Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8907
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1569
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/30/24 in all areas

  1. இப்படியே உணர்ச்சி மிகு கட்டுரைகளை எழுதிக் கொண்டு தாமும் இன்பமடைந்து மக்களில் ஒரு சிறு பிரிவினரை ஏமாற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான். மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது தம் பிள்ளைகளை, சகோதரங்களை, நண்பர்களை, அவர் தம் தியாகங்களை மதிப்பதனால். அடுத்த வருடமும், இன்னும் பத்து வருடங்களின் பின்னும் மக்கள் இவ்வாறு அஞ்சலிப்பர். அதே நேரம் தமிழ் கட்சிகள், காத்திரமான முறையில் அரசியல் செய்யாது விடின், வடக்கில் இருந்து ஒரு சிங்களவரைக் கூட இதே தமிழ் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்ற த்திற்கோ மாகாணசபை க்கு அனுப்பி வைப்பர்.
  2. தேர்தல் முடிவுகளை வைத்து அது தமிழ்மக்கள் சிங்கள தலைமைகளை ஏற்று வாழ தயாராகிவிட்டார்களென்றோ, அல்லது தமிழர்களின் தேசிய உணர்வை மறந்து விட்டார்களென்றோ பல்கலைகழக மாணவர்களும் ஊடக சந்திப்பு நடத்த தேவையில்லை, சீன தூதுவரும் அறிக்கைவிட தேவையில்லை. சிங்கள கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட பெரும் வாக்குகள் சிங்கள கட்சிகளின் மேல் கொண்ட அன்பினால் அல்ல தமிழ்கட்சிகள் மேல் கொண்ட வெறுப்பினால் என்பதே யதார்த்தம். எம் மக்கள் எந்தவித ஆசை வார்த்தைகளுக்கும் சலுகைகளுக்கும் இனத்தை அடைவு வைக்க மாட்டார்களென்பதற்கு வடக்கிலிருந்து கிழக்குவரை புயல் பெருவெள்ளம் இடி மின்னல் நடுவே முழங்காலளவு தண்ணீருக்குள் நின்றபடி எம் இன மானம் காத்தவர்களை சாரை சாரையாக அணிவகுத்து வந்து நினைவு கூர்ந்ததே சாட்சி. அதேபோல சிங்கள கட்சிகளும் தமிழர்கள் இனிமே நிரந்தரமாக எம் பக்கம் என்று எக்காலமும் நினைத்திடலாகாது, வெறும் வாக்கு வங்கிகளாக நீங்கள் எம்மைபயன்படுத்தலாம் என்று கனவிலும் எண்ணக்கூடாது. அது மாவீரர் மண், அது எதற்காகவும் இனமானத்தை யாருக்கும் விற்காது என்பதற்கு பெருமெடுப்பில் நடந்த நிகழ்வேந்தலும், தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டமும், பெரும் எண்ணிக்கையில் மாவீரர், மற்றும் தலைவரை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் எண்ணிக்கையில் கைதாகும் எம் இளைஞர்களும் சாட்சி. இந்த ஐந்தாண்டு காலத்தில் இன அர்ப்பணிப்புள்ள உறுதியான தமிழ்தலைமை ஒன்று தமிழர் மத்தியில் உருவானால் அடுத்த தேர்தலில் யாழ்ப்பாணம் ஒட்டுமொத்தமா அநுர அரசை வடக்கிலிருந்து அகற்றிவிடும். அப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள தமிழ்தலைமையோ அல்லது இன்று எஞ்சியிருக்கும் தமிழ்கட்சிகளோ இன்னமும் கடந்தகால வரலாற்றில் பாடம் படிக்காமல் ஊர் சுத்தி திரிஞ்சால் அடுத்த தேர்தலில் அநுர ஆறு ஆசனங்களையும் பெறும் வாய்ப்பிருக்கிறது அதையும் மறுப்பதற்கில்லை. அதுகூட அநுரதான் கடவுள் என்று அவர்கள் கொள்ளபோகும் அர்த்தமல்ல, நமக்கு வாய்த்ததுகள் இயமனுகள் என்ற வெறுப்புத்தான். தமிழர் மான தேசியத்தையும், தமிழர் தேசியம் என்று பேசி திரிந்து எம் முதுகில் குதிரையோடிய தமிழர் கட்சிகளையும் எம் மக்கள் ஒன்றாக்கி பார்க்கவில்லையென்பதே மாவீரர்நாள் நிகழ்வுகளும் இந்த தேர்தலில் அநுரவின் வடபகுதியின் அமோக வெற்றியும். அவர்களை பொறுத்தவரை அவர்களுக்கும் கடல்கடந்துவிட்ட எமக்கும் தேவை இனமான தேசியம், இனத்தை விற்று தமிழ்கட்சிகள் நடத்திய யாசகம் அல்ல.
  3. பயங்கர தடைச்சட்டம் மிகப்பெரிய ஆயுதம் சிங்களவருக்கு. அதை அவர்கள் கைவிடுவார்கள் என்று எம்மவர் சொல்வது தான் மிகப் பெரிய ஏமாற்றுதல்.
  4. இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்பாகப் பேசுவோரும் புலநாய்வுத்துறையினரால் இன்றுவரை அச்சுருத்தப்பட்டே வருகின்றனர். அப்படியான ஒருவர்தான் பவநேசன். தமிழர் தாயகத்தின் அனைத்து மூலைகளுக்கும் (எல்லையோரக் கிராமங்கள் உட்பட) சென்று காணொளிகளைப் பதிவிடுவது, ஊரவர்களுடன் பேசுவது, முன்னைய காலங்களுக்கும் இன்றிருக்கும் நிலைமைகளுக்குமான வித்தியாசத்தினை மக்களிடமிருந்தே கேட்டு அறிவது, சிறுவர்களுடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வது என்பது இவரது வழமை. இவரை அண்மைக்காலமாக எல்லையோரக் கிராமங்களுக்குச் செல்வதையோ, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவுற்றிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதையோ செய்யவேண்டாம் என்று வீட்டிற்கு வந்த புலநாய்வுத்துறையினர் அச்சுருத்தியிருந்தனர். இதன் பின்னர் அவர் அவ்வாறான காணொளிகளை வெளியிடுவதை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குள் இருக்கும் சில ஊர்களுக்குச் சென்று வரத் தொடங்கினார். இதனையும் செய்யவேண்டாம் என்று மீண்டும் புலநாய்வுத்துறையினர் இவரது வீட்டிற்குச் சென்று அச்சுருத்தியிருந்தனர். அநுர ஆட்சிக்கு வந்தபின்னர் அவரது ஆட்சியில் நடக்கும் நல்ல விடயங்கள் குறித்தும், தமிழர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் என்றும் அடிக்கடி இப்போது பேசிவரும் நிலையில் நேற்றைய முந்தினம் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் புலநாய்வுத்துறை அலுவலகத்திற்கு வந்து தமக்கு விளக்கம் தருமாறு கோரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இவர் மாவீரர் தினம் குறித்தோ, தலைவரின் பிறந்த தினம் குறித்தோ ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதுதான் உண்மை. ஆக மகிந்த - கோத்தா ஆட்சிக்கும் சந்தர்ப்பவாதத் தமிழர்கள் கடவுளாகப் போசிக்கும் அநுரவிற்கும் இடையே தமிழர் நலன் என்று வரும்போது வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
  5. தீருவிலில் மழையிலும் புயலிலும் மாவீரர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தியதும், புயல் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நேரடியாக வந்த இலங்கையின் புதிய அமைச்சரை கொண்டாடுவதும் ஒரே மக்கள் தான். வல்வை நகரசபையில் டக்ளஸிற்கும் உறுப்பினர்கள் இருந்தார்கள். என்ன தான் நடக்குது, மக்கள் எந்தப் பக்கம், இங்கு எது தான் உண்மையில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்று பார்த்தால், இன்று அங்கு மக்கள் உணர்வுகளுடன் உயிர் வாழ எது வழியோ அதை மட்டுமே தேடிப் போகின்றார்கள்...........
  6. A/L படிக்கிற நேரத்திலும் ஒரு பெண்ணை வன் சைட் லவ் பண்ணினேன். நான் லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அதனால் என்னுடன் பேசும்போது ஒரு இடைவெளி விட்டே பேசுவாள். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ப்ரொபோஸ் பண்ணினேன். அவள் என்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பதாகக் கூறி என்னை ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். "இதெல்லாம் காரணம் இல்ல, உண்மையான காரணம் சொல்லு?" என்று நான் நச்சரிக்கவும் என்னுடைய தொடர்பு எல்லாத்தையும் துண்டித்து விட்டாள். காலம் உருண்டோடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவளை ஃபேஸ்புக்ல பார்த்தேன். ரிக்குவெஸ்ட் கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிவிட்டாள். இப்போது அவளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதைக் கண்டேன். போஸ்ட்களுக்கு ரியாக்சன் போடுவது மட்டுமே இருவருக்கும் இடையே இருந்தது. நேற்று மெஸெஞ்சர்ல சும்மா மெஸேஜ் போட்டு பழைய கதைகளைப் பேசினேன். இருவரும் பேசும்போது "உண்மையைச் சொல்லு அப்ப ஏன் என்னைய வேணாம் எண்டு சொன்னாய்?" என்று கேட்டேன். "அப்ப நீ பார்க்கிறதுக்கு நல்லா இருக்க மாட்டா டா" என்றாள். "அப்ப இப்ப பார்க்கிறதுக்கு நல்லா இருக்கேனா?" என்று கேட்டேன். "இல்ல இப்ப இருக்கிறதுக்கு அப்ப இருந்தது பரவால்ல போல" என்றாள். அந்த அவமானத்துல இப்ப நான் அவள ப்ளொக் பண்ணிட்டேன். 😂 Suhirtharaj Logarasa
  7. நீங்கள் சொல்வது உண்மைதான் வசீ , சில செடிகள் பயன்தரு மரங்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தாலும் இறுதிவரை பயன் தராமலே கருகி போய்விடுகின்றன ,இவர்கள் தகவல்கள் முயற்சிகள் வேறு தரத்திலுள்ளன. முயன்றுதான் பார்ப்போமே என்று எண்ண தோன்றுகிறது. நாமெல்லாம் தண்டுகள் விதைகளை வைத்தே சில செடிகளை உருவாக்குவோம், ஆனால் இலைகளை வைத்தே மாமரம் கொக்கோகோலா உதவியுடன் மிகவும் குள்ளமாக உருவாக்கலாமென்று இவர் கூறுகின்றார் இது இன்னொருமுறை குள்ளமான செடிகளென்பதால் குளிர்காலங்களில் வெயில் படும்படியா வீட்டினுள்ளே வைத்தும் பரமரிக்கலாம் போல இருக்கிறது இது வேகமாக ஆரோக்கியமான ரோஜாக்களை உருவாக்கும்முறை, வீடியோவின் இறுதியில் அவர் தனது குழந்தைகளை அணைத்தபடி நின்றபோது எது ரோஜா எது குழந்தைகள் என்று குழப்பமா போனது
  8. @பாலபத்ர ஓணாண்டி அதையேவெளிப்படையா செய்து அடிவாங்குறது சுமந்திரன்.. 🤣🤣🤣🤣🤣 👍
  9. இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு ஓத்தாசையாக இருக்க வேண்டியது அவசியம்.எமக்கும் சிங்களவருக்கும் நடந்த சண்டையில் தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள் தான். இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மற்றும் இலங்கை law council நாடாத்தும் பரீட்சைகள், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு நாடாதப்படும் viva exam போன்றவற்றில் முஸ்லீம் இனத்தவரின் தமிழ் மக்கள் மீதான வெறுப்பு அனைவரும் அறிந்ததே. முறைப்படி பன்றி இறைச்சி பரிமாறப்படும் பாராளுமன்றதுக்கு ஒழுங்கான முஸ்லீம் போகவே கூடாது. இலங்கையில் தமிழ் தெரிந்த உத்தியோகாஸ்தர் பதவிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் கொச்சை தமிழ் பேசும் முஸ்லீகளுக்கு அவர்களின் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டபொழுது நாம் சும்மா தானே இருந்தோம், அதே போல் இப்போது தமிழ் பேசும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் சும்மா இருக்க வேண்டியது தான்.
  10. ஓயாத அலைகள் மூன்றின் நான்காம் கட்டத்தின் போது குறிசூட்டுநர் சூட்டணி
  11. தற்போதுள்ள இடர்பாடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதை யார் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல. கூடுதலாக பாதிக்கப்பட்டது கஸ்டப்பட்ட மக்களே. எனவே அவர்களுக்கு யார் குத்தியாவது அரிசியாகட்டும்.
  12. சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி இதன் மூலம் வலுப்படும். ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்ட மிக மோசமான ஒரு இனவாதக் கட்சி என்பதால் அது வெல்லக் கூடாது என தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இன்று நடப்பவை எனக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லை. இன்னும் நிறைய நடக்கவுள்ளன. மழை வெள்ளத்தை அனுர அரசு வடக்கில் கையாண்ட விதத்தை மக்கள அங்கு மிகவும் வரவேற்கின்றனர். வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியில் இருந்து வடக்கிற்கு முதலமைச்சர் தெரிவாகும் சாத்தியங்கள் அதிகம். அப்பவும் நாம் புலம்பிக் கொண்டு இருப்போம்.
  13. நான் அறிந்தவரை எதிரிகளின் கல்லறைகள் கொண்ட இடத்தினை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்து இறந்தவர்களுக்குரிய குறைந்த பட்ச மரியாதை செய்வதனை கூட விரும்பாத இனமாக எந்த இனமும் இருந்ததாக அறியவில்லை, ஆனால் இந்த சிங்கள இராணுவத்தினர் தமது மூதாதையர் மிருகத்திலிருந்து வந்தவர்கள் எனும் அவர்கள் மகாவம்ச கதையினை உண்மையாக முயல்கிறார்களோ என கருதுகிறேன்.
  14. @goshan_che எனக்கு சிறியரையும் பழக்கமில்லை அவரின் உள்விடயங்களும் தெரியாது. நீங்களும் என்னையும் சிறிதரனுடன் முடிச்சுப் போடவே முயல்கிறீர்கள். ( பாட்டியோட வடையை திருடியது அண்டாங்காக்காவா சாதா காக்காவா?)
  15. காலங்கள் சிலரை கண்முன்னே அடையாளப்படுத்தும் .அது அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்து தம்பி லவன் தவராஜா சிறு வயதில் இருந்து என்னுடன் மிக நெருங்கிய நண்பர், சகோதரர் . சமூக செயல் எது என்றாலும் முன்னின்று செய்பவர் சுனாமி நினைவேந்தலாகட்டும்,கதிர்காம பாதயாத்திரையில் யாத்திரீகர்களுக்கு குடிநீர் வழங்கியது முதல் இன்னும் பல சமூக சேவைகளை தாராளமனதுடன் செய்திருந்தார் ,தற்போது காரைதீவில் ஏற்பட்ட உழவு இயந்திர விபத்தில் எமது சகோதர சிறார்கள் தண்ணீரில் அள்ளுண்டு போனார்கள் என கேள்வியுற்றதும் களத்தில் நின்று எமது ஊரில் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது அவர்களுக்கு நாம் உதவ வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளோம் என படகுகளை தயார் செய்து தண்ணீரில் அள்ளுண்டு போன அம்மாணவர்களை தேட தொடங்கினார் ஏனென்றால் சுனாமி அனர்த்தத்தின் போது தண்ணீரில் தத்தளித்து சென்ற எமது ஊர் மக்களுக்காக சாப்பாடு ,குடிநீர் உடை என அள்ளி வழங்கிய ஊரல்லவா என சொன்னார். இதுதான் மனிதநேயம் செய்யும் உதவியை மறுகணமே மறக்கும் மனித வாழ்க்கையில் களத்தில் நின்று மக்களுக்காக சேவை செய்யும் இவர்களை ஊர் மக்களாகிய நாம் பாராட்டாமல் இருக்க முடியாது வாழ்த்துக்கள் தம்பி Lavan Thavaraj All reactions: 93Jeyrajan Rajan, Vic Jeyathevan and 91 others முகநுhல் தனிக்காட்டு ராஜாவின் முகநுhலில் இருந்து.
  16. மத்தியரசின் ஒருபலமான அமைச்சர் தலைவராக இருப்பதும் சிலவேளை நன்மை பயக்கலாம்.
  17. எப்படி ஒரு வடக்கன் உயர்குடி யாழ்ப்பாண மக்களுக்கு தலைமையேற்ற முடியும். கடந்த காலங்களில் ஒருங்கமைப்பு தலைவர்களாக இருந்த பார் அங்கஜன், ஒட்டுக்குழு டக்கிலஸ் விட கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து அடிமடட மக்களுக்கு உழைத்த இராமலிங்கம் எவ்வளவோ திறம் .
  18. பௌத்த வினாவல் - 5, ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பௌத்தத்தின் எழுச்சியும் பரவலும் அசோகர் புத்த ஸ்தூபத்தை வழிபடச்செல்லுதல் 277. பெருவாரியான மக்கள் பின்பற்றும் மற்ற மதங்களை ஒப்பிடும் போது பௌத்ததை பின்பற்றும் மக்கள் எவ்வளவு இருப்பர்? புத்த தர்மத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை வேறெந்த மதங்களை பின்பற்றுவோரையும்விட மிகுதிதான். 278. எவ்வளவு மக்கள் பின்பற்றுகின்றனர் என்ற எண்ணிக்கையை கூறமுடியுமா? சுமார் ஐந்நூறு கோடி. இது உலக மக்கள் தொகையில் 5:13 என்ற விகிதத்தில் உள்ளது. அல்லது உலக மக்கள் தொகையில் சரிபாதி அளவிற்கு குறைவாக உள்ளது. 279. புத்த தர்மத்தின் பரவலுக்காக பெரும் போர்களும், பல நாடுகள் கைப்பற்றப்பட்டதும், பெரும் மனிதக் குருதியும் சிந்தப்பட்டுள்ளனவா? வரலாறு அப்படி கொடுமைகளும் குற்றங்களும் எங்கள் மதத்தின் பரவலுக்காக நிகழ்த்தப்பட்டது என்று ஆவணப்படுத்தவில்லை. இன்றளவும் நாங்கள் அறிந்தவரையில் ஒரு துளி இரத்தம் சிந்தவும் அது காரணமாகவில்லை. பேரராசிரியர் கோல்ப் (kolb) தனது History of culture நூலில் இவ்வாறு சொல்கிறார்: ”போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கும், கைப்பற்றப்பட்ட நிலங்களில் வாழ்ந்த மக்கள் சிறைபிடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதற்கும் நாம் பௌத்தத்திற்கு நன்றி சொல்லியாக வேண்டும்” 280. பிறகு எவ்வாறு அது பிரம்மிக்கத்தக்க வகையில் பரவியது. அதன் பரவலுக்கான ரகசியம் என்ன? பௌத்தத்தினுள்ளிருக்கும் அதன் சிறப்பை தவிர வேறெந்த காரணமுமில்லை. மெய்மையை அடிப்படையாக கொண்ட அதன் தரிசனம், உயரிய அற போதனைகள், மற்றும் மனிதர்களின் அனைத்து தேவைகளுக்கும் நிறைவளிக்கும் அதன் தன்மை ஆகியவையே. 281. எவ்வாறு பௌத்தம் பரப்பப்பட்டது? புத்தர் தனது நாற்பதாண்டு கால ஆசிரிய வாழ்க்கையில் இந்தியாவின் பல நிலங்களுக்கு பயணம் செய்து தம்மத்தை போதித்தார். அவரின் அறிவார்ந்த மற்றும் சிறந்த சீடர்களை இந்தியாவெங்கும் பயணம் செய்ய வைத்து தம்மத்தை பரப்பினார். 282. புத்தர் தனது மாணவர்களை எப்போது அனுப்பினார்? புரட்டாசி மாதத்தின் ஒரு முழுமதி நாளன்று. 283. அவர்களிடம் புத்தர் என்ன கூறினார்? புத்தர் அவர்கள் அனைவரையும் அழைத்து “செல்லுங்கள் பிக்குகளே, சென்று உலகிற்கு தர்மத்தை உபதேசம் செய்யுங்கள். பிறர் நலனுக்கும் உங்கள் நலனுக்கும் உழைத்திடுங்கள். இந்த நற்செய்தியை ஒவ்வொரு மனிதனுக்கும் சுமந்துசெல்லுங்கள். ஆனால் நீங்கள் யாரும் ஒரேவழியை பின்பற்ற வேண்டாம், ஒவ்வொருவரும் படைப்பூக்கத்துடன் செயல்படுங்கள்”. 284. கிறித்துவ யுகத்திலிருந்து எத்தனை ஆண்டுகள் முன்னர் இது நிகழ்ந்தது? சுமார் ஆறு நூற்றாண்டுகள் முன்னர். 285. அரசர்கள் என்ன உதவி செய்தனர்? தாழ்ந்தநிலை மக்களுடன் பேரரசர்களும் மதம் மாறி பௌத்தம் பரவ தங்கள் செல்வாக்கை வழங்கினர். 286. யாத்ரீகர்கள் பங்கென்ன? கற்றறிந்த யாத்ரீகர்கள் வெவ்வேறு நூற்றாண்டுகளில் இந்தியா வந்து இங்கிருந்து அரிய நூல்களையும் போதனைகளையும் தங்கள் நாட்டிற்கு கொண்டுசென்றுள்ளனர். ஆகவே படிப்படியாக பல நாடுகள் தங்கள் பழைய நம்பிக்கைகளை கைவிட்டு பௌத்தர்களாக மாறினார். 287. புத்த மதம் ஆழமாக வேரூன்றியதற்கு மற்ற யாரையும் விட எந்த ஒரு மனிதருக்காக உலகு கடன்பட்டுள்ளது? அவர் பேரரசர் அசோகர். இவர் பியாதாசி என்றும் தர்மசோக்கா என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர் மகத மன்னர் பிந்துசாராவின் மகன். கிரேக்கர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றிய சந்திரகுப்தரின் பேரன். 288. அவரின் ஆட்சிக்காலம் எப்போது? பொ.மு மூன்றாம் நூற்றாண்டு. புத்தரின் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் பின்னர். வரலாற்று ஆசிரியர்கள் இந்த காலக்கணிப்பை மறுக்கின்றனர், எனினும் அவ்வளவு உறுதியாக அல்ல. 289. எது அவரை உயர்ந்தவர் ஆக்கியது? அவர் இந்திய வரலாற்றில் மிகவும் ஆற்றல்மிக்க பேரரசர், மாவீரர் மற்றும் இராஜதந்திரியாக அறியப்படுகிறார். ஆனால் அவரின் உன்னத குணங்கள் என்பது உண்மை மற்றும் அறத்தின் மீதான பற்று, மத நல்லிணக்கம், அனைவருக்கும் சமமான அரசு, கருணை - நோய்வாய்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் விலங்குகள் மீதான அவரின் கருணை. அவரின் புகழ் சைபீரியா முதல் சிலோன் வரை மரியாதையுடன் நினைவுகூறப்படுகிறது. 290. பிறப்பிலேயே அவர் பௌத்தரா? இல்லை. அவரின் பட்டாபிஷேகம் முடிந்து தன்னுடைய பத்தாம் வயதில் அவர் பௌத்த மதத்திற்கு நிஃரோத சமனீரா என்னும் அராகதரால் மாற்றப்பட்டார். 291. அவர் பௌத்தத்திற்கு என்ன செய்தார்? அவர் போலி பிக்குகளை வெளியேற்றி நல்லவர்களை ஊக்குவித்தார், மடாலயங்கள் மற்றும் டகோபாக்கள் எழுப்பினார், நந்தவனங்கள் நிறுவினார், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் ஏற்படுத்தினார், பாடலிபுத்திரத்தில் தர்மத்தை மறுபரிசீலனை செய்யவும் மீளுருவாக்கம் செய்யவும் மன்றம் நிறுவினார், பெண்களுக்கும் மதக்கல்வி கற்கும் உயர்வளித்தார். ஐந்து கிரேக்க அரசர்கள், அவரது நட்பு நட்டுகள், மற்றும் இந்தியாவின் பேரரசர்களுக்கும் புத்தரின் சித்தாந்தத்தை போதிக்க தூதரக அதிகாரிகளை அனுப்பிவைத்தார். அவரே எங்கள் முதன்மை யாத்திரை நகரங்களான கபிலவஸ்து, புத்தகயா, இசிபட்டானா மற்றும் குசினராவில் ஸ்தூபிகளை எழுப்பினார். மேலும் பல ஆயிரம் கட்டிடங்களை எழுப்பினார். 292. அவரின் உன்னத குணங்களை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது? கடந்த சிறு காலத்திற்குள்ளேயே இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அவரின் பதினான்கு அரசாணைகள் பாறை கல்வெட்டிலும் அவரின் கட்டளைகளால் எழுப்பப்பட்ட எட்டு தூண்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன. அவையனைத்தும் அவரை இப்புவியில் வாழ்ந்தவரில் விவகமும், உயர் மனமும் கொண்ட பேரரசர் என நிரூபிக்கின்றன. 293. இந்த கல்வெட்டுக்கள் பௌத்தத்திற்கு என்ன பண்புகளை அளிக்கிறது? இவை பௌத்தத்தை பெரும் சகிப்புத்தன்மை கொண்ட மதமாகவும், உலக சகதோரத்துவம், உயர் நெறி மற்றும் தர்மத்தை கடைபிடிக்கும் மதமாகவும் காட்டுகின்றன. இது சுயநலமோ, வகுப்புப்பிரிவினையோ அல்லது சகிப்பின்மையோ கொண்டதாக எங்கும் ஒரு சுவடும் இல்லை. அந்த கல்வெட்டுகள் மேற்கின் பெரும் பண்டிதர்களால் மரியாதையுடன் போற்றப்படுகின்றன. 294. தர்மசோகா என அழைக்கப்படும் அசோகர் பௌத்தத்திற்கு அளித்த மதிப்புமிக்க பரிசென்ன? தன் அன்பிற்குரிய மகன் மஹிந்தா மற்றும் மகள் சங்கமித்ரையை புத்த சங்கத்திற்கு அளித்தார். மேலும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தை அறிமுகம் செய்வித்தார். 295. இந்த உண்மை தகவல் சிலோனின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளதா? ஆம். அரசு நிகழ்வுகளை பதிவுசெய்யும் மகாவம்சம் என்னும் நூலில் சமயப்பரப்பாளர்களின் பணியை நேரில் கண்டவர்களால் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. 296. சங்கமித்ரை மேற்கொண்ட சமயப்பணி குறித்தான ஆதாரம் ஏதேனும் இன்றுள்ளதா? உள்ளது. அவர் சிலோன் செல்கையில் புத்தர் எந்த போதி மரத்தடியில் ஞானமடைந்தாரோ அதே மரத்தின் ஒரு கிளையை தன்னுடன் கொண்டுசென்றார். அது இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறது. 297. எங்கு? அனந்தபுரம் என்னும் இடத்தில். அதன் வரலாறு இன்றும் அதிகாரபூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. பொ.மு. 306-ல் நடப்பட்ட இம்மரமே வரலாற்றில் பதிவாகிய பழம்பெரும் மரம். 298. அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த பேரரசர் யார்? தேவனாம்பிரியா தீசா. அவரின் துணைராணி அனுலா சங்கமித்ரையை வரவேற்று பிக்குணிகளுக்கான சங்கத்தை நிறுவுமாறு கூறினார். 299. சங்கமித்ரையுடன் வந்தவர்கள் யார்? பல பிக்குணிகள் உடன்வந்தனர். அவர் குறுகிய காலத்தில் அரசியையும் மற்றும் அவருடன் இருந்த மகளிர்களையும் மேலும் ஐந்நூறு கன்னி பெண்களையும் சங்கத்தில் உட்புகுத்தினார். 300. அசோகரின் மறைபணியாளர்கள் அந்நிய நிலத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்னென்ன? அவரின் மகனும் மகளும் பௌத்தத்தை இலங்கையில் அறிமுகம் செய்தனர். அவரின் துறவிகள் பௌத்தத்தை வடஇந்தியா மற்றும் தங்களின் எல்லைக்கப்பாற்பட்ட பதினான்கு இந்திய நிலங்களிலும், ஐந்து கிரேக்க அரசர்களுக்கும் மற்றும் ஏற்கனவே தங்கள் சமய பணியாளர்களை அனுமதிக்கும் ஒப்பந்தம் கொண்ட நட்பு நாடுகளுக்கும் கொண்டுசென்றனர். 301. அவர்களை பெயர் கூறமுடியுமா? சிரியாவின் அண்டியோசிஸ் (Antiochus), எகிப்தின் படோலேமி (Ptolemy), மாசிடோனின் ஆன்டிகோன்ஸ் (Antigonus), சிரேனின் மர்கஸ் (Margas), எபிரோசின் அலெக்ஸாண்டர் (Alexander). 302. இதை எங்கே அறிந்துகொள்வது? பேரரசர் அசோகர் அவராலேயே பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலும் கல்தூண்களிலும் உள்ள அரசாணைகளில் காணலாம். அவை இன்றும் அவ்விடங்களுக்கு செல்வோர் அனைவரும் காணும்வகையில் நிலையாக இருக்கின்றன. 303. மேற்கின் எந்த இணை மதங்களோடு புத்த தர்மம் மேற்கத்திய சிந்தனையோடு ஒன்றுசேர்கிறது? எகிப்தின் தேராபெட்ஸ் (Therapeuts) மற்றும் பாலஸ்தீனத்தின் எஸ்சென்ஸ் (Essenes). 304. சீனாவில் பெளத்த நூல்கள் எப்போது அறிமுகம் செய்யபட்டன? சமந்த பசதிக்க (samanta pasadika) மற்றும் சாரத்த திபானி (sarattha dipani) ஆகிய இரண்டு பாலி நூல்கள் பொ.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தர்மசோகரின் ஐந்து பிக்குகளால் சீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன என கூறப்படுகிறது. 305. எங்கிருந்து எப்போது கொரியா தேசத்திற்குள் சென்றது? சீனாவிலிருந்து பொ.யு. 372-ல் சென்றது. 306. ஜப்பானிய நாட்டிற்கு எப்போது எங்கிருந்து சென்றது? கொரியாவிலிருந்து பொ.யு. 552-ல் ஜப்பானிற்கு சென்றது. 307- எங்கிருந்து எப்போது கொச்சின்சீனா (Cochinchina - வியட்நாம்), ஃபார்மோசா (Formosa), ஜாவா, மங்கோலியா, யோர்கண்ட் (Yorkand), பால்க் (Balk), போகாரா (Bokhara), ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்றது? உறுதியாக பொ.யு. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சென்றது. 308. இலங்கையிலிருந்து எங்கெங்கே எப்போது பௌத்தம் பரவியது? பொ.யு. 450-ஆம் ஆண்டில் பர்மாவிற்கும், பின்னர் அங்கிருந்து படிப்படியாக அரகன் (Arakan), கம்போயா (Kamboya) மற்றும் பெகுவிற்கும் (Pegu) பரவியது. ஏழாம் நூற்றாண்டில் (பொ.யு. 638) சியாமிற்கும் (தாய்லாந்து) பரவியது. அன்று முதல் இன்று வரை அது சியாமின் அரச மதமாகவே உள்ளது. 309. காஷ்மீரிலிருந்து சீனா தவிர்த்து கூடுதலாக வேறெங்கு பரவியது? நேபாளம் மற்றும் திபெத். 310. ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இருந்த பௌத்தம் ஏன் இப்போது இந்தியாவில் அழிவின் நிலையிலுள்ளது? துவக்கத்தில் பௌத்தம் ததாகதரின் போதனைகளின் புனிதமும் உன்னதமும் கொண்டிருந்தது; சங்கம் உயர் ஒழுங்குடனும் தர்ம விதிகளை பின்பற்றியும் நடந்தது; அது எல்லோர் மனதையும் வென்று காலை ஒளி மலர்களை உயிர்த்தெழுப்புவது போல பல நாடுகளெங்கும் மகிழ்ச்சியை பரவ செய்தது. ஆனால் சில நூற்றாண்டுகள் கழிந்து தீய பிக்குகள் உபசம்வதா (துறவு) ஏற்றனர், அதன்பிறகு சங்கத்தில் செல்வமும், சோம்பலும் மற்றும் புலன் நாட்டமும் வந்துசேர்ந்தது, தர்மம் நலிவுற்றது. ஆகவே இந்திய தேசம் அதை கைவிட்டது. 311. இந்த வீழ்ச்சி வெகு விரைவாக நடைபெற பொ.யு ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் ஏதேனும் நடந்ததா? ஆம் 312. ஆன்மீகத்தில் ஏற்பட்ட குறைபாடு, சங்கத்தின் சீரழிவு, மற்றும் உயர் விழுமியம் கொண்ட மக்கள் பின் மூடத்தனமான உருவவழிபாட்டிற்கு மாறிய விளைவு இவைகளல்லாமல் வேறேதும் காரணங்கள் உண்டா? ஆம். இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்சல்மான்கள் தாங்கள் சென்ற இடெமெல்லாம் பெரும் சேதம் உண்டாக்கி எங்கள் மதத்தை இல்லாமலாக்கினர். 313. எத்தகைய கொடுஞ்செயல் அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ளது ? எங்கள் விஹாரைகளை எரித்து அல்லது இடித்துத்தள்ளி அழித்தனர், பிக்குகளை கொன்றழித்தனர், எங்கள் புனித மத நூல்களை நெருப்பிற்கு இரையாக்கினர். 314. நம்முடைய நூல்கள் மொத்தமாக இந்தியாவில் அழிந்துவிட்டதா? இல்லை. பல பிக்குகள் எல்லை கடந்து திபெத் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கள் நூல்களுடன் தஞ்சமடைந்தனர். 315. சமீப காலங்களில் இந்த புத்தகங்கள் பற்றி ஏதேனும் தடயங்கள் கண்டறியபட்டதா? ஆம். ராய்பகதூர் சரத்சந்திரதாஸ் என்னும் வங்காள அறிஞர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை திபெத்தின் நூலகங்களில் கண்டு அவற்றில் மிகவும் முக்கியமானவற்றை நகல் எடுத்து தன்னுடன் கொண்டுவந்தார். அவர் தற்போது இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு அப்புதகங்களை தொகுத்து பிரசுரிக்கும் பணியில் உள்ளார். 316. எந்த நாட்டில் துவக்ககால பௌத்ததின் புனித நூல்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு குறைந்த அளவே சிதைக்கப்பட்டுள்ளது என நாம் நம்புவதற்கு காரணமாகிறது? இலங்கை. பிரிட்டானிக்காவின் கலைக்களஞ்சியம் இப்படி சொல்கிறது “இந்த தீவில் பௌத்தம் அதன் அப்பழுகற்ற தூய நிலையில் இந்த நவீன காலத்திலும் தக்கவைக்கப்பட்டுள்ளது”. 317. நவீன காலகட்டத்தில் பிடகங்கள் திருத்தம் செய்யபட்டுள்ளனவா? ஆம். இலங்கையில் மிகவும் கவனமாக சுமங்கலா (H Sumangala) மற்றும் பிரதன ஸ்தவீரா (Pradhana sthavira) ஆகியோரின் தலைமையில் கற்றறிந்த பிக்குகளால் பொ.யு 1875-ல் வினய பிடகம் திருத்தம் செய்யப்பட்டது. 318. தெற்கு மற்றும் வடக்கு என பிரிவாக உள்ள பெளத்த நாடுகள் பௌத்ததின் நன்மைக்காக தங்களுக்குள் நட்பார்ந்த உறவு கொள்வதுண்டா? பொ.யு. 1891-ல் இந்த இருபெரும் பிரிவினரின் ’பிரதான நாயகர்’களிடையே பதினான்கு கருத்துக்கள் பௌத்தத்தின் அடிப்படை நம்பிக்கை கூறுகளாக ஏற்கப்பட்டு இருபிரிவினரும் கற்க வேண்டும் என்ற வெற்றிகரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலோனல் ஆல்காட் அவர்களால் வரைவு செய்யப்பட்ட இக்கருத்துக்கள் பர்மா, சிங்களம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொன்றாக விவாதித்து தலைமை பிக்குகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டு கையொப்பம் பெற்று தை மாதம் 1892 ஆம் ஆண்டு பிரசுரமானது. 319. இதனால் என்ன நல்விழைவு ஏற்பட்டது? இருவருக்குமான நற்புரிதலின் விழைவால் எண்ணற்ற ஜப்பானிய பிக்குகள் மற்றும் சமநேரர்கள் (புதிய ஆண் பிக்கு மாணவர்கள்) சிலோன் மற்றும் இந்தியாவிற்கு பாலி மற்றும் சமஸ்கிருதம் பயில அனுப்பப்பட்டனர். 320. புத்த தர்மம் பௌத்தம் அல்லாத நாடுகளிலும் பிரபலம் ஆவதற்கான தடயங்கள் ஏதேனும் உள்ளதா? உள்ளது. எங்களின் மதிப்புமிக்க நூல்களின் மொழிபெயர்ப்புகள் மற்றும் பல கட்டுரைகள் சிற்றிதழ்களிலும் நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்படுகிறன்றன. மற்றும் சிறப்பான சமய ஆய்வுக்கட்டுரைகள் தலைசிறந்த எழுத்தாளர்களால் அச்சிதழ்களில் வெளியிடப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கு நாடுகளில் பௌத்தர்களும் அல்லாதவரும் பெளத்த கருத்துக்களை பொதுவெளியில் பெரும் கூட்டத்தின் முன் சொற்பொழிவு செய்கின்றனர். ஷின் ஷூ (shin shu) பிரிவை சேர்ந்த ஜப்பானிய பௌத்தர்கள் ஹொனோலுலு, சான்பிரான்ஸிஸ்கோ, சக்ரமெண்டோ மற்றும் பிற அமெரிக்க நிலங்களில் தங்கள் சமயகுழுக்களை அமைத்துள்ளனர். 321. நம்முடைய எந்த இரண்டு முதன்மை கருத்துக்கள் மேற்கத்திய மனதை ஆக்கிரமித்துள்ளது? கர்மா மற்றும் மறுபிறப்பு. இதனை அவர்கள் ஏற்றுகொண்டதன் விரைவு ஆச்சர்யமயளிக்கிறது. 322. இந்த ஏற்பிற்கான விளக்கம் எது என நம்பப்படுகிறது? அவை இயற்கையாக உள்ளுறைந்திருக்கும் அறத்திற்கு முக்கியத்துவம் தருவதும் மற்றும் அவற்றின் தெளிவான நியாயத்தன்மையுமே காரணம். ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி ஹென்றி ஸ்டீல் ஆல்காட் விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/11/buddhism.html
  19. அடிப்பதற்கு ஒரே ஒருவன் இருந்தால் அடித்து விடலாம்…. வெளுப்பதற்கு ஒரே ஒருவன் இருந்தால் வெளுத்து விடலாம்…. ஆனால் இருப்பதோ சீமானும்…சாராய சிறியும் 🤣 நான் என்ன செய்வேன்…
  20. மாவீரர் நாளை கொண்டாட அனுமதித்ததாக கூறி அனுரவுக்கு ஏன் சாராயக்கடை சிறி மாவீரர் நாள் நடக்க முன்பே அவசரப்பட்டு நன்றி நக்கினார்? மேலே குசா அண்ணை கூறியது போல இனவாதம் அப்படியேதான் இருக்கிறது. தாம் ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப - அனுரவுக்கு வெள்ளை அடிக்கிறனர் சாராய சிறி போன்றோர். இது 2ஜி வழக்கில் இருந்து தப்ப கருணாநிதி ஆடிய நாடகத்தின் சின்ன வேர்ஷன்.
  21. சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாமல் கருணாரத்ன, அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196627
  22. இந்த சேரமான் என்ற ரஞ்சித் 1999 ல் ஐபிசியின் பணிப்பாளராக கடமையேற்க வந்த போது ஐரோப்பிய தமிழ் ஊடகத்துறையை கட்டியெழுப்ப தலைவரால் அனுப்பட்ட ஜாம்பவான் என்று புகழப்பட்டார். ஒவ்வொரு வாரமும் நேயர் கேள்விக்கான பதிலில் மக்களுக்கு தேசபக்தி பாடம் எடுப்பார். ஆனால் உண்மையில் நடந்தது வேறு. உயர்தரத்தையும் நடுநிலைத் தன்மையையும பேணிய ஊடகமாக இருந்து போராட்டத்திற்கு பலம் சேர்தத ஐபிசியை வெறும் இயக்க பிரச்சார ஊடகமாக வெளித்தோற்றத்தை ஏற்படுத்தி ஐபிசி உருவாக்கப்பட்ட முக்கிய நோக்கத்தையே கெடுத்து ஐபிசியை குட்டிச்சுவர் ஆக்கியது இவர் தான். இப்போது காலங்கடந்த பின்னர் தான் தெரிகிறது, “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி” என்ற கூற்று எவ்வளவு உண்மையானது என்பது. இவர் ஒரு உதாரணம் மட்டுமே.
  23. பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE எழுதியவர், ஃபே நர்ஸ் பதவி, பிபிசி செய்திகள் தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா‌ மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார். தன்னை‌ப் பெற்ற தாயாக‌ இருக்கலாம்‌ என்று நினைத்த பெண்ணை கடைசியில்‌ கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது‌ தெரிந்தே இருந்தது. ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. "தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினார், கூச்சலிட்டார். என்னுடன் பேச எதுவும் இல்லை" என்று அவர்‌ பேசியதை நினைவுகூர்ந்தார் தமுனா. அந்த பெண்ணின் பதிலால் வருத்தமடைந்ததை விட, தான் வியப்படைந்ததாக என கூறினார் தமுனா. "நான் எதற்கும் தயாராகவே இருந்தேன். ஆனால் அவருடைய எதிர்வினை என்னால் கற்பனை செய்ய முடியாததாக இருந்தது" என்கிறார் 40 வயதான தமுனா. ஆகஸ்ட் மாதத்தில் தனது தாயை தொலைபேசியில் அழைத்தபோது, அவரது தாய் தன்னை விரும்பவில்லை என்பது தமுனாவுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் தமுனா தனது முயற்சியைக் கைவிடவில்லை. தன்னைத் தத்துக்கொடுத்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள விரும்பினார். மேலும் முக்கியமாக, தனது தாய்க்கு மட்டுமே தெரிந்த தன் தந்தையின் பெயரை அறிய விரும்பினார். பெற்றோரை அறிந்துகொள்ளும் தமுனாவின் தேடல் 2016-ல் தொடங்கியது. தன்னை வளர்த்த தாய் மறைந்த பிறகு, அவரது வீட்டை ஒரு முறை சுத்தப்படுத்திய போது, தனது பெயரில் இருந்த பிறப்புச் சான்றிதழைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதில் தனது பிறந்த தேதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்ட பிறகு, தான் தத்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்‌ தமுனாவிற்கு ஏற்பட்டது. சில தேடல்களை மேற்கொண்ட பிறகு, தன்னை பெற்றெடுத்தவர்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையோடு, “வெட்ஸெப் (Vedzeb)” (“நான் தேடிக்கொண்டிருக்கிறேன்”) என்ற பேஸ்புக் குழுவை தொடங்கினார். தனது பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, அவர் ஜார்ஜியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதித்து வந்த குழந்தை கடத்தல்களை வெளிக்கொண்டுவந்தார். பல ஆண்டுகளாக, பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பொய் சொல்லப்பட்டு, அந்த கைக்குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன என்பது அதில் தெரியவந்தது. தமுனா ஒரு பத்திரிகையாளர். அவரது செயலால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன. ஆனால் அதுவரை, அவரால் தனது சொந்த பிறப்பின் மர்மத்தை தீர்க்க முடியவில்லை. மேலும் தானும் அவ்வாறு திருடப்பட்ட குழந்தையோ என்று அவர் வியந்தார். பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE படக்குறிப்பு, தனது உறவினருடன் தமுனா. திருப்புமுனையாக அமைந்த ஃபேஸ்புக் செய்தி ஒரு கோடை நாளில் பேஸ்புக் குழுவின் மூலம் கிடைத்த ஒரு தகவல், தமுனாவின் தேடலில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த செய்தி ஜார்ஜியாவின் கிராமப்புறத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து வந்திருந்தது. 1984 செப்டம்பரில் தபலீசியில்,‌ தான் கருவுற்றதை மறைத்து, குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண்ணைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே பொது வெளியில், தான் பிறந்த நேரம் என தமுனா பகிர்ந்திருந்த நேரத்தை ஒட்டியே அதுவும் இருந்தது. தகவலை அனுப்பிய அந்த நபர், தான் அறிந்த அந்த பெண்தான் தமுனாவின் தாய் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். மிக முக்கியமாக, தமுனாவின் தாய் என நம்பப்பட்ட அந்தப் பெண்ணின் பெயரையும் கூறினார். உறுதி செய்த டிஎன்ஏ பரிசோதனை தமுனா உடனடியாக இணையதள பக்கங்களில் அந்தப் பெண்ணைத் தேடினார். ஆனால் அவரைக் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால், ‘அவரை யாருக்காவது தெரியுமா?’ என்று கேட்டு பேஸ்புக்கில் பதிவிட்டார். அந்தப் பதிவைப் பார்த்த ஒரு பெண் விரைவில் பதிலளித்தார். கருவுற்றதை மறைத்த அந்தப் பெண் தனது சொந்த அத்தை என்றும், அந்த பதிவை நீக்குமாறும் தமுனாவிடம் அவர் கூறினார். மேலும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருந்த நேரத்தில்தான் தனது தாயை தொலைபேசியில் அழைத்திருந்தார் தமுனா. ஒரு வாரம் கழித்து, டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகள் வந்தன. தமுனாவும் பேஸ்புக்கில் தொடர்புகொண்ட அந்தப் பெண்ணும் உண்மையில் உறவினர்கள் என்பதைக் கண்டறிந்தனர். இதை ஆதாரமாக வைத்து , உண்மையை ஒப்புக்கொள்ளவும், தன் தந்தையின் பெயரை கூறும்படியும், தமுனா தன்னை பெற்ற தாயை சம்மதிக்க வைத்தார். தந்தையுடன் இணைந்த தமுனா பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE படக்குறிப்பு, தனது தந்தையை சந்தித்த போது தமுனா அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் பின்னர் ‘குர்கன் கொரவா’ என்பவரே தனது தந்தை என்பதை தமுனா கண்டறிந்தார். "இந்த சம்பவம் நடந்த முதல் இரண்டு மாதங்கள் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவர்களைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை." என்கிறார் தமுனா. குர்கனின் பெயரைத் தெரிந்து கொண்டவுடன், தமுனா அவரை பேஸ்புக் மூலம் விரைவிலேயே கண்டுபிடித்தார். தமுனாவின் சமூக வலைதளப் பதிவுகளை குர்கன் பின்தொடர்ந்து வந்ததும் பின்னர் தெரியவந்தது. குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் தமுனாவின் பணி ஜார்ஜியா நாட்டில் பரவலாக அறியப்பட்டிருந்தது. ''அவர், என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் மூன்று வருடங்களாக இருந்திருக்கிறார்" என்று ஆச்சரியமாக கூறுகிறார் தமுனா‌. "என்னைப் பெற்ற தாய் கருவுற்றிருந்தது கூட அவருக்குத் தெரியாது" என்று கூறிய தமுனா, "அவருக்கு‌ இது மிகவும் வியப்பாக இருந்தது" என்றார். தபலீசியில் அவர் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 160 மைல் தொலைவில் மேற்கு ஜார்ஜியாவில் உள்ள அவரது சொந்த ஊரான ஜுக்டிடியில், அவர்கள் விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்தனர் . குர்கனுக்கு தற்போது 72 வயதாகிறது. அவரும் தமுனாவும் பார்த்த கணத்தில், இருவரும் ஆர தழுவிக்கொண்டு, பின்பு ஒருவரை ஒருவர் சிரித்தபடி பார்த்துக் கொண்டார்கள். "எனக்கு பல கலவையான உணர்வுகள் எழுந்தன. என்னிடம் பல கேள்விகள் இருந்தன. எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தோம்” என்கிறார் தமுனா. இருபது வீதிகள், பள்ளி, கல்லூரி, நீதிமன்றம் என ஒரு நகரத்தையே உள்ளடக்கிய இலங்கையின் பிரமாண்ட கோட்டை27 நவம்பர் 2024 மனமுடைந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம் இளவரசி; இந்திய நகரில் தொடர்ந்து ஒலிக்கும் அவரது பெயர் - யார் அவர்?25 நவம்பர் 2024 அவர்கள் பேசத் தொடங்கியதும். அவர்களிடம் பல பொதுவான விருப்பங்கள் இருப்பதை அறிந்து வியந்தனர். குர்கன் ஒரு அறியப்பட்ட நடன கலைஞராக இருந்தார். தமுனாவின் மகள்களுக்கும் – அதாவது குர்கனின் பேத்திகளுக்கும் - நடனத்தில் ஆர்வம் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தார். "அவர்கள் இருவருமே நடனத்தில் ஆர்வம் கொண்டவர்கள், எனது கணவரும்தான்," என்று கூறுகிறார் தமுனா. குர்கன் தனது முழுக் குடும்பத்தையும், தமுனாவைச் சந்திப்பதற்காக வீட்டுக்கு அழைத்திருந்தார் - சகோதர சகோதரிகள், பேரப்பிள்ளைகள் மற்றும் மாமாக்கள் அத்தைகள் என பெரிய குடும்பத்தை அவருக்கு‌ அறிமுகப்படுத்தினார். தமுனாவும் அவரது தந்தையும் மிகவும் ஒத்திருப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். "அவரின் எல்லா பிள்ளைகளிலும் நானே தந்தையை அதிகமாக பிரதிபலிக்கிறேன்," என்கிறார் தமுனா. அவர்கள் ஒரு மாலை முழுவதும், கதைகளை பேசியபடி, பாரம்பரிய ஜியார்ஜிய பண்டங்களை உண்டபடி கழித்தனர். தன் தந்தையை சந்தித்த பின்னரும், வேறு ஒரு கேள்வி தமுனாவை உறுத்திக் கொண்டிருந்தது - வேறு பல ஜியார்ஜிய குழந்தைகளைப் போல அவரும் தன்னை பெற்ற தாயிடமிருந்து திருடப்பட்டு விற்கப்பட்டாரா? என்பதே‌ அது. அவரை தத்தெடுத்த பெற்றோர் இப்பொழுது இல்லை, அவர்களிடம் கேட்க வழி இல்லை. பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE படக்குறிப்பு, புதிதாக சொந்தமான தனது சகோதரிகளுடன் தமுனா திருடப்பட்ட குழந்தையா? அக்டோபரில் அவரை பெற்ற தாயிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு போலந்து தொலைக்காட்சி நிறுவனம் தமுனா பற்றிய ஆவணப்படம் பதிவு செய்தபோது, அவரை தாயைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அவரது தாய், தமுனாவை தனிமையில் சந்திக்க ஒப்புக் கொண்டார். அப்போது தான் திருடப்பட்ட குழந்தை அல்ல என்பதை தமுனா அறிந்துகொண்டாளர். மாறாக, அவரது தாய் அவரை கைவிட்டதுடன், அந்த பிறப்பையே 40 ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்தார். தமுனாவின் தாயும், தந்தையும் சிறு சந்திப்புக்கு பின்னர் எவ்வித நீடித்த உறவிலும் இல்லை. கருவுற்றதலை அவமானமாக உணர்ந்த தாய், அதனை மறைக்கத் தீர்மானித்தார். 1984 செப்டம்பரில் அவர் தபலீசிக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாகச் சொல்லி, அங்கே‌ தன் மகளை பெற்றெடுத்தார். தமுனாவின் தத்தெடுப்பிற்கு ஏற்பாடு ஆகும் வரை அங்கேயே தங்கியிருந்தார். தமுனாவின் தாய், தான் ஒரு திருடப்பட்ட குழந்தை என்று வெளி உலகுக்கு பொய் சொல்லும் கேட்டுக் கொண்டுள்ளார். "நீ திருடப்பட்ட பிள்ளை என்று சொல்லவில்லை என்றால், நமக்கு இடையில் எந்த உறவும் கிடையாது" - என அவர் கூறியதாக தமுனா கூறினார். ஆனால் தமுனா அப்படி பொய் சொல்ல ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் தமுனாவின் தாய் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படியும் இனிமேல் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டார். "நான் மீண்டும் இவை எல்லாவற்றையும் செய்வேனா என்று கேட்டால், கண்டிப்பாக செய்வேன், நான் எனது புதிய குடும்பம் குறித்து நிறைய கண்டுபிடித்துள்ளேன்” என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99reeyj88go
  24. சிறு திருத்தம். அவர்கள் பயங்கரவாதச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் என்று கூறவில்லை. பயன்படுத்தப்படாத சட்டத்தினை வைத்திருப்பதில் என்னபயன், அதனை நீக்கிவிடலாமே என்று ஏன் எவரும் இதுவரை கேட்கவில்லை? அதாவது சட்டம் நீக்கப்படப்போவதில்லையென்பதனூடாக, அவ்வபோது பாவிக்கப்படப்போகிறது என்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம். இச்சட்டத்தினை ஊடகவியலாளர்களுக்கெதிராகவும், செயற்பாட்டாளர்களுக்கெதிராகவும் பயன்படுத்துவதையே எதிர்க்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதாவது சட்டம் நீக்கப்படப்போவதுமில்லை, பாவிக்கப்படாமல் இருக்கப்போவதுமில்லை என்பதுதான் உண்மை.
  25. சந்திரிக்கா தொடக்கம் மகிந்த ஈடாக இதே வாக்குறுதிகளை தானே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதை நம்பிக்கொண்டு வாழ்வது யார் தவறு?
  26. அது உண்மை வெறும் வாயாலேயே இப்போ ஊதுகிறார்கள் வெள்ளத்தால் யாழ்பாணத்தில் சாப்பாட்டு பிரச்சனையே இல்லையாம் ஜேவிபி அரசு பாத்து பாத்து உதவி செய்கின்றதாம்
  27. கட்டுரையில் எனக்கு தெரிந்திராத நடந்த பல தகவல்களையும் தெரிந்து கொண்டேன் நன்றி
  28. தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கச் சபதம் எடுத்த பிரபாகரனும், தமிழினத்தையே பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்ட லலித் அதுலத் முதலியும் கென்ட் மற்றும் டொலர் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல் குறித்து தொண்டைமான் மகிழ்வடைந்திருந்தார் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். சில தினங்களுக்குப் பின்னர் இன்னொரு தமிழ் அமைச்சரான தேவநாயகமும் இதே விதமான உணர்ச்சியை வெளியிட்டிருந்தார். ஆனால் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்துவந்த தமிழர்கள் மத்தியிலும் இத்தாக்குதல் வரவேற்பினைப் பெற்றிருந்தது என்று கூறுவதுதான் சரியானது. தமிழ் நாட்டில் இத்தாக்குதல் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டிருந்தது. சில பத்திரிக்கைகள் இத்தாக்குதலை தலைப்புச் செய்தியாகக் காவி வந்தன. என்னைப்பொறுத்தவரையில் கென்ட், டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல் விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான மைல்க்கற்களில் ஒன்று என்று கூறுவேன். இத்தாக்குதல் தமிழரின் உள்ளக்கிடக்கையான "தனியான தேசத்திற்குரியவர்கள் நாங்கள்" எனும் உணர்வினை வெளிப்படுத்தியிருந்தது. 1983 ஆம் ஆண்டின் தமிழின அழிப்பின்போது வெளிப்படாத இந்த உணர்வு கென்ட் , டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலின்போது பீறிட்டுக் கிளம்பியிருந்தது. 83 ஆம் ஆண்டு இனப்படுகொலை தமிழர்களுக்குத் தமது தாயகம் வடக்குக் கிழக்குத் தான் எனும் உணர்வினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இலங்கையின் வடக்குக் கிழக்கில் மட்டுமே தாம் பாதுகாப்பாக வாழமுடியும் என்கிற உணர்வினை 83 இனக்கொலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஆனால் வலி ஓயாச் சிங்களக் குடியேற்றத்தினூடாக தமிழ மக்களின் பாதுகாப்பான தாயக உணர்வினை சிங்களவர்கள் அழிக்கக் கங்கணம் கட்டியிருப்பது அவர்களுக்குப் புரிந்தது. அன்றிலிருந்து தமது தாயகத்தைக் காக்கவேண்டிய தேவையும், உணர்வும் தமிழர்களிடையே பரவி வளர ஆரம்பித்திருந்தது. கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலினூடாக தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டிருப்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொண்டனர். நான் முன்னைய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருந்ததைப் போல, 1974 ஆம் ஆண்டின் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிங்களப் படைகளால் படுகொலைசெய்யப்பட்ட ஒன்பது அப்பாவித் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கான வீரன் ஒருவனைத் தமிழர்கள் தேடிக்கொண்டிருந்தனர். துரையப்பா அரங்கில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்ட உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அனுமதியை இரத்துச் செய்வதனூடாக அன்றைய படுகொலைகளுக்கான சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்த அல்பேர்ட் துரையப்பாவை பிரபாகரன் தண்டித்தபோது அவரை தமது வீரனாக தமிழ மக்கள் அன்று கண்டனர். அவ்வாறே தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பைச் சிதைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றமான வலி ஓயவை அழிப்பதற்குத் தமக்கென்று ஒரு படைத்தளபதி தேவையென்பதை தமிழ் மக்கள் உணர்ந்தனர். அதனைச் செவ்வணே நிறைவேற்றி வைத்த பிரபாகரனை தமிழ் மக்கள் விரும்பி ஆதரிக்கத் தொடங்கினர். சிங்களக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்த அதேவேளை, சிங்கள மக்களை அது ஆத்திரங்கொள்ள வைத்தது. அப்பாவிச் சிங்கள மக்களைப் புலிகள் படுகொலை செய்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். 1996 ஆம் ஆண்டு மாசிமாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் புலிகளால் செய்யப்பட்ட படுகொலைகள் எனும் பட்டியலை வாசித்த அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அநுருத்த ரத்வத்த, அரசால் பதிவுசெய்யப்பட்ட சிங்கள மக்கள் மீதான படுகொலைகளின் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1996 வரையான பட்டியல் என்று அதனை முன்வைத்திருந்தார். தமிழ்ப் போராளி அமைப்புக்களால் சிங்கள மக்கள் மீது நடத்தப்பட்டதாக அரசு கூறும் தாக்குதல்களை மட்டுமே அப்பட்டியல் கொண்டிருந்தது. கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களோடு இப்பட்டியல் ஆரம்பமாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கொக்கிளாய், நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றங்கள் மீதான தாக்குதலும், 1985 வைகாசியில் அநுராதபுரம் மீதான புலிகளின் தாக்குதலும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையென்னவென்றால், கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் பலநூற்றுக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் சிங்கள அரச படைகளாலும், ஆயுதமயப்படுத்தப்பட்ட சிங்களக் காடையர்களாலும் படுகொலைசெய்யப்பட்டே வந்துள்ளனர். அன்று பாராளுமன்றத்தில் ரத்வத்தையால் முன்வைக்கப்பட்ட பட்டியல் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்கள் குறித்து எதனையும் வெளிப்படுத்தவில்லை. ஆண்டாண்டு காலமாக கொல்லப்பட்ட அனைத்துத் தமிழர்களையும் பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துவிடும் அரசாங்கங்களின் கங்கரியத்தையே அநுருத்த ரத்வத்தையின் பட்டியலும் செயற்படுத்தியிருந்தது. கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களை அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே கருதும் என்கிற அரசின் நோக்கத்தினை கென்ட் , டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலின் பின்னர் பாராளுமன்றத்தில் பேசும்போது லலித் அதுலத் முதலி வெளியிட்டார். "யார் பயங்கரவாதி? துப்பாக்கியைப் பயன்படுத்துபவன் பயங்கரவாதியா அல்லது துப்பாக்கியைப் பயன்படுத்துபவனுக்கு அருகில் நின்று ஆதரவு கொடுப்பவன் பயங்கரவாதியா? சிங்களவர்களைக் கொல்வதற்காக துப்பாக்கியை வைத்திருப்பவனுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுப்பவனும் பயங்கரவாதியன்றோ? இராணுவ நடமாட்டத்தைக் கண்காணித்து, பயங்கவாதிகளுக்கு தகவல் கொடுத்து, அந்தப் பக்கம் போகவேண்டாம், இராணுவம் நிற்கிறது என்று கூறுபவனும் பயங்கரவாதிதானே?"
  29. சேர்ந்த காசு போதுமானதால் போலித் துவாரகா வெளிவரவில்லை.
  30. தேசத்தின் இளவரசியின் அறிக்கையை, புலம்பெயர் பட்டாசு ரெஜிமெண்டின் அவுஸ்ரேலிய தளபதி பாலசிங்கம் பிரபாகரன் வெளியிட்டுவிட்டாரா?👀
  31. தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் https://firetamil.com/?p=5799
  32. எத்தனையோ பயிரிடு முறைகள் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன் ஆனால் கொக்கோகோலாவிற்குள் வைத்து அதிவேகமாக எலுமிச்சை மரத்தை உருவாக்கலாம் என்று இவர் சொல்கிறார் , புதுசா இருக்கு. கீழே இலகுவாக தோடை பயிரிடும் முறை, ஆனாலும் இந்த காணொலியில் சிறு சந்தேகமுண்டு, விதைக்காக வைக்கப்பட்ட பழம் எப்படி அழுகாமல் வாடாமல் அப்படியே இருக்கிறது என்பது, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்காமல் சந்தேகம் கொள்வது தப்பென்பதால் இணைக்கிறேன். இது வாழை மரம்
  33. அப்படியென்றால் முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதியில் எப்படி ரிஷாத் பதியுதீனும், மஸ்தானும் வெற்றி பெற்றனர்? எது தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறீர்களா? அப்போ முஸ்லீம்களால்தான் தற்போதைய அரசு ஆட்சியை கைப்பற்றியதா? 76 ஆண்டுகால இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள ஆளும் கட்சியொன்று வடபகுதியில் பெரும்பான்மையாக வென்றதாக சரித்திரமேயில்லை, ஆனால் எந்த யாழ்ப்பாணத்து தமிழனும் எமது பகுதியில் இருந்து ஏன் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று கொந்தளிக்கவில்லை பக்கம் பக்கமாக கட்டுரையெழுதவில்லை. முஸ்லீம் ஒருவரை அமைச்சராக்கினால் அவர் முஸ்லீம்களுக்காக மட்டும் செயல்பட முடியாது, முஸ்லீம்கள் சொல்வதை மட்டுமே நடைமுறைபடுத்த முடியாது. எந்த அமைச்சரும் அரச தலைவரின் கட்டுப்பாட்டிலிருப்பவர், அரச தலைவர் சொல்வதையே நடைமுறைப்படுத்தும் ஒரு பதவியே அமைச்சு என்று இருக்கும்போது அவர் தமிழராகவோ சிங்களவராகவோ முஸ்லீமாகவோ இருப்பதில் என்ன பெரும் பாதிப்பு வந்துவிட போகிறது? உங்கள் அடி மனதில் இருப்பதெல்லாம் முஸ்லீம்களுக்கும் அரசாங்கத்தில் அதிகாரம் இருந்தால் தமிழர் நில ஆக்கிரமிப்பு , பொருளாதார சுரண்டலில் ஈடுபடலாம் என்பதே. ஏற்கனவே அரச செல்வாக்கு பெற்ற ஹிஸ்புல்லா,நசீர், பதியுதீன் துணையுடன் அதை செய்திருக்கிறீர்கள் கொரோனா காலத்தில் முஸ்லீம் உடல்களை எரித்துவிட்டார்கள், இலங்கையில் இனவாதம் மதவாதம் என்று முழங்கிய நீங்கள் தற்போது முஸ்லீம் முஸ்லீம் என்று முழங்குவதற்கு என்ன பெயர்? முன்பும் ஒருதடவை எழுதியிருக்கிறேன், முஸ்லீம் எனும் இனம் எக்காலமும் எவருடனும் ஒற்றுமையாகவோ உளப்பூர்வமாகவோ சேர்ந்து வாழாது, அவர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தாலும் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள். ஒருவன் எதற்கெடுத்தாலும் தகராறு பண்ணிக்கொண்டிருந்தால் அவனை தங்க தாம்பாளத்தில் இந்த உலகம் தாங்காது, மாறாக அவனை தள்ளி வைக்கும். அதுதான் உள்ளூரிலும் உலக அளவிலும் முஸ்லீம்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
  34. தேசியத் தலைவரின் பிறந்த நாளுக்கு கூடுதலான இளம் சந்ததியினர் பங்கு கொண்டு சிறப்பித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. படங்கள் இணைப்புக்க நன்றி நொச்சி.
  35. உண்மை அவர் ஒர் கள செயற்பாட்டாளர் ..எனக்கும் உங்களுக்கும் தெரியும் ஆனால் தமிழ் மக்களுக்கு ...தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் தேசியத்தை காப்பாற்ற சில சீன்களை சந்திரசேகரத்தை விட அதிகமாக செய்ய வேண்டும் ...சந்திரசேகரம் பக்கா இடதுசாரி ... மக்களுக்கு இலகுவாக பூ சுத்துவார்கள் சமத்துவம்,எளிமை என பித்தட்டுவார்கள் சீன் போடுவார்கள் ....பின்பு புட்டின் மாதிரி தாங்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்வார்கள்... நம்ம ஆளுகள் இனி தீயாக வேலை செய்ய வேணும் இல்லை என்றால்...தமிழ் தேசியத்தை சிறிலங்கன்ஸ் குத்தகைக்கு எடுத்து போடுவாங்கள்
  36. தமிழ் ஈழம் கடைசிவரைக்கும் கிடைத்திருக்காது. அதற்கான சாத்தியம் எந்த காலத்திலும் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியில் பலமாக இருந்த போது கூட புவிசார் உலக அரசியலில் தமிழீழம் சாத்தியமற்றதாகவே இருந்தது. ஆனால் ஒஸ்லோ இணக்கப்பாட்டின் படியான உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்சி தீர்வை பரிசீலிக்க இணங்கி பேச்சுவார்ததையை தொடர்ந்திருந்தால் என்ன வகையான மீர்வு கிடைத்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால், இன்றைய நிலையை விட பல மடங்கு சிறந்த நிலையில் தமிழர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதை கூற பெரிய அரசியல் ஆய்வாளனாக இருக்க தேவையில்லை. இயல்பான சாதாரண பொது அறிவு இருந்தாலே அதை விளங்கிக் கொள்ள முடியும்.
  37. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பையா.✍️🎂
  38. அப்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  39. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரப் பையன்!
  40. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பையன்…!
  41. இன்று பிறந்தநாள் கொண்டாடும் @வீரப் பையன்26 தம்பிக்கு வாழ்த்துகள். வளத்துடன் வாழ்க.
  42. ரகுமானின் டைவேர்ஸ் எனக்கு இந்த கதை நினைவுக்கு வந்தது . இந்தக் கதையை படித்துவிட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிக பொறுமையாக கதையை படித்து அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி! மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்தது. தனக்குரியவனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்' என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, "அப்பா... அழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவவேண்டும் அப்பா" என்றாள். 'மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனை தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே.. அது அதைவிட ''சந்தோஷம்' என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான். பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான். இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுங்கள்" என்றாள். பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான். தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலை குறிப்பிட்டான். அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆ லோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், "அப்படியே செய்கிறேன் குருவே!" என்றான். அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?" என்று கேட்டான். சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்... அரசே அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் அஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத் தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை" என்றார்கள். விபரத்தை குறித்துக்கொண்டான் மன்னன். மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, "உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக்கொண்டு சவாரி. செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்கமுடியும்” என்று அறிவித்தான். இந்த போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறு வயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள். ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு போட்டிக்கு ஒப்புக்கொண்டாள். குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்யவேண்டிய சிலவற்றை குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்யவேண்டியதை பற்றியும் விவரிக்கப்பட்டது.' மகளை நோக்கி, "போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்கவேண்டும்" என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சு கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு" என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு ஏற்பாடானது. முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையை சுற்றி சுற்றி வந்தான். குதிரையின் பிடரியை பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கிவிட்டான். இளவரசியின் கையை பற்றி அனைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு” என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான். "கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும்போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்கவேண்டும்.. இது தான் என்னோட பாலிஸி" என்றான் இளவரசியை பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு.. மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றி கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்யமுடியும்" என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது. நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றி கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது. உடனே எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும் என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்த குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்துவிட்டான். ஓவியத்தில் தன் அழகை பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தை பற்றி சொல்லப்பட்டது குதிரையை சுற்றி வந்து தடவிக்கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக்கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக்கொண்டு எழுந்தான். நேரே இளவரசியிடம் சென்று "வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். "வேண்டாம்... எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்...." “பரவாயில்லை... அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளிவிட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா.." என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக்கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு தெரிந்தவுடன், தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான். இளவரசி... "வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு... வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு" என்று அச்சத்தில் தயங்கினாள். "பயப்படாதே... நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்" என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சிதான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் "வீல்" என்று அலறிவிட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள். காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்றுவிட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள். அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி. "எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்துவிட்டாயா?" "அப்பா... எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்." என்றாள். என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றிபெறவில்லை. ஒவ்வொருவரும் "என்ன செய்யலாம்? நீயே சொல். "எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்துவிடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்". "சரியம்மா... உனக்கு பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்." என்றான். தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான். போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே... எப்படி தந்தை இவரை தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள். "என் முடிவை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா அம்மா?" என்றான் மகளை நோக்கிய அரசன். "இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்". அரசன் சொன்னான்... "முதலாவதாக வந்தவன் மிக சிறந்த குதிரையேற்ற வீரன் திறமைசாலி, ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் எதுவும் இல்லை". இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது." மூன்றாமவன் உன்னை சற்று களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும்போது கூட உனக்கு அந்த களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்துவிட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்! "நான்காம் நபர் மிக பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக் கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை." "ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளை புரிந்துகொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதை போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக்கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!" என்றார். “வாழ்க்கை துணை' என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே 'வாழ்க்கைத் துணை' என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர். புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கி கொண்டிருக்கிறார்கள் , அல்லது கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்கள்..
  43. லெப்ரினன்ட் புகழினி புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் "லொட லொட" என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு "தெண்டித் தெண்டி"சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள்.எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்....பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவான குள்ளமான உருவத்தை உடையவள்.இதனால் அவள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது.உதாரணத்துக்கு சைக்கிள் ஓட்டுவதற்குக் கூட ஏதாவது ஒரு புட்டியான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள். எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.அம்மா,அப்பா,தம்பி,அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது.அவளது சொந்தப் பெயர் மேரி கொன்ஸ்ரலின்.வீட்டில் ஒரேயொரு பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.அவளது சொந்த இடம் வலிகாமப் பகுதியில் சில்லாலை என்ற கிராமம்.அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதின் காரணத்தினால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. 1994 க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்தது.வலிகாமப் பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த போது எமது போராட்டத்தின் உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்,யுவதிகள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் "வண்ணக் கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்....இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்....பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்"என்று 1995ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.அங்கு அவள் மகளிரணியின் 30ஆவது பயிற்சிப் பாசறையில் புகழினி எனும் நாமத்துடன் போராளியாக புடம் போடப்பட்டாள். பின்பு 1995ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து பால்மா கணக்காய்வு அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற் கொண்டாள்.அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக் கொண்டாள். தற்காப்புக்கலையிலும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றவள்.அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம்(break dance)ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் முறிப்பு நடனமாடி அவள் தான் கதாநாயகியாக திகழ்வாள்.மேலும் அவள் வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது. 1996ஆம் ஆண்டு ஆரம்ப காலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா கணக்காய்வு அணியில் கணக்காய்வு பணி மேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.அதில் சிலவற்றை அவளது ஞாபகமாக பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன். 1996ஆம் ஆண்டு வன்னிக்கு வந்த புதுசில நானும் புகழினியும் மருந்து பால்மா கணக்காய்வு அணியில் தான் கணக்காய்வை மேற் கொண்டோம். எங்களுக்கு பணிக்குச் செல்வதற்கு சைக்கிள் கூட இல்லை.நானும் புகழினியும் சைக்கிள் இல்லாத காரணத்தினால் நடராசாவில்(நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர் வைத்து தான் கூப்பிடுவோம்.புகழினிக்கு "பேணி"தான் பட்டப் பெயர்.(எந்த நேரமும் "லொட லொட" என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு "பேணி" என்ற பட்டப் பெயர் உருவானது).என்னைப் பேணி "அரியத்தார்" என்று தான் கூப்பிடுவாள்.பின்பு பணிக்குச் செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு சைக்கிள் என்ற ரீதியில் கொடுக்கப்பட்டது.அதில் நானும் பேணியும்(புகழினி)தான் ஒன்றாக பணிக்குச் செல்வோம்.வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்வேன். நாங்கள் பணி முடித்து விட்டு மதிய உணவு நேர இடை வேளைக்கு முகாமில் சென்றுதான் சாப்பிடுவோம்.அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவிற பஞ்சியில நானும் புகழினியும் ஒரு தட்டில தான் உணவு உண்ணுகின்றனாங்கள்.சாப்பிட்ட தட்டைக் கழுவோணும் என்ற கள்ளத்தில நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளி விட்டு ஓடி விடுவேன்.அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப் போட்டு வருவாள்.அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலே எனக்கு பெரிய ஒரு சந்தோசமாக இருக்கும். 1997ஆம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகுதி கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப் பட்டோம்.எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள்.அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவமும்,இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள். அதனாலேயே அவளை எந்நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுது போக்கு. உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.எங்கள் முகாம் முற்றத்திலே பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தூரம் மட்டும் என்ன நடந்தாலும் தெரியும்.அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேல ஏறி அமைதியாக இருந்து படிக்கிறம் என்று கதை விட்டு மாமரத்துக்கு மேல ஏறி இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு படிப்பதுண்டு.புகழினிக்கு மாமரத்தில எங்களோட சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க ஆசை....ஆனால் ஏறத் தெரியாது.அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளி விட்டு ஒரு மாதிரி ஏற்றிப் போடுவோம். மேலேயிருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில இருக்கிற மாம்பிஞ்சுகளால றோட்டால மோட்டார் சைக்கிளில போற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று விட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவினம். ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்கு பார்த்து எறிய தெரியாது.அவள் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாம்பிஞ்சால எறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால சைக்கிளிலே வந்த அப்பு மேல பட்டு அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால எறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நான்கு பேரும் நூறு தோப்புக் கரணம் போட்டதை இப்பவும் மறக்க முடியாது. புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்.நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.எங்களது முகாமில் இருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும் போது சாப்பிடுவதற்கு நிறைய உணவுப் பொருட்கள் கொண்டு வந்து தருவதுண்டு.அதை தமா அன்ரா தான்(ஒரு அக்காவின் பட்டப் பெயர் தான் தமா அன்ரா)எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார்.அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் ( இலாச்சி) பதுக்கி வைப்பார்.அதில் கடைசி இலாச்சிக்கு மட்டும் தான் பூட்டு உள்ளது.மற்றைய இரண்டு இலாச்சிகளுக்கும் பூட்டு இல்லை.தமா அன்ரா கடைசி இலாச்சியில் வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லாத மேல் இலாச்சியைக் கழட்டிப் போட்டு கீழ் இலாச்சியில் உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.புகழினியை இதுக்கு கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்.சாப்பிட்டால் பிறகு தமா அன்ராவிடம் நல்ல கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு.(எங்களுக்கு எவ்வளவு கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விசயத்தில சொரணை வராது). எங்கட முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரமும் உண்டு.அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு.எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில தான் இருக்கிறவர்.அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழம் காய்த்து இருக்கிறது என்று கண்காணிச்சுக் கொண்டு தான் இருப்பார்.எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்.ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவிப் போட்டு அந்த பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சாப்பிடுவதுண்டு.இந்தப் பலாப்பழம் பிடுங்குகின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட இரவு நேரக்காவற்கடமை நேரத்தில் தான் நிகழும். மற்ற குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில இருக்கிற அலாதிப் பிரியத்தில இதுக்கு மட்டும் எங்களோட கூட்டுச் சேருவாள்.பலாப்பழம் ஏறிப் பிடுங்கவோ வெட்டவோ வரமாட்டாள்...நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுக் களவாணிகளை(முகாமில இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்த நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை...பல விசுவாசக்குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக் கொடுத்து விடுவினம் என்ற பயம்)நித்திரையில் இருந்து எழுப்பிக் கூட்டி வந்து அவைக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள். இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டு பலாச்சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார அக்கா முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பின கதையை இப்பவும் மறக்க முடியாது.(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விசயங்களில எங்களுக்குத் தண்டனை தருவது இல்லை).இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப் பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத் தான் வாழ்ந்து வந்தார்கள்.பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால் புகழினியின் அப்பாவிற்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குக் கூடக் கஷ்டப்பட்டார்கள்.புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததாலே யோசித்து யோசித்து இருதய நோய் மற்றும் ஆஸ்துமா நோய் பீடிக்கப் பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்.அப்பா தான் ஓலைப் பாய்,பெட்டி இழைத்து விற்றுபிழைப்பு நடத்தி வந்தார்கள்.புகழினியின் தம்பியோ மிகவும் சிறிய பையன்.அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்குச் செல்லும்போது புகழினியின் அம்மா"என்ரை மகள் வீட்டை இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களைப் பார்த்திருக்கலாம் தானே" என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.ஆனால் புகழினியோ "வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்குத் தேவை தானே"உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே என்று சொல்லி சிரித்து சமாளித்து விடுவாள். புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக(album) வைத்து இருந்தாள்.சில போராளிகள் வீட்டில "அம்மாவாணை "என்று சத்தியம் செய்வதைப் போல இயக்கத்திலே "அண்ணையாணை "என்று கதைப்பதுண்டு.அது புகழினிக்குப் பிடிக்காது.சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதையுங்கோ என்பாள். எங்களின் பொறுப்பாளர் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவளைச் சண்டைக் களங்களுக்கு அனுப்புவதில்லை.1999ஆம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப் பகுதிக்குச் சண்டைக் களத்திற்குச் சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அவரோடு சண்டை பிடித்து சண்டைக் களத்துக்குச் சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்கு திரும்பினாள். பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக உடற் குறையுள்ள விழுப்புண்ணடைந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர்ப் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.எங்களுக்கும் களப்பணிகளில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப் பணிகளுக்குச் சென்று வருவோம்.எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளி நிர்வாகப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த படியால் அவர்களுடன் சேர்ந்து பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் எம் மக்களின் காவற் தேவதையாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள். 29.05.2000அன்று எங்களுக்கு "புகழினி வீரச்சாவாம் " என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம்.பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிரியின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரமரணத்தைத் தழுவிக் கொண்டாள். பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி கேட்டு புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்குச் சென்றோம்.அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.அதைவிட புகழினியின் அப்பா என்னைப் பார்த்து "பிள்ளை உன்னோட தானே என்ரை மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய் என்ரை மகள் எங்கே"என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுததும் நானும் குற்றவுணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.பின்பு2002ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் வைத்தியசாலையில் நான் பணியை மேற்கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்திற்கு (சில்லாலைக்கு)செல்லப் போறோம் என்று சொல்லி விட்டு "என்ர பிள்ளையில்லாமல் போகப் போறேன் "என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது. எங்களின் அன்புத் தோழி புகழினியே.... உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க எந்நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள்,தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன் நடைப்பிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டு உயிர் இருந்தும் ஜடமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இப்பொழுதும் நீ என்னை "அரியத்தார்" என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன் கதை எழுதி வைக்கப்படும். -தமிழ்நிலா. மிக்க நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.