Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19122
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/12/24 in all areas

  1. 100% எல்லோரையும் திரட்ட முடியாது. ஆனால் பெரும்பாலானவர்கள் இணைவார்கள்.
  2. லெப்ரோஸ்பைறோசிஸ் வைரஸ் அல்ல, பக்ரீரியா. இதனால் தான் இதைக் கட்டுப் படுத்துவது இலகு. 1. குளோரின் போட்ட தன்ணீரை மட்டுமே குளிக்கப் பாவியுங்கள். 2. கொதித்தாறிய தண்ணீரை மட்டும் குடியுங்கள். 3. நீர்ப்பாசன வாய்க்கால், ஏரி, குளங்களில் குளிக்காதீர்கள். 4. காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரைப் பாருங்கள். மூன்றாம் நாள் வரை காத்திருந்தால் சிறுநீரகம் பாதிக்கப் படும், மீள்வது கடினம். சிகிச்சை மிகவும் இலகு முதல் நாளே ஆரம்பித்தால்.
  3. யாழ் போதனா வைத்தியசாலையில் எனது உறவினர் ஒருவர் தாதியாகப் பணிபுரிகிறார், அவரின் கூற்றுப்படி அங்கு பணிபுரியும் பலருக்குப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வைத்தியர்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. 🤔
  4. 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
  5. கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
  6. அடுத்த வாரமே தன்னைப் பிரபாகரனின் பேரன் என்பார். இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு அடிக்கிற (B)பிராண்டை பொறுத்து மாறுபடலாம். 😂
  7. டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்
  8. தமிழ் தேசிய சக்திகளை ஒரே அணியில் திரட்டினார் எண்டாலே பாதி கிணறு தாண்டியது போலத்தான்.
  9. கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா? இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா? பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன் கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்
  10. அறிவாளிகள் என்று சொல்லி திரியும் முட்டாள்களுக்கு சமர்ப்பணம் நம்ம ஆளு லண்டனில் படித்து கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு பீட்டர் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவருக்கு நம்ம ஆளை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சமயம் மதியம் அவர் உணவு அருந்தி கொண்டிருந்த மேசையில் நம்ம ஆள் அமர்ந்தார். நம்ம ஆளை வெருப்பேற்ற " பறவையும் ! பன்றியும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த முடியாது ! " என்று எல்லோரும் கேட்கும் மாறு சத்தமாக சொல்ல! அதற்கு அவர் ! நம்ம ஆளை பார்த்து! " சரி அப்படி என்றால் நான் பறந்து போகிறேன்! " என்று சொல்லி விட்டு வேறு மேசைக்கு சென்று விட்டார். பேராசிரியருக்கு அவமானம் ஆகி விட்டது. எப்படியாவது நம்ம ஆளை பழி வாங்க நினைத்த அவர் அப்பொழுது வந்த தேர்வில் கடினமான கேள்விகளை கேட்டு இருந்தார். ஆனால் நம்ம ஆள் நன்றாக படித்து இருந்ததால் சரியாக விடை அளித்து இருந்தார். திருத்திய விடை தாளை கொடுக்கும் முன் நம்ம ஆளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்க! நம்ம ஆள் சரி என்று சொல்ல! பேராசிரியர் " நீ நடந்து போகும் போது வழியில் உனக்கு பை கிடைக்கிறது அதில் நிறைய பணமும், அறிவும் இருக்கு! அதில் நீ எதை எடுப்பாய் என்று கேட்க! நம்ம ஆள் யோசிக்காமல் நான் பணத்தை தான் எடுப்பேன் என்று சொல்ல! பேராசிரியர் சிரித்து கொண்டே என்ன ! நானாக இருந்தால் அறிவை தான் தேர்ந்து எடுப்பேன் என்று சிரித்து கொண்டே சொல்ல ! அதற்கு நம்ம ஆள் அது சரி சார் பொதுவாக ஒருவர் தன்னிடம் இல்லாத ஒன்றை தானே தேர்ந்து எடுப்பார் என்று சொல்ல! வகுப்பில் எல்லோரும் சிரிக்க பேராசிரியருக்கு அவமானமாக போய் விட்டது. கோபத்தில் விடை தாளில் Idiot ( முட்டாள் ) என்று எழுதி விடை தாளை நம்ம ஆள் கிட்ட நீட்ட. நம்ம ஆள் வாங்கி பார்த்து விட்டு ஐயா உங்க கையொப்பம் போட்டு இருக்கீங்க ஆனா என் கிரேட் ( Grade) எவ்வளவு என்று போட மறந்து விட்டீர்கள்! என்று சொல்ல பேராசிரியர் திகைத்து போய் நின்றார்!
  11. 😅தமிழ் தேசியவாதிகளே! எமது அதி உத்தம தோழரின் தோழர் செய்த சிறு தப்பை வைத்து நீங்கள் குளிர்காய வேண்டாம் ...உங்களுக்கு பட்டம் முக்கியமா? பணியாரம் முக்கியமா? பணியாரம் தான் முக்கியம் ...உயிர் வாழ்வதற்கு... காகிதத்தில் இருக்கும் பட்டத்தை வைத்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் ...தமிழ் தேசிவாதிகளே மீண்டும் உங்களுக்கு நான் சொலவது ஒன்றே ஒன்று பட்டத்தை வைத்து பட்டம் செய்து விளையாடலாம் ....ஆனால் விளையாடுவதற்கு சக்தி தேவை அதாவது பணியாரம் தேவை ... இப்படிக்கு சிங்கள அடியான்😅
  12. செய்தது அதி உத்தமர் அநுரகுமார திசாநாயக்கவின் சகா எல்லோ அதி உத்தமராக தமிழர்களுக்கு காட்டபடும் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் இப்படி பொய் பட்டங்கள் வைத்து மக்களை ஏமாற்றலாமா ஓம் கொடுப்பார் இந்திய தமிழ்நாட்டு பாணியில் புரச்சி தளபதி என்ற ஒரு பட்டத்தை கொண்டு வந்து சபாநாயகரருக்கு வழங்குவார்
  13. இப்படி ஒர் செயலை தமிழ் எம்.பி செய்திருந்தால் இந்த களம் போர்களமாக மாறியிருக்கும்...அந்த இனத்தின் போராட்ட கால வரலாற்றை துவசம் பண்ணவே வெளிக்கிட்டிருப்போம் .... ரஜனி(காந்த்)கஞ்சா அடிச்ச காலம் தொடக்கம் இன்று வரை
  14. சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் - - குரு அரவிந்தன் - சிறுகதை 27 நவம்பர் 2024 - ஓவியம் - AI - சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள். ‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த இராணுவ சிப்பாய். பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை நீட்டிக் காட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். ‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை செய்யணும்.’ என்றான். ‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார். ‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே வாங்க..!’ என்றான் சிப்பாய். கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க வைத்தது. இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள். மரணத்தின் வாசலில் நின்று தவிப்பவன்போல, வேதனையில் முனகிக் கொண்டிருந்தான் அந்தநோயாளி. மரணபயம் குறித்த அவனது வேதனை காரணமாக அவனது முகம்; அப்படியே வெளிறிப்போய்;க் கிடந்தது. நிறைய இடங்களில் இரத்தம் வழிந்து இராணுவ சீருடையில் ஆங்காங்கே கறை படிந்திருந்ததிலிருந்து அந்த முனகலின் தேவை கருதிய வெளிப்பாடு என்னவாய் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்தது. அவரவர் அனுபவிக்கும் போதுதான் அந்த வலியின் வேதனை என்ன என்பது அவர்களுக்குப் புரியும் என்பதைத் தனது தொழில் அனுபவத்தில் தெரிந்து வைத்திருந்தார் டாக்டர். உதவியாளர்களிடம் அவனுடைய சீருடையை அகற்றி சத்திர சிகிச்சைக்குரிய உடையை அணிவிக்கச் சென்னார். போர்ச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு சீருடையின் துணிவில் நடமாடும் வெறிபிடித்த இந்தவக்கிரங்கள், அந்த சீருடை இல்லாவிட்டால் வெறும் பூஜ்யம்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை! ஒன்றா இரண்டா, துப்பாக்கி ரவைகள் துளைத்தது போல, உடம்பில் பட்ட இடமெல்லாம் சின்னச் சின்னக் காயங்கள். அவசரமாக எக்ஸ்றே எடுத்து, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள். கையுறையை மாட்டும்போதுதான் கவனித்தார், துப்பாக்கியோடு உள்ளே நின்ற சிப்பாயை! அவனை வெளியே போகும்படி சைகையிலே காட்டினார். அவனும் வேறு வழியில்லாமல் விரோதிபோல அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான். சின்னஞ்சிறிய ஆணிகள், பிளேட்டுத் துண்டுகள், சைக்கிள் பால்சுகள் என்று அத்தனையும் காப்டனின் உடம்பைப் பதம் பார்த்திருந்தன. சத்திர சிகிச்சை மூலம் ஒவ்வொன்றாக அவற்றை வெளியே எடுக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தவரின் மனதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இதை வெடிக்க வைத்தவனின் மனதிலே எவ்வளவு கோபமும், வெறியும் இந்த ஆக்கிரமிப்பு ராணுவத்தின் மேல் இருந்திருக்க வேண்டும், இந்தத் தருணத்திற்காக எத்தனை நாள் ஊனுறக்கம் இல்லாமல் அவன் தவம் கிடந்திருப்பான் என்று உடலைக் கீறி வெளியே எடுத்த ஒவ்வொரு பொருளையும் பார்த்தபோது, தனக்குளே கணக்குப் போட்டுக் கொண்டார். எங்கேயாவது சைக்கிள் பால்சுகளைக் கண்டால் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏன் வெருண்டடித்துப் பயப்படுகிறது என்ற உண்மையும் அவருக்கு இப்போ புலனாகியது. உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் அந்த அதிகாரி உயிர் தப்புவானா இல்லையா என்ற முடிவைக் காலன், இவரது கையிலே ஒப்படைத்திருந்ததை நினைத்துப் பார்க்க அவருக்கே வியப்பாக இருந்தது. ஒரு இனத்தையே கூண்டோடு அழிக்கப் போவதாக சவால் விட்டு விட்டு வந்து, ஆயுதபலத்தால் அந்த இனத்தின் பாரம்பரிய மண்ணை ஆக்கிரமித்திருக்கும் ராணுவ அதிகாரிதான் இவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படியான ஒரு சூழ்நிலையில், வெறிபிடித்தலையும் அவனைக் காப்பாற்றுவதிலேயோ, அல்லது அவனை உயிர் தப்பவைப்பதிலேயோ அவருக்கு எந்தவித ஈடுபாடும் மனதார இருக்கவில்லை. எங்கள் மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் இனத்தையே அழித்தொழிக்கும் பரமஎதிரி இவன். இவனைப் போன்ற இனவாதிகள் எல்லாம் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போயிருந்தால் எங்களுக்கு சற்று நிம்மதி யாவது இருந்திருக்கும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார். இப்போ நோயாளியாக அவன் தன்னிடம் வந்தபின், தனது கடமையில் இருந்து நழுவ அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. தன்னை நம்பி வந்த ஒரு நோயாளி என்ற கடமை உணர்வோடு, இனமத பேதம் எல்லாவற்றையும் மறந்து, ஒரு டாக்டராய் விரைவாகச் செயற்பட்டார். கடினமான உழைப்பில், சத்திர சிகிட்சை நேரம் நீண்டு கொண்டு போனதே தெரியவில்லை. மகனின் நினைவு வரவே, கடிகாரத்தைப் பார்த்தார். மருத்துவபீடத்தில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை, வகுப்பு முடிந்ததும் அங்கு சென்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நகரவேமுடியாது, எப்படியாவது அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு மீண்டும் நோயாளி மேல் கவனம் செலுத்தினார். நேரகாலம் இல்லாமல் இப்போதெல்லாம் சத்திர சிகிட்சை ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது. இராணுவம் வலிந்து ஆக்கிரமித்த மண்ணில் தினமும் இப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து கொண்டேதான் இருந்தன. முன்பெல்லாம் வாழ்ந்து, அனுபவித்த முதியோர்தான் தேவை கருதி அடிக்கடி வைத்திய சாலைக்கு வருவார்கள். இப்போ நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பலதரப்பட்ட வைத்தியத்திற்காகவும் வருகிறார்கள். இந்த வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்குப் பொறுப்பாக இருந்த மற்றவைத்தியர் சமீபத்தில் மாற்றலாகிப் போய்விட்டபடியால் இவர் மட்டும்தன் அங்கே மிஞ்சியிருந்தார். எனவே இங்குவரும் எல்லா அவசரசத்திர சிகிச்சையையும் அவரே தனியே கவனிக்க வேண்டியிருந்தது. யுத்தப் பிரதேசத்தில் இந்த மருத்துவமனை இருந்ததால், தொழில் செய்ய யாருமே விருப்பப்படவில்லை. இப்படியான நேரங்களில் ராணுவத்தையும் போராளிகளையும் சமாளிக் வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது. ‘ஏன் சிகிச்சை செய்தாய்’ என்று இரண்டு பக்கத்தில் இருந்தும் மிரட்டல்கள் வரும்போதெல்லாம் ‘கடமையைத்தான் செய்தேன்’ என்று துணிந்து சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இடமாற்றம் எடுத்துக் கொண்டு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும், அல்லது வேலையை இராஜினாமா செய்துவிட்டு வீட்டிலே சிவனே என்று உட்கார்ந்து இருக்க வேண்டும். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டில் படிக்கும் மகனின் படிப்பு முடியட்டும் என்ற எண்ணத்தோடுதான் பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். தன்னைப் போலவே அவனும் இந்த மண்ணில் படித்து ஒரு புகழ்பெற்ற மருத்துவராக வந்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற படித்த சாதாரண பெற்றோருக்கு இருக்கும் ஆசைதான் அவருக்கும் இருந்தது. பாசமா கடமையா என்று எடைபோட்டபோது, கடமைதான் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது. சத்திர சிகிட்சை அறையைவிட்டு வெளியே வந்தபோது, தாதி அவரைநோக்கிப் பரபரப்பாக ஓடி வந்தாள். முகத்திலே கவலை தோய்ந்து இறுகிப்போயிருந்தது. ‘என்ன..?’ என்றார். ‘சத்திர சிகிச்சை முடிஞ்சுதா டாக்டர்..?’ ‘ஆமா, நோயாளி தப்பிப்பிழைச்சிட்டான்.’ ‘பிழைச்சிட்டானா..? காப்பாற்றிவிட்டீங்களா..?’ இனம்புரியாத வெறுப்பு, அவளின் பெருமூச்சில் கலந்திருந்ததை அவர் அவதானித்தார். அந்த வெறுப்பு நியாயமானதுதான், இது அவளின் தனிப்பட்ட வெறுப்பல்ல, ஒட்டு மொத்தமாக அங்கே உள்ள ஊழியர்களின் வெறுப்பையும் உள்வாங்கித்தான் அவள் பிரதிபலிக்கிறாள் என்பதையும் அவர் அறிவார். நாட்டு நடப்பு அப்படி இருந்தது. ‘ஓரு வைத்தியருக்குரிய என்னுடைய கடமையைத்தானே நான் செய்தேன். என்னுடைய கையில் எதுவுமில்லை, நான் ஒரு காரணி அவ்வளவுதான், எல்லாம் அவன் செயலே!’ என்றவரின் குரல் கம்மியது. ‘எது கடமை..?’ அவள் எதையோ சொல்லத் தயங்குவது தெரிந்தது. ‘என்ன ஒரே பதட்டமாய் இருக்கிறாய்?’ அசதியோடு கேட்டார். ‘வந்து.., அவசர சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டியிலே இரண்டு, மூன்று நோயாளியைக் கொண்டு வந்தாங்க, வாசலிலே காவலுக்கு நின்ற இராணுவசிப்பாய்கள் உள்ளே அனுமதிக்க மறுத்திட்டாங்க!’ ‘அப்படியா..? இப்போ எங்கே அவங்க..?’ கடமை உணர்வோடு கேட்டார். ‘ரொம்ப நேரம் காவுவண்டி வெளியே காத்திருந்திட்டு, வேற வழியில்லாமல் எங்கேயாவது வேறு வைத்தியசாலைக்கு கொண்டு போகமுடியமா என்று முயற்சி செய்யப்போவதாக சொல்லித் திரும்பிப் போயிட்டாங்க!’ ‘ரொம்ப ஆபத்தான நிலையில் இருந்தாங்களா?’ ‘ஆமா, டாக்டர் துப்பாக்கிச்சூட்டுக்காயம், இரத்தசேதமாம்! அவசர சத்திர சிகிச்சை செய்தால் எப்படியும் அவங்க தாப்பிவிடுவாங்க என்று சொன்னாங்க.’ ‘எங்கே இருந்து கொண்டுவந்தாங்க? சத்திரசிகிச்சை செய்யக்கூடிய வேறு வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லையே!’ ‘மருத்துவக்கல்லூரிக்கு முன்பாகத்தான் கிளைமோர் குண்டு வெடிச்சதாம். அதிலேதான் நீங்க சத்திர சிகிச்சை செய்து பிழைக்க வைத்த இராணுவகாப்டன் அகப்பட்டிருந்தான்.’ ‘மருத்துவக் கல்லூரிக்கு முன்பாகவா? அங்கேயா நடந்தது?’ டாக்டரின் குரல் சட்டென்ற அடைத்துக் கொண்டது. ‘ஆமா, காயமடைந்த ஆத்திரத்தில் கூடவந்த இராணுவத்தினர் மருத்துவக் கல்லூரிக்குள்ளே புகுந்து கல்லூரி மண்டபத்திற்கு தீவைச்சது மட்டுமல்ல, அங்கே நின்ற மாணவர்களையும் நோக்கிச் சாரமாரியாகச் சுட்டிருக்கிறாங்க. அதிலேதான் இங்கே கொண்டுவந்த அந்த மாணவங்க காயப்பட்டாங்களாம்!’ ‘மருத்துவக் கல்லூரி மாணவங்களா..?’ வார்த்தைகள் அடைத்துக் கொண்டன. ‘ஆமா டாக்டர்..!’ ‘எத்தனை பேரைக் கெண்டு வந்தாங்க? அவங்க முகத்தையாவது நீ பார்த்தியா?’ பதட்டத்தோடு கேட்டார் சிவகுமாரன். ‘இல்லையே டாக்டர், உயிருக்குத் துடிச்சிட்டு இருப்பதாக கொண்டு வந்தவங்க சொல்லி மன்றாடினாங்க, ஆனால் அவங்களை உள்ளே கொண்டுவரக் காவலுக்கு நின்ற சிப்பாய்ங்க விடவேயில்லை!’ ‘ஏன்..? ஏன் தடுத்தாங்க..?’ கடமையைச் செய்ய முடியாமல்போன ஏமாற்றமும் அது சார்ந்த இயலாமையும் அவரை வாட்டத் தொடங்கின. ‘காப்டனின் சத்திரசிகிச்சை முடியாமல் யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்லித் தடுத்திட்டாங்க. அதுமட்டுமல்ல காப்டனுக்கு ஏதாவது ஆச்சுதென்றால் எங்களையும் சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாங்க டாக்டர்.’ ‘உண்மையாவா..? எனக்கு இதெல்லாம் தெரியாமல் போச்சே..!’ களைப்பும், குழப்பமும் ஒன்றாய் நிறைந்த நிலையில், மனம் உடைந்துபோன சிவகுமாரன், தலையில் கை வைத்தபடி அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். இந்த நேரம் பார்த்து மேசையில் இருந்த தொலைபேசி அலறியது. இராணுவ மேலிடத்தின் அழைப்பாகத்தான் இருக்கும், எடுக்காவிட்டால் அது குறித்த பிரச்சனைகள் இன்னும் பூதாகரமாய் வெடித்துவிடும் என்ற நினைப்பில் வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காதில் வைத்தார்! என்றுமில்லாதவாறு ஏதோ தவறு நடந்துவிட்டது போல, 'என்ர ராசா...' என்று கத்திக் குழறியழும் மனைவியின் அவலக்குரல் மறுபக்கத்தில் கேட்க, ஒன்றும் புரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றார் டாக்டர்! :kuruaravinthan@hotmail.com https://yarl.com/forum3/forum/215-கதைக்-களம்/?do=add
  15. முன்பு உசுபபேற்றல்கள் செய்து கொண்டிருந்த தமிழ் தேசியவாதிகள் இப்போது அநுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்கள் பொறுமை காத்து மிகுந்த பொறுப்புணர்சியுடன் யோசித்து ஸ்ரீலங்காவின் ஒருமைபாட்டிற்கு எதுவிதமான பாதிப்பு வராதபடி நடந்து கொள்ளுமாறு பாடம் எடுக்கின்றனர்.
  16. அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பற்றி Island, கிருபன் நன்றாகவே விளங்கபடுத்தி உள்ளார்கள் தமிழர்கள் பிரச்சனைகளை தீர்காமல் கையில் எடுத்து அதை பேசிப் பேசியே கோமாளி தனங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றுவது . தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை நன்றாக பயன்படுத்தி கொள்வது. [அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது] வணங்காமுடியின் நல்ல கருத்து ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம -------------------- கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄
  17. நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின் தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
  18. உண்மைதான். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தாலும், இடித்தாலும் மக்களுக்காக மரணித்தவர்கள் அவர்கள் மனங்களில் வாழ்வாங்கு வாழ்வார்கள். மாற்றான் அழித்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்கும் ஐயா… ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்கும் ஐயா…. -புதுவை இரத்திரதுரை-
  19. ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் உடனேயே மின்கட்டணத்தை குறைக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்து, பின்னர் மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று சொல்வதை தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். உறுதிமொழிகள், வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசி விட்டு, இப்பொழுது வெறும் கையை மட்டும் விரித்து விரித்து காட்டினால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் தான்................ எல்லாமே மாஃபியாவா நாட்டில்.....................🫣.
  20. அல்லாரும்... ஒண்ணுக்க ஒண்ணா இருந்தா... ஒலகத்தில சண்டை ஏது, சச்சரவு ஏது. 😂 🤣
  21. அர்ச்சுனா அவசரப்பட்டு இப்போது பாதை மாறி பயணிப்பதாகவே எனக்கு படுகிறது. தான்தோன்றித்தனமாக யாழ் வைத்தியசாலைக்கு சென்று சத்திய மூர்த்தியை சந்தித்ததும், அங்கு ஊழியர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதும் தப்பு. எதிராளிகளை பழிவாங்குவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் பெற்றுக்கொண்டாதாக எண்ணத்தோன்றுகிறது. அநீதியை தட்டிக்கேட்பதற்கு சரியான வழிமுறைகளை பின்பற்றாமல், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அனைத்தையும் ஒரு நாளிலேயே சரிசெய்துவிடலாம் என்று எண்ணி செயலாற்றுவது முற்றிலும் மடமை. அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது. அதைத் தமிழ் மக்களும் நீண்டகாலத்துக்கு சகித்துக்கொள்வார்கள் என்று கூறமுடியாது.
  22. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 11) விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து தாம்பரம் சென்று திருச்சி செல்வதாக அவரது பயணத் திட்டம் இருந்தது. இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன். "காலை 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வசந்தா மாரிக்கண்ணு, அங்கு நின்றிருந்த ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் இரண்டு பக்கமும் இருந்த ஸ்க்ரீனை டிரைவர் இறக்கிவிட்டுள்ளார்." ஆனால், ஆட்டோ தாம்பரம் செல்லாமல் குரோம்பேட்டை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, பச்சை மலை வழியாகச் சென்றுள்ளது," என்று தெரிவித்தார் உதவி ஆணையர் நெல்சன். அங்கு ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வசந்தா மாரிக்கண்ணு அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை அந்த நபர் மிரட்டிப் பறித்ததோடு, அதன்பிறகு வசந்தாவை கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார். சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 தந்தையை போலீஸில் ஒப்படைத்த மகன் பட மூலாதாரம்,HANDOUT இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு, தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு அவரது மகன் ராமச்சந்திரன் வந்துள்ளார். இதுதொடர்பாக, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தான் திருடிய நகைகளை விற்று குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தனது மகளிடம் கணேசன் கூறியதாகவும், இதை அறிந்த அவரது மகன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தனது தந்தையை ஆஜர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வசந்தாவிடம் இருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பவுன் நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!8 மணி நேரங்களுக்கு முன்னர் தனது தந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், "புதன்கிழமை காலையில வீட்டுக்கு வந்ததும் என் அப்பா நகைகளைக் காட்டினார். 'இந்த நகை எப்படி வந்தது?' எனக் கேட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்ததாகச் சொன்னார். 'நம்மை நம்பி ஆட்டோவில் ஏறும் ஒருவரிடம் இப்படியெல்லாம் செய்வது தவறு" எனக் கூறி வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டேன். அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்" என்றார். இதன்பிறகு கணேசனை பின்தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், அவரை தாம்பரம் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். "காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்று என் தந்தை கெஞ்சினார். அதைப் பொருட்படுத்தாமல் நான் கூட்டிப் போனேன்" என்றார், ராமச்சந்திரன், மேலும், குடிபோதையில் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், "தவறுக்கு எப்போதும் உடன்பட மாட்டேன். அவர் செய்தது மிகத் தவறான காரியம் என்பதால் போலீசில் ஒப்படைத்தேன். அது என் தம்பி, தங்கையாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன்" என்றார். யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்5 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருடப்பட்ட நகை கஞ்சா விற்றதாக தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கணேசன் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் காவல் உதவி ஆணையர் நெல்வன். அதுகுறித்துப் பேசியவர், "கஞ்சாவை புகைத்துவிட்டுப் பலமுறை கணேசன் தகராறு செய்துள்ளதால், மறுவாழ்வு மையத்திலும் அவரைச் சேர்த்துள்ளோம். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை பெறாமல் திரும்பிவிட்டார்" என்றார். கணேசனின் மனைவி சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைப்பதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. "கணேசனின் மனைவியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்கிறார் நெல்சன். ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த ராமச்சந்திரன், "உண்மைதான். இதற்காக நானும் கடன்களை வாங்கி ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அதற்காக திருடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்கிறார். இந்த வழக்கில் கணேசன் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 304(2)இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் நெல்சன், "பொதுவெளியில் பயணிக்கும்போது வசந்தா மாரிக்கண்ணு எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த அன்று மழை பெய்ததால் அவர் கோட் அணிந்துள்ளார். 'இதனால் நகைகள் அணிந்திருப்பது வெளியில் தெரியாது' எனத் தான் அலட்சியமாக இருந்துவிட்டதாக" கூறுகிறார். விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியே வரும் பயணிகள், மொபைல் செயலி மூலம் பதிவு செய்துவிட்டு வெளி வாகனங்களில் பயணித்தால் ஆட்டோ டிரைவரின் பெயர், வாகனம் ஆகியவற்றை அறிய முடியும். "அவ்வாறு இல்லாமல் தெருவில் செல்லும் எதாவது ஒரு வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். தங்களது உறவினர்களுக்கு வாகனத்தின் எண், டிரைவரின் அடையாளம் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டுப் பயணிப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்வன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cm2exyp63j0o
  23. தரமான பதில், இதில் சிலரை இப்ப காணக்கூடியதாக இருக்கு பைடனின் திரியில் ஓடி ஓளிந்தவர்களை😅 மேற்குலகை குறை சொன்னால் மூக்குமேல் வரும்இவர்களுக்கு 😅😂 அவர்கள் தான் இவர்களின் வாழ்கை வழிகாட்டிகள்
  24. இந்து முறைப்படி… ஈமச்சடங்கு செய்துள்ளார்கள் போலுள்ளது. 🥸
  25. கே. சச்சிதானந்தனின் கவிதை ஒன்று. இதை ஜெயமோகன் அவரது தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். எங்கும் போரால் நிறைந்திருக்கும், அப்பாவி மக்களை ஆதரவற்றவர்களை பலவீனமானவர்களை கொன்று குவிக்கும் இன்றைய உலகிற்கு ஏற்ற ஒரு கவிதை இது வென்றோம் என்றவர்களே தோற்றவர்கள் ஆகின்றனர். https://www.jeyamohan.in/208930/ ********************************************************** இறுதிவிருப்பம் ---------------------- நான் அசோகன் பிணக்குவியல்களின் துயரம் நிறைந்த காவல்காரன் சகோதரர்களின் தலைகளை மிதித்து ரத்தநதியை கடக்கும் துரியோதனன் குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட வெறும் ஊன்தடி என் கழிவிரக்கம் பாலைவெளியில் அலையும் ஆண்மையற்ற காளை என் மனமாற்றம் குருதி படிந்த வாளின்மீது சுற்றப்பட்ட காவி தர்மச்சொற்பொழிவாற்றும் இக்கனவுகளால் என் பாவத்தை மறைக்கமுடியாது அவையும் என் கீர்த்தித்தூண்களென்றாகும் என் தீமையின் விரைத்தெழல்கள். என் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரக்காலும் நான் ஒடுக்கிய ஒரு வம்சத்தின் முதுகெலும்பு என் சிம்மங்களின் ஒவ்வொரு சடைமயிரும் நான் எரித்த நகரங்களின் சிதைச்சுவாலை. இருபோர்களிலும் நான் தோற்றேன் எனக்கு மரணதண்டனை அளியுங்கள் என் இறுதிவிருப்பம் இதுவே இப்புவியின் இறுதி அரசன் நானேயாகவேண்டும்.
  26. 🤣................ நானாவது ஒரு பதில் எழுதினேன்......................😜. முற்றிலும் பகிடியே, அண்ணா. உங்களின் கேள்விகள் மரம் அரியும் வட்ட வாள் போன்றது........ சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கும்........................👍.
  27. நீங்கள் என்னைப் பற்றி இப்படி சொல்வீங்கள். என்று நான் கனவிலும். நினைக்கவில்லை 🤣 சரி போகட்டும் விடுங்கள் ஈழப்பிரியன். அண்ணை நினைக்கவில்லை என்றால் சரி தான்
  28. 11 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள் என்று ஒரு கணக்கு சொல்லுகின்றனர். ஆனால் அதில் இரண்டு லட்சம் மக்களைக் கூட கைது செய்து வெளியேற்றுவதற்கு தேவையான வளங்கள் அதற்கு பொறுப்பானவர்களிடம் இல்லை என்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் இவர்களின் இடத்தை யார் நிரப்பப் போகின்றார்கள்.................. அமெரிக்கர்களும், இந்தியர்களும் குனிந்து புல்லுப் பிடுங்கப் போவதில்லை........ எனக்குத் தெரிந்த அளவில் என்னுடைய சுற்றுவட்டாரத்தில் புல்லு வெட்டிக் கூட்டும் ஒரே ஒரு 'இந்தியன்'.............. நான் மட்டுமே............🤣.
  29. அண்ணா, தரமாட்டம் என்று கூறியே வழிக்கு கொண்டுவரும் 🤣🤣🤣
  30. வழிமொழிகிறேன்
  31. பெரும்பான்மையான மோதல்களில் இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களை கொன்று குவிப்பார்கள், அதன்போது கொல்பவனும் கொல்லப்படுகிறவனும் அல்லாஹு அக்பர் என்பார்கள். அல்லாஹ் யார் பக்கம் நிற்பார் கொல்பவன் பக்கமா கொல்லபடுகிறவன் பக்கமா?
  32. ஐயா.. சாரே.. Gentleman..!🙏 திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது.. கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹 யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢
  33. இணையவன், மட்டுறுத்தினராக தாங்கள் இருந்துகொண்டு நியாயமாக நடந்துகொள்ளாதவர் என்பது அனுபவம். எனவே… உங்கள் கேள்விக்குப் பதிலளிப்பது நேரத்தை வீணாக்கும் செயல். ✋
  34. அதிக சலுகை கொடுத்தால் இப்படித்தான் ."மதங்" கொண்டவர்களுக்கு மதம் ஒரு கேடு
  35. இது ஒரு தலைமை அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்யும் வழமையான நிகழ்வு போன்றது மட்டுமே, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை, தமிழர்கள் கவனிக்க வேண்டியது இதனைத்தான், சும்மா அனுர என பூசாரியுடன் மல்லுக்கட்டாமல் நேரடியாக சாமியிடம் செல்ல வேண்டும்😁.
  36. அதெல்லாம் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பேசி வேலைக்கு ஆகாது எண்டு எப்பவோ முடிவும் எடுத்தாச்சு ப்ரோ…. நீங்க இப்ப வந்து இந்திராகாந்தி செத்துட்டாவா எண்டு கேட்டா நாங்க என்ன செய்வது.
  37. 1. மேற்கு நாடுகளில் வீதியோர சாராய கடைகள் ரொம்ப சாதாரணம் என்பது உண்மைதான். யூகேயில் தமிழ் வியாபாரிகளில், 90% க்கு மேல் கடை வைத்திருப்போர்தான். இந்த கடைகளில் 90% க்குமேல் off licence எனும் சாராயக்கடைகாரார்தான். அதாவது வாங்கி வீட்டில் போய் குடிப்பவருக்கு விற்பவர்கள். கடையில் வைத்து குடிக்க அனுமதிக்க கூடாது. சாராயத்தை விட கெடுதலான சிகெரெட்டையும் கிட்டதட்ட 100% தமிழர் கடைகளில் விற்பார்கள். 2. நீங்கள் சொன்னது போல் கசிப்பு என்று பாம்பு பல்லி பட்டரியை காய்சி குடிச்சு சாகாமல் - இதை குடிச்சு கொஞ்சம் லேட்டாக சாகலாம்தான். 3. மேலே உள்ள காரணங்கள் ஊரிலும் பார் வைப்பது ஏன் கூடாது என சிந்திக்க வைக்கலாம். ஆனால்… 4. ஊரில் இங்கே போல் அளவாக குடிக்கும் கலாச்சாரம் இல்லை (இதிலும் யூகே, ஐரோப்பிய நாடுகளை விட மோசம்). ஊரில் குடி என்றால், வெறிக்க வெறிக்க குடித்து விட்டு, மனுசியை போட்டு அடிப்பது, குடிக்கு அடிமையாகி பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது என்பதே குடிமக்கள் கலாச்சாரம் (அநேகர்). ஆகவே டீச்ச்ண்டாக குடியை அணுகாத ஒரு இடத்தில் கண்டமாதிரி கடையை திறப்பது ஆபத்தே. 5. போதைக்கு தமிழ் இளஞர்களை அடிமைபடுத்தும் ஒரு நூதன யுத்தம் எம்மேல் திணிக்கப்படுவதாக பலர் உணர்கிறனர். இதற்கு குறைந்தது சந்தர்ப சாட்சியமாவது உள்ளது, இந்நிலையில் - போதையை எதிர்த்து வேலை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே பார் திறக்க உதவி செய்வது - மிக மோசமான வேலை. 6. தலைவரின் படத்தை பேஸ்புக்கில் போட்டாலே கதவை தட்டும் பொலிஸ், நிச்சயம் கசிப்பை கட்டுப்படுத்த முடியும். 7. நான் மது ஒழிப்பு ஆதரவாளன் அல்ல. அது முடியாதவிடயம். ஆனால் தேவையில்லாமல் மது பாவனையை கூட்டும் வேலைகளை அரசியல் தலைவர்கள் செய்ய கூடாது. அது வியாபாரிகளின் வேலை.
  38. "நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஒரு பாரிய மருத்துவ காப்புறுதிக் கம்பனியின் தலைமை நிர்வாகியை குறி வைத்துச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பயன்படுத்திய ரவையின் கோதுகளில், deny, defend, depose என்ற சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இவை, அமெரிக்காவின் இலாப நோக்கம் கொண்ட மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள், premium பணத்தை வாங்கிக் கொண்டு, நோயாளியின் மருத்துவத் தேவைக்கு உதவாமல் இலாபமீட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு தொழில் தந்திரம். இப்படி நோயாளிகளுக்கு சேவைகள் (claims) மறுக்கப் படுவதால் வரும் இலாபத்தில் பெரும்பகுதி, கொல்லப் பட்டவர் போன்ற நிறைவேற்று அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான போனசாக வழங்கப் படும். பாதிக்கப் பட்ட நோயாளிகளின் சார்பில் யாரோ சுட்டிருக்கிறார்கள். இனி அந்த மில்லியன் டொலர் போனசை என்ன செய்வது? தங்கத்தால் இழைத்த சவப்பெட்டி செய்வதா? எனவே, இளையோர் கவனிக்க வேண்டியது: வருமானம் எவ்வளவு வருகிறது என்பதை விட, வருமானம் ஈட்டிக் கொண்டே இரவில் நிம்மதியாக உறக்கம் வரும் வகையான தொழில்களைத் தேடிக் கொள்ளுங்கள்.
  39. யாழ் களத்துக்கு வருவது அடியையும். துனியையும் தெரிந்து கொள்ள தான் மாறாக போய் படுப்பதற்க்கு இல்லை உங்களுக்கு அடியும் துனியும் தெரியும் என்றால் தயவுசெய்து எழுதுங்கள் 🙏.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.