Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      45218


  2. Nathamuni

    Nathamuni

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      13654


  3. RishiK

    RishiK

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      572


  4. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      35540


Popular Content

Showing content with the highest reputation on 12/20/24 in all areas

  1. உடல் எனும் இயந்திரம். இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது. விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்துக் கொள்ளலாம்.இல்லையேல் தனக்கும் கேடு அவரை நம்பி உடனிருந்து வாழ்பவர்களுக்கும் சிரமத்தை கொடுக்கும். தன் உடல் நிலையின் அலட்சியத்தால் சிரம படும் ஒருவரின் கதை . படித்து பாருங்கள். பாலகுமார் ஒரு ஐம்பது வயது ஆண்மகன் குடும்பம் அழகான இரு பெண் குழந்தைகள் என கனடாவுக்கு வந்து ஆரம்ப காலத்தில் மிக மிக கஷ்டப்பட்டு ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்து தன் வாழ்வை ஓடிக் கொண்டிருந்தான் . குழந்தைகள் நாளும் பொழுதும் வளர்ந்து பாடசாலை முடித்து பல்கலை படிப்புக்கு அனுமதி பெற்று இருந்தாள் மூத்தவள். மற்றையவள் பாடசாலை இறுதி வருட மாணவியாக கற்றுக் கொண்டிருந்தாள் . மனைவியும் அவர்களின் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வேலையில் இருந்தாள். தன் கடின முயற்சியில் தன்னிடம் இருந்த பொருட்களை விற்று (நகைகளை விற்று) முதலீடு செய்து நண்பரிடம் பணம் வாங்கியும் வங்கியில் லோன் பெற்று ஒரு தொழில் அதிபரானார் அவரிடம் இருபது பேர் வேலை செய்யும் அளவுக்கு நான்கு வருடங்களில் நிறுவனம் நல்ல நிலையில் வைத்திருந்தார் . மனைவியும் வீட்டு வேலைகளுக்கு மத்தியில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க கணவனுக்கு துணையாக இருந்தாள். இப்படி அமைதியாக காலம் சென்று கொண்டிருந்தது . கடந்த சில நாட்களாக தனக்கு காலில் ஒரு வித வலி ஏற்படுவதாக முறையிட்டுக் கொண்டு இருந்தான். வேலை கடுமையாக இருக்கும் ஓய்வெடுத்தால் சரியாகும் என எண்ணிக் கொண்டு இருந்தான். ஒரு தடவை ஒரு பேச்சு வார்த்தையின் போது மருத்துவர் சித்தப்பாவிடம் கால் வலி பற்றி முறையிட்டான். அவரும் முழு உடல் பரிசோதனை செய்யும் படி அறிவுறுத்தினார். அவர் கவனிக்காது வேலையும் வீடும் என இருந்து விட்டார். ஒரு வார தொடக்க நாளில் காலையில் துயில் எழுந்து கழிவறை சென்ற போது லேசான மயக்கம் போல உணர்ந்து நிதானிக்க முன் சரிந்து விழுந்தார் . மனைவி சத்தம் கேட்டு வந்து ஆம்புலன்ஸ் அழைத்து வைத்தியசாலைக்கு சென்று உரிய பரிசோதனைகள் செய்து இதய வழிப்பாதையில் இரத்த அடைபட்டு ஏற்பட்டு இருந்தது . உடல் பலவீனமாக இருந்தால் இரண்டு நாட்களில் சத்திர சிகிச்சைக்கு ஏற்பாடானது . அன்று இரவு மீண்டும் ஒரு தாக்கம் ஏற்படவே மறு நாள் அவசரமாக சத்திர சிகிச்சை செய்தார்கள் .சத்திர சிகிச்சை முடிந்து சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கி வீடு சென்றார். ஓரளவு உடல்நிலை தேறி வரும் நாட்களில் அவரது மனநிலை , தன் நிறுவனம், வேலை ஆட்கள், புது ஆடர்கள் என்ற சிந்தனையில் இருந்தார். மேலும் ஒரு வாரம் சென்றது. மறுநாள் காலை காப்பி கப்பை கையில் எடுத்தவர் தடுமாறி போட்டுவிட்டார் கை நடுங்க தொடங்கிவிட்டது .மீண்டும் என்ன சோதனையா வாழ்க்கை என்று எண்ணி வைத்தியசாலையில் அனுமதித்த போது அவருக்கு "ஸ்ட்ரோக் " ஏற்பட்டு வலது கையும் காலும் தாக்கப்பட்டு மூளை செயலிழப்பு ஏற்பட்டது . அவரது நிலை எதிர்பாராமல் முடங்க வேண்டி ஏற்பட்டது . இளம் வயது தானே என அலட்சியம் இருந்து விட்டால் விளைவுகள் பாரதூரமாக விடும். இனி அவர்கள் எதிர்காலம் ....? இந்த இயந்திர உலகம் நம்மை இயந்திரமய வாழ்க்கை வாழ வைக்கிறது. நின்று நிதானித்து நம்மையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இளம் வயது தானே என அலட்சியப்படுத்தினால் கவலைப்பட வேண்டும். இதை ஒரு படிப்பினையாக எடுத்து கொள்ளுங்கள்
    3 points
  2. ஜஸ்டின், ஒரு இணையதளத்தில் உரையாடும் அக்னியை ஒரு சிலருக்கு தெரியும் என்ற நிலை இருக்கும்போது, புலிகளின் பணத்தை கையாடி வியாபார நிலையங்கள் , நிறுவனங்கள் என வைத்து கொழித்திருக்கும் நபர் இவர்தான் என்று பொதுவெளிதளத்தில் துப்பு கொடுக்கும் அக்னியை குறிப்பிட்ட அந்த பணம் அரசியல் செல்வாக்குள்ள அந்த கொழித்த நபர் எந்தகாலமும் யாரென்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்களா? முகம் தெரியா இணையத்தில் தலை வரை ஒருவரை வெட்ட முடியும் ஆனால் முடியை வெட்டினால் அது பாதுகாப்பு பிரச்சனை என்று உங்களால் மட்டுமே சொல்ல முடியும். ---------------------------------------------------------------------------------------- முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள், பணம் வசூலித்த போராளியை கொடூரமாக கொன்று சிங்களவன் வாகனத்தில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே ஆரவாரித்து மகிழ்ந்தது என்கிறார்கள், பின்பு நானும் புலிகளின் ஆதரவாளர் என்கிறார்கள். அந்த போராளி வசூலித்த பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி வைத்தார் அதை இன்னொருவர் ஆட்டைய போட்டு இன்று ஆஹா ஓஹோ என்று இருக்கிறார் என்று பதிவிடுகிறார்கள், புலிகளின் சேமிப்புக்கள், களஞ்சிய படுத்தல்கள், நடவடிக்கைகள்,தங்குமிடங்கள் பல கூட இருக்கும் தளபதிகள் போராளிகளுக்கே தெரிவதில்லை. ஆனால் புலிகள் அறவிட்ட பணத்தை ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்தார்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது. பொதுமக்களிடம் பணம் வசூலித்த போராளியின் சாவில் மகிழ முடியுமென்றால், அப்படி அறவிட்ட பணத்தை அப்படியே முழுங்கிய தனிநபரை பொது வெளியில் சொல்ல என்ன தயக்கம்? யாரினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும், புலிகளாலா? அரச படைகளாலா? அல்லது முன்னாள் ஆயுத குழுக்களாலா அல்லது பணத்தை களவாடிய அந்த நபரினாலா? இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது? எதிர்கருத்துக்களை விதைத்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டால்.. எதுவேண்டுமென்றாலும் சொல்லிக்கொண்டுபோகலாம் என்ற நிலை எடுத்துவிட்டால், பொத்தாம் பொதுவாய் கருத்தை விதைத்துக்கொண்டே போகலாம், ஆனால் பொட்டில் அடித்தமாதிரி இதுதான், இவர்தான், இப்படித்தான் என்று சொல்லி முடிக்க முடியாது. ஒரு இனத்தின் இருப்புக்காக உயிரை தவிர வேறு எதையும் விட்டு கொடுக்காமல் வாழ்ந்த ஒரு அமைப்பின்மீது போறபோக்கில் சேறு வீசி செல்வதை எதிர்வினையாற்றாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அப்படி இருந்துவிட்டால் எம் வாழ்வுக்காகவும் சேர்த்தே தம் வாழ்வை அழித்த அந்த போராளிகூட்டம் பிறந்த மண்ணில் உயிராக பிறந்தது மட்டுமல்ல, ஒரு மயிராக காற்றில் பறந்தால் கூட அது பெரும் பாவம். இங்கே புலிகளுக்காக முக்கி முக்கி பேசுவதால் போன புலிகள் வரபோவதில்லை, அல்லது புலிகளுக்கு சார்பாக பேசிவிட்டால் நீ மட்டும்தான் புலிகள் விசுவாசி என்று யாரும் முண்டாசு கட்டிவிட போவதுமில்லை, மாறாக மனசில் உள்ளதெல்லாம் புலிகள் வாழ்ந்தபோது எம் இனத்துக்காக அவர்கள் இறந்தது எம் இனத்திற்கான நன்றிக்கடன். அவர்கள் இல்லாதபோது அவர்களுக்காக நாங்கள் பேசுவது ,,அவர்கள் நினைவாகவே இருப்பது எமக்காக எல்லாம் செய்த பாவத்திற்காக இல்லாமலே போய்விட்ட புலிகளுக்கான எம் நன்றிக்கடன். இதுகூட ஒரு இனம் செய்யவில்லையென்றால், எமக்காக அந்த போராளி கூட்டம், பிறக்காதும் போயிருக்கலாம், பிறந்து இறக்காதும் போயிருக்கலாம்.
    3 points
  3. இன்றைய உலக அரசியல் நிலையில் ஒரு விடயத்தை பரிந்துரைக்க யாராலும் முடியாது. அதற்குரிய பலமும் எம் அரசியலில் அறவே இல்லை. நடக்க வேண்டிய வேலை சிங்களத்துடன் மட்டுமே நம்மவர்கள் கதைக்க வேண்டும். நிற்க... நடந்தவைகளை கிளறிக்கொண்டிருந்தால் எந்த விமோசனமும் இல்லை. எந்த முன்னேற்பாடுகளும் வராது. நடந்தவைகளை கனவாக மறக்க வேண்டும். இல்லையேல் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க வேண்டும். எது சரி என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
    3 points
  4. விவாதம் அல்லது எம் கருத்துக்களம் எப்படி இருக்கவேண்டும் இருந்தால் நல்லது என்பதற்கு இது ஒரு வரப்பிரசாதம். நன்றி இருவருக்கும்..
    2 points
  5. ரொஹிங்கா முஸ்லிம் அகதிகள் என நினைக்கிறேன். ஒரு காலத்தில் கடலால் வெளியேற முடியாது எமது மக்கள் வல்வளைக்கப்பட்ட இடம். இன்று அதே இடத்தில், அதே மக்கள் இன்னொரு பாவப்பட்ட இனத்தை கடலில் இருந்து மீட்டு உதவி செய்கிறார்கள்.
    2 points
  6. கடந்த செப்ரெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு ஒன்று இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கு பிரான்சில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அதிகமான கவனிப்பைப் பெற்றுள்ளது. அவிக்னோனில் ( Avignon ) நடந்த பாலியல் வன்புணர்வு வழக்கின் முக்கிய குற்றவாளியான டொமினிக் பெலிகாட் (Dominique Pelicot)டுக்கு மோசமான பாலியல் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. டொமினிக்கின் விதிக்கப்பட்டிருக்கிறது. மனைவி ஹீசலா (Gisele) மீது பாலியல் வன்முறையை மேற்கொண்ட மற்றைய 50 ஆண்களுக்கு இரண்டில் இருந்து பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. டொமினிக் பெலிகாட் ஹீசலாவுக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மீண்டும் மீண்டும் போதை மருந்தைக் கொடுத்து, அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றார். மேலும் ஐம்பதுக்கு அதிகமான பிற ஆண்கள் மூலம் அவரை பாலியல் பலாத்காரம் செய்வித்திருக்கின்றார். நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தன்மேல் சுமத்தப் பட்ட அனைத்துக் குற்றங்களையும் டொமினிக் பெலிகாட் ஒத்துக்கொண்டிருந்தார். “எழுபதுகளின் ஆரம்பத்தில் இருக்கிறேன். என் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கான வழக்கு மூடிய கதவுகளுக்குள் நடைபெறுவதை நான் விரும்பவில்லை. இங்கே நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. நான் வெட்கப்படுவதற்கும், கூனிக் குறுகிப் போவதற்கும் ஒன்றுமேயில்லை. வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு ஒதுங்கிப் போகாமல் எனது இந்த நடவடிக்கை மூலம் தைரியம் பெற வேண்டும். வெட்கப்பட வேண்டியது பாதிக்கப்பட்ட நாங்கள் அல்ல, எங்கள் மீது அதை ஈடுபடுத்திய ஆண்கள்தான் வெட்கப்பட வேண்டும். தண்டனை பெற வேண்டும்” என ஹீசலா பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்திருக்கின்றார்.
    2 points
  7. விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது? RS Infotainment இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? படத்தின் கதைகளம் விடுதலை முதல் பாகத்தில், மலைப் பகுதியில் மக்கள் வாழுமிடத்தில் சுரங்கம் அமைத்து வளங்களைச் சுரண்ட நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக புரட்சி வெடித்து மக்கள் படை ஒன்று உருவாகிறது. அதை தலைமை வகிக்கும் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது. புரட்சி செய்யும் மக்கள் படைக்கு எதிராக அரசாங்கம் சிறப்பு போலீஸ் படையை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அதன் ஜீப் ஓட்டுநராக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் குமரேசன் (சூரி) கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல், இரண்டாம் பாகம் முழுக்க பெருமாள் வாத்தியாரின் பின்கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது. ``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன?" என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை" என்கிறது இந்து தமிழ் திசை விமர்சனம். RS Infotainment விடுதலை 2 முதல் பாகத்தில் புரட்சியாளர் `பெருமாள் வாத்தியார்' (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் மலையில் இருந்து குமரேசன்(சூரி) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை வேறு இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். வழி நெடுக பெருமாள் வாத்தியார் தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார். இந்த நிலையில் "அவரின் பின்கதை குமரேசனை எப்படி பாதிக்கிறது எனும் போக்கில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 வலுவான கதைகளத்தைக் கொண்டிருப்பதாக `இந்தியா டுடே' தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. ``சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தத் திரைப்படம் கம்யூனிசத்திற்கான ஒரு கையேடு" என்றும், "கூற விரும்பும் கம்யூனிச கருத்தை எளிமையாக்கி, இன்றைய பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்” இந்தியா டுடே பாராட்டியுள்ளது. `இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம்' RS Infotainment "முதல் பாகத்தில், மலைக் கிராம மக்களின் வாழ்வியலையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராட்ட வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கூறுகிறது. விடுதலை 2 திரைப்படம், "தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூரமான மரணங்கள் என இயக்கவாதிகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் இந்து தமிழ், "வெற்றிமாறன் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார்" என்றும் விவரிக்கிறது. மேலும் விடுதலை 2 மூலம் சரியான கேள்விகளைக் கேட்டு, `யார் சரி எது சரி' என்று வெற்றிமாறன் மக்களைச் சிந்திக்க வைப்பதாக இந்தியா டுடே கூறுகிறது. `பெருமாள் வாத்தியாரின் பின்கதை ஏற்படுத்திய தொய்வு' RS Infotainment "இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தனது பாணியில் வன்முறைக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தினமணி விமர்சித்துள்ளது. "இரண்டாம் பாகத்தில் இருக்கும் வன்முறைக் காட்சிகளில் எந்தவிதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை ஆடையில்லாமல் சித்தரவதை செய்கின்றனர், பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டுவது என எதிலும் நமக்கு உணர்ச்சிகள் கடத்தப்படவில்லை. இது திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன" என்றும் தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. இந்து தமிழ் விமர்சனத்திலும், படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளில் அதிகமான ரத்தம் தெறிப்பதாகக் கூறுகிறது. இந்தியா டுடே தன் விமர்சனத்தில், ``பெருமாளின் பிளாஷ்பேக்கை விவரிக்கும்போது படம் தொய்வடைகிறது" எனக் கூறியுள்ளது. "விடுதலை 2 அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதையாக இருக்காது" என்றும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது. `போலித்தனம் இல்லாத காதல் காட்சிகள்' RS Infotainment படத்தின் ஆரம்பத்தில் கென் கருணாஸ் வரும் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதாகக் கூறும் இந்தியா டுடே, விடுதலை 2 படத்தின் முக்கிய பலம் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய ஆழமான வசனங்கள்தான் என்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசியுள்ள இந்து தமிழ், "இங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்கப் பேசியுள்ள இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாக" பாராட்டியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அற்புதமான நடிப்புடன் படத்தைத் தாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சூரி, குமரேசனாக இரண்டாம் பாகத்தில் படத்துக்கு பலம் சேர்ப்பதாக எழுதியுள்ளது. இந்து தமிழ் விமர்சனம் படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருப்பதாகப் புகழ்ந்துள்ளது. "அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனம் இல்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு" என்றும் குறிப்பிடுகிறது. திரைப்பட ட்ரெய்லரின்போது மஞ்சு வாரியாரின் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் "வெற்றிமாறன், திரைப்படத்தில் அதற்கு அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இனி தலைமுடியை வெட்டிக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது. ஒளிப்பதிவு சிக்கல்கள் RS Infotainment விடுதலை 2 படத்தில் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கு சரியான முடிவை அளித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. ``இது பாராட்டுக்குரிய முயற்சி. சில தொடர்ச்சியான ஓவர்லேப் வசனங்களின் சிக்கல்கள் இருந்த போதிலும், உரையாடல் சார்ந்த கதைக்களத்துடன், பல முற்போக்கான சித்தாந்தங்கள் மற்றும் கருத்துகளைக் காட்சிப்படுத்தியன் மூலம் கதை வலுப்பெறுகிறது" என இந்தியா டுடே கூறியுள்ளது. இளையராஜாவின் பின்னணி இசையைப் பாராட்டியுள்ள பற்றி இந்து தமிழ், ``பின்னணி இசையில் இளையராஜா மிரட்டுகிறார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் காதல் காட்சிகளில் கிட்டாரில் மிருதுவாகவும், விஜய் சேதுபதியின் வன்முறைக் காட்சிகளில் ட்ராம்போனில் பதற்றத்துடனும் நம் செவிகளுக்குள் அவரது இசை புகுந்து கொள்கிறது" என்று பாராட்டியுள்ளது. படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டிய இந்து தமிழ் விமர்சனம், ``ஒரு வசனம் முடிந்து மற்றொரு வசனம் வருவதற்குள் ஓவர்லேப் டயலாக்குகள் வந்துவிடுவதால், நிறைய வசனங்களை முழுமையாகக் கேட்க முடியவில்லை" என்று விமர்சித்துள்ளது. படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது தேவையின்றி பொருத்தப்பட்ட இடைச்செருகல் போன்ற உணர்வை மட்டுமே கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ``காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளதாக" தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. ``சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்பட்டு இருப்பதாகவும்" விமர்சித்துள்ளது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3907kerl3go?at_campaign=ws_whatsapp
    1 point
  8. ஒரு வருசம் காணாம போக வேணும் எண்டால், உடான்ஸ் சாமியார் பக்தன் ஆகீவிடுங்கள். போன வருசம் பார்ட்டி போக முன்னம் ஒரு ஜடியா கேட்டன்.... ஜடியாவை தந்து போட்டு, சோகப்பாட்டு போடுறார். இதுககுப் பிறகும் வராட்டா, ஜயரோட வந்து, திவசம் எண்டுவார் எண்டு தான்.... தலயக் காட்டுவம் எண்டு... 😎
    1 point
  9. நவம்பரில் இருந்து வார இறுதிகளில் ஒரே பார்ட்டி! புது வருஷத்தில் இருந்து “ஓம் சரவணபவ” பக்தனாகப் போகின்றேன்🤪
    1 point
  10. நீண்ட காலத்தின் பின் கண்டது சந்தோசம்.
    1 point
  11. சாமீயாரிண்ட, வேலா, வேலா, அந்த லேடீயும், டீலும் பிடிச்சுது! 😜. தளமும், மட்டுகளும் சுகம் தானா? நம்ம கோசனும், கீபோட்டும் சுகம் தானா?
    1 point
  12. என்னப்பா, டயட் கோக்கில ஐஸ் போட்டு அடியுங்கோ எண்டுபோட்டு, அடிச்சுப்போட்டு வந்து பார்த்தா, எங்கிருந்தாலும் வாழ்க பாட்டு போட்டு சோகமா இருக்கிறியள். நம்ம பாட்டு இதுதான், அது சரி கண பேர் என்னை சந்திச்ச விசயம் சொல்லி இருந்தினம். உண்மைதான்.
    1 point
  13. இந்த வரிசையில் அமெரிக்காவிலிருந்தும் எலான் மாஸ்கையும் ராமசாமியையும் சேர்க்க வேண்டுகிறேன். வாலி சம்பந்தமில்லாத அனுராவை கேட்பதைவிட ரணிலிடமே நேரடியாக கேட்கலாமே? சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் தான் நல்ல உறவு உள்ளதே.
    1 point
  14. உள்ளேன் ஐயா😂! ஓம், தேங்காய்ப் பாலை (அதுவும் அடர்த்தியான முதல் பாலை😎) எல்லாக் கறிக்குள்ளும் போட்டு அவித்ததால் இலங்கையில் மாரடைப்பும், மூளை இரத்த அடைப்பும் தான் முதல் இரு மரணக் காரணங்களாக வந்திருக்கின்றன👇. https://www.healthdata.org/research-analysis/health-by-location/profiles/sri-lanka ஆனால், தேங்காயை வேறெதற்கும் பாவிக்கலாமா? ஆம். தேங்காயில் இருக்கும் நிரம்பிய கொழுப்பு பாண்டலடையாது. எனவே, மருந்துகள் தயாரிக்க எண்ணை தேவையானால் தேங்காய்க் கொழுப்பு திறமான கரைப்பான். அழகுசாதனப் பொருட்கள் இதனால் தான் தேங்காய் எண்ணையில் தயாரிக்கப் படுகின்றன.
    1 point
  15. How you can help Donate AU$ 50 per month to Mahalirillam to support a life change by empowering a female child with the gift of education. TO DONATE PLEASE CLICK HERE -> Donation Via Bank Direct Debit "Fund for Mahalirillam” (ABN 47 467 887 194) Commonwealth Bank of Australia, Hay Market Branch, Sydney, NSW 2000. Account No: 06 2006 1103 3596 Via PayPal, using either a debit or credit card Support Mahalirillam by visiting and engaging with us on following social media https://www.facebook.com/pages/Mahalirillam/143589209051620 https://www.youtube.com/user/Mahalirillam/videos Please circulate our newsletter with your family & friends while engaging with them in spreading our vision, inspiring them to join our Mahalirillam family. If you have an enquiry or wish to provide you feedback Please click here -> https://mahalirillam.org/au/ contact-us/
    1 point
  16. சுத்திச்சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள் தான் நிற்கிறார்.
    1 point
  17. பின்பு கதைக்கலாம் என்று தான் இருந்தேன். சுருக்கமாக சொல்கிறேன் நான் பாவித்த வார்த்தைகள் நிலைமைக்கு வேண்டியதை விட கனதியாக இருக்கலாம், அனால் அது அடிப்படையை மாற்றாது. (அசாத்தை கொண்டுவர வேண்டாம். அதை பின்பு கதைப்போம்.) 1. அப்போது tna இல் எந்த அடிப்படையில் மற்ற இயக்கங்கள் சேர்த்து கொள்ளப்பட்டது? மற்ற இயக்கங்கள் , சிங்களத்தின் யாப்பை ஏற்று, சிங்கள பாதுகாப்பில் அல்லவா? அது போராட்டத்தை ... அனால், அநாத நிலையில் அவர்கள் புலிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இல்லை (அல்லது மிக குறைவு). ஆக குறைந்தது, புலிகள் சொன்னதுக்கு முரண் அல்லவா? 2. அனால், பாலசிங்கம் சொன்னதில் கூட effect ஐ எடுத்து விட்டு, cause தவிர்த்து விட்டீர்கள். ஏன் என்று சிந்தித்து பார்க்கவும். மற்ற போராட்டங்களிலும் இப்படி நடந்து இருக்கிறது (big fish .. small fish விழுங்கி இருக்கிறது) என்பதும் விளைவே தவிர .... வேறு எவரும் big fish ... ஏன் முழுங்க எத்தனிக்கிறது என்பதை அதில் பொதிந்து உள்ள அர்த்தத்தை விட மாட்டார்கள் (சுருக்கமாக 1. வெளிப்படையாக உணவு சங்கிலி 2. முன்பே சொன்னது, இரண்டுமே சுட்டுவது big fish இன் survival) 3. எத்தனையோ அரசியல் மற்றும் தத்துவ அறிஞர்கள் theoretical, மற்றும் practical ஆக அவதானித்து, ஆய்வு செய்து அடைந்த முடிவை (அதாவது இருப்பே அடிப்படை காரணம்), புலிகள் முறித்து உள்ளார்கள் என்றால், புலிகள் மனித வர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வரும் (இது நான் சொல்வது) 4. மாறாக, அப்படி புலிகள் செய்து இருந்தால், அது அது அரசு சாரா (ஆயுத மற்றும் ஆயுதம் அற்ற) ஒழுங்குபடுத்தப்ட்ட அமைப்பு அரசியலில் ஓர் paradigm shift. நிச்சயம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். 5. புலிகள் வெளியில் சொன்னது அவர்களுக்கு வசதி. (பொய் என்ற வார்த்தையை பாவிக்கவில்லை). புலிகள் அதை நம்பியும் இருக்கலாம். 6. புலிகள் இதை சுகந்திரமாக ஆய்ந்து பார்க்கவில்லை. 7. புலிகள் செய்தது - பாட்டும் நானே, பாவமும் நானே, பாடும் உனை நான் பாடவைத்தானே ... நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற போக்கு. 8. இதனால் தான் ஆகக்குறைந்தது முரண்பாடு எழுகிறது. உணர்ச்சிகளை தள்ளி வைத்து பார்க்கவும். இதனால் போராட்டம் மீது புலிகள் வைத்து இருந்த பற்றுறுதியை நான் மறுக்கவில்லை.
    1 point
  18. ஆளைப்பார்த்தால் டேர்மினேட்டர் மாதிரி தெரியவில்லை. நோஞ்சான் மாதிரி இருக்கிறார்.
    1 point
  19. இவர்களால் பல உண்மைகள் வர வாய்ப்புள்ளது, புலிகளின் தலையில் விழுந்த பல அரசியல் புள்ளிகளின் கொலைகள் உட்பட.
    1 point
  20. ஆபத்து எந்தவடிவில் வந்தாலும் இந்தவிடயத்தில் உங்களுடன் களமிறங்க தயார். அதற்க்கு முன் உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழி வேண்டும். எந்த அளவிற்கு போயும் குறிப்பிட்ட நபருக்கு எதிராக சட்டத்திற்குட்பட்ட அதிகபட்ச தண்டனையை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும் நான் முயற்சித்தேன் முடியவில்லை என்ற சால்ஜாப்புகளுக்கெல்லாம் இடமில்லை. அதாவது பூனைக்கு மணியை கட்டுவது உங்கள் பொறுப்பு மணியை எடுத்து தருவது எனது பொறுப்பு. அதைவிடுத்து சும்மா பொதுஅறிவுக்காக கேட்கிறேன் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக கேட்கிறேன் என்ற இந்த சடையல்களுக்கு எனக்கு நேரமில்லை. கோதாவில் இறங்கத்தயாரா ...? டிஸ்கி2: இறுதியுத்தத்தில் 53,58,59 ம் டிவிஷன் உட்பட முன்னரங்கில் போர்புரிந்த பல பட்டாலியன்களின் அதிகாரிகளாக இருந்த பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் நீங்கள் எப்படி...? இல்லை அடி முடி கண்டேயாகவேனும் என்று நீங்கள் முடிவெடுத்தால் தேவையான அனைத்துத்தகவல்களும் உங்கள் இல்லம் வந்து சேரும் but only if you agreed upon above condition . இல்லை ஒரு ஹைகோர்ட்டுக்கும் உதவாத மக்களை அறிவூட்டும் உங்கள் செயல்திட்டங்களை நீங்கள் தனியாக முன்னெடுக்கலாம். அது என்னுடைய வேலை அல்ல
    1 point
  21. இங்கு வெளிநாட்டுக்கு வந்த ஆரம்பத்தில் நட்பு அடிப்படையில் ஒருவர் கை குலுக்கினார், கை குலுக்கும் போது உள்ளங்கையினை சுரண்டினார், அப்போது எனக்கு அதன் சூட்சுமம் தெரியவில்லை, அவர் விளையாட்டாகத்தான் செய்கிறார் என நினைத்து பதிலுக்கு நானும் உள்ளங்கையினை சுரண்டி விட்டேன்😁. அதன் பின்னர் வேறு ஒருவருக்கு அதே போல் உள்ளங்கையினை சுரண்டின போது, அவர் நான் புரியாமல்தான் இதனை செய்வதனை உணர்ந்தவறாக காரணத்தினை விளக்கினார், இந்த சம்பவத்திற்கிடையே பலருடைய கையினை குலுக்கியிருந்தேன். இங்கு இலங்கை கோருவது வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான நன் கொடை என நினைக்கிறேன், அத்துடன் எதிர்காலத்தில் வரவுள்ள நட்டத்திற்குமான நட்ட ஈடு.
    1 point
  22. அனைவருடனும் கதைக்க வேண்டும், சிங்களத்துடன் உடன்பாடு எட்டப்படும் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும், சிங்களம் எப்போதும் ஒப்பந்தங்களை சின்னப்பிள்ளைகள் பேப்பரை கிழிப்பது போல கிழித்துவிடுவார்கள், அப்படி கிழிக்கும் போது யாராவது பக்கத்திலிருந்து ஒரு போடு போடுவதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருக்க வேண்டும். தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு ஓடோடி போய் இந்திய பாதுகாப்பிற்கு எதிராக செயற்படமாட்டோம் என கூறி இந்தியாவினை மகிழ்விக்க இந்திய நலத்திட்டத்தினை இலங்கையில் செயல்படுத்துவதிற்கு தயாரக உள்ளோம் என கூறியுள்ளார், பொதுவாக எமது நலனிற்காக மற்றவர்களை நாடி செல்லுகின்ற நிலையில் இந்திய நலனிற்க்காக இந்தியாவிற்கு ஓடிப்போன இலங்கை அதிபரை வழிக்கு கொண்டுவர இந்தியா போன்ற மூன்றாம் தரப்பு வேண்டும். உக்கிரேன் இரஸ்சிய போரில் சம்பந்தப்பட்ட இரண்டாம் தரப்பான இரஸ்சியாவினை விட்டு விட்டு அமைதி முயற்சியில் ஈடுபடுகின்ற உலகில் சிங்களத்துடன் மட்டுமே பேசுவோம் என இருந்தால் எமக்கு எதுவும் கிடைக்காது.
    1 point
  23. அருமை👍 பாராட்டுக்கள்.🙏
    1 point
  24. அவைகளை வாசித்திருக்கின்றேன், குமாரசாமி அண்ணா............... saturated vs. unsaturated and mono vs. poly....... என்று விளக்கங்கள் சொல்வார்கள். தேங்காயால் போனோம் என்று இருக்கட்டும்...............🤣.
    1 point
  25. கடலுக்குள்ல நாங்கள் பஸ்ச தாட்டது டைட்டானிக் மாதிரி படம் எடுக்க. இது தெரியாமல் ரசோ தம்பி என்னென்னமோ எல்லாம் பேசிக்கிட்டு....
    1 point
  26. இவ்வளவு லேட்டாகவா இதைச் சொல்வது............. கடல் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் இப்பொழுது புதிய கடல் தொழில் அமைச்சரின் பின்னால் போய் விட்டார்கள்................ என்ன டக்ளஸ் அண்ணை, நீங்கள்...............🤣. கடலுக்குள் பஸ்ஸை தாட்டது, வடமராட்சி கிழக்கு கடற்கரையில் மண்ணை அள்ளினது என்று ஏதாவது விசாரணையை ஆரம்பிக்கப் போகின்றார்கள்........ சும்மா சும்மா சவுண்டு விட்டால்...............
    1 point
  27. பேசுவதில் பயனிருந்த ஒரு காலம் இருந்தது. கந்தன் கருணை முதல், அருணா, நாவாலி கண் நோய் டெலோ போராளிகள், மாத்தையா குரூப் போராளிகள் என பலதை இதே யாழில் எழுதி, வாதிட்டு பத்து வருடத்துக்கும் மேல் ஆகிறது. இதற்கான தேவையும், காலமும் இப்போ முடிந்தே விட்டது. இல்லை என்றால் சங்கிலியன் 600 பேரை கொண்டது தவறா இல்லையா என வாதடலாம். பிரித்தானியாவில் 30 வருடம் கழிய பெரும்பாலான அரச ரகசியங்களையே வெளியிடுவார்கள். 2024-1986 =38 வருடங்கள்.
    1 point
  28. அப்பிடியே கட்சியை கலைத்து விடச் சொல்லி ஒரு வழக்குப் போட்டு கலைத்து விடவும். சும்மா எடுத்ததுக்கு எல்லாம் வழக்கு.
    1 point
  29. காங்கேசந்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஒரு இடம் இருக்கின்றதே.......... அங்கு ஒரு துறைமுகத்தை அமைத்து, அங்கே கொண்டு போய் நிற்பாட்டுவம்.......................😜.
    1 point
  30. ஏன் சகல பரிசோதனைகளுக்கும் கொழும்புக்கு ஓடவேண்டும், யாழ் பல்கலைக்கழகத்தில் கூட இந்த ஆய்வு வசதிகள் இல்லையா?
    1 point
  31. 100% உங்கள் கருத்தை ஏற்று கொள்ளுகின்றேன், அவர்களின் புறநிலை சூழலை மாற்ற யாராவது உதவ வேண்டும். அங்கு தான் நல்லதொரு தன்னலமற்ற அரசியல் தலைவன் தேவை. நாங்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் ஊடாக ஒருசில பாலர்பாடசாலைகளுக்கு உதவுகின்றோம், ஆனால் அவர்களின் தேவை கடலளவு.
    1 point
  32. மிக்க நன்றி சாத்தான் உங்களின் நீண்ட பதிலுக்கு. உங்களைச் சிக்க வைப்பதற்காக எதையும் கேட்கவில்லை. இங்கு களத்தில் எவர் மேலும் அப்படியான ஒரு எண்ணமோ அல்லது திட்டமோ எனக்கு அறவேயில்லை. உலகின் எங்கோ ஒரு மூலையில் எந்த விதமான அரசியல்மயப்படுத்தலுக்கும் உட்படாமல் இருக்கும் பலரின் நானும் ஒருவன். இவை எல்லாமே முதலில் தகவல்கள் தான் என் போன்றவர்களுக்கு. இது வெறும் பொழுதுபோக்காகவே ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் இப்பொழுது நல்ல நட்பும், நேசமும் துளிர்க்கின்றது இங்கு வந்து போகும் எல்லார் மேலேயும், உங்கள் மீதும் தான்.................... உங்களின் அவதார் மற்றும் பெயரைப் பார்த்து 'ஆளவந்தான்' நந்தா போல இருக்கின்றதே என்று சிரித்துக் கொள்வேன்..............🤣. உங்களின் கருத்துகளும், அபிப்பிராயங்களும் சிந்திக்க வைக்கின்றன. நானும் இதையொட்டி தேடி இன்னமும் தெரிந்து கொள்கின்றேன்...............👍. எப்போதும் ஒற்றை வரியில் மட்டை அடி போல கருத்துகள் சொல்பவர்களுடன் உரையாடுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை மிக விரவிலேயே வந்துவிடும், அது என்ன துறையாக இருந்தாலும். அதே போலவே சொந்தக் கருத்துகள் இல்லாமல், எப்போதும் பிற ஊடகங்களை அப்படியே பிரதி செய்தாலும், அங்கேயும் உரையாடல் முடிந்துவிடுகின்றது. உங்களின் நீண்ட எழுத்து உரையாடலை வளர்க்கின்றது. இது சிலரால் மட்டுமே முடியும், அத்துடன் அழகிய தமிழும்............❤️. கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றோம் அல்லது மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றோம் என்று நான் சொன்னது இங்கு களத்திலிருக்கும் எந்த நட்பையும் தனியே சுட்டி அல்ல, நீங்கள் உட்பட........... ஒரு சமூகமாகவே இப்படிச் செய்கின்றோம் என்று சொன்னேன். தனிநபர் தாக்குதல் அறவே கிடையாது. நீங்களாவது அநுரவை வெறுமனே புகழ்கிறீர்கள்............... நான் அநுரவிற்கே எனது வாக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்........................😜.
    1 point
  33. சும்முக்கு…. நத்தார் வாழ்த்து அனுப்புகின்ற ஆட்கள், @satan நின் கடிதத்தையும் வைத்து அனுப்பினால், வெளிநாட்டில் இருந்து காசு வந்திருக்குது என்று, கடிதத்தை உடனே திறந்து வாசிப்பார். 😂 🤣
    1 point
  34. ஆண்டு சரியாக நினைவில்லை, தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். ஜெனிவா கூட்டத்திற்கு நமது பிரச்சனைப்பற்றி கதைப்பதற்காக த. தே. கூட்டமைப்பு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. அப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சாளராக இருந்தார். இந்த முடிவு எட்டியபின், சுரேஷ், அவருடன் சிலர் இந்தியா சென்றிருந்தனர். அந்த சமயம் சம்பந்தர், சுமந்திரன் கூடி ஜெனிவா போவதில்லை என முடிவெடுத்து வெளியிட்டனர். இது சுரேஷுக்கு தெரியாது. அவரை விமான நிலையத்தில் பேட்டி எடுத்த ஊடகவியலாளர், ஜெனிவா போவது பற்றி கேள்வி எழுப்பிய போது, நாம் செல்வோம் என்று பதில் கூறினார். அதற்கு பத்திரிகையாளர் சம்பந்தர் சுமந்திரனின் முடிவை கூறினார். இது சரியா? ஒரு கட்சி எடுத்த முடிவை இருவர் தன்னிச்சையாக, கட்சியோடு ஆலோசிக்காமல், தெரிவிக்காமல், முடிவெடுப்பது சரியா? உங்கள் வீட்டில், நீங்களும் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து, (உங்களுக்கு அந்த பந்தம் ஏற்பட்டிருக்கோ தெரியவில்லை, உதாரணத்துக்கு சொல்கிறேன். கோவிக்க வேண்டாம்!) எடுத்த முடிவை, உங்கள் மனைவி அதை உங்களுக்கு தெரியாமல் மாற்றி அதை இன்னொருவர் வந்து உங்களிடம் அறிவிக்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அதுவும் உங்கள் குடும்பத்துக்கு பாதகமான முடிவை எடுக்கும்போது? இருக்கட்டும், அதன்பின் ஊடகவியலாளர்கள் இவரை அணுகி ஜெனீவாவுக்கு போவதாக எடுக்கப்பட்ட முடிவை ஏன் மாற்றினீர்கள்? எனக்கேட்ட போது, அமெரிக்கா சொன்னது, நீங்கள் வரவேண்டாம் அது நாங்கள் பாத்துக்கொள்கிறோம் என பதிலளித்தார். சொல்லுங்கள்! பாதிக்கப்பட்டது உங்கள் குடும்பம், வழக்கு நடக்கிறது, பாதிக்கப்பட்டவர் சார்பில் யாரும் இல்லாமல் வேறு ஒருவர் நமது துயரங்களை இழப்புகளை வலிகளை எடுத்துச்சொல்ல முடியுமா? நாமே அக்கறையில்லாமல் இருந்தால், விசாரிப்பவர்களுக்கு என்ன கரிசனை வந்துவிடப்போகிறது? சரி, அவர்கள் இழுத்தடிக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி நீதியை தேட வேண்டுமோ இல்லையோ? புலம்பெயர்ந்தோர் தவறாமல் போய் போராடுகிறார்கள். அவர்களையும் புலம்பெயர்ந்தோர் விருப்பத்திற்கு இங்கு அரசியல் செய்ய முடியாது என்றார். ஆனால் புலம்பெயர்ந்தவரிடம் ஏன் போகிறார்? இன்னொருதடவை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போது, இவர் அடிச்சு விழுந்து அமெரிக்காவுக்கு போய், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்கிறார். எதற்கு? பிரச்சனையை அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்றவர், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க ஏன் ஓடினார்? அதை அமெரிக்கா பாத்துக்கொள்ளாதா? பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி, ஏன் அரசுக்காக ஓடுறார்? சும்மா வாயை வைச்சுக்கொண்டு இருக்க கூடாதா? முன்னாள் பிரித்தானிய பிரதமர் தமிழ் மக்களை, அவர்களின் பிரச்சனைகளை சந்திக்க, அரசாங்கத்தின் கெடுபிடிகளை, தடைகளையும் தாண்டி வருகிறார். மக்களின் பிரதிநிதிகள் அங்கில்லை. அப்போது, அவரது ஆங்கில புலமை, திறமை, சட்ட அறிவு, கோட்டு சூட்டு எங்கே போனது? அப்போ, மக்கள் இவரது புலமை, அறிவு, திறமை, இல்லாமல் தங்கள் சாதாரண உடையுடன் தங்கள் துயரங்களை பகிரவில்லையா? அல்லது டேவிட் கமரோன் அவர்கள் துயரங்களை கேட்க மறுத்தாரா? அவர் அந்த மக்களின் குடிசைகளை, வெள்ளம் நிரம்பிய பாதைகளை கடந்து சென்று, அவர்களோடு பேசினார். இவர் ஒருநாளாவது அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பாரா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் வருகிறதாம். அதற்கு நமக்கென்ன? அது தெரிந்துதானே அந்தக்கட்சியில் இணைந்தார், ஏன் இணைந்தார்? அதை இல்லாது செய்து சிங்களத்துக்கு மகழ்ச்சியை அளிக்கவா? அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்? தன் மக்களுக்கு நடந்த அனிஞாயங்களுக்கு தீர்வு இல்லை, ஆறுதல் சொல்ல யாருமில்லை, முஸ்லீம் மேடையில் இருந்து முழங்குகிறார். இவர் யாரின் பிரதிநிதி, யாருக்காக பேச வேண்டும்? சிங்கள மக்களுடன் வாழுவது தனது அதிஸ்ட்டமாம். இருக்கட்டுமேன். யார் இவரை தட்டு வைத்து அழைத்தார்கள் தமிழரோடு வாழுங்கள் என்று? அங்கேயே வாக்கையும் சேகரிக்க வேண்டியதுதானே. இப்போ மக்கள் இவரை நிராகரித்து சிங்கள மக்களோடு வாழுங்கள் என்று அனுப்பிவிட்டனர். போகிறாரா மனிசன்? இன்னும் கூவிக்கொண்டு இங்கேதான் திரிகிறார். ஏனென்றால்; எம்மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், நேரம் செலவிட்டு அடிமேல் அடிஅடித்தால் நகருவார்கள் என அவர்களின் இயலாமையை பாவிக்க நினைக்கிறார். எம்மக்கள் இழப்பிலே துவளுகிறார்கள் இறந்தவர்களை நினைவு கூர முடியாமல். இவர் பொப்பி பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போகிறார். கேட்டால், இராணுவத்தினருக்கு மரியாதையாம். ஒன்று அவர்கள் பக்கம் இருக்க வேண்டும் எங்களை விட்டு விலகி. நல்லாட்சி கலைக்கப்பட்டபோது இவர் ரணிலுக்காக நீதிமன்றம் போய் எதை சாதித்தார்? இருந்த ஒரு, மக்கள் அளித்த எதிர்க்கட்சி கதிரையும் பறி போனது. சரி, எங்களுடைய அரசியல் கைதிகள் எங்களை மீட்பார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், இவர்களுக்காக இவர் என்ன செய்தார்? இரண்டொரு வருடத்திற்கு முன் தியாகி திலீபனின் நினைவு கூரலுக்கு நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய தடை அறிவித்தது. இதுபற்றி ஊடகவியலாளர் சுமந்திரனிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில், போனதடவை ஆர்னோல்ட் என்னை கேட்ட படியால் நான் நீதிமன்றம் போய் அனுமதி பெற்றேன். இந்தமுறை அவர் என்னை கேட்கவில்லை, (அவர் ஏன் கேட்கவில்லை என்பது அவர்களிருவருக்குந்தான் தெரியும்). நீதிபதி தடையுத்தரவு அளித்துவிட்டார், இது தாமதமாகிவிட்டது என்றார். சொல்லுங்கள்! அந்த மக்களின் பிரதிநிதி, அவர்களுக்காக தானாக ஒன்றும் செய்ய மாட்டார், யாராவது கேட்கவேண்டும், தட்ஷணை வைக்கவேண்டும். இலங்கைக்காக அமெரிக்கா ஓடுகிறார், ரணிலிக்காக நீதிமன்றம் செல்கிறார். இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு? ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று நக்குண்டார் நாவிடார், சுயநலம், அவரைப்பற்றி முழுமையாக தெரியாமை, அவரது குணாதிசயங்களோடு ஒத்தமை. அனுமதிப்பத்திரம் வழங்கிய செய்தி வந்தவுடன், அவர்கள் பெயர் அறிவிக்காமல், இவர் எப்படி பெயர் சுட்டி பிரச்சாரம் செய்தார்? ஏன் அனுமதி வழங்கிய ரணிலுக்கெதிராக ஏதும் கூவவில்லை? அதை தெரிந்தே மக்கள் குறிப்பட்டவர்களுக்கு வாக்களித்தார்கள், அதோடு அந்தப்பிரச்சனையை கைவிட வேண்டியது அல்லது சமூகபொறுப்புணர்ச்சி இருந்தால் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது மக்களுக்கு. செய்ய வேண்டியதை செய்யாமல், தனக்கு வேண்டியதை மட்டும் செய்தால், அது அவர் வீட்டில் செய்ய வேண்டும். ஏன், தேர்தலுக்கு முன்னர் என்ன சொன்னார்? நான் தனிப்பட்ட சந்திப்பை நடத்தி ரணில் எங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார். அடுத்தநாள், தான் யாருக்கும் எந்த உறுதியும் அளிக்கவில்லை எண்டு ரணில் பகிரங்கப்படுத்தியபின் வேறு கட்சிக்கு ஆதரவு என்றார். ஏன் இவ்வளவு அவசரம்,அபிமானம், பாசம் தனது மக்களை தவிர? இவரை இவ்வளவு காலமும் அரசியலில் இருக்க விட்டதே மக்களின் பெருந்தன்மை! இந்த வசனம் உங்களது அனுபவம் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது. ஆனாலும் என்னை சிக்க வைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ தெரியவில்லை. எனக்கு அவரோடு எந்த தனி கொடுக்கல் வாங்கலுமில்லை, நடந்ததை சொல்லியிருக்கிறேன். முதல் முன்னாள் விக்கினேஸ்வரனுடன் சமராடினார். அவர் பதவி விலகவேண்டும் என்று போற வாற இடம், தெருக்கோடி எல்லாம் கூவினார், சவால் விட்டார், ஆட்களை கூட்டி விரட்டினார். பின்னர் வேறொரு கதை சொன்னார், அதை சொல்வதற்கு இவர் யார்? முடிந்தால் இந்தக்கட்சியை விட்டு வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் என்றார். அவர் செய்து காட்டினார். இன்னும் விடுகிறாரா அவரை? இவர் ஒரு தனி ரகம் சார்! தான் தான் எங்கும் எதிலும் முன்னுக்கு நிக்க வேணும் என்று அடம் பிடிப்பார். எதிர்ப்பவர் யாரும் இருந்தால், அவர்களை நாறடிச்சிடுவார். இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை தெரிந்தவர்கள் தொடர்வார்கள். நீங்கள் ஒன்றும் தெரியாமல் கேட்கவில்லை, ஆனாலும் கேட்டபடியால் சிலதை மட்டும் கூறியிருக்கிறேன். நேரில் சில சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடக்கின்றன சாட்சியாக. அவை உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, அதை நீங்கள் நம்பமுடியாவிட்டால் நான் சொல்வதையும் விளங்கி தெளியும் என நான் நம்பவில்லை. விளங்குகிறது. நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரித்து, இன்னொருவரை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதில்லை. மக்களுக்கு எதிராக செயற்படும் யாரையும் சாடுகிறேன், விமர்ச்சிக்கிறேன். அதை நீங்கள் காணத்தவறி விட்டீர்கள், அல்லது விரும்பவில்லை என நினைக்கிறன். சிலர் எனது கருத்தை மேலோட்டமாக வாசிப்பார்கள். காரணம் பந்தி. நான் எழுதும் கருத்துக்கு ஆதாரம் கொடுக்கும்போது பந்தியாகிறது, கொடுக்காவிட்டால் உங்களைப்போல், மூர்க்கத்தனமாக எதிர்க்கிறேன் என்பார்கள். நான் அனுராவை புகழ்வது கோஸானை சீண்டுவதற்கே. எல்லாத்திரிகளிலும் நான் சொன்னதை இழுத்துக்கொண்டு ஓடி வருவார், அதை நான் ரசிப்பதுண்டு. முக்கியமாக "அனுரா தெய்யோ, கண்ணை குத்திப்போடுவார்." போராடி களைத்த, இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆதரிக்க யாருமில்லை என ஏங்கும் என் இனத்துக்கு, கடைசி நட்சேத்திரம் அனுரா ஏதும் செய்ய மாட்டாரா என்கிற எதிர்பாப்பும் ஏக்கமும் பிரார்த்தனையும் இருக்கிறது. நன்றி வணக்கம்!
    1 point
  35. அயல் நாடுகளில் தெளிந்த நீரோடை என்பது கிந்தியனுக்கு கெட்ட கனவு. அவனுக்கு அயலவன் நிம்மதியாக வாழ பிடிக்காது.
    1 point
  36. திண்ணைக்குரிய script இன்னொரு தனிநபர் / நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதனையே இங்கு மேலதிகமாக களத்தில் இணைத்திருந்தோம். பின்னாளில் அதன் புதுப்பித்தல் பிரச்சனைகளுடன் களத்தின் வேகத்தினை மிகவும் மந்தப்படுத்தியதன் காரணமாக திண்ணையை நீக்கியிருந்தோம். தற்போது திண்ணையில்லாத தளம் சீராகவும், மிகவும் குறைந்த அளவிலான சேர்வர் பிரச்சனைகளுடனும் தளமும் வேகமாக இயங்குகின்றது என்பதால் திண்ணையினை தவிர்ப்பது சிறந்தது என்றே தெரிகின்றது.
    1 point
  37. முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில் பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂
    1 point
  38. உண்மைதான். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தாலும், இடித்தாலும் மக்களுக்காக மரணித்தவர்கள் அவர்கள் மனங்களில் வாழ்வாங்கு வாழ்வார்கள். மாற்றான் அழித்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்கும் ஐயா… ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்கும் ஐயா…. -புதுவை இரத்திரதுரை-
    1 point
  39. ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம். ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது. https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html
    0 points
  40. ஜேர்மனியில் இன்று நத்தார் கொண்டாட்ட சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் சவூதி அரேபியாவை பிறப்பிடமாக கொண்ட ஒரு வைத்தியர் கார் மூலம் மக்களை கொலை செய்தும் படுகாயப்படுத்தியும் உள்ளார்.😡
    0 points
  41. நான் சொன்ன குடும்பங்கள் இதை மூடி, கடந்து விட்டன. பெயர் சொல்லலாம் என்றாலும், எழுத்தில் பதிவதை தவிர்க்கிறேன். ஏனெனில், என்ன விளைவுகள் ஏற்படலாம் அல்லது பிரச்சனைக்குள் சிக்கலாம் என்பதை எதிர் கூற முடியாது குறிப்பிட்ட நபர்களை தவிர, வேறு எவருக்கும் நான் சொன்னது தெரியாது. இப்போது, அவர்களை பொறுத்தவரையில், இயக்க பின்னணி அவர்களுக்கு கிட்டத்தட்ட இல்லை. இங்கே பதியப்போனால், இயக்க பின்னணியை உருவாக்குவதாக முடியும். ஒருமுறை சிந்திக்கவும், அந்த பிள்ளைகளில் (அல்லது மூத்த 1-2 பிள்ளைகளின் பிள்ளைகள்) ஒருவர் அரச வேலைக்கு விண்ணப்பித்து, பின்னணியை தேடும் போது இங்கே பதியப்பட்டதை பின்ணணி தேடும் மென்பொருள் பிடிக்கும் என்றால் (அனால் நிச்சயம் பிடிக்கும்), அவரின் விண்ணப்பம் அதோடு சரி. அப்படியே, வெளிநாட்டு விசா, புலமைப்பரிசில் போன்றவையும். சிலவேளை பயங்கராயத்தை பிரிவு வந்தாலும் ஒரு புதினமும் இல்லை. அதனால் எவர் என்றாலும், கடந்த காலா வரலாற்றில் நடந்ததை இங்கு பதியும் போது மிக ஆழமாக சிந்தித்து பெயர்கள், இடம் போன்றவற்றை பதிவதை தவிர்க்கவும்.. ( ஏனெனில், முன்பு பதிவு (record) என்பது, சிங்கள படைகளுக்கு தெரிய வந்தாலே. இப்பொது பதிவு (record) என்பது ... அதுகுதானே ibm மென்பொருள் செய்கிறது (i2 என்ற மென்பொருளின் விபரத்தை தேடி பார்க்கவும்.) வேறு மென்பொருளும் இருக்கிறது. )
    0 points
  42. @அக்னியஷ்த்ரா @valavan இதற்கு இவ்வளவு பெரிய விவாதம் எதற்கு? புலம் பெயர் நாடுகளில் புலிகளின் நேரடி உறுப்பினர்களாக நீண்ட காலம் இருந்தவர்களே இப்படியான எமகாதகர்களாக இருந்திருக்கும் போது ஊரில் ஒரு உதவியாளர் அப்படி இருந்தது புரிந்து கொள்ளக்கூடிய விடயமே. அதாவது யுத்த காலத்தில் ஊரில் குடும்ப உறுப்பினரை பிடித்தை வைத்து வெளி நாட்டில் காசு அறவிட்ட பின்னர் அந்த குடும்ப உறுப்பினர் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களின் போது அப்படி காசு அறவிட்டு அதை ஊருக்கு உறுதிப்படுத்திய நீண்ட கால உறுப்பினரே எப்படிப்பட்ட எம காதகர்கள் என்பது யுத்த முடிவில் தெரியவந்தது. அப்படியிருக்க அக்னியேஷரா கூறிய இந்த தமிழர்கள் அனைவராலும் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய சிம்பிள் மற்றர். உண்மை, புலிகள் உட்பட அனைத்து ஆயுத இயக்கங்களும் போராட்டம், புனிதம் என்ற பெயரில் செய்த இவ்வாறான வேலைகள் பல. இதை மறுக்க நாம் ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து நேற்று தான் வந்து பூமியில் குதித்தவர்கள் அல்ல.
    0 points
  43. இப்படி ஒரு நிதி இருந்தததாகவோ அல்லது பொதுமக்கள் அதை நாடலாம் என்றோ கூட பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், முதல் வந்த பெயர்களில் ஒருவருக்கு 300 இலட்சம் ரூபாய்கள் கூட கொடுக்கப்பட்டிருக்கின்றது. ரம்புக்வெலவிற்கும் இந்த நிதியிலிருந்து கொடுத்திருக்கின்றார்கள்...........🫣. சந்திரசேகரனின் பெயரும் இருந்தது.............. எப்படி எல்லாம் ஒரு தேசத்தை, வெளியே வேடமிட்டு, சுரண்டியிருக்கின்றார்கள்.................😌.
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.