Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    87990
    Posts
  2. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    5418
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46783
    Posts
  4. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    12678
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/16/24 in Posts

  1. உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில் இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல. துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை. எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change) அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும் புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து.
  2. உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣
  3. அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். சிங்கள யூடியூப் காணொலிகளில் சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம் ,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள். இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்? இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.
  4. என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!! என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு.
  5. மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று.
  6. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @Kandiah57, @vasee, @vaasi, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @sinnakuddy thasan, @kayshan அன்பான யாழ்.கள உறவுகளே... மீண்டும் ஒரு தேர்தலில், வாக்களிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலே உள்ள தலைப்பின் கேள்விக்கு... ஆம் அல்லது இல்லை என வாக்களித்தால் போதுமானது. வழமை போல் இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே சொல்லாதவரை, எதற்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.
  7. தனிமனிதன்…. சுமந்திரன் ஒருவரை நம்பித்தான் 75 வருட பாரம்பரியம் உள்ள தமிழரசு கட்சியே உள்ள மாதிரி இங்கே கருத்து வைக்கப் படுகின்றவர்களின் நோக்கம்.... மக்களால் தோல்வி அடையச் செய்த ஒருவரை, மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதற்கான சதி வேலை என்றே கருத வேண்டி உள்ளது. சுமந்திரனை மீண்டும் பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால்…. 75 வருட கால தமிழரசு கட்சியே காணாமல் போய் விடும் என்பதை மறவாதீர்கள். மக்கள் தீர்ப்பை மதியுங்கள். அவர்கள் மேல், உங்களின் தனிப்பட்ட சுயநல ஆசைகளை திணிக்காதீர்கள். இனி…. உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் வர இருக்கின்றன. தமிழரசு கட்சிக்கு… ஒரு புதிய ஊடகப் பேச்சாளாரை நியமித்து, சுமந்திரனை அப்புறப் படுத்துங்கள். சுமந்திரனின் மூஞ்சையை பார்த்தாலே மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்கு போட்டு விட்டு போய் விடுவார்கள். அந்தளவு கோபத்தை சுமந்திரன், தனது தான் தோன்றித்தனமான செயல்களால் தமிழ் மக்களிடம் சம்பாதித்து வைத்துள்ளார்.
  8. வினா இலக்கங்கள் 11,17,22 11 ) 24 போட்டியாளர்கள் காண்டீபன் வெற்றி பெறமாட்டார் என்று சரியாக கணித்திருக்கிறார்கள் 17) 23 போட்டியாளர்கள் சிவாஜிலிங்கம். அவர்கள் வெற்றி பெறமாட்டார் என்று கணித்திருக்கிறார்கள் 22) 25 போட்டியாளர்கள் கருணா வெற்றி பெறமாட்டார் என கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 29 புள்ளிகள் 2)கந்தையா 57 - 24 புள்ளிகள் 3)தமிழ்சிறி -24 புள்ளிகள் 4)வீரப்பையன் - 24புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ் தேசியன் - 24 புள்ளிகள் 6)நிலாமதி - 24 புள்ளிகள் 7)Alvayan - 23 புள்ளிகள் 😎 வாதவூரான் - 23 புள்ளிகள் 9) வாலி - 23 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 21 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் 12)வில்லவன் - 21 புள்ளிகள் 13)நிழலி - 21 புள்ளிகள் 14)ரசோதரன் - 21 புள்ளிகள் 15)கிருபன் - 19 புள்ளிகள் 16)goshan_che - 19 புள்ளிகள் 17)நுணாவிலான் - 19 புள்ளிகள் 18)வாத்தியார் - 18 புள்ளிகள் 19)சசிவர்ணம் - 18 புள்ளிகள் 20)புலவர் - 17 புள்ளிகள் 21)சுவி - 16 புள்ளிகள் 22) புத்தன் - 15 புள்ளிகள் 23) அகத்தியன் - 13 புள்ளிகள் 24) குமாரசாமி - 13 புள்ளிகள் 25) வசி - 8 புள்ளிகள் 26) தமிழன்பன் - 5 புள்ளிகள் இதுவரை 4, 7, 11, 17, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 48)
  9. மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
  10. பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் , எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது " பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் " எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!
  11. தமிழ் பிரதிநிகள் குறையவில்லை. புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் 4 தமிழ் பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படுள்ளார்கள். முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டதில் தமிழ் பெண்ணான சரோஜா பால்ராஜ் 148 000 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
  12. இதை ப‌ற்றி தான் என‌து சிறு வ‌ய‌து பாட‌சாலை தோழ‌னுட‌ன் க‌தைச்சிட்டு இருந்தேன் எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிகளை ப‌டு ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைச்சான் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் சொகுசு வாழ்க்கைக்கு ம‌க்க‌ளுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் இவைக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்டி இருக்கின‌ம் என்று இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் முற்றிலும் மாறி விட்டின‌ம் அண்ணா.................. அனுரா சொன்ன‌தை எல்லாம் செய்தால் அனுரா இனி வ‌ரும் தேர்த‌லில் பிர‌ச்சார‌த்துக்கு யாழ்ப்பாண‌ம் வ‌ராம‌லே வெல்வார் அண்ணா................... 2009க்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோக‌ங்க‌ளை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சில‌ர் க‌ருத்தை முன் வைத்தால் எம்ம‌வ‌ர்க‌ளே வெளிப்ப‌டையா எழுதுகின‌ம் எங்க‌டைய‌ல் செய்யாத‌ துரோக‌த்தையா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அனுரா செய்து விட்டார் என்று அவ‌ர்க‌ள் சொல்வ‌து ஒரு வித‌த்தில் ச‌ரி தான் இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று க‌ட‌சி நேர‌ம் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ங்க‌ள் இதோ துவார‌கா வ‌ருகிறா அருணா நேரில் சென்று த‌ன‌து த‌ங்கையுட‌ன் சாப்பிட்ட‌து என்று எவ‌ள‌வு அவ‌தூறுக‌ள் 2009க‌ளில் எம்மை எம்ம‌வ‌ர்க‌ள் ஏமாற்றின‌ மாதிரி வேற்று இன‌த்த‌வ‌ன் ஏமாற்ற‌ வில்லை அண்ணா🙏..................................
  13. இயலாமை, கோபத்தின் விளைவினால் நிதானம் இழக்கப்படுகிறது. ஆனாலும் தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு உங்களுக்கும் சுவைப்பிரியனுக்கும் நன்றிகள்.
  14. இது தவறான கட்டுரை. எமக்கு எது தேவையோ அத்துடன் நிறுத்த தெரிந்தால் முடிந்தால் அனைத்தும் நன்மைக்கே. உலகம் சுருங்கி நம் கைகளுக்குள் வந்து விட்டது. ஆனால் நாம் தான் அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் அதை குறை கூற முயல்கிறோம்.
  15. இங்கு சில யாழ்கள உறவுகள் எவளவு முடியுமோ அவளவு நாகரீகமாக தாயக மக்களின் விடிவுக்காக கருத்தாடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமது மக்கள் எவளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று தான் தோன்றுது.😑
  16. புது அரசு இயங்கட்டும் பார்ப்போம் ஊழல்வாதியா..பொட்டி வாங்குவது ஊழல் இல்லையா...வாகனம் பெறுவது ஊழல் இல்லையா.. புதிய அரசி தேசியப் பட்டியலை..பார்த்தாலே தெரியும் ..அவர்கல் நோக்கம் .. முழுக்க பல்கல விவுரையாளாரும்,பெரும் அறிவாளிகளும்..அனைவரு ம் ஜே.வி.பி அங்கத்தினர்..இவர்களிடமிருந்து ..எமக்கான தீர்வு வரும் என்பது ..கல்லில் நார் உரிப்பதுபோலத்தான்..இதுகிள்ளை சுமருக்கு குஞ்சரம் கட்டி ..அவராகவே கட்டுவார்...பார்லிமென்ட் போய் பீலா விடுவதெல்லாம் ..முடியாதவொன்று...தேவையென்றால் ஆது சிறீயரை வெருட்டத்தான் உதவும்.. அனுரா தீர்வு என்பது..21ம்திகதி கொள்கைப் பிரகடனத்தில் வெளிச்சமாகும்.. அவரின் பவுத்த மேலாதிக்கம் மாவீரர்நாளில் வெளிக்கும் ..அரசியல் கைதிகள் முடிவில் வெட்ட வெளிச்சமாகும் யாழில் வரும் கருத்துக்களையும்,சுமந்திரன் ஆதரவையும் பார்க்கும் போது தீர்வுப்பொதி எங்கடை கையில் இருக்குது..நாங்கள்தான் பிரிக்க கஸ்டப்படுவது மாதிரி இருக்கு.. பொறுமை வேண்டும்..
  17. சுமத்திரனை எம்பி ஆக்குவதற்கு முரட்டு முட்டுக் கொடுக்கிறீர்கள். அந்தாளே தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருக்குது. அவரது குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் இன்னும் அவரை அரசியலுக்குள் கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சித் தலைவர் தொடர்பாக தன்னையும் ஒரு எதிராளியாக வைதத்து தனது ஆதரவாளர்களைக் கொண்டு சுமத்திரன் போட்டவழக்குப் போல் சுமத்திரனின் கைங்கரியம் ஆகவும் ஈரகு;கலாம். மக்கள் தூக்கி வீசி விட்டார்கள். தமிழினத்தில் நிறைய சட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். சுமத்திரன் வந்துதான் சட்ட ஆலோசனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சுமத்திரன் அரசியலுக்குள் வந்தததால் அவர்பெரிய சட்ட அறிஞர் போல அவரது சொம்புகள் கொண்டாடுகிறார்கள். சுமத்திரன் தேவையில்லாத ஆணி!மக்களே புடுங்கி எறிந்து விட்டார்கள். தேசியத்தலைவர் அன்ரன் பாலசிங்கத்தை சட்ட ஆலோசகராக வைத்தருந்த மாதிரி சிறிதரனும் ஒரு சட்ட விரிவுரையாளரை தனது சட்ட ஆலோசகராக வைத்திருக்கலாம். சுமத்திரன்தான் வந்து கம்பு சுத்த வேணு;டும் என்ற கட்டாயமல்லை. சுடகை;கு கொண்டு போன பிணத்தை திரும்ப வீட்டுக்குள் கொண்டு வரமுடியாது.
  18. சும் ஏற்கனவே கட்சியில் தனது தலைக்கு ஆபத்து வரக்கூடியவர்களை எல்லாம் களை பிடுங்கியது மட்டுமல்லாது தனது அல்லக்கைகளை கட்சியின் பொறுப்பான பதவிகளிலும் இருத்தி / அடிமையாக்கி உள்ளார். விடுதலைப் புலிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்து இன்று தமிழரசு கட்சியையும் குழி தோண்டி புதைத்துள்ளார் சும். அத்துடன் பிரதேச சபை மாநகர சபை என்ற வட்டத்தில் இருந்தவர்களை மாகாண சபையையும் தாண்டி பாராளுமன்ற தேர்தலுக்குள் காலடி எடுத்து வைக்கச் சந்தர்ப்பம் சும்மின் அடாவடியினால் ஏற்பட்டது / ஏற்படுத்தப்பட்டது. இது இன்று சும்மிற்கே வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டியுள்ளது. கூடவே தேர்தல் முடிவும் ஒன்றை சொல்லாமல் சொல்லி உள்ளது. அடைக்கலநாதன் தவிர்த்து முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இது படிப்படியாக மக்களை வேறு பக்கம் திசை திருப்புகிறதா? இங்கு நவம்பர் 11 just a Remembrance Day என்பது போல் எமது போராட்டமும் மறைக்கப்படுமா என யோசிக்க வைக்கின்றது. மாறாக சிங்கள மக்கள் முன்னாள் போராளிகளை அல்லது அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தி உள்ளனர்.
  19. யாரவது கப்பிதனின் பீத்தல் கோவணத்தை கண்டால் எடுத்துக் கொடுங்கள். தன்னுடைய பீத்தல் கோவணம் யாழ் தமிழ் மக்களால் உருவப்பட்டுள்ளது என்று கூட புரியாமல் உளறுகிறார்.
  20. இன்றைய உலக அரசியலில் ஊடக விளம்பரம் மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு பேஸ்புக்,யூரியுப்,டிவிட்டர் போன்ற வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.அமெரிக்க தேர்தலிலும் பொது வலைத்தளங்களே முக்கிய பங்கு வகித்தது.😎 இதெல்லாம் பூமர் அங்கிள்மாருக்கு தெரிய/விளங்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு.☹️ எப்பபாத்தாலும் வீரகேசரி,,தினகரன் தினபதி சிந்தாமணி பேப்பர் எண்டு அலையிறவைக்கு என்னத்த சொல்லேலும்.😂
  21. இவற்றில் எதையும் தருவேன் என்று அனுரா சொல்லவில்லை, தரமாட்டேன் என்று உறுதியளிக்கவுமில்லை. இதை தாருங்கள் அதை கைவிடுகிறோமென மக்கள் கூறவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. இலங்கை முழுக்க உள்ள எத்தனையோபேர் எச்சரித்திருந்தும் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராவை நம்பி தெரிந்தெடுத்தார்கள். அவர்களின் வேணவா அனுராவுக்கு புரியும், தன்னாலியன்றதை முயற்சித்து செய்வார். முன் இருந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ சொன்னார்கள், செய்தார்களா? சொல்பவர் செய்வதில்லை செய்பவர் சொல்வதில்லை. பொறுத்திருங்கள், மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள். இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்! இன்னொரு சிங்களவர்தானே, அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள். அனுராவை தெரிந்தபோதும் வசை பாடுகிறீர்கள். இதைத்தான் மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.
  22. 13 ஆம் திருத்தச் சட்டம் குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருடனான சந்திப்பொன்றில் பேசும்போது 13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தனது ஆதரவு இருக்கும் என்று அநுர‌ கூறியிருந்தார். ஆனால், அநுரவின் இந்தக் கூற்றினை அவரே மறுதலிக்குமாற்போல் அவரது யாழ்ப்பாணக் கூட்டத்தின் உரை அமைந்திருந்தது. "13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என்று பொய்கூறிக்கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்டு நான் வரவில்லை" என்று அவர் யாழ்ப்பாணத்தில் கூறினார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே செய்யப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாணசபை அடிப்படையிலான தீர்விற்கான ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கப்போதுமான‌து அல்ல என்று நிராகரித்திருந்த அதேவேளை, சிங்களவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக நாடு பிளவுபடும் என்று அதனை எதிர்த்து வந்தார்கள். 1987 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து அநுர தலைமை தாங்கிவரும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அது மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கெதிராக நடத்திய இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் 80 களின் இறுதிப்பகுதியில் நடத்தப்பட்ட இரத்தக்களறி நிறைந்த ஆயுதக் கிளர்ச்சி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை எதிர்த்தே நடத்தப்பட்டது. 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை எதிர்த்தே பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் பலியிடப்பட்ட கிளர்ச்சியை அது நடத்தியிருந்தது. "ஒரு அரசியட் கட்சியாக, சில தசாப்த்தங்களுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம், அது அமுல்ப்படுத்தப்படுவதைக் கடுமையாக‌ எதிர்க்கிறோம். இலங்கையின் இறையாண்மையினைப் பாதுகாப்பதே எமது மிக முக்கிய கரிசணை என்பதோடு, அதனை அடைந்துகொள்வதற்காக எத்தனை உயிர்களைத் தியாகம் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம்" என்று அக்கட்சியின் முக்கிய பிரமுகர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். "இதுதொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை. இந்த நாட்டின் அரசியல்ச் சரித்திரத்தில் எமது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் எமது இலட்சியத்தின் மேல் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு எப்போதும் ஒரேமாதிரியாகவே இருந்து வருகிறது, இனிமேலும் அது அப்படியே இருக்கும் என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதுதொடர்பாக எமது கட்சியின் உறுதிப்பாடு எப்போதுமே மாறதென்பதை எமது நாட்டு மக்கள் நிச்சயமாக நம்பலாம்" என்று அவர் மேலும் கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு தி ஐலண்ட் எனும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், சமஷ்ட்டி அடிப்படையிலான எந்தத் தீர்வையும் தமது கட்சி எதிர்க்கும் என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் அவர் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறார். "இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக எழுந்தமானமாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரித்துப்போட்டதே எமது கட்சிதான். வடக்குக் கிழக்கு மாகாணஙகளைப் பிரிப்பதற்கு எமது கட்சி மூன்று வழக்குகளைப் பதிவுசெய்து போராடியது" என்றும் அவர் நினவுகூர்ந்தார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனித்தனியே வட மாகாணம் என்றும் கிழக்கு மாகாணம் என்றும் நிரந்தரமாகவே பிரித்துப் போட்டது. இத்தீர்ப்பு வெளியானபோது நீதிமன்ற முன்றலில் கூடியிருந்த மக்கள் விடுதலை முன்னணியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பெருத்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 2010 ஆம் ஆண்டு அநுர குமார திசாநாயக்க பேசும்போது, "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு அரசியலமைப்பினூடாக எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தமது கட்சி எதிர்க்கும்" என்று கூறியிருந்தார். அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திலும் "இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் பாதுகாப்பதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை" என்று மீளவும் ஆணித்தரமாகக் கூறியிருந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
  23. கிழக்கு மீண்டும் தன்னை யார் என நிரூபித்து காட்டி இருக்கின்றது. மீண்டுமொரு தோல்வி யாழ்ப்பாண அரசியல்வாதிகளுக்கு மட்டுமே. தமிழர்களுக்கு அல்ல.
  24. ஒரு விடயம் சொல்ல வேண்டும். இங்கே அருச்சுனாவின் லூசு கதைகளால் அவர் எம் பி யாக பொருத்தம் இல்லை என நக்கல் அடிக்கும் @கிருபன்@நிழலி க்கு தெரியுமோ தெரியாது….. அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை). இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.
  25. கட்டாயம் அவர் தான் தேசியப்பட்டியல் மூலம் செல்வார் அவருடைய கட்சி தான் இந்த முடிவை எடுக்கும். ஆனாலும் அந்தக் கட்சிக்காரர்கள் அல்லது முடிவை எடுத்தவர்கள் யார் என்று மட்டும் கேட்கக்கூடாது அப்படிக் கேட்டால் சுமிக்கு கேட்ட கோபம் வரும்
  26. பிறகு என்ன கோதாரிக்கு நீங்கள் வாழவேணும்? சும்மா உலகத்துக்கு பாரமாய் இருந்து கொண்டு......🤣
  27. என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு
  28. மிக்க நன்றி அல்வாயன். மிக்க நன்றி சுவி ஐயா. சரியாகவே சொல்லியிருக்கின்றீர்கள்............... கழிவிரக்கம் என்னும் சொல்லுக்கு அகராதிகளில் வேறு என்ன என்ன சொற்கள் இருக்கின்றன என்று தேடிய பின்னே, பரிதாபப்படுகின்றேன் என்ற சொல்லை தெரிந்தெடுத்தேன், சுவி ஐயா............👍. அது மிகக் கொடியதே, அதனால் அதை இயன்றவரை தவிர்ப்பதே நலம் என்ற ஒரு எண்ணம் முளை விடக் கூடும் என்றே நினைத்தேன்.......................
  29. கவிதை நன்று . .......ஆனால் விதை கொஞ்சம் டல்லடிக்குது . .........கழிவிரக்கம் என்பது கொடிய நோய் . .....அதாவது தன்னைத்தானே பார்த்து பச்சாதாபப் படுவது பரிதாபப் படுவது . ......! 😴
  30. தனி ஆளுமையுடன் பிறந்த உயிர் ஒன்று ஏதோ ஓர் அங்கீகாரம் விரும்பி அல்லது அகங்காரம் கொண்டு பொது ஆளுமை ஒன்றைச் சூடி முகத்தை மறைத்து முடிகின்றதே என்று. வேதனையில் வெம்புவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்...ஆழமான கருத்தாழம்...தொடருங்கள்
  31. படிப்படியாக எல்லோரும் ஆளாளுக்கு சிறிது சிறிதாக பெரும் குழியை வெட்டிவிட்டு வெள்ளம் வந்தது அலை வந்தது என்று புலம்பி என்ன பயன்??? இப்பவும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை.
  32. யாழ் களத்தில் இ‌வ்வளவு ஆதரவில்லை. கேள்வி போவாரா மாட்டாரா என்பது தான் . என்ன தகிடுதத்தம் செய்தும் போவார் என்பது தான் என் நிலைப்பாடு
  33. இன்னொரு வாய்ச்சொல் வீரர். மனோ தோற்பார் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் தோற்றதால் எனக்கு கவலையுமில்லை.
  34. 1. புலம்பெயர்ந்தவர்கள் யாரின் பின் நின்றார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை. 2. தாயகத்தில் தமிழ் தேசியமே இல்லை என்று வாதிட்ட தாங்கள் இன்று வியாபார தமிழ் தேசியம் என்று குத்துக் கரணம் அடித்துள்ளீர்கள். 3. இங்கு குறூசோ என்பவர் தான் கிறீஸ்தவன் ஆதலால் கிறீஸ்தவரனா சுமந்திரனை ஆதரிக்கிறேன் என்னைப் போலவே எல்லா கிறீஸ்தவர்களும் ஆதரிப்பார்கள் என எழுதியிருந்தார். இன்று 20,000 தன்மான கிறீஸ்தவர்கள் கூட சும்மின் பின்னால் இல்லை. 4. நல்லூருக்கு காவடி எடுப்பது சைவர்கள் சம்பந்தப்பட்டது அதற்குள் மூக்கை நுழைக்காது இருப்பது நல்லது.
  35. வினா இலக்கம் 10, 13, 18 10)26 போட்டியாளர்கள் ஐங்கரநேசன் அவர்கள் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என்று சரியாக கணித்திருக்கிறார்கள் 13) எல்லாப்போட்டியாளர்களும் சரவணபவான் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என்று சரியாக கணித்திருக்கிறார்கள் 18) 21 போட்டியாளர்கள் மயூரன் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என்றுசரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 32 புள்ளிகள் 2)வீரப்பையன் - 28 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ் தேசியன் - 28 புள்ளிகள் 4) கந்தையா 57 - 27 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 27 புள்ளிகள் 6) Alvayan - 27 புள்ளிகள் 7) வாதவூரான் - 27 புள்ளிகள் 😎 வாலி - 27 புள்ளிகள் 9) நிலாமதி - 26 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 25 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 25 புள்ளிகள் 12)வில்லவன் - 25 புள்ளிகள் 13)நிழலி - 25 புள்ளிகள் 14)ரசோதரன் - 25 புள்ளிகள் 15)கிருபன் - 23 புள்ளிகள் 16)goshan_che - 23 புள்ளிகள் 17)நுணாவிலான் - 23 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 22 புள்ளிகள் 19)வாத்தியார் - 21 புள்ளிகள் 20)புலவர் - 21 புள்ளிகள் 21)சுவி - 19 புள்ளிகள் 22) புத்தன் - 19 புள்ளிகள் 23) அகத்தியன் - 17 புள்ளிகள் 24) குமாரசாமி - 17 புள்ளிகள் 25) வசி - 11 புள்ளிகள் 26) தமிழன்பன் - 9 புள்ளிகள் இதுவரை 1, 4, 7, 10, 11, 13, 17, 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 52)
  36. சுமந்திரனின் அறிவிப்பின்படி ௨௦௧௫-௨௦௧௯ ம் ஆண்டில் நல்லாட்சி செய்த சட்டவரைபை பூர்த்தி செய்வேனென அனுரா தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதாக கூறுகிறார். அப்படியானால் சுமந்திரன் ஏற்கெனவே பலதடவை, தான் நல்லாட்சி அரசாங்கத்துடன் தீர்வை வரைந்து விட்டதாகவும் நிறைவேற்றுவதே பாக்கி என்றும் அறிவித்திருந்தார். அதை நிறைவேறுவதற்கு இவர் ஏன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்? அதுதான் வரைந்தாயிற்றே. இவர்சொல்வதுபோல் வரைந்ததை நிறைவேற்றுவது ஜனாதிபதியின், பாராளுமன்றத்தின் வேலை. அதை நிறைவேற்ற ஆரம்பிக்கும்போதுதான் வெளிவரும் இவர் என்ன சட்டம் வரைந்தார் என்கிற உண்மை. "ஏக்கய ராஜ்ய" இவர் சொல்கிறார் ஒன்றுபட்ட அரசு. அதற்கு சரியான சிங்கள வார்த்தை இல்லை, அதனாலேயே ஏக்கய என குறிப்பிடுவதாக. ஆனால் ஏக்கய என்பது ஒற்றை ஆட்சி என்று சிலர் விளக்குகிறார்கள். அது இருக்கட்டும்.... இவர் இன்னும் காலாவதியான பேச்சாளர் பதவியை விடுவதாக இல்லை. இவர் மட்டும் தேர்தலில் வென்றிருந்தால் இங்கு ஒரு களம் ஆகியிருக்கும், மற்றைய கட்சிகளை சீண்டியிருந்திருப்பார் சுமந்திரன். மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை நேசிக்கிறார்கள், ஆனால் சுமந்திரனை வெறுக்கிறார்கள். அதை சுமந்திரன் உணரவேண்டும். தோற்ற மாவை பதவி விலகவேண்டும் அன்று கூவியவர் இன்று அதை தான் செய்திருக்க வேண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது. ஏதோ தமிழரசுக்கட்சி தன்னிற் தான் தாங்கி நிற்பதுபோல் கதையளக்கிறார். இவர் தேர்தலுக்கு முன் அறிவித்தது போல் பாராளுமன்றம் செல்லக்கூடாது. எப்படியும் மூச்சுக்கு முன்னூறு தடவை நானே சட்டவரைபை அவர்களோடு சேர்ந்து இயற்றியதாக பிதற்றுகிறாரே, அது என்ன சட்ட வரைபு என்பது தெரிய வரும். மதுபான சாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை அறிவிப்பதாக சொன்னார்கள் அறிவிக்கவில்லை என்று கூறுகிறார். அனுரா வெளியிட்டிருக்கக்கூடும், இவர் போய் கேட்டது தேர்தல் காழ்புணற்சியினால் மற்றைய வேடபாளர்களை அவமதிக்கக்கூடுமென நினைத்திருக்கலாம். சுமந்திரனின் வாயை எல்லோருமாறிவர். இவர் வைத்த குற்றச்சாட்டுக்கு மேற்தானே மக்கள் சிறிதரனை தெரிந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் பாருங்கோ மனிதன் கூச்ச நாச்சமில்லாமல் சாதாரணமாக வெற்றி பற்றி கட்சி பற்றி விளக்குகிறார். சொல்வார்கள், "துரோகிக்கு வெட்கம், ரோசம், மானம், எல்லாம் கிடையாதென. அதை நேரடியாக காண்கிறேன் நலன் விரும்பிகள் அவரைச்சுற்றி எழுப்பிய விம்பம் அது. ஆனால் சுமந்திரன் தன்னைவிட வேறு யாரையும் சட்டத்தரணி என்று ஏற்கவும் மாட்டார், செயலாற்றவும் விடமாட்டார். உதாரணம்; விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டியது, தவராசாவை பின்தள்ளியது அவரது பயம் தன்னை இவர்கள் விஞ்சி விடுவார்கள் என்பதே. "நிறைகுடம் தளம்பாது, குறைகுடம் எப்போதும் தளம்பிகொட்டிக்கொண்டே இருக்கும்." "ஆலையில்லா ஊருக்கு, இலுப்பம்பூ சக்கரையாம்."
  37. போகிற போக்கில் தமிழ்நாட்டு அரசியலை நாங்கள் மிஞ்சி விடுவோம்.
  38. வாட்ஸப்பில் இருந்து.. சுமந்திரனுக்கு எதிரான மக்களின் ஆணை தெளிவானது. அவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதித்துவ அரசியலுக்கு அவசியமில்லாதவர் என்ற தீர்ப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை தலை வணக்கி ஏற்பதுதான் அறமுள்ள அரசியல்வாதியாக அவர் செய்ய வேண்டியது. தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பிலான உரையாடல்களில் தன்னுடைய பெயர் வருவதை அவர் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேர்தலொன்றில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட ஒருவர், தேசியப் பட்டியலைக் கோருவது ஜனநாயக முரண் என்று தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்ற சுமந்திரன், அந்த வாதம் தனக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசியப் பட்டியலுக்காக இளைஞர்- குறிப்பாக ஆற்றலுள்ள பெண் ஒருவரை நியமித்து, பெண் பிரதிநிதித்துவத்தை காப்பதுதான், தமிழரசுக் கட்சி முன்னுள்ள மிகப்பெரும் கடப்பாடு. அந்தக் கடப்பாட்டினை உறுதி செய்வதில் மத்திய குழு, அரசியல் குழு மற்றும் நியமனக்குழு உறுப்பினராக சுமந்திரன் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும். சுமந்திரன் பிரதிநிதித்துவ அரசியலில் ஆளுமை செலுத்தாத தமிழ்த் தேசிய அரசியல் களம், புதிய பரீட்சார்த்தங்கள் பக்கத்துக்கு நகர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் களம் இனியாவது, அதனைக் கடந்து பரந்துபட்ட பார்வை - செயற்பாட்டுத் தளத்துக்குள் செல்ல வேண்டும். சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் சுமந்திரன்... நீங்கள் கடந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக ஓடிக் களைத்து விட்டீர்கள். எல்லாமும் உங்களைச் சுற்றியும் இயங்கி விட்டது. அந்த இயக்கத்துக்கும் ஓர் இடைவெளி அவசியம். Purujoththaman Thangamayl Copied from FB
  39. இன்று அம்மணமாக நிற்பது சும். கோசான் வாக்கு போட்ட மக்களை முட்டாள்கள் என்கிறீர்களா? சிறியர் மீதான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் சாணியில் மொங்கி முகத்தில் குத்தியிருக்கிறார்கள் உங்களின் பொய்கள் எம்மிடம் பலிக்காது என.
  40. இந்த விடயம் வெளியே அரசியல் ரீதியாக வெளியே தெரியமாட்டாது என நான் நினைத்திருந்தேன். அப்படி பார்த்தால் நாங்கள் பழம்பெரும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியே இழுக்கவேண்டி வரும் கண்டியளோ 🤣
  41. இவ‌ரை ந‌ம்பி ஏமாந்த‌ உற‌வுக‌ளில் நானும் ஒருவ‌ன் இவ‌ருக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சிறித‌ர‌ன் எம்பி செய்த‌ ந‌ல்ல‌ விடைய‌ம் எது பாராள‌ம‌ன்ற‌த்தில் வீர‌ப்பேச்சு அதோட‌ ச‌ரி / குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்....................முன்னாள் போராளிக‌ள் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை கைவிட்ட‌ அர‌சிய‌ல் வாதி.....................புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் கை கொடுக்காம‌ விட்டு இருந்தால் ஈழ‌ ம‌ண்ணில் ப‌சி கொடுமையால் ப‌ல‌ உயிர்க‌ள் போய் இருக்கும் இவ‌ர்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைய‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் ம‌க்க‌ளுக்கு செய்தார்க‌ள் இன்னும் செய்வின‌ம் அதில் மாற்றுக் க‌ருத்தில்லை................... இந்த‌ உல‌கில் ஒன்றும் நிர‌ந்த‌ம் கிடையாது வாழும் போது ஈழ‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ளையும் நினைத்து வாழுவோம்..................................
  42. பாராளுமன்றம் போனால் மக்கள் மனதில் காணாமல் போய் விடுவார் பாராளுமன்றம் போகாமல் விட்டால் சுமந்திரனே காணாமல் போய் விடுவார்.
  43. அந்த ஈரவெங்காயமெல்லாம் அநுரவுக்கு தெரியும், நீங்கள் உங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை மட்டும் பார்த்தால் போதுமானது. ரணிலின் ஆட்சியில், ரணில்கூட விடுதலைபுலிகள் இறுதியுத்தம் பற்றி பேசியது குறைவு, பதவியிலிருந்த காலம் முழுவதும் இந்தியாவுக்குபோய் புலிகளை அழித்தோம் என்று பேசுவதும் இலங்கையிலிருக்கும்போது பயங்கரவாதத்தை ஒழித்தோம் என்று அடிக்கடி பேசுவதும், ஐநா பொறுப்புக்குறல், பயங்கரவாத தடைச்சட்டம் என்று பதவி துண்டுக்காக தமிழ் மக்களின் மனங்கள் பற்றி எந்த கவலையும் கொள்ளாது சிங்கள எஜமான விசுவாசத்துக்காக வன்மம் கக்கினார் மனிதன். அதே வாயால் ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றி அதிகம் பேசியதில்லை. இன்று தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்துவிடுவார்களோ தமது இடம் பறிபோய்விடுமோ என்ற என்ற ஒரு பயத்தில் தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொள்கிறார். இலங்கையின் வரலாற்றில் அன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் முடிவுவரை தமிழ்மக்களுக்காக இஸ்லாமிய சமூகம் கவலைப்பட்டதா வரலாறே இல்லை, மாறாக சிங்களவனுடன் சேர்ந்து பாற்சோறு சாப்பிடுவார்கள். அநுர நல்லது செய்கிறாரோ கெட்டது செய்கிறாரோ, இனிமேல் உங்கள் ஆலோசனைகள் அவருக்கு தேவைப்படாத அளவிற்கு பெரும்பான்மையிலிருக்கிறார். தமிழ்மக்கள் நல்லிணக்கம் எல்லாம் அநுரவுக்கு வாக்களித்த அவர்களுக்கும், வாக்கு பெற்ற அநுரவுக்குமான பிரச்சனை உங்களுக்கானதல்ல. எவரெல்லாம் இந்த தேர்தலின் முடிவில் தூக்கியெறிய்யப்படவேண்டுமென்று ஆசைப்பட்டோமோ அவர்களெல்லாம் ஏறக்குறைய 90% தூக்கி வெளியே வீசப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
  44. ஆம். என வாக்களித்துள்ளேன். எப்படியும் சுமந்திரன்... வழக்கமாக செய்வது போல், மத்திய குழுவை மிரட்டி.. (Black Mail பண்ணி) உள்ளே வந்து விடுவார் என நினைக்கின்றேன். 😂
  45. முதலில் யாழில் வெற்றிபெற்ற என்பிபி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! இனி வடக்கில் தமிழ்த் தேசியம் பேசுவதற்கு இடமில்லை. என்பிபி மக்களை இலகுவாக தம் வசப்படுத்திவிடுவார்கள். இப்போது தென்னிலங்கைக்கு வடக்கு மக்கள் பிரிவினையை விரும்பவில்லை என்ற செய்தியினை அவர்களால் சொல்லமுடியும். அதன் மூலமாக ஒற்றையாட்சிக்குள் ஏதவது அதிகாரபரவலாக்கல் திட்டம் எதுவும் முன்வைக்கப்பட்டால் சிங்கள மக்கள் எதிர்ப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். இப்போது சுமந்திரன் இல்லை பார் சிறிதரனும் கஜேயும் நாடாளுமன்றக் கதிரைகளைச் சூடேற்றி கண்டீனில் வடிவாகச் சாப்பிட்டுவிட்டு வரலாம். சுமந்திரன் இல்லையாதலால் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப்போராளிகள் இன்னொரு போராட்ட இலக்கு ஒன்றினைத் தேடவேண்டும். இனி புலம்பெயர் பட்டாசு கோஷ்டிகள் பாடு திண்டாட்டம்தான்!😂
  46. கஜேந்திர குமார் பொன்னம்பலம் யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவாகி உள்ளார். சட்ட அறிஞரான அவர் தெரிவு செய்யப்பட்டது நல்லது. வாழ்ததுக்கள். அநுர அரசு அரசியல் அமைப்பு மாற்றங்களை செய்யும் போது அதில் தனது சட்ட புலமைசார் உதவிகளை வழங்கி உருவாகப்போகும் அந்த அரசியலமைப்பு இன மத பேதங்களற்ற முறையில் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் அமைய தனது சட்ட உதவிகளை, பங்களிப்புக்களை வழங்க வேண்டும். அதை விடுத்து குதிரை கஜே, சுகாஸ் போன்ற களிமண் மண்டைகள், புலம் பெயர் தேசிக்காய் மாபியக்களின் பேச்சை கேட்டு ஒரு சயிக்கிள் இரு சில்லு என்ற வரட்டு நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகளை வைத்து குழப்பியடித்து அரசியலமைப்பு உருவாக்கதில் இருந்து பகிஷகரித்து அரசியல் சுத்துமாத்து விடக்கூடாது. ஏனென்றால் நாம் விரும்புகிறோமோ இல்லையோ உருவாகப்போகும் அரசியலமைப்பு தமிழ் மக்களின் வாழ்விலும் தாக்கம் செலுத்தும். புலம் பெயர் மாபியாகளும் தேசியம் பேசி இதுவரை உழைத்தது போதும். உழைத்த பணத்தை ஜாலியாக உங்கள் குடும்பத்துடன் அனுபவியுங்கள், பரவாயில்லை. ஆனால், இனியும் தாயகத்தில் குழப்பத்தை உருவாக்கி மேலும் உழைக்க முயற்சிக்காதீர்கள்.
  47. அதில் நான்கு பெண்கள் தமிழ் பெண்கள். வரட்டு தீவிர தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து இவ்வாறான நல்ல செயல்களை எதிர்பார்கக முடியாது.
  48. மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் தீர்வு தாறோம் என்று சொன்னார்களா? இல்லை சொன்னதை செய்தார்களா? அவர்கள் மேலெல்லாம் வராத வெறுப்பு ஏன் இவர் மீது மட்டும் கொட்டுகிறது? ஒரு கட்சியாக ஆரம்பித்து இன்று பல கட்சிகளாக பிரிந்து தென்னிலங்கை கட்சிகளையும் நுழைய வைத்திருக்கிறார்கள், மக்கள் மட்டும் ஒருமித்து வாக்களிக்க வேண்டுமோ? மக்களின் வாக்குகளை இவர்கள் கொண்டுபோய் தென்னிலங்கை கட்சிகளிடம் கொடுத்து தங்கள் சுயலாபம் தேடுகிறார்கள், அதை இப்போ மக்கள் தங்கள் வாங்குகளை தாங்களே கொடுத்து பேரம் பேசுகிறார்கள். அதை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் குறைகளை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தீர்த்து வைப்பேன் என்று அநுர கூறியிருக்கிறார். இதற்கு பூசாரி, தரகர் எல்லாம் எதற்கு?
  49. சரி இருவரையும் சொல்லி இருப்பார் என்று இப்போதைக்கு எடுத்துக்கொள்வோம் மீரா வரும்வரை. மீரா......! விரைந்து வந்து விளக்கம் தரவும். இல்லையேல், விபரம் தெரியாமல் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கப்போகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.