Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    31968
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3054
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3314
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/23/24 in all areas

  1. சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.
  2. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது. https://thinakkural.lk/article/314062
  3. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது. https://tamilwin.com/article/dr-archuna-ramanathan-latest-news-1734943791
  4. நான் உங்கள் இந்தப் பின்னூட்டப் பதிவைப் பார்த்து இன்று வெள்ளிக்கிழமையா? என்று எண்ணிவிட்டேன்.😂
  5. கபிதனுடைய அவதாரும், கந்தையா அண்ணையின் அவதாரும் பச்சை நிறத்தில் K என்று இருந்ததால் ஆள் மாறாட்டம் ஏற்பட்டு விட்டது. 😂 கந்தையா அண்ணை... அதற்குள் நைசாக புகுந்ததை, கவனிக்காமல் விட்டு விட்டேன். 😂 கபிதன் திருந்தி விட்டார் என்று நான் சந்தோசப் பட்டு 15 நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ரசோதரனும், அல்வாயனும், நுணாவிலானும் தட்டி எழுப்பி விட்டார்கள். 😃 சரி... அது, ஒரு கனவாகவே போகட்டும். 🤣 நுணா.... நான், நேற்று சுவிஸில் இருந்து ஜேர்மனி திரும்பி விட்டேன். 😃
  6. தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும் அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார் அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்
  7. அதில மிஞ்சுர தளபாடங்களைக் கொண்டு குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் ஒன்று போட்டுவிடுங்க சார் புண்ணியமாய் போகும் . ..........! 😴
  8. சாராசுருதி, ஸ்ரீகாந்த் என்றென்றும் கப்டன் உங்க Voice-ல உருகிட்டோம் சார்.. ❤️ | Endrendrum Captain |
  9. உறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்
  10. அவரையும் என்னையும் ஏனப்பா தொடுத்துவிடுகிறீர்கள்..................🤣. பெரிதாக அமெரிக்க உள்நாட்டில் மாற்றம் ஒன்றும் இருக்காது, பெயர் மட்டும் மாறி இருக்கும் என்று சொல்லவே நினைத்தேன்............... இங்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது, இந்த நாடு காலத்தால் மாறுகின்றதே தவிர இரண்டு கட்சிகளாலும் மாறவில்லை என்பதே என் அனுபவம்...............
  11. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பிரதான சாட்சிகளாயிருப்பவர்களில் ஒருவரான Dr. சத்தியன், இலங்கையில் உயிருடன் இருப்பதற்கு எவ்வளவு விட்டுக்கொடுப்புக்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. யாழ் பல்கலைப் பேராசிரியர், துணை வேந்தர் பதவியில் இருந்து சமூகத்தின் அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக வேலை செய்யும் கிராம சேவையாளர் வரை அரசியல் தலையீடு நிலவும் சூழலில் அதுவும் டக்கியரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையை எத்தகைய சூழலில் நிர்வகிக்க வேண்டி இருக்கும் என்பதையும் எமது புலன் பெயர் வியாபாரிகள் உணராமல் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் பக்கவாத்தியக் காறர்களாகவும் இருப்பது வருந்தத் தக்கது. ☹️
  12. எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள் புடுங்குப்படுவது..நாடகமா ....
  13. அதிலும்... முதல் பிரயாணத்தை, @ஈழப்பிரியன் தானே தொடக்கி வைக்கின்றார். பிரயாணம் முடிந்து வந்த பின்... ஆண்மையில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டிருக்கோ... என்று, கேட்டு அறியலாம்தானே.
  14. நன்றி, இவ் வாரம் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வெளியாகவுள்ளது.
  15. முன்பொருநாள் நயினையில் ஒரு நினைவு . ........! 🙏
  16. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 👍 இலங்கையின் 10 வது ஜனாதிபதி. முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் முன்ணணி பிரசாரம் செய்வது போன்று எதுவும் இல்லை.
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் என்.டி.பி கட்சி தலைவரின் சமீபத்திய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள் கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் - இதன் விளைவுகள் என்ன? ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கனவே அனைத்து தரப்பிலிருந்தும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளும நிலை ஏற்பட்டுள்ளது. ட்ரூடோவை குறிவைக்கும் பிரதான கட்சிகளில் தற்போது ஜக்மீத் சிங்கின் கட்சியும் சேர்ந்துவிட்டது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ட்ரூடோ அரசு தப்புவது கடினம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ட்ரூடோ அரசுக்கு என்டிபி ஆதரவளித்தது. அதனால்தான் ட்ரூடோவால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிந்தது. ஏற்கனவே இந்த வாரம் ட்ரூடோவுக்கு மிகவும் மோசமான வாரமாக இருக்கும் நிலையில் ஜக்மீத் சிங்கின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ட்ரூடோவின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு ட்ரூடோவுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்21 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜக்மீத் சிங் ஜக்மீத் சிங் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். "லிபரல் கட்சியினர் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் அல்ல. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுப்போம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தாண்டு செப்டம்பரில் ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் இந்தியாவை விமர்சித்து இருக்கிறார். டொராண்டோவில் உள்ள பிபிசி செய்தியாளர் நாடின் யூசுப், "கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும். லிபரல் கட்சியின் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் இந்த தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார். கனடா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவை வரும் ஜனவரியில் மீண்டும் கூடும் நிலையில் 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் ட்ரூடோ அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புவதாக கூறியுள்ளன. இந்த வாரம் ட்ரூடோ அடுத்தடுத்து பல பின்னடைவுகளை சந்தித்துள்ளார். ட்ரூடோவின் அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக இருந்த துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்தார். இப்படியான சூழலில், ஜக்மீத் சிங்கின் இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று பொருளாதார அறிக்கையை வழங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஃப்ரீலேண்ட் ராஜினாமாவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 கனடாவுக்கு எதிரான டிரம்பின் கருத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றபோது, அவருக்கு ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு அண்டை நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி (இறக்குமதி வரி) விதிப்பேன் என்று கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். "கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. போதைப்பொருளை கொண்டு வருவது போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லை." என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே ட்ரூடோ வாழ்த்து தெரிவித்த போதிலும் இது டிரம்பின் அணுகுமுறையை மாற்றவில்லை. டிரம்ப் மற்றும் ட்ரூடோ இடையேயான உறவு கசப்பானது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ட்ரூடோ மீது டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை கூட செய்துள்ளார். கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு சிக்கல்களை அதிகரிக்கக் கூடும். இந்த வரி விதிப்பு கனடாவின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் டிரம்ப் இத்தோடு நிற்கவில்லை, கனடாவைப் பற்றி மேலும் கடுமையான கருத்துகளை வெளியிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பக்கத்தில் "ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு 100 மில்லியன் டாலர்களை மானியமாக ஏன் தருகிறோம் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. பெரும்பாலான கனடியர்கள் 51வது மாகாணமாக மாற விரும்புகிறார்கள். அதாவது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற கனடா நினைக்கிறது. இது அவர்களுக்கு வரி மற்றும் ராணுவ செலவுகளை மிச்சப்படுத்தும். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?21 டிசம்பர் 2024 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு21 டிசம்பர் 2024 ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அதிகரிக்கும் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடாவில் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன கனடா நிதியமைச்சராக இருந்த ஃப்ரீலாண்ட் தனது ராஜினாமாவில், டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பிரதமர் ட்ரூடோ நிதி நிலைமையை சரிசெய்வதற்குப் பதிலாக மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அப்போதிருந்து, ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற குரல் அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே வலுத்துள்ளது. குளோப் அண்ட் மெயில் செய்தியின்படி, அக்கட்சியின் 153 எம்.பி.க்களில் இதுவரை 19 பேர் ட்ரூடோவை பதவி விலகுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த பொது முறையீடுகளுக்கு ட்ரூடோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த பிரச்னையை பரிசீலித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வதாக தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ட்ரூடோ வெள்ளிக்கிழமை அன்று தனது அமைச்சரவையை விரைவில் மறுசீரமைப்பதாகக் கூறினார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பல அமைச்சர்கள் விட்டுச் சென்ற காலி இடங்களை நிரப்புவதற்காக இதனை அவர் தெரிவித்தார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. புகைபிடித்தல், உடல் பருமனை தாண்டியும் 100 ஆண்டுகளுக்கு மேல் சிலர் உயிர் வாழும் ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?20 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் யார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் ஜக்மீத் சிங். அவரது குடும்பம் 1993இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. மார்ச் 2022 இல் ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் அதிகாரப் பகிர்வு பற்றிய விவகாரங்கள் இடம்பெறவில்லை. பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் காரணமாக ட்ரூடோவின் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. இதற்கு ஈடாக, என்.டி.பி கட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற ஜக்மீத் சிங்குக்கு ட்ரூடோ உதவ வேண்டியிருந்தது. ஜக்மீத் சிங் இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார்.. ஏப்ரல் 2022 இல், ஜக்மீத் சிங், "இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை தொடர்பானப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து கவலைப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை மோதி அரசு நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நடந்த கலவரம் குறித்து ஜக்மீத் தொடர்ந்து தன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கனடாவில் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. டிசம்பர் 2013 இல், அமிர்தசரஸ் வருவதற்கு ஜக்மீத் சிங்குக்கு இந்தியா விசா வழங்கவில்லை. "கட்சித் தலைவராவதற்கு முன்பு ஜக்மீத் சிங் காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார்." என வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டிருந்தது. பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் 2.1 சதவீதம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். கனடாவில் சீக்கிய மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளனர். வான்கூவர், டொராண்டோ, கல்கரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்கள் உள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையை அமைத்த போது, அதில் நான்கு சீக்கியர்களை அமைச்சராக்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் சீக்கியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை விட தனது அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாக இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பிற்கு ட்ரூடோவின் காலிஸ்தான் ஆதரவு கொள்கையே காரணம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் அரசியலால் இரு நாட்டு உறவுகளை ட்ரூடோ ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் இந்தியா பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgl9gd1gdryo
  18. ஒருவர் கடவுளை நோக்கி தவம் செய்வாராம் கடவுள் மனம் இரங்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார் அதற்கு அவர் நீரில் மிதக்கும் வரம் வேண்டும் என கேட்டார் அதற்கு கடவுள் ஆற்றில் ஒரு நபர் மிதவையில் வருவதனை காட்டி எதற்காக இப்படி தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறாய் என கேட்டாராம். எனக்கு மகாபாரத கதையினை யார் எழுதியது என்றே தெரியாது கதைகளை வாசிப்பதுடன் நிறுத்திக்கொள்வதுண்டு, இதில் கூறப்படுகின்ற விடயம் மனம் இல்லை என்பதுதற்கு உதாரணமாக கதை கூறப்பட்டுள்ளது.😁 உங்கள் கருத்திற்கு நன்றி பச்சை முடிந்துவிட்டது.
  19. ஆம் எனவே கருதுகிறேன், ருமேனியாவில் முதல் கட்ட வாக்கெடுப்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தீவிர வலது சாரி ஜொர்ஜெஷகு இவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவராகவும் புட்டின் ஆதரவாளர் என கூறப்படுகிறது, அந்த தேர்தலை செல்லுபடி அற்றதாக்கவேண்டும் என முயற்சித்த அவரது போட்டியாளரின் (இடதுசார், மேற்கு ஆதரவு கொண்டவர்) குற்றச்சாட்டான சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டினை உச்ச நீதி மன்று பரிசீலித்து அந்த தேர்தலை செல்லுபடி அற்றதாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
  20. ஓம் கவி லண்டனில் சேவை செய்த போது கனடாவில் சேவை செய்த போது
  21. இல்லை நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள், நான் கூறியது நதி மூலம் ரிசி மூலம் பார்ப்பதினை.
  22. https://www.smh.com.au/politics/nsw/safework-knew-tunnel-workers-were-exposed-to-high-levels-of-deadly-silica-dust-20241223-p5l0ay.html மூலப்பிரதி சிட்னி மோர்னிங் கேரட்டில் வந்தது, அதனை வாசிப்பதற்கு பணம் செலுத்த வேண்டும் அதனால் அந்த தகவலை வைத்து கட்டுரை வரைந்த உலக சோசலிஸ்ட் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது, நதி மூலம் ரிசி மூலம் பார்க்கவேண்டியதில்லை (இது ஒரு ஆபத்தான நோய்😁) அதில் கூறப்படும் விடயம்தான் முக்கியம்.
  23. சீனாக்காரனும்,ரஸ்யாகாரனும் என்ன செய்யிறான் என எழுத சொல்ல வேணும் இந்த அவுஸ்ரேலியா சோசலிஸ்ட்டுக்களுக்கு ...சும்மா ரயில்வே ஸ்டேசன்களில் நின்று கொண்டு துண்டுபிரசுரம் கொடுக்குமிவர்களின் கொசு தொல்லை தாங்க முடியவில்லை... அமெரிக்கன் வெள்ளைகள் வேலை செய்ய மாட்டேன் என் அடம் பிடித்தால் எலன் மஸ்க் இந்தியா, சீனா ,சிறிலங்கா நாட்டுக்கள்காரனை குறைந்த கூலிக்கு எடுத்து கட்டி முடிப்பார்..
  24. 👍................... தொண்டர் ஊழியர்கள் என்றால் தொண்டர் ஆசிரியர்கள் போன்ற ஒரு பணியாளர்களே. தொண்டர் ஆசிரியர்கள் தங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டி அடிக்கடி போராடுவார்கள், அத்துடன் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பளமும் மிகக்குறைவே. அவர்களின் கல்வித் தகமை மற்றும் தொழிற் பயிற்சிகளும் மிகக்குறைவே. அது போலவே இந்த சுகாதாரத்துறை தொண்டர் ஊழியர்களும். இதில் முடிந்தவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துவது நல்ல ஒரு விடயம் தான், ஆனால் ஏற்கனவே இலங்கை அரசசேவை தேவைக்கு மிக மிக அதிகப் பணியாளர்களுடன் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரு அறிக்கை கூட வந்திருந்தது. அர்ச்சுனா இரட்டைக் குடியுரிமை, இந்தியா வம்சாவளி மக்கள், தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் என்று சும்மா வாய்க்கு வந்த எல்லாவறையும் சமூக ஊடக தேவைகளுக்காக கலந்தடிக்காமல், அமைதியாக இப்படியான வேலைகளைச் செய்வது அவருக்கும், அவரைத் தெரிந்தெடுத்த மக்களுக்கும் நன்மை பயக்கும்................👍.
  25. இது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பது தான் . தமிழ் பகுதி நோக்கிய ஒரு சதி அல்ல. இவர்கள் தாதிகளாக (nurse) இருக்க வாய்ப்புக் குறைவு.நேரடியாக நோயாளிகளின் மருத்துவக் கவனிப்பைக் கையாளாமல் உதவும் தாதிய உதவியாளர்களாக (nurse assistants/auxiliary staff) இருக்கலாம் என ஊகிக்கிறேன். சிலர் பராமரிப்பு, சுத்திகரிப்பு ஊழியர்களாகவும் (janitorial) இருக்கக் கூடும். இப்படியான ஊழியர்களை சமயாசமய (casual) ஊழியர்கள் என அழைப்பார்கள் என நினைக்கிறேன். கல்வித் துறையில் "தொண்டர் ஊழியர்கள்" என்பார்கள். இங்கே இந்த ஊழியர்களின் உரிமைகள் எவையாவது மீறப் பட்டிருக்கிறதா என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியாது (மருத்துவ நிர்வாகப் பட்டப்பின் படிப்பை முடித்த அர்ச்சுனா கூட எந்த சட்டங்கள் மீறப் பட்டன என சொல்லப் போவதில்லை, அப்படிச் சொன்னால் அவருக்கு வீடியோ பிடித்துப் போட விடயம் இல்லாமல் போய் விடும்😎!). இது அங்கஜன், டக்ளஸ் கால நியமனங்கள் என்பது போல சிலர் திரிக்க முயல்வதையும் காண்கிறேன். பா.உக்கள் யாரும் இல்லாத போர்க்காலத்திலேயே இப்படியான நியமனங்கள், பின்னர் நிரந்தரமாக்க கோருதல் என்பன இருந்திருக்கின்றன.
  26. விசாரணைகளின் ஒரு அங்கமாகச் சித்திரவதைகளைப் பயன்படுத்திய இலங்கை அரச படைகள் பிஷ்லுக் எழுதிய செய்தியின்படி 17 முதல் 25 வயது வரையான தமிழ் இளைஞர்களே 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வந்தனர். மேலும் பல இளம் பெண்களும் இராணுவத்தினரின் சித்திரவதைகளுக்கு ஆளாகியிருந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது. விசாரணைகளின்பொழுதான சித்திரவதைகள் என்பது இலங்கை இராணுவத்தினரையும் பொலீஸாரையும் பொறுத்தவரையின் ஒன்றும் புதியவை அல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் வழமையான விசாரணை நடைமுறைகளின் ஒரு அங்கமாகவே சித்திரவதைகள் காணப்பட்டன. 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினரின் முதலாவது கிளர்ச்சியெதிர்ப்பு நடவடிக்கைகளின்பொழுது விசாரணைகளின்போதான சித்திரவதைகள் என்பது மிகவும் பரந்தளவில் அரச படைகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கிளர்ச்சி நடவடிக்கையின்பொழுது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவேளை பொலீஸ் நிலையங்களில் வைத்து சிங்கள இளைஞர்கள் பொலீஸாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். சித்திரவதைகளின் பின் உயிர்வாழ்ந்த சில இளைஞர்கள் தமக்கு நடந்த இரத்தத்தினை உறையவைக்கும் கொடூரங்கள் குறித்து என்னிடம் விபரித்திருக்கிறார்கள். 1973 ஆம் ஆண்டு பங்குனி 9 ஆம் திகதி இடம்பெற்ற தமிழ் மாணவர் பேரவை உறுப்பினர்கள் 42 பேரின் கைதுகளோடு தமிழ் மக்கள் மீதான பரந்தளவிலான‌ சித்திரவதைகளை அரச படைகள் ஆரம்பித்திருந்தன. இதற்கு முன்னர் தனிநபர்களான பொன் சிவகுமாரன், சத்தியசீலன் ஆகியோர் இராணுவத்தினரால் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் கூட தமிழ் மாணவர் பேரவை உறுப்பினர்களின் வாக்குமூலத்தின் ஊடாகவே இராணுவத்தினரின் கொடூரமான சித்திரவதை நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தன. கைதுசெய்யப்பட்ட 42 தமிழ் இளைஞர்களும் ஆரம்பத்தில் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் நீர்கொழும்பிற்கும் அங்கிருந்து வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நான்காம் மாடிக்கு விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக் குழுவினருக்கு பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளையே பொறுப்பாகவிருந்தார். அவருக்கு உதவியாக பொலீஸ் அதிகாரிகளான பேரம்பலம், செல்வநாயகம் மற்றும் பண்டா ஆகியோர் விசாரணைகளின்பொழுது கடமையாற்றினர். விசாரணைகளின் நோக்கம் தமிழ் மாணவர் பேரவை அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் தகவல்களை அறிந்துகொள்வதுதான். சித்திரவதை நடைமுறைகள் குறித்த விபரங்கள் சமஷ்ட்டிக் கட்சி தலைவர்களாலும், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பேற்றோரினாலும் வெளியே கசியவிடப்பட்டன. தமிழ்ப் பத்திரிக்கைகளில் வெளிவந்த இந்த விடயங்களைப் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் வெளிக்கொண்டு வந்தார். விசாரணை அறைக்கு கொண்டுவரப்பட்டதும் இளைஞர்களை அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தையும் களையுமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். சிலருக்கு இனப்பெருக்க உறுப்பில் முளைத்திருந்த ரோமங்கள் எரிக்கப்பட்டன. மாவை சேனாதிராஜா தனக்கு நடந்த சித்திரவதை பற்றி என்னிடம் பேசும்போது, ஆடைகள் களையப்பட்ட நிலையில் நீண்ட மேசை ஒன்றின்மீது மல்லாக்காகப் படுக்கவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறினார். சராசரி உடலமைப்பைக் காட்டிலும் உயர்ந்தவராகக் காணப்பட்ட மாவை மீது அவர் மயங்கிச் சரியும்வரை தடிகளாலும் கொட்டன்களாலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இன்று (2005) ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாவை தனக்கு அன்று நடந்த சித்திரவதைகள் குறித்து என்னுடன் பேசும்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு நடுங்குவதை நான் அவதானித்தேன். 1975 ஆம் ஆண்டு அல்பிரெட் துரையப்பாவின் மரணத்திற்குப் பின்னர் பல தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பஸ்டியாம்பிள்ளையே அன்றும் விசாரணைகளுக்குப் பொறுப்பாகவிருந்தார். இந்த முறை அவரது கவனம் எல்லாம் அல்பிரெட் துரையப்பாவின் மரணத்திற்குக் காரணமானவரான புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் அவரது சகாக்களையும் கைதுசெய்வதுதான். இலங்கை அரச புலநாய்வுத்துறையின் பார்வையில் பிரபாகரன் மீண்டும் 1979 ஆம் ஆண்டு இலக்கானார். 1979 ஆம் ஆண்டு இறுதிக்குள் வடக்கிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பேன் என்று ஜெயாரிடம் ஆசீர் வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தவர்தான் பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க. தமிழ் இளைஞர்களிடமிருந்து போராளிகள் பற்றிய விடயங்களைக் கறந்து அதனூடாக அவர்களை முற்றாக அழித்துவிட சித்திரவதைகளையும், படுகொலைகளையும் திஸ்ஸ வீரதுங்க கட்டவிழ்த்துவிட்டார். தமிழ் மாணவர் பேரவையின் ஸ்த்தாபகர்களில் ஒருவரான புஸ்ப்பராஜா திஸ்ஸ வீரதுங்கவின் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட பலரில் ஒருவர். ஈழப்போராட்டத்தின் எனது சாட்சி எனும் தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் தன் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்து அவர் எழுதுகிறார். "1979 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு என்னைக் கைதுசெய்தார்கள். யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த இராணுவம் - பொலீஸ் இணைந்த கூட்டு முகாமிற்கு என்னை இழுத்துச் சென்றார்கள். நான் அலுவலகத்தில் நுழையும்போதே இன்ஸ்பெக்ட்டர் கருணாரத்ன என்மீது தாக்ககுதல் நடத்த ஆரம்பித்தார். அவரைத்தோடர்ந்து அங்கிருந்த ஏனைய பொலீஸாரும் என்மீது சாரமாரியாக தாக்குதல் நடத்தத் தொடங்கினர். எனது தலைமுடியை இறுகப்பிடித்துக்கொண்ட இன்ஸ்பெக்ட்டர் கருணாரத்ன இறைச்சி அரைக்கும் அறை என்று அனைவராலும் அறியப்பட்ட விசேட சித்திரவதைக் கூடத்திற்கு என்னை இழுத்துச் சென்றார்". "அவ்வறையினுள் வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்தபோது நான் அச்சத்தில் உறைந்துபோனேன். கூரையிலிருந்து கயிறுகள் தொங்கிக்கொண்டிருந்தன. விசாரணைகளுக்குக் கொண்டுவரப்படும் தமிழர்களைக் கட்டித் தொங்கவிடவே அவை பாவிக்கப்பட்டு வருகின்றன என்பதை நான் உணர்ந்துகொண்டேன். கட்டித் தொங்கவிடப்படும் இளைஞர்களைத் தாக்குவதற்கென்று இரும்புக் கம்பிகள், தடிகள், பலகைகள் என்று பல பொருட்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதைவிடவும் சாக்குகள், நீண்ட குத்தூசிகள், இரும்புச் சட்டங்கள் என்று மனிதர்களைச் சித்திரவ்தை செய்வதற்கான பல ஆயுதங்களும் அங்கு காணப்பட்டன. அவ்வறையின் சுவர்களிலும், நிலத்திலும் இரத்தக்கறை பீய்ச்சியடித்துக் காணப்பட்டது". "என்னைச் சுவரை நோக்கிச் சாய்ந்து நிற்கும்படி கட்டளையிட்டார்கள். எனது கைகள் இரண்டையும் அவர்கள் இறுகக் கட்டினார்கள். பின்னர் சாரமாரியாக எனது நெஞ்சுப்பகுதி, வயிறு, இனப்பெருக்க உறுப்பு மற்றும் கால்கள் மீது தடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கத் தொடங்கினார்கள். இன்ஸ்பெக்ட்டர் கருணாரத்ன கயிற்றில் தொங்கியவாறே எனது வயிற்றில் பூட்ஸ் கால்களால் பலமாக உதைந்தார். அவர் என்னை இரண்டாம் முறை உதைந்தபோது எனக்கு மலம் வெளியேறி அறிவிழந்து கீழே சரிந்து வீழ்ந்தேன்". "எனக்கு மீண்டும் அறிவு திரும்பியபோது, எனக்கு முன்னால் நின்ற மனிதரைப் பார்த்து கழிவறைக்குச் செல்லும் வழியெது என்று வினவினேன். எனக்குத் துணையாக இன்னொரு மனிதரை அவர் அழைத்தார். மலம் கழிந்திருந்த எனது காற்சட்டைகளை அங்கேயே கழுவி, ஈரத்துடன் மீண்டும் அணிந்துகொண்டேன். என்னால் எனது உடல் உறுப்புக்களை அசைக்க முடியவில்லை. எனது உடல் முழுதும் வலியினால் துடித்துக்கொண்டிருந்தது". "பின்னர் என்னை இன்னொரு அறைக்கு இழுத்து வந்தார்கள். அங்கே ஈழவேந்தனை கதிரை ஒன்றில் இருத்திவைத்திருப்பதைக் கண்டேன். எம்மை நாம் அடையாளம் கண்டுகொண்டோம். அருகில் அமர்ந்து இரகசியமாகப் பேசிக்கொண்டோம். ஈரக் காற்சட்டையுடன் நான் இருப்பதை அவதானித்த ஈழவேந்தன் தனது வேட்டிகளில் ஒன்றை எனக்குத் தந்து உதவினார். நான் அதனை அணிந்துகொண்டு பொலீஸார் தந்த பாணை (ரொட்டி) உட்கொண்டேன். உடல்நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஈழவேந்தனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தனக்குக் கொண்டுவரப்பட்ட கறிகளில் ஒரு பகுதியை ஈழவேந்தன் என்னுடன் பகிர்ந்துகொண்டார். எனக்குக் கொடுக்கப்பட்ட பாணுடன் கறியையும் சேர்த்துச் சாப்பிட்டேன்".
  27. பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
  28. இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று . அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
  29. Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024
  30. இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
  31. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
  32. இந்த முறை ஆற்றை கலியாணவீட்டு பலகாரமோ…🤣 @Paanch @குமாரசாமி @தமிழ் சிறி சுப்பர் லூப் தொழில் நுட்பத்தில் சாத்தியமாம். மனித உடல் தாங்குமா?
  33. நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.
  34. சரியாக தான் சொல்கிறார். இது தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த பொதுமுடிவாக இருக்கணும்.
  35. என்ர 75வது பிறந்த நாளுக்கு சேர் @ஈழப்பிரியன் அவர்கள் ஒரு நாளிலையே வந்துட்டு திரும்பி போகலாம் 😎
  36. "கடல் வள கொள்ளையர்" நல்ல தொரு தலைப்பு .
  37. AI தளம் ஒன்று வழங்கிய பதில்: முக்கிய செயலிகள் எல்லோர் கை தொலைபேசியிலும் கட்டாயம் காணப்பட வேண்டிய அதி முக்கியமான செயலிகள் பலவாக உள்ளன. இவை பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவுகின்றன. கீழே சில முக்கியமான செயலிகளை பட்டியலிடுகிறேன்: 1. தொடர்பு செயலிகள் (Communication Apps) இவை பயனர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. WhatsApp, Telegram, மற்றும் Signal போன்ற செயலிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை உரையாடல், குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய உதவுகின்றன. 2. சமூக ஊடக செயலிகள் (Social Media Apps) Facebook, Instagram, Twitter போன்ற சமூக ஊடக செயலிகள் உலகத்தோடு தொடர்பில் இருக்க உதவுகின்றன. இவை தகவல்களை பகிர்வதற்கும், நண்பர்களுடன் இணைவதற்கும் பயன்படுகின்றன. 3. நிதி மேலாண்மை செயலிகள் (Finance Management Apps) PayPal, Google Pay மற்றும் Venmo போன்ற செயலிகள் நிதியை மேலாண்மை செய்ய உதவுகின்றன. இவை பண பரிமாற்றம் மற்றும் செலவுகளை கண்காணிக்க பயன்படுகின்றன. 4. ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி செயலிகள் (Health and Fitness Apps) MyFitnessPal, Fitbit மற்றும் Headspace போன்ற செயலிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அமைதியை பெறவும் உதவுகின்றன. 5. தகவல் தேடும் செயலிகள் (Information Retrieval Apps) Google Search மற்றும் Wikipedia போன்ற செயலிகள் தகவல்களை விரைவில் தேடி பெற உதவும். 6. வானிலை கணிப்பு செயலிகள் (Weather Forecasting Apps) AccuWeather மற்றும் The Weather Channel போன்ற செயலிகள் வானிலை பற்றிய தகவல்களை வழங்குகின்றன. 7. பயணம் மற்றும் வழிகாட்டி செயலிகள் (Travel and Navigation Apps) Google Maps மற்றும் Uber போன்ற செயலிகள் பயணங்களை திட்டமிடுவதற்கும் வழிகாட்டுவதற்கும் பயன்படுகின்றன. 8. செய்தி வாசிப்பு செயலிகள் (News Reading Apps) BBC News, Flipboard போன்ற செய்திகள் வழங்கும் செயலிகள் உலக நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. இந்த அனைத்து வகையான செயலிகளும் கை தொலைபேசி பயன்படுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  38. நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நிலம், உழைப்பு, சாதியம், வர்க்க விடுதலை, ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார். சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை பேசிய முதல் தமிழ் திரைப்படமாக விடுதலை இருக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தங்கலாம்.
  39. நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள் தியா!
  40. உடல் நலத்தை கவனிக்க வேண்டும். வேலையில் மூழ்கி இருந்தால் உடல் நலத்தை கவனிக்க முடியாது. காசை உழைத்து அனுபவிக்க முடியாமல் அகால மரணம் அடைவது மிக கொடூரமானது.
  41. அனைவருடனும் கதைக்க வேண்டும், சிங்களத்துடன் உடன்பாடு எட்டப்படும் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும், சிங்களம் எப்போதும் ஒப்பந்தங்களை சின்னப்பிள்ளைகள் பேப்பரை கிழிப்பது போல கிழித்துவிடுவார்கள், அப்படி கிழிக்கும் போது யாராவது பக்கத்திலிருந்து ஒரு போடு போடுவதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருக்க வேண்டும். தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு ஓடோடி போய் இந்திய பாதுகாப்பிற்கு எதிராக செயற்படமாட்டோம் என கூறி இந்தியாவினை மகிழ்விக்க இந்திய நலத்திட்டத்தினை இலங்கையில் செயல்படுத்துவதிற்கு தயாரக உள்ளோம் என கூறியுள்ளார், பொதுவாக எமது நலனிற்காக மற்றவர்களை நாடி செல்லுகின்ற நிலையில் இந்திய நலனிற்க்காக இந்தியாவிற்கு ஓடிப்போன இலங்கை அதிபரை வழிக்கு கொண்டுவர இந்தியா போன்ற மூன்றாம் தரப்பு வேண்டும். உக்கிரேன் இரஸ்சிய போரில் சம்பந்தப்பட்ட இரண்டாம் தரப்பான இரஸ்சியாவினை விட்டு விட்டு அமைதி முயற்சியில் ஈடுபடுகின்ற உலகில் சிங்களத்துடன் மட்டுமே பேசுவோம் என இருந்தால் எமக்கு எதுவும் கிடைக்காது.
  42. குளிர்காலத்தின் காலை வேளையில் மரங்களும் அழகு.. மூடுபனியில் நனையும் கட்டிடங்களும் அழகு!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.