Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
பசுவூர்க்கோபி
கருத்துக்கள உறவுகள்6Points505Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்6Points46783Posts -
island
கருத்துக்கள உறவுகள்6Points1747Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/05/24 in all areas
-
யாரைத்தான் நம்புவதோ?
5 pointsயாரைத்தான் நம்புவதோ? **************************** எழுபது ஆண்டுகளாக எம்மேல் ஏறி உழக்கியவர்களும் எம்மில் சவாரி செய்தவர்களும் எம்மினத்தை கொத்துக் கொத்தாக கொண்றழித்தவர்களும் எம்மை பயங்கர வாதிகளாக காட்டி வாக்கு பறித்தவர்களும் எம் தேசமெங்கும்-புத்தர் சிலை விதைத்தவர்களும் ஊழல் லஞ்சமென பெருக்கி உயிர் வாழ்ந்த அந்த அரசியல் தலைமைகளை.. சிங்களமக்களே! ஓடவெருட்டி ஒன்றுசேரும் இந்நேரம் இங்கோ. அனைத்துத் தரப்பும் மேடையில் ஏறி தமிழ் உரிமை தமிழ் விடிவு தமிழ் சுதந்திரம் தமிழ் ஈழத்துக்கான சம உரிமை. தமிழ்! தமிழ்! தமிழ்! எனக் கத்திவிட்டு-பின் தமிழை அழித்த இனவாதிகளுடன் இணைந்து தன் வயிறு தன்சொத்து தன் குடும்பமென தம் வாழ்வை உயர்த்தும் எங்கள் தலைமைகளை எப்படித் தான் நம்புவதோ! ஒன்றாக ஒரு திரட்சியாக ஒரு கொத்தாக ஒரு கொள்கையாக நின்று உரிமைக்கு பாடுபட முடியாதவர்கள் ஒட்டுமொத்த தமிழுக்கும் உரிமையை வெண்றுதருவதாக சொல்வது வேடிக்கையே! இவர்களை எப்படித்தான் நம்புவதோ! அப்பளுக்கில்லாத -எங்கள் தலைவர்களென அனுப்பிவைத்த மக்களுக்கு சொற்ப சலுகைக்காக சொன்ன வாக்குறிதிகள் தவறி சொகுசுக் காருக்கும், வீட்டுக்கும் மதுக் கடைக்கும் விலை போன இவர்களை இனியும் எப்படித் தான் நம்புவதோ? மூலை மூலையாக நின்று குட்டையை குழப்புங்கள் அங்கிருந்து வருபவர்கள்-மீன் அள்ளிச் செல்வார்கள். அதன்பின் அதையும். மக்கள்தலையில் பொறித்துவிட்டு தப்பிக்க எண்ணாதீர்கள். நீங்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? உங்களுக்குத்தான் தெரியும் நீங்களே முடிவெடுத்து படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் அரசியல் ஞானமுள்ள-அந்த இளையோரை அரவணைத்து உரிமைக்காகவும் ஊழலற்ற சமூகத்துக் காகவும் போட்டியிடுங்கள் அப்போது விடியும் எம் தேசமும். இல்லையேல். ???????? அன்புடன் -பசுவூர்க்கோபி.5 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
3 points
-
அமெரிக்க விருந்தாளி - தியா காண்டீபன்
2 pointsஉறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்2 points
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
உலகின் பழமையான மொழி தமிழ் எனக்கூறுகிறார்கள் (5000 வருடங்கள்) ஆனால் கல் மண் இதற்கு முன்னரே தோன்றியதால் உங்களுடைய கருத்துடன் முரண்படுகிறேன்😁.2 points
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
வீரப்பையன், உலகம், அதாவது பூமி தோன்றி 450 கோடி வருடங்கள். ஹோமோ சேப்பியன் மனித இனம் உருவாகி 2 லட்சம் வருடங்கள்.2 points
-
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
எம்மவர்களின் அடுத்தடுத்த தலைமுறை வரலாறுகளைத் தெரிந்துகொண்டு கொண்டாடுகிறார்களோ இல்லையோ தவறான வரலாறுகள் தொடர்ந்தும் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே. அதை எப்படி அடுத்த சந்ததி நம்பாதிருக்க வழி செய்யலாம் என்று யோசியுங்கள்.2 points
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்!
ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் நடைபெறும் பாரளுமன்ற தேர்தலை இவர்கள் பகிஷ்கரிக்கவில்லையா?2 points
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
தமிழரசுக் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது. இதனை முன்னின்று நடத்தியவர்கள் பெருந்தலைவரும் மறைந்த தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன். என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியை விட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரவாயில்லை. சுமந்திரன் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி பலவீனமான கட்சியாகத்தான் இருக்கும். சிறீதரன் அனைவரையும் அனைத்து செல்ல விரும்புகின்றார். சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அதனை விரும்பவில்லை. தற்போதைய தலைவர் மாவை ஐந்து சதத்துக்கும் பிரயோசனமற்றவர். இந்தியா இணைந்து கேட்டு அதிகளவு ஆசனங்களை எடுங்கள். பேரம் பேசலுக்கு அதுதான் தேவை. அதனை விடுத்து இந்தியாவின் சொல்லைக் கேட்டு ஆடும் கட்சி எனில் அது தமிழரசுக் கட்சி. சஜித்தோடு இணைந்து கேட்குமாறு விடுத்த கோரிக்கையை சிரமேற் கொண்டு செய்தவர் சுமந்திரன். பொதுக்கட்டமைப்பை மிரட்டி பணிய வைத்து பொது வேட்பாளரை அகற்றுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையினை உறுதியாக நின்று எதிர்த்தவர்கள் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்களே. இங்கே நான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு செம்பு தூக்கவில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்பது பலம். அதனை அனைத்து இயக்கங்களும் இணைந்து செய்கின்றன. இதனை பாராட்ட வேண்டும். போராளி இயக்கங்களின் கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு இருக்கின்றனர். இது எமது இனத்தின் சாபக்கேடு. தற்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதனை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டுமே தவிர, கடந்த காலங்களைப் பற்றியே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் அதே இடத்தில்தான் நிற்க வேண்டும்.2 points
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
பாவம் கட்டுரையாளர். எப்படியாவது சிறு சிறு கதைகளை எடுத்து முடிச்சு போட்டு எழுதி இவை தான் உறுதியான தகவல்கள் என்று என்ண வைத்துவிட்டார். வடக்குக்கும் இந்தியாவுக்கும் இடையில் விமான இணைப்பு தேவை என்று முதல் பிரேரணை Feb-2014 மாகாண சபை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது (NPC resolution demands transport links between North-East and India - https://www.tamilguardian.com/content/npc-resolution-demands-transport-links-between-north-east-and-india, - . ஆனால் அன்றைய மத்திய அமைச்சர் "இது ஒரு பகிடி" என கூறி பரிகாசம் செய்தார். பின்னர் மீண்டும் May-2017 ல் மாகாண சபை பிரேரணை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது (NPC calls for development of Palaly and KKS with India involvement - https://www.tamilguardian.com/content/npc-calls-development-palaly-and-kks-india-involvement) . இந்த அழுத்தம் இலங்கை Civil Aviation Authority of Sri Lanka அறிக்கையும் இந்தியா அமைச்சர் ஜெய் சங்கர் மைத்திரியுடன் 2016ல் கதைத்த பின்னரும் ஒன்றும் நடக்காமையினால் பின்னர் வந்த ரணிலுக்கு அழுத்தகம் கொடுக்க ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலாவது பிரச்னை இராணுவ பாவனைக்கு தமிழர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை அபிவிருத்தி என்ற பெயரில் விழுங்குவதை தமிழாரால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை (2013-2018) எதிர்த்தது. இந்த காணிகள் இன்றும் தமிழ் கார்டியன் (Tamil Guardian) 25-March-2024ல் (https://www.tamilguardian.com/content/palaly-residents-demand-return-their-occupied-lands) எழுதியபடி விடுவிக்கப்படவும் இல்லை, நஷ்ட ஈடு வழக்கப்படவும் இல்லை. இந்த காணிகள் அன்றைய பந்தோபஸ்து அமைச்சராக (Minister for National Security) வந்த லலித் அத்துலத் முதலி காலத்தில் இருந்து படிப்படியாக மக்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்டவை. இன்றும் காணி விடயம் தீர்க்கப்படாமல்இருப்பது மட்டுமல்ல விடுவிக்கப்பட்ட இடங்களில் இருந்து மேலும் 500 acres பிடிக்க இலங்கை விமான அமைச்சு (Ministry of Aviation) தொடர்ந்து முயறசிக்கிறது. (From Tamil Guardian: According to some residents, out of 6000 acres, they had been given 3000 acres based on the assurance of Wickremesinghe. However, out of this 3,000 the government, particularly the Ministry of Aviation, has been trying to grab hold of 500 acres. ). அதேசமயம் அன்று ராஜபக்ஷ அரசு அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்து தனது இராணுவத்தை பயன்படுத்தி கட்டிட நிர்மாணம் மற்றும் மக்களின் சிவில் நிர்வாகத்தில் இராணுவ கவனர் இருந்து அரச சேவை மற்றும் வைத்திருத்த காலம் (Militarised Civil Service, Militarsied commercial/Industrial actvities) . இவற்றை எல்லாம் புறம் தள்ளி கட்டுரையாளர் ஏதோ மாவையும் சுமந்திரனும் கூரை ஏறி வைகுண்டம் போன கதை எழுதுகிறார் 2019ல்.!! இரண்டாவது நான் சிலவருடங்களுக்கு முன் எழுதியது Air Lanka வுடன் மாகாணசபை பேர்ச்சுவார்தை நடத்தி Long Haul/Wide Body விமானகள் சேவை செய்ய தேவையான விடையங்கள் (sample list in English atached) பற்றி ஆராயப்பட்டு அவை இனம் காணப்பட்டன. குறிப்பாக எரிபொருளை கொழும்பில் இருந்து கொண்டுவருதல், எரிபொருளை சேமித்து வைத்தல், எரிபொருள் நிரப்புதல், விசேட தீயணைப்பு வாகனகள்/ உபகாரணகள் மற்றும் அவசர தேர்வைகளுக்கான விமான திருத்துதல் போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டன. இந்த விடயங்கள் ஒரு விமானநிலையம் குறிப்பிட்ட தர விமானங்கள் பாதுகாப்பாக இயங்க உரிய தகுதிகளை கொண்டது என பதிவு செய்ய மிகவும் தேவையானது (IATA Airport Certification and Infrastructure Standards) . இந்த விடயங்களை கையாள்வது மத்திய அரசின் பொருப்பு. ஆனால் நடக்கவில்லை. இது தவிர வேறு விடையங்கள், விமானம் பறக்கும் பாதை (Flight path/Fuel Dumping) , மக்கள் குடியிருப்புகளுக்கு இரைச்சலால் (Aircraft Noise) பாதிப்புக்கள் போன்ற பல விடயங்களும் ஆய்வில் இருந்தன. இது ஒரு நீண்டகால திட்டம் எனவே எதிர்கால விடயங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டி இருந்ததது மூன்றாவது இந்திய அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari), இலங்கைக்கு கடலுக்கடியிலான சுரங்கம் அமைத்து சார்க் நாடுகளை (SAARC) இணைப்பதில் ஆற்வம் காட்டினார். இதில் இரண்டு பிரச்சனைகள். 1. இலங்கை பேரினவாதிகள் வடக்கு முழுமையாக இந்தியாவின் கையில் சென்றுவிடும் என்று எதிர்த்தார்கள். 2. இந்திய இப்படியான ஒருதிடத்தை தொடங்கினாள் அது விமான சேவைக்கான வருமானத்தை குறைக்கும் என்றும் ஒருபகுதி குறைபட்டு கொண்டார்கள் (increased invesment uncertinity). நான்காவது பயணிகள் நேரடியாக பலாலியில் இறங்கினால் உள்ளக விமான சேவை நிறுவனர், மற்றும் ரயில, பஸ் வருமானம் குறையும் என்று இனொரு தரப்பு எதிவாதம் புரிந்தது. இந்த விடயம் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் இது தான் சுருக்கமாக நடந்த விடயங்கள். Sample List of Issues: 1. Strengthen and refurbish the remaining portion of the runway for its full length 2. Establish a Runway Strip and Runway End Safety Area (RESA)clear of obstacles as per ICAO requirements 3. Construct a Parallel Taxiway and interspaced intersections to the runway in the North Western part of the Runway 4. Construct an Aircraft Parking Apron in the West of the Runway 5. Resurface the present taxiway system and parking stands to enhance parking space. 6. Construct a Control Tower with Suitable height 7. Construct a Terminal Building and provide related facilities 8. Construct a new fire station 9. Construct a Power Station with all necessary electrical installations 10. Install Runway/Taxiway Lighting System and Approach Lighting System 11. Construct a Cargo Building 12. Install a VOR and DME as homing device for aircraft 13. Provide PBN procedures charts for arrivals and departures 14. Install a Precision Approach Landing System (ILS) 15. Construct a Hanger with Aircraft Maintenance Facilities 16. Identify and develop suitable access Roads to airport 17. Develop an area for Pubic parking facilities 18. Provide Water and electricity supply to the airport 19. Provide Railway connection to airport – Jaffna KKS line extension 20. Provide facilities for Aviation Fuel supply 21. Provide Sufficient accommodation facilities for staff2 points
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
இது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விடயம் அல்ல. இதுவே உலக ஜதார்த்தம் தமிழீழம் உருவாகி இருந்தால் தமிழீழ ஜனாதிபதியும் இந்தியாவை அனுசரித்தே நடக்க முயற்சிப்பார். ஆரம்பத்தில் இந்தியாவை ஆக்ரோஷமாக எதிர்த்த புலிகள் கூட உலக அரசியல் சற்றே புரிய தொடங்கிய பின்னர் தமது தவறை உணர்ந்து இந்தியாவுடன் அனுசரித்து போக பல தடவைகள் முயன்றனர். துன்பியல் சம்பவம், அன்ரன் பாலசிங்கத்தின் இந்திய ஊடகத்திற்கான பேட்டி 2002 பேச்சுவவர்த்தையை முழுமையாக இந்தியாவில் நடத்த புலிகளின் முன்மொழிவு என்று பல தடவை இந்தியாவை அனுசரித்து போகவே விரும்பினர். ஆனால் புலிகளில் கடும் போபமுற்றிருந்த இந்தியாஅதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அனுராவினால் இந்தியாவை அனுசரித்து போவதை தவிர்கக முடியாது. ஆனால் இந்தி யாவை அனுசரிக்கும் அதே வேளை தனது நாட்டின் நலன்களை பேணிக் கொள்வதிலேயே அனுராவின் சாமர்த்தியமும் வெற்றியும் தங்கியுள்ளது.2 points
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
முதலில் பலஸ்தீனியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுங்கள், இவ்வாறான பேச்சுக்களை ஈரானிய மக்களே விரும்பமாட்டார்கள் எத்தனை தசாப்தங்களாக இந்த மக்க்ள் அல்லல் படுகிறார்கள்?2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
கடந்த காலத்தை விடுங்கள், இவரின் எதிர்கால வாழ்க்கை மறுபடியும் இப்படி எழுதப்படுமானால் வாழ்த்தப்படக்கூடியது. எங்கள் வலி, தாகம் யாரும் சொல்லாமலே அவருக்கு விளங்கியிருக்க வேண்டும். அப்போது அரசு எதை செய்திருக்க வேண்டுமென போராடினாரோ, அதை அவர் மக்களுக்கு செய்து நிரூபிக்க வேண்டும் தாங்கள் செய்த போராட்டம் நிஞாயமானதென.2 points
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்தியாவின் அடுத்த ஆக்கிரமிப்பு....பொருளாதார,ஆத்மீக ஆக்கிரமிப்பு அன்று பிரித்தானியா நாடுகளை கைப்பற்றி பாலம் ,துறைமுகம்,ரயில்பாதை,மதம் பரப்பினர் இன்று இந்தியா ,சீனா போன்ற நாடுகள் அதை செய்கின்றனர் ..அபிவிருத்தி என்ற போர்வையில்2 points
-
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 01 தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். அதில் இரு கதைகள் முக்கியமானவை. முதலாவது இராமாயணம். இராமர், இலங்கை அரசன் இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு ஆண்டுகள் வன வாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும் பின் இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர். மகாவம்சத்திற்கு முன் இலங்கையை ஆண்ட மன்னர்களில் இவன் ஒருவன் என்றும் இராவணனுக்கு முன் இலங்கையை மனு, தாரக, பாலி [Manu, Tharaka, and Bali] ஆண்டார்கள் என்றும் ஒரு செவி வழி கதை அல்லது புராணம் கூறும். மற்றது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள் ஆகும். நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார். நரகா சுரன் உடன் நடந்த சண்டையில் திருமால் [கிருஷ்ணர்] காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட அவரது மூன்றாவது மனைவி சத்யபாமா? நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடி னார்கள். அதுவே பின் தீபாவளியாக கொண்டாடப் படுவதாக இன்னும் ஒரு செவி வழி அல்லது புராணம் கூறுகிறது. இதில் ஒற்றுமை என்ன வென்றால் ராவணன், நரகாசுரன் இருவரையும் அசுரர்கள் என இந்த புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. சுரர் என்றால் குடிப்பவர் அல்லது கடவுள் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் அல்லது கடவுள் அல்லாதவர், அல்லது கடவுளின் எதிரி என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக 'இருக்கு வேதம்' சொல்கிறது. சோமச் செடியை அவர்கள் தெய்வமாகமே கும்பிட்டார்கள். அசுரர்கள் பொதுவாகவே மேம்பட்ட, முற்போக்குக் கலாச்சாரத்தைக் கொண்டு இருந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்தியா விற்குள் நுழைந்த ஆரியர்கள், அங்கு முன்பே சிந்து வெளி நாகரிகம் அமைத்து வாழ்ந்த பழங்குடியினரான திராவிடர்களை[தமிழர்களை] வென்று அல்லது வறட்சி அவர்களை தெற்கிற்கு துரத்தியது. பின் அவர்களால் எழுதப்படட வேதம், புராணங்கள் எல்லாம் இவர்களை அசுரர்களாக வர்ணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்த வர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள் என்றும் அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள் என்றும் அறிகிறோம். ஆகவே தீபாவளி என்ற பெயரில், உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும் ஒரு திராவிட [தமிழ்] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்! ராமர் என்ற தனியொருவரை தீபத்துடனும் புத்தாடையுடனும் சிறந்த உணவுகளுடனும் கொண்டாடட்டும். அதே போல கிருஷ்ணாவையும் கொண்டாடட்டும். அதில் ஒருவருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், ஏன் ஒரு மரணம் கொண்டாடப் படவேண்டும்?. காலிஸ்தானார்கள் இந்திரா காந்தியின் படு கொலையை விழாவாக கொண்டாடினால், அதற்கு நீங்கள் எவ்வாறு முகம் கொடுப்பீர்கள்? சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி, ஆயுதம் ஏந்திய தீவீரவாதிகள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் புகுந்துகொண்டனர். பொற்கோயிலிலிருந்து அவர்களை அகற்ற இந்திரா காந்தியின் உத்தரவில் ராணுவம் எடுத்த நடவடிக்கை யின் போது பொற்கோயில் சேதம் அடைந்தது. மற்றும் தீவீரவாதிகளும் யாத்ரிகர்களும் குருத்வாரா ஊழியர்களும் உட்பட 492 பேர் இறந்தனர். இதனால் ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களுக்கு இந்திரா காந்தி ஒரு மோசமான பெண். மறவர்களுக்கு அவள் ஒரு நல்ல பெண். ஆகவே கொலை மற்றும் எதிர் கொலை போன்றவை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாறக்கூடாது. இது, இருதரப்பினர்களுக்கும் இடையில் அவர்களின் பகையான உறவை ஞாபகப்படுத்தவே உதவும். ராமர் ராவணனை கொல்வதை பற்றியும் கிருஷ்ணன் நரகாசுரனை கொல்வதை பற்றியும் புரிதல் வடக்கு தெற்கு இந்தியாவில் மாறுபட்டு காணப்படுகிறது. அது போல இலங்கையும் காணப்படுகிறது. தீபாவளி விழா தீபத்துடனும் புத்தாடையுடனும் வழிபாட்டுடனும் நின்றுவிட வில்லை. ராவணனின் கொடும்பாவி எரிப்பும் நடைபெறுகிறது. இது ஒரு கவலைக்குரிய நிகழ்வாக இருப்பதுடன் குறிப்பாக கேள்வி ஒன்றையும் எழுப்புகிறது. சிலருக்கு உருவ பொம்மை எரித்தல் வெடி கொழுத்துதல் போன்றவைக்கு எதிரான காரணம் ஒரு சுற்றாடல் விடயமாக இருக்கலாம். ஆனால் பலருக்கு இது வந்தேறு குடிகள், பழங்குடி சமூகத்திற்கு எதிராக செய்த அட்டுழியங்களையும் மற்றும் கொலைகளையும் நினைவு படுத்தும் நிகழ்வாக இருக்கும். சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் 3300–1500 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. பொது யுகத்துக்கு முன் 1500 அளவில் கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களின் படையெடுப்பால் இவர்கள் தெற்கிற்கு துரத்தப்படடார்கள் அல்லது அதே காலகட்டத்தில் வறட்சியால். அதுமட்டும் அல்ல அமைப்பு முறையான சாதி பாகுபாடு போன்றவை அங்கு நிறுவப்பட்டன. இவற்றை ரிக் வேதத்தில் தாராளமாக காணலாம். இவைகளின் விளைவே பழங்குடிகளை இழுவுபடுத்தி, எழுதப்பட இதிகாசம், புராணங்கள் ஆகும். இதன் அடிப்படையிலேயே இந்த தீபாவளி கொண்டாடப்டுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு தேசமோ ஒரு தேசத்தின் ஒரு பகுதியோ ராமரின் பிறந்த தினத்தையோ அல்லது முடிசூட்டு விழாவையோ கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் ராவணன் உருவப் பொம்மை ஏன் எரிக்க வேண்டும்? திராவிடர்கள் ராவணனை தங்கள் பிரதிநிதியாக கருதுகிறார்கள். "செங் கயல்போல் கரு நெடுங் கண், தே மரு தாமரை உறையும்,நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம்? என்ன" என்று ராமர் வர்ணிக்கும் ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும், முலையையையும் ராமரின் ஏவல் மூலம், இலட்சுமணன் அரிந்ததிற்கு எதிர் நட வடிக்கையாகவே சீதையை ராவணன் கவர்ந்தான் என நாம் கருதலாம்? மேலும் ராவணன் எந்த சந்தர்ப்பத்திலும் சீதையை கெடுக்க வில்லை. சூர்ப்பனகையையும் சீதையையும் அவர்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதை, சம உரிமை உள்ள பெண்ணாக பார்க்கிறார்கள். ஏன் ராவணனை மட்டும் பூதாகரமாக சித்தரிக்க வேண்டும்?. தீய, கொடூரமான மனம் படைத்தவர்கள் மட்டும்தான் மரணத்தை விழாவாக கொண்டாடுவார்கள். ஒரு பல் கலாச்சார தேசம் ஒன்றில், இறப்பை இன்றி பிறப்பை வழிபாடும் உரிமையை நாம் எல்லோரும் பாதுகாக்க வேண்டும். நாம் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித் திறன் போன்ற வற்றை கொண்டாட்ட வேண்டும் , அழிவை அல்ல. இந்த தீபாவளியில், நாம் என்னத்தை கொண்டாடுகிறோம்?, நன்மையின் அல்லது தீமையின் வெற்றி என்று நாம் கூறும் போது நாம் என்னத்தை கருதுகிறோம்? அல்லது தங்கள் நாட்டையும் இறைமையையம் பாதுகாக்க, தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் மரணத்தை தான் நாம் கொண்டாடுகிறோமா? என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக புராண இலக்கியங்கள், மேலாதிக்க வர்க்க மக்களால், தங்கள் ஆதிக்கத்தை தக்கவைக்கவும், அதே நேரம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை இல்லாமல் ஒழிக்கவும் எழுதப் பட்டவை என்பது எமக்கு தெரியும். ராவணன் திராவிடர்களின் தமிழரின் பிரதிநிதி என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. ராமாயணத்தைப் பற்றி பலவிதமாக படிக்கிறார்கள், கதாபாத்திரங்களின் தன்மையை பல தரப் பட்ட முறையில் புரிந்து கொள்கிறார்கள். அப்படியே ராமரையும் ஆகும். அப்படியே தர்மம் அதர்மம் போன்றவற்றின் கருத்தும் குழுக்களுக்கும் குழுக்களுக்கும் இடையில் வேறுபடுகின்றன. ஆகவே ராமரை வழிபட விரும்புபவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. அது போல, ராவணனை வழிபட விரும்பு பவர்களுக்கும் அதே உரிமை உண்டு. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கிருஷ்ணன் கொன்ற தற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக வேறு சிலர் தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறார்கள். ராவணன் போல நரகாசுரனும் பழங்குடி மக்களின் பிரதிநிதியாகும். அவன் ஒரு மாவீரன். புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்படும் ஹிரண்யன், ஹம்சன், இடும்பன், பகவன், ஹிரன்யச்சதா, அன்டாகசுரர் உள்ளிட்ட பல அரக்கர்களையும் இப்படி இந்து தெய்வங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சூழ்ச்சியாலும் தந்திரங்களாலும் யுத்த தர்மத்திற்கு எதிராக கொன்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் கேட்க்கிறேன், ஏன் மரணம் கொண்டாடப் படவேண்டும்? ராஜிவ் காந்தியின் படு கொலையை சிலர் விழாவாக கொண்டாடினால், நீங்கள் எப்படி முகம் கொடுப்பீர்கள்? பலர் இன்னும் இலங்கையின் பல மரணங்களுக்கு மற்றும் பேரழிவிற்கு இவரே காரணம் என இன்னும் நம்புகிறார்கள். 21 அக்டோபர் 1987, யாழ்பாண மருத்துவமனையில், அதுவும் தீபாவளி அன்று 68 மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிலருக்கு ராஜிவ் காந்தி நல்ல மனிதர், ஆனால் மற்றவர்களுக்கு அவர் ஒரு கொடூர மனிதர். இது அவர் அவர்களின் நிலையையும் புரிதலையும் பொறுத்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்1 point
-
வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers' Images
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற வேவுப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" "எத்தனை எத்தனை மாபெரும் வெற்றிகள் வேங்கைகள் கண்டது எங்கள் நிலம்? அத்தனை மாபெரும் வெற்றிக்கும் காரணம் வேவுப்புலிகளின் ஆய்வுத்திறம்!" --> அடிக்கற்கள் இறுவட்டில் இருந்து எடுக்கப்பட்டது கெடுவேளையாக இவர்களின் இலச்சினை வரலாற்றில் விடுபட்டது! இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:1 point
-
"பல்கலைக்கழக வாழ்வின் என் நினைவு" - 04/10 பேராதனை பல்கலைக் கழகம் சென்ற தினம்] / "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya]
"பல்கலைக்கழக வாழ்வின் என் நினைவு" - 04/10 பேராதனை பல்கலைக் கழகம் சென்ற தினம்] / "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும் இணைந்த கைகளாய், நம்மையும் உலகத்தையும் அறிந்தோம்" "கொஞ்ச ஆண்டு உருள, நண்பர்களை நினைத்தேன் நெஞ்சு நனைய, கண்கள் கண்ணீர் சிந்தின விஞ்சும் வேகத்தில், ஓயாத பலரின் வாழ்வு குஞ்சும் கோழியுமாய், ஊர் உலகம் சுற்றின" "பற்பல ஆண்டுகளின் பின், மீண்டும் கூடுகிறோம் உற்சாகமாக அன்று விட்டுச்சென்ற, அதே இடத்தில் அற்புதமான மகிழ்ச்சியையும், தொலைத்த கிண்டலையும் உற்ற நண்பர்களையும், இதயத்தில் மீண்டும் சிறைபிடிக்க" "அன்று கழித்த நேரம், இன்னும் இதயத்தில் பசுமையாக இன்றும் என் நெஞ்சில், அந்த கிசுகிசுப்பும் கேலியும் குன்று குன்றாய் மரத்தில் வளரும், இலைகளின் கொத்தாய் சான்றாய் நின்றன, அந்த நினைவுகள் என்றும்" "சந்திக்கிறோம் மீண்டும், மனதில் இன்பம் பொங்குது சிந்திக்கிறோம் இளைஞராக, உடலில் துடிப்பு பிறக்குது நிந்தனை செய்கிறது, இன்றைய கவலை கடமை வாழ்வை வந்தனை செய்து, அன்றைய நினைவை மனதில் பதிக்குது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] "We sought enjoyment, we inflicted sarcasm One thousand songs fill our souls The withered heart flowers again, and Dances at the thought of getting together" "With fear and trepidation we made it through Year One We lifted ourselves to meet Challenges in Year Two We boldly set forth in Year Three To blossom with mature knowledge in Year Four" "Lots of study between some love and fun Less and less play with exams nearly begun The mind was numb as the learning came to an end The curtain came down as the passing time flew" "University life faded in our minds The good stayed with us, the bad did not Neither ethnic divide nor prejudice tainted us We learned of ourselves and of the world" "As years rolled, I remembered old friends Teared at the thought of past good times Faced the never-ending battles of life As families and friends moved far and wide" "Fifty years on, we gather again In the place we left behind to conquer the world To rediscover old joys and laughter among old friends And to refresh our hearts and our souls" "The time we spent together is still fresh in the heart. All the gossip, all those jokes, remembered still. Like the leaves crowding a tree The memories will always stay with me" "Everything is fresh in our minds as we meet again. Let's laugh, play and rejoice as of old. E’en with life’s many commitments and countless cares Etched in our hearts, those cherished moments will forever stay" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]1 point
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித் அவர்களே வணக்கம், நீங்கள் தேடியெடுத்துப் பதிவிடும் இந்தத் தொடர் ஊடகத் தரவுகளை சேமித்து வைப்பீர்கள் என நம்புகிறேன். இவை தமிழர்கள் அறியவேண்டிய விடயங்கள். திரிக்குத் தடையேதும் ஏற்பட்டாலும் உங்களிடம் இருந்தால் சிங்கள இனவாதக்கட்சிகளின் சுய முகம் என்று ஒரு தொகுப்பாகவேணும் வைத்திருப்பது பிற்காலத்திலும் தேவையானது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தலைவர் பிரபாகரனிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி பதிவுசெய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளச் சம்மதம் 05 பங்குனி 2002 தலைவர் பிரபாகரனிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்று கூறி தீவிர சிங்கள இனவாதிகளின் கூடாரமான மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை விசாரிக்க அந்நீதிமன்றம் முடிவுசெய்திருக்கிறது. இந்த முறையீட்டில் நடைமுறையில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை உடனடியாகச் செல்லுபடியற்றதாக தடைவிதிக்கும் உத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியிருந்தது. தனது முறையீட்டில் தலைவர் பிரபாகரன், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சட்டவாளர் நாயகம் ஆகியோரைப் பிரதிவாதிகளாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டிருந்தது. இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்றிற்குள் நாட்டின் பிரதமர் கைச்சாத்திட்டிருக்கிறார் என்பதனால் அவர் நாட்டின் அரசியலமைப்பினை மீறிச் செயற்பட்டிருக்கிறார் என்பதனை அடிப்படையாக வைத்தே இவ்வழக்குத் தக்கால்செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இனவாத மக்கள் விடுதலை முன்னணியினருடன் இணைந்து பேச்சுக்களை குழப்பும் நோக்கில் இயங்கிவரும் இன்னொரு சிங்கள இனவாதக் கட்சியான சிகல உறுமய பதிவுசெய்த முறையீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதிவாதிகளுக்கான அறிவித்தல்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுப்பிவைத்திருப்பதாக அறியக் கிடைக்கிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=67521 point
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
அங்கையிருக்கிறவன்கள் தோட்டம் துரவுகளுக்கு போக மாட்டாங்கள். இதுக்கும் புலம்பெயர் தமிழன்கள் தான் தோழ் குடுக்கவேணும்......? 😂1 point
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
அநுரகுமார திசாநாயக்க வெற்றிக்கு சிங்கல சமுக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியிருக்கும். தமிழ் சமுக ஊடகங்கள்பற்றி விபரம் தெரிந்த சிலர் சொல்வது பல தமிழ் யூரியுப்பர்கள் அநுரகுமார திசாநாயக்கவை அவர் வெற்றி பெற்ற பின்பு ஆதரிக்கின்றனர். புதிதாக பல தமிழ் யூரியுப்பர்களும் திடீர் என்று அவருக்கு பிரசாரம் செய்ய இப்போது தோன்றியுள்ளனர்.1 point
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்தோன்றி மூத்தகுடியின் வாரிசு வசியா இப்படி சொல்வது1 point
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
🤣........... பையன் சார், நீங்க அந்த வீடியோவை வடிவாகப் பார்த்தனீங்கள் தானே....... சசிகலா ஆன்டி முன்னுக்கு நின்று பேசப் பேச, பின்னுக்கு நின்று ஒருவர் ( இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா?) அந்தப் பேச்சுக்கு எற்ற மாதிரி தலையை ஆட்டி ஆட்டி அபிநயங்கள் பிடிப்பார்.............. அது ஒரு கலைநயம்............🤣.1 point
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
ஈரான் சும்மா இருந்தாலும் ஈரானின் நட்பு நாடுகள் மீது இஸ்ரேல் கண்மூடி தனமாக குண்டு மழை போடுகினம்.................ஈரான் தனிய நிக்க வில்லை ஈரானுக்கு பின்னால் ஆயுதத்தில் பலம் வாய்ந்த நாடுகளும் துணையாக நிக்கினம்...................எல்லா அழிவுக்கு இஸ்ரேல் தான் காரனம்..........................1 point
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
யாழ் களத்தில் எல்லோருடைய சாயமும் வெளுக்கிற நேரம் சிறியர். கொஞ்சக் காலம்தான் விட்டுப் பார்ப்போமே,... 😁1 point
-
சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி
சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு இப்ப எத்தினை வயசு. அவர் இளைஞரா? சுமந்திரன் தானே… இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று, பெரிய பருப்பு மாதிரி முந்தநாள் அறிக்கை விட்டுட்டு இப்ப விலகிச் சென்ற சார்ள்சை போட்டியிட பிடித்து இழுக்கின்றார். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாவிட்டால்…. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அறிக்கை விட்டு, மோட்டு வேலை பார்க்க வேண்டும். பேசாமல் பொத்திக் கொண்டு இருந்திருக்கலாமே.1 point
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இதோ பாருங்கள் இந்திய தரத்துக்கு தரமுயர்த்தப்ட்ட பலாலி சர்வதேச விமான நிலையத்தை. நிமிடம் 25:45 இல் இருந்து பாருங்கள் https://www.youtube.com/watch?v=2qX7NHUj2Zg1 point
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
என்னத்த தரம் உயர்த்தினவையாம்.இன்னும் ஒரு பெரிய பிளேன் இறங்க முடியாதாம்.அதோட இலங்கை நினைத்தாலும் இந்தியவின் அனுமதி இல்லாமல ஒன்றும் செய்ய முடியாதாம்.1 point
-
யாரைத்தான் நம்புவதோ?
1 pointபொறுமையுடன் கவிதை பார்த்து உங்கள் பொன்மொழியால் ஊக்கம்தந்த எங்கள் தமிழ்சிறி அவர்களுக்கு! என் நெஞ்சார்ந்த நன்றிகள்.1 point
-
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்
எல்லா நாய்களும் குலைக்குதுகள் எண்டு சுப்பையரிண்ட பேத்தைக் குட்டியும் ஓடிப்போய் நிண்டுகொண்டு தானும் லொள் லொள் எண்டிச்சாம்!😂1 point
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஒரு விளையாட்டையும் மிச்சம் வைக்கிறேல்ல போல....நான் பொம்புளையளின்ர விளையாட்ட பாக்கிறேல்ல 🤣1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நீங்கள், அவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில்…. ஊகத்தின் அடிப்படையில் சொல்லாமல் அதற்குரிய ஆதாரத்தையும் இணைத்தால் நன்றாக இருக்குமே. நம்பகத் தன்மையான தகவல்களைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நீங்கள் ஒருவரின் பிரச்சார பீரங்கியாக இல்லாமல்…. நம்பகமான தகவலை தாருங்கள் ப்ளீஸ். பிற்குறிப்பு: வர இருக்கும் தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம் இதுவரை… ஒரு கட்சிக்கும் உத்தியோக பூர்வமாக சின்னத்தை ஒதுக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன்.1 point- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும் தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல். அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள். கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள JVP யிலிருந்து இரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில் செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார். ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது! ஏனெனில் இப்போதுள்ள பேஉம் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில் இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பேஉம் குடைசலாகவே இருக்கும்!அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும். அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை. உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயமல் பார்த்துக்கொள்ளவும் அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை. அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின!! இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் " சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது" என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர். இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன? குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன? புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும் தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏறபடுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா? அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை! ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை! இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை! ஈழ போராட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர... ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்! JVP கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு!! ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்! அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம். நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு! நன்றி மதுசுதன் 23.09.2024 WhatsApp பகிர்வு1 point- எங்கள் அம்மாவின் பிறந்தநாள் நினைவுகள் இன்று [05/10/1917-14/08/2009]
எங்கள் அம்மாவின் பிறந்தநாள் நினைவுகள் இன்று [05/10/1917-14/08/2009] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் நீயம்மா -என் கண்கண்ட தெய்வமும் தாயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உன்தம்மா -என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியே.... நான் மீண்டும் ஒரு முறை வேண்டும்....உன் கருவறை என் உழைப்பும் முன்னேற்றமும் உன் கனவே -உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே.... வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா.... தாயின் காலடி வாசமும் ஒரு ஆலயமே....அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான் கண்ட முதல் வைத்தியரும் நீயே.... மண்ணும் பெண்ணும் உய்ர்ப்புடமை அம்மா....தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா -என் அழுகையில் பதறி சிரிக்கையில் மகிழிந்த்வளே.... நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே என்றும் நான் உன் மழலை அம்மா....தெய்வம் உனக்கு தந்த குழந்தை அம்மா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "அன்பின் இலக்கணம் அன்னை ஆகி அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்! அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!" "பாதிக்கும் இடர்களை தானே தாங்கி பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்! குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள் குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையில் துணை நின்று நமதவறுகள் மன்னித்து ஒன்று சேர்ப்பாள்! கடையன் என்று பிறர் சொலினும் கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை வானவன் படைத்ததிலே எதுவுமே புதுமையில்லை தாயைப் படைத்தானே அதற்கு இணையேயில்லை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அவர் தான் அங்க நின்று நடத்திறாரோ?!1 point- 13வது திருத்தம் - மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் பேச்சு – இந்திய வெளிவிவகார அமைச்சு
சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி சலிக்கவில்லையோ இவர்களுக்கு? கடந்த காலங்கள், அது நடைபெறாதென நிரூபித்துள்ளன, சட்டத்தாலும் தமிழர் தாயகத்தை பிரித்தாயிற்று. இப்போ, அங்கிருக்கும் முஸ்லீம், நமது இனத்துரோகிகளும் இணைய விடமாட்டோம் என போராடுகிறார்கள். இவர்கள் இந்த துண்டை தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள் உறவை வளர்க்க, வாழ்த்துசொல்லவென. நான் சொல்லுறது போல சொல்லுறன், நீ மறுக்கிற மாதிரி மறு, இரண்டு பக்கமும் நான் குளிர் காய்கிறேன்.1 point- மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
🤣............ பையன் சார், ஒன்றுக்கு இரண்டு தடவை மனசுக்ககுள் சொல்லிப் பார்த்துப் போட்டுத்தான், இதை எழுதுகின்றேன். 'இந்த வயசில என்னத்தையாம் ரசிக்கப் போகிறாய்............' என்று யாராவது வம்புக்கு வந்தால் என்ன செய்வது..........😜. இதுவரை மகளிர் கிரிக்கெட் பார்த்ததில்லை, பையன் சார். அதனால் அவர்கள் கிரிக்கெட் விளையாடும் அழகையும் பார்க்கும் பேறு இதுவரை கிட்டவில்லை. கிருபன் களத்தில் ஒரு போட்டி வைத்திருந்தார் என்றால், இரண்டையும் ஒன்றாகப் பார்த்திருக்கலாம். நீங்கள் விளையாட்டு பார்க்கின்றேன், விளையாட்டு பார்க்கின்றேன் என்று படு விசயமாகவும் இருக்கின்றீர்கள்.......... நான் அமெரிக்கன் புட்பால், ரக்பி என்று கடுவன்களின் கடுமையான விளையாட்டுகளை தேவையில்லாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் போல...........1 point- சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
நான் எங்கே என்று… அடித்தும் கேட்பாங்க, ஒன்றும் சொல்லிப் போடாதீங்க. 😂 🤣1 point- சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
தம்பி, ஜோக்கடிச்சா சிரிக்க வேணும், ஆராயக் கூடாது1 point- தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
சுரேஷ் தமிழர் என்பதால் தான் பேச வேண்டியிருக்கிறது. சிங்களவன் தமிழரைக் கொல்வது புதுமையா? அப்படியிருந்தும் சிங்கள தேசியவாதி அனுரவின் அணி தமிழர்களை நேரடியாகக் கடத்திச் சென்று, சித்திரவதை செய்து, மண்டையில் போட்டு வீதியில் வீசியமை இது வரை நடக்கவில்லை. இனி நடந்தால் அது வேறு கதை. உங்களைப் பொறுத்தவரை, சுரேஷ் என்ற மண்டையன் குழுத் தலைவரின் கதை, அவர் 2002 இல் புலிகளின் தோட்டாக்களின் மீதான பயத்தால் "புலிகளையும் தமிழ் தேசியத்தையும் சிரமேற் சுமக்க ஆரம்பித்த நாள்" முதல் தான் ஆரம்பிக்கிறது. எங்கள் போன்றவர்களுக்கு 89 இல் பள்ளிக்கூடத்திற்கும், விளையாட்டு மைதானத்திற்கும் கூட ஒளித்துத் தான் போக வேண்டிய அவல நிலையோடு இவர்களின் கதை ஆரம்பிக்கிறது. என் சமகால பாடசாலை வகுப்பினரிடையே, இந்த ஒட்டுண்ணிகளின் தொல்லையால் படிப்பை விட்டு வெளிநாடு போய் தம் எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப் பல கல்வி ஆர்வத்துடன் இருந்த அப்பாவி இளையோரை ஊரை விட்டுத் துரத்தி விட்டு, பின்னர் தமிழ் தேசியத்தை தலையில் தூக்கிக் கொண்டு பா.உ ஆன சுரேஷ் ஒரு ஒல்லிப் பித்தானாக இருந்த ஆயுததாரி. இப்ப பா.உ பதவியால், எல்லாப் பக்கத்தாலும் ஊதிப் பருத்து சொகுசாக இருக்கிறார். இவர் போன்றவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!1 point- சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
முதலாவதாக தேடப்படுவபர் @தமிழ் சிறி,1 point- மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
உந்தக் குசும்பு தானே… வேண்டாம் என்கிறது. 😂1 point- பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
டக்ளசின் கட்சி ஏற்கனவே பலமுறை தீவு பகுதிகளில் வென்றிருக்கிறது, கருணாவும் ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் ராஜாங்க அமைச்சர் ரேஞ்சுக்கு இருந்திருக்கிறார். இவர்கள் இருவரையுமே தமிழர்கள் பிரதிநிதிகளாக எண்ணி தமிழர்களும் பார்த்ததில்லை சர்வதேசமும் அணுகியதில்லை. எந்த நாட்டிலும் 100% ஒரே கட்சியே வென்றதில்லை தம்மால் சலுகைகளை பெற்றவர்கள் ஆதரவில் ஒரு சில இடங்களில் அவர்களும் ஆளுமை செலுத்ததான் செய்வார்கள், அதனால் அவர்களே தேசியத்தின் தூண்கள் என்று எவரும் சொல்வதில்லை. பணபலம் அதிகார பலம் அரசியல் செல்வாக்குபலம் இவற்றைக்கொண்டு தேர்தலில் வெல்பவர்களை துரோகிகளா பார்க்கிறார்களோ இல்லையோ அவர்களை ஒரு இனதேசியத்தின் காவலர்கள் என்று எவரும் சொல்வதில்லை. தமிழர்தொகுதிகளில் அதிக இடங்களை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள்கூட தமது கடமையை சரியாக ஆற்றாவிட்டால் சொந்த இனத்தினால் அவர்களும் தூக்கி எறியபடுவார்கள், அதற்கான வாய்ப்பு வரும் பொது தேர்தலில் நிறையவே உண்டு.1 point- The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
தமக்கே உரித்தான முகம் காட்டி, "இந்த அப்பன், ஆத்தா என்ற பேச்செல்லாம் பொது வாழ்க்கைக்கு நல்லதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பொறுப்புடன் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பாடம் எடுத்தார் - நிவாரண நிதியைப் பிச்சை என்று பொது வாழ்க்கைக்கு உகந்த (!) மொழியில் பேசிய, மக்களால் தேர்ந்தெடுக்கவே படாத நிர்மலா சீதாராமன். சுய முரண் (self contradiction) என்பதெல்லாம் அனைத்துக் கட்சி அரசியலிலும் சகஜம்தானே ! நிர்மலா சீதாராமனின் பதில் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "அப்படியா ? சரி, மாண்புமிகு நிதியமைச்சரின் மதிப்பிற்குரிய அப்பாவின் காசையா கேட்டோம் ?" என்று உதயநிதி ஸ்டாலின் பதிலிறுத்தார். அத்துடன் அந்த எபிசோட் இனிதே முடிவடைந்தது என்று நினைக்கிறேன்.1 point- பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
அடுத்தவர் பிரச்சனையை எம் வீட்டு பிரச்சனையாக நினைத்து எமது சமூகமும் ஊடகங்களும் 100% பொங்கியெழுவது, ஆண் பெண் காதல் கல்யாணம் ஓட்டம் விவகாரங்களில் மட்டும்தான். ஒரு சமூகத்தின் வாழ்க்கைமுறையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அந்த சமூகத்தின் வறுமை, கல்வி வேலை வாய்ப்பு, கவனிப்பாரற்ற குடும்பங்கள், விதவைகள், பெண் தலைமைத்துவத்தில் மட்டும் வாழ்க்கையோடு போராடும் குழந்தைகள், மருத்துவம், மாற்றுதிறனாளிகள், தகர கொட்டைகைகளில் வெயில்காலத்தில் நெருப்புடனும், மழைகாலத்தில் வெள்ளத்துடனும் பாம்பு பூச்சிகளுடனும் குழந்தைகளுடன் அல்லாடும் ஏழைகள் என அனைத்து விடயங்களுக்காகவும் இதே வேகத்தில் அக்கறை செலுத்தினால் இந்த அஞ்சலோட்டங்கள் பற்றியும் பேச அருகதை கொண்டுள்ளோம். சிறுமி அல்லது சிறுவன் வயதில் உள்ளவர்கள்மீது தவறான காதல் , தனித்து அழைத்து சென்று குடும்பம் நடத்துதல் என்றால் மட்டும் எம்மில் யார் வேண்டுமென்றாலும் இதுபோன்ற செய்திகள் பற்றி பேச உரிமை கொண்டுள்ளோம் , மற்றும்படி இது விவாதத்துக்குரிய ஒரு விஷயமல்ல அது அவரவர் மனமொத்த விஷயம். தம்மை சுற்றியவர்கள்பற்றி எந்த கவலையும் கொள்ளாது தமது வாழ்வை தீர்மானிப்பவர்கள் பற்றி சுற்றியிருப்பவர்கள் எதற்கு மனம் நொந்து சாவணூம்? இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் மேலைநாடுகளில் அடுத்தவர் வாழ்க்கைமுறையை விமர்சிப்பது மூக்கை நுழைப்பது விவாத பொருளாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
என் தாய் மொழியில் எனக்கு எந்த குழப்பமும் வராது. ஒரு சிறுபான்மை இனம் பல துறைகளில் கோலோச்சினர். பெரும்பான்மையினர், இதனால் எரிச்சல் கொண்டனர். இது சரியானது.1 point- இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்திரா காந்தியின் தோழி சிறிமா பண்டாரநாயக்க கூட சீன ஆதரவாளர் தான். எனவே காந்தி தேச வெருட்டல்கள் சிறிலங்காவில் எடுபடாது. சிங்களவர்கள் ஹிந்தி பாட்டு கேட்பதுடன் தமது இந்திய உறவை நிறுத்தி விடுவார்கள்.🤣1 point- இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....1 point- இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட். சிறிலங்காவில் சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.1 point - புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.