Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20012
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/08/24 in all areas

  1. மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும். பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள். விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும் இங்குள்ள எனேக விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.எல்லாவற்றையும் விட கவாய் விமான நிறுவனமே எல்லாவற்றிலும் மேலாக தெரிந்தது. நாங்கள் ஓக்லண்ட் கலிபோர்ணியாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9;30 போல இறங்கினோம்.அங்கு போய் இறங்கியதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. விமான நிலையத்துக்கு அருகிலேயே விமானம் போய் நின்றது.படிகளில் இறங்கி போனால் ஏதோ சந்தைக்குள் போவது போல இருந்தது.ஒரு இடம் தனும் பெரிய கட்டடங்களாக இல்லை.குளிரூட்டப்பட்ட அறைகளோ தங்குமிடமோ இல்லை.எல்லாமே திறந்த கட்டடங்கள்.ஒருமாதிரியாக வெளியே போனால் பொதிகள் எடுக்குமிடம் வீதிக் கரையில் இருக்கிறது.இதுவே கலிபோர்ணியா அல்லது நியூயோர்க்காக இருந்தால் பெரிய வாகனத்தைக் கொண்டுவந்து அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள். விமான நிலையத்தில் பொதிகள் எடுக்கும் இடம். எரிமலை வெடித்து ஒரு மைல் நீளத்திற்கு குகையாக இருக்கிறது. இந்த குகையைப் பார்க்க போக மேலே சொல்லப்பட்டவைகளைப் பின் பற்ற வேண்டும்.கட்டாயம் என்றில்லை எமது பாதுகாப்புக்காக போட்டிருக்கிறார்கள்.கீழே இறங்கி 5 யார் உள்ளே போனால் எதுவுமே தெரியாது.கும்மிருட்டாக இருக்கும். அதே மாதிரி சாதாரண சப்பாத்துடன் போனால் அடிக்கடி சறுக்கி விழலாம்.வெளிச்சம் தெரியத்தக்க ஏதாவது கொண்டு போக வேண்டும்.குகைக்குள் சில இடங்கள் உயரமாகவும் சில இடங்கள் குனிந்து போக வேண்டியும் வரும்.எகன்கொரு தடவை மண்டையில் பலமான அடி.துணியிலானான தொப்பி போட்டிருந்ததால் தப்பினேன்.அப்பவும் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.என்னப்பா என்ன என்று எல்லோர் சத்தமும்.இப்போ வாயைத் திறந்தால் மண்டையில் வாங்கியதை விட பலமாக வாங்க வேண்டுமென்று பல்லைக் கடித்துக் கொண்டு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை.சும்மா மேலால தட்டினது என்று போய்விட்டேன். குகைக்குள் நெருப்பு தணலாக இருந்தபோதும் ஒரு கரையால் உள்ளே போய் சீமெந்து போட்ட இடத்தில் எப்படி அதில் பெயரெழுதுவார்களோ அதே மாதிரி நிறைய பேர் பெயர்களை எழுதுயுள்ளார்கள். குகைக்கு போகும் பாதை. தொடரும்.
  2. மரியானா அகழி ------------------------- அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான். அந்த ஒழுங்கையின் முடிவில் ஒரு கோயில் இருந்தது. ஆனால் இருவரும் கோயில் போய் சாமி கும்பிடுகிற ஆட்கள் இல்லை. ஏன் இந்த ஒழுங்கையில் தினமும் வருகின்றோம் என்று பல நாட்கள் நான் நச்சரித்த பின், அவன் உண்மையைச் சொன்னான். அந்த ஒழுங்கையில் இருந்த பெண் பிள்ளை ஒன்றின் பின்னால் அவன் சுத்துகின்றானாம் என்று அவன் சொன்னான். அந்தப் பிள்ளையும் எங்களின் வகுப்பு தான். அந்தப் பிள்ளையின் குடும்பம் 83ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்கு வந்தவர்கள். என்னை ஏன் கூட்டிக் கொண்டு போனான் என்பதற்கான காரணத்தை இலகுவாகவே ஊகித்துக் கொள்ளலாம். இப்படியான ரோமியோக்களுக்கு ஒரு நண்பன் கட்டாயமாக துணையாக வேண்டும். அங்கே தனியாக எந்த ஒழுங்கையில் போனாலும், தேமே என்று அரைக்கண் மூடி படுத்துக் கிடக்கும் நாய் கூட சந்தேகத்தில் எழும்பி வந்து கலைக்கும். எங்களின் கூட்டத்தில் ஆபத்தில்லாத, அப்பிராணியான, பெயர்கள் எதுவுமற்றவர்களில் நானும் ஒருவன் என்பது தான் என்னைத் தெரிந்தெடுத்த அந்தக் காரணம். 'முடியாது என்று சொல்லி விட்டா.......' என்று வந்து நின்றான் ஒரு நாள். 'முடியாது என்றா சொன்னா..........' என்று திருப்பிக் கேட்டேன் நான். அதற்கு முதல் நாள் நண்பன் தனியே போய், என்னைக் கூட்டிக் கொண்டு போகாமல், எங்கேயோ வைத்துக் கேட்டிருக்கின்றார். ஆளைத் தெரியாது என்று தான் சொன்னா, நீங்கள் யார் அண்ணா என்றும் அவனைக் கேட்டதாகவும் நன்றாக ஞாபகப்படுத்திச் சொன்னான் நண்பன். என்னைக் கண்டதே இல்லை என்றும் சொல்லி விட்டா என்று கண் கலங்கி நின்றான் நண்பன். நல்ல வேளை, அந்த சம்பவம் நடந்த பொழுது நான் அவனுடன் கூடச் சேர்ந்து போயிருக்கவில்லை. போயிருந்தால், 'இந்தத் தம்பி யாரு.........' என்று அவர் என்னைப் பார்த்தும் கேட்டிருப்பார். நண்பன் மினுக்கி மினுக்கி வகுப்புக்கு வந்து போனது எல்லாவற்றையும் எந்தக் கணக்கில் சேர்க்கின்றது. எவருமே இவனைப் பார்க்கவில்லையோ. பின்னர் நண்பன் ஒரு இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டான். சில மாதங்களில் திரும்பி வந்தான். சில புத்தகங்களை எனக்குக் கொடுத்தான். எல்லாமே சிவப்பு பிரகடனங்கள். முன் அட்டையில் மார்க்ஸ், இங்கர்சால் என்ற பெயர்களும், பின் அட்டையில் அந்த இயக்கத்தின் ஸ்தாபகரின் பெயரும் இருந்தன. நண்பன் 'தோடுடைய செவியன்........' பொழிப்பு எழுதச் சொன்னாலே அக்கம்பக்கம் எட்டிப் பார்க்கின்றவன். முழு இலங்கையிலும் தனியார் கல்வி நிலையத்தில் சமய பாடத்திற்கே அடி வாங்கியவர்கள் வெகு சிலரே, அதில் இவனும் ஒருவன். காதல் தோல்வி அவனை எங்கேயோ கொண்டு போய் சேர்த்திருந்தது. இன்னும் பலரும் ஏக காலத்தில் அந்தப் பிள்ளையின் பின் சுற்றித் திரிந்தனர். துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்தப் பிள்ளையிடம் போய்க் கேட்டவர்கள் எல்லோருக்கும், 'அண்ணா, நீங்க யாரண்ணா...........' என்பதே பதிலாக வந்து கொண்டிருந்தது. மற்ற எல்லாக் கதைகளும் வெளியில் வந்தாலும், நான் கூடப் போன என் நண்பனின் கதை மட்டும் வெளியில் வரவில்லை. எத்தனையோ இயக்கங்கள் இருக்க, அந்த இயக்கத்தில் இவன் ஏன் போய்ச் சேர்ந்தான் என்பது மட்டும் தான் ஊரில் பலருக்கும் ஆச்சரியமாகவும், பேசுபொருளாகவும் இருந்தது. பின்னர் நண்பன் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, வெளிநாடு போய், எங்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த வேறு ஒரு பிள்ளையை கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். கிட்டப் போனவர்கள் எல்லோரையும் ' அண்ணா, நீங்கள் யாரண்ணா.........' என்று கேட்டு ஓட விட்ட அந்தப் பிள்ளையும் எங்களுக்கு தெரிந்த ஒருவரைக் கட்டிக் கொண்டு இன்னொரு நாட்டில் வாழ்ந்து வருகின்றார். நீண்ட காலத்தின் பின், ஒரு ஊடகத்தில் சிறு வயது நண்பர்கள் என்று ஒரு குழுமம் உண்டாக்கி, பலரும் இணைந்து கொண்டோம். அறிமுகங்கள், கதைகள், பகிடிகள், ஞாபகங்கள் என்று எல்லோரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 'உங்களுக்கு என்னை முந்தி தெரிந்திருக்காது...........' என்று நான் ஆரம்பித்தேன். ' இல்லை, இல்லை, எனக்கு அப்பவே உங்களைத் தெரியும்........... நீங்களும், இன்னொருவரும் அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக சைக்கிளில் அந்த நாளில் வந்து போவீர்களே...........' என்றார் அவர். எவரெஸ்ட்டையே தாட்டு விடும் மரியான அகழி தான் உலகிலேயே ஆழமானது என்பார்கள். என்ன பெரிய ஆழம் அது.
  3. சில ஆண்டுகள் முன்பு பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரத்தின் பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வித்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பெற்றோர்கள் ஆர்ப்பார்ட்டம் செய்தனர். Good touch-bad touch இல் இருந்து குழந்தை உருவாகும் முறை, ஒரு பாலுறவு (homosexuality) என்ன என்பது போன்ற விடயங்களை உள்ளடக்கிய அந்தப் பாடத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாதென போராட்டம் செய்த பெரும்பான்மையான பெற்றோர் குடியேறிகளாக வந்து செற்றிலான முஸ்லிம் குடும்பத்தினர்😂. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு சமூகத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஒட்டு மொத்த நன்மை தரக் கூடிய முன்னேற்றகரமான கொள்கைகளை மேற்கத்தைய நாடுகள் அமல்படுத்த, வந்து குடியேறிய பிற்போக்கு வாதிகள் அனுமதிக்காமல் போராடும் வினோத நிலை பல மேற்கு நாடுகளில் உருவாகி வருகிறது. சில நடைமுறைகள் பிடிக்கவில்லையானால், தமக்குப் பிடித்தமான நடைமுறைகள் இருக்கும் நாடுகளுக்கு வெளியேறிச் செல்வதை விடுத்து, தாராளவாத நாடுகளின் நல்ல கொள்கைகளை தடுத்த படி அங்கேயே "டோரா போட்டு" அந்த நாடுகளையும் குட்டிச் சுவராக மாற்றி விடும் வேலைகள் நடக்கின்றன. இப்படியான குடியேறிகளுக்கு கொஞ்சம் அவர்களுடைய இன /மத வெறுப்பு மருந்தின் சுவை என்ன என்று இந்த பிரிட்டன் கலவரம் காட்டியிருக்கும். ஆனால், அப்பாவிகளும் பாதிக்கப் பட்டிருப்பது சோகம்.
  4. லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிருக்கிறார்கள்.. தீர்வை நோக்கி அல்லது மக்கள் வாழ்வாதார அன்றாட பிரச்சினைகள் சம்பந்தமாக ஏதாவது செய்தோம் என்று இவர்களால் ஒன்றை சொல்ல முடியுமா..? மக்களுக்கு நல்லது செய்தால் அதை பேசி மக்களிடம் ஓட்டு கேட்கலாம் அதை செய்யாததால்தான் காசுகுடுத்து ஓட்டு போடவைக்கின்றனர் தமிழ்நாட்டில்.. இவர்கள் தீர்வை பெற்றுதருவதாக பேய்க்காட்டி ஓட்டு வாங்குகின்றனர்.. கஞ்சன் ஊறுகாய் முடிந்துபோம் என்று சாப்பிடும் இடத்தில் ஒரு நூலில் ஊறுகாய்ப்பையை கட்டித்தூக்கிவிட்டு அதை பார்த்து பார்த்து ஊறும் எச்சிலில் சாப்பிட்டானாம் அதைப்போல் தீர்வை சொல்லியே வயிறுவளர்க்கும் கூட்டம் இது.. இவர்களைவிட கொலைகாரன் டக்ளசிடம் மக்களிற்கு செய்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல நிறைய இருக்கு.. ஆனால் இவர்கள் மக்களுக்காக ஒரு குண்டூசியைகூட தூக்கிப்போட்டதில்லை இன்றுவரை.. ஒருத்தன் கொலைகாரன் என்றால் மற்றவன் ஏமாற்றுப்பேர்வழி.. இரண்டுமே தமிழர் தேசத்துக்கு தேவையற்ற ஆணிகள்.. அர்ச்சனாபோல பல புதிய இளைஞர்கள் புதியகட்சிகள் வரவேணும்.. அவர்களின் சரிபிழைகளை அப்புறம் பேசலாம்.. ஆனால் இந்த பழைய பஞ்சாங்கங்களை அடித்து துரத்தவேணும்…
  5. அதி உத்தம ஜனாதிபதி பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார். இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சுயாட்சியுடனான அரசியல் தீர்வை காண்பார்.
  6. இது தான் தமிழரின் சாபம். எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???
  7. அதுதானே இவற்ர "கொஞ்ச " பலகாரத்தை கொண்டுபோய் என்ன செய்கிறது . .....போகிற வழியிலேயே பலகாரம் காலியாகிடும் . ....... வேண்டாம் என்று சொல்லி நீங்கள் ஒரு மானஸ்தன் என்பதை நிரூபித்துள்ளீர்கள் ........! 😂
  8. அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்து அவர்களின் சொத்துக்களை சூறையாடி விட்டு அனுதாபத்தையும் தேட முயற்சிக்கிறார்கள்.
  9. கொண்டாட்ட நிகழ்வுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வர எனது குடும்பத்தை இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றேன்.கூடி நின்று ஒரு குடும்பத்தினர்கள் போல் படங்கள் எடுத்துக்கொள்கின்றோம். நன்றிகளுடன் விடைபெறும் நேரத்தில் சிறித்தம்பியரிடம் கொஞ்ச பலகாரம் கட்டித்தரவா என கேட்டேன். இல்லை வேண்டாம் என்றார்.😂
  10. சிறிய பொதுவான(காலநிலை,போக்குவரத்துகள்) உரையாடல்களுடன் போய்க்கொண்டிருக்க ஏதாவது குடிக்கின்றீர்களா என கேட்டேன்.தேநீர் என்றார்கள். தேடினேன் கிடைக்கவில்லை. கோப்பிதான் கிடைக்கும் என்றேன். ஆம் என்றார்கள் .....கிச்சின் பக்கம் சென்று நானே கோப்பியும் பலகார தட்டும் கொண்டு வந்து மேசையில் வைத்தேன். ஒரு நிமிட இடைவெளி வர யாழ்களத்தை பற்றி கதைக்க வெளிக்கிட்டோம். சகல உறவுகளைப்பற்றியும் கதைத்தோம். முக்கியமாக கதைகள்,கட்டுரைகள் எழுதுபவர்களை பற்றியே. அவர்களின் எழுத்து வல்லமை.வாதாடும் வல்லமை பற்றி கதைத்தோம். இத்தனைக்கும் மத்தியில் பாஞ்ச் ஐயாவை நோக்கி மண்டபத்திலிருந்த அநேகமானோர் வரத்தொடங்கி விட்டனர்.தமிழ் பாடசாலைகளை சேர்ந்தவர்கள்,தமிழ்விளையாட்டு கழகங்களை சேர்ந்தவர்கள்,பழைய நண்பர்கள் என எல்லோரும் ஆள் மாறி ஆளாக வந்து பாஞ்ச் ஐயாவை சுகம் விசாரித்து சென்றனர். அப்போதுதான் பாஞ்ச் ஐயா எவ்வளவு பிரபல்யமானவர் என்றும் அவர் சேவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.🌱
  11. இந்நாளில் தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் ஜிகாத், முஸ்லீம் ஊர்காவல்படை , அரசபடைகளுடன் இணைந்து பணியாற்றும் முஸ்லீம் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான எம் தமிழ் மக்களையும், இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான நூற்றுக்கு மேற்பட்ட எம் உறவுகளையும் நினைவு கூருகிறோம். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தம் உறவுகளை பலிகொடுத்து அநாதையாக நிற்கும் எம் தமிழ் உறவுகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  12. என்னிடம் இருக்கும் மூன்று கேள்விகள்: 1. இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட), அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்? 2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி, இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா? 3. ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?
  13. இதுக்கு நான் 100 வீத ஆதரவு...இங்குள்ள சிலர் எப்பவுமே சகுனப் பிழைகாரர்தான்...வென்று சனாதிபதி ஆகமுடியாது... என்பது உண்மை.. எம்முடைய நிலையில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன..
  14. இவருக்கு கொர்னோ போல் சுமத்தி வைரஸ் காய்ச்சல் பிடித்து விட்டது யாழ் வாசகர்கள் குழம்ப வேண்டாம் தேர்தல் முடியமுன் அமரிக்காவில் இருந்து வைத்தியர்களை கொண்டு அவரின் காய்ச்சல் இல்லாமல் ஆக்கப்படும் .😃
  15. இப்பவும் வீதி அடையாள விளக்குகளின்சிவப்பு பச்சை பற்றி ஒன்றுமே தெரியாத முஸ்லிம் பெண்கள் இங்கிலாந்தில் நிறைய. நடைபாதைபச்சையில் இருந்து சிவப்புக்கு மாறினாலும் எந்த கவலையும் இன்றி வீதியை குறொஸ்பன்னும்கள் கூட்டமாக மொட்டாக்கு போட்டபடி . இரண்டாவது தங்கள் ஆட்களின் கடையில் தான் சொப்பிங் பன்னும்கள் . மிக முக்கியமானது லைப் கக் hack ஒவ்வொரு கவுன்சில்களிலும் உள்ள ஓட்டைகளை கண்டு பிடித்து தங்கள் பள்ளி வாசலுக்குள் மட்டுமே பகிர்ந்து கொண்டு அனுபவிப்பது. இப்படியானதுகளை பார்த்த வெள்ளைகளுக்கு வெறி வருமா வாராதா ? அவங்களில் பாய்வதை விட்டு எல்லா வெளிநாட்டு குடியேறிகள் மீதும் பாய்கிறார்கள் . அதை விட கலையில் உள்ள பிரெஞ்சு போலிஸ் இங்கிலாந்துக்கு போகும் குடி ஏறிகளுக்கு செய்யும் அப்பட்டமான உதவி பற்றிய டிக் டாக் பதிவுகள் . மேலும் பிரான்சு கலையில் காட்டு பகுதிகளில் சிறிய கொட்டில்களில் ஒரு மழைக்கு தாங்காத நாலு தடியில் உள்ள கொட்டில்களில் தங்கி இருந்தவர்கள் இங்கிலாந்து வந்தவுடன் ஐந்து நட்ச்சத்திர கோட்டல்களில் தங்க வைக்கப்டுவதை எந்த பூர்வீக வெள்ளையாவது பார்த்து ரசிப்பானா?
  16. ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால் ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்???
  17. இந்த ஒற்றை மாங்காய்க்கு இருக்கும் பாதுகாப்பு போதுமா. 😂
  18. முஸ்லீம்களால் ஒரு போதும் முஸ்லீம் அல்லாத சமூகங்களுடன் integrate ஆகி கூடி வாழமுடியாது.. அதை அவர்களின் மதப்புத்தகமும் அனுமதிக்காது.. இவர்கள் எல்லாம் எதற்கு இன்னொரு நாட்டிற்கு வருகிறார்கள் என்று புரியவில்லை அந்த நாட்டுடன் ஒன்றினைந்து வாழமுடியாது என்று நினைப்பவர்கள்.. மதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுக்கு வைப்பவர்களால் சொந்த நாட்டில்கூட நிம்மதியாக வாழமுடியாது.. இருந்து பாருங்கள் 1950 இற்குள் பல மேற்கு நாடுகளின் விசாவிண்ணப்ப படிவத்தில் எந்த மதம் என்று கேட்கும் ஒரு காலம் வரும்.. அதற்கு காரணம் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களால் தமது நாட்டில் சமூகாமைதிக்கு குந்தகம் விளைகிறது என்று பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றுவார்கள்.. அந்த விளிப்புக்கு மேற்கு நாடுகளை தள்ளுபவர்கள் அந்த நாடுகளின் தீவிர வலதுசாரிகள் அல்ல சாட்சாத் இந்த முஸ்லீம்கள்தான்..
  19. ரசோதரன் நின்ற 5 நாட்களில் ஒரு நாள் கூட ஒரு பொலிசைப் பார்க்கவில்லை. சரி எப்படியான யூனிபோம் போட்டிருப்பார்கள் என்று போன இடமெல்லாம் தேடினேன்.ஒருத்தனும் அகப்படவில்லை. உங்களுக்கு நம்பவே கஸ்டமாக இருக்கும். இதுதான் உண்மை. கடற்கரைக்கும் போனோம்.ஆனால் கண்ணுக்க குளிர்ச்சியாக எதுவும் தென்படவில்லை.
  20. சூடாக இருக்கும் போதே பெயர்களை எழுதியுள்ளார்கள். விமான நிலையமும் பொதிகள் எடுக்குமிடமும் https://imgur.com/a/ZqXWL9q விமானநிலையத்திலிருந்து போகும்போதே வெளியே சகல இடங்களும் ரைக்ரரால் டிஸ் போட்டு பிரட்டி எறிந்த மாதிரி இருந்தது. ஆங்காங்கே தீப்பிழம்பாக வந்து காய்ந்து போய் இருப்பதாக சொன்னார்கள். தீப்பிழம்பாக வந்து காய்ந்து போயிருப்பது இரும்பு காய்ச்சி ஊற்றியது போல இருக்கிறது. இதை லாவா என்று சொல்கிறார்கள்.சில இடங்களில் இந்த லாவா தொடர்ந்து பல மைல்களுக்கு உள்ளன. சாதாரண மழை தண்ணிக்கே ஐயோ குய்யோ என்று கத்திக் குழறும் நாங்கள் இந்த மாதிரி ஒரு அழிவை நாளாந்தம் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களை எண்ண மிகவும் கஸ்டமாக இருந்தது. தொடரும்.
  21. நாங்களும் நண்பர்களுக்காக காதல் கடிதங்கள் எழுதிக் குடுத்து விட்டு மேற்படி பார்ட்டிகளைக் கண்டாலும் காணாததுபோல் சென்ற நிகழ்வுகள் பல உண்டு .......! 😴
  22. என்னப்பா லண்டனில நம்மாளுங்க எல்லாரிம் சவுக்கியமா..? இதுக்குதான் ஊருக்குப்போகனும் எண்டுரது.. ஊரில அடிவாங்கினாலும் என்ர மண் எண்டு திமிரா கதைக்கலாம் ஆனால் வெளிநாட்டில் அடிவாங்கும்போது அடி வலியுடன் வந்தான் வரத்தான் என்று அவர்கள் ஏசும் வசவுச்சொற்கள் கூனிக்குறுக வைக்கும்.. நான் ஊருக்கு போகப்போறன் எண்டு சொல்ல எத்தினைபேர் நக்கல் அடிச்சவை.. அப்ப நினைக்கவில்லை இப்படி மாறும் காலநிலை என்று .. இது போல் இன்னும் ஒரு முப்பது வருசத்தில் இலங்கையில் நடந்ததுபோல் ஒரு இன அழிப்பு நடந்தால்கூட ஆச்சரியப்பட இடமில்லை.. எமது தலைமுறை பெட்டிபடுக்கையை தூக்கிகொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்டுமில்லை.. காலம் விசித்திரமானது காலத்தின் கணக்குகளை யாரும் அறியமுடியாது.. இப்படி ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டில் இந்தியாவில் சங்கிகள் செய்வதுபோல் கார்க்கண்ணாடியை இறக்கி வெள்ளையா கறுப்பா ஆசியனா என்று பாத்து ஊரே கூடி அடிப்பார்கள் என்று யாராவது கனவிலும் நினைத்திருப்பார்களா..? காலத்தின் முடிச்சுக்கள் விசித்திரமானது.. சொர்க்கமே என்றாலும் சொந்தநாடுதான் நரகமே என்றாலும் அதுதான் நல்லது..
  23. ஈரோஸ் இயக்கம் தான் பின் அட்டையில் இரத்தினசபாபதி அவர்களின் படத்தைப் போட்டு கார்ல் மார்க்ஸ், இங்கர்சால் போன்றோரின் எழுத்துகளை தமிழில் புத்தகங்களாக வெளியிட்டிருந்தார்கள், அண்ணை. மற்றவர்கள் சிலரும் வெளியிட்டிருக்கக் கூடும்.
  24. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 27 35 33 95 2 China 27 25 17 69 3 France 13 17 21 51 4 Great Britain 12 17 20 49 5 Australia 18 14 11 43 6 Japan 12 7 13 32 7 Italy 10 11 9 30 8 Republic of Korea 12 8 7 27 9 Netherlands 10 5 6 21 10 Germany 9 6 5 20 11 Canada 6 4 9 19 12 Brazil 2 5 7 14 13 Spain 2 3 8 13 14 New Zealand 4 6 2 12 15 Hungary 3 3 3 9 15 Sweden 3 3 3 9 17 Romania 3 4 1 8 18 Ukraine 3 2 3 8 19 Ireland 4 0 3 7 20 Kazakhstan 1 3 3 7 21 Switzerland 1 2 4 7 22 Greece 1 1 5 7 23 Croatia 2 1 3 6 24 Israel 1 4 1 6 25 Poland 1 1 4 6 26 Cuba 2 1 2 5 27 Belgium 2 0 3 5 28 Jamaica 1 3 1 5 29 Thailand 1 2 2 5 30 Kenya 1 1 3 5 31 Chinese Taipei 1 0 4 5 32 DPR Korea 0 2 3 5 33 Hong Kong 2 0 2 4 33 Philippines 2 0 2 4 35 Georgia 1 2 1 4 36 South Africa 1 1 2 4 37 Mexico 0 2 2 4 38 Kyrgyzstan 0 1 3 4 38 Turkey 0 1 3 4 40 India 0 0 4 4 41 Azerbaijan 2 1 0 3 42 Denmark 1 2 0 3 43 Iran 1 0 2 3 43 Uzbekistan 1 0 2 3 45 Armenia 0 2 1 3 46 Lithuania 0 1 2 3 47 Tajikistan 0 0 3 3 48 Serbia 2 0 0 2 49 Argentina 1 1 0 2 49 Chile 1 1 0 2 49 Ecuador 1 1 0 2 49 Saint Lucia 1 1 0 2 49 Uganda 1 1 0 2 54 Austria 1 0 1 2 54 Czech Republic 1 0 1 2 54 Guatemala 1 0 1 2 54 Indonesia 1 0 1 2 54 Norway 1 0 1 2 59 Ethiopia 0 2 0 2 60 Kosovo 0 1 1 2 60 Tunisia 0 1 1 2 62 Dominican Republic 0 0 2 2 62 Malaysia 0 0 2 2 62 Moldova 0 0 2 2 65 Algeria 1 0 0 1 65 Bahrain 1 0 0 1 65 Dominica 1 0 0 1 65 Morocco 1 0 0 1 65 Slovenia 1 0 0 1 70 Colombia 0 1 0 1 70 Cyprus 0 1 0 1 70 Fiji 0 1 0 1 70 Mongolia 0 1 0 1 74 Cape Verde 0 0 1 1 74 Egypt 0 0 1 1 74 Grenada 0 0 1 1 74 Peru 0 0 1 1 74 Portugal 0 0 1 1 74 Slovakia 0 0 1 1 74 Zambia 0 0 1 1
  25. சிங்களக் கடசிகளுக்குள் பிரிவினையை இவர் செய்வதால், இப்போ... சிங்களவர்களும், அவரை நரி என அழைக்கத் தொடங்கியுள்ளனர். 😂
  26. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே ஆண் : ராசாத்திய ராத்திாி பாத்தேன் ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன் ரகசியமா ரூட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன ஆண் : வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன ஆண் : Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே அவ பேஸ்சு அட டட டட டா அவ ஷேப்பு அப் பப் பப் பா மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன ஆண் : ஹே.. நீ என்னப் பாக்குற மாறி நான் உன்னப் பாக்கலையே நான் பேசும் காதல் வசனம் உனக்குதான் கேக்கலயே அடியே என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே கொடியே என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே ஆண் : ஒரு பில்லாப் போல நானும் ஆனாலும் உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும் அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும் நீ இல்லாம நான் இல்லடி .........! --- தங்கமே உன்னத்தான் ---
  27. ஆஹா! எரிமலையை நோக்கி இன்னொரு எரிமலையா? 😂 எழுதுங்கள் வாசிக்கலாம் 👍🏼
  28. தொடருங்கோ அண்ணை. சுவியண்ணை கைலாசா போல இடம் தேடுறார், நல்ல தீவாகப் பார்த்து பேசி முடிச்சுக் குடுங்கோ!!
  29. வலை உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தது போலை...நீங்கள் சிக்கவில்லை....பட்சியும் பசியுடன் இருந்துவிட்டு...கூடு மாறிவிட்டுது..நீண்டகாலத்தின்பின் ஆளை அடையாளம் சொன்ன ஆளென்றால்...இது லேசான படப்பிடிப்பல்ல...பக்கத்து இலைக்காரான்..சொதியாம் என்பதுபோல் எல்லாக் கதைகளிலும் தப்பிப் போகின்றீர்கள் .. கில்லாடிதான்..
  30. இவர்களின் தமிழர்மீதான தொடர் வன்முறையின் பொறுமையிழந்த ஒரு கட்டத்தில்தான் புலிகள் எதிர் நடவடிக்கையிலீடுபட்டனர், அதற்காக பொதுமக்கள்மீதான படுகொலைகள் எத்தரப்பில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது, ஆனால் அதை தூண்டியவர்கள் யார் என்ன காரணம் என்பதை ஒருபோதும் இவர்கள் நினைத்தே பார்ப்பதில்லை. ஆனால் மூன்று தசாப்த காலங்கள் கடந்த பின்னரும் தமிழர்கள் எம்மை கொன்றுவிட்டார்கள் என்று வன்ம வக்கிரம் கலந்த தோரணையில் நினைவேந்தல் என்ற பெயரில் பகை வளர்க்கிறார்கள். 1915 ல் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் கலவரம் செய்தார்கள் இவர்கள் சொத்துக்களை அழித்தார்கள், கொன்றார்கள், அதை ஏன் இவர்கள் இன்றும் நினைவு கூருவதில்லை? நினைவு கூர்ந்தால் சிங்கள முஸ்லீம் பகை வளரும் தமது ஒட்டுண்ணி சுயநல வாழ்க்கை கெட்டுவிடும் என்பதால்தானே? இத்தனைக்கும் அந்த கலவரத்தில் முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கெதிராக எந்த தவறும் செய்யவில்லையென்றும் பெரகரா ஊர்வலம் பள்ளிவாசல் முன்னாடி போகும்போது அமைதியாக போகவேண்டுமென்று கோரிக்கை மட்டும் வைத்தார்கள் என்பதே தகவல்கள் சொல்கின்றன. ஆனால் யுத்த காலத்தில் இவர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாய் நடந்த காத்தான்குடி சம்பவத்தை காலா காலத்துக்கும் தொடர்கிறார்கள் என்றால் வெறும் தமிழர் விரோத போக்கு என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் நம்மில் ஒரு சிலர் முஸ்லீம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் அனுதாபம் கொள்கிறோம், ஆனால் அது தவறென்றில்லை மனிதர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்றால் அதை தட்டிகேட்கலாம் , அந்த வகையில் நாம் மேன்மையான இனம்தான் ஆனால் தமிழர்களுக்கெதிராக இழைக்கப்பட்டவை அநீதிகள் என்று சொன்ன சிங்களவர்கள் ஒரு சிலரை காண்பிக்கலாம் ஆனால் ஒரு முஸ்லீமை எவருமே காண்பிக்க முடியாது. எம்ம்மீது சக இனங்கள் மேற்கொண்ட படுகொலைகள் வன்முறைக்கு ஒவ்வொரு பொழுது விடியும்போதும் தினமும் நாம் நினைவேந்தல் செய்யவேண்டும், அது போர்கால வடுக்கள் என்று வேறு புரிந்து வலிகளை மட்டும் மனசில் சுமந்து கடந்து செல்கிறோம். போர்யுகத்தில் ஆறிய காயங்களும் உண்டு ஆறாத காயங்களும் உண்டு, வினைக்கு எதிர்வினையாற்றிய சம்பவங்கள் போர்க்கால சம்பவங்களென்றே கடந்து போகவேண்டும் வேறு வழியில்லை, முஸ்லீம்கள் செய்வது ஆறிய காயங்களை மீண்டும் மீண்டும் பிராண்டி இனபகையை வளர்க்கும் ஒரு கொடூர செயலன்றி வேறில்லை, அப்படியென்றால் 83 கலவரத்தை நாம் ஏன் நினைவுகூருகிறோம் என்று யாரும் கேள்வி எழுப்பலாம் , 58/77/83 களில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழர்கள் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாமல் இருந்தபோதே தமிழர்கள் தேடி தேடி ஒருபக்கம் சார்ந்து வேட்டையாடப்பட்டார்கள். 83 கலவரத்துக்கு புலிகள் 13 ராணுவத்தை கொன்றதுதான் கலவரத்துக்கு காரணம் என்றால் அன்று இலங்கை அரசு தேடி தேடி வேட்டையாடியிருக்கவேண்டியது புலிகளைத்தான் 100% அவர்கள் கட்டுப்பாட்டில் வாழ்ந்த தமிழர்களையல்ல. அன்றைய தமிழர்கள் இலங்கை அரசின் ஆட்சிமுறையின்கீழ் ஜனநாயக முறையில் வாக்களித்து இலங்கை அரசின் பாராளுமன்றில் எதிர்கட்சியாக கூட இருந்தார்கள். மேலே முதல் பதிவிடும்போது முஸ்லீம்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் தொடர்பான தகவல்களை எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் எமக்கெதிரான நினைவுகூரல்கள் அறிக்கைகள் விடுகிறார்களோ அவர்கள் செய்தி இணைப்புக்கள் மற்றும் தளங்களின் நன்னி சோழன் பகிரவேண்டுமென்று ஒரு வரி சேர்க்கலாமென்று நினைத்திருந்தேன் பின்னர் அது என் கருத்துக்கு குழு சேர்க்கும் ஒரு நடவடிக்கைபோல் பார்க்கப்பட்டுவிடுமென்று தவிர்த்தேன், இப்போ நன்னியே பதிவிட்டதால் இதை சொன்னேன், நன்னி, எம் கால பதிவுகளை சேகரிக்கும் உங்கள் ஆற்றலும் பணியும் அளப்பரியது. இணையவெளியில் எங்கெல்லாம் ஒருபக்க சார்பாக எமது இனத்துக்கெதிராக பதிவுகளிடப்படுகிரதோ அங்கெல்லாம் உங்கள் பதிவுகளை இணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி.
  31. பாதுகாப்பு போதாது
  32. வாட்ஸப்பில் இருந்து.. Dr முரளி வல்லிபுரநாதனின் குறிப்பு — மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 ———- பகுதி 2- மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் ? ஏற்கெனவே முதலாம் பகுதியில், சில தினங்களுக்கு முன்னர் "மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக, இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்தவித சிகிச்சையும் இன்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார்" என்பதையும் "அதற்கு காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்து இருந்தேன். இந்த இரண்டாம் பகுதியில் ஒரு நோயாளி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதை விரிவாக ஆராய்வோம். "அதிகாலை இரண்டு மணியளவில் குருதிப் பெருக்குடன் அனுமதிக்கப்பட்ட தாயார் காலை 7.30 மணி வரை வைத்தியரினால் பார்வையிடப்படவில்லை" என்பதே தற்போது சம்பந்தப்பட்ட பலராலும் கூறப்படும் குற்றச்சாட்டாகும். 1. வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்டு அனுமதிக்கும் வைத்தியர் ஆரம்ப சிகிச்சை விடுதிகள் [preliminary care unit] உள்ள வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவில் உள்ள வைத்தியர் நோயாளர்களை முதலில் ஆரம்ப சிகிச்சை விடுதிக்கு அனுமதிப்பார்கள். அங்கு ஆகக் கூடியது நான்கு மணிநேரம் நோயாளர்கள் பராமரிக்கப்படுவார்கள். அதன் பின்னர் வீடு செல்லும் நிலையில் உள்ளவர்கள் வீட்டுக்கும் ஏனையவர்கள் உரிய விடுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவர். நோயாளி ஒருவரை விடுதிகளுக்கு அனுமதிக்கும் போது அவரது நோய்நிலையைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கும் வைத்தியர் (admitting officer) எந்த விடுதியில் நோயாளியை அனுமதிக்கவேண்டும் என்ற முடிவினை எடுப்பார். ஏனைய வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் நோயாளியைப் பார்வையிட்டு நோய்நிலை அடிப்படையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அல்லது சாதாரண விடுதிக்கு நோயாளியை அனுமதிப்பர். ஆரம்ப சிகிச்சை விடுதிகள் இருக்கும் வைத்தியசாலைகளில் கூட மகப்பேற்றியல் விடுதிக்குரிய நோயாளிகள் எவராவது விடுதியில் அனுமதிக்கப்பட வேண்டுமானால் -தாமதங்களைத் தவிர்த்து உடனடியாக உரிய துறைசார் வைத்தியர்கள் சிகிச்சைகளை ஆரம்பிக்க வசதியாக- நேரடியாகவே மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கும் நடைமுறை உள்ளது. 2. விடுதியில் கடமையில் இருக்கும் வைத்தியர் (duty officer) ஒரு நோயாளி விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இரவில் அனுமதிக்கப்பட்டால், அவரைப் பார்வையிட்டு உரிய ஆரம்ப சிகிச்சைகளை ஆரம்பிப்பது, தேவை ஏற்படின் மகப்பேற்றியல் நிபுணருக்கு அறிவிப்பது ஆகியன அவ்வேளையில் கடமையில் இருக்கும் வைத்தியரது பொறுப்பாகும். மன்னாரில் குறித்த தாயாரை வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியர், அவரை அனுமதிக்கும்போது "சிகிச்சைக்கள (ward ) வைத்தியர் உடனடியாகப் பார்க்க வேண்டும்" என்ற குறிப்புடன் அனுப்பி இருந்ததாகவும், தாயார் விடுதிக்குள் அனுமதிக்கப்பவுடன், விடுதித் தாதி விடுதிக் கடமையில் இருந்த வைத்தியருடன் தொடர்பு கொண்டு தகவலைக் கூறியும் வைத்தியர் வரவில்லை என்றும்" குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 3. கடமையில் இருந்த தாதியர் நோயாளியின் நிலைமை மோசமடையும் போது சிகிச்சை களத்துக்கு பொறுப்பான வைத்தியர் நோயாளியை வந்து பார்க்கவில்லை என்றால் தாதி பொறுப்பான வைத்திய நிபுணருக்கோ அல்லது தாதிய நிர்வாகிகளுக்கோ அறிவிக்க வேண்டும். 'மறுநாள் காலை 7.30 மணியளவில் குழந்தையைப் பார்ப்பதற்காக வந்த குழந்தைகளுக்கான வைத்தியரே குழந்தையின் தாயார் மிகவும் மோசமான நிலையில் அவதானித்து உரிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார்' என்று வைத்தியசாலையின் உள்ளகத் தகவல் கூறுகிறது. அதேவேளை, மரணமடைந்த இளம் தாயாரது தாயார் "மகளது நிலமை மோசமாக உள்ளதாக கூறியபோது "தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தம்மை விரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 'காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுததாகவும், நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியதாகவும்,தாம் மிகவும் கஷ்டப்பட்டுக் கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டதாகவும், இந்நிலையில் தாம் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள், பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள்' என்றும் கூறியுள்ளார். வயோதிபத் தாயாரது கூற்றின்படி "காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். " என்பதும் தெரியவருகிறது. இதிலிருந்து வயோதிபத் தாயார் விளங்கிக் கொண்டது போல ஏழு யணியளவில் அவரது மகள் விழுந்த பின்னரும் வைத்தியர்கள் வந்ததாகக் கொள்ள முடியாதுள்ளது. மாறாக உள்ளகத் தகவல் கூறியவாறு, 7.30 மணிக்கு குழந்தைகளுக்கான வைத்தியர் வந்தபோது இளம் தாயார் இருந்த நிலையைக்க கண்டு பதறி அழைத்த பின்னரே மருத்துவர் பலர் வந்துள்ளார்கள் எனக் கொள்ளவேண்டியுள்ளது. மேலும், மகப்பேற்று விடுதியில் நோயாளியைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்வதற்குத் தாதியர்களோ சிற்றூழியர்களோ உதவவில்லை என்பதும் துலாம்பரமாகிறது. உதவவேண்டியது அவர்களது கடமையாகும். உதவியிருந்ததால் அவர்களுக்குத் தாயாரின் பாரதூரமான நிலைமை தெரியவந்திருக்கும். 4. பொறுப்பான வைத்திய நிபுணர் வைத்திய நிபுணர் தமது விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாகக் கடமை வைத்தியர் அவசர அழைப்புகளுக்குக் குறித்த நேரத்திற்குள் வராது போனால் தாதியர்கள் நேரடியாக மகப்பேற்று நிபுணருக்கே அறிவிக்கும் ஒரு பொறிமுறையைச் செயற்படுத்தலாம். 5.மருத்துவ அத்தியட்சகர் மருத்துவமனைகளில் அன்றாடம் இடம்பெறக்கூடிய தவறுகளை இனங்கண்டு அவற்றை மீளவும் நடக்காதிருக்க உறுதிப்படுத்த வேண்டும். அதற்காகப் பல பல சுற்றறிக்கைகள், வழிகாட்காட்டிகள், மற்றும் விதிக்கோவைகள் உள்ளன. இந்த விடயத்தில் தற்போதுள்ள -புதிதாகக் கடந்த மாதமே பொறுப்பேற்ற- வைத்திய அத்தியட்சகரைக் காட்டிலும் முன்னர் இருந்தவர்கள் கட்டாயமாகப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆவர். மேலும் கடந்த கால மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், தமது சொந்த மாவட்ட வைத்தியசாலையின் இழிநிலையைக் கவனிக்காது வெளிநாட்டுப் பயணங்களையும் தமது சொந்த வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தார்மீகப் பொறுப்பாளிகள் ஆவர். வேறுவிதமாகச் சொல்வதானால் சிந்துஜாவின் அநியாயச் சாவுக்கான கர்ம வினையானது நோயாளியைப் பாராதிருந்த பெருங்குடி வைத்தியர், மற்றும் அசட்டையாக இருந்த தாதியை மட்டுமல்லாமல் மேலே குறிப்பிட்ட அனைவரையும் சேரும். இது இவ்வாறிருக்க, 'மேற்படி விடுதியில் அந்த இரவில் கடமையில் இருந்த மருத்துவர் தென்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மாதத்தில் 2 வாரங்களே மன்னாருக்கு வருகை தந்து கொண்டு- ஒவ்வொரு நாளும் வேலை செய்பவராகவும், அத்துடன் தினமும் 4-6 மணி நேரம் வேலை செய்வதாக போலி குறிப்புகளை எழுதி- மாதம் 120 மணி மேலதிக வேலை செய்வதாகக் கணக்குக் காட்டிப் பல மாதங்களாக முழுச் சம்பளத்தையும், அத்துடன் மேலதிகக் கொடுப்பனவாக மாதம் தோறும் பல இலட்சம் ரூபாய்களையும் சுருட்டியவர்' என்றும் உள்ளகத் தகவல் சொல்கிறது. இதை விடத் தென்பகுதியில் பல பதவி வெற்றிடங்கள் இருந்த போதும் 'ஐஸ் அடிப்பதற்காக' வடக்குக்கு வந்தவர் என்பதும், 'இரவு 9 மணிக்கு பின்னர் இவர் வேறு உலகத்தில் இருப்பதாகவும், நோயாளிகளைக் கவனிப்பதில்லை' என்பதும் வைத்தியசாலையினுள் கூறப்படும் குற்றச்சாட்டாகப் பொதுமக்கள் மத்தியில் பேச்சடிபடுகிறது. இந்த வைத்தியரை ஆரம்ப விசாரணையின் பின் தண்டனைக்குரிய குற்றம் என்ற பெயரில், அவரது சொந்த இடத்துக்குப் பாதுகாப்பாக "தண்டனை இடமாற்றத்தின் மூலம்" அனுப்ப GMOA மாபியா திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலே குறிப்பிட்ட அனைத்து நடைமுறை மீறல்களுக்கும் வழிகாட்டிகளாக, பாதுகாவலர்களாக சுகாதாரத்துறைத் தொழிற்சங்கங்களே உள்ளன. நோயாளியைச் சுத்தப்படுத்த முன்வராது சம்பளம் பெறும் சிற்றூழியரில் தொடங்கி, கடமைக்கே வாராது சம்பளம் பெறும் வைத்தியர்கள் மற்றும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது கையறுநிலையில் உள்ள மருத்துவ நிர்வாகிகள் அனைவரும் தத்தமது கடமைகளைச் செய்ய வேண்டுமானால் முதலில் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும். எனவே, சிந்துஜாவின் சாவு மன்னாரில் இடம்பெற்ற கடைசி அநியாயச் சாவாக இருக்க வேண்டுமாயின், 1. கவனக்குறைவாக இருந்த குற்றவாளி தண்டிக்கப்பட்டுச் சிறைக்கு அனுப்ப பட வேண்டும். அதைச் செய்வதற்குத் தன்னார்வ சட்ட ஆலோசகர் ஒருவர் இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களால் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, அந்த கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணிகளாலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திறமையுள்ள சட்டத்தரணிகள் எவரையும் கொண்டிராத இந்தக் கட்சி உறுப்பினர்கள் அவர்களை நம்பிய வைத்தியர் அர்ச்சுனாவை விளக்கமறியலில் இருந்து மீட்கும் முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில், இவர்களால் வழிநடத்தப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய நட்டஈடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சுயாதீன நீதியாளர்கள் அக்குடும்பத்தைப் பாரமெடுத்து நீதி பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். 2. தற்போதைய மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை என்பது உண்மையில் -GMOA மாபியாக் கும்பலால் வழங்கப்படும் ஆதரவுடன்- அறுபது வைத்தியர்களில் அரைவாசி வைத்தியர்களே ஒரு குறித்த நாளில் கடமைக்கு சமூகமளிப்பதால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைப் பற்றாக்குறை என்பதைப் புரிந்து கொண்டு, அனைத்து வைத்தியர்களும் தினசரி கடமைக்குச் சமூகமளிப்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர கண்காணிப்பும் கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும். உரிய கணக்காய்வுகளை மேற்கொண்டால் மோசடி செய்யப்பட்ட பல மில்லியன் ரூபாய்களை மீளப்பெற முடியும் என்பதுடன் அனைவரையும் வேலைக்கு வரவைக்கவும் முடியும். 3. இனியாவது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் தமது பிரதேச வைத்தியசாலையில் என்ன நடக்கிறது என்பதைக் கண் திறந்து பார்த்து உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். கடந்த காலத்தில் சுகாதாரத் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட நிபுணராக கடமையாற்றியவன் என்ற வகையில் மாவட்ட பொது வைத்தியசாலையாக மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக உள்ளேன். 3. சூட்டோடு சூடாக மன்னார் மக்கள் ஒன்று திரண்டு கவன ஈர்ப்புப் போராட்டங்கள் ஊடாக உரிய அழுத்தத்தைச் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்களுக்கு எதிராகப் பிரயோகிக்க தவறினால் இன்னும் பல சிந்துஜாக்களை மன்னார் இழக்க நேரிடலாம். நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர் 6.8.2024
  33. ம்..க்ம்....😎 வேலைக்கு ஆக்களை வைச்சிட்டு பிறகு நான் தான் 24மணிநேரமும் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு திரியோணும் 😂
  34. இவையள் ஓ பத்து போடுறேல்லை. ஓ டலன் டலன் போடுற கோஸ்டி இது! ஓ டலன் டலன் ஆர் யு கிளப் கிளப்பை தூக்கி மேல போட்டால் செட்டியார் வீட்டு நண்டு நண்டத் தூக்கி மேல போட்டால் நாகரிகப் பாம்பு பாம்பத் தூக்கி மேல போட்டால் பஞ்சவர்ணக் கிளி கிளியத் தூக்கி மேல போட்டால் கீ! கீ! கீ!
  35. நம்ம கச்ச தீவு மாதிரி 5 அல்லது 6 தீவு கூட்டம் தான் இந்த நாடு. ஏறத்தாழ 6 லட்சம் குடி மக்களை கொண்ட நாடு... தங்க பதக்கம் 😍😍😍 140 கோடி கொண்ட நாடு ஹிந்தி!!!! பாணி பூரி, இரயில்வே சாய்.... நாடு முழுக்க தேசபக்தர்கள்... தங்க பதக்கம் நகி ஹே... தங்கமெல்லாம் குஜராத்தி கடையில தான் அடகு வச்சு இருக்கிறோம் 😃😃 குகன் அருமைநாட்டார்
  36. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 24 31 31 86 2 China 22 22 16 60 3 France 13 16 19 48 4 Great Britain 12 15 19 46 5 Australia 14 12 10 36 6 Japan 11 6 12 29 7 Republic of Korea 11 8 7 26 8 Italy 9 10 7 26 9 Netherlands 9 5 6 20 10 Canada 6 4 8 18 11 Germany 8 5 4 17 12 Brazil 2 5 6 13 13 Spain 2 3 5 10 14 New Zealand 3 5 1 9 15 Hungary 3 3 2 8 15 Sweden 3 3 2 8 17 Ireland 4 0 3 7 18 Romania 3 3 1 7 19 Ukraine 2 2 3 7 20 Switzerland 1 2 4 7 21 Greece 1 1 5 7 22 Israel 1 4 1 6 23 Poland 1 1 4 6 24 Croatia 2 1 2 5 25 Belgium 2 0 3 5 26 Kazakhstan 1 1 3 5 27 Chinese Taipei 1 0 4 5 28 DPR Korea 0 2 3 5 29 Hong Kong 2 0 2 4 30 Georgia 1 2 1 4 31 Kenya 1 1 2 4 31 South Africa 1 1 2 4 33 Jamaica 0 3 1 4 34 Philippines 2 0 1 3 35 Denmark 1 2 0 3 36 Uzbekistan 1 0 2 3 37 Mexico 0 2 1 3 38 Turkey 0 1 2 3 39 India 0 0 3 3 39 Tajikistan 0 0 3 3 41 Azerbaijan 2 0 0 2 41 Serbia 2 0 0 2 43 Chile 1 1 0 2 43 Ecuador 1 1 0 2 43 Saint Lucia 1 1 0 2 43 Uganda 1 1 0 2 47 Cuba 1 0 1 2 47 Czech Republic 1 0 1 2 47 Guatemala 1 0 1 2 47 Norway 1 0 1 2 51 Ethiopia 0 2 0 2 52 Kosovo 0 1 1 2 52 Kyrgyzstan 0 1 1 2 52 Thailand 0 1 1 2 55 Dominican Republic 0 0 2 2 55 Lithuania 0 0 2 2 55 Malaysia 0 0 2 2 55 Moldova 0 0 2 2 59 Algeria 1 0 0 1 59 Argentina 1 0 0 1 59 Bahrain 1 0 0 1 59 Dominica 1 0 0 1 59 Slovenia 1 0 0 1 64 Armenia 0 1 0 1 64 Colombia 0 1 0 1 64 Fiji 0 1 0 1 64 Mongolia 0 1 0 1 64 Tunisia 0 1 0 1 69 Austria 0 0 1 1 69 Cape Verde 0 0 1 1 69 Egypt 0 0 1 1 69 Grenada 0 0 1 1 69 Indonesia 0 0 1 1 69 Iran 0 0 1 1 69 Portugal 0 0 1 1 69 Slovakia 0 0 1 1
  37. ஆஸ்பத்திரியில் வேலை செய்வோர் எல்லோரும் "மருத்துவர்கள்" அல்ல என்று இலக்கு இணையத்திற்கு யாராவது சொல்ல வேண்டும். "சிற்றூழியர்" என்று செய்தி எழுதி விட்டு, "மருத்துவர்" என்று தலையங்கம். இது தற்போது சூடாக இருக்கும் சூழலை வைத்து வயிறு வளர்க்கும் சாக்கடை ஊடக நுட்பம் என நினைக்கிறேன்.
  38. இல்லை .......இன்னும் நோ பல் பரிசு முழுசாக கிடைக்கவில்லை ....... அஞ்சாறுதான் போயிருக்கு ......! 😂
  39. அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை அழித்த முஸ்லிம் ஜிகாதிகள் தடயமின்றி அழிவது எப்போது? எப்போது அடுத்த இன அழிப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் திரும்பும்? அதுவரை பொறுத்திருக்கலாமா ? சொந்த முஸ்லிம்களையே சுனி சியா எனப் பிரித்துக் கழுத்தறுக்கும்போது வராத அக்கறை, சிரிய அகதிகளை,?பெண்களை பாலியல் அடிமைகளாக, மிருகங்களுக்குச் சமானமாக நடாத்தும்போது வராத அக்கறை, இலங்கையில் அகதி வாழ்க்கைக்காக கண்ணீர் விடும் கோழைத்தனத்தை என்ன சொல்வது? மனிதாபிமானம் என்று வரும்போது பலஸ்தீனியர்களின் வேதனையை புரிந்துகொண்டாலும், இவர்கள் எல்லோரும் மதம் என்று வரும்போது எல்லா முஸ்லிம்கலும் ஒரே குட்டை ஒரே மட்டையே. எனவே,...... உந்த முஸ்லிம்களுக்கு சியோனிச இஸ்ரேலும், UKயும் US உம்தான் பொருத்தமானவர்கள். 🙏 முஸ்லிம்களிடம் அமைதியை ஏற்படுத்தலாமென்பது கானல்நீர்.
  40. எதனை வைத்து இவ்வாறு அனுமானிக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. ஹசீனா வங்க தேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் இவர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் இன் குடும்பத்தில் ஹசீனாவையும், அவர் சகோதரியையும் தவிர மிச்ச எல்லாரையும் இராணுவப் புரட்சி ஒன்றில் வாங்காள தேசத்தின் இராணுவம் கொன்றழித்து விட்டது. அதன் பின் வெளி நாட்டில் வாழ்ந்து வந்த ஹசீனா பின்னர் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்து கொண்டு தான் வங்காளத்தின் சனநாயகத்துக்காக போராடி, பின் தன் தேசம் சென்று தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார். அவர் ஒரு இந்திய அனுதாபி. வங்காளத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்து கொண்டு சென்றாலும் அது இந்தியாவை ஆபத்தில் தள்ளும் நிலை வரை எட்டாது அடக்கியவர். சும்மா இருக்காமல் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வேலை வாய்ப்புகளில் 30 சத வீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப் போய் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் (உயர் நீதிமன்றம் அதை 5 வீதமாக பின்னர் குறைத்தது). சுதந்திரப் போராட்ட தியாகிகளில் அனேகமானோர் இவரது கட்சி ஆட்கள் தான் என்பதால், இவரது முயற்சியை மாணவர்கள் எதிர்த்தனர். இனி ஆட்சிக்கு வரப் போகின்றவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் பாதிக்கப்படப் போவது இந்தியாதான். //இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி அமெரிக்கா ஓடவைத்ததோ// கோத்தாவின் அரசு இந்திய அரசு சார்பானதாக இருக்கவேயில்லை. அது சீன சார்பு அரசு. மகிந்தவின் அரசும் சீன சார்பு அரசாகவே இருந்தது. இதனால் தான் கொவிட் காலத்தில் சீனா தான் தயாரித்த தடுப்பூசியை இலங்கைக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தது. மகிந்த / கோத்தா காலத்தில் சீனாவின் பிடிக்குள் இலங்கை முற்றாக சிக்கிக் கொண்டு இருந்தது (இன்று இந்தியா இந்த நிலையை கூடியளவுக்கு மாற்றி விட்டது) அரகலய வின் அனுசரனையாளர்களாக அமெரிக்காவும் சில முஸ்லிம் நாடுகளும் தான் இருந்தன. அமெரிக்க தூதுவர் நேரடியாகவே அரகலயவுக்கு ஆதரவை கொடுத்தும் இருந்தார். பைடன் காலத்தில் இந்திய அமெரிக்க உறவு நன்றாகத்தான் உள்ளது. தென்னாசியாவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா இன்றைய நிலையில் இயங்காது, அது இந்தியாவின் மீது எதிர்ப்புணர்வு உள்ள ட்றம் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கூட இந்த நிலை மாறாது. இந்தியா ரஷ்யா சார்பான நிலைப்பாடில் இருப்பினும் கூட, அமெரிக்க தன் வர்த்தக நலன்களுக்கு எதிராகவும், சீன எதிர்ப்பிற்காகவும் இந்தியாவின் நலனுடன் முரண்படாது.
  41. ஈரான் - ஈராக் பெரும் யுத்தம் ஷியா சுன்னி என்ற மதபிரிவுகளுக்கு இடையிலான மோதல்தான் மிக பெரும் சர்வதேச பிரச்சனையானது குமாரசாமியண்ணா, அவனோட நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்வுபெற்றுவிட்டு அவன் குடிமக்களையே கொன்று குவிப்பதை வினைவிதத்தவர்கள் வினை அறுக்கமுடியுமென்றால். நமது பிரச்சனையிலும் சர்வதேசம் ஓரவஞ்சகம் செய்து வினைவிதைத்தது , அதற்காக இஸ்லாமியர்கள்போல் நாமும் அரசுகள் செய்த தவறுகளுக்காக அவன் குடிமக்களை கொல்லலாமா அல்லது அப்படி செய்தால் நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா? அவர்கள் செய்ய முடியுமென்றால் நாங்களும் ஏன் செய்யகூடாது? இப்படி கேள்வி எழுப்புவதுகூட எனக்கு கொடூரமாகவே உள்ளது ஆனாலும் ஒரு கருத்து பகிர்வை நிறுவுவதற்காக பேச்சுக்கு கேட்கிறேன் அமெரிக்கா இஸ்ரேல் மேற்குலகம் மட்டுமல்ல, உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள ஆதிக்க சக்தி பெற்ற நாடுகள் அனைத்தும் பிறநாடுகள்/இனங்கள்/சமூகங்களுக்கெதிராக தீங்கிழைத்திருக்கின்றன ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன அப்படி நடந்து கொள்ளவில்லை என்று உலகில் எந்த ஒரு வல்லமை கொண்ட நாட்டையும் நீங்கள் விரல் நீட்டி காண்பிக்க முடியாது. ஆனால் இஸ்லாமியநாடுகள் உள்நாட்டிலும் அண்டைநாடுகளுடனும் கொண்ட மோதல் போக்க்கினால்தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்குலகமும் அமெரிக்காவும் இடையில் புகுந்து தமது ஆயுத வியாபாரம் பொருளாதார நலன்கள் அரசியல் தலையீடுகள் என்று மூக்கை நுழைத்தன. இப்போது தவறு எங்கிருந்து ஆரம்பித்தது என்கிறீர்கள்? கடாபியும் சதாமும் எப்படியான மேற்குலகுக்கு எதிரான கடும்போக்கை கொண்டிருந்தார்கள் என்பது யாரும் சொல்லி யாரும் அறியவேண்டிய ஒரு விஷயம் அல்ல, கடாபி மேற்குலத்தை எதிர்ப்பதே கொள்கையாக வைத்திருந்தார் ,அமெரிக்க பயணிகள் விமானத்தையே தகர்த்து நூற்றுக்கணக்கான பயணிகளை கொன்று அமெரிக்காவுடன் தீரா பகை வளர்த்தார், சதாம் அமெரிக்காவுடன் கூடி குலவிவிட்டு பின்னர் சோவியத் பக்கம் சாய்ந்தார், குர்து இனமக்களை விஷவாயு செலுத்தி ஆயிரக்கணக்கில் கொன்றார், அண்டைநாடான குவைத்மீது படை எடுத்து மேற்குலகத்தை அந்த பிராந்தியத்தில் இழுத்து அவர்கள் கையினாலேயே தனக்கான தூக்கு கயிறை கேட்டு பெற்றார். ஆசாத் சதாம் போலவே சொந்த நாட்டின் மக்கள்மீது ரசாயன தாக்குதல் நடத்தி அட்டூளியம் பண்ணி ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை பேணி தனக்கெதிரானவர்களுக்கெதிராக மிக பெரும் போர் தொடுத்து மேற்குலகுடன் போர் செய்தார், ஆம் சிரிய அதிபருக்கெதிரான போராளிக்குழுக்களுக்கு ஆதரவாக மேற்கின் அனைத்து நாடுகளும் உதவி செய்தன, அதேபோல சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா S-400 வான்பாகுகாப்பு கட்டமைப்பு, சுக்கோய் ரக விமானங்களுட்பட தனது ராணுவபடையையே கொண்டு சென்று இறக்கியது, ஆக அங்கே மோதியது அமெரிக்கவும் அதன் நேச படைகளும் எதிர் ஆசாத்தும் ரஷ்யாவும். அப்படியிருக்க ஆசாத் அவர்களுக்கு என்ன செய்தார் என்கிறீர்கள். சிரியாவின் மோதல்களில் எதிரும்புதிருமாக நின்ற ரஷ்யா மேற்குலபோரில் தமது ஆதரவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்த சிரிய அகதிகளை அழைத்து வந்தார்கள் அதனால் பூ கொடுத்து வரவேறார்கள், ஆதரவு வழங்கிய மேற்குலகத்திற்கு இவர்கள் நன்றிக்கடன் எப்படி மீள செலுத்தினார்கள் என்பதே இங்கேயுள்ல விவாத பொருள். முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை ஆனால் மேற்குலகத்தினர் சாதுக்கள் இல்லை என்கிறீர்கள், அப்போ முஸ்லீம்கள் சாதுக்களா இல்லையா? என்னைபொறுத்தவரை பிராந்திய கொள்ககள் என்று மேற்குலகம் வெவ்வேறு நிலைகளை கொண்டிருந்தாலும், தனது நாட்டில் பாதுகாப்பில்லையென்று தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு வதிவிட உரிமை கொடுத்து வசதிகள் கொடுத்து அவர்கள் சந்ததி சந்ததியாக வாழ் இடமும் கொடுத்து வாழவைத்த மேற்குலகம் சாதுக்கள்தான். இல்லையென்றால் அவன்நாட்டில் வாழ்ந்துகொண்டு அவனது மக்களையே கொன்று குவித்து அவனதுநாட்டை இஸ்லாமியநாடு ஆக்குவோம் என்று அறைகூவல் விட்டு எவ்வளவோ அநியாயம் பண்னினாலும் இன்னும் அவர்களை அகதியா தனது நாட்டுக்குள் அனுமதித்துக்கொண்டேயிருக்கிறான். இதையே ஒரு பேச்சுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாடு ஒன்றில் லட்சக்கணக்கில் வாழ்விட உரிமைபெற்றுவிட்டு வாராவாரம் அவனோட மக்களை கொன்று குவித்தால் உங்களை சும்மா விட்டிருப்பானா? அவன் நாட்டிற்குள் அகதிகள் என்று யாரையும் நுழைய அனுமதித்திருப்பானா? அவன்நாட்டினரை கொன்றவர்களையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் பொதுவெளியில் கழுத்தில் கயிறுமாட்டி கிரேனில் தொங்கவிட்டு கொலை செய்திருப்பான். எத்தனையோ உலகபணக்கார இஸ்லாமியநாடுகள் இருந்தும் எந்தநாடும் சக இஸ்லாமியர்களை தனதுநாட்டுக்குள் அகதியாக அனுமதிப்பதேயில்லை, அவர்களுக்கு தெரியும் அதன் பின் விளைவுகளும் தாக்கமும். மேற்குலகமும் அதன் அரசுகளும் சாதுக்கள் இல்லையென்றால் என்றோ அவனது பாஸ்போட்டுக்களை தூக்கி எறிந்துவிட்டு சாரை சாரையாக ஊர் திரும்பியிருப்போம். அப்படி திரும்பும் நிலையில் யாரேனும் உள்ளார்களா புறநடையாக ஓரிருவர் தவிர? அவர்கள் சாதுக்களா இல்லையா என்ற பந்து உங்கள் பக்கம் அதை உதைப்பதும் அணைப்பதும் உங்கள் செளகரியம்.
  42. இப்போது கியூபாவை தொட்டுகொள்கிறீர்கள், பின்பு ரஷ்யா,இந்தியா என்றும் தொடரும் வாய்ப்பிருக்கிறது, நாங்கள் பாலஸ்தீன தலைவர் பலி தொடர்பான திரியில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் அதனால் அவர்பற்றி பேசினேன், கியூபா பற்றிய செய்திகளாயிருந்தால் கண்டிப்பாக அதே கூடையில்தான் கியூபா தலைமையும் போடப்படும் என்பதில் மாற்றமில்லை. எனது இனத்தின் அழிவை கொண்டாடியவர்களுக்கு முன்னால் நடு நிலமை என்பது ஒருபோதும் இல்லை.
  43. மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள். உலக வரலாற்றில் அரசியல், இராணுவத் தலைவர்கள் உயிரோடு இருக்கும் பொழுதோ அல்லது அவர்களின் மரணத்தின் பின்னரோ அவர்களுடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள், பரிசு பொருட்கள் என்பவை தண்டனையாக பறிக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறன. இத்தகைய தண்டனை என்பது மக்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. எனினும் பெரும்பாலும் மக்களின் விருப்புக்கு உட்பட்டதாகவே இத்தகைய தண்டனைகள் நிகழ்ந்ததை வரலாறு எங்கிலும் காணமுடியும். அத்தகைய ஒரு தண்டனையாகவே தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாய் இருந்த இரா. சம்பந்தனின் மரணக்கிரியை மக்கள் புறக்கணித்ததை எடுத்துக்கொள்ள வேண்டும். உலக வரலாற்றில் மரணத்தின் பின் தண்டனையாக பதவி, பட்டங்கள் பறிக்கப்பட்டமைக்கு உதாரணமாக இங்கிலாந்தின் ஒலிவர் குரோம்வெல் , இத்தாலியின் முசோலினி போன்றவர்களை முதன்மை உதாரணங்களாக குறிப்பிடலாம். அவ்வாறே இலங்கையில் பீல் மாஷல் சரத் பொன்சேக்காவுக்கு பதவி, பட்டங்கள் பறிக்கப்பட்டமையும் அதன் பின்னர் பதவி பட்டங்கள் மீள கொடுக்கப்பட்டு மேலும் பட்டங்கள் கொடுக்கப்பட்டமையும் இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இங்கிலாந்துக்கு வெற்றி ஒலிவர் குரொம்வெல் (Oliver Cromwell 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) இங்கிலாந்தின பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் வீரம்மிகு முன்னணி இராணுவத் தலைவராக விளங்கியவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த செயல் வீரர். அத்தகையவர் பின்னாளில் முதலாம் சால்ஸ் மன்னனின் கொலையுடன் (30 ஜனவரி 1649) முடியாட்சியை வீழ்த்தி குடியாட்சியின் பெயரால் 19 மே 1649ல் ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் அவர் தன்னை மன்னனாக்கிப் புரட்சிக்குத் துரோகம் இழைத்தார். 1658 ல் அவர் இறந்ததன் பின்னர் மீண்டும் மன்னன் சால்ஸின் மகன் இரண்டாம் சால்ஸ் 1661இல் தம் வம்ச ஆட்சியை மீட்டெடுத்த பின்னர் 1662ல் குரோம்வெல் மீதான குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் போது அவருடைய புதைக்கப்பட்ட உடல் தோண்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, டைபர்னில் உள்ள புகழ்பெற்ற தூக்கு மேடையில் அவருடைய எலும்புக்கூடு தூக்கிலிடப்பட்டது. அத்தோடு நின்றுவிடாமல் அந்த எலும்புக்கூட்டின் தலை வெட்டப்பட்டது. மன்னரின் அதிகாரத்தைப் பற்றிய செய்தியை வெளியிடுவதற்கு , குரோம்வெல்லின் தலை வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தின் கூரையில் முப்பது ஆண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இங்கே மரணத்தின் பின்னும் ஒலிவர் குரொம்வெல்க்கு தண்டனை அளிக்கப்பட்டது மாத்திரமல்ல அவருடைய பட்டங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்ட ஒரு வரலாற்றை காணமுடிகிறது. உலக வரலாற்றில் இத்தாலியின் பசிஸ்ட் முசோலினி என்று அழைக்கப்படும் பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945) இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி நாட்டுக்கு (1922–1943) தலைமை வகித்தவர். ஏதேச்சதிகார ஆட்சி இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏதேச்சதிகார ஆட்சியை நடத்தியவர். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், அறிஞர்களையும் திறமையானவர்களையும், தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடலை மிலானுக்கு எடுத்துச் சென்ற இத்தாலிய மக்கள் அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் அவரது உடல் கயிற்றினால் பிணைக்கப்பட்டு மிகவும் அவமானகரமான முறையில் தலைகீழாகக் தொங்கவிடப்பட்டு பார்வைக்காக விட்டிருந்தார்கள். இங்கே ஒரு மக்கள் தலைவனுக்கு மக்கள் அளித்த தண்டனை மிகக் கொடூரமானது என்பதை இங்கு கவனத்திற் கொள்ளவேண்டும். அவ்வாறே இலங்கையின் இனப் பிரச்சனையின் உச்ச காலகட்டத்தில் பணியாற்றி தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிராக இறுதிப் போரில் இலங்கைப் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேக்கா பின்னாளில் ராஜபக்சக்களுக்கு எதிராக செயற்பட்டார். அரசதுரோகம் செய்தார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளால் அவருடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கட்டை காற்சட்டையுடன் உணவுக்காக வரிசையில் உணவு தட்டை ஏந்தி நின்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தமையும் தெரிந்ததே. ஆனால் அதே பொன்சேக்காவிற்கு பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்று நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த ரணில் விக்ரமசிங்காவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பௌத்த மகா சங்கமும் இணைந்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதோடு, நாட்டை ஒன்றுபடுத்திய பெரும் யுத்தத்தில் படைகளுக்கு தலைமை தாங்கி இலங்கை அரசை பாதுகாத்தார் என்ற அடிப்படையில் அவருக்கு பீல் மாஷல் பட்டத்தையும் வழங்கியது. இங்கே உலகளாவிய வரலாற்றில் ஒரு ராணுவ தளபதிக்கு பீல் மாஷல் பட்டம் வழங்குவது என்பது பெரும் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும். உலக நியதி அவ்வாறு வழங்கப்படுகின்ற போது அந்த இராணுவ தளபதி பல நாடுகளின் கூட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கினாலோ அல்லது எதிரி நாடு ஒன்றின் மீது படையெடுத்து வெற்றி பெற்றமைக்காகத்தான் வழங்கப்படும். இதுவே பொதுவான உலக இராணுவ நியதியாக இருந்து வந்துள்ளது. ஆனால் இலங்கையில் தனது சொந்த நாட்டின் ஓர் இனத்தின் ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்து பெறப்பட்ட வெற்றிக்காக சரத் பொன்சேக்காவுக்கு பில் மாஷல் பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு நாட்டினுடைய ராணுவ தளபதிக்கு பீல் மாஷல் பட்டம் வழங்குவது என்பது அந்த நாட்டினுடைய தேசிய கௌரவமாகவும், கீர்த்தியாகவும் கருதப்படும். அவ்வாறு வழங்குகின்ற பட்டத்துக்கு அந்த நாட்டினுடைய நாடாளுமன்றத்தின் அனைவரும் ஒப்புதல் அளிக்கின்ற அல்லது ஆதரவளிக்கின்ற பட்சத்திலேயே வழங்கப்படுவதுதான் உலக நியதியாகவும் இருந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இலங்கையில் பீல்மாஷல் பட்டம் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படுகின்றபோது இலங்கையின் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா சம்பந்தன் அவர்களே இருந்தார். சம்பந்தன் தலைமையில் இயங்கிய அதுவும் எதிர்க் கட்சி தலைமை என்ற அந்தஸ்தில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பீல் மாஷல் பட்டம் வழங்குவதற்கு எதிராக எதையும் செய்யாமல் பெரிதும் ஆதரவாகச் சசெயற்பட்டது. குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்டி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதன் மூலம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை பற்றி அவர்கள் எந்த கரிசனையும் இன்றி இருந்திருக்கிறார்கள். அது மாத்திரமல்ல தங்கள் சொந்த மக்களின் அழிவைப் பற்றி அவர்கள் எந்த கவலையும் அற்று இலங்கை இனவழிப்பு அரசாங்கத்துக்கு அனுசரணையாகவும், ஆதரவாகவும்; கூட்டுப் பங்காளிகளாகவும் இருந்தார்கள் என்றுதான் தமிழ் மக்களால் பார்க்கப்பட்டது. தீர்வு தரப்போவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை வளங்கி அரசாங்கத்தை அமைக்கு காரணமான சம்பந்தன் தீர்வைப் பெறாதது மட்டுமல்ல அதற்கப்பால் இனப்படுகொலைத் தளபதிக்கு பீல்ட் மாஷல் பட்டம் வளங்க உறுதுணையாய் நின்றார். தமிழ் மக்களின் கடந்த நூறு ஆண்டு அரசியல் வரலாற்றில் ராமநாதன், பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் இந்த அரசியல் தலைவர்களின் வரிசையில் கடந்த 20 ஆண்டுகள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய மிதவாத தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு என்றொரு பங்கும், பாத்திரமும், பொறுப்பும், வரலாற்று கடமையும் இருந்தது. உரிய பொறுப்பு ஆனால் தனது மக்களுக்கு உரிய பொறுப்பையும் கடமையையும் செய்யத் தவறிய தலைவராகவே சம்பந்தன் இறக்கும்போது தமிழ் மக்களால் கருதப்பட்டார். அது மாத்திரமல்ல தான் தலைமை தாங்கி நிர்வாகித்த கட்சியின் சிதைவையும் உடைவையும் அவருடைய அந்திமக் காலத்தில் தன் கண்களால் பார்த்த வாறே அவர் மரணத்தையும் தழுவினார் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். இரா சம்பந்தன் அவர்களுடைய தலைமைத்துவம் என்பது தமிழ் மக்களுக்கு எந்த ஒரு வெற்றியையும் பெற்றுத் தரவில்லை. அவர் வாழும்போதும் தோல்வியடைந்த தலைவராக அனைத்து சிங்களத் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்ட தலைவராக அனைத்து சிங்கள தலைவர்களிடமும் ஏமாந்த தலைவராக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார் . இந்த நிலையில் அவர் தலைமை தாங்கிய கட்சி இரண்டாக உடைந்து சண்டையிடும் நிலைக்கு இவரே பொறுப்பானவர் என்ற கருத்தும் தமிழ் மக்களிடம் உண்டு. இந்த நிலையிற்தான் அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவருடைய மரணம் நிகழ்ந்து பின்னர் இந்திய அரசியல் தரப்பினர் இரங்கல் செய்தி வெளியிடுகின்ற போது தமிழ் தேசிய மக்களின் தலைவர் என்று குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தனர். ஆனால் இவருடைய தமிழரசு கட்சியின் பேச்சாளர் தன்னுடைய குறிப்பில் தமிழ் சிறுபான்மை மக்களின் தலைவர் என்று குறிப்பிட்டதிலிருந்தே இவருடைய நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டிருந்தனர். அதேநேரத்தில் சம்பந்தன் அவருடைய மரணத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருந்து மடிக்கணினி அவருக்கு எதிரான காட்டமான கருத்துக்களே வெளிவந்தன. பொதுவாக தமிழர் பண்பாட்டில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய நல்ல விடயங்களை மாத்திரமே பேசுகின்ற நினைவுபடுத்துகின்ற ஒரு பண்பு தமிழ் மக்களிடம் உண்டு. ஒருவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய தவறான அல்லது பாதகமான எந்த ஒரு பண்பையும் தமிழ் மக்கள் பேசுவதில்லை. மரணத்தின் பின் இறைவனடி சேர்ந்தார் காலமானார் என இழிவுபடுத்தாமல் மேன்மைப்படுத்துகின்ற பண்பையே கொண்டிருக்கின்றனர். இதுவே தமிழ் மக்களின் உயரிய விழுமியமாக இருந்து வருகின்றது. ஆனாலும் "உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுதலும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்ற சிலப்பதிகாரத்தின் சொல்லோவியத்தில் வருகின்ற அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுவது மாத்திரமல்ல அரசியல் பிழைத்தோர்க்கு மரணமே தண்டனை மாத்திரமல்ல உயிரற்ற உடலுக்கும் தண்டனை வழங்கப்படும் என்பதை சம்பந்தரின் மரண ஊர்வலம் வழிகாட்டி நிற்கிறது. இங்கே மரணம் அடைந்த சம்பந்தன் அவர்களை இகழ்வதோ தூற்றுவதோ இப்பந்தியின் நோக்கம் அல்ல. ஆனால் தமிழ் சமூகத்தின் நிலை என்ன என்பதை வெளிக்காட்டுவதே இப்பந்தியின் நோக்கமாகிறது. தமிழ் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதே இதன் கருவாகிறது. மக்களின் மனங்களை வெல்லாதவர்கள் மக்கள் தலைவர்களாக முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது. சம்பந்தனுடைய உடல் அஞ்சலி இந்த நிலையிற்தான் சம்பந்தனுடைய உடல் இறுதி அஞ்சலிக்காக கொழும்பிலிருந்து வவுவுனியா, யாழ்ப்பாணம், திருவோணமலை வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அஞ்சலி செலுத்திய ஒட்டுமொத்த மக்களின் தொகை 3500-ஐ தாண்டவில்லை என்பதிலிருந்து மக்கள் இவருக்கு கொடுத்த கௌரவத்தையும் அல்லது முக்கியத்துவத்தை உணர முடிகிறது. யாழ்ப்பாணத்திற்கு அவர் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள் ராணுவத்தினரால் காவி செல்லப்படும் காட்சி மக்களுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மைதான். அதனால்தான் என்னவோ அரசு தரப்பில் இருந்து சம்பந்தனுடைய இறுதிக்கிரியை அரச மரியாதையுடன் செய்வதற்கு அரசு தரப்பு கேட்டிருந்தும் சம்பந்தனுடைய குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர் போலும். எனினும் இறுதி திரைகளின் போது திருகோணமலைக்கான போக்குவரத்திற்கு மாகாண ஆளுநர் விசேட போக்குவரத்து ஒழுங்கினை செய்திருந்தார் என்பதும் இங்கே முக்கியமானது. அஞ்சலிக்காக உடல் யாழ் நகரத்த கூடாக செல்வநாயகம் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது யாழ் நகரத்துக்குள் விளம்பர சேவையில் "மன்மதராசா மன்மத ராசா" என்ற குத்தாட்டப் பாடல் ஒளிபரப்பாகியது தற்செயலானதா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதும் கேள்விக்குரியாது. அதே நேரத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்ட மண்டபத்தின் அதிலிருந்து பாடசாலைகளின் இரைச்சலானது மண்டபத்தில் இருந்தோருக்கு பெரும் கவனக் கலைப்பானாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது. மேலும் அஞ்சலிக்காக வந்தவர்களில் பெரும்பான்மையினர் இலங்கை அரசாங்க இயந்திரத்தின் ஊழியர்களாக அதாவது அரச இயந்திரத்தின் உதிரிப் பாகங்களாக இருந்ததையே அவதானிக்க முடிந்துள்ளது. அதுமட்டுமல்ல யாழ் நகரத்தில் இரண்டு இடங்களில் மாத்திரமே நினைவஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும் ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மரணம் அடைந்த சாந்தனின் உடல் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டி எங்கும் நினைவஞ்சலி பதாகைகள் ஆயிரத்துக்கு மேல் கட்டப்பட்டதை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கே சாந்தனுக்கு அவ்வளவு தூரம் திரண்டு மக்கள் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். உலகின் பார்வையில் சாந்தன் ஒரு கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்ற மனிதர். ஆனால் சம்பந்தன் உலகின் பார்வையில் இலங்கைத் தமிழ் ராஜதந்திரி. ஆனால் தமிழர் தேசத்தில் இந்த இருவரிலும் சாந்தனுக்கு கிடைத்த மிகப்பெரிய அனுதாபமும் அஞ்சலியில் ஒரு பத்து விகிதம்தானும் தமிழரசு கட்சியினுடைய மூத்த தலைவர் சம்பந்தனுக்கு கிடைக்கவில்லை என்றால் இங்கு ஏதோ தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக சம்பந்தன் நடந்து கொண்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழரசு கட்சி தமிழ் மக்கள் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை வெறுப்புடனையே பார்த்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு அவர்கள் எதிராக பேசாவிட்டாலும் தமது கோபத்தை பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விதத்தில் வெளிப்படுத்த தவற மாட்டார்கள். தமிழ் மக்களிடத்தில் நாட்டுவழக்கு கூற்று ஒன்று உண்டு அதை "வைச்சுச் செய்வது அல்லது வைச்சுச் சாதிப்பது" என்பார்கள். அதுதான் மரணத்தின் பின்னும் தமிழ் மக்கள் மன்னிக்க தயார் இல்லை என்ற செய்தி. நேற்று நிகழ்ந்த சம்பந்தன் அவர்களுக்கான தமிழ் மக்களின் "வைச்சு செய்தல்" என்பது எஞ்சி இருக்கும் மிதவாத தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்பதிற் சந்தேகமில்லை. https://tamilwin.com/article/tamil-people-not-ready-forgive-even-after-death-1721469408
  44. கிழக்கு மாகாணத்தில்... தமிழனுக்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை, சம்பந்தன் முஸ்லீம்களுக்கு தாரை வாரத்துக் கொடுத்ததன் மூலம், கிழக்கு மாகாண தமிழ் மக்கள், அரசியலில் பல பின்னடைவுகளை சந்தித்த போதும்... முஸ்லீம் சமூகம் சம்பந்தன் மேல் நன்றிக் கடன் இல்லாமல் இருக்குது என்றால்... சம்பந்தன் தன் வாழ்நாளில்... செய்த இராஜதந்திரம் அற்ற செயலால் எவரிடமும் நன்மதிப்பை சம்பாதிக்காமல், வீணாய் அரசியலில் இருந்து ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமால்... செத்துப் போனதுதான் மிச்சம். சம்பந்தன், தோல்வியுற்ற தலைவர் என்பதை... மீண்டும், மீண்டும் பல இடங்களில் நிரூபித்த வண்ணம் உள்ளார். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.