தி, தமிழர்களின் இறையாண்மையினை தமது பிராந்திய நலன்களுக்காகவும், சர்வதேச நலன்களுக்காகவும் விருப்பத்துடனேயே எப்பம் விட்டவர்கள். 5. இனக்கொலை முடிவிற்கு வந்தபின்னரும் தமது நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக இனக்கொலையினையும் போர்க்குற்றங்களையும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதைத் தடுத்தும் அல்லது அவற்றை மிகவும் பலவீனமாக்கி, ஈற்றில் நீர்த்துப் போகச் செய்து போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள். 6. இன்றுவரை எமக்கு நடக்கும் அநீதிகளும், எம்மீதான அடக்குமுறையும், எம்மீதான திட்டமிட்ட இனழிப்பும் நடப்பது நன்கு தெரிந்தும், அதனை அமோதித்து வருபவர்கள். 7. எம்மைப்போன்றே விடுதலைக்காகப் போரிடும் இனங்கள் மீதான அடக்குமுறைகளை, படுகொலைகளை ஆதரித்து, உதவிசெய்து, சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி வருபவர்கள். ஆக, இவர்களிடமிருந்துதான் நாம் நற்சான்றிதழ் பெறக் காத்திருக்கிறோம். நற்சான்றிதழ் கிடைத்தவுடன், எமக்கான விடிவும், சுதந்திரமும், எமது தாயகத்தின் விடுதலையும் எமக்குத் தங்கத் தட்டில் கொண்டுவந்து தரப்படும். பிணந்திண்ணிப் பேய்கள். நீங்கள் எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை அப்படியே எழுதுங்கள், மேற்குலகிடம் இறைஞ்சும் ஜனநாயக மேதாவிகளின் பிதற்றல்களை ஓரத்தில் போட்டுவிட்டு எழுதுங்கள். எமக்கான விடுதலையும், மீட்சியும் எமது கரங்களில் இருந்தே வரவேண்டும். மேற்குலகு ஒன்றும் இறைவர்கள் அல்ல, மிக மோசமான பிணந்திண்ணிக் கழுகுகள். மேற்குலக அக்கிரமப் பிசாசுகளின் விருப்பங்களும், எண்ணங்களும், நோக்கங்களுமே அவர்களின் பணத்தினால் நடத்தப்படும் ஊடகங்களில் வெளிவருகின்றன. சர்வதேச ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே தமது படுகொலைகளை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆகவே, இவர்களின் ஊடகங்களில் நாம் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டால், நாம் அவர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிரானவர்கள் என்று பொருள். ஆகவே, தொடர்ந்து நடவுங்கள். மேற்குலக ஜனநாயகப் பிணந்திண்ணிகளின் அலோசனைகளை அப்படியே தனது பத்திரிகைக் கட்டுரையில் வரையும், எமது வாழ்தலுக்கான போராட்டம்பற்றிய எதுவித தெளிவும் அற்ற ஒருவன் எழுதும் கருத்துக்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.1 point- தேனும் விஷமும்
1 point🙏... மிக்க நன்றி, கோஷான். இங்கு நீங்கள் பலர் மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள். சிலருக்கு நகைச்சுவை நன்றாக வருகின்றது. ஜஸ்டின் போன்ற சிலர் ஒரு கலைக்களஞ்சியம் அளவிற்கு தகவல்களை அறிந்து வைத்திருக்கின்றனர். கவிஞர்கள், ஓவியர்கள், செய்தியாளர்கள், சிந்தனையாளர்கள்..........எல்லாவற்றிற்கும் மேலாக பலர் நட்புடன் ஆதரவளிப்பவர்கள்... இந்த வெள்ளியிலிருந்து அடுத்த மூன்று வாரங்களுக்கு களத்திற்கு நான் வருவது குறைவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஊருக்கு போகின்றேன். அதன் பின்னர், விட்ட இடத்திலிருந்து ஒடி உள்ளே வந்து விடுவேன்....😀1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
உண்மையிலேயே மிகவும் அருமையான மனிதர், எனக்கும் instructorஆக இருந்தவர், நீங்களும் நானும் ஒரே காலத்தில் அங்கே இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இங்கு அவர் வேறு விரிவுரையாளர்களுடன் வந்தபோது ஒன்று கூடல் ஒன்று வைத்தோம்1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 point- ஒரு கொய்யா மரத்தின் விவரம்
1 pointஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.1 point- தாயின்றி நாமில்லை.!
1 pointசர்வதேச மகளீர் தினம்(08.03.2024) அதற்காக எழுதிய கவிதையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றிகள். தாயின்றி நாமில்லை.! ************************ பூமித்தாய் என்று சொல்லும் புவிகூடத்தாய் தானே-வானில் பொட்டதுபோல் சுற்றிவரும் நிலவுகூட பெண்தானே நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும் கடல் அவளும் தாய் தானே நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும் இல்லை என்பேன் சரிதானே. சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி சித்தப்பா பிள்ளைகளா? காவேரி,குமரி,கோதவரி,நர்மதா. பெரியப்பா பிள்ளைகளா? இல்லை இல்லை இயற்கை ஈண்றெடுத்த நதித் தாய்கள் இவைகளும் பெண் பெயாரால் உயிர்த்தார்கள். பூமிதன்னில் பெண்ணினமே இல்லையென்றால் போட்டியிடும் ஆண்களெங்கே? பொறுமையெங்கே? ஆணினம்தான் அகிலத்தில் தனித்திருந்தால் அன்பு எங்கே? காதல் எங்கே? இனிமை எங்கே? கற்பனைக்கு பெண் இனமே இல்லையென்றால் கவிஞரெங்கே?கலைஞர் எங்கே? கலைதானெங்கே? கர்ப்பத்தில் எமைத் தாங்கி வளர்க்காவிட்டால் கல்வியெங்கே? கருணையெங்கே? காசினிதானெங்கே? பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் புதுமையெங்கே,புலமையெங்கே புரட்சியெங்கே? மண்ணகமும் வாழ்வதற்காய் படைத்து தந்த மாதவத் தாய்யினத்தை மதித்து வாழ்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.1 point- வாழ்ந்து பார்க்க வேண்டும்
1 point27.02.2024, அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்த கிளவ்டியாவுக்கு (65) ஆச்சரியமாக இருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் நின்றனர். அதிர்ந்து போன அவளுக்கு இமைகளை மூடித் திறக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அவளது கைகளில் விலங்கை மாட்டிவிட்டார்கள். கிளவ்டியா பெர்னாடி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள். கடந்த இருபது வருடங்களாக யேர்மனியில்தான் வாழ்கிறாள். கிழக்கு - மேற்கு யேர்மனியைப் பிரித்திருந்த சுவர் உடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில், 1962 இல் எந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிழக்கு யேர்மனியில் இருந்து மேற்கு யேர்மனிக்கு தப்பிக்க முயன்றார்களோ அதற்கு அருகாமையில் உள்ள செபஸ்ரியான் வீதியில் இருக்கும் குடியிருப்பில் ஐந்தாவது மாடிதான் அவளது இருப்பிடம். அவளுக்குத் துணையாக இருந்தது அவளதுபெரிய வெள்ளை நிறமான ‘மலைக்கா’ என்ற நாய் மட்டுமே! கிளவ்டியா, எல்லோருடனும் மிக அன்பாகப் பழகுவாள். புத்தக வாசிப்புகளில் கலந்து கொள்வாள். அவள் நடன வகுப்பும் நடத்திக் கொண்டிருந்தாள். சிறார்களுக்கு படிப்பும் சொல்லித் தந்தாள். யேர்மனியில் மட்டுமல்ல பிறேஸிலில் நடைபெறும் கார்னிவெல், களியாட்ட விழாக்களில் எல்லாம் ஆர்வத்துடன் பங்கேற்பாள். தான் பங்குபற்றும் நிகழ்வுகளின் படங்களை மறக்காமல் முகநூலிலும் பதிந்து நண்பர்கள் தெரிந்தவர்களுடன் மகிழ்ந்திருப்பாள். “எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள்?” “உங்களைக் கைது செய்யிறதுக்கு மட்டுமல்ல, உங்களின்ரை வீட்டைச் சோதனை செய்யிறதுக்கும் எங்களுக்கு அரச சட்டத்தரணி அனுமதி தந்திருக்கிறார்” கிளவ்டியாவின் புருவம் மேல் ஏறி கீழ் இறங்கியது. “நான் நினைக்கிறன், நீங்கள் விலாசம் மாறி வந்திருக்கிறீங்கள் எண்டு” “இல்லையே. செபஸ்ரியான் வீதி, இலக்கம் 73, ஐந்தாம் மாடி, கிளவ்டியா பெர்னாடி எல்லாமே சரியாகத்தானே இருக்கிறது” கிளவ்டியாவை, பொலீஸ் வாகனத்தில் ஏற்றும் போது, அவளது கையில் விலங்கு மாட்டிய பொலீஸ் அதிகாரி அவளிடம் கேட்டார், “ உங்களுக்கு டேனிலா கிளெட்டைத் தெரியுமோ? முப்பது வருடங்களாக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று. இடதுசாரித் தீவிரக் கொள்கையைக் கொண்ட செம்படை அமைப்பு (Red Army Faction) யேர்மனிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. மூன்று தசாப்தங்களாக, கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் என செம்படையின் செயற்பாடுகள் தொடர்ந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக 1977இன் பிற்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தை யேர்மனியின் 'இலையுதிர் காலம்' என்று யேர்மனியில் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். இந்தச் செம்படை அமைப்பில்தான் டேனிலா கிளெட் இருந்தாள். அவளது தாயார் ஒரு பல் வைத்தியர். போதுமான வருமானம். நிறைந்த வாழ்க்கை. டேனிலா கேட்பவை எல்லாம் வீட்டில் கிடைத்தன. ஆனாலும் அவள் விரும்பியது ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை - அது எல்லோருக்குமான ‘சம உரிமை’. அதற்காகத்தான் படிப்பு, குடும்பம், ஆடம்பரமான வாழ்க்கை எல்லாவற்றையும் விட்டு விட்டு அவள் தன்னை செம்படையில் இணைத்துக் கொண்டாள். 20 ஏப்ரல் 1998 அன்று, ஜெர்மனிய மொழியில் தட்டச்சு செய்யப்பட்ட எட்டுப் பக்கங்கள் அடங்கிய செய்தி ஒன்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைநகல் மூலம் வந்திருந்தது. அதில் செம்படை கலைக்கப்பட்டுவிட்டதாக RAF இன் இலச்சினையுடன் கையொப்பமும் இடப்பட்டிருந்தது. அதன் பிறகு யேர்மனி, தனது இளவேனிற் காலத்தை அனுபவிக்க ஆரம்பித்தது. ஜூலை 30, 1999இல் ஒரு கோடை காலத்தில் செம்படையின் சில நடவடிக்கைகள், அவர்கள் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறார்கள் என்று அடையாளம் காட்டின. அந்த வருடத்தில், டியூஸ்பேர்க் நகரத்தில் நடந்த ஒரு கொள்ளையில் செம்படை உறுப்பினர்களான, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட், ஆகிய மூன்று பேரும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணம் கொள்ளை இடப்பட்டதாக பொலீஸ் அறிக்கை வெளிவந்தது. யேர்மனியப் பொலீஸாரால் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்கவும் முடியவில்லை, அந்த மூன்று பேர்களையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அந்தக் கொள்ளைக்குப் பிறகு, நீண்ட காலமாக எந்தவிதமான சம்பவங்களிலும் RAF அமைப்பின் உறுப்பினர்களாக இருந்த எவரும் எந்தச் செயலிலும் ஈடுபட்டதாகத் தகவல்களும் வெளிவரவில்லை. 2016, மே மாதம் 25ந்திகதி, மீண்டும் ஒரு பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தைத் தாக்கி 400,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக வாழும் செம்படை உறுப்பினர்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் இந்த முறையிலான கொள்ளைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவானது. இந்தக் கொள்ளைகளை நிறுத்துவதற்காக, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட் ஆகிய மூவரைப் பற்றிய புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட்டு தகவல் தருவோருக்கு 150,000 யூரோக்கள் தருவதாக யேர்மனியப் பொலீஸ் திணைக்களம் அறிவித்தது. பலன் கிடைக்கவில்லை. ஆனால் கொள்ளைகள் தொடர்ந்து இடம்பெறவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. PimEyes, இரண்டு போலந்து நாட்டு அறிவியல் பட்டதாரிகளால், 2017 இல் வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மென்பொருள். PimEyes மென்பொருளில் ஒரு புகைப்படத்தைக் கொடுத்தால், அது எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் கூட, சில விநாடிகளிலே அந்தப் படத்தில் உள்ளவரின், கண்ணின் குழிகள், கன்னத்தின் எலும்புகளின் உயரம், வாயின் பக்கங்கள் போன்றவற்றை அளவிட்டு அவரையோ, அல்லது அவரை மிக ஒத்த புகைப்படங்களையோ வெளிக் கொணர்ந்து விடும். இன்று அநேகமானவர்கள் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதால், PimEyes மென்பொருள் இலகுவாக செயற்பட அது வாய்ப்பாக அமைகிறது. தங்களது ஆபாசப் படங்களையும், தேவையில்லாத சில புகைப்படங்களையும் இணையத்தில் இருந்து அகற்றுவதற்காக இந்த மென்பொருளைப் பலர் பயன்படுத்துகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னர், ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்ன், தற்செயலாக தேடப்படுபவர் பட்டியலில் இருந்த டேனிலா கிளெட்டின் படத்தைக் கண்டு, PimEyes மென்பொருளில் அதைத் தரவிட, அது முகநூலில் இருந்த டேனிலா கிளெட்டின் பல புகைப்படங்களை வெளிக் கொணர்ந்தது. ஆனால் அவை இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிளவ்டியா பெர்னாடியின் புகைப்படங்களாக இருந்தன. பொந்துக்குள் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று, வெளியே வந்து, தான் எடுத்த படத்தை முகநூலில் போட்டு ஆடப் போய் மாட்டிக் கொண்டது. ‘பதுங்கி வாழ்வார்கள்’ என்று பொலிஸார் நிலத்தடியில் தேடிக் கொண்டிருக்க அவர்கள் வெளி உலகில் சர்வசாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள். கிளவ்டியா பெர்னாடி, “ எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள் ?” என்று கேட்டதற்கு பொலீஸார் பதில் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் இப்பொழுது புரிந்திருக்கும். கிளவ்டியா பெர்னாடி வீட்டில் இருந்து கைப்பற்றப் பொருட்களின் பட்டியல், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், கைக்குண்டுகள், பெருமளவு பணம், 1200 கிராம் தங்கம் என நீண்டு கொண்டிருக்கிறது. நாட்டை, பெயரை மற்றினாலும் கைரேகையை மாற்ற ஒருவரால் முடியாதுதானே. பெரியளவில் விளம்பரப் படுத்தப்பட்டு யேர்மனி முழுதும் தேடப்பட்ட ஒருவர், யேர்மனியின் தலை நகரமான பேர்லினில் அதுவும் பலர் வந்து பார்த்துப் போகும் பிரபலமான இடத்தில் மிகச் சாதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக யேர்மனியில், 65 வயதில் ஓய்வூதியம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிளவ்டியா பெர்னாடி என்கின்ற டேனிலா கிளெட்டின், 65 வயதில் சிறைக்குப் போகிறார். பொலீஸ் திணைக்களம் அறிவித்ததன்படி ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்னுக்கு 150,000 யூரோக்கள் கிடைக்கத்தானே வேண்டும். 'எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக் இருவரும் பேர்லினில்தான் இருக்கிறார்கள். அவர்களைத் தேடுகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம்' என்று ஒவ்வொரு நாளும் காலையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.1 point- வாசலும் வீடும்
1 pointநேரான நீண்ட ஒரு நடைபாதை. நேர் என்றால் அடிமட்டம் வைத்து கோடு போட்ட ஒரு நேர். இரண்டு பக்கங்களிலும் அடுக்கி வைத்தது போல வீடுகள் அடுக்கடுகாக இருக்கின்றன. நான் தினமும் கடந்து நடக்கும் வீட்டு வாசல்கள். வாசல்கள் அதன் உள்ளிருக்கும் வீடுகளை மறைத்து வைத்திருப்பது போல, முகங்களும் அகங்களை பெரும்பாலும் மறைத்து வைத்து இருக்கின்றனவோ என்று தோன்றும். அகத்தின் அழகோ அல்லது சிக்கல்களோ முகத்தில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கின்றது. ***** வாசலும் வீடும் ----------------------- வாசல்கள் அழகானவை ஒழுங்கானவை நேர்த்தியாக அடுக்கப்பட்டவை வாசல்களின் உள்ளிருக்கும் வீடுகள் உள்ளே தலைகீழாக எவ்வளவு புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் பூந்தொட்டிகள் தொங்கும் செடிகள் கஞ்சல்கள் இல்லாத கால்மிதிகள் வாசலில் அவசரத்தில் பார்த்தால் அநேக வாசல்களும் அழகே நிதானத்தில் பார்த்தால் பல வாசல்களும் ஒன்றே என்றும் எல்லாமே ஒரு ஒப்பனையோ என்றும் தோன்றும் வெகுசில வாசல்கள் பயத்தை தருகின்றன தனித்தவர்களும் துணிந்தவர்களும் அதன் உள்ளே வாழ்கின்றனர் எப்போதும் கரப்பான் மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் வாசல்கள் வேரோடி வெடித்து கவனம் இன்றி கைவிடப்பட்ட சில வாசல்கள் ஒரு வாசலில் மண்டையோடும் இருந்தது இன்னொன்று அகலிகையுடன் கல்லாகி இன்று வரை உயிர் கொடுக்கப் போகும் ஒருவருக்காக காத்துக் கிடக்கின்றது வாசல் தாண்டி வீடுகளுக்குள் மனிதர்கள் வருகின்றனர் போகின்றனர் வாழ்கின்றனர் பிரிகின்றனர் குப்பை ஆகின்றன வீடுகள்.1 point - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.