Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46790
    Posts
  2. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2137
    Posts
  3. சுண்டல்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    24
    Posts
  4. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    6
    Points
    35602
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/01/24 in all areas

  1. சம்மந்தர் ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! ஆயுத போராட்ட காலத்தில் இலங்கையில் அரசியலில் தமிழ் அரசியல்வாதிகள் செல்லாக்காசுகளே. இந்த காலத்தில் ஆயுதங்களே பேசின. நடைபெற்ற தமிழ் அரசியல் ஆயுத முனையிலேயே நடைபெற்றது. இந்தவகையில் பார்த்தால் சம்மந்தன் ஐயா தன்னால் முடியுமான அரசியலை தாயகத்தில் செய்துள்ளார்.
  2. சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும். இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம். என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை. பேச்சு வன்மை குறைந்தும் சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.
  3. தாயக தமிழ் அரசியல் வெறுமை : வரட்சி : இடைவெளி : இயலாமை : நம்பிக்கையீனம் இப்படி பல பதங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றுக்கு சம்பந்தர் காரணமாக முடியாது. பொறுப்பு கூறவேண்டியவர்கள் ஆயுதங்களுடன் மெளனித்துவிட்டார்கள். மூழ்கிய கப்பலுக்கு சம்பந்தரை கப்டனாக போட்டுவிட்டு கப்பலை சரியாக ஓட்டவில்லை என குறை கூறலாமா? தமிழர் தாயக சரித்திரத்தில் சம்பந்தர் ஐயா ஒரு வழிப்போக்கன். சுமந்திரன், சிறீதரன், மாவை இவர்களும் இந்த பட்டியலிலேயே அடங்குவார்கள். மக்களுக்கு அரசியலில் நம்பிக்கை உள்ளதா என்பதே சந்தேகம். இப்போதைக்கு தமிழ் அரசியல்வாதிகள் செய்யக்கூடியது மக்களின் அன்றாட, நாளாந்த பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு தம்மாலான உழைப்பை வழங்குவதே. பெரிய விடயங்களான தேசிய பிரச்சனைகள், தீர்வு, சமத்துவம், சுய உரிமை இவற்றுக்கான நடைமுறை சாத்தியங்கள், சூழ்நிலை இலங்கையில் உள்ளதாக தெரியவில்லை. இதை இன்னும் ஒரு பத்து இருபது ஆண்டுகளில் தாயக தமிழ் அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள் என்றும் நம்பிக்கை இல்லை. அதுவரை உள்ள கோமணம் கழன்று விழாமல் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான். உலக அரசியல், உலக ஒழுங்கு, போக்கில் வரக்கூடிய எதிர்கால மாற்றங்கள் இலங்கை தமிழர் விடயத்தில் ஏதாவது நல்லதை செய்தால்தான் உண்டு.
  4. 2009 இல் சிநை்தது கிடந்த தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து அதன் தலைமைப் பொறுப்பை அப்போதைய நிலையில் அரசியல் அனுபவமும் வயதில் மூத்தவருமான சம்பந்தனிடம் கையளித்துவிட்டுத்தான் புலிகள் இயக்கம் தனது செயற்பாட்டை நிறுத்தியது. ஆனால். 2009 இற்குக்பின் சர்வதேசம் முன்னெடுத்த தமிழர்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணை.தமிழ்களுக்கான தீர்வு தொடர்பாக எந்த செயற்பாட்டையும் செய்யாமல் கொழும்பில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்திற்கும் போகாமல் திருகோணமலைக்குரிய பிரதிநிதியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல. தமிழர்களின் தேசியத்தலைம சம்பந்தனிடம் கையளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பல பிரிவுகளாக உடைத்து தனது சொந்தக் கட்சியான தமிழரகசுக்கட்சியையும் உடைத்து குழப்ப நிலையில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மிக மோசமான அரசியல்தலைவராக சம்பந்தன் இதுவரை காலமும் இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்தததைத்தவிர வேறு எதனையும் செய்ய வில்லை
  5. இதுவரை தமிழருக்கு தலைமை வகித்த அனைவருமே தமிழர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து பொறுப்பற்ற வகையில் நடந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் அழிவுக்கும் தமிழரின் உரிமை அரசியல் பல தலைமுறைக்கு பின்தள்ளப்பட்டதற்கும் காரணமானவர்களே. இதில் சம்பந்தரை மட்டும் திட்டும் அரசியல் என்பது, தாம் விசுவாசம் வைத்திருக்கும் தலைவர்களின் மாபெரும் தவறுகளை மறைத்து சம்பந்தர் மீது மட்டும் முழுப் பழியையும் போடும் இழிவான அரசியலே.
  6. சம்பந்தரின் அரசியலை கேள்வி கேட்கும, விமர்சிக்கும் உரிமையை மறுக்க முடியாது. ஆனால் யாரையும் துரோகி என்று முத்திரை குத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. அதுதான் எனது ஆணித்தரமான கருத்து.
  7. எல்லா பூகழும் என் அவனுக்கே.... 😂 அப்பன்! நீங்கள் இல்லையென்றால் இந்த திரி இவ்வளவிற்கு களைகட்டியிருக்குமா என்றால் அது இல்லை. உங்கள் உடனடி தகவல்களும் எதிர்வு கூறல்களும் பிரமிக்க வைத்தவை. சும்மா விளையாட்டை பார்த்து விசிலடித்து விட்டு போகும் உலகில் அதற்குரிய கருத்துக்களை ஒரு இணையதளத்தில் வந்து தமிழ் இல்லாத உலகில் இருந்து கொண்டு தமிழில் எழுதும் உங்களுக்கு பலகோடி பராட்டுக்கள். வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்! தூயா முருகா மாயோன் மருகா உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!
  8. 1977 இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் . அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு மனுஷனின் அழகோ அழகு. அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில் பெண்கள் குவிந்திருப்பார்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர். ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்----- அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து சிங்கக் கொடி அசைத்து தன் நலமே முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் . இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்
  9. எல்லாம் இந்த டிக் டொக் அப்ஸ் மூலம் வியபாரம் பெறுமதி அற்ற ஓர் பொருளை டிக் டொக் விளம்பர விம்பம் கொண்டு ஊதி பெருப்பித்து அதிக விலைக்கு விற்கும் தந்திரம் உடலை குறைப்பது , உடம்பை வெள்ளை ஆக்குவது , மொகுமுகு குளிர்பானம் பிரைம் எனும் குளிர் பானம் இங்கு லண்டனிலும் முயல் எண்ணை என்கிறார்கள் அதை பூசினால் தலைமுடி மொட்டை மண்டையிலும் வளருமாம் ஒரு சிறிய துண்டு சவர்காரம் 25பவுனாம் இப்படி வகை தொகையாக பலவகையான கிரீம்கள் மனிதரின் உடல் கவலைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப கள்ள மார்கெட் மருந்துகள் கிரீம்கள் டிக் டொக் வியாபாரம் கொடிகட்டி பறக்குது கவுன்சில்களும் கடைகள் என்றால் சோதனைகளில் அள்ளிக்கொண்டு போய் எரித்து விடுவார்கள் இந்த ஆன்லைன் வியாபாரம் எப்படி பிடிப்பது என்று தலையை பிராண்டி கொண்டு இருக்கிறார்கள் .எல்லாத்துக்கும் மூல காரணம் சைனா தான் . ஒரு சிறு உதாரணம் எச்சரிக்கை இந்த பிள்ளை சொல்வது எல்லாம் எந்த ஒரு உறுதி பாடும் இல்லை சில தமிழ் பெண்களே முகத்தை வெள்ளையாக கண்ட கிரீமும் பூசி அலேர்ஜிஆகி முகம் பார்க்கவே முடியாத அளவுக்கு கறுப்பு பிடித்து மன உளைச்சலில் உள்ளார்கள் .
  10. ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும், கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை. ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.
  11. சம்பந்தர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அவருடைய நீண்ட சேவைக்கு நன்றிகளும்! இங்கே எழுதும் சில உறவுகள் போல என்னால் சம்பந்தரைத் திட்ட இயலவில்லை. உயிருக்கு அச்சுறுத்தல் இரு தரப்பிலிருந்தும் வந்த போதும், இந்தியாவைத் தாண்டி எங்கும் போகாமல் நாட்டிலேயே இருந்தவர், போட்டியாளர்களை துப்பாக்கியால் போட்டுத் தள்ளி விட்டு தலைமையை/பதவியைப் பிடித்துக் கொண்டிருக்காதவர், தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர். சம்பந்தரை, அவரது மரண வீட்டில் வைத்து "வேஸ்ட்டு" என்று விமர்சிக்கும் எவரும் நிச்சயம் அவரை விட முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார்கள், அதன் பலன்களை மக்களுக்குக் கொடுத்து விட்டு தமக்கு எதுவும் வேண்டாமென்று இப்போது அமைதியாக ஒதுங்கி வாழ்கிறார்கள் என்று தான் ஊகிக்கிறேன்😎.
  12. ஆழ்ந்த அனுதாபங்கள்
  13. இறுதி யுத்தம் நடந்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராய் இருந்தும் எங்கே கொழும்பில் இருந்தால் புலிகள் தொடர்பெடுத்து அரசியல் ரீதியான உதவிகளை கேட்டுவிடுவார்களோ என்று பயந்து தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் யாரும் தொடர்பு கொள்ளாதபடி இந்தியா பக்கம் போய் ஓடி ஒழித்துக்கொண்ட உங்களின் ஆத்மா சாந்தியடைய முள்ளிவாய்க்கால் மண்ணில் கடைசி வரை ஏக்கத்தோடு நின்று மடிந்து போன அத்தனை ஆத்மாக்களும் உங்களை மன்னிக்கட்டும்
  14. சுமந்திரன் விக்னேஸ்வரன் என்று கொழும்பு தமிழர்களை தமிழ் தேசிய அரசியலுக்கு கொண்டுவந்து தமிழ் தேசிய அரசியலை சிங்கள அரசின் ரகசிய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து தமிழ் தேசிய அரசியலை மழுங்கடித்த பெருமையோடு போய் வாருங்கள் ஐயா
  15. ஒரு மனிதனின் இறப்பை நாம் விமர்சிப்பது நல்லதல்ல. ஆனால் சம்பந்தர் தான் தெரிவு செய்த இடத்தில் நடக்கும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதட்காகவ்து முயற்சி செய்யாத ஒரு ***** ****** . லட்சம் மக்கள் இறந்த பிறகும் திருந்தாத ராட்சதன் . பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புலிகள் யாருக்கும் உதவாத கல்நெஞ்சக்காரன் . எப்பவோ இறந்திருந்தால் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது நன்மையாக இருந்திருக்கும் . சுமாவை பின் கதவால் கொண்டு வந்தது மிகப்பெரிய தப்பு. செல்வா காலத்திலேயே தெரியும் சிங்களம் தமிழுக்கு ஒன்றும் தரமாட்டார்கள் என்று. அதனால் தான் ஆயுத போராட்டம் பரிணாமித்தது . அதனால் தான் சிங்களம் பயந்தது . இது தெரிந்தும் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களை அப்புறப்படுத்தி தமிழரசு கட்சியால் எப்படி அந்த சிங்களத்தை வெல்ல முடியும் இதன் அர்த்தம் நீங்கள் ஒரு சிங்கள அடிவருடி என்பதுதான். இப்படியான தொடர் துரோகங்களை செய்த இந்த மனிசனின் இறப்பு தமிழருக்கு வேண்டியதே. காலம் கடந்த இறப்பு . சுமாவை கொண்டு வந்து மிஞ்சின தமிழ் கூட்டமைப்பை உடைத்த திருந்தாத ஜென்மம். ஒரு உயிரின் இறப்பை நான் நிந்திக்கவில்லை. அவர் எமக்கு செய்த துரோகங்களின் வலிதான் மேலே எழுதியது.
  16. உலகில் மானிடராய் பிறந்த எல்லோரும் இறப்பது நியதி . தலைமைத்துவ பதவியில் இருந்த ஒருவர் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது .அரசியல் அனுபவமும் கல்வி அறிவும் நிறையவே கொண்டவர், என்ன நோக்கத்துக்காக பாராளுமன்றம் அனுப்பிவைக்க பட்டாரோ காலம் கடத்த பட்டதே தவிர அது நிறைவேறாத போது இறந்த பின்பும் ஆதங்கத்தை கள உறவுகள் வார்த்தைகளால் வெளிப் படுத்து கிறார்கள் அவ்வளவே . "இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."
  17. சம்பந்தனின் அபிமானியோ, ஆதரவாளரோ அல்ல நான். ஆனா;, சம்பந்தனின் அனுபவத்தை நிலமைக்கு ஏற்றவாறே பாவித்து உள்ளார். ஆத்மா சாந்தியடையட்டும். வேறு யாராவது என்ன செய்து இருக்க முடியும், கிந்திய பேய் சிங்களத்துக்கு முட்டு கொடுத்து தடுக்கும் பொது ( இப்பொது பார்க்க போனால் கிந்தியாவுக்கு 13 இல் சொல்லளவில் இருப்பதை கொடுப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது) ? ஆயினும், சம்பந்தன் கிந்தியவை பச்சடி போட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பை தக்க வைத்தார், தேவையான காலத்தில். நாராணனனும், மேனனும் 2009 இல் சொன்னது, உங்களுக்கு தேவையானதை நாங்கள் இனி சொல்கிறோம், சம்பந்தனின் பதில் சொல்லமுடியும், ஆனால் செய்தால் அவர்கள் கடவுள் என்ற கருத்து பட என்பதே நான் கேள்விப்பட்டது . சம்பந்தன் அப்படி சொன்னனரா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனல், பின்பு ந்டைபெற்றவை (மோடி 13 ஐ அமுல்படுத்துமாறு அதிகார தோரணையில் வற்புறுத்தியது), சம்பந்தன் ஏதோ ஒன்றை அவர்களை அதிகார மானத்தை சீண்டும் படி சொல்லி இருக்கிறார் என்பதே ஊகிக்க கூடியது. அனால் பெயர் அளவிலாவது, மோடியை 13 ஐ அமுல்படுத்துமாறு சிங்களத்திடம் பகிரங்க வற்புறுத்தலை முன்வைக்கும் நிலையை உருவாக்கியவர். (சும்மா மோடி வாயை திறந்து இருப்பாரா) இதில் சம்பந்தன் மட்டும் அல்ல, பல்வேறு பட்டவர்களின் பங்களிப்பும் இருக்கிறது. (இங்கே தலைவர்களின் தனிப்பட்ட திறமை, பலம் என்பது, இந்த நிலையில், தக்கவைத்து கொண்டு போவது தான், சிங்களம், கிந்தியம் என்ற அரசுக்களை எதிர்க்கும் போது.)
  18. கீழ நிண்ட நான் எப்பிடி கிடு கிடுவெண்டு உங்களுக்கு கிட்ட வந்தனான் பாத்தியள் தானே. ஏனெண்டால் கணிப்பு அந்தமாதிரி.....😎 அடுத்த போட்டியில அடி தூள் இடி மின்னல்.....அப்ப சந்திப்பம்.
  19. முள்ளிவாய்க்காலில் இறந்த தன் சொந்த மக்களின் துயரைக் கூட உள்வாங்க வக்கில்லாமல் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு இனக்கொலைஞன் சரத் பொன்சேக்காவுக்கு வாக்குக்கேட்டது முதல் சம்பந்தனை சராசரி மனிதனாகக் கூட காண முடியவில்லை. இன்று வரை ஒரு தடவை தானும்.. இந்த ஆள்.. முள்ளிவாய்க்காலுக்கு சென்றதும் இல்லை.. இறந்த சொந்தங்களுக்கு துக்கம் அனுஷ்டித்ததும் இல்லை. எம் மக்களின் துயருக்கு எதுவுமே இல்லை என்றாக்கிய மிக முட்டாள் அரசியல்வாதியும் சுயநலவாதியுமான சம்பந்தனின் மறைவு.. இரங்கலுக்கு அப்பாற்பட்ட உணர்வே எழுகிறது. அப்படியப்பட்ட ஆளுக்கு அழவோ.. இரங்கவோ முடியவில்லை. இயற்கை காலம் கடந்து தீர்ப்பை எழுதி இருக்கிறது. அவ்வளவும் தான்.
  20. தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந்த தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் மறைவினால் கவலையில் இருக்கும் அவரை நம்பியிருந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  21. நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்களை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம். இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது. நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்திருந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார். நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை. 'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. 'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான். இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை. நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான். ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன். தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார். ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.
  22. ஓம் சிலோவேனியா போர்ச்சுகல் விளையாட்டு முடிவடைந்த போது 0 - 0, மேலும் 30 நிமிடங்கள் நீடிக்கபட்டும் 0 - 0. பின்பு பெனால்டியி சர்ந்தர்பம் கொடுக்கபட்டு போத்துக்கல் 3 - 0 சிலோவேனியா பிரான்ஸ் 1 - 0 பெல்ஜியம்
  23. இறுவட்டு அட்டைகள் விடுதலை நெருப்புக்கள்
  24. 'நாட்டாமை' படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கின்றது............🤣
  25. இறுவட்டு அட்டைகள் விடியலின் பாடல்கள் https://trfswiss.com/songs.php?album=158 ------------------------------------------ இந்த இறுவெட்டின் மேல் 2009இற்குப் பிறகு நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் வணிகம் செய்யும் இவ் வலைத்தளம் தன்னிடம் கிடைக்கப்பெற்ற இவ்விறுவட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் நிறுவனத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இருப்பினும் அவ்வொலியை நீக்க இயலும். இந்து போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது.
  26. ஜில் பைடன் களத்தில் இறங்கும் வாய்ப்புகள் பற்றி தீவிரமாக பேசப்படுகிறது.
  27. கட்டுரையாளரை கேட்கிறேன் இதனை எழுதும் போது உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா . இறந்தபிறகு ஒருவரை பற்றி இப்படியா துதி பாடுவது . அவரது ஆத்மா குழம்ப போகின்றது , அப்படி என்னத்த தான் செய்து இவங்கள் புளுகுகின்றார்கள் என .
  28. சம்மபந்தர் மட்டுமா தூக்கிப் பிடிக்கிறார்????😳🤔 பாம்பின் நஞ்சு கொடியது உயிரைக் கொல்லும். ஆனால் அதுவே மனிதரின் கொடிய நோய்களைத் தீர்ப்பதற்கு ஒரு மருந்தும் ஆகிறது. சம்பந்தரின் தமிழின துரோகத் தலைமை வாழ்க்கையும் தமிழினத்திற்கு ஒரு மருந்தாகட்டும். சம்பந்தரின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு, அவர்போன்றோர் இனிப் பிறவாதிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
  29. "விடியலைத் தந்த பொங்கல்" கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கலிலும் விடியலைத் தேடுகிறேன். நம்பிக்கையும் முயற்சியும் என்னிடம் நிறைய முன்பு இருந்தது, என்றாலும் நம்பிக்கை இப்ப மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. ஆனால் நான் முயற்சியை, மாற்று வழிகள் தேடுவதை என்றும் நான் கைவிடவில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஆண்டாண்டு காலமாக தமிழன் சொல்வதை, அதில் இப்ப எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ, நான் அதை மறக்கவில்லை. இன்று ஜனவரி 14, 2023 சனிக்கிழமை, மூன்றாவது இலங்கை இந்தியா ஒருநாள் சர்வதேச துடுப்படி ஆட்டம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு அதில் சலிப்புத்தான் வந்தது, இந்தியா 390 ஓட்டங்கள் எடுத்தவேளை, இலங்கை 75 ஓட்டமே பெறமுடியாமல் திண்டாடிக்கொண்டு இருந்தது. அப்படித்தான் ஒவ்வொரு ஆண்டாக விடியல் [வெற்றி] என்னை விட்டு விலகிக்கொண்டே இருந்தது. கொஞ்சம் வித்தியாசம். நான் திறமையாகத்தான் தொடர்ந்து செயற்படுகிறேன், அதில் எந்த ஐயப்பாடும் இல்லை, ஆனால் முற்றும் நேர்மையாக. அது தான் என்னைத் தடுத்துக்கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொய்யும் புரட்டும் கலந்து இருந்தால், எப்பவோ எனக்கு விடியல் வந்திருக்கும்! நான், தொடர்மாடி குடியிருப்பில், இரண்டாவது மாடியில் உள்ள என் அறையின் ஜன்னலின் ஊடாக வெளியே எட்டிப் பார்க்கிறேன். தொங்கிய தோள்களுடனும் வாடிய முகங்களுடனும் அசையும் மக்களை காண்கிறேன். அவர்களின் நம்பிக்கை இழப்பையும் பரிதாபகரமான விதியையும் நினைக்கிறன். நான் மட்டும் அல்ல, என்னுடன் ஒரு கூட்டமே விடியலுக்காக அலைவதைக் காண்கிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடுதல். இதை பார்க்க பார்க்க என் மனதில் வெறுமையும் வெறுப்பும் கூடுவது போல இருந்தது. இந்த பொங்கலில் ஆவது ஒரு விடியல் வருமா என்று என் மனம் தவித்துக்கொண்டு இருந்தது. நான் என் படுக்கை அறையை பார்த்தேன். அது வெறிச்சோடி இருந்தது. நான் கல்யாணம் கட்டி ஒரு ஆண்டுமட்டும் ஒரு பிரச்சனையும் வரவில்லை. மிகச் சீராக மகிழ்வாக அது நகர்ந்தது. அதன் பலன் எமக்கு அழகான மகள் பிறந்தாள். இருவருக்குமே அது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. நாம் வாடகைக்கு இருந்த வீடு ஒரு அறை வீடு. தலை நகரில், வாடகை மிக மிக அதிகம் என்பதால் கல்யாணம் கட்டிய புதிசில் அது போதுமானதாகவும் இருந்தது. ஆனால் மகள் பிறந்தபின், அவளுக்கு என ஒரு தனி அறை தேவைப் பட்டது. அது மட்டும் அல்ல, வருங்காலத்தையும் எண்ணி மூன்று அறை வீடு தேவை என்று மனைவி கேட்கத் தொடங்கினார். உண்மையில் என் படிப்பு மற்றும் வேலை திறமை அடிப்படையில் நோக்கின் எனக்கு எப்பவோ பதவி, சம்பள உயர்வு வந்திருக்கவேண்டும். இப்ப நான் எடுக்கும் சம்பளத்தை விட குறைந்தது மூன்று மடங்காவது இன்று நான் எடுத்திருப்பேன். ஆனால் என் படிப்பு தந்த திமிர், என் உயர் அதிகாரிகளுக்கு சலாம் போட மறுத்துவிட்டது. என் எல்லா உயர் அதிகாரிகளும் என்னை விட படிப்பில் குறைந்தவர்கள், ஆனால் நிறைய சுற்றுமாற்றாக, நேரத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் தகுந்தவாறு அமைச்சருடன் அல்லது அவரின் அதிகாரியுடன் கதைப்பதுடன், அவர்களை திருப்திப்படுத்தக் கூடிய, வேலைக்கு புறம்பான வசதிகளை, கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதில் வல்லவர்கள். நான் இவைகளுக்கு எதிர்மாறு மற்றும் நேருக்கு நேராக பிழையான செயல்களை கேட்டும் விடுவேன். என் மனைவி, 'நீங்க வாழத் தெரியாதவர், நீங்கள் நேர்மையாக ஒழுங்காக வேலை செய்யுங்கள், அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை, உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களையும் கட்டுப்படுத்துக்கள். அதில் தவறு இல்லை. உங்களுக்கு மேலே உள்ளவர்களைப் பற்றி அதிகமாக கவலைப்படத் தேவையில்லை. அது அமைச்சரின் பொறுப்பு. மற்றது நீங்கள் மதிப்பு கொடுப்பது அவர்களின் பதவிக்கு மட்டுமே, அவர்களின் உண்மையான தகுதி என்ன என்று யோசிக்காதீர்கள் , அப்ப தான் நாம், பிள்ளைகளுக்கும் ஏற்ற, தகுந்த வசதிகளுடன் வாழ முடியும்' இப்படி பலதடவை என்னிடம் கெஞ்சி, பின் வாதாடி, கடைசியாக 'குறைந்தது மூன்று அறை வீடு எடுத்தால் தான் நான் இனி உங்களுடன் இங்கு இருப்பேன்' என்று சொல்லிவிட்டு என் மகளுடன் தன் தாய் வீட்டுக்கு, தன் கிராமத்துக்கு போய்விட்டார். நான் என் நம்பிக்கையை என்றும் இழக்கவில்லை, உண்மை , நேர்மை ஒருநாள் வெல்லும், அவர்களின் பொய் புரட்டுகள் அம்பலத்துக்கு வரும் அல்லது வரவைப்பேன் என்ற துணிவு மட்டும் மாறவில்லை. நாளை, ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும், அமைச்சர் மற்றும் அவரின் அதிகாரிகள் எம் பணிமனைக்கு தைப்பொங்கல் தினத்தை ஒட்டி வருகிறார்கள். ஒக்டோபர் 6, 2022 இல் உலக வங்கியின் அறிக்கையின் படி, மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 9.2 சதவீதமாகவும், 2023ல் மேலும் 4.2 சதவீதமாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியது. அது தான் எனக்கு இவர்களின் பித்தலாட்டத்தை, ஏமாற்று வேலையை வெளிக்கொணரவும். இம்முறை கட்டாயம் அமைச்சர் அதை ஏற்று விசாரணை நடத்துவார் என்ற துணிவையும் தந்தது. அதன் படி பல அத்தாட்சிகளுடன் நவம்பர் முதலாம் திகதி, என் பிறந்த நாளில், அமைச்சரிடம் ஒரு நீண்ட அறிக்கை சமர்பித்தேன், அது என் உயர் அதிகாரிகளுக்கு தெரியா. அமைச்சர் தை முதலாம் திகதி, புத்தாண்டு வாழ்த்துடன், தான் தைப்பொங்கலுக்கு பணிமனை வருவதாகவும், அதில் தன் முடிவு பகிரங்கமாக அறிவிக்கப் படும் என்றும், தான் தன் தேவையான அனைத்து விசாரணையையும் முடித்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். நான் முன்பும் இரு தடவை அவ்வற்றை சுட்டிக்காட்டினாலும், அந்த கோப்புகள் எல்லாம், தேடுவார் அற்று போனது தான் மிச்சம். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. 'ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்க ஆழமான சீர்திருத்தங்களை இலங்கை விரைவாகக் கடைப்பிடிக்கவேண்டும்' என்ற உலகவங்கியின் கோரிக்கை அரசை கொஞ்சம் சிந்திக்க வைத்துள்ளது. இந்த நிலையில் நாட்டிலுள்ள 16 லட்சம் அரச ஊழியர்களில் 10 லட்சம் பேர் திறனுடன் செயற்படுவதில்லை என, அண்மையில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறியதும் மற்றும் இன்று இலங்கையில் இளைஞர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களும் இந்த தைப்பொங்கல் ஒரு விடிவை தரலாம் என்று எனக்கு சொல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தன. இந்த விடயங்கள் குறித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.எல். ரஊபிடம் பிபிசி தமிழ் அண்மையில் [18 செப்டெம்பர் 2022] பேசிய போது "இலங்கையில் பொருத்தமான வேலைக்கு பொருத்தமான நபர்கள் அநேகமாக உள்வாங்கப்படுவதில்லை" என்றும், "அரசியல் நோக்கங்களுக்காகவே அதிகமானவர்ளுக்கு அரச தொழில்கள் வழங்கப்பட்டன" எனவும் குறிப்பிட்டார். அது தான் எம் பணிமனையிலும் பிரச்சனை. அந்த பொருத்தமற்ற உயர் அதிகாரிகளுக்கு, பொருத்தமான, உண்மையாக வேலை செய்பவர்களை கண்டால் உள்ளுக்குள் ஒரு பயம், அதனால்த் தான் அவர்களை மேலே வரவிடாமல் ஏதேதோ காரணங்கள் கூறி தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வால் பிடிப்பவர்கள், கட்டாயம் மேல் பதவிக்கு போவார்கள், ஆனால் நாட்டுக்கு, மக்களுக்கு உண்மையான சேவை அங்கு இருக்காது, அது தான் நான் அதை, அந்த நேர்மையற்ற வழிகளை வெறுக்கிறேன். இதை மனைவி எனோ புரியவில்லை. அவரில் குறையில்லை. பிள்ளைகளில், குடும்பத்தில் உள்ள பாசம் தான்! இன்று தை 15, 2023 ஞாயிற்று கிழமை, தை பொங்கல் நாள், அமைச்சரும் அவரின் அதிகாரிகள் எல்லோரும் எம் பணிமனைக்கு வந்து, கலகலப்பாக பொங்கல் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள், அதன் பின் என்னையும் என் உயர் அதிகாரிகளையும், மூடிய அறையில் சந்திக்க ஏற்பாடும் செய்தார். எனக்கு எந்த பயமும் இல்லை. தேவையான அத்தாட்சிகள் எல்லாம் வரிசை கிரமப்படி ஏற்கனவே சமர்பித்துவிட்டேன். ஆனால் என் உயர் அதிகாரிகள் கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டனர், அது ஒன்றே இம்முறை, இந்த தைப்பொங்கல் விடியலைத் தரும் என்று எனக்கு முன்கூட்டியே சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்ததோ வேறு ஒன்று. நான் திகைத்தே விட்டேன், என்னால் இன்னும் நம்பமுடியவில்லை, ஆமாம், நான் அந்த முழு பணிமனைக்கும் மற்றும் அதன் கிளை நிறுவனங்களுக்கும் தலைமை அதிகாரியாக, ஆறு மடங்கு சம்பளத்தில், உடனடியாக, பாராட்டுடன் நியமிக்கப் பட்டேன். ஆனால் நான் மிகவும் பணிவாக முதலில் என் முன்னைய உயர் அதிகாரிகளிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் கேட்டதுடன், அதன் பின்புதான் அமைச்சரின் ஆசீர்வாதத்தை கேட்டேன். அது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், என் அந்த நடைமுறையை அமைச்சர் மிகவும் போற்றினார். அவர்கள் எல்லோரும் போன கையுடன் நான் என் மனைவிக்கும், மகளுக்கும் தொலைபேசி அழைப்பு எடுத்தேன். என் மனைவி மிக கோபமாக இருந்தார். 'இன்று தமிழர் பொங்கல் விழா, எங்கே போனீர்கள் ?, ஒரு வாழ்த்து மகளுக்கு கூட சொல்லவில்லையே?' கொஞ்சம் கோபமாக கேட்டார். நான் முதல் மகளை கூப்பிடு என்றேன். மனைவி இன்னும் கோபமாக ' இந்தா உன் அப்பா' என்று தொலைபேசியை அவளிடம் தூக்கி எறிவதைக் கண்டேன். நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. எனக்கு என் மனைவியைப் பற்றி நன்றாகத் தெரியும். ' அப்பா, இனி வரும் பொழுது எனக்கு என்ன வாங்கி வருகிறீங்க?', மகள் நான் தை பொங்கல் வாழ்த்து கூறமுன் தானே கதைக்க தொடங்கிவிட்டார். நான் வாழ்த்து கூறிவிட்டு, அம்மாவிடம் கொடு வாழ்த்து கூற என்றேன், ஆனால் மகள் 'சொல்லுங்க அப்பா , முதலில், என்ன வாங்கி வருவீங்க' திருப்பவும் கேட்டார். நான் உடனே 'இனி ஒன்றுமே இல்லை' என்று பொய்க்கி கூறியது தான் தாமதம், மனைவி தொலை பேசியை பறித்து நிறுத்தியே விட்டார். நான் இதை எதிர் பார்க்கவில்லை. ஆகவே வேறுவழி இன்றி, மனைவியின் தங்கைக்கு உடனே எடுத்து, மகள் அல்லது மனைவியிடம் கொடுக்கும் படி கூறினேன். மனைவி வாங்க மறுத்துவிட்டார், மகள் தான் அழுதுகொண்டு எடுத்தார். 'என் செல்லமே, இனி அப்பா வரத் தேவையில்லை, நீ என்னுடனேயே இருந்து படிக்கப் போறாய், அது தான்' என்றேன். சொல்லி முடிக்க முன்பே. மனைவி, மகளிடம் இருந்து தொலைபேசியை பறித்து 'என்ன, என்ன, எப்போ?' அவசரம் அவசரமாக கேட்டார். நான் இன்றில் இருந்து எனக்கு பதவி உயர்வு வந்துள்ளதாகவும், அதனுடன் சேர்ந்து, தனி வீடும் தந்துள்ளார்கள் என்றும் சுருக்கமாக சாதாரணமாக எடுத்து சொன்னேன். மனைவியின், மகளின் மகிழ்ச்சி என்னால் உணரக் கூடியதாக இருந்தது. என் வாழ்வும் மீண்டும் முன்போல் இந்த தைப்பொங்கலில் இருந்து மலரப்போகிறது என்று எண்ணும் பொழுது, 'விடியலைத் தந்த பொங்கல்' ஆக இந்த 2023 , என் வாழ்க்கை வரலாற்றில் அமைய போவது உண்மையே! இன்னும் ஒரு கிழமையில் என் மனைவியும் மகளும் வந்துவிடுவார்கள். என்னதான் வசதி வந்தாலும் நான் கட்டாயம் உண்மை நேர்மையில் இருந்து என்றுமே விலகமாட்டேன். இது சத்தியம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  30. முள்ளிவாய்க்காலில் சிங்களம் கொன்று குவித்த தமிழர்களின் இரத்தம் காய முதல், தமிழ் மக்களின் சுயகௌரவத்திற்கு இழுக்கு தேடும் வகையில்... சம்பந்தன், சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்த காட்சி.
  31. நான் இலங்கை பற்றி கதைக்கிறேன். இந்தியா பற்றி அல்ல சீமான் இந்தியன் என்பது அனைவரும் அறிந்தது
  32. 91 வயது வரை வாழ்ந்து ஈழத்தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தி அந்த மக்களின் அரசியல் தீர்வுக்காய் சந்தர்ப்பங்கள் பல வந்தும் எதுவும் செய்யாமல் கடைசி வரை சிங்களத்தின் கைப்பாவையாக மட்டுமே இருந்து ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதியா சம்மந்தர் விடைபெற்றியிருக்கிறார் ஒரு சக மனிதனாக அஞ்சலிகள் தமிழனாக அல்ல
  33. அவருக்கு பல்லை கலட்டி விட்டு இருக்கினம் விஷம் இல்லைஎன்று யூலியனின் முக்கிய சோர்ஸ் டார்க் வெப்பில் உள்ளார்கள் ரஷ்யர்கள் கடந்தவாரம் uk nhs செர்விசை ஹக் பண்ணி பிளக் மெயில் பண்ணி காரியம் முடியாமல் அவுட் பண்ணி உள்ளார்கள் .
  34. இல்லையே... ஒரு அரசியல்வாதி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். அவர் சொல்வதை நம்பி வாக்களிக்கின்றேன். அவர் பாராளுமன்றம் போகின்றார். அங்கு போய் அவர் எமக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அது துரோகம் இல்லையா?
  35. இந்த விளையாட்டு திரியில் ஆதியும் அந்தமும் ஆசானும் நீங்கள் தான்... @கிருபன் மூன்று கருத்து எழுதியவுடன் சலித்து போகும் எங்கள் மத்தியில்... இந்த விளையாட்டு திரியை கண்ணியத்துடன் மத்தியஸ்தம் செய்து சரி பிழை பார்த்து நேரம் தவறாமல் மதிப்பெண்களை கொடுத்து மதிப்பெண் பட்டியல்கள் தயாரித்து....... இதெல்லாம் எப்படி? நெஞ்சில் வீரமும் தீரமும் கொண்ட கொள்கையில் தீவிரம் உள்ளவர்களாலேயே இது முடியும்.☘️ உங்களை பாராட்டி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன்.👈🏽 💐🙏
  36. முள்ளிவாய்க்கால் அழிவோடு ஈழ தமிழினத்தின் முக்கிய புள்ளியான இவர் சகல விடயத்திலும் சுதாகரித்து இருக்க வேண்டும். மாறாக சிங்கள தேச கொடியை தூக்கி அசைத்து மிச்சம் மீதியாக இருந்த அனைத்தையும் நாசமாக்கியதுதான் மிச்சம். 2009ன் பின்னர் அனைத்து வெளிநாட்டு ராஜதந்திரிகளும் இவரை/இவர் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் தானே சந்தித்து பேசி வந்துள்ளனர். அதன் விடைகள் யாருக்காவது தெரியுமா?
  37. இவர் போன்றவர்களுக்கு வாக்களித்த எனக்கு எது கதைக்கவும் கேட்கவும் உரிமை உண்டு. நாங்கள் எதுவுமே புடுங்கத்தேவையில்லை. தமிழினத்திற்காக பாராளுமன்றம் சென்று புடுங்கி எடுங்கள் என்று சொல்லித்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.
  38. சம்பந்தர் மட்டுமல்ல இதுவரை தமிழர் அரசியலுக்கு தலைமை வகித்த அனைவருமே தோல்வியடைந்தவர்களாகவே மரணத்தை தழுவினர் என்பதே வரலாறு. அந்த வரிசையில் இப்போது சம்பந்தர். அன்னாரிர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  39. அமைதி வழி அரசியல் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உருப்படியாக எதையும் பெற்றுக் கொடுக்க முடியாத தோற்றுப்போன அரசியல்வாதியாக 91 வயது வரை வாழ்ந்து தன் வாழ்நாள் கனவான எம் பி யாகவே சாக வேண்டும் என்பதை மட்டுமே நிறைவேற்றிக் கொண்ட ஒருவராக விடைபெற்றார்.
  40. படக்குறிப்பு,ஜான் (70) மற்றும் எல்ஸ் (71) இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், லிண்டா பிரஸ்லி பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூன் 2024, 10:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் [இந்த கட்டுரையில் மரணம் குறித்த விவரணைகள் உள்ளன. அவை சிலரைச் சங்கடப்படுத்தலாம்.] தம்பதிகளான எல்ஸ் மற்றும் ஜான் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஜூன் மாதத்தின் துவக்கத்தில், அவர்களுக்கு இரு மருத்துவர்கள் மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மருந்தை கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக இறந்தனர். நெதர்லாந்தில், இதனை இரட்டை கருணைக்கொலை (duo-euthanasia) என்கின்றனர். இந்த அரிதான சம்பவம் அங்கு சட்டப்பூர்வமானது தான். ஒவ்வொரு ஆண்டும், அதிகமான டச்சு தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் தானாக முன்வந்து இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஜான் மற்றும் எல்ஸ் வாழ்ந்துவந்த வாகனம் நெதர்லாந்தின் வடக்கே ஃப்ரைஸ்லேண்ட் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. சூரிய ஒளியில் கடற்கரையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் பயணங்களை விரும்பும் தம்பதிகள், அவர்களது திருமண வாழ்க்கையின் பெரும்பகுதியை மோட்டார் ஹோமில் அல்லது படகுகளில் கழித்தனர். நான் அவர்களைச் சந்திக்கும்போது, ஜான் மகிழ்ச்சியாகத் தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டார். "நாங்கள் ஒரு சமயம் கற்களின் குவியல் போன்று இருந்த வீட்டில் வாழ முயற்சித்தோம், ஆனால் அது வேலை செய்யவில்லை," என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். 70 வயது ஜான், அவரது வாகனத்தின் டிரைவிங் சீட்டில் ஒரு காலை அவருக்குக் கீழே வளைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இதுவே அவரது தொடர்ச்சியான முதுகு வலியைப் போக்க ஒரே வழியாகும். 71 வயதான அவரது மனைவி எல்ஸ், டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வாக்கியங்களை உருவாக்குவதே கடினமாக உள்ளது. படக்குறிப்பு,ஜான் தனது மகனுடன் 1982 இல் எடுத்த புகைப்படம் "இது நன்றாக இருக்கிறது" என்று தனது உடலை சுட்டிக்காட்டி சொல்லும் எல்ஸ், தன் தலையை சுட்டிக்காட்டி "இது மோசமான நிலையில் இருக்கிறது,” என்றார். ஜான் மற்றும் எல்ஸ் அவர்கள் படித்த மழலையர் பள்ளியில் சந்தித்த பிறகு நீண்டகால நண்பர்களாக ஆனார்கள். ஜான் தன் இளமை காலத்தில் நெதர்லாந்தின் தேசிய இளைஞர் அணிக்காக ஹாக்கி விளையாடினார், பின்னர் விளையாட்டுப் பயிற்சியாளராக ஆனார். எல்ஸ் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இருப்பினும், அவர்களை ஒன்றிணைத்தது படகுகள் மற்றும் தண்ணீரின் மீதான அவர்களின் பரஸ்பர காதல் தான். பட மூலாதாரம்,ELS VAN LEENINGEN படக்குறிப்பு,1968 இல் எல்ஸ் புகைப்படம், பிற்காலத்தில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டார் 'இதனை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்' ஒரு இளம் ஜோடியாக அவர்கள் ஒரு படகில் வசித்து வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு சரக்குப் படகை விலைக்கு வாங்கி நெதர்லாந்தின் உள்நாட்டு நீர்வழிகளைச் சுற்றிப் பொருட்களைக் கொண்டு செல்லும் வணிகத்தை உருவாக்கி செயல்படுத்தினர். இதற்கிடையில், எல்ஸ் அவர்களின் ஒரே மகனைப் பெற்றெடுத்தார் (அவர் மகனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்). அவர் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வரும்படியான போர்டிங் பள்ளியில் படித்தார். வார இறுதி நாட்களை தனது பெற்றோருடன் கழித்தார். பள்ளி விடுமுறை நாட்களில், ஜான் மற்றும் எல்ஸ் தங்கள் குழந்தை படகில் இருந்தபோதும், ரைன் ஆற்றங்கரை அல்லது நெதர்லாந்தின் தீவுகள் போன்ற சுவாரசியமான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிரீதியான பயணங்களைத் தேர்வு செய்தனர். 1999-ஆம் ஆண்டளவில் உள்நாட்டுக் கப்பல் தொழில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஜான் பத்து வருடங்களுக்கும் மேலாக அதிக உழைப்பாளியாக வேலை செய்து வந்தார். இதனால் அவருக்குக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. அவரும் எல்ஸும் நிலப்பகுதிக்குக் குடியேறினர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஒரு படகில் வசிக்கத் தொடங்கினர். அது பொறுக்க முடியாத அளவுக்கு முடியாத அளவுக்கு ஆனதும், அவர்கள் தங்கள் விசாலமான கேம்பர்வேனை (வீடு போன்ற வசதிகளைக் கொண்ட ஒரு நான்கு சக்கர வாகனம்) வாங்கினார்கள். ஜானுக்கு 2003-இல் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலை சரியாகவில்லை. அவரால் வேலை செய்ய இயலவில்லை. மேலும் வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார். எல்ஸ் கற்பிப்பதில் மிகவும் பிஸியாக இருந்தார். சில நேரங்களில் அவர்கள் கருணைக்கொலை பற்றி உரையாடினர். வாழ்க்கையை முடித்துக்கொள்வதைப் பற்றி அவர்கள் விவாதித்த தருணங்கள் இருந்தன. ஜான் தனது உடல் ரீதியான தடைகளைக் கருத்தில் கொண்டு நீண்ட காலம் வாழ விரும்பவில்லை என்று தனது குடும்பத்தினரிடம் விளக்கினார். இந்த நேரத்தில்தான் தம்பதியினர் 'NVVE' என்னும் நெதர்லாந்தின் 'இறப்பதற்கான உரிமைகள்' அமைப்பில் சேர்ந்தனர். "நீங்கள் நிறைய மருந்துகளை உட்கொண்டால், நீங்கள் ஒரு நடைபிணமாக போல வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்," என்று ஜான் என்னிடம் கூறினார். "எனவே, என்னுடைய உடல் உபாதைகள் மற்றும் எல்ஸின் நோயால், இதனை முடித்துக் கொள்ள நினைக்கிறேன்," என்றார். "முடித்து கொள்ள நினைக்கிறேன்" என்று ஜான் குறிப்பிட்டது அவர்களின் வாழ்க்கையை! 2018-இல், எல்ஸ் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு அப்போது டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தது. ஆனால் மருத்துவரைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டார். ஒருவேளை எல்ஸ் தனது தந்தையின் நிலை மோசமடைந்து, அல்சைமர் நோயிலிருந்து காலமானதைக் கண்டதால் அந்த நோய்க்கு சிகிச்சை பெற விரும்பாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அறிகுறிகள் அதிகமாகி, புறக்கணிக்க முடியாத ஒரு சூழல் வந்தது. இரட்டை கருணைக்கொலை நவம்பர் 2022-இல், டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, எல்ஸ் தனது கணவரையும் மகனையும் விட்டுவிட்டு மருத்துவரின் ஆலோசனை அறையை விட்டு வெளியேறினார். "எல்ஸ் மிகவும் கோபமாக இருந்தார்,” என்று அந்த தருணத்தை ஜான் நினைவு கூர்ந்தார். எல்ஸ் தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாது என்பதை அறிந்த பிறகு, அவரும் ஜானும் தங்கள் மகனுடன் இரட்டை கருணைக்கொலை பற்றி விவாதிக்கத் தொடங்கினர். இருவரும் ஒன்றாக இறக்க திட்டமிட்டனர். நெதர்லாந்தில், கருணைக்கொலை மற்றும் தற்கொலை செய்துகொள்வது சட்டப்பூர்வமானது. நெதர்லாந்தில், நோயாளி தானாக முன்வந்து கோரிக்கையை விடுத்து, அவர்களின் உடல் அல்லது மன துன்பம் 'தாங்க முடியாதது' என்று மருத்துவ நிபுணர்களால் கருதப்பட்டால், அது குணமடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தால், தற்கொலை மற்றும் கருணைக்கொலை அங்கு அனுமதிக்கப்படுகிறது. தற்கொலைக்கு உதவி கேட்கும் ஒவ்வொரு நபரும் இரண்டு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள், இரண்டாவது மதிப்பீடு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது. டிமென்ஷியா நோயாளிகளுக்குக் கருணைக்கொலை 2023-ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் 9,068 பேர் கருணைக்கொலையால் இறந்தனர் - மொத்த இறப்புகளின் எண்ணிக்கையில் இது 5% ஆகும். 33 இரட்டை கருணைக்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, எனவே 66 பேர் இதனால் இறந்துள்ளனர். கருணைக்கொலை கோரும் தம்பதியில் ஒருவருக்கு டிமென்ஷியா பாதிப்பு இருந்தால், அவர்களின் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள் என்பதால் சூழல் சிக்கலாகும். ராட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் மருத்துவ மையத்தில் உள்ள முதியோர் மருத்துவரும், நெறிமுறை நிபுணருமான மருத்துவர் ரோஸ்மரிஜ்ன் வான் ப்ரூச்செம் கூறுகையில், “டிமென்ஷியா நோயாளிக்கு கருணைக்கொலை செய்வதைப் பற்றி யோசிப்பதை கூட நிறைய மருத்துவர்கள் விரும்பவில்லை,” என்கிறார். இது ஜான் மற்றும் எல்ஸின் நிலை. மருத்துவர்களிடையே உள்ள அந்த தயக்கம் கருணைக்கொலை புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கிறது. 2023-இல் இறந்த ஆயிரக்கணக்கானவர்களில் 336 பேருக்கு டிமென்ஷியா இருந்தது. டிமென்ஷியா நோயாளிகளின் 'தாங்க முடியாத துன்பத்திற்கான' சட்டத் தேவையை மருத்துவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்? ஆரம்ப நிலை டிமென்ஷியா பிரச்னை உள்ள பலருக்கு, உடல்நலனில் எப்படி முன்னேற்றம் இருக்கும் என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையே அவர்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்வது பற்றி சிந்திக்க வழிவகுக்குகிறது என்று மருத்துவர் வான் புருசெம் விளக்குகிறார். "என்னால் முக்கியமான விஷயங்களை இனி செய்ய முடியாமல் போகுமோ? என்னால் இனி என் குடும்பத்தை அடையாளம் காண முடியாமல் போகுமோ? என்ற நிலையில் இருக்கும் நோயாளிகள், அதை வெளிப்படுத்தும் நிலையில் இருந்தால் போதும். கருணைக்கொலை செய்யத் தயாராக இருக்கும் மருத்துவர் மற்றும் மனத் திறனில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ஆகிய இருவருக்குமே நோயாளிகள் சொல்வது புரிந்தால், கருணைக்கொலையைப் பரிசீலிக்க வேண்டும்," என்றார் இரட்டைக் கருணைக்கொலையில் உள்ள சிக்கல்கள் அவர்களின் குடும்ப மருத்துவருக்கு இதில் ஈடுபாடு இல்லாததால், ஜான் மற்றும் எல்ஸ் ஒரு கருணைக்கொலை கிளினிக்கை (mobile euthanasia clinic) அணுகினர் - கருணைக்கொலை குறித்த நிபுணத்துவ மையம் அது. இது கடந்த ஆண்டு நெதர்லாந்தில் 15% கருணைக்கொலை இறப்புகளை மேற்பார்வையிட்டது. சராசரியாக அது பெறும் கோரிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கை ஏற்றுக் கொள்கிறது. ஒரு தம்பதி தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க விரும்பினால், ஒரு இணையரின் முடிவு மற்றவரை பாதிக்கவில்லை என்பதில் மருத்துவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இருவருக்குமே சம்மதம் இருக்க வேண்டும். மருத்துவர் பெர்ட் கெய்சர் இரண்டு இரட்டைக் கருணைக்கொலை கோரிக்கைகளைக் கையாண்டிருக்கிறார். அவர் ஒரு வித்தியாசமான தம்பதியை நினைவுக்கூர்ந்தார். அந்த நபர் தனது மனைவியை கருணைக்கொலைக்கு வற்புறுத்துகிறாரோ என்று மருத்துவருக்குச் சந்தேகம் வந்தது. அடுத்த சந்திப்பின் போது, மருத்துவர் கெய்சர் அந்தப் பெண்ணுடன் தனியாகப் பேசினார். "அவர் பல திட்டங்களை வைத்திருப்பதாக சொன்னார்," என்று மருத்துவர் கெய்சர் கூறுகிறார். அந்தப் பெண் தனது கணவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை தெளிவாக உணர்ந்தார், ஆனால் அவருடன் இறக்கும் திட்டம் அந்தப் பெண்ணுக்கு இல்லை. மருத்துவர் இதனை அறிந்ததும் அவர்களின் கருணைக்கொலை செயல்முறை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த நபர் நோய்வாய்பட்டு இறந்தார். அவருடைய மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறார். படக்குறிப்பு,எல்ஸ் மற்றும் ஜான் அவர்களின் திருமண நாளில், 1975 'வேறு தீர்வு இல்லை' புராட்டஸ்டன்ட் தியாலஜிகல் பல்கலைக்கழகத்தின் சுகாதார நெறிமுறைகள் பேராசிரியரான டாக்டர் தியோ போயர், நெதர்லாந்தில் கருணைக்கொலையை வெளிப்படையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். அவர் , நோய்த்தடுப்பு சிகிச்சையின் முன்னேற்றம் கருணைக்கொலை பயன்பாட்டின் தேவையைக் குறைக்கிறது என்று நம்புகிறார். “என்னைப் பொறுத்தவரை மருத்துவரால் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியும். இருப்பினும், அது மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும்,” என்கிறார். டாக்டர் போயர் மேலும் கூறுகையில், “கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இரட்டைக் கருணைக்கொலை வழக்குகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரும் அவரது மனைவியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தம்பதியாக இறப்பதைத் தேர்ந்தெடுத்து, உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிறகு அதன் தாக்கம் மேலும் அதிகரித்தது. "கடந்த ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட இரட்டைக் கருணைக்கொலை வழக்குகளை நாங்கள் பார்த்தோம், மேலும் ஒன்றாக இறப்பதை போற்றும் (hero-ify) போக்கு உள்ளது," என்றார். ஜானும் எல்ஸும் தங்கள் கேம்பர்வேனில் காலவரையின்றி வாழலாம். அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்களா? "இல்லை, இல்லை, இல்லை - என்னால் அதைப் பார்க்க முடியாது," என்று எல்ஸ் கூறுகிறார். அவரது கணவர், "எனக்கு இனி வலி வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்," என்று பதிலளித்தார். "நாம் வழிநடத்திய வாழ்க்கை நம்மை முதுமையாக்குகிறது. அதன் காரணமாக மட்டுமே அது முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார். இன்னும் ஒரு பிரச்னை இருக்கிறது. மருத்துவ வல்லுநர்களால் எல்ஸின் மதிப்பீட்டின்படி, அவரது டிமென்ஷியா மோசமடைந்தால் அது மாறக்கூடும் என்றாலும், தன் வாழ்க்கையை எப்போது, எப்படி முடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் திறனை அவர் இன்னும் பெற்றிருக்கிறார். ஜான் மற்றும் எல்ஸின் மகனுக்கு, இவை எதுவும் எளிமையானதாக இல்லை. "உங்கள் பெற்றோரை இழக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள்," என்று ஜான் விளக்குகிறார். "எனவே மகன் கண்ணீர் விடுவார் தான். அவர் 'நல்ல காலம் வரும்' என்றார். ஆனால் எனக்கு வருத்தம் இல்லை,” என்கிறார் ஜான். எல்ஸ் அதையே உணர்கிறார். "வேறு தீர்வு இல்லை," என்பதே அவர்களின் நிலைபாடு. இறுதி நாள் கருணைக்கொலை செய்ய மருத்துவர்களுடன் அவர்கள் சந்திப்புக்கு முந்தைய நாள், எல்ஸ், ஜான், அவர்களது மகன் மற்றும் பேரக்குழந்தைகள் ஒன்றாக இருந்தனர். நல்ல நிலையில் இருக்கும் தன் கேம்பர்வேனின் தனித்துவத்தை ஜான் விளக்க விரும்பினார், எனவே அது விற்பனைக்குத் தயாராக இருக்கும். "நான் என் அம்மாவுடன் கடற்கரையில் நடந்து சென்றேன்," என்று அவர்களது மகன் கூறுகிறார். "குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், வேடிக்கையான தருணங்கள் இருந்தன... அது மிகவும் வித்யாசமான நாள்,” என்கிறார். "நாங்கள் இரவு உணவு சாப்பிட்டது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றாக அந்த இறுதி இரவு உணவை சாப்பிடுவதைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்தது,” என்கிறார். திங்கள்கிழமை காலை, அனைவரும் உள்ளூர் மருத்துவமனையில் கூடினர். தம்பதியரின் சிறந்த நண்பர்கள், ஜான் மற்றும் எல்ஸ் இருவரின் சகோதரர்களும், அவர்களின் மருமகளும் தங்கள் மகனுடன் இருந்தனர். "டாக்டர்கள் வருவதற்கு முன்பு நாங்கள் இரண்டு மணிநேரம் ஒன்றாக இருந்தோம்," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் எங்கள் நினைவுகளைப் பற்றி பேசினோம் ... நாங்கள் இசையைக் கேட்டோம்." "இறுதி அரை மணி நேரம் கடினமாக இருந்தது," என்று அவர்களின் மகன் கூறுகிறார். "டாக்டர்கள் வந்தார்கள், எல்லாம் சீக்கிரமாக நடந்தது. அவர்கள் தங்கள் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள், பின்னர் அதற்கு ஒரு நிமிடம் ஆகும்,” என்கிறார். எல்ஸ் வான் லீனிங்கன் மற்றும் ஜான் ஃபேபர் ஆகியோருக்கு மருத்துவர்கள் மரணமடையும் மருந்துகளை வழங்கினர் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திங்கள்கிழமை ஒன்றாக அவர்கள் இறந்தனர். அவர்களின் கேம்பர்வேன் இன்னும் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. எல்ஸ் மற்றும் ஜானின் மகன் அதைச் சிறிது காலம் தன்னுடன் வைத்திருக்க முடிவு செய்துள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதில் விடுமுறைக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். "காலம் வரும்போது அதை விற்பேன்," என்று அவர் கூறுகிறார். "முதலில் நான் என் குடும்பத்திற்குச் சில நினைவுகளை உருவாக்க விரும்புகிறேன்," என்கிறார் தீர்க்கமாக. https://www.bbc.com/tamil/articles/cjk318y0325o
  41. இநதப் போட்டியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்த போட்டியை திறம் பட நடாத்திய கிருபனுக்கும் பங்கு பற்றி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.மற்றும் சிறப்பு விருது பெற்ற பையனுக்கும் வாழ்த்துக்கள்.
  42. வெற்றி பெற்ற பிரபா USA மற்றும் ஈழப்பிரியன், கந்தப்பு வாழ்துக்கள் போட்டியை நடத்திய கிருபனுக்கும், களத்தை கலகலப்பாக வைத்திருந்த வீரப்பையன், யசோதரன், ஈழப்பிரியன் ஐயாவிற்கும் மற்றும் ஆடுகளம் சிறப்புற பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
  43. வணக்ம் சுண்டல் நீண்ட காலத்தின் பின் காண்பது மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.
  44. வாருங்கள் சுண்டல்! நீண்ட காலத்தின் பின் மீண்டும் யாழ் வந்த உங்களை வரவேற்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.