Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்12Points3125Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்11Points3034Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்10Points39336Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்9Points15819Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/12/24 in all areas
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொன்னது, "நாம் செய்தது நமது போரல்ல, அது இந்தியாவின் போர். நாம் கேட்காமலேயே போருக்கான சகல உதவிகளையும் வழங்கியது இந்தியா." என பகிரங்கமாக சொன்னார். இந்தியா மௌனம் காத்து அதை ஏற்றுக்கொண்டது. போர் முடிவு பெற்று வெற்றி களிப்போடு மஹிந்தா பாராளுமன்றம் வந்தபோது தங்களையும் அவர்களோடு சேர்த்துக்கொள்ளுமாறு ரணில் கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால் ரணிலே நாட்டைகாட்டிக்கொடுத்து புலிகளுடன் பேசினார் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அந்த வெற்றி தமக்கு மட்டும் உரியது என நிராகரித்து விட்டார். எழுபத்தாறு ஆண்டுகளாக சிங்கள ஜனாதிபதிகளை மாறி மாறி தெரிவு செய்து எதை சாதித்தோம் என்றும் விளக்கி முழங்கினால் கேட்கிறவர்கள் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.6 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
25வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. ஆரம்பத்திலேயே விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டமிழந்தாலும், சூரியகுமாரின் 50 ஓட்டங்களின் உதவியுடன் இறுதியில் 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 25 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 42 2 பிரபா USA 40 3 ரசோதரன் 40 4 ஈழப்பிரியன் 38 5 சுவி 38 6 நந்தன் 38 7 வாதவூரான் 36 8 ஏராளன் 36 9 குமாரசாமி 34 10 தமிழ் சிறி 34 11 கிருபன் 34 12 கந்தப்பு 34 13 வாத்தியார் 34 14 எப்போதும் தமிழன் 34 15 நீர்வேலியான் 34 16 வீரப் பையன்26 32 17 நிலாமதி 32 18 தியா 32 19 புலவர் 32 20 P.S.பிரபா 32 21 நுணாவிலான் 32 22 அஹஸ்தியன் 32 23 கல்யாணி 325 points
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
ஈழ விடுதலைப் போராட்டம் என்பது சினிமாப் படம் இல்லை. எத்தனை உயிர் இழப்புகள், எவ்வளவு தியாகங்கள்,எவ்வளவு அழிவுகள், எத்தனை இடம்பெயர்வுகள், பாரிய அனர்த்தங்கள் எனப் பலதைக் கண்ட ஒரு விடுதலைப் போராட்டம். இன்றும் அதன் வடுக்கள் தீரவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததுதான். அதை வியாபாரம் ஆக்கினால், கோவம் வருவது நியாயம்தானே? பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வெளிவருவார் என்பதாகட்டும் அல்லது நீங்கள் கூறும் உண்டியல் குலுக்கலாகட்டும் இவையாவும் மகிழ்ச்சிகளையா கொட்டிக் கொடுக்கின்றன. இந்த வரிசையில் மேடைக்கு மேடை பிரபாகரன் படத்தைப் போட்டும், புலிக் கொடி பிடித்தும் சீமான் செய்வது அரசியல் வியாபாரமாக உங்களுக்குத் தெரியவில்லையா? “பிரபாகரன்தான் எனது தலைவன்” என்று சீமான் சொல்வதில் எவருமே கருத்துக்களை வைக்க முடியாது. அது சீமானின் தனிப்பட்ட விடயம். ஆனால் பிரபாகரன் படங்களை பெரிதாக மாட்டி, புலிக்கொடி பிடித்து மேடையில் முழங்குவதன் உள்நோக்கம் புரியவில்லையா? பிரபாகரன்தான் என் தலைவன் என்று சொன்னால் போதாதா? ஒவ்வொரு மேடையிலும் பிரபாகரன் படம் வைத்து புலிக்கொடி ஏற்றினால்தான் அவரது தம்பி, தங்கைகள் ‘சீமானின் தலைவர் பிரபாகரன்’ எனப் புரிந்து கொள்வார்களா? சீமான் போன்றவர்கள் இளம் வயதினரை உருவேற்றுவார்கள். அவர்களில் சிலர் தீக்குளிப்பார்கள். தலைவர்கள் போய் அஞ்சலி செய்துவிட்டு வருவார்கள். இப்படியானவர்களின் அரசியல் வியாபாரம் அறியவில்லையா? எங்களது ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. அடுத்தது என்ன என்று பதினைந்து வருடங்களுக்கு மேலாக எங்களுக்குத் தெரியவில்லை. இவர் ஒருத்தர் இடையில் புகுந்து ‘நாம் தமிழர்’ என்று புலிக்கொடி பிடித்துக் கொண்டு ‘அவர் பிழை இவர் பிழை’ என மேடைக்கு மேடை ஊழையிட்டுக் கொண்டிருக்கிறார். எத்தனையோ மாவீரர்களுக்குப் போர்த்தி வீரவணக்கம் செலுத்திய புலிக்கொடி இன்று சீமானின் கைகளில் இருக்கும் போது அவமானமாகத் தெரியவில்லையா? கடல் ஆமையைப் பிடிப்பதும், கொல்வதும், அதன் இறைச்சியை சந்தைப்படுத்துவதும் இலங்கையில் சட்டப்படி ஒரு குற்றச் செயல். ஆனால் சீமானோ தனக்கு பிரபாகரன் ஆமை இறைச்சி படைத்து விருந்து தந்தார் என்கிறார். ஒரு காட்சியையே சினிமாபோல் கற்பனையில் உருவாக்கி மேடைகளில் பிரபாகரனையே இழிவு படுத்தினார் என்பது ஏனோ சீமானின் தம்பி தங்கைகளுக்குப் புரியவில்லை சீமான் தனது கட்சிக் கொள்கைகளைச் சொல்லட்டும். தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்கட்டும். திராவிடக் கட்சிகளை விமர்சிக்கட்டும். இதிலெல்லாம் தலையிட நான் வருவதில்லை. ஏனென்றால் அது அவர்களது தமிழ்நாட்டு அரசியல். முதலமைச்சர் ஆனாலும் கூட, ஈழத் தமிழர்களுக்காக சீமான் ஏதும் செய்யப் போவதில்லை. இதுதான் உண்மை.4 points
-
பளார் - சுப.சோமசுந்தரம்
4 pointsபளார் (The Slap - थप्पड़) - சுப.சோமசுந்தரம் தலைப்பைப் பார்த்ததும் எது பற்றியதாக இருக்கும் என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. தற்போது சில நாட்களாய்ப் பரபரப்பாகப் பேசப்படும் கன்னத்தில் 'கை வைத்த' சமாச்சாரம்தான் என்று இந்தியத் திருநாட்டில் விவரம் அறிந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். சண்டிகர் விமான நிலையத்தில் திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் விழுந்த 'பளார்' சத்தம் தென்குமரியில் விவேகானந்தர் பாறையில் பட்டு எதிரொலித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்கனாவிற்கு அறைவிட்ட குல்விந்தர் கவுர் எனும் பெண்மணி சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர். அடித்ததற்கு அவர் சொன்ன காரணம், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை கங்கனா ரனாவத் வழக்கமான தனது அதிகப் பிரசிங்கித்தனத்துடனும் அடாவடித்தனத்துடனும் தரக்குறைவாகப் பேசியது என்பது; அது மட்டுமல்லாமல் அப்போராட்டத்தில் குல்விந்தர் கவுரின் தாயாரும் இருந்ததால், கங்கனாவின் பேச்சு தனிப்பட்ட முறையில் மனதளவில் அவரைப் பாதித்தது என்பதுவும். சங்கிகள் மற்றும் யோக நிலை (!) எய்திய மகான்களைத் தவிர நம்மைப் போன்ற சாமானியருக்கெல்லாம் குல்விந்தர் கவுரின் செயல் நியாயமாகத்தான் தெரிகிறது. அதனால்தான் அவர் ஒரு வீரப் பெண்மணியாக, சிங்கப் பெண்ணாக சமூக வலைத்தளங்களில் நம்மிடமெல்லாம் பாடல் பெற்றார். மேற்கூறிய நிகழ்ச்சியின் சங்கிலித் தொடராக சமீபத்திய சில நிகழ்வுகளும் நினைவுத்திரையில் அணிவகுப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. மணிப்பூர் கொடுமைகளின் ஆரம்பக் கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் - அங்கு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று. கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான திரு. பத்ரி சேஷாத்திரி, "நீதிபதி துப்பாக்கியுடன் மணிப்பூர் சென்று விடுவாரா ?" என்று கிண்டல், இல்லையில்லை நக்கல் செய்திருந்தார். கிண்டல், நக்கல் இவற்றிற்கெல்லாம் ஜனநாயகத்தில் எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் பத்ரி சேஷாத்திரியின் மனதில் உள்ள குரூரத்தை வெளிப்படுத்துவதாகவே அவரது நக்கல் அமைந்தது என்பதைப் பெருவாரியான மக்கள் சமூகம் உணர்ந்ததால், சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பெருமளவில் கண்டனம் பதிவாகியது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து அவரைக் கைது செய்தது தமிழ்நாடு அரசு. உடனே எழுத்தலகைச் சார்ந்த சிலர் பத்ரியை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினர். "அவர் தவறு செய்து விட்டார். இருந்தாலும் ......." என்பதோடு நிறுத்தியிருக்கலாம். ஜனநாயகத்தில் கருத்துரிமை பற்றியும் போகிற போக்கில் அவர்கள் குறிப்பிட்டதுதான் வேடிக்கை. இதற்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் 295 A பிரிவினை நீக்க அறிவுலகம் முதல்வருக்கும் பிரதமருக்கும் நீதியரசர்களுக்கும் கடிதம் எழுதலாமே ! அதனை நீக்குவதன் மூலம் மக்களின் மத நம்பிக்கைகளையும் அவர்களின் கடவுளர்களையும் எங்களைப் போன்றோர் எந்தத் தடையுமின்றிக் கிண்டலடித்து மகிழ்வாய் வாழ வழிவகை செய்வதாகுமே ! "That's offensive is not an argument" என்ற கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் (Christopher Hitchens) கூற்றினை மக்கள் சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்லும் பேரின்பம் எங்களுக்குக் கிடைத்ததாகுமே ! பத்ரி சேஷாத்திரி எழுத்தலகைச் சார்ந்த ஒரே காரணத்திற்காக எழுத்துலகம் அவருக்காக நின்றது நியாயந்தானா ? நம்மைப் போன்ற சாமானியருடன் சேர்ந்து பத்ரியின் கைதை அவர்கள் கொண்டாட வேண்டியதில்லை. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதானே இந்த விஷயத்தில் விவேகமாகத் தோன்றுகிறது ! அடுத்து கங்கனா ரனாவத்தின் ஆண் வடிவமான சவுக்கு சங்கரிடம் வருவோம். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் விசாரணையில் இருக்கும் போதே தேவையின்றிப் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சவுக்கு சங்கர் பேசியதும், மாணவி தற்கொலைதான் செய்து கொண்டாள் என்று அடித்துச் சொல்லி எல்லை கடந்ததும் பேசு பொருளானது. இது தொடர்பாக யூடியூப் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கே உரிய நையாண்டியுடன், "நான் ஒப்பாரி வைத்துக் கொண்டே பேச வேண்டுமா ?" என்று ஆரம்பித்து மனிதாபிமானம் இல்லாமல் தொடர்ந்ததெல்லாம் அவருக்கே உரிய அசிங்கத்தின் உச்சம். இந்நிகழ்வு சவுக்கு சங்கரின் சந்தர்ப்பவாதத்திற்கும் அடாவடித்தனத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவே ! பின்னர் பொத்தாம் பொதுவாகக் காவல்துறையை விமர்சித்து மாட்டிக்கொண்டார். அதனைக் கை தட்டியோ கை தட்டாமலோ வேடிக்கை பார்ப்பதை விட்டு நம்ம ஆட்களில் (!) சிலர் கருத்துரிமை பேசி ஒரு கேவலமான மனிதருக்கு வக்காலத்து வாங்கியதை என்னவென்று சொல்ல ? "ஓய் சவுக்கு, சிறையில் கை உடைந்ததற்கே அழுகிறீரே ! ஒரு மாணவியின் உயிர் போனதைக் கேலியும் கிண்டலும் செய்து அவளது தாய்க்கு எந்தளவு மனவலியைக் கொடுத்தீர் !" என்று வறுத்தெடுத்த நெட்டிசன்கள் முட்டாள்களா என்ன ! சரி, "உங்களுக்கு இதே வேலையாப் போச்சு !" என்று மேற்சென்று தம்மை இடித்துரைப்பதற்கு அவ்வப்போது நம் தோழர்கள் நமக்கு வழி வைப்பார்கள் போலும் ! மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளிலும், பத்ரி மற்றும் சவுக்கு விஷயங்களில் தமிழ்நாடு அரசின் மூலமாக வழக்குகள் தொடரப்பட்டன. 'உள்ளம் பதைக்கும்' நல்லோர் ஒதுங்கி நின்று அதனை வேடிக்கை பார்ப்பதும், சங்கிகள் கதறுவதும், சாமானியர்களாகிய நாம் மகிழ்வதும்தானே நியாயம் ! குல்விந்தர் கவுரைப் பொருத்தமட்டில் அவரையும் நம்மையும் உளவியல் ரீதியாகத் தாக்கிய கங்கனா ரனாவத்தின் மீது ஜனநாயக முறையில் வழக்குத் தொடர்ந்து விரைவில் நீதியைப் பெற்றுத் தர நம்மால் முடியுமா அல்லது கங்கனாவின் கன்னத்தில் மாற்றுக் கட்சியின் சின்னத்தைப் (கையைத்தேன் !) பொருத்தி உடனடி நீதி வழங்கும் தீரம் நம்மிடம் உண்டா? இவ்வாறு இருக்கையில் ஒட்டுமொத்த சமூகமும் குல்விந்தர் கவுரின் பக்கம் நிற்பதுதானே இயற்கை நீதி ? குல்விந்தர் கவுர் செய்தது தவறு என்று உங்களுக்குப் பட்டால் பகத்சிங் செய்தவையும் தவறு என்பீர்களா ? ஒன்று நாட்டு விடுதலைக்கானது என்றால், மற்றொன்று சமூக விடுதலைக்கானது. இப்போது வீரமங்கை குல்விந்தர் கவுரின் செயலுக்கு இன்னும் எனக்குத் தெரிந்தவரை நமது பாசறையிலிருந்து (!!) எதிர்ப்புக் கிளம்பவில்லை என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி. வருங்காலங்களிலும் இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளில் மௌனம் தொடரட்டும். நாம் ஆசை தீர ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ! https://www.facebook.com/share/p/43cYSZseaoVJGPFY/?mibextid=oFDknk4 points
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
உங்கள் மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம். பிரபாகரனை மட்டுமல்ல ஈழத் தமிழர்களது போராட்டங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வளைத்துப் போட்டு அரசியல் நடத்தும் தமிழக அரசியல் வேடதாரிகளுக்கு எதிராக எனது குரல் எப்போதும் இருக்கும்.4 points
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இதில் பிரபாகரனை என் இழுக்கிறீர்கள். இரட்டை இலை MGR உடையது. ஆனால் மைக் சின்னம்? எழுத்தில் வறட்சி தெரிகிறது. படம்வரைவதோடு மட்டும் நிறுத்திகொண்டால் இருக்கிற மரியாதையையாவது காப்பாற்றி கொள்ளலாம்!!4 points
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கந்தையர், உங்கள் சகல கருத்துக்களிலும் "தீர்வு" என்று 100 தடவைகளுக்கு மேல் எழுதியிருக்கிறீர்கள். இங்கே ஏனையோர் தீர்வைப் பற்றியல்ல பேசுகிறார்கள். அந்தக் காலப் பகுதியில் தீர்வு வருமா இல்லையா என்பதை விடுத்து இயக்கத்தைக் காப்பாற்ற, தலைமையைக் காப்பாற்ற, முக்கியமாக பொது மக்களைக் காக்க என்ன செய்திருக்க வேண்டுமென்றே பேசுகிறார்கள். நீங்கள் குறிப்பிடும்" தீர்வு" என்பது என்னவென்று உங்களுக்கே தெளிவில்லை என ஊகிக்கிறேன். புலிகள் எதிர்பார்த்த தீர்வு தமிழீழம் மட்டும் தான் என்று பல தடவைகள் மறைமுகமாகத் தெரியப் படுத்தியிருக்கிறார்கள் (நீங்களும் அவர்கள் பேச்சுவார்த்தைக்குப் போனது மட்டும் தான் தவறு என்பதன் மூலம் அதனையே தீர்வென நம்பியிருக்கிறீர்களென ஊகிக்கிறேன்). தீர்வை எந்தக் காலத்திலும் ஒரு சிங்களத் தலைவர் தன் சட்டைப் பொக்கற்றில் இருந்து தூக்கித் தர முடியாது. இது தான் 1950களில் இருந்து நாம் கண்ட சம்பவங்களின் பாடம்! எனவே, இழுபட வேண்டும், தள்ளு முள்ளுப் பட வேண்டும். தற்போது பலஸ்தீனத்தைப் பாருங்கள். அவர்கள் இரண்டாகப் பிரிந்திருந்தாலும், தங்கள் இரு தலைமைகளையும் பேணிக் காப்பதில் சில சமயங்களில் காலை முன் வைத்தும், சில நேரங்களில் (தற்போது ஹமாஸ் செய்வது போல) பின்வாங்கியும் உலக அரங்கில் அங்கீகாரத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இது சிலருக்கு பார்க்க முட்டாள் தனமாகத் தெரியலாம், ஆனால் தீர்வுகள் இப்படித் தான் அடையப் படுகின்றன. "தீர்வு இல்லையா? அப்ப வா அடிபடுவம்!" என்று அவசரப் பட்ட அமைப்புகள் தீர்வை மட்டுமல்ல, தீர்வுக்கு எடுத்து வைத்த ஆரம்ப அடிகளையும் பயனற்றதாகி விடுவர். நாமே உதாரணமாகியிருக்கிறோம்!3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣..... நேபாளம் அணியின் தலைவரும் மிகவும் வருத்தப்பட்டார்.........தாங்கள் வெல்ல வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைப்பட்டு போய் விட்டதே என்று............. பையன் சார், இந்த பிட்ச் செய்த ஆஸ்திரேலியா கம்பனி தான் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்கு பிட்சுகளை செய்யப் போகுதாமே.............😜3 points
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
போரின் இறுதிக் காலத்தில், இனப்படுகொலை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வர முன்னர் ஒபாமா இவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் காலம் தாழ்த்திய கோரிக்கை. Obama: Sri Lanka must end warfare President Barack Obama scolded both sides of Sri Lanka's quarter-century-old civil war on Wednesday, demanding that the government stop shelling hospitals and that Tamil Tigers lay down their arms. A Tamil man carries an elderly woman as he runs for safety following a shell attack at a makeshift hospital in Mullivaaykaal, Sri Lanka, on Tuesday.AP May 13, 2009, 9:22 AM EDT / Source: The Associated Press President Barack Obama scolded both sides of Sri Lanka's quarter-century-old civil war on Wednesday, demanding that the government stop shelling hospitals and that Tamil Tiger rebels cease using civilian shields. Before leaving the White House for a trip to the state of Arizona, Obama told reporters that the situation on the south Asian island could turn from a humanitarian crisis to a full-blown catastrophe. He strongly urged both sides to take steps to alleviate suffering. "Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine," Obama said on the White House's South Lawn. "This has led to widespread suffering and the loss of hundreds, if not thousands of lives." Officials in Sri Lanka said artillery shells on Wednesday tore through a hospital for a second day, killing at least 50 and crippling the medical facility. The government set off a wave of bombardments in the war zone this weekend and has killed as many as 1,000 people. 'Cannon fodder' The Sri Lanka government says its troops are not responsible for the shelling and that the military has not fired heavy weapons in the area in weeks. But Human Rights Watch says satellite images and witness testimony contradict that claim and has accused both sides of using the estimated 50,000 civilians packed into the tiny coastal strip controlled by the rebels as "cannon fodder." Obama said the United States is ready to work to end the conflict. "Now's the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first," Obama said. Amnesty International urged Obama to push for a truce and appealed to the U.N. Security Council to establish a commission of inquiry into violations of international law. Outside the White House, protesters have been chanting in recent days of Obama to take action. 'Indiscriminate shelling' Obama urged the Tamil Tigers to stop fighting and release civilians as a first step toward peace. "Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out." He also said the government should stop the "indiscriminate shelling" and the use of heavy weapons in the conflict zone. He asked the government to give the United Nations and Red Cross staff access to the 190,000 displaced civilians. "Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting and grounded in respect for all of its citizens," Obama said. "More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve." On Wednesday afternoon, the area around the hospital came under heavy shell attack, Dr. V. Shanmugarajah told The Associated Press by telephone — the third time it has come under fire this month and just . One shell landed in an administrative office of the hospital, while another hit a ward filled with patients already wounded by previous shelling, he said. Obama calls for end to violence Dr. Thurairaja Varatharajah, the top health official in the war zone, said the attack killed at least 50 people, including patients, relatives and a health aide, and wounded about 60 others. He said heavy shelling continued throughout the day. "We are unable to treat the people properly because a lot of aides have fled the hospital. We go into bunkers when there is shelling and try to treat them as much as we can when there is a lull," he said by telephone. Doctors in Sri Lanka say last weekend's warfare alone may have killed 1,000 people. Bodies left insideMore than 1,000 civilians — many with amputations or chest wounds — were waiting for treatment at the hospital when it was struck, and every 10 minutes or so another one or two died, according to a third hospital official, who spoke only on condition of anonymity because he was not authorized by the government to speak to the media. Overwhelmed doctors have been reduced to handing out gauze and bandages to the seriously wounded, the official said. More than 100 dead bodies have been left inside the compound because no one will risk burying them amid the constant shelling, he said. https://www.nbcnews.com/id/wbna307206203 points
-
ஜஸ்பிரித் பும்ரா: தோல்வியை ஆச்சரிய வெற்றியாக மாற்றும் மந்திர பந்துவீச்சாளர்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய் கிஷோர் பதவி,மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி 11 ஜூன் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது. கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம் : அது `ஜஸ்பிரித் பும்ரா’. பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாதை அமைத்து கொடுத்தார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பும்ரா வீசிய 24 பந்துகளில் 15 பந்துகள் `டாட் பால்கள்’ ஆனது. குறைந்த ஓவர்களை கொண்ட டி20 கிரிக்கெட்டில், இந்த டாட் பால்களின் மதிப்பு விக்கெட் எடுப்பதற்கு சமம் என்றே சொல்ல வேண்டும். இதனை ரவிச்சந்திரன் அஷ்வினை விட வேறு யாராலும் தெளிவாக விளக்க முடியாது. போட்டிக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஷ்வின் எக்ஸ் தளத்தில் ஒரு நீண்ட பதிவை பகிர்ந்தார்: “டி20யில் விக்கெட்டுகளை எடுப்பது ஒரு கொடுங்கனவு போன்றது. இதை நான் சொல்லும் போதெல்லாம் மக்கள் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். டி20யில் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். இது பும்ராவை போன்று பந்துவீச்சாளரின் சொந்த திறனைப் பொறுத்தது.” என்று குறிப்பிட்டுள்ளார். “பொதுவாக பந்துவீச்சாளர்கள் தவறான நேரத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பார்கள். அடுத்த ஓவரில் சக பந்துவீச்சாளர்களால் அழுத்தத்தை உருவாக்க முடியாது. மெதுவாக ஆனால் நிச்சயமாக, போட்டியின் போக்கை சுயநலமற்ற பந்துவீச்சாளர்கள் தீர்மானிக்கிறார்கள்." என்றும் அஷ்வின் பதிவிட்டிருக்கிறார். "விக்கெட்டுகளை பெறுவது இறுதி இலக்கு அல்ல" பட மூலாதாரம்,GETTY IMAGES போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ரா பேசிய வார்த்தைகள் அஷ்வினின் கூற்றை எதிரொலித்தது. பும்ராவின் எண்ணங்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்தவை என்பதையும் அவர் எவ்வளவு வியூகமாக பந்து வீசுகிறார் என்பதையும் அவரின் பேச்சு பிரதிபலிக்கிறது. பும்ரா பேசுகையில், "போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும் போது பந்துவீச்சாளராக நாம் பொறுமை இழந்து விடக்கூடும். பந்து வீசுபவர்கள் முழு பலத்துடன் சிறந்த பந்தை வீச முயற்சிப்பார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் இருக்க முயற்சித்தேன். நாங்கள் விளையாடத் தொடங்கியதும், ஸ்விங் மற்றும் சீம் குறைந்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில் நாம் துல்லியமாக வியூகம் வகுக்க வேண்டும். ஏனென்றால், பந்துவீச்சில் மாயம் செய்து விடலாம் என்று நினைத்து அவசரம் காட்டினால், எதிரணிக்கு ரன்களை எடுப்பது எளிதாகிவிடும், மேலும் அவர்கள் இலக்குக்கு ஏற்ப பேட் செய்து வென்றுவிடுவர். எனவே, நாம் வேகம் காட்டாமல் நிதானமாக செயல்பட வேண்டும். ஆம், அழுத்தத்தை அதிகரித்து, பெரிய பவுண்டரி லைனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் இருக்கும் சூழலை நம் நன்மைக்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதைத்தான் செய்து நாங்கள் செய்தோம். முதலில் அழுத்தத்தை உருவாக்கினோம், அதன்பின்னர் அனைவரும் விக்கெட்டுகளைப் பெற்றோம்.” என்றார். கடினமான நியூயார்க் ஆடுகளம் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Nassau County International Cricket Stadium) எதிர்பாராத விதமாக மிகவும் கடினமாக இருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆட்டத்துக்கு நடுவே மழை பெய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ஓவர்களில் ஆல் அவுட்டானது. . ரிஷப் பந்த் 42 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும், ரோஹித் சர்மா 13 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, ஹாரிஸ் ரஃப் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஆமிர் 2 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். எதிரணிக்கு குறைந்த இலக்கு என்று கவலைப்படாத பும்ரா "சிறு வயதில் இருந்தே பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று ஜஸ்பிரித் பும்ரா கூறுகிறார். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படும் போது, அவர்களுக்கு உள்ளிருந்து மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும். பாகிஸ்தானுக்கு 120 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்தது, ஆனால் அது பும்ராவின் நோக்கத்தில் எந்த பதற்றத்தையும் விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று தோன்றியது. பும்ராவின் பந்துவீச்சில், ஃபைன் லெக்கில் ரிஸ்வானின் கேட்சை ஷிவம் துபே தவறவிட்ட போது பாகிஸ்தான் 17 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வான் 7 ரன்களில் இருந்தார். ஐந்தாவது ஓவரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை (13) அவுட் செய்து பும்ரா முதல் விக்கெட்டை கைப்பற்றினார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் ஆக இருந்தது. 13வது ஓவரில் 73 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. திருப்புமுனையாக அமைந்த ரிஸ்வானின் விக்கெட் முகமது ரிஸ்வான் உறுதியாக நின்று விளையாடி கொண்டிருந்தார். அவர் 43 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார், போட்டி பாகிஸ்தானுக்குச் சாதகமாகப் போவதாகத் தோன்றியது. அதன் பின்னர் 15வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச வந்தார். பும்ராவின் முதல் பந்து நல்ல லென்த்தில் வீசப்பட்டது. பந்து பவுன்ஸாகி மேலெழுந்ததும், ரிஸ்வானை தடுமாற வைத்து விக்கெட்டை வீழ்த்தியது. ரிஸ்வான் அவுட் ஆனவுடன் ஆட்டம் தலைகீழாக மாறியது. இறுதியில் பாகிஸ்தானுக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜின் ஓவரில் இமாத் மற்றும் இஃப்திகார் 9 ரன்கள் எடுத்தனர், இலக்கு 12 பந்துகளில் 21 ரன்கள், ஆனால் பும்ரா 19வது ஓவரின் கடைசி பந்தில் இஃப்திகாரை (5) அவுட்டாக்கியது மட்டுமல்லாமல், மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் பாகிஸ்தான் 18 ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் சமநிலை முக்கியம் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆச்சரியமான வெற்றிக்குப் பிறகு, வாட்ஸ்அப் குழுவில் எனது சீனியர் ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது - “நல்லது, நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையிலான நல்ல போட்டியைப் பார்க்க முடிந்தது. ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் போட்டியின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார். போட்டிக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா இதேபோன்ற கருத்தை ட்வீட் செய்தார், “பந்துவீச்சுக்கும் பேட்டிங்கிற்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் போது மட்டுமே எனக்கு போட்டி மீது ஆர்வம் இருக்கும். பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தால், எனக்கு அந்த போட்டியை பார்க்க விருப்பமில்லாமல் நான் டிவியை அணைக்க விரும்புகிறேன். “ என்று பதிவிட்டிருந்தார். `வெல் டன்’ என்று சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் சிறப்பான ஆட்டத்திற்கு முன்னாள் வீரர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில், “இந்திய ஊடகங்கள் விராட் கோலி போன்றவர்கள் மீது ஆர்வம் காட்டுகின்றன. தொடர்ந்து பேட்ஸ்மேன்களை பாராட்டுகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா எந்த ஆரவாரமும் இல்லாமல் தனித்து வெற்றி பெற்றார். பும்ரா தற்போது இந்திய அணியின் சிறந்த வீரர். முகமது கைஃப் எக்ஸ் தளத்தில் , "ஜஸ்பிரித் பும்ரா ஆகச் சிறந்த ஆட்டத்தின் வெற்றியாளர்- எந்த வடிவத்திலும் எந்த சூழ்நிலையிலும் உலகின் எந்த மூலையில் ஆட்டம் நடந்தாலும் அவர் வெற்றியாளர் தான்” வீரேந்திர சேவாக் கூறுகையில், "தோல்வியை வெற்றியாக மாற்றக்கூடியவர் பும்ரா. என்ன ஒரு அபாரமான ஆட்டம். இந்த நியூயார்க் வெற்றி சிறப்பு வாய்ந்தது" என்று கூறினார். விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி ஒரு வருடத்திற்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்தபோது தனது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பிய விமர்சகர்களை அமைதிப்படுத்தினார். முதுகு அறுவை சிகிச்சை காரணமாக, அவர் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட பல முக்கியமான போட்டிகளில் விளையாடவில்லை. அவர் கடந்த ஆண்டு அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை 2024 இல் சிறப்பாக விளையாடினார். போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பும்ரா, "ஒரு வருடத்திற்கு முன்பு இதே நபர்கள் தான் நான் மீண்டும் விளையாட முடியாது, என் கேரியர் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள், இப்போது அவர்களின் கேள்வி மாறிவிட்டது" என்று கூறினார். சிறப்பாக விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கேப்டன் ரோஹித் ஷர்மா பும்ராவை பாராட்டினார், "பும்ரா அற்புதமாக விளையாடி வருகிறார், அவரின் திறனை நாங்கள் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், அதைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்த உலகக்கோப்பை முடியும் வரை அவர் இந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் பந்து வீச்சில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES குறுகிய காலத்தில் பெரிய சாதனைகள் ஜஸ்பிரித் பும்ரா குறுகிய காலத்தில் பெரிய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் இவர். கிரிக்கெட்டின் அனைத்து மூன்று ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை எட்டிய முதல் பந்து வீச்சாளர் பும்ரா. பும்ரா 2013 இல் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுடன் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார். அணியை ஐந்து முறை சாம்பியனாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 2019 ஆம் ஆண்டில், அவர் ஐசிசி ஒரு நாள் போட்டியின் ஆண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பும்ரா தனது முதல் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியையும், தனது முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தையும், முதல் டி20யில் டேவிட் வார்னரையும், முதல் டெஸ்டில் ஏபி டி வில்லியர்ஸையும் வீழ்த்தியுள்ளார். `ஆபத்தான பந்துவீச்சாளர்’ பட மூலாதாரம்,GETTY IMAGES 30 வயதான ஜஸ்பிரித் பும்ரா, அவரது வழக்கத்திற்கு மாறான அதிரடி பந்துவீச்சு மற்றும் திறமையால், உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பந்து அவரின் கையை விட்டு வெளியேறினால், அதன் போக்கை பேட்ஸ்மேன்கள் கணிப்பது கடினம். ஐபிஎல் போட்டியின் போது, லசித் மலிங்கா துல்லியமான யார்க்கர்களை வீசுவதில் திறமை வாய்ந்தவராக பார்க்கப்பட்டார். அவரின் டெத் ஓவர்களை விளையாடுவது எந்த பேட்ஸ்மேனுக்கும் எளிதானது அல்ல. நிஜத்தில் பந்துவீச்சு அவ்வளவு வேகமாக இல்லாத போதும், பேட்ஸ்மேன்களுக்கு மிக வேகமாக பந்து வீசப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவது அவரது தனித்துவமான பாணி. ஆல்-ரவுண்டர் பென் கட்டிங் ஒரு இணையதளத்தில் அளித்த பேட்டியில், "பந்தின் வேகத்தை மதிப்பிடுவது பேட்டிங்கின் முக்கிய பகுதியாகும். சிறந்த வீரர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவசரப்படாத அவர்களின் திறமை தான்” என்றார். https://www.bbc.com/tamil/articles/cw44g4ywynjo2 points
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
ஓ அப்ப சண்டையில் விருப்பமில்லாட்டியும் சண்டையில் ஈடுபடும் எந்த தரப்பும் தமது பாதுகாப்புக்கு சாதாரண பொதுமக்களை தடுத்துவைத்திருக்கலாம் என்பது ஜெர்மனிக்கு ஓடிவந்து பாதுகாப்பாய் இருந்துகொண்டு எழுதும் உங்கள் கருத்து..உங்கட பிள்ளையள் அப்படி வைக்கப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும் உங்களுக்கு.. ஜெனிவா உடன்படிக்கையின் ஒரு சரத்து சொல்லுது போரில் அப்பாவி மக்கள் பணயக்கைதிகள் ஆக்கப்படக்குடாது என்பது.. அந்த உடன் படிக்கையின் பிரகாரம் அகதி அந்தஸ்து எடுத்து பாதுகாப்பா வாழ்ந்து கொண்டு இருக்கிறியள்..கொஞ்சமாவது மெச்சூரட்டா எழுதுங்கப்பா.. உங்ககிட்ட எல்லாம் என்னா பேசமுடியும்.. உங்களுக்கு பதில் எழுதுறவங்க எல்லாம் உங்ககிட்ட எப்புடி சிக்கிட்டிருக்காங்க பாத்தியளா.. முதலில் திறந்துவிட்டு போறவர்கள் போகலாம் என்றுவிட்டு உண்மையில் விருப்பப்பட்டு நிக்கும் மக்களுடன் நின்று சண்டைபிடித்திருக்கவேண்டும் பேரழிவு வரப்போகுது என தெரிந்த கிளிநொச்சி வீழ்ந்ததன் பிந்தைய நாட்களில்.. நமக்கு பிடித்தவர்களாய் இருந்தாலும் அது தவறுதான்.. அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு ஒரு வெட்கமும் இல்லை..2 points
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் வந்து வாழ்கின்ற ஜேர்மன் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான உரிமைகளுக்கு மிகவும் வலுவாக சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹிட்லரின் நாசிகள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொன்று குவித்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டபின் (இரண்டாம் உலகப் போரின் பின்) இவர்களுக்கான உரிமைகள் வழங்குவதில் ஜேர்மனி முன்னனி வகிக்கின்றது ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு registered partnerships எனும் வகையில் 2001 இல் சட்ட ரீதியில் வழங்கிய ஜேர்மனி, பின்னர் 2017 இல் அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேலும் தளர்வுகளை கொண்டு வந்து ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மேலும் மேலும் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள், அந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும், அதாவது கொல்லப்பட்ட வேண்டும் என்றும் விரட்டப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றீர்கள். தனக்கு அபயம் அளித்த ஒரு நாட்டில் உள்ள, சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ள ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றீர்கள். இது தான் ஜேர்மன் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கைமாறு! நன்றி கெட்ட உலகம் இது.2 points
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
உண்மையான வரிகள். நன்றி. தீர்வு என்பது சடப்பொருள் அல்ல. இரு முரண்பட்ட அரசியலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் கூட்டம் அல்லது இருவேறு பிரிவுகளாக பிளவுபட்டு ஒன்றின் மீது மற்றது ஆதிக்கம. செலுத்தும் நிலையில் அந்த அரசியல் தலைமைகள் தமக்குள் இருக்கும் பரஸ்பர அவநம்பிக்கைகள், வெறுப்பு ஆகியவற்றை களையும் நோக்கிலான பாதையில் தொடர்சசியான அர்பணிப்பான பேச்சுவார்ததைகள் மூலம் இருவருக்கும் நன்மை பயக்கும் ஒரு புள்ளியான ஒரு தீர்வை அடைதல் என வரும். இரு தரப்பும் ஒன்றாக வேலை செய்யாமல் தீர்வு வராது. அதனால் தான் ஆங்கிலத்தில் Negotiation என்ற அழகான வார்த்தையைப் பிரயோகத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பாதையில் பல சவால்கள் வருவது இயற்கை. அந்த சவாலை எதிர்கொள்ளும் துணிவு மனப்பக்குவம், பற்றுறுதி இருவருக்கும் அவசியம். ஆனால், துரதிஷரவசமாக இலங்கையில் நடை பெற்ற அத்தனை பேச்சைவார்ததைகளும் இரு பகுதியும் தம்மை ஆசுவாசப்படுத்தவும் யுத்தத்துக்கு தயார்படுத்தவுமே பயன்படுத்தின. அதை தமது புத்திசாலித்தனம் என்றும் எண்ணி தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டன. என்னைப் பொறுத்தவரை 2002 என்பது தீர்வு காண்பதற்கு இந்த தலைமுறையில் இலங்கைக்கு கிடைத்த அருமையான இறுதி சந்தர்ப்பம். தற்போதைய நிலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமிழர் தரப்புக்கு நம்பிக்கை தரும் அரசியல் சூழ்நிலையை காணமுடியவில்லை.2 points
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும்.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உதுக்கு தான் இதுக்கையே படுத்து கிடவுங்கோ என்கிறது.2 points
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
அதாகப்பட்டது, பிரபாகரனது பெயரைப் பாவித்து வியாபாரம் செய்வதற்கு எமக்கு மட்டும்தான் உரிமை உள்ளது. அதில் யாரும் பங்கு கேட்கக்கூடாது. கேட்டால் கெட்ட கோபம் வரும் ..... 🤣2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றியீட்டிய கிருபன், நிழலி, பிரபாவுக்கு வாழ்த்துக்கள். 👍 வித்தியாசமான கேள்விகளுடன் போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. 👌 போட்டியில் பங்கு பற்றிய உறவுகளுக்கு வாழ்த்துக்கள். 🙂2 points
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
புலிகளைத் தோற்கடித்து, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முற்றாக நசுக்கிவிடவென்று சிங்கள இனவாதம் உருவாக்கிய இராணுவ இயந்திரம் இது. சுமார் மூன்று இலட்சம் பேரைக் கொண்ட ஈவு இரக்கமில்லாத கொலை இயந்திரம். புலிகளுக்கெதிரான போரில் போதைவஸ்த்துக்களைப் பாவித்து படுகொலைகளில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவத்தின் முன்னணி படைப்பிரிவுகளின் இடைநிலைத் தளபதிகள் முதல் சாதாரண இராணுவத்தினர் வரை கூறியிருக்கிறார்கள். கொல்வது அவர்களின் தொழில். இன்று ரஸ்ஸியாவில் இவர்கள் போரிடுவது வெறும் பணத்திற்காக மட்டும்தான் என்று நான் நினைக்கவில்லை. கூலிப்படைகளுக்கே உரித்தான கொலைவெறியும், ஈவு இரக்கமற்ற போர் யுக்திகளும், தொடர்ந்து கொலைகளில் ஈடுபடவேண்டும் என்கிற உளவியல் ஆக்ரோஷமும், போரில் புலிகளையே வென்றுவிட்டோம் என்கிற இறுமாப்புமே இவர்களை ரஸ்ஸியாவில் போரிட வைத்திருக்கிறது. இவ்வாறான மனித உருவில் உலாவரும் கொலைக்கருவிகளை நாட்டில் வைத்திருப்பதே அரசிற்குப் பாரிய பிரச்சினையாக மாறி வருகிறது. ஆகவேதான் சர்வதேசப் போர்களில் கூலிப்படைகளாக இவர்கள் இணைவதை மறைமுகமாக அரசும் அனுமதிக்கிறது. போரில் தான் பயன்படுத்திய ஆயுதங்களையும், புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் சர்வதேசக் கடற்பரப்பில் எவர் கேட்டாலும் விற்கும் கைங்கரியத்தில் கோட்டாபயல் ஈடுபட்டிருந்தான். அவன்கார்ட் எனும் தனியார் ஆயுத வியாபார நிறுவனமே அவன் உருவாக்கியதுதான். அன்று ஆயுதங்களை விற்றான், இன்றோ மனிதவுருவில் கொலைக்கருவிகளை விற்கிறான்.2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியை திறம்பட நடத்தி உற்சாகமான முறையில் முடிவுகளை அறிவித்த சகோதரன் கந்தப்பு அவர்கட்கும் போட்டியில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் போட்டியில் வென்ற கிருபன், நிழலி மற்றும் பிரபா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியை நடத்தியமைக்கு பாராட்டும் நன்றியும். ஜிக்கும் நிழலிக்கும், பிரபாவுக்கும் பாராட்டுகள். நானும் டேட்டாவை தான் நம்பினேன்…விஜய பிரபாகர், செளமியா நூலிழை தோல்விகள் அவர்களை போலவே என்னையும் தடக்கி பொழுது விட்டது. நயினார் தோல்வி, விசிக வட தமிழகத்தில் பாமக எதிர் கூட்டணியில் வெற்றி - எதிர்பாராதது. நன்றி. நானும் இப்படித்தான் செய்கிறீர்கள் என்பதை ஊகித்துவிட்டேன்.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
22வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி ஆரொன் ஜோன்ஸனின் 52 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 22 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 38 2 பிரபா USA 36 3 ரசோதரன் 36 4 ஈழப்பிரியன் 34 5 சுவி 34 6 நந்தன் 34 7 வாதவூரான் 32 8 ஏராளன் 32 9 குமாரசாமி 30 10 தமிழ் சிறி 30 11 கிருபன் 30 12 கந்தப்பு 30 13 வாத்தியார் 30 14 எப்போதும் தமிழன் 30 15 நீர்வேலியான் 30 16 வீரப் பையன்26 28 17 நிலாமதி 28 18 தியா 28 19 புலவர் 28 20 P.S.பிரபா 28 21 நுணாவிலான் 28 22 அஹஸ்தியன் 28 23 கல்யாணி 28 குறைந்தது இன்னும் ஒரு கிழமைக்கு @goshan_che ஐ முதல் படியில் இருந்து விழுத்தமுடியாது!2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.2 points
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஊக்கு ஓர்பால் தெரிவை ஊக்குவிப்பதற்கான காரணங்களாக கீழே வருபவைகளை Copilot அடையாள காட்டியுள்ளது 👇 என்னைப்பொறுத்தவரை குடும்ப அமைப்பு முதான் குழந்தைகளுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது என்பது என் நம்பிக்கை.. அதனை பலவீனப்படுத்தும் எதனையும் ஆதரிக்கவ்முடியாது. மேற்கில் குடும்ப அமைப்பை ஊக்குவிக்கும் எந்த ஒரு விளம்பரத்தையும் யாரேனும் பார்த்ததுண்டா? கண்டவர்கள் பதில் கூறவும்”. The support for same-sex relationships in Western countries is influenced by a variety of factors, including cultural values, economic development, and political systems. Here are some key reasons why Western societies may encourage and support same-sex relationships: Human Rights and Equality: Western countries often emphasize human rights and equality for all individuals, including those in the LGBTQ+ community. The recognition of same-sex relationships is seen as an extension of these rights1. Democratic Values: Democracies promote freedoms such as freedom of expression and assembly, which extend to supporting the rights of minority groups, including LGBTQ+ individuals1. Economic Development: There is a correlation between economic development and the support of LGBTQ+ rights. Wealthier nations tend to be more tolerant and supportive of diversity, including sexual orientation2. Separation of Church and State: In many Western countries, there is a clear separation between religious institutions and government policies, which allows for the support of same-sex relationships regardless of religious views on the matter2. Cultural Shifts: Over time, Western societies have experienced cultural shifts that lead to a broader acceptance of different lifestyles and family structures, including those of same-sex couples3. Legal Recognition: Many Western countries have legalized same-sex marriage or recognize civil unions, providing legal support and recognition for same-sex couples1. It’s important to note that attitudes towards same-sex relationships can vary widely even within Western countries, and there is still ongoing debate and discussion on this topic. However, the general trend in many Western societies has been towards greater acceptance and support for same-sex relationships. பின்குறிப்பு: மேற்கில் வசிப்பதால் மேற்கில் கூறப்படும் எல்லாவற்றையும் தலைமேற் சுமந்து, காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய என்னால் முடியாது. சிலருக்கு அதுதான் தொழிலே. (நிழலியைக் குறிப்பிடவில்லை)1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
'எங்கப்பா குதிருக்குள் இல்லை...' என்று இரண்டு பேருமே வாலண்டியரா வருகிறீர்களே.........1 point
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கு சாத்திரம் கணிச்சு குடுத்த சாத்திரி அந்த மாதிரி....🤣 நான் ஒரு சதமும் குடுக்கேல்லை கண்டியளோ.....😂1 point
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஊக்குவிக்காமல் இருப்பது என்றால், வெளிப்படையாக இருக்காமல் ஒளிந்திருத்தல்😎. தமிழ் கல்யாண வீடுகளில் துணையிழந்தவர்கள் முன்னே வராமல் ஒளிந்து நிற்பது போல! அல்லது 83 கலவரத்தின் பின்னர் கொழும்பில் பஸ்ஸில் பயணம் செய்த தமிழ் பெண்கள் நெற்றிப் பொட்டு இல்லாமல் பயணம் செய்ததைப் போல! ஓரினச்சேர்க்கையாளர்கள் இப்படி மறைவாக இருந்தால், இந்த homophobic ஆக இருப்பவர்களுக்கு மனக்கிலேசம் ஏற்படாது, எனவே அவர்கள் "நாம் நோர்மலான ஆட்கள்" என்று பெருமிதமும் அமைதியும் கொள்வர். இங்கே யாருக்கு உளவள ஆலோசனை / சிகிச்சை தேவை என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது இப்போது😂!1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களைப் போல மைதானத்திலும் பலர் நீலநிறத்துடன் இருந்து அமெரிக்கா ஆறு அடிக்கும் போதும் துள்ளிக்குதிக்கிறார்கள். சேம் பிளட். சூப்பர் 8 க்குள் வரமாட்டார்கள் போல. இலங்கை கப் தூக்கும் என்றவர்கள் எத்தனை பேரோ?1 point
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
'......pledge allegiance to the flag.............' ..........🤣. அப்படி ஒரு நிலை வந்தால், அமெரிக்கா அந்தச் சண்டையில் ஏற்கனவே தோற்று விட்டது என்று அர்த்தம்....சமையலுக்கு கூட லாயக்கில்லாத ஆளுங்க...... 👍.... இப்ப இது ஞாபகத்திற்கு வருகின்றது.1 point
-
பளார் - சுப.சோமசுந்தரம்
1 pointஇந்தியாவில் பலருக்கு பளார் தேவை. கடந்த மாநில தேர்தலில் நாம் வென்றவுடன் போய் மணல் அள்ளுங்க எவன் தடுக்குறான் என்று நான் பார்கிறேன். என்று பொலிசைப் பார்த்து சவால் விட்டவரை அரசு எதுவுமே செய்யவில்லை.1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
முதல் 4 கேள்விக்கும் தேர்தல் வாக்குகள் வர வர புள்ளிகள் வழங்கினேன். மறுநாள் வேலைக்கு செல்லும் போது புகையிரதத்தில் பயணிக்கும் போதும் , வேலையில் ஒய்வு கிடைக்கும் போது இலகுவாக புள்ளிகள் வழங்கக்கூடிய கேள்விகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கினேன். கைதொலை பேசியினுடாக கேள்விகளையும் பார்த்து விடைகளையும் பார்த்து புள்ளிகளை வழங்கினேன். பிறகு வந்த நாட்களில் வீட்டில் இருந்து வேலை செய்ய கூடியதாக இருந்தினால் நேரம் எடுத்து சிலரை ஒருநாள் முதல்வராக்கினேன். அப்பொழுது நீங்கள் உட்பட வேறு சிலரையும் முதல்வராக்கலாமென்றால் உங்களுக்கும் அப்பொழுது முதல்வராக இருந்தவர்களுக்குமிடையிலான புள்ளிகள் அதிகமாக இருந்தது. என்ன செய்தாலும் முதல்வராக்க முடியாது என்று உணர்ந்தேன்.1 point
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அதனால் தான் சொன்னேன், காலம் தாழ்த்திய கோரிக்கை என்று. புலிகள் ஒபாமா சொன்னதைக் கேட்டு, அவ்வாறு செய்து இருந்தாலும் மகிந்த அரசும் இந்தியாவும் போரை நிறுத்தி இருக்காது. ஏனெனில் முற்று முழுதான வெற்றியை அடைய முடியும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு கிளிநொச்சி வீழ்ந்த பின், வன்னியில் ஒரு சிறு நிலப்பரப்புக்குள் புலிகள் சுற்றிவளைக்கப்பட்ட பின் ஏற்பட்டு இருந்தது. முக்கியமாக ஆனந்தபுர சமர் (மார்ச் 30, 2009) இன் போது புலிகளின் முக்கிய தளபதிகள் எல்லாம் கொல்லப்பட்ட பின் இந்த நம்பிக்கை அவர்களுக்கு 100 வீதம் ஏற்பட்டு இருந்தது.1 point
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கதை தானே அவிழ்த்து விடுங்க ஆனால் யாழ் களத்தில் அது சரிவராது..1 point
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
https://www.theguardian.com/world/2009/feb/05/sri-lanka-ceasefire-tamil-tigers1 point
-
வாழும் போதே கொண்டாடுவோம்.
1 point1 point
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ பெண் : மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே பெண் : இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே பெண் : இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள சுகம் என்னென்று சொல்ல நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம் ஓ…. ஆண் : அங்கே அங்கே வந்து வந்து கலக்கும் வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார் ஆண் : என் நெஞ்சமோ உன் போல அல்ல ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம் பெண் : இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் ஓஓ ஆண் : { மனதிலே முன்னூறு உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே } (2) ஆண் : { தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே ........! ---இதுவரை இல்லாத உணர்விது ---1 point- இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
அது அப்படியில்லை. அவர் சீமான் பெயரை சொல்லிவிட்டார் என்று சிலருக்கு கொதிப்பு!1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆளுக்கொரு புள்ளி. நமக்கு தான் முட்டை. இவரை ஏன் அனுமதித்தோம் என்று பலர் சினைப்பருடன் சுற்றுகிறார்கள். எப்ப போட்டுத் தள்ளுகிறார்களோ தெரியாது.1 point- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
நிஜமாகவே சாதி அரசியல் தாண்டி வருமா தமிழ்நாடு? விசிகவிற்கு வாக்களிக்கும் இளைஞர்கள் என்றாவது நாதகவிற்கு வாக்களிப்பார்களா? ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுடன் வேலை மற்றும் விளையாட்டு என்று பல வருடங்களாக பழகியதில், இதுவரை நாதகவிற்கு வாக்குப் போடும் ஒருவரை கூட நான் கண்டதில்லை. வெகு சிலரைத் தவிர, மற்றயோர் எல்லாம், வயது வேறுபாடின்றி, 'அவர்களின் ஆள் பார்த்தே' வாக்களிக்கின்றனர். பெரிய கட்சிகளும் அதற்கேற்பவே வேட்பாளர்களை நிற்பாட்டுகின்றன. விதிவிலக்கு ஓரிரு நட்சத்திர வேட்பாளர்கள் மட்டுமே. ஒரு இளைஞன் சிறிது வித்தியாசமாக இருக்கின்றான். இனத் தலைவர், குலத் தலைவர் என்று இரண்டு தலைவர்களை ஆராதிக்கின்றான். இனத் தலைவராக சீமானை வரிந்து உதவிகளும் செய்கின்றான். ஆனால் அவனுடைய மற்றும் அவனின் குடும்ப வாக்குகள் என்றும் குலத் தலைமைக்கே. எப்போதும் அவன் மாம்பழத்திற்கே வாக்குப் போடுவான். சீமானின் வீடியோக்களை அடிக்கடி அனுப்புவான். ஆனால், தேர்தலில் வாக்களிக்கும் சமயங்களில், 'இது வேற - அது வேற' என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றான். கமலுக்கும் இதே போன்ற ஒரு பிரபலம் தான் இளைஞர்களிடையே இருக்கின்றது. இதன் பின்னர் சீமான் அவர்கள் இன்னும் பெரிதாக மேலே போவார் என்று எதிர்பார்க்க முடியாது. அரசியலில், தேர்தலில் வரும் மாற்றங்கள் படிப்படியானவை அல்ல, அவை குறுகிய காலத்தில், சில தேர்தல்களிலேயே நாலு கால் பாய்ச்சலில் நடக்கவேண்டும்.1 point- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இது நல்ல கேள்வி சீமான் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் பிரபாகரன் தனது அண்ணன் என்றும் மெடல் என்றும்.2009 இருந்து பிரசாரம் செயது வருகிறார் இன்று சீமானின். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வீதம் 8,1 ஆகும் பிரபாகரனை வைத்து பிரசாரம் செய்தபடியால். தான் இவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்று நம்புகிறேன் இந்தியாவுக்கு பிரபாகரனை பிடிக்காது என்பது உண்மை ஆனால் தமிழ்நாட்டில் 100% தமிழருக்கும் பிரபாகரனை பிடிக்காது என்று சொல்லி விட முடியாது மேலும் பிரபாகரனை பிடிக்காதவர்களுக்கும். அவரது போராட்டம்,.போராட்ட முறை,.. .கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு உயிர் உள்ளவரை போராடியது ......இப்படி பல காரணங்கள் பிடித்து உள்ளது எனது நம்பிக்கை பிழையானது என்று நான் நிறுவ முடியாது சீமானால். தான் அது முடியும்,.......அவர் பிரபாகரன் பற்றி பிரசாரம் செய்வதை தவிர்த்து அடுத்த தேர்தலை சந்திக்கட்டும் அமோக வெற்றி பெற்றால் எனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக்கொள்ளலாம் 🙏 அப்படி எனறால் ஏன் படம் வைக்க வேண்டும் ?? அவரது போராட்டம் பற்றி ஏன் கதைக்க வேண்டும்?? தவிர்த்து விடுவது தானே !!! எனது கருத்துகள் பிழையாகவுமிருக்கலாம் ஆனால் அது நிறுவ வேண்டும் ..செயல்முறையுடன் நிறுவ வேண்டும் உங்களால் முடியுமா??1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்பு அண்ணாவுக்கும் போட்டியில் வென்ற பெரியப்புக்கும் வாழ்த்துக்கள்..........................1 point- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
ராஜீவ் காந்தி கொலைக்கு பின் புலிகளை தமிழ் நாட்டில் என்ன இந்தியாவுக்கே பிடிக்காத போது பிரபாகரனின் படத்துக்கு வாக்கு போடுவார்கள் என எப்படி சொல்கிறீர்கள்?1 point- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
பிரபாகரன் படத்தை வாக்குச் சீட்டில் போடவா போகிறார்கள் அதைப் பார்த்து அதன்மேல் புள்ளடியிடுவதற்கு? சுத்த கேனைத்தனமான கருத்து. நாதக பிரபாகரன் பெயரை உச்சரிப்பதுதான் பலருக்கு நாதக மீது கடுப்பை ஏற்படுத்துகிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிரபாகரன் என்கிற பெயரைக் கேட்டாலே பலருக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. 😁1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்களும் தேடிக் களைத்து கைவிட்டுவிட்டோம். அவாஸ்ற்ரை நம்பி யாழைக் கைவிடவேண்டாம்👻1 point- நன்றி கெட்ட உலகமிது 😡
1 pointமரின் லு பென்னுக்கும், அவரின் தந்தை லு பென்னுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அவர் எல்லா இன-பிரான்சியர் அல்லாத, வெள்ளை தோல் அல்லாதவரையும் எதிர்த்து அரசியல் செய்தார். ஆனால் அது வெறி அவுட் ஆகாது என தெரிந்து கொண்டு - packaging மாத்தி, பிரெஞ்சு குடிகள் இல்லாதோருக்கு எதிரான அரசியல் செய்கிறார் மெரின். இது யூகே யில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்க்கப்பட்ட பாலிசிதான். எப்படி? இப்படி👇 1. 70, 80,90 களில் National Front, British National Party என சகல பிரித்தானியர், ஐரிஷ் அல்லாதோருக்கும் எதிரான வெளிப்படையான இனதுவேச அரசியல் செய்து மூக்குடைபட்டார்கள். 2. 2000 களில் நாம் இனத்துவேசிகள் அல்ல, ஐரோப்பிய மட்டற்ற குடிவரவு, ஐரோப்பிய யூனியனுக்கு எதிரானோர் மட்டுமே என UKIP ஐ ஆரம்பித்து - சிறுக சிறுக, கிழக்கு ஐரோப்பியர் மீது வெறுப்பை வளர்த்து - பிரெக்சிட்டை ஸ்தாபித்தார்கள். பிரெக்சிட் வாக்கு நேரம், இவர்கள் பல ஆசிய, ஆபிரிக்க வம்சாவழி வாக்காளரையும் கவர்ந்தார்கள். என்ன சொல்லி? நாம் உங்களுக்கு அல்ல, கிழக்கு ஐரோப்பியருக்கு மட்டுமே எதிரானோர். பிரெக்சிட்டின் பின் உங்களுக்கு சம்பளம் கூடும், உங்கள் நாட்டில் இருந்து ஆட்களை எடுப்பது இலகுவாகும் என பூச்சுற்றி. 3. இவ்வாறு பிரெக்சிட்டை நடத்தி முடித்த கையோடு, UKIP ஐ கலைத்து விட்டு, அடுத்து Reform UK என ஒரு பார்ட்டியை ஸ்தாபித்து இப்போ பழமைவாத கட்சியை hostile takeover செய்யும் நிலைக்கு வளர்ந்து விட்டார்கள். இப்போ இவர்களின் பிரதான எதிரி சட்ட, சட்டபூர்வமற்ற வகையில் நடக்கும் குடிவரவு. அதாவது ஆசிய, ஆபிரிக்க நாட்டில் இருந்து வருவோர், வந்து இன்னும் நிரந்தர வதிவுரிமை அடையாமல் இருப்போரே இப்போ இவர்களின் இலக்கு. 4. இதையும் பிரெக்சிட் போல் முடித்த பின் - அடுத்த இவர்களின் இலக்கு? இங்கே குடியேறி, பிரஜையும் ஆகி விட்ட வெள்ளை அல்லாதோர். அதாவது நீங்களும், நானும், ரிசி சுனாக்கும், சஜித் கானும்🤣. இங்கே படிமுறை 1 முதல் 4 வரை இந்த கட்சிகளை நடத்தியோர், பணம் கொடுத்தோர் எல்லாரும் ஒரே இனவாத சிந்தனை உள்ளோரே. காலத்துக்கேற்ப தம் packaging ஐ மாற்றி கொள்கிறனர். பிரான்சில், தந்தை லிபென் நின்றது படிமுறை 1 இல். மகள் மெரின் நிற்பது படிமுறை 2இல். ஆகவேதான் இந்த விஷ கிருமிகளை அது யூகே, பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, தமிழ் நாடு, இலங்கை எங்கேயும் எந்த காரணத்துக்காகவும், அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஆதரிக்கவே கூடாது. இந்த இனவாத கிருமிகளை விட ஊழல் வாதிகள் பரவாயில்லை. ஓம்…நீங்கள் கூட கொஞ்சம் ஆவலுடன் யாழில் எழுதி இருந்தீர்கள். நான் கொஞ்சம் பயந்துதான் இருந்தேன். நல்லவேளையாக யாருக்கோ இவரை ஆப் செய்யும் ரகசியம் தெரிந்துள்ளது. அதனால் இத்தாலியும், ஐரோப்பாவும் கொஞ்சம் நிம்மதியாக உள்ளன. அல்லது இவர் வாக்குக்காக இனவாதம் பேசும் ஆளாகாவும் இருக்கலாம். ஆனால் எல்லாரும் இவரை போல் இருக்க மாட்டாகள். கிட்டதட்ட நூறு வருடம் முன் அடோல்ப் என்ற ஒருவருக்கு இதே வாய்ப்பு கிடைத்த போது நடந்ததை மறக்க கூடாது.1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
1 point- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு” அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம் பெயர் தான் என்னவோ தமிழ் பொது வேட்பாளர. வேண்டாம் என்பது கொழும்பு வாழ் மக்களால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத. ரணிலுக்கு சுமத்திரன். எப்படி தமிழ் மக்கள் மத்தியில் இது ரணிலின். பிரசாரக் கூட்டமென்று சொல்லி பிரசாரம் செய்ய முடியும்??. கொழும்பு வாழ் மக்கள் யார் சொல்லி ரணிலுக்கு வாக்கு போடவில்லை?? இது பற்றி சுமத்திரன். ஏன். பேசுவதில்லை?? ஆனால் 2005 இல் வாக்கு போடவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறார. ஏன்?? இன்றைக்குக்கூட ரணில் ஐனதிபதி தான் தமிழருக்கு சுயாட்சி வழங்கலாம் ஏன்? வழங்க இல்லை ?? அதாவது விருப்பமில்லை 2005 இவரை தெரிவு செய்திருந்தால் சுயாட்சி வழங்கி இருப்பாரா?? இந்த தேர்தலிலும் இவரை தெரிவு செய்தால் தமிழருக்கு சுயாட்சி வழங்குவாரா?? இல்லை இந்த ரணில் வாழ் நாள் அரசியல்வாதி. இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதாவது உண்டா??1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆஹா..இந்த திரியை இன்று யாழ் வந்ததால் காண நேர்ந்தது. 😍 யாழ்களம் வந்ததாக பாஞ் சொல்லியிருந்தார். மூன்று யாழ் உறவுகளும் சந்திப்பு வைபவம் மிக அருமை. மட்டற்ற மகிழ்ச்சி. நான் தமிழ் நாட்டை சேர்ந்திருந்தாலும், ஈழ உறவுகளின் நேசத்தையும், பாசத்தையும் அவர்களுடன் பழகியதில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணன் பாஞ் அவர்களை இருமுறை நேரில் சந்தித்து பிரிந்தபோது கண் கலங்கியது உண்மை. மூவரின் சந்திப்பை பற்றி படிக்க, படிக்க யாழை சிலகாலம் மறந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன். இந்த பாசம், நேசம் என்றும் வாழட்டும்..🙏1 point - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.