Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31968Posts -
வாலி
கருத்துக்கள உறவுகள்5Points5063Posts -
island
கருத்துக்கள உறவுகள்5Points1747Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/14/24 in all areas
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
தமிழ் மக்களை கோவணத்தோடு நிறுத்திவிட்டு பாராளுமன்ற வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் தேசிக்காய் அரசியல்4 points
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
4 pointsஇந்த ஆன்டிக்குப் பிரச்சினை தனக்கு சீட்டுகொடுக்கவில்லை என்பதுதான். மிதிலை ஆன்டி கிட்டாதாயின் வெட்டென மற எண்டு அவ்வையார் ஆன்டி சொல்லியிருக்காங்க. உங்களைப் போன்ற மனமுடைந்தோருக்காக தவம் அங்கிள் கட்சி தொடங்கியிருக்காங்க அங்கயும் இப்ப சீட்டு முடிஞ்சுதாம்!😂 ஆன்டி உங்களுக்கு சலாம் போட விருப்பமில்லாட்டி தோப்புக்கரணம் போட்டிருக்கலாம்!👀4 points
-
துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
3 pointsதுணைவிமானி ஒரு பெண்ணாம். ஓட்டோ பயலட்டில் விட்டு விட்டு எதும் கசமுசா பண்ணப்போய் இப்படியானதோ என்றும் சிலர் கருத்துத்தெரிவிக்கிறார்கள்.3 points
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
வட கிழக்கில் வெல்பவர் யாராக இருந்தாலும் ஆளும. அரசுடன் நல்லுறவை வளர்த்து அதன் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு தான் மக்கள் அவர்களை தெரிவு செய்கிறார்கள். அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் அநுரவுடன் ஒத்துளைத்து மக்களுக்கு நன்மை யார் செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. மக்களும் அவ்வாறானவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும்.3 points
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.2 points
-
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024] [அன்பும் மகிழ்வும் நிறைந்த ஒரு அற்புதமான இன்ப ஆண்டாக மலர நிலனுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்! ] "நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன் நான் யாரென்று உணரும் நாளிது! நட்சத்திரம் ஒளிர்ந்து உன்னை வரவேற்க நம்பிக்கை கொண்டு வளர்வாய் என்றும்!" "இங்கிலாந்து மண்ணில் மகிழ்ச்சியாய் உதித்தவனே இதயம் மகிழ பாலர்பாடசாலை போறவனே இனிய சிரிப்பும் தளிர்நடையும் கொண்டவனே இடையூறுகளைத் தாண்டி உலகை வெல்வாயே!" "நாலாவது ஆண்டு தொடங்கும் இன்று இதயத்தை தொட்டு மகிழ்ச்சி நடனமாடுமே! ஆசீர்வாதங்கள் காற்றில் குளிர்ந்து பொழிந்து ஒவ்வொரு விடியலையும் உனக்கு வழிநடத்துமே!" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி ஆக்கமான செயலில் ஈடு பட்டு ஆலமரம் போல் நிழல் கொடுத்து ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!" "இளமைக் கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "பதினொன்று அக்டோபர் பிறந்த அழகனே பகலோன் போல உலகில் ஒளிர்ந்து பகைவர்கள் அற்று கவலைகள் அற்று பல்லாண்டு நிலன் வாழ வாழ்த்துகிறேன்!" தாத்தா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]2 points
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
ஆமா! இவ்வளவு காலமும் இல்லாத பதவி வெறி இப்பதான் வந்தது அவர்களுக்கு. எல்லோரையும் அடக்கியாளும் சுமந்திரன் மட்டும் பதவி ஆசை இல்லாத ஞானியாக்கும்.. இன்று சுமந்திரனால் வரவேற்கப்படுபவர்கள் நாளைக்கு விரட்டப்படுவார்கள், அப்போதும் இதே ஞாயத்தை கூறுவீர்களா? இவர் கட்சியின் கொள்கையோடு கலந்துபேசி கட்சிக்குட்ப்பட்டா கருத்துக்களை வெளியிடுகிறார், அங்கத்தவரை விரட்டுகிறார்? அல்லது புதியவர்களை நியமிக்கிறார்? தான் தோன்றித்தனமாக சர்வாதிகாரி போல் முடிவுகளை எடுக்கிறார் அதனாலேயே அங்கத்தவர் விலகுகின்றனர்.2 points
-
வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
1 pointவணக்கம் நான் சிலருக்கு பழசு தான் என்றாலும் பலருக்கு இங்கை புதுசு1 point
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
1 pointசலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி தமிழரசு ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடவில்லை என்பதால் வேட்பாளர் தெரிவில் நீக்கினார்கள் - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்! தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினாலும் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல் தடுத்தார்கள் எனவும் தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை செயலாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில், தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எனக் கூறுபவர் தமிழரசு கட்சியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பெண்களை தேடினோம் பலரும் பின்னடிக்கிறார்கள் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டார். அவரது கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன் தமிழரசு கட்சியில் ஆளுமை மிக்க பெண்கள் இருக்கும்போது எங்கோ எல்லாம் தேடி இரு பெண்களைப் பிடித்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இறக்கி உள்ளனர். தமிழரசு கட்சியில் இருக்கும் என்னைப் போன்ற பெண்கள் ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடும் பெண்களாகவோ அல்லது தலையாட்டும் பெண்களாகவோ இருக்காத காரணத்தினால் எம்மை தேர்தலில் நிறுத்தவில்லை. நான் முப்பது வருடங்களுக்கு மேலாக தனியார் காப்புறுத்துறையில் பல பதவி நிலைகளை வசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளையில் பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவி நிலைகளை வகித்தவள். தமிழரசு கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத நிலையில் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி விக்னேஸ்வரனே தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன். தமிழரசு கட்சியினுடைய தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஆளுமை உள்ள பலரை தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரேரித்த நிலையில் அது நடைபெறவில்லை அதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினேன் என வெளிப்படையாக பேசி இருந்தார். ஒரு தலைவரால் கட்சியில் செயல்பட முடியாத அளவுக்கு ஒரு சிலரின் செயற்பாடு அத்து மீறிய நிலையில் அந்தக் கட்சிக்குள் இருப்பது தவறு என நினைத்து என்னைப் போன்ற பலர் வெளியேறினர். தமிழ் தேசிய உணர்வுடன் தமிழரசு கட்சிக்குள் பயணித்தவர்கள் கட்சிக்குள் இடம்பெறும் விரும்பத்தகாத செயற்பாடுகள் காரணமாக கட்சியை இருந்து விலகுவதாக எழுத்து மூலம் கடிதங்களை அனுப்பி உள்ளனர். அது மட்டுமல்லாது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தமிழரசு கட்சியிலிருந்து விலகுவதற்கான தீர்மானங்களை எடுத்த வருகின்றனர். ஆகவே தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சியாக இனியும் செயல்பட முடியாத நிலையில் தமிழரசு கட்சியின் கொள்கைகளை மாற்றியவர்கள் நிச்சயம் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/சலாம்_போடாததால் வேட்பாளர்_தெரிவிலிருந்து_நீக்கம்!1 point
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
இல்லை அண்ணா இது ஒரு சனியன் இதை தள்ளி வையுங்கள் என்று என் தம்பிமார் பலரும் சொன்னார்கள். ஆனால் இந்த சனியனும் சேர்ந்தது தான் என் இனம் என அரவணைப்பு செய்ததற்கு அது தன் பாணியில் எனக்கு நன்றி சொல்லுது. பலமுறை சொல்லி உள்ளேன் மரியாதை எனது மசிரு இல்லை உயிர் என்று. இனி அது பலனை அனுபவிக்கும்.1 point
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
அன்மைக் காலமாய் உடல் நிலை சரி இல்லை ஓய்வு எடுக்கிறேன் கூட தூக்கம் காலையில் எழுந்ததும் இஸ்கோர் பார்ப்பேன் ஆம் நீங்கள் சொல்லும் அணி நேற்று படு தோல்வி....................NFL சம பலமான இரு அணிகள் விளையாடும் போது பெரிய புள்ளி வித்தியாசத்தில் தோப்பது சில சமையம் ஏற்று கொள்ள முடியாது 😒 அதே போல் NBAயில இதே போல் நிறைய வாட்டி நடந்து இருக்கு😁......................... எனக்கு NFLவிட NBAதான் அதிகம் பிடிக்கும் கிரிக்கேட்டுக்கு அடுத்த படியா நான் விரும்பி பார்க்கும் விளையாட்டு அது வாஸ்கேட்வோல் தான்🙏😍...................... 56புள்ளி NFL அதிகம் என்று தான் சொல்லுவேன்..................1 point
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
🤣......... பையன் சார், நீங்கள் அமெரிக்கன் புட்பால் பார்ப்பீங்களா.......... நேற்று Dallas Cowboys அணியை வைத்துச் செய்தார்கள் Detroit Lions. கொடுமையாகவும், பாவமாகவும் இருந்தது. அரைநேர இடைவெளியில் போனவர்கள் அப்படியே தலைமறைவாகி இருக்கவேண்டும், ஆனால் திரும்ப வந்து திரும்பவும் மிதிபட்டார்கள்............1 point
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
அவர் தனது தமிழ் சகோதரர்களை அணைந்து செயற்படுகின்ற ஆசையில் பின் விளைவுகளை யோசிக்க மறந்துவிட்டார் 😊1 point
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இலங்கை பெண்கள் அணியுமா......... இலங்கை ஆண்கள் அணி உலக கோப்பையில் விளையாடின போது, நாங்கள் தான் சூனியம் வைத்தோம், அப்படியே ஆண்கள் அணி மிக மோசமாய் விளையாடி தோற்றது. வைத்ததை எடுக்க மறந்து போனோம்........😜.1 point
-
துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
1 pointவிமான பயணத்தில் கப்டனே அனைவருக்கும் மேலானவர். அவர் துணை விமானியை விமான அறையை விட்டு வெளியேற்றுவதற்கு அதிகாரம் உள்ளதா தெரியவில்லை. கப்டன் விமான அறையை விட்டு வெளியேற்றுமளவுக்கு துணை விமானி என்ன செய்தாரோ? இப்படியோர் சம்பவம் முன்பு கேள்விப்பட்டது இல்லை.1 point
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
ஒரு கருத்தை மட்டும் பார்த்துத் தான் பதில் எழுதுவீங்கள் போல, அக்கம் பக்கம் பார்க்க விடாமல் சுமந்திரன் வெறுப்பு கண்ணை மறைக்கிறது போல😂! நீங்கள் புலவர் இணைத்த தவராசா அவர்களின் செவ்வி பார்க்கவில்லையோ? 2020 இலும் தனக்கு தேசியப் பட்டியலில் இடம் எடுத்து பின்னர் இழந்திருக்கிறார். இது வரை விலகாமல் இருக்கக் காரணம் தமிழரசை விட்டுத் தனியாகப் போய் இவர் போன்றோர் முகவரி தேட இனி முடியாது. எனவே தான் தமிழரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு " சீட்டுத் தா" என்று அழுகின்றனர். இவர்களுக்கும், நாம் தமிழ்நாட்டின் ஊழல் கட்சிகளில் காணும் அரசியல் வாதிகளுக்கும் ஒரு வித்தியாசம் தான்: தமிழ்நாட்டில் வெள்ளை வேட்டி, சட்டை, தவராசா அவர்களுக்கு கோட்டு சூட்டு😎!1 point
-
ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
சரியான நடவடிக்கை. உண்மை வெளியே வரவேண்டும்.1 point
-
வட் வரி செலுத்த தவறிய அர்ஜுன் அலோசியஸுக்கு ஆறு மாத சிறை
3 including Arjun Aloysius sentenced to prison for VAT evasion 14 Oct 2024 The Colombo Magistrate’s Court (MC) has sentenced the Director of W.M. Mendis Distilleries, Arjun Aloysius and two others to 6 months in prison for defaulting the payment in Value Added Tax (VAT) by the company. The relevant case was filed against the company by the Inland Revenue Department (IRD) for defaulting the payment of Rs. 3.5 billion in taxes owed to the Government during the period from 2016 to 2019. The case was taken up before court this morning (14). The imprisonment was imposed over failure to complete the relevant payments as per the court order which was delivered on November 14 2023. https://www.themorning.lk/articles/Xn8dcSvhLcJHyfvZGrV21 point
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
கவி ஐயா, 26ஆவது நிமிடத்தின் பின் கீழே தொப்பி அணிந்து சிவப்பு முச்சக்கர வாகனத்தில் இருப்பவர் தான்.1 point
-
அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய தயார் - நீதிமன்றத்திற்கு அரசாங்கம்
1 pointவர்ரே வா,..... எனது வாக்கு அனுரவுக்கே,....🤣1 point
-
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்
1 point
- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
கவனம் .....சிங்கள வாக்குகளை இழக்க வேண்டி வரும்.....தேர்தலில் பின் சொல்ல வேண்டிய வசனம்..1 point- அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய தயார் - நீதிமன்றத்திற்கு அரசாங்கம்
1 pointஇரண்டாவது ஆப்பு இந்தியாவுக்கு1 point- கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி; நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன்;
1 point1 point- பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன். வாழ்க வளமுடன்1 point- சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா ! தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார். கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார். சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம். கருணாவை எதிர்த்து நின்ற சிவராம் கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார். அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை. புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின் ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது. சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர். ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட, புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது. இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும் , தனது கையாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது. அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.1 point- கருத்து படங்கள்
1 pointசிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு.1 point- சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
https://dbsjeyaraj.com/dbsj/?p=408891 point- சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
1 pointசுமத்திரனை எல்லாரும் திட்டுறீர்கள் சரி, அப்படி என்றால் வெளியேறிய எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நிற்க வேண்டியது தானே? அதற்கு ஏன் வாய்ப்பில்லை?1 point- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
எதிர்பரசியல் அனுகுமுறை.மக்ளின் சாபக்கேடு.1 point- தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….?
தமிழரசுக் கட்சி தேவையில்லை என்று கத்துவோர் கதறுவோர் முக்காரமிடுவோர் பதறுமிடமொன்றொன்றுண்டு. அதுதான் இந்தத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி இலகுவாக 2 ஆசனங்களை வெல்லும் என்பதே அந்தப் பயம். ஏனென்றால் எதிர்த்தரப்பு மிகவும் பலவீனமானது. எங்களது அரசியற் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டரின் வார்த்தைகளிற் சொல்லப்போனால் எதிர்த்தரப்பில் ஒரு திரட்சி இல்லை. மனமுடைந்த பல குழுக்களாகச் சிதறிக் கிடக்கின்றன. அதுபோக டக்ளஸ் அங்கிளின் வீணைக்கட்சிக்கு நிட்டயம் ஒர் ஆசனம் உண்டு. மிகுதி 3 ஆசனங்களுக்கான போட்டியே யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும். அதுவும் அநுர ஆதரவு அணிக்கே போக வாய்ப்புக்கள் அதிகம். எனவே தமிழரசுக் கட்சி தேவையில்லை என்று உளறிக்கொண்டே பதறிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும்!😂1 point- சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
1 pointஒரு பிடாரி மற்றவர்களை விரட்டுது, அதை விட, விரட்டப்படுகிறவர்களை விமர்சித்து, அந்த பிடாரியை காப்பாற்ற பலர். ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை, தலைவரில் இருந்து எல்லோரும் வெளியேறுகிறார்கள், அதற்கான எதிர்ப்பை காட்ட முடியாவிடில், சார்பாக பேசுவது முக ஸ்துதி, தம்மைத்தாமே ஏமாற்றுவது.1 point- சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
இந்திய விசுவாசிகள் இந்திய ஒட்டுக்குருக்களைச் சேர்த்துக் கொண்டு பொதுக்கட்டமைப்பு என்று சொல்லி பொது வேட்பாளரை நிறுத்தினார்கள்.தங்கள் வாக்குகளை ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு செலுத்துவதன் மூலம் சிங்கள பெரும்பான்மை அரசியல் வாதிகளுக்கு தங்கள்வாக்குகளை அளிக்க விரும்பாத தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் பொது வேட்பாளருக்கு அளித்தார்கள்.அரசியல் அறம் அறவே அற்ற ஒட்டுக் குழுக்கள் சங்குச்சின்னத்தை அறமற்று அபகரித்துக் கொண்டன. பொதுக்கட்டமைப்பை கட்டுப் படுத்தும் பலமற்ற பத்தி எழுத்தாளர்கள் இப்பொழுது புலம்பி என்ன பயன்?நிலாந்தன் ஒரு தமிழ்த்தேசிய விசுவாசி அவருக்குத் தமிழ்த்தேசிய மன்னனி கொள்ளகயில் விட்டுக்கொடுக்காமல் இருப்பது அலர்ஜியாக இருக்கிறது.1 point- சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
சிவராமை கொன்றது, இலங்கை புலனாய்வு அமைப்பு. இதிலும் இனியபாரதி நேரடியாக பங்கு கொண்டார். புலிகளின் தலைமையால் கிழக்கு மாகாண போராளிகள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது என தூண்டி விட்டவர்களில் ஒருவர் சிவராம். பின்னர் வன்னிக்கு தலைமையால் அழைக்கப்பட்டு அவர்களால் " கருணாவுக்கு ஒரு கடிதம்" என ஒரு கடிதம் கருணாவை விமர்சித்து வீரகேசரியில் ஒரு கடிதத்தை பிரசுரிக்க வைத்தனர். சிவராம் வெள்ளவத்தையில் ஒமேகா ஹோட்டலில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருக்கும் போது, அவரது கைத்தொலைபேசிக்கு கருணா அழைத்து நீ இப்ப எங்கிருக்கின்றாய் என்ன குடித்துக் கொண்டு இருக்கின்றாய் என எனக்கு தெரியும், உன்னை தூக்குவது எனக்கு இலகு, நீ இப்ப நல்ல பிள்ளை வேசம் போடுகிறாய்..ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என கூறியிருந்தார். கருணா தன்னை ஒன்றும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் சிவராம் பலர் எச்சரித்தும் உயிர் பயம் இன்றி கொழும்பில் நடமாடினார். ஆனால் சிங்கள புலனாய்வு அமைப்பு அவரை பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தி ஜயவர்த்தனபுரவில் வைத்து கொன்றது. இதற்கு அவர்கள் சித்தார்த்தனின் வாகனத்தை தான் பயன்படுத்தி இருந்தனர். கடத்தும் போது சிவராமுடன் இருந்தவர்களில் ஒருவர் லங்கா தீப எனும் சிங்கள நாளிதழின் பத்திரிகையாளர் ( ஆசிரியர் என நினைக்கிறேன்). அவர் உடனடியாக அன்றைய இராணுவ தளபதி வரைக்கும் தொடர்பு கொண்டு சிவராமை காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை எடுத்திருந்தார். கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் கூட சிவராமிற்கு இருக்கும் தொடர்புகள் மூலம் விடுவிக்க வேண்டி வந்து விடும் என்பதால் கடத்தி சில மணி நேரங்களில் கடத்தியவர்களால் கொல்லப்பட்டார். அவர் கடத்தப்பட்டவுடன் என் நண்பர்கள் மூலம் அதை அறிந்து கொண்டேன். அவரது தொலைபேசியிற்கு தவிப்புடன் அழைப்பு எடுக்கும் போது, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் எனும் சந்திரமுகி படப் பாடல் ஒலித்தது. தன் caller tune ஆக அதை சிவராம் வைத்து இருந்தார். இப் பாடலை நான் எப்ப கேட்பினும் உடம்பு ஒரு முறை அதிரும். இதை எழுதும் போது கூட அதிர்கின்றது.1 point- சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
இவரது பொது வேட்பாளர் படு தோல்வியடைந்ததை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நிலாந்தன் குழம்பி போயுள்ளார். “கடந்த 15 வருடங்களாக” என்ற வார்ததையை நிலாந்தன் அடிக்கடி உச்சரிக்கிறார். தமிழர் போராட்டம் எப்போது தொடங்கியது என்பதை மறந்துவிட்டாரா? 2009 க் கு முன்பு தமிழீழ தேசிய தொலைக் காட்சியில்(NTT) பிரபல அரசியல் ஆய்வாளராக இவர் இருந்த போது அன்றைய தலைமைக்கு எந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளையோ மக்கள் பேரழிவை தடுக்க வேண்டிய இடித்துரைப்போ செய்யாமல் வெறும் ஜால்ரா போடும் ஆய்வுகளை மட்டும் செய்ததேன்? அவ்வாறு அன்று நேர்மையான விமர்சனங்களை செய்திருந்தால் தனது வாழ்வுக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயத்தில் பாரிய மக்களை அழிவை விட தனது இருப்பே முக்கியம் என்று இவர் நினைத்திருக்கிறார். இவ்வாறு சுயநல நோக்கில் மக்கள் அழிவுகளை வேடிக்கை பார்தத இவர் இப்போது தனது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் வராது என்ற துணிவில் மற்றவர்களை சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டுகிறாராம்.1 point- வரும்"காலத்தை"வரவேற்போம்!
1 point- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
Kiri 'Zi அதென்ன எல்லாருக்கும் கட்சி சீட் தரேல்ல எண்டவுடன மட்டும் கோவம் வந்து கட்சிய விட்டு கோவமா வெளியேறுறீங்கள் 🤣 இந்த பதிவிற்கு முகநூலில் வந்த மேல் பின்னூட்டம் "தமிழரசு மீது கோபக் கனல் கக்கும்" ஆட்களின் முகத்திரையைக் கிழித்து விடுவது போல் இருப்பதால் இணைத்திருக்கிறேன். உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?1 point- சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
சரியாக சொன்னீர்கள் நொச்சி. ஒட்டுக் குழுக்கள்... கொலைகளை செய்து விட்டு அரச செல்வாக்குடன் பாராளுமன்றம் கலைக்கப் படும் வரை சுதந்திரமாக நடமாடி திரிந்தார்கள். இது பாவப் பட்டவர்களுக்கு மறுக்கப் பட்ட நீதி ஆகும். அவை எல்லாவற்றையும் தோண்டி எடுத்து நீதி வழங்குவதே சரியான முறை ஆகும். அத்துடன்... சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர என்ற நேர்மையான அதிகாரி மீண்டு சேவையில் இணைக்கப் பட்டுள்ளார். முன்னேற்றகரமான நகர்வுகள் நிகழ வேண்டும் என்பதே எமது விருப்பம். அவர் சம்பந்தமான தகவல்களை கீழுள்ள இணைப்பில் நேரம் இருந்தால் பாருங்கள். பல தமிழர்களின் கொலைகளையும் வெளியே கொண்டு வந்த திறமைசாலி. 👇 👇1 point- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் தவறுகள் இருக்கலாம். அனைத்தையும் ஆதரிக்க முடியாது. அவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால், வட இந்திய ஆர். எஸ்.எஸ் , இந்துத்துவா ********** உமாகரனுக்கு இதை சொல்லலும் அருகதை கிடையாது. மதவாத நச்சுக்கருத்துகளை ஈழத்தமிழரினையே விதைப்பதை முதலில் இவர் நிறுத்த வேண்டும். பின்னர் தமிழரசுக்கடசியை விமர்சிக்கலாம். தமிழரசு கட்சியை ஆர் எஸ் எஸ் அடிமை ஆக்க முடியவில்லை என்ற கோபமே இவருக்கு. மற்றபடி தமிழ் உணர்வு எல்லாம் இவரது நடிப்பே.1 point- தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
இல்லை தகுதி அற்றவகளையும். சுமத்திரனின். அடிமைகளையும். வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து,......... தவராசாவைவிட சிவமோகனைவிட இன்னும் தமுழரசுகட்சியிலுள்ளவர்களைவிட சுமத்திரன். நியமித்தவர்கள் அதிக தகுதி கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்’ முடியுமா??? இல்லை உங்களால் ஒருபோதும் முடியாது எனவே… தயவுசெய்து தவராசா போன்றவர்களை குற்றம்சாட்டுவதை தவிர்க்கவும் 🙏1 point- கருத்து படங்கள்
1 point1 point- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
கண்டிப்பாக இருக்கிறது சுமத்திரன். தெரிவு செய்த வேட்பாளர்கள் தகுதி அற்றவர்கள். அவரகளைவிட தகுதியானவர்கள் தமிழரசுகடசியில். பல ஆண்டுகளாக அங்கத்துவம் பெற்று இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சுமத்திரனின். அடிமைகள் இல்லை இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள். சுமத்திரனின். அடிமைகள் 🙏1 point- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
அப்படி எப்படி பொதுவில் சொல்ல முடியும்? இப்படி வேண்டுமானால் சொல்லலாம், தமிழரசுக் கட்சி ஒவ்வொரு நற்றமிழனையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அந்த நற்றமிழர் வரிசையில் உமாகரன் ராசையா, சிவமோகன், போன்றவர்களுக்கு இடம் இல்லை1 point- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
சாச்சா..... உதெல்லாம் தமிழரசுக்கட்சியில் போட்டியிட அனுமதிக்கப்படாதவர்களின் வீண் பேச்சு, சுமந்திரன் மேலுள்ள பொறாமையால் பேசுகிறார்கள். மக்கள் சுமந்திரனை அமோகமாக வரவேற்பார்கள். "ஒருவர் சொன்னால்; கேட்டோடு, ஊரோடினால்; சேர்ந்தோடு (ஒத்தோடு)." சுமந்திரன் மேல் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு விமர்சனம்? அவரது திருகு தாளம் வெளிப்படையானது. இதன் காரணம், இப்போ கட்சியிலிருந்தே வெளிப்படுகிறது. இதைவிட உதாரணம் வேறென்ன வேண்டும்? ஆனால் காலதாமதம், தலைமையின் இயலாத்தன்மை, மக்களின் குரலுக்கு செவி கொடுக்காமை அவரை இந்தளவுக்கு கட்டுக்கடங்காதவராக உருவாக்கியிருக்கிறது. இவரது அபிமானிகள், உறவுகள், நண்பர் இன்னும் இவர் உத்தமர் என்று வாதாடி தம்மைத்தாமே ஏமாற்றுகின்றனர்.1 point- ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
ரத்தன் டாடாவுக்கு அவரது வீட்டிற்கே சென்று பாரம்பரிய தமிழ் மருத்துவம் செய்த கோவை வைத்தியர் பட மூலாதாரம்,LAKSHMANAN படக்குறிப்பு, லட்சுமணனும் அவரது மனைவியும் 2019-ஆம் ஆண்டு மும்பைக்குச் சென்று ரத்தன் டாடாவைச் சந்தித்தனர் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வீதமாக, பல மணி நேரம் அவருக்கு அவரது வீட்டிலேயே சிகிச்சை கொடுத்தேன். அந்த நேரங்களில் எத்தனையோ விஷயங்களை எங்களிடம் அவர் பேசினார்.” இந்த வார்த்தைகளைச் சொல்வது கோவை மருதமலையைச் சேர்ந்த வர்ம வைத்தியர் கோ.மு.லட்சுமணன். அவர் தன்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறியது, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை. கோவை மருதமலை அடிவாரத்தில் வர்ம முறையிலான தமிழ்ப் பாரம்பரிய வைத்திய சாலை ஒன்றை நடத்தி வருகிறார் லட்சுமணன். கடந்த 2019-ஆம் ஆண்டில், மும்பையில் ரத்தன் டாடாவின் வீட்டில் வைத்தே பல நாட்கள் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் இவர். ரத்தன் டாடாவின் மறைவுக்கு, தன் மனைவி மனோன்மணியுடன் மும்பைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டுத் திரும்பி வந்திருக்கிறார். ரத்தன் டாடாவுக்குச் சிகிச்சை அளித்தது பற்றி பிபிசி தமிழிடம் பேசினார் லட்சுமணன். சந்திப்பு எப்படி நிகழ்ந்தது? பட மூலாதாரம்,LAKSHMANAN கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், டாடா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கே.கிருஷ்ணகுமார் தன்னை ஃபோனில் தொடர்பு கொண்டதாகச் சொல்கிறார் லட்சுமணன். “அவர் கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர். அவர் மும்பையில் ஒரு வி.வி.ஐ.பி-க்கு நீங்கள் நேரில் வந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்று கேட்டார். யாருக்கு என்று அப்போது அவர் சொல்லவில்லை,” என்கிறார். தொடர்ந்து, “அதற்கு நான், ‘பாரம்பரியமாக இங்கு எங்களைத் தேடி வருபவர்களுக்கு மட்டும்தான் நாங்கள் சிகிச்சை தருகிறோம். வெளியில் சென்று சிகிச்சை தருவதில்லை என்று கூறி மறுத்து விட்டேன். அதற்குப் பின் பல மாதங்களாக அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை,” என்று டாடா குழுமத்திலிருந்து முதலில் வந்த அழைப்பைப் பற்றி லட்சுமணன் கூறுகிறார். அதற்குப் பின், மீண்டும் டாடா குழுமத்திலிருந்து தொடர்பு கொண்டது பற்றிப் பேசிய அவர், “2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிருஷ்ணகுமார் மீண்டும் என்னை அழைத்தார். நாங்கள் சிகிச்சை அளிக்குமாறு கேட்டது, ரத்தன் டாடாவுக்குத்தான். அவர் முதுகுவலியாலும், முழங்கால் வலியாலும் பெரிதும் அவதிப்படுகிறார். உங்களைப் பற்றி எனது தமிழ் நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்டேன். ஒரு மாதமாக உங்களின் வைத்திய நிலையம் பற்றி எங்களுடைய குழுவினர் களத்தில் நேரில் விசாரித்தனர். அவர்கள் சொன்னதை வைத்தே நான் உங்களிடம் மீண்டும் பேசுகிறேன்’ என்றார்,” என்கிறார் லட்சுமணன். “இதுபற்றி என் மனைவி மனோன்மணியிடம் பேசினேன். அவர், ‘நிச்சயமாக நீங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.’ என்றார். அதன்பின், நானும் என் மனைவியும் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பைக்குச் சென்றோம்,” என்று சிகிச்சைக்குச் சென்றது பற்றி லட்சுமணன் கூறுகிறார். படக்குறிப்பு, கோவை மருதமலை அடிவாரத்தில் வர்ம முறையிலான தமிழ்ப் பாரம்பரிய வைத்திய சாலை ஒன்றை நடத்தி வருகிறார் லட்சுமணன் பாரம்பரியத் தமிழ் வைத்திய முறை ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்துப் பேசிய லட்சுமணன், மும்பையில் அவருடைய வீட்டுக்கு அருகிலுள்ள கெஸ்ட் ஹவுஸிலேயே தங்களைத் தங்க வைத்ததாகச் சொன்னார். “அங்கிருந்தபடி, அவருடைய வீட்டிற்கே சென்று தினமும் 2 மணி நேரம் சிகிச்சை அளித்தேன். வழக்கமாக இங்கு வரும் நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள்தான் வர்ம முறையில் சிகிச்சை தருவோம். அவருக்கு உழிச்சல் முறையில் தலைமுதல் பாதம் வரை ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதற்கு வர்ம முறையில் சிகிச்சை அளித்தேன்,” என்கிறார் லட்சுமணன். தான் அளித்த சிகிச்சையில் திருப்தியடைந்த ரத்தன் டாடா பாரம்பரியத் தமிழ் வைத்திய முறையைப் பற்றி சிலாகித்துப் பேசினார், என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த லட்சுமணன், அப்போது ரத்தன் டாடாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் காண்பித்தார். இந்தச் சிகிச்சைக்கு அடுத்த மாதமே ரத்தன் டாடாவுக்குக் காலில் சற்று வீக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, கிருஷ்ணகுமார் மீண்டும் தன்னை அழைத்ததாகக் கூறுகிறார். “அப்போதும் அங்கு சென்று 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை கொடுத்தோம். அவருக்குச் சிகிச்சை அளித்த 20-லிருந்து 25 மணி நேரங்களில், எத்தனையோ விஷயங்களை எங்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். பெரும்பாலும் குடும்பத்தைப் பற்றியே அதிகமாக விசாரிப்பார். ஒரு நாள், இந்த வைத்தியக் கலையை உலகம் முழுக்க எப்படி கொண்டு செல்லப் போகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘அது என் கையில் இல்லை; உங்களிடம்தான் இருக்கிறது.’ என்று சொன்னேன். உடனே தன் கட்டை விரலை உயர்த்தி ‘தம்ஸ்அப்’ காண்பித்தார்,” என்கிறார். “ஒரு நாள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் அவரது குடும்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், ‘விதியின் விளையாட்டு’ என்றார். அவ்வளவு பெரிய மனிதர், இவ்வளவு எளிமையாக என்னிடம் பேசியதை எப்போது நினைத்தாலும் பிரமிப்பாயிருக்கும்,” என்று ரத்தன் டாடாவின் எளிமையைப் பற்றி பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லட்சுமணன். பட மூலாதாரம்,LAKSHMANAN படக்குறிப்பு, சிகிச்சைக்காக இவர்கள் மும்பை சென்றிருந்தபோது, டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகரையும் கிருஷ்ணகுமார் அறிமுகப்படுத்தியுள்ளார் ‘ரத்தன் டாடாவின் எளிமை வியக்கத்தக்கது’ ரத்தன் டாடாவுக்குச் சிகிச்சை அளிக்கச் சென்ற போது லட்சுமணனுடன் சென்ற அவரின் மனைவி மனோன்மணி, வர்மம், எண்ணெய், ஒத்தடம் போன்ற முறையில் சிகிச்சை கொடுத்தது பற்றி ரத்தன் டாடா ரொம்பவே ஆச்சரியப்பட்டார், என்கிறார். “அவருக்குச் சிகிச்சை அளித்ததற்கு எந்தப் பணமும் வேண்டாம் என்று நாங்கள் சொன்னதால், மிகவும் ஆச்சரியப்பட்டு, ‘மனோன்மணி, நீங்கள் என் மகளைப் போன்றவர். கோவைக்கு நான் வரும்போது, கட்டாயமாக உங்கள் வீட்டுக்கு வருவேன்’ என்றார். அதன்பின், கோவைக்கு அவர் வருவதாக தாஜ் ஓட்டலில் இருந்து தகவல் தெரிவித்தார்கள். ஆனால் அந்தப் பயணம் ரத்தாகிவிட்டது,” என்கிறார். “அவரது எளிமை வியக்கத்தக்கது. அவர் எங்கள் மீது காட்டிய அன்பை மறக்கவே முடியாது. அதனால்தான் அவரது மறைவுச் செய்தி கேட்டதும், உடனடியாக இருவரும் புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்,” என்று ரத்தன் டாடாவுடனான சந்திப்பு அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் மனோன்மணி. லட்சுமணனை மும்பைக்குச் சிகிச்சைக்கு அழைத்த ஆர்.கே.கிருஷ்ணகுமார், கடந்த 2022-ஆம் ஆண்டில் இயற்கை எய்திவிட்டார். அதற்கு முன்பாக, இந்தச் சிகிச்சைக்காக இவர்கள் மும்பை சென்றிருந்தபோது, டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகரையும் கிருஷ்ணகுமார் அறிமுகப்படுத்தியுள்ளார். அவரும் இவர்களுடன் பேசியுள்ளார். அந்தப் புகைப்படத்தையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார் லட்சுமணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjwdpg5nx7lo1 point- ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
1 point- காசிக்கு 'துறவு' போனவர் பெரியார் ஆனது எப்படி?
பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்பது வந்திக்கும் அர்த்தத்தில் அல்லது நோக்கத்தில் அல்ல. பெரியார் எழுத்தில் சொன்ன விளக்கம் அவரின் நூலிலேயே இருக்கிறது. அந்த காலத்தில், பெரியார் தமிழ் எழுத்துக்களை சீரமைக்கும் திட்டத்தை முன்வைத்தார், அது MGR ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்நாடு மாநில நிர்வாகம், மற்றும் தமிழுலகம் நடைமுறைப் படுத்தியதே, பின்பு தமிழை கணணி மயப்படுத்துவதில் முக்கியமாக இருந்தது, அல்லாவிட்டால் தமிழ் கணனிமயப்படுவது மேலதிகமாக பிந்தியிருக்கும். இணைப்பில் இருக்கிறது பெரியாரின் தமிழுக்கு செய்த சேவைகள் https://www.vikatan.com/literature/arts/140216-why-thanthai-periyar-called-tamil-language-as-a-barbarian-language `` `காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்! விஷ்ணுராஜ் சௌ 2 Min Read தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கானஅரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன. Published:20 Oct 2018 12 PMUpdated:20 Oct 2018 12 PM `` `காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்! Join Our Channel 1Comments Share வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்போதும் வியப்பைத் தரக்கூடியவை, அவர்கள் செல்லும் பகுதிகளில் தென்படும் மொழிகளின் விதவிதமான எழுத்துகள்தான். பொதுவாக மொழிகளைப் பேசக் கேட்கும்போது, அவை முழுமையான அழகியலை உணர்த்துவதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட மொழிகளில் பேசும் வார்த்தைகளின் சத்தங்களை மட்டுமே கடத்துகின்றன. எழுத்துகளின் வாயிலாகத்தான் ஒரு மொழியை முழுமையாக நாம் அறிய முடியும். அந்த வகையில், தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கான அரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மொழியானது மனித நாகரிகங்களின் வளர்ச்சியைப்போல, காலப்போக்குக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைத் தன்னுள் நிகழ்த்தி செவ்வியல் தன்மையை அடைந்து, மொழியியலின் அடுத்தகட்டத்தை அடைகிறது. இந்த வளர்ச்சிக்காக அவை எடுத்துக்கொள்ளும் காலத்துக்குள் பல மொழிகள் அழிந்தும், வேற்றுமொழிகளின் கலப்பால் சில மொழிகள் சிதைந்தும் போய்விடுகின்றன. இன்று பயன்பாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் எழுத்துகள் இல்லாமல் வெறும் பேச்சுவழக்கு மொழியாகவே இருப்பதற்குக் காரணம், அவை முழுமையான வளர்ச்சியைப் பெறாமல் போனதே ஆகும். நாம் பயன்படுத்தும் எழுத்துகளானது, தொடக்கத்தில் கோடுகளாக ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களாக மாற்றம் அடைந்து, பல தலைமுறையினர் அதைச் செதுக்கிவைத்து, இன்று நம் கைகளில் வந்து கிடைத்துள்ளன. `குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின. 1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 39 ஆண்டுகளை நிறைவு செய்து நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தச் சூழலில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றனிடம் பேசினோம். ``தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தங்களை முதலில் பெரியார் கொண்டு வரக் காரணம் என்ன?" ``மொழியை எளிமையாக்குவதுதான். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அடிப்படைக் காரணம். எழுத்துகள் ஒவ்வொன்றும் வேறு அளவுகளைக் கொண்டிருந்தன. இது அச்சு பதிப்பித்தல் முறையைக் கடினமாக்கியது. எனவே, அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் அனைத்து எழுத்துகளும் ஒரே அளவுடையதாக மாறும். `ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளை மட்டும் வைத்துக்கொண்டு உலக மொழியாக மாறும்போது, எழுத்துகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தமிழ்மொழி நிறைய மக்களைச் சென்றடையும்' என்றார் பெரியார். எனவே, முதலில் நம் குழந்தைகள் தாய்மொழியைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் அது எளிமையாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையைச் சென்றடையும் என்பதுதான் அதன் நோக்கம்." ``தமிழ் மொழியில் இதுபோன்று எழுத்து மாற்றங்கள் தொடர்ந்து நிகழுமா?’’ ``ஆம்... தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்து வடிவம் இப்போது இல்லை. எனவே, நம் மொழி இன்னும் எளிமையாக்கப்படலாம். இவை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். அந்த மாற்றங்கள் உலகம் தழுவியதாக மாறும். ஏற்கெனவே, மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன.’’ ```காட்டுமிராண்டி மொழி தமிழ்' எனப் பெரியார் சொன்னது குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் அப்படிச் சொன்னதற்கான காரணங்கள் என்ன?" ``பெரியார், இந்தக் கருத்தை இரண்டு காரணங்களுக்காகச் சொன்னார். ஒன்று தமிழ் மொழி தோன்றிய காலஅளவை வைத்து; இரண்டாவது தமிழில் உள்ள புராணங்கள் சார்ந்த நூல்களைக் கருத்தில்கொண்டு. அதே பெரியார்தான், எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். தமிழ்ப் புத்தாண்டை மாற்றினார். திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். ஆக்கரீதியான சிந்தனையை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த விவாதத்தைப் பெரியார் கையிலெடுத்தார். ரஷ்ய மொழி போன்ற பல்வேறு மொழிகளில் நவீன இலக்கியங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றாலும், அவை அனைத்தும் கடந்த 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையே. செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற தமிழ்மொழி மட்டுமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டில் பாரதிதாசன்வரை என தனக்கான உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் தமிழின் சிறப்பு." காகிதங்களிலிருந்து, நவீன தகவல் தொழில்நுட்பக் காலத்துக்கு ஏற்ப, தமிழ் மொழி கணினியைச் சென்றடைந்த பின்னரும், நம் தாய்த்தமிழ்நாட்டுக் குழந்தைகளைச் சென்றடைவதில் ஏற்பட்டுள்ள இடைவெளிதான் அனைவருக்கும் கவலையைத் தருகிறது.1 point- மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
இது தாயகத்தில் இருந்து வந்ததா என்பது சந்தேகம். தலையங்கம் ஊரில் வாழும் தமிழர்களை இழிவு படுத்துவதாக உணர்கின்றேன். நாங்கள் தேசிய மறதி நோயாளிகளா? அப்ப இதற்கு மருந்தென்ன? 70 களில் இருந்து மாறி மாறி வந்த பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றுமே எங்களுக்கு உருப்படியான ஒரு தீர்வையாவது தரவில்லை. இனிமேலும் தரப்போவதுமில்லை யார் இப்பொழுது இந்த ஜேவிபி எங்களுக்கு எல்லாம் தரப்போவது என்று கூறினோம்?. இவன் இனவாதியால்ல என்று கூறினோமா? மாதாம் 50,000 ஆயிரம், 60 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கும் எங்களுக்கு ஏதாவது மாற்றம் தேவை என்றுதானே இவர்களுக்கு வாக்களித்தோம். ஏதும் நம்பிக்கை பொறி தெரியுமா? பஸ் கட்டணம் கொஞ்சம் குறையாதா? ஊழல்கள் குறையாதா? எங்கள் வாழ்க்கைதான் இப்படி போரிலும் அழிவிலும் போய்விட்டது. பிள்ளைகளாவது பிரச்சினையின்ன்றி கெம்பஸ் முடிக்குமா? அரச ஆஸ்பத்திரிலாவது ஒரளவு நல்ல மருந்தாவது கிடைகாதாப்பா? விலைவாசி கொஞ்சமாவது குறையாதா என்ற ஒரு நப்பாசையில், வேறு எந்த தெரிவுகளுமின்றி, அட இந்த முறை இவனுக்கு வாக்களித்து பார்ப்போமே ஏதாவது மாற்றம் வந்தால் என்ற பிள்ளையாவது நல்லா இருந்து விட்டு போகட்டும் என்றல்லவா இவனுக்கு வாக்களிததோம். வெளி நாடுகளில் வாழும் நீங்கள் அப்பப்போ எங்களுக்கு பண உதவி செய்கின்றீர்கள், அதற்கு நன்றி. நீங்கள் வசதியாக இருக்கின்றீர்கள், உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கின்றார்கள், திருமணம் முடித்து வசதியாக வாழ்கின்றார்கள். ஏலாத பட்சத்தில் தானே உங்களிடம் இவ்வாறு கையேந்துகிறோம். எங்காவாது ஒரு பிடி கிடைக்கதா என்று வாழும் எங்களை ஏன் மறதி நோயாளி, அம்னிஷியாகாரன், டைமென்சியாகரன் என்று அழைக்கின்றீர்கள். அனுரவுக்கு வாக்களித்ததினாலா? இது என்னுடைய உரிமை/தெரிவுதானே? என்னுடைய சூழ்னிலை அப்படி அதைவைத்து தானே என்னால் முடிவெடுக்க முடியும். சரி ஐயா நங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கோ? உங்களில் தங்கி வாழ்வதனால் நீங்கள் வெளி நாட்டில் இருந்து போடும் எல்லா கட்டளைகளையும் கை கட்டி, வாய்பொத்தி செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றீர்களா? வாக்களிப்பது என்னுரிமையல்லவா? நாங்கள் என்ன செய்யவேண்டும் ஐயா?1 point- ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா ச.சேகர் வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர். அதில் ஒரு முக்கியமான நபர் அண்டைய நாட்டின் உலகறிந்த ரட்டன் டாடா தனது 86வது வயதில் இயற்கை எய்தினார். 1991 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த ஒரு காலகட்டத்தில் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்புக்கு ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். அக்கால கட்டத்தில் டாடா குழுமத்தின் செயற்பாடுகள் வெறும் இந்தியாவில் மாத்திரம் அறியப்பட்டதுடன், 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்த வருமானமாக பெறும் நிறுவனமாக திகழ்ந்தது. இவர் 2012 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு தசாப்த காலம் டாடா குழுமத்தின் தலைப் பொறுப்பை வகித்ததுடன், அக்காலப் பகுதியில் தமது தூர நோக்குடைய தலைமைத்துவத்தினூடாக, டாடா குழுமத்தை 100 பில்லியன் வருமானமீட்டும் குழுமமாக தரமுயர்த்தியிருந்தார். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் இன்று இயங்குவதுடன், உருக்கு இரும்பு (ஸ்டீல்), வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பாவனைப் பொருட்கள் என டாடா பிரசன்னம் வியாபித்துள்ளது. 1961 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் பணியாற்ற ஆரம்பித்த ரத்தன் டாடா, ஆரம்பத்தில் உருக்கு இரும்பு தொழிற்சாலையில், இரும்பு உற்பத்தியில் ஈடுபடும் ஊழியர்களுடன் பணியாற்றியிருந்தார். அவ்வாறு ஆரம்பித்த இவரின் பயணம், டாடா குழுமத்தை சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனமாக தரமுயர்த்துவது வரை தொடர்ந்திருந்தது. நாட்டின் கீர்த்தி நாமத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதற்காக இந்தியாவையும், இந்திய மக்களையும் முன்னிலைப்படுத்திய கொள்கைச் செயற்பாடு, இவரின் வெற்றிக்கு வழிகோலியிருந்தது. பிரித்தானியாவின் தேயிலை வர்த்தக நாமமான டெட்லி (Tetley), 450 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இவரின் தலைமைத்துவத்தில் கீழ் டாடா குழுமம் கொள்வனவு செய்திருந்தது. இதுவே, சர்வதேச வர்த்தக நாமமொன்றை கொள்வனவு செய்த முதலாவது இந்திய நிறுவனமாக திகழ்ந்ததுடன், சர்வதேச பானத் துறையில் டாடா குழுமத்தின் பிரசன்னத்தையும் உறுதி செய்திருந்தது. ஐரோப்பாவின் இரண்டாவது மாபெரும் உருக்கு இரும்பு (ஸ்டீல்) உற்பத்தியாளராக திகழ்ந்த கோரஸ் ஸ்டீல் (Corus Steel) நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டில் ரட்டன் டாடாவின் தலைமைத்துவத்தின் கீழ் டாடா குழுமம் கொள்வனவு செய்திருந்தது. அதனூடாக உலகின் மாபெரும் உருக்கு இரும்பு உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா குழுமம் வளர்ச்சி பெற்றது. ஐரோப்பாவில் புகழ்பெற்ற வாகன வர்த்தக நாமமான ஐக்குவார் லேன்ட் ரோவர் (Jaguar Land Rover) வர்த்தக நாமத்தை டாடா குழுமம் 2008 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தது. 2.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்த கொள்வனவை பூர்த்தி செய்திருந்தது. அதனூடாக, சர்வதேச வாகனங்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா குழுமத்தை தரமுயர்த்த முடிந்ததுடன், சொகுசு கார் வர்த்தக நாமங்களிலும் டாடா குழுமத்தின் பிரசன்னத்தை விஸ்தரித்தது. இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு முன்னுரிமையளித்து 2008 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் விலை குறைந்த கார் எனும் கொள்கையின் பிரகாரம் டாடா நனோ காரை டாடா குழுமம் அறிமுகம் செய்ததது. ரத்தன் டாடாவின் நோக்கான, இந்திய நடுத்தர வருமானமீட்டும் வர்க்கத்தினருக்கு சகாயமான விலையில் நான்கு சர்க்கர வாகனமொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில், 1 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. புத்தாக்கத்தினூடாக மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மும்பை தாஜ் சமுத்திரா ஹோட்டல் 2008 ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்கானது. இதனால் ஹோட்டலுக்கு சேதம் ஏற்பட்டதுடன், அதனை உறுதியாக மீளக் கட்டியெழுப்புவதில் ரத்தன் டாடா முக்கிய பங்காற்றியிருந்தார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இவர் காண்பித்திருந்த கரிசனையினூடாக, ஊழியர்கள் மற்றும் மக்கள் மீது அவரின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. வியாபாரத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ரத்தன் டாடா ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் பல விருதுகள் மற்றும் கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. பத்ம பூஷன் (2000), பத்ம விபூஷன் (2008), ஐக்கிய இராஜ்ஜியம் – இந்திய உறவுகளை மேம்படுத்துவதில் இவர் ஆற்றியிருந்த பங்களிப்புக்கான இரண்டாம் எலிசபெத் மகா ராணியின் KBE கௌரவிப்பு (2009), ஆண்டின் சிறந்த வியாபார தலைமை செயற்பாட்டாளர் (2006), சமாதானத்துக்கான ஒஸ்லோ பிஸ்னஸ் விருது (2010), வாழ்நாள் சாதனையாளர் விருது (2014), வியாபாரத்தில் ஆண்டின் சிறந்த இந்தியருக்கான CNN-IBN விருது (2006) போன்றன இவற்றில் முக்கியமான சிலவாகும். வியாபார செயற்பாடுகளுக்கு அப்பால், ஆகாய பறப்பில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் 2007 ஆம் ஆண்டில், F-16 Falcon பறப்பில் ஈடுபட்ட முதலாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுக் கொண்டார். டாடா குழுமத்தின் மனித நேய செயற்பாடுகளில் இவர் ஆழமான ஈடுபாட்டை கொண்டிருந்தார். கல்வி, சுகாதார பராமரிப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி போன்றவற்றில் பங்களிப்பு வழங்கும் டாடா நம்பிக்கை நிதியங்களில் இவர் நேரடியாக ஈடுபட்டிருந்தார். குழுமத்தின் செல்வங்கள் நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதை இவர் தமது தலைமைத்துவ காலப்பகுதியில் உறுதி செய்திருந்தார். டாடா சன்ஸ் பங்கிலாபங்களில் 60-65 சதவீதமானவை மனிதநேய செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. ஒழுக்கமான முறையில் தலைமைத்துவமளித்து, வியாபார செயற்பாடுகளை நேர்மையான வழியில் முன்னெடுத்துச் செல்வது என்பதில் ரத்தன் டாடா தீவிரமாக இருந்தார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் டாடா குழுமம் நம்பிக்கை, நேர்மை மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றில் நன்கறியப்பட்டது. இந்தியாவில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இவரின் ஒழுக்கமான மற்றும் நேர்மையான தலைமைத்துவம் என்பது பலரையும் கவர்ந்திருந்தது. இவரின் கொள்கைகள் உறுதியானவை. தமது நிறுவனத்தின் வெற்றிக்காக ஊழியர்களை ஊக்குவிப்பதில் இவர் கையாண்ட வழிமுறைகள் சகலருக்கும் பொருந்தக்கூடியவை. அவரின் சில பொன்னான வார்த்தைகளில், “வேகமாக செல்ல வேண்டுமானால் தனியே செல். நீண்ட தூரம் செல்ல வேண்டுமாயின், இணைந்து செல்”, “உன் மீது மக்கள் எறியும் கற்கை சேகரித்து, சொந்த நினைவுச்சின்னத்தை கட்டியெழுப்ப அதை பயன்படுத்து”, “வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எமது பயணத்துக்கு மிகவும் முக்கியம், ஏனெனில் ECG அறிக்கையில் கூட நேர் கோடு என்பதால் உயிர் பிரிந்துவிட்டது என்பதை உணர்த்துகின்றது”, ”தலைமைத்துவம் என்பது பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகும், மாறாக சாட்டுகளை தெரிவிப்பதல்ல”, “வாய்ப்புகளை உங்களை தேடி வரும் வரை காத்திருக்க வேண்டாம், உங்கள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்”, “சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் நான் நம்பிக்கை கொள்வதில்லை. தீர்மானங்களை எடுத்துவிட்டு அவற்றை சரியாக்குவேன்” போன்றன அவற்றில் சிலவாகும். இவரின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதது என்பதுடன், இவரால் வியாபாரம், சமூகம், மற்றும் நாட்டுக்கு ஆற்றப்பட்ட பங்களிப்புகள் எதிர்காலத்திலும் நினைவில் நிலைத்திருக்கும். செல்வத்தை உருவாக்குவது என்பது இவரின் வாழ்நாள் பணியாக இருந்துவிடாமல், இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் பெறுமதியை உருவாக்குவது என்பதாக அமைந்திருந்தது. மறைந்தும் மக்கள் மனங்களில் மறையாமல் இவர் என்றும் வாழ்வார் என்பது உறுதி. https://www.tamilmirror.lk/வணிகம்/மக்கள்-மனங்களில்-மறைந்தும்-மறையாமல்-வாழும்-டாடா/47-3452171 point- ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
ரத்தன் டாடா: ஆடம்பரங்களை வெறுத்த, எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த தொழிலதிபர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரத்தன் டாடாதான், உதவியாளர் யாருமின்றித் தனியாகப் பயணம் செய்த ஒரே விஐபி. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 10 அக்டோபர் 2024 இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே கடந்த 1992ஆம் ஆண்டில், ஒரு தனித்துவமான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லி- மும்பை இடையிலான விமானப் பயணங்களின்போது, அவர்களை மிகவும் கவர்ந்த பயணி யார் என அவர்களிடம் கேட்கப்பட்டது. ரத்தன் டாடா என்ற பெயருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. இதற்கான காரணத்தை அறிய முயன்றபோது, வழக்கமாக தனியாக வரும் ஒரே விஐபி அவர் மட்டுமே என்றும், அவரது பையையோ அல்லது கோப்புகளையோ எடுத்துச் செல்ல அவருடன் உதவியாளர்கள் யாரும் ஒருபோதும் வந்தது கிடையாது என்றும் கூறப்பட்டது. மேலும், விமானம் புறப்பட்டவுடன், அவர் அமைதியாக வேலை செய்வார். அவர் வழக்கமாக மிகக் குறைவான அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு பிளாக் காபி (Black Coffee) கேட்பார். தனக்கு விருப்பமான காபி கிடைக்கவில்லை என்பதற்காக விமான பணிப்பெண்ணை அவர் ஒருபோதும் திட்டியதில்லை. ரத்தன் டாடாவின் எளிமைக்கான இதுபோன்ற உதாரணங்கள் இன்னும் நிறைய உள்ளன. 'The Tatas: How a Family Built a Business and a Nation' என்ற தனது பிரபலமான புத்தகத்தில், கிரிஷ் குபேர் பின்வருமாறு எழுதுகிறார், "அவர் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரானபோது, ஜே.ஆர்.டி-யின் (ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அறையில் அவர் உட்காரவில்லை. அவர் தனக்கென ஓர் எளிய மற்றும் சிறிய அறையை அமைத்துக் கொண்டார். அவர் ஒரு ஜூனியர் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு மூத்த அதிகாரி வந்தால், மூத்த அதிகாரியை காத்திருக்கச் சொல்வார்.” "அவரிடம் 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ' என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் இருந்தன, அவற்றை அவர் மிகவும் நேசித்தார். நாய்கள் மீதான அவரது நேசத்திற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்." "இந்த நாய்கள் பெரும்பாலும் பம்பாய் ஹவுஸின் முகப்பு அறையில் (Lobby) அங்குமிங்கும் உலாவுவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் மனிதர்கள் யாரேனும் அங்கு நுழைய வேண்டுமென்றால், ஒன்று அவர்கள் ஊழியர்களாக இருக்க வேண்டும் அல்லது முன் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அங்கு நுழைய அனுமதிக்கப்பட்டனர்." ‘டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் வெகு சிலரே’ பட மூலாதாரம்,GETTY IMAGES ரத்தன் டாடாவின் முன்னாள் உதவியாளர் ஆர்.வெங்கட்ரமணனிடம், ரத்தனுக்கும் அவருக்குமான நெருக்கம் குறித்துக் கேட்டபோது, "மிஸ்டர். டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் வெகு சிலரே. ஆம், அவருக்கு மிகவும் நெருக்கமான இரண்டு பேர் உள்ளனர், 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ', அவரது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் அவரை நெருங்க முடியாது" என்று கூறினார். பிரபல தொழிலதிபரும் எழுத்தாளருமான சுஹைல் சேத் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்: "பிப்ரவரி 6, 2018 அன்று, பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், ரத்தன் டாடாவுக்கு அவரது பொதுநலப் பணிகளுக்காக 'ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்க இருந்தார்." "இதற்காக ரத்தன் டாடா பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்க வேண்டும். ஆனால் விழாவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தனது நாய் டிட்டோவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் ரத்தன் டாடா தெரிவித்தார். இதுகுறித்து இளவரசர் சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டபோது, 'அதுதான் நல்ல மனிதனின் குணம். அப்படிப்பட்ட மனிதன்தான் ரத்தன் டாடா' என்று கூறினார்." ‘தனிமை விரும்பி, புகழ் வெளிச்சத்தை வெறுத்தவர்’ ஜே.ஆர்.டி.யை போலவே, ரத்தன் டாடாவும் தனது நேரம் தவறாமைக்குப் பெயர் பெற்றவர். அவர் மாலை சரியாக 6.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்புவது வழக்கம். அலுவலகம் தொடர்பான வேலைக்காக வீட்டில் இருக்கும்போது யாராவது அவரைத் தொடர்புகொண்டால், அவர் பெரும்பாலும் எரிச்சல் அடைவார். பட மூலாதாரம்,RATAN TATA INSTAGRAM தனது வீட்டில் தனிமையில் இருக்கும்போது கோப்புகளைப் படிப்பார். அவர் மும்பையில் இருந்தால், அலிபாக்கில் உள்ள தனது பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களைக் கழிப்பார். இந்த நேரத்தில் அவரது நாய்களைத் தவிர வேறு யாரும் அவருடன் இருக்கமாட்டார்கள். அவர் பயணம் செய்வதையோ சொற்பொழிவு ஆற்றுவதையோ விரும்பவில்லை. அவருக்கு புகழ் வெளிச்சமும், கைதட்டலுக்கு பேசுவதும் மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது. அவரது குழந்தைப் பருவத்தில், குடும்பத்தின் ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் காரில் பள்ளிக்குச் செல்வதை அவர் சங்கடமாக உணர்ந்தார். அவரது பிடிவாத குணம், ஜே.ஆர்.டி மற்றும் அவரது தந்தை நவல் டாடாவிடம் இருந்து அவர் பெற்ற ஒரு குடும்பப் பண்பு என்று ரத்தன் டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சுஹைல் சேத், "நீங்கள் ரத்தன் டாடாவின் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், 'என்னைச் சுடுங்கள், ஆனால் நான் என் பாதையைவிட்டு நகர மாட்டேன்' என்றுதான் அவர் சொல்வார்" என்று கூறுகிறார். ரத்தன் டாடாவின் நண்பரும், பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவருமான நுஸ்லி வாடியா கூறுகையில், "ரத்தன் டாடா என்பவர் மிகவும் சிக்கலான ஒரு கதாபாத்திரம். யாரும் அவரை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் மிகவும் ஆழமான எண்ணங்கள் கொண்ட மனிதர். நெருக்கமான நட்பு இருந்தாலும், தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருடனான உறவு இருக்கவில்லை. அவர் ஒரு தனிமை விரும்பி” என்று கூறுகிறார். 'An Intimate History of the Parsis' என்ற தனது புத்தகத்தில் கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார், “தனது தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை, ரத்தன் என்னிடம் ஒப்புக்கொண்டார். ‘நான் தோழமைப் பண்பு இல்லாத ஒருவனாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் நான் ஒன்றும் யாருடனும் பழகாமல் விலகியிருப்பவனும் கிடையாது’ என்று அவர் என்னிடம் கூறுவார்.” பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்ட ரத்தன் டாடா பட மூலாதாரம்,GETTY IMAGES “டாடா குழுமத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய காலங்களில், ரத்தன் டாடா தனது குடும்பப் பெயரை ஒரு சுமையாகவே கருதியதாக” ரத்தன் டாடாவின் பால்ய கால நண்பர் ஒருவர் நினைவுகூர்ந்தார். அமெரிக்காவில் படிக்கும்போது, அவரது குடும்பப் பின்னணி பற்றி அவரது வகுப்புத் தோழர்களுக்குத் தெரியாது என்பதால், அங்கு அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தார். கூமி கபூருக்கு ரத்தன் டாடா அளித்த பேட்டியில், "அந்த நாட்களில், வெளிநாட்டில் படிப்பவர்கள் மிகக் குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பணத்தைப் பயன்படுத்தவே ரிசர்வ் வங்கி அனுமதித்தது. என் தந்தை சட்டத்தை மீறுவதை ஆதரிக்கவில்லை, எனவே அவர் எனக்கு வேறு வழிகளில் அமெரிக்க டாலர்களை வழங்க விரும்பவில்லை. அதனால் மாத இறுதிக்குள் என் பணம் எல்லாம் காலியாகிவிடுவது வழக்கம். சில நேரங்களில் நான் என் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது. பல நேரங்களில், கூடுதல் பணம் சம்பாதிக்க நான் பாத்திரங்களைக் கழுவும் பணியைச் செய்தேன்" என்று தெரிவித்திருந்தார். ரத்தன் டாடாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றபோது அவருக்கு 10 வயதுதான். ரத்தனுக்கு 18 வயதாக இருந்தபோது, அவரது தந்தை சிமோன் டனோயர் என்ற சுவிட்சர்லாந்து பெண்ணை மணந்தார். மறுபுறம், அவரது தாயார் விவாகரத்துக்குப் பிறகு சர் ஜாம்செட்ஜி ஜீஜீபாய் என்பவரை மணந்தார். ரத்தனை அவரது பாட்டி லேடி நவாஜ்பாய் டாடாதான் வளர்த்தார். ரத்தன் அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றார். அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நல்ல வேலை மற்றும் ஆடம்பரமான வீடு ஒன்று இருந்தது. ஆனால் அவர் தனது பாட்டி மற்றும் ஜே.ஆர்.டி.யின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. இதனால், அவருடைய அமெரிக்க காதலியுடனான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாமல் போனது. அதற்குப் பிறகு ரத்தன் டாடா தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். ஜாம்ஷெட்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக பணியில் சேர்ந்தவர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1962ஆம் ஆண்டில், ரத்தன் டாடா ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். கிரிஷ் குபேர் பின்வருமாறு எழுதுகிறார், "ரத்தன் ஜாம்ஷெட்பூரில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு அவர் ஆரம்பத்தில் நீல நிற மேலாடை அணிந்து, ஒரு கடைநிலை தொழிலாளியாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார்." "பயிற்சி முடிந்த பிறகு அவர் திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.நானாவதியின் சிறப்பு உதவியாளர் ஆனார். அவரது கடின உழைப்பின் புகழ் பம்பாய் வரை சென்றது, ஜே.ஆர்.டி. டாடா அவரை பம்பாய்க்கு அழைத்தார்." இதற்குப் பிறகு, ரத்தன் டாடா ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு பணியாற்றினார். நஷ்டத்தில் இயங்கும் சென்ட்ரல் இந்தியா மில் மற்றும் நெல்கோ நிறுவனங்களை மேம்படுத்தும் பொறுப்பை ஜே.ஆர்.டி., அவருக்கு வழங்கினார். ரத்தனின் தலைமையின்கீழ், மூன்று ஆண்டுகளுக்குள், நெல்கோ நிறுவனம் மாற்றமடைந்து, லாபம் ஈட்டத் தொடங்கியது. ஜே.ஆர்.டி. 1981ஆம் ஆண்டில், ரத்தனை ‘டாடா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவராக்கினார். இந்த நிறுவனத்தின் டர்ன்-ஓவர் (turn over) 60 லட்சம் மட்டுமே என்றாலும், இந்தப் பொறுப்பு ரத்தன் டாடாவுக்கு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் அதற்கு முன்பு ஜே.ஆர்.டி டாடாவே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரடியாகக் கவனித்து வந்தார். எளிமையான வாழ்க்கை முறை பட மூலாதாரம்,GETTY IMAGES அன்றைய வணிக பத்திரிகையாளர்களும், ரத்தனின் நெருங்கிய நண்பர்களும், ‘அவரை நட்புணர்வு கொண்ட, எளிமையான, நாகரிகமான மற்றும் சுவாரஸ்யமான ஒரு மனிதராகவே’ நினைவு கூர்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவரைச் சந்திக்கலாம், வழக்கமாக அவரே தொலைபேசியை எடுத்துப் பேசுவார் என்கிறார்கள். கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார்: "பெரும்பாலான இந்திய பில்லியனர்களுடன் ஒப்பிடும்போது ரத்தனின் வாழ்க்கை முறை மிகவும் கட்டுப்பாடாகவும் எளிமையாகவும் இருந்தது. அவரது வணிக ஆலோசகர்களில் ஒருவர், ‘ரத்தனின் பின்னால் உதவியாளர்களின் கூட்டம் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது’ என்று என்னிடம் கூறினார்.” “ஒருமுறை நான் அவரது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன், ஒரு இளைஞர் வந்து கதவைத் திறந்தார். சீருடை அணிந்த சேவகர்களோ, ஆடம்பரங்களோ இல்லை. மும்பையின் கும்ப்லா ஹில்ஸில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆடம்பர மாளிகையான ஆன்டிலாவின் பளபளப்புக்கு நேர்மாறாக, அதே மும்பையின் கொலாபாவில் கடற்கரைக்கு அருகே இருக்கும் ரத்தனின் வீடு அவரது ரசனையைப் பிரதிபலிக்கிறது.” ரத்தன் டாடாவை தனது வாரிசாக தேர்வு செய்த ஜே.ஆர்.டி பட மூலாதாரம்,GETTY IMAGES ஜே.ஆர்.டி 75 வயதை எட்டியபோது, அவரது வாரிசு யார் என்பது குறித்து நிறைய ஊகங்கள் இருந்தன. டாடாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஆசிரியர் ருஸ்ஸி எம் லாலா பின்வருமாறு எழுதுகிறார், "நானி பல்கிவாலா, ருஸ்ஸி மோதி, ஷாருக் சப்வாலா, எச்.என்.சேத்னா ஆகியோரில் ஒருவரைத்தான் ஜே.ஆர்.டி தனது வாரிசாகக் கருதினார். பல்கிவாலா மற்றும் ருஸ்ஸி மோதி, ஆகிய இருவர்தான் அந்தப் பதவிக்கான இரண்டு முக்கியப் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ரத்தன் டாடாவே நம்பினார்.” ஜே.ஆர்.டி., 1991ஆம் ஆண்டில், தனது 86வது வயதில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்தக் கட்டத்தில் அவர் ரத்தனை நோக்கித் திரும்பினார், தலைவர் பதவிக்குத் தகுதியான ‘டாடா’-வாக அவர் மட்டுமே எஞ்சியிருந்தார். ரத்தனுக்கு சாதகமான மிக முக்கியமான விஷயம் அவரது 'டாடா' என்ற குடும்பப் பெயர்தான் என ஜே.ஆர்.டி நம்பினார். டாடாவின் நண்பர் நுஸ்லி வாடியா மற்றும் அவரது உதவியாளர் ஷாருக் சப்வாலா ஆகியோரும் ரத்தனை தலைவராக்க ஆதரித்தனர். மார்ச் 25, 1991 அன்று டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் பொறுப்பேற்றபோது, தர்பாரி சேத், ருஸ்ஸி மோதி, அஜித் கெர்கர் ஆகிய மூன்று தலைவர்களை எவ்வாறு பலவீனப்படுத்துவது என்பதே அவருக்கு முன் இருந்த முதல் சவாலாக இருந்தது. இந்த மூவரும் இதுவரை தலைமை அலுவலகத்தின் தலையீடு இல்லாமல் டாடா நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு டாடா நிறுவனத்திற்கும் ஒரு முகலாய சக்கரவர்த்தி இருப்பார் என்று ரத்தனின் தந்தையும் எச்சரித்திருந்தார். டெட்லி, கோரஸ் மற்றும் ஜாகுவார் கையகப்படுத்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்தில், ரத்தன் டாடாவின் வணிக மதிநுட்பம் குறித்துக் கேள்விகள் எழுந்தன. ஆனால் 2000ஆம் ஆண்டில், அவர் பிரிட்டனின் 'டெட்லி' (Tetley- தேயிலை பிராண்ட்) குழுமத்தை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது அவர்களின் சொந்த நிறுவனத்தைவிட இரண்டு மடங்கு பெரியது. இன்று, டாடாவின் குளோபல் பிவரேஜஸ் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமாக உள்ளது. இதற்குப் பிறகு, அவர் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான 'கோரஸ்'-ஐ (Corus) வாங்கினார். விமர்சகர்கள் இந்த ஒப்பந்தத்தின் திறனை கேள்விக்கு உள்ளாக்கினர். ஆனால் ஒரு வகையில், இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் தனது திறனையும் வணிக வலிமையையும் டாடா குழுமம் நிரூபித்தது. கடந்த 2009 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ரூ.1 லட்சம் விலையில் கிடைக்கும் மக்களுக்கான காராக 'நானோ'வை அவர் அறிமுகப்படுத்தினார். நானோ காருக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் 1998ஆம் ஆண்டில் சந்தையில் 'இண்டிகா' காரை அறிமுகப்படுத்தியது. இதுவே இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் கார். தொடக்கத்தில் இந்த கார் தோல்வியுற்றது. இதனால் ரத்தன் டாடா அதை ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்திற்கு (Ford Motor Company) விற்க முடிவு செய்தார். இதற்காக அவர் டெட்ராய்ட் சென்றபோது, பில் ஃபோர்ட் அவரிடம், ‘ஏன் இந்தத் துறையைப் பற்றிப் போதுமான அறிவு இல்லாமல் இந்தத் தொழிலில் நுழைந்தீர்கள்’ என்று கேட்டார். மேலும், 'இண்டிகாவை' வாங்குவது, இந்தியாவின் டாடா நிறுவனத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ரத்தன் டாடாவை கிண்டல் செய்தார். இதனால் கோபமடைந்த ரத்தன் டாடா குழுவினர் பேச்சுவார்த்தையை முடிக்காமல் திரும்பிவிட்டனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது. 2008இல், ஃபோர்டு நிறுவனம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் சிக்கி, பிரிட்டிஷ் சொகுசு கார் பிராண்ட்களான 'ஜாகுவார்' மற்றும் 'லேண்ட் ரோவர்' ஆகியவற்றை விற்க முடிவு செய்தது. அதுகுறித்து கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார், "அப்போது பில் ஃபோர்டு, ‘தனது சொகுசு கார் நிறுவனத்தை வாங்குவதன் மூலம், ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்திய நிறுவனமான டாடா ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்கிறது’ என்று ஒப்புக்கொண்டார். ரத்தன் டாடா இரண்டு பிரபலமான பிராண்டுகளை 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார்." ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியதாக டாடா மீது எழுந்த விமர்சனங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சில வணிக ஆய்வாளர்கள் ரத்தன் டாடாவின் இத்தகைய பெரிய கையகப்படுத்தல்களைக் கேள்விக்கு உள்ளாக்கினர். 'டாடா ஸ்டீல் ஐரோப்பாவை’ வாங்கியது மிகப்பெரிய சுமை என நிரூபணமானது, அது டாடா குழுவை பெரும் கடனில் மூழ்கடித்தது. டி.என்.நினன் பின்வருமாறு விவரிக்கிறார், "ரத்தனின் சர்வதேச பந்தயங்கள், அவரது ஆணவம் மற்றும் கெட்ட நேரத்தின் கலவை." ஒரு நிதி ஆய்வாளர், "கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய வணிகத்தில் மிகப்பெரிய வாய்ப்பு தொலைத்தொடர்புகளில் இருந்தது, ஆனால் ரத்தன் தொடக்கத்தில் அந்தத் துறையை தவறவிட்டுவிட்டார்" என்கிறார். பிரபல பத்திரிகையாளர் சுசேதா தலால் கூறுகையில், "ரத்தன் தவறுக்கு மேல் தவறு செய்தார். 'ஜாகுவாரை' வாங்கியதன் மூலம் அவரது குழு நிதிச் சுமையின் கீழ் புதைந்தது’ என்கிறார். ஆனால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டிசிஎஸ் (TCS) எப்போதும் டாடா குழுமத்தை முன்னிலையில் வைத்திருந்தது. இந்த நிறுவனம் 2015ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் நிகர லாபத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியது. 2016ஆம் ஆண்டில், எந்தவொரு இந்திய நிறுவனத்தையும்விட (அம்பானியின் 'ரிலையன்ஸ்' நிறுவனத்தை விடவும்) டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய சந்தை மூலதனமயமாக்கலைக் (capitalization) கொண்டிருந்தது. நீரா ராடியா, தனிஷ்க், சைரஸ் மிஸ்திரி தொடர்பான சர்ச்சைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2010ஆம் ஆண்டில், ரத்தன் டாடா மற்றும் தரகர் நீரா ராடியா இடையிலான தொலைபேசி உரையாடல் கசிந்தபோது, அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்டோபர் 2020இல், டாடா குழுமத்தின் நகை பிராண்டான 'தனிஷ்க்' (Tanishq) ஒரு விளம்பரத்தை அவசரமாக திரும்பப் பெற்றதும் ரத்தன் டாடாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த விளம்பரம் அனைத்து மதங்களையும் சமமாகக் கருதும் ஒன்றுபட்ட இந்தியாவை பற்றிய ஓர் உருக்கமான சித்தரிப்பைக் கொண்டிருந்தது. இந்த விளம்பரம் வலதுசாரியிடம் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில், 'தனிஷ்க்' நிறுவனம் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது. ஜே.ஆர்.டி டாடா உயிருடன் இருந்திருந்தால், இதுபோன்ற அழுத்தத்தின் காரணமாக அவர் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார் என்று சிலர் நம்பினர். அக்டோபர் 24, 2016 அன்று டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரியை ஒரு மணிநேரத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் பதவி நீக்கம் செய்தபோது ரத்தன் டாடா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சைரஸ் மிஸ்திரியுடன் ரத்தன் டாடா டாடாவை நம்பகமான பிராண்டாக நிலைநிறுத்துதல் ஆனால் இதையெல்லாம் மீறி, ரத்தன் டாடா எப்போதும் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொழிலதிபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கோவிட் பேரிடர் காலத்தில், தொற்றுநோய்ப் பரவல் மற்றும் ஊரடங்கின் பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க ரத்தன் டாடா, ‘டாடா அறக்கட்டளையில் இருந்து’ ரூ.500 கோடியும், டாடா நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடியும் வழங்கினார். ஆபத்தான சூழலில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தங்களது சொகுசு ஹோட்டல்களை பயன்படுத்த அனுமதி வழங்கிய முதல் நபரும் ரத்தன் டாடாதான். இன்றும், இந்திய டிரக் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் பின்புறத்தில் 'ஓகே டாடா' (OK Tata) என்று எழுதி, இந்த டிரக் டாடாவிடம் இருந்து வந்தது, எனவே இது நம்பகமானது என்ற செய்தியைச் சொல்கிறார்கள். டாடா நிறுவனம் சர்வதேச அளவிலும் ஒரு மிகப்பெரிய தடத்தைப் பதித்துள்ளது. 'ஜாகுவார்' மற்றும் 'லேண்ட் ரோவர்' கார்களை தயாரிக்கிறது, மேலும் 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' உலகின் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இவை அனைத்தையும் உருவாக்கியதில் ரத்தன் டாடாவின் பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62dlzk501po1 point - வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.