Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/03/24 in all areas

  1. அண்ணை யாரைப் பிராண்டி விட்டு!! முட்டைக் கோப்பியை குடிக்க?!
  2. போற போக்கைப் பார்த்தால் இலங்கைத் தமிழரின் நிலை தமிழ் நாட்டிலும் வருமோ என எண்ணத் தோன்றுகிறது.
  3. மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன். மறைந்த நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகிறது. விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இப்போது வரையிலும் தினம்தோறும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும் இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு அங்கு நாளாந்தம் உணவளிக்கப்பட்டு வருகின்றது. விஜயகாந்த் மறைந்து 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380958
  4. கடந்த இரண்டு வாரங்களாக இருமல் இருமல் இருமல் தொண்டை கழுத்து முதுகு தலை நுரையீரல் இதயம் எல்லா உறுப்புக்கும் இப்போது வேலை இருமல் இப்போது எனக்குக் கிடைத்த ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு நித்திரை தொலைந்தது மேல் மூச்சு வாங்குகிறது பகலை நீட்டிக்க இருமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படுகிறது தியா - காண்டீபன்
  5. நாங்கள் Account creation செய்யத் தேவையில்லை. Information ஐ அழுத்தினால் வருகிறது.
  6. https://www.srilankaevisa.lk/information How to Apply for a Sri Lanka eVisa? 1. Visit the official website of Sri Lanka eVisa. 2. Create an account or log in if you already have one. 3. Fill out the online application form with accurate details. 4. Upload the required documents, including a scanned copy of your passport, a recent photograph, and any additional documents specified for your eVisa category. 5. Pay the eVisa fee securely online using the available payment options. 6. Once your application is submitted and payment is confirmed, you will receive an acknowledgment receipt and a unique application reference number. 7. Track the status of your eVisa application online using your reference number. 8. Upon approval, download and print your eVisa to present to the Immigration officer at the port of entry in Sri Lanka. இந்த தளத்தில் போய் பார்த்தால் பழைய மாதிரி சகல விபரங்களையும் போட்டு (கூடுதலாக பாஸ்போர்ட்டும் படமும் கேக்கிறார்கள்)அனுப்பினால் சரி என்கிறார்களே? வந்த விசாவை காப்பி எடுத்து கொண்டு போகட்டாம். @MEERA @goshan_che
  7. அது தானே அதுவும் முந்த நாள் மே 1ம் திகதி வர்க்க புத்துணர்ச்சி பெற்று வந்த பின்பு
  8. 🤣 இந்த குற்றம் மட்டும் அல்ல. இலங்கை தமிழர், யேசு, புத்தர் இம்மூவரும் எந்த குற்றமும் எப்போதும் செய்யாதவர்கள் என்பது பிரபஞ்ச உண்மை🤣
  9. ஒவ்வொரு கரும்புலியும் உயிரை கொடுக்கும் போதும் மிகவும் வருந்தியதுண்டு. ஏன்??? ஒரு உயிர் போவதென்ற கவலை தாண்டி அந்த உன்னத மக்கள் விரும்பிகள் போல அந்த உன்னத சேவையாளர்கள் போல மக்கள் தலைவர்கள் கிடைக்கமாட்டார்கள் எவரை எம் இனம் இழக்க கூடாதோ அவர்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதால் ... இதை புரிந்து கொண்டால் மேலே அவர் எழுதியதும் புரியும்.
  10. கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார். கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார். அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  11. இருவரும் மன்னிக்கவும்.., தற்போது on arrival visa அவே நடைமுறையில் உள்ளது… இணைய வழி இன்னமும் இயங்கவில்லை… அதுதான் விமானநிலையத்தில் அமளி…
  12. எப்போதும் பஞ்சி பிடிச்ச கூட்டம் சிலது ஒன்லைனில் எடுக்காமல், அதே விசாவை on arrival எடுக்கும். ETS ஒன்லைனில் எடுத்தோர் நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போய், உங்கள் பாஸ்போர்ட், நிரப்பிய disembarkation card, ETS email ஐ காட்டினால் - பாஸ்போர்டில் ஸ்டாம் பண்ணி வெளியே விடுவார்கள். இதில் ஒன்லைனில் ETS எடுக்காமல் வருவோர் - இமிகிரேசன் கவுண்டர் போக முன், அதன் அருகில் இருக்கும் on arrival கவுண்டருக்கு போய் ETS ஐ எடுத்து கொண்டு பின் இமிகிரேசன் கவுண்டர் போக வேண்டும். இந்த on arrival counter இல் தான், VFS வந்த பின் தாமதம் ஏற்படுகிறது. நான் நினைக்கிறேன் முன்பு இந்த கவுண்டரில் இருப்பதும் இலங்கை இமிமிரேசன் அதிகாரிகள் என்பதால் அவர்கள் அந்த இடத்தில் வைத்தே ETS ஐ issue பண்ணினார்கள். இப்போ VFS பணியாளர் form ஐ எடுத்து போய் இலங்கை அதிகாரிகளிடம் கொடுத்து, அவர்கள் ETS ஐ issue பண்ணி, திரும்பி VFS இடம் கொடுத்து, அதை மீள பயணிகளிடம் கொடுக்க நேரம் எடுக்கிறது. ஒன்லைனில் எடுத்து போனால் இந்த கால தாமதத்தை தவிர்க்கலாம்.
  13. நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகூடிய வெப்பநிலை! நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிக வெப்பம் நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அடிக்கடி நிழலில் ஓய்வு எடுப்பது சிறந்ததாகும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அடிக்கடி நீராகாரங்களைப் பருகுவதுடன், வீட்டில் உள்ள நாட்பட்ட நோயாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/300794
  14. அண்ணே அது இங்கிலீஸ் பிராந்தியாக்கும். Brandy . 😄
  15. ஆங்கிலம்/சிங்களம் தெரியாத புலம் பெயர் தமிழருக்கு ஏர் போர்ட்டில் இருக்கும் பிரச்சனைகளை இது பத்து மடங்கால் கூட்டும்.
  16. சமூக நீதிக்காக போராடுபவர்கள் சுயநலமாக இருப்பதில்லை, ஆனால் இதனால் இப்படியானவர்கள் மற்றவர்களுக்காக சில வேளைகளில் தமது கல்வி, எதிகாலம் என்பவற்றை தூக்கி எறிந்துவிடுவார்கள், அப்படி இல்லாமல் தனது கல்வியினை இந்த குழந்தை சிறப்பாக முடித்து எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த ஆளுமை நிறைந்த தலைமத்துவங்களை பெற்றால் சமூகத்திற்கும் மிக உதவியாக இருக்கும்.
  17. தகவலுக்கு நன்றி. இவர்களை பற்றி கொஞ்சம் ஆராய்ந்ததில் ஆரம்பத்தில் இதை இந்தியர் ஒருவர் தொடக்கி இருந்தாலும் 2021 அமெரிக்க கம்பெனியான Blackstone Inc இதன் 75% பங்குகளை சுமார் 1.1 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. Kuoni எனும் லக்சறி சுற்றுலா முகவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அதில் சீஈஓ சாக இருந்த இந்தியர் ஒரு side project ஆக ஆரம்பித்த விடயம், இன்று சுமார் 2 பில்லியன் டாலர் நிறுவனம். https://en.m.wikipedia.org/wiki/VFS_Global#:~:text=In October 2021%2C Blackstone acquired a majority stake in VFS Global.
  18. இந்த நிறுவனம் நேற்று கால தாமதம் ஏற்பட விடாமல். காசையும் குறைத்து வாங்கி இருந்தால், வாயையும் *** ம் மூடிக் கொண்டு உல்லாசப் பயணிகளில் இருந்து சிங்களவர்களை வரை பேசாமல் போய் இருப்பார்கள் என்பதுடன் ஏன் இந்தியா (அல்லது இன்னொரு நாடு) என்ற கேள்வி கூட எவருக்கும், முக்கியமாக சிங்களவருக்கு ஏற்பட்டே இருக்காது. முழு நாட்டையும் தமிழர் அல்லாத எந்த வெளி நாட்டவர்களுக்கு விற்றாலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கவலை இல்லை. ஆனால், அது இலவசமாகவோ அல்லது கட்டணம் குறைவானதாகவோ இருக்க வேண்டும். சவூதிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, அவ்வளவு ஏன், ஆப்கனின் தாலிபான்களுக்கோ கொடுப்பதாக இருந்தால், இதே வாய் மாறி கதைத்து இருக்கும். இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்) இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் இந்திய பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)
  19. கடைசியில் மூன்று பிள்ளைகளும் தாய் தந்தை அற்றவர்களானது தான் இதில் வேதனையான விடயம். இப்படியான கொலை / தற்கொலைக்குள்ளானவர்களின் பிள்ளைகளை எம் சமூகம் எப்படி நோக்கும் என்பது தெரிந்த விடயம். நல்ல ஒரு ஆர்வமுள்ள அமைப்போ சொந்தங்களோ பொறுப்பேற்றால் பிள்ளைகளின் வாழ்க்கை செழிக்கும்.
  20. அகோர வெயிலோட இலவச இணைப்பாக தடிமன், காய்ச்சல், இருமல். இருமல் தான் இன்னும் மாறாதாம்.
  21. நிஜமாகவே இருமல் ஒரு பரிசுதான்.......! உடலும் கடலும் ஒன்று........ அந்நியமானவற்றை அரசியல்வாதிகள் போல் தமக்குள் சேர்த்து வைத்திருக்காது...... வெளியே தள்ளி விடும்...... அதனால் இருமலும் தும்மலும்........ விலைமதிப்பில்லா பரிசே ......! 😂
  22. தமிழ் மக்கள் வரும் ஜனாதிபதி தேர்தலில், மரபு வழி வந்த, காலாவதியான, அறளை பெயர்ந்த தமிழ் அரசியல்வாதிகளின் பிதற்றல்களை புறக்கணித்து, கடந்த காலங்களில் ஏற்ப்பட பட்டறிவுகளில் இருந்து தமது சுய புத்திக்கு ஏற்ற மாதிரி வாக்க்களிக்கவேண்டும். தக்கன பிழைக்கும் என்பது கூர்ப்புக்கு மாத்தரமல்ல அரசியல் இருப்புக்கும் பொருந்தும்.
  23. எவ்வளவுக்கு தான் முட்டு கொடுக்கிறது.. இரு நாட்டு அரசுகளும் மாறி மாறி அறிக்கை விடுவதிலேயே தெரிகிறது வண்டவாளம்.
  24. நீங்கள் சொல்வது சரி goshan . நண்டு எங்களுக்கானதுதான். தப்பி ஓடி பொந்துக்குள் மறைவதிலாவது நண்டு வேகம் காட்டும். நத்தையின் நகர்வு மிகவும் மெதுவானது. அத்தோடு கோடை நெடுந்தூக்கமும் அதற்கு இருக்கிறது. தமிழர்களுக்கான பிரச்சனை என்னவென்பது தெரியும். இதற்குள் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் இருப்புக்காக ஒவ்வொரு பக்கமும் இழுத்துக் கொண்டிருந்தால்.. எங்கே விழுந்தோமோ அங்கேயே நகராமல் அப்படியே இருக்கிறோம். ஆமையைப் போட்டிருக்கலாம். சகோதரம் கோவப்படும் என்பதால், நத்தையை தெரிவு செய்தேன்.
  25. எனக்குத் தெரிந்த வகையில் முதலில் அது ஓர் ஆலயமில்லை. அது ஓர் இந்து துறவியாக சென்று இறந்தவரின் சமாதியாகும். அதனை அதன் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து கோவில் போன்று கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர். முன்னர் அவ்விடத்திற்கு சமீபமாகத்தான் கிறிஸ்தவ மக்களின் இறந்த உடல்களையும் வயதில் குறைந்த இந்துப்பிள்ளைகள் இறந்தாலும் அவர்களின் உடல்களைப் புதைப்பார்கள். அவ்வாறான உடல்களில் ஒன்றாக அவை இருக்கலாம்.
  26. இசை என்பது உள்ளங்களை கட்டி போடுவது . எத்தனை முறை பிறந்தாலும் எததனை முறை இறந்தாலும் உருவங்கள் மறைந்தாலும் உள்ளத்தால் மாறுவதில்லை. காலத்தால் அழியாத ஒரு பாடல்.உணர்வுகளோடு கூடவே வருவது இசை.
  27. Zubin Karkaria CEO and Founder of VFS Global Born: 1968 (age 56 years) Education: R A Podar College Of Commerce & Economics, University of Mumbai Nationality: Indian https://en.wikipedia.org/wiki/VFS_Global இந்தியாக்காரன் தான்😂 (https://www.independent.co.uk/news/uk/home-news/vfs-global-home-office-outsourcing-visa-applications-a9061476.html) பிறந்தது, படிச்சது, கக்காபோனது எல்லாமே இந்தியாவிலைதான் 🤣 இந்தியாக்காரனின்ட தூதுவராலயம் வழக்கம் போல புழுகுது, பிடிபட்டவுடனை🤥😏🙄
  28. குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் வித்தாச்சா??
  29. இது தானாம்! இங்க யாழ் இணையத்தில இவரவிட நான்கிற்கு மேற்பட்ட மொலிகழிள் (மொழிகளில்) பாண்டித்தியம் பெற்றவர்கள் இருக்கின்றனர். தான் போறதுக்கு மூஞ்சூறுக்கு வழியக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேத்து காவிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சுதாம்! 👀
  30. அன்றொருநாள் நானும் நீயும் ஆடும் ஆடுமாய் ஆடினோம் இதோ இந்த இடத்தில் ஆடியபோது என் முதுகில் ஆட நீ ஓடிவந்து தாவினாய், நான் சற்று விலகியபோது போனவன்தான் , நீ வருவாயென நானும் இங்கு .......! 😴
  31. ஏற்கெனவே போலீஸ் நிலையங்களில் இந்தப் பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை, இனி வீதியிலுமா? இல்லாதவன் பிச்சை எடுத்தால் அவமானம், அரசு பிச்சை எடுத்தால் அதற்கு என்ன பெயர்? இது மட்டுமல்ல உறவுகளை தொலைத்து வீதியில் அலையும் பெற்றோர் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை, அதையும் காட்டி இலங்கையின் கோரமுகத்தை எல்லோரும் பேசச்செய்ய வேண்டும். மக்களை பிச்சை எடுக்க வைக்கும் அரசாங்கம் அதை நிவர்த்தி செய்யாமல் மறைத்து கனவான் பெயரெடுக்க முயற்சிக்கிறது. இது பெரிய ராஜதந்திரம்!
  32. ஒரு தமிழ் பிள்ளை அமெரிக்க போராட்டத்தில் கைது ஆனால் அது எமக்கு செய்திதானே ஐயா. இந்திய மாணவிகள் இருவர் களவெடுத்து அமெரிக்காவில் கைதாகிய விடயம் விவாதிக்கப்படலாம் என்றால் அதைவிட முக்கியமான விடயம் இது. மற்றையது அமெரிக்கா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் அதிக மதிப்பு உடையது. அங்கு அனுமதி கிடைப்பதே கடினம் என பொதுவான கருத்து உள்ளது. இந்த மாணவி கைது எமது சமூகத்திற்கு முக்கியமான விடயம்.
  33. சக மனிதர்கள் மனிதர்கள் போல நடந்து கொண்டால் அவர் அவ்வாறு எழுதியிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன் .
  34. இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர். ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி, ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார். சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும், தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன) உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார். தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன். ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார். வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார், "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார். அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார். யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
  35. உங்களுக்குத் தனிநாடும் இல்லை சமஷ்ட்டியும் இல்லை. தமிழ்நாட்டில் போராளிகள் இயங்க விடமாட்டேன் - ‍ ரஜீவ் காந்தி பண்டாரியின் விஜயம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் வைகாசி 28 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி. இந்தியாவால் வரையப்பட்ட யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான நகலையும் அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அந்த நகல், சக்சேனாவுடன் ஜெயாரும், லலித்தும் நடத்தியை பேச்சுக்களின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டிருந்தது. பண்டாரி நான்கு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். யுத்த நிறுத்தம், பேச்சுக்களில் ஈடுபடவிருக்கும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த விபரம், அரசியல்த் தீர்விற்கான அடிப்படை மற்றும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் நாள் ஆகியவையே அந்த நான்கு விடயங்களுமாகும். முதல் மூன்று விடயங்கள் குறித்து ஜெயாரும், லலித் அதுலத் முதலியும் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அதுலத் முதலி, நகலில் இருந்த சொற்பிரயோகங்கள் குறித்து சர்ச்சைகளை எழுப்பிக்கொண்டிருந்தார். யுத்தநிறுத்தம் எனும் சொல் பாவிக்கப்பட்டதை அவர் ஆட்சேபித்தார். தமிழ் ஆயுத அமைப்புக்கள் தமக்கான பிரதேசம் ஒன்றினை வைத்திருக்காதவிடத்து யுத்த நிறுத்தம் என்கிற சொல் பாவிக்கப்படலாகாது என்றும், வன்முறை தவிர்ப்பு என்று அதனை மற்றவேண்டும் என்று தர்க்கித்தார். ஆனால் பண்டாரியோ லலித்தின் கோரிக்கையினை நிராகரித்தார். வடக்குக் கிழக்கில் அதிகரித்துவரும் போராளின் தாக்குதல்களின் பின்னால் இந்தியாவே இருக்கிறது என்று ஜெயார் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். தமிழ் நாட்டிலிருந்து போராளிகளும் ஆயுதங்களும் இலங்கைக்குள் வருவதை இந்தியா தடுத்தாலே வன்முறைகள் குறைந்துவிடும் என்று அவர் கூறினார். ஆகவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாக பாக்கு நீரிணையூடாக போராளிகளும், ஆயுதங்களும் கடத்தப்படுவது முற்றாகத் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்தவிடயத்தில் பண்டாரி விட்டுக்கொடுக்க முன்வந்தார். அடுத்ததாக நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடமையென்பதால், போராளிகளின் தாக்குதல்களால் மூடப்பட்ட பொலீஸ் நிலையங்கள் மீளத் திறக்கபட அரசாங்கத்திற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரினார் ஜெயவர்த்தன. அதனையும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணைத்துக்கொள்ள பண்டாரி சம்மதித்தார். ரஜீவ் காந்தி தமிழர் தரப்புப் பிரதிநிதிகளாக புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ மற்றும் புளொட் ஆகிய போராளி அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் பங்குகொள்வார்கள் என்ற இந்தியாவின் பரிந்துரையினை ஜெயார் ஏற்க மறுத்தார். பயங்கரவாத குழுக்களுடன் பேசுவதில்லை என்கிற தீர்க்கமான முடிவினை தனது அரசாங்கம் எடுத்திருப்பதாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களுடன் பேசுவது அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாக ஆகிவிடும் என்று அவர் தர்க்கித்தார். அதற்குப் பதிலளித்த பண்டாரி, அந்நியப்படுத்தப்பட்டுள்ள மக்கள் கூட்டம் ஒன்றின் அரசியல் அபிலாஷைகளை பேச்சுவார்த்தைகளூடாக தீர்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டம், அங்கீகாரம் போன்ற‌ விடயங்கள் குறித்துப் பேசுவது பயனற்றது என்றும், தற்போதுள்ள நிலைமை அதனைக் கடந்து சென்றுவிட்டதாகவும் கூறினார். பஞ்சாப் மற்றும் அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடன் ரஜீவ் காந்தி நடத்திவரும் பேச்சுக்களை இதற்கு உதாரணமாக முன்வைத்தார் பண்டாரி. அதன்பின்னர் போராளி அமைப்புக்களுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனும் பேசுவதற்கு ஜெயார் ஒத்துக்கொண்டார். ஜெயாரின் இந்த இசைவை இந்தியாவின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று ரஜீவும், பண்டாரியும் கிலாகித்து நின்றனர். ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்று ஆனி 1 ஆம் திகதி அவருடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக ஜெயவர்த்தன தில்லி சென்றார். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது பஞ்சாப்பிய, அஸாமியப் பிரிவினைவாதப் போராளிகளுடனனான தனது பேச்சுவார்த்தை அனுபவங்களை ரஜீவ் பகிர்ந்துகொண்டார். தமிழ் ஆயுத அமைக்களுடன் பேசுவதற்குச் சம்மதித்த ஜெயாரின் இசைவினை "துணிவான முடிவு" என்று ரஜீவ் பாராட்டினார். பதிலளித்த ஜெயார், அநுராதபுரம் மீதான தாக்குதலையடுத்து சிங்கள மக்கள் தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக க் கூறினார். ஆகவே, தான் தமிழ் ஆயுத அமைப்புக்களுடன் பேசப்போவது தெரிந்தால், சிங்கள மக்கள் தன்மீது அதிருப்தியடைவார்கள் என்றும், அதனைச் சமாளிக்க ரஜீவ் தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்காக, இருவிடயங்கள் குறித்து இந்தியா, இலங்கைக்குச் சார்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜெயார் கூறினார். இப்படிச் செய்வதன் மூலம், இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பாக நடந்துகொள்கிறது என்கிற எண்ணத்தில் இருக்கும் சிங்களவர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் கூறினார். ஜெயார் ரஜீவிடன் முன்வைத்த இரு கோரிக்கைகளாவன, 1. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு உதவுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். 2. தமிழர்களின் அபிலாஷையான தனிநாட்டினை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவை இரண்டையும் ரஜீவ் உடனடியாகவே ஏற்றுக்கொண்டார். தனது விஜயத்தின் நோக்கத்தை நிறைவேற்றினார் ஜெயவர்த்தன. தொடர்ந்து பேசிய ஜெயார், பாக்குநீரிணையை இந்திய இலங்கைக் கடற்படைகள் கூட்டாக கண்காணிப்பதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் பயணிக்கும் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த ரஜீவ், இதுகுறித்து தான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார். ஜெயாரின் விஜயத்தின் இரண்டாம் நாளான ஆனி 2 ஆம் திகதி, சூறாவளியினால் பாதிக்கப்பட்டிருந்த அயல்நாடான பங்களாதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்றார் ரஜீவ். தில்லியிலிருந்து டாக்காவிற்குச் செல்லும் வழியிலும், திரும்பி வரும் வழியிலும் இரு தலைவர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்தார்கள். இந்தப் பேச்சுக்களின்போது, அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகாக இலங்கையரசு முன்வைத்துவந்த மாவட்ட சபையினைக் கைவிட்டு மாகாண சபையினை ஜெயார் ஏற்றுக்கொள்ள வைப்பதில் ரஜீவ் வெற்றி கண்டார். ஜெயார் தான் போராளிகளுடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னண்னியினருடனும் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறினார். ஆனி 3 ஆம் திகதி ஜெயார் நாடுதிரும்பினார். ஜெயவர்த்தன தில்லியிலிருந்து புறப்படுமுன்னர் ஆறு பந்திகளைக் கொண்ட அறிக்கையொன்று இந்தியாவினால் வெளியிடப்பட்டது. அவற்றில் இரு முக்கியமான பந்திகள் இவ்வாறு கூறியிருந்தன, "இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், இறைமைக்கும் பங்கம் ஏற்படாத வகையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்த் தீர்வு ஒன்றினை அடைவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியிருக்கிறார்கள்". "மேலும், அனைத்துவிதமான வன்முறைகளும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலும் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வழமை நிலை உருவாக்கப்படுவதற்குத் தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்கள் தாமதமின்றி மீள நாடு திரும்புவதும் இதன்மூலம் ஏதுவாக்கப்படும்". தில்லியிலிருந்து ஜெயாரை வழியனுப்பி வைத்தபின்னர் பத்திரிகையாளர்களுடன் பேசினார் ரஜீவ். வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதனூடாகவே அரசியல்த் தீர்விற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த முடியும் என்று தாம் இருவரும் ஏற்றுக்கொண்டதாக‌ அவர் கூறினார். ஆகவே, தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தான் முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், பாக்கு நீரிணையூடாக ஆட்களும் ஆயுதங்களும் இலங்கைக்குக் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்மூலம் வன்முறைகள் முடிவிற்குக் கொண்டுவரப்படும் என்றும், அதன்பிறகு இலங்கையரசாங்கமும் தமது இராணுவ நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும் என்றும் ரஜீவ் கூறினார். "இலங்கையில் தனிநாடொன்றினை உருவாக்க போராடிவரும் தமிழ் கெரில்லாக்கள் இந்தியாவை அதற்கு ஒரு தளமாகப் பாவிப்பதை நான் இனிமேல் அனுமதிக்கமாட்டேன். அடுத்ததாக, இலங்கையில் தமிழர்கள் தமக்கென்று தனிநாடு ஒன்றினை எதிர்பார்க்க முடியாது. சமஷ்ட்டி முறையிலான தீர்வும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்தியாவிலிருக்கும் மாநிலங்களையொத்த தீர்வொன்றினை அவர்கள் எதிர்பார்க்க முடியும்" என்று தீர்க்கமாகக் கூறினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களளைச் சந்தித்துவிட்டு தனது அலுவலகம் திரும்பிய ரஜீவ், தமிழ்நாட்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆருடன் தொலைபேசியில் பேசினார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுக்கள் பயனுள்ளதாக அமைந்திருந்தன என்று கூறிய ரஜீவ், இலங்கைத் தீவின் அரசியற் பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படும் சூழ்நிலை விரைந்து உருவாகி வருகிறது என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராகவிருந்த இரா நெடுஞ்செழியன் தமிழக சட்டசபையில் எம்.ஜி.ஆருடன் ரஜீவ் காந்தி பேசிய விடயங்கள் குறித்து விபரித்ததுடன், தமிழரின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்று எட்டப்படுவதற்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக ரஜீவ் காந்தி நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்தபின்னர், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் செயற்பாடுகளில் ரஜீவ் காந்தி இறங்குவார் என்றும் நெடுஞ்செழியன் தெரிவித்தார். ஆனி மாதத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்காவிற்கும், ரஸ்ஸியாவிற்கு ரஜீவ் காந்தி உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தார். ரொனால்ட் ரீகனுடனும், மிக்கெயில் கொர்பச்சேர்வுடனும் அவர் நடத்திய பேச்சுக்களில் இலங்கையில் நடந்துவரும் பிரச்சினை குறித்தும் பேசினார். ஆனி 18 ஆம் திகதி ரஜீவ் நாடு திரும்பினார். அதேநாள் இலங்கையில் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனி 3 ஆம் திகதி நாடுதிரும்பிய ஜெயார், கட்டுநாயக்க விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, இறுதியாக இந்தியா களநிலவரங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், இந்தியாவின் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த அதிகாரங்களைத் தமிழர்களுக்கு தான் வழங்கவிருப்பதாகவும், ஆனால் அதிகாரப் பரவலாக்கலின் அலகு மாவட்டங்கள் தான் என்றும் கூறினார். சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கம், தில்லியில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கை மற்றும் கட்டுநாயக்காவில் ஜெயார் வழங்கிய செவ்வி ஆகியவை குறித்து தனது கருத்தினைப் பதிவுசெய்தார். இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து வழங்கிய அறிக்கையினை வரவேற்ற அவர், "அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தவேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கூறியதை நான் வரவேற்கிறேன். இந்தியா இப்பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கினை ஆற்றுவதன் மூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்" என்று கூறினார். ஆனால், கட்டுநாயக்காவில் ஜெயார் தெரிவித்த மாவட்ட சபைகளே அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகுகள் என்பது தனக்கு ஏமாற்றமளிக்கிறது என்றும் கூறினார். தில்லியில் வெளியிடப்பட்ட இணைந்த அறிக்கையினைப் பாராட்டிய லலித், இந்தியாவின் நிலைப்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றது என்றும் புகழ்ந்தார்.
  36. இந்தியாவின் தலையீட்டினை எதிர்த்த போராளிகளும், இந்தியாவிடம் தமிழர் நலன்களைத் தாரைவார்த்த அமிர்தலிங்கமும் நற்பிட்டிமுனை படுகொலைகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமே நற்பிட்டிமுனை. அநுராதபுரம் மீதான தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்குப் பின்னர், கடும்பச்சை நிற காக்கி சீருடை அணிந்த, இங்கிலாந்தின் விசேட படைகளால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை பொலீஸின் ஒரு பிரிவினரான விசேட அதிரடிப் படையினர், வைகாசி 17 ஆம் திகதி இரவு, நற்பிட்டிமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள இரு கிராமங்களுக்குள்ளும் நுழைந்தனர். அப்பகுகளை முற்றாக முடக்கிவிட்டு, அங்கிருந்த இளைஞர்கள் அனைவரையும் அவர்கள் கைதுசெய்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படும் போது சில இளைஞர்கள் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். சிங்கள பெளத்த மிருகங்கள் - விசேட அதிரடிப்படை அம்பாறை, தை முதலாம் திகதி, 2007 கிராமத்திற்குள் அதிரடிப்படையினர் நுழைந்தபோது இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர்களின் காலில் வீழ்ந்த அவர், தன்னைக் கொல்லவேண்டாம் என்று மன்றாடியதுடன், போராளி அமைப்புக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறினார். அவர்கள் கேட்கவில்லை, அவ்விடத்திலேயே அவரைச் சுட்டுக் கொன்றனர். அருகிலிருந்த வீட்டிற்குச் சென்ற அவர்கள், உள்ளிருந்து இளைஞர் ஒருவரை வெளியே இழுத்துவந்து, அவரது மனைவி பார்த்திருக்க தலையில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அவரது உடலை இழுத்துச் சென்ற அதிரடிப்படையினர், "பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் எல்லாத் தமிழர்களுக்கும் இதுதான் கதி" என்று சத்தமிட்டவாறே சென்றனர். தம்மால் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 40 இளைஞர்களை நற்பிட்டிமுனை மயானத்திற்கு இழுத்துச் சென்ற அவர்கள், அப்பகுதியில் கிடங்குகளை வெட்டுமாறு கட்டளையிட்டனர். கிடங்குகள் வெட்டி முடிக்கப்பட்டதும், அவற்றின் அருகிலேயே அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் வெட்டிய கிடங்குகளை அவர்களைத் தள்ளி நிரவினர். கல்முனை பிரஜைகள் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு இப்படுகொலைகள் தொடர்பான விலாவாரியான அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தது. சர்வதேச மன்னிப்புச்சபை இப் படுகொலைகுறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இளைஞர்களைக் கைதுசெய்ததையோ அல்லது படுகொலை செய்ததையோ முற்றாக மறுத்தது இலங்கையரசு. ஆனால், அங்கிருந்து காணாமற்போன இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி இலங்கையரசு எதுவுமே கூறவில்லை. ஆனால், கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவரான போல் நல்லநாயகம் இதனை இப்படியே விட்டுவிடவில்லை. அவர் ஊடகங்களிடம் இதுகுறித்துப் பேசத் தொடங்கினார். அரசாங்கம் குறித்தும், அதிரடிப்படையினர் குறித்தும் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார் என்கிற பெயரில் நல்லநாயகத்தை பொலீஸார் மறுநாள் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். ஆடி 1986 இல் நீதிபதி அவர் குற்றம் அற்றவர் என்று கூறி அவரை விடுவித்தார். தீர்ப்பு வழங்கப்படும்போது, "1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17 ஆம் திகதி நற்பிட்டிமுனையில் கைதுகள் எதுவும் நடைபெறவில்லை எனும் அதிரடிப்படையினரின் கூற்றினை எனக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பொய்யென்று நிரூபிக்கின்றன" என்றும் நீதிபதி மேலும் கூறினார். நற்பிட்டிமுனை படுகொலைகள் நடைபெற்று மூன்று நாட்களின் பின்னர் புலிகள் மீண்டும் தாக்கினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பயணம் செய்த ஜீப் வண்டியொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரும் ஊர்காவற்படையினரும், அப்பகுதியிலிருந்த இரு கிராமங்களில் இருந்து 37 இளைஞர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்று சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அடையாளம் தெரியாதவாறு அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டன. டிக் ஷிட் 2004 வன்முறைகள் தீவிரமாகிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே டிக் ஷிட் இந்தியாவுக்கான தூதராக கொழும்பில் பொறுப்பேற்றுக்கொண்டார். வைகாசி 27 ஆம் திகதி எனக்கு வழங்கிய நேர்காணலில், அதிகரிக்கப்பட்டு வரும் வன்முறைகள், வன்முறைகளின் தீவிரம் குறித்த தனது கவலையினைத் தெரிவித்திருந்தார். "திரு பண்டாரியின் விஜயம் நண்மை பயப்பதாக‌ அமையவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படாதவாறு இந்த அழகான தீவு காக்கப்படுதல் வேண்டும்" என்று கூறினார். ஆனால், அவர் வேண்டிக்கொண்டதுபோல எதுவுமே அமையவில்லை. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களைப் பொறுத்தவரையில் அப்போதைய சூழ்நிலை நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனவை நம்புவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஆகவே, பண்டாரியின் கொழும்பு விஜயம் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் மீண்டும் கூடினர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன பண்டாரியையும் தனது தாளத்திற்கு ஆடவைக்கப் போகிறார் என்று கூறினார். பண்டாரியுடன் மிகவும் கனிவாகப் பேசி, அவரையும் தன்பக்கம் இழுத்துவிடப் போகிறார் ஜெயார் என்று அவர் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் போராளிகளுக்குமிடையே ஒரு பிளவினை ஏற்படுத்தவும் ஜெயார் முயல்வார் என்றும் அவர் கூறினார். "நாம் கவனமாக இருப்பது அவசியம்" என்று அவர் கூறினார். இந்தியா தம்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அனுமதிப்பதில்லை என்கிற முடிவிற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வந்தார்கள். ஈழத்தமிழர்களின் நலன்களே தமது குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆகவே, தமிழர்கள் சார்பாக இந்தியா முடிவெடுப்பதை அவர்கள் நிராகரித்தார்கள். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வினை தீர்மானிக்கும் நடவடிக்கையில் இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மூன்று நிபந்தனைகளையும் அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார், 1. அனைத்துப் போராளி அமைப்புக்களும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். 2. பேச்சுவார்த்தைகள் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே நேரடியாக நடைபெற வேண்டும். 3. எடுக்கப்படும் தீர்விற்கு இந்தியா எழுத்துறுதி தரவேண்டும். அமிர்தலிங்கத்தின் முடிவினையடுத்து பிரபாகரன் மிகவும் கோபமுற்றார். தமிழர்களின் தலைவிதியினை இந்தியா தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தினார். "எமது தலைவிதியினை நாமே தீர்மானிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். தமது தலைமையினைப் பாதுகாத்துக்கொள்ள தமிழரின் நலன்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இந்தியாவிடம் அடகுவைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து இலங்கையரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கேட்டுக்கொண்டனர்.
  37. தேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி. அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள் சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன. ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும். பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம். அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது. சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை. உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார். நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள் இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.
  38. புலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர் 56வது பிறந்தநாள் நினைவுகளோடு…..! ஜூலை 23, 2014 | வீரத்தளபதிகள். Edit Post இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக படித்துக் கொண்டிருந்த ரகுநாதன் என்ற இளைஞன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததும் அந்த இளைஞன் ஒரு காலத்தின் கதையானதும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த அதிசயம் அல்ல அற்புதம். சிங்களத்தின் கொடிய இனவாதம் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் தின்ற காலத்தில் தான் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ரகுநாதனின் வாழ்வும் மாற்றத்தைக் கண்டது. தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி மற்றும் வினோஜா, லலிதா, ஜெயா ஆகிய பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற அந்த நாளில் இத்தகைய போராட்டங்களில் தன்னையும் இணைத்து விடுதலைப்பாதையில் நடக்கத் தொடங்கிய ரகுநாதன் 83 தமிழர் மீதான இனக்கொலையின் பின்னர் இந்தியாவிற்கு படிப்பை தொடர்வதற்காக பெற்றோரால் அனுப்பப்பட்டார். நாட்டைப்பிரிந்த துயர் சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத அவலம் அயல்நாட்டில் கல்வியைத் தொடர முடியாத மனவுளைச்சலைக் கொடுத்தது. அப்போது இந்தியாவில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பினைத் தானே தேடி அவர்களுடன் தனது பணிகளை ஆரம்பித்தார். இந்தியாவில் 4வது பயிற்சிப் பாசறையில் பயிற்சியை முடித்து ரகுநாதன் மாதவனாகினார். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் , புலிகளின் புலனாய்வுத்துறையின் இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கபிலம்மான் ஆகியோர் உட்பட பலரை உருவாக்கியது 4வது பயிற்சிப்பாசறையாகும். இங்கிருந்து உருவாகிய பலர் பின்னாட்களில் அரசியல் இராணுவ புலனாய்வுத் துறைகள் என பல்பரிமாண ஆற்றலோடு பல்லாயிரம் பேரை உருவாக்கும் பேராற்றலைப் பெற்றார்கள். அக்காலத்தில் ‘போர்க்களம்’ என்ற பெயரில் நூலொன்று உள்ளகச் சுற்றாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நூலானது தமிழ் மொழியில் உலக இராணுவ நுணுக்கங்கள், பயிற்சிகளின் நெ(பொ)றிமுறைகள் யாவையும் கற்பித்தலுக்கும் போராளிகள் கற்றுக் கொள்ளவும் பயன்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழில் இராணுவப் பயிற்சியை போராளிகளுக்கு வழங்க வேண்டுமென்ற விருப்பத்தை இந்த நூல் நிறைவு செய்திருந்தது. போர்க்களம் நூலின் உருவாக்கத்தில் மாதவன் மாஸ்ரரின் பங்கானது வரலாற்றில் அழிக்க முடியாதது. வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகள், இராணுவ வெளியீடுகள் , ஆயுதங்கள் பற்றிய நூல்களையெல்லாம் பெற்று அவற்றை தமிழாக்கம் செய்து போராளிகளுக்கு இலகுவாய் கற்பிக்கும் வகையில் வடிவமைத்து முதல் முதலில் தமிழில் இராணுவ பயிற்சியை போராளிகளுக்கு வழங்கிய பெருமையில் மாதவன் மாஸ்ரருக்கு கணிசமான பங்கு உண்டு. ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட மாதவன் மாஸ்ரர் தலைவரோடு பணிகளில் இணைந்து 1987களில் தாயகம் வந்து சேர்ந்தார். தாயகம் திரும்பிய பின்னரும் தலைவருக்கு அருகாமையிலேயே பணிகள் நிறைந்தது. எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை பெற்றவர்களுள் மாதவன் மாஸ்ரரும் ஒருவர். பின்பு இந்திய இராணுவ காலத்தில் தலைவருடன் இணைந்திருந்தவரை யாழ்மாவட்டத்திற்கான பணிகளுக்காக தலைவரால் அனுப்பப்பட்டார். 26.10.1987 இந்திய இராணுவம் மாதவன் மாஸ்ரர் பிறந்த ஊரான அளவெட்டியில் நிகழ்த்திய படுகொலைச் சம்பவமானது வரலாற்றில் அளவெட்டி கிராமத்தினால் மறக்க முடியாதது. இந்திய இராணுவத்தினரின் முதலை என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் அளவெட்டி இந்து ஆச்சிரமத்திலிருந்த வயோதிபர்கள் சிறுவர்கள் உட்பட 15பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்த அந்தக்காலத்தில் காட்டிலிருந்து 1988இல் யாழ்மண்ணை வந்தடைந்தார் மாதவன் மாஸ்ரர். ஊரெங்கும் இந்தியப்படைகள் சுற்றி நிற்க மக்களுடன் வாழ்ந்த போராளிகளில் மாதவன் மாஸ்ரரும் அந்தக் காலத்து சவால் நிறைந்த நாட்களையெல்லாம் கடந்து சென்றார். உறக்கமில்லை உணவில்லை அலைவும் மரணப் பொழுதுகளுமாக விடிந்த பொழுதுகள். எனினும் மாறாத தேசக்காதலோடு மக்களோடு ஊரெங்கும் நடந்து திரிந்த கால்கள் ஓயாது உழைத்துக் கொண்டேயிருந்தது. அப்போதைய யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல்.மதி அவர்கள் திருநெல்வேலியில் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டார். 10.12.1988 இந்தியப்படைகளிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரகாவியமான மதி அவர்களின் இழப்போடு தொடர்புகள் யாவும் அறுபட்டு தனித்துப் போனார் மாதவன் மாஸ்ரர். மீண்டும் காட்டுக்குச் செல்வதற்குமான வழிகளும் தொடர்புகள் அற்றுப்போய்விட்டது. கடல்வழியாக தனது முயற்சியில் தமிழகத்திற்குச் சென்றடைந்து கிட்டண்ணா, பாலாண்ணா ஆகியோரின் தொடர்புகளை எடுத்து அவர்களோடு பணிகளைத் தொடர்ந்தார். எங்கிருந்தாலும் விடுதலைப் போராளிக்கு ஓய்வில்லையென்பதனை தனது உழைப்பால் உணர்த்திய போராளி. பின்னர் 1989களில் பிறேமதாச அரசோடு பேசும் காலம் வந்த போது தாயகம் வந்து பாலமோட்டைக் காட்டுப்பகுதியைச் சென்றடைந்தார். ஒவ்வொரு போராளியின் நினைவிலும் மாதவன் மாஸ்ரரின் கலகலப்பும் நகைச்சுவையுமே நினைவில் நிற்கும் மறக்க முடியாத மனிதன். மென்மையான அந்த இதயத்தினுள் ஒரு மாபெரும் புலனாய்வாளன் புலனாய்வு ஆசான் புதைந்து கிடந்ததை காலமே கைபற்றி வெளியில் காட்டியிருந்தது. புலிகளின் புலனாய்வுத்துறை பெரு வளர்ச்சி கண்டு உலகை அதிசயிக்க வைத்த எல்லா வெற்றிகளின் பின்னாலும் மாதவன் மாஸ்ரரும் வெளியில் தெரியாத வேராக இருந்தார். 000 000 000 அந்தக்காலம் தலைவருக்கும் தளபதிகளுக்கும் சோதனைகளும் தடைகளுமே சூழ்ந்திருந்தது. எனினும் புலிகளின் அமைப்பின் துறைசார் வளர்ச்சிகள், மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் ஒரு பிரிவாக புலனாய்வுப்பிரிவின் தேவையும் அதன் எதிர்கால பணிகளும் உணரப்பட்டு தனித்த சிறப்பான புலனாய்வுத்துறையை உருவாக்க தலைவரின் சிந்தனையின் செயல்வடிவமாக போராளிகள் செயற்படத் தொடங்கியிருந்தனர். அப்போதைய பிரதித்தலைவரான மாத்தையாவின் நிர்வாகத்தில் சலீம் அவர்களின் பொறுப்பின் கீழ் மாதவன் மாஸ்ரரினால் பயிற்சிகள் வழங்கப்பட ஆயத்தங்கள் தயராகியது. புலனாய்வுப்பிரிவின் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளின் முடிவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு பாலமோட்டைக்கு உள்வாங்கப்பட்டார்கள். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியின் ஆரம்பம் இங்கேதான் உருவாகியது. இதுவே பின்னாளில் புலனாய்வுத்துறையின் பல்பரிமாண மாற்றத்தின் ஊற்றாகியது. பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது. பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலம் அது. பாலமோட்டையிலிருந்தே அரசியல் போராளிகளை இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி கொழும்புக்கு ஏற்றிச் செல்லும். அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் போராளிகளை மாதவன் மாஸ்ரரால் வளர்க்கப்பட்ட புலனாய்வுப்போராளிகள் பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்கள். யாழ்மாவட்டத்திலிருந்து அதிகளவிலான போராளிகளும் இதர மாவட்டங்களிலிருந்து ஐந்து ஐந்து போராளிகளுமாக பாலமோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள். புலனாய்வுப் பயிற்சிக்கு வந்திருந்த போராளிகள் தனித்தனியே நேர்முகம் செய்யப்பட்டார்கள். பயிற்சியின் கடுமை கட்டுப்பாடுகள் யாவும் விளங்கப்படுத்தப்பட்டு அனைத்து விதிகளையும் ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே பயிற்சியில் பங்கெடுக்க அனுமதியும் வழங்கப்பட்டது. பயிற்சியின் கடினம் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு போராளிகள் புலனாய்வுப்பயிற்சிக்குத் தயாரானார்கள். 37என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய முகாம் புலனாய்வுப்பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டது. லெப்.கேணல் கிறேசி அனைத்து முகாம்களுக்கு பொறுப்பாகவும் புலனாய்வுப் பகுதிக்கு சலீம் அவர்களும் பொறுப்பாக புலனாய்வுப் பயிற்சியில் ஆண் பெண் போராளிகள் தயாராகினர். பயிற்சிக்கான முதல் நாள் கலந்துரையாடலில் பயிற்சி பெறும் போராளிகளுக்கான பயிற்சி விதிகள் விளக்கப்பட்டது. பயிற்சியின் போது தினமும் 10கிலோ மண்மூடையைச் சுமந்தபடியே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நித்திரைக்குச் செல்லும் நேரம் தவிர்த்த இதர நேரமெல்லாம் 10கிலோ மண்மூடையை யாரும் கழற்றவே கூடாதென்று அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சியின் நெறிப்படுத்துனர்களாக மாதவன் மாஸ்ரர் மற்றும் சலீம் ஆகியோர் கவனிப்பர் எனவும் விளக்கப்பட்டது. புலனாய்வுத்துறை பயிற்சிகளில் மாதவன் மாஸ்ரரின் சிரத்தையும் கவனமும் அனைத்துப் போராளிகளையும் அப்பயிற்சியில் அக்கறையோடு பயிற்சியைத் தொடர வைத்தது. அதுமட்டுமன்றி குறும்புகள் ,குழப்படிகள் நிறைந்த இளவயதுக்காரர்களால் நிறைந்த அந்தப் பயிற்சி முகாமில் பயிற்சியாசிரியராக மட்டுமின்றி ஒரு தந்தையின் கண்டிப்பும் கவனமும் ஒவ்வொரு போராளிக்கும் பொதுவாகவே இருந்தது. குறும்புகள் செய்வோருக்கு தண்டனைகள் வழங்குவதில் தந்தையாகவும் அவர்களின் வளர்ச்சியில் தாயின் அக்கறையோடும் புலனாய்வுப்பயிற்சிகளை நடாத்தி புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை காத்திரமாக வழங்கியிருந்தார். மாதவன் மாஸ்ரரினலேயே உருவாக்கப்பட்ட போராளிகள் புலனாய்வுத்துறையின் பல்துறைசார் ஆற்றல்களோடும் வளர்ந்தார்கள். அனைத்து புலனாய்வுப் போராளிகளின் உருவாக்கத்திலும் மாதவன் மாஸ்ரரே ஆதாரமாக ஆசானாக இருந்தார். 000 000 000 யாழ்மாவட்டத்தின் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்டிருந்த பொட்டு அம்மான் 1989 இறுதியில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தளபதி பானு அவர்கள் யாழ்மாவட்டத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். காரணம் சொல்லப்படாமல் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு பொட்டு அம்மான் அவர்கள் தலைவரால் பாலமோட்டைக்கு அழைக்கப்பட்டார். தனது ஒவ்வொரு அசைவிலும் பணியிலும் புலனாய்வுக்கான திறனையும் ஆழமையையும் வெளிப்படுத்தியது மட்டுமன்றி அதுவே சிந்தனையாயிருந்த பொட்டு அம்மான் அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பொட்டு அம்மானிடம் திறமை வாய்ந்த தளபதிகளான லெப்.கேணல் சூட், லெப்.கேணல். மாதகல் ராஜன், மாதவன் மாஸ்ரர் ,கபிலம்மான் போன்றவர்களைக் கொடுத்த தலைவர் புலனாய்வுத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தளத்தையும் வழியையும் உருவாக்கும் பொறுப்பை பொட்டு அம்மான் அவர்களிடம் கையளித்திருந்தார். பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறையின் உருவாக்கம் புதிய வடிவத்தில் காலடி வைத்த காலம் 1990. இக்காலம் இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறியிருந்தது. புலிகள் நாட்டுக்குள் வந்திறங்கி மக்களோடும் மக்களின் பணிகளோடும் தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தார்கள். புலனாய்வுத்துறையின் முக்கிய மாற்றமும் வளர்ச்சியும் புதிய பாய்ச்சலை நோக்கிய பயணம் ஆரம்பித்திருந்த இந்நேரத்தில் பொட்டு அம்மான் அவர்களால் மாவட்டங்களுக்கான புலனாய்வுப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். யாழ்மாவட்டம் மாதகல் ராஜன் , வன்னிமாவட்டம் மல்லி , மட்டக்களப்பு மாவட்டம் நியூட்டன் , திருகோணமலை மாவட்டம் கபிலம்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டு மாவட்டங்களுக்கான புலனாய்வுத்துறை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலமானது மிகுந்த சிக்கல் நிறைந்த காலமாக இருந்தது. அதுமட்டுமன்றி சகோதர இயக்கங்கள் , இந்திய இராணுவத்தோடு இணைந்து இயங்கியவர்கள் , இந்திய இராணுவ காலத்தில் நடந்த பல படுகொலைகளில் நேரடிப் பங்காளிகள், எதிரியின் உளவாளிகள் முகவர்கள் யாவரும் கலந்திருந்த சிக்கல்கள் நிறைந்த நேரமது. ஒவ்வொரு விடயத்தையும் சரியாக இனங்கண்டு ஆராய்ந்து விடுதலைப்பயணம் பயணிக்க வேண்டிய இக்கட்டான காலமும் இதுவே. இந்தக் காலத்தில் தான் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பணிகளில் ஒன்றாக தகவல் சேகரிப்பு விசாரணைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சேகரிக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை , உறுதிப்படுத்தல் , சரியான வகையில் இனங்காணப்பட்ட விடயங்கள் அனைத்தும் சரியானவே என்பதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு விசாரணைப் பிரிவின் கையிலேயே இருந்தது. இவ்விசாரணைப் பிரிவிற்கும் பொட்டு அம்மானுக்குமான இணைப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டார். விடயங்களைச் சரியாக ஆராய்ந்து அவற்றை எழுத்து வடிவாக்கி அறிக்கைகள் தயாரித்து பொட்டு அம்மானுக்கு வழங்கும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரரின் பங்கு காத்திரமானது மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும் அமைந்தது. அறிக்கைகள் என்பது கடதாசிகளில் எழுதப்பட்டாலும் அக்கடதாசிகளிலேயே அனைத்து விடயங்களும் த(தே)ங்கியிருந்தது. ஒவ்வொரு சிறு சிறு விடயங்களிலும் சரிகளையும் ,தவறுகளையும் , நியாயங்களையும் , தீர்வுகளையும் இவ் அறிக்கைகளே தாங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிறு தவறுக்கும் ஒரு அறிக்கையே காரணமாகிவிடக்கூடிய ஆபத்தான பணி. ஆபத்தான பணியையும் அழகாக செய்து முடிக்கும் திறமை மாதவன் மாஸ்ரரிடமும் மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட புலனாய்வுத்துறைப் போராளிகளிடமுமே இருந்தது. போராளிகள் சேகரித்து வரும் அறிக்கைகள் யாவையும் தானே வாசித்து அவ்வறிக்கைகளை தொகுப்பாக்கி கோடிகளுக்கு நிகரான பெறுமதி மிக்க புலனாய்வுப்பணியின் தந்தையாகவே மாதவன் மாஸ்ரரின் தியாகம் அமைந்தது. 000 000 000 இக்காலத்தில் மாதவன் மாஸ்ரரிடம் கல்விக்குழுவினை உருவாக்குமாறு பொட்டு அம்மானால் பணிக்கப்பட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் செயல்வடிவத்தையே காட்டும் திறமை மிக்கது புலிகளின் வரலாறு. பொட்டு அம்மானின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் பொறுப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டு கல்விக்குழுவின் செயற்பாட்டுக் குழு உருவாக்கம் காண்கிறது. கல்விக்குழு ஆசிரியர் குழுவில் 3பேர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உலக புலனாய்வு அமைப்புகள் கட்டமைப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்தல் மற்றும் நூல்களை தருவித்துக் கொடுக்க வேண்டும். தருவிக்கப்படும் அனைத்துலக புலனாய்வு பிறமொழி நூல்களை ஓய்வுபெற்ற மொழிப்புலமையாளர்களுக்கு ஊதியம் வழங்கி நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பும் மாதவன் மாஸ்ரரிடமே இருந்தது. இப்பணிக்காக தனியாக இடமொன்றை ஒழுங்கு செய்து அங்கு வைத்தே இப்பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போதைப் போல அந்தக்காலம் இலகுவில் கணணியில் தட்டச்சு செய்து நூல்களை வடிவமைக்கவோ அல்லது அச்சுப்பதிக்கவோ இலகு வசதிகள் இல்லை. பிறேமதாச அரசின் பொருளாதாரத்தடை நடைமுறையில் இருந்த காலம். அடிப்படை தேவைகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அச்சடிக்கும் கடதாசியிலிருந்து அனைத்தும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மொழிபெயர்க்கப்படும் புலனாய்வு நூல்களை அச்சுக்கோர்த்து நூல்வடிவாக்கி புலனாய்வுப் போராளிகளுக்கு கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கும் பெரும் பொறுப்பை மாதவன் மாஸ்ரரே எற்றிருந்தார். அத்தோடு இலங்கையில் வரும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் முக்கியமான செய்திகளை வெட்டி அவற்றை மட்டைகளில் ஒட்டி அச்சுப்பிரதியெடுத்து நூலுருவாக்கும் பொறுப்பானது ஒரு புலனாய்வுத்துறையின் போராளியிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு போராளியும் தனக்கு வழங்கப்படும் பொறுப்பையும் பணியையும் கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்து முடிக்கும் திறனை ஊட்டியது புலிகளின் பயிற்சிகளும் பாசறைகளும். இங்கும் மாதவன் மாஸ்ரரின் பங்கும் பணியும் பெரியது. மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் அபார வளர்ச்சியும் செயற்பாடும் வேகவேகமாய் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொடுத்தது. இத்தனை வளர்ச்சியின் முதுகெலும்பாக மாதவன் மாஸ்ரரே நிமிர்ந்து நின்றார். இத்தோடு பிறமொழிகளில் வெளியாகும் புலனாய்வு திரைப்படங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு போராளிகளுக்கு காட்டப்பட்டது. அனைத்து துறைசார் போராளிகளுக்கும் கல்விக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களே கற்பித்தலில் பயன்படுத்தப்பட்டது. இக்கற்பித்தல் பொறுப்பும் ஒரு புலனாய்வுத்தறைப் போராளியிடம் வழங்கப்பட்டிருந்தது. கல்விக்குழுவே அனைத்து துறைசார் போராளிகளுக்கான விழிப்புணர்வையூட்டியும் புடம்போட்டு வளர்த்து பணிகளுக்கு அனுப்பினார்கள். அதுபோல வெளிப்பணிகளுக்குச் செல்லும் ஆண் பெண் போராளிகளையும் கல்விக்குழுவே பயிற்றுவித்து அனுப்பியது. கல்விக்குழு உருவாக்கிய திறமையானவர்களை வைத்தே இதர துறைகளின் போராளிகளுக்கான பயிற்சிகளும் , இளநிலைப் போராளிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் ஆணிவேராக நின்ற மாதவன் மாஸ்ரரினால் உருவாக்கப்பட்டவர்கள் பலர் பின்னாட்களில் பெரும் பொறுப்புகளில் கடமைகளைத் தொடரவும் ஏணியாக நின்ற இமயம் மாதவன் மாஸ்ரர். கல்விக்குழுவின் ஆரம்பமும் அதன் அடித்தளமுமே பின்னாளில் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் இதர துறைகளின் திறமையாளர்களை செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்ததை வரலாறு தன் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டது. உலகம் புலிகளின் புலனாய்வுத்துறையை இன்றுவரை புதிர்களாயே பார்க்கும் வகையில் புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியானது மேம்படவும் அதி உச்சதிறனுடன் வளரவும் காரணமான பலரை உலகம் காணாமல் அவர்கள் மௌனங்களாலே எழுதப்பட்டார்கள். அந்த மௌனம் எழுதிய வரிகளில் மாதவன் மாஸ்ரரும் அடங்குகிறார். 000 000 000 1993காலம் தமிழீழப்போராட்ட வரலாற்றில் சவால் நிறைந்த நெருக்கடியை புலிகள் சந்தித்த காலம். எனினும் புலனாய்வுத்துறையின் நுண்ணிய அவதானிப்பு ஆற்றல் எல்லாத்தடைகளையும் உடைத்துக் கொண்டு நிமிர வைத்தது. இக்காலம் மாதவன் மாஸ்ரர் உருவாக்கிய போராளிகள் வௌ;வேறு துறைகளுக்கும் பணிகளுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். கல்விக்குழுவின் வளர்ச்சியானது மாதவன் மாஸ்ரருக்கு மேலும் பல பணிகளை வழங்கிய நேரம் கல்விக்குழுவிற்கான பொறுப்பாளராக பொஸ்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார். மாதவன் மாஸ்ரர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி அவதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். இக்காலத்தில் வெளியக புலனாய்வுத்துறையின் ஆண்கள் பிரிவுக்கு தளபதி கேணல் சாள்ஸ் அவர்களும் , பெண்கள் பிரிவுக்கு தளபதி லெப்.கேணல் அகிலா அவர்களும் பொறுப்பில் இருந்தார்கள் அகிலா அவர்கள் வீரச்சாவடையும் வரையும் பெண்கள் புலனாய்வின் பொறுப்பாளராக அகிலா அவர்களே இருந்தார். அதிலும் அகிலா அவர்கள் வெளியகப்பொறுப்போடு வெளியகப்பணியகத்தின் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இவ்விரண்டு நிர்வாகங்களுக்கும் உட்படாத ஒரு பணியை பொட்டு அம்மான் அவர்கள் மாதவன் மாஸ்ரரிடம் வழங்கியிருந்தார். அந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் மாதவன் மாஸ்ரரிடமே வழங்கியிருந்தார். புலனாய்வுத்துறையின் பணிகள் இரகசியமானதாகவும் ஆழமானதாகவும் இருந்த போதிலும் இவை அனைத்திலும் மாதவன் மாஸ்ரருக்குப் பெரும் பங்கிருந்தது. 000 000 000 அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து 3ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. சமாதானத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்ட சந்திரிகா அம்மையார் அவர்கள் தமிழர் தரப்புடன் போர் செய்யத் தக்க தனது முழுபலத்தையும் பயன்படுத்த முனைந்து யுத்தத்தில் ஈடுபடத்தொடங்கியது. குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளான வடகிழக்கில் யுத்தம் ஆரம்பித்திருந்தது. தொடர்ந்த விமானத் தாக்குதல்கள் எறிகணை வீச்சுக்கள் மரணத்தின் காலைகளையே தமிழர் நிலத்தில் பரவிவிட்டிருந்தது. அன்றாட விடியல் சாவுகளைக் கொண்டு வரும் பொழுதுகளாகவே விடியத் தொடங்கியது. எல்லா நம்பிக்கைகளும் போய் இனி யுத்தம்தான் என சந்திரிகா அரசு கடல், தரை, வான் படைகளை களத்தில் இறக்கியது. மாதவன் மாஸ்ரர் மிகவும் அவசியமான பொறுப்பொன்றை பொறுப்பேற்று தனது பணிகளில் நேர்த்தியும் கவனமுமாகியிருந்த வேளையில் சூரியக்கதிர் நடவடிக்கையை எதிரி மேற்கொண்ட நாட்களவை. யாழ்மண்ணைக் கைப்பற்றும் முயற்சியில் யாழ்மாவட்டத்தில் பலாலி ,காங்கேசன்துறை ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் முற்றுமுழுதாக யாழ்மண்ணைக் கைப்பற்றும் நோக்கில் அனைத்து முனைகளிலிருந்தும் முன்னேறத் தொடங்கியது. 09.07.1995அன்று பலாலியில் முகாமிட்டிருந்த சிங்களம் முன்னேறிப்பாய்தல் எனும் பெயரில் வலிகாமம் வடக்கு, மேற்கு பகுதிகளை நோக்கி படை நகர்வை மேற்கொண்டனர். தங்கள் வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தேவாலங்கள் கோவில்களில் தஞ்சமடைந்தனர். முன்னேறும் படைகளுக்கு ஆதரவாக வான்படைகளின் புக்காரா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இதன் தொடக்கமாக நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தும் மரணித்துப் போனவர்களின் உறவுகளின் கண்ணீரால் நிறைந்தது. குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என இக்குண்டு வீச்சில் இரத்தமும் சதையுமாக நவாலி தேவாலய வளாகம் மரண ஓலத்தால் நிறைந்தது. 3குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றாக நடாத்திய தாக்குதலில் இரத்தக்கறைபடிந்த துயரத்தை மக்கள் மனங்களில் பதிவாக்கியது. பேரவலத்தின் ஆரம்பம் அன்று தொடங்கியது. அதேதினத்தில் அளவெட்டி , சண்டிலிப்பாய் போன்ற பகுதிகள் நோக்கியும் பலாலியிலிருந்து எதிரியால் தொடுக்கப்பட்ட பீரங்கி , எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட எதிரி வலிகாமம் தென்மேற்கு , மேற்கு , தெற்கு பகுதிகள் நோக்கியும் மக்கள் வாழிடங்கள் நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர். உடுத்த உடைகளுடன் கைகளில் அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். வீதியெங்கும் மக்கள் வெள்ளம். மக்கள் நகரும் இடமெங்கும் எதிரியின் விமானத்தாக்குதலும், எறிகணை வீச்சுகளும் துரத்திக் கொண்டு போனது. மரணங்களும் , காயங்களும் சாவின் வாசனையை துயரத்தின் வேதனையை மக்கள் அனுபவித்தபடியே நடந்தார்கள். காயமடைந்தவர்களை காப்பாற்ற அவகாசமோ மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆதரவோ கிடைக்கவில்லை. மருத்துவ வசதியோ காயமடைந்தோரை ஏற்றிச் செல்ல வாகன வசதியோ இல்லாமல் மரணம் மலிந்தது. மனங்கள் மட்டும் வலியோடு நடந்தது. நவாலிமண்மீது வீசப்பட்ட குண்டுகளால் அக்கிராமம் அமைதியை இழந்தது. அழுகையினாலும் மரண வலியினாலும் உயிர்கள் துடிக்க அன்று நவாலி சென்பீற்றர் தேவாலயம் மற்றும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வீழ்ந்த குண்டுகளால் 147இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து போக 360இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கும் வழியின்றி பலரை இழக்கும் நிலமையை அன்றைய நாளில் அங்கிருந்த மக்களால் மறக்க முடியாத வடுவைத் தந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு, நீர் வசதிகளை வழங்கிய 48தொண்டர்களும் அன்று தங்கள் உயிர்களை அங்கே விதைத்து விழிமூடிக்கொண்டனர். எதிரியின் வரவை எதிர்த்து சமராடிக் கொண்டிருந்தார்கள் புலிகள். நவாலி , நாகர்கோவில் ,நந்தாவில் அம்மன்கோவில் என இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்கிடங்களிலெல்லாம் சிங்கள வான்படையின் தாக்குதல் பெரும் உயிரழிவைத் தந்தது. அநியாயமாக அழிக்கப்பட்ட நவாலி தேவாலயத்தை அரச ஊடகம் புலகளின் ஆயுதத் தொழிற்சாலை குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதென அறிவித்திருந்தது. உலகமும் இந்த அழிப்பை பெரிதுபடுத்தவில்லை. தேவாலயம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி யாழ் மறை மாவட்ட ஆயர் வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார். வத்திக்கானும் நாவாலித் தேவாலயத்தின் மீது வீசப்பட்ட குண்டுகளில் அழிந்த தேவாலயம் பற்றியோ உயிர்கள் பற்றியோ எவ்வித கவனத்தையும் காட்டவில்லை. என்றும் தமிழர் மீதான அழிவுகளை உலக நாடுகள் இப்படித்தான் மௌனிகளாக வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்தது. புலிகளே மக்களின் அழிவுகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முதல் முன்னேறி வரும் இராணுவத்துடனான சமரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் மக்களைக் குண்டுவீசிக் கொன்றழித்த புக்காரா குண்டுவீச்சு விமானம் மீது 14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புலிகளின் ஏவுகணை மூலம் புக்காரா சுட்டுவீழ்த்தப்பட்டது. கடற்புலிகளால் இதே காலம் எடித்தாரா கப்பல் மீது கடற்புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு கடல் மூலமான எதிரியின் வழங்கலிலும் புலிகள் தடைய ஏற்படுத்தியிருந்தனர். தரையால் முன்னெடுக்கப்பட்ட எதிரியின் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகளால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையும் மேற்கொள்ளலுக்கு திட்டமிடப்பட்டது. புலிப்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலம் பௌர்ணமிகாலமாகும். நிலவு காலத்தில் வலிந்த தாக்குதல்களைச் செய்வதில் அதிகளவு பாதகத்தையே சந்திக்க வேண்டிய நிலமை வரும். ஆனால் அந்த நிலவுகாலத்தில் எதிரியிடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் காலம் கொடுத்தது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் புலிகளின் இராணுவத் திறனும் எதிரியுடனான சண்டையும் எதிரியால் எதிர்கொள்ள முடியாது போக கைப்பற்றிய பகுதிகளை விட்டு எதிரி பின்வாங்கிப் போனான். புலிப்பாய்ச்சல் மூலம் எதிரியின் கனவு சிதைக்கப்பட்டது. 000 000 000 17.10.1995 அன்று ரிவிரெச (சூரியக்கதிர்) என்ற பெயரில் யாழ்மண்ணை முற்றுகையிடும் கனவோடு சிங்களப்படைகள் முன்னேறத் தொடங்கியிருந்தது. வரலாறு காணாத அழிவையும் இழப்பையும் இடப்பெயர்வையும் கண்டது யாழ்மண். காலம் காலமாய் சேர்த்த சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து அகதியாக்கப்பட்டார்கள் மக்கள். சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் கொன்று போட்டுக் கொண்டிருக்க கிடைத்ததைக் கைகளில் எடுத்துக் கொண்டு இடம்பெயரத் தொடங்கியவர்களை 30.10.1995அன்று மாபெரும் துயரில் வீழ்த்தியது காலம். 6லட்சம் தமிழர்களை ஒரேநாளில் துடைத்தெடுத்து சொந்த இடங்களிலிருந்து துரத்திய அந்த நாளின் துயரத்தை வார்த்தைகளுக்குள் கட்டி வைக்க தமிழில் வார்த்தைகளாலேயே முடியாது போனது. மழைவெள்ளத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்தது. ஒருநாளில் யாழ்மண்ணின் குடிகள் தங்கள் சொந்த ஊரைப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. 30.10.1995அன்று புலனாய்வுத்துறையின் பணியகப்பொறுப்பாளரும் வெளியக பெண்கள் பிரிவு புலனாய்வுப் பொறுப்பாளருமான லெப்.கேணல்.அகிலா அவர்கள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மண்ணை மீட்கும் சமரில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களை ஈந்து கொண்டிருந்தவர்கள் வரிசையில் லெப்.கேணல்.அகிலா அவர்களும் வீரகாவியமானார். மாதவன் மாஸ்ரரின் வழிநடத்தலில் பாலமோட்டைக் காடுகளில் நடைபெற்ற முதல் புலனாய்வுப் பாசறையில் வளர்ந்த அகிலா அவர்களின் புலனாய்வுத்துறையின் பணிகளானது ஒரு தனி வரலாறு. புலிகள் பெரும் சவாலையும் நெருக்கடியையும் சந்தித்த காலங்களில் இக்காலமும் முக்கியமான காலமாகும். இப்போது லெப்.கேணல்.அகிலா அவர்களின் பொறுப்பிலிருந்த பணியகப் பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் பொட்டு அம்மானால் வழங்கப்பட்டது. இப்போதைய காலம் போல கையுக்குள் ஆவணங்களை சேமிக்கும் இலத்திரனியல் வசதியோ அல்லது சேமிப்பு வசதிகளோ இல்லாத காலம். அனைத்து கோவைகள் ஆவணங்கள் யாவுமே கையெழுத்து வடிவில் லட்சக்கணக்கான கடதாசிகளில் எழுதப்பட்டு கோவைப்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு ஆவணமும் விலைபேச முடியாத பெறுமதி மிக்கவை. உயிரை விடவும் பெறுமதி வாய்ந்தவை அத்தனை ஆவணங்களும். எதிரி முன்னேறி வரவர அத்தனை ஆவணங்களையும் பின்னகர்த்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் வந்தது. ஏற்கனவே ஒருவரின் நிர்வாகத்தின் கீழிருந்து அனைத்தையும் மீளச்சீர்படுத்தி வேகவேகமாய் அனைத்தையும் இடம் மாற்றி பாதுகாப்பாக வன்னிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சக போராளிகளின் துணையோடு பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்த்தார். இதுவொரு சவாலான பணியாகவே இருந்தது. எல்லோரையும் உள்வாங்கி பொறுப்பைக் கொடுத்து ஆவணங்களை நகர்த்த முடியாத அவசரம். தனது பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் காட்டிய அர்ப்பணிப்பு , பொறுப்புணர்வு ஒரு போராளியின் கடமையை உணர்த்தியது. குறித்த போராளிகளை மட்டுமே நியமித்து குறித்த கால இடைவெளிக்குள் அனைத்தையும் பத்திரப்படுத்திய மாதவன் மாஸ்ரரின் பணியை பொட்டு அம்மான் பாராட்டி கௌரவித்திருந்தார். 000 000 000 புலனாய்வுத்துறையின் வளர்ச்சியும் பணிகளின் விரிவாக்கமும் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பல்பரிமாண ஆற்றலும் எங்கும் சென்று வென்று வரும் வல்லமையை வளர்த்திருந்த காலத்தின் ஒரு பகுதியது. எதிரியைவிடவும் எம்மவர்களின் தொல்லைகள் காட்டிக்கொடுப்புகள் சகோதர இயக்கங்களின் அநியாயங்கள் எல்லைமீறியிருந்த காலம். பணிகளுக்காக எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்கத் தொடங்கிய போராளிகளை எதிரி இனங்காண்கிறானோ இல்லையோ மற்றைய இயக்கங்கள்; இனம் கண்டு பணிகளில் நின்ற போராளிகளை ஆதரித்த குடும்பங்கள் அவர்களின் தங்கிடங்களை தேடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலமையிலிருந்து போராளிகளை பாதுகாப்பதோடு ஆதரவாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் சமவேளை சகோதர இயக்கங்களுடனான ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட பொட்டு அம்மான் அதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தை மாதவன் மாஸ்ரரிடம் விளக்கி ஒரு நிர்வாக அலகை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். இவ்விடத்தில் அரசியல் போராளியாகவும் மாதவன் மாஸ்ரரின் ஆழுமை வெளிப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறையின் மூலவேரான மனிதர் அரசியல் பணியிலும் பணிகளை நகர்த்தவும் பணியாற்றவும் முடியுமென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரும் வகையில் அவரது அரசியல் பணிகள் அமைந்தது. இப்பணியில் முக்கியமான பொறுப்புக்களில் இருந்த புலனாய்வுத்துறைப் போராளிகளையும் பொட்டு அம்மான் கொடுத்திருந்தார். இப்பணியில் மாதவன் மாஸ்ரரிற்குத் துணையாக ஞானவேல் அவர்கள் பணியாற்றத் தொடங்கியிருந்தார். இம்முயற்சியே பின்னாட்களில் சகோதர இயக்கங்கள் அரசியல்வாதிகளை புலிகளோடு ஒற்றுமைப்பட்டு அரசியல்பணிகளைச் செய்வதற்கான மூலவேராக இருந்தது. பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒருங்கிணைவு மற்றைய இயங்கங்களுடனான புரிந்துணர்வு செயற்பாடுகள் யாவுக்கும் பொட்டு அம்மானின் திட்டமிடல்களும் செயற்பாடுகளும் புலனாய்வுப் போராளிகளின் பணிகளும் மாதவன் மாஸ்ரரின் உழைப்புமே காரணம். ஓவ்வொரு இயக்கங்களுடனும் தொடர்புகளைப் பேணவும் ஒவ்வொரு இயக்கங்களுடனும் இணைந்து பணியாற்றவும் கூடிய வகையில் ஒவ்வொரு இயக்கங்களுக்குமான தனித்தனியான புலனாய்வுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அக்கட்டமைப்பு மூலம் அவர்களுடனான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்தகால தவறுகள் , புரிதலின்மைகளினால் ஏற்பட்ட கசப்புணர்வுகள் யாவையும் இந்தக் கட்டமைப்பு கணிசமான அளவு மறந்து பணிகளைச் செய்யவும் காரணமாகியது. எனினும் பழைய தவறுகளை மட்டுமே எண்ணையூற்றி வளர்த்து அதில் குளிர்காயத்துடித்தவர்களுக்கு மத்தியில் சகோதர இயக்கங்களுடனான தொடர்பாடல் பணிசார்ந்த வேலைகள் இறுக்கமடைந்தது. இதில் ரெலோ , ஈ.பீ.ஆர்.எல்.எவ் போன்ற இயக்க நிர்வாகங்களோடு ஆரம்பமே மிகவும் சிறந்த புரிதல் , தாயகம் எனும் ஒரே நோக்கத்திலான பணிகளும் செய்யும் வாய்ப்பை உருவாக்கியதில் கணிசமான பங்களிப்பையும் போராளிகளை உருவாக்கியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கென்பது அளப்பரியது. ஒருகாலம் எதிரும் புதிருமாக இருந்த நிலமையை மாற்றி புலிகளின் புலனாய்வுப் போராளிகளுக்கான தடைகள் இல்லாத ஆதரவை இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிய இயக்கங்களும் , இயக்கப் பிரமுகர்களும் வழங்கி தங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் வெளிப்பாடே சமாதான காலத்தில் ஒரே மேசையில் அனைவரும் ஒன்றிணையக் காரணமாய் அமைந்தது. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. அந்த மாற்றம் புலிகளுக்கும் ,மற்றைய சகோதர இயக்கங்களுக்கும் இடையில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. இம்மாற்றத்தின் வேராக நின்றவர் பொட்டு அம்மான் அவர்கள். 000 000 000 ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ம் திகதி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது கைச்சாத்திடப்பட்ட பின்னர் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற 6கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றிருந்தது. இப்பேச்சுவார்தைகள் யாவும் இலங்கைக்கு வெளியில் வெளிநாடுகளில் நடைபெற்றிருந்தது. புலிகள் அனைத்துலக சமூகத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கி இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். ஆயுதங்களோடு போர்புரிந்த அமைப்பானது அரசியல் ரீதியான விடுதலையை விரும்பியதன் அடையாளமாக இப்பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கேற்றார்கள். இக்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாயகத்திற்கு சென்று புலிகளின் அனைத்துதுறைசார் போராளிகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து செல்லும் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி நிலத்தில் வாழும் போராளிகளுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக மாதவன் மாஸ்ரர் ஆற்றிய பங்கானது புலத்திலிருந்து மாதவன் மாஸ்ரரின் நிர்வாக அலகின்கீழ் பணியாற்றியவர்கள் அனைவருமே மாதவன் என்ற மலையின் சிகரம் தொடவல்ல ஆற்றலை பண்பை அறிந்திருந்தனர். இதேவேளை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்த அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவை வளர்த்து புலிகளுக்கும் அந்த மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கு வெளியில் வராத உண்மையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. நம்பியிருந்த சமாதான காலம் தமிழருக்கான விடுதலையை நிம்மதியான வாழ்வைத் தருமென்று நம்பிய நம்பிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியது. அனைத்துலகமும் புலிகள் மீதே தங்கள் முழுமையான பலத்தையும் பயன்படுத்தத் தொடங்கியது. இலங்கையரசின் அத்துமீறல்கள் யாவற்றிற்கும் அனைத்துலக சமூகம் ஆதரவாகவே நடந்து கொண்டது. 2009மேமாதம் எங்கள் கனவுகள் , இலட்சியப் பயணத்தின் நிமிர்வுகள் யாவுமே அனைத்துலகத்தின் ஆதரவோடு பலியெடுக்கப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் புலிகளின் பலம் முடக்கப்பட்டது. வாழ்வோமாயினும் போராடுவோம் இல்லை வீழ்வோமெனினும் இறுதிவரை போராடிச்சாவோம் என்ற நிலமையில் புலிகள் அனைத்துலக பலத்தோடு போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளியது உலகு. பெரும் பலங்களாக விளங்கிய தளபதிகளும் போராளிகளும் இறுதிச்சமரில் பங்கேற்றார்கள். எல்லாரையும் போல மாதவன் மாஸ்ரரும் தனது முடிவை களத்திலே எழுதும் முடிவையெடுத்தார். தனது துணைவியோடு இணைந்து தனக்கான பணிகளோடு களத்தில் நின்றார். திருமண பந்தத்தில் இணைய மறுத்து தனது இலட்சியத்தில் மட்டுமே கவனமாக இருந்தவர் மாதவன் மாஸ்ரர். ஆனாலும் திருமண பந்தத்தில் இணைய வேண்டுமென பலமுறை தலைமையாலும் தளபதிகளாலும் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டேயிருந்தார். தேசம் விடியும் வரை தேசக்காதலை மட்டுமே சுமக்கப் போவதாய் விடாப்பிடியாக நின்றார். எனினும் தலைமையின் தொடர்ந்த வேண்டுதலுக்கு மதிப்பழித்து நீண்டகால இழுத்தடிப்பின் பின்னரேயே திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். குடும்ப பந்தத்தையும் விட தேசபந்தத்தையே ஆழமாக நேசித்த மனிதன். அவரது துணைவியாரும் புலனாய்வுத்துறைப் போராளியாகவே அமைந்தது அவரது பணிகளுக்கு மேலும் ஆதரவையும் வழங்கியது. தங்களது இறுதி முடிவு தப்பித்தல் அல்ல இறுதிவரை போராடிச் சாதல் என்ற முடிவைத் தனது அன்புக்கினிய தோழமைகளுக்கு அறிவித்துவிட்டு களத்தில் நின்றார். 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 30வருட விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு புலிகளின் ஆயுதங்களும் மௌனித்துக் கொண்டது. போராடியே தமிழினத்தின் அடையாளத்தை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்த புலிகளின் வரலாறு அந்தக் கடலைகளோடு கரைந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்கால் அலைகளோடு உயிர்களின் துயரோசைகள் கலந்தது. இறுதிவரை இலட்சியம் சுமந்து ஒன்றாய் வாழ்ந்த தோழர்கள் தளபதிகள் போராளிகளோடு மாதவன் மாஸ்ரரும் தனது முடிவைத் தானே தேர்ந்து விழிமூடினார். புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சி , இராணுவ , அரசியல் வளர்ச்சி , சமூக பொருளாதார , உலக அரசியலுடனான மாற்றங்களுக்கு ஏற்ப புலிகளின் அனைத்து வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் மாதவன் மாஸ்ரர் என்ற மாபெரும் ஆற்றல் இருந்ததும் வளர்ந்ததும் வரலாறாக….! புலிகளின் போரியல் வெற்றிகளை வழிநடாத்திய தளபதிகள் பலருடனும் நட்பும் நெருக்கமும் கொண்டிருந்த மாதவன் மாஸ்ரரிடம் தங்கள் திட்டமிடல்களுக்கான ஆலோசனைகள் பெற்று தாக்குதல் வியூகங்கள் அமைத்து சண்டைகளை வழிநடாத்திய பல தளபதிகள் யாவரோடும் மாதவன் மாஸ்ரரும் அழியாத வரலாறாக மனங்களில் நிறைகிறார். உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வரலாறுகள் ஒவ்வொன்றினுள்ளும் புலிகளும் மாவீரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள். மாதவன் மாஸ்ரர்களாகவும் மரணத்தை வென்ற புலிவீரர்களாகவும் என்றென்றும் துளிர்த்துக் கொண்டேயிருப்பார்கள் புலிகள். - நினைவுப்பகிர்வு - சாந்தி ரமேஷ் வவுனியன் -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.