Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    88820
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46977
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39344
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20353
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/03/24 in all areas

  1. போட்டியில் கலந்துகொள்ள பல யாழ்கள அரசியல் ஆர்வலர்கள் பின்னடிப்பது இந்தத் தேர்தல் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த😱 நிலையை உருவாக்கியிருக்கின்றது😜
  2. முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈
  3. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன. உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂
  4. உண்மை கிருபன்ஜீ. போட்டியில் கலந்து கொண்டு யாழ்களத்தைச் சிறப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழசிறியின் அன்பு வேண்டு கோளைப் புறக்கணிக்க முடியாமலும் கை போன போக்கில் பதில்களை எழுதியுள்ளேன்.இந்தத் தேர்தலில் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்களை நினைத்தால் தலை சுத்துது.
  5. பாரதிதாசனின் எழுதிய “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?..”பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலை பல பாடகர்கள் பாடி இருக்கிறார்கள். நேற்று இந்தப் பாடல் முகநூலூடாக எனக்குக் கிடைத்தது
  6. புலம்பெயர் தமிழர் என்று ஒரு இனம் இல்லாதிருந்தால் சிறிலங்கா கிட்டத்தட்ட எத்தியோப்பியா போன்ற நாடுகள் போல் பஞ்ச நிலைக்கு வந்திருக்கும்.
  7. விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை உள்ளது.
  8. சரியாகச் சொன்னீர்கள். நடக்கிற காரியத்தை கெடுப்பதில், சுமந்திரன் பயங்கர கெட்ட ஆள்.
  9. புலிகள் ஆட்சியில் இருந்த போது காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு.... இப்போது அவர்கள் இருந்தால் நல்லம் என்பது போல் உள்ளது.
  10. டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உலகம் அமைதியாக இருந்ததை மறந்த/மறைத்த வர்ணசித்திரம்.
  11. சுமந்திரனால்... குட்டிச் சுவரான தமிழரசு கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப கனகாலம் எடுக்கும் என்றாலும், சுமந்திரன் தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். 🙂 நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில்... ஆம். ✔️ 😂
  12. தந்தை செல்வாவுக்கு பக்கத்தில்... சம்பந்தனை கொண்டு வந்து வைத்ததை பார்க்க சகிக்க முடியவில்லை. உந்த மூஞ்சையை பார்த்து, தமிழரசு கட்சிக்கு விழுகிற வாக்கும்... விழாமல் போகப் போகுது. சொந்த செலவிலை.. "சூனியம்" செய்யுறாங்கள்.
  13. இவரின் கூற்றுக்கு... சில பின்னுட்டங்கள். ஐயன்மீர் பிரிகேடியர் சம்பந்தன், கேணல் அமிர், லெப்கேணல் சிவபாலன் போன்ற பல "மாமா"வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்! Eelapriyan Balan இதைச் சொல்ல இவனுக்கு வெட்கமில்லையா? Amuthan Singanayagam தாங்களே அழித்துக் கொண்டு மக்களை அழிய விடாதீர்களாம்..இம் முறையுடன் கதை முடியலாம். Sasi Sasikaran இப்படி கேட்பதை வேறு ஏதாவது கேட்கலாமே. அதுவும் இவரா... இவர், இனத்துரோகி ஆச்சே. சுமந்திரனுக்கு கூசா தூக்குபவனாச்சே. Sinniah Tiemann Loganathan வீட்டுக்கு.. தோல்விப் பயம் வந்திட்டு. Mano Jeganathan
  14. அப்படியென்றால் போட்டியில் முதலில் கலந்து கொண்ட முதல் நால்வருக்கு சிறப்பு புள்ளிகள் வழங்கவேண்டும்.😁
  15. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம் 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 3 28) வன்னி தமிழரசு கட்சி 3 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 2 30)திருமலை தமிழரசு கட்சி 1 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 6 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 5 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? அருச்சுனா இராமநாதன் ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44) வவுனியா தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி 47) திருகோணமலை தமிழரசு கட்சி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 2 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 4 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 54)தமிழரசு கட்சி 8 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 15 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 100 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
  16. யேர்மன் மொழியில் செய்தியை கேட்க, பார்க்க விரும்பினால், https://www1.wdr.de/nachrichten/iran-protest-unterwasche-festnahme-100.html செய்தியின் சுருக்கம், ஈரானில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பல்கலைக்கழக மாணவி தன் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக்கழக முன் வளாகத்தில் வெளியார் முன்பாக நடமாடினாள். ஈரானிய இஸ்லாமிய அரசில், பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடு இருக்கின்றது என்பது உலகம் அறிந்த விடயம்தான். ஆனாலும் அவ்வப்போது தெஹ்ரான் போன்ற பெருநகரங்களில், இளம் சமுதாயத்தினர் ‘முக்காடு அணிய வேண்டும்’ என்ற அரசின் கொள்கையை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மஹ்சா அமினி என்ற பெண் முக்காடு விடயத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போய் சித்திரவதையின் விளைவாக இறந்தார். ஈரானில், ஆடைக் கட்டுப்பாடுகளை பெண்கள் மீறினால் சித்திரவதைகளை,வன்முறைகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு மஹ்சா அமினி ஒரு சாட்சி. ஈரானில், தனியார் பல்கலைக்கழகமான ஆசாத் பல்கலைக்கழகத்தின் ( Asad-University) நிர்வாகிகள், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் கட்டாயம் மொட்டாக்கு அணிய வேண்டும் என்று அறிவித்ததன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின் கோபம் கொண்ட ஒரு மாணவி எதிர்ப்பைக் காட்டுவதற்காக தனது ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக் கழகத்துக்கு முன்பாகக் காட்சி தந்தார் என மனித உரிமை அமைப்பான ஹெங்கா (Hengaw )தெரிவித்திருக்கிறது. பல்கலைக் கழக நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளார்கள். இப்பொழுது அந்தப் பெண் ஒரு மனநோயாளி எனவும் அவள்மேல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்கள். ஈரான் ஜனாதிபதி Massoud Peseschkian தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் மீதான ஆடைக் கட்டுபாடுகள் பற்றிய பிரச்சினையை தீர்க்கப் போவதாக உறுதியளித்திருந்தார். புதிய ஜனாதிபதியாக இருந்தாலும் அவரும் பழமைவாத-மிதவாத ஜனாதிபதிதான். இங்கே யார் மனநோயாளி என்பதில் ஒரு குழப்பம் வருகிறதல்லவா?
  17. நேற்று சந்தையில் ஒரு வேட்பாளர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு விழுப்புண்ணடைந்த ஒரு முன்னாள் போராளிமுன் போய் நின்று பேசபோய் ஒரே அசிங்கமா போய்ச்சு குமாரு ரேஞ்சுக்கு ஆயிட்டார், போதாக்குறைக்கு ஒரு முன்னாள் போராளி முன் தானும் ஒரு போராளி என்று சொல்லபோக, அவர் கவுண்டமணி பாணியில ஓட்றா எந்திரிச்சு ஓடிர்றா எண்டு கலைச்சுவிட்டார் அப்படியே ஓடி போயிட்டார் அவர்.
  18. சரியாகச் சொன்னீர்கள். நடக்கிற காரியத்தை கெடுப்பதில், சுமந்திரன் பயங்கர கெட்ட ஆள். தமிழர்களின் திட்டங்களை மட்டுமே கெடுப்பார். சிங்களவர்களுக்காக உழைப்பார்.
  19. 26 தீர்மானங்களும் தீர்மானங்களாகவே இருப்பது ஆறுதலான ஒரு விடயம். இதில் எதுவுமே போராட்டமாக இல்லாதது தவெக நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் அவரவர் சொந்த வேலையை முடிக்க உதவியாக இருக்கும்.............. இன்று 69வது படத்தின் ஷீட்டிங் ஆரம்பிக்கின்றது.......... மீனவர் பிரச்சனை அவ்வளவு கஷ்டமான ஒரு கேள்வியா........ இவர்கள் எல்லோருமே நூறுக்கு சைபர் வாங்குகின்றார்களே.........
  20. தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 26 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்! christopherNov 03, 2024 14:07PM விஜய் தலைமையில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தவெக கட்சியின் முதல் மாநாட்டை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும்‌ பணிகள்‌ மற்றும்‌ மக்கள்‌ சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை பின் வருமாறு :- 1. தமிழக வெற்றிக்‌ கழகத்தின் கொள்கைகள்‌, கொள்கைத்‌ தலைவர்களை உறுதியாகப்‌ பின்பற்றும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 2. கொள்கைத்‌ திருவிழா மாநாட்டை மாபெரும்‌ வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும்‌, பந்தல்‌ வடிவமைப்பாளர்‌ ஜே.பி.விஸ்வநாதனுக்கும்‌, மாநில மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும்‌, பொதுமக்களுக்கும்‌ நன்றி தெரிவிக்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 3. தமிழ்நாட்டில்‌ இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும்‌ சகோதரத்துவத்தையும்‌ நல்லிணக்கத்தையும்‌ பாதுகாப்பையும்‌ எப்போதும்‌ போற்றிப்‌ பாதுகாக்கும்‌ வகையில் மதச்சார்பற்ற சமூக நீதிக்‌ கொள்கைகள்‌ பற்றிய விளக்கத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 4. ஒரே நாடு; ஒரே தேர்தல்‌ என்ற அறிவிப்பும்‌, அதைச்‌ சட்டமாக்குதலுக்கும்‌ முனையும் பாஜக அரசிற்கு எதிராக ஐனநாயகக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 5. பெண்கள்‌, குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களில்‌ ஈடுபடுவோருக்குத்‌ உச்சபட்ச தண்டனை வழங்க ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பெண்கள்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 6. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில்‌ உடனடியாகச்‌ சாதிவாரிக்‌ கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும்‌ ஆய்வைக்‌ காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி சமூக நீதிக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 7. மருத்துவம்‌ போலவே கல்வியும்‌ மாநிலப்‌ பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள்‌ உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும்‌. அப்படி வழங்கினால்‌ நீட்‌ தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள்‌ மாணவர்களின்‌ மருத்துவக்‌ கனவை நிறைவேற்ற இயலும்‌ என்பதை வலியுறுத்தி மாநிலத்‌ தன்னாட்சி உரிமைக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 8. விவசாயம்‌ மற்றும்‌ விவசாய நிலங்களின்‌ பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும்‌ தமிழக வெற்றிக்‌ கழகம்‌, தன்‌ மண்ணுக்காகவும்‌ மக்களுக்காகவும்‌ சட்டரீதியாகப்‌ போராடவும்‌ தயங்காது என்பதை வலியுறுத்தி விவசாய நிலங்கள்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 9. தொழில்‌ நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின்‌ எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் கோவை மெட்ரோ ரயில்‌ திட்டப்‌ பணிகளை விரைந்து தொடங்கக்‌ கோரும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 10. ஈழத்‌ தமிழருக்கான நிரந்தரத்‌ தீர்வைக்‌ கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், ஈழத்‌ தமிழர்கள்‌ மற்றும்‌ இலங்கை அரசால் சிறைப்படிக்கப்பட்டு, தாக்கப்படும் தமிழக மீனவர்களின்‌ உரிமைகளைப்‌ பாதுகாக்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 11. மொழி உரிமையே எங்கள்‌ தமிழ்த்‌ திருநாட்டின்‌ முதல்‌ உரிமை என்ற எங்கள்‌ கொள்கைப்படி, எங்கள்‌ தாய்மொழி காக்கும்‌ எல்லா முயற்சிகளிலும்‌ தமிழக வெற்றிக்‌ கழகம்‌ சமரசமின்றிச்‌ செயல்படும்‌. தமிழ்நாட்டின்‌ இருமொழிக்‌ கொள்கைக்கு எதிராக, மூன்றாவது மொழியைத்‌ திணிக்க முயலும்‌ ஒன்றிய அரசுக்கு எதிராக மொழிக் கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 12. அரசின்‌ வருவாயைப்‌ பெருக்க எந்த ஓர்‌ அறிவார்ந்த திட்டத்தையும்‌ செயல்படுத்தாமல்‌, மின்‌ கட்டண உயர்வு, பால்‌ கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள்‌ மீது மேலும்‌ மேலும்‌ வரிச்‌ சுமையை மட்டுமே அதிகமாக விதித்து வரும் திமுக அரசுக்கு எதிராக மக்கள்‌ மீது நிதிச்‌ சுமைத்‌ திணிப்பு சார்ந்த தீர்மானம் நிறைவேற்றம். 13. அமைதிப்‌ பூங்காவான தமிழ்நாட்டில்‌, தொடரும்‌ கள்ளச்‌ சாராய விற்பனை, போதைப்‌ பொருட்களின்‌ பழக்கம்‌ போன்ற நிர்வாகச்‌ சீர்கேடுகளைச்‌ சரிசெய்யாமல்‌, ஆளும்‌ திமுக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து சட்டம்‌ – ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்‌ நிறைவேற்றம். 14. தேர்தல்‌ வாக்குறுதியை வழக்கம்போலக்‌ காற்றில்‌ பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால்‌ தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத்‌ திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின்‌ கணக்கீடு செய்யும்‌ முறையைக்‌ கைவிட்டு, மாதந்தோறும்‌ மின்‌ கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மின்சாரக்‌ கட்டணத்தை மாற்றியமைக்கத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 15. மகளிர்‌ உரிமைத்‌ தொகை, பரிசுத்‌ தொகுப்பு என்று ஒரு புறம்‌ அறிவித்துவிட்டு, மறுபுறம்‌ மதுக்கடைகளைத்‌ திறந்து, அதன்‌ மூலம்‌ அரசுக்கு வருவாயைப்‌ பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக்‌ குற்றங்கள்‌, சமூகப்‌ பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக்‌ காரணமாக விளங்கும்‌ மதுக்கடைகளைக்‌ கால நிர்ணயம்‌ செய்து மூட வலியுறுத்தும்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 16. தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம்‌ வழங்குகின்ற வகையில்‌, உச்ச நீதிமன்றக்‌ கிளையைச்‌ சென்னையில்‌ அமைக்கவும், தமிழைத்‌ தாய்மொழியாகக்‌ கொண்ட நீதிபதி ஒருவரை நியமித்து சட்டரீதியாக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்‌ என்று வலியுறுத்தும்‌ உச்ச நீதிமன்றக்‌ கிளையை அமைக்க தீர்மானம்‌ நிறைவேற்றம். 17. தமிழ்‌ மண்ணின்‌ மூவேந்தர்களான சேரர்‌, சோழர்‌, பாண்டியர்‌ ஆட்சியின்‌ வரலாற்றுப்‌ பெருமைகளை உலகுக்குப்‌ பறைசாற்றும்‌ வகையில்‌, பிரமாண்டமான அருங்காட்சியகத்தை தமிழத அரசு சென்னையில்‌ கட்ட வேண்டும்‌ என்று தமிழ்நாட்டின்‌ தொன்மப்‌ பெருமைப்‌ பாதுகாப்புத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 18. தமிழ்நாட்டு மக்களின்‌ முன்னேற்றத்திற்குப்‌ பாடுபட்ட தலைவர்களை, எவ்விதச்‌ சமரசமும்‌ இன்றிப்‌ போற்றுவதைக்‌ கடமையாகக்‌ கொள்ள வேண்டும் என்று கோரி விடுதலைப்‌ போராட்டத்‌ தியாகிகளுக்குப்‌ பெருமை சேர்க்க வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 19. இஸ்லாமிய சகோதரிகளின்‌ தமிழ்த்‌ தொண்டை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ ஆண்டுதோறும்‌ இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில்‌ விருதும்‌ பணமுடிப்பும்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்று தெரிவித்து கண்ணியமிகு காயிதே மில்லத்‌ பெயரில்‌ அரசு விருது வழங்க வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 20. தமிழ்நாட்டில்‌ முதியோர்‌ நலனை உறுதி செய்யும்‌ கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்த வேண்டும்‌ என்று கோரி முதியோர்‌ நல்வாழ்வை உறுதி செய்யத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 21. இயற்கைத்‌ தாயின்‌ செல்லப்‌ பிள்ளையான கன்னியாகுமரிப்‌ பகுதியில்‌ அணுக்‌ கனிமங்களை அகழ்ந்தெடுக்கும்‌ சுரங்கத்‌ திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென்‌ தமிழகத்தைப்‌ பாழ்படுத்தும்‌ இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக்‌ கைவிடவேண்டும்‌ என்று இயற்கை வளப்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 22. நாடாளுமன்றத்தில்‌ ஒன்றிய அரசால்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட வக்‌ஃப்‌ சட்டத்‌ திருத்த மசோதா இஸ்லாமிய சமூகத்தின்‌ உரிமைகளைப்‌ பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள்‌ எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்‌ஃப்‌ சட்டத்‌ திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌ என்று வலியுறுத்தி இஸ்லாமியர்‌ உரிமைத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 23. நீட்‌ தேர்வால்‌ தமிழ்நாட்டில்‌ இருக்கும்‌ மாணவ மாணவிகள்‌, குறிப்பாக, கிராமப்புறங்களில்‌ இருக்கும்‌ ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ பட்டியலின வகுப்பினைச்‌ சேர்ந்த மாணவ – மாணவிகள்‌ அனைவருமே மிகவும்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. நீட்‌ தேர்வு விலக்குப்‌ பிரச்சினைக்கு நிரந்தரத்‌ தீர்வு காண, கல்வியைப்‌ பொதுப்‌ பட்டியலில்‌ இருந்து மாநிலப்‌ பட்டியலுக்குக்‌ கொண்டு வர வேண்டும்‌ என்று கோரி நீட்‌ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 24. ஆளும்‌ அரசுகள்‌ மேற்கொள்ளும்‌ மக்கள்‌ நலன்‌ சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும்‌ ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகக்‌ கருதுகிறோம்‌. தமிழ்நாட்டிற்கும்‌ தமிழினத்தின்‌ வளர்ச்சிக்கும்‌ மாபெரும்‌ பங்காற்றியவர்களைப்‌ பெருமைப்படுத்திடும்‌ வகையில்‌ தமிழக அரசு ஆண்டுதோறும்‌ ‘தகைசால்‌ தமிழர்‌ விருது’ வழங்குகிறது. இதனை பாராட்டும் வகையில் தகைசால்‌ தமிழர்‌ விருது வழங்கும்‌ அரசை வரவேற்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 25. தமிழகத்தில்‌ தூத்துக்குடி மாவட்டம்‌ குலசேகர பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட்‌ ஏவுதளம்‌ சுமார்‌ 2,376 எக்கர்‌ நிலப்‌ பரப்பளவில்‌ அமைக்க உள்ளது. பெரும்‌ வேலை வாய்ப்புகளை வழங்கும்‌ வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ராக்கெட்‌ ஏவுதளம்‌ அமைக்கும்‌ திட்டத்தை வரவேற்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 26. நமது தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ மீது தீராப்‌ பற்றுடன்‌, கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த போராளிகள்‌ சிலர்‌ அண்மையில்‌ மறைந்த நிகழ்வுகள்‌, அதிர்ச்சியும்‌ வேதனையும்‌ அளிக்கின்றன. இயக்கத்திற்காகவும்‌ கழகத்திற்காகவும்‌ நீண்ட காலமாகப்‌ பணியாற்றி, உடல்நலக்‌ குறைவால்‌ திடீரெனக்‌ காலமான புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன்‌ மற்றும்‌ மாநாட்டில்‌ பங்கேற்க வரும்‌ போது, எதிர்பாராமல்‌ நிகழ்ந்த சாலை விபத்துகளில்‌ உயிரிழந்த சீனிவாசன்‌, விஜய்கலை, வசந்தகுமார்‌, ரியாஸ்‌, உதயகுமார்‌ மற்றும்‌ சார்லஸ்‌ ஆகியோர்‌ மறைவை கட்சி வரலாற்றில்‌ என்றென்றும்‌ நிலைத்திருக்கும்‌ வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம். https://minnambalam.com/political-news/26-resolutions-passed-by-the-tvk-executive-committee/
  21. டக்கியை விட... சுமந்திரன், தனக்கு வெளி நாட்டு அமைச்சர் பதவியோ, நீதி அமைச்சர் பதவியோ கிடைக்கும் என்ற பெரிய எதிர் பார்ப்பில் உள்ளார். தேர்தல் முடிந்த பின்... அசடு வழிய நிற்கப் போகின்றார்.
  22. சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை காது கொடுத்து கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டு விடுவேன்..................
  23. த‌மிழ் சிறி அண்ணாவின் அன்பு வேண்டுகேலுக்கு இன‌ங்க‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்டேன் மற்ற‌ம் ப‌டி என‌க்கு 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லில் பெரிய‌ விருப்ப‌ம் கிடையாது👍..........................
  24. விஜி அண்ணிக்கு தளபதி விஜய் அண்ணன் முறை திடுக்கிடும் ஆதாரம் சிக்கியது!😂(இப்படித்தானே தமிழ் ஊடகவியலாளர்களும் யூடியூப்பர்களும் செய்திகளுக்குத் தலைப்பு இடுகின்றனர்)
  25. எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் பல பிரச்சினை இருக்லாம் அ தற்காக அந்நியன் எம்மை ஆள நினைக்கக் கூடாது. ஆயிரம் உண்டுங்கு சாதி -எனில் அந்நியன் வந்து புகல் என்ன நீதி? நாங்கள் திராவிடர்களை எதிர்ப்பது பிழை என்றால் எதற்காக பிராமணர்களை எதிர்க்க வேண்டும். அவர்களும் திராவிடர்களைப் போல நீண்ட காலமாக தமிழ்மண்ணில் வசிப்பவர்கள்தானே. பாராதியார் ஒரு பிராமணர் அவர் தமிழுக்கு செய்த கரணாநிதி செய்து விட்டார். தென்கிழக்காசிவை ஒரே குடைக்கீழ் அண்ட ராஜராஜ சோழனுக்குச் சிலை இல்லை. காமராஜர்>கக்கனுக்குச் சிலை இல்லை.ஆனால் மெரினா பீச இன்று திராவிடச் சுடுகாடாகி இருக்கிறது.
  26. உண்மைய‌ சொல்ல‌னும் என்றால் 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை எட்டி பார்த்த‌து கிடையாது த‌லைவ‌ரால் அறிமுக‌ம் செய்து வைக்க‌ப் ப‌ட்ட‌ சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை தெரியும் ம‌ற்ற‌ம் ப‌டி பெரிதாக‌ தெரியாது...........................உற‌வுக‌ளின் விருப்ப‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொண்டேன் அதே போல் நீங்க‌ளும் க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சி............................ த‌லைவ‌ரே ஜ‌க்க‌ம்மா என்று சும்மா காமெடிக்கு எழுதினேன் உங்க‌ளை போன்ர‌வ‌ர்க‌ளை சிரிக்க‌ வைக்க‌........... இல‌ங்கை கிரிக்கேட்டை தெரிந்த‌ அள‌வுக்கு என‌க்கு அர‌சிய‌லை ப‌ற்றி பெரிதாக‌ தெரியாது.................2009க்கு முத‌ல் ஈழ‌ அர‌சிய‌லை தொட‌ர்ந்து க‌வ‌ணித்து வ‌ந்தேன் 2009 ம‌ன‌ உளைச்ச‌லோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை எட்டி பார்ப்ப‌தை த‌விர்த்து விட்டேன் ஏதும் இல‌ங்கை அர‌சிய‌ல் ப‌ற்றி தெரிய‌னும் என்றால் என்னோடு சுறு வ‌ய‌தில் ப‌டித்த‌ ந‌ண்ப‌னிட‌ம் கேட்டு தெரிந்து கொள்வேன்............ந‌ண்ப‌ன் இல‌ங்கை அர‌சிய‌லை அந்த‌க் கால‌ம் தொட்டு பின் ப‌ற்றி வ‌ருகிறார்..................ம‌ற்ற‌ம் ப‌டி இந்த‌ போட்டியில் உங்க‌ளுக்கு கீழ‌ நான் வ‌ந்தாலும் ம‌கிழ்ச்சி தான் என‌க்கு த‌லைவ‌ரே😁🥰...........................
  27. வரும் தேர்தல் முடிந்த பின்னரே பல சுயரூபங்கள் வெளிவரும். அதுவரை காத்திருப்போம். 🙂
  28. “இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. கொழுந்து விட்டு எரியட்டும்,.🤣
  29. அழைப்புக்கு நன்றி! ஆனால் நான் கமலா அக்காவுக்கு வாக்கு போட்டு முடியத்தான் வருவேன், அதுவரை விரதம்🤣 உந்த அடிக்கடி கட்சி மாறுற ஆக்களையெல்லாம் என்னால கணிக்க முடியாது ராசா 😃
  30. அமரன் படம் பார்த்தேன், யூடியூப் விமர்சனங்கள் , படம் பார்த்தவர்களின் கருத்துக்கள் எல்லாம் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை, படம் பார்க்க போகும்போது ரிசு பேப்பர் பலரும் கொண்டு போகிறார்கள் என்றெல்லாம் இருந்தது. அப்படியெல்லாம் இல்லை இது ஏற்கனவே வந்த படம்தான் அதன் பெயர் குருதிபுனல்! கமலஹாசன்தான் அமரன் தயாரிப்பாளர் என்பதால் தனது படத்தையே கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்கிறார் போலும். ராணுவத்தின் தியாகத்தை எண்ணி பேப்பர் துண்டுகளுடன் திரையரங்குக்கு போகும் மக்கள் மறுபக்கம் ராணுவத்த்தால் பேப்பர்போல கசக்கி கொளுத்தப்படும் மக்கள் பக்கமும் நின்று யோசிக்கவேண்டும், அதை செய்ய அவர்களின் அரசும் அரசியலும் அனுமதிக்க போவதில்லை. படம் பார்த்தவர்கள் எல்லாம் வசூலில் இது சாதனை படைக்கும், சிவகார்த்திகேயன் சாய் பல்லவிக்கு ஆஸ்கார் விருதுகூட கொடுக்கலாம் என்கிறார்கள், அழுகிறார்கள், ஆனால் குருதிபுனலில் கமல் நடிப்பில் 10 வீதம்கூட சிவகார்த்திகேயனிடம் இல்லை. ஆனால் உண்மையாகவே இந்த கதையில் வந்து இறந்துபோன முகுந்த் குடும்பத்துக்கு யாரும் உதவி செய்யவேண்டுமென்றோ அல்லது அவர்கள் பற்றி பேசவோ இல்லை. இவர்கள் உண்மையாகவே ராணுவ தியாகத்துக்கு அழுகிறார்களா அல்லது ராணுவம்போல் நடித்த கூத்தாடிகளுக்காக அழுகிறார்களா என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். சொந்தநாட்டு ராணுவ தியாகங்களை பார்த்து சிவாஜிகணேசன் அழுகிறமாதிரி அழுகிறார்கள் அது அவர்கள் கடமை , ஆனால் அந்நியநாட்டுக்குள் வந்து எம்மை கொன்றுவிட்டுபோன அவர்கள் ராணுவத்தின் தியாகங்களை நினைத்து ஜனகராஜ் சிரிக்க்கிறமாதிரித்தான் நம்மால் சிரிக்க முடியும்.
  31. மேலே ரசோ எழுதியதையே நானும் சொல்கிறேன். திராவிட இனம் = 5 மொழிவாரி இனங்களின் கூட்டுப் பொதுப்பெயர். திராவிட அரசியல் சித்தாந்தம் = தமிழ் நாட்டில் ஆரிய சித்தாந்ததுக்கு எதிராக நீதி கட்சி, பின் பெரியாரால் எழுப்பபட்டது. நீங்கள் இனப் பகுப்பை, சித்தாந்தத் தோடு போட்டு குழப்பி கொள்கிறீர்கள். மெட்ராஸ் மாநிலமாக இருந்த போதே மற்றைய 3 தென் மானிலங்களாக பிரிந்த பகுதிகளில் திராவிட சித்தாந்தம் பரவவில்லை. அவர்கள் ஒன்றில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ் அல்லது ஜனதா கட்சி (பின்னாளில்)தான். தமிழர் பகுதியில்தான் அநேகம் பிராமண எதிர்ப்பு அரசியல் நிலை கொண்டது. இதன் ஆரம்பகால பெயர் பிராமணர் அல்லாதோர் சங்கம். அப்போ 5 மொழி பேசுவோரும் ஒன்றாக இருந்தமையால், பிராமண எதிர்ப்பு அரசியல் என்ற தத்துவத்தை பிராமணர் அல்லாதோருக்கு பொதுவாக திராவிடம் என்ற சொல் உள்ளே வருகிறது. ஆனால் இதன் இனவழி அடையாளப்பொருள் மொழி வாரி மாநில பிரிப்போடு செத்து விடுகிறது. இப்போ திராவிடம் என்றால் அது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான அரசியல் தத்துவம் மட்டும்தான். இதை திராவிட சித்தாந்தம் என சொல்லுவது கசக்கிறது என்ரால் பெரியாரிசம் என சொல்லி விட்டு நகருங்கள். சுருங்க சொல்லின், ஆரியத்தை இரு வகையில் எதிர்க்கலாம். தமிழ் தேசியம் அல்லது திராவிடம். மூன்றாவதாக இரெண்டு வழியையும் சேர்த்து, தமிழனாய் உணர்பவன் எல்லாம் தமிழன் என்ற அடிப்படையில் இன்னும் சிறப்பாகவும் எதிர்க்கலாம். முந்தி சைவமா, வைணமவா என நம் மன்னர்கள் அடிபட்டார்கள், அதே போல் மூவேந்தர் அடிபட்டார்கள். கடைசியில் தஞ்சையை மராட்டியனிடமும், மதுரையை நவாப்பிடம் கொடுத்ததுதான் மிச்சம். இதை ஒத்த ஒரு வீண் வேலைதான் இந்த திராவிடம் vs தமிழ் தேசிய போலி விவாதமும். இதை தூண்டி விடுவதில் முன் நிற்பவர்கள் “ஒற்றுமை கிலோ என்ன விலை” என கேட்கும் ஈழத்தமிழர்கள் என்பது வியப்பில்லை. கொள்கை மோதல், பிரதேச மோதல், இயக்க மோதல், இயக்க-உள் மோதல் என தமது தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொண்ட ஒரு இனம், இப்போ தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு நிலையை உருவாக்கி விட உழைக்கிறது.
  32. என்னையும் போட்டியில் கலந்து கொள்ள தேடி அழைத்த சிறியருக்கு நன்றி!. ஆனால் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை என மிக வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.. மன்னிக்கவும் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு.
  33. நானும்… படித்த இளைஞர்கள் பக்குவமாக நடந்து கொள்வார்கள் என நம்பி, கந்தப்புவின் யாழ் கள பாராளுமன்ற போட்டியில்… //யாழ். மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?// என்று கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்கு… அர்ச்சுனா இராமநாதன் என பதிலளித்து விட்டேன். 🙂
  34. இப்போது உள்ள தமிழ் தவைர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் தமிழ் இளைஞர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் தமிழினத்துக்கு விடிவை கொண்டு வருவார்கள் என்ற குரல் யாழ்களத்தில் ஒலித்ததே 😄 இதில் கவுசலியாவின் பேச்சை கேட்டிருந்தேன் அர்ச்சுனாவினுடையது போன்று இல்லாமல் தெளிவாக இருந்தது
  35. ச‌ரி புத்த‌ன் மாமா 12 நாள் இருக்கும் போது 5நாள் மிக‌ குறைய‌ க‌ட‌சிக்கு முத‌ல் நாள் கூட‌ எல்லா க‌ட்சி குறைக‌ள் ச‌ரி பார்த்த‌ பின் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்கோ........................................
  36. காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுத்து பத்திரிகையாளர்களில் இருந்து பலரைக கொலை செய்து தான் இன்றுவரை அரசியல் நடக்கிறது. பழைய கோப்புகளை கிழறாமல் இருக்க வேண்டுங்கள்.
  37. தமிழக மக்களை போல தாயக மக்களையும் மாற்ற வேணும் என தீயாக வேலை செய்கின்றார் போல
  38. சிறி நானும் இதை எழுத வேண்டும் என எண்ணினேன்.பதிவுக்கு நன்றி. நடுச்சாமத்தில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் என்ன வேலை? தமிழ் கைதிகளை சுடுவேன் என்றதுமல்லாமல் தனது சப்பாத்தைநக்கச் சொன்னதாகவும் சொன்னார்கள். முதுகெலும்பில்லாத எமது அரசியல்வாதிகளும் சாட்டுக்கு ஒருநாள் குரலெழுப்பினார்கள் அதோடு சரி. தூரகங்களும் சரி மனிதஉரிமை அமைப்புகளும் சரி பெரிதுபடுத்தவே இல்லை. காயாலாகாத நாங்கள் என்ன தான் செய்யலாம்? இப்போ எங்கோ ஓர் மூலையில் சந்தோசமாக உள்ளது.
  39. ஜெமினி : ஓடிவதுபோல் இடை இருக்கும் ......... தேவிகா : இருக்கட்டுமே .........! 😍
  40. கோசான்... உங்கள் பார்வைக்கு, நீங்கள் அந்த நேரம் யாழ்.களத்தில் இல்லாததால்... வேறொரு பதிவில் பதிந்த எனது பதிவை... மீளப் பதிகின்றேன். இம்முறை யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகை குறைவு என்பதால்... ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைத்து விட்டார்கள். //சென்ற பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களின் அடிப்படையில்.... திருகோணமலை மாவட்டம்: (4 இடங்கள்.) 2 முஸ்லீம், 1 தமிழ். (குகதாசன்.), 1 சிங்களம். மட்டக்களப்பு மாவட்டம்: (5 இடங்கள்.) 4 தமிழ், ( சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வியாளேந்திரன், பிள்ளையான்) 1 முஸ்லீம். யாழ்ப்பாண மாவட்டம்: (7 இடங்கள்) (அங்கஜன், சுமந்திரன், விக்னேஸ்வரன், ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன். வன்னி மாவட்டம் : (6 இடங்கள்) 2 முஸ்லீம், 4 தமிழ்.(அடைக்கலநாதன், திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், நோகராதலிங்கம்.) தேசியப் பட்டியல்: சுரேன் ராகவன், செல்வராசா கஜேந்திரன், தவராஜா கலை அரசன். திகாமடுல்ல எனப்படும் அம்பாறை மாவட்டத்தில்... (7 இடங்கள்) 4 முஸ்லீம், 3 சிங்களம். அங்கு தமிழர்கள் இரண்டு பேர் வரக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும்.... ஒற்றுமை இன்றி பிரிந்து நின்று பல தமிழ் கட்சிகளில் போட்டியிடுவதால், அங்குள்ள தமிழர்களின் வாக்குப் பிரிந்து ஒரு தமிழரும் வெல்ல முடியவில்லை என்பது சோகம். சென்ற பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் 16 பேர். தேசியப் பட்டியல் 3 பேர். மொத்தம் 19 பேர்.//
  41. கெதியா கெதியா அப்பதான் எங்களுக்கும் வசதி. எள்ளை காயவைத்துவிட்டு எலிப்புழுக்கையை பொறுக்கு என்பது பேுhலல்லவா இருக்கு.
  42. இந்த முறை... முல்லைத்தீவு தொகுதி தமிழ் கட்சிகளிடம் இருந்து பறி போகப் போகின்றது போலுள்ளது. ஜனாதிபதி தேர்தலிலேயே... பெருமளவான வாக்குகள் அனுரவுக்குத்தான் கிடைத்தது. இப்போ... பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அம் மக்களை குறி வைத்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளளார். தமிழரசு கட்சி... போன பஸ்ஸுக்கு, கை காட்டிக் கொண்டு நிற்கத்தான் லாயக்கு. 😂
  43. தமிழர்கள் திராவிடர்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் சில சிக்கலான வேறுபாடுகளும் இருக்கின்றன. இன்றைய திராவிடம் என்பது மரபு என்றில்லாமல் ஒரு கருத்தியல் ஆகவே இருக்கின்றது. ஆரியத்திற்கு எதிரான ஒரு கருத்தியலே இன்றைய திராவிடம். இந்தக் கருத்தியலை மரபு வழியாக திராவிடர் என்று கருதப்படும் ஏனையோர், தமிழர்கள் தவிர, கவனத்தில் கொள்வதில்லை. தெலுங்கு மக்களோ, கன்னட மக்களோ அல்லது கேரள மக்களோ இந்த வகையில் சிந்திப்பது மிகவும் அரிது. ஆகவே இன்றைய திராவிடத்தின் எல்லை தமிழ்நாடு என்ற அளவிலேயே இருக்கின்றது. அது தமிழ்நாட்டில் வாழும் எல்லா தென்இந்திய மக்களையும் ஒரு அணியில் கொண்டு வரும் ஒரு கருத்தியல். தமிழ்த்தேசியம் மிகவும் இறுக்கமானது. எந்த தேசியமும் இறுக்கமானதே. தமிழ்நாட்டில் இருக்கும் எட்டரைக் கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் 'உண்மையான தமிழர்கள்' என்று கணக்கிட்டு, மேற்கொண்டு செல்வது தமிழ்த்தேசியம்.
  44. காதுக்குள் தண்ணி போனால் ஒரு காதுக்குள் தண்ணியை விட்டு மறுபக்கம் தலையை சரிக்கும் போது காதுக்குள் சென்ற தண்ணீர் வெளியில் வந்து விடும். இது மூக்குக்கும் பொருந்துமா தெரியவில்லை. சாதாரணமாக blow பண்ணினால் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்.
  45. அது தானாகவே வாய் மூலம் வெளி வரும் தானே ..அல்லது சீறி (blow your nose ) விடலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.