Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10209
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/26/24 in all areas

  1. கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள ஒளிப்படக்காட்சி ஒரு பாமரனாக என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் தனிமனிதனாகத் தீயவர்களை அடிக்கும்போது பெரும்பாலானோர்க்கு (என்னையும் சேர்த்து) ஏற்படும் மனநிலை. நடைமுறை சாத்தியம் பற்றி மனம் சிந்திப்பதில்லை. The triumph of the good over the evil. தீமையின் மீது நன்மையின் வெற்றி. நம்மால் இயலாததை யாரோ நிகழ்த்தும் போது ஏற்படும் மகிழ்ச்சி. தன்னேரில்லாத் தலைவனைக் கொள்வது காவிய இலக்கணத்துள் ஒன்றாய் அமைந்தது இந்த அடிப்படையில்தான். இது ஒரு உளவியல். தமிழ்த் திரையுலகில் இந்த உளவியல் அடிப்படையில் முதன்முதலில் பெரிய வெற்றியைக் கண்டவர் மக்கள் திலகம் எம.ஜி.ஆர். நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இது ஏற்புடைத்தே ! https://www.facebook.com/share/r/1Co9gLaXdp/
  2. பாடசாலை நாட்கள் நமது வாழ்வின் அடித்தளமாக அமைகின்றன. நாம் பள்ளியில் கற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் திறன்கள் நமது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், பள்ளியில் நாம் உருவாக்கும் நட்புகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நாம் கற்றுக்கொள்ளும் அறிவு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களையும் அங்கேதான் கற்றுக்கொள்கிறோம். பள்ளியில் நாம் வெற்றி, தோல்வி, போட்டி, ஒத்துழைப்பு போன்ற பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடங்கள் நம்மை வலுவான மனிதர்களாக மாற்றுகின்றன. பள்ளியில் நாம் நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நண்பர்களை உருவாக்குகிறோம். இந்த நட்புகள் நமக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. பள்ளிக்காலம் என்பது பொறுப்புகள் குறைவாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் காலம். நண்பர்களுடன் விளையாடுவது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது என பலவும் இந்தக் காலத்தில் நிகழ்கின்றன. பள்ளிக்காலத்தில் நாம் பல அனுபவங்களைப் பெறுகிறோம். பள்ளியில் உருவாகும் நட்புகள் சில சமயங்களில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நம் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் நண்பர்கள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள். பாடசாலை வாழ்க்கையை முடித்து தொழில் கல்வி பயின்று கொழும்பில் வேலை செய்து கொண்டு இருந்தான் இனியவன். இந்தியன் ராணுவம் எம் நிலங்களை ஆக்கிரமித்து இருந்த காலம் அது. வீட்டில் ஒரு விசேஷத்திக்காக பல தடைகளை தாண்டி ஊர் வந்தான். திடீரென ஒரு நாள் சுற்றி வளைப்பு, அவனும் பெரிய அண்ணனும் உட்பட பல இளைஞர்களை கூடி சென்று கடைக்கரையில் உட்கார வைத்தார்கள். எல்லோரிடமும் வழக்கமாக கேட்கும் கேள்விகளை கேட்டு விட்டு தலையாட்டி முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அவனின் போதாத காலம் அவனை நோக்கி தலையாட்டியின் ஆள் காட்டி விரல் நீண்டது. சினிமாவில் விஜய் தலை ஆட்டுவது போல் மேலும் கீழும் ஆட்டினான். கதைப்பதுக்கு வார்த்தைகள் வரவில்லை அவர்களுடன் கூட்டி செல்லப்பட்டான். தென்னை மரத்தின் கீழ் இருக்க சொல்லி பணித்தார்கள். ராணுவத்துடன் சேர்ந்திருந்த சில இளைஞர்கள் முகாமில் இருந்து வெளியே நோக்கி வந்தார்கள். இளம் கன்று பயம் அறியாது என்பர். எம் நிலத்தில், மறவர்களின் கால் பதிந்த நிலத்தில் இவர்களுக்கு என்ன வேலை. இனியவன் கூனி குறுகி நிற்கிறான். "டேய் எழும்படா, நீயெல்லாம் அவர்களின் ஆக்கள் அல்லவா" என்றான் ஒருவன். ஊதி விட்டால் பறந்து விடுவான், ஆனால் அவனிடம் இடுப்பில் பொருள் இருந்தது. மரியாதையாக "இல்லை அண்ணா நான் கொழும்பில் வேலை செய்கிறேன்" என்றான் இனியவன். “உந்த பம்மாத்து கதையெல்லாம் வேண்டாம் நட முகாமிற்கு” என்றான். வக்கற்றவனாய் தான் பாடசாலை காலங்களில் பேருந்து ஏறும் தரிப்பிடத்தை ஏறெடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் மஞ்சள் நிற மேல் அங்கியுடன் ஒருவர் இவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார், இனியவனின் பெரியண்ணா தான் அவர். நட்டாற்றில் விழுந்தவனுக்கு ஒரு சிறு மர கட்டை கிடைத்த மாதிரி உணர்வு தோன்றியது. அவர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை, அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். நேரம் போக போக இனியவனின் நம்பிக்கையும் மறைய ஆரம்பித்தது. கிடைத்த மர கட்டையும் கை நழுவி போவதை உணர்ந்தான். ஒரு புறம் வேடன் என்கிற இந்திய ராணுவம் மறுபுறம் நாகம் என்கிற எங்களது நரகத்து முள்ளுகள். மானுக்கு நேரம் தேவைப்பட்டது. எடுத்துக்கொண்டு அருகாமையில் இருக்கும் தமிழ் கடவுள் கந்தவன கடவுளை நினைத்து பார்த்தான். யாமிருக்க பயமேன் என்று நெஞ்சை நிமிர்த்தி வேலுடன் முருகன் நிற்கும் காட்சி அவன் மனத்திரையில் ஓடியது. கூட வந்தவர்கள் எல்லாம் வீடு திரும்பிக்கொண்டிருக்க இன்னொரு உருவம் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது, இம்முறை அவனால் யாரென்று அடையாளம் காணமுடிவில்லை, அவனுள் மீண்டும் சிறு நம்பிக்கை ஒளி தெரிய ஆரம்பித்தது. உருவம் கிட்ட வர வரத்தான் புரிந்தது அது சாந்தன் என்று. சாந்தன், இனியவனுடன் ஊர் பாடசாலையில் ஒன்றாக படித்த சக மாணவன். கணித பாடத்தில் தேர்ந்த இனியவன் பல்வேறு தருணங்களில் சாந்தனுக்கு கணக்கு சொல்லி கொடுத்து இருந்திக்கிறான். சில வேளைகளில் சண்டையும் பிடித்து இருக்கிறான். அவர்கள் சண்டை அவர்களுடனையே முடிந்து விடும், அவர்களே சமரசம் செய்து கொள்ளுவார்கள் . ஆசிரியர்கள் என்ற மூன்றாம் தரப்பு ஊடுருவ விட்டதில்லை. பாடசாலை முடிவில் பலரது பாதை திசை மாறி போனது. சாந்தனும் விதி விலக்கல்ல. போராட புறப்பட்டு தவறானவர்களின் இயக்கத்தில் சேர்ந்து, அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட பொழுது, தளபதியின் அறிவுறுத்தலில் ஊரில் இருந்து தனது தந்தையின் தொழிலை செய்து கொண்டிருந்தார். சாந்தன் மாற்று இயக்கத்தில் இருந்தததனால் ஊரில் நிலை கொண்டிருந்த பலரை அவருக்கு தெரியும். அவன் இனிவனின் நண்பன், அவர்களுடன் வாதாடி ஒருவாறாக இனியவனை மீட்டு அவனது பெரியண்ணயிடம் ஒப்படைத்தான். எந்த சூழ் நிலைக்கும் காலம் என்பது பதில் சொல்லும், நம்பிக்கை இழக்க வேண்டாம். குறள் “காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருதுபவர்” கலகத்திக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையே வென்று காட்டுவார்கள் முற்றும் அகஸ்தியன்
  3. அவரை பார் சிறிதரன் என்று அழைப்பதனை நிறுத்திவிடுவோம்!😂
  4. பார் போமிற் விடயம் வெளியே வராது என்று சிறிதரன் உறுதியாக நம்புகிறார் போல. ஒன்றும் தெpரியாத வர் மாதிரி தீரமானத்தை முன்மொழிகிறார்.அறிக்கை யில் வரவேண்டும் டஎன்கிறார். குறிப்பு எடுக்கச் சொல்லுறார்.ஆள் ரொம்ப நல்லவரப்பா! பார்மிட்டுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பு இல்லையப்பா என்று சனம் சொல்லிற அளவுக்கு சிறியர் இன்றைய கூட்டத்தில் நடந்துள்ளார். 2கோடி வாங்கிவில்லை என்றுசவால; விட்ட மாதிரி இதுவும் கடந்து போகும்.
  5. உண்மை..உண்மை..வேப்பிலை தேவைப்படாத அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தால் நல்லம் தான்.😀
  6. *நண்பன்* *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.* *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..* நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர். *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..* 35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..* அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.. *அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர். *இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. *மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..* *தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..* *கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..* *நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..* முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின.. இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்.. *35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..* *தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..* *ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..* *பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..* *நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..* *ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..* *வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..* *இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..* அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது. மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..? * *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர். 35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான். பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை. மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி. சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று. அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. *நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். *இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்..* *என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..* *எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..* அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்.. *என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..* என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும். முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி *35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். *உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..* *உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..* இந்தப் பதிவு அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம் நன்றி........
  7. கொலைக்குற்றவாளிகளுக்கே மன்னிப்பு வழங்கும் நாடு சார் இது போங்க உடனடி வேலை இடமாற்றம் அடுத்த நாள் வேறு இடத்தில வேலை இதுதான் நடக்கும்
  8. சுமந்திரனுக்கு இப்போதாவது தெரிந்து இருக்க வேண்டும், அவற்றிலும் பார்க்க தமிழரசு கட்சி game விளையாடும் என்று. கட்சியில் உள்ள அநேகமானவர்கள், குடும்பம் குடும்பமாக, சந்ததி சந்ததியாக இரத்தத்தை ஊற்றி வளர்த்தவர்களின் சந்ததிகள் , அல்லது அந்த சந்ததிகளோடு நேரடி உறவு, தொடர்பு உள்ளவர்கள். எனவே தமிழரசு பிரிவது , விழுவது ஓருவருக்கும் மனம் வராது. ஆயினும், புதியவர்கள் ஆக்கபூர்வமாக செயற்றப்பட்டால், கட்சி வழிவிடும், அப்படி சுமந்திரனும் கட்சியில் முக்கிய அங்கத்தவராக மாறலாம். இப்போதும் வாய்ப்பு சுமந்திரன் கையில் அடுத்து முழுமையாக அகலவில்லை. அனால், செய்த வேலைக்கு பரிகாரம் என்பது இருக்கிறது என்பதையும் சுமந்திரன் உணர வேண்டும். அனால் , சகுனி வேலை பார்த்தால், எவர் உள்ளிருந்து கொள்ளும் வியாதி என்பது முடிவிலேயே தெரியும்.
  9. குடும்பம் தமிழரசு கட்சியின் முகம் அறியா தாபகர்கள் ஆம். குடும்பம் வழிவழியாக, தமிழரசு கட்சியின் முகம் அறியா தாபகர்கள், போசகர்கள், இரத்த நலன் போற்றுபவர்கள், வளர்த்தவர்கள் .... அது கடினம் (ஆயினும் மனித மனம் குரங்கு). தமிழரசு முடிவுக்கு வந்தால் ஒழிய மாறுவார் என்று நான் நினைக்கவில்லை. இருக்கலாம், ஆனால் அது அவரின் பார்வையில், சுமந்திரன் எண்ணம் என்ன, எதில் ஈடுபாடு, தமிழரசுக்குள் வழிக்கு கொண்டு வருவதற்கு. இப்பொது, சுமந்திரன் cvk இன் உண்மையான சொரூபத்தை கண்டுவிட்டாரோ, அல்லது cvk அசுமந்திரன் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவாகி விட்டதோ, கட்சி உட்பட. cvk, கட்சியின் , ஆகக்குறைந்தது முக்கியமானவர்கள் கருத்தை ஆகக்குறைந்தது அனாமதேயமாக அறியாது, இதுக்கு வாய் திறந்து இருக்கமாட்டார் என்றே நினைக்கிறன். மற்றது, கழற்றுவதற்கு இது ஏற்ற நேரம் அல்லவா, சுமந்திரனுக்கு மக்கள் ஆதரவில்லை என்று தேர்தல் முடிவுகள்.
  10. கனடாவிலும் "அவசரத்திற்கு பணம் கையில் வைத்திருங்கள்" என்று வேலையிடத்தில் அறிவுறுத்தியதாக ஒரு உறவு எழுதியிருந்தார். (அமெரிக்காவில் இருக்கும் நான் பியர் ஸ்ரொக் அப் செய்து வருகிறேன்) நிராஜ் டேவிட் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்😎!
  11. 8 முதல் 9 வரை விடுதிகளில் படிப்பு நேரம் .. படிக்குற நேரத்துல அப்படி என்ன கடலை போடுற வேலை ..? போக சென்னையில் பெசன்ட் நகர் , மெரினா பீச் இன்னும் எவ்வளவோ இடம் இருக்கு..? கதைப்பதை வீடியோ எடுத்து போடுவதாக அந்த காடையன் மிரட்டினானாம் ? தயவு செய்து upload பண்ணுங்க share பண்ணுங்க என்று சொல்லும் இந்த காலத்தில் ..? சம்பந்தபட்டவர்கள் மாணவர்கள் என்பதால் எதிர்காலம் கருதி விட்டினம்..ஆக குறைந்தது மாணவ மணிகளுக்கு இந்த நிகழ்வு எச்சரிக்கை மணி மற்றும்படி அந்த காடையனுக்கு காளை மாட்டுக்கு அடிப்பது போல் அடித்து ஆண்மையை எடுத்து விட வேண்டியதுதான்..!
  12. இப்படியான செய்திகளுக்கு கடும் எச்சரிக்கை விட்டிருக்கின்றார் புடின்.............. வீரகேசரி அலுவலகத்திற்குள் ஒரு ட்ரோன் பறக்கப் போகின்றது.............
  13. வடக்கு கிழக்கில் சுனாமி அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான பணிகளைச் செயல்படுத்த, அரசாங்கமும் விபு இயக்கமும் Post-Tsunami Operational Management Structure (P-TOMS) என்கின்ற பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டிருந்தனர். இந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு அரசியல் அதிகாரம் இருக்கவில்லை . அதே போல P-TOMS உருப்படியான எந்த நிர்வாக வலிமையும் கொண்டிருக்கவில்லை மாறாக, இது மிக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட மிக ஒரு தற்காலிக மனிதாபிமான ஒழுங்கமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது ஆழி பேரலையில் உயிர், உடைமைகள், வீடு வாசல்கள், தொழில் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகி நின்ற அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வளிக்கவே P-TOMS உருவாக்கப்பட்டது ஆனால் ஜேவிபி மேற்படி பொது இணக்கப்பாட்டை தனிநாடு நோக்கிய வரைபடமாக சித்தரித்தது நாடு பூராகவும் பெருமெடுப்பில் போராட்டங்களை நடத்தியது ஜேவிபியின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை இன்றைய அமைச்சர் திரு சுனில் ஹந்துநெத்தி அவர்களே ஒழுங்கமைத்தார் ஜேவிபியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு கிளிநொச்சியில் இயங்க தடை விதித்தது அதே போல P-TOMS திட்டங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் தடை விதித்தது P-TOMS நிதியம் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது இதுமாத்திரமின்றி திட்ட முகாமைத்துவ குழு செயற்படவும் அனுமதி மறுக்கப்பட்டது இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் P-TOMS முழுமையாக நீர்த்து போக செய்யப்பட்டது இயற்கை பேரழிவில் ஒரே நாளில் 6,000 உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களுக்கான மறுவாழ்வு பொறிமுறை முற்றாக முடக்கப்பட்டது தீர்ப்பு வெளியாகிய வேளையில், நீதிமன்ற வாயிலில் இன்றைய அமைச்சர்களான திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துநெத்தி, திரு சந்திரசேகரர் உள்ளிட்டோர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஜேவிபி நேர்மையாக அணுகும் என எதிர்பார்க்கும் சில தரப்புகள், இன்றைய ஆழிப்பேரலை நினைவு நாளிலாவது, அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்கு எதிராக ஜேவிபி ஆடிய சன்னதங்கள் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். வரலாறே உண்மையான வழிகாட்டி. நன்றி - முகநூல்
  14. கோஷான், சாட்சாத் அதே சிவஞானம் தான் இவர். யாழ் மாநகரசபை ஆணையாளராக நீண்ட காலம் கடமையாற்றியவர். புலிகள் பிரேரித்த மூவரில் சிவஞானமும் ஒருவர்.
  15. 🤣................. அடி பலமாகவே இருக்கின்றது. ஒற்றைக் காலில் நின்று சுழலும் போது இந்தப் பெண் காட்டும் உடற் சமநிலையும், கைகள் அசையும் வேகமும், அது இறுதியில் இறங்கும் இலாவகமும், இவர் உண்மையிலேயே 'பின்னி எடுப்பார்' என்றே தெரிகின்றது.............. கடந்த வாரம் என்று நினைக்கின்றேன். வட இந்தியாவில் பேரூந்தில் ஒருவர் ஒரு பெண்ணுடன் சேட்டைகள் செய்துள்ளார். அந்தப் பெண் ஒரு பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்.......... ஆசிரியர் பிளந்து கட்டிவிட்டார்....... ஒரே மூச்சில் 26 அடிகளோ என்னவோ..........🤣.
  16. தளிர்க் கரங்களில் தாராளமான பலம் தாங்கமுடியாத காளைகள் நாலும் தரையினில் தஞ்சம் கொள்ளும் ........! 👍 நன்றாக இருக்கு, நன்றி ஐயா .......!
  17. பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) நூறாவது பிறந்தநாள். அவர் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது நூற்றாண்டு தொடக்க விழா. 'இப்படியொரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது' என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தன்னுடைய பிறந்தநாள் குறித்து எதுவும் பேசாமல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்தே அவர் அதிகம் பேசியதாகக் கூறுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லெனின். யார் இந்த நல்லகண்ணு? கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி மற்றும் போராட்டங்களில் அவரின் பங்களிப்பு என்ன? தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்தது? - தமிழக அரசியல் வரலாறு தமிழுக்காக குழந்தைகளுடன் சிறைபுகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரசியல் வரலாறு: அதிரடித் திருப்பங்கள், சுவாரசிய சம்பவங்கள் சிறையும், போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் 'தோழர் ஆர்.என்.கே' என்ற அடைமொழியோடு அவரை அழைக்கின்றனர். அவரது நூற்றாண்டு விழாவை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வியாழன் அன்று அக்கட்சியினர் கொண்டாடியுள்ளனர். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பட மூலாதாரம்,HANDOUT பாரதியார், திரு.வி.கல்யாணசுந்தரம், விவேகானந்தர் ஆகியோரது படைப்புகளும் ஆசிரியர் பலவேசம் மூலமாகவே நல்லகண்ணுவுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. பாரதியாரின் பாடல்களும் திரு.வி.கவின் எழுத்துகளும் தன்னை மாற்றியதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் அவருடன் நான் கலந்துரையாடியபோது கூறினார். "சாதிக் கட்டமைப்பை உடைப்பதும் சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதுவும்தான் தன்னுடைய லட்சியமாக இருந்தது" என்றும் அப்போது அவர் தெரிவித்தார். கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார். அதுகுறித்து நினைவுகூர்ந்த நல்லகண்ணு, "என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. '18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்' என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்" என்றார். "பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின். சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?3 மணி நேரங்களுக்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி - எஃப்.ஐ.ஆரை முடக்கிய காவல்துறை5 மணி நேரங்களுக்கு முன்னர் நெல்லை சதி வழக்கு பட மூலாதாரம்,HANDOUT இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் நல்லகண்ணுவுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. ஆயுதம் தாங்கிய போராட்டமாக இது இருந்ததாகக் கூறும் லெனின், "இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை" என்றார். இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் 1958ஆம் ஆண்டு நடந்தது. இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது. "நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்" என்கிறார் லெனின். நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார். டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை 'வாங்க விரும்புவது' ஏன்? சீனாவை சமாளிக்க அது உதவுமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் மீது மோதிய விராட் கோலிக்கு என்ன தண்டனை?5 மணி நேரங்களுக்கு முன்னர் சாதிக் கலவரத்தைத் தடுத்த நல்லகண்ணு பட மூலாதாரம்,HANDOUT "நல்லகண்ணுவின் பிரதான காலகட்டம் என்பது விடுதலைப் போராட்டமும் அதற்குப் பிந்தைய காலகட்டமும்தான்" எனக் கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 1996ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார். "அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என்பதை அவர் நிலை நிறுத்தினார்" என்கிறார் கனகராஜ். மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார். "இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது" என்று விவரித்தார் லெனின். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்26 டிசம்பர் 2024 நிதி மோசடி புகார்: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட பெண் அகதி - 'சட்டவிரோத நடவடிக்கை' என புகார்7 மணி நேரங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் வாதாடிய நல்லகண்ணு பட மூலாதாரம்,KANAGARAJ KARUPPAIAH/FB தன்னுடைய 86 வயதிலும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக நல்லகண்ணு போராடிய சம்பவம் ஒன்றை பிபிசி தமிழிடம் கனகராஜ் நினைவு கூர்ந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நேரடியாக ஆஜராகி நல்லகண்ணு வாதாடியதாகக் கூறுகிறார் கனகராஜ். "அப்போது அவருக்கு 86 வயது. இந்த வழக்கில் சட்டரீதியான வாதங்களைவிட அவர் முன்வைத்த உணர்வுபூர்வமான வாதங்கள் எடுபட்டன. தாமிரபரணி ஆற்றுக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் தனது இளமைக் காலத்துடன் ஆற்றுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் அவர் நீதிமன்றத்தில் பேசியதாக" கூறுகிறார் கனகராஜ். தாமிரபரணி ஆறு செல்லும் இடத்தின் மணல் திட்டில் கொங்கராயன் குறிச்சி, ஆறாம் பண்ணை ஆகிய கிராமங்கள் உள்ளதாகக் கூறி அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நல்லகண்ணு வாதிட்டதாகக் கூறினார் கனகராஜ். மேலும், "இதன்பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலவியல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் முனைவர் சந்திரசேகர், அதே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் அருணாச்சலம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர் சேஷஷாயி ஆகியோர் கொண்ட சட்ட ஆணையத்தை நீதிமன்றம் நியமித்தது. அந்த ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது" என்றார் அவர். இந்த மணலின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என நிபுணர் குழு அப்போது அறிக்கை அளித்ததாகவும் கனகராஜ் குறிப்பிட்டார். 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானைக் குட்டியின் உடல் மீட்பு - சுவாரசிய தகவல்கள்6 மணி நேரங்களுக்கு முன்னர் 'என்னை பேய் என நினைத்தனர்' - சுனாமியின்போது 3 வாரங்களாக தனியே இருந்து உயிர்பிழைத்த 'அதிசய சிறுவன்'26 டிசம்பர் 2024 தேர்தல் அரசியலில் நல்லகண்ணு பட மூலாதாரம்,LENIN DAKSHINAMURTHI/FB இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர், இடைக் கமிட்டி செயலாளர், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார். தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார். 1980ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு நல்லகண்ணு தோல்வியைத் தழுவினார். "அந்தத் தேர்தலில் அதிமுக-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர் நேரடியாகப் பிரசாரம் செய்தார்" என்கிறார் லெனின். கடந்த 1999ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நல்லகண்ணு தோல்வியடைந்தார். அப்போது கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் பிரதானமாகப் பேசப்பட்டதால், 'முஸ்லிம்களுக்கு ஆதரவானவர் நல்லகண்ணு' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. "இதை மறுக்காத நல்லகண்ணு, 'வாக்கு வங்கிக்காக மாற மாட்டோம். சிறுபான்மையினர் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருப்போம்' என பிரசாரம் செய்தார்" என்கிறார் லெனின். மோதியுடன் மோகன் பாகவத் மறைமுக யுத்தமா? கோவில் - மசூதி பற்றிய பாகவத் பேச்சுக்கு துறவிகள் எதிர்ப்பு25 டிசம்பர் 2024 கீழ்வெண்மணி: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவசாய தொழிலாளர்கள் - 1968 டிசம்பர் 25 இரவில் நடந்தது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் மழை கொடுத்த சோகம் பட மூலாதாரம்,HANDOUT மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் நல்லகண்ணுவின் வாழ்வில் ஆறாத சோகத்தை 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம் ஏற்படுத்தியது. சென்னை சி.ஐ.டி காலனியில் நல்லகண்ணு வசித்த வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தபோது அவரைக் காப்பாற்ற படகு ஒன்று வந்துள்ளது. "மற்றவர்களையும் காப்பாற்றிவிட்டு என் அருகே வாருங்கள்" என அவர் கூறியதை இன்றளவும் நினைவு கூர்கின்றனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள். அந்த வெள்ளத்தில், தான் சேர்த்து வைத்திருந்த 2,000க்கும் மேற்பட்ட அரசியல், தத்துவம், சங்க இலக்கியங்கள் தொடர்பான புத்தகங்கள் நீரில் கரைந்து தூளாகிவிட்டதாக என்னிடம் வேதனையை வெளிப்படுத்தினார். "மழை எனக்குக் கொடுத்த சோகம் இதுதான்" என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். 'நூற்றாண்டு' - நல்லகண்ணு சொன்னது என்ன? தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார். தன்னுடைய பிறந்தநாளுடன், தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் நூற்றாண்டு என்பதால் அதுகுறித்து நல்லகண்ணு பேசியுள்ளார். "நூறாண்டு என்பது அரசியல் கட்சிக்கு ஒரு வயதல்ல. வைரம் பாய்ந்த அனுபவம் செறிந்த ஓர் அமைப்பு இது. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். வகுப்புவாத அபாயத்தை உணர்ந்து கவனமாகச் செயலாற்ற வேண்டும்" என்றார் நல்லகண்ணு. "தனது 100வது பிறந்தநாள் குறித்து எதுவும் பேசாமல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்தே அவர் அதிகம் பேசியதாக" லெனின் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1d366rpg2qo
  18. அனுபவி ராஜா அனுபவி . ...........! 😍
  19. 2,000,000/365=5,479.452 நாளொன்றுக்கு 5,479.5/24=228.313 மணத்தியாலம் ஒன்றுக்கு 228/60=3.8 நிமிடத்துக்கு ——————- கட்டுநாயக்காவில் நாளொன்றுக்கு சராசரியாக 85 விமானங்கள் வருகை/செல்கை. 5480/85=64.471 ஒரு விமானத்தில் சராசரியாக 64 ஆட்கள் வந்தாலே வருடத்துக்கு 2 மில்லியனை எட்டி விடலாம். நாளுக்கு 6479 பேர் வந்தால் - 6479/85=76.224 ஒரு விமானத்தில் 76 பேர் வந்தால் போதும்.
  20. 75 ஆவது ஆண்டுவிழா கோலகாலமாகவே நடக்கிறது. இப்படி ஒரு கொண்டாட்டத்தை காணவேயில்லை.
  21. பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது என்னவிதமான ஒரு மனநிலை. பைத்தியக்காரத்தனமான தலைப்புகள் இன்று அனைத்து ஊடகங்களிலும் மலிந்துவிட்டன. இதனை வெறுமனே அனைத்து அறிவார்ந்தோரும் கடந்து செல்வதும் கவலைக்குரியது. பிழைப்புக்காக எதையும் எழுதவும் செய்யவும் துணிந்த உலகிலே சாமானியர்களது குரல்கள் எடுபடுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. "என்னைத் தேடாதே" மதியழகன் எப்போதும் எளிமையுடனும் எல்லோரிடமும் பாசமாக வாழ்ந்து வந்தான். அவனின் குடும்பம் வசதியான குடும்பம் என்றாலும், செல்வமும் புகழும் அவனது ஒரு முக்கிய காரணியாக என்றும் இருந்ததில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மை ஆகியவற்றை அவன் மதித்தான். அவன் ஒரு இளம் மருத்துவனாக அவனது நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடமை புரிந்தும் வந்தான். அவனது இதயம், இளநிலா என்ற ஒரு இளம் பெண்ணால் ஒருமுறை தற்செயலாக ஈர்க்கப்பட்டது. ஒருமுறை அவனது மருத்துவமனைக்கு இளநிலாவின் தாய் சளிக்காச்சலால் அவதிப் படுவதால், முறையான சிகிச்சை பெறுவதற்கு, அங்கு கூட்டி வந்தாள். அப்பொழுது தான் அவன் தற்செயலாக அவளைக் சந்தித்தான். அவளுடைய இளமை பூக்கும் அழகு அவனைக் கவர்ந்தது. "விண்ணில் உலாவும் மேகங்களின் அழகை ரசித்தேன், உன் வளைவுகளைக் கண்ட பின் தலை குனிந்தேன்!, பண் பாடும் குயிலின் பாடல்கள் இயற்கைக் கவிதை என்றேன், உன் குறும் புன்னகையின் ஓசை கேட்டு என்னையே மறந்தேன்!" என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டு தாய்க்கு சிகிச்சை அளிக்கும் பொழுது, தாய்க்கு உதவியாக அருகில் நின்ற அவளை நன்றாக பார்க்கக் கூடிய மற்றும் அவளின் குரலைக் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் அவனுக்கு மேலும் கிடைத்தது. "பயிர்கடீந் தனவும் பட்டமா மரமும் பண்டைநா ளுக்கவெள் ளென்பும் உயிர்பெறற் பொருட்டுப் பளிதமும் பாலும் ஒழுகிய தேனும் ஆரமுதும் குயிலினிற் குரலும் கிளியினின் மொழியும் குழலும்யா ழும்குழைத் திழைத்து மயிலியற் சாயல் வாள்நுதல் தனக்கு மலரயன் வகுத்ததென் மொழியாள்." குயிலின் குரல், கிளியின் மொழி, குழல், யாழ் அத்தனையும் ஒன்றுகூடிய அவளின் அந்த இனிய குரலைக் கேட்டால், கருகிய பயிர்களும் உயிர்பெற்ற பசிய பயிர்களாகுமே, பட்ட மரமும் தழைத்திடுமே, பலநாள் மண்ணில் புதைத்து கிடந்து மக்கிப்போன எலும்புகளும் கூட புத்துயிர் பெறுமே, அப்படி என்றால் மதியழகன் எம்மட்டு ? அவளது அங்கு நிற்கும் பாணியும் அழகும் அவன் இதுவரை உணராத விதங்களில் அவனது ஆன்மாவைத் தொடுவது போல் தோன்றியது. ஒரு தீப்பொறி இருவரின் கண்ணிலும் இதயத்திலும் ஆழமான, அனைத்தையும் உள்ளடக்கிய அன்பாக, காதலாக, அதற்கு மேலும் கணப்பொழுதில் மலர்ந்தது. மதியழகன் அவளை தன்னை மறந்து பார்த்தான். இளநிலாவும் அவனைப் பார்த்தாள். "மண்ம டந்தையர் தம்முளும் வாசவன் உறையும் விண்ம டந்தையர் தம்முளு நிகரிலா விறல்வேற் கண்ம டந்தைதன் கருங்குழல் அருத்ததிக் கறபிற் கெண்ம டங்குகற் புடையள்இந் திரையினும் எழிலாள்." மண்ணுலக பெண்களுள்ளும், விண்ணுல பெண்களுள்ளும் யாருக்கும் நிகரில்லாத அளவுக்கு அழகிய வேல் போன்ற கண்களையும். குளிர்ந்த கருங்கூந்தலை உடையவளுமான அவளுக்கு ஒப்பாக அருந்ததியையோ இல்லை திருமகளையோ ஒப்பிடமுடியாமல் அவன் தவித்தான். விரைவில், அவர்கள் பிரிக்க முடியாதவர்களாக, அவர்களின் நாட்கள் சந்திப்பிலும், கதைப்பதிலும், ஒன்றாக உலாவுவதிலும் சில காலம் சென்றன. மற்றும் அவர்களின் இரவுகள் ஒன்றாக எதிர்காலம் பற்றிய, கனவுகளுடன் காணப்பட்டன. குடும்பங்களுக்கிடையில் திருமணம் பற்றி ஏற்பட்ட அனைத்து முரண்பாடுகளும் சந்தேகங்களும் அவர்களின் உறுதியான காதலின் முன் உடைத்தெறியப்பட்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். ஏதோ ஒரு கதைப் புத்தகம் போல அவர்களது காதல் அழியாததாக, என்றும் நிலைத்திருப்பதாக உணர்ந்தனர். வேல் போன்ற விழிகளும், கரு நாகம் படம் எடுத்து விரிந்து கிடப்பது போன்ற கூந்தலும் பிறை போன்ற நெற்றியும் குளிர்ந்த உதடுகளும் ஒடுங்கிய வயிறும், சிறுத்த இடையும் கொண்ட இளநிலாவின் அழகை ரசித்தபடி, அவளை தன் மடியில் ஏந்தியவாறு மதியழகன் மொட்டை மாடியில் நிலாவின் ஒளியில் ஒரு முன்னிரவு இருந்தான். அப்பொழுது அவனின் பார்வையால் அவள் நாணினாள். என்றாலும் அந்த நாணத்திலும் அவனுக்கு கேட்கக்கூடியதாக மெல்லிய குரலில், “நான் உன்னோடிருப்பேன் என்றும் ” என்றாள். அது கேட்ட மதியழகன், இனிய பரபரப்புடன் சந்தோசமான வானில், அழகாய் பறந்தனன். அவளும் அவனின் மார்பில் சாய்ந்து, ஏக்கங்களும், தவிப்புகளும், கனவுகளும், காதலும், கற்பனையும் சேர்த்து, தங்கள் வாழ்வை அன்பால், பண்பால் மகிழ்வால் நிரப்ப, அன்பு காதலர்களாய், இளம் தம்பதிகளாய் ஒன்றாய் பவனி வந்தனர். காதல் என்பது அன்பின் ஒரு வடிவம். அதுதான் மனிதனைப் பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அடுத்தவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது! அது உடல் இச்சையால் இருக்கலாம். மனத் திருப்திக்காக இருக்கலாம். பொருளாதார வசதிக்காக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு தேவையின் பொருட்டுப் பிறப்பது உண்மையான காதல் ஆகாது என்பதை அவன் நன்றாக உணர்ந்தான். அவளும் அப்படித்தான் இருக்கிறாள் என்பது போல அவன் உணர்ந்தான். அவர்களின் ஆரம்ப திருமண வாழ்க்கையின் போது, மதியழகனும் இளநிலாவும் ஒரு அன்பான தொடர்பைப் பகிர்ந்து கொண்டனர், அது அவர்களுக்கு காலமற்றதாக, அழியாத ஒன்றாக உணர்ந்தனர், அவர்கள் சந்திப்பதற்கு முன்பே அவர்களின் ஆன்மா ஒன்றாக இணைக்கப்பட்டது போல் அவர்களுக்கு இருந்தது. அவர்களது திருமணத்தின் ஆரம்ப நாட்களில், அவர்கள் பல மணிநேரம் பேசுவார்கள், தங்கள் கனவுகளை ஒன்றாக நெசவு செய்து, நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் மீது கட்டப்பட்ட திருமண வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலன் போன்ற தமிழ் இலக்கியத்தின் பழங்கால காதலர்களை நினைவு கூரும் வகையில் அவர்களின் காதல் தீவிரத்துடன் மலர்ந்தது. மதியழகன் அடிக்கடி கண்ணகியின் காதலைப் பற்றிப் பேசுவான், அவர்களும் அத்தகைய பிரிக்க முடியாத திருமணப் பிணைப்பைத் தொடரவேண்டும் என்று அவன் தன் கனவை அவளுடன் பகிர்ந்தான். மீண்டும் ஒரு நட்சத்திர ஒளி இரவில், அவன் அவளிடம் “"மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே! காசு அறு விரையே! கரும்பே! தேனே! அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! இளநிலாவே! , கண்ணகியின் கதை உனக்குத் தெரியுமா? அவளுடைய காதல் ஆலமரத்தின் வேர்களைப் போல கடுமையானது, கட்டுப்படாதது. எல்லாத் தடைகளையும் மீறிய வலிமையுடன் கோவலனை நேசித்தாள். அதுதான் நான் எங்களுக்காக விரும்பும் காதல் - அது வானத்தில் உள்ள நட்சத்திரங்களை விட உண்மையானது." என்று கிசுகிசுத்தான் "நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த வேய் வனப்புற்ற தோளை நீயே, என்னுள் வருதியோ, நல் நடைக் கொடிச்சி முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல? நின் உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே," உன் தோள், என்னை அரவணைக்கும் மூங்கில் போன்ற தோள், என் காதல் நோய்க்கு அது மருந்து, நெஞ்சு நெகிழ்ந்து புண்ணாகிக் கிடந்த நிலையிலிருந்து என்னை விடுவிக்கும்.என் நெஞ்சிலிருக்கும் ஏக்க நோய் உனக்குத் தெரியுமா? நீ கொடிச்சி. என் மேல் படரவேண்டியவள். கற்பு என்னும் நன்னடத்தை கொண்டவள். முருக தெய்வத்தைப் புணர்ந்த வள்ளி போன்று என்னுடன் இணைவாயா?. உன் உருவ -அழகு என்னைத் தூக்கி வாரிப் போடுகிறது. நீ என்னை அப்படிப் பார்க்காதே. என்னால் தாங்கமுடியாது.நான் உதவியற்றவனாக உணர்கிறேன்! என்றான். பின் இளநிலா புன்சிரிப்புடன் அவன் கண்களைப் நேராகப் பார்த்து பதிலளித்தாள். “என் காவிய நாயகனே, என் வேதனை தீர்த்தவனே என் விழிகளில் நிறைந்தவனே!, நீ என் கோவலன். நான் உன் கண்ணகியாக இருப்பேன். நாம் ஒன்றாக இந்த உலகத்தை எதிர்கொள்வோம், எதுவும் நம்மை உடைக்காது." என்றாள். இந்த வார்த்தைகள் அந்த நேரத்தில் உண்மையாக அவன் உணர்ந்தன். தொடக்கத்தில், அவர்களது திருமணமும் அவர்களது காதல் உறவைப் போலவே மிகவும் மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாகவும். அன்பானதாகவும் இருந்தது. ஆனால், மெல்ல மெல்ல, அவளது ஆர்வங்கள், அவர்களது பகிரப்பட்ட வாழ்க்கையிலிருந்தும், எளிமையான இன்பங்களிலிருந்தும் மாறத் தொடங்கியது. அதை மதியழகன் எதிர்பார்க்கவே இல்லை. அவர்களது திருமண வாழ்வு நகரத் தொடங்கி சில மாதங்களின் பின், நவநாகரிக மங்கையாக, இளநிலாவின் ஆடம்பர தாகம் மற்றும் அந்தஸ்து பார்க்கும் தன்மை, மேலோங்கியது. அவள் கவனக்குறைவாக செலவழித்தாள், ஆடம்பரமான விருந்துகளை நடத்தினாள், புதிதாகக் கிடைத்த நட்பு, மற்றும் சமூக அந்தஸ்தில் அவளைச் சுற்றிக்கொண்ட நண்பர்களுடன் மட்டுமே அவள் ஆர்வம் ஓங்கியது. நாட்கள் மெல்ல மெல்ல நகர, மதியழகன் மேல் உள்ள ஆர்வமும் நலம் விசாரிக்கும் அக்கறையும் கொஞ்சம் கொஞ்சமாய் இளநிலாவிற்கு அவளை அறியாமலே குறையத் தொடங்கியது. அவள் வேண்டும் என்று செய்யாவிட்டாலும், அவளின் ஆடம்பர வாழ்க்கை, புதிய தொடர்புகள் அதை சில நேரம் மறக்கச் செய்துவிட்டன. மதியழகன் வர தாமதம் ஆனாலும் தவியாய் தவித்து அவன் வருவதை எதிர்பார்த்து, தானும் சாப்பிடாமலும் கதவை பார்த்துக்கொண்டு இருக்கும் இளநிலா, அவன் விரும்பி எங்கேயாவது போக அழைத்தும், அதைத் எதாவது காரணம் கூறி தவர்த்து தன் புதிய தோழிகளுடன் மாதர் சங்கம், அது இதுவென ஏதாவது உயர் மட்ட கொண்டாட்டங்கள் மற்றும் விருந்துகள் என போய்விடுவாள். அப்போதுதான், தான் தவறான ஒருவளை காதலித்து விட்டமோ என்று குழம்பத் தொடங்கினான். மதியழகன் அவளுடன் பேச சில முறை முயன்றான், அவர்கள் ஒருமுறை பகிர்ந்து கொண்ட அரவணைப்பை மீண்டும் காண துடித்தான். ஆனாலும், ஒவ்வொரு உரையாடலும் ஏமாற்றத்தில் முடிந்தது. மேலும் அவன் தனது சொந்த வீட்டில் அந்நியராக உணரத் தொடங்கினான். ஒரு காலத்தில் அவன் நேசித்த பெண் தன்னை விட்டு நழுவிப் போவதைக் கண்டான். அவனுடைய அன்பை விட, அவனுடைய செல்வத்தில் மட்டுமே அவளுக்கு கூடுதலான கவனம் இருந்தது. காலப்போக்கில், இளநிலாவின் புறக்கணிப்பு இன்னும் அவனுக்கு வெளிப்படையாகி விட்டது. அவள் சூறாவளி சமூக வாழ்க்கையில் சிக்கி, அவனை அடிக்கடி தனியாக விட்டுவிடுவாள். ஒரு காலத்தில் பகிரப்பட்ட சிரிப்புடன் எதிரொலித்த வீடு இப்போது பிரிவின் வெறுமையால் நிரம்பிய வெப்பமாக உணரப்பட்டது. திருமணமாகி சில மாதங்கள் கடந்தபோது, இளநிலாவின் கவனம் மேலும் மேலும் பொருள் இன்பங்களை, அதாவது ஆடம்பர ஹோட்டல்களில் உண்ணுதல், மேல்மட்ட மக்கள் மத்தியில் தன்னை முன்னிலை படுத்த, தன்னை அலங்கார பாணியில் காட்சிப்படுத்துதல், அவர்களின் நட்பின் முதன்மையை தனதாக்கிக் கொள்ளுதல், மற்றும் இன்றைய நவீன சமூக இன்பங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை, நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதனால் கவலையடைந்த மதியழகன், அவளை மீண்டும் குடும்ப பாரம்பரிய எளிய மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள் செய்தாலும், அது, செவிடன் காதில் விழுந்தது போல் அவனுக்குத் தோன்றியது. ஒரு நாள் மாலை, இளநிலா ஒரு ஆடம்பர விருந்துக்குப் பின், மதியழகனை வீட்டில் எதிர்கொண்டாள். "இளநிலா," அவன் தனது குரலை அமைதியாக வைத்துக்கொண்டு, "நட்சத்திரங்களுக்கு அடியில் நாங்கள் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் உனக்கு நினைவிருக்கிறதா? நீ மாறிவிட்டதாக உணர்கிறேன். இதெல்லாம் என்ன?…” என்று கேட்டான். அவன் கண்கள் அவளது விலையுயர்ந்த நவீன அலங்காரத்தையும், வெற்று ஒயின் [மது] கிண்ணத்தையும் பார்த்து, “இது நாங்கள் இல்லை.” என்றான். ஆனால், இளநகை ஏளனமாக தன் கையை அசைத்தாள். “ஓ, மதியழகன், நீ இப்படிப் பழங்காலக் கருத்துக்களில் ஒட்டிக் கொள்ள வேண்டுமா? நாங்கள் இன்று பழைய, மூடத்தனமான பழக்க வழக்கங்களில் ஒட்டிக்கொள்ளும் இளைஞர்கள் அல்ல, எமக்கு இன்றைய நவீன மற்றும் வசதியான பழக்கவழக்கங்களில், வாழ்க்கையை விரும்புவதில் தவறில்லை. தவிர, உங்கள் செல்வம் எங்களுக்கு இன்றைய வசதிக்கு ஏற்ப மகிழ்ச்சியைத் தர வேண்டுமே ஒழிய, வெறும் பொன் சங்கிலிகளை அல்ல." என்றாள். "தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!'' என, மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு" இந்த நேரத்தில், மதியழகன் அகநானூறு 151 இல் குறிப்பிட்ட பண்டைய ஞானத்தைக் அவளுக்கு எடுத்துக்காட்டி, நீ உன்னை அலங்காரிப்பதில் அல்லது விலை உயர்ந்த சாப்பாடு நீ சாப்பிடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் உன்னை விரும்பி வாழ்வோருக்கும், உன்னால் விரும்பப்படுவோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், நகைமுகம் காட்ட முடியாமல் வறுமையில் வாடுவோருக்கும் நல்கி அவர்களை வாழவைப்பதற்கு செல்வம் வேண்டும், இதனால் வரும் மகிழ்ச்சி ஒன்று, தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக் கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று. இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் தான் செல்வம் என்கிறது என விளங்கப் படுத்தினான். "நீ இன்று ஆடம்பரத்துக்கும் நவீன கலாச்சாரம் என்று மேல்மாட்ட, செல்வந்த மக்களுடன் மட்டும் கூடிக்குலாவி பழகும் பழக்கங்களுக்கும் அல்ல என்பதை உணரவேண்டும் என்பதே என் வேண்டுகோள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என எல்லோரும் எம் உறவினரே என்பதை நான் நன்றாக அறிவேன், ஆகவே மேல்மாட்ட, செல்வந்த மக்களுடன் பழகுவதை நான் பிழை என்று சொல்லவில்லை, ஆனால் எல்லோரையும் அணைக்கவேண்டும், செல்வத்தை தேவை அறிந்து செலவழிக்க வேண்டும் மற்றது நீ எதாவது புதிய பழக்கத்தை நாடும் பொழுது, அதன் உண்மைத்தன்மை அறிந்து கைக்கொள்ள வேண்டும் என்பதே என் அன்பே, உன்னிடம் என் சிறிய வேண்டுகோள், அவ்வளவுதான் என் இளநிலாவே!" என்றான். "இளநிலா, செல்வம் அதை நோக்கத்துடன் பயன்படுத்தும்போது மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது, அதை வீண்விரயத்திற்காக வீணடிக்கப்படாது என்பது மட்டுமே" மீண்டும் வலியுறித்தினான். ஆனால் அவள் பேசாமல் அசையாமல் வேறுபக்கம் பார்த்துக் கொண்டு இருந்தாள், மதியழகன் ஆழமான வலியை உணர்ந்தான், ஒரு காலத்தில் அவற்றை ஒன்றாக இணைத்த மதிப்புகளை அவளால் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்தான். "வேலை கேட்டுப் பெண்ணொருத்தி வீதியிலே நடந்து வந்தால் சேலைதனை அவிழ்த்து விடும் உலகமடி பணக்கார வர்க்கமடி பாம்பினும் கொடியதடி" என்றான் கவிஞர் இன்குலாப். இதை அவள் எனோ அந்த நேரம் உணரவில்லை. நாளுக்கு நாள் இளநிலா - மதியழகன் இடைவெளி மேலும் மேலும் கூடியது. மதியழகன் தனது சொந்த வீட்டிலேயே அந்நியனாக மாறினான், ஆனால், அவனது மனைவியோ செல்வத்தையும் இன்பத்தையும் மட்டுமே மதிக்கும் நபர்களின் சகவாசத்தை நாடினாள். ஒரு காலத்தில் அவனை நங்கூரமிட்டு வைத்திருந்த காதல், அவனால் தாங்க முடியாத கனமாக இன்று மாறியது. அவன் தங்கள் திருமண உறவைக் காப்பாற்ற விரும்பினான், ஆனால் அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவள் தவறாக உணர்ந்து, தன் தனிப்பட்ட சுதந்திரம், தான் இன்று வாழும் வாழ்வே என்று எண்ணி, அதில் ஒருவரும் தலையிட முடியாது என்று நம்பி, அவள் மேலும் மேலும் விலகிப் போனாள். இன்றைய பெண்கள் சாமர்த்தியசாலிகள், இன்னும் விவரமானவர்கள், இன்னும் அதிகமான பொறுப்பானவர்கள், புத்திசாலிகள். படிப்பிலும் ஆண்களுக்கு முன்னால் நிற்பவர்கள். கால் வைக்காத துறையே இல்லை என்ற நல்ல நிலையே உள்ளது. தைரியம், தன்னம்பிக்கை, விவேகம், ஒழுங்கு அனைத்தும் ஒருங்கே பெற்ற பெண்கள்தான் இன்றைய பெண்கள். இருந்தும் ஒரு சில பெண்கள் நாகரீகம் என்ற பெயரிலும் புதுமை என்ற பெயரிலும் தங்கள் தோற்றத்தை மாற்றி மற்றவர்களின் கேள்விகுறி பார்வைகளை சந்திகிறார்கள். "நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?" என்பதை கருத்தில் வைத்து கொண்டு நடந்தால் 'பாரதி கண்ட புதுமை பெண்கள்' தான் இன்றைய பெண்கள் என்று அவன் அவளுக்கு விபரமாக எடுத்து விளக்கினான். அவன் மேலும் தனது இன்னும் ஒரு வாதகமாக, ஆண்,பெண் பேதம் இல்லாமல் நட்பு என்பதை மட்டுமே பார்க்கும் உறவு ஆரோக்கியமானதுதான். இருவரும் தங்கள் எல்லை என்ன என்பதை வரையறுத்து கொண்டு பழகுவது அவசியம். ஆனால் பலநேரம் இந்த உறவுகள் தான், எல்லை தாண்டி அவலத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது. இதனால் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள்தான். கண்மூடித்தனமாகவும், அலட்சியமாகவும் இந்த விடயத்தில் நடந்து கொள்கின்றனர் என்பதே உண்மை என்றான். மீண்டும் ஒரு நாள் இரவு, மற்றொரு வாக்குவாதம் அவர்களுக்கிடையில் நடந்த பிறகு, மதியழகன் அவர்கள் வீட்டில் தனியாக உட்கார்ந்து, என்ன தவறு என்று யோசித்தான். அவள் எப்படி ஆரம்ப காலங்களில் அரவணைப்புடனும் அன்புடனும் அவனைப் பார்த்தாள் என்பதை அவன் நினைவு கூர்ந்தான், இப்போது அந்த பார்வைகள் அவளுடைய ஆடம்பரமான வாழ்க்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களின் ஒரு காலத்தில் இனிமையான காதல் நினைவுகள் அவனை வாட்டி வதைத்தது, இனி இப்படியே தொடர்ந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்தான். அவன் அவளை சோகத்துடன் பார்த்தான். “ராதை மற்றும் கிருஷ்ணரின் கதைகளில், கிருஷ்ணன் இல்லாதபோதும், ராதாவின் காதல் உண்மையாக இருந்தது. ஒருவர் உண்மையிலேயே நேசிக்கும்போது, மற்றவர்கள் அந்த நபரை நேசிக்கிறார்கள், அவருடைய அந்தஸ்தையோ செல்வத்தையோ அல்ல. உங்களிடம் எதுவும் இல்லாவிட்டாலும் நான் உன்னை நேசிப்பேன். ஆனால் இப்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, இளநிலா, நீயும் அப்படி உணருவீர்களா?” என்று கேட்டான். தேவையில்லாத ஒழுக்கம் பற்றி மதியழகன் பேசுகிறான் என்று எரிச்சல் அடைந்த இளநிலா கண்களைச் சுழற்றினாள். “இந்தப் பழங்காலக் கதைகளை ஒவ்வொரு முறையும் கொண்டு வர வேண்டுமா மதியழகன்? நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம், கவிஞர்களின் கற்பனைகளில் அல்ல. அதற்காக என்னைத் தண்டிக்காமல், எங்களிடம் இப்ப எது காணப்படுகிறதோ அதை ஏற்று, அதை அனுபவிக்க வேண்டும்." என்றாள். ஒரு காலத்தில் தான் நேசித்த இளநிலா தன் கண் முன்னே மறைந்து கொண்டிருப்பதை அப்போது அறிந்துகொண்டான். அவளது வார்த்தைகளில் ஒரு வேதனை தரும் செய்தியை உணர்ந்தான். "மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை மகளீர் குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் ஆடவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் போல, அவள் நினைக்கும் , அவளின் சுதந்திர வாழ்க்கை போவதை அவன் உணர்ந்தான். அதற்குப் பின் அவர்களுக்கிடையிலான தூரம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மதியழகன் மனம் உடைந்தான். என்றாலும் அவநம்பிக்கையுடன், கடைசியாக அவளுக்கு நியாயப்படுத்த முயன்றான். “இளநிலா, என் அன்பே, நான் உன்னை விரும்பும் அந்தக் கோணத்தில், நீயும் உன்னால் பார்க்க முடிந்தால். நீ இன்று வாழும் வாழ்க்கை நாம் கனவு கண்ட வாழ்க்கை அல்ல என்பதை, நீ இலகுவாக உணர்வாய். தயவு செய்து என்னிடம் திரும்பி வாருங்கள். நம்பிக்கை மற்றும் அன்பின் மீது கட்டமைக்கப்பட்ட வாழ்க்கையை மீண்டும் நாம் வாழ்வோம் என்றான். இளநிலா ஏளனமாக சிரித்தாள், அவளுக்குள்ளே காலியாக இருக்கும் அந்த சத்தம் அவனது நம்பிக்கையை உடைத்தது. “மதியழகன், உங்களால் என்னை நான் இன்று இருக்கும் இந்த நிலையில், ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், ஒருவேளை, நான் நம்புகிறேன், உண்மையில் நீங்கள்தான் இன்று மாறியிருக்கலாம். உங்கள் இன்றைய இலட்சியத்தில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு உயிரோட்டமான மற்றும் உற்சாகமான வாழ்க்கை தான் வேண்டும்." என்றாள். அந்த நொடியில் மதியழகன் தன்னை இழந்ததை அறிந்தான். அவன் ஒருமுறை நேசித்த காதல் இன்று நெருப்பாகவும் அடையாளம் காண முடியாததாகவும் மாறியது. எனவே அவர்களின் பிரிவை இனிமேலும் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து, தனது இறுதி வார்த்தைகளை அவளுக்கு உறுதியாக தெரிவித்தான். மறுநாள் காலை, பொது அறையில், அவன் மேசையில் ஒரு குறிப்பை, " 'என்னைத் தேடாதே' இளநிலா, நீங்கள் தேடுவது இந்த உங்கள் ஆடம்பர, நவீன பாணி என்றால், நீங்கள் உங்கள் வழியில், என்னை மறந்து தேடுங்கள், வாழுங்கள், நான் இனிமேல் உன்னுடன் எந்த வாதமும் செய்யமாட்டேன், நான் விலகிப் போகிறேன். ஆனால் நீங்கள் எப்போதாவது உண்மையான அன்பைத் தேடினால், அது என்னுடன் முடிந்து விட்டது என அறிந்து கொள்ளுங்கள், என்று எழுதி வைத்துவிட்டு, சோகத்தால் கனத்த இதயத்துடன், அவர்கள் கட்டிய அனைத்தையும் விட்டுவிட்டு இளநிலாவின் வாழ்க்கையில் இருந்து முற்றாக விலகி, எங்கே போகிறேன் என்று சொல்லாமல் மறைந்தான். மதியழகன் அவர்கள் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேங்கிக் கிடந்த வலிமிகுந்த நினைவுகளிலிருந்து விலகி, தொலைதூர நாடு ஒன்றுக்குச் சென்றான். "விரிசல் விரிவடைந்து உறவும் உடைந்தது சோகம் கொண்டு அவன் பிரிந்தான்! நட்பு முற்றி விவாகம் செய்தபின் நட்பு நிலை பெறாமல் போனதேனோ?" "நிவர்த்தி காண அறிவுரை வழங்கினான் கணவன் மனைவி உறவு தூய்மை இழந்தது அவளை அவள் வழியே விட்டுச்சென்றான் "என்னைத் தேடாதே" சொல்லிச் சென்றான்" "தொலைந்து போவேன் மறந்து போவேன் உன் நினைவிலிருந்து கடந்து போவேன் ஆடம்பரம், வைன், நட்புகள் தொடரட்டும் நீயாக தொலைத்த "என்னைத் தேடாதே" முதலில் இளநிலா அலட்சியமாக இருந்தாள். அவனது விலகல் அவள் வாழ்க்கையில் ஒரு அலையையும் உண்டாக்கவில்லை, அவள் தன் நண்பர்கள் மற்றும் செல்வங்களால் இன்னும் சூழ்ந்து இருந்தாள். ஆனால் மெதுவாக, வாரங்கள் மாதங்களாக மாற, விடயங்கள் மாறத் தொடங்கின. அவளது ஆடம்பர வாழ்க்கைக்கு நிதியளிக்க யாரும் வரவில்லை. அவளுடைய செல்வம் குறையத் தொடங்கியது. ஒரு காலத்தில் விருந்துகளுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் அவள் பக்கம் குவிந்த நண்பர்கள் தங்களைத் தூர விலக்கத் தொடங்கினர். தன்னைச் சுற்றி அவள் கட்டியெழுப்பிய வாழ்க்கை துண்டு துண்டாக சிதைந்தது. தனித்து விடப்பட்ட அவள், தான் உருவாக்கிய வெறுமையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல் முறையாக, அவள் துரோகத்தின் ஆழத்தை உணர்ந்தாள். அவளது செல்வம் குறையவே அவள் சேர்த்து வைத்திருந்த நண்பர்கள் மறையத் தொடங்கினர். அவளுடைய இதயம் அவளை உண்மையிலேயே கவனித்துக்கொண்ட, அந்த ஒரு நபருக்காக ஏங்கியது. தன் பேராசை மதியழகனைப் பிரித்ததற்கு முந்தைய நாட்களை அவள் நினைவு கூர்ந்தாள். தன் தனிமையின் அமைதியான நேரத்தில், கண்ணகியின் பக்தி, குறளின் ஞானம், ராதையின் நித்திய அன்பு பற்றி அவன் ஒருமுறை சொன்ன கதைகளை நினைத்துப் பார்த்தாள். முதன்முறையாக அவனுடைய வார்த்தைகளில் உண்மை தெரிந்தது, ஆனால் அது மிகவும் தாமதமானது என்று அவள் அறிந்தாள். அவள் இழந்த காதல் திரும்ப வராது, ஏனென்றால் மதியழகன் அவன் வார்த்தைக்கு உண்மையாக இருந்ததால் - அவன் போய்விட்டான், அவளுடைய விருப்பங்களின் எடையை அவளே சுமக்க விட்டு. இளநிலா அவனைக் கண்டுபிடிக்க முயன்றாள், பழைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அணுகினாள், ஆனால் அவன் எங்கிருக்கிறான் என்று யாரும் சொல்லவில்லை. அவள் விலாசம் தெரியாவிட்டாலும் கடிதங்களை எழுதினாள், ஒவ்வொன்றும் அவளது வருத்தத்தையும் ஏக்கத்தையும் எதிரொலித்தது, அவன் தன்னை மன்னித்து திரும்பலாம் என்ற நம்பிக்கையில். ஆனால் அவளுடைய கடிதங்கள் அனுப்பாமலே இருந்தன. அவள் அமைதியாக அழுது கொண்டு இருந்தாள். அவன் தொலைந்து போனதால் அல்ல, அவனை விரட்டியதால் அவன் தன் வாழ்க்கையை விட்டுப் போய்விட்டான் என்பதை மெதுவாக உணர்ந்ததால் . காலப்போக்கில் இளநிலா மாறினாள். அவள் ஆழமற்ற நட்பை விட்டுவிட்டு, பொருள் செல்வத்திற்கான ஆசையை விட்டுவிட்டாள். உண்மையான அன்பின் மதிப்பையும் மேலோட்டமான ஆடம்பரங்களின் வெறுமையையும் அவள் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். இறுதியில், இளநிலா அவனது நினைவை அவளுடன் சுமந்து தனிமையில் வாழக் கற்றுக்கொண்டாள். ஆனால், அவள் என்றும் தன்னை நொந்துகொண்டே இருந்தாள். அவள் வாய் " என்னைத் தேடாதே" என்ற அவனின் இறுதி வார்த்தையை முணுமுணுத்தாலும், அவள் இன்னும் அவனைத் தேடிக்கொண்டே இருக்கிறாள்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  23. சிவஞானம் சரியான "ரியூப் லைற்" போலை இருக்கு. தமிழரசு கட்சியை பிழக்க... சுத்துமாத்து சுமந்திரன் சதி செய்வது, இப்பதான் இவருக்கு தெரிந்து உள்ளது என்றால்... எப்படிப்பட்ட "அறிவாளியாக" இவர் இருந்திருக்கின்றார்? இதுவரை... சுத்துமாத்து சுமந்திரனின் தான்தோன்றித்தனமான, தரக்குறைவான செயல்பாடுகளுக்கு... கோவில் மாடு மாதிரி தலை ஆட்டிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர் சிவஞானம், மற்றவர் செயலாளர் சத்தியமூர்த்தி. யாழ். களத்திலேயே... இவர்களின் சுத்துமாத்து சுமந்திரன் சார்பு செயல்பாடுகள், 75 வருட பாரம்பரியம் கொண்ட தமிழரசு கட்சியை, நடுத்தெருவில் நிறுத்தும் என்று பலராலும், பலமுறை எழுதப்பட்டுள்ளது. இது... அனைத்தும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இவருக்கு இப்போ தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்வது...? தாழும் கப்பலில் இருந்து தாங்கள் தப்பிக்க.. கடைந்தெடுத்த கடைசி அயோக்கியத்தனம்.
  24. ESPN UK · Suivre rpenostSdo30fa82hull521h7fm93301t2f93027maf502t4fm 2m58l4gi7 · Christmas mood
  25. தலைப்பையும்…. முதல் பந்தியையும் வாசித்து விட்டு கருத்து எழுதினால் இப்பிடியான பிழை வரத்தான் பார்க்கும். 😂 🤣 தவறுக்கு வருந்துகின்றேன் நியாயம் & சாத்தான். 🙂 உங்களுக்குத்தான்… பிரச்சினை சரியாக விளங்கியிருக்கு. 😁 😂 🤣
  26. இந்தப்பிரதேச விடுவிப்புக்கு பலர், தாமே காரணமென உரிமை கோரியிருந்தனரே? யாரோ செய்யும் செயல்களுக்கு தாம் உரிமை கோருவது, தாம் செய்யும் தவறுகளுக்கு மற்றவரை குற்றம் சுமத்துவது கையாலாகாதவரின் செயல்! ஒருவருடைய பாதிப்புகளையும் வலிகளையும் அதே பாதிப்புகளை அனுபவித்தவராலேயே முழுமையாக அடையாளம் கண்டு தீர்வை பெற முடியும். வெறும் பதவிகளுக்காக வருபவர்கள் அதன் பின்னாலேயே அலைவர். இனிவருங்காலத்தில் இப்படியானவர்களை மக்கள் இனங்கண்டு அரசியலுக்கு கொண்டுவரவேண்டும்.
  27. எந்தத் திருடனும் நீ திருடன் தானா என்று கேட்டால் ஒத்துக்கொள்ளமாட்டான்! இருக்கு என்ன விந்தை இருக்கின்றது!
  28. 48 ஆவது நிமிடத்தில் பாருக்கான(Bar) கேள்வி உதயனால் கேட்கப்டுகிறது.
  29. இதுதான் உண்மையும் குரங்கை விட மனிதனுக்கு குரங்குப்புத்தி அதிகம் அதிலும் அரசியல் வாதிகளுக்கு சொல்ல தேவையில்லை. பிரச்சினைகளுக்கு மேலே பெரிய கோடு போடுவது நேற்று ஒரு காணொளி பார்த்தேன் குவைத்தில் அதிகமாக இறங்கியுள்ள தேங்காய்கள் அத்தனை பொதிகளிலும் முத்திரை குத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என அது மட்டுமல்லாமல் நோய் தாக்கியது நோயை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமுமே பொறுப்பு. தற்போது குரங்குகளுக்கு தனி தீவாம் அனுப்ப வேண்டியது குரங்குகளை அல்ல
  30. விமானம் பறவைகள் கூட்டத்துடன் மோதுண்டதாகவும், இதனாலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் ஒரு செய்தியில் பார்த்தேன். பறவைகள் கூட்டத்துடன் மோதுண்டு பின்னர் நியூயோர்கில் ஆற்றில் இறக்கப்பட்டு ஒரு விமானம் முன்பு தப்பியது.
  31. தொடரின் இறுதி அத்தியாயம் : திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதியை தமிழினச் சுத்திகரிப்புச் செய்த இலங்கையரசு தமிழ்ப் போராளிகளால் சிங்களவர்கள் (ஆயுதம் தரித்தவர்கள் உட்பட‌) மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலான மிகிந்தபுர - தெகிவத்தை ஆகிய குடியேற்றக்கிராமங்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரசு புத்தக வடிவில் பட்டியலிட்டு வெளியிட்டிருந்தது. வைகாசி 30 ஆம் திகதி ஊ.கா.படையினர் மீது நடத்தப்பட்ட‌ இத்தாக்குதலை "5 சிங்கள அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று அது செய்தி வெளியிட்டிருந்தது. இத்தாக்குதலினை டெலோ அமைப்பு நடத்தியிருந்தது. தமிழ் மக்களைப் படுகொலை செய்தும் அவர்களின் வீடுகளை எரித்தும் அட்டூழியம் புரியும் ஊர்காவற்படையினருக்குத் தண்டனையாகவே இத்தாக்குதலை நடத்தியதாக டெலோ போராளிகள் சிங்களவரிடம் தெரிவித்திருந்தனர். ஐந்து சிங்கள ஊர்காவற்படையினர் மீதான டெலொ அமைப்பின் தாக்குதலினை அப்பாவிச் சிங்கள மக்கள் மீதும், குடியேற்றக் கிராமங்கள் மீதுமான தாக்குதலாகக் காண்பிப்பதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் மீதமாயிருக்கும் புராதன தமிழ்க் கீராமங்களில் இருந்து தமிழர்களை படுகொலை செய்தோ, அடித்து விரட்டியோ ஆக்கிரமிப்பதுதான் இலங்கையரசின் நோக்கமாக இருந்தது. தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவரான சம்பந்தன் 2002 இல் பாராளுமன்றத்தில் பேசும்போது பாரம்பரிய தமிழ் விவசாயக் கிராமமான கிளிவெட்டியில் ஜெயவர்த்தன காலத்து அரச பயங்கரவாதத்தின் கோரச் சுவடுகள் இன்றும் காணப்படுவதாகவும், மிகுந்த விளைச்சல் தரும் கிராமமான கிளிவெட்டியினை ஜெயவர்த்தனவின் அரசும் இராணுவமும் இணைந்து சுடுகாடாக வெறும் 48 மணித்தியாலத்தில் மாற்றிவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீளவும் அவர்களின் வாழிடங்களுக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சம்பந்தன், அப்பகுதிகளுக்கான தனது அண்மைய பயணத்தின்பின்னரே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "எரிந்து சாம்பலாகக் கிடக்கும் வீடுகள், நெற்களஞ்சியசாலைகளின் துருப்பிடித்த இரும்புச் சட்டங்கள், பால் சேகரிக்கும் நிலையத்தின் வெற்றுக் கூட்டுக் கட்டிடம் ஆகியன எமக்குக் கூறும் செய்தி என்னவெனில் ஒருகாலத்தில் இக்கிராமம் செல்வச் செழிப்புடன் வசதியாக இருந்திருக்கிறது என்பதையும், இன்றோ அது மனித நடமாட்டமில்லாத சுடுகாடாக ஜெயவர்த்தன அரச பயங்கரவாதத்தினால் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதும்தான்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார். மட்டக்களப்பு - திருகோணமலை கடற்கரையோர நெடுஞ்சாலையில் , மட்டக்களப்பிலிருந்து வடக்காக 85 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் புராதனத் தமிழ்க் கிராமம்தான் கிளிவெட்டி. கிளிவெட்டிக்குத் தெற்காக நூறுவீதம் சிங்களக் குடியேற்றவாசிகளைக் கொண்ட அல்லைச் சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிளிவெட்டியில் வட மேற்குப் புறத்தில் இன்னும் இரு சிங்களக் குடியேற்றக் கிராமங்களான டெஹிவ‌த்தையும், நீலபொலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிளிவெட்டிக் கிராமம் மீதான தாக்குதல் 1985 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதி ஆரம்பமானது. அருகிலிருக்கும் சிங்களக் கிராமமான சேருநுவர பகுதியில் இருந்து புறப்பட்ட பொலீஸாரும் ஊர்காவற்படையினரும் கிளிவெட்டியின் தெற்குக் கரையிலிருக்கும் தங்கநகர் ஊடாக கிராமத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான 50 வீடுகளைத் தீக்கிரையாக்கிய பொலீஸ் - ஊர்காவற்படை அணியினர் பெண்கள் உடபட 37 தமிழர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்றனர். முதலில் பொலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் பின்னர் கந்தளாயிற்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். பின்னர் அல்லை - கந்தளாய் வீதியில், மகாவலி ஆற்றின் மதவு கடந்து சாம்பல்ப்பிட்டியில் வாகன‌ங்களை நிறுத்தி, 36 தமிழர்களை அவ்விடத்திலேயே சுட்டுக் கொன்று உடல்களை வீதியில் வைத்து எரியூட்டினார்கள். சின்னவன் எனப்படும் இராசைய்யா சூட்டுக் காயங்களுடன் ஓடித் தப்பிக்கொண்டார். அருகிலிருந்த பற்றைக் காடுகளுக்குள் ஓடி ஒளித்துக்கொண்ட அவர் பின்னர் திருகோணமலையினை வந்தடைந்தார். அந்தநாள் இரவு கிளிவெட்டிக் கிராமத்தின் பெரும்பாலான தமிழர்கள் அச்சத்தினால் திருகோணமல நகருக்கு அருகில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமங்களான பச்சனூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார்கள். சில வயது முதிர்ந்தவர்கள் மட்டும் தம்மை சிங்களவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை என்கிற எண்ணத்தில் கிளிவெட்டியிலேயே இருக்க முடிவுசெய்தார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக ஆனி 1 ஆம் திகதி மீண்டும் கிளிவெட்டிக்குள் நுழைந்த பொலீஸாரும் ஊர்காவற்படையினரும் மீதாமக‌விருந்த முதியோர் அனைவரையும் சுட்டும் வெட்டியும் கொன்றார்கள்.அன்று தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்கள் டெலோ அமைப்பினரால் ஐந்து ஊர்காவற்படையினர் கொல்லப்பட்ட சிங்களக் குடியேற்றமான தெகிவத்தையைச் சேர்ந்தவர்கள். பிற்பகல் 2 மணிக்கு இராணுவமும், பொலீஸாரும், ஊர்காவற்படையினரும் இணைந்த கும்பல் கிளிவெட்டிக்குள் நுழைந்தது. தங்கத்துரையின் மாமனாரான மயில்வாகனம் கனகசபை கிளிவெட்டியை விட்டு வெளியேறிச் செல்லாது அங்கேயே தங்கிவிட்ட முதியவர்களில் ஒருவர். அன்று மர நிழலின் கீழிருந்து இன்னொரு முதியவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தொலைவில் ஆயுதம் தரித்த இராணுவத்தினரும், பொலீஸாரும், ஊர்காவற்படையினரும் பெருத்த ஆரவாரத்துடன் வருவதைக் கண்டிருக்கிறார். இக்கும்பலைக் கண்டதும் உடனடியாக ஓடிச்சென்று வைக்கல்க் குவியல் ஒன்றின்பின்னால் அவர் ஒளிந்துகொண்டார். ஆனால் அவரைக் கண்டுவிட்ட அக்கும்பல், அவரை வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்றது. மேலும் நான்கு வயது முதிர்ந்த பெண்கள் உட்பட ஒன்பது முதியவர்களை அக்கும்பல் கொன்றது. கொல்லப்பட்ட பெண்களின் பெயர்கள் வருமாறு : கமலா ராசைய்யா (முதல்நாள் இரவு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய ராசைய்யாவின் துணைவியார்) மற்றும் அவரது மகள், ராஜ ராஜேஸ்வரி அம்மாள்(கிளிவெட்டி சைவக் குருக்கள் சுப்பிரமணிய சர்மாவின் மனைவி) அவரது மகள் பிரசாந்தி. அன்றும் 125 வீடுகளை இராணுவத்தினரும், பொலீஸாரும், ஊ.கா.படையினரும் எரியூட்டினர். கிளிவெட்டியில் மீதமாயிருந்த 3 முதிய தம்பதிகள் உட்பட 13 தமிழர்களை அவர்கள் இழுத்துச் சென்றனர். அவர்களுள் 5 இளவயது ஆண்களும், 3 இளம் பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரையும் தெகிவத்தைக்கு அவர்கள் இழுத்துச் சென்றனர். ஆண்கள் அனைவரினதும் உடைகளைக் களைந்த அக்கும்பல் அவர்களைச் சுட்டுக் கொன்றது. ஒரு உடல் மரத்தில் நிர்வாணமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டது. மீதமாயிருந்த இளம்பெண்கள் மூவரையும் அக்கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திக் கொன்றது. அன்றைய நாட்களில் திருகோணமலையில் தங்கியிருந்த தங்கத்துரை லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியாளர் சைமன் விஞ்செஸ்ட்டருடன் கிளிவெட்டிப் படுகொலைகள் குறித்துப் பேசினார். லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை அறிக்கையினூடாக கிளிவெட்டிப் படுகொலைகள் சர்வதேசத்திற்குத் தெரியவேண்டி வந்தது. அதுலத் முதலி கிளிவெட்டிப் படுகொலைகள் குறித்த சர்வதேசச் செய்திகளை மறுத்தபோதிலும் அவரது மறுப்பை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கத்துரை பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார் என்று குற்றஞ்சுமத்தி அவரைக் கைதுசெய்துவிட‌ லலித் ஆயத்தமாகி வருகிறார் என்கிற செய்திகள் கசியத் தொடங்கியதும் தங்கத்துரை தமிழ்நாட்டிற்குச் சென்று அடைக்கலம் தேடிக்கொண்டார். மறுநாளான ஆனி 2 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியை 10 ஆவது மைல்க் கல்லிற்கு அருகாமையில் காத்திருந்த ஊ.கா.படையினர் மறித்தனர். மறிக்கப்பட்ட பஸ்ஸை அருகிலிருந்த காட்டிற்குள் அவர்கள் ஓட்டிச் சென்றனர். பெண்கள் உட்பட 13 தமிழ்ப் பயணிகளை அவர்கள் சுட்டுக் கொன்றனர். அடுத்துவந்த இருநாட்களான ஆனி 3 ஆம் 4 ஆம் திகதிகளில் கிளிவெட்டி மற்றும் மூதூர் ஆகிய கிராமங்களுக்கிடையில் வாழ்ந்துவந்த தமிழர்களை முற்றாக வெளியேற்றும் நோக்குடன் பாரிய இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று அரசால் முடுக்கிவிடப்பட்டது. இப்பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு குறைந்தது 35 தமிழர்களை இராணுவத்தினரும், ஊ.கா.படையினரும் கொன்று குவித்தனர். இத்தாக்குதலின்போது 200 தமிழர்கள் காணாமற் போயிருந்தனர் என்பதுடன் இன்றுவரை அவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இவ்விரு தினங்களிலும் அரச படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய அழித்தொழிப்பு நடவடிக்கை குறித்து தகவல்களைச் சேகரித்த சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களில் ஒன்று குறைந்தது 1,000 வீடுகளாவது இராணுவத்தாலும் ஊ.கா.படையினராலும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தது. மேலும் இங்கு வாழ்ந்துவந்த தமிழர்களில் 2500 பேர் மூதூரில் அடைக்கலம் தேடி ஒளிந்திருந்த நிலையில் இன்னும் 1,000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஓடி ஒளித்துக்கொண்டுள்ளதாக அது மேலும் தெரிவித்திருந்தது. இந்த அழித்தொழிப்பு இராணுவ நடவடிக்கையினூடாக திருகோணமலை மாவட்டத்தில் வேறொடு பிடுங்கி எறியப்பட்ட தமிழ்க் கிராமங்களாவன‌, மேன்காமம், கங்குவெளி, பாலத்தடிச்சேனை, அரிப்பு, பூநகர், மல்லிகைத்தீவு, பெருவெளி, முன்னம்போடிவத்தை, மண‌ற்சேனை, பாரதிபுரம், லிங்கபுரம், ஈற்சிலம்பற்றை, கருக்கல்முனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, மற்றும் வாழைத்தோட்டாம் ஆகியனவாகும். திருகோணமலை மாவட்டத்தில் வைகாசி 23 ஆம் திகதியிலிருந்து ஆனி 4 ஆம் திகதி வரை இலங்கை அரசால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்திவந்த ராஜன் ஜூல், குறைந்தது 145 தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கான சான்றுகள இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் 5 சிங்கள ஊ.கா. படையினரும் இக்காலப்பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் அரசு வெளியிட்ட பொதுமக்கள் படுகொலைகள் பட்டியலில் டெலோ அமைப்பினரால் கொல்லப்பட்ட ஐந்து ஊ.கா.படையினரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. கொல்லப்பட்ட தமிழர்கள அனைவரியும் அரசாங்கம் "பயங்கரவாதிகளின் பட்டியலில்" சேர்த்துவிட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு தமிழ் மகனையும், மகளையும் பயங்கரவாதி என்று சந்தேகிப்பதனூடாக, அவர்களை, அவர்களது பூர்வீகத் தாயகத்திலிருந்து பலவந்தமாக விரட்டியடிப்பதன் மூலம் "தமிழ்ப் பயங்கரவாதத்தினை" முற்றாக ஒழித்துவிடலாம் என்று அனைத்துச் சிங்கள அரசாங்கங்களும் எண்ணிச் செயலாற்றி வந்தன. முற்றும் ! *********************************************************************************************************** குறிப்பு : இத்துடன் இத்தொடர் முற்றுப்பெருகிறது. திரு சபாரட்ணம் எழுதிவந்த இத்தொடர் 2005 ஆம் ஆண்டு தவிர்க்கமுடியாத காரணங்களினால் இடைநடுவே நின்றுவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் திரு சபாரட்ணம் அவர்களும் இயற்கை எய்திவிட்டதனால் இத்தொடரை முழுமையாம தமிழ்ச் சங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் தமிழ்ச் சங்கம் சில பகுதிகளை தொழிநுட்பக் காரணங்களால் இழந்துவிட்டது என்றும் கூறப்பட்டது. ****************************************************************************************************************** நன்றிகள்: ஈழப்பிரியன் அண்ணா, நொச்சி, விசுகு அண்ணா மற்றும் தொடர்ச்சியாக எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
  32. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது பழிவாங்கற்தாக்குதல்களை நடத்திய அரச படைகள் சிங்களப் பொதுமக்கள் மீது புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதலான அநுராதபுரத் தாக்குதலுக்குப் பழிவாங்கலாக அரசாங்கம் மேலும் பல படுகொலைகளை நடத்தியிருந்தது. அநுராதபுரம் மீதான புலிகளின் தாக்குதல் நடைபெற்று அடுத்து வந்த மூன்று தினங்களில் தமிழர் தாயகத்தில் பல படுகொலைகளை அரசு நடத்தியது. அவற்றுள் முதலாவது 48 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட குமுதினிப் படகுப் படுகொலை. வைகாசி 15 ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குமுதினிப் படகில் பயணம் செய்த பெரும்பாலான தமிழ் மக்களை கடலில் இடைமறித்த கடற்படை, வாட்களாலும், கோடரிகளாலும் வெட்டிக் கொன்றது. குமுதினிப் படுகொலை நடத்தப்பட்டு இருநாட்களின் பின்னர் கிழக்கின் நற்பிட்டிமுனையில் 42 தமிழ்ப் பொதுமக்களை விசேட அதிரடிப்படை படுகொலை செய்தது. நற்பிட்டிமுனைப் படுகொலைகள் குறித்த தமது அதிருப்தியினை இந்திய அதிகாரிகள் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கியநாடுகள் மனிதவுரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் எழுப்பியிருந்தனர். இக்கூட்டத்தொடரின் முடிவில் இப்படுகொலை குறித்து ஆராய விசேட பிரதிநிதியாக பாக்ரே வாலி நிடியே எனும் அதிகாரியை ஆணையம் நியமித்தது. இலங்கைக்கான தனது பயணத்தின் நிறைவில் இதுபற்றிய அறிக்கை ஒன்றினை அவர் தந்திருந்தார். 1985 ஆம் ஆண்டு வைகாசி 17 ஆம் திகதி கல்லடி விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து நற்பிட்டிமுனை நோக்கி ரோந்துசென்ற விசேட அதிரடிப்படையினர், அப்பகுதியில் இருந்து 23 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து முகாமிற்கு இழுத்துச் சென்றபின்னர், அவர்களுக்கான புதைகுழிகளை வெட்டுமாறு பணித்தனர். குழிகள் வெட்டி முடிக்கப்பட்டதும் அவற்றினருகில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு தகவல் தந்தார் என்கிற காரணத்திற்காக கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவர் போல் நல்லநாயகம் கைதுசெய்யப்பட்டு, அரசிற்கும், இராணுவத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் முகமாக பொய்வதந்திகளை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்குகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். 1986 ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் போல் நல்லநாயகம் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது படுகொலை செய்யப்பட்ட 23 இளைஞர்களினதும் விபரங்கள் வெளிப்படையாகவே பலராலும் சாட்சியமாக வழங்கப்பட்ட போதிலும் நீதித்துறையோ, அரசோ அதனைச் சட்டை செய்யவுமில்லை, குற்றவாளிகளைத் தண்டிக்கவுமில்லை. ஆனால் 1986 ஆம் ஆண்டு ஆடி 17 ஆம் திகதி அனைத்துக் குற்றச்சட்டுக்களிலிருந்தும் போல் நல்லநாயகத்தை அரசு விடுதலை செய்திருந்தது. இதன்படி படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்பதும், காணமலாக்கப்பட்டவர்களை விசேட அதிரடிப்படையினர் ஒருபோதும் கைதுசெய்திருக்கவில்லை என்பதே அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிரடிப்படையினரால இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் போதுமானளவு இருந்தபோதும், கல்லடி இராணுவ முகாமிற்குள் அவர்கள் கொண்டுசெல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சியங்கள் இருந்தபோதும் இன்றுவரை அவர்களது காணாமற்போதலினை விசாரிக்கவோ அல்லது பொறுப்பானவர்களைத் தண்டிக்கவோ காவற்றுரை மறுத்தே வருகின்றது என்பது குறிப்ப்டத் தக்கது. குமுதினிப் படகுப் படுகொலையினையும் அரசு விசாரிக்க முன்வரவில்லை. அநுராதபுரத் தாக்குதலையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம், விமானப்படை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ஊர்காவற்படை ஆகியன‌ தமிழ் மக்கள் மீது அடுத்தடுத்து பல படுகொலைகளை அரங்கேற்றியிருந்த போதிலும் இவற்றுள் எவையும் இன்றுவரை விசாரிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத் தக்கது. அதிகார பலத்தின் அகங்காரம் எனும் நூலினை எழுதிய ராஜன் ஹூல், இக்காலப்பகுதியில் அரச படைகளால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளை திகதிவாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார். திருகோணமலை மாவட்டத்தில் அரசால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து தனக்கு அறிக்கையொன்றினைத் தருமாறு இந்தியப் பிரதமர் ரஜீவ், அம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையிடம் கோரியிருந்தார். அவ்வாறு அவரால் சேகரிக்கப்பட்ட விடயங்களை அவரது சகோதரர் பாக்கியத்துரை ஊடாக ராஜன் ஹூல் பெற்றுக்கொண்டே தனது புத்தகத்தில் இவற்றினைப் பட்டியலிட்டிருந்தார். திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் மீதான பழிவாங்கும் தாக்குதல்களை வைகாசி 23 ஆம் திகதி இராணுவம் ஆரம்பித்தது. அன்று இராணுவத்தினரால் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரின் புதல்வன் கங்காதரன் உட்பட எண்மர் படுகொலை செய்யப்பட்டனர். கங்காதரன் கொல்லப்பட்ட நிகழ்வை அவரது துணைவியார் சரஸ்வதி, ஏ.எப்.பி செய்தியாளரிடம் பின்வருமாறு தெரிவித்திருந்தார். "எமது கேட்டிற்கு இருவர் வந்திருந்தனர். ஒருவர் சீருடை அணிந்திருந்தார். அவர் ஒரு இராணுவ வீரனாக இருக்கலாம் என்று அனுமானித்தேன். அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது, சீருடை தரித்த இராணுவத்தினன் எனது கணவரின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து அழுத்திச் சுட்டார். எனது கணவர் அவ்விடத்திலேயே மல்லாந்து பின்புறமாக‌ விழுந்தார். பின்னர் அந்த இராணுவத்தினன் என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பவும், நான் எனது இரு குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினேன்" என்று கூறினார். கங்காதரன் செய்த ஒரே தவறு அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு ஆதரவு அளித்ததுதான். ஏனைய ஏழு தமிழர்களும் அவர்களது வீடுகளுக்குள் நுழைந்த இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். இப்படுகொலைகளின் ஒரே நோக்கம் உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமான நிலாவெளியில் இருந்து தமிழர்களை அடியோடு அடித்து விரட்டுவதுதான். மறுநாள், வைகாசி 24 ஆம் திகதி திருகோணமலை நகரின் மேற்கில் அமைந்திருக்கும் தமிழ்க் கிராமமான பன்குளத்தில் ஒன்பது தமிழர்களை விமானப்படையினர் சுட்டுக் கொன்றனர். முதியவரான தாமோதரம்பிள்ளை, அவரது துணைவியார் பரமேஸ்வரி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், 65 வயதுடைய அபிராமி பாண்டியையா, வள்ளி மாரிமுத்து மற்றும் 2 வயது நிரம்பிய பாலகன் ஜெயபாலன் ஆகியோரும் அன்று கொல்லப்பட்டவர்களுள் அடங்கும். அரசாங்கத்தின் புதிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த சிங்கள ஊர்காவற்படையினரும் அன்றைய நாளில் படுகொலைகளில் ஈடுபட்டனர். மூதூர்ப் பகுதியின் கொட்டியார் குடா பகுதியில் நுழைந்த சிங்கள ஊர்காவற்படையினர் தமிழர்கள் மீது தாக்குதலில் இறங்கினர். மேலும் கங்குவெளியில் இருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய தெகிவத்தைச் சந்திக்குச் சென்ற இரு தமிழர்களைக் கொன்ற அவர்கள் அவர்களின் உடல்களை அடையாளம் தெரியாது எரியூட்டினர். மறுநாளான வைகாசி 25 ஆம் திகதி, அல்லையில் அமைந்திருக்கும் லிங்கபுரத்திலிருந்து கங்குவெளிக்கு தமது உறவினர்களைக் கொண்டாட்டம் ஒன்றிற்காக அழைக்கச் சென்ற தகப்பன் ஒருவரும் அவரது 12 வயது மகனும் சிங்கள ஊர்காவற்படையினரால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டு கங்குவெளிக்குளத்திற்கருகில் புதைக்கப்பட்டனர். மறுநாளான வைகாசி 26 ஆம் திகதி மிகிந்தபுர இராணுவ முகாமில் இருந்து வெளியே வந்த சிங்கள ஊர்காவற்படையினர் தமிழர்களின் கிராமங்களான பூநகர் மற்றும் ஈச்சிலாம்பற்றை ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்து 40 வீடுகளைத் தீக்கிரையாக்கினர். ஆனால் கொழும்பில் செய்தி வெளியிட்ட அரசாங்கம், மிகிந்தபுரவில் சிங்களவர்களின் 40 வீடுகளைத் தமிழர்கள் எரித்துவிட்டதாகச் செய்தி பரப்பியிருந்தமை அரசாங்கத்தால் செய்திகள் எந்தளவு தூரத்திற்கு புனையப்பட்டு, திரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருந்தது. அதேநாள் அல்லையின் லிங்கபுரத்திலிருந்து காட்டிற்கு வேட்டைக்குச் சென்ற நான்கு தமிழர்களைக் கொன்ற ஊர்காவற்படையினர் அவர்களின் உடல்களை உருத்தெரியாது அழித்துவிட்டனர். அல்லை கந்தளாய் வீதியில் உலாவரும் ஊர்காவற்படையினரே இப்படுகொலைகளிச் செய்வதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டியபோதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நாள் மாலை மூதூரின் கூனித்தீவு ஏரியில் மூன்று தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். வைகாசி 27 ஆம் திகதி மட்டக்களப்பு மூதூர் வீதியூடாகப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியை மிகிந்தபுர பகுதியில் வழிமறித்த சிங்கள ஊர்காவற்படையினர், சாரதியான புஸ்ப்பராஜாவையும் இன்னும் ஏழு தமிழ்ப் பயணிகளையும் பஸ்ஸை விட்டுக் கீழிறங்குமாறு பணித்தனர். பஸ்ஸின் அருகில் வரிசையாக நிற்கவைக்கப்பட்ட அவர்களில் எழுவர் ஊர்காவற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட எட்டாமவரான கிருஷ்ணபிள்ளை காயத்துடன் உயிர்தப்பினார். கொல்லப்பட்ட அனைவரினதும் உடல்களும் வீதியில் குவிக்கப்பட்டு அவர்களால் எரியூட்டப்பட்டன. ராஜன் ஹூலினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி மிகிந்தபுர மற்றும் தெகியத்தை ஆகிய திருகோணமலை மாவட்டத்தின் "அல்லை சிங்கள ஆக்கிரமிப்புப் பகுதி"யின் இரு குடியேற்றக் கிராமங்கள் மீதான போராளிகளின் தாக்குதல் நடைபெறும் நாள்வரைக்குமான எட்டு நாட்களில் மட்டும் 42 தமிழர்களை இராணுவத்தினரும், விமானப்படையினரும், ஊர்காவற்படையினரும் சேர்ந்து சுட்டும் வெட்டியும் கொன்றிருந்தனர். இவ்வாறு கொல்லப்பட்ட தமிழர்களில் பாதிப்பேர் சிங்கள ஊர்காவற்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர் என்பதுடன், தமிழர்களுக்குச் சொந்தமான பல வீடுகளும் இவர்களால் எரியூட்டப்பட்டிருந்தன.
  33. பாதாள குழுத்தலைவர் இருவ்ர் பிணையில் இருந்ததாகவும்,, இருவரும் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் ..2 நாள் முன்னம் செய்தியில் வந்தது...அதுவும் படு பயங்கர வாதிகள்..என்ன பகிடியென்றால்...தமிழர் யாராவது கைது செய்யப்பட்டால் பிணை கிடையாது....இது சிங்கள நீதி..
  34. ஆண்டவனால் நிச்சயிக்கப்பட்ட இத் திருமணத்தில் . ...........! 😂
  35. Ramanathan Archchuna 10h · புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்! இது அரசியலுக்கான பதிவு அல்ல.. ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்! பல பேருடன் கதைத்து இருக்கிறேன்.. இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்.. இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது! சற்று பொறுமையாக காத்திருக்கவும்! All r வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?எல்லாவ்ற்றுக்கும் புலம் பெயர்ந்தவர்களை இழுத்தால் அங்குள்ள அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது...இவரது இந்த விழையாட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை கூட புலம் பெயர் சமுகம் செய்யட்டும் என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்.இவர் பத்து இடத்தாலும் ஓடித் திரிகிறார் தான் இல்லை என்று இல்லை..ஆனாலும் சில கட்டுரை எழுதுபவர்களைப் போல் 'புலம் பெயர் மக்கள் மேல் மிகுந்த பாரத்தை போடுகிறார்.பிழையாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
  36. ஹா . ........ஹா . .......கேளுங்கள் .......பாருங்கள் . .......என்ன ஒரு திறமை . ......... மூக்குத்தி முருகன் . .......! 😂
  37. எம்.ஜி.ஆர் - சரோசா தேவி - யாழ்பாணம் - ஒக் - 1965
  38. 3 பெரிய மனிசர்கள் சந்தித்து இருக்கினம்...சுப்பர்😂...நானும் வந்து போனான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.