Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்13Points19122Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points87990Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்8Points1569Posts -
Kapithan
கருத்துக்கள உறவுகள்7Points9308Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/24/24 in all areas
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு இடத்தை பிடிக்கும் என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) பிரபா - 61 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 57 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) வில்லவன் - 52 புள்ளிகள் 6) வீரப்பையன் - 51 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 9) அல்வாயான் - 50 புள்ளிகள் 10)நிலாமதி - 50 புள்ளிகள் 11) goshan_che = 49 புள்ளிகள் 12) நிழலி - 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16)கிருபன் - 45 புள்ளிகள் 17) ரசோதரன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 50, 52 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 97)5 points
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார். யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். நினைவேந்தல் நிகழ்வு அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார் இதேவேளை தமிழின விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான கார்த்திகை 27ஆம் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/anura-govt-allowed-to-commemorate-maaveerar-naaal-1732445376#google_vignette3 points
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
ரஹ்மான் விஷயம் அவர்களாலேயே சமூக ஊடகங்களுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் முழுவதும் பல ஆயிரம் ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளான ஒரு செய்தியென்பதால் நாமும் ஒரு கருத்து சொல்லலாம் தப்பில்லை. சிகிச்சைக்காக மும்பை போகும் அவர் மனைவி எதுக்கு ட்விட்டரில் நான் ரஹ்மானை பிரிகிறேன் என்று பதிவு போடணும்? அதுக்கு அவர் எதுக்கு 30 வருடத்தை எட்டி தொடுவோம் என்று எதிர்பார்த்தோம் முடியவில்லை என்று பதிவு போடணும்? உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கணவன் குழந்தைகள் அனைவரையும் விட்டு சென்னையில் ஆஸ்பத்திரிகள் எதுவும் இல்லையென்று தனியே மும்பை ஓடுவார்களா சமூக ஊடகங்களில் இந்த ஐஞ்சுபத்து ரூபாய்க்கு விமர்சனம் பண்ணும் ஆய்வாளர்களால் ரஹ்மான் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமர்சிக்கப்பட்டார். அசிங்கப்படுத்தப்பட்டார். உங்களின் பிரிவுக்கு நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த தனிமையின் மன அழுத்தமே காரணம் என்று பல ஊடகங்கள் இப்போது பேச தொடங்கிவிட்டன, நான் நினைக்கிறேன் ரஹ்மான் மிக மோசமாக அசிங்கப்படுத்தப்படுவதை பார்த்து அவர் குழந்தைகள் தமது தாயிடம் வைத்த கோரிக்கையினால் இந்த ஒலிப்பதிவை அவர் ஊடகங்களூக்கு அனுப்பியிருக்கலாம். அதனால் ரஹ்மான் மனைவிக்கு இப்போது தேவைப்படுவது உடல்நல சிகிச்சையல்ல மனநல சிகிச்சை. எனக்கு தெரிந்து இத்தனை உலக புகழ் உச்சியில் மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலிருந்தும், எனக்குத்தான் இசை தெரியுமென்றோ அல்லது இசைபற்றி உனக்கு என்ன தெரியுமென்று பிறரை பார்த்து கேக்கும் அநாகரிக பழக்கம் கொண்டோ துளிகூட கர்வம் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாத ஒரேயொரு மனிதன் ரஹ்மானாகதான் இருக்க முடியும். பணம் புகழ் செல்வாக்கு என்று அத்தனையும் உச்சத்துக்கு மேலேயே இருந்தும் எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்க முடிகிறது என்று எப்போதும் அவர்மேல் ஒரு பிரமிப்பு உண்டு அதனாலேயே ரஹ்மான் எந்த தவறும் பண்ண மாட்டாதவர் என்று அர்த்தமல்ல, ஆனால் எந்தவித ஆதாரங்களுமின்றி சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி ஒரு மனிதன் பற்றி எதுவேணும் என்றாலும் சொல்லலாம் எனும் பாணியில் இப்போது சுமத்தப்படும் குற்றங்கள் மிகவும் கண்ணியக்குறைவானது. இவர்கள் செய்தி உலகறிஞ்ச விஷயமானாலும் இதுக்குமேல இதுபத்தி மேலதிகமாக ஒருவார்த்தை பேசுவது ரொம்ப மலினதனமானது , அதனால எஸ்கேப்.3 points
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர். " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். *ஆசிரியர் கூறினார்,* "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!3 points
-
தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன்.
வாங்கோ நிலாந்தன் , நீங்க முள்ளிவாய்க்காள் இறுதி நாளிலும் புலிகள் பதுங்குவது எதற்கு மிக பெரிய பாய்ச்சலுக்காகதான் என்று எழுதிய அந்த நிலாந்தனா? பழைய ஆய்வாளர்கள் எல்லாம் ஒருவர் ஒருவராக மறுபடியும் கிளம்புகிறார்கள். அது நிற்க உலக வரலாற்றில் கட்சி ஆரம்பிச்சு அடுத்த மாசமே பாராளுமன்றம் சென்ற முதல் ஆள் அர்ச்சுனாவாகதான் இருக்குமெண்டு நினைக்கிறேன். சத்தியபிரமாணம் செய்யும்போது இலங்கை,அரசியலமைப்பியும் ஒருமைப்பாட்டையும் தேசியம் தேசிய கொடி எல்லாம் ஏற்றுத்தானே பதவி பிரமாணம் செய்கிறீர்கள், பின்பு எப்படி புலிகள் பிரபாகரன் தெய்வமென்றெல்லாம் பாராளுமன்றத்துக்குள் நின்று பேசி திரிகிறீர்கள், நீங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகிறீர்களா சிங்கள மக்களை ஏமாற்றுகிறீர்களா? சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலை வெளிக்கொண்ணந்தமையினால் அர்ச்சுனா ஒரு நேர்மையான மனிதர் என்ற இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளாத சாவகச்சேரி மக்களால் அர்ச்சுனா பாராளுமன்றம் அனுப்பப்பட்டார், பாராளுமன்றத்துக்கு போன வேலைய பாக்காம , முன்பு வெளிநாட்டுக்கு புதுசா வந்தவர்கள் காருக்கு முன்னால் நின்று படம் எடுத்து அனுப்புறமாதிரி இப்படி நேரடி ஒளிபரப்பு வெட்டி வீர வசனம் என்று காமெடி பண்ணிக்கிட்டிருந்தா அர்ச்சுனாவை அகற்ற சிங்களவன் தேவையில்லை அதே சாவகச்சேரி மக்களே அடுத்த தேர்தலில் அகற்றுவார்கள். அர்ச்சுனாவின் ஓவர் அலட்டலால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டார், இன்னொரு அரச பதவியான மருத்துவர் பதவியில் இருந்து கொண்டு எம்பியாகவும் செயற்படுகிறார் என்று இதுவரை இரண்டுமூன்று முறைப்பாடுகள் சிஐடியில் பதிவு செய்யப்பட்டிருகின்றன, எதிர்காலத்தில் விசாரணை கோர்ட் எண்டுபோய் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அர்ச்சுனாவின் பதவி நீடிக்க அனுமதிக்கப்படுமா என்பது காலத்திற்கே வெளிச்சம். அப்படி ஒரு நிலமை வந்தா அதற்கு முழுகாரணம் ரஜனி ஸ்டைல்ல அர்ச்சுனா சும்மா பரபரப்பு அரசியல் செய்ய வெளிக்கிட்டதுதான்.3 points
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
2 pointsபார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம். தமிழரசு கட்சியின் ஒரே யாழ்ப்பாண எம்பி, தமிழரசு கட்சியின் தலைவர் எங்கே ஆள்? பார் லைசன்ஸ் கேசை அமுக்குவதில் பிசியோ? பார் சிறியை போல ஒண்டுக்கும் உதவா உதாவாக்கரை தலைவரை தமிழினம் இதுவரை கண்டதே இல்லை.2 points
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
மற்றவர்கள் டிசைனை மாற்ற வேணும் நாங்கள் மாற்ற மாட்டோம் ...இன்னும் "ஏ 40,சோமசெர்ட்"டிசைன்களில் தான் நிற்போம் கண்டியளோ டெஸ்லாவுக்கு மாற மாட்டோம்😅2 points
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
அவர் என்ன சொல்ல வருகின்றார் என்றால் கொட்டுகின்ற காசை தங்களிட்ட கொண்டு வந்து தரட்டாம்.2 points
-
நானும் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் - இந்தியாவில் ரணில்
அனுர தமிழர் பிரச்சனையை தீர்த்தால்??????? நரி மட்டுமல்ல ஹிந்தியனும் இலங்கையில் வாலாட்ட முடியாது.2 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ரகுமானின் டைவேர்ஸ் எனக்கு இந்த கதை நினைவுக்கு வந்தது . இந்தக் கதையை படித்துவிட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிக பொறுமையாக கதையை படித்து அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி! மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்தது. தனக்குரியவனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்' என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, "அப்பா... அழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவவேண்டும் அப்பா" என்றாள். 'மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனை தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே.. அது அதைவிட ''சந்தோஷம்' என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான். பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான். இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுங்கள்" என்றாள். பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான். தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலை குறிப்பிட்டான். அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆ லோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், "அப்படியே செய்கிறேன் குருவே!" என்றான். அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?" என்று கேட்டான். சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்... அரசே அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் அஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத் தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை" என்றார்கள். விபரத்தை குறித்துக்கொண்டான் மன்னன். மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, "உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக்கொண்டு சவாரி. செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்கமுடியும்” என்று அறிவித்தான். இந்த போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறு வயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள். ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு போட்டிக்கு ஒப்புக்கொண்டாள். குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்யவேண்டிய சிலவற்றை குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்யவேண்டியதை பற்றியும் விவரிக்கப்பட்டது.' மகளை நோக்கி, "போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்கவேண்டும்" என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சு கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு" என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு ஏற்பாடானது. முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையை சுற்றி சுற்றி வந்தான். குதிரையின் பிடரியை பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கிவிட்டான். இளவரசியின் கையை பற்றி அனைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு” என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான். "கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும்போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்கவேண்டும்.. இது தான் என்னோட பாலிஸி" என்றான் இளவரசியை பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு.. மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றி கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்யமுடியும்" என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது. நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றி கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது. உடனே எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும் என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்த குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்துவிட்டான். ஓவியத்தில் தன் அழகை பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தை பற்றி சொல்லப்பட்டது குதிரையை சுற்றி வந்து தடவிக்கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக்கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக்கொண்டு எழுந்தான். நேரே இளவரசியிடம் சென்று "வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். "வேண்டாம்... எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்...." “பரவாயில்லை... அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளிவிட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா.." என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக்கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு தெரிந்தவுடன், தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான். இளவரசி... "வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு... வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு" என்று அச்சத்தில் தயங்கினாள். "பயப்படாதே... நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்" என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சிதான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் "வீல்" என்று அலறிவிட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள். காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்றுவிட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள். அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி. "எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்துவிட்டாயா?" "அப்பா... எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்." என்றாள். என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றிபெறவில்லை. ஒவ்வொருவரும் "என்ன செய்யலாம்? நீயே சொல். "எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்துவிடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்". "சரியம்மா... உனக்கு பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்." என்றான். தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான். போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே... எப்படி தந்தை இவரை தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள். "என் முடிவை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா அம்மா?" என்றான் மகளை நோக்கிய அரசன். "இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்". அரசன் சொன்னான்... "முதலாவதாக வந்தவன் மிக சிறந்த குதிரையேற்ற வீரன் திறமைசாலி, ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் எதுவும் இல்லை". இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது." மூன்றாமவன் உன்னை சற்று களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும்போது கூட உனக்கு அந்த களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்துவிட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்! "நான்காம் நபர் மிக பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக் கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை." "ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளை புரிந்துகொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதை போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக்கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!" என்றார். “வாழ்க்கை துணை' என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே 'வாழ்க்கைத் துணை' என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர். புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கி கொண்டிருக்கிறார்கள் , அல்லது கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்கள்..2 points
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இங்கே பிரிந்த இருவருமே பாலியல் தொடர்புகள் இட்டு குறை ஏதும் சொல்லவில்லை. நாம்தான் புதியதாக எம் கற்பனை குதிரையை தட்டி விட்டு கதை புனைகிறோம். அவர்கள் இருவரும் சொன்னது - காதல் இருந்தும் தமக்குள் இட்டு நிரப்பமுடியாத இடைவெளி வந்து விட்டது என்பதை மட்டுமே. இது மிக இயல்பான காரணமாக எனக்கு தெரிகிறது. 29 வருடம் என்பது நீண்ட காலம் எனிலும், ஈர்ப்பு இல்லாத போது, கிடந்து ஏன் உழலுவான் என்று நினைத்துள்ளனர் போலும். நாம் வாழும் நாடுகளில், 50 வயது தாண்டிய எத்தனை பேர் நாட்டில் 6 மாதம், புலம்பெயர் நாட்டில் 6 மாதம் என இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மனைவிகள் பெரும்பாலும் புலம்பெயர் நாட்டில்தான் இருப்பார்கள். ஊரில் கூட பல உறவுகள், கணவன் முன் அறையில் தானே போட்டு சாப்பிடுவார், மனைவி வீட்டில் என்ற நிலையில் 80 களிலேயே நான் கண்டதுதான். இவையும் கூட அறிவிக்கப்படாத டிவோசுகள்தான். இப்படி சமூக ஓப்பனைக்காக இழுத்து கொண்டு போவதை விட, பிரிந்து வாழும் முடிவு அவர்களுக்கு பிடித்திருந்தால் அதை நாம் வரவேற்கவே முடியும். பிள்ளைகளும் நன்றாக வளர்ந்து விட்டார்கள். இருவருக்கும் இனிவரும் வாழ்க்கை மனம்போல அமைய வாழ்த்துக்கள்.2 points
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.1 point
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
என்ன சகோ பம்பாய்க்கு போனேன் விவாகரத்து கேட்கிறேன் என்றால் யாருக்கு காது குத்துதல்?? யார் கேட்டார்கள் இவர்களிடம் இந்த அறிக்கையை.? இங்கே இவர்கள் மிக மிக சுயநலமாக சிந்திக்கிறார்கள். பணம் பிரபலம் புகழ் கௌரவம் குடும்பம் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லாம் முன்னர் போல வேண்டும். ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை இருக்கவும் மாட்டோம். அப்படியானால் அவையும் பழையது போல் இருக்க வாய்ப்பில்லை. தனியே இருக்கும் ஒரு பிரபலம் பழைய மரியாதையை பெறமுடியாது. பம்பாய்க்கு போய் 15 நாளில் எடுத்த முடிவில் ரகுமானின் அந்த அப்பாவி முகம் கண்ணுக்குள் வரவில்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இனி எல்லா புகழும் கேள்விகளுக்குறியே? 1500 கோடி சொத்து என்பது இதற்கு மேலும் செய்யவைக்கும்.1 point
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
பணம்,புகழ்,செல்வாக்கு இந்த மூன்றும் சாதாரண மனித வாழ்க்கைக்கு உதவாதவை.அந்த மூன்றும் குடும்ப வாழ்வை நிம்மதியாக வைத்திருக்காது. கடுமையான நோய்களை தீர்க்காது. கஞ்சியை குடித்தாலும் நிம்மதியான வாழ்க்கை பொன்னானது. தம்பி வளவன்! நான் எழுதிய எழுத்துக்கள் உங்களுக்கானது அல்ல. பொதுவாக எழுதினேன்.🙏1 point
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
1 pointதங்கம்ஸ் பாராளுமன்றம் போற அளவுக்கு சனத்தை வெறுப்பேத்தினது ஆர் ஆக்கள்? கொஞ்ச நஞ்சமே எழுபது வருசம். 🙃 சும்மா பாராளுமன்றம் போய் திண்டுட்டு குடிச்சுப்போட்டு கிடந்திருக்கிறானுகள்...😡 அதில மாவை குஞ்சுக்கு இப்பவும் ஒரு சீட் வேணுமாம்....அடிங்....😂1 point
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
தங்கள் நாலு அறைக்குள் இருக்கும் பிரச்சனையை சர்வதேச பொது ஊடகங்களில் பகிர்வது. அதன் பின் நிலமை மோசமாக அவர் தங்கப்பவுண் இவர் தங்கப்பவுண் என உளறித்தள்ளுவது. 😂 ஒரு மனிதனுக்கு செய்யும் தொழிலில் அதிக ஈடுபாடு வந்து விட்டால் அது போதையை விட மோசமானது. அந்த போதைக்கு அது அதிக தனிமையை தேடும். இசைஞானி இளையராயாவின் குடும்பவாழ்க்கையை அவரின் பிள்ளைகளை கேட்டால் அவர்களே காறித்துப்புவார்கள். 😀1 point
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
1 point
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
1 pointஅவர் முற்றும் அறிந்த அப்புகாத்து படிச்ச காய்,அவருக்கு போய் நாங்கள் பாடம் எடுப்பதா ? சிறிலங்கன் பாடதிட்டத்தை உருவாக்கியவரே அவர் தானே...அவருக்கு போய் பாடம் எடு என நீங்கள் கேட்பது தேச துரோகம்..1 point
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
எதுவோ ஓடினால் சரிதான்...பொழைச்சுப் போகாட்டும்1 point
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
1 point
- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு
1 pointநன்றி ..அனைவருக்கும்...கனடாவில் உள்ள..சிங்கள அனுதாபிகளுக்கு இது ஒவ்வாதே... பார்ப்போம் எதிர்வை1 point- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் சீமான் ரஜனியைச் சந்தித்தது எனக்கு உடன்பாடில்லை என்பது.ரவீந்திரன் துரைச்சாமி ஒரு பாஜக இ ரஜனி ஆதரவாளர். நாம்தமிழரையும் விட்டுக்கொடுக்காமல் பேசிவருபவர். ஆனால் ரஜனியை அரசியல்ரீதியாக சீமானுடன் இணைக்க முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
கொழும்பு விஸ்ணு கோவிலில் சனத்ஜெயசூரியாவைக் கண்டேன். சாதாரணமாக வந்து வழிபட்டுவிட்டு சென்றார். ஐயரும் அவருடன சேர்ந்து போட்டோ எடுத்தார். மத நம்பிக்கைகள் தனிமனிதர்களைப் பொறுத்தது. அடிமை மனோ நிலை மதநம்பிக்கைகள் நடிப்புத்தான்.தங்கள் சிசுவாசத்தைக்காட்டுவதாகத்தான். இவர்களோடு ஒப்பிடுகையில் அர்ச்சுணா எதிர்க்கட்சித்தலைவரின் இருக்கையில் அமர்ந்து ரணகளப்படுத்தியது எவ்வளவோ மேல்.1 point- மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
வியாபாரிகளின் நிலைதான் கவலைக்கிடமாகப் போகின்றது…,..🤣1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்றுவரை இலங்கையில் இனவாதம் இருந்ததையும் அது தமிழர்களுக்கு தொடர்ந்தும் அடக்குமுறையை ஏற்படுத்தியது என்பதையும் தொடர்ச்சியாக கூறிவருகிறார்.1 point- வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
சரியான கேள்வி.1 point- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்! Nov 24, 2024 14:54PM IST ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து அறிவித்ததை தொடர்ந்து, அவரது மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் இன்று (நவம்பர் 24) விளக்கம் அளித்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளவர் இந்திய திரையுலகில் கோலோச்சுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், அதில் ஏ.ஆர். ரகுமானும் இணைந்தார். தனது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பி எச்சரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரகுமான் குறித்து சாய்ரா பானு வெளியிட்டுள்ள இன்று ஆடியோ வெளியிட்டுள்ளார். உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர்! அதில், “நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன்! கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக நான் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக தான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். ரகுமான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்! என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த மனிதர்” இவ்வாறு சாய்ரா பானு அதில் பேசியுள்ளார். https://minnambalam.com/cinema/why-did-she-break-up-with-a-r-rahman-saira-banu-explains/1 point- "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை"
"நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை" "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நீலவானின் கீழே! நீங்காத காதலென்று அவளும் நம்பி நீதியாய் நடப்பானென்று மகிழ்வில் மிதந்தாள்!" "அன்பு பேச்சில் மனத்தைத் தொலைத்து அச்சம் மடம் நாணம் மறந்து அன்னை ஈன்ற உடல் முழுவதையும் அழகு கொட்டிட அவனுக்கு கொடுத்தாள்!" "அமைதியான ஓடத்தில் ஆசைகளும் தீர அம்புலி தன்னை மேகத்தால் மறைக்க அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கோ போனான் அணங்கு அவளோ நீருடன் சங்கமித்தாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை"
நீரின்றி அமையாது உலகு எனும் வள்ளுவன் வரியில் இருந்து பிறந்த கவிதை நன்று. மழையை நீலக்கண்ணீர் என்பதும் இம்மழைக்காலத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. பிரிவின் வலியும் உணர்த்தப்படுகிறது.1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஆமாம் அண்ணா மாற்றத்தை நானே தொடக்குகிறேன். சம்பிரதாய பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் அதை நாமே செய்யவேண்டும் என்பது தான் எனது விருப்பம். இதன் மூலம் தமிழ் மற்றும் இனம் சார்ந்த சிலவற்றை நாம் தொடர்ந்து காப்பாற்றலாம் என்று நான் நினைக்கிறேன். மாற்றங்களை உள் வாங்காத மொழியும் இனமும் அழிந்து போகும். ஏன் ஐயர் என்றால் இப்போதைக்கு தாலி கட்ட அவர் தேவைப்படுகிறார். ஆனால் என் பூட்டன் கலியாணமே செய்யப்போவதில்லை. எனவே ஐயரும்......?1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நல்ல படிப்பினையாக உள்ள குறுங்கதை . .........! 😂 நன்றி பெருமாள் .......!1 point- கிறீன் டி
1 pointவிருந்தினருக்கு கிறீன் டி கொடுப்பதால் ஏற்படும் நன்மை 1) மிகவும் ஆரோக்கியம் பார்ப்பவர் என எண்ணுவார்கள் 2) பால் கலக்க தேவையில்லை (செலவு மிச்சம்) 3)அடுத்த தடவை வரவே மாடடார்கள் 😆 கணவரை அடிப்பதில் இந்தியாவில் பெண்களுக்கு மூன்றாம் இடம் (செய்தி ) ஏன்டா இதுவெல்லாம் சொல்கிறீங்க அடுத்த தடவை முதலாமிடம் எடுத்துவிடுவார்கள். 😄 படித்து சிரித்தவை1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மிகமிக அழகான பாடலுடன் வருகை தந்ததற்கு நன்றி நுணா ........! 💐1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
சாவகச்சேரி பிரதேசத்தில் இருக்கும் எனது உறவினர் ஒருவரின் காணியின் வாசலில் ஒரு பிரசித்திபெற்ற சைவக் கோவில் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் நான் அங்கு செல்லும்போது எனது உறவினர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவார். நான் நின்றபடியே வணங்கி, எனது நெற்றியில் சந்தணமிட்டு வருவேன். 'இதில் யாருக்கு என்ன பிரச்சனை?1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
தேர்தலுக்கு முன் சரளமாக ஆதவனுக்கு தமிழில் பேட்டி கொடுத்த சரோ அக்கா, பதவி ஏற்றதும் சிங்களத்தில்தான். அவரை குறை சொல்ல முடியாது, தென்னிலங்கை வாழ்க்கை, கொழும்பு எச் எப் சி படிப்பு, அசித்த எனும் சிங்கள கணவர். அவர் கதிர்காமரை போல் தனது எசமானாருக்கு தேவைப்படும் போது தன் பெயரை பாவிக்கும் ஒரு தமிழர்.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் நான்கு கில்லாடிகள் படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல்.... வேதாவின் அற்புதமான இசை, கவியரசரின் அழகான வரிகள், டி. எம். எஸ்.+பி. சுசீலாம்மா இருவரின் குரலினிமைகள்.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
ஏன்? யாரும் எங்கேயும் அமரலாம் எனும் போது…அங்கே எதிர்கட்சி தலைவருக்குரிய கதிரை என்பதே இல்லை…. இன்னொரு விடயம் பாராளுமன்ற சிறப்புரிமை என கேள்விப்பட்டிருப்பீர்கள்….எம்பிக்களை சபாநாயகர் மட்டுமே ஒழுங்கு படுத்த முடியும். இந்த ஊழியர் யார் ஒரு எம்பியை ஒழுங்கு படுத்த? இதில் முழு உடன்பாடே.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
என்னால் இதை நம்ப முடியவில்லை… நம்ம கப்ஸ் ஆ எழுதியது 🤔1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அந்த சுமந்திரன் கெட்டதும் வாயால், உந்த அர்ச்சுனா கெடுவதும் வாயால்,..😁1 point- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
1 point- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
சார், ரஜினியை சீமான் சந்தித்தது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? ஓம் சங்கியை சந்தித்த monkey நன்றி சாரே.1 point- ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
வலுவான நிலையில் இந்தியா: ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை தகர்த்த ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் - ராகுல் இணை எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கை சற்று ஓங்கியுள்ளது. அனுபவம் குறைந்த வீரர்களை ஆஸ்திரேலிய மண்ணில் இறக்கியிருக்கிறது இந்திய அணி என்று விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடியை ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் கூட்டணி அளித்துள்ளது. முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 2வது நாளான இன்று 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன. இந்திய வீரர்களின் ஒரு விக்கெட்டைக் கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் சாய்க்க முடியவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழும் பெர்த் ஆடுகளத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை நெருங்கியுள்ளார். அவருக்கு துணையாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்துள்ளார். ராணாவை சீண்டிய ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்திருந்தது. அலெக்ஸ் கேரே 19, ஸ்டார்க் 6 ரன்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து அலெக்ஸ் கேரே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் சேர்ந்தார். பும்ரா, ஹர்ஷித் ராணா வீசிய பந்துகள் பிட்சில் பட்டு பேட்ஸ்மேனை நோக்கி எகிறி, சீறிப்பாய்ந்தன. இதனால் ஒரு கட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. “உன்னைவிட நான் வேகமாக பந்துவீசுவேன். பார்க்கத்தானே போகிறாய்” என்று ராணாவை வம்புக்கு இழுத்தார் மிட்செல் ஸ்டார்க். ஆனால், ராணா எந்தவித பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஸ்டார்க் நிதானமாக ஆடி 26 ரன்களைச் சேர்த்து, ஆஸ்திரேலிய அணியை 100 ரன்களைக் கடக்க உதவி செய்தார். நேதன் லயன் 5 ரன்கள் சேர்த்தநி லையில் ராணா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். ஸ்டார்க் 26 ரன்னில் ராணாவிடமே விக்கெட்டை இழந்து வெளியேறினார். 51.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்றைய ஆட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. 2வது குறைந்தபட்ச ஸ்கோர் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 83 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆகி இருந்தது. அதேநேரத்தில், பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் 1985 ஆம் ஆண்டுக்குப்பின், மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 2016-ல் ஹோபர்ட்டில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 85 ரன்களிலும், 2010ம் ஆண்டில் மெல்போர்னில் இங்கிலாந்து அணியிடம் 98 ரன்களுக்கும் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி சுருண்டது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர். டாப்-6 பேட்டர்கள் நிலை ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர். கடந்த 1978-ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய டாப்-6 பேட்டர்கள் 22 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் இப்போதுதான் டாப்-6 பேட்டர்கள் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளனர். கபில்தேவ் சாதனையை சமன் செய்த பும்ரா இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேப்டன் பும்ரா டெஸ்ட் அரங்கில் வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியக் கண்டத்துக்கு வெளியே 9-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவ் சாதனையை சமன் செய்தார். 30 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் பந்துவீச்சு பெர்த் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகும். 2007-ஆம் ஆண்டில் மெல்போர்ன் டெஸ்டின்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர் கேப்டனாக இருந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES நங்கூரமிட்ட ஜெய்ஸ்வால், ராகுல் முதன் இன்னிங்சில் கிடைத்த 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ராகுல், ஜெய்ஸ்வால் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை மிகவும் கவனமாக பந்துகளை எதிர்கொண்டனர். குறிப்பாக ஜெய்ஸ்வால், கிரீஸுக்கு உள்ளே நின்றே பந்துகளைச் சந்தித்ததால், எளிதாக பேக்ஃபுட் செய்து ஆட முடிந்தது. புதிய பந்தில் ஹேசல்வுட்டும், ஸ்டார்க்கும் ஆவேசமாகப் பந்துவீசியும் அதை ஜெய்ஸ்வால் லாவகமாக எதிர்கொண்டார். அவர் தேவையற்ற பந்துகளை தொடாமல் அப்படியே விக்கெட் கீப்பரிடம் விட்டுவிடவும் செய்தார். எந்த பந்தையும் வலுக்கட்டாயமாக அடிக்காமல், பந்து செல்லும் போக்கிலேயே தட்டிவிட்டு ஜெய்ஸ்வால் ரன் சேர்த்தார். சில நேரங்களில் கம்மின்ஸ் வீசிய பந்துகளை அப்பர்கட் ஷாட், ஸ்டார்க் பந்துவீச்சில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ஜெய்ஸ்வால் ஷாட் அடித்து பவுண்டரி அடித்தார். ராகுல் 124 பந்துகளில் அரைசதமும், ஜெய்ஸ்வால் 123 பந்துகளில் அரைசதத்தையும் எட்டி நங்கூரமிட்டனர். 2-வது செஷனில் ராகுல், ஜெய்ஸ்வால் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது, இதைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்களும் சோர்வடையத் தொடங்கினர். நேதன் லயன், டிராவிஸ் ஹெட் என சுழற்பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தினார். அவர்களின் ஓவர்களில் ஜெய்ஸ்வால் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார், சில பவுண்டரிகளையும் அவர் விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறல் பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுதான் ஓங்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ராகுல் சிதைத்துவிட்டனர். முதல் இன்னிங்ஸில் ராகுல்,ஜெய்ஸ்வாலை எளிதாக ஆட்டமிழக்கச் செய்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், ஸ்ட்ராக், கம்மின்ஸ் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் பலவிதமான வித்தைகள் செய்தும் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. பெர்த் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. கூக்கபுரா பந்தில் விரைவாக விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கருதி, ஜெய்ஸ்வாலும், ராகுலும் ரன் சேர்ப்பதில் கவனத்தைச் செலுத்தாமல் நீண்ட நேரம் களத்தில் நிற்கவும், விக்கெட்டை நிலைப்படுத்தவும் கவனம் செலுத்தினர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று முற்றிலும் தோல்வி அடைந்து, சோர்வடைந்தனர். அவர்கள் சோர்வடைந்த நேரத்தைப் பயன்படுத்தி ஜெய்ஸ்வால், ராகுல் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 218 ரன் முன்னிலை இருவரின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 38 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சாதனை 20 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பின் அரைசதம் அடித்துள்ளனர். கடைசியாக 1986்-ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர்-கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடக்க ஜோடியாக களமிறங்கி இருவரும் அரைசதம் அடித்திருந்தனர். அதன்பின் எந்த இந்த தொடக்க ஜோடியும் அரைசதம் அடிக்கவில்லை. 38 ஆண்டுகளுக்குப்பின் இப்போது ஜெய்ஸ்வால், ராகுல் அடித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx287emzngmo1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointவீட்டிலை... யாரும் இல்லையா? படம் எடுக்க வந்திருக்கின்றேன், கொஞ்சம் கதவை திறங்க.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அவர்கள்... நல்லெண்ண சமிக்ஞை காட்ட ஆரம்பிக்கும் போது... நாம் பொறுமையாக இருந்து பெறவேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பவே... ஒன்றுக்கும் உதவாத, வறட்டு வீரத்தை காட்டி... ஆரம்பத்திலேயே குழப்பி அடித்தால், அடுத்த ஐந்து வருடம் தமிழர்களுக்கு நரகமாக இருக்கும். நேற்றைய காணொளி... சிங்களப் பகுதிகளை வடிவாக போய்ச் சேரவில்லை என நினைக்கின்றேன். அதன் பின்... புத்த பிக்குகளில் இருந்து, கடைமட்ட கிராமத்து சிங்களவன் வரை... இதன் எதிர்வினை கடுமையையாக வரும் என நினைக்கின்றேன். போதாக் குறைக்கு.... முஸ்லீம்களும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற தயாராகவே இருக்கின்றார்கள். பிறகு தமிழர்களை காப்பாற்ற யாரும் இல்லை.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம். மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.1 point- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஆம் தமிழர். தனிப்பட்ட ரீதியில் இவரை தெரியாது. (இரண்டு தமிழர்களுக்கு பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது)1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
கருத்தை படித்தேன், நினைத்தேன் சிரித்தேன்.1 point- கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
கமல் என்னும் நடிகர் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயம் இருக்கின்றது, வளவன். பார்வையாளர்களை நம்பி பல நல்ல படங்களில் நடித்திருக்கின்றார். நீங்கள் சொல்லியிருப்பது போலவே சில கூட்டணிகளில் இன்னும் நல்லாவே செய்திருக்கின்றார். ஆனாலும் பல படங்கள் தலையை சுத்தியும்விடும். விஸ்வரூபம் - 2, இந்தியன் - 2 , மன்மதன் அம்பு, உத்தம வில்லன்,................. இப்படி பல. சில படங்கள் மிகச் சிக்கலானவை - குணா, ஹே ராம்,............. போன்றவை. என்ன ஆனாலும் இவரின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இவரின் படங்களுக்கு போவேன். சில படங்களுக்கு ஒரு படம் நல்ல தரமாக இவரிடம் இருந்து வந்துவிடும் என்ற அந்த ஒரே நம்பிக்கையில்............... *********************************** நாங்கள் இருவரும் 'ஹே ராம்' பார்த்துக் கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட இப்படி நடந்தது: 'ஏங்க, இது ஹிந்திப் படமா.............' 'இல்லை, பெங்காலி................' 'என்ன............... பெங்காலிப் படமா.............' 'இல்லையனை, அவர்கள் பெங்காலியில் கதைக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன்...........' 'அப்ப தமிழில் கதைக்க மாட்டார்களா...........' 'வங்காளத்தில் பெங்காலியில் தான் கதைப்பார்கள்..............' நான் என்னுடைய வீட்டுக்காரியின் முகத்தை படம் முடியும் வரை பார்க்கவேயில்லை. படம் முடிய, எனக்கு அவர் பதிலாக சொன்ன வசனம் - இனி கமல் படம் என்றால் நான் வரவேமாட்டேன்.......🤣.1 point- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். சிங்களவர்கள் கண்டத்துக்கில்லாம் காலில் விழுவார்கள், சிங்கள நண்பர்கள் வீட்டுக்கு போனால் அவர்களுடைய வளர்ந்த பிள்ளைகள் எமது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.1 point - இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.