இதை போலவே எனது சிந்திப்பும்.
இப்பொது ஓர் பூரண யுத்தமாக (total war) மாறிவிட்டது - அதாவது பொருளாதாரம், அரசியல், பலம், வளம் , பூகோள செல்வாக்கு, இலட்சிய கோட்பாடுகள் (சனநாயகம், தாராளவாதம், அனல் அவை வெளிப்போர்வையாக போர்வையாக பாவிக்கப்படுகிறது) போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய யுத்தமாக.
டிரம்ப் விட விரும்பினாலும், deep state, trump ஐ விடாது (என்றே சிந்திக்கிறேன்) நேட்டோ, உக்கிரைன், தைவான் போன்ற விடயங்களில், வெளிநாட்டு விடயங்களில், யுத்தத்தை தவிர, அமெரிக்கா அதிபருக்கு ஏறத்தாழ ஏகபோக அதிகாரம் இருந்தாலும்.
ஏனெனில் விட்டால், இதன் பாதிப்பு அமெரிக்கா மேலாண்மையை ஆகக்குறைந்தது தோற்றத்தையாவது பகுதியாக துடைத்து எறியும். அனால் அதை தக்க வைப்பதே அமெரிக்காவின் கேந்திர இலக்கு.
மற்றது, பெரும்பாலும் அமெரிக்கா hedge funds உக்கிரனுக்குள் கொட்டி இருக்கும் பணம்.
ருஷ்யா பிடித்த பகுதியே உக்கிரைன் இன் ஏறத்தாழ முழு இயற்கை வளம் உள்ள பகுதி.
மற்றது, ருசியா சொல்லும் நிபந்தனைகள்.
கூட்டி கழித்து பார்க்கும் போது, trump இதில் கட்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.