Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46783
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1569
    Posts
  4. சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    488
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/15/24 in all areas

  1. எனது முகநூல் பதிவினைப் படியெடுத்துக் கீழே மீள்பதிவு செய்துள்ளேன். அங்கு நான் ஏற்றிய நிழற்படங்களைக் காண இறுதியில் உள்ள முகநூல் இணைப்பைச் சொடுக்கவும். இனி அந்தப் பதிவு : சங்கே முழங்கு ! -சுப.சோமசுந்தரம் Suddenly I felt, "Today why don't I blow my own trumpet ?". சுய தம்பட்டத்தில் அப்படியென்ன அலாதி இன்பம் ? எதையும் அனுபவித்தால்தானே தெரியும் ? எனவே இக்கட்டுரைத் தலைப்பும் அங்ஙனமே அமையப்பெற்றது. எத்துணைச் சிறிய பெருமையானாலும் (முரண் தொடை - oxymoron !), அந்த என் பெருமையைச் சங்கே முழங்கு ! நான் சார்ந்த கல்லூரி/ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான MUTA பேரியக்கத்தில் ஒரு மரபு உண்டு. சங்க உறுப்பினர்கள் ஓய்வு பெறும்போது அந்தந்தக் கல்லூரிக் கிளையின் மூலமாக மட்டுமே பணி நிறைவு விழா நிகழ்த்தப் பெறும். நான் ஒரு கணிதப் பேராசிரியராக ஜூன் 2020ல் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஓய்வு பெற்றேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு யாருக்கும் பெரிய அளவில் பணி நிறைவு விழா நடைபெறவில்லை (நடத்தியே ஆக வேண்டும் என்று சொல்ல வரவில்லை !). கணிதம் மற்றும் MUTA பேரியக்கத்தின் மூலமாக என்னுடன் நெருக்கமான பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி கணிதப் பேராசிரியர் முனைவர் கை. அண்ணாதுரையும், பல்கலைக்கழகத்தில் எனது துறை நண்பரான முனைவர் சங்கர்ராஜூம் என்னைக் கௌரவிக்கும் வகையில் இளம் கணிதப் பேராசிரியர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியே தீருவது என்று முடிவெடுத்து, அதற்கான முயற்சியில் இறங்கியது ஆசிரியர் என்ற முறையில் எனது பெருமை. நடத்தியே காட்டினர். வெகு தொலைவில் உள்ள இளம் ஆசிரியப் பெருமக்களையும் நிகழ்ச்சி கவர்ந்திருந்தது தனிச்சிறப்பு; நனி சிறப்பு. தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எல். ரவிசங்கர் அவர்களும், கல்லூரி பேராசிரியர்கள் சார்பில் (MUTA வின் சார்பில் எனச் சொல்வது நடைமுறையில் பொருத்தமான ஒன்று) பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரான தோழர் பேரா. ராஜ ஜெயசேகரன் அவர்களும் என்னை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். பயிற்சிப் பட்டறையில் சொற்பொழிவாளராய்ப் பல்வேறு ஐஐடி நிறுவனங்களில் இருந்தும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் வந்திருந்த எனது நண்பர்களான பேராசிரியர் பெருமக்கள் நிகழ்விற்கு மெருகேற்றினர். அன்னாருக்கு அடியேன் வாழும் நாள் வரை நன்றிக் கடப்பாடுடையவன். பங்கேற்பாளர்கள் பயனுறும் வகையில் அவர்களின் திட்டமிடல் அமைந்தமை அந்நிகழ்ச்சிக்கான வலிமை. இரண்டாவது நாள் மாலையில் நடைபெற்ற வாழ்த்தரங்கில் மேடையில் என்னையும் எனது துணைவியாரையும் அமர வைத்துச் சிறப்பித்தது எனக்கான அரும்பெறல். நெடுந்தூரப் பயணத்தையும் பொருட்படுத்தாது நண்பர்கள் வந்து வாழ்த்தினர். கணிதத்தில் எனது கற்பித்தல் திறனையும், ஆசிரியர் இயக்கம் சார்ந்தும் மற்றபடியும் சமூகப் போராட்டக் களங்களில் எனது பங்களிப்பையும், எழுத்துலகில் எனது சிறிய (அவர்கள் கூற்றின்படி சீரிய) பணியினையும் வெகுவாக அவர்கள் பாராட்டி எனக்குப் புத்துயிர் ஊட்டினர். ஏதோ ஒரு வகையில் என்னுள் ஒரு பன்முகத்தன்மை இருக்குமோ என்று என்னையே எண்ண வைத்தனர். ஐந்து நாட்களும் கழிந்ததே தெரியவில்லை என்பது பங்கேற்பாளர்கள் பொத்தாம் பொதுவாக இறுதியில் தந்த பின்னூட்டம். ஒவ்வொரு சொற்பொழிவையும் நுணுக்கமாக அணுகி, தாம் பெற்ற பயன்களை ஒவ்வொருவராகப் பட்டியலிட்டது நிகழ்வின் வெற்றிக்குக் கட்டியங் கூறியது. சமீப காலங்களில் நான் பங்கேற்ற கணித நிகழ்வுகளில் இது மகுடமாய்த் திகழ்வதாய் உணர்கிறேன். இவ்வுணர்வே எனக்கான மிகப்பெரிய கௌரவம். கணிதப் பகுப்பாய்வு ((Mathematical) Analysis) என்ற தலைப்பில் நிகழ்வை அமைத்தபோதும் இத்துணைப் பேரைப் பங்கேற்க வைத்து மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்தோர் பேரா.அண்ணாதுரை, அவருக்கு உறுதுணையாய் நின்ற பேரா. சங்கர்ராஜ், திருவள்ளுவர் கல்லூரி கணிதத்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் மாணாக்கரே ! சிறு வயதிலிருந்தே அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்ட நான், அறிவுலகில் எனக்கு ஒளி ஏற்றியவர் அவரே என உணர்பவன். இந்தப் பயிற்சிப் பட்டறை அனுபவத்தின் மூலம் எனது நண்பர்கள் யார் யாரென்றும், இன்ன பிற உலகியலையும் எனக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் எனது தோழர் பேரா.அண்ணாதுரை என்பது மிகையில்லை. https://www.facebook.com/share/p/29V5kSEYXwbVtrZJ/?mibextid=oFDknk
  2. 1991இல் சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது. ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்காவிற்கு சவாலாக அல்லது அமெரிக்காவுடன் மறைமுக மோதலில் ஈடுபட்டிருக்கும் எந்த நாடுகளை சுற்றியும் அமெரிக்கா படைதளங்களை அமைக்கும். அதற்கு சான்றாக அமெரிக்காவிற்கு எதிராக நிற்கும் சீனா வடகொரியாவை சுற்றி , தென்கொரியா ,ஜப்பான் அவுஸ்திரேலியாவில் படை தளங்களையும், நெருங்கிய நட்புநாடுகளின் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் சிங்கபூர் தாய்வான், பிலிபைன்ஸ், ,மலேசியா,இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சுற்றி வளைத்து கடை/படை விரித்துள்ளது, மத்திய கிழக்கில் அமெரிக்கா எங்கெல்லாம் இருக்கிறது எப்படி வலைபின்னல் அமைத்திருக்கின்றது என்பது அனைவருமே அறிந்தது. ஐரோப்பாவில் யூகே, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என்று வளைத்திருக்கிறது, லத்தீன் அமெரிக்காவை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை சேகுவரா கொலையிலிருந்து, உலகிலேயே மத்திய கிழக்கைவிட அதிக எண்ணெய்வளம் கொண்ட வெனிசுலாவை உலகிலேயே பிச்சைக்காரநாடாக எப்படி வைத்திருக்கிறது என்பதுவரை நீளும். ஆகவே அமெரிக்காவின் படை பரப்பலை ரஷ்யாவை மட்டும் சுற்றியதான ஒன்று என்பதாக பார்த்தல் தகாது.
  3. வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டினிபோட்டே கொன்றார் ஸ்டாலின் என்பது பலரும் அறிந்த வரலாறு. அதுதான் நாகரிகம் பெரிதாக வளராத போர்காலம் என்றால் நாகரிகம் வளர்ந்த இக்காலத்திலும் சோவியத் உடைந்த பின்னரும் உக்ரேனின் பகுதிகளை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக்கொண்டது ரஷ்யா. தொடர்ச்சியாக ஒருவர் அழுத்தத்தை பிரயோகித்தால் பலவீனமானவன் தன்னை காக்க பிறருடன் கூட்டு சேர்வான் அது மானுட தர்மம். நான் திருப்பி அடிக்க முடியாதவன் என்னை அடித்தால் அவனை அடிக்க சண்டியர்களை சக மனிதன் நாடுவது சகஜம். நேட்டோவினால் ரஷ்யாக்கு ஆபத்து நோட்டோவுடன் உறவு கொள்ளும் நாடுகளால் ஆபத்து என்றால் நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கியுடன் மிக நெருங்கிய நட்பை ரஷ்யா பேணுவது எந்த வகையில் நியாயம்? ரஷ்யாவுக்குள் உக்ரேன் சில ஆயிரம் படைகளை அனுப்பி ரஷ்ய பகுதிகளை ஆக்கிரமிப்பது தற்காலிக வெற்றிதான் அதனை தக்க வைக்க ரஷ்யா எனும் யானை ஒருபோதும் அனுமதிக்காது, ரஷ்யாவிற்குள் புகுந்து ரஷ்ய பகுதிகளை கைப்பற்றி நீண்டகாலம் நிலைகொண்டிருக்க உக்ரேனின் படை பலமும் அதற்கு ஒத்துழைக்காது. ஆக்கிரமிப்பு எந்த திசையிலிருந்து வந்தாலும் அது தவறுதான், ஆக்கிரமிப்பை கற்றுக்கொடுத்த ரஷ்யா உக்ரேன் தமது பகுதியை ஆக்கிரமித்துவிட்டது என்று கூறுவது தான் கற்றுக்கொடுத்த மாணவன் தவறாக விடை சொல்கிறான் என்பது போலாகும். உக்ரேன் சொந்த ஆயுத தயாரிப்பு படை கட்டமைப்புடன் இருந்தால் மட்டுமே ரஷ்யாவை எதிர்காலத்திலும் எதிர் கொள்ள முடியும், அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தை நம்புவது எனது இடுப்பு வேட்டியை இறுக்கிபிடி என்று நம்பி அடுத்தவனிடம் சொல்வதற்கு சமம் எப்போது வேண்டுமென்றாலும் அவன் கைவிட்டுவிட்டால் அம்மணமாகி போய்விடுவோம், உக்ரேனின் நிலமையும் அதுதான், இஸ்ரேல் காசா --ஹிஸ்புல்லா ஈரான் போர் மிக பெரும் போர் வடிவமெடுத்தாலோ அல்லது அது முடிவுக்கு வந்த பின்னரோ பொருளாதார செலவு கணக்கு வழக்குகளை மேற்குலகம் பார்க்கும்போது பெரும் நஷ்டத்தில் வீழ்ந்திருந்தால் உக்ரேனை படிப்படியாக அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் முழுமையாக கைவிடும் வாய்ப்புண்டு அப்போது ரஷ்யா மேற்குலகத்தை முழுமையாக வெறுப்பேத்தாத விதத்தில் உக்ரேனையும் தாண்டி போரை பரப்பாமல் மட்டுப்படுத்த அளவில் உக்ரேனை மட்டும் விழுங்கிவிடும்.
  4. கடந்த 15 ஆண்டுகளில் திரு ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.
  5. மீண்டும் ஒருமுறை நான் மேலே எழுதியதை படித்து பாருங்கள், அமெரிக்காவின் மேலாதிக்கம் பற்றி பேசி இருக்கிறேனா அல்லது அவர்கள் மேன்மையைபற்றி பேசியிருக்கிறேனா? அவர்கள் மேன்மையானவர்கள் என்று எங்காவது ஒருவரி குறிப்பிட்டிருந்தால் தயக்கமின்றி சுட்டிகாட்டுங்கள். பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் பிடியிலேயே உள்ளன, அதனை மீறி செயல்பட ரஷ்யா சீனாவால்கூட முடியாது காரணம் ஒன்றேதான் பொருளாதாரம். ராணுவரீதியில் அமெரிக்காவுக்கு சீனா ரஷ்யாவை பார்த்து பயம் இருப்பது உண்மைதான். உலகில் அனைத்துநாடுகளையும்விட அமெரிக்காவால் பேரழிவை சந்தித்தநாடு ஜப்பான், ஆனால் இன்று அமெரிக்காவின் மிக நெருங்கியநட்பு நாடு பொருளாதார ரீதியிலும் ராணுவரீதியிலும். காரணம் ஒன்றேதான் பொருளாதாரம். ரஷ்யா எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்கிறீர்கள் நீங்கள் வசிக்கும் ஜேர்மனிக்கும் கூடவா? ரஷ்யா எந்தநாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாய் இருக்கிறது என்பதற்கு ஒரு நீள் பட்டியலே உண்டு, அது அமெரிக்காவால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளைவிட அதிகமாக இருக்ககூட வாய்ப்புண்டு. அது உங்கள் பார்வைக்கு. https://www.aalep.eu/russia-enemy-list
  6. இந்த கூத்தை என்ன என்று சொல்வது இலட்சகணக்கான தனது இராணுவத்துடன் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக வந்த ரஷ்யா இப்போது உக்ரேனை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதும் உக்ரேனின் துரோக தாக்குதல் என்பதும் 🤣
  7. பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்களின் பேச்சு 16.33 வரை, அதன் பின்பு நடுவரின் பேச்சு. குடும்ப மரம் (Family tree) என்பது குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை ஆகும். இதை கொடிவழி என்றும் கூறுவர். இது மரத்தின் அமைப்பினை தலைகீழாக மூதாதை முதல் பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது.[1][2][3] இதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும். இதனை தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள், மணவழிக் குடும்பம், உறவுமுறைகளை விரிவுபடுத்தி கொள்ளலாம்.
  8. எங்களைவிட அவரின் ஆட்சியை பார்க்க முடியாதே என்ற பெரிய கவலை சர்வதேசத்திற்கு
  9. விடு...ராசா விட்டுத்தள்ளு.😂 ஜெய் கிந்த் சொல்லும் வீரம் அளவிற்கு அவர்களிடம் உலக விளையாட்டு திறன் இல்லை. 😜
  10. தற்போது உக்கிரேனின் இரஸ்சிய ஊடுறுவலுக்கே சரியான காரணம் தெரியவில்லை.
  11. தமிழ் சரித்திரத்தில் சங்கு என்பது ஒரு பாரம்பரிய சின்னம்,பொருள்,அடையாளமாகவே பார்க்கப்பட்டது. கேவலம் நிறைந்த உலகில் சங்கிற்கு அர்த்தமே தெரியாமல் என்னென்னமோ எல்லாம் எழுதுகின்றார்கள். இது அரசியல் கருத்து அல்ல. 👈
  12. இவாக்கும் அர‌சிய‌லுக்கும் ச‌ரி ப‌ட்டு வ‌ராது😁.......................
  13. கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள். கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள். ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்கள் மாதிரி அவளும் அவர்களின் மூன்றாவது வயதில் குழந்தைகளைத் தமிழ்ப்பாடசாலைக்கு அனுப்பினாள். அவர்கள் மூன்றாவது வயதிலேயே தேவாரங்கள் பாடவும். திருஞான சம்பந்தர் ஞானப் பால் குடித்த புராணக் கதைகளையும கேட்டு மகிழ்ந்தார்கள். வெள்ளிக்கிழமைகளிலும் விசேட நாட்களிலும் தவறாது கோயில்களுக்கு அழைத்துச் சென்றாள். பல விரதங்களைச் செய்து தனது கணவர், குழந்தைகளின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். தனது பிள்ளைகள் வைத்தியர்களாக வருவதற்காகப் பல ட்யூசன்களை அவர்களுக்கு ஏற்படுத்தி கெட்டிக்காரர்களாக்கிளாள். இப்போது மகன் அவனின் இருபத்தி ஓராவது வயதில் வைத்தியக் கல்லூரியில் மூன்றாவது வருடப் படிப்பைத் தொடர்கிறான். அவர்களின் மகள் கருணாவுக்குப் பத்தொன்பது வயது. மெடிகல் சயன்ஸ்சில் பட்டப் படிப்பைத் தொடங்கிருக்கிறாள். இருவரும் பலகலைக்கழக விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்கும்போது அருந்ததி அவர்களைக் கட்டாயம் கோயிலுக்கு அழைத்துச் செல்வாள். அவளின் கணவர், பரமானந்தன் இருவேலைகள் செய்து அவர்களின் குடும்பத்தையும் பராமரித்து, இலங்கையிலுள்ள உறவினர்களுக்கும் உதவி செய்கிறான். அத்துடன், ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொருதரம் என்றாலும் ஊருக்குப் போய் வர அவனுக்கு ஏற்படும் செலவுகளுக்காகக் கடன் பட்டும் வாழ வேண்டியிருக்கிறது. அவனுக்கு நாற்பத்தி எட்டு எட்டு வயதாகிறது. நீரிழிவு நோய், உயர்ந்த இரத்த அழுத்தம் என்ற வருத்தங்களுடன் போராடுகிறான். அடிக்கடி வைத்தியரைப் பார்த்துப் பரிசோதனைகளும் மருந்துகளும் எடுக்கிறான். மனைவி மாதிரி அடிக்கடி கோயில்களுக்குப் போகாவிட்டாலும் முடியுமானவரை செல்வான். வீட்டில் மனைவியால் நடத்தும் பூசைகளிலும் முடிந்த நேரங்களில் கலந்து கொள்வான். அருந்ததி, லண்டனுக்கு வந்த காலத்திருந்து ஒரு இலங்கைத் தமிழரின் கடையில் வேலை செய்கிறாள். இலங்கையிலிருந்து வரும்போது ஆங்கிலம் சரியாகப் பேச வராது. கடையில் வேலை செய்யும்போது அங்கு வரும் அன்னிய வாடிக்கையாளரிடம், அவளின் வேலை நிமித்தமாக ஏதோ தட்டுத் தடுமாறி பேசி தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அந்த வெளியுலகத் தொடர்பைத் தவிர மற்றவர்களுடனான உறவு அருந்தததிக்குத் தெரியாது. பெரும்பாலான தமிழர்கள் மாதிரித் தங்கள் கலாச்சாரத்தைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாகவிருக்கிறாள். இப்போது என்ன பிரச்சினை என்றால் மகன் தாயிடம் தங்கள் சமயம் பற்றிக் கேள்வி கேட்கிறான். முதலாவது வருட, வைத்தியக் கல்லூரிப் படிப்புக் காலத்திலேயே, அம்மா அடிக்கடி விரதம் இருப்பதன் விளக்கத்தைக் கேட்டான். அதைத் தொடர்ந்து அவன் வரும் போது ஏதோ கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவன் பல இன இளம் தலைமுறையினருடன் படிப்பதும் அருந்ததிக்குத் தெரியாத புதிய வாழ்க்கையில் பல அறிவுகளைப் பெறுவதும் அதன் எதிரொலியாக அவன் கேள்விகள் கேட்பதையும் அவள் புரிந்து கொள்ளவேண்டும் என்று அவளது கணவன் அன்புடன் அறிவுரைகள் சொன்னான். “அம்மா நாங்கள் இந்துக்களா’’ என்று ஒருநாள் கேட்டான். ‘’ஓமோம், அதைப்பற்றி என்ன கேள்வி.’’ ‘’இந்துக்கள் என்றால் இந்தியாவில் வாழ்பவர்கள். நாங்கள் இப்போது பிரித்தானியர், இங்கு பிரித்தானியாவில் வாழ்கிறோம, அப்படி என்றால் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் எப்படி இந்துக்களாக வரமுடியும்” என்றான் கண்ணன். “நாங்கள் இந்து சமயத்தைப் பின் பற்றுவதால் இந்துக்கள் என்று கூறிக் கொள்கிறோம” என்றாள். ‘’இந்து சமயம் என்றால் என்ன?” என்ற அவனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. “கத்தோலிக்கருக்கு இயேசு கடவுள், இஸ்லாமியர்களுக்கு அல்லா கடவுள். எங்களுக்கு யார் கடவுள்?” கண்ணன் தனது அறிவை விருத்தி செய்யும் தொனியிற் கேட்டான். “மகன். நாங்கள் பல கடவுளரை வணங்குறோம். படைக்கும் கடவுளாகப் பிரம்மா இருக்கிறார். காக்கும் கடவுளாக விஷ்ணு இருக்கிறார். அழிக்கும் கடவளாகச் சிவன் இருக்கிறார்” என்றாள் அவள். இதெல்லாம், அவன் மூன்று நான்கு வயதுகளில் லண்டனிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சொல்லிக் கொடுத்தவைதான் ஆனாலும் அவன் இப்போது பல கடவுள்களின் தொழில்கள் பற்றிக் கேட்பது அருந்ததிக்கு மகிழ்ச்சி. “காக்கும் கடவுள்தானா கண்ணனாக அவதாரம் எடுத்தவர்.’’ என்று கேட்டபோது அருந்ததிக்கு மனிதில் கொஞ்சம் சந்தோசம் அரும்பத் தொடங்கிவிட்டது. மகன் தனது பெயரின் மகிமையை உணரத்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்று தனது மனதுக்குள் பெருமைப் பட்டாள். “அவர்தானே பெண்களின் ஆடைகளைத்திருடி அந்தப் பெண்களின் அவல நிலையைக் கண்டு ஆனந்தப் படுபவர். உலகத்தைப் பாதுகாப்பவர் ஏன் பெண்ணாசை வெறியன் மாதிரி பெண்கள உடைகளைத் திருடிச் சந்தோசப் படவேண்டும்” அவனின் அழகிய தமிழ் குரலில் இருந்த சந்தேகம் அருந்ததியைத் தர்ம சங்கடப் படுத்தியது. அவனின் பெயர் கண்ணன் என்பதால், அவனின் சினேகிதர்கள் குறம்புத்தனமாக, “கண்ணன் வந்தான், கன்னியராடையைக் களவாடி மகிழ்ந்தான்’’ என்றபாடிக் கேலி செய்து மகிழ்வது அவனுக்குப் பிடிக்காது என்று அவளுக்குத் தெரியும். அப்படிச் சேட்டை விட்டால், இங்கிலாந்தில் சிறையில் தள்ளி விடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். இளவயதிலிரிருந்தே மற்றவர்களைத் துன்புறத்தக் கூடாது, எல்லோரையும் சாதி. மத, பெண், ஆண், நிறம், மொழி வித்தியாசமின்றி நடத்த வேண்டும் என்று ஆரம்ப பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுப்பார்கள். ‘’அதெல்லாம் சும்மா கதைகள் மகன்’’ என்று சமாளித்து விட்டாள். “அம்மா சமயக்கதைகள் மக்களை நல்வழியில் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டவேண்டும் என்று சொல்வார்கள், ஏன் எங்கள் கதைகள் பல பெண்களை ஆண்களின் மகிழ்வுக்காக வாழ்பவர்களாகக் காட்டுகிறது?” கண்ணன் மேற் கொண்டு தொடராமல் அவனின் கேள்விகளை, “மகன், உனக்காக் நெய்த்தோசை செய்திருக்கிறேன். தோசை சூடு ஆறமுதல் சாப்பிடு மகனே’’ என்று சொல்லி பேச்சை மாற்றி விட்டாள். ஆனாலும் அவனின் கேள்விகள் இதுவரை அவனின் அவனிடமிருந்து வராத புதிய தொனியில் வருவது அவளுக்குப் பயத்தைத் தந்தது. கணவர் வந்ததும், “இவன் யூனிவர்சிட்டிக்கப் போகத் தொடங்கியதும் ஏன் இந்த விழல்க் கேள்வி எல்லாம் கேட்கிறான’’; என்று கேட்டாள். ‘’அருந்ததி, பல்கலைக் கழகம் என்பதால் பல கலைகளையும் கற்குமிடம். அங்கு பல தரப் பட்ட மாணவர்களும் வருவார்கள், தங்களின் சமயத்தைப் பற்றிப் பேசும்போது ஒருத்தரின் சமயப் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் பேசியிருக்கலாம். அதனால் கண்ணனின் மனதில் சில வித்தியாசமான கேள்விகள் வரும் தானே’’ என்று பதில் சொன்னான். அருந்ததி, ஒருநாள் வுழக்கம்போல் தனது மகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது,அவள் தமயன் கேட்ட கேள்விகளைச் சொன்னாள். இப்போதுதான் பல்கலைகப் படிப்பை ஆரம்பித்திருக்கும் மகள் தமயன் மாதிரிக் கேள்விகள் கேட்பதை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையில ஒரு தமிழத் தாய்பாசம் தவித்தது. “எங்களுக்க விளங்காத விடயங்களைப் பற்றித் தாய் தகப்பனிடம் கேள்வி கேட்பது நல்ல விடயம்தானே’’ என்றாள். தனது தாய் தங்களுக்காகவும் தகப்பனுக்காகவும், குடும்ப நலங்காகவும் அடிக்கடி விரதம் இருப்பதும் பட்டினி இருப்பதும் தனக்குத் தர்ம சங்கடத்தைத் தருகிறது என்றும் கருணா தனது தாய்க்குச் சொன்னாள். “அப்படியென்றால் நீ உனது கணவர் குழந்தைகளுக்காகக் கடவுளைக் கும்பிடமாட்டாயோ’’ என்று அருந்ததி சீறினாள். ஓரு நல்ல தமிழ்ப் பெண்ணாக இதுவரை வளர்த்த மகள் இப்படிக் கேட்டது அப்பாவி அருந்ததியைத் திகைக்கப் பண்ணியது. “அம்மா, நான் பட்டினி இருந்துதாற்தான் கடவுள் நன்மை புரிவார் என்பதை நம்புவதில்லை. எங்களைப் படைத்தவனுக்குத் தெரியாதா எங்களின் தேவைகள்? அதாவது, என்னையும் உங்களைப் போல், கந்தஸஸ்டி விரதம், கௌரி விரதம் எல்லாம் இருக்கச் சொல்லாதீர்கள். ஓரு குடும்பத்தின் நன்மைக்கு எல்லோரும்தானே பாடுபடுகிறோம். அப்படியென்றால் பெண்கள் மட்டும்தான் விசேட விடயங்கள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பம்மாத்து” என்று சொல்லி விட்டாள். இந்த விடயங்கள் நடந்த சில நாட்களில், அருந்ததியின் தமயன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனின் மனைவியின் சித்தப்பா ஒருத்தரின் மரணத்திற்குப் போயிருந்ததாகவும், அங்கு நடக்கும் மரணச் சடங்குகளுக்கே பெரிய செலவாகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். “இங்கேயும்தானே தம்பி, எல்லாச் சாமான்களும் கண்டபாட்டுக்கு விலையேறுது’’ என்றாள் அருந்ததி. ‘’ஓமோம், சனங்கள் செய்யுற கொடுமையால, ஐம்பெரும் கடவுளரும் கொதித்தெழுந்து இன்டைக்கு மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு, காடுகள் எரிகின்றன. கடவுளரைக் கோபிக்கப் பண்ணினால் அவர்கள் தண்டனை தருவார்கள்தானே’’ கடவுளர்களுக்காக மிகவும் துக்கப் பட்ட பெருமூச்சுடன் சொன்னார் அருந்ததியின் தம்பியார். “மாமா! நீங்க சொன்னதெல்லாம் நடக்கிறது கடவுளுக்கு வந்த கோபத்தால இல்லை. இந்த உலகத்து இயற்கைகளை பேராசை பிடித்தவர்கள் அழிப்பதாற்தான் அதன் எதிரொலியாக இந்த அழிவுகள் நடக்கின்றன.’’ மருமகள் அருணா மாமானாருக்குச் சுற்றாடல் சூழ்நிலை பற்றிய விளக்கத்தைச் சொன்னாள். “என்ன இருந்தாலும் கருணா, அதிவேகமாக மாறிவரும் மனித சிந்தனைகளையும் அதனால் மக்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளையும் முகம் கொடுக்கத்தானே வேணும். உதாரணத்துக்க ஒரு விசயம் சொல்றன், மரணச் சடங்கை நடத்த வந்த ஐயர் தனக்குத்தரவேண்டிய தானங்களுடன் காலணிகளும் கேட்டு வாங்கினார். இதெல்லாம் முன்னோரு காலத்தில நடைமுறையில இருக்கவில்லை, ஆனா இப்ப எல்லாம் புதிய விடயங்களாக, சமய சடங்கு அணுகுமுறையாக வரத்தொடங்கி விட்டது’’ துக்கம் நிறைந்த தொனியுடன் மாமா சொன்னார். “மரணச் சடங்குக்கும் ஐயருக்குக் காலணிக்கும் என்ன சம்பந்தம்” மாமாவிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான் கண்ணன். “இறந்தவரின் ஆவி சொர்க்கத்திற்குப் போகும்போது காலில் கல் முள் காயப் படுத்தாமல் இருக்க காலணியை அணிந்துகொள்ளச் சொல்லி ஆவியிடம் ஐயர் பிரார்த்தனை செய்வார். அதற்காக அவருக்குக் கொடுக்க வேண்டும” மாமா விளக்கம் சொன்னார். “புதிதாக வந்த மொடலில் வாங்கித் தரச் சொல்லி ஐயரிடம் ஆவி கேட்டிருக்குக்கும் என்று நினைக்கிறேன்’’ கண்ணன் தனது ஆத்திரத்தைக் காட்டாமல் கிண்டலாகச் சொன்னான். அருந்ததிக்குத் தன் குழந்தைகளின் கேள்விகள் பல சந்தேகங்களையுண்டாக்கத் தொடங்கி விட்டன. ஏன் இந்தக் கேள்விகளைக்கேட்கிறார்கள் என்று அவள் கவலை தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு வந்த தமிழர்கள் பலர் தங்கள் சமயத்தை விட்டு வேறு சமயங்களை நாடுவது அவளுக்குத் தெரியும். ஆனாலும். தனது குழந்தைகள, தங்களின் சமயத்தை விட்டு வெளியேறி, தங்கள் தாய் தகப்பனை ஒருநாளும் மனவருத்தப் படுத்தமாட்டார்கள் என்று திடமாக நம்பினாள். தாயும் தகப்பனும் அவர்களின் வாழ்க்கையின் உயர்வுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது அவர்களுககுத் தெரியும். ஆனாலும் புதுச் சினேகிதங்கள் ஏதும் தேவயைற்ற புத்திமதிகள் சொல்லி அவர்களின் மனத்தைத் திருப்புகிறார்களோ என்ற சந்தேகமும் சாடையாக வந்தது. அன்று பின்னேரம், அருந்ததி வழக்கம் போல் தனது வயது வந்த இரண்டு ‘குழந்தைகளையும்’ அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள். அன்று அவர்களின் நலவாழ்வுக்கு அர்ச்சனை செய்ய துண்டு வாங்கிக் கொண்டாள். கோயிலில் ஐயர், அருந்ததி கொடுத்த அர்ச்சனைச் சீட்டை கொண்டு அவர்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். கண்ணன் தாயின் சொற்படி மிகவும் பக்தியுடன் கோயிற்சிலையைப் பார்த்துக் கொண்டு நினறான். ஐயர் கண்ணனின் பெயருடன் ஆரம்பித்து நமஹா,ஸ்வாஹா என்ற சில வார்த்தைகளைப் பாவித்து, தட்டத்தில் வைத்த தீபத்தால் கடவுளை ஆராதித்து, கண்ணனின் தரகராகக் கடவுளிடம் பேசிவிட்டுத் தாயிடம் தட்டத்தை நீட்டியபோது, தாயார் தீபத்தைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிய பின், அவள் அர்ச்சகருக்காகத் தட்டிற் பணம் போட்டாள். அதைத் தொடர்ந்து, தட்டிற்கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அர்ச்சனைப் பொருட்களாக ஒரு வெற்றிலையில் ஒரு பழமும் திருநிறும் தாயிடம் கொடுத்தார் ஐயர். அதைத் தொடர்ந்து, அங்கு நடந்தவை கண்ணன் மனதில் சில கேள்விகளை எழுப்பியது. வீட்டுக்கு வரும் வழியில், தாயிடம் தயங்கித் தயங்கி ஒரு கேள்வி கேட்டான் அவள் மகன் கண்ணன். “அம்மா, அந்த ஐயர் எனக்காக் கடவுளிடம் என்ன கேட்டார்.’’ “உனது மேன்மைக்கும், உயர்வுக்கும் ஆசி அளிக்கும்படி கடவுளை வேண்டினார் ஐயர்’’ என்றாள் அருந்ததி. “அவர் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா’’ மகனின் இந்தக் கேள்வி தாயைத் திடுக்கிடப் பண்ணியது. “அவர் எனக்குத் தெரியாத கடவுள் மொழியில், எங்களுக்காகக் கடவுளிடம் கேட்பதை நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது மகனே” என்றாள். ‘’அப்படி என்றால் வாழ்க்கை பூராகவும் விரதம் படித்துக் காலையில் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே’’ என்று கண்ணீர் மல்கத் தமிழிற் பாடி உருகுகிறாயே அதைப் பற்றிக் கவலைப் படாத கடவுள், அன்னிய மொழியில் நீ தரகர் மூலம் பேசினாற்தான் அருள் புரிவார் என்று ஏன் நினைக்கிறாய்’’ என்று கேட்டான். தங்களின் நன்மைக்காகத் தாய் படும் துயர்கள் அவனால் புரிய முடியாதிருந்தது. “மகனே அப்படி எல்லாம் கடவுளைப் பார்க்காதே. கோயிலில் ஐயர் பேசுவது தெய்வ மொழி. அதன் மகிமை வேறு’’ என்று படபடப்புடன் சொன்னாள். “அம்மா நீ எனக்கு அன்பு தரத் தமிழிற்தான் என்னைத் தாலாட்டினாய். எனது அறிவு வளர, எனது ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் படிப்பித்தார்கள். எனக்கு கடவுள் ஆசிர்வாதம் தருவதாயிருந்தால் எனது மொழியில் அவருடன் தொடர்பு கொள்கிறேன். ஏனென்னால கடவுள்தான உலகத்து உயிரினங்கள் அத்தனையையும் படைத்தவர் என்றால் அவருக்குத் தனது குழந்தைகளின் மொழி தெரிந்திருக்க வேண்டும்.’’ அருந்ததிக்கு மகன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. அவன் தொடர்ந்தான், “அம்மா, இன்று பல கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். கத்தோலிக்க மதத்தின தலைவர் போப் ஆண்டவர் 1968ம் ஆண்டில், உலகக் கத்தோலிக்க மக்கள் அனைவரும் தங்கள் மொழியிற்தான் இயேசுவை வழிபடவேண்டும, பழைய பாரம்பரிய முறைப்படி லத்தின் மொழியில பிரார்த்தனைகளைக் கேட்கத் தேவையில்லை என்று கட்டளையிட்டார். எங்களை மாதிரி ஐயர் சொல்லும் கடவுள் மொழியைத் தெரியாத தமிழர்கள் உலகமெல்லாமிருக்கிறர்கள். இவர்கள் தங்கள் மொழியிற்தான் கடவுளுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று உங்கள் மதத் தலைவர் யாரும் சொல்லவில்லையா?” “மகன் மற்றவர்கள் சொல்வதெல்லாம் சரியென்று நாங்கள் ஏன் எடுக்கவேண்டும், எங்கள் பாரம்பரியத்தைத் தொடர்வோம், அதில் ஒன்றும் குறை கண்டு பிடிக்காதே” என்றாள். “அம்மா, தயவு செய்து எனக்காக வீணாக உங்கள் நேரத்தையும் பணத்தையம் வீணாக்கவேண்டாம். எனக்கு இப்போது இருபத்தியொரு வயது. இன்னும் சில வருடங்களில் ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பை எடுக்கப் போகிறேன். எனக்குத் தேவையானால் கடவுளிடம் எனக்குத் தெரிந்த மொழியில் பேசிக் கொள்கிறேன். தயவு செய்து இனி என்னைக் கோயிலுக்கு வரச் சொல்லிக் கூப்பிடாதீர்கள்’’ என்றான். அருந்ததி என்ற தமிழ்த்தாய் திகைத்துப் போய் நின்றாள். ஆனாலும், அவள் நாளைக்கு இன்னொரு விரதம் இருப்பாள். தனது பிள்ளைகளுக்கு நல்ல புத்தியும் கடவுள் நம்பிக்கையும் தொடரவேண்டும் என்று பிரார்த்திப்பாள். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் https://www.sirukathaigal.com/குடும்பம்/கடவுளும்-கண்ணனும்/
  14. நீங்கள் எழுதுபவற்றை நான் வாசிக்கின்றேன். நிச்சயமாக இன்னும் பலரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், ஜஸ்டின்...........❤️. எந்தக் கருத்தும், எழுத்தும் ஏற்கனவே எவரின் உள்ளேயும் பதிந்திருக்கும் நம்பிக்கைகளை மாற்றுவதில்லை என்பது கசப்பான உண்மை தான்........ ஆனால் அந்தப் பக்கம் - இந்தப் பக்கம் என்று பக்கம் சாராமல் இருப்போர் பலரும் இங்கே இருக்கின்றனர்........🙏.
  15. காசேதான் கடவுளப்பா .........! 👍
  16. 👆 இதெல்லாம் நான் எழுதியதாக நீங்கள் புரிந்து கொண்டது. இது என் கருத்து அல்ல😂! இதற்காகத் தான் நான் முன்னர் எழுதியவற்றை வாசித்திருந்தால் இப்படியாக விளங்கியிருக்காது என்றேன். யார் தான் வாசிக்கிறார்கள்? இதனால் தான் எதையும் கட்டுரை வடிவில் பகிராமல் என் வேலை, என் வருமானம் என்று மாறி விட்டேன்!
  17. உங்களுக்கு மட்டம்தட்டும் சிந்தனைகள் அதிகமாக இருப்பதால்...... நான் உங்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி எழுதுவதை தவிர்த்து வந்துள்ளேன்.அப்படியிருந்தும் எனது கருத்துக்களை சீண்டல் செய்தபடியால் தான் ஒரிரு திரிகளில் உங்கள் எழுத்துக்களுக்கு முகம் கொடுத்தேன். மற்றும்படி நீங்கள் ஒரு ஜாம்பவான் என்பதை சபையினர் முன் ஏற்றுக்கொள்கின்றேன். நன்றி. ஈழப்பிரச்சனையை எந்த அளவில் வைத்திருக்கின்றீர்கள் விசுகர் 😄
  18. சங்கூதிற வயசுல சங்கீதா!😂🤣
  19. இப்படி எழுதவேண்டிய அவசியமென்ன? நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதுகின்றேன். அதற்கு பதில் கருத்து எழுத விரும்பினால் எழுதுங்கள். கருத்து எழுதுகின்றோம் எனும் பெயரில் மட்டம் தட்டுவதை நிறுத்துங்கள். கருத்து பற்றாக்குறையா கேளுங்கள் தரப்படும். 🤣 எல்லாம் தெரிந்தவர் என்ற மமதை இனியும் வேண்டாம்.
  20. என்னது உங்களை போன்றவர்களுக்கு பம்ம வேண்டுமா. மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்கள் இங்கு எழுத தொடங்கிய காலம் முதலே பலர் ர்ழுதியுள்ளார்கள். இப்போ புரிகிறதா உங்கள் பிரச்சனை? மக்கிராக்கர் உங்களை விட படித்தவர். அவர் சொல்பவற்றை கேட்பதில் என்ன தவறு? ஓ நீங்கள் வாசிக்கும் செய்திகளை நானும் வாசிக்க வேண்டுமா?
  21. உங்கள் ஓய்வு காலத்தை சந்தோசமாக அனுபவியுங்கள் பேராசிரியரே. அதில் சிறிது நேரத்தை எம்முடனும் பகிருங்கள்.
  22. வணக்கம் பேராசிரியரே முதலில் வாழ்த்துக்கள்.அடுத்து மிகுதியிருக்கும் வாழ்க்கையை குடும்பத்துடன் அனுபவியுங்கள்.
  23. (தோழரே என்று அழைப்பது தான் உங்களுக்கு பிரியமானது என்று நினைக்கின்றேன்......) தோழரே, உங்களிடம் பன்முகத்தன்மை உள்ளது என்பது மட்டும் இல்லை, நீங்கள் அவை ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பு பெற்றுள்ளீர்கள் என்பதே உண்மை. நீங்கள் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்றே ஆரம்பத்தில் நான் நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்தது நீஙகள் ஒரு கணிதப் பேராசிரியர் என்று. உங்களின் இயக்க நடவடிக்கைகளும், சமூகப் போராட்டங்களும் உங்களின் மிகச் சிறப்பான அடுத்த பக்கங்கள்........❤️. உங்களின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய எங்களின் வாழ்த்துகள். எங்களுக்காக இங்கு எழுதுங்கள், உங்களின் அனுபவங்களை தொடர்ந்து எங்களுடன் பகிருங்கள்.........
  24. எனது பிரான்ஸ் மீதான விசுவாசம் மற்றும் நன்றிக் கடன் சார்ந்த நக்கல் நையாண்டி கேள்விகளுக்கு, அதன் மூலம் இது தான் என்பதை புரிந்து கொண்டேன். நன்றி.
  25. கொடுத்து இருந்தால்,.அவர் தான் ஐனதிபதி ஆகியிருப்பார் 🤣
  26. அண்ணை தாய்மொழியில் வழிபடுவதை சுட்டுகின்ற அதேவேளை புலத்தில் வளர்ந்த பிள்ளைகள் தங்கள் சிந்தனைகளை பரந்து விரிந்து படரச் செய்கிறார்கள் என நான் கதையினூடாகப் புரிந்து கொள்கிறேன். நேரமிருக்கையில் அரைவாசிக்கு கீழ்/முடிவை மட்டும் வாசித்துப் பாருங்கள்.
  27. இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகவும், ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளாவும்… ஶ்ரீலங்கா அரசு, தமிழர்களுக்கு என்ன நல்லிணக்கத்தை கட்டி எழுப்பி இருக்கின்றார்கள். மாறாக தமிழர் பகுதியை அபகரிக்கும் செயலை மட்டும் விரைவாக செய்வதை தவிர வேறு எதுவும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் கால அவகாசங்கள் எல்லாம்… தமிழரை விழுங்கி, ஏப்பம் விட்டு விடும் என்பதை மேற்குலகு கவனத்தில் எடுத்து, ஶ்ரீலங்காவுடன் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
  28. சிறு மாற்றம் சிறி (சபை நாகரிகம் சார்ந்து மட்டும்🤣 😷) நான் ஒன்றில் அனுபவம் அவர்..... அதை நான் சொல்ல மாட்டேன் 🤪
  29. எல்லாம் பங்கு பிரிப்பு தகராறு தான். பொது மக்களிடம. கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கும் போதாவது நியாயமாக நடந்து கொண்டிருக்கலாம். அவங்களுக்குள் அது சகஜமப்பா. 😂
  30. நாமும் பாராட்டி வாழ்த்துகின்றோம் பேராசானே. ஓய்வு காலத்திலும் ஓயாது உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.
  31. நீங்கள், இன்னும்... குஷ்பூ பிரியரா. ❤️😂
  32. ஒப்பீட்டளவில் பாதுகாப்பு அடர்த்தி குறைந்த இடம், தெரிவுக்கு ஒரு காரணம் , இதை உக்கிரேனே சொல்லி உள்ளது , ஏனெனில் இது பகுதியாக அடர்ந்த காட்டுப் பகுதி. இங்கு ஹங்கரிக்கு (ஸ்லோவோக்கியாவுக்கும்) எண்ணெய் வழங்கும் குழாய் வலையமைப்பு சந்தி கொண்ட இடம், அதாவது வழங்கலை முழுமையாக கட்டுப்படுத்தலாம் இந்த குழாய் வலையமைப்பு சந்தியில் இருந்து. இங்கு ருசியா புகையிரத முக்கிய சந்திகள், அதாவது ருசியா புகையிரத வலையைபில் இருக்கும் அனைத்து சேவை தவல்களையும் real-time இல் பெறமுடியும் (இது உண்மை), அனால், உக்கிரேனின் கணக்கில் இது இருக்கிறதா என்பது தெரியாது. அநேகமாக புகையிரத சேனையில் தகவலை பெறமுடியும் என்றால் கட்டுப்படுத்தவும் முடியும், ஏனெனில் புகையிரத சேவைக்கன்னா தகவல் தொழிநுட்ப தொடர்பும், வலைப்பின்னலும் (பொதுவாக SCADA systems, Network என்ற வகைப்படுதலுக்குள் வருவது). இவைகள் தான் அந்த இடத்தில் உக்கிரேனுக்கு உள்ள நன்மைகள். வேறும் இருக்க கூடும்.
  33. வாழ்த்துகள். நீங்கள் யாழ்களத்தில் இணைந்திருப்பது எமக்கு பெருமை 🙏
  34. அமெரிக்காவிற்கு தாளம் போட வேண்டும் என்பதை இவ்வளவு நாசுக்காக சொல்ல அந்த அமெரிக்கனாலும் முடியாது. அது கிடக்கட்டும் உலகத்தில இருக்கிற பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவிற்கு எதிர் என்றால் ஏன் எதற்காக? அதன் சிதம்பர ரகசியம் என்னவாக இருக்கும்? ரஷ்யா இன்று வரைக்கும் எந்தவொரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்பது என் கருத்து.😎
  35. சுத்துறதும் தான் ஆனால் இன்று இலங்கை தமிழ் அரசியல் என்றால் சுமத்திரன். பெயர் தான் அடிபடுகிறது முன்னுக்கும் அவர் தான் நிற்கிறார். எங்கே எவருடனும் பேசினாலும். தனியாக போகிறார் எவரையும் கூட்டிட்டுப் போவதில்லை கலந்துரையாடல் செய்வதுமில்லை அவர் என்ன செயதலும். பிழையாகவிருந்தாலும். நடவடிக்கைகள் எடுக்கப்படாது தமிழரசு கட்சியையும் தமிழர்களின் அரசியலையும் அழித்து விட்டார்
  36. உங்கள் ஓய்வு காலங்கள் சிறப்புற வாழ்த்துக்கள்
  37. விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு... இன்று காலை தமிழ் பொது வேட்பாளர் அாியநேந்திரன் உடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை கேலிக்கூத்தாக உள்ளது. உண்மையில்... இவர்களின் செய்கை மக்களை முட்டாள்கள் ஆக்கும் செயலே அன்றி வேறில்லை. இப்படியான அரசியல் மூலம் மக்களை வெறுப்படைய செய்கின்றார்கள்.
  38. நான் பேசியது தமிழ் தேசியர்களின் உதவாக்கரை அரசியலையும் அவர்களால் தமிழினம் கேடுகைட்டு போவதைப் பற்றி மட்டுமே. மற்றப்படி தீவிர தமிழ் தேசிய வாதிகளின் தனிப்பட்ட வாழ்ககை மிகவும் முன்னேறியே உள்ளது என்பதை கண்கூடாகவ பார்கிறோம். ஏனென்றால் தீவிர தமிழ் தேசியவாதிகள் நாட்டை தமது இனத்தை மட்டும் தான் நாசப்படுத்துவார்கள். பொறுப்பில்லாமல் உளறுவார்கள். அவர்களது குடும்ப விடயத்தில் பொறுப்புடனும் விவேகத்துடனும் நடந்து தமது பிள்ளைகள் இந்த தமிழ்தேசிய சகதிக்குள் விழாமல் பாதுகாத்து அவர்களை முன்னேற்றுவார்கள். தனிப்பட்ட ரீதியில் தீவிர தமிழ் தேசியவாதிகள் என்னைவிட முன்னேறியே உள்ளர்கள்.
  39. இந்தப் படையெடுப்பு Kursk பகுதியில் இருக்கும் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றும் அதிவிரைவுத் தாக்குதலாக திட்டமிடப்பட்டிருந்தது என்றும் ஆனால் உக்ரேனியர்களின் திட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றும் இரஸ்ய உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார். இவரது கூற்று சரி என்றே தோன்றுகிறது. ஏனென்றால் களத்தில் ஏற்கனவே தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் உக்ரேனியப் படைகள், நிச்சயம் அற்ற, பயன் அற்ற அல்லது மிகவும் நன்மை பயக்காத ஒரு படையெடுப்பை மேற்கொள்வார்களா என்பது நியாயமான கேள்வியே. ஒன்று மட்டும் உறுதியாகக் கூற முடியும். அதாவது உந்தத் தாக்குதல் படு தோல்வியை ஆளணி தளபாட இழப்பை உக்ரேனுக்குக் கொடுக்கப் போகிறது. அந்தத் தோல்வியை மேற்குலக ஊடகங்கள் வெற்றிகரமான பின்வாங்கலாகக் கூறப்போகிறது. அதை நம்புவதற்கும் பலர் ஆயத்தமாக இருப்பார்கள்.
  40. பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 31 டிசம்பர் 2023, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோழப் போர்களில் கடல் கடந்த கடாரப் போர், ஈழப் போர், கம்பளிப் போர், பூண்டூர்போர், முடக்காற்று போர், பொன்மாரி போர், காந்தளூர் சாலை போர், கலிங்கப் போர் என போர்க்களங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். வெற்றி பெற்ற சோழர்களுக்கு, மறக்க முடியாத தோல்விகளைத் தந்த போர்க்களங்களும் உண்டு. அதில் முக்கியமானதுதான் சோழர்களின் எல்லைப் பரப்பை குறுகச் செய்த தக்கோலப் போர். இளவரசன் ராஜாதித்தன் தலைமையில் நடைபெற்ற தக்கோலப் போரில் அவர் கொலை செய்யப்பட்டார். யானை மேல் துஞ்சினத்தேவர் என்று அழைக்கப்படும் இளவரசர் ராஜாதித்தன் எப்படிக் கொலை செய்யப்பட்டார். வெற்றி பெரும் நிலையில் இருந்த சோழப் படையை திடீரென நிலைகுலையச் செய்ய திட்டம் தீட்டியது யார்? அவர் அதற்காகப் பெற்ற வினோதமான பரிசு என்ன? இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்... சோழப் படைகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருந்த திருநாவலூர் சோழ இளவரசன் ராஜாதித்தன் தலைமையிலான படை பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதிக்கு விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் உளுந்தூர்பேட்டை வரலாற்று ஆர்வலர் லலித் குமார் ஆகியோருடன் சென்றோம். முதலில் திருநாவலூர் சிவன் கோவிலுக்குச் சென்றபோது, அந்தக் கட்டுமானங்கள் மற்றும் அதிலுள்ள கல்வெட்டுகள் குறித்து விரிவாகப் பேசினார் பேராசிரியர் ரமேஷ். தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ள திருநாவலூர் சிவன் கோவில் பாராந்தக சோழன் காலத்தில் புனரமைக்கப்பட்டது. இதில் சோழப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளன. குறிப்பாக பராந்தக சோழனின் மகன் இளவரசன் ராஜாதித்தனின் கல்வெட்டுகள், அவருடன் இங்கு தங்கியிருந்த படைத் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் உள்ளிட்ட பலரின் செயல்கள், தானங்கள் குறித்த கல்வெட்டு இங்கு அதிகம் உள்ளதாக அவர் விளக்கினார். அதேபோல் அருகிலுள்ள திருமுண்டீஸ்வரம் கோவிலிலும் இத்தகைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தானங்கள் குறித்தும், ஏரி, குளங்களின் கட்டுமானங்கள் குறித்தும் விவரிக்கின்றன. "தக்கோலப் போருக்குத் தயாராகும் நிலையில் பராந்தக சோழனின் ஆணைக்கு இணங்க இளவரசர் ராஜாதித்தன் தலைமையில் படை வீரர்கள் தங்கியிருந்த இடம் இந்த பகுதி. மேலும் போர்களற்ற காலங்களில் வீரர்களைக் கொண்டு கோவில் கட்டுமானங்கள், ஏரி மற்றும் குளங்கள் புணரமைப்புப் பணிகளையும் இளவரசர் ராஜாதித்தன் செய்துள்ளதற்குச் சான்றாக இங்கு பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன," என்றார் பேராசிரியர் ரமேஷ். பத்து ஆண்டுகளாக முகாமிட்டிருந்த ராஜராஜன் "ராஷ்டிரகூடர்கள் சோழ அரசுக்கு எதிராகப் படை திரட்டுவதை ஒற்றர்கள் மூலமாக அறிந்த பாராந்தக சோழன் கி.பி.936இல் வடதிசை காவல் பொறுப்பைத் தனது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான ராஜாதித்தனிடம் ஒப்படைத்திருந்தார். இந்தக் காலகட்டத்தில் ராஜாதித்தன் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு தன் படையுடன் முகாமிட்டிருந்தார். இவருடன் இவரின் படைத்தலைவன் சேரநாட்டு நந்திக்கரைப்புத்தூரை சேர்ந்த வெள்ளன்குமரன் மற்றும் பராந்தகரின் மகன்களும், ராஜாதித்தனின் தம்பிகளுமான கண்டராதித்தரும், அரிஞ்சய சோழனும் உடன் இருந்தனர்," என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ். கிபி. 949இல் இராஷ்டிரகூட அரசன் தம் படைகளைப் பன்மடங்கு பெருக்கியதோடு அல்லாமல், தனது மைத்துனான கங்க அரசன் பூதுகனையும், முன்னாளில் பராந்தக சோழனால் நாட்டை இழந்த வைதும்ப மற்றும் பாணர் படைகளையும் ஒன்று சேர்த்ததாகக் கூறுகிறார் அவர். "அந்தப் பெரும்படையுடன் தொண்டை நாட்டின் வட எல்லையை அடைந்தான். இந்தப் போரை ஏற்கெனவே எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜாதித்தன் தனது பெரும்படையுடன் எதிரிப் படைகளை தக்கோலம் என்னும் ஊரில் சந்தித்தான். (தற்போது தக்கோலம் என்னும் ஊர், இப்போதுள்ள அரக்கோணத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது). இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இந்தப் போரில் யாருக்கு வெற்றி என்று கணக்கிட முடியாத அளவுக்கு இரு தரப்பினரும் போர் புரிந்தனர்." அப்போது, இராஷ்டிரகூட படையில் வீரர்களின் எண்ணிக்கை அதிகமிருந்த போதிலும் சோழ வீரர்கள் ஒவ்வொருவரும் அஞ்சா நெஞ்சனாய் அவர்களை வெட்டி வீழ்த்தி முன்னேறியதாகவும் அவர் விளக்கினார். போரின் திசை மாறி சிதறிய சோழ படைகள் ராஜாதித்தன் இப்போரில் தனது அனைத்து படைக் கருவிகளையும் உபயோகித்துப் போரிட்டதாகவும், அவனை நெருங்க முடியாமல் எதிரிப் படைகள் திணறியதாகவும் விவரித்தார் பேராசிரியர் ரமேஷ். "அவனது தம்பிமார்களும், படைத் தலைவனும் நாலாபுறமும் சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தி பிணக் குவியல்களாக்கினர். இந்த நேரத்தில் கங்க மன்னன் பூதுகன், போரின் நிலையை உணர்ந்து தனது படைகளுக்கு ராஜாதித்தனை மட்டும் குறிவைக்கும் படியும், தனது படைத் தலைவனில் ஒருவனான மணலேரா என்பவனை அழைத்து ராஜாதித்தனையும் சோழப் படையையும் பிரிக்குமாறும் கட்டளையிட்டான்." பேராசிரியர் ரமேஷின் கூற்றுப்படி, மணலேரா தனது மன்னர் கட்டளையை ஏற்று சோழப் படைகளைத் திசை திருப்பி, ராஜாதித்தனை தனிமைப்படுத்தினான். கங்க மன்னனும் அவரது படைகளும், ராஜாதித்தன் இருக்கும் இடத்திற்கு ஏதுவாகச் செல்ல வழிவகை செய்தான். பூதுகன் ராஜாதித்தனை நோக்கி முன்னேறி, தன்னிடம் இருந்த அம்புகளைச் சரமாரியாக ராஜாதித்தனை நோக்கித் தொடுத்தான். இதைச் சற்றும் எதிர்பாராத ராஜாதித்தன் அம்புகளைத் தடுக்க முயன்றார். அந்த அம்புகளில் ஒன்று ராஜாதித்தன் மார்பில் தைக்கவே அவர் அந்தக் கணத்திலேயே உயிரிழந்தார். இதன் விளைவாக தலைவன் இல்லாத படைகள் குழப்பத்திற்கு உள்ளானதாகவும் அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ராஷ்டகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் வெற்றி வாகை சூடினார் என்றும் யானை மீது அமர்ந்து "வீரப் போரிட்டு இறந்த ராஜாதித்தன் யானை மேல் துஞ்சினத்தேவன்" என்று அழைக்கப்படுவதாகவும் பேராசிரியர் ரமேஷ் விளக்கினார். சோழர்களின் செப்பேடுகளும் ராஜாதித்தனை "யானை மேல் துஞ்சிய தேவர்" என்றே அழைக்கின்றன. இதன் மூலம் ராஜாதித்தனை பூதுகன் கொன்றது உறுதியாகிறது. இந்தப் போருக்குப் பிறகு தனது பட்டத்து இளவரசனை இழந்த சோழ நாட்டின் எல்லை குறுகியது. தொண்டை மண்டலம் முழுமையும் மூன்றாம் கிருஷ்ணன் வசமானது. இந்த வெற்றியின் பேரால் அவரை அவரது கல்வெட்டுகள் "கட்சியும் தஞ்சையும் கொண்ட கன்னட தேவன்" எனப் புகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். தக்கோலப் போர் நடந்தது ஏன்? பேராசிரியர் ரமேஷ் விளக்கிய வரலாற்றின்படி, பராந்தக சோழனின் தந்தை ஆதித்தனின் பட்டத்தரசி இளங்கோபிச்சுவின் புதல்வன் முதலாம் கன்னர தேவனுக்கு ஆட்சி மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பராந்தகன் தன்னுடைய மகளை நான்காம் கோவிந்தனுக்கு மணமுடித்தது, ராஷ்டிரகூட உள்நாட்டுப் பிரச்னையில் மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராக பராந்தகன் போர் புரிந்தது ஆகியவை இந்தப் போருக்கான காரணங்கள். "பராந்தகன் தனது ஆட்சியில் தன் அண்டை நாடான பாண்டியர், ஈழம், வாணர்கள், வைதும்பர்கள், கீழை சாளுக்கியம் ஆகிவற்றை வென்று அவர்கள் அனைவரையும் எதிரிகளாக்கினார். இதனால் தக்கோலப் பெரும்போரில் இவர்கள் பராந்தகன் படைகளுக்கு உதவ வரவில்லை." தக்கோலப் போர் நடக்க யார் காரணம்? தக்கோலப் போருக்கான காரணங்களை பேராசிரியர் ரமேஷ் விவரித்தார். ஆனால், இந்தப் பெரும்போர் நடப்பதற்குத் தொடக்க காரணமாக இருந்தது யார் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. அதுகுறித்து விளக்கினார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் லலித் குமார். ராஜாதித்தன் தக்கோலப் போரில் கங்க மன்னன் பூதுகனால் கொல்லப்பட்டான். வெற்றி பெறும் நிலையிலிருந்த சோழப் படைகள் சிதறின. வெற்றிக் கனியை ருசித்து வந்த சோழப்படை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்தது. "ராஜாதித்தனின் பாட்டனார் முதலாம் ஆதித்தன் காலத்தில் தனது ராஷ்டிரகூட நண்பன் இரண்டாம் கிருஷ்ணன் தனக்குப் பல போர்களில் உதவி செய்ததன் பொருட்டு, அவரது மகள் இளங்கோபிச்சுவை மணமுடித்து பட்டத்தரசி ஆக்கினார். இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைக்கு தன் நண்பன் மற்றும் மாமனான இரண்டாம் கிருஷ்ணனின் மற்றொரு பெயரான கன்னர தேவன் என்று பெயரைச் சூட்டினார். ஆதித்த சோழனின் மற்றொரு மனைவியான திரிபுவனமாதேவிக்குப் பிறந்தவர் பராந்தக சோழன். சில அரசியல் காரணங்களால் ஆதித்த சோழனுக்குப் பிறகு பராந்தக சோழர் அரியணையில் அமர்த்தப்பட்டார்," என்று தககோலப் போரின் தொடக்கப் புள்ளியை விவரித்தார் லலித் குமார். ஆனால், பட்டத்தரசி இளங்கோபிச்சுவுக்கு பிறந்த கன்னர தேவரையே அரசனாக்கி இருத்தல் வேண்டும் என்பதுதான் முறை. "இதனால் கன்னர தேவனின் உரிமையை ஆதரித்து ராஷ்டிரகூட அரசன் இரண்டாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். இப்போரில் ராஷ்ட்டிரகூட அரசுக்கு ஆதரவாக வாணர்களும் வைதும்பர்களும், சோழப் பேரரசின் மன்னரான பராந்தகனுக்கு ஆதரவாக கங்க அரசன் பிரித்திவிபதி, கொடும்பாளூர் மற்றும் கீழபழுவேட்டரயர்கள் போரில் களமிறங்கினர். மிக முக்கியமான இந்தப் பெரும்போரில் சோழர்களே வென்றனர்." ராஷ்டிரகூடர்களுடன் மீண்டும் திருமண உறவு சிறிது காலம் கழித்து கிபி.913இல் இரண்டாம் கிருஷ்ணன் இறந்த பிறகு இவரது பேரன் மூன்றாம் இந்திரன் ராஷ்டிரகூடத்தின் மன்னரானார். இவர் தனது மகனான நான்காம் கோவிந்தனுக்கு கிபி.918இல் இளவரசுப் பட்டம் சூட்டியதாகத் தெரிவித்தார் லலித் குமார். "இந்த இளவரசனுக்கு, பராந்தகர் தனது மகளான வரீமாதேவியை மணமுடித்ததோடு அல்லாமல் ராஷ்டிரகூடரின் நட்பை மீண்டும் மலர வைக்க முயன்றார். ஆனால் விதி வேறொரு பகைமைக்கு வித்திட்டது. அதாவது அந்த நேரத்தில் கீழைச் சாளுக்கிய அரசு இரண்டு பிரிவாகி வடதிசை பகுதியை யுத்த மல்லனும், தென்திசைப் பகுதியை இரண்டாம் வமீனும் ஆண்டனர். அவர்கள் இருவருக்கும் பகைமை ஏற்பட்டு போர்க்களத்தில் இறங்கினர். இதில் நான்காம் கோவிந்தன் யுத்த மல்லனுக்கு ஆதரவளித்தான். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினான். இதன் காரணமாக, மூன்றாம் கிருஷ்ணன் இராஷ்ட்டிரகூடத்தில் கலகம் செய்து தனது தந்தை மூன்றாம் அமோஹவர்ஷணனை (நான்காம் கோவிந்தனின் சிறிய சித்தப்பா) ராஷ்டிரகூடத்தின் அரசராக்கினான். இதனால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நான்காம் கோவிந்தன் தன் மாமனான பராந்தக சோழனிடம் சரணடைந்தான்," என்றும் அவர் விளக்கினார். மேலும், "இதே நேரத்தில் மூன்றாம் கிருஷ்ணன் கங்க நாட்டில் ரசமல்லனை கொன்று இரண்டாம் பூதுகனை கங்க அரசின் மன்னராக்கி, தனது தமக்கையை பூதுகனுக்கு மனம் முடித்து உறவினரானான். இதனால் கங்க அரசன் பூதுகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு மிகுந்த விசுவாசத்துடன் இருந்தான். தனது மருமகனை நாட்டை விட்டுத் துரத்தியதால் கடும் கோபத்தில் இருந்த பராந்தகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராகவும், தன் மருமகன் நான்காம் கோவிந்தனுக்கு ஆதரவாகவும் போரிட முடிவு செய்தார். ராஷ்டிர கூடர்களுக்கும் சோழர்களுக்கும் இடையிலான பகை அதிகரித்தது. அந்தப் போர் தக்கோலத்தில் நடைபெற்ற போராகும். இதில்தான் இளவரசன் ராஜாதித்தன் கொலை செய்யப்பட்டு சோழப் பேரரசு இடைக்கால வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது என்று கூறினார். இந்தப் போரில் பெற்ற வெற்றி மூலம் ராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆட்சிப் பரப்பைப் பெருமளவில் விரிவுபடுத்தினர்," என்றும் தெரிவித்தார் லலித் குமார். ராஜாதத்தினை கொன்ற படைத்தளபதி பெற்ற பரிசு என்ன? போர்க்களங்களில் ரகசிய திட்டங்களைத் தீட்டி வெற்றி வாகை சூட உதவுவோர் அரசர்களிடம் இருந்து நாடுகள், பொன், பொருள் என ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால், தக்கோலப் போரில் ராஜாதித்தனைக் கொன்ற ராஷ்டிரகூட படைத் தளபதி பெற்ற பரிசு வினோதமானது என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் தாமஸ் அலெக்சாண்டர். ராஷ்ட்ரகூடர் கங்கர் வரலாற்றில் தக்கோல போர் பற்றிய குறிப்புகளை தாங்கிய ஆவணமாக அதக்கூர் நடுகல் திகழ்வதாகக் கூறுகிறார் அவர். "மைசூர் மாவட்டத்தில் மாண்டியா என்ற ஊருக்கு அருகே அதக்கூர் கிராமத்தில் இந்த நடுகல் கிடைத்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் கி.பி. 1898ஆம் ஆண்டில் அதக்கூர் நடுகல் ஹல்டிஷ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியில் நடுகல், முறையாக கல்வெட்டு நகல் எடுக்கப்பட்டு பெங்களூர் அருங்காட்சியத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தக்கோலம் போரில் ராஷ்ட்ரகூட அரசர் கன்னர தேவன் மற்றும் இரண்டாம் பூதுகன் தலைமையில் ராஷ்ட்ரகூட படை சோழ அரசர் ராஜாதித்தினை வெல்கிறது. இந்தப் போரில் ராஜாதித்தன் வீரமரணம் அடைகிறார்." இரண்டாம் பூதுகனின் சேவகனான படைத்தளபதி மணலேரா என்பவன் தக்கோலப் போரில் வீரத்துடன் போரிட்டு பூதுகனின் வெற்றிக்கு உதவிய காரணத்தால் இரண்டாம் பூதுகன் மணலேராவிற்கு பரிசளிக்க விரும்பியதாகக் கூறினார் தாமஸ் அலெக்சாண்டர். பரிசாக சில கிராமங்களை வழங்கியபோது, அதற்குப் பதிலாக பூதுகன் வளர்த்து வந்த காளி என்னும் பெயர் கொண்ட மணலேரா வேட்டை நாயைக் கேட்டுள்ளார். பூதுகனும் தனது நிழல் போல் வளர்த்து வந்த காளி என்ற நாயை அவருக்குப் பரிசாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். எஜமானனுக்காக போரிட்டு மடிந்த வீர நாய் காளி வேட்டை நாயைப் பரிசாகப் பெற்ற மணலேரா காளி என்ற அந்த நாயை மிகவும் பாதுகாப்பாகவும் பாசத்துடன் வளர்த்து வந்ததாகவும் தாமஸ் அலெக்சாண்டர் கூறினார். இந்நிலையில், "கேலே நாட்டில் பெல்த்துர் என்ற மலைத்தொடரில் மணலேரா வேட்டைக்குச் சென்றபோது காளி ஒரு காட்டுப்பன்றியை எதிர்த்துச் சண்டையிட்டு, மணலேராவை காப்பாற்ற மரணமடைகிறது. "காளியின் வீரத்தின் நினைவாக மணலேரா அதக்கூர் சல்லேஸ்வரா கோவிலின் முன்பாக நடுகல் எழுப்பியுள்ளார். நடுகல்லுக்கு நில தானம், தினசரி பூஜை, நெல் நிவந்தம் ஆகியவற்றையும் வழங்கியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் அங்கு காணப்படுகின்றன." மேலும், "இந்த நில நிவந்தங்களை அழிப்பவர்கள், நடுகல் வழிப்பாட்டைத் தடை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் காளியைக் கொன்ற பாவத்தைச் சுமப்பர்" என்றும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அந்தக் கல்வெட்டில், "சக வருடம் 872 எனக் குறிக்கப்படுகிறது, மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னரதேவன் அமோகவர்ஷன் எனக் குறிக்கப்படுகிறார். தக்கோலா என்ற பெயர் தக்கோலம் என்ற ஊரைக் குறிப்பிடுள்ளது. ராஜாதித்தன் முவடி சோழ என்ற பட்டப்பெயருடன் சிறப்பிக்கப்படுகிறார்." தக்கோலப் போரில் வெற்றிப் பெற்றதன் பரிசாக இரண்டாம் பூதுகனுக்கு கன்னர தேவன் பானாவாசி, பேலவோளா, புரிகிரி, கிசுகாடு, பாகிநாடு போன்ற நாடுகளை வழங்குகிறார். பூதுகன் மணலேராவுக்கு அதக்கூர் கடியூர் என்ற கிராமத்தை வழங்குகிறார். அதக்கூர் நடுகல் பற்றி விரிவாக எபிகிராபிக்கா இன்டிகா தொகுதி 6இல் உள்ளது. போர் வெற்றிக்காக அக்காலத்தில் கிராமங்களையும் ஊர்களையும் பொன் பொருளையும் பரிசாகப் பெற்றுக் கொண்டவர்களில் இருந்து மணலேரா முற்றிலும் மாறுபடுகின்றார். பூதுகனின் இந்த நாய் மிக பலம் பொருந்தியது எனவும் ஆக்ரோஷமானது, எஜமான விசுவாசம் உடையது எனவும் சில வரலாற்று அறிஞர்களும் உறுதிப்படுத்துகின்றனர். ராஜாதித்தன் கொலைக்குப் பின் துறவியாக மாறிய சோழ வீரன் தக்கோலப் போரில் சோழர்களை வீழ்த்தியதற்கு பரிசுகள் வழங்கப்பட்டதைப் போல் இளவரசர் ராஜாதித்தன் கொலை சம்பவத்திற்குப் பரிகாரமாக துறவியாக மாறிய சோழ வீரன் பற்றிய சுவாரசியமான தகவலை கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் பி பி சி தமிழுடன் தொலைபேசியில் கூறினார். ராஜாதித்தன் கொல்லப்பட்ட தக்கோலப் போரில் பங்கெடுக்காமல் போனதற்குப் பிராயச்சித்தமாக சோழ வீரன் வல்லபன் என்கிற வெள்ளங்குமரன் துறவியாக மாறியதாக அவர் தெரிவித்தார். இதற்கான கல்வெட்டு, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் உள்ள இருமொழிக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்கொண்டு விளக்கியவர், "துறவியாக மாறிய போர் வீரன், கேரள இளவரசிக்கும் ராஜாதித்தனின் தந்தையான முதலாம் பராந்தக சோழனுக்கும் இடையிலான திருமணத்தைத் தொடர்ந்து சோழ நாட்டிற்குக் குடிபெயர்ந்த கேரளாவில் இருந்து வந்த படைத் தலைவன். இவர் ஏதோ சில காரணங்களுக்காக தக்கோலப் போரில் பங்கெடுக்க இயலவில்லை. ஆகையால், தான் உயிருடன் இருந்தும் அந்தப் போரில் ஈடுபட்டு இளவரசரைக் காப்பாற்ற முடியவில்லை என வேதனைப்பட்டு துறவியாக மாறியதாக கல்வெட்டு விவரிக்கின்றது," என்றார். https://www.bbc.com/tamil/articles/ced7y5ke2yjo
  41. அரசியலமைப்பில் திருத்தம் செய்வது என்றால்... மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ரணில் வெற்றி பெற வேண்டும் என்பது, சுமந்திரனுக்கு தெரியாமல் இருப்பது, ஆச்சரியமாக உள்ளது. 😂 இல்லாவிடில்... தெரிந்து செய்யும் சுத்துமாத்தில் இதுவும் ஒன்றா... 🤣
  42. மேற்கு ஜேர்மனியும் கிழக்கு ஜேர்மனியுமாக இருந்த போது ஏட்டிக்கு போட்டியாக பதக்கங்களை அள்ளிக்குவித்தன.இருபக்கமும் கறுப்பின போட்டியாளர்களை மருந்திற்கும் காணமுடியாது.ஆனால் இன்று கறுப்பினத்தவர்களும் சரிக்கு சமமாக நுழைந்து கொண்டிருக்கின்றார்கள். பெருமைப்படத்தக்க வெற்றிகள் எதுவுமில்லாமல்.... இரு நாடுகளும் ஒன்றிணைந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக ஜேர்மனி 10 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. இதை வெட்கப்பட வேண்டிய செயல் என பல ஊடகங்கள் தெரிவித்து இருந்தன. பாவம் ஜேர்மனி அவலை நினைத்து வெறும் உரலை இடித்துக்கொண்டிருக்கிறது. ஜேர்மனிய மக்களிடம் அன்றிருந்த விளையாட்டு விவேகங்கள்/உற்சாகங்கள் இன்றில்லை. காரணம் அரசியலில் புதிய போக்கு மட்டுமே.
  43. இன்று சூரிச் வின்ரர்தூரில் இரண்டாவது நாளாக கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற விளையாட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பிற நாடுகளைப் போன்றே தாயகச் செயற்பாட்டாளர்கள் எல்லோருக்கும் வயதேறிக்கொண்டு போகின்றது. இளையோர் அரசியலைத் தவிர்த்து தமது விருப்பமான விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். எனினும் தலைவர் இருக்கின்றார் என்று இப்போதும் நம்பும் அளவிற்கு உலக நடப்பு தெரியாத சிலரும் இருக்கின்றார்கள் என்பதை காதில் விழுந்த கதைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது! வந்தமா… விளையாட்டைப் பார்த்தமா.. கொத்துரொட்டியை சாப்பிட்டமா.. கூல் ட்றிங்க்ஸைக் குடித்தமா.. என்று வெளியே வந்துவிட்டேன்!
  44. ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது, “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. உனக்கு சில எலும்பு துண்டு தருகிறேன்” நரி ஒரு செம்மறி ஆட்டிடம் சென்று சொன்னது “சிங்கம் உன் பிரச்னை எல்லாம் தீர்த்து உனக்கும் முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது” செம்மறி ஆடும் நரியை நம்பி சென்றது. செம்மறி ஆட்டைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் செம்மறி ஆட்டின் காதுகள் அறுபட்டாலும், அது தப்பித்து விட்டது. செம்மறி ஆடு நரியிடம் சொன்னது: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது” அதற்கு நரி சொன்னது: “சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்” செம்மறி ஆட்டுக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் செம்மறி ஆட்டைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: “நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது” நரி சொன்னது: “நீ அரியாசனத்தில் வசதியாக அமர வேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்” நரி செம்மறி ஆட்டை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் செம்மறி ஆட்டை பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: “பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப செம்மறி ஆட்டை அழைத்து வந்துவிட்டாயே. போய் செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா” நரி செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது. நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: “மூளை எங்கே?” நரி பதிலளித்தது: “அந்த செம்மறி ஆட்டுக்கு மூளை இல்லை, மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?” குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂 தோழர் பாலன்
  45. இது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு. நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல. சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றுவார்களா, அப்ப சரிதான். அட நாங்கல்லாம் அடி முட்டாளுங்களா. நம்பிட்டம். ஆமா ஆமா அரச தரப்பில் ஆதரவு கிட்டினால் ..... அப்புறம் பார்க்கலாம். பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னே நீந்துவதால் பயனேது. சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலதின் வசம் ஆனாய், துணிந்தபின் மனமே துயரம்கொள்ளாதே, சோகம் கொள்ளாதே. தீர்மானம் எடுத்தாயிற்றா. யாராவது சொல்லுங்கப்பா? ஆமா. உறுதி கூறினார், இருக்கட்டும். திரும்பவும் முதல்லயிருந்தா? சரிதான் போங்க. சரி எப்ப செய்ய வசதி. அட போங்கப்பா இவ்வளவு நடந்திருக்கு சட்டம் படிச்ச M.A.S இக்கு தெரியாததா? இந்த சந்திப்புக்கு எழுத்துமூலம் பதிவு எங்காவது இருக்கா. ? சந்திப்பை உறுதிசெய்ய M.A. சுமந்திரன் என்ன நடவடிக்கை எடுத்தார். ? கூட்டம் வைத்து இணக்கம் கண்ட விடயங்களை உறுதிசெய்ய புறொட்டொகொல் (protocol) பதியப்பட்டுள்ளதா. புரிந்தால் சரிதான்.
  46. மூவரையும் படத்திலும், இருவரிடம் போனிலும், ஒருவரை இரு முறை நேரிலும் சந்தித்துள்ளேன். அனைவரும் பழகுவதில் தங்கப் பவுன் தான்..🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.