Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    32
    Points
    15791
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    8907
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/31/24 in all areas

  1. இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது?(கேள்வி, பதில் வடிவில்) August 28, 2024 — வி.சிவலிங்கம் — கேள்வி: இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இத் தேர்தல் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? பதில்: மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வரலாற்றோடு அணுகுவது அவசியம். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பின் ஆரம்பமாகும். இதன் பிரகாரம் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக ஐ தே கட்சியின் சார்பில் ஜே ஆர். ஜெயவர்த்தன பதவியைப் பெற்றார். அவரது பதவிக் காலம் என்பது இலங்கையின் அரசியலை முழுமையாக மாற்றிய காலமாகும். 1948ம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் சோல்பரி அரசியல்யாப்பின் பிரகாரம் பாராளுமன்ற அடிப்படையிலான ஆட்சி நடைபெற்றது. பாராளுமன்றம் சட்டவாக்கத்தையும், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்று அதிகாரத்தையும், நீதித்துறை நாட்டின் ஆட்சி முறை அரசியல் அமைப்பின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதாகவும், மீறினால் தண்டனை வழங்கும் சுயாதீனக் கட்டுமானம் என மூன்று தனித்தனி சுயாதீன அமைப்புகளாகச் செயற்பட்டிருந்தன. ஆனால் 1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு நாட்டில் ஏற்கெனவே செயற்பாட்டிலிருந்த சுயாதீன நிர்வாகங்களை அதிகாரம் குவிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறைக்குள் கொண்டு வந்ததால், பாராளுமன்றம், நீதித்துறை என்ற சுயாதீன அமைப்புகள் யாவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அரசியல் கட்டுமானம் மாற்றி அமைக்கப்பட்டது போலவே தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானமும் அந்நிய மூலதனக் குவிப்பிற்குள் தள்ளப்பட்டது. நாடு வெளிநாட்டுப் பொருட்களின் சந்தையாக மாற்றப்பட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின் நாடு நவ-தாராளவாத திறந்த பொருளாதாரமாக மாற்றப்பட்டது. ஜே ஆரின் பின்னர் ஐ தே கட்சியின் சார்பில் பிரேமதாஸ இரண்டாவது ஜனாதிபதியானார். அவரது காலத்தில் சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் மிக அதிகளவில் ஐ தே கட்சிக்குள் ஊடுருவியது. இதுவரையும் மேற்குலக லிபரல் ஜனநாயகத்தின் நிழலாகவும், பின்னர் நவ-தாராளவாத ஜனநாயகத்தையும் பின்பற்றிய அக் கட்சி சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் இருப்பிடமாகியது. அதனால் அதன் மேற்குலக குணாம்சங்கள் படிப்படியாக அகலத் தொடங்கின. பிரேமதாஸ அவர்களின் படுகொலைக்குப் பின்னர் துணை ஜனாதிபதி என்ற அடிப்படையில் செயற்பட்ட டி பி விஜேயதுங்க மூன்றாவது ஜனாதிபதியானார். இவரது பதவிக் காலம் சில மாதங்களே நீடித்தது. ஜே ஆர் காலத்தில் ஆரம்பித்து கூர்மை அடைந்து சென்ற இன முரண்பாடுகள் மேலும் வளர்ந்து சிவில் யுத்தமாக மாறிய நிலையில் சிவில் யுத்தம் என்பது பயங்கரவாதமாக மாற்றம் பெற்று ராணுவ ஆதிக்கம் அரச கட்டுமானத்திற்குள் படிப்படியாக நுழைந்;தது. தெற்கில் ஜே வி பி இனது போராட்டங்களும், தமிழ்ப் பகுதிகளில் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் சிவில் யுத்தமும் வளர்ச்சியடைந்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரச பயங்கரவாதம் சொந்த மக்களைக் கொன்று குவித்தது. இவை நாட்டின் பொருளாதாரத்தையும், அரச ஜனநாயககட்டுமானங்களையும் மிகவும் பின்தள்ளியது. இந் நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சி நிரலில் சந்திரிகா பண்டாரநாயக்கா 1994இல் நான்காவது ஜனாதிபதியானார். சந்திரிகாவின் ஆட்சிக் காலம் என்பது ஒரு புறத்தில் சமாதானத்தை கட்டி எழுப்பவும், மறுபுறத்தில் போரை முடிவுக்கு கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இரு புறங்களிலும் காணப்பட்ட தீவிரவாத சக்திகள் அவரது முயற்சிகளைத் தோற்கடிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டன. இதன் விளைவாக அவரது முயற்சிகள் அவரது கட்சிக்குள் பல முரண்பாடுகளை உருவாக்கிய நிலையில் 2005ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ ஐந்தாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலம் என்பது போரை உக்கிரப்படுத்தும் அதே வேளையில் சிங்கள பௌத்த இனவாத அரசாகவும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை மறுதலிப்பதாகவும், இலங்கை என்பது சிங்கள பௌத்த தேசம் என்பதாகவும், ஏனைய சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தின் தயவில் வாழ்வதாகவும் விளக்கங்களை வழங்கும் காலமாக அமைந்தது. இதனால் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிகவும் அப்பட்டமாக மறுதலிக்கவும், அதேவேளை ராஜபக்ஸ குடும்பத்தின் வரலாறு என்பது பண்டாரநாயக்கா குடும்பத்தின் வரலாற்றை விட மிக முக்கியத்துவமானது என்ற நிலைக்கு அதிகாரம் என்பது குடும்ப ஆதிக்கமாக மாறிய காலமாகும். சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பண்டாரநாயக்கா குடும்பத்திலிருந்து ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதிக்கத்திற்குள் சென்ற நிலையில் நாட்டின் ஜனாதிபதி ஆட்சிமுறை ஏகபோக ராஜபக்ஸ குடும்ப ஆதிக்கமாக அரசியல் யாப்பு மாற்றங்கள் மூலம் மாறியதால் நாட்டிலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் எழுந்த முரண்பாடுகள் 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஆறாவது ஜனாதிபதியாக தெரிவானார். இவர் ஓர் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமையாலும், பாராளுமன்றத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த காரணத்தால் ஐ தே கட்சியின் பாராளுமன்ற ஆதரவோடு ஆட்சியை நடத்தினார். ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஸ ஆதரவு சக்திகள் ஐ தே கட்சியின் கூட்டோடு உருவான நல்லாட்சி அரசை நன்கு செயற்பட முடியாதவாறு தொல்லைகளைக் கொடுத்தனர். அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் 19வது திருத்தத்தை கொண்டு வந்த போதிலும் நாட்டில் முதன் முதலாக பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசு ஓர் தோல்வியடைந்த அரசாக மாறியது. இத் தோல்வியின் விளைவாக 2015ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்ஸாக்கள் மீண்டும் தமது குடும்ப ஆதிக்கத்தை தொடரும் வகையில் சிங்கள மக்களின் தனி ஆதரவுடன் ஜனாதிபதி பதவியை எட்ட முடியும் என்பதை மிகவும் அப்பட்டமான இனவாத அரசியலின் மூலம் செய்து முடித்தனர். 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரான கோதபய ராஜபக்ஸ நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவானார். நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராகவும், 2019ம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் காரணமாக உல்லாச பயணத்துறை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்ப இரும்புக் கரங்கள் தேவை என்பதால் அவரைத் தேர்வு செய்த போதிலும் அவருக்கும், அரசியலுக்கும் போதிய அனுபவம் இல்லாமை காரணமாக அவர் வேறு சிலரின் உபதேசங்களைச் செவிமடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி, டொலர் நெருக்கடி எனத் தோற்றம் பெற்று நாடு வங்குறோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் கோபமடைந்த மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி விரைந்தார்கள். முடிவில் அவர் நாட்டை விட்டு வெளியேறினார் கோதபய அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே 2022ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பு வழிகள் மூலமாக நாட்டின் எட்டாவது ஜனாதிபதியானார். இவ் வரலாற்று விபரங்கள் தெளிவாக புரியப்பட்டால் மாத்திரமே இத் தேர்தலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம், மக்களின் நாளாந்த வாழ்வு, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனை உணராத அல்லது உணர முடியாத சில சக்திகள் ஜனாதிபதித் தேர்தலை வெறும் தமிழர் உரிமைக்குள் முடக்கி தமிழ் மக்களை இருண்ட அரசியலை நோக்கித் தள்ளுவதன் ஆபத்துக்களை புரிதல் அவசியம். எனவேதான் இப் பதிலும் சற்று நீண்டு சென்றுள்ளது. கேள்வி: இத் தேர்தல் நான்கு முனைப் போட்டித் தளமாக வர்ணிக்கப்படுகிறது. அவ்வாறாயின் இந்த நான்கு முனைகளும் எவ்வாறு தனித்தனி அமைகின்றன? பதில்: சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்போது நான்கு பிரதான கட்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில் முதலாவது இடத்தை சஜீத் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ( Samagi Jana Balavegaya- SJB ) எனவும், இரண்டாவது இடத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி- ஜே வி பி எனவும், மூன்றாவது இடத்தில் சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கரமசிங்க எனவும், நான்காவது இடத்தில் நமல் ராஜபக்ஸவை தேசிய அமைப்பாளராகக் கொண்ட பொது ஜன பெரமுன எனவும் தெரிவிக்கின்றன. இந்த நான்கு வேட்பாளரும் தேசிய பிரச்சனைகளில் மிகவும் வித்தியாசமான கொள்கைகளைக் கொண்டுள்ளனர். இவ் விபரங்களைப் பின்னர் பார்க்கலாம். கேள்வி: தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்ற பெயரில் ஒருவர் போட்டியிடுகிறார். இவரது போட்டி என்பது தேசிய அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? பதில்: ஜனாதிபதித் தேர்தல் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதனை எனது முதலாவது பதில் விபரமாகத் தந்துள்ளது. அப் பின்னணியிலிருந்தே இப் பொது வேட்பாளர் என்ற சங்கதியையும் நோக்க வேண்டும். இப் பொது வேட்பாளரைத் தேர்வு செய்த முறை மிகவும் கேலியானது. அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் கொண்ட ஒரு பொதுக் கட்டமைப்பு இவ் வேட்பாளரைத் தெரிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இவ் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் எத்துணை மக்களின் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றன? எவ்வாறு அவ்வாறான முடிவை நோக்கிச் சென்றார்கள்? தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சார்ந்த ஒருவர் அக் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மதிக்கத் தெரியாத ஒருவர் தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக நியமிக்கப்படுவாராயின் மக்களுக்கு எவ்வாறான செய்தியை கொடுக்கின்றனர்? இங்கு தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடுவதாக யாரும் போட்டியிடலாம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குப் பொறுப்புச் சொல்லும் யோக்கியதை போட்டியாளர்களுக்கு அவசியம். சிவில் அமைப்புகள் என அழைப்பவர்கள் எவரும் மக்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்களாக தெரியவில்லை. அதே போலவே அரசியல் கட்சிகள் என்போர் தமது பாராளுமன்றப் பதவிகளைத் தமிழரசுக் கட்சி மூலமாகவே பெற்றனர். அவ்வாறாயின் இவர்களில் எவரும் ஜனநாயக அம்சங்களை மதிக்கவில்லை என்பது தெளிவு. இப் போட்டியாளர் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றினார்கள். இனிமேல் நாம் ஏமாறத் தயாராக இல்லை. எமது பலத்தை எதிரிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கூறுவோம் என்பதைத் தவிர வேறு எதுவும் அவரின் கொள்கைகளாக இல்லை. நாட்டில் ஜனநாயக கட்டுமானங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. அரச கட்டுமானம் ஊழலால் நிரம்பி வழிகிறது. நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தாமல் எதுவும் சாத்தியமில்லை. ஆனால் இப் பொது வேட்பாளரின் வாயிலிருந்து இப் பிரச்சனைகள் பற்றிய எதுவும் வரவில்லை. ஏன்? இவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனால்தான அவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டார். தனிமனித ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். இவர் எவ்வாறு ஜனநாயகத்தை மதிக்க முடியும்? கட்சியின் கட்டுப்பாட்டை மதிக்கத் தெரியாத ஒருவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பார் என எவ்வாறு நம்ப முடியும்? இவர்கள் தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை வேடிக்கைப் பொருளாக, தமது சுயநலன்களைப் பெறும் நோக்கிலான பேரம் பேசும் அரசியலை மேற்கொள்கின்றனர். மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு தமது வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டும். கேள்வி: இத் தேர்தலில் பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டா? பதில்: மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே தென்படுகின்றன. உதாரணமாக நால்வர் பிரதான போட்டியாளராக இருக்கையில் நால்வரும் இவர்கள் கோரிக்கைக்கு சாதகமான பதிலளித்தால் தமிழர் தரப்பு யாரை ஆதரிப்பது? அவ்வாறான நிலையில் மேலும் பல சோதனைகளை நடத்த வேண்டும். அதாவது அக் கட்சிக்குள் நடைபெறும் இதர அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்வது அவசியமாகிறது. உதாரணமாக நாட்டின் ஜனநாயக அரசியல் கட்டுமானங்களை ஜனநாயக வழிக்கு மீட்டெடுப்பதாயின் ஊழல், சட்டம், ஒழுங்கு, கட்சியிலுள்ள மிக முக்கிய தலைவர்களின் கடந்தகால அரசியல், அக் கட்சியின் உட் கட்டுமானத்தின் செயற்பாடுகள் என பல அம்சங்களில்; கவனம் செலுத்த வேண்டும். நாம் பேரம் பேசச் செல்லும் வேளையில் அக் கட்சிகளும் எமது தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பும் நிலை ஏற்பட வேண்டும். பேரம் பேசச் செல்லும் தமிழர் தரப்பினர் அவர்கள் எதிர்பார்க்கும் வாக்குப் பலத்தினை வழங்கும் ஒரு தரப்பினராக அவர்கள் நம்ப வேண்டும். இவை யாவும் தேர்தலுக்கு முன்னரான தொடர்புகளிலிருந்தே ஆரம்பமாகும். ஏற்கெனவே நம்பிக்கையைக் கட்டி எழுப்பவதற்கான சில அத்திவாரங்கள் ஏற்கெனவே இருந்தால் மட்டுமே அது சாத்திமாகும். தற்போதுள்ள தேர்தல் சூழலில், சஜித், அநுர ஆகியோர் புதியவர்கள். ரணில், நாமல் ஆகியோர் ஏற்கெனவே ஒரு வரலாற்றுச் சுமையை வைத்திருப்பவர்கள். பிற்பட்ட இருவரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை ஏற்கெனவே இழந்த நிலையில் முற்பட்ட இருவர் தொடர்பாக மக்கள் ஆழமாக விவாதிக்க வேண்டும். கேள்வி: தமிழர் தரப்பு வெறுமனே தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்கள். நாம் எமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும். சர்வதேசமும், சிங்கள அரசியல் சக்திகளும் அப்போதுதான் பேச வருவார்கள் எனக் கூறும் அரசியலில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? பதில்: இந்த பேரம் பேசும் அரசியல் புளித்துப்போன ஒன்றாகும். தமிழர் தரப்பில் பல்வேறு குழுக்களாக இந்த அரசியல் சக்திகள் செயற்படுகின்றன. தூரத்தில் நின்று ஒற்றுமை பற்றிப் பேசுகின்றனரே தவிர ஒற்றுமைக்கான முயற்சிகள் எதுவும் இல்லை. அடிப்படையில் கொள்கை, கோட்பாடுகளில் எவ்வித வேறுபாடுகளும் இல்லாத நிலையில் தனி நபர் அடையாளங்களே முன்னிலையில் உள்ளன. சிவில் மற்றும் அரசியல் தரப்பு என இரு வேறு பிரிவினரின் கூட்டு என்பதே பொதுக் கட்டமைப்பு என விளக்கம் தரப்படுகிறது. ஆனால் சிவில் அமைப்;பு, அரசியல் அமைப்பு என வேறுபடுத்தும் அளவிற்;கு பாரிய வேறுபாடுகள் எதுவும் இல்லாவிடினும் சிவில் அமைப்பு என தம்மை அழைப்பவர்களில் பலர் பிரிவினை அரசியலை ஆதரிப்பவர்களாக அதிகம் உள்ளனர். தலைவர் என்பவர் கட்சி ஒன்றின் உரித்தாளராக இருத்தல் அவசியம் என்ற நிலையில் ஆளுக்கொரு கட்சி உண்டு. இவர்கள் மத்தியில் பேரம் பேசி ஒரு பொது உடன்பாட்டிற்கு செல்ல முடியாமல் உள்ள இவர்கள் அரசியல் எதிரிகளிடம் எந்த அடிப்படையில் பேரம் பேசுவது? தற்போது பணப் பட்டுவாடாவும் பிரதான பங்கை வகிக்கிறது. சிங்கள அரசியல்வாதிகளுக்கு யாரை விலைக்கு வாங்கலாம்? என்பதும், யாரைப் பயமுறுத்தலாம்? என்பதும் நன்கு தெரியும். பலரின் குற்றப் பத்திரிகைகள் இவர்களிடம் உண்டு. இந் நிலையில் பேரம் என்பது பணப் பட்டுவாடாவுடன் முடியும். கேள்வி: அவ்வாறாயின் தேசிய இனப் பிரச்சனையின் எதிர் காலம் எவ்வாறு அமையும்? பதில்: முதலில் தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமைதல் பொருத்தமானது என்பதிலிருந்தே நாம் ஆரம்பிக்கலாம். ஏனெனில் தமிழ் அரசியல் மிகவும் சிக்கலடைந்து சில சந்தர்ப்பவாத சக்திகளின் கரங்களில் தமிழ் அரசியல் சிக்கியிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்று வரும் உள் முரண்பாடுகள் அதனையே அடையாளப்படுத்துகின்றன. தமிழரசுக் கட்சி குறித்து பலருக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் இக் கட்சி தோல்வி அடையுமெனில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் தோல்வியை நோக்கிச் செல்லும் என்பதே எனது எண்ணமாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பாரக்கலாம். தமிழ் அரசியலில் அதாவது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவே ஒலிக்கிறது. இருப்பினும் கட்சியில் காணப்படும் சந்தர்ப்பவாத சக்திகளின் ஊடுருவல்கள், தலைமைத்துவ பண்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், மிதவாத, தீவிரவாத சக்திகளின் உள் மோதல்கள் அதனால் ஏற்பட்ட தொலைநோக்கற்ற அரசியல் மாற்றங்கள் அக் கட்சிக்குள் பாரிய நெருக்கடிகளை உருவாக்கின. இருப்பினும் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் மக்களின் நம்பிக்கைக்குரிய இன்னொரு கட்சியை இதுவரை எவராலும் தோற்றுவிக்க முடியவில்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக அக் கட்சியின் ஆதிக்கத்தைப் பறித்த போதிலும் போரின் பின்னரும் அதாவது போரின் அனுபவங்களின் பின்னரும் புதிய கட்சியை, புதிய பாதையை உருவாக்க முடியவில்லை. மீண்டும் தமிழரசுக் கட்சியே அத் தலைமையை மீட்டெடுத்தது. எனவே தமிழரசுக் கட்சியின் அனுபவம் என்பது தமிழ் மக்களின் ஓர் அரசியல் வரலாறாகவே இன்னமும் உள்ளது. மாற்று அரசியல் சிந்தனை, மாற்று அரசியல் வடிவம் என்பது தமிழரசுக் கட்சிக்கு வெளியில் பலமாகத் தோற்றம் பெறாத இச் சூழலில் மாற்றுத் தேர்வு என்ன? என்ற கேள்வி எழுகிறது. கட்சிக்கு வெளியில் மாற்றத்திற்கான நிலமைகள் தோற்றம் பெறாவிடினும் அக் கட்சிக்குள் எழுந்துள்ள உள் முரண்பாடுகள் புதிய அரசியல் வடிவத்தை நோக்கிய விவாதங்களாக மாற்றம் பெறுவதை அவதானிக்கலாம். எனவே புறவயத்தில் வாய்ப்புகள் இல்லாவிடினும், அக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகள் பாரிய அரசியல் மாற்றத்தை நோக்கியதாகவே உள்ளன. எனவேதான் தமிழரசுக் கட்சிக்கான மாற்று அரசியல் தலைமை என்பது அங்கிருந்தே தோற்றம் பெறும் வாய்ப்புகள் உள்ளதால் எமது கவனம் அங்கு குவிக்கப்படுதல் அவசியம் என்கிறேன். குறிப்பாக தமிழரசுக் கட்சியை அதாவது பலமான மாற்று அரசியல் கட்சி தமிழரசுக் கட்சிக்கு வெளியில் தோற்றம் பெறாத நிலையில் இக் கட்சியை அழிப்பது என்பது விடுதலைப் புலிகளின் ஆளுமை தமிழ் அரசியலில் இருந்த போது காணப்பட்ட பலம் அந்த அமைப்பின் அழிவுடன் பாரிய வெற்றிடமாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படினும் அதுதான் இன்னமும் நிலமையாக உள்ளது. அவர்களுக்குப் பதிலான மாற்றுத் தலைமை இல்லாத காரணத்தால் இன்று எதிர்ப்பு இயக்கம் என்பது இல்லாதொழிந்தது. மக்கள் இன்று வரை அதன் தாக்கத்தை உணர்கிறார்கள். எனவே தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்துதான் மாற்றங்கள் தோன்ற வேண்டும். சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் அந்த ஏக்களிப்பில் இன்றும் வாழ்கிறது. அவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்பதன் காரணமாகவே தமிழரசுக் கட்சியின் தோல்வி தமிழ் அரசியலின் தோல்வியாக மாறலாம் என்ற அச்ச உணர்வே அல்லாமல் அக் கட்சியைக் காப்பாற்றும் நோக்கமல்ல. கேள்வி: தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய முரண்பாடுகளின் எதிர் காலம் என்னவாக அமையலாம்? பதில்: தமிழரசுக் கட்சிக்குள் தற்போது அதன் எதிர்கால அரசியல் போக்கு குறித்த முரண்பாடுகளின் உருவமாகவே காண்கிறேன். வெளிப் பார்வையில் அவை சில தனி நபர்களின் முரண்பாடுகளாகக் காணப்படினும் அவை அடிப்படையில் அரசியல் அம்சங்களை வற்புறுத்துகிறது. கடந்த 30 வருட கால சிவில் யுத்தம் மிகவும் காத்திரமான, ஆழமான அரசியல் வடுக்களை தமிழ் அரசியலில் விதைத்திருக்கிறது. போர் தோற்றிருக்கலாம். உலகில் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி அடைந்ததை விட தோல்வி அடைந்தவை ஏராளம். எனவே இத் தோல்வி என்பது தற்காலிகமானது. ஆனால் இப் போராட்டம் விட்டுச் சென்ற அரசியல் குறித்தே எமது கவனம் செல்ல வேண்டும். உதாரணமாக, இலங்கையில் பெரும்பான்மை சிங்கள, பௌத்த பெரும் தேசியவாதம் இதர தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து நிராகரித்துச் செல்லுமாயின் அங்கு போருக்கான சூழல் எப்போதுமே நீறு பூத்த நெருப்பாக இருக்கும். அதே போராட்ட அனுபவங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் மாற்றுத் தேர்வுகளையும் வழங்கிச் செல்லும். தமிழ் அரசியல் பலமாக இல்லாத நிலையில் மக்களுக்கு மேலும் துன்பங்களை வழங்காத வகையில் அணுகுமுறைகளை வகுப்பது கட்டாயத் தேவையாக மாறுகிறது. இவ்வாறான ஒரு அனுபவ வெளிப்பாடே தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளாகும். பிரிவினைக் கோரிக்கையை ஆழமாக நம்பிய காரணத்தினால்தான் மிகவும் கணிசமான தொகை இளைஞர்கள் தம்மை ஆகுதியாக்கினார்கள். அதில் பங்களித்த பலர் இன்னமும் அது சாத்தியம் என நம்புகின்றனர். இவர்கள் எதிரிகளல்ல. போராட்டத்தின் கூறுகள். இவர்களை எவ்வாறு இணைத்துச் செல்வது என்பதே புதிய தலைமையின் ராஜதந்திரமாகும். உலகம் தீர்வுகளைத் தரும் என நம்புவதை விட எமது ராஜதந்திர செயற்பாடுகளே நம்பிக்கை தர வேண்டும். இப் பிரச்சனையில் பாலஸ்தீன அனுவபங்கள் வேறு பதிலைத் தருகின்றன. போரும் அதன் பின்னரான அனுபவங்களும் தமிழ் அரசியலில் இரு வேறு அரசியல் முகாம்களை உருவாக்கியுள்ளது. ஒட்டுமொத்த இலங்கைத் தேசியத்திற்குள் சகல தேசிய சிறுபான்மை இனங்களும் சமாதானத்தோடும், அமைதியோடும் வாழ்வதற்கான பாதை உண்டு என நம்பும் அரசியல் போக்கு தற்போது வளர்ந்துள்ளது. இதற்குப் பிரதான காரணம் சிங்கள சமூகத்திற்குள் இனவாதமற்ற அரசியல் விழிப்புணர்ச்சி காத்திரமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் அது ஒரு போதும் சாத்தியமில்லை என நம்புவோர் தொடர்ந்தும் பழைய அனுபவங்களை உதாரணம் காட்டி பிரிவினைக்கான நியாயங்களை வற்பறுத்துவோரும் உண்டு. இப் பிளவுகள் பலவீனமடைந்தால் மாத்திரமே தமிழ் அரசியல் தழைக்க வாய்ப்பு உண்டு. கேள்வி: இப் பதில் ஒரு நம்பிக்கை தருவதாக அமையவில்லையே? அவ்வாறெனில் அதற்கான வாய்ப்பே இல்லையா? பதில்: சமூகத்தில் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் மாற்றங்களைத் தரும் அடிப்படைகளைக் கொண்டிருக்காத நிலையில் எப் பதிலும் போலியாக அமைந்து விடும். போர் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழ் அரசியலில் உள்ளார்ந்த அடிப்படையில் ஓர் நல்லிணக்கம் ஏற்படவில்லை. இயக்கப் பிளவுகள் இன்னமும் கனதியாக உள்ளன. போரில் மரணித்தவர்கள் தமக்காக, சுயநலத்திற்காக செல்லவில்லை. அப்போதிருந்த அரசியல் சூழல்களின் அடிப்படையில் கிடைத்த வாய்ப்புகளினடிப்படையிலேயே தமது இயக்கத்தைத் தேர்வு செய்தார்கள். அனைவரும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காகவே தம்மைப் பலி கொடுத்தார்கள். இவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் புதல்வர்கள். எனவே இயக்க வேறுபாடுகளின்றி சகலருக்கும் ஒரே மரியாதை வழங்குவது சமூகத்தின் கடமை. ஆனால் பல்வேறு தேவைகளுக்காக சமூகம் இன்னமும் பிளவுகளைக் கொண்டாடுகிறது. இந்த நிலை மாறாத வரை அதாவது எமது சமூகத்திற்குள் உள்ளளார்ந்த அடிபபடையில் நல்லிணக்கம் ஏற்படாத வரை அரசியல் கட்சிகள் மத்தியில் அல்லது சமூகத்தின் மத்தியில் ஒற்றுமை, நல்லிணகக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தேர்தலில் வாக்குக்காக ஒற்றுமை எனக் குரல் கொடுப்பது வெறும் ஏமாற்று. தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிரிவினையா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்க அடிப்படையிலான தீர்வா? என்பது குறித்த தெளிவான விவாதம் தீர்மானகரமான விதத்தில் மேலெழாத வரை எந்த அரசியல் தீர்வும் சாத்தியமில்லை. இவற்றைத் தனிநபர் பிளவுகளாக சில ஊடகங்களும் விபரிக்கின்றன. இதனால்தான் ஒருவர் காலை மற்றவர் இழுத்து வீழ்த்துவது வரலாறாக தொடர்கிறது. அத்துடன் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் எம்மைப் பிரித்தாளுவதற்கான வாய்ப்பாகவே அது அமையும். கேள்வி: எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது உசிதமானது? பதில்: இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதே எனது கரிசனையாகும். ஏனெனில் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் தமிழ் மக்களினதோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்களையோ ஏற்படுத்தி விட முடியாது. அந்த அளவிற்கு நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே நாடு ஒரு புதிய வழியில் செல்வதற்கான கொள்கை, கோட்பாடுகள், அரசியல் தலைமை அவசியமாகின்றன. இவை பற்றி பின்னர் பார்க்கலாம். இந்த அடிப்படையில் பார்க்கும்போது முதலில் ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்படுவது அவசியம் என்பது எனது அபிப்பிராயம். அவற்றை சற்று ஆழமாகப் பார்க்கலாம். இலங்கையின் அரசியலில் மிக மோசமான தாக்கங்களைச் செலுத்திய அல்லது நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு எடுத்துச் சென்ற இரு கட்சிகளில் ஐ தே கட்சி மிக முக்கியமானது. நமது தேசத்தில் இனவாதத்திற்கான அடிப்படைகளாக கல்லோயா, மாவலி போன்ற அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை அமர்த்தி ஏனைய சிறுபான்மை இனங்களின் அடையாளங்களை அழிக்கக் காரணமாக இருந்தது அக் கட்சியாகும். தற்போதும் ரணில் தனது பிரச்சாரங்ககளில் டி எஸ்; செனநாயக்காவை நினைவூட்டுவது ஏன்? இக் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்றைய இரண்டாவது குடியரசு யாப்பு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கிருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்தது. நாட்டின் பொருளாதாரத்தை மேற்கு நாடுகளின் உற்பத்திகளின் சந்தையாக மாற்றி, நாட்டில் நிலவிய உள்நாட்டு பொருளாதாரத்தையும் சீரழித்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் தாராளவாத திறந்த பொருளாதாரமே இன்று எமது நாட்டை வங்குறோத்து நிலமைக்குத் தள்ளியது. நாட்டின் பிரதமராக 6 தடவைகள் பதவி வகித்த ரணில் இப் பாதக செயல்களுக்கு பொறுப்பில்லை என யாரும் கருத முடியுமா? தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பினை சந்திரிகா முன் மொழிந்த வேளையில் அதனை எரித்து நிராகரித்தது ரணிலாகும். நாட்டில் இனவாதத்தின் மூலம் தேசிய அரசியல் வாழ்வை சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை நோக்கித் திருப்பிய கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அடையாளம் இல்லாமல் போய்விட்டது. நாம் ரணிலைத் தோற்கடிப்போமாயின் அவருடன் ஐ தே கட்சியும் அடையாளம் அற்றுப் போய் விடும். எனவே தமிழ் மக்கள் எமது சமூதாயத்தின் எதிர்காலம் கருதி இனவாதக் கட்சிகளைத் தோற்கடிப்பது தற்போது அவசியமானதே. எனவே இத் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குகளைச் செலுத்த வேண்டும். கேள்வி: ரணில் சிறைக் கைதிகளை விடுவித்தார் எனவும், பறித்த காணிகளை விடுவித்தார் எனவும், 13வது திருத்தத்தை அமுல்படுத்த முனைந்தார் எனவும், தற்போது வடக்கிலும், கிழக்கிலும் பொருளாதார வலையங்களைத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளாரே! மக்கள் அவரை வேறு விதமாகப் பார்க்கிறார்களே? பதில்: தமிழ் மக்களின் அரசியல் அனுபவங்களை அறியாதவர்கள், அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று தமது சொந்த நலன்களை வளர்க்க எண்ணுபவர்கள் இவ்வாறான சில அற்ப சலுகைகளை பிரமாண்டமாக வர்ணிக்கலாம். ஆனால் அவர் மேற்கொள்ளும் இச் செயல்கள் தமிழ் மக்கள் உலக நாடுகளின் மேல் போட்ட அழுத்தங்களின் விளைவாக குறிப்பாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மிக அதிகமான அழுத்தங்களே ரணிலின் சில நடவடிக்கைகளுக்குக் காரணமே தவிர இவை அவரது அரசியல் சிந்தனையின் விளைவானது அல்ல. தமிழ் மக்கள் தமது சந்ததியின் எதிர்காலத்திற்கு தேவையான தீர்வுகளை மையமாக வைத்தே இத் தேர்தலை அணுக வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் பலர் ஒரு புறத்தில் தமிழ் பொது வேட்பாளர் தேவை என ஒப்பமிட்ட பின்னர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஏன் நடத்தினார்கள்? அவர்கள் வாங்கிய பணப் பெட்டிகளுக்கு வகை சொல்ல அல்லது மதுபான சாலை உத்தரவுப் பத்திரங்களுககுப் பதில் சொல்லவே அங்கு சென்றார்கள். உதாரணமாக, ரணில் பாராளுமன்;றத்தால் ஜனாதிபதியாக 134 வாக்குகளால் தெரிவு செய்;யப்பட்;;டார். இவர்களில் தமிழர் தேசியக் கூட்;டடமைப்பின் சில உறுப்பினர்;களும் அடங்குவர். சம்பந்தன் அவர்கள் டல்லஸ் அழகப்பெருமா அவர்களைத் தமது கட்சி ஆதரிக்கும் எனத் தெரிவித்;திருந்தார். ஆனால் பின்னனர் பணம் கைமாறியதாக டல்லஸ் கூறுகிறார். இவர்களில் தமிழ் உறுப்பினர்களும் அடங்குவர். இவ்வாறான சந்தரப்பவாத அரசியல்வாதிகள் எவ்வாறு எமது சந்ததியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள்? மக்கள் ரணிலின் அரசியற் கட்சியையும், அதன் அரசியலையும் ஆழமாக அவதானித்தே தமது வாக்கைச் செலுத்த வேண்டும். இத் தீர்மானகரமான வேளையில் அற்ப சலுகைகளைக் காரணம் காட்டி வாக்களித்தால் தமது தலையில் தாமே மண் அள்ளி வீசுவதற்குச் சமானமானது. தொடரும் ……. https://arangamnews.com/?p=11161
  2. வேதாளத்தை மறுபடி, மறுபடி இறக்கித் தோளில் சுமப்பது போன்ற விக்கிரமாதித்தன் கதைபோல்… யாழ்களத்தில் வரும் நாய்வால்களை மறுபடி, மறுபடி நிமிர்த்த முயல்வதும் ஒரு சுவாரசியமான கதைதான்.🤪
  3. உண்மையும்..!!! புரளியும்...!!! CTC அமைப்பினால் நடாத்தப்பட்ட TAMIL FEST நிகழ்ச்சியின் எதிரொலியாக, Tamil ONE தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தின் வாகனம் எரியூட்டப்பட்டதான செய்தி வன்மையான கண்டனத்துக்குரியது என்பதை ஒரு ஊடகவியலாளனாகவும், பொதுமகனாகவும் பதிவு செய்கிறேன். எனினும், TAMIL ONE நிறுவனத்தின் அலுலக வளாகத்தில் வைத்து வாகனம் எரியூட்டப்பட்டமைக்கும், TAMIL FEST நிகழ்வுக்கும், முடிச்சுப்போடும் ஆதாரங்கள் உள்ளனவா ? அல்லது ஊகங்களின் அடிப்படையில் வதந்திகள் பரப்பப்படுகின்றனவா? என்ற மூலங்கள் ஆராயப்படவேண்டும். அத்துடன், TAMIL ONE நிறுவனம் அல்லது காவற்துறைத் தரப்புக்கள் தமது சந்தேகங்கள் விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன். மேலும், TAMIL FEST நிகழ்வை ஒட்டியதாக இடம்பெற்ற, முட்டைகள் வீசப்பட்டமை, பதாகைகளை எரித்தமை, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், மதிப்பிற்குரிய பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களை அவமரியாதை செய்தமை போன்ற சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல; கவலைக்குரியதுமாகும். எனினும், சமூக அக்கறையோடும், ஆதங்கங்களின் எதிரொலியாகவும், மக்கள் தமது ஜனநாயக உரிமைகளின் பிரகாரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையோ? புறக்கணிப்பில் ஈடுபட்டதையோ ? கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் எனக்கு இல்லை. பேச்சுரிமை, கருத்துரிமை, உணர்வு வெளிப்பாட்டுரிமை கொண்ட நாடு, கனடா. ஒரு பொது அமைப்பிடம் கேள்வி கேட்கும் அனைத்து உரிமையும் மக்களுக்கு உண்டு. அந்த உரிமைகளை மதிக்கவேண்டிய கடப்பாடும் அந்த அமைப்புக்கு உண்டு. ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளையோ, புறக்கணிப்புச் செய்யும் உரிமைகளையோ கனடாவின் சட்டங்கள் மறுக்கவில்லை. அவ்வாறு மறுப்பதும், அவற்றுக்குத் தடை ஏற்படுத்துவது உரிமை மீறலாகும். காவற்துறையின் கண்காணிப்பு மற்றும் பிரசன்னத்துடன் மக்களின் உணர்வு வெளிப்பாடுகள் எதிரொலித்ததை நேரிலும், காணொளிகள் ஊடாகவும் பலரும் கண்ணுற்றனர். ஆயினும், மக்களின் உணர்வு வெளிப்பாடுகளின் அபாயங்கள் குறித்து ஒரு ஊடகவியலாளனாக அதனைத் தவிர்ப்பதற்கான அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தேன். சமூக அமைப்புக்களாலும், குழுக்களாலும் விடுக்கப்பட்ட தெருவிழா புறக்கணிப்பு, மற்றும் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆகிய அறிவிப்புக்களை அவதானித்த பின்னர், அத்தெரிவுகளில் அபாயங்கள் அற்ற, அதேவேளை அசம்பாவிதங்களைத் தவிர்க்கக்கூடிய தெரிவு, புறக்கணிப்பு என்பதை கனேடியத் தமிழர் கூட்டு பரிந்துரை செய்திருந்தது. அத்தெரிவு, அபாயங்கள் அற்ற அதேவேளை, கனதியான செய்தியைப் பிரதிபலிக்கும் ஒரு தெரிவாக நானும் கருதினேன். ஆகவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புறக்கணிப்பு என்ற சமுகத்தின் தெரிவை ஜனநாயகத் தெரிவாகப் பரிந்துரைத்திருந்தேன். எனினும், கருத்துக்களை, செய்திகளை மக்களிடம் நாம் தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் தான் முடிவெடுக்கும் சக்தி. அந்த மகா சக்தியை முடக்கும் வல்லமை உலகில் எந்த அரசுகளிடமும் இல்லை. அதனால் தான், ஜனநாயகக் கோட்பாடு (Democratic Theory) மக்களின் உரிமைகளை மதிக்கும் உயரிய கோட்பாக உலகில் போற்றப்படுகிறது. எனினும், கனடாவில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதாக தன்னை அடையாளப்படுத்தும் CTC, அந்த மக்களின் கருத்துக்களை, உணர்வுகளை மதிக்காமல் பல்லாண்டுகளாகப் புறக்கணிப்புச் செய்துவந்ததன் கூட்டு எதிரொலியின் பிரதிபலிப்பே இது. இது இன்றோ ? நேற்றோ ? திடீரென்று ஏற்பட்ட உணர்வு வெளிப்பாடு அல்ல. நீண்டகாலமாக புகைந்துகொண்டிருந்த மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. எனினும், தம் மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்களை புறம்தள்ளி TAMIL FEST ஐ நடாத்த CTC எடுத்த மூடத்தனமான முயற்சி, மக்கள் தம்பக்கம் என்ற அவர்களின் விம்பத்தை முதன்முறையாக உடைத்துவிட்டது. பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றகும் மக்கள் தொகையே, தமக்கான ஆதரவுத் தளம் என்று காண்பிக்க CTC கையாண்ட மூலோபாயம், முட்டுச் சந்தியில் முடங்கிப்போனது. கடந்த பல வருடங்களாக, கருத்தியற் தளத்தில் மக்களையும், ஊடகங்களையும் சந்திக்க CTC மறுத்து வந்ததன் விளைவே இது. தமிழினப்படுகொலையை பகிரங்கவெளியில் ஒப்புக்கொள்வதற்கே 15 ஆண்டுகள் CTC குத் தேவைப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வாண்டு இடப்பெற்ற தமிழினப்படுகொலை நினைவு வணக்க நிகழ்வைக் கூட ஒரு பொது நிகழ்வாக நடத்தாமல், மூடிய அறைகளுக்குள் தமது குறிப்பிட்ட ஆதரவாளர்களுடன் மட்டும் நடத்தும் அளவுக்கு, CTC க்கும் மக்களுக்குமான இடைவெளி பேணப்பட்டது என்பது எவ்வளவு பெரிய இழுக்கு. ஒரு ஊடகவியலாளனாக, CTC யின் நிர்வாகப் பிறழ்வுகள், இமாலயப்பிரகடன விவகாரங்கள், இலங்கை அரசுக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், CTC யால் நடாத்தப்படும் TAMIL FEST சார்ந்தும் உள்ள சர்ச்சைகள், குறித்தும் என்னால் இயன்றளவு சமூகத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கான பங்களிப்பை நான் ஆற்றியுள்ளேன். எனது, கடந்த 8 மாதகால Facebook பதிவுகளை பின்னோக்கிப் பார்ப்பதன் ஊடாக இவற்றின் பின்னணி குறித்த அனைத்துத் தரவுகளையும் நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம். மேலும், சக ஊடகவியலாளரான Lankathas Pathmanathan அவர்களின் பதிவுகள் மற்றும் அவரது 'தேசியம்' இணையப் பதிவுகள் ஊடாகவும், அனைத்துத் தரவுகள், தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். கனேடியத் தமிழ் வாசகர்களுக்காக பிரத்தியேகமாக கனடாவின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் தகவல்கள் பலவற்றையும் அவரது இணைய, மற்றும் சமூகவலைத் தளங்கள் வழங்கி வருகின்றன. மேலும், சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக, கடந்த வாரம் August 20 ஆம் திகதி பிரத்தியேக நேரலை ஊடாக, பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ‘கருத்தாடல்’ நிகழ்ச்சி ஒன்றை நான் நெறிப்படுத்தியிருந்தேன். 2 மணிநேரம் 45 நிமிடம் இடம்பெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது தரப்புக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களுக்கு CTC தரப்பில் இருந்து சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், இவ்வாறான அசம்பாவிதங்கள் அனைத்தையும், தவிர்ப்பதற்கான அத்தனை சந்தர்ப்பங்களும், கனேடியத் தமிழர் பேரவையிடம் இருந்தது. எனினும், சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து, சமரசம் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. சமூக உணர்வுகள் கொந்தளிப்பாக இருப்பதை உணர்ந்தும், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க CTC கடைசிவரை தயாராக இருக்கவில்லை. ஒரு குருட்டு நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்நிலையில், TAMIL FEST க்கு அனுசரணை வழங்கும் வணிக நிறுவனங்கள், நிகழ்ச்சிகளை வழங்கும் கலைஞர்கள் எனப் பலரும் நிகழ்ச்சி இடம்பெறும் நாளுக்கு முன்பாகவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். கனடாவில் தமிழ் சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரைத் தவிர, வேறு எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை எனது முன்னைய பதிவிலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். அத்துடன், கனேடியப் பிரதமர், எதிக்கட்சித் தலைவர், மற்றும் மூன்றாம் நிலை எதிர்கட்சித் தலைவர் உட்பட வழமையாக திருவிழாவில் பிரசன்னமாகும் கனேடிய அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்பதையும் எனது முன்னைய பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன். இவை அனைத்தும் நான் வானத்தை அண்ணாந்து பார்த்து அறிந்துகொண்டவை அல்ல. CTC எதிர்கொண்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளை அவதானித்த அனைவருக்கும் தெரிந்த விடயம். எனவே, இந்த இக்கட்டான சூழலை, தமது ஆக்கபூர்வமான நகர்வுகள் ஊடாக எதிர்கொள்ளக்கூடிய பந்து CTC தரப்பிடமே இருந்தது. எனவே, போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை மொக்குத்தனமாக அனுமதித்து, அவற்றின் ஊடாக அனுதாபத்தைப் பெற்று, தமது தவறுகளை மூடிமறைக்க CTC தரப்பு முயன்றுள்ளது என்ற சமூகத்தின் சந்தேகம் இங்கே வலுப்பெறுகிறது. இந்நிலையில், தெருவிழாவின் முதல்நாளில், தமது தவறுகளுக்கு மன்னிப்புகோருவதாக CTC யின் தற்போதைய தலைவர் குமார் (இ)ரட்ணம் அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டபோதிலும், அவை மக்களின் நன்மதிப்பை அறுவடை செய்யவில்லை. நமது சமூகம், CTC யின் அறிக்கைகளில் நம்பிக்கை இழந்து பலகாலம் ஆகிவிட்டது. நம்பிக்கையைக் கட்டியெழுப்ப செயல்களே அவசியம். அந்த மன்னிப்புக்களுக்குப் பின்னரும் கூட, மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தீர்வுகாண CTC தரப்பு தயாரில்லை என்பதை அதன் நிர்வாகசபை இயக்குனர், சமூக வெளியில் இன்று வெளியிட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன. எதேச்சாதிகாரத் தன்மை கொண்டவராக, பிரச்சனைகளின் நாயகனாக மக்களாலும், அமைப்புக்களாலும் விமர்சிக்கப்படும், “…CTC யின் நிறைவேற்று இயக்குனர் டான்ரன் துரைராஜா பதவியில் இருந்து விலகமாட்டார். அவ்வாறு அவர் விலக்கப்படும் நிலைவந்தால் CTCயை மூடிவிடுவோம்….” என்று இயக்குனர்களில் ஒருவரான டில்ஷான் நவரட்ணராஜா இன்று சமூகவலைத்தள பதிவு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இலாப நோக்கற்ற மக்கள் அமைப்பு ஒன்றை ஒரு எதேச்சாதிகார நிறுவனம்போல் நடத்தும் உரிமையை யார் கொடுத்தது. அந்நிறுவனத்தை ஒரு தனிநபருக்காக நடத்துவோம் அல்லது மூடிவிடுவோம் என்று எச்சரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது..? மக்களே சிந்தியுங்கள். பொதுவெளியில் பேசும்போது, தரவுகளும் தகவல்களும் சரியா என்று பகுத்தறிந்து பேசுங்கள். நிறைவாக ஒன்று, போராட்டக் காரர்களைத் தூண்டிவிட்டதாக என் மீது சில தரப்புக்களால் முன்வைக்கப்படும் விசமத்தனமான பிரச்சாரங்களை முற்றாக நிராகரிப்பதோடு, அவ்வாறு வீண் பழி சுமத்தும் தரப்புக்களின் அணுகுமுறைகள் ஜனநாயக வரைமுறைகளின் பிரகாரம் அணுகப்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன். நன்றியுடன், உதயன் S. பிள்ளை @highlight @followers
  4. யேர்மனி, சோலிங்கனில் கடந்த வாரம் ஒருவர் கண்மூடித்தனமாக பொது மக்கள் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியைத் தந்திருந்தாலும் நேற்று நடந்த சம்பவம் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. அகதிகளாக புகலிடம் கோரி வருபவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டிருந்தாலும், அவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் உயிராபத்து இருக்கும் பட்சத்தில் அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று யேர்மனியில் நடைமுறை ஒன்று இருக்கிறது. இதன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்ட பல புகலிடக் கோரிக்கையாளர்கள் யேர்மனியில் தொடர்ந்து தங்கியிருக்க வாய்ப்பு இருந்து கொண்டிருந்தது. இந்த நடைமுறையில்தான் தற்சமயம் ஒரு மாறுதல் வந்திருக்கிறது. கடந்த வாரம் சோலிங்கன் நகரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவரது புகலிடக் கோரிக்கை கடந்த வருடமே நிராகரிக்கப் பட்டு அவரது நாட்டுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் நடைமுறையில் இருந்த சில அனுகூலமான விடயங்களால் அவரை அவரது நாட்டுக்கு யேர்மனிய அரசு திருப்பி அனுப்பவில்லை. நாடு கடத்தப்பட வேண்டிய அவரால், கடந்த வாரம் நடாத்தப்பட்ட அனர்த்தமானது யேர்மனிய அரசு மீது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “வெளி நாட்டவரைத் திருப்பி அனுப்பு” என்ற குரல்கள் இப்பொழுது இங்கு பலமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான AFD (Alternative for Germany) கட்சியின் வாக்கு வீதம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் Sachsen, Thueringen ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல்களில் AFDயின் வெற்றி ஏற்கெனவே உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படியான ஒரு நிலையில்தான், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 28 பேர் நேற்று, யேர்மனி, லைப்ஸிக் விமான நிலையத்தில் இருந்து கட்டார் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள். இந்த 28 பேரும் பல விதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பதுடன் யேர்மனிய மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என உள்நாட்டு அமைச்சு அறிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் பொறுப்பேற்றதன் பின்னர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பும் யேர்மனியின் முதல் நிகழ்வு இதுவாகும். திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளருக்கு அவர்களது நாட்டில் உயிராபத்து இருந்தாலும், அவர்களால் யேர்மனிய மக்களுக்கு உயிராபத்து இருக்கிறது என்ற நிலையிலேயே அவர்கள் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் யூரோக்கள் கொடுக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. யேர்மனிய அரசின் இந்த நடவடிக்கை தொடருமாயின், புகலிடக் கோரிக்கையாளரின் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும், இந்த நடைமுறையை வரவேற்பதாகவும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றுக் கிடைத்த செய்தி ஆறுதலைத் தந்திருந்தாலும் இன்று விடிந்த போது, “Ravensburg நகரில் 31 வயதான சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் தாக்கியதில் 25 வயதான சோமாலியா நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்” என ஒரு செய்தியும், “Siegen நகரில் நடக்கும் விழாவுக்குப் பயணித்த பேரூந்தில், 32 வயதான யேர்மன் குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஆறு பேர் காயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்” என்ற செய்தியும் வந்திருக்கிறது.
  5. ஈழப்பிரியன் அரிநேந்திரன் ஒன றில் ஜனாதிபதியாக வர வேண்டும். இல்லை வட கிழக்கில், நாம் சமஸ்டி கேட்கும் பிரதேசத்தில் 50 வீதத்துக்கு மேல் எடுத்து சர்வதேசத்துக்கு அதை காட்டி உலகநாடுகள் அதை அங்கீகரிக்க வேண டும். இரண்டுல் எது நடந்தாலும் அவருக்கு வெற்றி. இரண்டிலும் அவர் தோற்றால் அவரை நிறுத்திய எல்லோருக்கும் சங்குதான். இறுதியில் அது தான் நடக்கப்போகிறது.
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பூமியைச் சுற்றியுள்ள மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விஞ்ஞானிகள் மூன்றாவது புலத்தை "குழப்பங்களின் முகவர்" என்று விவரிக்கின்றனர். இது பூமியைச் சுற்றியுள்ள "இருமுனை புலம்" (ambipolar field). நாசாவின் எண்டூரன்ஸ் ஆய்வுத் திட்டத்தின் மூலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க இந்த தொலைதூர புலம் இன்றியமையாத அங்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது அதனை முதல் முறையாக அளவிட்டுள்ளனர். இதுவரை, நமது கிரகம் இரண்டு தனித்துவமான ஆற்றல் புலங்களை உருவாக்குவதாக அறியப்பட்டு வந்தது. முதலாவது புவி ஈர்ப்பு புலம் (gravitational field). இது நமது வளிமண்டலத்தை பூமியுடன் கெட்டியாக பிடித்து வைத்துள்ளது. போதுமான புவியீர்ப்பு விசை இல்லை என்றால், வளிமண்டலம் பூமியை விட்டு வெளியேறிவிடும். இரண்டாவது புலம் காந்தப் புலம் (magnetic field). இது நமது கிரகத்தை சூரியக் காற்றிலிருந்து பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. தற்போது, ஆராய்ச்சியின் பலனாக, மூன்றாவது புலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை `ஆம்பிபோலார்’ என்கின்றனர். ஆம்பிபோலார் புலம், புவியீர்ப்பு விசைக்கு எதிர் செயல்பாட்டைக் கொண்டிருப்பதால், துகள்களை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது. இது புவி ஈர்ப்பு மற்றும் காந்தப் புலங்களைப் போலவே இன்றியமையாதது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பழைய அனுமானம் ஒரு ஆம்பிபோலார் மின்சார புலத்தின் இருப்பு பற்றிய கற்பனை முதன் முதலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இந்த புலம் நமது கிரகத்தின் வளிமண்டலத்தை பூமியின் வடக்கு மற்றும் தென் துருவங்களுக்கு மேலே உள்ள விண்வெளிக்குள் நுழையச் செய்யும் என்று நம்பப்பட்டது. "ஒவ்வொரு முறையும் ஒரு விண்கலம் பூமியின் துருவங்களுக்கு மேல் பறக்கும் போது, துருவ காற்று (polar wind) எனப்படும் இந்த சூப்பர்சோனிக் காற்று, விண்வெளியில் பாய்வதை நீங்கள் உணர்வீர்கள்" என்று நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் என்ட்யூரன்ஸ் ராக்கெட் பயணத்தின் முதன்மை ஆய்வாளர் க்ளின் கொலின்சன் கூறினார். “இந்த சூப்பர்சோனிக் காற்று விண்வெளியை நோக்கி பாய்வதற்கு காரணமான ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அங்கே இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால் எங்களிடம் தொழில்நுட்பம் இல்லாததால் இதற்கு முன்னர் அதை அளவிட முடியவில்லை”என்று நேச்சர் இதழில் இந்த கண்டுபிடிப்பு குறித்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் கொலின்சன் கூறுகிறார். பட மூலாதாரம்,POT படக்குறிப்பு, ஸ்வால்பார்டில் இருந்து என்ட்யூரன்ஸ் ராக்கெட் ஏவப்பட்டது இந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி எதைப் பற்றியது என்பதை பகுப்பாய்வு செய்ய, ஆராய்ச்சியாளர்கள் குழு என்டூரன்ஸ் ஆய்வுத்திட்டத்தை உருவாக்கியது. மே 2022 இல் அவர்கள் அதை நார்வேயின் வடக்கே உள்ள சிறிய தீவான ஸ்வால்பார்டில் (Svalbard) இருந்து ராக்கெட்டை செலுத்தினார்கள். "துருவக் காற்றின் வழியாகப் பறந்து நமக்குத் தேவையான அளவீடுகளைச் செய்யக்கூடிய உலகின் ஒரே ராக்கெட் தளம் ஸ்வால்பார்ட்" என்று பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் விண்வெளி இயற்பியலாளரும் ஆய்வின் இணை ஆசிரியருமான சுசி இம்பர் கூறினார். எண்டூரன்ஸ் 768 கிலோமீட்டர் உயரத்தை அடைந்து 19 நிமிடங்களுக்குப் பிறகு கிரீன்லாந்து கடலில் விழுந்தது. பதினைந்து நிமிட சப்ஆர்பிட்டல் பயணத்தின் போது, என்டூரன்ஸ் வெறும் 0.55 வோல்ட் என்ற அளவில் மின்சாரத் திறனில் ஏற்பட்ட மாற்றத்தை பதிவு செய்தது. “அரை வோல்ட் என்பது மிக சிறிய அளவு. அதாவது கைக்கடிகாரங்களின் சிறிய பேட்டரிகளில் இருக்கும் அதே சக்தியின் அளவு தான்" என்று கொலின்சன் விளக்குகிறார். "ஆனால் துருவ காற்று வெளியேறுவதை விளக்குவதற்கு இதுவே போதுமான அளவு" என்று அவர் மேலும் விவரித்தார். ஈர்ப்பு விசைக்கு எதிரான செயல்பாடு பட மூலாதாரம்,POT படக்குறிப்பு, ஆர்க்டிக்கிலிருந்து 768 கிலோமீட்டர் உயரத்தில் என்ட்யூரன்ஸ் ராக்கெட்டில் இருந்து வட துருவத்தின் காட்சி துருவக் காற்றில் மிகவும் பரவலாக காணப்படும் துகள்களான ஹைட்ரஜன் அயனிகள், புவியீர்ப்பு விசையை விட 10.6 மடங்கு வலிமையான வெளிப்புற விசையை இந்த ஆம்பிபோலார் புலத்திலிருந்து எதிர்கொள்கின்றன. புவியீர்ப்பு விசையை எதிராக செயல்பட அந்த ஹைட்ரஜன் துகள்கள் இது போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சூப்பர்சோனிக் வேகத்தில் அந்த துகள்களை விண்வெளியில் செலுத்த இது போதுமானது என்று கருதுகின்றனர். அடிப்படையில், ஆம்பிபோலார் புலம், மேல் வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனோஸ்பியரை வடிவமைக்கிறது. "இது ஒரு கன்வேயர் பெல்ட் போன்றது, இது இந்த வளிமண்டலத்தை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது" என்று கொலின்சன் விளக்குகிறார். இந்த புலம் "அம்பிபோலார்” (இருமுனைப் புலம்), ஏனெனில் அது இரு திசைகளிலும் செயல்படுகிறது. அயனிகள் எலக்ட்ரான்களை கீழ் நோக்கித் தள்ளி புவி ஈர்ப்பு விசைக்கு உட்படுத்துகின்றன. அதேநேரத்தில், விண்வெளியை நோக்கிச் செல்ல முயற்சிக்கும் எலக்ட்ரான்கள், அயனிகளை மேல் நோக்கி தள்ளுகின்றன. கூடுதலாக, இது நமது மேல் வளிமண்டலத்தில் உள்ள சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை அவற்றின் இயல்பை விட அதிக உயரத்திற்கு தள்ளுகிறது. இது நமது கிரகத்தின் உருவாக்கம் பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படாத விஷயங்களுக்கு துவக்க புள்ளியாக அமையலாம். என்டூரன்ஸின் இந்த கண்டுபிடிப்பு, பல கேள்விகளை எழுப்புகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, இந்த புலத்தின் சரியான செயல்பாடு என்ன? அது நமது கிரகத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது? போன்ற கேள்விகள் எழுகின்றன. க்ளின் க்ளிலின்சனின் கூற்றுப்படி, ஆம்பிபோலார் புலம் வளிமண்டலத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் மற்றும் ஒருவேளை கடல் நீரோட்டங்களையும் பாதித்திருக்கலாம் என்கிறார். இன்னும் பல விடை தெரியாத கேள்விகள் இருந்தாலும், பூமியின் இந்த மூன்றாவது ஆற்றல் புலம் முதன்முறையாக அளவிடப்பட்டது என்பது ஆய்வுக்கு பல புதிய வழிகளைத் திறக்கிறது. "வளிமண்டலத்தைக் கொண்ட எந்தக் கிரகமும் இருமுனைப் புலத்தைக் கொண்டிருக்க வேண்டும்" என்று கொலின்சன் கூறுகிறார். "இப்போது நாம் இறுதியாக அதை அளந்துவிட்டோம், காலப்போக்கில் அது நமது கிரகத்தையும் பிற செயல்பாடுகளையும் எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை அறிய முற்படுவோம்" என்று அவர் விவரித்து முடித்தார். https://www.bbc.com/tamil/articles/crlr1dwln65o
  7. இலங்கை ஜனாதிபதி தேர்தல்- ‘பேரம் பேசும் அரசியலை விட மாற்று அணுகுமுறை இல்லையா?’ (பகுதி-2) August 30, 2024 (கேள்வி, பதில் வடிவில்) — வி. சிவலிங்கம் — கேள்வி: தமிழ் அரசியலில் தமிழ் தேசியம் குறித்து அதிகம் வற்புறுத்துகிறதே! இதன் அடிப்படை என்ன? பதில்: இத் தேசியம் என்ற சொற் பிரயோகம் மட்டுமே இவர்களது அரசியலில் உள்ளது. தேசியம் என்பதன் உட் பொருள் எப்போதோ நீங்கிவிட்டது. உதாரணமாக, தமிழ் அரசியலில் தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் மொழியை பேசு மொழியாகக் கொண்டிருக்கும் சகல மக்களையும் ஒரு கூட்டுக்குள் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இவ் வார்த்தைப் பிரயோகம் தற்போது வழக்கொழிந்த வார்த்தையாக மாறிவிட்டது. இதற்குப் பிரதான காரணம் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தீவிரவாத மற்றும் சாதி ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்களும், முஸ்லீம் எதிர்ப்பு நிலைகளின் விளைவுகளாலும் அக் கட்சி முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் ஆதரவையும் இழந்தது. அது மட்டுமல்ல, முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியம் பேசும் சக்திகளின் நலன்களோடு முரண்பட்டுச் சென்றமையால் அவர்களும் இக்குறும் தேசியவாத அரசியலோடு இணைந்து பயணிக்க முடியவில்லை. இன்று அடிக்கடி உச்சரிக்கப்படும் தமிழ் தேசியம் என்பது அரசு சாரா தமிழ் கட்சிகளைத் தம்மிலிருந்து வேறுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறதே தவிர வேறு நோக்கங்கள் அதற்கில்லை. இத் தேசியவாதம் பிரிவினை, சாதீய வாதம் மற்றும் சைவமத அடையாளங்களைப் பேணுதல் என்பவற்றை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது. அதன் காரணமாகவே தமிழ் சமூகத்திலுள்ள ஏனைய பிரிவுகளை இவர்களால் இணைத்துச் செல்ல முடியவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் உருவாக்கிய போதிலும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் இணைந்து பயணிக்க முடியவில்லை. அதே போல அஷ்ரப் அவர்களாலும் தொடர முடியவில்லை. எனவே இன்றைய தமிழ்த் தேசியவாதம் என்பது வெறும் அரசியல் கூச்சலே தவிர அர்த்தமுள்ளதாக இல்லை. கேள்வி: தமிழ் அரசியலின் ஆளுமைக்குள் தற்போது கிழக்கு மாகாணம். முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் இல்லாத நிலையில் தமிழ்தேசியம் என்பது வெறும் வரட்டு வாதமா? பதில்: நிச்சயமாக இது வெறும் வரட்டு வாதமே. உதாரணமாக சிங்கள அரசியலில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் பலம் பொருந்திய நிலையிலுள்ளது. அது அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்துகிறது. இந் நிலையில் தமிழ் தேசியவாதம் தனக்குள் உள்ள சகல சமூகப் பிரிவினரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நோக்கி தனது கோட்பாடுகளை வகுக்க வேண்டும். அவ்வாறான போக்கு இன்று இல்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் ஆதிக்கம் செலுத்துகையில் தமிழ்த் தேசியவாதம் தவிர்க்க முடியாமல் வளர்வதற்கு நிலமைகள் உள்ளன. ஆனால் இத் தேசியவாதம் தனக்குள் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்திச் செல்லுமாயின் அது தன்னைத் தானே அழிக்கும் நிலையை நோக்கிச் செல்கிறது. அதுவே இன்றைய தமிழ்க் குறும் தேசியவாதத்தின் போக்காக உள்ளது. கேள்வி: சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் நாட்டின் இதர தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்துச் செல்லும்போது ஒவ்வொரு தேசிய சிறுபான்மை இனங்களும் தத்தமது பாதுகாப்பை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாதது தானே? பதில்: ஒடுக்குமுறை அதிகரிக்கும் போது பாதுகாப்பைத் தேடுவது இயல்பு. ஆனால் அப் பாதுகாப்பு என்பது சகலருக்குமான பாதுகாப்பாக அமையாத பட்சத்தில் இனவாதம் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. இதுவே இன்றைய அரசியல். தமிழ் அரசியல் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்திற்கு எதிரான கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாதுகாப்பு அர்த்தமுள்ள ஒன்றாக அமையும். தமிழ்க் குறும் தேசியவாதத்தினை உச்சரிப்போர் இந்த ஒற்றுமையை ஏற்படுத்த எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில் இவர்கள் அதை வைத்து பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கிறார்களே தவிர தீர்வை நோக்கிய பயணம் அல்ல. தமிழ் அரசியல் தலைமை முதலில் தமிழ் மக்களினதும், இதர தமிழ் பேசும் மக்களினதும் இயல்பான வாழ்வும், வளமும் ஒருமித்த ஐக்கிய இலங்கைக்குள் உள்ளதா? இல்லையா? என்ற அறுதியான முடிவுக்கு செல்ல வேண்டும். மலையக, முஸ்லிம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களில் பெரும்பாலோர் இன்று ஏனைய ஏழு மாகாணங்களிலும் பரந்து விரிந்து வாழும் நிலையில் அவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டே புதிய வியூகம் அமைதல் வேண்டும். கேள்வி: இப் பதில்கள் யாவும் நீண்டகால தீர்வைப் பற்றிக் கூறுகின்றன. ஆனால் தமிழர்களினதும், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களினதும் இருப்பு. அடையாளம், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், வாழ்வுரிமைகள் என பல அடிப்படை அம்சங்கள் தினமும் இல்லாமல் போகிறது. இதனைத் தடுக்காமல் எவ்வாறு நீண்ட கால தீர்வுகளை நோக்கிச் செல்வது? பதில்: எமது பலத்தையும், பலவீனத்தையும் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையானால் இவற்றைத் தடுக்க முடியாது. இங்கு ராஜதந்திரம் அவசியமானது. உதாரணமாக தற்போது தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் சிலவற்றை விட்டுக் கொடுக்கவும், சிலவற்றைப் பெற்றுக் கொள்ளவும் எமது அரசியல் தயாராக இருத்தல் வேண்டும். நாம் இலங்கை அரசியலை தமிழ் அரசியலுக்கு வெளியில் நின்று அவதானித்தால் நிலமை தெளிவாகப் புரியும். சிங்கள அரசியலும் வெவ்வேறு நலன்களின் கூறுகளாக மாறியுள்ளன. நாடு மிகவும் வங்குறோத்து நிலைக்குச் சென்றுள்ள நிலையில் யாரும் பொறுப்பைச் சுமக்க முன்வர மாட்டார்கள். அவ்வாறு முன்வருபவர்கள் தேசபக்த சக்திகளாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இல்லையேல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சில தேசவிரோத சக்திகள் அரசைக் கைப்பற்ற முயற்சி செய்யும். தமிழ் அரசியல் தலைமைகள் முதலில் சரியான தேசபக்த சக்திகளை அடையாளம் காட்ட வேண்டும். அவர்களை ஆதரிக்க வேண்டும். இது விஷப்பரீட்சையாக அமையலாம். ஆனால் இதுதான் அரசியல் தலைமையின் கடமை. இக்கட்டான நேரத்தில் கட்சி மற்றும் சுயநலன்களுக்கு அப்பால் நாட்டின் பரந்த நலனுக்காக முடிவு செய்வதாகும். தமிழ் அரசியல் இன்று தமிழ் மக்களின் நலன்களுக்கு அப்பால் தேசத்தின் பரந்த நலன்களைக் கவனத்தில் கொண்டு யாரை ஆதரிப்பது? என்ற முடிவை நோக்கிச் செல்ல வேண்டும். கேள்வி: அவ்வாறு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அடையாளம் காட்டும் நிலமை தமிழ் அரசியலில் இன்று காணப்படுகிறதா? பதில்: ஆம். அது நிச்சயமாக காணப்படுகிறது. தேர்தல் மிக நெருங்கும் வேளையில் அவை மிகத் தெளிவாகப் புலப்படும். தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமையில் இருப்பவர்களில் சிலர் அதற்கான அனுபவ அறிவைக் கொண்டிருப்பது தற்போது வெளிவரும் வாதப் பிரதிவாதங்களிலிருந்து தெரிகிறது. இங்கு இரண்டு அம்சங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது மூவர் முன்னணியிலிருப்பதால் கட்சித் தலைவர்களுக்கும் மிக நெருக்கடியான காலமாகும். அவர்களின் முடிவு பிசகினால் நிலமை விபரீதமாக மாறலாம். தமிழ் அரசியல் தலைவர்கள் ஆரம்பத்திலேயே தமது தெரிவை வெளிப்படுத்தினால் சிங்கள பௌத் பேரினவாத சக்திகள் மறைமுக ஒப்பந்தம் இருப்பதாக நிலமைகளை வேறு நிலைக்கு மாற்றலாம் எனவே இறுதி வரை மௌனமாக இருப்பது ஒரு வகை ராஜதந்திரமே. ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழ் அரசியலில் காணப்படும் பிரிவினைவாத அரசியல் என்பது நாட்டின் பொதுவான அரசியல் போக்கோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் மட்டுமல்ல அம் மக்களின் பொருளாதாரத் தேவைகளும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். பிரதேச பொருளாதார வளர்ச்சி, மக்களின் கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து, சுற்றுச் சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பல இன்னோரன்ன பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டே இந்த முடிவுக்குச் செல்ல வேண்டும். கேள்வி: இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் 38 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். இதில் நால்வர் முன்னணியில் உள்ளனர். கடந்த காலங்களில் இருவர் போட்டியிட்டதால் அவர்களின் கடந்த கால அரசியல் வரலாற்றினை மதிப்பீடு செய்து வாக்களித்தார்கள். இம் முறை மூவர் என்பதால் மேலும் குழப்பநிலை காணப்படுகிறது. இச் சிக்கலான நிலையில் ஒரு தமிழ் வாக்காளன் எந்த அடிப்படையில் தனது விருப்பிற்குரிய அபேட்சகரைத் தேர்வு செய்வது? பதில்: இந்த நிலை தமிழ் வாக்காளர்களுக்கு மட்டுமல்ல சிங்கள வாக்காளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெளிப்படையாக தமது தெரிவுகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். தமிழ் வாக்காளனுக்கு அதைவிட பல சிக்கல்கள் உள்ளன. அரசியல் என்பது வரலாறு ஆகும். வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனினதும் இறைமை அதிகாரமாகும். இந்த வாய்ப்பு 5 வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கிறது. இவ் இறைமை அதிகாரத்தினை ஒருவர் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி பயன்படுத்த முடியாது. இம் முடிவு பல சந்ததிகளைப் பாதிக்கிறது. எனவே தமிழ் வாக்காளன் இன்று முன்னணியிலுள்ள வேட்பாளர்களின் வரலாற்றினை நன்கு ஆராய்தல் அவசியமானது. உதாரணமாக தற்போது நான்கு வேட்பாளர்களில் சஜீத் பிரேமதாஸ முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே முதலில் அவரது வரலாற்றினை ஆராயலாம். இவரின் அரசியல் ஆரம்பம் ஐ தே கட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. இவரது தந்தை ரணசிங்க பிரேமதாஸ ஐ தே கட்சியின் மிக ஆரம்ப உறுப்பினர் நிலமையிலிருந்து மேலே வந்தவர். பொருளாதார அடிப்படையில் மிகப் பின்தங்கிய பிரிவைச் சார்ந்தவர். அவரது தளராத பொதுச் சேவை கட்சியின் உயர் பதவிகளை வழங்கியது. சஜீத் பிரேமதாஸ தனது தந்தையின் காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. தந்தையின் மறைவின் பின்னர் கட்சிக்குள் உயர் மட்டங்களை அடைவதற்கு மிகவும் போராட்டங்களை நடத்தினார். ரணிலுக்கும், இவருக்குமிடையே உள்முரண்பாடுகள் ஏற்பட்டதாக பத்திரிகைகள் தெரிவித்தன. அவர் பதவிக்கு ஆசைப்படுகிறார் எனவும், காலம் அவருக்கு இன்னமும் இருக்கிறது என்ற செய்திகளும் அவ்வப்போது வெளிவந்தன. தற்போது வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது அவரும், அவரது சக நண்பர்களும் நாட்டில் நிலவிய திறந்த பொருளாதாரத்தின் மோசமான விளைவுகள் குறித்து அங்கு விவாதித்ததாகவும், இப் பொருளாதாரம் காரணமாக தேசிய செல்வம் சுரண்டப்படுவதாகவும், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக நாடு நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலமையில் தேசிய உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பனவற்றிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்ற விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. 2019ம் பிற்பகுதியில் ஆரம்பித்த கொரொனா நோயின் தாக்கம் உலக நாடுகளின் உற்பத்தி, விநியோகம் போன்றவற்றைப் பாதித்த வேளையில் இறக்குமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருந்த இலங்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. வளர்ச்சியடைந்த நாடுகள் தத்தமது பொருளாதாரங்களை மூடிய நிலைக்கு எடுத்துச் சென்றன. இந் நிலையில் அதாவது பொருளாதார அடிப்படைகளில் நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வேளையில் ரணில் பதவியை இழந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மக்கள் துன்பப்பட்ட வேளையில் நாட்டைக் காப்பாற்ற அவர் முன் வரவில்லை. ஜனாதிபதி அதிகார வாய்ப்புக் கிடைத்த வேளையில் நாட்டைக் காப்பாற்றுவதாக ஓடோடிச் சென்று பதவியைப் பெற்றார். நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம் குறிப்பாக நிறைவேற்று அதிகார முறை கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டும் என சஜீத் பிரேமதாஸ கட்சிக்குள் போராடினார். இனவாத அரசியலை கோதபய ராஜபக்ஸ 2019ம் ஆண்டு முன்னெடுத்த வேளையில் அதற்கு எதிராக சஜீத் போட்டியிட்டு தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். தற்போது 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். நாம் தற்போது மக்களின் இரண்டாவது தெரிவாக கருதப்படும் தேசிய மக்கள் சக்தி – ஜே வி பி ஆகியவற்றின் தலைவரான அநுர குமார திஸாநாயக்கா என்பவரின் அரசியலைப் பார்க்கும் போது இக் கட்சி பல மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது. அக் கட்சியின் ஐந்தாவது தலைமுறை தலைவராக அவர் காணப்படுகிறார். நாட்டின் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக மிக மோசமான கொள்கைகளைக் கடந்த காலங்களில் கொண்டிருந்த போதிலும் அக் கட்சி அடிப்படையில் பல மாற்றங்களோடு மக்களை அடைந்துள்ளது. உதாரணமாக 2017ம ஆண்டளவில் தேசிய மக்கள் சக்தி என்ற கல்வி அறிஞர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் அமைப்பு ஜே வி பி யுடன் கூட்டினை ஏற்படுத்தியது. இக் கூட்டின் பின்னர் அக் கட்சியின் அரசியல் அடிப்படைகள் மிக அதிகளவில் மாறின. நாட்டின் அரசியலை வர்க்க அடிப்படையில் வர்ணித்த அவர்கள் தற்போது வர்க்க அடிப்படையிலான பார்வையை நீக்கி ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள நவ தாரளவாத பொருளாதார செயற்பாட்டின் நல்ல அம்சங்களை ஏற்றுக் கொண்டு குறிப்பாக தேசிய பொருளாதார வளர்ச்சியில் அரசின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் கலப்பு பொருளாதாரத்தை குறிப்பாக பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினரின் பாதுகாப்பு, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்பு, தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகள், தொழிற் சங்கங்களின் உரிமைகள் எனப் பல அம்சங்களல் பாரிய மாற்றங்கள் உள்ளன. உலகளவிலும், தேசிய அளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தமது அரசியல் பார்வையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதால் சிங்கள மக்களின் இளைஞர் ஆதரவு அதிகளவில் அவர்களுக்கு காணப்படுகிறது. தமிழ் வாக்காளர் ஒருவர் தேசிய அளவில் நல்லிணக்கத்திற்கும், இனவாத சக்திகளுக்கு எதிராகவும் செயற்படும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு எனக் கருதினால் அவர்களின் அரசியலை ஆழமாக ஆராய்ந்து வாக்களிக்க முடியும். இங்கு ரணில், நமல் ஆகியோரின் அரசியல் என்பது பலரும் அறிந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ரணிலின் அரசு யாரின் ஆதரவோடு பயணிக்கிறது என்பதனையும், தேசிய செல்வத்தை சுரண்டியவர்கள் எனவும், இனப் படுகொலையை மேற்கொண்டார்கள் என ஐ நா மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டிய நிலையில் ரணில் யாரைப் பாதுகாத்து வருகிறார் என்பதனையும் காணலாம். ரணில் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதாக பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற போது கூறினார். ‘அறகலய’ போராட்டம் தொடர வேண்டும் என்றார் . ஆனால் ஜனாதிபதி பதவியை எட்டியதும் ராணுவ. பொலீஸ் உதவியுடன் பலரைச் சிறையிலடைத்தார். தேசிய அரசாங்கம் அமைப்பதாக் கூறிய அவர் பாராளுமன்றத்திலுள்ள 134 பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் உதவியுடன் ஜனாதிபதியானார். இவரால் எப்படி தேசிய அரசாங்கம் ஒன்றை இனவாதிகளின் பின்னணியில் உருவக்கியிருக்க முடியும்? இவை தனியாக விளக்கமாக பேச வேண்டிய விடயங்கள். சிலவற்றை அடையாளப்படுத்தியுள்ளேன். கேள்வி: இன்றைய இலங்கை அரசியலின் நிலமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் தற்போதைய அரசியல் யாப்பு பல வகைகளில் மாற்றத்திற்கான இடையூறாக அமையலாம் என்பது தெரிகிறது. அவ்வாறாயின் புதிய அரசியல் யாப்பிற்கான அவசியம் தற்போது உண்டா? பதில்: இக் கேள்வி மிக விரிவான பதிலை வேண்டி நிற்கிறது. இலங்கைக்குப் புதிய மூன்றாவது குடியரசு யாப்பு அவசியம் என்பதே எனது கருத்தாகும். உதாரணமாக பிரான்ஸ் நாடு தற்போது ஐந்தாவது குடியரசு என அழைக்கப்படுகிறது. வரலாற்றினைப் பார்க்கும் போது 1792-1804 காலப் பகுதி முதலாவது குடியரசுக் காலமாகவும், இரண்டாவது குடியரசுக் காலம் என்பது 1848-1852 எனவும், 1870- 1940 மூன்றாவது குடியரசுக் காலம் எனவும், 1946-1958 வரையான காலம் நான்காவது குடியரசுக் காலம் எனவும், ஐந்தாவது குடியரசுக் காலம் என்பது 1958- இற்றை வரையான காலப் பகுதியாகும். இங்கு இரண்டாவது குடியரசு 1852 இல் வீழ்ச்சியடைந்த பின்னர் அங்கு மீண்டும் மன்னராட்சி லூயிஸ் பிலிப்பி ( Louis Philippe) உருவானது. அதனால் ஓர் இடைவெளி உண்டு. அதே போலவே 1940 இல் முடிவடைந்த மூன்றாவது குடியரசு ஆட்சி பின்னர் 1946 இல் நான்காவது குடியரசாக மீண்டும் உருவானது. இந்த இடைவெளிக்குக் காரணம் இரண்டாவது உலகப் போராகும். பிரான்ஸ் நாட்டில் ஐந்து குடியரசு யாப்புகள் உருவானதற்குக் காரணம் அங்கு எழுந்த அரசியல் நெருக்கடிகளும், மாற்றங்களுமாகும். உதாரணமாக, பிரான்ஸ் நாட்டில் நான்காவது குடியரசு உருவானதற்கான பின்னணியை நோக்கினால் இரண்டாவது உலகப் போரின் பின்னர் 3வது குடியரசு அரசியல் ஸ்திரமற்ற பிரச்சனையில் சிக்கியது. அடிக்கடி அரசுகள் மாறின. அந் நாட்டின் ஆட்சிக்குள்ளிருந்த குடியேற்ற நாடுகளில் பெரும் உள்நாட்டு எழுச்சிகள் தொடங்கின. உதாரணமாக பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த வியட்நாம், அல்ஜீரியா போன்ற நாடுகளில் சுதந்திர விடுதலைப் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாகவே நான்காவது குடியரசு தோற்றம் பெற்றது. இவ்வாறே ஜேர்மனியிலும் மூன்று குடியரசு யாப்புகள் உருவாகின. இப் பின்னணியில் இலங்கை நிலமைகளை அவதானிக்கும் போது புதிய குடியரசு யாப்பு ஒன்று உருவாகுமானால் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் ஒரளவு தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. தற்போது நடைமுறையிலுள்ள இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில்( 1978 )முன்வைக்கப்பட்ட நோக்கங்கள் சிலவற்றை அவதானித்தால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை என்பது அரசின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் ஒருவராகவே இருந்தார். அவர் மிக அதிகளவு அதிகாரங்களைக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாதபடி யாப்பு மூலம் தடுக்கப்பட்டிருந்தது. இம் மாற்றத்திற்கான பிரதான காரணமாக நிலையான ஆட்சிக் கட்டுமானம், மாற்றங்களை தடையில்லாமல் மேற்கொள்ளும் அதிகாரம், புதிய பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் நோக்கங்கள் காரணமாக அமைந்தன. குறிப்பாக, பொருளாதாரம் அந்நிய மூலதன ஊடுருவலுக்குத் திறந்து விடப்பட்டதோடு பொருளாதார செயற்பாட்டில் அரசின் தலையீடு தடுக்கப்பட்டது. அரசியல் யாப்பு என்பது மிக உயர்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. அரசாங்கத்தின் சகல சட்டங்களும், செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்கு அமைவாகவே செயற்பட வழிவகுத்தது. நீதித்துறை என்பது மிகவும் சுயாதீனமானது என வரையறுக்கப்பட்ட அரசின் செயற்பாடுகள் உச்ச நீதிமன்றத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும் என வரையறுக்கப்பட்டது. தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவம் என்ற புதிய முறைக்குள் கொண்டு வரப்பட்டது. சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் இம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இப் புதிய முறை பல சிறிய கட்சிகள் பாராளுமன்றத்தின் தீர்மானங்களை மாற்றி அமைக்கும் வலுவைப் பெறும் அளவிற்கு மாறின. இதனால் கூட்டு அரசாங்கமே சாத்தியமாகும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் என்ன காரணங்களுக்காக புதிய அரசியல் யாப்பினை அறிமுகம் செய்தார்களோ அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அதிகாரக் குவிப்பு என்பது பலமான அரசுத் தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக சர்வாதிகாரி ஒருவரை அதாவது ஏற்கெனவே காணப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் காணாமல் போகும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டன. அதிகாரக் குவிப்புக் காரணமாக பின்னாளில் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் மேலும் மேலும் அதிகாரங்களைக் குவித்து நாட்டின் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாட்டினை முடக்கினார்கள். தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக இல்லாதொழிந்தது. அதிகாரக் குவிப்பும், சிங்கள பௌத்த ஆதிக்கமும் தேசிய சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளின. இதன் விளைவாகவே 1983 இல் இனக் கலவரமாகவும், 30 வருட கால சிவில் யுத்தமாகவும் நிலமைகள் மாறின. எனவே முதலாம் இரண்டாம் குடியரசு யாப்புகள் எதிர்பார்த்த மாற்றத்தைத் தராத நிலையில் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வெளிநாடுகளிடம் கடன் பெற முடியாத நிலைக்கு சென்றுள்ளதாலும் தற்போதைய இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டடு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 46 ஆண்டுகளில் இதுவரை 21 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு திருத்தம் என்ற அடிப்படையில் அடிக்கடி யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பார்க்கையில் எமது தேசம் ஓர் அளவில்லாத அல்லது பொருத்தமில்லாத சட்டையை அணிந்து அடிக்கடி தைத்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த 46 ஆண்டுகளின் அனுபவத்தின் அடிப்படையில் நாட்டின் சகல சமூகங்களும் மாறுதலைத் தேடுகின்றன. ஆகவே புதிய மூன்றாவது குடியரசு அரசியல் யாப்பு அவசியம் என்றே கருதுகிறேன். தொடரும்….. https://arangamnews.com/?p=11176
  8. வல்லினம் மெல்லினம் இடையினத்தை மிகமிகத் தவறாகச் சொல்லிக் கொடுக்கின்றனர். ண, ன, ந என சொல்லிக் கொடுக்ககூடாது. ண், ன், ந் என சொல்லிக் கொடுக்க வேண்டும். https://web.facebook.com/reel/470398872640559
  9. kandiah57 அவர்களே! நித்திரையில் கிடப்பவனை எழுப்பலாம், நித்திரைபோல் கிடப்பவனை எழுப்பவே முடியாது.🤔
  10. கந்தையர், உங்களுக்கு ஒன்றுதான் என்னால் கூற முடியும். தயவுசெய்து உங்களுக்குப் புரியாத விடயங்களில் தயவுசெய்து மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். 🙏
  11. அது ஒரு நிறுவனம் / அமைப்பு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட, மக்களின் வாக்குகளால் தெரிவானர்வர்கள் இல்லை, எனவே அந்த அமைப்பில் உள்ளவர்களால் மட்டுமே கேள்வி கேட்க முடியும். கனடா வாழ் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளாக இங்கு எவரும் இல்லை. உதாரணத்துக்கு கரி சங்கரியை, அவரிற்கு வாக்களித்த மக்கள் கேள்வி கேட்க முடியும். ஒரு அமைப்பில் உள்ளவர்களை விமர்சிக்கலாமே தவிர, கண்டிப்பாக அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடப்பாடு உடையவர்கள் அல்ல. CTC இற்கும் இது பொருந்தும் இது சீரணிக்க கடினமான, ஆனால் உண்மை.
  12. ஐயோ கந்தையர்,...🤦🏼‍♂️ உங்களுக்கு ஒரு விடயம் தெரியாவிட்டால் அதைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். நிகழ்வைக் குழப்பியவர்கள் CTC யினர் அல்ல. எங்கள் சொற்படி நடக்காவிட்டால் எக்லவற்றையும் குழப்புவோம் என்று பயமுறுத்தும் முட்டாள் வன்முறைக் கூட்டம்தான் நிகழ்வைக் குழப்பியது. பாடகர் சிறீநிவாஸ் நிகழ்வைக் குழப்பியவர்களிடம் "உங்களுக்காகத்தானே பாட வந்திருக்கிறேன்… என்று கூறியபோது ஒரு முட்டாள் ""நீ காசுக்காகத்தானே பாட வந்திருக்கிறாய். நீ எத்தனை இயக்கப்பாடல்களைப் பாடினாய்?"" என்று கூக்குரல் இட்டதாம். இந்த முட்டாள் பீசுகளை நம்பித்தான் போராட்டம் தொடர வேண்டுமா? 😏
  13. நல்லூரில் ஒரு வேஷம் தெற்கில் ஒரு வேஷம் .
  14. 👇 தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை உறுப்பினர்கள் – அரியநேத்திரனுக்கு ஆதரவு. 😂 சுமந்திரன், சாணக்கியன் மற்றும் சிலரின் மைண்ட் வாய்ஸ்: ஐயோ.. எரியுதடி மாலா. 😂 🤣
  15. சிறிதேவியும் இல்லை தானே அண்ணா. நான் உங்களை சீண்ட என்று தான் எங்களுக்கும் மூத்த தலைமுறை நடிகைகளை எழுதினேன்🤣 உங்கள் கணிப்பில் தவறு இருக்கிறது???😷
  16. வேண்டாம் வேண்டாவே. வேண்டாம் நான் கனவு காண விரும்பவில்லை இந்த கிழவிகளை. உயிர். அற்றவர்களை என்னை போன்ற துடிப்புமிக்க வாலிபர்கள் நினைத்துக்கூட பார்க்க போவதில்லை சீ. சிறிதேவியை சொன்னால் ஆவாது முயற்சிகள் செய்து பார்க்கலாம் 🤣
  17. ஆம் நீங்கள் தான் முதலாவது முட்டாள். யாழ் களத்தில் நீவீர் கொள்கை ரீதியில் முரண்பாடு அற்ற எத்தனை நண்பர்களை சேர்த்துள்ளீர்கள்??
  18. சிறுகீரைபருப்பு கடையல்
  19. பல தேர்தல்களில் அவருக்கு வாக்கு போட்டு ஆதரிக்க வேண்டிய நாங்களே செய்யவில்லை! அவங்கள் போடமாட்டாங்கள் தானே அண்ணை. இவருக்கும் பொதுவேட்பாளருக்கும் தான் போடவேணும்.
  20. அண்மையில் வேலையில் ஐரோப்பிய பின்புலம் உள்ள பெண்மணி ஒருவர் கேட்டார் இந்தியாவில் ஒரே பாலின திருமணம் எப்போதிருந்து அமுலில் உள்ளது என கேட்டார், எனக்கு தெரியாது அங்கு ஒரே பாலின திருமனத்திற்கு ஏன் தடை போடப்போகிறார்கள் என கேட்டேன் (விஸ்ணு கதை தெரிந்தமையால் புராண இதிகாசங்களிலேயே இருக்கின்றமையால் இந்த பிரச்சினை இருக்காது என நினைத்தேன்) கூகிளில் தேடி விட்டு கூறினார் இல்லை, அனுமதி இல்லை என கூறினார். ஒருவரது விருப்பு வெறுப்பு என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயம், அதே போல சுயநிர்ணய உரிமை என்பது அனைத்து சமூகங்களுக்கும் உண்டு, அதனை வைத்து சிறப்பாக செயற்பட்டால் நாடு வளர்ச்சிப்பாதையில் செல்லும், அவர்கள் பிரிந்து போய்விடுவார்களோ என பயப்பிடும் அளவிற்கு எம்மில் ஏதாவது தவறு இருந்தால்தான் அதற்கு கவலைப்படவேன்டும், இப்படியான ஆக்கிரமிப்பு சிந்தனையாளர்கள் தமது குடும்பத்தில் உள்ள உறவுகளிடமும் நம்ம்பிக்கையற்றே இருப்பார்கள், ஆனால் இவர் இந்த வகையினை சேர்ந்தவரா இல்லையா என்பதனை காலம்தான் பதில் சொல்லும்.
  21. ஒரு ஊடகவியலாளாரின்? பொறுப்பற்ற கருத்து. ஊடகங்களால் மக்களினை தம் விருப்பத்திற்கேற்ப திருப்ப முடியும் இதனைதான் த்ற்போதய ஊடகத்துறை உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் செய்கிறார்கள், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க தயாராக இருந்த வண்ணம் இதனை செய்யவேண்டும்
  22. இனி இவருக்கு இவரின்ட சொந்தங்களே வாக்கு போட மாட்டார்கள் ...தமிழருக்கு சுய உரிமையா? ஒற்றையாட்சி பற்றி பேசுங்கோ
  23. நம்பாதீங்க நம்பாதீங்க மாமூல் கொடுக்காததால் பிடித்தோம் தந்துவிட்டார்கள் விட்டுவிட்டோம்.
  24. மணலும் கடத்தல், மரக் குற்றியும் கடத்தல். ஓரு நாளில் 25 வாகனங்கள் அம்பிட்டு இருக்கின்றது என்றால்… இது கனகாலமாக காவல் துறையின் ஆதரவுடன் நடந்திருக்கின்ற தொழில். இப்போ ஏதோ கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிணக்கில்… பொலிஸ் கைது பண்ணி இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.
  25. வங்கியில் கடன் வாங்கி, உலக பணக்கார ஆகும் திறமை குஜராத்தி மாடலுக்கே சாத்தியம்.... அந்த கடனும் தள்ளுபடி ஆகும் அதுவும் குஜராத் மாடல் சாதனைகளில் வரும். ரிஷி சேகர் கடனளிக்க கமிஷன் வாங்கிய அதிகாரிகளை, அரசியல்வாதிகள் காப்பாற்றிவிடுவார்கள். மக்களை யார் காப்பது. வங்கி மேல் உள்ள நம்பிக்கை போய் வெகுகாலமாச்சி. Bharathi ஐயா ஏர்டெல் ன் இந்தியாவுக்கு தரவேண்டிய கடன் இரண்டு லட்சம் கோடி ரூபாய் இருக்கு... வோடபோன் ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கு. Sarvajit K Rajendiran அந்த வாரா கடனெல்லாம்..., வரியாக நம் மீதுதான் சுமையாக ஏறும்....
  26. இவ்வளவு பெரிய கப்பலில் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கு நாலு அறைகள் கட்டியிருக்கலாம் ....... ஒருவேளை அது அவர்கள் பிளானில் இல்லை போலுள்ளது . ......! 😂
  27. அரச கட்டடங்களில் மாத்திரம் தமிழிலும் பெயர்ப்பலகை வைப்பதை;தானே சொல்கிறார். அது இப்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . சிங்களப்கபகுதிகளுக்கூடாப ப் பயணம் செய்யும் பொழுத அரச கட்டங்களின் பெயர்ப்பலகையைப் பார்த்த்துத்தான் அந்த இடங்களை அறிய முடிகிறது. சுமத்திரனின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு அரசியலமைப்புக்கு ஆதரவு என்பதன் மூலம் சுமத்திரனதும் அவரது சொம்புகளினதும் வாக்குமட்டும்தான் கிடைக்கும். சுமத்திரனுக்கு நல்ல பெட்டி ஒன்நறு கிடைக்கும்.
  28. அப்படி யாரும் சொல்லவில்லை. தமிழர் நலன் சார்ந்து இருக்கின்ற கனடிய தமிழர் பேரவை... தனியே ஸ்ரீலங்கா போய்... "இமாலய பிரகடனம்" என்ற ஒப்பந்தத்தை செய்த பின் தான்.... தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்களும்.. இமாலய பிரகடனம் என்றால்.. என்ன என்று தெரியாமல் விழித்தார்கள். தாயக மக்களுக்கே... தெரியாமல் புத்த பிக்குகளையும், பல்லாயிரம் மக்களை கொன்று போரை நடத்தியவர்களை சந்தித்ததைத்தான்.... தவறு என்றும், இவ்வளவு பிரச்சினை ஆரம்பமாக உள்ள முக்கிய காரணம் என்று குறிப்பிடுகின்றோம். உங்களுக்கு நடந்த பல விடயங்கள் தெரியும். ஆனால்... தெரியாத மாதிரி நடிக்கின்றீர்கள் அல்லது அதனை ஒத்துக் கொள்ள உங்கள் சுயமரியாதை இடம் தரவில்லை என்றே கருத வேண்டி உள்ளது. ஆரம்பமான முக்கிய பிரச்சினையை வசதியாக மறைத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப ஒரே கருத்தை சொல்லிக் கொண்டு இருப்பது உங்களுக்கே அலுப்பு அடிக்கவில்லையா. நன்றி, வணக்கம்.
  29. நீங்கள், அடிமடியிலை... கை வைக்கிறீர்கள். 😂 🤣 அவர்களாக போய்... புத்த பிக்குகளிடம் குனிந்து ஆசிர்வாதம் வாங்கலாம். சஜித், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை... பின்கதவால் சந்திக்கலாம். அதை எல்லாம்.... நீங்கள் கண்டாலும், காணாத மாதிரி இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள். இந்தப் பிரச்சினை தோன்றியதன் முக்கிய மூல காரணமே, கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்கள் செய்த செயல் என்பதை இவர்கள் தெரிந்தும்... தெரியாத மாதிரி கதை அளந்து கொண்டு இருப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. 😡 அவர்கள்... இல்லாத முள்ளமாரித்தனம் எல்லாம் செய்தவனை கண்டிக்க வக்கில்லாமல், மற்றவனுக்கு... "வகுப்பு" எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 😂
  30. 83 ஆம் ஆண்டு இனக்கலவரம் செய்தது ஜெவிபியா ? ஜே ஆரின் யு என் பியா? எனக்கு ஒரே கொன்பியூசன் நுணா, அவர்கள் வழக்குப்போட அரச தரப்பிலிருந்து எந்த எதிர் வாதமும் வைக்கப்படவில்லை என்பதும் (மகிந்த தான் செய்யாமல் விமல் வீரவன்ச , சோமவன்ச அமரசிங்க போன்றவர்களின் இனவாதத்தைப்பயன்படுத்தி மறைமுகமாக செய்விச்சது) குறிப்பிடத்தக்கது.
  31. இப்படி ஆம்லெட் போட்டுப் பாருங்கள் . ..........! 👍
  32. சுரேன் ஆளுனராக இருந்த போது யாழ் நகரில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார். மிகவும் நன்றாக இருந்தது என்று இதில் பரிச்சயம் மிக்க நண்பர்கள் சொல்லியிருந்தனர். ஈழத்து எழுத்து, எங்களின் பதிப்பகம் என்று இந்த துறையில் எங்கள் மீது இருக்கும் தமிழ்நாட்டின் அளவு மீறிய செல்வாக்கை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு ஆரம்பமாகவும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது....... (ஆனால் அப்படி நடக்கவில்லை...) பின்னர் கனடாவில் ஒரு கூட்டத்தில் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவே இல்லை என்று சுரேன் சொன்னார். தொடர்ந்து இதே போன்ற இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இன்னொரு லக்‌ஷமன் கதிர்காமர் ஆவதே இவரின் இலட்சியம் போலுள்ளது. அதற்கான கல்வித் தகுதி ஏற்கனவே உள்ளது, பிற தகுதிகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.......... University of Kent மற்றும் University of Ottawa இல் தான் படித்திருக்கின்றார். ஆதலால் ஒக்ஸ்ஃபோர்ட் புலமைப் பரிசில் தகவல் சரியானதாகத் தெரியவில்லை. அதே போன்றதே இவர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்பதும். மதம் எதுவும் இல்லை (Other) என்றே இவரின் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் விபரத்தில் இருக்கின்றது. கனடாவில் அகதியாகப் பதிவது, பின்னர் கனடா குடியுரிமை பெறுவது, அரச உதவிகள் பெறுவது, இவை எல்லாம் ஒரு விடயங்களே அல்ல. இது எல்லோரும் செய்யும் மற்றும் சட்டத்திற்கு எதிரான விடயங்களும் இல்லை. வில்லங்கமான விசயம் என்னவென்றால், எந்தக் கட்சி, தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தாலும் இவர் ஒரு அமைச்சராகவே இருப்பார். இருந்து கொண்டே இப்படியான கருத்துகளையும் தெரிவிப்பார். இப்படியானவர்களும் என்றும் வந்து கொண்டே இருப்பார்கள். அந்த நாளில் குமாரசூரியர் என்று ஒருவர் இருந்தாரே...............
  33. வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் உள்ள பெயர்பலகையில் தமிழ் முதலிடம் வகிக்கின்றது என கூறி அதை அகற்றியவர்களும் இதே கட்சி புண்ணியவான்கள் தான் ...
  34. சுனாமி நேரம் வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட உதவிப்பணத்தை தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் (புலிகளுக்கு கிடைத்து விடுமாம்) வழக்கு போட்டவர்களும் இவர்கள் தானே. அப்போ விமல் வீரவன்ச இவர்களுடன் இருந்தார். வடக்கு கிழக்கு பிரிப்புக்கு உடந்தையாக இருந்தவர்களும் இவர்களே.
  35. 65ம் குடுத்து முடிக்கிறதுக்கிடையிலை உக்ரேன் குளோஸ்...😎 ஏதோ அரிசி பருப்பு கேக்கிறமாதிரி எழுதிவைச்சுக்கொண்டு நிக்கினம்....முடியல 🤣
  36. Published By: DIGITAL DESK 3 31 AUG, 2024 | 08:49 AM மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சயந்தன் கேதீசா (வயது 28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்துள்ளார். இருப்பினும் வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வாங்கிய கடனை அடைக்க முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/192448
  37. மீற்றர் வட்டி யாழில்? போகும் போக்கை பார்த்தால், யாழ் விரைவில் நல்ல முன்னேறமடையும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.