Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்14Points88820Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்7Points15819Posts -
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்6Points1592Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்4Points33366Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/01/24 in all areas
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
எனக்கென்னவோ நாங்கள் தேவையில்லாமல் விளம்பரப்படுத்துக்கிறோமோ என்ற எண்ணமே வருகிறது. Dr அர்ச்சுனாவின் போதும் இப்படித்தான் இளையோர்கள் எல்லோரும் அவருக்குப் பின்னால் போனார்கள். பிறகு அடங்கிவிட்டது. இப்பொழுதும் இப்படித்தான். அநுரவின் திட்டங்கள் எல்லாம் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா? என்று சிந்திக்கவிடாமல் இருப்பதற்குத்தான் இந்தளவு வீடியோக்களும். அவருடைய வீட்டுக்கு கூட போகுமளவுக்கு வைத்துள்ளது. எங்களுடைய இளையோருக்கு கடந்த கால வரலாறுகளையும் நாங்கள் ஒழுங்காகத் தரவில்லை. பாடப்புத்தகங்களில் தவறான தகவல்களை கொடுத்தாலும் கூட அதனை திருப்பிக் கேட்காமல் அதனைத்தான் படிப்பிக்கிறோம். ஆகையால் இனிவரும் இளைய சமுதாயம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.4 points
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
நீங்கள் கேட்டதினால் போட்டியை நடாத்துகிறேன். தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் , கட்சிகள் விபரங்கள் வந்ததும் போட்டியை நடாத்துகிறேன்.4 points
-
உறவும் உராய்வும் - சுப.சோமசுந்தரம்
2 points👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇2 points
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!
கண்ட கண்ட இடங்களிலும் தாய் மொழியையே... "டமில்" என்று கொச்சைப் படுத்தி, கதைக்கும் உங்களிடம் நான் அதிகம் எதிர் பார்த்து விட்டேன் போலுள்ளது. மற்ற இனத்தவன்... தனது தாய் மொழியை இப்படி இழிவு படுத்த மாட்டான். நீங்கள், உங்கள் கச்சேரியை... நடத்துங்கள். நன்றி. 🙏2 points
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
எண்ணைச் சட்டியில் வறுக்கிறமாதிரி தண்டனை உண்டு ரசோதரன் . ..........! 😂2 points
-
தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்தால் ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தயார்; சி. வி. விக்னேஸ்வரன்
2 pointsஅடுத்த பார் லைசென்ஸ்சுக்கு இப்பவே அடி போடுகின்றார் அய்யா2 points
-
8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது!
ஏன் என்னுடைய பெயரை இணைத்து உள்ளீர்கள்??? நான் பைபிள் ஐத்து தடவைக்கு மேல் வாசித்து உள்ளேன். சமய நூல்களில் எனக்கு பிடித்தது பைபிள் தான் அதில் உள்ள வசனங்கள். ஒருவர் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்வது போல் இருக்கும் 🙏 குர் ஆன் னும் வாசித்து உள்ளேன் இடையில் விட்டுவிட்டேன் ஒரு பகுதியில் கழுதையில். பலவனத்தில். போகும் போது கூட ஆண் விரும்பினால் பெண் உடலுறவுக்கு உடன்பட வேண்டும் என்று இருந்தது அனேகமாக இடங்களில் இப்படி பொருள்படும் வசனமிருக்கும். அவர்களின் சமய நூல்கள் இப்படி என்றால் வாழ்க்கையும். அப்படி தான் இருக்க முடியும் 🙏🙏🙏2 points
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அண்மையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் நண்பர் குலாமில் உள்ள ஒருவரின் நெருங்கிய உறவு. அவர் கூறியது இது: ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் தொகுதியை அபிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் ஒரு தொகை பணம் திறைசேரியில் இருந்து (பாராளுமன்றத்தினூடாக) ஒதுக்கப்படும். டக்கியை தவிர வேறு எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதை செலவழிப்பது இல்லை என்று. ஏனெனில் அவ்வாறு செலவழித்தால், சிங்கள அரசிடம் இருந்து பணத்தை பெற்றார்கள் என்று சொல்லி, துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்ற பயத்தினாலாம். எனவே ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி, மீண்டும் திறைசேரிக்கே சென்று விடுமாம். அவர் சொன்னதில் எத்தனை வீதம் உண்மை என்று தெரியாது.2 points
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
யாழ் களத்தில் ஒரு தேர்தல் வைத்தாலே, அனுர தான் வெற்றி பெறுவார் போல இருக்கு...😀 (மிச்ச ஆட்களுக்கு கட்டுப்பணமும் காலியாகும்)2 points
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
சுமந்திரன்.... இதனை "இதய சுத்தியுடன்" சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன் வெளியேறி போட்டியிடாமல் விட்டால், மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள். அவர் கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... இவரின் நேர்மையை, கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.2 points
-
ஒற்றுமையாக போட்டியிட முயற்சி!- இந்தியத் தூதுவருக்கு வாக்குறுதி.
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம். எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://seithy.com/breifNews.php?newsID=323490&category=TamilNews&language=tamil சுமந்திரன் சாணக்கியன் பங்கு கொளளவில்லையோ? அமெரிக்க தூதுவராலயத்துக்கு போட்டினமோ? அல்லது தனியாக போய் சந்திக்கப் போகினமோ?1 point
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
பா.அரியனேந்திரனவர்களையே வறுத்தெடுத்தவர்கள் இளையோரை விடுவார்களா? இந்து முதலைகளை அமுக்கி முன்னோக்கிப் பாயும் பலம் உள்ளதா? தமிழரசியல்வாதிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாதுவைத்திருப்பதே தமக்கெதிராக யாரும் எழுந்தவிடக் கூடாது என்ற நன்னோக்கிலேயானபின்னர் மக்களை அணிதிரட்டி .... அல்லது துணிவோடு தற்போது ஒரு இளையோர் அணி வட-கிழக்கெங்கும் களமிறங்கிப் போட்டியிட்டு அதைவைத்து அடுத்துவரும் ஐந்து ஆண்டுகள் மக்களுக்குத் தெளிவுபடுத்திச் சாதிக்க முயலவேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக அவதாரம் எடுக்குமபோதுதான் தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!
விதி இருந்தாலும் சொல்ல மாட்டமே....எங்கள் பணி அவாளுக்கு சேவை செய்து கிடப்பதெயன்றி வேறொன்றும் அறியேன் பராபரனே1 point
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
எப்ப மரவள்ளி கிழங்கு சாப்பிட வெளிக்கிடினமோ அன்று வெளிநாட்டுக்கு வருவதற்கு வரிசையில் நிற்பினம் இந்த யூ டியூப்பினர்,பாணுக்கு சீனிக்கு வரிசையில் நிற்பதை விட பாஸ்போர்ட் எடுக்க நிற்க்கும் வரிசை பெரிதாக இருக்கும்....1 point
-
உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்
அண்ணை எந்த நாடு? இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்? 😒1 point
-
சிரிக்கலாம் வாங்க
1 point1 point
- ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
நான் சொன்னது பகோடா பகோடா. ..🤪1 point- பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு
அட்ரா ..அட்ரா😂! அருமையான வசனங்கள், சொற்கள் - ஆனால் இந்த சொற்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தமென்று ஒரு சொற்களஞ்சியமும் - Glossary சேர்த்து வெளியிட்டால் மக்களுக்கு வசதியாக இருக்கும்! பொதுக்கட்டமைப்பு என்று ஆரம்பித்த போதே backroom players ஆக இருக்கும் பலருக்கு "பாராளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டு ஆசை" வந்து விட்டது என்ற சந்தேகம் இருந்தது, இப்ப உறுதியாகி விட்டது!1 point- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
ஓம்... பையன், அநேகமாக இந்தக் கிழமைக்குள் வந்து விடும் என எதிர் பார்க்கின்றார்கள். இல்லையேல்... மது அனுமதி பாத்திரம் பெற்றவர்கள், பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தபின்.... அவர்களின் வாக்கு வீதத்தில் சரிவை ஏற்படுத்தி அந்த வாக்குகளை தமக்கு அறுவடை செய்ய NPP காத்திருக்கலாம். தமிழரசு கட்சி இதோடை... நடையை கட்ட வேண்டியதுதான். தேர்தலுக்குப் பின்... அவர்கள் வேறு தொழில் தேட வேண்டி வரும். 😂1 point- பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
மூஞ்சூறு தான் போக வழியை காணவில்லை. விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போன மாதிரி மற்றவர்களையும் அழைக்கின்றாராம். நல்ல பகிடியாய் இருக்கு. 😂 சிலரின் நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது. 🤣1 point- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
சுன்னாகத்திலுள்ள மின்னுற்பத்தி இயந்திரங்களுக்கு பாவித்து மாற்றிய கழிவு ஒயில் பாதுகாப்பான முறையில் சேமித்து(நேரடியாக மண்ணுக்குள் சேரவிடப்பட்டதாக) அகற்றப்படவில்லை என்பது தான் நான் அறிந்த செய்திகள். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் வழங்கப்படும் சலுகை என நினைக்கிறேன் அண்ணை. மேலதிக விபரங்கள் தேடிப் பார்க்கிறேன்.1 point- தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
நீங்கள் சொல்வது சரியே........ அவர் இங்கு ஏதாவது சிகிச்சை முடித்து அதன் பின்னரே சைக்கிள் ஓடினாரா அல்லது அந்த சைக்கிள் ஓட்டமே சிகிச்சையின் ஒரு பகுதியா என்று தான் சொல்ல வந்தேன். அந்தச் சைக்கிள் கூட கொஞ்சம் புதுமையாக ஓடியது. அதுவாக ஓடியது போலவே இருந்தது........... ஒரு EV போல ஓடியது....😀.1 point- ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
இனி ரஜனி…. இட்லி சாப்பிட்டார், இடியப்பம் சாப்பிட்டார் என்று எல்லாம் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதப் போறதை நினைக்கத்தான் வயித்தை கலக்குது. 😂 இன்னும் ஒரு கோஷ்டி… ரஜனி நலம் வேண்டி மண்சோறு சாப்பிடும். கொஞ்சக் காலத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கப் போகுது. 🤣1 point- ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!
சுமந்திரன் தேசியம் கதைத்தவரா? 🤣 அடுத்த மாவீரர் தினத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவில் யார் விளக்கேற்றுவது என்பதில் அனுரவுக்கும் சிறீதனுக்கும் இடையில்தான் போட்டியாம்,.. 🤣1 point- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
இந்த சனம் மட்டுமல்ல பருத்தித்துறையில உள்ள கனபேர் இப்ப NPP பக்கம் மாறி விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் கணிசமான வாக்குகள் போய்விட்டது. பழைய JVP அனுபவங்களாள் நான் உட்பட அனுரவை விரும்பவில்லை. ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்து இனவாதத்தை கையில் எடுக்காமல் ஐனாதிபதியாவது லேசுப்பட்ட விடயமில்லை. நல்லதே நடக்கும் என நம்புவோம்.1 point- மனித குடலில் வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆம்பர் டான்ஸ் பதவி, 1 அக்டோபர் 2024, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதர்களின் குடல் நாளம், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வைரஸ்கள் நம் உடலுக்குள் என்ன செய்கின்றன? நீங்கள், நம் குடலுக்குள் வசிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த பாக்டீரியாக்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் கோடிக்கணக்கான வைரஸ்கள் வாழ்கின்றன. அந்த பாக்டீரியாக்கள் மீதும் நம் மீதும் அவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுதான் ஃபேஜியோம். அதாவது, பாக்டீரியாக்களை உண்ணக்கூடிய நுண்ணுயிரிகளின் தொகுப்பு. மனித செரிமான மண்டலத்திற்குள் இத்தகைய வைரஸ்கள் பில்லியன் கணக்கில், டிரில்லியன் கணக்கில் இருக்கின்றன. அவற்றின் தொகுப்புதான் ஃபேஜியோம். இந்த ஃபேஜியோம் தொடர்பான அறிவியல் புரிதல் சமீபத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் கொலராடோ அன்சுட்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாக்டீரியாலஜிஸ்ட் ப்ரெக் டியூர்காப். அவற்றின் மகத்தான பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சரியான பாக்டீரிய உண்ணி வைரஸை, அதாவது ஃபேஜை (phage) பயன்படுத்தினால் அல்லது குறிவைத்து சிகிச்சை மேற்கொண்டால், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமென்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். “பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமே இருக்கும்” என்று ஸ்டான்ஃபோர்ட் மெடிசனின் தொற்றுநோயியல் மருத்துவரும் ஆய்வாளருமான பால் பொலிக்கி கூறுகிறார். ஆனால், இப்போதைக்கு மனித குடல் நாளப் பகுதியை எத்தனை பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் ஆக்கிரமித்துள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு பாக்டீரியாவுக்கும் ஒன்று அல்லது அதற்கும் குறைவாக இவை இருக்கக்கூடும். பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் நபருக்கு ஏற்ப மாறுபடுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரிய உண்ணி வைரஸின் மரபணுக்களை கொண்ட பாக்டீரியாக்களும் குடலில் இருக்கின்றன. ஆனால், அவை வைரஸ்களை தீவிரமாக உற்பத்தி செய்யவில்லை. அந்த பாக்டீரியாக்களின் மரபணுத்தொகுதியில் பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் டி.என்.ஏ.களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதே அதற்குக் காரணம். இன்னும் நிறைய அடையாளம் காணப்படாத ஃபேஜ்கள் இருக்கின்றன. இவற்றை விஞ்ஞானிகள் ஃபேஜியோமின் “இருண்ட பொருள்” என்று அழைக்கின்றனர். இது வரையிலான ஃபேஜ் ஆராய்ச்சிகளின் பெரும்பகுதி, இந்த வைரஸ்கள் மற்றும் அவை சார்ந்து வாழும் பாக்டீரியாவை அடையாளம் காண்பதாக இருந்துள்ளன. நல்ல ஃபேஜ்களின் தரவுத்தளத்தில், சுமார் 1,40,000க்கும் மேற்பட்ட ஃபேஜ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது நிச்சயமாக குறைத்து மதிப்பிடப்பட்ட அளவுதான். அயர்லாந்தில் உள்ள கார்க் பல்கலைக்கழக கல்லூரியின் நுண்ணுயிரியலாளர் கொலின் ஹில், "பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் பன்மைத்துவம் அசாதாரணமானது” என்கிறார். விஞ்ஞானிகள் மனித மலத்தின் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு வரிசைகளைப் பிரித்தறிவதன் மூலம் இந்த ஃபேஜ் வைரஸ்களை கண்டுபிடிக்கிறார்கள். அதில்தான், ஆய்வாளர்கள் க்ராஸ்ஃபேஜ் (crAsspage) எனப்படும் குடலில் காணப்படும் மிகப் பொதுவான ஃபேஜ் குழுவைக் கண்டறிந்தார்கள். குடலில் பொதுவாகக் காணப்படும் க்ராஸ்ஃபேஜ்கள் மனித ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவை குடல் பாக்டீரியாவின் பொதுவான குழுவாக அறியப்படும் பாக்டீராய்டுகளை (Bacteroides) பாதிப்பதால், அப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்கிறார் ஹில். பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீராய்டுகளை பாதிக்கும் பிற பொதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் குபாஃபேஜ் (குடல் நாள பாக்டீராய்டுகளை தாக்கும் ஃபேஜ்) மற்றும் லோவிஃபேஜ் (பல வைரஸ் மரபணுக் கூறுகள்) ஆகியவை அடங்கும். இத்தகைய பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் தொகுப்பு ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். நுண்ணுயிரியல் துறையின் 2023ஆம் ஆண்டு மதிப்பாய்வில் (2023 Annual Review of Microbiology) ஹில் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் விவரித்ததன்படி, வயது, பாலினம், உணவுமுறை, வாழ்க்கை முறை ஆகிய அனைத்தையும் பொறுத்து, இந்தத் தொகுப்பில் மாற்றங்கள் இருக்கும். வைரஸ் - பாக்டீரியா உறவு ஃபேஜ் எனப்படும் இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாவை பாதித்து, சில நேரங்களில் அவற்றைக் கொல்கின்றன என்பது நாம் அறிந்தது தான். ஆனால் அதையும் தாண்டி, வைரஸ், பாக்டீரியா இடையே விவரிக்க முடியாத அளவுக்குச் சிக்கலான உறவு இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். “நாங்கள் முதலில், ஃபேஜ்களும் பாக்டீரியாக்களும் சண்டையிடுகின்றன என்று நினைத்தோம். ஆனால், அவையிரண்டும் எதிர்த்திசையில் இருக்கும் அதேவேளையில், ஒன்றுக்கொன்று நல்லுறவையும் பேணுகின்றன.” புதிய மரபணுக்களை கொண்டு வருவதன் மூலம் ஃபேஜ்கள் பாக்டீரியாவுக்கு பயனளிக்கின்றன. ஒரு பாக்டீரிய உண்ணி வைரஸ் துகள் ஒரு பாக்டீரியாவுக்குள் ஒன்றிணையும்போது, அந்த வைரஸ் சில நேரங்களில் அதன் புரதக்கூட்டிற்குள் அதன் சொந்த மரபணுப் பொருட்களுடன் சேர்த்து பாக்டீரியாவின் மரபணுக்களையும் அடைத்து வைத்துக்கொள்ளும். பின்னர், அந்த மரபணுக்களை ஒரு புதிய ஒம்புயிரி (Host) பாக்டீரியாவாக மாற்றுகிறது. இப்படி தற்செயலாகத் தனது புரதக்கூட்டில் அது சேகரித்த மரபணுக்கள் உதவிகரமாகவும் இருக்கும் என்கிறார் டியூர்காப். ஏனெனில், அவை ஆன்டிபயாடிக் பொருட்களுக்கு எதிர் செயலாற்றும் திறனையும், ஒரு புதிய பொருளை ஜீரணிக்கும் திறனையும் குடலுக்கு வழங்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாக்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நேரத்தில் அவற்றைக் கொல்வதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக ஹில் கூறுகிறார். பாக்டீராய்டுகள் எனப்படும் பாக்டீரியாக்கள், தங்கள் வெளிப்புற மேற்பரப்பில் பல வகையான பூச்சுகளைக் கொண்டுள்ளன. இந்தப் பூச்சுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்ப்பது மற்றும் செரிமான மண்டலத்தின் வெவ்வேறு பகுதிகல் இருந்து பலவாறான நன்மைகளை செய்கின்றன. ஆனால், “க்ராஸ்ஃபேஜ் வகையைச் சேர்ந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இந்தப் பூச்சுகளை அடையாளம் கண்டுவிடக்கூடும். ஆகையால் பாக்டீராய்டுகள் தங்கள் வெளிப்புற பூச்சுகளைத் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது,” என்கிறார் ஹில். இதன்விளைவாக, குடலில் வெவ்வேறு வகை வெளிப்புற பூச்சுகளைக் கொண்ட பாக்டீராய்டுகள் உள்ளன. அதோடு, குடலின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வகையிலும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் இவற்றின் எண்ணிக்கை அமைகின்றன. வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எல்லை மீறிப் போகாமல் பாக்டீரிய உண்ணி வைரஸ்களான ஃபேஜ்கள் தடுக்கின்றன. நம் உடலிலுள்ள குடல் நாளம் காடுகளைப் போன்ற ஒரு சூழலியல் அமைப்பைக் கொண்டது. ஒரு காட்டில் வாழும் புலிகளும் ஓநாய்களும் எப்படி மான்களை வேட்டையாடுமோ, அதுபோல, ஃபேஜ் வைரஸ்கள் பாக்டீரியாக்களை வேட்டையாடுகின்றன. காட்டிற்கு புலிகளும் ஓநாய்களும் எப்படித் தேவையோ, அதேபோல, நம் குடலுக்கும் இந்த ஃபேஜ்கள் தேவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இதில், வேட்டையாடிக்கும்(ஃபேஜ்கள்) இரைக்கும்(பாக்டீரியாக்கள்) இடையிலான உறவில் மாற்றம் ஏற்படும்போது, நமது செரிமான மண்டலத்தில், குடல் அழற்சி(IBS), குடல் எரிச்சல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக, குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய குடலில், வைரஸ்களின் பன்மைத்தன்மை குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குடல் நாள நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேணுவதற்காக, அதற்கேற்ற உணவுமுறையை மக்கள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்படுவார்கள். சில தீவிரமான சந்தர்ப்பங்களில் மருத்துவரீதியாக மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பாக்டீரிய உண்ணி வைரஸ்களை சமாளிப்பது மருத்துவத்தில் மிகவும் நேர்த்தியான அணுகுமுறையை வழங்கக்கூடும் என்று ஹில் கூறுகிறார். அதாவது, வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, அதை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அழிப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு ஏதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களை விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இல்லாமல் போனால், “சில வகையான பாக்டீரியாக்கள் குடலில் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்றும் அதனால், சில உணவுகளை ஜீரணிக்க முடியாமல் வாயுப் பிரச்னை மற்றும் வயிறு வீக்கம் ஏற்படலாம்.” ஆகவே, நம் குடலின் சூழலியல் அமைப்பை நிர்வகிக்கும் டிரில்லியன் கணக்கான இந்த ஃபேஜ்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று ஹில் பரிந்துரைக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvynzlln95o1 point- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
பிரான்ஸ் வர்த்தகர் @விசுகு அவர்களை மேடைக்கு வந்து, விளக்கம் தரும்படி அன்புடன் அழைக்கின்றோம். 😂 🤣1 point- கருத்து படங்கள்
1 point1 point- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
அனுராவுக்கு இலவசமாய் பிரச்சாரம் நடக்கின்றது. இவைகளை பார்க்கும் நம் தலைவர்களுக்கு வயிறு கலங்கப்போகுது. அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சந்திரிகாவும் களத்தில் குதித்திருக்கிறா. காரணம்; அரசியல் வாதிகளின் சுகபோக வாழ்க்கை கேள்விக்குள்ளாகும், இவரது ஆட்சி நிலைத்தால். எல்லோரும் கூட்டுச்சேருகிறார்கள். நம்மவர்களுக்கும் இப்போதான் ஒற்றுமையின் அவசியம் புரிகிறது. காரணம், மக்களுக்காகவல்ல தாம் சேர்த்ததை கட்டிக்காக்க. பாதையின் ஆரம்பத்தை பார்த்து முழுப்பயணமும் இப்படியேதான் இருக்கும் என மனக்கணக்கு போடக்கூடாது. சந்திரிகா வந்தபோதும் இப்படித்தான் மனக்கணக்கு போட்டோம், பெண்ணென்றால்; பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் இந்தப்பெண் பேயாக எங்கள்மேல் குண்டுகளை பொழிந்ததே! நினையாத நல்லதும் நடக்கலாம், கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து விட்டோமே எனவும் வருந்தலாம்.1 point- 'மது விற்பனைக்கு அனுமதி வழங்கி குடும்ப வன்முறைக்கு வழி சமைக்காதே' - மன்னாரில் போராட்டம்
மன்னார் மக்களுக்கு வாழ்த்துக்கள். இதே முன் மாதிரியை மற்றைய மாவட்ட மக்களும் பின் பின்பற்ற வேண்டும்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டதா?? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் நாங்கள் எங்களது வாக்கு உரிமையை தமிழ் தலைவர்களுக்கு அளிப்பாதால். ஏதாகினும் நன்மைகளை அடைந்து உள்ளோமா ?? இல்லை தமிழ் தலைவர்களால். தமிழருக்கு எதுவும் தந்து விட முடியாது அவர்கள் சிங்களத் தலைவர்களிடம். தான் போய் பேசுவார்கள். தமிழ் மக்களுக்கு சொல்லாமல் முறைப்படி அறிவிக்காமல் பார். அனுமதி பத்திரங்களை இரகசியமாக பெறும் அளவிற்கு நிலமை. வந்துவிட்டது இந்த செயல் எமது வருங்காலச் சந்ததிகளை அழிக்கும் இல்லையா?? இப்படியானவர்களை எப்படி தலைவர்கள் என்பது?? ஆகவே நேரடியாக அனுரவுக்கு வாக்கு போட வேண்டியது தான் 🙏👍1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointஇன்று 30ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி விசுகுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.1 point- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
மறந்திடாமல் கையில் ஒரு பியரும் எடுத்துப் போகவும். பாராளுமன்றில் அனுரவை ஆட்டங்காண வேண்டியே சந்திரிக்காவை ஏற்கனவே களமிறக்கிவிட்டார்கள். தமிழ்குழுக்களையும் இந்தியா கூப்பிட்டுள்ளது. அனேகமாக எல்லா குழுக்கழும் ஒன்று சேரலாம்.1 point- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
ரணில்தான் அந்த சகுனிதான் 2௦3௦ ல் அல்லது 2௦35 யார் இலங்கையை ஆளனும் எனும் முடிவை எடுப்பவனும் அவன் தான் ஒரு முழு சிங்கள இனவாதி அவனுக்கு தெரியும் இந்த அனுரா எல்லாம் வெத்து வேட்டு பக்கத்தில் உள்ள இந்தியாவும் மேற்குலகமும் ஒரு அளவுக்கு மேல் அவரின் ஆட்டத்தை ரசிக்காது என்று வேணுமென்றால் நீங்கள் தீருவில் தானே இனி த்தான் இருக்கு விளையாட்டு பொப் கோர்ன் உடன் இருப்பம் .😃1 point- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
மிக்க நன்றி கந்தப்பு. 🙂 இம்முறை தேர்தல் யாரும் எதிர்பார்க்காத முடிவுடன் இருக்கும் என நினைக்கின்றேன். போட்டியை நடத்த சம்மதித்தமைக்கு மீண்டும் நன்றிகள். 🙏1 point- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
அவரும் பார் bar(கள்) வைத்து நடாத்துகிறார் என்றால் வருமானம் வரும் தானே?1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சம்பந்தப்பட்ட தரப்புகளினால் ஏற்கொள்ளபட்ட அனுரகுமார திசாநாயக்காவே இப்போது அவர்கள் தலைவராக ஆகிவிட்டார் அவர்களின் தலைவரே அங்கே இருக்கின்ற போது யாருடனும் பேச வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.1 point- மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
சிறிமா ஆட்சியில் முன்னேறியவர்கள் என்றால் வட கிழக்கு விவசாயிகள் மட்டுமே.1 point- தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
அவர்கள் சீனியர்கள் அல்ல. அடிமைகள். 😂1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித் அவர்களே நன்றி, வேலை-உணவு- செமிபாட்டு நடை என்று புலத்திலே நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தட்டிக்கொண்டிருக்க, பொருத்தமான காலத்தில் நீங்கள் யே.வி.பியினதும், அதன் கூட்டுகளதும் இனவாத முகத்தை நினைவூட்டுகிறீர்கள். சிறிலங்காத் தேசியர்களுக்கு உவப்பாக இராதபோதும், தமிழருக்கு இருக்கும் மறதிக்குணத்தில், போன கிழமை ரணிலோடை சும் நிண்டதே மறந்துபோச்சு, அவற்றை ஒத்துமை அறிக்கையோடை.... அப்ப 20 ஆண்டகளுக்கு முற்பட்டது நினைவிருக்குமோ. யே.ஆரால் வளர்கபபட்ட ரணிலும், றோகனவின் பாசறையில் வளர்ந்த அனுரவும் வேறுபட்ட நிறங்களைக் காட்டினாலும் முகங்களின் வார்த்தை ஒன்றேதான். அவை சிங்கள பௌத்த தேசியவாத முகங்கள். நொச்சி1 point- வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம் - கே.இன்பராசா
உண்மை மாற்று கருத்துக்கு இடமில்லை...தற்பொழுது உள்ள தமிழ் தேசிய தூண்கள் சோசலிஸ்ட்கள் அல்ல முக்கியமாக தமிழரசு கட்சியினர் ...பக்கா முதாலாளித்துவ சிந்தனையாளர்கள் ...(ஆகவே தான் இந்தியா இவர்களை உற்சாகப்படுத்துகின்றது... ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒற்றுமாயாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புகின்றனர்)... ஏனைய முன்னாள் போராளிகளின்(பாராளுமன்றம் சென்ற) தமிழ் தேசிய கட்சிகள் அன்று சோசலிசம் பேசினார்கள் இன்று அவர்களும் வெள்ளைவேஸ்டி அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர்... இளைஞர்கள் வரவேண்டும் சிறிலங்கா தேசியத்தில் தமிழ் அடையாளத்தை (நிலம் மொழி,)இழக்காமல் சோசலிச அரசியல் செய்ய வேண்டும் .... திருகோணமலையில் ஒர் இளைஞனின் (ராஜ்குமார் ரஜீவ்காந்த் ...பெயர் சரியா தெரியவில்லை)பேட்டி பார்த்தேன் ஒரளவு நம்பிக்கையான பேட்டியாக இருக்கின்றது... இருக்கலாம்....இரு இனத்துக்கும் பல கசப்பான அனுபவங்களை வரலாறு விட்டு சென்றுள்ளது...ஆகவே பயம் இருப்பது நியாயமானது..அதிலும் தமிழ் தரப்பு பல விடயங்களில் நிரந்தர இழப்பை சந்தித்துள்ளது. முதளாளித்துவ சிங்கள கட்சிகள் இனாவாதம் பேசி சிங்கள ,சிறிலங்கா தேசியத்தை காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்... சோசலிஸ்ட்கள் இந்த முறை இனவாதம் பேசவில்லை ஆனால் சோசலிசம் பேசி சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்பி தமிழ் இன அடையாளத்தை இல்லாமல் பண்ண முயற்சி செய்வார்கள் இவர் தானே தலைவர் வருவார்,துவாரகா உயிர் உடன் இருக்கின்றார் என அறிக்கை விட்டவர் ,விடுபவர் ...இந்தியாவுக்கும் அடிக்கடிசென்று வருபவர் ..நாளைக்கு அமெரிக்கா சென்றாலும் செல்லலாம் ..ஆகவே அவரைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை ...தமிழ் மக்கள் இவரைப்பற்றியும் அறிந்திருப்பார்கள் இப்படி எழுதினது புத்தன் என அவருக்கு சொல்லி போடாதையுங்கோ பிறகு யூடியுப் நாறிபோய்விடும் ...😅 இன்று பல தமிழ் எலைட் நபர்கள் அனுராவை தேவதூதராக ,மீட்பனாக பார்க்கின்றனர் அத்துடன் அவர்களின் வட்சப் குறூப்பில் (சிங்களவர்களுடன் படித்தவர்கள்)வரும் பல கிளிப்புகளை வொவர்ட் பண்ணுகின்ரனர்... இந்த எலைட் குறூப்கள் இவ்வளவு நாளும் தாங்கள் உண்டு தங்கன்ட வேலை உண்டு என இருந்த வையல் ...இப்ப அரசியல் பேசுகின்றோம் என அணுராவின் படம் இருக்கும் சகல கிளிப்புக்களை போஸ்ட் பண்ணுகினம் ....அந்த கிளிப்பை அவர்களே பார்ப்பதில்லை ...எனபது தான் வேடிக்கை.. இவர் தானே தலைவர் வருவார்,துவாரகா உயிர் உடன் இருக்கின்றார் என அறிக்கை விட்டவர் ,விடுபவர் ...இந்தியாவுக்கும் அடிக்கடிசென்று வருபவர் ..நாளைக்கு அமெரிக்கா சென்றாலும் செல்லலாம் ..ஆகவே அவரைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை ...தமிழ் மக்கள் இவரைப்பற்றியும் அறிந்திருப்பார்கள் இப்படி எழுதினது புத்தன் என அவருக்கு சொல்லி போடாதையுங்கோ பிறகு யூடியுப் நாறிபோய்விடும் ... இன்று பல தமிழ் எலைட் நபர்கள் அனுராவை தேவதூதராக ,மீட்பனாக பார்க்கின்றனர் அத்துடன் அவர்களின் வட்சப் குறூப்பில் (சிங்களவர்களுடன் படித்தவர்கள்)வரும் பல கிளிப்புகளை வொவர்ட் பண்ணுகின்ரனர்... இந்த எலைட் குறூப்கள் இவ்வளவு நாளும் தாங்கள் உண்டு தங்கன்ட வேலை உண்டு என இருந்த வையல் ...இப்ப அரசியல் பேசுகின்றோம் என அணுராவின் படம் இருக்கும் சகல கிளிப்புக்களை போஸ்ட் பண்ணுகினம் ....அந்த கிளிப்பை அவர்களே பார்ப்பதில்லை ...எனபது தான் வேடிக்கை..1 point- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
இனி பாராளுமன்றம் போகிறவர்கள் பாடு ரசியாவுக்கு வேலைக்க போனமாதிரி தான். போட்ட முதலும் காலியாகும்.1 point- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
போன 2024 ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக போட்டியிட்டவர் அண்ணை.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அண்ணா நீங்கள் சொல்வது கேட்க பார்க்க பரவசமாகத்தான் இருக்கிறது. பல்லக்கில் தூக்கப்பட்டவன் தூக்கியவனிடம் கையேந்தி நிற்கும் போது இனவாதம் எங்கேயிருந்து தொடங்கியது என்று நாங்கள் சொல்லித் தான் உங்களுக்கோ அல்லது இங்குள்ளோருக்கோ புரியணும் என்று இல்லை. ஆனால் இங்கே பேரினவாத சிங்களத்தில் ஒருவர் நல்லவர் அவரால் அனைத்தும் மாறும் என்கிற விசத்தை விதைக்கும் போது அவரது கட்சி மற்றும் அவரது தோழர்கள் தான் கிடைக்க இருந்த ஆகக் குறைந்த பாதுகாப்பை கூட அறுத்து எறிந்தனர் என்கிற வரலாற்று எச்சரிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது. அதைக் கூட பதியக்கூடாது பார்க்கக்கூடாது என்பது தான் இனவாத உச்சம். இது தான் அநுர செய்ய விரும்புவதும். இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள். எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன. எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம், கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம். எல்லோருக்கும் நன்றி. இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம். இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது. இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த நியாயமில்லை. அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே! குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝ ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....? இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தாயகத்தில் தமிழ் தேசியத்தை அழிக்க முனைவது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் உள்ள நாட்டாமைகளும் அவர்களின் எடுபிடிகளாக உள்ள வயது போயும் ஓய்வெடுக்க விரும்பாத கிழட்டு அரசியல்வாதிகளும் தான். புலிகள் அழிக்கப்பட்ட பின் அதை அழித்த மகிந்தவின் ஆட்சியை அகற்ற தாயக மக்கள் சரத் பொன்சேக்கா, மைத்திரி, சஜித் என்று மாறி மாறி வாக்களித்தனர். ஆனால் புலிகள் அழியப் போகிறார்கள் என தெளிவாக புரிந்த பின் இறுதி யுத்ததிற்கென காசு சேர்த்து அதை ஆட்டையை போட்ட புலம்பெயர் அமைப்புகள் பல, புலிகள் அழிந்த பின் மகிந்தவுடன் டீல் பேசி அவருடன் கைகுலுக்கினர். எனவே தாயக மக்களின் நோக்கத்திற்கு எதிராகவே எப்பவும் இந்த புலம்பெயர் புண்ணாக்கு கோஷ்டிகள் இயங்கி வருகின்றனர் என்பது கண்கூடு. நீங்கள் மேலே குறிப்பிட்டது அப்படியானவர்களைத் தானே!1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
❤️.......... மிகவும் தேவையான ஒரு கருத்தை தாயகத்திலிருந்து பதிந்திருக்கின்றீர்கள், ஓணான்டியார்..........👍. நான் இந்த அவருடம் ஊருக்கு போயிருந்த போது வவுனியாவில் ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். அவர்களை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். இப்பொழுது மிகச் சாதாரண ஒரு வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவன், மனைவி, சில பிள்ளைகள். அந்த அக்கா சொன்னார், 'தம்பி, எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்றும் நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.............'. அவர்களிடம் எதுவுமே இல்லை. ஒரு கூட்டில் 50 கோழிக் குஞ்சுகள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனுடனேயே இவ்வளவு திருப்தியா......... நான் கண் கலங்கி விடக் கூடாதென்பதில் மிக உறுதியாக இருந்தேன். அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. இந்தச் சனங்களை அப்படியே வாழ விடுங்கள் என்று தான் நானும் கேட்கின்றேன். அவர்கள் கடந்து வந்த பாதை போதும்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
1) அனுரா ஒன்றும் அரசியல்ப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.. அதனால் அதை பேசுவதில் பலன் இல்லை.. நடந்தால் சந்தோசமே.. ஆனால் 2) மகிந்த யுகம் முடிந்து மைத்திரி யுகம் வந்தபோது அவுஸ்திரேலியாவில் கனடாவில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பயம் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து அவுஸ்த்திரேலியா கனடா ஜரோப்பாவில் இருப்பது போல் இல்லாமல் பிள்ளைகளை தமிழ்மொழியில் படிப்பத்து தமிழை பேசி பேரக்குழந்தைகளுக்கும் தமிழை கற்றுக்கொடுத்து தமிழையும் வளர்த்து தமிழ் இனத்தையும் சிறிது சிறுதாக பெருக்கினோம்.. 2) இப்பொழுதும் அப்படி அனுராவின் கீழ் ஏதோ சாவுப்பயம் இல்லாமல் எங்கள் மண்ணில் வாழ்ந்திட்டு போறம்.. அதில் கொள்ளிக்கட்டையை செருகாதீர்கள்.. மொழிதான் இப்பொழுது இங்கு பெரிய பிரச்சினை.. தமிழர்கள் இரண்டாவது மொழியாக சிங்களத்தையும் கற்றுக்கொண்டால் அரசியல்ப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் விளங்காப்பிரச்சினைகளால் வரும் பாதிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.. நீங்கள் ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்த்திரேலியா என்று போய் அந்த நாட்டு மொழியை கற்று இரண்டு தலைமுறைக்குள் தமிழை மறந்து இன அடையாளத்தையும் இழந்து ஒரு தலைமுறையை புலம்பெயர்ந்து இன அழிப்பு செய்யும் புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஊரில் இருந்து தமிழையும் கற்று வளர்த்து தாய்நிலத்தில் வாழ்ந்து தமிழ்பேசும் சந்தத்திகளையும் உருவாக்கிக்கொண்டு சிங்களத்தை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்பவர்களின் காலில் வீழ்ந்து கும்பிடலாம்.. உங்களால் பிரஞ்சையும் டொச்சையும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு இனவெறி பேசினாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து வெள்ளைகளோடு சந்தோசமாக வாழமுடியும் என்றால் ஊரில் இருப்பவர்கள் ஏன் சிங்களம் கற்று முஸ்லீம்கள் போல் உங்களைப்போல் சந்தர்ப்பவாதிகளாய் வாழமுடியாது..? வாழ்ந்தால்தான் என்ன தப்பு..? இனம் இருந்தால்தானே இடமே இருக்கும்.. ஆக நீங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உங்கள் பாடுகளை பார்ப்பதுபோல் ஊரில் இருப்பவர்களையும் அவர்கள பாடுகளை பார்க்கவிடுங்கள்.. ஊதி ஊதி அணைந்து போய் இருக்கும் நெருப்பை எரித்து தமிழர்களுக்கு என்று இருக்கும் ரெண்டு சின்ன மாகாணங்களை எப்பொழுதும் சுடுகாடாக வைத்திருக்க விரும்பாதீர்கள்.. அப்படி நினைப்பவர்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்.. நாசாமாப்போவீர்கள்.. வாழு வாழ விடு… பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏1 point - ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.