Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    3061
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19132
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/26/24 in Posts

  1. நீதிபதிக்கு வேண்டாத வேலை. கோர்ட்டுக்கு ஆசாமி வந்தால் நீதிபதிக்கு பைத்தியம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
  2. இலங்கையின் நடமாடும் பேக்கரி.
  3. ஏன் அமைதி என்பதுதான்..சந்தேகமாக இருக்கிறது... அண்மையில் ஊர் சென்றபோது தலைவரின் வீட்டிற்கு சென்றேன்.... ஒற்றைச்சுவர் மட்டும் மங்கிய மஞ்சள் கலர் எழுத்துடன் நின்றது..நினவுக்கு படமும் எடுத்துக் கொண்டேன்...அதேநேரம் 2004ல் போனபோதுமுழு வீடாக இருந்தது ..அப்பவும் படம் எடுத்ததேன்...இந்தமுறை போய் வரும்போது வேதனையுடன் வந்தேன்...ஏன் இந்த் ஊர் மக்கள்.. சிறந்த முறையில் பாதுகாக்கவில்லை என்பதே....பின்னர்தான் அறிந்தேன்கடும் பாதுகாப்பு நெருக்கடி..ஆனால் இன்றுபிறந்தநாள் நிகழ்வைப்பர்த்தபோது..மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்...ஏனெனில் அவர்களுக்கு மனமுண்டு...மற்றவர்கள் விடுகிறார்கள்இல்லை என்பதே..
  4. தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வதில் பெருமைப்படுகிறேன்!!! இருந்தால் நீ தலைவன், இல்லையென்றால் நீ எங்களின் இறைவன்!!!
  5. யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் செத்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடைய எறும்புப்புற்றை விட்டை வெளியே வருகின்றதாக இல்லை..............🤣.
  6. இந்தச் சம்பவத்துக்கு இவர் பேஸ்புக் லைவ் போடேல்லையா?
  7. நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம் சென்ற ஞாயிறன்று (17-11-2024) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஜமாத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில் ஆசிரியர்களுக்கான அமர்வில் பேசும் நல்வாய்ப்பு அமைந்தது. (வழக்கம் போல்) மதிய உணவு வேளை நெருங்கும் பொழுது எனக்குக் கிடைத்த வாய்ப்பை இயன்றவரை சுருக்கமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுவாக தமிழ்நாட்டில், குறிப்பாக கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சமய நல்லிணக்கம் என்பது தொன்று தொட்டே வரமாக அமைந்த ஒன்று. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு உராய்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை உடனே சரி செய்யப்பட்டிருக்கும். எனினும் முன் எப்போதும் இல்லாத அளவு சிறிது காலமாகச் சில சமூக விரோத அமைப்புகள் தங்கள் சிறுமதியினால் தமிழ் மண்ணில் கூட சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சி செய்து தோற்கின்றனர். அவர்களை எப்போதும் தோற்கடிக்க ஆசிரியர் பெருமக்களான நமது பங்களிப்பு இக்காலத்தில் மிகவும் அவசியமாகிறது. சமய நல்லிணக்கத்தைப் பெருமையுடன் பறைசாற்றும் நாம் வெட்கித் தலைகுனியும் இடமும் உண்டென்றால், அது சாதியம். சாதிய அடையாளம் நமக்கான அவமானம் என்பதை மாணாக்கர் மனதில் இளமையிலேயே பசுமரத்தாணி போல் பதிய வைப்பது நம் முன் இருக்கும் தலையாய கடமை. எங்கள் இளமைக் காலத்திலும் சாதி இல்லாமல் இல்லை. ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்தம் சீரிய பணியால் சாதியம் சிறிது சிறிதாக மழுங்கி வந்த காலம் அது. எப்படியோ சாதி வெறி மீண்டும் தலை தூக்குவது இன்றைய சமூக அவலம். எங்களுடன் படித்த நண்பர்கள் இன்ன சாதியர் என்று பெரும்பாலும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்றோ மாணவர்கள் தங்களுக்குள் மட்டுமல்லாமல், தங்கள் ஆசிரியர்களும் இன்னின்ன சாதியினர் என்று ஆவலுற்று அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்ற இடத்தில் ஆசிரியர்களாகிய நாம் தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. மீண்டும் பழைய வெற்றியை நிலை நாட்டுவது நம் பொறுப்பாகிறது. சாதி எனும் தளத்தில் அவர்கள் கொண்டாடும் வேற்றுமை சிறிது சிறிதாக மதம் எனும் தளத்திலும் பரவும் அபாயம் உண்டு. பெரியார் சமயத்தைப் புறந்தள்ளியது கூட, அது சாதியத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதாலேயே ! எனவே சாதி ஒழிப்புடன் சமய நல்லிணக்கம் பேசுவதும் தவிர்க்க முடியாததே ! ஒன்று, உற்ற பிணிக்கு மருந்து; மற்றொன்று, வருமுன் காப்பது. எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர் சொல்வது உண்டு - "மாணாக்கர்க்கு உங்கள் பாடங்களைச் சொல்லித் தருவதுடன் சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளையும் அவ்வப்போது சொல்லுங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் நாம் நல்லொழுக்க வகுப்பு என்று தனியாக நடத்துவதில்லை" என்று. எனவே மாணவர் சமூகத்திற்கு சொல்லித் தருவோம் : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமந்திரத்தை ; அதே பொருளில், "அவரே ஏக இறைவன்" என அறிவிக்கும் அவ்வல் கலிமாவை ; கலிமா என்பது இஸ்லாமியரின் ஐந்து கடமைகளில் தலையாயது என்பதை. இஸ்லாமியரின் மற்றொரு கடமையான (ரமலான்) நோன்பில், நோன்பு திறக்கும் போது மார்க்க பேதமின்றி, ஏழை-செல்வந்தர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் விருந்துக்கு அழைக்கும் இஸ்லாத்தை எடுத்துரைப்போம். அதே சமநிலைக் கண்ணோட்டத்தில், "ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்" எனப் போதிக்கும் திருமூலரைக் காட்டுவோம். ரோமன் கத்தோலிக்கரின் மானிட சமத்துவத்திற்கு அவர்கள் உருவாக்கிய என்னைப் போன்ற மாணவர்களே சான்று. அங்கு பயிலும் காலத்தில், "நான் இந்து; அவன் கிறித்தவன்" என்று ஒருபோதும் நாங்கள் உணர்ந்ததில்லை. புரொட்டஸ்டன்ட் கிறித்துவரின் சமய ஒற்றுமை உணர்விற்கு அந்த நூற்றாண்டு மண்டபத்தின் எதிரே அமைந்த கல்லறையில் உறங்கும் இரேனியஸ் அடிகளே சாட்சி. தாம் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சாதி பேதமின்றி, மதப் பாகுபாடின்றி அனைத்து மாணாக்கரும் ஓரிடத்தில் அமர்ந்து பயில வேண்டும், உண்ண வேண்டும் என்பதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உறுதியாக நின்று சமத்துவப் புரட்சி செய்தவர் இரேனியஸ் அடிகள். சமூக நல்லிணக்கத்தை அவரவர் சமயங்களே வலியுறுத்துகின்றன என்பதை ஆசிரியராகிய நாம் மாணவர் சமுதாயம் விளங்கச் செய்வோம். மீண்டும் வெல்வோம். ஆசிரியர் வென்றால்தான் சமூகம் வெல்லும்; அவர் தோற்றால் சமூகம் தோற்றுப் போகும். பின்வரும் முகநூல் இணைப்பில் இக்கட்டுரையோடு நான் பேசிய ஒளிப்பதிவையும் இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/1AXBekspxj/
  8. மன நோய்வாய்ப்படடவர்கள் ,ஒழுங்காக மருந்து எடுக்காவிட்டால் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.(தினமும் மருந்தா என சலிப்பு நிலை வரும் சில சமயம் அதைக் குப்பைக்குள் போட்டுவிடுவார்கள் ) மிகவும் உக்கிரமான நிலைக்கு வரும் .பெண்கள் எனில் அழுகையும் தூய்மை அற்ற்வர்களாயும் இருப்பர். ஆண் களில் எதோ ஒரு திருப்தியின்மையை நினைத்து வஞ்சம் தீர்க்க முற்படுவர். மூளை தாறுமாறாக யோசிக்கும்.வயது வந்தவர்களாய் இருப்பினும் ஒழுங்காக மருந்து எடுத்தாரா எனக் கவனிக்க வேண்டும். யோசிக்க விடாது வேறு திசையில் முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் நித்திரை அவசியம். படுக்கையில் இருந்தாலும் மூளை உறங்காது கிரமமாக குறித்த காலஎல்லையில் வைத்தியரிடம் போக வேண்டும். எனக்கு தெரிந்த ஒருவரிடமிருந்து அறிந்து கொண்டவை. இவை யாருக்கும் பயன்படக் கூடும் எனும் நல்லெண்ணத்தில் பகிர்கின்றேன். .
  9. முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பங்கு பற்றிய அனைவரும் மீண்டும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் சந்திக்கலாம்.கந்தையருக்கும் சிறியருக்கும் (சாராயக்கடை சிறி இல்லை எங்கடை தமிழ் சிறி) நன்றி.
  10. உதாவாக்கரை தலைவர், சாராய கடை சிறி, பாராளுமன்ற கதிரையை சூடாக்குவதை தவிர எதையும் செய்ய முடியாதவர், கையாலாகாதவர் என்பதை மக்கள் கண்டு கொள்ள கூடாது என்பதற்காக - தேர்தலில் தோற்று போன சுமந்திரனை பற்றி தாமாக கற்பனை செய்திகளை வெளியிடுகிறன புலம்பெயர் டாய்லெட் ஊடகங்கள். இதுவரை சுமனை பாவித்து இந்த புலம்பெயர் அடிப்பொடிகள், சாரயக்கடை சிறிக்கு கவர் எடுத்தார்கள், இப்போ சுமன் இல்லை என்றதும் தமது டீலர், மன்னிக்கவும் லீடர்ரை எப்படி கவர் எடுக்கலாம் என வழி தெரியாது, தெற்கில் அதிர்ச்சி, மேற்கில் பேதி எண்டு கதை காவுகிறார்கள்.
  11. பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள். தமிழ் சிறி அண்ணைக்கும் நன்றி. ஊர் அரசியலே நக்கிகிட்டு போய்ட்டாம்…இதுல ஐபில் வேற🤣 இதில மிகவும் கஸ்டமான விசயம் என்னெவெண்டால்…. மார்ச் மாதமே ஊருக்கு போய்ட்டு வந்து யாழ்பாணத்தில் என் பி பி க்கு ஆதரவு பெருகுவதை எழுதினேன். ஜனாதிபதி தேர்தலில் கணிசமாக என் பி பிக்கு போடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அதில் மக்கள் வாக்களித்த முறை என்னை மாற்றி யோசிக்க வைத்து விட்டது. முதலில் பாராளுமன்ற தேர்தல் நடந்திருந்தால் கொஞ்சம் புள்ளிகள் கூடி இருக்கும். சனம் இப்படி ரைட் சிக்னல் போட்டு, லெப்ட் கட் பண்ணும் எண்டு யார் கண்டது 🤣.
  12. முதல் மூன்று இடங்களைப் பெற்ற @பிரபா @வாதவூரான் @வாலி ஆகியோருக்கு பாராட்டுக்கள். @கந்தப்பு மிகவும் சிரமமான தேர்தல் ஆணையாளர் பதவியை மனமார ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து முடித்ததற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். @புரட்சிகர தமிழ்தேசியன் மிகமிக பெருமையாக இருக்கிறது. @கிருபன் ஆசை தோசை அப்பளம் வடை. போட்டியில் பலரையும் கலந்து கொள்ளவைக்க இரவுபகலாக பாடுபட்ட @தமிழ் சிறி க்கும் பாராட்டுக்கள். இன்னும் மூன்று மாதங்களில் கிருபன் நடாத்தவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விட்டதை பிடிக்க முயலுங்கள்.
  13. தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார். யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். நினைவேந்தல் நிகழ்வு அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார் இதேவேளை தமிழின விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான கார்த்திகை 27ஆம் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/anura-govt-allowed-to-commemorate-maaveerar-naaal-1732445376#google_vignette
  14. நீங்கள் சாபம் போடும் அளவிற்கு அவர் உங்களுக்கு என்னதான் தீங்கிளைத்தார்? வேண்டுமென்றால் முன்பு கமலகாசன் நடாத்திய இப்போது விஜய் சேதிபதி நடாத்தும் பிக் பாஸ் வீட்டுக்குள் விடவேண்டும் என கோருங்கள். அவர் அங்கு என்ன செய்கின்றார் என எல்லாரும் பார்க்கலாம்.
  15. அனுரவை ஆதரிப்பவர்களை ஏன் திட்டிக்கொண்டு. இருக்கிறீர்கள்??? இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு சிங்களத் தலைவர்களுடன். பேசி தான் பெற முடியும் ??? இந்த ஒரு சின்ன விடயம் உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெளிவு ஆனால் தாயக மக்களுக்கு அது நன்றாகவே விளங்கியுள்ளது
  16. @ரசோதரன் குருநாதா உங்க‌ட‌ ஆள் செஞ்சேரி அடித்து விட்டார் இர‌ண்டாவ‌து இனிங்சில்.................போட்டி முடிந்த‌தும் த‌ன‌க்கு செஞ்சேரி அடிச்ச‌தை விட‌ வெற்றி தான் முக்கிய‌ம் என‌ சொல்லி இருந்தார் கோலி டெஸ்ட் போட்டியில் சில‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு தான் செஞ்சேரி அடிச்சு இருக்கிறார்..................................
  17. ஓம்… அப்போ ஈபி ஆர் எல் எப், டெலோ, புளொட்டின் ஒரு பகுதி இந்தியன் ஆமியோடு சேர்ந்தியங்கினர். இவர்களை திரீ ஸ்டார் என்றோம். இவர்களில் இருந்த உறுப்பினரை கொண்டு அதே சமயத்தில் உருவான அமைப்புத்தான் ஈ என் டி எல் எப். யாழில் பல ஊர்களில் ஈ பி தான் ஆதிக்கம், அராஜகம் கூட. ஆனால் டவுனில் ஈ என் டி எல் எவ் வதை முகாம் ஒன்று இருந்தது. டெலோ மன்னரிலும், வன்னியின் A9 இன் இருமருங்கிலும் ஈ என் டி எல் எவ் ஆதிக்கம். வவுனியாவில் புளொட். 1988 மாகாண சபை தேர்தலுக்கு பின், இவர்கள் மூவரும் இந்தியா உருவாக்கிய TNA எனும் துணை இராணுவத்துக்கு ஆள் பிடிக்க தொடங்கினார்கள். யாழில் ஈபி யிடம் தப்பினால், கிளிநொச்சியில் ஈ என் டி எல் எவ், பஸ்சால் /ரயிலால் இறக்கி கூட்டி போவார்கள், அதிலும் தப்பினால் வவுனியாவில் புளொட் இறக்கும். பணம் இருந்தோர் பலாலி-ரத்மலானை என ஓடி தப்பினார்கள். கிழக்கு மாகாணத்திலும் இதே போல் ஒரு நிலைதான். படுவான்கரை பக்கம் போய் கேட்டு கேள்வி இன்றி அள்ளிப்போனார்கள். ——————— அது புலிகள் திரும்பி வரமாட்டார்களா என மக்கள் தவமிருந்த காலம். இப்படி ஒரு ஆள் பிடிப்பை புலிகளும் செய்வார்கள் என நான் உட்பட பலர் கனவிலும் நினைத்திராத நாட்கள் அவை. நான் ஊரில் இருக்கும் வரை அப்படி ஏதுவும் நடந்ததாக நான் அறியவில்லை. ஆனால் பாஸ் நடைமுறை 1990 இல் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின் கருணா மட்டகளப்பில் வலுக்கட்டாயமாக பிடிக்கிறார் என கதை வந்த போது, முதலில் நம்ப கடினமாக இருந்தது. பின்னர் தலைவருக்கு தெரியாமல் பிடிக்கிறார் என நம்மை நாமே தேத்தும் நிலை வந்தது. 2006 இன் பின் - எனது தம்பி முறையானவர்கள், ஆட்சேர்ப்பில் இருந்து தப்பிக்க, முல்லைதீவில் இருந்து நாயாற்று, மணலாறு காட்டு வழியாக புல்மோடை போய் அங்கிருந்து திருமலை நகரம் போனபோது, அதில் ஒரு குடும்பத்தில், மகன் திரும்பி வரும் வரை பெற்றாரில் ஒருவரை இயக்கம் கூட்டிப்போன போது - அதற்கு மேலும் நடக்கும் உண்மையை மறுக்கும் நிலை அற்றுப்போனது. இது யார் மீதான குற்றப்பத்திரிக்கையும் அல்ல. ஈபி யின் ஆட்சேர்ப்பு அவர்கள் இருப்பை பேண, புலிகளின் ஆட்சேர்ப்பு இனத்தின் இருப்பை பேண. இது மிக முக்கியமான வேறுபாடு. ஆனால் கட்டாய ஆட்சேர்புக்கு உள்ளானோருக்கு அதன் நோக்கம் இரெண்டாம் பட்சமாகவே இருக்கும். ஒரு மண்மீட்பு யுத்தம் நிகழும் போது - அதன் ஒப்பற்ற தலைமைக்கு ஆள் சேர்ப்பதில் பிரச்சனையே வந்திருக்க கூடாது. அப்படி அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை வரும் அளவுக்கு நிலமை மோசம் அடைய இரெண்டு காரணங்களை நான் காண்கிறேன். 1. ஓடி வந்த, இயக்கத்துக்கு போகாத என் போன்ற( இங்கே எழுதும் அனைவரினதும், அப்போ சிறுவாராக இருந்தோர் தவிர) சுய நலன் 2. கட்டாய ஆட் சேர்பின் மூலம் ஒரு விடுதலை போரை வெல்லலாம் என நினைத்த இயக்கத்தின் நிலைப்பாடு இனி இதை கதைத்து எந்த பலனுமில்லை. ஆனால் இனியும் போத்து மூடுவதிலும் ஒரு பலனுமில்லை என்ற வகையில் - என் வாழ்ந்த அனுபவமாக இதை எழுதுகிறேன். அவ்வளவுதான். இரு பக்க பிரச்சாரங்களுக்கு அப்பால் வரலாறு இந்த உண்மையை எழுதும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஸ்யாவின் ஆட்சேர்புக்கும், உக்ரேனின் ஆட்சேர்புக்கும் உள்ள வித்தியாசம் போன்றது இது.
  18. தமிழ் வாழும் வரை உன் பெயர் வாழும். தேசிய தலைவருக்கு 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  19. 🤣.............. அது முன்னர்...........ஆனால் இப்பொழுது ஒரே ஒரு அடையாளம் தான் நாடு முழுவதும்.................🤣. இந்த புதிய மாற்றத்தை ரஷ்யாவிற்கும் யாராவது சொல்லிவிடவேண்டும்.
  20. "குமிழி" "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வைக் கனவு கண்டான்!" "நீர்க்கோல வாழ்வை நச்சி அவன் நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென பொய் சொன்னான்!" "பிறந்தவர் சாதல் நிச்சியம் என்றாலும் பிணம் என்றே இறுதியில் அழைத்தாலும் பித்தனாக உலக நீதிகளை மதிக்காமல் பிதற்றித் திரிகிறான் அதட்டி வாழ்கிறான்!" "கருப்பையில் பிறந்து மண்ணோடு சேர்பவன் கடுகு அளவும் இரக்கம் இன்றி கண்ணியமான வாழ்வு வாழ மறுத்து கற்ற கல்வியை வியாபாரம் செய்கிறான்!" "நுட்பம் பல நிறைந்த மனிதன் நுணுக்கம் ஆக வாழ்வை அலசாமல் நுரைகள் பொங்கி வெடிக்கும் வரை நுகர்ந்து அறியாமல், துள்ளிக் குதிக்கிறான்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. சில மாதங்களின் முன் அப்பொழுது இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த அல் சஃப்ரி ஒரு மாநாட்டிற்காக ரஷ்யா போயிருந்தார். அப்பொழுது அவர் ரஷ்ய அதிகாரிகளை இனிமேல் இலங்கையர்களை ரஷ்ய படைகளில் இணைக்க வேண்டாம் என்று கேட்டிருந்தார். ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார். இது ஒரு செய்தியாக பல ஊடகங்களில் வந்தது. ஆனால் பின்னர் இது சம்பந்தமான செய்திகள் எதையும் நான் காணவில்லை....................😌.............. இந்தச் செய்தி வரும்வரை.
  22. இப்படி பணம் கொடுத்து இன்னொரு நாட்டுக்கு போவதை சட்டரீதியாக தப்பென்று சொல்லலாம், ஆனால் இதையே மனிதாபிமானரீதியாக ஒரு தப்பென்று சொல்ல முடியுமா, கொழும்பான்................. எங்களில் கூட பெரும்பாலானோர் இப்படித்தானே புலம் பெயர்ந்தவர்கள். இன்றும் அமெரிக்க தெற்கு எல்லையில் இப்படியானவர்கள் உலகெங்கும் இருந்து வந்து சேருகின்றனர். இந்தியர்கள், சீனர்கள், நேபாள மக்கள்,.................... இவர்கள் ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தான் இங்கு வருகின்றார்கள். அவர்களும் இங்கு வாழட்டும் என்றே நான் நினைக்கின்றேன்................
  23. பையனுக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎉 🎁 வாழ்க வளமுடன். 🙂
  24. தலைவரின் பிறந்தநாளில் தனது பிறந்தநாளையும் கொண்டாடும் @வீரப் பையன்26 க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  25. இன்று பிறந்தநாள் கொண்டாடும் @வீரப் பையன்26 தம்பிக்கு வாழ்த்துகள். வளத்துடன் வாழ்க.
  26. ஈழப்பிரியனின் இருட்டடிக்கும் பெருமாளின் அதட்டலுக்கும் பயந்து விட்டீர்கள் போல. 2006 ம் ஆண்டின் பின்னர் புலிகளும் அதையே செய்தனர். புடின் போல தொடர்ச்சியான தவறான அரசியல் இறுதியில் என்ன செய்தும் வென்றே ஆகவேண்டும் என்ற வெறித்தனம், இவ்வாறான அயோக்கித்தனங்களை செய்ய வைக்கும்.
  27. அண்ணை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்கிற ஈ.பி.ஆர்.எல்.எவ் என்று நினைக்கிறேன்.
  28. எல்லா இடங்களிலும் கணித ஆசிரியர்தாம் இலக்கியமும் அறமும் பேசுவார் போல ! குறிப்பாக 'உயர்தர கணித ஆசிரியர்' என்று நீங்கள் குறித்ததால், கணிதமும் நன்கு சொல்லித் தந்திருப்பார்.😀 நான் ஒரு கணித ஆசிரியர் என்பதால், மேலே குறித்தவை நீங்கள் ஒரு புன்னகையுடன் கடந்து செல்லவே ! (I request you to take my remarks regarding mathematics in a lighter vein). மற்றபடி நல்லவை பேசும் நல்லாசிரியர் என்பவர் எந்தத் துறை சார்ந்தும் அமையலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கும் தெளிவாகக் கணிதமும், அறமும், இலக்கியமும் சொல்லித் தந்த என் குருநாதர் ஒரு கணிதப் பேராசிரியர் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. இவ்வளவு சொன்ன நான் இன்னொரு தற்செயல் நிகழ்வையும் சொல்கிறேன். அந்த என் குருநாதர் 1950 களில் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் சிறிது காலம் கொழும்புவில் தற்காலிகப் பணியில் இருந்தவர். ஆரம்பக் கல்வியில் எனக்கு சிறப்பாக ஆங்கிலம் சொல்லித் தந்த ஆசிரியை கொழும்புவில் பணி செய்து வந்தவரே ! (அதற்காக எனது ஆங்கிலம் எவ்வளவு சிறந்தது என்று தயவுசெய்து சோதித்துப் பார்க்க வேண்டாம்).
  29. மன்னிப்பு வழங்கப்பட்ட இன்றைய புனிதர் அன்றைய காடை சுரேஷ் பிரேமச்சந்திரனின் EPRLF பிள்ளைபிடிக்கிற காலத்தில் நான் ஒரு சிறுவன்.
  30. எனக்கென்னமோ…நீங்கள் என்னை கலாய்ப்பது என்ற போர்வையில், பையனின் அரசியல் அறிவை மட்டம் தட்டுவதாக படுகிறது 🤣. #எங்க வந்து யாருகிட்ட🤣
  31. @வீரப் பையன்26 நோடு நான் ஊர் அரசியலில் அதிகம் முரண்படுவதில்லை என்பதால் இதை பெரிசு பண்ண வேண்டாம் என உங்களை மன்றாட்டமாக கேட்கிறேன்🤣.
  32. தோற்று முடியும் அந்தக் கடைசிக் கணம் மட்டும் நாங்கள் வென்று கொண்டேயிருக்கின்றோம் என்று சொல்வது போரில் ஒரு விதி போல, வசீ. பொதுவாக இந்த அணுகுமுறையை விளையாட்டுகளில் பார்க்கலாம்.................. It is not over until it is over என்று திரும்ப திரும்ப சொல்லுவோம். நான் பல வருடங்கள் இங்கு சிறுவர்களுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கின்றேன். எத்தனையோ போட்டிகள் எங்களால் வெல்ல முடியாதவை என்று இடையிலேயே தெரிந்துவிடும், ஆனாலும் பிள்ளைகளை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்போம். இதே அணுகுமுறை போர்களில் எதிர்மறையாக பயன்படுத்தப்படுகின்றது. ஆமாம், இதைச் செய்பவர்கள் அதனால் இலாபம் அடைபவர்களே. பெரும்பாலும் இந்த இலாபம் அடைபவர்கள் போர்களில் நேரடியாக ஈடுபடுவதும் இல்லை, எதுவும் இழப்பதும் இல்லை............😌.
  33. கிந்தியனை நம்புவதை விட சீனனை நம்புவது மேல்.....இது கடந்த கால அனுபவங்களின் இருந்து வந்த என் அனுபவ கருத்து மட்டுமே. திராவிட கொள்கையை விட சீன கொள்கை மேலானது. இன்றைய உலகில் எவன் முன்னுக்கு ஓடுகின்றானோ அவனின் கையை பிடிப்பதே சாலச் சிறந்தது.
  34. 1) பிரபா - 63 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் தேர்தலில் பாங்குபெற ஆர்வமூட்டிய சிறியரை முந்த ஆர்வம் காட்டவில்லை...அதெநேரம் வெயிட்பண்ணி..மற்றவரை கொப்பி பண்ணினால் முதலாம் இடம் பிடிக்கலாம் என்று +++++++ அடித்த பிரியனையும் முந்த விடவில்லை ...ஆதலால் எனக்கு 5 ம் இடம் ...இதுக்கு ஆறுதல் சான்றிதழ் கிடைக்குமா/ இதில் நன்ரிக்குரியவர் கந்தப்பு...தமிழ்சிறி.....அடுத்தவர் ....கிருபன் ..தன்னுடைய வினாக்கொத்தை பிரதிபண்ண அனுமதித்தவர்...கிருபன்சார் நீங்கள் ...எந்த இடத்தில் நிற்கிறியள்😎
  35. போட்டியை மிக அருமையாக ஒழுங்கமைத்து நடாத்திய @கந்தப்பு அவர்களுக்கு நன்றி. அனைவரையும் பங்கு பற்ற ஊக்குவித்த @தமிழ்சிறி அவர்களுக்கும்நன்றி. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
  36. இனியுந்தான் ஏஜென்சிகாரனிட்ட காசு கொடுத்து வெளிநாடு வரப்பார்ப்பார்கள் நம்ம ஆட்கள்? அவுஸ்திரேலியா அரசாங்கம் எங்கட ஆட்கள் களவாக அங்கு வரவேண்டாம் என்பதை மெத்த கஸ்டப்பட்டு பிரச்சாரம் செய்யிது. இனி இவ்வளவு கஸ்டம் வேணாம். களவாக வர வெளிக்கிட்டால் உக்ரைனுக்கு பிடிச்சு அடிபட அனுப்பி போடுவாங்கள் என்று சொல்லிவிட்டால் போதும்.
  37. 🤣............... இது நீங்களே என்னை தனித்தனியாக அந்த இரண்டு பக்கங்களிடமும் பிடித்துக் கொடுப்பது போலிருக்கின்றதே................ அமிலமும் காரமும் இல்லாத பச்சைத் தண்ணீர் சார் நான்.................. நாங்களே ஒரு நிரந்தர இடம் இல்லாமல் பரதேசங்களாக அலைந்து கொண்டிருக்கின்றோம்.......... எங்களைப் பிடித்து உங்கள் ஆணவப் போர்களுக்கு ஏன் அனுப்புகிறீர்கள் என்ற ஒரு ஆதங்கம் தான்........
  38. ❤️..................... எனக்கு கிடைத்த சில ஆசிரியர்களை நினைக்கவைத்து விட்டீர்கள். நாங்கள் அன்று அங்கே வாழ்ந்த, வளர்ந்த சூழ்நிலையில் பாடத்திட்டத்தை படிப்பித்து முடிப்பதே ஆசிரியர்களுக்கு முடியாத ஒரு காரியம். அதனாலோ என்னவோ, ஒரு ஆசிரியரைத் தவிர வேறு எந்த ஆசிரியரும் எந்த விதமான அறம் சார்ந்த கருத்துகளையோ அல்லது பொதுவான எந்த விடயங்களையும் வகுப்பில் சொன்னதாகவோ அல்லது விவாதித்ததாகவோ நினைவில் இல்லை. சில ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை மிகவும் நன்றாக படிப்பித்தார்கள். உயர்தர கணித ஆசிரியர் ஒருவர் மட்டும் மு. வரதராசனாரின் எழுத்துகளை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தார். அந்த வயதில் நாங்கள் வழி தவறி விடுவோம், நாங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றே அவர் அவற்றை சொன்னார் என்றே நினைக்கின்றேன்.
  39. வியாபாரிகள் மாறினாலும் நீங்கள் மாற மாட்டியல் போல கிடக்கு 😅கொண்ட கொள்கையில் இலட்சியத்துடன் செயல் பட வேண்டும்😅 இன்னும் இர்ண்டு புள்ளிகள் அனுராவுக்கு எனது சார்பாக கொடுக்கின்றேன் தமிழ் தேசியம் வளர இதுவும் உதவும் ...ஆயுத போராட்டத்தின் ஊடாக அரசியல் செய்து முன்வந்த அரசாங்கம் ....என்பதால் வலிகள் புரிகின்றது அவ்ர்களுக்கு ....
  40. ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்! Nov 24, 2024 14:54PM IST ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து அறிவித்ததை தொடர்ந்து, அவரது மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் இன்று (நவம்பர் 24) விளக்கம் அளித்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளவர் இந்திய திரையுலகில் கோலோச்சுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், அதில் ஏ.ஆர். ரகுமானும் இணைந்தார். தனது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பி எச்சரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரகுமான் குறித்து சாய்ரா பானு வெளியிட்டுள்ள இன்று ஆடியோ வெளியிட்டுள்ளார். உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர்! அதில், “நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன்! கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக நான் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக தான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். ரகுமான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்! என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த மனிதர்” இவ்வாறு சாய்ரா பானு அதில் பேசியுள்ளார். https://minnambalam.com/cinema/why-did-she-break-up-with-a-r-rahman-saira-banu-explains/
  41. மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே…
  42. இருவரும் மீண்டும் இணைந்து விட்டார்கள் கேக்கும். வெட்டி கொண்டாட்டியாதாக. அறிகிறேன் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏. குறிப்பு,...இனி எல்லோரும் பிரிந்து இணைய போகுறார்கள். 🤣.
  43. அவர்கள் public figures எல்லோ,.. தங்கள் privacy ஐ மதிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். 😁
  44. இது அவரவர் தனிப்பட்ட விடயம் அதில் மூக்கை நுளைப்பது அழகல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.