Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    7051
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19123
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    31977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/06/24 in all areas

  1. "நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஒரு பாரிய மருத்துவ காப்புறுதிக் கம்பனியின் தலைமை நிர்வாகியை குறி வைத்துச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பயன்படுத்திய ரவையின் கோதுகளில், deny, defend, depose என்ற சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இவை, அமெரிக்காவின் இலாப நோக்கம் கொண்ட மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள், premium பணத்தை வாங்கிக் கொண்டு, நோயாளியின் மருத்துவத் தேவைக்கு உதவாமல் இலாபமீட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு தொழில் தந்திரம். இப்படி நோயாளிகளுக்கு சேவைகள் (claims) மறுக்கப் படுவதால் வரும் இலாபத்தில் பெரும்பகுதி, கொல்லப் பட்டவர் போன்ற நிறைவேற்று அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான போனசாக வழங்கப் படும். பாதிக்கப் பட்ட நோயாளிகளின் சார்பில் யாரோ சுட்டிருக்கிறார்கள். இனி அந்த மில்லியன் டொலர் போனசை என்ன செய்வது? தங்கத்தால் இழைத்த சவப்பெட்டி செய்வதா? எனவே, இளையோர் கவனிக்க வேண்டியது: வருமானம் எவ்வளவு வருகிறது என்பதை விட, வருமானம் ஈட்டிக் கொண்டே இரவில் நிம்மதியாக உறக்கம் வரும் வகையான தொழில்களைத் தேடிக் கொள்ளுங்கள்.
  2. இவரும் ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சினை இப்போதுவரைக்கும் நீண்டிருக்காது. “நிரூபித்தால் எம்பி பதவியை துறப்பேன்“ என்று சொல்லிவிட்டு போட்டோவுக்கு நமட்டுச் சிரிப்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால் விடயம் அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.
  3. நல்ல முன்னேற்றம். பிரித்தானியாவில் ரொனி பிளேயரின் அமைச்சரவையில் விழிப்புலன்ற்றவர் “ஹோம் செக்கிரட்டியாக” (Home Secretary) இருந்துருக்கின்றார்.
  4. அரசியலமைப்பு கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டியவர். அரசியலமைப்பு உருவாக்க குழுவுக்கு துறைசார் ஆலோசனைகளை வழங்கும் பேராசானாக இருக்கவேண்டியவரை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணித்திருக்கிறார்கள். இருந்தாலும் இவரின் புலமையின்றி அரசியலமைப்பை வரையமுடியாது என்ற உண்மையை மனமார உணர்ததால் பின்கதவால் இவரின் புலமைசார் அறிவை பெறுமுகமாக உறுப்பினராக தேர்தெடுத்து இவரின் புலமையை பயன்படுத்த உள்ளார்கள்.
  5. இது நான் நினைக்கிறேன் சுய பாஷாவினால் ஏற்பட்ட குறை என. கொழும்பு, பேரா தவிர ஏனைய பல்கலைகழக மருத்துவ, பொறியல் மாணவர்கள் கூட இப்படி பேச்சு ஆங்கிலத்தில் தடுமாறுவதை கண்டுள்ளேன். ஆனால் ஒரு சில வருடம் வெளிநாட்டில் இருந்த பின் நல்ல முன்னேற்றமாக இருக்கும். அதே போல் சுயபாசவுக்கு முந்திய தலைமுறையில் ஒரு லிகிதரிடம் இருந்த ஆங்கில திறனும், நிர்வாக இயலுமையும் இப்போ ஒரு மாவட்ட அரச அதிபரிடம் கூட இல்லை. இதில் இவர்களை பிழை சொல்ல முடியாது. கல்வி கொள்கை வகுப்பாளர் விட்ட பிழை. ஒரு காலத்தில் மலேசியா, நைஜீரியாவுக்கு ஆங்கில ஆசிரியர்களை ஏற்றுமதி செய்த நாடு. இப்போ மறுபடியும் ஆங்கிலத்துக்கு முக்கியம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
  6. எந்த கல்வெட்டு ஆதாரமும் இல்லை .....ஆனால் எனது புலனாய்வு ஆராச்சி படி அவர் தமிழராக இருக்க வாய்ப்பு உண்டு...😅 சொந்த மண்ணில்/சொந்த இனத்தில் உதித்த பலரை புறந்தள்ளி வந்துள்ளோம் ,புறந்தளிக்கொண்டும் இருக்கின்றோம்... உதாரணத்திற்கு கண்ணகி வழிபாட்டை புறக்கணித்து பல அம்மன் வழிபாட்டை உள்வாங்கி கொண்டிருக்கின்றோம் ...கண்ணகி வழிபாடு என்று வரும் பொழுது அங்கு பெளத்தம் தமிழனின் அடையாளமாக வருகின்றது ....ஆனால் இன்று பூஜை வழிபாடாக மாறி அர்ச்சனை என ஒர் சாதியினர் மட்டும் கடவுள் உடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள் நம்மவர்கள் ... மற்றையது யோக சுவாமிகளை எடுத்து கொள்ளுங்கள் அவரைப்பற்றி தெரிந்த இள‌வயதினர் புலத்திலுமில்லை ,தாயகத்திலும் இல்லை....ஆனால் புட்டபத்திசாய்பாபா,சீரடி சாய்பாபா போன்றோரை தெரியாத புலம் பெயர் இளசுகள்,தாயக இளசுகள் இருக்க மாட்டார்கள் ... 😅என்னுடைய பழைய கிறசுக்கும் அந்த பெயர் அதற்காக நான் துறவியே
  7. 06 DEC, 2024 | 03:32 PM இலங்கையின் விழிப்புலனற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (6) நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுகத் வசந்த டி சில்வா தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/200578
  8. இலஞ்சம் பெற்றார், போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் அல்லது உடந்தையாக இருந்தார் என்ற வகையில் அதிகூடிய தண்டனைகள் எங்கள் நாட்டுச் சட்டத்திலும் இருக்கும், ஆனால் இதுவரை அப்படி ஒரு தீர்ப்பும் வந்ததாக நான் அறியவில்லை. இங்கேயும் அந்த தீர்ப்புகள் வராது என்றே நான் நினைக்கின்றேன். ஆனால், இதில் எந்த தமிழ் பிரதிநிதிகளாவது ஈடுபட்டிருப்பது ஓரளவிற்கேனும் நிரூபிக்கப்பட்டால், இவர்களின் அரசியல் எதிர்காலம் அன்றுடன் முடிந்தது. தமிழ்நாட்டில் டாஸ்மாக்ஸ் கடைகளுக்கு மது வழங்கும் மிகப் பெரும் நிறுவனம் வைத்திருப்பது.................. டி ஆர் பாலு என்ற தகவலை பார்த்திருக்கின்றேன். திமுகவின் தூண்களில் அவர் ஒருவர். சமுதாயத்திற்கு விரோதி என்று நீங்கள் சொல்கிறீர்கள், நானும் அதையே சொல்கின்றேன், ஆனால் இதை ஒரு சட்டரீதியான வியாபாரம் என்று இலகுவாகக் கடந்து போகின்றவர்கள் தான் பெரும்பான்மையானவர்கள்..............😌.
  9. பட மூலாதாரம்,NIK BORROW படக்குறிப்பு, கடந்த 2018இல் கண்டுபிடிக்கப்பட்ட மத்திய ஆப்பிரிக்க மெலிந்த வாய் கொண்ட முதலை (Mecistops leptorhynchus) வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் ஆகியவற்றால் அழிந்து வரும் சூழலில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கோ படுகையில் 700க்கும் மேற்பட்ட புதிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக காட்டுயிர் நிதியம் (WWF) என்னும் ஒரு தன்னார்வ இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்புகளுள், ஒரு புதிய வகை காபி செடி, விசித்திரமாக ஓசை எழுப்பும் ஒரு ஆந்தை, ஒரு மெல்லிய வாய் கொண்ட முதலை, தாவரங்களுக்கு மத்தியில் உருமறைப்பு செய்து தந்திரமாகத் தாக்கும் திறன் கொண்ட நச்சுப் பாம்பு ஆகியவையும் அடங்கும். "ஆப்பிரிக்காவின் நுரையீரல்" என்று அழைக்கப்படும் காங்கோ படுகை, ஆறு நாடுகளில் பரவியுள்ள உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு. இது உலகின் மிகப்பெரிய கரிம உறிஞ்சியாகவும் உள்ளது (வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கரிமத்தைக் கிரகித்துக் கொள்ளும் சூழலியல் அமைப்பு). உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்களின் பணியை இந்த அறிக்கை விவரிக்கிறது. “இந்த அறிக்கை உலகின் மிக முக்கியமான சூழலியல் அமைப்புகளுள் ஒன்றில் இருக்கும் சிறந்த பல்லுயிர்ப் பெருக்கத்தையும், அதன் அவசர பாதுகாப்புத் தேவைகளையும் முன்னிலைப்படுத்துவதாக” உலக காட்டுயிர் நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், உலக காட்டுயிர் நிதியம், உலகளவில் காட்டுயிர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகம் முழுக்க காட்டுயிர்களின் எண்ணிக்கை 73% குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. "காங்கோ படுகை பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது, மேலும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பலர் அறிந்திருக்கவில்லை" என்று தன்னார்வ அமைப்பான காங்கோ படுகை பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஜாப் வான் டெர் வார்டே பிபிசியிடம் கூறினார். பல தனிச் சிறப்புமிக்க உயிரினங்களின் வாழ்விடமாக இருப்பது மட்டுமின்றி, கரிமத்தை உறிஞ்சும் திறன்கொண்ட உலகின் கடைசி மழைக் காடுகளில் இதுவும் ஒன்றாக விளங்குவதாக வான் டெர் வார்டே தெரிவித்தார். மேலும், தனது கரிம கிரகிப்புத் திறனை இழந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகளை விடவும் அதிகமான கரிம வாயுவை, இந்தப் படுகை உறிஞ்சுவதாக விளக்குகிறார் அவர். “புதிய இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அவற்றின் இருப்பு பற்றி உலகிற்கு தெரியப்படுத்தவேண்டும். மேலும், காலநிலை மாற்றத்தில் ஸ்திரத்தன்மை கொண்டுவர காங்கோ படுகை மிகவும் அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது”, என்றும் அவர் குறிப்பிட்டார். "புதிய உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், அவை குறித்து உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அதோடு, காலநிலை நிலைத்தன்மையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் காங்கோ படுகைக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது," என்றும் தெரிவித்தார் வான் டெர். 'மியாவ்' என்று குரல் கொடுக்கும் ஆந்தை பட மூலாதாரம்,WWF படக்குறிப்பு, பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தை மிகவும் தனித்துவமான ஒலியை எழுப்புகிறது கடந்த 2022ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தை (Otus bikegila), சிறிய தீவு நாடான சௌ தோமே மற்றும் பிரின்சிபியில் மட்டுமே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் காணப்படும் கொம்பன் ஆந்தையைப் போல், அதன் காதுகளைச் சுற்றி மேல்நோக்கிய வடிவில் இறகுகள் இருக்கும். மேலும் இது பூனையைப் போல 'மியாவ்' என்ற தனித்துவமான ஒரு சத்தத்தைக் கொடுக்கும். பறவைகளைப் பற்றிய தரவுகளை வைத்திருக்கும் ‘பேர்ட்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ அமைப்பின்படி, இந்த ஆந்தை விரைவாக அழிந்து வரும் நிலையில் இருக்கிறது. உலகில் வெறும் 1,100 முதல் 1,600 வரையிலான பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தைகளே வாழ்கின்றன. ‘ஊமா குமா’ வகை ஊசித் தும்பிகள் பட மூலாதாரம்,JENS KIPPING படக்குறிப்பு, ‘பிங்க் ஃபிலாய்ட்’ ராக் இசைக் குழுவின் பாடல் தொகுப்பைத் தொடர்ந்து இந்த ஊசித் தும்பிக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ராக் இசைக் குழுவான ‘பிங்க் ஃபிலாய்ட்’ லண்டன் நகரில் பன்றி வடிவம் கொண்ட ஒரு பலூன் போன்ற ஒன்றை பறக்கச் செய்தது. இந்த நிகழ்வு, காங்கோ படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய வகை ஊசித் தும்பிக்குத் பெயரிடவும் வித்திட்டது. கடந்த 1969இல், பிங்க் ஃபிலாய்ட் இசைக்குழுவின் ஊமா குமா பாடல் தொகுப்பு வெளியானது. ஊமா என்பது ஒரு பூச்சி இனத்தைக் குறிக்கக்கூடிய பெயர் என்பதால், 'ஊமா குமா' பாடலையொட்டி, விஞ்ஞானிகள், இதற்கு ஊமா குமா ஊசித் தட்டான் எனப் பெயரிட்டனர். பட மூலாதாரம்,JEAN-FRANÇOIS TRAPE படக்குறிப்பு, மோங்கோ ஹேரி புஷ் எனப்படும் விரியன் வகைப் பாம்பு, அதன் வீரியம் மிக்க நஞ்சுக்காக மட்டுமின்றி அதன் உருமறைப்புத் திறனுக்காகவும் அறியப்படுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு கடந்த 2020ஆம் ஆண்டுதான் மோங்கோ ஹேரி புஷ் வைப்பர் (Atheris mongoensis) எனப்படும் விரியன் வகைப் பாம்பு கண்டறியப்பட்டது என்றாலும், அதற்குள்ளாகவே ஆப்பிரிக்காவில் மிகவும் வீரியம் மிக்க நஞ்சுள்ள பாம்புகளில் ஒன்றாகப் பிரபலம் அடைந்துவிட்டது. இந்தப் பாம்பின் செதில்கள், பச்சை, மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களின் கலவையைக் கொண்டவை. ஆகவே, இவற்றால் காட்டிலுள்ள தாவரங்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொள்ளும், உருமறைப்புத் திறனைக் கொண்டுள்ளது. நஞ்சு மட்டுமின்றி, இந்த உருமறைப்புத் திறன் காரணமாகவும் இது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. குறிப்பால் உணர்த்தும் குட்டித் தவளை பட மூலாதாரம்,VACLAV GVOZDIK படக்குறிப்பு, காங்கோலியஸ் ரோபஸ்டஸ் என்னும் தவளை, அது வாழும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் குறிக்க உதவுகிறது. ரோபஸ்ட் காங்கோ தவளை (Congolius robustus) என்றழைக்கப்படும், 4 செ.மீ அளவே இருக்கும் இந்தக் குட்டித் தவளை, ஓர் இரவாடி (பகலில் ஓய்வெடுத்து இரவில் இயங்கும் உயிரினம்) உயிரினமாகும். இது காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டுமே இதுவரை காணப்படுகிறது. இது காங்கோ ஆற்றின் தெற்கே பல இடங்களில் வாழ்கிறது. உலகில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டுமே காணப்படும் ஓரிடவாழ் உயிரினம் (Endemic) என்பதால், அப்பகுதியின் சூழலியல் அமைப்பினுடைய தரநிலையையும் இதன் இருப்பு உணர்த்துகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgrw4d0n97o
  10. அவனவன் எல்லாம் கண்டபடி யோசிக்க தெய்வம் மட்டும் தான் நிறுத்தி நிதானிச்சு யோசிச்சிருக்கு...😎
  11. அது ஏன் திமிங்கிலம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு கடந்த காலத்திலேயே தீர்வு காணாமல் அநுர காலத்தில் அவசரமா திருந்துறீங்க? சிங்களவரையே நம்பியிருக்கும் நாமலின் கட்சிக்கு சிங்களவர்களிட்டையே 3% வாக்குகூட கிடைக்கவில்லை, நீங்கள் எதுக்கு யாரும் இல்லாத கடையில யாழ்ப்பாணத்தில போண்டா சுடுறீங்க?
  12. 🤣................... இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நாமலை கடைசியில் ஒரு நகைக்கடைக்காரராக, பயண முகவராக மாற்றியுள்ளனர் யாழ் மக்கள்...................🤣. இது குசும்பு தானே............... கீதநாத்தும் இல்லையென்று பொறுமையாக தெளிவுபடுத்தியிருக்கின்றார்......................
  13. எனது அவதானிப்புகள் 1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது. 2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும். 3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே. 4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார். 5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார். 6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார். 7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது. 8. 65% கொடுக்கலாம். 9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.
  14. சிங்களவர்கள் மட்டுமல்ல முஸ்லிங்களும் சேர்த்துதான்.
  15. 🤣.............. அப்ப உடுவில் முன்னாள் எம்பி தர்மலிங்கம் ஒரு தமிழ்ப் பெயரைத் தான் தன் மகனுக்கு வைத்திருக்கின்றார் என்கிறீர்கள்........................... சித்தார்த்தரின் மனைவியின் பெயரையும், என்னுடைய களப் பெயரையும் உற்றுப் பார்த்தீர்கள் என்றால், ஒரு உண்மை துலங்கும். இங்கே குளிர் குறைவான இடத்தில் ஒரு பெரிய மரமாக தேடிக் கொண்டிருக்கின்றேன்.............
  16. EU ல் கடை வைத்திருப்பவர்கள் கடைக்கு மேல் இருக்கும் வதிவிடங்களில் வசிக்கிறார்கள் என்று அறிகிறேன். சரியோ? @தமிழ் சிறிதலையங்கத்தில் தவறு இருக்கிறது. ""கட்டடங்களுக்கு ""
  17. ஒரு சின்ன அறிவுரை.. அந்த காலத்தில் ஊரில் கடை வைத்திருப்பவர்கள் கடையின் பின்பக்கம் சமையல் செய்து சாப்பிடுவார்கள் பின் இரவு நேரங்களில் கடையினுள் உறங்குவார்கள் இதனால் அவர்களுக்கு பல நன்மைகள் உண்டானது ..இரவு நேரத்தில் செக்யூரிட்டி ,வீட்டு வாடகை கொடுக்க தேவையில்லை .... அதுபோல நீங்களும் கீழே அலுவலகம் மேல உங்கன்ட வீட்டை அமைத்து கொஸ்ட் கட்டிங் செய்யலாம்
  18. இதில் எது நடக்குதோ இல்லையோ, ஆனால் தொங்கிக் கொண்டிருக்கின்ற மனுஷனின் வேட்டியை யாழ் களத்தில் இழுத்து அவிழ்த்துவிடுவார்கள்.................
  19. 3 பெரிய மனிசர்கள் சந்தித்து இருக்கினம்...சுப்பர்😂...நானும் வந்து போனான்
  20. பதவி கொடுக்கப்பட்டவர்கள் அந்த பதவிகளுக்கு தகுதியுடையவர்களாய் இருப்பார்கள்
  21. அன்று விளக்குமாற்றினால் யாழில் துரத்தப்பட்ட ஜெ.வி.பியினர் இன்று அதே மக்களின் எஜமானர் ..அவ்ர்களின் காலில் விழுகின்றனர் யாழ் மக்கள்... சிறிலங்காவில் எதுவும் நடக்கும்...கடந்த தேர்தலில் 3 எம்.பிக்களை பெற்ற ஜெ.வி.பி இன்று 159 எம்பி🤔
  22. இவர் குஜராத் மாநிலம் தஹேகம் எனும் பகுதியைச் சேர்ந்த 49 வயதான சுரேஷ். பல தடைகளுக்கு எதிராகப் போராடி, தனக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஒன்றை இவர் வடிவமைத்திருக்கிறார். இந்த வாகனத்தை வடிவமைக்க சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் சுரேஷ் செலவழித்துள்ளார். இதில் தான் அக்கிராமத்தில் உள்ள தனது சிறிய கடைக்கு அவர் செல்கிறார். குறைவான உயரத்துடன் வாழ்வது எளிதானது அல்ல என்கிறார் அவர். எல்லா சவால்களையும் கடந்து சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதன் மூலம் அந்த நிறைவை உணர்கிறார் சுரேஷ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  23. அனுரவின் அடியில்... அம்மியே காற்றில் பறக்குது வளவன். 😂 👇 இவர் எல்லாம்... எம்மாத்திரம். ஜுஜுப்பி. 🤣
  24. அதென்னண்டா தமிழ்சிறி, அநுர சிங்கள ஏரியாவெல்லாம் படிப்படியா நல்லா கூட்டி மொப் அடிச்சுக்கொண்டு வாறான், அடுத்தது இவர் போன்ற அல்லகைகள்தான். அப்படி கோர்ட் கேஸ் எண்டு வந்தா நீதிபதிகிட்ட ஐயா நாங்க ரொம்ப நேர்மையானவங்க நீங்க வேணுமெண்டால் பொலிஸ்கிட்ட கேட்டு பாருங்க, லஞ்சம் ஊழல் பண்றது எல்லாம் தப்பு எண்டு போன கிழமைகூட நாங்கள் முறைப்பாடு கொடுத்து ஜனநாயகத்தை காப்பாத்தியிருக்கோம் எண்டு சொல்லத்தான். என்ன இருந்தாலும் அநுர மொப் அடி சூப்பர்.
  25. எம்.எஸ்.ஸைக் கொண்டாட வழிகோலிய டி.எம்.கிருஷ்ணா AaraNov 27, 2024 16:06PM பெருமாள்முருகன் மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு கருநாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு 2024 மார்ச் மாதம் அறிவித்தது. அதுமுதல் ஏழெட்டு மாதங்களாக அவருக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு செயல்களும் கருத்துரிமைக்கு எதிரானவையாக இருக்கின்றன. இசைக்கலைஞராகத் தம் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டிராமல் அரசியல், இசை, சாதி, மொழி உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் தம் கருத்தைப் பேச்சாகவும் எழுத்தாகவும் வெளிப்படுத்துபவராகக் கிருஷ்ணா உள்ளார். அவர் கருத்துக்கள் ஆதிக்கத்தின் எல்லாத் தரப்புக்கும் கோபத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை விவாதிக்கும் மனநிலையும் சகிப்புத்தன்மையும் அற்றவர்கள் அவரது கருத்துரிமையைப் பறித்து வெவ்வேறு வகைகளில் நெருக்கடி தந்து கொண்டேயிருக்கின்றனர். ஆதிக்கத்திற்கு எதிரான கருத்தை முன்வைப்பவரைப் பொதுவெளியில் இருந்து அகற்றிவிடச் சகல தந்திரங்களையும் கையாள்கின்றனர். சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கு ஆண்டுதோறும் ‘தி இந்து’ நிறுவனம் சார்பாகச் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும்’ வழங்கப்படுகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏற்கனவே விரிவான கட்டுரை ஒன்றை டி.எம்.கிருஷ்ணா எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் எம்.எஸ்.ஸை இழிவுபடுத்தியிருக்கிறார், அவதூறு செய்திருக்கிறார், அவருக்கு எப்படி இந்த விருதை வழங்கலாம் எனப் பரவலாகப் பேசினர். அவரது பேரன் சீனிவாசன் என்பவர் ‘என் பாட்டியை இழிவுபடுத்தியவருக்கு அவர் பெயரிலான விருது வழங்கக் கூடாது’ என்று நீதிமன்றம் சென்றார். அவ்வழக்கில் இப்போது இடைக்காலத் தீர்ப்பு வந்திருக்கிறது. கிருஷ்ணா எழுதிய அக்கட்டுரை ஓர் இசைக்கலைஞரைப் பற்றிய அரிய ஆய்வு. இலக்கியத் திறனாய்வில் படைப்புக்கும் எழுத்தாளரின் வாழ்வுக்கும் உள்ள தொடர்பைக் குறித்து ஆய்வு செய்வது ஓர் அணுகுமுறை. அதை இசைக்கலைக்கு அற்புதமாகப் பொருத்தியிருக்கிறார். எம்.எஸ்.ஸின் ஆளுமை பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. அதை முழுமையாகத் தம் இசையில் அவரால் வெளிப்படுத்த முடிந்ததா என்பதைத்தான் கட்டுரை ஆராய்கிறது. அவர் பாடிய இசையே முதன்மை ஆதாரம். அவர் இசையைத் தொடர்ந்து கேட்டு அவற்றில் வெளிப்படும் கலை மேன்மையை அல்லது வெளிப்படத் தவித்து அடங்கிச் செல்லும் நிர்ப்பந்தத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதற்கான காரணத்தை எம்.எஸ்.ஸின் வாழ்வில் தேடுகிறது கட்டுரை. அவர் வாழ்வை மூன்று கட்டங்களாகப் பகுத்து ஒவ்வொன்றிலும் எப்படிப் பாடினார், தேர்வு செய்த பாடல்கள் எத்தகையவை, அதற்கான பின்னணிக் காரணங்கள் எவை என தர்க்கமும் அழகும் கலந்த மொழியில் கட்டுரை விவரிக்கிறது. கருநாடக சங்கீத உள் உலகில் பேசப்படும் பல்வேறு அபிப்ராயங்களையும் கட்டுரை எடுத்து விவாதிக்கிறது. அவை வாய்மொழிச் சான்றுகள். கிருஷ்ணாவும் பாடகராக இருப்பதால் அவற்றை எல்லாம் திரட்ட முடிந்திருக்கிறது. அவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தி, அவை வெளிப்படுவதற்கான பின்னணிக் காரணத்தை நோக்கிச் சென்று தம் கருத்துக்களையும் எடுத்துச் சொல்கிறார். கட்டுரையில் சாதி பற்றியவையும் அவர் கணவர் பற்றிய பகுதிகளும் குடும்பத்தாருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவற்றிலும் எந்த எல்லை மீறலும் இல்லை. பண்பட்ட மொழியில் தம் எண்ணங்களை முன்வைத்திருக்கிறார். நம் சமூகத்தில் மதம் மாறிக்கொள்ளலாம். என்ன செய்தாலும் சாதி மாற முடியாது. எம்.எஸ். பிறந்து வளர்ந்த தேவதாசிப் பின்னணியை எப்படி மறைக்க முடியும்? கணவரின் கட்டுப்பாட்டில் அவர் இருந்தார் என்பதும் கணவரே கச்சேரி அமைப்பைத் தீர்மானித்தார் என்பதும் பொதுவெளியில் சாதாரணமாகப் பேசப்படும் விஷயம்தான். பொதுவெளியில் போற்றப்படும் எம்.எஸ். என்னும் மாபெரும் ஆளுமையைப் பற்றிய காத்திரமான கட்டுரை இது. இந்தக் கட்டுரை தரும் புரிதலோடு எம்.எஸ்.ஸின் இசையைக் கேட்டால் இன்னும் ஆழ்ந்து அனுபவிக்கலாம். பொதுவிருப்பத்திலிருந்து விலகி அவர் பாடிய வித்தியாசமான பாடல்களைத் தேடிக் கேட்கலாம். ‘இந்தக் கட்டுரை அவருடைய நினைவை நான் அவமதிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். உண்மையில் ஆகச் சிறந்த முறையில் அவரை நான் கொண்டாடியிருக்கிறேன்’ என்று தமிழ் மொழிபெயர்ப்பு முன்னுரையில் டி.எம்.கிருஷ்ணா சொல்வதை ஆழ்ந்து வாசிப்போர் உணர்வர். நீதிமன்றம் தீர்ப்பு சொல்வதற்கு எம்.எஸ்.ஸை டி.எம்.கிருஷ்ணா இழிவுபடுத்தினாரா இல்லையா என்பதற்குள் செல்லவில்லை. மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதைப் பற்றி எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. யார் சங்கீத கலாநிதி விருது பெறுகிறார்களோ அவருக்கு ‘தி இந்து’ நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது’ என்னும் ஒருலட்சம் ரூபாய் பணப் பரிசு பற்றிப் பேசுகிறது. எம்.எஸ்.ஸின் உயிலில் தம் பெயரில் எதையும் செய்வதை விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் விருப்பத்தை மதிக்கும் பொருட்டு அவர் பெயரைப் பயன்படுத்தாமல் பணப்பரிசை வழங்கலாம் என்று தீர்ப்பு சொல்கிறது. இந்து நிறுவனம் வழங்கும் விருதின் பெயர் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்னும் பெயரிலானது. மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதையும் அதைப் பெறுபவருக்கே இந்து நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்பதையும் குழப்பிக் கொண்ட தமிழ் ஊடகங்கள் அனைத்துமே தீர்ப்பைத் தவறான தொனியில் செய்தியாக்கியுள்ளன. சங்கீத கலாநிதி விருதே எம்.எஸ். பெயரிலானது எனப் புரிந்துகொண்டு ‘சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கத் தடை’ என்றே தமிழ்ச் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. டி.எம்.கிருஷ்ணாவுக்குச் சங்கீத கலாநிதி விருது வழங்கவே நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது எனப் பொருள்படும்படி செய்திகள் இருக்கின்றன. நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்ட போதும் இதே குழப்பத்துடன் செய்தியை வெளியிட்டன. ஆங்கில ஊடகங்களிலும் சில இப்படித்தான் புரிந்துகொண்டிருந்தன. விருதுப் பின்னணி பற்றிய அடிப்படை அறிதல் இல்லாததால் தீர்ப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் பற்றிய நம்பகத்தன்மையை இது கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்விருது பற்றிய பின்னணியை இன்னும் சற்றே தெளிவுபடுத்தலாம். ‘சங்கீத கலாநிதி’ என்பது மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கருநாடக சங்கீத இசைக்கலைஞர்களுக்கு வழங்கி வரும் விருது. இதை 1968ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெற்றார். தாம் பெற்ற மதிப்பிற்குரிய விருதுப் பெயரைத் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொள்வது பொதுவழக்கம். தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கலைமாமணி’ விருதைப் பலர் தம் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது அறிவோம். அதுபோல ‘தி இந்து’ நிறுவனம் வழங்கும் ஒருலட்சம் ரூபாய் பணப்பரிசுடன் கூடிய விருதுக்குச் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்று பெயர் சூட்டியுள்ளனர். 2005ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. ஆகவே மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருது வேறு; தி இந்து நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ வேறு. ஆனால் தி இந்து நிறுவனம் தாம் வழங்கும் விருதுக்கெனத் தனியாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை. மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் யாருக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்குகிறதோ அவருக்கே தி இந்து நிறுவனம் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை’ வழங்கிவிடுகிறது. இரண்டும் ஒருவருக்கே வழங்கப்படுகிறது. இந்தப் பின்னணி அறியாத ஊடகங்கள் தவறான புரிதலோடு செய்தியை வெளியிட்டுள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை இந்து நிறுவனம் தாம் வழங்கும் விருதுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் தீர்ப்பு. இப்போது நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்களுக்கு இந்து நிறுவனம் எம்.எஸ். பெயரிலான விருதையும் வழங்கியிருக்கிறது. அவை என்னவாகும்? அதைப் பற்றித் தீர்ப்பு ஏதும் சொல்லவில்லை. முடிந்து போன விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்திருக்கலாம். இனி அடுத்தடுத்த ஆண்டுகளில் சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கும் இந்து நிறுவனம் ஒருலட்சம் ரூபாய் பரிசு வழங்கும்போது எம்.எஸ். பெயரைப் பயன்படுத்த முடியாது. தாம் வழங்கும் விருதின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது வேறு பெயரில் வழங்கலாம் என்று அதற்கு அர்த்தம். இன்னொரு கேள்வியும் எழுகிறது. எம்.எஸ். பெயரில் இந்து நிறுவனம் மட்டுமல்ல, வேறு நிறுவனங்களும் விருதுகள் வழங்குகின்றன. சான்றாக தமிழ்நாடு அரசின் ‘இயல் இசை நாடக மன்றம்’ ஆண்டுதோறும் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ வழங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டுக்கான விருதைத் திரைப்பாடகர் எஸ்.ஜானகி பெற்றிருக்கிறார். 2020ஆம் ஆண்டு வாணிஜெயராம் பெற்றிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பு இத்தகைய விருதுகளையும் கட்டுப்படுத்துமா? அவர் பெயரில் வெவ்வேறு நிறுவனங்கள் வழங்கும் பல விருதுகளையும் பட்டியலிட்டுள்ள இத்தீர்ப்பு அவற்றைப் பற்றி எதையும் சொல்லவில்லை. ஆனால் இந்தத் தீர்ப்பைக் குறிப்பிட்டு ‘வழங்கக் கூடாது’ என்று யாரேனும் நீதிமன்றம் சென்றால் அவற்றையும் வழங்க முடியாத நிலை ஏற்படும். அவற்றில் உள்ள எம்.எஸ். பெயரை நீக்கிவிட நேரும். இந்தத் தீர்ப்புப்படி டி.எம்.கிருஷ்ணாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவருக்குச் சங்கீத கலாநிதியும் வழங்கலாம். இந்து நிறுவனம் வழங்கும் பணப்பரிசையும் வழங்கலாம். ஆனால் எம்.எஸ். பெயரை இனி எந்த விருதுக்கும் பயன்படுத்த இயலாத நிலை உருவாக்கியிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி தம் உயிலில் ‘என் இறப்புக்குப் பிறகு என் பெயரில் அறக்கட்டளை, நினைவகம் அமைப்பது கூடாது. என் பெயரில் நிதி திரட்டுவதோ வழங்குவதோ கூடாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். எம்.எஸ்.ஸின் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் இத்தீர்ப்பின் அடிப்படையில் அனைத்திலிருந்தும் அவர் பெயரை நீக்க வேண்டும். இவ்வாண்டு டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கும் சூழலில் எம்.எஸ்.ஸின் விருப்பமும் நிறைவேறுகிறது என்றே சொல்லலாம். தம் கட்டுரை மூலமாக எம்.எஸ்.ஸைக் கொண்டாடிய டி.எம்.கிருஷ்ணா இப்போது அவர் உயிலில் தெரிவித்துள்ள விருப்பத்தையும் நிறைவேற்றியிருக்கிறார். இதுவரைக்கும் எம்.எஸ். தம் உயிலில் இப்படி எழுதியிருக்கிறார் என்று பொதுவெளியில் தெரியாது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எம்.எஸ். எழுதிய உயிலில் உள்ள செய்திகள் வெளிப்பட்டுத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளாத அவர் ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தை வெளியுலகிற்கு எடுத்துக்காட்ட டி.எம்.கிருஷ்ணா வழிகோலியிருக்கிறார். இருவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் முனைவர் பெருமாள் முருகன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரை வீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். மாதொருபாகன் உள்ளிட்ட பல்வேறு நாவல்களை எழுதியவர். 2023ஆம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் விருதுக்கான (International Booker Prize) நெடும்பட்டியலில் பெருமாள் முருகனின் பூக்குழி (Pyre) இடம்பெற்றது. தமிழ் நாவல் ஒன்று இப்பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல்முறை. 2023ஆம் ஆண்டுக்கான ஜேசிபி இலக்கிய பரிசை இவரது ஆளண்டாப்பட்சி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Fire bird பெற்றது. https://minnambalam.com/featured-article/present-sangeetha-kalanithi-award-to-tm-krishna-without-using-ms-subbulakshmis-name-madras-hc/
  26. எல்லாப் புகழும்... சிங்களம் மட்டுமே என்ற சட்டத்தை கொண்டு வந்த பண்டாரநாயக்காவுக்கே. 😂
  27. ஊரில சண்டை நடந்த முட்டம் சனம் அல்லோல கல்லோலப்பட்டு ஓடித்திரியேக்கையும்.... யாழ்ப்பாணத்து ஒரிஜினல் மிளகாத்தூள் எண்டும் பூநகரி மொட்டைக்கறுப்பன் எண்டும் சொல்லி வித்தாங்கள் பாருங்கோ சொல்லி வேலையில்லை 😇
  28. அவ்வாறு குறிப்பிட்டு அரசு தப்பிக்க முடியாது. கட்டவேண்டியது பல பில்லியன்கள். அதுவரை அரச இயந்திரம் தூங்கவில்லை. தூங்க வைக்கப்பட்டுள்ளது???
  29. இது தான் நான் உண்மையில் சொல்ல வந்தது, எதற்கு இந்த உண்மையைச் சொல்லி தேவையில்லாமல் வேண்டிக் கட்டுவேண்டும் என்று சுற்றி வளைத்துச் சொன்னேன். மொழி வெறியால் நாம் இழந்தது அதிகம் அது வெளிநாட்டில், வெளிநாட்டில் இருக்க வேண்டியது போல் இருந்தால் தான் நடக்கும், அங்கேயும் போய் திரும்பவும் தமிழரோடு சேர்ந்து தான் வாழ்வேன் என்றால் அதிலும் மாற்றம் வராது
  30. உண்மையான நிலை இதுதான். ஆனால், சிங்களமக்கள் எதிர்காவிடினும் ரில்வின் மற்றும் பிக்குகளை வைத்துச் சிங்களக் கடும்போக்குவாதிகளையும், சிங்களவரையும் இணைத்துப் போராட வைத்து ஏதோ பெரிதாக அதிகாரப்பகிர்வு தமிழருக்குக் கொடுப்பதாக உலகுக்குக்காட்டித் தமிழருக்கு நாமம் போடும் இலக்கை அடையக்கூடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  31. 😂 இலங்கை தமிழர்களின் உணவு செய்முறை காணொளிகள் வெளிநாட்டில் உள்ள ஈழதமிழர்களின் காணொளிகள் பார்க்கும் போது அவதானித்துள்ளேன் ஆரோக்கியத்தில் இருக்கின்ற அக்கறை காரணமாக உப்பை அள்ளி போடுவார்கள். எனக்கு தெரிந்திராத தகவல் 👍 corned beef வும் தானே
  32. Pure cream+ ரின் பால், வேணுமெண்டால் கொஞ்சம் வனிலா ஒரே நிமிடத்தில் ஐஸ்கிறீம் கொத்துரொட்டி கொத்து ரொட்டி தயாரிப்புக்கு ரொட்டி தயாரிக்கவே பாதிநாள் போய்விடும், ஆனால் இங்கு அதிவேக மென்மையான ரொட்டி தயாரிப்பு . அப்புறம் என்ன மொத்த வேண்டியதுதான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச ரோஸ்ட் பாண்தான் , இருந்தாலும் சும்மா ஒரு இணைப்பு இது கொஞ்சம் நேரம் எடுக்கும், இருந்தாலும் நம்ம அச்சு பாண். உழுந்து தேவையில்லை, ஊற வைக்க தேவையில்ல அரைக்க தேவையில்லை அதிவேக அரிசி மா தோசை.
  33. இனவாதத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றால் இது புத்த பிக்குகளுக்கான செய்தியாக எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் தமிழர்களிடம் இன உரிமையை போராட்டத்தை தவிர இனவாதம் இல்லை.
  34. அவருக்கு பவர் இருக்கோ இல்லையோ நம்ம ஊடக குடிசை கைத்தொழில் ஜாம்பவான்கள் ஒருவன் இருந்தால் போதும் ....இல்லாத பவரையும் இருக்கு என விளாசிதள்ள
  35. ஆங்கில சொல் salary - லத்தின் சொல்லான salarium த்தில் இருந்து வருகிறது. இந்த லத்தின் சொல்லின் அர்த்தம் மாதாந்த கொடுப்பனவு. Salarium என்பது லத்தின் சொல்லான Sal இல் இருந்து வருகிறது. Sal இன் அர்த்தம் உப்பு. ஒரு காலத்தில் மாதசம்பளமக பணமன்றி உப்பே கொடுக்கப்பட்டதா நம்பபடுகிறது. இதே போல் Sal இற்கு வேலை செய்த வீரகள்தான் Soldiers எனவும் சொல்லப்படுகிறது. உப்பு மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். உப்பு அளவாக இல்லாதவிடத்து தசை பிடிப்பு ஏற்படும். இதை பேச்சு வழக்கில் குறண்டல் என்போம், எனக்கு விளையாடும் போது அடிக்கடி வரும். அதே போல் குறை இரத்த அழுத்தம் வந்து ஆளை கவிட்டும் விடும். எல்லாமும் அளவோடு தேவை. உப்பிட்டவரை உள்ளவரை நினை🤣
  36. நம்மவர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று உப்பில்லை என்றால் பட்டினி கிடந்து சாவார்களே தவிர... நீங்கள் வேற ???🤣
  37. அண்ணை நீலன் தனியே எழுதவில்லை, எழுதுவதில் முதன்மையாய் இருந்தவர் பேரா ஜி எல் பீரிஸ். இதன் முதலாவது வரைபு ஒரு உன்னதமான வரைபு. ஆனால் அது வந்ததுமே பெளத்த இனவாதிகள் தாம் தூம் என குத்தித்து, அதை எதிர்த்தார்கள். அதன் பின் உப்பு சப்பில்லாத இன்னொரு வரைபு வந்தது. அதை அப்போ புலிகளின் ஹிட் லிஸ்டில் இருந்த கூட்டணி கூட ஏற்கவில்லை. பின்னர் ஜீ எல் பீரிசும் பக்கா அரசியல்வாதியாகி இனவாதம் பேச தொடங்கி விட்டார். —— சுமந்திரனின் வரைபும் ஜெயம்பதி விக்ரமரட்ன என்ற சிங்களவர், இணைந்து, ரணில், சந்திரிகா, சம்பந்தர், ஆனுர போன்றோரின் ஆசியுடந்தான் எழுதப்பட்டது. ஆக இங்கே எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் - அதிகாரம் தமிழருக்கு பகிரபடுவதே பிரச்சனையாகிறது. 13ம் திருத்தம், எழுதி, சட்டமாகி உள்ளது. அதை அமல்படுத்த வேண்டியது தன் கடமை என்ற அளவுக்கு ரணில் வாயால் வடை சுட்டார். ஆனால் யாரும் அமல்படுத்தவில்லை. பாராளுமன்ற தேர்தல் நேரம் @ஈழப்பிரியன் அண்ணாவுக்கு ஒரு பின்னூட்டத்தில் இதை சொன்னேன். இதுதான் ஜேவிபியின் நகர்வாக இருக்க போகிறது.
  38. பேச்சாற்றால் இயல்பாகவும் சிறப்பாகவும் உள்ளது . .......! 👍
  39. உண்மைதான். அனுர அரசு... ஆரம்பத்திலேயே, அதிரடி நடவடிக்கை மூலம் இவரை கைது செய்து, இனி வரும் காலங்களில்... தேவையில்லாத வதந்திகளை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள். காலம் காலமாக... இனவாதத்தை வைத்தே... அரசியல் நடத்தியவர்களை கட்டுப்படுத்த இப்படியான நடவடிக்கை மூலம்தான் கடிவாளம் போட முடியும்.
  40. கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். அப்போதான் இன்னொருவர் இந்த குற்றத்தை செய்ய தயங்குவர். தம்மை பாதுகாப்பதற்கும் தமது சுயநலத்திற்கும் அப்பாவி மக்களை பலிகொடுத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவது தடுக்கப்படவேண்டும். இனவாதம் பேசுவோருக்கும் உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும்.
  41. இப்ப... உங்களுக்கு, என்ன பிரச்சினை? கீழே உள்ள செய்தி தமிழில் தானே உள்ளது. அதனை நீங்கள் வாசித்து விளங்கிக் கொள்வதில், உங்களுக்கு ஏதாவது கோளாறு உள்ளதா? கிளிநொச்சியில்.... அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசிய கட்சியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரகுமார் எல்லோரினது சாராயக் கடைகளும் உள்ளது தெரியுமா? ஸ்ரீதரன்... //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று... வெளிப்படையாக அறிவித்த பின்பும், லூசுத் தனமாக எழுதிக் கொண்டு இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். 👇 கீழே உள்ள இணைப்பை... உங்கள் மூளையில் பதியும் வரை... திரும்ப, திரும்ப வாசிக்கவும். அப்படியும் விளங்கவில்லை என்றால், ஏதோ... கோளாறு இருக்குது என்று அர்த்தம். நல்ல வைத்தியரை நாடவும். நன்றி. 👇
  42. அவர் எது செய்யிறதெண்டாலும் ஓசியில செய்துதான் பழக்கம் 😎 அப்புறமா திருமண வீட்டில் வட்டியும் குட்டியுமாக பலகார பைகளை ஆட்டையைப் போடுற எண்ணம் போல இருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.