Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    12678
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46783
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3057
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19125
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/05/24 in all areas

  1. அண்மைக் காலங்களில் நான் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் சிறு பிள்ளை பாலியல் கொடுமைகள். ஜேர்மனியர்கள் தம் மண்ணில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அல்லது பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு சமூகத்தினரால் கொலைகள் செய்யப்படுகின்றார்கள். கொலை செய்யப்படுகின்றவர்கள் எதுவுமறியாத அப்பாவிகள்.எதுவுமறியாத சிறுவர் சிறுமிகள். இப்படியான நடத்தைகளை செய்பவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டிலிருந்து வந்த அகதி தஞ்சம் கோரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் என வரவேற்றவர்களின் நெஞ்சிலே இன்று குத்துகின்றார்கள். ஒரிருவர் இந்த தவறுகளை செய்தால் பரவாயில்லை என்றாலும் ஆயிரமாயிரம் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஜேர்மனிய மண்ணில் உலாவுகின்றார்கள் என் இன்றைய செய்திகள் கூறுகின்றன.உண்மையை சொல்ல வேண்டுமானால் மக்கள் ஏதோவொரு அச்சத்துடனேயே உலாவுகின்றார்கள் என சொல்லலாம். பல் வேறு நாடுகளில் அரசியல் குழப்பங்களால் தமது நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வருபவர்களை இன் முகத்துடன் வரவேற்று சகல உதவிகளையும் அதாவது உடை உறைவிட வசதி,பண வசதி,தொழில் கல்வி கற்க வசதி என சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். ஜேர்மனிய இன்றைய சமுதாயமும் எவ்வித பாரபட்சமின்றி இவர்களுடன் கைகோர்த்து நட்புறவுடனேயே பழகுகின்றார்கள். பல இளம் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளில் அகதிகளாக வருபவர்களுக்கு ஒரு அறையை அவர்களுக்கென்றே ஒதுக்கி கொடுத்தும் உள்ளார்கள். பல குடும்பங்களில் அகதி என முத்திரை கொடுக்காமல் அவர்களும் மனிதர்கள் எனும் மனப்பான்மையில் பிள்ளைகளாக தத்தெடுத்து பொறுப்பேற்றும் உள்ளார்கள். இன்னும் பல இடங்களில் இளையவர்கள் இன மத பேதமில்லாமல் காதல் செய்தும் உள்ளார்கள்.காதல் கருத்து வேறுபாடு வந்து பிரியும் போது கொலைகளும் செய்துள்ளார்கள் அந்த அகதி கயவர்கள். இது ஜனநாயக நாடு,தனிமனித உரிமையுள்ள நாடு என தஞ்சம் புகுந்து விட்டு தமது மத/இன கலாச்சாரத்தை மனதில் வைத்து கொலைகளை செய்கின்றார்கள். இந்த நாடு அரசியல் சுதந்திரம் உள்ள நாடு. யாரும் எந்த அரசியலுக்கும் எந்த கருத்தும் வைக்கலாம். நன்றி அரசியலை எதிர்பார்க்காத நாடு. அப்படிப்பட்ட நாடுகளுக்கு வந்தவர்கள் கொலை,பாலியல் கொலை,பாலியல் வன்முறை,மதம் சம்பந்தப்பட்ட கொலைகளை செய்கின்றார்கள். மத சுதந்திரம் அதிகமாக கொடுக்கும் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அப்படியான நாட்டில் இஸ்லாமுக்கு மாற்றுக்கருத்து வைத்த ஒரு மனிதரை அகதி தஞ்சம் கோரிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கத்தியால் முகம் மற்றும் ஏனைய இடங்களில் கூரிய கத்தியால் குத்தியுள்ளார். அதை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரியை தலையின் பின்புறம் கத்தியால் குத்தி..... அவசர சிகிச்சையின் பின் அந்த பொலிஸ் அதிகாரி காலமாகிவிட்டார். அஞ்சலிகள் இப்படியான செயல்களினால் ஜேர்மனிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாத அளவிற்கு அகதிகள் மீதான வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள். சில இடங்களில் அகதிகள் மீதான வெறுப்பில்லாமல் பயம் காரணமாகவே போராட்டங்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சில தினங்களுக்கு முன் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஜேர்மனிய குடிமகன் மீது கத்திக்குத்து நடத்திய சம்பவம். காணொளி பார்க்க நன்றி கெட்ட உலகமிது..😡
  2. மோடிஎன்பவர் ஆர். எஸ். எஸ் இன் இந்துத்துவா பாசிசத்தை அமுல்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அந்த கருவியின் காலம் ஏறத்தாள முடிந்து சக்கை போல் ஆர். எஸ் ஆராலேயே தூக்கி வீசப்படும் காலம் வந்து விட்டது. அந்த மோடி எப்படி சிங்களவனுக்கு ஆப்பாக இருப்பாராம். இவ்வாறான கற்பனைகள் தான் தமிழரின் பாரிய பலவீனம். காங்கிரஸோ, பா.ஜ.க வோ இருவரையும் சமாளிக்கும் வல்லமையான ராஜதந்திரம் சிங்கள அரசிகளிடம் உள்ளது என்பதை நேரில் பார்தத பின்புமா இப்படியான கற்பனைகள்.
  3. தமிழ்நாட்டில் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாதக 8.19 % வாக்குகளை பெற்றுள்ளது 2021 சட்டசபை தேர்தலில் 6.5% வாக்குகளை பெற்றிருந்தது நாதக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெற உள்ளது நாம் தமிழர் கட்சி https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-lok-sabha-election-results-2024-vote-counting-live-news-updates-and-highlights-in-tamil-611015.html
  4. ஐயா! யாவரும் உயிருடன் இருந்தால் சந்தோசம் எல்லோருக்குமானதே. ஆனால் அதை வைத்து வியாபாரம் என வரும்போது தானே கசப்புகள் வருகின்றது.
  5. வாக்குகளுக்கு பணம் கொடுக்காமலும் ஊடக பலமில்லாமலும் கூட்டணி இல்லாமலும் கடைசி நேர சின்ன பறிப்பால் புதிய சின்னத்தில் போட்டியிட்டு மாநில அளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளமை மாபெரும் வெற்றிதான். வாழ்த்துகள். ☘️ சீமான் தனது கொள்கைகளில் ஒரு சில திருத்தங்களை சீர் செய்வார் எனின் விரைவில் பல வெற்றிகள் நிச்சயம்.💪
  6. 👍........ நீங்கள் தரவுகளையும், செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள்.........👍 உகண்டாவா அல்லது பபுவா நியூகினியா, எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு ஒரே குழப்பம். முதலாவதாக, இவை இரண்டு பேரும் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்பதே அன்று தான் தெரிந்தது. இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் இடி அமீனை மட்டும் தான் எனக்குத் தெரியும் என்பதால், உகண்டா என்று போட்டேன் என் தெரிவை........... இப்ப இடி அமீனின் ஆவி தான் வந்து என்னை காப்பாற்ற வேண்டும் போல.....🤣.
  7. நிச்சயமாக. ஆனால் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் பிஜேபியின் பலம் அதன் வாக்கு வங்கி அல்ல, மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒன்று திரட்டி பின் அதை தாமே ஆட்டையை போடுவது. இந்த முறை அதிமுக இந்த வலையில் இருந்து தப்பி விட்டது. அப்படி தப்பி இருந்தாலும் பிஜேபி கூட்டணி என பல சிறிய கட்சிகளின் வாக்கை அள்ளி - 10% வாக்கு வங்கி தமது கூட்டணிக்கு என பிஜேபி காட்டும். காட்டும் அல்ல, காட்டுகிறது. அண்ணாமலை தற்போதைய பேட்டியில் “அதிமுகவுக்கு இப்போ உறைத்திருக்கும்” என சொல்லியது இதைத்தான். 2026 இல் அதிமுகவை எப்படியாவது வலையில் விழுத்துவதே பிஜேபி திட்டம் என நினைக்கிறேன். அதற்கு இந்த” 10% கூட்டணியின் தலைமை” என்ற பீடிகை கை கொடுக்கும். நாதக 6.5 இல் இருந்து 8.2 க்கு போனது ஒரு வகை வளர்ச்சி (எண்ணிக்கை வளர்ச்சி) என்றால் பிஜேபி இப்படி கூட்டணி கண்டு 10% க்கு மேல் எட்டியது இன்னொரு வகை வளர்ச்சி. இதில் தமிழ் நாட்டுக்கு அதிகம் ஆபத்தானது பிஜேபியின் வளர்சியே. காரணம் - இதை வைத்து, மத்திய அரசின் பவரை வைத்து, அமலாக்கதுறையை வைத்து, அவர்கள் அடுத்த தேர்தலில் அதிகுகவோடு 60:40 என நெருக்குவார்கள். தொடந்து இது 50:50, பின் 40:60 என நெருக்கி, அதிமுகவை அப்படியே விழுங்கி தமிழ் நாட்டின் மாற்று கட்சி என ஆகி விடுவார்கள். மாற்று கட்சியாக அவர்கள் வந்தால் - மக்கள் திமுகவை மாற்ற நினைக்கும் போது ஆட்டோமட்டிக்காக அவர்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறும் நிலை ஏற்படும். மஹாராஸ்டிரா முதல் பல மாநிலங்களில் இப்படித்தான் பிஜேபி ஆட்சியை பிடித்தது. நாதகவின் 1.5% வளர்சியை அலட்சியபடுத்துவது போல விட பிஜேபியின் இந்த வளர்ச்சியை அலட்சியப்படுத்த முடியாது என்பது என் கருத்து.
  8. 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) - 2 ம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், தமிழ்சிறி 1)கோஷான் சே - 20 புள்ளிகள் 2)பாலபத்ர ஓனாண்டி - 20 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 20 புள்ளிகள் 4)நிழலி - 20 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 20 புள்ளிகள் 6)கிருபன் - 18 புள்ளிகள் 7)கந்தையா57 - 18 புள்ளிகள் 8)வாத்தியார் - 18 புள்ளிகள் 9)நுணாவிலான் - 18 புள்ளிகள் 10)பிரபா - 18 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11, 14, 15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  9. 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? - ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. சுவியையும், ஈழப்பிரியனையும் தவிர மற்றவர்கள் சரியான பதிலை தந்திருக்கிறார்கள். 1)நிழலி - 20 புள்ளிகள் 2)கோஷான் சே - 18 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 18 புள்ளிகள் 4)கிருபன் - 18 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 18 புள்ளிகள் 6)கந்தையா57 - 18 புள்ளிகள் 7)வாத்தியார் - 18 புள்ளிகள் 8)நுணாவிலான் - 18 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 16 புள்ளிகள் 10)பிரபா - 16 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11, 15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  10. பா ஜ க கூட்டணிக் கட்சிகள் எவை பாஜக - தெலுங்கு தேசம் கட்சி - ஐக்கிய ஜனதா தளம் - சிவசேனா - பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு - லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) பீகார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா - பாரத தர்ம ஜன சேனா கேரளா - மதசார்பற்ற ஜனதா தளம் - அசோம் கண பரிஷத் அசாம் - ஜன சேனா கட்சி ஆந்திரா - தேசிய மக்கள் கட்சி மேகாலயா - ராஷ்டிரிய லோக் தளம் உத்தரப் பிரதேசம் - அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஜார்கண்ட் - ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா பீகார் - நாகா மக்கள் முன்னணி மணிப்பூர் - தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி நாகாலாந்து - ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா பீகார் - ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா மகாராஷ்டிரா - சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசம் - ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் அசாம் - இத்தூண்டு கட்சிகளுடன் அமைத்தது தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அலியாஸ் பா ஜ க கூட்டணி
  11. 19)எல் முருகன் (பிஜேபி) - 2 ம் இடம் நிழலி, goshan_che ,புரட்சிகர தமிழ்த்தேசியன்,தமிழ்சிறி ,கந்தையா57, நுணாவிலான், புலவர், ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1)நிழலி - 18 புள்ளிகள் 2)goshan_che - 16 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 16 புள்ளிகள் 4)கிருபன் - 16 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 16 புள்ளிகள் 6)கந்தையா57 - 16 புள்ளிகள் 7)வாத்தியார் - 16 புள்ளிகள் 8)நுணாவிலான் - 16 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 14 புள்ளிகள் 10)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 11)பிரபா - 14 புள்ளிகள் 12)புலவர்- 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11, 15, 18,19, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  12. யாராவது எங்காவது இருந்தால் சந்தோசம் தானே. ஏன் இருக்கிறார் இல்லை என்று அடிபடணும்? எங்களுக்காக அவர்கள் செய்தது போதாதா? யாரோ எலும்பை விட்டெறிய நாய்கள் அந்த எலும்புக்கு கடிபட்ட மாதிரி இருக்கிறது.
  13. சொன்னதை செய்தார் சீமான் நடந்தது என்ன !
  14. ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை சோச‌ல் மீடியா மூல‌ம் இளைய‌ர்க‌ள் குறுகிய‌ நாட்க‌ளில் மைக் சின்ன‌த்தை ம‌க்க‌ளிட‌ம் சேர்த்தார்க‌ள்...........................ஒரு க‌ட்ட‌த்தில் ப‌ண‌மே இல்லை தேர்த‌ல் செல‌வுக்கு இருந்த‌தை வைச்சு தேர்த‌ல் செல‌வை ச‌மாளிச்சின‌ம் ம‌த்திய‌ அர‌சு தேர்த‌ல் நேர‌ம் கொடுத்த‌ நெருக்க‌டி என் ஜ‌ ஏ சோத‌னை , க‌ட்சி சின்ன‌ம் ப‌றிப்பு இதை எல்லாம் தாண்டி ஆட்டோ சின்ன‌ம் கேட்க்க‌ அதை உட‌ன‌ வேறு க‌ட்சிக்கு தூக்கி கொடுத்த‌து பீஜேப்பி கூட‌ கூட்டனி வைச்ச‌ வாச‌னுக்கு சைக்கில் சின்ன‌ம் கொடுத்த‌து இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் இதை எல்லாம் தாண்டி தான் 21 நாள் பிர‌ச்சார‌த்தின் பின் 36ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் பெற்று இருக்கின‌ம் 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் பெற்ற‌ வாக்கு 17 ல‌ச்ச‌ம் , இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் கூடுத‌லா 19ல‌ச்ச‌ ஓட்டு பெற்று இருக்கின‌ம்.................................2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 31 ல‌ச்ச‌ வாக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 16ச‌த‌ வீத‌த்தை தொடும் புல‌வ‌ர் அண்ணா..................................... க‌ந்தையா57 ஜ‌யாவுக்கு நாங்க‌ள் உண்மையை விள‌ங்க‌ப் ப‌டுத்தினால் அந்த‌ ம‌னுஷ‌ன் ஏதோ எல்லாம் எழுதுவார்😁....................................................
  15. நன்றி ஆனாலும் தேர்தலுக்கு தேர்தல் AfDவளர்கிறது இல்லையா. எதையும் நடக்காது என சொல்ல முடியாது. இதே ஜேர்மனியில், ஜஸ்ட் 80 வருடங்கள் முன் நாஜிகளை மக்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள். ஆகவே AfD ஆட்சியில் பங்கு எடுக்கும் நிலை வர வாய்புகள் மிக அதிகம். இப்படியான விச செடிகளை முளையிலேயே கிள்ளி விட வேண்டு. ஆனால் விகிதாசார முறை இந்த விசசெடிகளை பதியம் போட்டு வளர்க்க உதவுகிறது. 🤣. எனது கருத்தை கொஞ்சம் ஊண்டி சொல்வது உண்மைதான். ஆனால் கட்டாயம் ஏற்க வேண்டும் என திணிக்கும் எண்ணமில்லை🙏.
  16. 1. நாதக 8% என்பதை நான் எங்கேயும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஒரு மாதம் முன்பே என் கணிப்பே 8% என்பதுதான். 2. நாதகவுக்கு என ஒரு வாக்கு வட்டம் உள்ளது. உண்மையில் நீங்கள் சொல்லுவது போல் சின்னம் பார்த்து எல்லாம் இப்போ போடும் நிலை தமிழகத்தில் இல்லை. நாதக சின்னம் மைக் என்பதை பெரும்பாலானா வாக்களார், குறிப்பாக நாதக வாக்காளர் அறிந்தே வாக்களித்துள்ளனர். ஆகவே சின்னம் மாற்றம் பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை. 3. நாதக 8% எடுக்கும் என நான் சொன்னது யூன் 4ம் திகதி மட்டும் மூக்கு சாத்திரம். அதன் பின்? அதே போலவே ஏனையவையும். 4. நிச்சயம் சீமான் தொடர்ந்து 10% க்கு கீழ் வாக்கு எடுத்தபடி, அத்தனை தொகுதியிலும் டெபாசிட்டை இழந்தபடி காலத்தை ஓட்ட முடியாது. ஆகவே கூட்டணி வைப்பார் என்பது ஊகிக்க கூடியதே. 5. ஏனையவர்கள் கள்ளர், கசை போக்கிரிகள் - ஆகவே பிஜேபியுடன் கூட்டி இருந்தார்கள். சீமானும் அப்படி செய்தால்——கவனிக்கவும்——செய்தால், அவரும் அதுவே. ஆனால் “யாரோடு சேர்ந்தாவது வெல்லட்டும்” என்ற முட்டுக்கு இப்போதே @ஈழப்பிரியன் அண்ணா வந்து விட்டார். யாழ்களத்தில் இன்னும் எத்தனை பேர் இப்படி நிலைமாறுவார்கள் என்பதை காலம் விரைவில் காட்டும் என நம்புகிறேன். இதைதான் பல வருடமாக இங்கே எழுதி வருகிறேன். ஆனால் இதை செய்யும் இதயசுத்தி அவரிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை எப்போதோ பொய்த்து விட்டது. ஆனாலும் திருத்தி கொண்டால் வரவேற்க தயார்.
  17. @ஈழப்பிரியன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா நாளைக்கு உங்க‌ளுக்கு இர‌ண்டு முட்டை😁.......................................... @goshan_che விற‌த‌ர் கோஷானுக்கு ஒரு முட்டை😁.......................................... அணிக‌ளில் விளையாட்டை வைச்சு முன் கூட்டியே க‌ணிக்க‌லாம் பாக்கிஸ்தான் நாளை அமெரிக்காவுக்கு உதைஞ்சு அனுப்ப‌ போகின‌ம்............................. நமீபியா எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டு தான் க‌ணிக்க‌ முடியாத‌ மாதிரி இருக்கு ஆனால் வெற்றி வாய்ப்பு அதிக‌ம் ஸ்கொட்லாந்துக்கு தான்🙏....................................................................................................
  18. விகிதாச்சார தேர்தல் முறை தமிழ்நாட்டில் அமுல் செய்தால் திமுக,.அதிமுக அடங்கி வாசிப்பார்கள். சிறிய கட்சிகள் மதிக்கப்படும் ஒவ்வொரு கட்சியும். தனித்து போட்டி இடலாம். சீமானிக்கு கூட 17. சட்ட மன்ற உறுப்பினர்கள் கிடைக்கும் ஆட்சி அமைக்க அவரது உதவியும் தேவைப்படும் 5% கீழே வாக்கு பெறும் கட்சிகள் இல்லாமல் போய் விடும் கொள்ளை அடிப்பது ஊழல் செய்வது குறையும் படிப்படியாக பரம்பரை ஆட்சி இல்லாமல் போகும் கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் வைக்கலாம்
  19. கதைக்குள் கதைகள். நல்லூர் எனது ஊர் என்று சொன்னால் கூட தோழர் உதவுவார் என்று நினைக்கிறேன். தோழர் இரும்பானாலும் இதயம் மெழுகு.
  20. இதே போல நிதிஷிடமும் ஜூனியர் பார்னராக போய், சீனியர் பார்ட்னர் ஆக முயற்சித்தனர் பாஜக. நிதீசுக்கும், நாய்டுவுக்கும் பாதுகாப்பான வழி இந்தியா கூட்டணியில் சேர்ந்து அதிகூடிய சலுகைகளை அடைவதே. பிஜேபியோடு சேர்ந்தால் - பழம் இருக்க சுளை எடுத்து விடுவார்கள்.
  21. சசிகலா இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாதென்று ஒரு அழைப்பு விடுத்திருக்கின்றார், எல்லோரும் அஇஅதிமுக இல் வந்து ஒன்றாகச் சேரும் படி, எம் ஜி ஆர் & ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று...........உடனே எல்லோரும் வந்து சேர்ந்து விட்டனர்......
  22. பின்னால் வந்த துடுப்பாட்டக்காரர்கள் விக்கட்டிலிருந்து தள்ளி ஒரு பக்கமாக கொஞ்சம் வெளியிலேயே நிற்கின்றார்கள். பந்தை நேரா நடு விக்கட்டுக்கு போடுங்கோ, ஆளை விடுங்கோ என்று பந்து வீச்சாளர்களுக்கு சொல்லாமல் சொல்லியினம் போல........🤣
  23. நான் பதியவில்லையே? பதிந்தது பிழம்பு 😄 நம்பத்தகுந்த மற்றும் உறுதியான தகவல் (அதாவது பிரச்சாரத் தளங்கள் மற்றும் யூரியூப் Channels களில் இருந்து பெறப்படாதவை) என்பதால் தான் இங்கு தான் பதிந்ததாக பிழம்பு சொல்கின்றார். செய்திகள் தகவல்கள் பதியும் போது, விருப்பு வெறுப்புகள் எல்லாம் அவர் பார்ப்பதில்லையாம்.🙂
  24. தமிழ் நாட்டில் நா.த.க தவிர மிகுதி அனைத்து கட்சிகளும் கூட்டணி. இதன் அர்த்தம் என்ன? 1. திமுக உட்பட எந்த பெரிய கட்சியும் 39 சீட்டிலும் போட்டி போடவில்லை. உதாரணமாக திமுக தனியே 39 தொகுதியிலும் போட்டி இட்டிருந்தால் வாக்கு சதவீதம் இப்போ இருப்பதை விட கூடி இருக்கலாம், ஆனால் சீட் எண்ணிக்கை நிச்சயமாக குறைந்து இருக்கும். 2. அதே போல் அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் அவர்கள் கட்சி வாக்குகளும் அல்ல. உதாரணமாக கனிமொழிக்கு விழுந்த வாக்குகளில், அந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக ஆதரவுவாக்குகளும் அடக்கம். அதே போல் செளமியாவுக்கும் விழுந்த வாக்கில் பிஜேபி வாக்கும் அடங்கும். ஆகவே கூட்டணியில் நின்ற கட்சிகளின் வேட்பாளர்களின் வாக்கை வைத்து அவை எல்லாமுமே அந்த கட்சிக்கான வாக்குகள் என கருத முடியாது. யாழ்கள அறிவுஜீவிகளும், அதீத அறிவுஜீவிகளும் இதை புரிந்து கொண்டால் - கூட்டணியில் நின்ற கட்சி (பாஜக)வின் சதவீதத்தையும், தனியே நின்ற கட்சி (நா த க) சதவீதத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது விளங்கும். இது மிகவும் தவறான ஒப்பீட்டு முறை. ஆனால் தாம் விரும்பும் அல்லது வெறுக்கும் கட்சிக்கு ஆதரவாக எழுத இதை பதன்படுத்தி பரப்புரை செய்யலாம்.
  25. இது இங்குள்ள சில அறிவுஜீவிகளுக்கு புரியுதேயில்லை புலவரே! என்ன செய்ய அவ்வளவுதான் விளக்கம் என்று கடந்து போக வேண்டியதுதான்!!
  26. Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 05:28 PM (நெவில் அன்தனி) ரியல் மெட்றிட் கழகத்தில் பிரான்ஸ் தேசிய வீரர் 25 வயதான கிலியான் எம்பாப்பே இணையவுள்ளார். ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 15ஆவது சம்பியன் படத்தை வென்ற சூட்டோடு ரியல் மெட்றிட் கழகம், உலகின் தலைசிறந்த முன்கள கால்பந்தாட்ட வீரரான கிலியான் எம்பாப்பேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ரியல் மெட்றிட் கழகத்தில் எம்பாப்வே இணைவார் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரியல் மெட்றிட் கழக முகாமைத்துவம் அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஜி என சுருக்கமாக அழைக்கப்படும் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கால்பந்தாட்ட கழகத்துடன் கிலியான் எம்பாப்பே செய்துகொண்ட 4 வருட ஒப்பந்தம் இந்த வருடம் ஜூன் மாதம் 30ஆம் திகதி முடிவடைகிறது. எனவே அவர் இலவச இடமாற்றத்தின் அடிப்படையில் ரியல் மெட்றிடில் இணையவுள்ளார். பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திலிருந்து விலகி ரியல் மெட்றிட் கழகத்தில் இணையவுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் அவர் வாய்மொழிமூலம் தெரிவித்திருந்தார். ரியல் மெட்றிட் கழகத்துடனான ஒப்பந்தத்தில் இப்போது கைச்சாத்திட்டுள்ள எம்பாப்வே, ஜூலை 1ஆம் திகதிக்குப் பின்னர் அக் கழகத்துடன் இணைந்துகொள்வார். லா லிகா கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வீரர்களுக்கான இடமாற்றக் காலம் ஜூலை 1ஆம் திகதி ஆரம்பமாகிறது. 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான பிரான்ஸ் அணியில் இடம்பெற்ற எம்பாப்பே, 2017ஆம் ஆண்டு மொனாக்கோ கழகத்திலிருந்து கடன் அடிப்படையில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் அணியில் இணைந்தார். எனினும் 2018இலிருந்தே உத்தியோகபூர்வ ஒப்பந்த அடிப்படையில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திதிற்காக விளையாடிவந்தார். அக் கழகத்தில் விளையாட ஆரம்பித்த பின்னர் 256 கோல்களைப் போட்டுள்ள எம்பாப்பே, அக் கழகத்திற்காக அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார். ரியல் மெட்றிட் கழகத்தில் 2029வரை 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள எம்பாப்பே, ஒரு பருவ காலத்தில் 15 மில்லியன் யூரோக்களை சம்பாத்திக்கவுள்ளார். அதனைவிட ஊக்கத் தொகையாக 150 மில்லியன் யூரோக்களைப் பெறவுள்ளார். https://www.virakesari.lk/article/185318
  27. 18)ரி ஆர் பாலு ( திமுக) - 1ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 14 புள்ளிகள் 2)கிருபன் - 14 புள்ளிகள் 3)வாத்தியார் - 14 புள்ளிகள் 4)goshan_che - 12 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 12 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 12 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 12 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 12 புள்ளிகள் 9)கந்தையா57 - 12 புள்ளிகள் 10)நுணாவிலான் - 12 புள்ளிகள் 11)பிரபா - 12 புள்ளிகள் 12)புலவர் - 12 புள்ளிகள் 13)சுவி - 10 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 10, 11, 15, 18, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  28. இந்தா.....இந்தா.....பாத்தியா... இவனுகளுக்கு எங்க சாப்பாடு அதோடயே நிப்பானுவள்....அங்கால இஞ்சால அரக்கானுவள். ஐ ஆம் ஏ தீர்க்கதருசி 😎
  29. மீண்டும் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. யாழுக்கு வந்தால் பாதி வருத்தம் போய்விடும். டாகடர் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து நீண்டகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் தொடர்ந்து இணைந்து இருங்கள் .
  30. 15) தயாநிதிமாறன் திமுக - 1 ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 10 புள்ளிகள் 2)கிருபன் - 10 புள்ளிகள் 3)வாத்தியார் - 10 புள்ளிகள் 4)goshan_che - 8 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 8 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 8 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 8 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 8 புள்ளிகள் 9)கந்தையா57 - 8 புள்ளிகள் 10)நுணாவிலான் - 8 புள்ளிகள் 11)பிரபா - 8 புள்ளிகள் 12)புலவர் - 8 புள்ளிகள் 13)சுவி - 6 புள்ளிகள்
  31. கலரா பிறந்தால் தொட்டியில் .....கருப்பா பிறந்தால் சட்டியில்........இதுதான் வாழ்க்கை........! 😂
  32. பிஜேபி கூட்டணி என்று சொல்லுங்கள். பாமக இல்லாவிட்டால் பிஜேபியின் நிலை படுமோசமாகி இருக்கும். அத்துடன் தென்தமிழகத்தில் தினகரன்>ஓபிஸ் அகியோரின் ஆதவும் பாஜக கூட்டணியின் வாக்கு சதவுPதத்தை உயர்த்தி இருக்கின்றன்.திமுக காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு இருந்தால் அவர்களின் நிலை படு மோசாமாக இருக்கும். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி இருக்கும் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிமுக இரண்டாக உடைந்தாலும் இரட்டை இலைக்கான வாக்குகள் இன்னும் கணிசமான அளவு இலுக்கின்றன டஎன்பதையே இருபலமான மூட்டணிகளை எதிர்த்து கிட்டத்தட்ட தனியாகவே 9பலவீனமான கூட்டணி அமைத்தும்) அதிமுக குறிப்பிடத்தக்க அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்நறு இருக்கிறது;. 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில் களமிறங்கிய நாம் தமிழர் தனித்து நின்று சாதித்துக் காட்டியிருக்கிறது. இது 2024 தேர்தலில் பெரிய மாற்றததைக் கொண்டு வரும்.
  33. பிஜேபி நிச்சயமாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்துள்ளது இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. ஆனாலும் இந்த சதவீத கணக்கு எனக்கு புரியவில்லை. நாதக தனித்து நின்று போட்டியிட்டதால் அதன் சதவீத கணக்கு இலகுவாக கணிப்பிடலாம். கூட்டனி சேர்ந்து போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கியை எப்பிடி துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பது புரியவில்லை. உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வாங்கி தமிழ் நாட்டில், இந்த தேர்தலில் 10 சதவீதம் என்கிறார்கள், அவர்கள் தனித்து நின்றால் 5 சதவீதத்துக்கு மேல் வரப்போவதில்லை என்று நினைக்கிறன்.
  34. நீங்கள் கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் போல உள்ளது, நெடுக்காலபோவான். அவர்களை நினைத்து நான் சலிப்படையவில்லை. உண்மையிலேயே அவர்கள் எனது மாமனும், மச்சானும், அண்ணனும், தம்பியும், அக்காவும், தங்கையும் தான். நான் சலிப்படைவது 'இருக்கின்றார்கள்.......இருக்கின்றார்கள்......' என்று யூட்யூப் துண்டுகளை விடுபவர்களையே.
  35. வரவேற்கிறோம் சகோதரா. அவர்கள் வாழ்ந்ததும் நமக்காக.. இறந்ததும் நமக்காக.. வாழ்ந்தாலும் நமக்காக.. என்ற எண்ணம் எப்போதும் எம்மோடு இருக்க வேண்டும்.
  36. அயர்லாந்து கோஷான் சே @goshan_che 😂😁🤣................................ முட்டை முட்டை முட்டை😜.............................................
  37. இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் குமாரசாமி
  38. பகுதியளவில் சரியான அவதானிப்பு. ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியானாலும் கூட மாநில வழக்குகளின் தீர்ப்பில் இருந்து மன்னிப்புப் பெற (தனக்குத் தானே pardon வழங்கிக் கொள்ள) முடியாது. இதனால் தான் இந்த நியூ யோர்க் தீர்ப்பும், ஜோர்ஜியாவின் மாநில வழக்கும் முக்கியமாகப் பார்க்கப் படுகின்றன. ஆனால், தீர்ப்புகளால் அவருக்காகத் "தீக்குளிக்கக் காத்திருக்கும் அடிப்பொடிகள்" அவருக்கு வாக்களிக்காமல் விடப் போவதில்லை. நடு நிலையாக இருக்கும் (படித்தோர், பெண்கள், இளையோர், நம்மைப் போன்ற லிபரல் குடியேறிகள்) ஆட்களின் வாக்குகளைத் தான் ட்ரம்ப் இழப்பார். பென்சில்வேனியா, கொலராடோ போன்ற ஊசலாடும் (swing) மாநிலங்களில் இது நிகழ்ந்தால், தோல்வி வரலாம். எனவே தான், சேர்த்த காசு வெற்றியைத் தீர்மானிக்கும் பாரிய காரணியல்ல. எந்தக் குழுவின் வாக்குகளை தீர்ப்புகள் பாதிக்கும் என்பது தான் காரணியாக இருக்கும். அடுத்த 4 வருடங்களில் பைடனுக்கு ஏதாவது ஆனால், அடுத்த நிலையில் இருக்கும் கமலா ஜனாதிபதியாக வந்து விடுவார் என்ற அச்சம் இருக்கிறதல்லவா? அந்த அச்சம் உண்மையில் பெண் வெறுப்பும், நிறவாதமும் கலந்த துவேஷத்தின் வெளிப்பாடு. இந்த துவேஷம் எங்கள் ஆசிய வம்சாவளி அமெரிக்கர்களிடையேயும் இருப்பது தான் ஆச்சரியமான விடயம். இது தவறு தான் என்றாலும், நீலக்கட்சி இதைக் கணக்கிலெடுத்திருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.
  39. கொஞ்சம் ஆழமாக சிந்துத்து பார்க்கின்றேன். நிச்சயதார்த்தம் எனும் ஓர் பதம் உள்ளது. இது கிட்டத்தட்ட ஒருவிதமான Appointment. ஆனால் Appointmentஐ நிச்சயதார்த்தம் என அழைப்பது சரிவராது. உதாரணமாக மருத்துவ நிச்சயதார்த்தம்/அரச அலுவலக நிச்ச்சயதார்த்தம்/வங்கி நிச்சயதார்த்தம் இப்படி புகுத்தினால் அது எடுபடுமோ தெரியாது. ஆயினும் நாள் குறித்தல் எனும் பதம் உள்ளது. இது கிட்டத்தட்ட அருகாக வரும் Appointment இற்கு நிகரான ஒரு அர்த்தம். நான் நினைக்கினறேன் திட்டமிட்ட சந்திப்பு/சந்திப்பு தீர்மானம்/ இவை கிட்டமுட்டவான அர்த்தங்கள்.
  40. மக்கள் தாம் தப்புவதற்காக தோண்டிய சிறிய பங்கர்களை இஸ்ரேல் கைப்பற்றி விட்டு (நிர்மூலமாக்கி) அது கமாசின் சுரங்கங்கள் என இஸ்ரேல் கூறுவதாக பலஸ்தீன செய்திகள் கூறுகின்றன. உண்மையில் இப்படி சுரங்கங்களை பிடிப்பவர்கள் எப்படி பணய கைதிகளை மீத முடியாமல் உள்ளார்கள்?
  41. பொதுவேட்பாளர் என்ற ‘மாயமான்’ May 30, 2024 — கருணாகரன் — (03) “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம். அப்படித் தேசமாகத் தமிழ் மக்கள் திரண்டால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று இவர்களுக்குத் தெரியாது. அதைப்பற்றி அவர்கள் எங்கேயும் எதுவும் சொன்னதில்லை. (சொல்லப்போவதுமில்லை. ஏனென்றால் அதைப்பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாது). அதைச் சொல்ல வேண்டுமானால், அதற்குரிய செயலுக்குச் செல்ல வேண்டும். அதொரு போராட்டம். அதைப்பற்றி முறையாகத் திட்டமிட வேண்டும். அதொரு பெரும்பணியாகும். அதற்கான அர்ப்பணிப்பையும் உழைப்பையும் கொடுக்க வேண்டியதாகும். இப்போதுள்ளதைப்போல தேர்தற் கூட்டுக்காக (பதவிகளுக்காக) மட்டும் கட்சிகள் கூடிப் பேசுவதோ, அதே தேர்தல் விடயங்களுக்காக உடைந்து உடைந்து பிரிந்து செல்வதோ அல்ல. அதைப்போல “சிவில் சமூகப் பிரதிநிதிகள்”, “பல்கலைக்கழக சமூகத்தினர்” என்ற போர்வையில் அரசியற் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதாலோ, அவர்களுடைய மேடைகளைப் பகிர்வதாலோ எந்தப் புத்தாக்கமும் நிகழ்ந்துவிடாது. அல்லது புலம்பெயர் ஊட்டங்களுக்காகவும் சில தொண்டு அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்காகவும் ஓடித்திரிவதாலும் தமிழரின் அரசியலில் முன்னேற்றத்தைக் காண முடியாது. இந்தத் தரப்புகளோடு மல்லுக் கட்டுவதை விட மக்களிடம் சென்று வேலை செய்தால், அது அந்த மக்களுக்கான ஆறுதலாகக் கூட இருக்கும். யுத்தம் முடிந்த கையோடு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பாதிக்கப்பட்ட மக்களோடு உளஆற்றுகைப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களோடு வேலை செய்கின்ற அனுபவத்தில் சொல்கிறேன், லட்சக்கணக்கான மக்கள் உள நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி, அரசியல் நெருக்கடி எனப் பல பிரச்சினைகளிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றனர். சொந்த மக்கள் (உடன்பிறந்தவர்களைப் போன்றவர்கள்) இப்படி நெருக்கடியில் தவிக்கும்போது எப்படி உங்களால் இந்த மக்களிடம் இறங்கி வர முடியாமல், தலைவர்களையும் பிரமுகர்களையும் மதபீடங்களையும் மட்டும் சுற்ற முடிகிறது? எப்படி பிறருடைய நிகழ்ச்சி நிரலில் இயங்கக் கூடியதாக உள்ளது? உண்மையான மக்கள் நேயம் (மனித நேயம்) என்பது என்ன? “தேசமாகச் சிந்தித்தல் என்று சொல்கிறீர்களே!” அது இந்த மக்களை அடிப்படையாகக் கொண்டதுதானே! அதாவது, தேசம் என்பது பிரதானமாக மக்களை உள்ளடக்கியதுதானே! அந்த மக்களின் உளநிலையை அறிந்த மருத்துவர்களிடமும் மெய்யான சமூகச் செயற்பாட்டாளர்களிடத்திலும் உரையாடி அறிந்து பாருங்கள், உண்மை என்னவென்று தெரியும். யதார்த்த நிலை என்னவென்று புரியும். அதை அப்படியே ஒரு வர்ணமாகத் தீட்டிப் பாருங்கள். தேசம் இருண்டுபோயிருக்கும். அந்தளவுக்குத் துயரும் அவலமும் நிரம்பிய பரப்பு அது. எளியதொரு (வலிய) உண்மை. வடக்குக் கிழக்கில் சாப்பிடாமல் பாடசாலைக்குச் செல்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அறிந்து பாருங்கள். உங்களுடைய பிள்ளை ஒரு வேளையாவது உண்ணாமல் பாடசாலைக்குச் சென்றதா? என்பதையும் ஒரு தடவை உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள். இப்படிப் பல விடயங்கள் உண்டு. இதையெல்லாம் ஒரு போதுமே இவர்கள் சிந்திக்கப்போவதில்லை. ஆனாலும் தேசமாகத் திரண்டால், அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியை இந்தக் கட்டுரையிலும் எழுப்புவோம். இனியாவது பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம். தவிர, தமிழ் மக்கள் தேசமாக – ஒன்றாகத் திரள்வதொன்றும் புதிய விசயமேயல்ல. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் அப்படித் தேசமாகத் திரண்டே உள்ளனர். தமிழரசுக் கட்சியை, பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணியை, பிறகு இயக்கங்களை, பிறகு விடுதலைப்புலிகளை, கூடவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை, அது உடைந்து சிதறிய பிறகும் தமிழ்த்தேசியக் கட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் ஆதரித்து நிற்பது தேசமாகத் திரண்ட (அந்த உணர்வின்) அடிப்படையில்தானே!. ஏன், 2010, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தையும் வாக்களித்த முறையையும் ஒரு தடவை படமாக வரைந்து பாருங்கள். தமிழீழ வரைபடம் அப்படியே தெரியும். அது தமிழ்த் தேசியக் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைய – தேசமாகத் திரண்டு வாக்களித்ததால்தானே வந்தது. இந்த 60 ஆண்டுகளிலும் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய நெருக்கடிகள், சவால்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இழப்புகள், அலைச்சல்களின் மத்தியிலும் தங்கள் விடுதலை வேட்கையையும் அரசியல் உணர்வையும் தமிழ் மக்கள் விட்டு விடவில்லை. (இதைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவுக் கண்ணை இன்று சிலர் இழந்து விட்டனர் போலும்). இவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசமாகத் திரண்டு நிற்கும் மக்களுக்கு கிடைத்தது என்ன? தமிழ்த்தலைமைகள் பெற்றுக் கொடுத்தது என்ன? இந்தக் கேள்வியை இந்தக் கட்டுரையாளரும் தனக்குள் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். இப்படித் திரண்டு நிற்கும் தமிழ் மக்களுடைய சமூக, அரசியல், பொருளாதார விடுதலையையும் மேம்பாட்டையும் (தேவைகளையும்) நிறைவேற்ற முடியாத போதுதான், மக்கள் இந்த அரசியலை விட்டு (தமிழ்த்தேசியத் தரப்பை விட்டு) விலகிச் செல்ல முற்படுகிறார்கள். இது ஆபத்தான ஒரு நிலையே. ஆனால், இதைப் புரிந்து கொண்டு மாற்றங்களை நிகழ்த்தாத வரையில் மக்கள் மாறிச் செல்வதைக் கட்டுப்படுத்த முடியாது. தங்களை வைத்து அல்லது தங்களை ஏமாற்றி இந்தத் தலைமைகளும் அவர்களுக்குத் தொண்டு செய்வோரும் அரசியற் பிழைப்பு நடத்துகின்றனர் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அது இவர்களின் மீது சலிப்பையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. கோபத்தை உண்டாக்குகிறது. இதைச் சமாளித்துக் கொள்வதற்கு இன்னொரு பெரிய புரட்டைச் செய்ய முற்படுகின்றன தமிழ்த் தலைமைகள். நடக்கவே நடக்காத இன்னொரு பெரிய புலுடாவை விடுகின்றன. ஆம், தமிழ் தலைமைகளும் அவர்களுக்குக் காவடி தூக்குகின்ற தமிழ் ஊடகர்களும் இப்படியான தோல்விச் சூழலில்தான் மக்களைத் திசை திருப்பும் புதிய தந்திரோபாயங்களைச் செய்கிறார்கள். இதற்கு ஒரு எளிய உதாரணத்தையும் வரலாற்று உண்மையையும் கூறலாம். 1970 களில் தமிழரசுக் கட்சியின் “வாய்ச் சவடால்” அரசியலுக்கு பெரிய தொய்வு ஏற்பட்டது. அதுவரையிலும் வீராவேசப் பேச்சுகளையும் பெரும் பிரகடனங்களையும் (பார்க்க – அன்றைய சுதந்திரன் பத்திரிகையை) செய்து வந்த தமிழரசுக் கட்சியினால் அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. (இப்போது தமிழ்த் தேசிய அரசியற் தரப்புகளின் மீது ஏற்பட்டிருப்பதைப் போன்ற நிலை அது. தமிழரசுக் கட்சிக்கான மதிப்பு என்பது அது 1950, 60 களில் நடத்திய மக்கள் போராட்டங்களினாலும் மலையக மக்களுக்கான உரிமையைப் பற்றிப் பேசியதாலும் உருவானதுதான். பின்னாளில் அது அவ்வாறெல்லாம் செயற்படாமல் பிரமுகர் அரசியலுக்குள் தேங்கி விட்டது). இதனால் அதன் மீது மக்களுக்குச் சலிப்பும் நம்பிக்கையீனமும் ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியை விட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடும் கொம்யூனிஸ்ற் பாட்டியோடும் ஐக்கிய தேசியக் கட்சியோடும் மக்கள் சாயத் தொடங்கினர். அது அரசியல் ரீதியான தீர்வை எட்டமுடியாதென்று தெரிந்தாலும் தமது ஏனைய பிரச்சினைகள், தேவைகளாவது தீர்க்கப்படும் என்ற நிலையில் உருவாகியது. மக்களுக்கு இது தவிர்க்க முடியாததாக இருந்தது. இதைத் திசைமாற்றுவதற்கே தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. கூடவே தமது அரசியலுக்கு எதிராகச் சிந்திப்போரைத் துரோகிகளாகக் கட்டமைக்கவும் கூட்டணியினர் முற்பட்டனர். தமிழ் விடுதலைக் கூட்டணியை அப்பொழுது அதொரு புதிய உள்ளடக்கமாக – மாற்று ஏற்பாடாகத் தமிழரின் அரசியலில் நோக்கப்பட்டது. அதுவரையிலும் எதிரெதிராக நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவாகியது இந்தப் புதிய பார்வையைக் கொடுத்தது. ஆனால், அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் அதனுடைய வரட்சியை – பிம்ப உடைவை – மக்கள் இனங்கண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அத்தனை பேச்சுகளும் பொய்த்துப் போயின. அரசியல் உள்ளடக்கமற்ற, செயலற்ற, பாராளுமன்றக் கதிரைகளையும் பதவிச் சுகங்களையும் அடிப்படையாகக் கொண்ட அரசியற் போக்கின் தோல்வியாக அது அமைந்தது. இதுதான் 2009 க்குப்பிறகு தமிழ் அரசியல் அரங்கிலும் நிகழத் தொடங்கி, இப்பொழுது உச்சக்கட்டத்துக்கு வந்துள்ளது. 2009 க்குப் பிறகான – போருக்குப் பிந்திய காலத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல், தவறியதன் விளைவே இதுவாகும். 2009 க்குப் பிறகான காலம் முற்றிலும் வேறு. அது தமிழ் மக்களுடைய வாழ்க்கையில் மிகமிகக் கடினமானதாகும். நினைத்துப் பார்க்கவே முடியாத பேரவலப் பரப்பு அது. போரின் தோல்வியை முழுதாகவே தலையிற் சுமந்து கொண்டிருந்த காலம் அது. இழப்பின் துயரமும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையும், வாழ்வை மீளக் கட்டியெழுப்பப்படுகின்ற பெரும்பாடுகளும் மக்களை அழுத்திக் கொண்டிருந்தன. இதை விட பல்லாயிரக்கணக்கான போராளிகள் சிறையில் இருந்தனர். சிறையிலிருந்து (தடுப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டு வந்தவர்களுக்கும் அடுத்து என்ன என்ற கேள்வியே முன்னின்றது. அவர்களைக் கண்காணிக்கும் படைத்துறையும் புலனாய்வாளர்களும். மறுபக்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீராத்துக்கமாக நின்றது. மாற்றுத் திறனாளிகள் என்ன செய்வதென்று தெரியாதிருந்தனர். (இன்னும் அப்படித்தான் உள்ளனர்). போதாக்குறைக்கு ஊர்கள் எல்லாம் இராணுவமயமாகியிருந்தது. இந்தச் சூழலில் அடுத்த கட்ட அரசியல் எத்தகைய வடிவத்தை எடுப்பது, எவ்வாறான முன்னெடுப்பைச் செய்வது என்று தெரியாத தேக்கத்துக்குள்ளாகியிருந்தது. அதைப்பற்றிய ஆய்வுகளோ உரையாடல்களோ எதுவும் செய்யப்படவே இல்லை. இவ்வாறான உலக அனுபவங்கள் உள்வாங்கப்படவும் இல்லை. மேலும் மக்களுடைய இந்தப் பிரச்சினைகளுக்கு தமிழ்த்தரப்பின் உருப்படியான எந்த வேலைத்திட்டங்களும் களப்பணிகளும் ஆற்றப்படவே இல்லை. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எந்தக் கட்சியாவது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஏதாவது திட்டங்களை உருவாக்கியதா? பணிகளைச் செய்ததா? இந்தக் கேள்விகளும் இங்கே பேசப்படும் விடயங்களும் யாரையும் குறை சொல்லுவதற்காகவோ குற்றம்சாட்டி நிராகரிப்பதற்காகவோ சொல்லப்படவில்லை. இவற்றைக் குறித்து இப்போதாவது சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நேச விமர்சனமாக – ஒரு திறந்த உரையாடலுக்கான முன்வைப்பாக இங்கே சுட்டப்படுகிறது. எவரையும் நிராகரிப்புச் செய்வதன் மூலம் நம்மை – மக்களையே பலவீனப்படுத்த முடியும். மக்களைப் பலப்படுத்துவதாக இருந்தால் அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். கவனிக்கவும் செயற்பட வேண்டும் என்பதை. இந்த நிலைமையைக் குறித்துச் சீரியஸாகக் கவனமெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், அந்தச் சுட்டுதல் – கவனப்படுத்தல் – புறக்கணித்து ஒதுக்கப்பட்டது. அவர்கள் வேறு எதிராளர்களாகவே நோக்கப்பட்டனர். இப்போது கூட இவ்வாறான போக்கே தொடர்கிறது. இது எவ்வளவு பெரிய அவலம்? பதிலாக அத்தனை சுமைகள், தேவைகள், அவலங்களின் மத்தியிலும் மக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தையும் அதிருப்தியையும் கொண்டிருந்தனர். இதை (அரசின் மீதான எதிர்ப்புணர்வை) பயன்படுத்தி, அரசியல் அறுவடையைச் செய்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. (அப்பொழுது அனைத்துத் தமிழ்த்தேசிய லேபிலாளர்களும் ஒன்றாகவே இருந்தனர்). மக்கள் வழங்கிய பேராதரவையோ, மக்களின் அவல நிலையையோ அவர்களுடைய பிரச்சினைகளையோ புரிந்து கொண்டு, மக்களுக்கான அரசியலைச் செய்வதற்கு கூட்டமைப்பும் அதனோடு இசைந்து நின்ற தரப்புகளும் முன்வரவில்லை. முக்கியமாகக் காலகாலமாகத் தமிழ்த் தலைமைகளின் அரசியல் விருப்புகளுக்கெல்லாம் தம்முடைய வாழ்க்கையையும் உயிரையும் உடல் உறுப்புகளையும் கொடுத்த மக்களுக்காக இவர்கள் தம்மை அர்ப்பணித்துப் பணி செய்யவேல்லை. அவர்களுடைய பேரிடர் காலமாகிய அந்தக் காலச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு ஒன்று கலந்து நிற்பதற்குப் பதிலாக, அரசு எதையும் செய்ய மறுதலிக்கிறது – தடுக்கிறது என்று சாட்டுப் போக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொண்டனர். அரசு தடுத்தால், அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். அந்த நெருக்கடியை உடைத்தெறிந்திருக்க வேண்டும். அதுதானே போராட்ட அரசியல் – விடுதலைக்கான அரசியல்! பதிலாகப் “பிரமுகர் அரசியல்” விளையாட்டில்தான் இவை ஈடுபட்டன. இதில் விடுதலை இயக்கங்களில் இருந்து வந்தவர்களும் (செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும்) பெருந் தவறை இழைத்தனர். பங்கேற்பு அரசியல் (Participation politics), பங்களிப்பு அரசியல் (Contribution politics) அர்ப்பணிப்பு அரசியல் (Commitment politics) என்பதையெல்லாம் கைவிட்டு, பிரகடன அரசியலுக்கு (Declaratory politics)த் தாவிச் சென்றனர். பிரமுகர் அரசியல் – அதாவது பிரகடன அரசியல் (Declaratory politics) தானே வசதி! ஆனால், அதொரு அபாயமான சுருக்குக் கயிறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளத் தவறினர். அந்தச் சுருக்குக் கயிறு இப்பொழுது இவர்களுடைய கழுத்தில் விழுந்துள்ளது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் இந்த நிலையைத் திசை திருப்பவுமே “பொதுவேட்பாளர்” என்ற “அதிசயக் கிளியை” இப்பொழுது “அலாவுதீனின் அற்புத விளக்காக”க் காட்ட முற்படுகின்றனர். இதற்குத்தான் ஐக்கியம், ஒருங்கிணைவு, தேசமாகத் திரள்வோம், சர்வதேசத்துக்கு எம்மை நிரூபிப்போம் என்ற “சவாடல்கள்” எல்லாம். “இதனுடைய அரசியற் பெறுமானம், அடுத்த கட்ட அரசியல் என்ன என்று கேட்டால், “இதொரு பரீட்சார்த்த முயற்சி. வெற்றி தோல்வி எல்லாம் சாதாரணம், இதை விட சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்து என்ன பயனைக் காண்பீர்கள்? எந்த அடிப்படையில் – எந்த நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களிப்பது?… ” என்றெல்லாம் வினோதமாகக் கேட்கிறார்கள். பழகிய, பழைய அரசியற் சிந்தனையில் இப்படித்தான் கேள்விகள் எழும். போருக்கு முந்திய – போர்க்கால அரசியல் மனநிலையைக் கொண்டிருந்தால் இப்படித்தான் கேட்கவும் தோன்றும். இது போருக்குப் பிந்திய – புத்தாக்க அரசியலுக்கான – நிலைமாறு காலகட்ட அரசியற் சிந்தனையில் நாம் புதிய தந்திரோபயங்களைக் குறித்துச் சிந்தித்தால், இந்தக் கேள்விகள் முட்டாள்தனமானவை என்றே விளங்கும். அதற்குச் செல்லாதவரையில் பழைய குப்பைக்குள் பொன்முட்டையைத் தேடுவதாகத்தானிருக்கும். “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார், ஏமாற்றுவார்…? என்ற பாடல்தான் இந்த வரிகளை எழுதும்போது நினைவில் வருகிறது. ஏனென்றால், ஒரு பக்கம் தீவிரவாதப்படுத்தப்பட்டுள்ள இனவாத அரசின் தீராத ஒடுக்குமுறை. மறுபக்கம் நம்முடைய தலைமைகளே நம்மைப் பலியிடும் அவலம். இரண்டு அபாய நெருக்குவாரங்களின் மத்தியில்தான் தமிழ் மக்களுடைய விடுதலை அரசியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சிந்திப்போம். (அடுத்த கட்டுரையில் இனவாத அரசின், பேரினவாத ஒடுக்குமுறையின் புதிய வடிவத்தையும் அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும் பார்ப்போம்) https://arangamnews.com/?p=10816
  42. அண்ணளவாக.... இரண்டு வருடத்தின் பின், @Paanch அண்ணையை யாழ்களத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி. ❤️ அவருடன் வாரத்தில்... குறைந்தது இரண்டு முறையாவது வேறுவழிகளில் தொடர்பில் இருந்த போதும்.... யாழ்களத்தில் அவரின் எழுத்தை வாசித்த போது உண்மையிலேயே ஆனந்த பரவசம் அடைந்தேன். 😍 அவரை எப்படியும் அடுத்த சில நாட்களில் யாழிற்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன் என வேறு ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தேன். அதன் படி அவர் மீண்டும் வந்தது இனம் புரியாத உச்ச மகிழ்ச்சி. 🥰 பாஞ்ச் அண்ணை மீண்டும் யாழ்.களத்தில் இணைவதற்கு சில சிரமங்களும், தடங்கல்களும் இருந்த போது அதனை நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்கிய @மோகன் அண்ணா, @இணையவன், @நிழலி, @ஈழப்பிரியன், @குமாரசாமி அண்ணா ஆகியோருக்கும்... அவரை மீண்டும் காண ஆவலுடன் இருந்த யாழ். உறவுகளுக்கும் மிக்க நன்றி. 🙏
  43. வணக்கம் பாஞ்ச்…! மீண்டும் கண்டது மிகவும் மகிழ்ச்சி..! தொடர்ந்தும் எம்முடன் பயணியுங்கள்..!
  44. நீண்ட காலத்துக்கு பின் கண்டதில் சந்தோசம் .
  45. தொடர்ந்து இணைந்திருங்கள்.
  46. ஐயா! உங்களை மீண்டும் யாழ்கள மேடையில் சந்திப்பதில் அலைகடல் போல் மிக்க மகிழ்சி அடைகின்றேன் ஐயா கருத்துக்கள் எழுதாவிட்டாலும் யாழ் களத்தோடு இணைந்திருங்கள். அதுவே எமக்கு பெருமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.