Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20012
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10209
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/11/24 in all areas

  1. இது தாயகத்தில் இருந்து வந்ததா என்பது சந்தேகம். தலையங்கம் ஊரில் வாழும் தமிழர்களை இழிவு படுத்துவதாக‌ உணர்கின்றேன். நாங்கள் தேசிய மறதி நோயாளிகளா? அப்ப இதற்கு மருந்தென்ன? 70 களில் இருந்து மாறி மாறி வந்த பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றுமே எங்களுக்கு உருப்படியான ஒரு தீர்வையாவது தரவில்லை. இனிமேலும் தரப்போவதுமில்லை யார் இப்பொழுது இந்த ஜேவிபி எங்களுக்கு எல்லாம் தரப்போவது என்று கூறினோம்?. இவன் இன‌வாதியால்ல என்று கூறினோமா? மாதாம் 50,000 ஆயிரம், 60 ஆயிரம் ரூபா ச‌ம்பளம் வாங்கும் எங்களுக்கு ஏதாவது மாற்றம் தேவை என்றுதானே இவர்களுக்கு வாக்களித்தோம். ஏதும் நம்பிக்கை பொறி தெரியுமா? பஸ் கட்டணம் கொஞ்சம் குறையாதா? ஊழல்கள் குறையாதா? எங்கள் வாழ்க்கைதான் இப்படி போரிலும் அழிவிலும் போய்விட்டது. பிள்ளைகளாவது பிரச்சினையின்ன்றி கெம்பஸ் முடிக்குமா? அரச ஆஸ்பத்திரிலாவது ஒரளவு நல்ல மருந்தாவது கிடைகாதாப்பா? விலைவாசி கொஞ்சமாவது குறையாதா என்ற ஒரு நப்பாசையில், வேறு எந்த தெரிவுகளுமின்றி, அட இந்த முறை இவனுக்கு வாக்களித்து பார்ப்போமே ஏதாவது மாற்றம் வந்தால் என்ற பிள்ளையாவது நல்லா இருந்து விட்டு போகட்டும் என்றல்லவா இவனுக்கு வாக்களிததோம். வெளி நாடுகளில் வாழும் நீங்கள் அப்பப்போ எங்களுக்கு பண உதவி செய்கின்றீர்கள், அதற்கு நன்றி. நீங்கள் வசதியாக இருக்கின்றீர்கள், உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கின்றார்கள், திருமணம் முடித்து வசதியாக வாழ்கின்றார்கள். ஏலாத பட்சத்தில் தானே உங்களிடம் இவ்வாறு கையேந்துகிறோம். எங்காவாது ஒரு பிடி கிடைக்கதா என்று வாழும் எங்களை ஏன் மறதி நோயாளி, அம்னிஷியாகாரன், டைமென்சியாகரன் என்று அழைக்கின்றீர்கள். அனுரவுக்கு வாக்களித்ததினாலா? இது என்னுடைய உரிமை/தெரிவுதானே? என்னுடைய சூழ்னிலை அப்படி அதைவைத்து தானே என்னால் முடிவெடுக்க முடியும். சரி ஐயா நங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கோ? உங்களில் தங்கி வாழ்வதனால் நீங்கள் வெளி நாட்டில் இருந்து போடும் எல்லா கட்டளைகளையும் கை கட்டி, வாய்பொத்தி செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றீர்களா? வாக்களிப்பது என்னுரிமையல்லவா? நாங்கள் என்ன செய்யவேண்டும் ஐயா?
  2. ஸ்ரீவாணி மேடம் பொத்தூரி விஜயலட்சுமி மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள். “எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. “அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. “சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ பார்த்து யாரோ என்று நினைக்கிறீங்க நீங்க” என்றாள் சாவித்திரி. “இல்லை சாவித்திரி. வருவது அவுங்கதான்” என்றாள் பத்மா. அதற்குள் ஸ்ரீவாணி அருகில் வந்துவிடவே, பத்மா கைகளைக் குவித்து, “வணக்கம், மேடம்” என்றாள். புன்னகையுடன் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அவர்களைக் கடந்து சென்றாள் ஸ்ரீவாணி. “என்ன ஆச்சு இவுங்களுக்கு? இன்று ஏன் இப்படி இருக்காங்க?” என்று கேட்டாள் பத்மா. “உண்மைதான். என்ன ஆயிற்றோ தெரியவில்லை” என்றாள் சாவித்திரி. வியப்போடு அவள் சென்ற வழியையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேருந்து வந்து ஹாரன் ஒலி எழுப்பியவுடன் திடுக்கிட்டு பஸ்ஸில் ஏறினார்கள். பஸ்ஸில் அமர்ந்த பின்னும் ஸ்ரீவாணியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தர்கள். ஸ்ரீவாணி நல்ல வழக்கறிஞராகப் பெயரெடுத்த பெண்மணி. அவளுடைய கணவன் ரங்கசாயி, இஞ்சினியரிங் படித்த பின் இரட்டை பிஹெச்.டி. செய்தான். அமெரிக்காவுக்குச் சென்று பதினைந்து ஆண்டுகள் இருந்துவிட்டுத் திரும்ப வந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலை அமைத்தான். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஸ்ரீவாணி தன் கம்பெனியின் லீகல் விவகாரங்களைப் பார்த்துக் கொள்வாள். அதோடு சமூக சேவைகளிலும் ஈடுபடுவாள். பத்மா தான் வேலை செய்யும் கம்பெனியின் பெண்கள் தின விழாவுக்காக ஸ்ரீவாணியைத் தலைமை தாங்க அழைத்தாள். அவள் வந்தாள். நல்ல உயரமும் உடல் வாகுமாக பார்ப்பதற்கு அழகான வடிவம். கழுத்தில் இரட்டை வட தாலிச் சங்கிலி. கருகமணி. கை நிறையத் தங்க வளையல்கள், காதுகளில் வைரத்தோடு. காஞ்சீபுரம் பட்டுப் புடவை. இவை எலலாவற்றையும் விட அதிகமாக மனதைப் பறிக்கும் புன்னகையோடு விளங்கிய அந்த உருவத்தைப் பார்த்து மெய் மறந்த சபையினர், அவளுடைய உரையைக் கேட்டு மேலும் பரவசமடைந்தனர். “தற்போதைய சமுதாயத்தில் பல பெண்கள் மன உளைச்சலால் அவதிக்குள்ளாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் டாக்டர்களைச் சுற்றி அலையாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியை தேடிக் கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரம் பிறரைப் பற்றி யோசித்து அவர்களுக்கு நன்மை செய்ய முன் வரவேண்டும். அவர்கள் நம் உறவினர்களாகவோ நண்பர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று தேவையில்லை. கண்ணுக்கு எதிரில் தெரியும் யாராயிருந்தாலும் சரி, அவர்களின் கஷ்டங்களை நம் கஷ்டங்களாக எண்ணி அவர்களுக்கு உதவி புரிய வேண்டும். உதவி புரிவதற்கு ஆயிரமோ லட்சமோ செலவு செய்யத் தேவையில்லை. நமக்கு எந்த ஒரு நஷ்டமும் எற்படாமல் நமக்கு மன நிம்மதியை அளிக்கக் கூடிய சாதனங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு, அண்மையில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். பழைய துணிகளுக்கு பாத்திரங்கள் விற்பது அவளுடைய தொழில். கையில் பிறந்து சில மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையை வைத்திருந்தாள். அவனுக்கு ஒரு நைலான் சட்டையை அணிவித்திருந்தாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. அவன் விக்கி விக்கி அழுதான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அந்தப் பெண்ணை அழைத்தேன். “ஏதாவது புடவைத் துணி இருந்தால் எடுத்து வாருங்கள், அம்மா. பாத்திரம் தருகிறேன்” என்றாள் வந்தவுடன். “துணி போடுவதற்காக உன்னை அழைக்கவில்லை. முதலில் அங்கே உட்கார்” என்று சொல்லி விட்டு, சமையலறையில் இருந்த சாதத்தில் சிறிது தயிர் ஊற்றிப் பிசைந்து எடுத்து வந்து அவளைச் சாப்பிடச் சொன்னேன். அவள் சாப்பிடுவதற்குள் வீட்டிலிருந்த ஒரு வேஷ்டியைக் கத்தரித்து தையல் மிஷினில் குழந்தைக்கு நான்கு சட்டைகள் தைத்தேன். நைலான் சட்டையைக் கழற்றிவிட்டு மெத்தென்ற கைத்தறி சட்டையை அணிவித்தவுடன் அந்த பச்சைக் குழந்தை ஆசுவாசமடைந்தது. அதைப் பார்த்து அந்தத் தாய் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவர்கள் இருவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதுபோன்ற ஆனந்தத்தை அவ்வப்போது அனுபவித்து வந்தால் டிப்ரெஷன் நம் அருகில் கூட வராது” என்று அவள் உரையாற்றியபோது கைத்தட்டல் விண்ணை எட்டியது. விழா முடிந்தபின் பலர் அவளிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார்கள். அவர்களுள் பத்மாவும் சாவித்திரும் இருந்தார்கள். அப்படிப்பட்ட பெண்மணி இன்று அள்ளி முடிந்த தலை, பழைய புடவை, கழுத்தில் சாதாரண கருகமணி, கைக்குக் கண்ணாடி வளையல் என்று ஒரு ஏழையைப் போல ஏன் தோற்றமளிக்கிறாள்? அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையிலும் அதே டாபிக். அவர்களுக்குச் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த சுஜாதா இவர்களுடைய பேச்சு காதில் விழவே டக்கென்று எழுந்து இவர்களின் அருகில் வந்தாள். அவள் அதே ஆபீசில் வேறு டிபார்ட்மென்ட். வெறும் முகப் பரிச்சயம் மட்டுமே. “நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?” என்று ஆரவத்தோடு கேட்டாள். “சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் நம்முடைய விமென்ஸ் டே மீட்டிங்கிற்கு வந்தார்களே அந்த ஸ்ரீவாணி மேடத்தைப் பற்றி” என்றாள் பத்மா. “ஒரு நிமிடம்” என்று கூறிச் சென்று தன் டிபன் பாக்சை எடுத்து வந்து இவர்களோடு அம்ர்ந்த சுஜாதா, “இப்போது சொல்லுங்கள் என்ன விஷயம்?” என்று கேட்டாள். “அன்று ஃபங்ஷனில் பார்த்தபோது எத்தனை கிரேஸ்ஃபுலாக இருந்தார்கள்? அதன் பிறகு ஒருமுறை டிவியில் கூட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் மகாலட்சுமி போல இருக்கும் மேடம், இன்று மிகவும் ஏழை போல காட்சியளித்தாங்க” என்றாள் சாவித்திரி. ஏளனமாகச் சிரித்தாள் சுஜாதா. “அவள் எங்களுக்கு தூரத்துச் சொந்தம். என் வீட்டுக்காரருக்கு ஒன்று விட்ட அத்தை மகள். அவர்கள் ஒரு மாதிரியான மனிதர்கள். இங்கு வேலையை விட்டு விட்டு அமெரிக்கா சென்றார்கள். அங்கு இருக்க முடியாமல் மீண்டும் இங்கே திரும்பி வந்தார்கள். ஏதாவது வேலையில் சேரலாம் அல்லவா? அதுவுமில்லை. தாமே பத்து பேருக்கு வேலை கொடுப்போம் என்று ஒரு இண்டஸ்ட்ரி தொடங்கினார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை. ஏதாவது குழந்தையைத் தத்து எடுத்து வளருங்கள் என்று சொன்னாலும் கேட்கவில்லை. “தெய்வம் எங்களுக்கு குழந்தைகளைக் கொடுக்காத போது மீண்டும் இந்த வளர்ப்புகள் எல்லாம் எதற்கு? எங்கள் ஃபாக்டரியில் பணிபுரிபவர்களே எங்கள் பிள்ளைகள்” என்று டயலாக் பேசினார்கள். நூறு ரூபாய் சம்பாதித்தால் அதில் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் செலவு செய்தால் ஒழிய அவர்களுக்குத் திருப்தி இருக்காது. ஆடம்பரத்திற்கும் தானத்திற்கும் குறைவு கிடையாது. நாளை என்று ஒன்று இருக்கிறது என்ற நினைவே கிடையாது. அதி புத்திசாலித்தனமோ அல்லது அறிவீனமோ தெரியவில்லை. யாரோடும் சேர மாட்டார்கள். அவர்களுடைய உலகம் அவர்களுக்கு. என்ன எதிரடி விழுந்ததோ தெரியவில்லை. எந்த விஷயமும் இன்னும் எங்கள் வரை வரவில்லை” என்று பேச்சும் சாப்பாடும் ஒரே தடவையாக முடித்துக் கொண்டு எழுந்து சென்றாள் சுஜாதா. கிடுகிடுவென்று கையைக் கழுவிக் கொண்டு மொபைலை எடுத்து கணவனுக்கு அந்தச் செய்தியை பரபரப்பாகப் பகிர்ந்தாள். மனைவி கூறியதைக் கேட்டு கணவன் சூரியம் மகிழ்ச்சியடைந்தான். அவர்களுக்கு நன்றாக வேண்டும் என்று நினைத்தான். அவன் அத்தனை மகிழ்ச்சியடைந்ததற்குக் காரணம் இருந்தது. எப்போதோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சூரியத்திற்கு பண உதவி தேவைப்பட்ட போது ரங்கசாயியிடம் சென்று கேட்டான். அவன் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்து உதவினான். அதுவரை எல்லாம் நன்றாகவே இருந்தது. ரங்கசாயி ஒரு தெய்வம் என்று புகழ்ந்தான் சூரியம். அதன் பின் சூரியம் குடும்பத்தினர் கொஞ்சம் செட்டில் ஆனபின் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டபோது சூரியத்திற்குக் கோபம் வந்தது. தன்னைப் போல ரங்கசாயி கூட அந்தக் கடன் பாக்கி விஷயத்தை மறந்து போயிருப்பான் என்று நினைத்தான் சூரியம். இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று காலம் கடத்திப் பார்த்தான். அவ்வாறு வாயிதா போட்டால், எரிச்சலடைந்து கேட்பதை விட்டு விடுவார் என்று எதிர்பார்த்தான். ஆனால் ரங்கசாயி கெட்டிமனிதன். “நீ மனிதனா? மிருகமா? வயிற்றுக்கு சோறு தின்கிறாயா? புல்லைத் தின்கிறாயா?” என்று திட்டித் தீர்த்து, விரட்டி விரட்டி கொடுத்த கடனை வசூல் செய்துவிட்டான். சூரியத்திற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. “அந்த ரங்கசாயிக்கு என்ன கேடு? குழந்தையா, குட்டியா? போகும்போது பணத்தை மூட்டை கட்டி எடுத்துச் செல்வானா? வேண்டியவர்களுக்கு ஆபத்தில் உதவினால், அந்தப் பணத்தை அணா, பைசவோடு வசூல் செய்ய வேண்டுமா?” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரிந்தான். அவ்விதம் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான். இப்போது அந்த ரங்கசாயிக்கு ஏதோ கஷ்டம் வந்தது என்றும் அவன் மனைவி ஏழைபோல நடந்து செல்கிறாள் என்றும் தன் மனைவியின் மூலம் தெரிந்து கொண்ட சூரியத்திற்குச் சொல்ல முடியாத ஆனந்தம் தொற்றிக் கொண்டது. அதனைத் தன் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். உடனே போன் செய்து நான்கைந்து உறவினர்களுக்குக் கூறினான். அவர்கள் மூலம் இன்னும் பலருக்கும் அந்தச் செய்தி பரவி விவாதத்திற்கு உரியதானது. “உலகம் என்றால் இப்படித்தான்.. ஏதோ பெரிய பாக்டரி இருக்கிறதென்று பெருமையடித்துக் கொண்டார்களே என்று சமீபத்தில் என் மகனை ரங்கசாயிடம் அனுப்பினேன். அவன் போக மாட்டேன் என்று சொன்னாலும் உறவினர் மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தர மாட்டானா என்று நப்பாசையில் அவனை பலவந்தமாக அனுப்பினேன். என் பிள்ளை பத்தரை மாற்றுத் தங்கம். பரீட்சைக்கு முன்னால் ஏதோ ஜுரம் வந்ததால் பத்தாவது பெயில் ஆகி விட்டானே தவிர ஒரு கலக்டரோ ஒரு கவர்னரோ ஆக வேண்டிய புத்திசாலி என் மகன். அப்படிப்பட்ட இளைஞனை அழைத்துச் சென்று லாரியிலிருந்து சரக்குகளை இறக்கும் உத்தியோகத்தில் வைத்தானாம். என் மகனுக்கு ஏற்கெனவே டஸ்ட் அலேர்ஜி. அந்த வேலை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதோடு சம்பளமும் ரொம்ப கம்மி. ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்றானாம். இந்த நாட்களில் பிச்சைக்காரன் கூட அதைவிட அதிகம் சம்பாதிக்கிறான். என் மகனுக்கு ரோஷம் அதிகம். வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று வந்துவிட்டான். வேண்டியவர்கள் வீட்டுப் பிள்ளை ஆயிற்றே, பக்கத்தில் இருத்தி வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுத் தந்து அதில் ஒரு பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வோம் என்று இல்லை. நாளைக்கு அவர்களுக்குப் பிறகு அவனே பொறுப்பாக பார்த்துக் கொள்ளப் போகிறான். அந்த அளவு கூட அவர்களுக்கு இங்கித ஞானம் இல்லாமல் போய் விட்டது. இப்போது நன்றாக ஆனது. நன்றாக வேண்டும் அவர்களுக்கு” என்று புலம்பினாள் ஒரு இல்லத்தரசி. “உண்மைதான் அண்ணி. என் பெண் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே சென்று அவர்களிடம் கூறினோம். கல்யாணத்திற்கு வர இயலாது, தில்லிக்குப் போகிறோம் என்று சொல்லி இருநூறு ரூபாய் பெறுமான ஒரு புடவையும் ஒரு அகல் விளக்கு அளவுக்கு வெள்ளியில் ஒரு குங்குமச்சிமிழும் வைத்துக் கொடுத்தாள் அந்த மகராசி. ஒரு ஐநூறு ரூபாயை என் வீட்டுக்காரரின் கையில் வைத்து மாப்பிளைக்கு கொடுங்கள் என்றாள். இருக்கிற சொத்தையெல்லாம் போகும்போது கூட எடுத்துச் செல்லப் போகிறார்களா, என்ன? ஒரு பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ கையில் வைத்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அவளுக்கு மனசு வரவில்லை. என்ன செய்வது? கருமித்தனம். போனால் போகிறது. எங்கள் கவலை என்னவென்றால், யார் மூலமாகவோ எங்களுக்குத் தெரிந்தது. அதன் பின் பத்து நாட்களில் அவர்களுடைய பாக்டரியில் வேலை செய்யும் பெண்ணை அங்கேயே பணி புரியும் ஒரு பையனுக்கு திருமணம் செய்வித்தார்களாம். குடும்பத்திற்குத் தேவையான பாத்திரங்கள், கட்டில் மெத்தை எல்லாம் வாங்கித் தந்தார்களாம். குறைந்தபட்சம் கல்யாணச் சாப்பாட்டோடு சேர்ந்து இருபதாயிரம் வரை செலவாகியிருக்கும். வேண்டியவர்களுக்கு இலையிலும் வேண்டாதவர்களுக்குத் தட்டிலும் என்று சொல்வார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது. வேண்டுமென்றால் வேலியில் கூடக் காய்க்கும். வேண்டாம் என்றால் மரத்தில் கூட காய்க்காது” என்று தோளில் இடித்துக் கொண்டாள் மற்றொரு இல்லத்தரசி. மற்றொரு இடத்தில் மற்றொரு விவாதம் நடந்தது. “இந்த ரங்கசாயி செய்யும் வேலையெல்லாம் தலைகீழ் வேலைகளே. ஒரு முறை அவர்கள் வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சி என்று அழைத்தார்கள். உறவினர்களுக்கு விருந்து போட்டதோடு ஏழைகளுக்கு அன்னாதானமும் செய்தார்கள். சொந்தக்காரர்களுக்கு புளியோதரை, பூரணம் போளி, சர்க்கரைப் பொங்கல், வடை எல்லாம் போட்டு அனுப்பிவிட்டு ஏழைகளுக்கு பூரி, குருமா, புலாவ், ஜாங்கிரி, ஐஸ்க்ரீம் எல்லாம் பரிமாறினான். இது என்னடா என்று கேட்டபோது ஏழைகளுக்குப் பாவம் இதெல்லாம் யார் கொடுப்பார்கள் என்று விதண்டவாதம் செய்தான். அவனுக்கு ஆமாஞ்சாமி போடுவதற்கு அவன் மனைவியும் கூடவே இருக்கிறாள். இரண்டும் இரண்டு ஆப்பை. இரண்டும் கழண்ட ஆப்பை என்பார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது” என்றாள் ஒரு பெரிய மனிஷி. “கோடிக்கணக்கில் சொத்து இருந்தால் எத்தனை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் பெருமைப் பட எதுவுமில்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதோ ஒரு பாக்டரி, ஒரு சொந்த வீடு, அவ்வளவுதான். வங்கியில் பணம் தங்காது. இருந்தால் கணவன் மனைவி இருவருக்கும் கை சும்மா இருக்காது. ஏதாவது செலவு செய்து விடுவார்கள். புத்தி கெட்ட விதமாக ஏதாவது செய்திருப்பார்கள். அதனால்தான் இந்த நிலைமை. தனக்காகத் தெரியாவிட்டால் யாரையாவது கேட்டாவது தெரிந்து கொள்ளவேண்டும். நான் பல தடவை சொல்லிவிட்டேன். கேட்கவில்லை” என்று குமுறினார் ஒரு மேதாவி. அதையெல்லாம் கேட்டு வருந்திய மனிதன் சேகரம் ஒருவனே. அவனுக்கும் ரங்கசாயிக்கும் தூரத்து உறவுமுறை உண்டு. நான்கைந்து முறை ரங்கசாயி, சேகரத்திற்கு உதவியுள்ளான். ரங்கசாயிக்கு போன் செய்து என்ன பிரச்சினை என்று கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் ரங்கசாயியிடம் வாங்கிய கடன் ஒன்று பாக்கியிருந்தது. அவனுக்கு வலியச் சென்று போன் செய்தால் அவன் பணத்தைக் கொடு என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது? தன்னிடம் பணம் இல்லையே, என்ற சங்கோஜம் அவனைத் தடுத்தது. அதனால் எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட முடிவு செய்தான். அதுவுமின்றி, ரங்கசாயி தன் ஒருவனுக்கு மட்டுமல்ல. நிறைய பேருக்கு உதவியுள்ளான். யாரோ ஒருவர் அவனுடைய கஷ்டகாலத்தில் உதவ முன்வராமல் போகமாட்டார் என்று நினைத்துச் சும்மா இருந்தான் சேகரம். மொத்தத்தில் ரங்கசாயி பற்றியும் ஸ்ரீவாணி பற்றியும் அன்று நிறைய பேர் விவாதித்துக் கொண்டார்கள். சுஜாதா ஒவ்வொரு நாளும் அதே வேலையாக பத்மாவிடமும் சாவித்திரியிடமும், “என்ன ஆச்சு? மேற்கொண்டு ஏதாவது தெரிந்ததா? ஸ்ரீவாணியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள். “இன்று கூட பார்த்தோம் அதே அவதாரம்தான். பாவம். நடக்க முடியாமல் அவங்களுக்குப் பெருமூச்சு வாங்கியது” என்றாள் சாவித்திரி. அந்தச் செய்தியை முடித்தவரை உடனுக்குடன் உறவுகளிடம் பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. சூரியம் பொறுக்கமுடியாமல் ஒருமுறை ரங்கசாயியின் பாக்டரிக்கு போன் செய்தான். “சார் ஊரில் இல்லை. திரும்பிவர நீண்ட நாட்கள் ஆகும். எங்கே சென்றாரோ எங்களுக்குத் தெரியாது” என்று பொதுப்படையாக கூறினார்கள். விவரம் கேட்டபோது எங்களுக்குத் தெரியாது என்றார்கள். ரங்கசாயியின் வீட்டுக்கு போன் செய்து பார்த்தான். அந்த நம்பர் வேலை செய்ய வில்லை என்று பதில் வந்தது. போனைக்கூட பிடுங்கி விட்டார்கள் போலிருக்கிறது. அவன் முகம் காட்ட முடியாமல் தலைமறைவாகி விட்டான் என்று தீர்மானித்து மனைவி சுஜாதாவிடம் கூறினான். “ஸ்ரீவாணி வேலையில் இருந்தாலாவது பிழைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட ஆபத்து நேரங்களில் கைகொடுக்கும். அதையும் விட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தாள். தனக்கு மிஞ்சித்தானே தானமும் தருமமும்? சொந்த வியாபாரம், சொந்த கம்பெனி என்று பெருமை பேசி சமூக சேவையில் இறங்கினாள். நாமெல்லாம் வியாபாரம் செய்ய முடியாமல்தான் உத்தியோகம் செய்கிறோமா? இப்போது பாருங்கள். பாவம். இருவரும் சாலைக்கு வந்து விட்டார்கள்” என்றாள் சுஜாதா. பிறர் கூறித் தெரிந்து கொண்டதையும் தானாக யூகித்ததையும் ஊராரிடம் வலியச் சென்று பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. அதன் காரணமாக உறவினர்களுள் சுஜாதாவுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. காலையில் எழுந்தது முதல் யாராவது ஒருவர் போன் செய்து, “என்னா ஆச்சு சுஜாதா? ஏதாவது தெரிந்ததா? புதிய செய்தி உண்டா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கலந்து கதை கட்டி பொழுது போக்கிக் கொண்டிருந்தாள் சுஜாதா. வரவர சுஜாதாவால் சஸ்பென்சைத் தாங்க இயலவில்லை. எப்படியாவது ஸ்ரீவாணியைப் பிடித்து விவரங்கள் எல்லாம் வரவழைத்து சுற்றத்தாருடன் பகிந்து கொள்ள வேண்டும் என்று துடித்தாள். அதை எப்படிச் செய்வது என்று யோசித்து ஒரு திட்டம் தீட்டினாள். ஒரு நாள் காலையிலேயே எழுந்து ஆட்டோ ஏறி அரை கிமீ பயணம் செய்து பத்மாவும் சாவித்திரியும் பஸ் ஏறும் ஸ்டாப்பிற்குச் சென்றாள். யாருக்கும் சந்தேகம் வராமால் முன்பாகவே அங்கு சென்று அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். பத்மாவும் சாவித்திரியும் வந்தார்கள். சுஜாதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, “நீங்கள் எப்படி இங்கே?” என்று கேட்டார்கள். “நேற்று இந்த ஏரியாவில் என் தோழியின் வீட்டில் பங்ஷன் நடந்தது. இரவு வெகு நேரமாகிவிட்டது. அதனால் இங்கேயே தங்கி விட்டேன். அதுதான் காலையில் பஸ் பிடித்துப் போகலாம் என்று வந்தேன்” என்று சுவர் எழுப்பினாற்போல் பொய் சொன்ன சுஜாதா, “எங்க ஸ்ரீவாணி வந்துட்டாளா?” என்று சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்டாள். “இன்னும் இல்லை. இனிமேல்தான் வருவார்கள். சில நாட்கள் அவர்கள் முன்னால் வருவார்கள். வேறு சில நாட்கள் எங்கள் பஸ் முன்னால் வந்து விடும்” என்றாள் சாவித்திரி. “கடவுளே இன்று ஸ்ரீவாணி முன்னால் வர வேண்டும்” என்று மனதிற்குள் இறைவனை வேண்டிக் கொண்டாள் சுஜாதா. அவளுடைய வேண்டுதல் பலித்தது. “அதோ ஸ்ரீவாணி மேடம்” என்றாள் பத்மா. பத்மாவும் சாவித்திரியும் வியந்து போய் எத்தனை சொல்லியிருந்தாலும் எதிரில் ஸ்ரீவாணியைப் பார்த்த சுஜாதா வாயடைத்துப் போனாள். சாதாரண புடவை, வெறும் காது, கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, கைகளில் இரண்டு கண்ணாடி வளையல்கள், ரொம்ப இளைத்துப் போய் பெருமூச்சு வாங்க நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்ரீவாணி. சுஜாதா வியப்பிலிருந்து மீள்வதற்குள் அருகில் வந்த ஸ்ரீவாணி அவளிடம் பேசினாள். . “சுஜாதா, நீ என்ன இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டாள். “நான் ஏதோ வேலையாக வந்தேன். அதிருக்கட்டும். அக்கா, நீ என்னக்கா, இப்படி ஆகிவிட்டாய்? உனக்கு உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள் சுஜாதா. “நன்றாகத் தான் இருக்கிறேன் சுஜாதா. சரி நான் கிளம்புகிறேன். எனக்கு நேரமாகிறது” என்றாள் ஸ்ரீவாணி. கிடைத்தாற்போல் கிடைத்து நழுவ இருந்த ஸ்ரீவாணியைப் பார்த்து சுஜாதாவுக்கு பரபரப்பு ஏற்பட்டது. “எனக்கும் புத்திசாலித்தனம் உள்ளது. இந்த வாய்ப்பை நழுவ விடுவேனா?” என்று நினைத்துக் கொண்டாள். “வா அக்கா. நானும் உன்னோடு வருகிறேன்” என்றாள். “பஸ் வந்துவிடும் சுஜாதா” என்று நினைவூட்டினாள் பத்மா. “நான் ஆட்டோவில் வருகிறேன், பத்மா. ரொம்ப நாள் கழித்து அக்காவைப் பார்க்கிறேன் அல்லவா? கொஞ்சம் நல்லது கெட்டது பேசி விட்டு மெதுவாகக் கிளம்புவேன்” என்று கூறிவிட்டு ஸ்ரீவாணியோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினாள் சுஜாதா. “எப்படி இருக்கிறாய் சுஜாதா? உன் கணவர் குழந்தைகள் நலமா?” என்று அன்போடு விசாரித்தாள் ஸ்ரீவாணி. “நாங்கள் நன்றாக இருக்கிறோம். அக்கா, நீ சொல். என்ன செய்தி? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் சுஜாதா. “நாங்கள் நன்றாக இருக்கிறோம், சுஜாதா. ஒரு குறைவுமில்லை. அண்மையில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல பணியில் ஈடுபட்டுள்ளோம். கர்நாடாகா பார்டரில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் தேவதாசி வழக்கத்திற்கு பலியான ஒரு பெண்ணை அந்தச் சிறையிலிருந்து விடுவித்து கைவேலைகளில் பயிற்சி கொடுத்தோம். புடவையின் மேல் வொர்க் செய்து ஒரு நாளைக்கு ஒரு நூறு ரூபாயாவது அவள் சம்பாதிக்கும்படி செய்தோம். அவள் தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள். ஒரு குழந்தையை வளர்ப்பேன் என்று கூறினாள். தாயும் தந்தையும் எயிட்ஸ் நோயால் இறந்து போய் அனாதையாக மாறிய ஒரு ஐந்து வயது சிறுமியை அந்தப் பெண் தத்து எடுக்கும்படிச் செய்துள்ளோம். ஒரு குழந்தைக்காக தவமிருந்த தாய்க்கும் குழந்தை கிடைத்தது. அனாதையான சிறுமிக்கும் தாய் கிடைத்தாள். அவரகளைப் பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும், சுஜாதா” என்றாள் ஸ்ரீவாணி. சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா. “எங்களுக்கு அமெரிக்கன் கம்பெனியில் இருந்து நல்ல ஆர்டர் கிடைத்திருக்கிறது, சுஜாதா. எப்போதும்போல் லாபம் கிடைக்கும்தான். ஆனால் மேலும் ஒரு பத்து பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். அதை நினைத்து எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் அந்த வேலையாகத்தான் அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் ஒரு மாதம் அங்கேயே தங்க வேண்டி இருக்கும். போனைப் பற்றி கேட்கிறாயா? பழைய போனை எடுத்து விட்டு சமீபத்தில் ரிலையன்ஸ் போன் வாங்கியுள்ளோம்” என்றாள் ஸ்ரீவாணி. எச்சில் விழுங்கினாள் சுஜாதா. “அப்படியா அக்கா? ரொம்ப சந்தோசம். அது சரி, அக்கா, நீ ஏன் நடந்து செல்கிறாய்? உன் கார் எங்கே? நகையெல்லாம் ஏன் கழற்றி விட்டாய்?” பொறுமையிழந்த சுஜாதா நேரடியாக பாயிண்டுக்கு வந்தாள். “அதுவா? அண்மையில் எனக்குக் கொஞ்சம் ஆரோக்கியம் சரியில்லை, சுஜாதா. மெனோபாஸ் நேரம் அல்லவா? இடுப்பு வலி. அதோடு, இருந்தாற்போல் இருந்து இடது காலில் வலி. கேரள மருத்துவம் பார்க்கலாம் என்று யாரோ சொன்னார்கள். சரி என்று ஆரம்பித்தேன். பஞ்ச கர்மா சிகிச்சை. ஐந்தாறு வாரங்கள் செய்து கொள்ளவேண்டும். நன்றாக இருக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்வார்கள் அல்லவா? அதனால், கால் மெட்டியோடு எல்லாவற்றையும் எடுத்துவிடச் சொன்னார்கள். அங்கு சென்று எடுப்பானேன் என்று வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு தினமும் செல்கிறேன். அதோடு வாக்கிங் செய்வது நல்லது என்று சொன்னார்கள். சரி உடம்பு குறையுமே என்று நடந்து செல்கிறேன். ஆங், சொல்ல மறந்து விட்டேன். என் தங்கை ராதாவின் மகளுக்கு பிரசவ நேரம். “தனியாக இருக்கிறாள் கொஞ்சம் உதவியாக இரு” என்று கேட்டாள். சரி என்றேன். என் ட்ரீட்மென்ட் சென்ட்டரும் இங்கே அருகில்தான் இருக்கிறது. அவரும் ஊரில் இல்லை. இங்கேயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறேன். இது முடிந்ததும் வீட்டுக்குச் செல்வேன்” என்று எல்லாம் விவரித்து விட்டு, “நீ எங்கே போகவேண்டும்? எதிர்பாராமல் உன்னை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. முடிந்தபோது ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வா” என்று கூறிக் கொண்டே ஒரு சந்திற்குள் திரும்பினாள் ஸ்ரீவாணி. வாயடைத்துப் போன சுஜாதா, மெதுவாக இயல்பு நிலைக்கு வந்தாள். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பஸ் பிடித்துச் செல்ல வேண்டும். ஓட்டமாக ஓடி பஸ் ஸ்டாண்டை அடைந்தாள். ஆனால் அதற்குள் பஸ்கள் சென்று விட்டன. வேறு வழியில்லை. ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். அத்தனை தூரம் வருவதற்கு எந்த ஆட்டோகாரரும் சம்மதிக்கவில்லை. ரிடர்ன் தொகையும் கொடுக்க வேண்டும் என்றார்கள். சற்று நேரம் அங்குமிங்கும் அலைந்து விட்டு, வேறு வழியின்றி இருநூறு ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்றாள். ஆபீஸுக்குச் சென்று பார்த்தால் கேட் மூடியிருந்தது. பார்மாலிடி எல்லாம் முடித்துவிட்டு உள்ளே சென்றால் லஞ்ச டைம் ஆகியிருந்தது. பாஸிடம் திட்டு வாங்கினாள். ஒடிந்துபோன மனதோடு லஞ்ச பாக்சை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றால் அங்கு பதமாவும் சாவித்திரியும் எதிரில் வந்தார்கள். “ஸ்ரீவாணி மேடத்திற்கு என்ன ஆச்சாம்?” இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள். “ஒரு மண்ணாங்கட்டியும் ஆகவில்லை” என்று எரிந்து விழுந்து விட்டு ஒரு நாற்காலியில் சாய்ந்தாள். “அதிர்ஷ்டக்காரர்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது. தரித்திரத்தை யாராலும் தீர்க்கவும் முடியாது” என்று நினைத்தபடி கண்களைச் சோர்வோடு மூடினாள் சுஜாதா. அவள் கண்கள் கண்ணீரைப் பெருக்கின. https://solvanam.com/2024/09/08/ஸ்ரீவாணி-மேடம்/
  3. இவற்றை சொல்லி இதை செயற்படுத்துவது கடினம். மிகச் சுலபமானது தேர்தல் வரும்போது மேடை போட்டு சோறா? சுதந்திரமா? என்று உசுப்பேற்றினால் அந்த உசுப்பேற்றலில் வாக்குகளை அள்ளி போடுவார்கள் என ற நம்பிக்கை.
  4. 10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
  5. தொடர்ச்சியாக தவறான தகவலை உங்கள் சொந்த அனுபவம் என்ற முலாம் போட்டு எழுதிக் கொண்டு இருக்கின்றீர்கள் விசுகு. இலங்கையில் இருந்த 33 ஆண்டுகளில் நான் 27 ஆண்டுகள் சிங்களப் பகுதியில் தான் வாழ்ந்தனான். முக்கியமாக இனக்கலவரம் ஆரம்பித்த நாட்களில் என் பெற்றோருடன் நான் அங்குதான் இருந்தேன். 83 இனக்கலவரத்தில் இதில் ஜேவிபி பங்குகொள்ளவில்லை. அது முழுக்க முழுக்க ஜே.ஆர் அரசினதும் அவரது படையினரும் சிங்கள காடையர்களுடன் இணைந்து நடாத்திய படுகொலைகள். அந்தப் பழியை ஜே.ஆர் ஜேவிபி மீது சுமத்தியது அவர்களை தடை செய்யும் நோக்குடனே. இது வரைக்கும் 83 ஜூலை கலவரம் பற்றி வந்த எந்த காத்திரமான நூலிலும். அனுபவக் கட்டுரைகளிலும் ஜேவிபி பற்றி குறிப்பிடப்படவில்லை. ஜேவிபியின் இனவாத முகத்தை, அதன் முந்தைய இனவாத செயற்பாடுகளை எடுத்துரைக்க உண்மையான பல விடயங்கள் இருக்கையில், தேவையற்று 83 இனக்கலவரத்தில் அவர்களை குற்றம் சாட்டுவது கண்டிப்பாக உள் நோக்கம் கொண்டதாக, குறுகிய அரசியல் லாபத்திற்காகவோ என்று சந்தேகப்படுகின்றேன். அத்துடன் இது ஜே.ஆர் இன் இனவாத செயல்களை வெள்ளையடிக்கும் முயற்சியாகவும் உள்ளது. அல்லது, ஜேவிபி யின் பின் தமிழ் மக்கள் அணிதிரண்டால், தாயக மக்கள் மீதான புலம்பெயர் அமைப்புகளின் செல்வாக்கு முற்றாக இழந்து விடுமோ என்ற அச்சத்தில் உண்மைக்கு புறம்பான விடயத்தை உங்கள் சொந்த அனுபவம் என்ற முலாம் பூசி எழுதுகின்றீர்கள் எனவும் சந்தேகமாக உள்ளது.
  6. வணக்கம் சகோ எதற்காக இவற்றை உங்கள் தலையில் போடுகிறீர்கள்??? நீங்கள் ஜேவிபியின் இனவாத அரசியலை புரிந்து வைத்திருக்கிறீர்கள். எனவே அது உங்களுக்கானது அல்ல. 1983 இனக் கலவரத்தில் ஜேவிபிக்கு பங்கே இல்லை என்பவர்களுக்கானது. நானே பாதிப்பட்டவன். நானே சாட்சி. நான் இன்று இங்கே வாழும் வாழ்வைவிட நீங்கள் இன்று வாழும் இதே வாழ்வைவிட பலமடங்கு கூடுதலான வசதிகளோடு அன்றே இதே கொழும்பில் வாழ்ந்தவன் நான். வெளிநாட்டுக்கு வரவேண்டிய எந்த தேவையும் இல்லை (இப்போ சுற்றுலா வெள்ளைத் தோலை கண்டால் நிறுத்தும் ரக்சி மற்றும் ஆட்டோக்கள் அந்த நேரத்தில் என் அண்ணரைக் வீதியில் கண்டால் நிற்காமல் போகாது) 83 இல் அடித்து கலைத்து உடுத்த உடுப்புடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி இதே ஜேவிபி தான் எனக்கு கற்றுக் கொடுத்தது உன் இடம் இது அல்ல என்று . எனவே எனக்கு நடந்த கொடுமைக்காக நான் பேசுகிறேன் பேசுவேன். நீதி நியாயம் தீர்வு கிடைக்கும் வரை பேசுவேன். ஜேவிபியை ஆதரிக்க உங்களுக்கு உள்ள அதே உரிமை கடமை அதை மறுக்க எனக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். நன்றி.
  7. 🤣🤣🤣.............. முப்பத்திமூன்றா.................. நீங்க தான் கடை ஓனரா, டக்ளஸ் அண்ணே........ தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு கடிதம் எழுதிய, எழுதும் எல்லோரும் உங்களிடம் தோற்றார்கள் போங்கோ............. உங்களின் தேர்தல் பணிக்கு என்னுடைய பங்களிப்பு: 34. பலாலி விமானநிலையத்தை விரைவாக விரிவுபடுத்தி, சர்வதேச விமானங்களை இறக்கு ஏற்றுதல். 35. பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலையை புனரமைத்து, இரசாயனங்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அந்நியச் செலவாணியை கொண்டு வருதல். 36. வடக்கு கடற்கரைகளில் மூன்று மீன்பிடி துறைமுகங்களை புதுதாக அமைத்தல். 37. இறல் பண்ணைகளை தீவுகளில் அமைத்தல். 38. கடல் அட்டைத் தொழிலை விருத்தி செய்தல். 39. யாழ் உப்பு நீரேரியின் ஒரு பகுதியை நன்னீர் ஏரியாக மாற்றுதல். 40. இரணைமடுவில் கிடைக்கும் உபரி நீரை யாழ் மாவட்டத்திற்கு வழங்கல். 41. வடக்கு மருத்துவமனைச் சீர்கேடுகளை விரைவாகக் களைய ஒரு ஆணைக்குழுவை அமைத்தல். இப்படியே போனால் 108 திட்டங்கள் வந்திடும் போல இருக்குதே..........🤣......... அப்புறம் என்னையும் ஒரு சுயேட்சைக்குழுவில் சேர்த்து விடுவார்கள் போல............😜.
  8. இதில் உள்ள அபிவிருத்தி திட்டங்களில் எதையாவது தமிழ் தேசியக்கட்சிகள் சொல்லி உள்ளனவா..?
  9. எனக்கு இரண்டரை லட்சம் பேரின் ஆதரவுண்டு. அது நூறால் பெருக்கும் அளவு பலமானது. அவர்களுக்காக நான் தொடர்ந்து தேசியம் பேசுவேன். எழுதுவேன். புலிகளையும் தேசியத்தை நேசிப்பவர்களையும் கிண்டல் செய்பவர்களை தட்டி குட்டிக்கேட்பேன். உங்களுக்கான மரியாதை என்பது கூட உங்களிடம் உள்ள சான்றிதழ்களுக்கு ஆனது மட்டுமே. உங்கள் எழுத்துக்கள் மிக மிக மட்டமானவை. தரங்குறைந்தவை. இதில் இன்னொருவரை நீங்கள் கூடாதவர் என்று பரிந்தூரைப்பது கேலிக்கூத்து மட்டுமே.
  10. பிறவிப் பெருங்கடல் விடிய எழும்ப Google calendar இல வந்த alert ஐப் பாத்து, முதல் வேலையா fb இல தேடி ஒரு photo ஐ எடுத்து what’s app குறூப்பில birthday day wish போட்டிட்டு status இல “ HBD to ……..” எண்டு முழுசாக்கூட எழுதாமல் சுருக்கிப் போட்டிட்டு தன்டை admin வேலையையும் காலைக் கடமையை வடிவாச் செய்திட்டன் என்ற திருப்பதியோட நாளை ஆரம்பித்தார் நம்பி. அவுஸ்திரேலியாவில விடிஞ்சாலும் அல்பேட்டாக்காரன், இரவுக் குளிருக்க ரெண்டு பெக்கைப் போட்டுக்கொண்டிருந்தவன், உடனயே தன்டை பங்குக்கு ஒரு பலூன் படத்தைப் போட்டான். மூத்திரம் போக வேளைக்கு எழும்பி நித்திரை வராமப் போஃனைப் பாத்திட்டு ஆரா இருக்கும் எண்டு யோசிச்சிட்டு , ஏன் பிரச்சினை எதுக்கும் ஒரு வாழ்த்துத் தானே எண்டு தன்டை பங்குக்கு கண்டிக்காரன் வாழ்த்து ஒண்டைப் போட்டான். இரவு 12.00 மணிக்கு பத்துபேர் தடதடவெண்டு வந்து வெட்டின கேக் வாயை கழுவாமலே படுத்தவன், எழும்பின கையோட எந்தெந்த குறூப்பில ஆரார் wish பண்ணினவை எண்டதைப் பாத்திட்டு, wish பண்ணாதவனை ஞாபகாமா வைச்ச படி குளிக்கப் போனான் அம்பி. கொழும்பில விடிகாலை late ஆ எழும்பி கண்ணாடி போடாமலே updated news எல்லாத்தையும் பாத்திட்டு போனகிழமை தன்டை birthdayக்குப் படத்தைப் போடேல்லை இண்டைக்குப் போட்டிருக்கிறார் adminஐத் தூக்கு , எண்டு போர்க்கொடி தூக்கினான் அப்பன். அதுக்குப் பிறகும் வாழ்க்கை வெறுத்து விட்டிட்டுப் போகாமல் அப்பன்டை friend சுப்பனைப் பிடிச்சிச் அப்பனை அடக்கிச் சமாளிச்சுக் கொண்டு குறூப்பை ஓட்டிக்கொண்டிருந்தார் நம்பி. காலமை எழும்பி ஏதாவது நல்ல விசியம் இருக்குமா எண்டு WhatsApp பாக்க ஒரு புது குறூப்பில add பண்ணி இருந்தாங்கள். விசாரிச்சா, “மச்சான் சுசிக்கு birthday வாற மாசம், மனிசி கேட்டது ஒரு video செய்ய வேணுமாம் எண்டு குசும்பர் குறூப்பி்ல நீயும் அவனும் இருக்கிறதைப் பாத்து add பண்ணினான், ஒரு wishing video message அனுப்பி விடு” எண்டான் சிங்கன். கேட்டதை மறந்திருக்க, காசைக் கட்டுங்கோ கெதியா எண்டு ஒரு மாசத்துக்கு முதலே தொடங்கி, ஒவ்வொரு நாளும் தொல்லை தாற insurance காரன் அனுப்பிற reminder இலும் பாக்க reminder கூட வர, கடைசீல சரி எண்டு போட்டு நாலு தரம் எடுத்தும் சரியா வராத வீடியோ message இல என்னை வடிவாத் தெரியிற ஒண்டை upload பண்ணி விட சுசியின்டை குடும்பம் சார்பா சிங்கன் 🙏 போட்டான். முந்தின நாட்களில வீட்டுக்காரர் ஞாபகப் படுத்தினாக்கூட வீண் செலவு எண்டு தெரிஞ்சே மறந்து போன birthday தான் நிறைய, ஆனால் இப்ப அப்பிடியில்லை. எப்ப இந்த birthday கொண்டாட்டம் பெரிசா வந்திச்சுது எண்டே தெரியேல்லை தொற்றுநோய் மாதிரி எல்லாருக்கும் பரவீட்டுது . நல்லதோ கெட்டதோ நடந்தா அதை அறியத்தாறம் எண்ட செய்தியை எங்காயாவது போட்டால் அதை வாசிச்சு அறிஞ்சதோட நிப்பாட்டாமல். வாழ்த்தில இருந்து அஞ்சலி வரை எழுத்தில தொடங்கி, சுருக்கெழுத்தா மாறி கடைசீல கைக்கு நோகும் எண்டு போட்டு Emoji இல வந்து நிக்குது. குறூப்பிலயே இல்லாதவனுக்கும் வாழ்த்துகளும் செத்தவனுக்கு RIP யும் அவங்கள் ஆவியா வந்து பாத்தாலும் எண்டோ தெரியேல்லை நிறையவே கிடைக்கும். அந்தக் காலத்தில கொஞ்சம் வசதியான வீடுகளில மட்டும் பள்ளிக்கூட friends ஐ கூப்பிட்டு பின்னேரம் வீட்டை ஒரு tea party நடக்கும் . ஒருக்கா படிக்கேக்க அப்பிடி ஆக்கள் என்னையும் கூப்பிட போறவீடு பெரிய வீடு, என்னத்தைக் கொண்டுபோற எண்டு தெரியாம முழிச்சன். அவன் “English teacherன்டை favourite student ” எண்டு போட்டு போன மாசம் புத்தகம் விக்க வந்த கப்பலில என்டை அறிவை வளக்க எண்டுஅப்பா மலிவா வாங்கித் தந்த பிரிச்சே பாக்காத பேர் தெரியாத ladybird புத்தகத்தை brown paper bag இல போட்டுக் கொண்டு போய்க்குடுத்தன். ஏனோ தெரியேல்லை அடுத்த முறை என்னை அவன் கூப்பிடவேயில்லை. பொதுவா அந்தக்காலத்தில birthday எண்டால் toffee bag தான் அதுகும் கொஞ்சம் வசதி இருந்தாத்தான். நூறு toffee உள்ள bag வாங்கி வகுப்பில எத்தினை பேர் , ரீச்சர் எத்தினை பேர் எண்டு எண்ணி, ஐஞ்சு மட்டும் கூடப் போட்டு வீட்டில குடுத்து விடுவினம். வாங்கித்தாற delta இல்லாட்டி star toffee bag ஓட பள்ளிக்கூடம் போய் தனக்கு இண்டைக்கு birthday எண்டு வகுப்ப ரீச்சரிட்டை toffee பையை நீட்ட அவ அள்ளி எடுத்திட்டு பிள்ளைகளே birthday பாட்டு பாடீட்டு ஒராள் ஒண்டு தான் எடுக்கோணும் எண்டா. “ happy birthday” வாழ்த்தோட வகுப்பைச் சுத்தி வந்திட்டு பிறகு ஒட்டிக்கொண்டு வாற ஒரு friend ஓட ஒவ்வொரு வகுப்பா ஏறி எல்லா ரீச்சர் மாருக்கும் குடுத்திட்டு வந்திருக்க மிஞ்சிற toffeeஐ பங்கிடிறதுக்கு (பறிக்கிறதுக்கு) இன்டேர்வலில ஒரு குறூப் வரும். இவ்வளவு நாளும் கொம்பாஸால குத்தினவன் இண்டைக்கு திடீர் friend ஆவான். Birthday அண்டு கிடைக்கிற ஒரே ஒரு நன்மை எண்டால் , அண்டைக்கு மாத்திரம் குளப்படி செய்தாலும் அடி விழாது . செய் குழப்படிக்கு வாத்தி பிரம்பைத் தூக்கிக்கொண்டு முன்னால வா எண்டு கூப்பிட , “சேர் இண்டைக்கு இவருக்கு பேத் டே” எண்டு chorus ஆ நாலு பேர் கத்த ,”சரி போய் இரு இண்டைக்கு விடுறன்” எண்டு பதில் வரும். முந்தி birthday எண்டால் கலர்ச்சட்டை போடலாம் எண்டிருந்தது, பிறகு அதுகும் இல்லாமல் போட்டுது. என்டை கஸ்ட காலம் எனக்குப் பிறந்த நாள் பள்ளிக்கூட விடுமுறையில தான் வாறது ஆனபடியால் அந்தக் கொடுப்பனவும் இல்லை. அதோட வருசம் கழிச்சு வாறதால கூடவாச் செய்யிற பயத்தம் பணியாரமும் , முறுக்கும் தான் treat. கொஞ்சம் வளர பெடியளோட போய் ரொட்டியும் கறியும் எண்டு தொடங்கி பிறகு extra ரொட்டி போட்டு ஒரு கொத்து மூண்டு plate எண்டு கேட்டு வாங்கிப் சாப்பிடுறது தான் treat. அதுகும் வீட்டை ஆடு எண்டு சொல்லீட்டு கொண்டு போற காசுக்கு மாடுதான் வாங்கிறது. இப்ப அதுக்கெண்டு தனி budget முதலே ஒதுக்க வேணும். அதோட வெள்ளைக்காரனே வீண் செலவு எண்டு மறந்து போன கனக்கத்தை எங்கடை சனம் மட்டும் தான் பின்பற்றிற மாதிரி இருக்கு. வரியாவரியம் வாற திருவிழாவைத் தவிர double digit ஆம் எண்டு 10, teen தொடங்குதாம் எண்டு 13, adult ஆகீட்டாராம் எண்டு 18, துறப்புக் கொழுவலாமாம் எண்டு 21, golden birthday எண்டு 50, பிறகு60 எண்டு விசேச திருவிழாவும் இருக்கும். கலியாண வீடு மாதிரி hall எடுத்து , invitation card அடிச்சு, Theme colour, 3D cake, cartoon character , photo shooting face painting எண்டு அது birthday பெரிய விழாவா இப்ப வந்திட்டுது. Birthday க்கு cake எப்ப வந்தது எண்டு தெரியாது. முதலில cake இல தொடங்கி, பிறகு சும்மா ஒரு மெழுகுதிரிவந்து, அது பிறகு அது கலராகி, சின்னனாகி, நம்பரா மாறி, பிறகு மத்தாப்பு மாதிரி வந்து, இப்ப birthday song க்கு music போடிற மாதிரி எண்டு கூர்ப்படைஞ்சு வந்து கொண்டிருக்கு. மெழுகுதிரி மாதிரி பத்தாததுக்கு வெட்டிற கத்தியும் மாறிக்கொண்டு போகுது. பாண் வெட்டிற கத்தீல தொடங்கிப் பிறகு butter பூசிற கத்திக்கு ribbon கட்டி இப்ப அதுக்கும் எண்டு special கத்தி கலரில வருது. கலியாணத்தில தாலி கட்டேக்கயே பின்னால ரெண்டு மூண்டு பேர் தான் நிப்பினம் விளக்கோட ஆனால் birthday இல “பொப்” வெடிச்சுப் பூப்போட ரெண்டு பேர், பனிமழை பொழியப்பண்ணக் கொஞ்சப்பேர், chorus பாடக் கொஞ்சப் பேர் எண்டு இளையராஜான்டை stage show மாதிரி ஆக்கள் நிப்பினம். சில நேரத்தில popம் sprayம் கேக் எல்லாத்தையும் மூட சாப்பிட வேற கேக் தேவைப்படும். “அடேய் நாங்கள் அவங்களை மாதிரி இல்லை விளக்கை ஏத்தித்தான் கொண்டாட வேண்டும்” எண்டு நண்பன் நவாஸ் புது வியாக்கியானத்தோட கேக்கை வெட்டி ஆனால் விளக்கை ஏத்திக் கொண்டாடினான். பிறந்த நாள் காரனுக்குத்தான் கேக் தீத்திறது மாறி எங்கயோ படத்தில அரைகுறையாப் பாத்திட்டி இப்ப கேக் வெட்டிறவன் தான் மற்ற எல்லாருக்கும் தீத்த வெளிக்கிட்டான். பழைய காலத்தில நாள் நச்சத்திரம் பாக்கிறது நல்லது கெட்டதுக்கு மட்டுமில்லை பிறந்த நாளுக்கும் தான். பிறந்த நாளண்டு இருந்த நச்சத்த்திரம் பிறகு நாள் மாறி வரும். முந்தின காலத்தில நட்சத்திரதுக்கு கோயிலில ஒரு அருச்சனை தான் பிறந்த நாள் விசேசமா இருந்திச்சுது. இப்ப பிறந்த நாளுக்கு party வைக்கிறது வளரக் கோயிலுக்கு போறது தேய்பிறையாக மாறி நச்சத்திரம் சாத்திரத்துக்கு மட்டும் எண்டு ஆகீட்டுது. அதுகும் ஏதாவது special birthday எண்டால் Scarborough இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு கனடாவில தொடங்கி, பிறகு கொஞ்சப்பேரோட போய் கியூபாவில நிண்டு படம் போட்டிட்டு, வாற வழீல லண்டனிலேம் கொண்டாடி பிறகு ஊரில வந்து பெரிசாக் கொண்டாடி எண்டு ஒரு வருசமா அந்தப் படம் ஓடும். படிக்கேக்க இழந்தும், இடம்பெயர்ந்தும், எண்ணிக்கை சுருங்க எல்லாப் பள்ளிக்கூடத்தையும் சேத்து இவ்வளவு தான் எண்டு batchயிலேயே ஒரு இருநூறு பேர் தான் இருந்தம். அப்ப பள்ளிக்கூடம் தாண்டி உறவும் நட்பும் இருந்ததால partyயும் இருக்கிறதைக் கொண்டு பிரிச்சு உறவைப் பெருக்கி நடந்தது. ஆனாலும் பெடியள் மட்டும் தான் அப்பிடியாவது செய்தது எண்டு நெக்குறன். இப்ப ஆம்பிளையும் பொம்பிளையுமா ஆயிரம் பேர் இருக்கிற குறூப்பில ஆளே தெரியாத ஒருத்தனுக்கு birthday wish பண்ணிற காலம். அதோட இப்ப இது ஒரு நாள் திருவிழா இல்லை. முதல்ல தனி்யக் குடும்பமா birthdayகொண்டாடிப் பிறகு, வேலை குறூப், gym group, படிச்ச பள்ளிக்கூடம், ரியூசன் சென்டர், பிறந்த ஊர் எண்டு தொடங்கி சர்வதேச levelல ஒரே வருசத்தில பிறந்தது எண்டு உலகளாவிய birthday கொண்டாட்டத்தை ஊர்ஊராப் போய் வைக்கிறது தான் fashion ஆப் போட்டுது. அதோட இப்ப ஒரு புதுசா surprise party எண்டு வேற ஒண்டு தொடங்கி இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் எதுகும் தெரியாத மாதிரி party நட(டி)க்கிறது தான் அது. எல்லாக் கொண்டாட்டமும் முடிஞ்சு எல்லாருக்கும் நன்றி உரை சொல்லி முடியமுதலே அடுத்த birthday வந்திடும். பிறவிப் பெருங்கடல் எண்டதை சரியா? விளங்கிக் கடல் தாண்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நாங்கள் அடுத்தது விண்ணைத் தாண்டி விண்வெளியில் தான் கொண்டாடுவம் எண்டு நெக்கிறன் . Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  11. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள். @Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள். 1) தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு) 2) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா ரவிராஜ்....) (சின்னம்: சங்கு) 4) தமிழ் மக்கள் கூட்டணி, (சி.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஆனால் அவர் போட்டியிடவில்லை... வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்) , வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்...) (சின்னம்: மான்) 5) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி: கிழக்கில் மட்டும், கருணா என்னும் முரளிதரன். 6) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: கிழக்கில் மட்டும், பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன். 7) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி: (வடக்கு, கிழக்கு, கொழும்பு) டக்ளஸ் தேவானந்தா. (சின்னம்: வீணை) # தேசிய மக்கள் சக்தி: அனுரவின் கட்சி, (மருத்துவர் எஸ் சிறிபவானந்தராஜா, இளங்குமரன், மோகன், வெண்ணிலா) (சின்னம்: திசைகாட்டி) # மற்றும்.... சஜித், ரணில், மகிந்த ஆகியோரின் கட்சிகளும் போட்டியிடும். # அங்கஜன் இராமநாதன் எந்தக் கட்சியில் நிற்கப் போகிறார் என்று தெரியவில்லை. # அத்துடன் முன்னாள் போராளிகளும் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள் என நினைக்கின்றேன். # சிறீரெலோ என்னும் கட்சி, வன்னியில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது. # சில முஸ்லீம் கட்சிகளும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.
  12. நமது அன்றாட வாழ்வும் பாலியலும் .... இன்றைய காலகட்டத்தில் உலகில் பெரும்பாலானோர் அவசர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அந்த குடும்ப வாழ்க்கையிலே எவ்வளவு சிரமங்கள்,சலிப்புகள்,தடங்கல்கல்கள் என கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேலை சிரமங்களினால் குடும்ப அன்னியோன்யங்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது. பல இடங்களில் விவாகரத்திலும் கதைகள் முடிகின்றன. இதற்கான காரணங்களில் முக்கியமாக பாலியல் சம்பநதப்பட்ட விடயங்களும் அமைகின்றன நான் நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். பேச வெட்கப்படும் விடயங்களை பேசுவோம்.💕
  13. பெருந்திணை மெய்யழகா ? - சோம.அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு பொடியானதில் மகிழ்ச்சியே. நன்னெறிப் பிரசங்கங்கள் எல்லாம் இல்லாமல் போகிற போக்கில் மனதை வருடி நல்லுணர்வைத் தந்த படம். இந்த இயக்குநருக்குப் படமாக்கல் சிறப்பாக வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ‘மெய்யழகன்’ என்பதை ஒரு முழு நீளப் படம் என்பதை விட நல்ல தேர்ந்த நான்கைந்து சிறுகதைகள் மிக இயல்பாக ஒன்றாகக் கோர்க்கப்பட்ட தொகுப்பு. கம்பீரமாகச் சீறி வரும் ‘தோனி’ காளை, சைக்கிள் கதை – உணர்வுப்பூர்வமாகப் புன்னகை பூக்கச் செய்பவை. அதிலும் போலீஸ் ஒருவர் வந்து காளையைப் பார்த்ததும் காக்கியைக் கழற்றி விட்டு ஏறு தழுவுதலில் கலந்து கொண்டு காக்கிச் சட்டை அணிந்து மீண்டும் போலீஸ் ஆக மாறிய பின் பொய்யான விறைப்புடன் ‘தடை செஞ்சிருக்காங்கன்னு தெரியும்ல? அப்புறம்?’ என மென்னகையுடன் மெய்யழகனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டுச் செல்லும் காட்சி ரொம்பவே ரசனையாக இருந்தது. வெண்ணாற்றின் கரையோரம் அமர்ந்து சோழ வரலாற்றில் தொடங்கி ஈழம் சென்று தூத்துக்குடி வரையிலான பயணம் – ‘தோழர்’ மெய்யழகனின் கதாபாத்திரத்தை மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்தது. எல்லோருக்குள்ளும் இருக்க வேண்டிய சக உயிருக்கென கண்ணீர் விடும் உணர்வைக் கடத்திய அழுத்தமான வசனங்களும், அதை அழுகையும் சோகமும் கலந்து உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய மெய்யழகனின் முகமும் என் கண்களிலும் லேசாக நீர்த்திரையிட்டது. ‘பேசிட்டே இருக்காங்க’ என பெரும்பாலானோரால் சலித்துக்கொள்ளப்பட்ட இரண்டாம் பகுதிதான் கலவையான உணர்வுகளைத் தந்து ரொம்பவே ரசிக்க வைத்தது. ‘படத்தின் நீளத்தைக் குறைக்க’ என்ற காரணம் சொல்லப்பட்டாலும் கத்தரிக்கப்பட்ட காட்சிகளின் தெரிவு எழுப்பும் ஒரே கேள்வி ‘இந்த அளவு கூட உண்மையையும் நியாயத்தையும் ஒருவன் பேசக் கேட்கும் துணிவில்லையா? மனசாட்சி உறுத்துகிறதா?’ முதல் பாதி முழுக்க கல்யாண வீட்டைச் சுற்றியே கதை நிகழ்ந்ததில் ‘அய்யயோ! அடுத்த பாதியில் சொந்தங்களுடன் மீண்டும் சேர்வதான வழக்கமான(cliché) பூச்சுவேலைகள் நிரந்திருக்குமோ’ என கொஞ்சமே கொஞ்சம் சலிப்பு படர்ந்தது. பின் அமைந்திருந்த கதை அமைப்பு அதை வேரோடு பிடுங்கி எறிந்து ஆசுவாசமளித்தது. இரு தனி நபர்களுக்கு இடையிலான தூய்மையான அன்பு அழகியல் ததும்ப பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. படம் முடிந்த உடன், அதன் தாக்கம் மனதில் இருத்திச் சென்ற குறுநகையில் நானும் ஒரு நொடி மனம் பிறழ்ந்து உறவுகளை நினைத்தபடியே இருள் தெளிக்கப்பட்ட வானைப் பரிவோடு பார்த்தவாறே வந்து கொண்டிருந்தேன். உறவுகளில் அரிதான வெகு சில நல்ல உள்ளங்கள் அகக்கண்ணில் வந்து குளிர்ச்சியைப் படர விட்டுச் சென்றன. சடாரென்று மீதமுள்ள வன்மக் கிடங்குகள் வரிசையாக நினைவில் ‘இந்தா நானும் வந்துட்டேன்ல...’ என வரத் துவங்க, ‘சில்லென்று ஒரு காதல்’ திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தைப் போல் ஒரு நொடி யோசித்துப் பின் முகம் சுழித்தவாறே ‘ச்சை…முடியாது…முடியாது’ என்று அபூர்வமாக என்னுள் எட்டிப் பார்த்த சினிமாத்தனத்தை எள்ளி நகையாடியது மனம். “உங்க வீட்டுக்கு என் பங்களிப்பு இருக்கக் கூடாதா?” என அருள்மொழி கேட்காமலேயே அவரின் தேவைக்காகத் தனது மொத்த சேமிப்பு, காணாததற்கு மனைவியின் நகைகளையும் அடகு வைத்துத் தருவதாகக் கூறும் மெய்யழகனின் பாத்திரப் படைப்பு எதார்த்தத்தில் இருந்து சற்றே துருத்திக் கொண்டு மிகையாகவும் மடமையாகவும் தோன்றியது. ஒரு காட்சியில் மெய்யழகன் அருள்மொழியிடம் பல காலம் முன்பு அவர் அப்பாவிடம் இருந்து அடித்துப் பிடுங்கி வீட்டை வாங்கிக் கொண்ட உறவுகளைத் தனக்காக மன்னிக்கும்படி கேட்பார். எனக்குச் சிரிப்பை வரவழைத்த இடம் அது. நம்மை ஏமாற்றியவர்கள், நமது இயல்பே மொத்தமாக மாறி நம்முள் இறுக்கம் படரக் காரணமானவர்கள் மீது எழும் வெறுப்பு அவர்களிடமிருந்து நம்மை ஒதுங்கி இருக்கச் சொல்லிப் பணிக்கும். மனம் காலப்போக்கில் அவர்களை முற்றிலும் அந்நியர்களாக்கிவிடும். பிறகு ‘மன்னிப்பு’ என்னும் வார்த்தைக்கு என்ன பெரிய பொருள் இருக்கப் போகிறது? அவர்களுக்குத் தீங்கும் நினைக்க வேண்டாம்; கவலையும் கொள்ள வேண்டாம். மீண்டும் போய் உறவைப் புதுப்பிக்கும் எண்ணம் இல்லாத பட்சத்தில் நமக்கு நிகழ்ந்ததையும் நிகழ்த்தியவர்களையும் அடியோடு மறப்பதுதானே இயற்கையாக இருக்கும்? ‘ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் செல்ல இந்த செயற்கைப் பெருந்தன்மை எல்லாம் எதற்கு?’ என்றே தோன்றியது. இயக்குநரின் இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமைகள் – எரிச்சலூட்டும் பெருந்திணை மற்றும் அநியாயத்திற்கு நல்லவனாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆண் கதாபாத்திரம். ஒரு வேறுபாடு – முழுக்க முழுக்க இப்படி ஒருவர் இருக்க வாய்ப்பில்லையெனினும் எல்லாவற்றையும் மீறி ‘இப்படத்தில்’ மெய்யழகனின் கதாபாத்திரம் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இன்னோரு படத்த பத்திலாம் எதுக்குப் பேசீட்டு? அருள்மொழியின் உறவுக்காரப் பெண் வந்து தன் கணவன் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்த சொந்தக் கதை, அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட சோகக் கதையைக் கூறிய பின் “பேசாம உன்னையே கல்யாணம் பண்ணிருக்கலாம்” என்று அருள்மொழியிடம் ஏக்கத்தோடு கூறுவார். இருவருக்கும் தனித்தனி குடும்பங்கள் இருக்கின்றன. அப்பெண் தனது மணவாழ்வில் இருந்து வெளிவரவில்லை. மணமுறிவு ஆகியிருந்தாலும் கூட மணவாழ்க்கையில் இருக்கும் இன்னொரு ஆணிடம்(நகைச்சுவையாகக் கூட) இப்படிச் சொல்வது எப்படிச் சரியாகும்? பின்னர் கல்யாண வேலையில் தன்னை ஈடுபடுத்தும் பொருட்டு எழுந்து செல்கையில் தற்செயலாகத்(என்று நம்ப நாம் என்ன…?!) தவறான திசையில் நடக்கத் தொடங்கித் திரும்பிப் போகும் போது பட்டும் படாமல் அருள்மொழியின் தோளைத் தடவிச் செல்வார். அந்தத் தொடுதலில் தென்படும் வாஞ்சை நெருடவில்லையா? இன்னொரு காட்சியில் பந்தியில் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கும் அருள்மொழியை ஏக்கத்தோடு/பாசத்தோடு… ஏதோ ஒரு கண்றாவியான உணர்வோடு திரும்பிப் பார்ப்பார். இவ்வகையான ஒழுக்கத்திற்கு மாறான பொருந்தாக் காதல் மீது இயக்குநருக்கு ஏன் இவ்வளவு தீராக் காதல்? Emotional affair தவறில்லை என்பது போல அதை இவ்வளவு மேன்மையாகக் காட்டுவதன் பெயர் ரசனை அல்ல. இவரது முதல் படத்தின் கதைக்கரு முழுக்க முழுக்க இதுதான். அழகியல், மென்னுணர்வுகள் என்ற போர்வையில் அநாகரிகத்தை நியாயப்படுத்தவோ சாதாரணமாக்கவோ முடியாது. இதுவெல்லாம் கவித்துவம் என்று நினைப்பவர்களுக்குத் தங்கள் துணை இதைப் போல் வேறு ஒருவரிடம் சொல்வதும் அதே கவிதை மண்ணாங்கட்டியாகத்தான் தெரியுமா? என்று மண்டையில் உறைக்குமாறு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. படத்தின் மொழியிலேயே கூறுவதாயிருந்தால் இந்தப் புளிப்புக் காட்சிகள் நீங்கலாக ‘நெல்லிக்காய் சாப்டுட்டுத் தண்ணி குடிச்சாப்ல இருந்துச்சு’ படம். வெகு சில எழுத்துப் பிழைகளோடு வாசிக்கக் கிடைத்த ஓர் அருமையான கவிதை! நன்றி 'திண்ணை' இணைய இதழ். https://puthu.thinnai.com/2024/10/06/பெருந்திணை-மெய்யழகா/
  14. அறகலய போராட்டகாலத்திற்கு முன் அமெரிக்கத் தூதுவர் இவரோடு உரையாடியதாகவும், அவ்வேளையில் மக்கள் போராட்டங்கள மீது இராணுவம் நடவடிக்கை எடுக்கக் கூடாதென அறிவுறுத்தியதாக ஒரு பேச்சு அடிபட்டது. உண்மையோ பொய்யோ தெரியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅
  16. 1983 கலவரத்தை நடத்தியவர்கள் அன்றைய ஜே. ஆர் அரசே என்றே தமிழர்கள் அனைவருமே குற்றம் சாட்டினர். இன்று ஜேவிபி பதவிக்கு வந்திருப்பதால் புதிதாய் உருட்ட தொடங்கியுள்ளார்கள்.
  17. அங்க நிற்கிறான்டா நம்ம சிறிலங்கா இடதுசாரி தேசியவாதி😅
  18. வீட்டுக்கு சங்கு ஊதுவம் எண்டு சனம் நினைக்குதோ தெரியவில்லை😅
  19. இப்படி தலைசுற்றி விழுவதைவிட தெரிந்த வீட்டுக்கும் சைக்கிளுக்கும் போடுவம் என மக்கள் எண்ணுகிறார்களோ தெரியாது.
  20. ஒருவிதத்தில் மறதியும் நல்லதுதான். சில விடயங்களை மறந்தால்தான் மனிதன் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். நதி போல் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேங்கிய குட்டைதான். ஹிட்லர் செய்த கொடுமைகள் உலகம் அறிந்த விடயம். அதற்காக யேர்மனியை ஒதுக்கி வைத்தார்களா? ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு ஒரு யேர்மனிய மாது தலைமைதான் தாங்க முடியுமா? பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, நண்பர்கள் என்று கருதியவர்களால் வந்த ஏமாற்றங்கள், பெற்றவர்கள்,உறவினர்கள் உடன் பிறப்புகள், நண்பர்கள் ஆகியோரின் இழப்புகள், வாழ்க்கையில் பட்ட துன்பங்கள், அவலங்கள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் தலையில் தூக்கி வைத்தால் எப்படி நகர முடியும்?
  21. மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்?
  22. பெயர்கள் இப்போதே பதிவு செய்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் அதை விற்று நல்ல வருமானம் பெறலாம். 😂 “மனமுடைந்த தமிழ் தேசிய முன்னணி” இதுவும் நல்ல பெயர் தான்.
  23. உண்மை தான். அத்துடன் ஆரம்பத்தில் மிகவேகமாக அளவு 5 இல் புயலின் வேகம் இருந்தது.புளோரிடா மண்ணைத் தொடும்போது இதன் அளவு 3 ஆகி குறைந்து குறைந்து அடுத்த கரையை கடந்து அற்லாற்ரிக் கடலில் இறங்கும் போது அளவு 1 ஆகிவிட்டது. தொடங்கிய வேகத்தில் அடித்திருந்தால் மிகப்பெரும் அழிவு வந்திருக்கும். பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் அரசு சொன்னதற்கிணங்க வெளியேறிவிட்டார்கள். நிறைய பேருக்கு திடீரென இன்னொரு இடத்தில் போய் 2-3 நாட்களுக்கு தங்கும் வசதி இல்லை. குறைந்த நேரத்தில் கூடிய மழைப்பொழிவு.இது தான் போன புயலிலும் நடந்தது.
  24. கீரை கடைக்கு எதிர் கடை வேணுமென்பதில் எம்மவர்கள் உறுதியாக உள்ளார்கள் 🤣
  25. எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறியள். இந்த தசைச்சிதைவுநோய்க்கு (muscular dystrophy) ஒரு மருந்தைக் கண்டுபிடியுங்கோ
  26. முதலில் 2002இல் அப்போதைய அரசிடம் புங்குடுதீவு வீதிகளை புனரமைப்பு செய்யவென வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்டவும்.
  27. பகிர்விற்கு நன்றி நுணாவிலான் அண்ணா.
  28. அர்ச்சனாவின் முதல் சட்ட ஆலோசகாரக இருந்த செலஸ்டீன் அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கையெப்பமிட்டு இருக்கிறார். அப்புறம் இன்னுமொரு சட்டக்கல்லூரி பெண் பிள்ளை.. Celestine Stanislaus 14h · தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி இரண்டு கட்சியிலும் போட்டியிடும் ஒரே பிள்ளை
  29. எல்லா சிங்கள தலைமைகளும் கதிரையேறியவுடன், தம்மை புகழவும் சாமரை வீசவும் தாம் காலால் இட்ட பணியை தலையால் செய்துமுடிக்கவும் இவருக்கு முதலாக அழைப்பு விடுவது வழக்கம். ஆனால் இந்த தலைவர் இவரை அழைக்கவுமில்லை, இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கவுமில்லை, தேர்தலில் இவர் வெல்லக்கூடிய வாய்ப்புமில்லை. தொடங்கிவிட்டார், கடிதம் எழுதி, தான் தான் செய்வித்தேன் என்று கூவ. அவர் ஒரு தந்திரம், இவர் ஒரு தந்திரம். அனுரா தான் செய்ய விரும்புவதை தன் கட்சி சேர்ந்தவர்களின் கருத்துகளுக்கமையசெய்வாரேயொழிய இவர் சொன்னார் என்றோ அல்லது தனி நபர் சொன்னார் என்றோ செய்யப்போவதில்லை. இவர்களின் தில்லுமுல்லுகளையும் வேஷங்களையும் அறியாதவரா அவர்? இவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு எண்ணம். இவர் சொன்னாற்த் தானே யாரும் கேட்ப்பதற்கு. இவருக்கு எதையும் கேட்க தகுதியுமில்லை தராதரமுமில்லை தேவையுமில்லை. அதற்காக அவர்களோடு அவர்கள் இணைக்கவுமில்லை. இவர் சிங்களத்துக்கு சேவகம் செய்ய பணிக்கப்பட்டவர், மக்களுக்காகவல்ல. சொல்லப்போனால் கோமாளி எல்லா துறையிலும் தலையை காட்டி, தான் ஏதோ பிரபல்யமானவர்போல் காட்டிக்கொள்வார். அண்மையில் நான் அனுராவின் ஆள் என்று தெருவில் நின்று, என்ன நடந்தது என்று கூட தெரியாமல் கூவினார் ஒருவர், அவரை நினையுங்கள், அவர்தான் இவர். அவர் தெருவில், இவர் மேடைகளில் அழையாமலே கூட்டத்துக்குள் புகுந்து படம் காட்டுவார் வாக்குறுதிகள் அள்ளி விடுவார் அந்த வாக்குறுதிகள் நிலுவையில் இருக்க வேறொரு துறைக்குள் மூக்கை நீட்டுவார்
  30. உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன்.
  31. வடக்கிற்கு வன்னியில் இருந்து தண்ணீர் போக விடாமல் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து கொண்டு இருக்கும் முதன்மையானவர் இவர் தான் மக்களே.
  32. முன்னர் சேர்ந்திருந்த அரசுகளிடம் ஏன் இவைபற்றி கதைக்கவில்லை? எனது பங்கிற்கு 1) கொழும்பு —-யாழ் நெடுஞ்சாலை 2) தீவகங்களுக்கு ஓடும் கப்பலில் ஏறவே பயமாக உள்ளது. கீழ்த்தட்டு மேற்தட்டு கூரை என்று மக்களை ஏற்றுகிறார்கள். விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் வெளியே வரவே முடியாது.
  33. எங்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்புவதை விட சிங்கள அரசியல்வாதிகளை நம்புவது மேலான விடயம் என்பதனை கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல் உறுத்தி சொல்லியிருக்கின்றது போல் தெரிகின்றது . அதிலும் அந்த இரண்டு தேர்தலிலும் தமிழ்மக்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அமோகமாக வாக்களித்திருந்தனர். கோத்தபாய போட்டியிட்டபோதும் தமிழ்மக்கள் சஜித்திற்கு வாக்களித்திருந்தனர். இதனாலேயே கோத்தபாய சிங்களமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என மார்தட்டி இனவாதத்தை பிரமாண்டமாக காட்டினார். அதே போல் சிங்களவாக்குகளால் பெரும்பான்மையாக வந்த அனுர இன்றுவரை எதுவுமே பேசவில்லை.வாய் திறக்கவில்லை. இன்றுவரை யாரையும் எதிர்த்து பேசவில்லை. தன் உடை நடைகளையும் மாற்றவில்லை. எதற்கும் மூன்றுமாதம் பொறுத்திருப்போம்....அதன் பின்.... எனது பார்வையில் அனுர பொது ஆட்சி செய்து இலங்கையின் நிலமையை சீராக்க ஆரம்பித்தாலும்.......கிந்திய கருநாகம் சும்மா விடப்போவதில்லை. உதாரணங்களாக அண்மைய பங்களாதேஷ் ஆட்சி கவிழ்ப்பும் குழப்பங்களும்.
  34. தமிழ்சிறி, கருத்தாடல்களுக்கு எந்த வடிவத்திலும் பதில் தரலாம். ஆனால் அவை கருத்துக்கான பதில்களாக இருக்க வேண்டும். ஓடி ஓடி எல்லா இடத்திலும் நீங்கள் பதில் அளிப்பதால் உங்களுக்கு நேரம் போதாது என நினைக்கிறேன். நீங்கள் நின்று நிதானமாகப் பதில் தருவதுதான் உங்களுக்கு அழகு. பாரதிதாசனின் பாடல் ஒன்றின் சில வரிகள், பொதுமக்கள் நலம் நாடி புதுக் கருத்தைச்சொல்க உன் கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால் எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்சவேண்டும் புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் சரி விடயத்துக்கு வருவோம், “அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள்” என்று சொல்லி இருந்தீர்கள். நாங்கள் ஒன்றும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை. இப்பொழுது யேர்மனியை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே புலிகள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இனவெறிதான் ஊட்டப்படுகிறது. 2009க்குப் பிறகு தாயகத்தில் இருந்து வந்தவர்கள், அந்தப் பாடப் புத்தகங்களில் தமிழர்களது வரலாறு தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்று சொல்லி புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கி புதுப் புத்தகங்கள் அச்சடித்து தனியாகப் பாடசாலை நடாத்துகிறார்கள். இது உங்களுக்குத் தெரியாதது அல்ல. இன்றைய நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வதுதான் நல்லது. இரண்டாம் வகுப்பில் தமிழ்ப் பாடப் புத்தகத்தைப் படிக்கும் போதே, மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றுமே பிரதானம் எனத் தெரிந்து கொண்டோம். அதற்குப் பிறகே மற்றவைகள் எல்லாம். இன்றுள்ள நிலையில் தாயகத்தில் உள்ளவர்களைக் கேட்டால், உரிமை,தீர்வு, நாடு, எல்லாமே நான் குறிப்பிட்ட அந்த மூன்றுக்கும் அடுத்தபடியாகத்தான் இருக்கும். ஒரு வலுவான சமுதாயம் தாயகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறதா? இல்லையே! இன்னும் அடுத்தவர்களில் தங்கிக் கொண்டு, யாரேனும் ஏதாவது தரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டுதானே அங்கு பலர் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்வதாயின், ஏராளனின் ‘புலர் தொண்டு நிறுவனம்’. “யாரையும் எதிர்பார்த்திராது தாங்களே உழைத்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” இதைச் சொன்னது வேறு யாரும் இல்லை. பிரபாகரன்தான். அவர் மேலும் சொன்னார், “ஆயுதம் எங்கள் கையில் திணிக்கப்பட்டது” என்று. அவர் எதிர்பார்த்த அந்தச் சமுதாயமும் இன்று இல்லை. ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமும் இப்பொழுது நாட்டில் இல்லை. வாள் வீச்சுகளும் தேசிய வாய் வீச்சுகளும் போதைப் பொருளின் உச்சங்களும் நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அதில் இருந்து தப்பி வர வேண்டிய தேவையும் இப்பொழுது சேர்ந்திருக்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோமா? இனப் பிரச்சினையைக் கிண்டிக் கிளறி இனங்களுக்குள் பிரிவுகளை வளர்ப்போமா? எது இப்பொழுது முக்கியம் என்பதைச் சிந்திப்பதுதான் அவசியம். நம்பி வந்த மக்களை ‘அம்போ’ எனக் கைவிட்டு விட்டு தலைவர்கள் சிலர் மாவீரர்களாகி விட்டார்கள். தப்பிய போராளிகளில் சிலர், வழிகாட்டல் வாழ்வாதாரம் இன்றி அலைந்து திரிந்து வாழ்வு தேடி பொது வாழ்க்கையில் தங்களை மெது மெதுவாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் வசதியும் ஆதரவும் இருந்ததால் ‘போதுமடா சாமி’ என்று வெளிநாடுகளுக்கு ஓடி வந்து விட்டார்கள். இதிலும் கவனிக்க வேண்டிய விசயம் ஒன்று இருக்கின்றது. ஓடி வந்தவர்களில் இயக்கத்தில் முக்கிய இடத்தில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இலகுவாகக் கிடைத்தது. சாதாரண போராளிகள் நாதியற்றுப் போனார்கள். இரண்டு பக்ககமும் போரில் களைத்து விட்டன. பொருளாதாரத்தில் நாடு பாதாளத்தில் விழுந்து விட்டது. இப்பொழுது அங்கே நீங்கள் குறிப்பிட்ட ‘உரிமை,தீர்வு, நாடு’ என்ற குரல்கள் எல்லாம் இரண்டு தரப்பிலும் இல்லை. அப்படி இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், அது ‘தேசியம்’ பேசி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளினதும், எழுத்தார்களுடையதும்தான். ஆனால் புலத்தில் அதுவும் குறிப்பாக நான் வாழும் யேர்மனியில், தேசியம் பேசும் வேசதாரிகளை மிக மிக நன்றாகவே நான் அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் மேலும் மேலும் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இடைஞ்சல் தராமல் இருக்க வேண்டும். மக்களைச் சிரமப் படுத்தாதீர்கள். உங்கள் தேசிய சிந்தனைகளை அவர்களுக்குள் திணிக்காதீர்கள். உங்களால் முடிந்தால் யாரிலேனும் தங்காது சுயமாக உழைத்து வாழும் ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள். அப்படி உருவானால் அந்தச் சமுதாயம் தங்களுக்கு உரிமை,தீர்வு, நாடு தேவையா என்பதைப் பின்னர் தீர்மானித்துக் கொள்ளும். இதற்கு மேல் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. உங்களுக்காக நேரத்தைச் செலவழிக்கவும் விரும்பவில்லை.
  35. பத்து கட்சிகளுக்கு மேல் உள்ளது மொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை 25. வருமா?? வடக்கு கிழக்கில் திரியை திறந்து தேர்தல் செய்திகளை வழங்கும் தமிழ் சிறிக்கு. நன்றிகள் பல கோடி 🙏🙏🙏. பாராளுமன்றம் போக ஏன்.?? கடுமையாக போட்டி போடுகிறார்கள்?? நல்ல வருமானம் தரும் தொழிலா ?? தேர்தல் தினம் வீட்டில் இருந்து கள்ளு குடித்து புழுங்கல். அரிசி சோறு சாப்பிடால். ஒரு சந்தோசமாக இருக்கும் வாக்கு போடத்தேவையில்லை 5% க்கு குறைந்த வாக்குகள் எல்லா கட்சிக்கும் கிடைக்க வேண்டும் அனைத்து கட்சிகளையும். தடை செய்து விடலாம் 🤣😂🤪😂
  36. நூற்றுக்கு நூறு வீதம் எம்மிடத்தில் பிழைகளை வைத்துக்கொண்டு சிங்கள அரசியல் தலைவர்களை திட்டுவதில்/வசைபாடுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
  37. சிந்தனை சிற்பி, அறிவுஜீவி சொல்லுறார் எல்லோரும் கேட்டு நடவுங்கோ! எம்மினத்தின் சாபக்கேடுகள்!!
  38. ஒருவகையில் இந்த மூளைச் சலவை என்பது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் கூட புலிகள், போராட்டம்… போன்றவற்றில் இருந்து இன்னமும் மீளவில்லை. கண்ணாடி முன் நின்று கேட்டுப்பாருங்கள். தமிழரை இன்னும் இன்னும் அழிவுக்கு கொண்டு செல்லும் உங்கள் சிந்தனைக்கு ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை. சிந்தித்து முன்னேற வழி சொல்லுங்கள். “உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் - அதை ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் கதறி என்ன குழறி என்ன ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா…”
  39. இங்லாந் முத‌லாவ‌து இனிங்ஸ்சில் பெரிய‌ இஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம் 823...........................
  40. அண்ணே நீங்க பிழையாக விளங்கி கொண்டு உள்ளீர்கள் அவங்கடை தமிழ் நாட்டிலே கூட இரண்டுமாதம் bottom trawling ரோலிங் பண்ணகூடாது என்று ஏப்ரல் தொடக்கம் யூன் வரை தடை மற்ற மீன் பிடி முறைகள் அனுமதி உள்ளது வருஷம் முழுவதும் . முடிந்தால் அதிராம் பட்டினம் இல்லை கேரளா பக்கம் இதே ஆக்களை ரோலிங் பண்ண சொல்லுங்க பிடித்து லாடம் கட்டி அனுப்புவாங்க அவங்கடை சொந்த நாட்டிலேye கூட அந்த நிலைமை . இங்கு மொட்டை அடித்தது ஒருமுறைக்கு மேல் பிடிபடுபவர்களுக்கு தண்டனை என்று சொல்கிறார்கள் உண்மை பொய் தெரியாது .இங்கு சிங்கள நேவி அவர்களை பிடிப்பது தண்டனை கொடுப்பது தேவையற்ற மீன் விலை ஏற்றம் வேண்டாம் எனும் சிங்கள சுய நல போக்கேதவிர இரு இனமும் சேர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை தண்டனை கொடுப்பது இல்லை அடுத்து மீன்கள் பிரசவிக்கும் ஆழம் குறைந்த மன்னார் வளைகுடா பருத்திதுறைக்கு மேல் உள்ள ஆழம் குறைந்த கண்டமேடை போன்ற இலங்கையின் இயற்கையான வளத்தை தமிழ்நாட்டு bottom trawling மீன்பிடி ரோலர் உரிமையாளர்கள் அள்ளி செல்கிறார்கள் என்ற விழிப்பு உணர்வு காரணமாக இருக்கலாம் . மேலும் றோலர்களில் வரும் தொழிலாளிகளுக்கு தாங்கள் கடலை நாசம் பண்ணுகிறோம் என்ற விழிப்பு உணர்வு இல்லாதவர்கள் உண்மையான குற்றவாளிகள் ரோலர்கள் வைத்து இருக்கும் உரிமையாளர்களே .
  41. இங்கு பிரச்சனை என்னவென்றால் bottom trawling ரோலர்கள் வைத்து இருக்கும் உரிமையாளர்களே பிரச்சனைக்குரியவர்கள் .எல்லை தாண்டி ரோலிங் பண்ணும் அனைத்து றோலர்களையும் பறிமுதல் செய்யனும் இல்லை பழைய வாகனம்களை அவர்கள் ரோலிங் பண்ணும் இடங்களில் போட்டு விடனும் டக்கி கொஞ்சம் இந்த வேலை ஆரம்பத்தில் செய்து பின் அடங்கி விட்டார் அநேகமா றோலர் உரிமையாளர்களிடம் பெட்டி வாங்கி இருப்பார் .
  42. யார் ஆட்சிக்கு வந்தாலும் தொப்பென்று விழுகிறபடியால் ஏதாவது கிடைக்கலாம். இதன் முன்னோடியாக தேர்தலுக்குப் பின் அனுராவுக்கு ஆதரவு என்று முழங்கினார். அனுராவுக்கும் மட்டுமட்டாக வந்தால் இவர்களது ஆதரவு தேவைப்படலாம்.
  43. வரலாறு முழுவதும் விநோதங்கள் பல. என் இடதுசாரித் தோழர்கள், குறிப்பாக மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் (ML) கட்சித் தோழர்கள், எந்தப் பிரச்சினையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பார்கள். ஆனால் ML சார்பான JVP அக்காலத்திலேயே, எனக்குத் தெரிந்த வரை, சிங்களப் பேரினவாதக் கட்சி என்றே பெயரெடுத்துள்ளது. இன அழிப்புக்கு ஆட்பட்ட யூதர்கள் தாங்களும் வெறித்தனமாக இன அழிப்பில் ஈடுபடுவது வரலாற்று விநோதத்திற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. அதுவும் தங்களை அழிக்க முற்பட்டவர்களை அல்ல, வேறு ஒரு இனத்தை - தற்காப்பு என்ற பெயரில். அதிலும் கூட தங்களுக்குப் புகலிடம் தர ஆரம்பத்தில் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டாத ஒரு இனத்தை.
  44. ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... . இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்து கொள்ள நேரமாகி விட்டது... . சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... . குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக் காட்டியது... . வங்கிக்கு சென்று வரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... . அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... . வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும் போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது.. . வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரி பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக் காட்டியது... . இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... . என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது... . இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்... . இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்... . அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்... . அவனுக்கு வந்த டோக்கன் எண் 999 . அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்... . பணத்தை எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்லும்போது... எதை எடுத்தாலும் 99 ரூபாய் என கடை கண்ணில் பட்டது.. . அதில் ஒரு தொப்பி அவனை கவர்ந்தது.... அதை 99 ரூபாய் கொடுத்து வாங்கினான்... அப்போதுதான் அவனுக்கு குதிரைப் பந்தயம் நினைவுக்கு வந்தது... . நேராக குதிரைப் பந்தயம் நடக்கும் அந்த இடத்துக்கு சென்றான்.. . வாயில் எண் 9 வழியாக உள் நுழைந்தான்.... . அங்கிருந்த முகவரை சந்தித்தான்... ஐயா மொத்தம் எத்தனை பந்தயங்கள் நடக்க இருக்கிறது... மொத்தம் 10 போட்டிகள் என பதில் வந்தது... அப்படி என்றால் நான் 9-வது போட்டியில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.... . பந்தயமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறேன் என்று மொத்தப் பணத்தையும் கட்டினான்... . எல்லாப் போட்டிகளையும் பார்த்த அவன் 9-வது ‌பந்தயம் வந்தவுடன் தானும் கலந்து கொண்டான்... . போட்டி துவங்கியது... 10 குதிரைகள் ஓடியதில் குதிரை எண் 9 என எண் கொண்ட குரையின் மீது தன் மொத்தப் பணத்தையும் கட்டினான்.... . இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்ம் இருக்கிறது.. இன்றைய போட்டியில் நாம்தான் ஜெயிப்போம் என்று முழுமனதுடன் நம்பினான்... . அந்த முகவரும் இவரை அணுகி வினவினார்... ஏன் 9-வது பந்தயம்.. 9 எண் கொண்ட குதிரை.. 9 லட்சம்... இப்படியாய்... என கேட்டார்... . அவன் மீண்டும் நம்பிக்கையுடன் சொன்னான் இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்டம் அதனால்தான் இப்படி என்று... . போட்டி துவங்கியது... . குதிரைகள் சீறிப் பாய்ந்து ஓடின... . பந்தயம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.... . போட்டி முடிந்தது.... . இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....😜😝😜😝 பழமையும் புதுமையும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.