Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts
  3. satan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10100
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/19/24 in Posts

  1. எங்களின் தேசியத்துக்கெதிரான கருத்துக்களை ஒரு பக்கம் எடுத்து வைத்துவிட்டு இதனைப் பார்க்கலாமே. சுமந்திரன் கூறுவதுபோல 15 ஆசனங்களை அவரது கட்சி கைப்பற்றுமாக இருந்தால் நல்லது என்பதே எனது எண்ணம். தெற்கைச் சாராத, தமிழர் தாயகத்தை தளமாகக் கொண்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்வது தமிழரைப் பொறுத்தவர் நல்ல விடயமே. அதனால் எவர் தாயகத்தை அடிப்படையாக வைத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் எனது ஆதரவு அவர்களுக்கே. ஆனால், அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பான தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எமது தாயகப்பகுதிகள் தொடர்பான அபிவிருத்தியில் அவர்கள் ஈடுபட வேண்டும். தமிழர்களின் அரசியல் நலன் தொடர்பாக உண்மையான அக்கறையும், அதுகுறித்து செயற்படும் துணிவும் இருந்தால் சுமந்திரனுக்கு வாக்களிக்கலாம். அதைச் சுமந்திரன் உறுதிப்படுத்த வேண்டும். செய்வாரா? என்னைப்பொறுத்தவரை சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி நமது தாயகத்தில் காலூன்றுவதைக் காட்டிலும் சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான வேறு எவருமோ தேர்தலில் வெல்வது மேலானது. பொதுவேட்பாளர் விடயத்தில் நான் இதே நோக்கத்திற்காகத்தான் அவர்களை ஆதரித்தேன், எமது தாயகத்தில் அவருக்கு பெரும்பாலான வாக்குகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் அந்த முயற்சியை எல்லோருமாகச் சேர்ந்து இன்று கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை. வாழ்த்துக்கள் சுமந்திரன், முயன்று பாருங்கள்.
  2. உங்களுக்கு இந்தியாவை புறந்தள்ளி நகர்வது கடினமாக இருக்கலாம் ஆனால் சிங்கள அரசியல்/கொள்கை வகுப்பாளர்கள் நன்றாகவே புறந்தள்ளி நடப்பார்கள்...நடக்க தெரியும்...காரணம் இந்தியாவுக்கு முதுகெழும்பு இல்லை ....என்பதை சிங்களவர்கள நன்றாகவே உணர்ந்துள்ளனர்
  3. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)இல்லை 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம் 😎அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)ஆம் 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)இல்லை 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) யாழ் மாவட்டம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3 28) வன்னி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி3 30)திருமலை ஐக்கிய மக்கள் சக்தி 2 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 4 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 13 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வைத்தியர் அர்ச்சுனா வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 39) உடுப்பிட்டி தமிழரசு கட்சி 40) ஊர்காவற்றுறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 43) முல்லைத்தீவு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 44) வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி 47) திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 6 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 48 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 149 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 8 போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் Edited 14 hours ago by கந்தப்பு
  4. ரத்தன் ராரா ( Ratan Tata) என்றொரு இந்திய பெரும் செல்வந்தர் போனவாரம் காலமானார், அவரது பொன்மொழி, "உங்களை நோக்கி யாராவது கல் வீசினால் அவற்றை ஏந்தி நினைவாலயங்கள் எழுப்புங்கள்." என்றாராம். நல்ல விமர்சனங்களை ஏற்று, ஆய்வு செய்து உங்களை திருத்திக்கொள்ளுங்கள். பொறாமையால் எழும் தப்பான, பொய்யான விமர்சனங்களை புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள், அதற்காக காலத்தை வீணாக்காதீர்கள். எதிரி எமக்கு போடும் முட்டுக்கட்டை, உளவியல் ரீதியாக நம்மை பின்னடையச்செய்யும் ஒரு உத்தி இது.
  5. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  6. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இ‌ங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள் ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன் காலிக் குவளையோ! மக்கள் விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...
  7. லண்டன் தமிழ் பிபிசி சமயம் பரப்பும் வேலையிலும் இறங்கி விட்டது . கடந்த நவராத்திரி விழாவை குறிப்பிட்ட இடத்தில் கொண்டாட கூடாது என்று 1௦௦௦ பேர்க்கு மேல் பெட்டிசம் போட்டு விட்டார்கள் என்று கரோ கவுன்சில் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள் .
  8. உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. திட்டமிட்டு சில யூடியூப் காரரை களமிருக்கியிருக்கின்றனர் என்பது என்றால் உண்மை போல தான் தெரிகின்றது அதில் சிலருக்கு அரசியல் சுத்தம் ஆனால் அணுரா புராணம் நன்றாக சொல்லி கொடுத்துள்ளனர் ....தேசிய ஆதரவாக பேசிய ஒர் யூ டியுப்பரை புலனாய்வாலர்கள் எச்சரித்த சம்பவம் நடந்துள்ளது...
  10. இவர் என்ன வழி விடுகிறது. 😃 இந்தத் தேர்தலுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளப் படுவார். 😂 எல்லாம்... பட்டுத்தான் தெளிய வேண்டும் என்று விதி இருந்தால், நாம் ஒன்றும் செய்ய முடியாது. 🤣
  11. தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட... திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. மனிதத்தை நேசிக்கும் எவரும் அதையே செய்ய முனைவர். ஆனால், எம்மவர்கள் சிலருக்கு அதுகூட உறுத்தலாகவல்லவா இருக்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. இவர்களுக்கு இந்தியா நல்ல கொழுத்த சம்பளம் கொடுத்து வைத்திருக்குது போலை. அதுதான்... இந்தியாவின் சீலைத்தலைப்பில் தொங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவோடு இவர்கள் மினக்கெடுகின்ற நேரம், சீனாக்காரனுடன் சேர்ந்து அரசியல் செய்து இருந்தாலும்... பிரயோசனமாக இருந்திருக்கும்.
  14. போருக்குப் பின்.... தமிழ் அரசியல் கட்சிகள் விட்ட பிழைகளால் தானே... மக்கள் தென்னிலங்கை அரசியலை நாட வேண்டி வந்தது. மக்கள் அதனை விரும்பி ஏற்கவில்லை, மாறாக…. தென்னிலங்கை அரசியலை நோக்கி தள்ளப் பட்டார்கள் என்பதே உண்மை. நிலைமை கட்டுமீறி போனபின்பும்... தம்மை சுய பரிசோதனை செய்யத் தயார் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளை என்ன வென்று சொல்வது. தாமாக திருந்த மாட்டார்கள் எனும் போது... முதலில் பதவி ஆசை, கதிரை ஆசை பிடித்த சுயநல கும்பல்களை துடைத்து எறிய வேண்டும்.
  15. இதுதான் அங்குள்ள உண்மையான நிலைமை... ஒருமாயை அங்கு உருவாக்கப் படுகிறது...அதற்கு உதவியாக அலைந்து திரியும் யூ டியூப் காரர் களமிறக்கப் பட்டிருக்கினம்...அவையும் ஆகா ஓகோ என்று புழுகினம்...வடக்கில் எதற்கும் துணிந்த விடுகாலி அரசியல்வாதிகள் இருப்பதை மறந்து...ஒரு சிலரைத்தவிர மக்கள் பெரிதாக இதை அலட்டிக் கொள்வதில்லை..என் அனுபவம்..
  16. அதாலதான் நான் இவருக்கு இப்படி ஒரு பதாதை உருவாக்கினேன் இப்படியாச்சும் இந்த ஈழத்து கருணாநிதி எங்கையெண்டாலும் ஓடி போகட்டுமெண்டு
  17. என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.
  18. அல்பேனியா ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைவதற்காக நல்ல பெயர் எடுக்க இந்த நடவடிக்கையாகவும் இருக்கலாம்.
  19. போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆
  20. யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது. இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196648
  21. கடைசிவரை இருந்து பார்த்டதெழுத வேண்டியது தான். இது இரகசியம்.
  22. அனுதாபிகள் --------------------- ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் அனுதாபம் என்றார் இன்னொரு மனிதனும் அதையே சொன்னார் இப்படியே இன்னொன்று இன்னொன்று என அனுதாபங்கள் இலையுதிர் கால பழுத்த இலைகள் போல இடைவெளி இல்லாமல் விழுந்து கொண்டிருந்தன சலித்துப் போன அந்த ஒரு மனிதன் ஒளித்துக் கொள்ள இடம் தேடினான் இன்னும் ஒளித்துக் கொள்ள தேவை வராதவர்கள் இன்னொரு இடம் தேடினர் அவர்களின் அனுதாபங்களை சொல்ல அனுதாபங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது அதைச் சொல்லும் மனிதர்களை.
  23. அலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். இந்த 5 வருடத்தில் அரசியலில் ஜேவிபியோ அநுரவோ அப்படி என்னத்தைத்தான் புரட்டிப் போட்டார்கள், இந்த அலையை உருவாக்க என்றால் பதில் ஏதுமில்லை. 2022 இல் நடந்த அரகலய போராட்டத்தின் காலப்புரட்சியை ஒரு அமைப்பு வடிவம் பெற்றிருந்த ஜேவிபி தன்வசமாக்கியததான் நடந்தது. இந்த அரகலய போராட்டத்தை முன்னின்று நடத்திய சமவுரிமைக் கட்சியும் வெவ்வேறான இடதுசாரிய சிந்தனைக் குழுக்களும் உதிரிகளும் இந்த அமைப்பு வடிவத்தை கொண்டிராததால் அரகலயவில் பங்குபற்றிய ஜேவிபி இந்த தன்வயமாக்கலை நடத்தியது. அதன் வெற்றிதான் அநுரவின் வெற்றி. எனவே அநுர வென்றார் என்பதைவிட, அநுரவை அரகலய ஒரு முன்பாய்ச்சலான வரலாற்றுக் கட்டத்தில் தலைவராக நிறுத்தியிருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். அரகலய எதிர்த்துப் போராடிய ஊழல் அமைப்புமுறைக்கும் இனவாதத்துக்கும் இடமளிக்க அனுமதிக்கப்படாத வரலாற்றுக் கட்டம்தான் அது. இந்த வரலாற்று நிலைமையை உருவாக்கியது நாட்டை திவாலாக்கிய பொருளாதார நெருக்கடிதான். இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்தக் குரலாக “முறைமை மாற்றம்” system change என்பதை அரகலய தனது முழக்கமாக முன்வைத்தது. என்பிபி யின் தேர்தல் பிரச்சாரம் இவற்றை மையங்கொண்டிருந்தது, இருக்கிறது, இருக்கிறது. இதே ஊழல் அரசாங்கத்தில் பாராளுமன்றத்திலும் குறுகியகால அமைச்சர் பதவியிலும் பங்குகொண்டவர்கள் ஜேவிபியினர். போரில் பங்குகொண்டவர்கள் அல்லது போரை ஆதரித்தவர்கள். நாட்டுக்குள் இனவழிப்பைச் செய்து வெற்றிகொண்ட போரை பாற்சோறு காய்ச்சி கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். இந்தப் போர் அதிகாரவர்க்கம் கட்டற்ற ஊழலை செய்யவும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவும் பொருளாதார வீழ்ச்சியை துரிதமாக்கவும் இனவாத சிந்தனையை கூர்மைப்படுத்தவும் செய்தது. இவையெல்லாம் நாட்டை பேரழிவுக்குத் தள்ளியது என இப்போ சொல்ல முடிகிற நிலையை அவர்கள் (JVP) அன்று எதிர்த்து நின்று காட்டியவர்கள் அல்ல. அதை அரகலயதான் காட்டியது. எனவேதான் இந்த அரசாங்கத்தை அரகலய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது என்கிறேன். இன்று அவர்கள் சொல்லுகிற மாற்றம் என்பதை நிகழ்த்த பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை ஆசனங்களை அவர்கள் பெற வேண்டும் என்பது தர்க்க நியாயமான ஒன்று. அவர்கள் பெறுவார்கள் என்பது என் கணிப்பு. சிறுபான்மை இனங்கள் 2019 இல் ஜேவிபி க்கு அளித்த வாக்குகளை விட பலமடங்கு அதிகமாக அநுராவுக்கு கொடுத்தார்கள் என்பது புள்ளிவிபரம் காட்டும் விடயம். அதை அநுரவே சொல்லியுமிருக்கிறார். எந்த மாகாணங்களில் எந்தக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெற்றது என்ற பருமட்டான வர்ண அடையாளமிட்ட வரைபடத்தை வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். சிறுபான்மை இனங்கள் மாற்றத்தை விரும்பவில்லை என முடிவுக்கு வருவது பருண்மையானது. தவறானது. மாற்றத்தை விரும்பாத சாமான்ய அல்லது விளிம்புநிலை மனிதரை எங்காவது காண முடியுமா என்ன. மாற்றத்துக்காக அரகலயவை நடத்தியவர்களில் குமார் குணரட்ணம் தலைமை தாங்கும் சமவுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜேவிபியிலிருந்து தள்ளி நிற்பதையும் இன்னொரு பகுதியினர் நுவான் போகபே அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வாக்களித்தார்கள் என்பதையும்கூட வசதியாக மறந்து அல்லது மறைத்து எழுதும் ஆய்வுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும். அவர்களும் மாற்றத்தை விரும்பாதவர்களா என்ன. அதிகாரத்தை சுகிப்பவர்களும் ஊழலில் திளைப்பவர்களும் என வாழ்க்கை நடத்தும் அதிகார சக்திகள் -அவர்கள் எந்த இன, மத, மொழியைச் சேர்ந்தவர்களாயினும்- மட்டுமே மாற்றத்தை விரும்பாதவர்களாக, அதை எதிர்ப்பவர்களாக இருப்பர் என்ற வர்க்க குணாம்சத்தைக்கூட புரியாமல் ஆய்பவர்களுக்கு வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் முகத்திலறைந்து ஒரு செய்தியைச் சொல்லத்தான் போகிறது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற சிறுபான்மையின கட்சிகளே நாங்கள் அநுரவின் “மாற்றம்” க்கு ஆதரவாக இருப்போம் என வாக்குக் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது சிறுபான்மையின மக்களின் வாக்குகள் என்பிபி க்கு திரும்பத் தொடங்கியிருக்கிறதின் அறிகுறி. அப்படி அவர்கள் பெரும்பான்மையாக என்பிபி க்கு வாக்களிக்கிற நிலை வருகிறபோது, ‘திருந்திவிட்டார்கள்’ என்ற ஒற்றைச் சுட்டலானது -சாத்தியப்பாடுகளை முன்வைத்து எழுதவேண்டிய ஆய்வுகளுக்கு ஈடாக- எந்த அரசியல் அர்த்தத்தையும் வழங்காது. மாற்றம் என்பது மாறிவிடலை மட்டும் குறிப்பதில்லை. மாற்றத்தை நோக்கிய வளர்ச்சியையும் குறிப்பது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஜேவிபி க்கான அந்த வாக்கு வளர்ச்சியை புறக்கணித்து மாற்றத்தை விரும்பாதவர்கள் என முத்திரை குத்துவது ஒருவகை அறிவுச் சோம்பேறித்தனம் மிக்கது. தமிழ் மக்களின் வரலாறு குறிப்பாக 30 வருட போர் என்பது அழிவுகளின் வரலாறு. அது ஏற்படுத்திய தாக்கத்தை, தனித்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மீதான தயக்கத்தை புறக்கணித்து, ஆதரவு-எதிர்ப்பு என்ற இருமை சிந்தனையோடு அணுக முடியாது. இந்த தயக்கத்தினதும் தாக்கத்தினதும் உளவியல் எல்லா தமிழ்க் கட்சிகளினதும் வாக்குவங்கியை வங்குரோத்தாக விடாமல் வைத்திருக்கிறது. உருப்படியாக எதையுமே செய்யாமல் தமிழ்த் தேசியம் என்ற மந்திரத்தை ஓதி ஓதியே அரசியல் நடத்த அது வசதியாகவும் போய்விட்டது. அது தனியான ஒரு விடயதானம். இப்போ அதிக பெரும்பான்மையை என்.பி.பி எடுக்கிற பட்சத்தில், அது மாற்றத்தை நிகழ்த்துகிற படிமுறைகளில் முன்னேற வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணை வாக்குகளினால் கொடுக்கப்பட்டுவிடும். அதை அவர்கள் நிகழ்த்துவதில் அரச (state) வடிவக் கட்டமைப்பு எந்தத் தூரம் வரை அரசாங்கத்துடன் (government) பயணிக்கும் என்ற கேள்வி புறக்கணிக்க முடியாதது. 340 கோடி ஊழல் செய்த அர்ஜுன் அலோசியஸ் க்கு (மென்டிஸ் நிறுவனம்) வரி ஏய்ப்புக்காக அரச(state) கட்டுமானத்திற்கள் இயங்கும்- நீதிமன்றம் ஆறே ஆறு மாத கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதுபோல் புதிய அரசாங்கத்தைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. ஊழல் செய்வதற்கு எதிரான மனநிலையை அல்லது அச்சத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊழல் செய்வதற்கு தயங்காத ஒரு மனநிலையை இந்தத் தீர்ப்பு வழங்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. பௌத்த மேலாதிக்க பெரும்பான்மைவாதத்தை அடித்தளமாகக் கொண்ட அரச கட்டமைப்பின் கருத்தியல் அகற்றப்படும் வரை “முறைமை மாற்றம்” என்பது ஒரு ஏமாற்று. சமத்துவம் என்பது ஒரு ஏமாற்று. எனவே அரசாங்கம் ஒரு சமூகநல அரசு என்ற வடிவத்தை நிர்மாணிப்பது முடியுமானதாகலாம். நிர்வாகத்துள் மாற்றம், செயற்திறன், ஊழலின்மை போன்றவற்றை அது சாதிக்கலாம். ஓர் அதிகாரப் பரவலாக்கல் முறைமையை பரீட்சிக்கலாம். முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் அதிக கரிசனம் செலுத்தலாம். நடைமுறையில் வீரியமாக செயற்படலாம். முறைமை மாற்றம் என்பது அரகலயவின் முழக்கம். அதைச் சொல்லியே பாராளுமன்றத் தேர்தலிலும் வென்றபின், எல்லா புழுதிகளும் அடங்கியபின், வரலாறு என்பிபி யை கொணர்ந்து விட்டிருக்கிற இடத்திலிருந்து முன்னோக்கி பயணித்தாலே இந்த முழக்கத்தை தம்மோடு வைத்திருக்க முடியும். இது நடவாதபோது அல்லது முடியாதபோது அந்த தேக்கத்தை வரலாறு உடைக்கவே செய்யும். அந்த முழக்கம் திரும்பவும் மக்களிடமே வந்து சேரும். அரசு கட்டமைப்பையும் அதன் வன்முறை இயந்திரமான இராணுவத்தையும் திருப்திசெய்ய வேண்டிய நிலையின் அறிகுறி ஏற்கனவே தென்பட்ட ஒன்று. போர்க்குற்றத்தை உள்ளக விசாரணை செய்து உண்மையை கண்டறியலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை தண்டிக்க மாட்டோம் என்பதை அநுர தெளிவாகவே சொல்லிவிட்டார். ஈஸ்ரர் படுகொலையின் சூத்திரதாரிகள் அரசியல்வாதிகள் என்பதைத் தாண்டி இராணுவ உளவுப்படையினரும் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வெளிச் சதியாகவோ சிக்கல் அவிழுமாக இருந்தால் என்ன நடக்கும். இயலாமைகள் அல்லது மாற்றத்திற்குக் குறுக்கே எழும் தடைகளை தாண்ட முடியாத நிலையில் என்ன நிகழும். அதிகாரம் பண்புமாற்றத்தை என்பிபி அரசாங்கத்திடம் ஏற்படுத்திவிடக் கூடுமா, இன்னொரு அரகலய மேலெழும்புமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் அதை அரச அதிகார நிலையில் நின்று என்பிபி எப்படி கையாளும் என பல கேள்விகளுக்கான விடையை எதிர்காலம்தான் வைத்திருக்கிறது. இந்த 70 வருடகால அரசியல் பாரம்பரியத்துக்கு வெளியே, அரகலய மக்கள் போராட்டம் முன்வைத்த மாற்றம் என்ற புதிய எழுச்சி ஏற்படுத்திய புது நம்பிக்கையை என்பிபி சுமந்து நிற்கிறது. இதில் ஏமாற்றம் நிகழுமாயின் அதன் தாக்கம் மக்களின் உளவியலில் பலமானதாகவே இருக்கும். என்பிபி இதில் வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. நமதும்! பிரதமர் ஹரிணி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது என்பதைவிட அது அவர்களின் உரிமை என்று சொல்வதே சரியானது என்று தெளிவாக சொன்ன சொற்கள் முளைவிட்டு நிமிர்வதற்குமுன், என்பிபி யின் பொதுச்செயலாளர் சில்வா அவர்கள் “வடக்குக்கு 13ம் சட்டத் திருத்தமும் தேவையில்லை. அதிகாரப் பகிர்வும் தேவையில்லை. பொருளாதார வளர்ச்சியே தேவை” என சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயக முறைமையின் ஒரு செழுமையான அம்சம் என்பதற்கு சுவிற்சர்லாந்து ஓர் அசல் உதாரணம். அது ஒருபுறம் இருக்க, எல்லா முரண்பாடுகளையும் பொருளாதார பிரச்சினைக்குள் உட்படுத்துவதை மார்க்சிய வழித்தோன்றல்களாக தம்மை காட்டிக் கொண்ட ஜேவிபி கூறுவதை ஏற்க முடியவில்லை. இலங்கையை இந்த நிலைமைக்குள் தள்ளிய இனப் பிரச்சினையின் தனித்தன்மையை மற்றைய பிரச்சினைகளுடன் ஒரே சிமிளினுள் அடைத்து முன்பு வர்க்கப் பிரச்சினை மட்டும்தான் என்றார்கள். இப்போ பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் என்கிறார்கள். பொருளாதார நெருக்கடி முதன்மை முரண்பாடாக தோன்றி இனவாதத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியிருக்கிறதே யொழிய நீண்ட வரலாறும், செயற்பாடும், பொது உளவியலும் கொண்ட இனவாதத்தை ஒரு தேர்தலால் அடித்து வீழ்த்த முடியும் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை புரட்சியாளர் தோன்றுவர் என எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. * 19102024 ravindran pa https://sudumanal.com/2024/10/19/அலைகளின்-நடுவே/#more-6566
  24. தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள். -கவிஞர் வீரா https://www.facebook.com/share/jw9Jn6Xv9sfuM1eE/
  25. 10, 13 வது கேள்விகள் இந்தக்கட்சியை பற்றித்தான் கேட்டிருந்தேன். அவர்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 14 இல் போட்டியிடுகிறார்கள். தவராஜா போல கடைசி நிமிடத்தில் உமாகரன் ராசையா, ஆனந்தி எழிழன், கஜதீபன் , லோஜன் ( கொழும்பு) போன்றவர்களை சேர்க்க நினைத்து இருந்தும் தவறுதலாக மறந்துவிட்டேன்
  26. எப்படியும் அடுத்த வாரம் சீன போர்க் கப்பலும், அதற்கு அடுத்த வாரம் அமெரிக்க போர்க் கப்பலும் வரும்.
  27. இவரை பார்க்க, பேரப் பிள்ளை உள்ள தாத்தா மாதிரி இருக்கு. இன்னும் இவரின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவது ஆச்சரியம் தான். 😂
  28. நீங்கள் கேட்ட காணொளி இந்தத் திரியிலே உள்ளதா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  29. பாலாபிஷேகம் செய்யவோ . ...........! 😍
  30. யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஆசனந்தான் வரும் போல் உள்ளது. இதனால் கட்சித்தலைமைகள் 2பேர் பழைய ஆட்களாக வைச்சுக்கொண்டு மிச்ச ஆட்களை இளைஙர்களைப் போட்டு எங்கள் அணியில் இளைஞர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம் என்று மக்களைப் பேய்க்காட்டுகிறார்கள். அவர்களை வைத்து ப் பெறப்படும் வாக்குகளை வைத்து தேசியப்பட்டியல் மூலமாகப் பழையபடி பழையவர்கள் பாராளுமன்றத்தற்கு செல்வதே அவர்களின் திட்டம். இளைஙர்களுக்கும் இது தெரிந்தும் மாகாணசபை>உள்ளூராட்சபைத் தேர்தல்களில் நிற்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இப்பொழதெல்லாம் இந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமசபைகள் இருந்த காத்தில் அங்கத்தவர்களுக்கு ஊதியம்வழங்கப்hடுவதில்லை.
  31. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
  32. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தூயவன். இஸ்ரேலியரின் வேதாகமத்தில் இன்று போர்நடக்கும் பலபகுதிகள் அன்று அவர்களின் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1000 வருடங்களுக்கு (அண்ணளவாகத்தான்) முன்னர் அரேபியப் படையெடுப்புக்களால் இஸ்ரேலியர்கள் இங்கிருந்து விரட்டப்பட பலஸ்த்தீனர்கள் அங்கு குடியேறிவிட்டார்கள். 1948 இற்குப் பின்னரே இஸ்ரேலியர்கள் அங்கு மீளவும் குடியேறினார்கள். தமது வேதாகமத்தின்படி பலஸ்த்தீனர்கள் தற்போது வாழும் , தமது முந்தைய தாயகத்தை மீட்டு, மீள உருவாக்க முயல்கிறார்கள். அப்படியானால் அங்குவாழும் பலஸ்த்தீனர்கள் எங்கு செல்வது? கடந்த 1000 வருடங்களாக அவர்களும் அங்குதானே வாழ்கிறார்கள்? யூதரும், பலஸ்த்தீனியர்களும் இருக்கும் தாயகத்தை பகிர்ந்து வாழ்வதே சரியாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு.
  33. ஒருதடவை, பொதுமக்கள் சுமந்திரன் சந்திப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டம் நேர்த்தியாக போய்க்கொண்டிருந்தது சுமந்திரன் பேசும்வரை. அதன் பின், ஒரு பொதுமகன் எழும்பி சுமந்திரனிடம் கேள்வி கேட்டார் பாருங்கள், வந்ததே வந்தது சுமந்திரனுக்கு கெட்ட கோபம்., உடனே, "இங்கே இருப்பதென்றால்; வாயை மூடிக்கொண்டு இருக்கவும், இல்லையேல்; வெளியேற்றப்படுவீர்கள்." என்று எச்சரித்தார். இராணுவமோ புலனாய்வோ என்னவோ ஒன்று இதற்காகத்தான் இவர் பின்னால் திரிகிறதோ என்னவோ? "ஊமையர் சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி."
  34. தாயக இளைஞர்கள் தெளிவாக இருக்கின்றனர்
  35. சுட்டுப்போட்டாலும் நம்ம அரசியவாதிகளுக்கு அது எட்டாப்பொருத்தம். அவர்கள் அதைப்பற்றி சிந்தித்திருந்தால்; வடக்கில் இவ்வளவு கட்சிகள் போட்டியிட வாய்ப்பில்லையே. நாளைக்கு சீனன் போட்டியிட்டாலும்வியப்பில்லை. அபிவிருத்தியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் அது மக்களுக்கானதல்ல. அதனாலேயே மக்களிடம் வரும்போது சிலருக்கு சிங்கள புலனாய்வு பாதுகாப்பளிக்கிறது. தேவைப்படுகிறது.
  36. நீங்கள் விரட்டினாலும் அவருக்கு இருக்கவே இருக்கிறது வீடு, ஓடிப்போய் பாதுகாப்பாக ஒழிப்பதற்கு.
  37. இல்லை அண்ணை, இதெல்லாமே நடந்தது. இதில் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஈஸ்ரேல் நடத்துவது ஆக்கிரமிப்பு யுத்தம்தான். ஈழத்தமிழர் மீது அவ்வாறான ஆக்கிரமிப்பொன்றினை நடத்தலாம் என்று ஜெயவர்த்தனா, காமிணிக்குச் சொல்லிக் கொடுத்ததே இஸ்ரேலிய மொஸாட்டுக்கள் தான். காஸாவிலும் மேற்குக் கரையிலும் பலஸ்த்தீனர்களை விரட்டியடித்துவிட்டு இஸ்ரேலியர்களைக் குடியேற்றி ஆயுதமயப்படுத்தியதைத்தான் இலங்கையிலும் தமிழர் தாயகத்தில் மொஸாட்டுக்கள் செய்வித்தார்கள். ஆக, ஈழத்தமிழரின் அவலங்கள் ஆரம்பிக்கப்படு முன்னமே பலஸ்த்தீனர்களின் அவலங்கள் ஆரம்பித்து விட்டன. நான் சொல்ல வந்தது ஹமாஸும் புலிகளும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்பட முடியாதவர்கள் என்பதைத்தான். இவ்விரு அமைப்புக்கள் மீதான சர்வதேசத் தடை என்பது தடை விதிக்கும் நாடுகளின் நலன்களைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. மாறாக இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் சரியானவையா தவறானவையா எனும் அடிப்படையில் அல்ல.
  38. நம்ம ஆட்கள் எத்தனை பேர் போகப் போகிறார்கள் பார்ப்போம்.
  39. ❤️............. மிக்க நன்றி கந்தப்பு அவர்களே போட்டியை நடத்துவதற்கு. படிக்கிறம், எழுதுறம், வெல்லுறம்............... ஆனாலும் எவ்வளவு தான் படித்தாலும், என்னுடைய அறிவிற்கு பல கேள்விகள் out of syllabus ஆகத் தான் முடியும் போலவும் கிடக்குது...........🤣.
  40. என்னது? "நாங்கள் மலையாளிகளா?" தொலைந்தீர்கள் நீங்கள்😂! அமுக்க வெடியில் (pressure mine) கால் வைத்து விட்டீர்கள், இனி காலை எடுக்காமல் அப்படியே அசையாமல் நில்லுங்கள்!
  41. விசுகர், கனவு காண்பதற்கும் ஒரு நியாயம் வேண்டாமோ.... சுமந்திரன் பாரளுமன்றம் போறதுக்கே பெரிய இழுபறியாய் கிடக்கு, இதுக்குள்ளை... 15 விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போற பிளான் இருக்குதாம்.
  42. ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை தீவைச்­ சூழ அமைந்­துள்ள கடற்­ப­ரப்பு நாட்­டுக்கு கிடைத்­துள்ள அருங்­கொ­டை­யாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக பல ஆண்­டு­க­ளாக இலங்­கைக்கு நெருக்­கடி நிலை­மையை தோற்­றுவித்­துள்ள இலங்கை - இந்திய மீனவர் விவ­கா­ரத்­துக்கு இது­வரை தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டா­ம­ல் உள்­ளது. கடந்த வருடம் கச்­ச­தீவு விவ­காரம் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருந்த நிலையில் அத­னோ­டு இ­ணைந்­த­தாக தற்­போது மீண்டும் இந்த மீன்­பிடி விவ­கா­ரமும் தலை­தூக்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி அநு­ர­கு­மார தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்­கையில் ஆட்­சி­ய­மைத்­துள்ளது. இந்நிலையில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி சுப்­ர­ம­ணியம் ஜெய்­சங்கர் கடந்த வாரம் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றை மேற்­கொண்­டி­ருந்தார். இந்த சந்­திப்பில் இலங்­கையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன­வர்கள் தொடர்பில் கவலை வெளி­யிட்­டி­ருந்தார். குறிப்­பாக இந்­திய மீன­வர்­க­ளையும் அவர்­க­ளது பட­கு­க­ளையும் விரைவில் விடு­தலை செய்ய வேண்­டு­மென தெரி­வித்­தி­ருந்த அவர், இந்திய மீனவர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள அதி­கூ­டிய அப­ராதம் தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அதே­நேரம் வாழ்­வா­தா­ரத்­துடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்கள் குறித்த மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றை­யா­னது இந்த விவ­கா­ரத்தை தீர்த்து வைப்­ப­தற்­கான சிறந்த உத்­தி­யாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மீன்­பி­டித்­துறை, மீனவர் சங்­கங்கள் குறித்த கூட்­டுப்­பணிக் குழுக்­கூட்டம் உரிய காலத்தில் நடத்­தப்­படும் என உறு­தி­ய­ளித்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர், கடந்த 4ஆம் திகதி 50 இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு நன்­றியும் தெரி­வித்­துள்ளார். வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­து­ட­னான சந்­திப்பில் அய­லு­ற­வுக்கு முத­லிடம் மற்றும் சாகர் கோட்­பாடு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு நிலை­நி­றுத்­தப்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார். அதே­நேரம் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் வழங்­கப்­படும் பணித்­திட்­டங்கள் ஊடாக இலங்­கைக்கு இந்­தியா வழங்கி வரு­கின்ற அபி­வி­ருத்தி சார் உத­விகள் தொடரும் எனவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­மை­யா­னது இலங்கை மீதான இந்­தி­யாவின் கண்­ணோட்­டத்தை மேலும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் ஊடாக இலங்­கையில் எந்த அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­தாலும் இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்பு தொடரும் என்­பது உறு­தி­யா­கி­றது. அதற்கு இலங்­கையின் அமை­வி­டமே முக்­கிய கார­ணி­யாக அமைந்­தி­ருப்­ப­தாக துறைசார் நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தைப் பொறுத்­த­மட்டில் நாட்டின் தேசிய வளங்­களைப் பாது­காப்­பதில் தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. இந்த விடயத்தில் கடந்த கால அர­சாங்­கங்­க­ளையும் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் மீன்­பிடி விவ­கா­ரத்தில் இந்த அர­சாங்­கத்தின் நகர்வு எப்­படி அமை­யும் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது. இலங்கை ஆரம்­ப­காலம் முதல் கடந்த 2002 மற்றும் 2022 ஆகிய காலப்­ப­கு­தி­களில் முகங்­கொ­டுத்த பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளின்­போது இந்­தி­யாவே நாட்­டுக்கு கைகொ­டுத்­து உ­த­வி­யது. இந்­நி­லையில் மூன்று தசாப்­த­ கால யுத்­தத்­துக்கு பின்னர் இலங்­கையின் வட­ப­கு­தியில் தென்­னிந்­திய மீன­வர்கள் மீன்­பி­டியில் ஈடு­ப­டு­கின்­றமை இரு நாடு­க­ளுக்­கு­ம் இ­டை­யி­லான நட்­பு­ற­வுக்கு மிகப்­ பெ­ரிய சவா­லாக அமைந்­துள்­ளது. ஆனால், இந்த விட­யத்தை இரு­ நா­டு­க­ளுமே மெள­ன­மாக கடந்து செல்­­கின்ற வித­மா­னது இரு ­நாட்டு நட்­பு­றவை தக்­க­வைத்­துக்கொள்­வ­தற்­கான காய்­ந­கர்த்­த­லா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. இலங்­கையின் நிலப்­ப­ரப்பை விட 8 மடங்கு மிகப்­பெ­ரிய கடற்­ப­ரப்பும் மீன்­வ­ளமும் கொண்ட இலங்­கைத்­ தீவின் கடற்­ப­ரப்பு இந்­திய மீன­வர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­படும் விவ­கா­ரத்தில் இரு­ நாட்டு மீனவ சமூ­கங்­களும் வாழ்­வா­தார ரீதியில் மிகப்­பெ­ரிய சவாலை எதிர்­கொண்­டுள்­ளன. குறிப்­பாக இலங்கை கடற்­ப­டை­யி­னரின் துப்­பாக்கி பிர­யோ­கங்­களால் உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ள­தோடு இந்­திய, இலங்கை மீன­வர்­க­ள் கைது செய்யப்படும் சம்­ப­வங்­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன. அதே­நேரம் இலங்கை கடந்த காலங்­களில் பொரு­ளா­தார ரீதியில் மிகப்­பெ­ரிய வீழ்ச்­சியை சந்­தித்­தி­ருந்­தது. இதன்­போது பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான டொலர் உள்­வ­ரு­கையை அதி­க­ரிப்­பது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களில் இலங்­கையின் மீன் வளம் மிக முக்­கி­ய­மா­னது என துறைசார் நிபு­ணர்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. ஆனால், இந்த விட­யத்தில் இது­வரை ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்கள் இந்­திய அர­சாங்­கங்­க­ளுடன் சுமு­க­மான ஓர் உடன்­பாட்­டுக்கு வரு­வ­தற்­கு­ரிய காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொள்­ள­வில்லை. குறிப்­பாக இந்த விவ­கா­ரத்தில் இந்­திய மீன­வர்கள் அத்­து­மீறி நுழை­வதால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள இழப்பு மதிப்­பீட்டு கணிப்­பீ­டுகள் இது­வரை எமது அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டா­ம­ல் உள்­ளது. இலங்­கையின் கடல்­வ­ளத்தை ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள் உரி­ய­வாறு பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு இந்­தத்­ துறை மிகப்­ பெ­ரிய பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்கும் என்­பதே பொரு­ளா­தார நிபு­ணர்­களின் கருத்­தாக அமைந்­துள்­ளது. இழுவை மடிப்­ப­ட­குகள் இலங்­கையில் முற்­றாக தடை­ செய்­யப்­பட்­டுள்ள போதிலும் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி நுழையும் இந்­திய மீன­வர்கள் இவற்றை பயன்­ப­டுத்­து­வதால் மீன்­களின் இருப்பும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ளது. இது தொடர்பில் ஊட­கங்­க­ளாலும் சமூக ஆய்­வா­ளர்­க­ளாலும் கல்­வி­மான்­க­ளாலும் தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்­ற ­போ­திலும் இது­ தொ­டர்பில் இலங்கையின் கடந்த அர­சாங்­கங்கள் மெளனம் காத்­து­ வ­ந்துள்ளன. அவ்­வப்­போது இந்த விட­யத்­துக்கு எதி­ராக மக்கள் குரல் எழுப்பும் வேளை­களில் இந்­திய மீனவர் கைது சம்­ப­வங்­களும் இழு­வைப்­ப­ட­குகள் பறி­முதல் செய்யும் சம்­ப­வங்­களும் மாத்­திரம் நடந்­தே­று­கின்­றன. இலங்­கையில் நடந்­தே­றிய மூன்று தசாப்­த­ கால யுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு கடற்­ப­ரப்பில் இந்­திய மீன­வர்கள் மாத்­தி­ர­மன்றி இலங்கை மீன­வர்­க­ளுக்கும் மீன்­பி­டிக்க முடி­யா­மல்­போ­ன­மை­யா­னது குறித்த பகு­தி­களில் மீன்­வளம் பெருக்­க­ம­டைய வழி­கோ­லி­யது. இதனால் யுத்தம் நிறை­வ­டைந்த கையோடு தென்­னிந்­திய மீன­வர்கள் இலங்­கையின் கடற்­ப­ரப்­புக்குள் நுழைந்து மீன்­பி­டியில் ஈடு­பட ஆரம்­பித்துவிட்­டனர். ஆனால் இந்த விட­யத்தில் அப்­போது அதி­கா­ரத்­தி­லி­ருந்த அர­சாங்கம் அறிந்தும் அறி­யா­த­தைப்­போன்று நடந்­து­கொண்­டதன் விளை­வா­கவே இன்று இந்த மீனவர் விவ­காரம் தலை­தூக்­கி­யுள்­ளது என துறைசார் நிபு­ணர்கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளனர். மீன் இறக்­கு­ம­தியில் ஆர்வம் காட்டும் இலங்கை மிகப்­பெ­ரிய கடல்­வ­ளத்தைக் கொண்­டுள்ள இலங்கை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தே மீன்­களை இறக்­கு­மதி செய்­கி­றது. ஆனால் இதற்குப் பொறுப்புக்கூற வேண்­டிய அர­சாங்­கங்கள் இது­வ­ரை ­கா­லமும் மெளனம் சாதித்­து­ வ­ரு­கின்­றன. இந்த வரு­டத்தின் ஜன­வரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை­யி­லான 8 மாத காலப்­ப­கு­திக்குள் இலங்­கை­யினால் 39 பில்­லியன் மெட்ரிக் தொன் மீன் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. கடற்­றொழில் அமைச்சின் தர­வு­க­ளுக்கு அமைய மீன் இறக்­கு­ம­திக்­காக மாத்­திரம் 24 பில்­லியன் ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது. அதன் டொலர் பெறு­மதி 80 மில்­லி­ய­னாக பதி­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் வரு­டாந்தம் இலங்கை 900 பில்­லியன் ரூபாய் பெறு­ம­தி­யான மீன்­வ­ளத்தை இந்­தியா சூறை­யா­டு­வ­தாக வட­மா­காண கடற்­றொழில் இணையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் இந்­திய மீன­வர்­க­ளது அத்­து­மீ­றலால் கடற்­றொ­ழிலை நம்பி வாழ்ந்­து­வரும் உள்நாட்டு மீனவக் குடும்­பங்கள் பா­ரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கையில் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டி­களால் மிகவும் பாதிக்­கப்­பட்ட ஒரு­த­ரப்­பாக இந்த மீனவ சமூகம் காணப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் கடந்த காலங்­களில் இந்த விவ­காரம் சூடு­பி­டித்­த­போது இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சினை தொடர்பில் நடுக்­க­டலில் பேச்­சு­வார்த்தை என்­றார்கள், இந்­திய நாட்டு மீனவப் பட­கு­க­ளுக்கு நிபந்தனை அடிப்படையில் அனு­மதி வழங்­கப்­போ­வ­தாக தெரி­வித்­தனர். ஆனால் இவை அனைத்தும் பெய­ர­ள­வி­லேயே நடந்­தே­றின. இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றலால் நாட்டின் மீன் வளம் மாத்­தி­ர­மன்றி மீன­வர்­களின் மீன்­பிடி உப­க­ர­ணங்கள் மற்றும் வலை­க­ளையும் அறுத்துச் செல்­கின்­றனர். அதே­நேரம் இழுவை மடிப்பட­கு­களால் மீன்­களின் இனப்­பெ­ருக்கம் படிப்­ப­டி­யாக அழிக்­கப்­ப­டு­கி­றது. இதன் விளை­வாக இலங்­கையின் கடல்­வளம் அழிக்­கப்­படும் அபாயம் நில­வு­வ­தாக துறைசார் நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். மேலும் இரு­நாட்டு மீன­வர்­க­ளையும் நடுக்­க­டலில் மோத­விட்டு இலங்கை அர­சாங்கம் வேடிக்கை பார்ப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். காலத்­துக்குக் காலம் கைது செய்­யப்­படும் இந்­திய மீன­வர்கள் விவ­காரம் தொடர்ந்தும் நடந்­தே­று­வ­துடன் பரி­தாப உயிரிழப்புக்களும் பதிவாகின்றன. காங்கேசன்துறை கடற்பரப்பில் அண்மையில் இழுவை மடிப்படகு மோதியதில் காயமடைந்த கடற்படை வீரர் அண்மையில் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது. அதேநேரம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் 29ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 வருடங்களுக்குள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 1143 இந்திய மீனவர்களும் 157 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவெனில், இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எவ்விதமான மதிப்பீடுகளையும் மேற்கொள்வதற்கு இதுவரை ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான். அதேநேரம் இலங்கையின் கடல்வள பயன்பாட்டுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் போதிய நிதி கூட ஒதுக்கப்படுவதில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடல் வளத்தை இலங்கை சரியாக பயன்படுத்தியிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருக்க முடியும் என்பதே துறைசார் நிபுணர்களின் பரிந்துரையாகவுள்ளது. https://www.virakesari.lk/article/196255
  43. 15 பிளாஸ்ரிக் கதிரைகளுடன் ஒரு மேசையும் இலவசமாக கிடைக்கும். 😂 “ஆ”வெண்டு பார்த்துக் கொண்டு இருங்கோ… சுமந்திரன். 🤣 நீங்கள் செய்யிற வேலைக்கு... 15 செருப்படிதான் கிடைக்கும். வாங்க ரெடியாய் இருங்கோ. 😂
  44. இந்திய றோ மற்றும் RSS வழி நடத்தலில் கோமிய கூட்டில் பக்கா தாயக தமிழ் தேசிய வியாபாரி சுமந்திரன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது…
  45. உள்ளதை மறைத்து உள்ளவரோடே உறவாடும் ஊடக நரிகளின் உஷ்ணப் பேருமூச்சோ . வள்ளலார் வாக்கையே வசைபாடிய - நம் வம்சம் போக்கற்ற போலிச்சாமியார்களின் புகலிடம் ஆனது கண்ட பூமித்தாயின் கனல் முச்சோ மாட்டுக்கே நீதி தந்ததோன் - மண்ணில் மட்டற்ற மாசு புரிந்தார் பணம் செய்யும் மாயத்தால் மண்புளோராய் மாறி மானமின்றித் திரிதல் கண்டு வெட்கித் தன் விழி மறைத்த நீதித் தாயின் சின மூச்சோ சுழலத் தொடங்கிய மின்விசிறி என் சிந்தனைக்கு சுவரிடவே வழமை வாழ்க்கைக்குத் திரும்பியவளாய்...... காருண்யா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.