Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    2954
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46788
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/28/24 in all areas

  1. ஆறுமுகம் இது யாரு முகம்? விதியின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் சில விடயங்களை வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட முகங்களே எப்பொழுதும் எங்களைச் சுற்றி இருக்கின்றன. சில முகங்கள் எப்பொழுதாவது அபூர்வமாகத் தென்படுகின்றன. ஒரு சில முகங்கள் முன்னர் எங்கேயோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டு விலகிப் போய் விடுகின்றன. இன்னும் சில கொஞ்சக் காலம் உறவாடி விட்டு தொலைந்து போய்விடுகின்றன. இந்த முகத்தை இனி வாழ்க்கையிலேயே பார்க்கக் கூடாது என்று கோபத்தோடு சொல்ல வைக்கும் முகங்களும் கொஞ்சமாக இருக்கத்தான் செய்கின்றன. யேர்மனிக்கு நான் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் கிழக்கு-மேற்கு என யேர்மனி இரண்டாக வேறு பட்டு இருந்தது. அன்று நான் வசித்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எனது குடும்பம் மட்டும் தான் ஒரேயொரு தமிழ்க் குடும்பம். அப்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அங்கொன்று இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த நகரத்தில் கார்வண்ணர்களாக நாங்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தோம். உறவுகள், நண்பர்கள் என்று யாருமே இல்லாமல் தனித்து இருந்ததால் எந்நேரமும் அச்சம் ஒன்று என்னுடன் கலந்திருந்தது. புது இடம், பதுப் பாடசாலை, புதிய நண்பர்கள் என எல்லாமே முழுவதுமாக மாறுபட்டிருந்ததால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வெளிநாட்டவர்களுக்கு எதிரான நாசிகளிடம் இருந்த அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. அதைப் பெரிதாக்கிக் காட்டி பிள்ளைகளை அச்சங்களோடு வளர்க்க நான் விரும்பவும் இல்லை. ஆனாலும் நான் எப்பொழுதும் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். இரவில் சிறுசிறு சத்தங்களும் எனக்கு விழிப்பைக் கொண்டு வந்து விடும். பல நாட்கள் கோழித்தூக்கம் என்றாலும்கூட சில நாட்களில் நான் கும்பகர்ணனாகி விடுவேன். பகலில் செய்த வேலை அலுப்பில் அன்று ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கனவிலா நினைவிலா என்று நான் உணரும் முன்னரே எனது மனைவி என்னை உலுப்பிய வேகத்தில் எழுந்து விட்டேன். என் வீட்டுக் கதவுதான் தட்டப் பட்டுக் கொண்டிருந்தது. நித்திரைக் குழப்பம் அத்தோடு சேர்ந்து விட்ட பயம் இரண்டும் இணைந்து என்னைச் சிறிது நேரம் இயக்கம் இல்லாமல் செய்து விட்டிருந்தன. என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் நான் இருந்த பொழுது, "கதவு உடைஞ்சிடும் போல இருக்கு" என்ற எனது மனைவியின் குரல், "யோவ் எதாவது செய்" என்று என்னை எச்சரித்தது. "mach die Tür auf " (கதவைத் திற) என்று வெளியே இருந்து கர்ஜித்த குரல் மரக் கதவினூடாக புகுந்து காதுக்குள் நுளைந்து செவிப்பறையை உடைத்துக் கொண்டிருந்தது. வெளியே எத்தனை பேர்? ஒருவனா? அல்லது ஒரு குழுவா? நான் தனி ஒருவனாக எப்படி சமாளிக்கப் போகிறேன்? என்று கணக்குப் போட்டுப் பார்க்க பதட்டம் எனக்கு இன்னும் அதிகமாகிப் போனது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் வருவதை எதிர் கொள்ளத்தானே வேண்டும். மெதுவாக என்னை நானே தயார் செய்து கொள்ளத் தொடங்கினேன். முதற் கட்டமாக பொலிஸுக்கு அறிவிக்கும்படி மனைவியிடம் சொல்லி விட்டு, பிள்ளைகள் எழுந்து விடாமல் இருக்கவும் அவர்களது பாதுகாப்பைக் கருதியும் அவர்கள் அறைக் கதவுகளை சாத்தி வைத்தேன். கட்டில் மெத்தையை தாங்கும் சட்டம் ஒன்றினை எடுத்து வந்து கதவின் பக்கமாக ஒளித்து வைத்தேன். இப்பொழுது என் நினைவுக்கு வந்தவர் சாண்டோ மணியம் மாஸ்ரர். எண்பதுகளின் ஆரம்பத்தில் எனக்கு தற்பாதுகாப்பிற்கான பயிற்சி தேவைப்பட்டது. சோதி அண்ணனிடம் கராட்டி பயிற்சி எடுக்கலாம் என்று நான் எண்ணி இருந்த வேளையில் ஒருநாள் அவர் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த வீரவாகு கிட்டங்கிக்குள் அதிரடிப் படை புகுந்து சோதி அண்ணனையும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவர்களையும் அள்ளிக் கொண்டு போனது. அதன் பிறகுதான் சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் பயிற்சிகள் பெற ஆரம்பித்தேன். நான் பயிற்சிக்குப் போவது எப்படியோ எனது நட்பு வட்டத்துக்குள் கசிந்து விட்டது. "பாத்து மச்சான். கண்டபடி எக்சசைஸ் செய்யாதை. பிறகு எலும்பெல்லாம் மசில்ஸ் வைக்கப் போவுது" என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். அன்று சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் நான் பெற்ற பயிற்சியை இப்பொழுது நினைத்துப் பார்த்தேன். "உன்னை விடப் பலசாலியான ஒருவன் உன்னை வேகமாகத் தாக்க வரும் பொழுது இடது அல்லது வலது பக்கமாகவோ சற்று ஒதுங்கி அவனது கையைப் பிடித்து, அவனது வேகத்தோடு உனது பலத்தையும் சேர்த்து இழுத்து கீழே விழுத்தி விட வேண்டும். பின்னர் அவனது முதுகில் இரண்டு முழங்கால்களால் அழுத்தி அமர்ந்து கொண்டு அவனது கழுத்தை நாடியோடு சேர்த்து மேல் நோக்கி இழுத்து பிடித்துக்கொள்ள வேண்டும். அவன் திமிரும் பொழுதோ அல்லது உன்னை விழுத்தி எழும்ப முயற்சிக்கும் பொழுதோ அவனது கழுத்தை மேல் நோக்கி இன்னும் பலம் கொண்டு இழுக்க வேண்டும்" சாண்டோ மணியம் மாஸ்ரர் சொல்லித் தந்து, விளையாட்டின் போது பயின்றதை இப்பொழுது நிஜத்தில் செய்யப் போகிறேன். கதவு உடைந்து இப்பொழுது ஓட்டை விழுந்து விட்டது. ஓட்டையினூடாகப் பார்த்தேன். வெளியே ஒரேயொரு முகம்தான் தெரிந்தது. அது எனக்கு கொஞ்சம் தைரியத்தைத் தந்தது. ஆனால் நிலமைதான் அந்தப் பக்கம் தீவிரமாகப் போயிருந்தது. என்னைக் கண்டவுடன் கதவை உதைக்கும் அவனது வேகம் இன்னும் அதிகரித்திருந்தது. எவ்வளவு நேரம்தான் உதைகளைத் தாங்குவது? கதவு தன் வாழ்வை முடித்துக் கொண்டு வாய் பிழந்து நின்றது. சிங்கத்தை எதிர் கொள்ள சிறு எலி வீட்டுக்குள்ளே தயாராக நின்றது. என்ன ஆச்சரியம். முன்பு சாண்டோ மணியம் மாஸ்ரரிடம் பயிற்சி பெற்றது அப்படியே எனக்குக் கைகூடி வந்தது. நான் இழுத்து அவனைத் தள்ளி விட்ட வேகத்தில் அவன் கொரிடோரில் விழுந்து விட்டான். விழுந்தவனைப்ப பார்த்தேன். எனக்கு வசதியாக முதுகைக் காட்டிக் கொண்டு தரையில் குப்புறப் படுத்திருந்தான். சாண்டோ மணியம் மாஸ்ரரின் அடுத்த பயிற்சியும் சரியாக வந்திருந்தது. பொலிஸ் வரும் வரை அவனை இப்படியே தரையோடு அழுத்திப் பிடித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்த்தது. இதற்குள் எனது மூத்தமகனின் நித்திரையை எனது மனைவி கலைத்திருக்க வேண்டும். நித்திரைக் கலக்கத்தில் தனது அறை வாசலில் வந்து நின்றான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. ஓடிச் சென்று பொருட்கள் வைக்கும் அறையைத் திறந்து கூட்டுத்தடி எடுத்து வந்து யேர்மன்காரனின் பின் பக்கம் அடிக்க ஆரம்பித்தான். அவன் அடித்த அடிகளில் எழுபத்தைந்து வீதமானவை தரையிலே விழுந்தன. தரையில் பட்டு கூட்டுத்தடி உடைந்து போயிற்று. மீண்டும் ஓடிப் போய் அடுத்த கூட்டுத்தடியை எடுத்து வந்து மீண்டும் தரைக்கும், யேர்மன்காரனுக்கும் அடிக்க தொடங்கினான். அவனை எழுந்து தடுக்க முடியாத நிலையில் நான் இருந்தேன். அன்றைய காலத்தில் எனக்கிருந்த பொருளாதரா நிலையில் ஒரு கூட்டுத்தடி வாங்கவே யோசிக்க வேண்டி இருந்தது. மலிவாகப் போட்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு கூட்டுத்தடிகளை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வாங்கி இருந்தேன். அந்த இரண்டு கூட்டுத்தடிகளும் சிதிலமாக தரையில் இப்போ சிதறி இருந்தன. அவைகளைக் கூட்டி அள்ள இன்னும் ஒரு கூட்டுத்தடி வாங்க வேண்டிய நிலை எனக்கு வந்திருந்தது. கூட்டுத்தடிகள் முறிந்ததால் வேறு ஏதாவது கையில் சிக்காதா என என் மகன் அங்கும் இங்குமாகத் தேடிக் கொண்டிருந்தான். கதவுக்குப் பக்கத்தில் நான் ஒழித்து வைத்த கட்டில் சட்டம் அவனது கண்ணில் பட்டு விடுமோ என்ற பயம் ஒரு கணம் எனக்கு வந்து போனது. அவன் கையில் ஏதும் கிடைப்பதற்கு முன்னர் நல்ல வேளையாக பொலிஸ் வந்து விட்டது. இரண்டு போலிஸ்காரர்கள் வந்திருந்தார்கள். பொலீஸைக் கண்டதும் நான் எழுந்து கொண்டேன். யேர்மன்காரனால் எழுந்து கொள்ள முடியவில்லை. தரையிலே அப்படியே படுத்திருந்தான். இரண்டு பொலிஸும் சேர்ந்து அவனைத் தூக்கி நிறுத்தினார்கள். "Ich habe in die Hose gemacht" (காற்சட்டையோடு போயிற்றேன்) என்று பரிதாபமாக பொலீஸைப் பாரத்துச் சொன்னான். இரண்டு போலிஸ்காரர்கள் முகத்திலும் சிரிப்பு வந்து போனது. மரண பயம் வரும் போது உடல் கழிவுகளை வெளியற்றி விடும் என எனக்குத் தெரியும். அந்தப் பயம் யேர்மன்காரனுக்கு வந்திருந்தது தெரிந்தது. ஒரு பொலிஸ் அவனை கைத்தாங்கலாக வெளியே அழைத்துப் போனார். மற்றையவர் நடந்த சம்பவங்களை என்னிடம் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். வெளியே போயிருந்த பொலிஸ் தனியாகத் திரும்பி வந்தார். வந்தவர் எனக்கு ஒரு பிரசங்கமே வைத்தார். "அநேகமான யேர்மனிய ஆண்கள் வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக் களிப்பார்கள். அதற்கு Herren Abend (ஆண்களின் மாலைப்பொழுது) என்று சொல்வார்கள். வார விடுமுறை வருவதால் வெள்ளி மாலை ஆண்கள் தங்கள் வேலைக் களைப்பை மறந்து மகிழ்ந்திருக்க Bar இல் ஒன்று கூடி பியர் அருந்தி அளவளாவி களித்திருப்பார்கள். இன்று வெள்ளிக்கிழமை அதுதான் அவர் அதிகமாக குடித்திருக்கிறார். அவர் வசிப்பதும் நீங்கள் இருக்கும் இதே குடியிருப்புத்தான். மேல் மாடியில் குடும்பத்தோடு வசிக்கிறார். போதையில் வந்ததால் தன் வீடு என்று நினைத்து உங்கள் வீட்டுக் கதவை தட்டி இருக்கிறார். உள்ளே ஆள் அரவம் கேட்டும் கதவு திறக்காததால் சினம் கொண்டு பலமாகத் தட்டி இருக்கிறார். அத்தோடு ஒரு ஆண் குரலும் உள்ளிருந்து கேட்டதால், தான் "பாரு"க்குப் போயிருந்த சமயம் பாரத்து தனது மனைவி வேறு ஒருவரோடு உள்ளே இருப்பதாக தவறாக நினைத்து கதவை உதைக்க ஆரம்பித்திருக்கிறார். கதவில் ஓட்டை விழுந்த பொழுது அதனூடாக உள்ளே உங்களைக் கண்டதால் தன் வீட்டில் ஒரு ஆண் இருப்பது உறுதியாகி கோபத்தில் கதவை முழுவதுமாக உடைத்து உள்ளே வந்திருக்கின்றார். மற்றும்படி உங்களைத் தாக்கவோ அல்லது வேறு நோக்கம் கொண்டோ அவர் உங்கள் வீட்டுக் கதவை உடைக்கவில்லை. உங்களுக்கான இழப்புகளை நாளை காலையில் பேசி முடிவு செய்து கொள்ளலாம். இல்லை இதைக் குற்றமாகப் பதியத்தான் வேண்டுமானால் சொல்லுங்கள் எழுதிக் கொள்கிறோம்" என்றார். "இனி ஒரு தடவை இந்த மாதிரியான பிரச்சனை இவரால் வராது என்றால் எனக்கு சரிதான்" என்றேன். "நல்லது" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு வெளியே நின்ற யேர்மன்காரனை அவனது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். உடைந்திருந்த கதவை தற்காலிகமாக ஒரு பலகை வைத்து மூடி அன்றைய இரவு தூங்கா இரவாகக் கழித்தோம். மறுநாள் காலையிலேயே புதுக் கதவு வந்திருந்தது. உடனேயே பொருத்தி விட்டும் போனார்கள், மதியம் அளவில் அழைப்பு மணி அடித்தது, திறந்து பார்த்தால் பூங்கொத்தோடு புன்னகை தவழ யேர்மன்காரன் நின்று கோண்டிருந்தான். "மன்னித்துக் கொள். மதுபோதையில் நடந்து விட்டது. உனது வீட்டுக் கதவுக்கான செலவை நானே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது பொருத்தி இருக்கும் இந்தக் கதவு முன்னர் இருந்ததைவிட பலமானது" என்றான். "உதைத்தால் உடையுமா, மாட்டாதா என்று இன்னுமொரு தடவை வந்து முயற்சிப்பாயா?" என்று நான் கேட்ட பொழுது சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி மறுத்தான். நடந்து போன நிகழ்வை வழக்கென்று பதியாமல் விடயத்தைச் சுமூகமாக நான் முடித்தமைக்கு மீண்டும் ஒரு தடவை நன்றி சொல்லிவிட்டுப் போனான். இது நடந்து இப்பொழுது முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்றுள்ள நிலமையில் வெள்ளிக்கிழமைகளில் Herrenabend என்று ஒன்று இருக்கின்றதா என்று எனக்குத் தெறியவில்லை. அன்று கிழக்கு - மேற்கு என பிரிந்திருந்த யேர்மனி இப்பொழுது ஒரு குடைக்குள் பயணிக்கிறது. நான் யேர்மனிக்கு வந்த காலத்தில் யேர்மனியர்கள் தங்களைத் தாக்கி விடுவார்களோ என்று அகதிகளாக வந்தவர்கள் பயம் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அகதிகளாக வந்தவர்கள் தங்களை தாக்கி விடுவார்களோ என்று யேர்மனியர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் எனது இளைய மகனின் திருமணத்தின் பின் பெண் வீட்டார் தந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தோம். மகனின் மாமனார் ஒரு பொலிஸ் அதிகாரி. அதிகாரிக்கான எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாக என்னுடன் அகதிகள் பிரச்சனை பற்றி உரையாடினார். விருந்து இருபக்கமும் இருக்கின்றதுதானே? இப்பொழுது எங்களின் முறை. "நாங்கள் உங்களை விருந்துக்கு அழைப்பதற்றகான திகதியை உங்களுக்கு வசதியான நாளைப் பார்த்து நீங்களே சொல்லுங்கள்" என்றேன். சற்று ஏற இறங்க என்னைப் பார்த்து விட்டுக் கேட்டார், "பாதுகாப்புக் கருதி வீட்டுக்கு கமரா பூட்டி இருக்கிறீங்கள்தானே?“ யேர்மனியில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு வீடு உடைக்கப்பட்டு களவாடப் படுகிறது என்ற தகவலை நான் அறிந்திருக்கிறேன். அவர் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதால் நாட்டில் நடக்கும் களவுப் பிரச்சனையை மனதில் வைத்து கேட்கிறார் என்று நினைத்து, 'கமரா பொருத்தி இருக்கிறேன்" என்றேன். என் பதிலைக் கேட்டு அவரது முகத்தில் சிரிப்பு வந்து போனது. நான் நினைத்தது போல் இல்லாமல் அவரது கேள்விக்கான அர்த்தம் அடுத்து வந்த அவரது வார்த்தைகளில் புரிந்தது. "ஏன் கேட்கிறேன் என்றால் முப்பது வருசத்துக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று இன்னும் என் கண்ணில் நிற்கிறது. எனக்கும் அது போல் நடந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையிலேயே கேட்கிறேன். முப்பது வருசங்களுக்கு முன்பு, அதுதான் ஒருத்தன் கதவை உடைத்து உள்ளே வர நீங்கள் அவனை நிலத்தில் வீழ்த்தி அவன் முதுகில் ஏறி இருந்தது..., " சொல்ல வந்ததை இடை நிறுத்தி விட்டு என்னைப் பாரத்தார். "அது எப்படி உங்களுக்கு தெரியும்?“ "முப்பது வருடங்களுக்கு முன் நான் ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர். அன்று உங்கள் வீட்டுக்கு வந்த இரண்டு பொலிஸில் நானும் ஒருவன் " "ஆச்சரியமாக இருக்கிறதே, நாங்கள் முன்னரே சந்தித்துக் கொண்டவர்களா?" சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் , "எதற்கும் பெல் அடிக்கிறேன் கமராவில் பார்த்துவிட்டு கதவைத் திறவுங்களேன்" வாழ்க்கையில் பின்னாளில் சந்தித்துக் கொள்ளப் போகும் ஒருவரை எங்களை அறியாமல் முன்னரே எதேச்சையாக சந்தித்துக் கொள்கிறோம். மீண்டும் அந்த முகம் கண்ணெதிரே வந்து நின்று. "என்னைத் தெரியலையா?" என்று கேடகும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 15.09.2016
  2. ஊர் பொது கிணற்றில் சாதி வேற்றுமையால் தண்ணீர் அள்ள விடாத யாழ்பாணத்தானுக்கு இரணைமடு தண்ணி கேக்குதாக்கும். 😂
  3. ஏன் வேறு எங்கு நடத்துவதாய் ஐடியா இருந்தது? கடந்தமாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீனவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கியமாதிரி தெரியவில்லை, அதனை முதலில் செய்யுங்கள் பட்டங்களை கையில் வைத்துக்கொண்டு வேலை வேண்டுமென்று கொளுத்தும் வெயிலில் நின்று போராடும் பட்டதாரிகளுக்கு ஏதாவது வழிகாட்டுங்கள் இரண்டுநாள் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கிபோகும் யாழ்ப்பாணத்தை மீட்க நீர்நிலைகளை தூர்வாரி, வடிகாலமைப்பு செய்து மக்கள் துயருக்கு வழி காணுங்கள் சுகாதார பணியாளர்களின் வேலையை உறுதிபடுத்துங்கள் இதையெல்லாம் ஆரம்பகட்டமாகவாவது பண்ணினால் அரசாங்கம் தேசியபொங்கல் வைக்க தேவையில்லை அங்குள்ள மக்களே அரசாங்கத்தை தங்களுடன் சேர்ந்து தேசிய பொங்கல் வைக்க கூப்பிடுவார்கள். இலங்கையிலேயே இதுவரை இல்லாத புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவருகிறோம் என்று சொல்லிவிட்டு, முன்பிருந்த அரசுகள் செய்ததுபோலவே நல்லூர் கோவிலுக்கு போவது, பொங்கல் வைப்பது, தீபாவளி வாழ்த்து சொல்வதென்று பூச்சாண்டி காட்டினால் உங்கள் ஆட்சி அது வழமைபோல அனைவரும் செய்த வாயால் வாணவேடிக்கை காட்டும் ஒரு நிகழ்வுதான்.
  4. வாடியிட்டபுலம் வாடியிட்டபுலம் இயற்கை அழகு, பரவிக் கிடக்கும் வயல்வெளிகள், சுற்றிவர இருக்கும், பசுமையான காடுகள், கோடையிலும் வற்றாத குளம் கொண்ட அழகிய கிராமம். வானவில்லின் நிறங்களில் பூத்திருக்கும் வண்ணமயமான பூக்களுடன் கூடிய நெல் வயல்கள் கண்களுக்கு விருந்து படைக்கும். வயல்களுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் கதிரவன் ஒளியில் மின்னி, கிராமத்தின் அழகை மெருகூட்டுகின்றன. தென்றல் காற்று, பறவைகளின் கீச்சுக் குரல்கள் என வயல்வெளி நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணிலடங்கா. கிராமத்தின் இதயமென இருக்கும் குளம் மனிதருக்கு மட்டுமல்ல பலவித உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமே இந்த குளம் தான். வயல்வெளியில் ஓடி விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு ஒலி, குளக்கட்டில் நீச்சலடிக்கும் சிறுவர்களின் குரலோசை கிராமத்தின் அமைதியை உடைத்து மகிழ்ச்சியை பரப்புகிறது. சேந்தன் தலை நகரத்தில் உள்ள வெளி நாட்டு நிறுவனத்தில் கணனி துறையில் வேலை செய்கிறான். இக்கரைக்கு அக்கரை பச்சை போல் பலரும் வரத் துடிக்கும் அதிக வருமானம் கொண்ட தொழில். கார் வீடு என பல வசதிகள் இருந்தாலும் ஒரு நிறைவற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தான் சேந்தன். 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இளமையை தொலைத்து இரவு பகல் வேலை செய்தான். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. நகரத்தின் கொந்தளிப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ஒரு அமைதி தரும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை சேந்தனுக்கு எப்போதும் இருந்து வந்தது. ஒரு நாள் தனது பள்ளி நண்பன் மலரவனை பார்க்க அந்த அழகான கிராமம் வாடியிட்டபுலத்திற்கு புறப்பட்டான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே காதுக்கு இனிமை தரும் பறவைகளின் ரீங்காரம் சேந்தனை வரவேற்றது. கிராமம் என்றாலே இளையராஜாவின் பாடல் இல்லாமலா போகும், எங்களை போன்ற நகரத்து வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது அவரின் பாடல்களே. "வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே" . . பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு பச்ச மனசு பத்திக்கிருச்சு கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு” எங்கிருந்தோ வந்த பாடல் வரிகள் செவிக்கு விருந்தளித்தது. மலரவனை அவன் வீட்டில் சந்தித்தான். மலரவனும் உரிய முறையில் உபசரித்தான். மதிய உணவின் பின்பு மாமர நிழலில் சாக்கு கட்டிலில் சரிந்தவாறு தங்கள் பாடசாலை கதைகளை அசை போட்டார்கள். பாடசாலையில் தங்களுடன் படித்த செங்கமலம் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் கலை பீடத்தில் படித்ததாகவும், அவள் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததாகவும் சேந்தன் சொன்னான். ஒரு சிறிய இடைவெளியின் பின்பு "விதி எங்கள் வாழ்க்கையில் விளையாடியது" என்றான். அவள் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டாள், காரணம் தெரியவில்லை. அவளின் சிநேகிதி மூலமாக பல கடிதங்கள் அனுப்பினேன், பதிலில்லை என்றான். சேந்தன் பல்கலைக்கழக படிப்பை முடித்து கணனி துறையில் வேலை செய்ய தொடங்கினான். ஒரு நாள் செங்கமலத்தின் சிநேகிதி ஊடாக ஒரு கடிதம் சேந்தனுக்கு வந்தது. ஆம் அது செங்கமலத்திடம் இருந்து தான் வந்தது. படபடப்புடன் கடிதத்தை திறந்து படித்தான். அன்பின் சேந்தன், நான் நலம், நீங்களும் அது போலவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கடிதங்கள் கிடைத்தன, நான் பதில் போட முடியாத நிலையில் இருந்தேன், மன்னிக்கவும். உங்கள் உள்ள கிடைக்கைகளை தெளிவாக எழுதி இருந்தீர்கள். நீங்கள் மிகவும் நல்லவர், அன்பானவர். நான்தான் உங்களை அடைய கொடுத்து வைக்கவில்லை. கடமையா? காதலா? என்றால், என்னுள் கடமைதான் வென்றது. அன்று உங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் தேசம் காக்க புறப்பட்டுவிட்டேன். சிலவேளை இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது நான் இந்த உலகில் இருப்பனோ தெரியாது. என்னை மறந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என்றும் அன்புடன் செங்கமலம் சேந்தனின் கதையை கேட்டு மலரவன் கண்களில் நீர் பனித்தது. அவனது வீட்டு வானொலியில் ஸ்ரீனிவாஸின் பாடல் ஒலித்தது. "நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" மன்னிக்கவும் எனது சோகக் கதையை சொல்லி உன்னை அழ வைத்து விட்டேன், என்றான் சேந்தன். மூன்று நாட்கள் மலரவனுடன் தங்கி விட்டு, அவனது உந்துருளியில் அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையம் சென்றான். அவன் பேருந்து படிகளில் ஏறும் போது கால்கள் இயலாத பொண்ணு ஊன்று தடிகளுடன் இறங்க முற்பட்டாள். சேந்தன் அவளுக்கு உதவ போனான் "உங்களுக்கு சிரமம் தந்து விட்டேன் " என்றாள். எங்கேயோ கேட்ட பழகிய குரல், திரும்ப கண்களை பார்த்தான் " ஆமாம் நம்ம செங்கமலம்". தனது நண்பன் மலரவனை அழைத்தான், அவன் மனம் ஆகாயத்தில் சிறகடித்து பறந்தது. பேச்சு வரவில்லை. மலரவன் அந்த பெண் செங்கமலம் தான் என்று உறுதி செய்தான். அவள் அருகில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இருப்பதாக சொன்னாள். தனது சக தோழியை காப்பாற்ற போய் கண்ணி வெடிக்கு கால்களை இழந்ததாக சுருக்கமாக கூறினாள். சேந்தன் கண்களில் நீர் வழிந்தது. என்னவள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோசமா? இல்லை இந்த நிலையில் அவளை பார்க்கிறேன் என்ற சோகமா? நிச்சயமாக முதலாவதுதான். நகரத்தில் தனது சொத்துக்களை விற்று, தனது வேலையும் ராஜினாமா செய்தான் சேந்தன். அவளையும் அவளைப்போன்று இருக்கும் பலருக்கு தான் உதவி செய்ய போவதாக முடிவெடுத்தான். மலரவனின் உதவியுடன் வாடியிட்டபுலத்தில் 6 ஏக்கர் நிலம் வேண்டி கூட்டு பண்ணை விவசாயம் தொடங்கினான். செங்கமலத்தை சம்மதிக்க வைத்து திருமணமும் செய்தான். இன்று இவர்களின் நிழலில் பலர் வாழ்கிறார்கள். ரெண்டு மரங்கள் வைத்தவன் இன்று ஒரு தோப்பையே உருவாக்கினான். நகரத்தில் ஒரு நிறைவற்ற வாழ்க்கை வாழ்ந்த சேந்தன் இப்போ மிகவும் சந்தோசமாக வாழ்கிறான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், மரங்களுக்கு இடையே வரும் குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே தனக்கு பிடித்தவளுடன் வாழ்கிறோம் என்ற ஆத்ம திருப்தி அவனது இதயத்தை நிரப்புகிறது. முற்றும் அகஸ்தியன்
  5. ‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்! டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அரச நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வருடாந்த 1% முதல் 1.5% வரை பணத்தாள்கள் கொடுக்கல் வாங்கல்களுக்காக வீணாக செலவிடப்படுகிறது. பணத்தைப் பயன்படுத்தி செலுத்தப்படும் கொடுப்பனவுகள் மோசடி மற்றும் ஊழலை அதிகரிப்பதற்கும், பணம் செலுத்தும் செயல்பாட்டில் திறமையின்மைக்கும் வழிவகுக்கிறது. அதனால் அரச நிறுவனங்கள் அனைத்தும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளன. அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் ‘GovPay’ மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 அரசு நிறுவனங்கள் இந்த அப்ளிகேஷனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஏனைய நிறுவனங்கள் ஜனவரி முதல் இணைக்கப்படும். இந்த முன்முயற்சியானது அரசாங்கப் பணம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் பொதுச் சேவைகளின் செயல்திறன் மேம்படும். டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பது மனித உழைப்பைக் குறைக்கும், முறைகேடுகள் மற்றும் ஊழலை அகற்ற வழிவகுக்கும் என்பதுடன், பொதுமக்களுக்கு வசதியான சேவைகளை வழங்கும்.” என்றார். https://newuthayan.com/article/‘GovPay’_அப்_அறிமுகம்_–_அரச_கொடுப்பனவுகள்_அனைத்தும்_டிஜிட்டல்மயம்!
  6. அப்போது இருந்த, இப்போது இருக்கும் infant mortality rate ஐ ( சிசு மரண வீதம்)ஒப்பிட முடியுமா? சரி, அப்போது ஏன் அம்மாக்கள் / அம்மம்மாக்கள் மகப்பேறு பார்ப்பது அருகி, இல்லாமல் போய், இப்பொது சொந்த தாய் பார்க்க விருப்பம் என்றாலும், அதை தவிர்த்து, தொழில்சார் சிறப்பு தேர்ச்சி அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட வைத்தியர், தாதியர் சிசுவை சிக்கல் இன்றி, தாய் பிரசவிக்க பண்ணிய பின்பே, பிரசவித்த பெண்ணின் தயார் பராமரிப்பு இடது வந்து இருக்கிறார்? இதன் நிலையும் இப்பொது மனிதர்களுக்கு பெலே சொல்லிய நிலைக்கே வந்துள்ளது. நீங்கள் தேவை இல்லாததை ஒப்பிடுகிறீர்கள். வைத்தியர் இல்லாதது உண்மை ஆயினும், தாதிக்கு பொறுப்பு இருக்கிறது தானே? அந்த நிலையில் தாதிக்கு இருக்கும் பொறுப்பு எவ்வாறு நோயாளியை தக்க வைத்து இருப்பது, இந்த நிலைக்கு தான் படிப்பு, பயிற்சி வேண்டும். நீங்கள் சொல்லுவது பொறுப்பற்ற கதை அனால், வைத்தியசாலையில் அவ்வளவு நேரம் ஒரு மருத்துவரும் இல்லை (first inspection) என்பது உண்மையானால், அது மருத்துவ சேவையில் உள்ள பெரும் குறைபாடு (இந்த சொல்ல மிகவும் மென்மையானது நிலையை குறிக்க). மருத்துவ அல்லது தாதி துறையிலா செய்தார்? 3-4 மணித்தியாலத்தில் சாதனை செய்தார்? எவ்வாறு சாதனை செய்தார் - பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ், எலன் ... இப்படி எல்லோரும் risk ஐ எடுத்து, (அனால் அவர்களுக்கு இல்லாமல் மற்றவர்களுக்கு கொடுத்து , ஆனால் risk பொதுவாக நேரடியாக உயிரோடு அல்ல ), தான் சாதானை செய்தார்கள், அதுவும் வேறு பணமுதலைகளின் காசை (opm - other peoples' money) பாவித்து. இப்படி மருந்து கண்டுபிடிப்பது இருக்கிறது (அனால், மருத்துவ கண்டு பிடிப்பு இல்லை). (இதை விடயம் அறிந்த எல்லோரும் try பண்ணலாம். அனால், அப்படி அல்ல மருத்துவம், அதன் கண்டுபிடிப்புக்கள்) அப்படியா, மருத்துவ, தாதி துறை? பல சந்தர்ப்பங்களில் இவ்வளவு நேரம் கூட, 3-4 மணித்தியால கிடைக்காது உயிர் பிழைப்பதற்கு. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் தெரிந்தும் முடிச்சு போடுகிறீர்கள்?
  7. போதாது. சாந்திமுகூர்த்தம் முடியட்டும் பார்க்கலாம்.🧐
  8. அப்படியானால் இது வரை தமிழர்கள் செய்தது என்ன?? மூன்று மதத்தினர் வந்தபோது தமிழ் பொங்கல் தமிழர் திருவிழா. பிக்குகள் வந்தால் தேசியமா? அப்படியானால் இனி பிக்குகள் வருவர். எல்லாம் மாறும்? இனி தேசிய தைப்பொங்கல் தேசிய வருடப்பிறப்பு தேசிய தீபாவளி தேசிய சரஸ்வதி பூஜை. இது தான் தமிழ் மக்கள் கேட்ட உரிமை. நன்றி. வணக்கம். அனுராவின் தமிழர்களின் கச்சையையும் புடுங்கிவிடும் நரித்தனம்.
  9. ஆம் திடமான ஆதாரமில்லை, இன்றும் பல நாடுகளிடம் தம்மிடம் அணுகுண்டு உள்ளதென அவர்களே கூறுகிறார்கள், ஆனால் அமெரிகா போல் அதனை பயன்படுத்தி அணுகுண்டு உள்ளதென இதில் எந்த நாடும் உறுதிப்படுத்தவில்லை (அதற்காக அந்த மிலேச்சதனமான அணுகுண்டு வீச்சை நியாயப்படுத்தவில்லை), நீங்கள் கூறுவது போல இது சீன பட்டாசாக இருக்கலாம். சிறு வயதில் எனது ஆராய்ச்சி ஒன்று தவறுதலாக போய் பக்கத்து வீட்டு கூரை தீ பற்றி எரிந்தது (தீ பெரிதாக சேதம் ஏற்படுத்தவில்லை மிக சிறியளவில் நெருப்பு ஏற்பட்ட போதே அதனை எனது தந்தை அணைத்து விட்டார் பக்கத்து வீட்டு ஓலை கூரை சிறிதாக சேதம் ஏற்பட்டதாக் நினைவுள்ளது) அதனால் எனது தந்தையிடம் முறையாக வாங்கியுள்ளேன். அணுகுண்டை வீசி நாட்டை அழித்துவிட்டு, ஜப்பான் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார்களாம், ஆனால் ஆராய்ச்சி செய்த எனக்கு அடி கிடைத்தது , எனக்கு எந்த நட்ட ஈடும் எனது அயல்வீட்டிலிருந்து கிடைக்கவில்லை.😁
  10. இலங்கையிலை முந்தியெல்லாம் பெரிய, குட்டிக் குட்டி தமிழின அழிப்புகள் நடக்கிறது எல்லாரும் அறிஞ்சிருப்பியள் தானே! அப்ப நான் சின்னனாய் இருக்கேக்க ஒரு இன அழிப்பும் நடந்தது. அந்த நேரம் நாங்கள் பள்ளிக்கூட மைதானத்திலை விளையாடிக்கொண்டிருக்கேக்கை ஆகாயத்திலை ஒரு பிளேன் போய்க்கொண்டிருந்தது.அப்ப கூட நிண்ட ஒருத்தன் கேட்டான் உந்த பிளேன் எங்கையடா போகுது எண்டு.....அதுக்கு இன்னோருத்தன் சொன்னான் அடேய் உதிலை கலைஞர் கருணாநிதி கொழும்புக்கு போறார். அங்கை போய் சிங்களவரை வெருட்டி தமிழர் பிரச்சனையை தீர்ப்பார் எண்டு.... அந்த இரண்டு பேர் கதைச்சதை கேட்டு உண்மை எண்டு நம்பினவன் தான் இந்த குமாரசாமி😟
  11. உறவுகளின் சங்கமம் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில், மேரி மற்றும் பீட்டர் இருவரும் வாழ்ந்து வந்தனர். மேரி, ஒரு புத்தகப் பிரியா. கடற்கரையில் உட்கார்ந்து புத்தகங்களைப் படிப்பதே அவளது பொழுதுபோக்கு. பீட்டர், ஒரு திறமையான கலைஞர். கடற்கரையின் அழகை ஓவியங்களாக வரைவது அவனது ஆர்வம். ஒரு அற்புதமான மாலை, மேரி தனது புத்தகத்துடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தாள். அப்போது, அருகில் வந்து தனது ஓவியத்தை காட்டிக்கொண்டான் பீட்டர். அவர்களது உரையாடல் இயல்பாகவே ஆழமானது. இருவரும் ஒரே விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை அறிந்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து, அவர்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். நாட்கள் செல்லச் செல்ல, அவர்களது நட்பு காதலாக மாறியது. பீட்டர், மேரியின் புன்னகையைப் பார்க்கும்போது, அவன் இதயம் துடிப்பதை உணர்ந்தான். மேரி, பீட்டரின் கலைத் திறமைக்கு மெய் மறந்து போயிருந்தாள். அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட விரும்பினர். கடற்கரையில் நடப்பது, கலைக் கண்காட்சிகளுக்குச் செல்வது என அவர்களின் நாட்கள் மகிழ்ச்சியாக கழிந்தன. ஒரு நாள், பீட்டர், மேரியை ஒரு அழகான இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு, அவன் தனது முழங்காலில் விழுந்து மேரியை மணமுடிக்க வேண்டும் என்று கேட்டான். மேரி, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆம் என்று கூறினாள். அவர்களது திருமணம், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, மேரி மற்றும் பீட்டர் இருவரும் இணைந்து வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர். அவர்கள் ஒரு அழகான வீட்டைக் கட்டி, ஒரு குடும்பத்தை உருவாக்கினர். பீட்டர், தனது கலைப் பயணத்தை தொடர்ந்தார். மேரி, ஒரு நூலகத்தில் வேலை செய்து, தனது புத்தகப் பிரியத்தைத் தொடர்ந்தாள். அவர்கள் இருவரும், ஒன்றாக வாழ்க்கையின் அனைத்து மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் பகிர்ந்து கொண்டனர். மேரி பீட்டர் இருவருக்கும் 3 பிள்ளைகள் பிறக்கின்றன. மேரி பிள்ளைகளை வளர்க்கும் ஒரு சாதாரண தாய். அவர்களது நாளாந்த வாழ்க்கை, சவால்கள், மகிழ்ச்சிகள், கவலைகள் நிறைந்ததாக அமைகிறது. நான்காவது பிள்ளை கீத் வயிற்றில் இருக்கும் போது மேரி பீட்டர் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. மனப்பிளவு பூனையின் பாதங்களின் ஒலி போல இவர்கள் வாழ்க்கையில் புகுந்து கொண்டது. இந்த 4 வது பிள்ளை தனது பிள்ளை இல்லை என்ற காரணத்துடன் இவர்கள் மணவாழ்க்கை முறிவடைகிறது. மேரி ஒரு நாள் தனது வயிற்று பிள்ளையுடன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது ரிச்சர்ட் என்ற ஊழியரின் அறிமுகம் ஏற்படுகிறது. மேரியின் முழு கதையையும் கேட்ட ரிச்சர்ட் வயிற்றில் பிள்ளயுடன் இருக்கும் குழந்தையையும் மற்ற பிள்ளைகளும் தான் வளர்ப்பதாக கூறி தியாக மனத்துடன் அவளை திருமணம் செய்கின்றார். நாலாவது பிள்ளை கீத் பிறந்தவுடன் ரிச்சர்டை தனது அப்பா என்று கூப்பிட்டது, அவனுக்கு உண்மையான அப்பாவை தெரியாது. அதிலும் கீத் பிறக்கும் போது சிறிய குறைபாட்டுடன் பிறந்தாலும், அதே பின்னாளில் அவனின் அபார முன்னேற்றத்திற்கு வழி கோலியது. சொந்த அப்பாவை தெரியாத கீத் வந்த அப்பாவை உரிமையோடு அப்பா என்று செல்லம் பொழிந்து வளர்ந்தான் , அவரும் அவனை மற்ற 3 பிள்ளைகளை விட அதி கூடிய அக்கறையுடன் வளர்த்தார், கடைக்குட்டி அல்லவா. காலங்கள் புரண்டு ஓடியது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். தங்களுக்கு என வாழ்க்கையை உருவாக்கினார்கள். கீத் தனது துணையை தேடினார். வயது வர அவர்கள் அம்மா மேரியும் நல்ல வாழ்வு வாழ்ந்து மறைந்தார். தனித்து வாழ்ந்த ரிச்சர்ட் மேரியின் நினைப்பில் காலத்தை கழித்தார். அவரை பராமரிக்கும் முழு பொறுப்பையும் கீத் தானே எடுத்துக்கொண்டான். அவரும் அடிக்கடி உனது அம்மா தேவலோகத்தில் தன்னை இரு கரம் நீட்டி அழைப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார், இதை செவி மடுக்கும் போது கீத் கண்ணில் கண்ணீர் வரும். உண்மையான அப்பா இருந்திருந்தால் கூட என் அம்மாவை இவ்வளவு அன்புடனும் அக்கறையுடனும் பார்த்திருப்பார் என்பது சந்தேகமே. காலங்கள் கடந்து கால தேவன் தனது வேலைகளை காட்ட தொடங்கினான். இவர்களை தனியாக தவிக்க விட்டு சென்ற உண்மையான தகப்பன் பீட்டரை அவரது புது துணைவியார் சில காலங்களில் பிரிந்து சென்றார். முதுமையில் நோயை விட தனிமை அவரை ஆட்டி படைத்தது. தன் பிள்ளைகளை சந்திக்க பல தூது விட்டார், கடிதங்கள் எழுதினார். ஒருவரும் சென்று அவரை பார்க்கவில்லை. வளர்ப்பு தந்தை எவ்வளவு எடுத்து சொல்லியும் இந்த விடயத்தில் சமாதானம் ஆகவில்லை. பீட்டரின் இறுதி கடிதம் அவர் மரண தறுவாயில் இருப்பதை சொல்லியது. மூத்த பிள்ளைகள் மூவரும் தந்தை பீட்டரை பார்க்க முடிவு செய்து கீத் ஐயும் தங்களுடன் பார்க்க வருமாறு அழைத்தனர்.கீத் மறுத்து விட்டார், அவர்களிடம் தனது முகம் தெரியாத அப்பாவுக்காக ஒரு கடிதமும் கொடுத்து விட்டார். அன்பிற்குரியவருக்கு, என்னை உங்களுக்கு தெரியாது, உங்களுக்கும் என்னை தெரியாது. என்னிடம் உள்ள குறைபாட்டினால், ஒரு வேளை நீங்கள் என்னை தெரிந்திருந்தாலும் , நீங்கள் விரும்பும் பிள்ளையாய் நான் இருந்திருக்க வாய்ப்பில்லை. என்னை மூச்சுக்கு முன்னூறு தடவை தனது மகனே என்று அழைக்கும் என்னை பெறாத அப்பா, தேவலோகத்தில் தனது மனைவி அழைப்பதாக தினமும் கூறிக் கொள்ளும் ஒரு முழு வாழ்க்கையினை வாழ்ந்த ரிச்சர்ட் இவரே எனது உலகம், இவரே எனது தெய்வம். தான் பார்க்காத உலகத்தை என்னை பார்க்க வைத்தார். என் வளர்ச்சி தான் தன் வளர்ச்சி என்று வாழ் நாள் முழுக்க தியாகம் செய்த ஒரு தெய்வத்துடன் நான் எஞ்சிய காலத்தை கழிக்க விரும்புகின்றேன். உங்களுக்கு வேண்டாத பிள்ளை தெரியாமேலே இருந்து விடுகின்றேன். இதில் வன்மம் இல்லை, பழி வாங்கல் இல்லை. நான் உங்களை சந்திக்காமல் இருப்பது எதையும் மனதில் வைத்து கொண்டு சாதிப்பதாக இல்லை. என் பிரார்த்தனையெல்லாம் உங்கள் ஆத்மா நல்ல முறையில் சாந்தி அடையட்டும், அதை நான் வணங்கும் கடவுளுடன் தினமும் வேண்டுகிறேன் இப்படிக்கு கீத் 90 வயதை கடந்த ரிச்சர்ட் கீத் மற்றும் பிள்ளைகள் உறவுகள் சூழ தன்னை கை நீட்டி கூப்பிடும் ஆன்மாவுடன் சங்கமமானார். எப்படியும் வாழலாம் என்றிருக்கும் மனிதர்கள் மத்தியில் ரிச்சர்ட் என்ற ஒரு மனிதரும் தனது முழுமையான வாழ்வை வாழ்ந்தார் குறள் "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு" முற்றும் அகஸ்தியன்
  12. பாடசாலை நாட்கள் நமது வாழ்வின் அடித்தளமாக அமைகின்றன. நாம் பள்ளியில் கற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் திறன்கள் நமது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், பள்ளியில் நாம் உருவாக்கும் நட்புகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நாம் கற்றுக்கொள்ளும் அறிவு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களையும் அங்கேதான் கற்றுக்கொள்கிறோம். பள்ளியில் நாம் வெற்றி, தோல்வி, போட்டி, ஒத்துழைப்பு போன்ற பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடங்கள் நம்மை வலுவான மனிதர்களாக மாற்றுகின்றன. பள்ளியில் நாம் நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நண்பர்களை உருவாக்குகிறோம். இந்த நட்புகள் நமக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. பள்ளிக்காலம் என்பது பொறுப்புகள் குறைவாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் காலம். நண்பர்களுடன் விளையாடுவது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது என பலவும் இந்தக் காலத்தில் நிகழ்கின்றன. பள்ளிக்காலத்தில் நாம் பல அனுபவங்களைப் பெறுகிறோம். பள்ளியில் உருவாகும் நட்புகள் சில சமயங்களில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நம் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நம் நண்பர்கள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள். பாடசாலை வாழ்க்கையை முடித்து தொழில் கல்வி பயின்று கொழும்பில் வேலை செய்து கொண்டு இருந்தான் இனியவன். இந்தியன் ராணுவம் எம் நிலங்களை ஆக்கிரமித்து இருந்த காலம் அது. வீட்டில் ஒரு விசேஷத்திக்காக பல தடைகளை தாண்டி ஊர் வந்தான். திடீரென ஒரு நாள் சுற்றி வளைப்பு, அவனும் பெரிய அண்ணனும் உட்பட பல இளைஞர்களை கூடி சென்று கடைக்கரையில் உட்கார வைத்தார்கள். எல்லோரிடமும் வழக்கமாக கேட்கும் கேள்விகளை கேட்டு விட்டு தலையாட்டி முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அவனின் போதாத காலம் அவனை நோக்கி தலையாட்டியின் ஆள் காட்டி விரல் நீண்டது. சினிமாவில் விஜய் தலை ஆட்டுவது போல் மேலும் கீழும் ஆட்டினான். கதைப்பதுக்கு வார்த்தைகள் வரவில்லை அவர்களுடன் கூட்டி செல்லப்பட்டான். தென்னை மரத்தின் கீழ் இருக்க சொல்லி பணித்தார்கள். ராணுவத்துடன் சேர்ந்திருந்த சில இளைஞர்கள் முகாமில் இருந்து வெளியே நோக்கி வந்தார்கள். இளம் கன்று பயம் அறியாது என்பர். எம் நிலத்தில், மறவர்களின் கால் பதிந்த நிலத்தில் இவர்களுக்கு என்ன வேலை. இனியவன் கூனி குறுகி நிற்கிறான். "டேய் எழும்படா, நீயெல்லாம் அவர்களின் ஆக்கள் அல்லவா" என்றான் ஒருவன். ஊதி விட்டால் பறந்து விடுவான், ஆனால் அவனிடம் இடுப்பில் பொருள் இருந்தது. மரியாதையாக "இல்லை அண்ணா நான் கொழும்பில் வேலை செய்கிறேன்" என்றான் இனியவன். “உந்த பம்மாத்து கதையெல்லாம் வேண்டாம் நட முகாமிற்கு” என்றான். வக்கற்றவனாய் தான் பாடசாலை காலங்களில் பேருந்து ஏறும் தரிப்பிடத்தை ஏறெடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் மஞ்சள் நிற மேல் அங்கியுடன் ஒருவர் இவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார், இனியவனின் பெரியண்ணா தான் அவர். நட்டாற்றில் விழுந்தவனுக்கு ஒரு சிறு மர கட்டை கிடைத்த மாதிரி உணர்வு தோன்றியது. அவர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை, அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். நேரம் போக போக இனியவனின் நம்பிக்கையும் மறைய ஆரம்பித்தது. கிடைத்த மர கட்டையும் கை நழுவி போவதை உணர்ந்தான். ஒரு புறம் வேடன் என்கிற இந்திய ராணுவம் மறுபுறம் நாகம் என்கிற எங்களது நரகத்து முள்ளுகள். மானுக்கு நேரம் தேவைப்பட்டது. எடுத்துக்கொண்டு அருகாமையில் இருக்கும் தமிழ் கடவுள் கந்தவன கடவுளை நினைத்து பார்த்தான். யாமிருக்க பயமேன் என்று நெஞ்சை நிமிர்த்தி வேலுடன் முருகன் நிற்கும் காட்சி அவன் மனத்திரையில் ஓடியது. கூட வந்தவர்கள் எல்லாம் வீடு திரும்பிக்கொண்டிருக்க இன்னொரு உருவம் அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது, இம்முறை அவனால் யாரென்று அடையாளம் காணமுடிவில்லை, அவனுள் மீண்டும் சிறு நம்பிக்கை ஒளி தெரிய ஆரம்பித்தது. உருவம் கிட்ட வர வரத்தான் புரிந்தது அது சாந்தன் என்று. சாந்தன், இனியவனுடன் ஊர் பாடசாலையில் ஒன்றாக படித்த சக மாணவன். கணித பாடத்தில் தேர்ந்த இனியவன் பல்வேறு தருணங்களில் சாந்தனுக்கு கணக்கு சொல்லி கொடுத்து இருந்திக்கிறான். சில வேளைகளில் சண்டையும் பிடித்து இருக்கிறான். அவர்கள் சண்டை அவர்களுடனையே முடிந்து விடும், அவர்களே சமரசம் செய்து கொள்ளுவார்கள் . ஆசிரியர்கள் என்ற மூன்றாம் தரப்பு ஊடுருவ விட்டதில்லை. பாடசாலை முடிவில் பலரது பாதை திசை மாறி போனது. சாந்தனும் விதி விலக்கல்ல. போராட புறப்பட்டு தவறானவர்களின் இயக்கத்தில் சேர்ந்து, அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட பொழுது, தளபதியின் அறிவுறுத்தலில் ஊரில் இருந்து தனது தந்தையின் தொழிலை செய்து கொண்டிருந்தார். சாந்தன் மாற்று இயக்கத்தில் இருந்தததனால் ஊரில் நிலை கொண்டிருந்த பலரை அவருக்கு தெரியும். அவன் இனிவனின் நண்பன், அவர்களுடன் வாதாடி ஒருவாறாக இனியவனை மீட்டு அவனது பெரியண்ணயிடம் ஒப்படைத்தான். எந்த சூழ் நிலைக்கும் காலம் என்பது பதில் சொல்லும், நம்பிக்கை இழக்க வேண்டாம். குறள் “காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருதுபவர்” கலகத்திக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையே வென்று காட்டுவார்கள் முற்றும் அகஸ்தியன்
  13. அண்ணா வலு சிம்பிள்… ஊரில் நீங்கள் X என்ற ஒருவருக்கு கழிவறை கட்ட உதவ போகிறீர்கள். Y எனும் பக்கத்து வீட்டு உரிமையாளர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறுகிறார். இப்போது என்ன செய்வீர்கள்? X உடன் இணைந்து மேல் முறையீடு கோர்ட்டு கேசு என அலைவீர்களா அல்லது வேறு யாருக்கும் உதவி செய்வீர்களா?
  14. எவ்வளவுதான் வெளியில் சிரித்து வாழ்ந்தாலும் சொந்த கதைகள் சோகக்கதைகளாகவே இருக்கும். கதைக்கு நன்றி ஐயா. 🙏
  15. நினைவஞ்சலி. இந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த சர்வதேச நிதி உதவிகளை அந்த மக்களுக்கு போய் சேர்வதை அன்று தடுத்த ஜேவிபி யே இன்று ஆட்சியில். ஜே வி பி சிந்தனையில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் சிங்கள ஆட்சியாளர்களை சார்ந்தே வாழ வேண்டும் என்பதே ஜே வி பியின் சித்தாந்தம்.
  16. நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்..
  17. உண்மையைக் கதையாக... கண்களில் நீர்வழியக் கதை நகர்கிறது. படைப்புக்குப் பாராட்டுகள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? அல்லது சீதையை ஶ்ரீராமன் தொடவே இல்லையா? -பெரியார் திரைப்படப்பாடல்- நெஞ்சு கூடு கட்டும். தொய்வு வரும். கண்பார்வை மங்கும். இதெல்லாம் கூட ஓக்கே… கைரேகை அழிந்து விடும் எண்டு ஒருத்தன் மிரட்டிட்டான் பாஸ்….🤣
  19. உங்கள் தலையில் உள்ள நீண்ட, கடும் கறுப்பு நிற முடியின் ரகசியம் இது தானா அண்ணா?😄
  20. அதிசயமான நிகழ்வுகள், நன்றாக எழுதியிருக்கிறீர்கள்👍! வாழ்த்துக்கள் நானும் ஏதோ நம்ம செஞ்சொற் காவலருடையதாக்கும் என நினைத்திருந்தேன்...🙃
  21. __ நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் ) கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன் கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....! __ நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை , வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது ) தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது அதை பூவலில் (குப்பையில் ) போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........! 💪
  22. வயது வந்தவர்களுக்கு மட்டும் 1- கண்ணும் கண்ணும் பார்த்தால் கற்பம் தரிக்கும் 2- உடுப்பு மற்றும் மலசல கூடத்தின் ஊடாக பிள்ளை உருவாகும் 3- பெண்களுக்கு மாதம் 31 நாளும் பிள்ளை தரிக்கும் 4- உடலுறவு என்பது நாய்க்கொழுவலில் தான் முடியும் 5- ஒரு பெண்ணை தொட்டால் கட்டிக்க வேண்டும். (இவற்றை நம்பி தொலைச்சவை அதிகம்) இனி சிறு குழந்தைகளுக்கானது தொடரும்....🤪
  23. சில சமயங்களில் உண்மைகள் நிஜங்களைவிட சுவாரஸ்யமானவை என்று யாரோ சொல்லியிருக்கின்றார்கள் . .......உங்கள் விடயத்தில் அது முற்றிலும் உண்மை . ........அந்த வயதில் உங்களின் மூத்தமகனின் தைரியத்தையும் பாராட்டத்தான் வேண்டும் . .......! 😂
  24. 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புஷ்பா ஸ்டைலில் கொண்டாடிய நிதிஷ் குமார் ரெட்டி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணி்க்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று, நிதிஷ் குமார் ரெட்டியின் அற்புதமான சதம், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பித்தது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தநிலையில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுவதில் சாதகமான வாய்ப்பைப் பெறும் என்பதால் ஆட்டம் உச்சக் கட்ட பரபரப்பில் செல்கிறது. சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி தவறுகளை திருத்திக் கொள்வாரா? 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில் மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா? சுந்தர்-நிதிஷின் நங்கூரம் ரிஷப் பந்த்(6), ஜடேஜா (4) இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் செஷனிலேயே ரிஷப் பந்த் 36 ரன்னில் போலந்த் பந்துவீச்சிலும், ஜடேஜா 17 ரன்னில் லேயான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர். 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க 54 ரன்கள் தேவையாக இருந்தது. நண்பகல் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்திருந்தது. 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மெல்ல ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். மெல்போர்னில் நன்கு வெயில் இருந்ததால் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் நிதிஷ், சுந்தர் இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் அநாசயமாக எதிர்கொண்டு பவுண்டரிகள், சிக்ஸர் அடித்த நிதிஷ் குமார் டெஸ்டில் முதல் அரைசதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தின் இடையே இருமுறை மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. நிதிஷ் குமாருக்கு முழு ஒத்துழைப்பு தந்து பேட் செய்த சுந்தர், பவுண்டரிகள் அடிக்காமலேயே அரைசதத்தை நெருங்கினார், அரைசதம் அடித் தபோது ஒரு பவுண்டரி மட்டுமே வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க 6 பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தியும் முடியவில்லை. ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி, 96 ரன்கள் சேர்த்திருந்த போது, போலந்த் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார். 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்திருந்த போது லேயான் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த பும்ரா டக்அவுட் ஆனார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. நிதிஷ் குமார் 105 ரன்களுடன், சிராஜ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நிதிஷ் குமார் ரெட்டி 171 பந்துகளில் சதம் அடித்து, 105 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு துணையாக பேட் செய்த தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 50 ரன் எடுத்தார். 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர். பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?25 டிசம்பர் 2024 அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் ரெட்டி 116 ரன்கள் முன்னிலை ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இதுவரை 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவைவிட இந்திய அணி இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3வது நாளில் இன்று மாலை நேரத்தில் வெளிச்சக்குறைவு, மழை வருவது போல் இருந்ததால் ஆட்டம் 70 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முடிக்கப்பட்டது. எடுபடாத ஆஸ்திரேலியப் பந்துவீச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் மெல்போர்னில் இன்று வெயில் நன்றாகவே அடித்ததால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சுத்தமாக எடுபடவில்லை, பந்தும் எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை. இதனால் 2வது செஷனில் இருந்து நிதிஷ் குமார், சுந்தரைப் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பல்வேறு வகைகளில் முயன்றும் முடியவில்லை. புதிய பந்து மாற்றிய பின்பும் ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீசியும் எடுபடவில்லை. ஆடுகளத்தில் லேசான வெடிப்புகள் வரத் தொடங்கி இருப்பதால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறலாம். அப்போது நேதன் லயான், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் பெரிய துருப்புச்சீட்டாக இருக்கும். இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 அணியைக் காத்த நிதிஷ் குமார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் முகமது சிராஜ் 3வது நாளான இன்றைய ஆட்டம் முழுவதும் நிறைந்திருப்பது நிதிஷ் குமாரின் முதல் சதம், அரைசதம் அடித்து புஷ்பா பட பாணியில் அவரின் செயல், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவைதான். பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டது நிதிஷ் குமாரின் பேட்டிங்தான். அதனால்தான் தொடர்ந்து 3 போட்டிகளிலும் நிதிஷ்குமார் ரெட்டியை அமர வைக்க எந்தவிதமான காரணமும் இன்றி தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெறவும் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் காரணமாக இருந்தது. இந்த டெஸ்டில் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பிக்கவும் நிதிஷ்குமாரின் சதம் முக்கியப் பங்காற்றியது. இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் முன்னனி வீரர்கள் ரோஹித், கோலி, சுப்மான் கில், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோரின் பேட்டிங் சராசரி 30 ரன்களுக்கு கீழ் இருக்கையில் நிதிஷ் குமாரின் சராசரி 50 ரன்களுக்கு மேல் இருப்பது அவரின் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது. நிதிஷ் குமார் ரெட்டியை 8-வது வரிசையில் களமிறக்குவது சரியா அல்லது நடுவரிசையில் களமிறக்கலாமா என்று அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை சிந்திக்க வைத்துள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், போலந்த் பந்துவீச்சில் முன்னணி பேட்டர்கள் விக்கெட்டை கோட்டைவிட்டு தலைகவிழ்ந்து சென்ற நிலையில் நிதிஷ் ரெட்டி இவர்களின் பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொண்டு ஆடினார். கவர் டிரைவ், லாங் ஆனில் பவுண்டரி, புல் ஷாட் என அற்புதமான ஆட்டத்தை கம்மின்ஸ், ஸ்டார்க் பந்துவீச்சில் நிதிஷ் வெளிப்படுத்தினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி: எஃப்.ஐ.ஆர் வெளியானதால் அதிர்ச்சி - சமீபத்திய தகவல்கள்26 டிசம்பர் 2024 புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்26 டிசம்பர் 2024 கவனிக்கப்படாத ஹீரோ வாஷிங்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் இன்றைய ஆட்டத்தின் மொத்த கவனத்தையும் நிதிஷ் குமார் தனது சதத்தால் ஈர்த்துவிட்டாலும், பேசப்படாத ஹீரோ ஒருவர் இருக்கிறார் என்றால் அது வாஷிங்டன் சுந்தர்தான். நிதிஷ் குமாருக்கு துணையாக பேட் செய்து 127 ரன்கள் பார்டனர்ஷிப் அமைக்க வாஷிங்டன் முக்கியக் காரணமாக அமைந்தார். 2021ம்ஆண்டு சிட்னி டெஸ்டை வெல்ல வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் முக்கியமாக இருந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் இந்திய அணிக்கு மகுடமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அஸ்வின் ஓய்வுக்குப் பின் அணியில் தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் நிலை பல்வேறு விதங்களில் கேள்விகளை எழுப்பியது. சுப்மான் கில்லை அமரவைத்து வாஷிங்டனை தேர்வு செய்தது சரியா என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையில், தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றியுள்ளார். 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்20 டிசம்பர் 2024 ஹெட், ஸ்மித் சதம்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா - உலக டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு இந்தியா முன்னேறுமா?15 டிசம்பர் 2024 122 ஆண்டு சாதனையை முறியடித்த நிதிஷ் குமார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் மெல்போர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அணியில் 8-வது வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை நிதிஷ் குமார்(105) ரெட்டி இன்று படைத்தார். இதற்கு முன் 1902ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ரெக்கி டப் 10-வது வீரராக களமிறங்கி 102 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை நிதிஷ் ரெட்டி முறியடித்துள்ளார். இந்திய அணியில் 8-வது வரிசை அதற்கு கீழாக களமிறங்கி சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை நிதிஷ் படைத்துள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே 2008-ஆம் ஆண்டு அடிலெய்ட் நகரில் 87 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8-வது வீரராக களமிறங்கி சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் குமார் பெற்றார். இதற்கு முன் விருத்திமான் சாஹா ராஞ்சியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 117 ரன்கள் சேர்த்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் –நிதிஷ் குமார் இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3வது அதிகபட்ச பார்ட்னர்ஷிபாகும். இதற்கு முன் 2013ல் சென்னையில் நடந்த டெஸ்டில் தோனி- புவனேஷ்வர் குமார் 140 ரன்களும், 2008-ஆம் ஆண்டு சிட்னி டெஸ்டில் சச்சின், ஹர்பஜன் சேர்ந்து 108 ரன்களும் சேர்த்திருந்தனர். மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை நிதிஷ் குமார் பெற்றார். இன்று நிதிஷ் குமார் சதம் அடித்த போது அவருக்கு 21 வயது நிரம்பி 214 நாட்கள் ஆகியிருந்தது. ஆனால், இதற்கு முன் சச்சின் 18 வயது 253 நாட்களிலும் ரிஷப் பந்த் 21 வயது 91 நாட்கள் இருந்த போது சதம் அடித்திருந்தனர். மெல்போர்ன் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் பெற்றார். இதற்கு முன் 1948-ஆம் ஆண்டு மன்கட் தனது முதல் சதத்தை மெல்போர்ன் மைதானத்தில் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் 2008-ஆம் ஆண்டு கடைசியாக தென் ஆப்பிரிக்க அணியின் டுமினி தனது முதல் சதத்தை மெல்போர்னில் பதிவு செய்தார். அதன்பின் இதுவரை எந்த நாட்டு வீரரும் தங்களின் முதல் சதத்தை மெல்போர்னில் அடித்திராத நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் நிதிஷ் குமார் இங்கு முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா?26 டிசம்பர் 2024 பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸிடம் செய்த செயல் - ஐசிசி அளித்த தண்டனை என்ன?26 டிசம்பர் 2024 புஷ்பா பாணியில் கொண்டாட்டம் நிதிஷ் குமார் ரெட்டி 81 பந்துகளில் இன்று முதல் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அவரை சக பேட்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். நிதிஷ் குமார் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த மகிழ்ச்சியை புஷ்பா திரைப்பட பாணியில் பேட்டை கழுத்தில் வைத்து சீவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வர்ணனையாளர்களும் புஷ்பா திரைப்பட பாணியில் நிதிஷ் கொண்டாடுகிறார் என்று சிரித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்த போது அவரின் தந்தை முதால்யா ரெட்டி ஆனந்த கண்ணீர் வடித்தார் நிதிஷ் சதத்தை கண்டு ஆனந்தக் கண்ணீர் நிதிஷ் குமாரின் ஆட்டத்தைக் காண மெல்போர்ன் மைதானத்தில் அவரின் தந்தையும் வந்திருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி போலந்த் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில் முதல் சதத்தை பதிவு செய்ததைப் பார்த்தவுடன் அவரின் தந்தை ஆனந்தக் கண்ணீர் வி்ட்டு அழுதார். கையில் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு நிதிஷ் குமார் ஆட்டத்தை ரசித்த அவரின் தந்தையை அருகே இருந்த ரசிகர்கள் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: எஃப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவில் உள்ள 3 அதிகாரிகள் யார்?4 மணி நேரங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டம் யார் பக்கம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா இந்த டெஸ்டில் இன்னும் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியைவிட 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருக்கிறது. கடைசி விக்கெட்டுக்கு நிதிஷ், சிராஜ் களத்தில் உள்ளனர். இந்திய அணி நாளை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல் இன்னிங்ஸ் சிராஜ் விக்கெட்டை இழந்தால் முடிவுக்கு வரலாம். எப்படிப் பார்த்தாலும் 100 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இருக்கும். இந்த 100 ரன்கள் முன்னிலையை வைத்து ஆட்டத்தின் வெற்றியை ஆஸ்திரேலியா எளிதாக தீர்மானிக்க இயலும். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் நாளை முழுவதும் ஆஸ்திரேலிய அணி பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் அடித்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு இலக்கு வைத்து கடைசி நாளை முழுவீச்சில் எதிர்கொண்டால் ஆட்டத்தில் ஸ்வரஸ்யம் அதிகரிக்கும். கடைசி நாளில் ஆட்டம் யார் பக்கம் செல்லும், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து ஆட்டத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். இப்போதுள்ள நிலையில் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் நிலையில் ஆஸ்திரேலியஅணிதான் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c878wqv1nqzo
  25. 1991 ல் பொருளாதார நெருக்கடி சந்தித்த இந்தியாவில் அன்று நிதி அமைச்சராக பொறுப்பேற்ற திரு மன்மோகன் சிங் மாபெரும் மறுசீரமைப்பை( reform) செய்தவர். இந்திய பொருளாதாரத்தை சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து தாராளமயமாக்கல் பொருளாதாரமாக மாற்றிவர். உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு நாட்டைத் திறந்து விட்டார். பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா நீடித்த பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தது.
  26. சின்ன வயதில் உண்மை என நம்பிய பொய்களில் ஒன்றை உண்மையாக்கி அதில் வெற்றியும் பெறுவதற்கு முயன்ற சம்பவம் ஒன்று சிறித்தம்பியின் வாழ்வில் நடைபெற்றுள்ளது. அதனை அவர் இங்கு உறவுகளுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். தவறினால் நான் சொல்கிறவரை காத்திருக்கத் தயவுடன் வேண்டுகிறேன்.😌
  27. எம்.ஜி.ஆரின் சமாதிக்குள் இருந்து, மணிக்கூடு "டிக்டிக்" என்று ஓடும் சத்தம் கேட்பதாக... இன்றும் ஒரு நம்பிக்கை உள்ளது ரசோதரன். 😂 ####### ########### ##### எம்.ஜி.ஆர். இறந்து 31 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள். எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள். https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-tn-government-to-pay-25-lakhs-to-the-victim-of-anna-university-student-assault-case-1136951
  28. நீங்கள் கூறிய ஒன்பதாவது கருத்தில்…. மற்ற இருவரையும் விட…. விக்னேஸ்வரனில் அதிக நம்பிக்கை வைத்து மலைபோல் நம்பி இருந்தனான். 😂 கடைசியில் முன்னாள் நீதியரசரும் கவுட்டு விட்டார். 🤣 மற்ற இருவரும்…. பக்கா (Fraud) பிராட்டுக்கள் என்று முகத்திலேயே எழுதி ஒட்டி இருந்தது. 😂 விக்கியர் திருநீறு பூசி இருந்ததால்… எனக்கு கண்டுபிடிக்க கஸ்ரமாய் போச்சுது. 🤣
  29. இப்பவெல்லாம் தலையங்கத்தை வைத்து செய்தி வாசிக்கக்கூடாது. தலையங்கத்துக்கும் செய்திக்கும் தொடர்பே இருக்காது. முதலில் செய்தியை வாசியுங்கள், தலையங்கத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இதனாற்தான் சிலர் தடுமாறுகிறார்கள் செய்தியை விளங்கிக்கொள்வதில். தவறு செய்து பழக்கப்பட்ட ருசிப்பட்டவனே திரும்ப திரும்ப செய்வான். மாட்டினாலும் பயமோ, வெட்கமோ கிடையாது. காரணம்; அரசியலே அங்குதான், அதிற்த்தான் தங்கியுள்ளது. அப்பன் காலத்தில், ஸ்ராலின் ஒரு பெண் செய்தி வாசிப்பாளரை கடத்தியதாக செய்தியுண்டு. "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி." ஒருவரின் பின்புலம் தெரியாமல், நெருக்கத்தில் வைத்திருப்பார்களா? தங்களுக்கு வேண்டிய போது, தமது எதிரிகளை தாக்க, மிரட்ட இவர்கள் வேண்டும் அவர்களுக்கு. இவர்கள் பிடிபட்டால் அவருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை, எதிர்க்கட்சிகள் தங்கள் மேலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இணைத்துப்பேசுகிறார்கள் என்று கைகழுவி விடுவார்கள். எங்கள் நாட்டில் நடக்காத விஷயமா? இவர் தன்னைத்தானே அடிக்க விட்டிருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர்களால் அடிவாங்கியிருக்க வேண்டும். அவரது முதுகை யாராவது பார்த்து, ஒத்தடம் கொடுத்திருந்தால் அடி முதுகை எவ்வளவு தாக்கியிருக்கிறதென தெரிந்திருக்கும். மக்களின் அப்பாவித்தனத்தையும், உணர்ச்சிகளையும் அரசியலுக்காக பாவிக்கிறார்கள். இவரைப்பார்க்கும்போது, எமது அரசியற்தலைவர் எனகூறிக்கொள்ளும்சாணக்கியனின் நினைவுதான் எனக்கு வருகிறது.
  30. இதில் 1989 இலிலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலம், இந்த காலத்தில் இலங்கையில் நிலை கொண்டிருந்தத இந்திய அழிவு படை விலகிய காலம், அவர்களை கருநாநிதி வரவேற்க செல்லவில்லை காரணம் இலங்கையில் தமிழ் மக்களை அழித்த படையினரை வரவேற்கமாட்டேன் என. இரண்டாம் கட்ட போர் காலத்திற்கும் 1991 அவர் ஆட்சி நீக்கப்பட்டதற்குமிடையே சில மாதங்கள் இருந்ததனனால் அக்கால கட்டமாகவும் இருக்க முடியாது ஆகவே 1996 இற்கு பின்னரான கால கட்டமாக இருக்க வாய்ப்பிருக்கு என கணித்து உங்கள் வயதினை கணித்துள்ளேன், அப்படி பார்த்தால் நான் உங்களை விட வயதானவன்😁.
  31. நீங்கள் சும்மா படுத்திருந்த சிங்கத்தின் மூக்குக்குள் தும்பு விட்டிட்டீர்கள்................🤣. 'அரசகட்டளை' மட்டும் எத்தனை தடவைகள் பார்த்தேனோ........ ஏழோ எட்டோ வயதிலேயே யோகநாயகி, ரஞ்சனா என்று இரண்டு தியேட்டர்களுக்கும் தனியே போய் வர ஆரம்பித்துவிட்டேன். என்னை நம்பித்தான் எம்ஜிஆர் படங்களையே இறக்கினார்கள்............ இப்ப சிவாஜிலிங்கம் ஊரிலிருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போடுகின்றார்............. ஆனால் அவரை நான் தியேட்டரில் பார்த்ததே இல்லை...... முறைப்படி, உரிமைப்படி நான் தான் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட வேண்டிய ஆள்...............🤣. அவர் சிவாஜி ரசிகன் என்று நினைக்கின்றேன், நான் தான் அக்மார்க் எம்ஜிஆர் ரசிகன்............... 'இருந்ததையும் கெடுத்தார் இளையதம்பி மேத்திரியார்...............' என்று என்னூரில் சொல்வார்கள். பின்னர், வளர வளர, எம்ஜிஆரும் ஒரு இளையதம்பி மேத்திரியார் தான் என்ற புரிதல் வந்தது..............
  32. கிந்தியா இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் தான் வல்லரசு.😋 சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அல்ல... மாலை தீவுகூட கிந்தியாவை மதிப்பதில்லை. 😁
  33. சீமான் தமிழ்நாட்டுதோதலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி இலங்கை அரசை வெருட்டி ஈழதமிழர்களை காத்து வாழ்வழிப்பார் என்று தற்காலத்திலும் அதிலும் மேற்குலகநாடுகளில் வாழ்ந்து கொண்டு நம்புகின்ற ஈழதமிழர்கள் இருக்கின்ற நிலையில் பழைய காத்தில் கருணாநிதியை அப்படி நம்பினதும் நடந்திருக்கலாம். ஜெயலலிதா கருணாநிதி எல்லாம் இலங்கை ஐனாதிபதிகளை சந்தித்து இருக்கின்றார்களா?
  34. இந்த மெல்பேர்ன் ஆடுகளம் கோடைகாலத்தில் கிரிகெட் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது, அது தவிரிந்த கால கட்டத்தில் இங்கு வேறு போட்டிகள் நடைபெறுவதால் இங்கு Drop pitch பயன்படுத்தப்படுகிறது. அஃவுஸ்ரேலியா நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சினை தெரிவு செய்தது, பொதுவாக இந்த ஆடுகளத்தில் முதல் 1 மணிநேரத்திற்கு ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதன் பந்து வீச்சாளருக்கு சாதகமாக காணப்படும், ஆனால் இந்த ஆடுகளம் போட்டிக்கு முந்தய நாள்களில் ஏற்பட்ட மழைகாரணமாக ஈரப்பதன் மற்றும் பிட்ச் மூடப்பட்டு இருப்பதனால் அதற்குள் ஏற்படும் ஈரப்பதன் என பிட்சில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த பிட்சின் ஈரப்பதன் போட்டியின் ஆரம்ப நாளான 40 பாகை வெப்பம் மற்றும் புற்கள் 6MM அளவில் வெட்டப்பட்டமை காரணமாக பிட்ச் வேகமாக உலரத்தொடங்கியதாக கருதுகிறேன், இரண்டாம் நாள் மூன்றாம் நாள் முதல் இரண்டு செசசன்ஸ் வரை ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு மிக சாதகமாக காணப்படும். தனிப்பட்ட ரீதியில் அவுஸ்ரேலியா பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நான் கருதுகிறேன், ஆனால் பந்து வீச்சாளரான அவுஸ் அணித்தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தமைக்கு முதல் நாள் வெப்பம் 40 பாகையிலும் தொடர்ந்து வரும் நாளகளில் வெப்பம் 20 களின் நடுப்பகுதி கொண்டதாக இருக்கும் என்பதால் அவ்வாறன முடிவினை எடுத்தரோ என நான் கருதுகிறேன். இந்தியாவிற்கு இது ஒரு நல்ல சாதகமான சூழல் ஆனால் அவர்கள் வழமை போல அனைத்து சாதகங்களையும் முழுமையாக பயன்படுத்தாமல் மோசமான விளையாட்டினை காட்டியுள்லனர், ஆனால் இன்று அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது குறைந்து 375 ஒட்டங்களையாவது பெறுவதற்கு ஏற்ப நிலையில் ஆடுகளம் உள்ளது, ஆனால் அவுஸ் பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சு காணப்படுமானால் இந்தியா பரிதாபகரமான ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்கலாம். தற்போது இந்தியா 164/5 எனும் நிலையில் உள்ளது.
  35. ஒருவரியில் வரவேண்டிய செய்தி வீரகேசரி படிப்பவர் எண்ணிக்கை குறைவு செய்தியைநீட்டிப்பதில் அவர்களின் வறுமை தெரிகிறது . ஒத்தை வரி செய்திகள் என்ற திரியை திறக்கலாமா என்ற யோசனை உள்ளது காலையில் எழுந்ததும் நான்கு தளம்களுக்கு விசிட் பண்ணி இப்படி நேரத்தை விழுங்கும் செய்திகளை படிச்சு நொந்து போவதை தவிர்க்கலாம் .
  36. தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து விட்டுவரும் மெக்கானிக்கையும் ஊரிலே 5ம் வகுப்புவரை படித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்பவரையும் பார்க்க வேண்டும்.யாரில் கெட்டித்தனம் இருக்குதென்று. பல்கலை முடிக்காமல் எத்தனையோ பேர் ஐரியாக வேலை செய்கிறார்கள். குறைய படித்தவனெல்லாம் முட்டாள் என்று எண்ணுவது தவறு. அங்கே வேலை செய்ய வேண்டிய டாக்ரர் இல்லாததாலேயே அந்த அனர்த்தம். இது எந்தநாளும் நடப்பதால் தாதிகளும் பெரிதாக எடுப்பதில்லை. முன்னர் ஊரிலே பிள்ளைபேறு பார்த்த அம்மம்மாக்கள் எந்த சேர்டிபிக்கற்றுகள் வைத்திருந்தார்கள். எனது அம்மம்மாவின் அண்ணன் மிருகவைத்தியர்.ஆனால் 5ம் வகுப்புவரையாவது படித்தாரோ தெரியவில்லை.
  37. சிரிப்போம் சிறப்போம் என்று வந்தால் சினக்கிறீங்களே? வாய் விட்டுச் சிரியுங்கள் நோய் விட்டுப் போகும். இதில் எனக்குச் சற்றுக் குழப்பமாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்றுதான் இவ்வளவு காலமும் நம்பி ஆறுதலடைந்திருந்தேன்.
  38. நான், இரண்டு கோப்பை சோறு மட்டுமே சாப்பிடுவதால்.... இது... என்னுடைய... வண்டி அல்ல. ஆகவே... நீங்கள் தந்த பெயர்களில், எனது பெயர் "அவுட்." 😂 அடுத்து இருப்பவர்களான... @suvy, @Kandiah57, @குமாரசாமி, @Paanch, @ஈழப்பிரியன் ஆகியோரை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 🤣 நிலாமதி அக்காவுக்கு... அப்பவும் சந்தேகம் தீரவில்லை என்றால், எங்கள், வண்டிகளை... படம் எடுத்து அனுப்புகின்றோம். ஓகேயா....
  39. வடமாகாண ரீதியில் நடைபெற்ற புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு கடற்கரை. வடமாகாண சுற்றுலா பணியகம் நடத்திய இந்தப்போட்டியில்... "முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை" இந்த படத்தை போட்டிக்காக சமர்ப்பித்து, வடமாகாணத்தில் முதலாம் இடத்தினை பெற்றது. Vetri Nadai வெற்றி நடை
  40. இது உண்மை எப்போதும் உண்மை நான் நேரில் பார்த்து உள்ளேன் ஆனால் வரும் வாழ்க்கை துணை அதாவது மனைவி கெட்டிகாரியாக இருக்க வேண்டும் குடியைக்கூட. விட்டுட்டு ஆறு பிள்ளைகளுக்கு தகப்பானக வாழ்கிறார்கள்
  41. 1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும். 4)பல்லி கத்துனா கெட்ட சகுனம். 5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம். 7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது. 8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும். 9)படித்தால் வேலை கிடைக்கும். 10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....
  42. அப்ப....??? ரஷ்யாவுக்கும் அடி விழப்போகுது எண்டுறியள்....! 🤣 அது சரி எல்லாத்துக்கும் குளிசை இஸ்ரேலிட்ட தானே இருக்கு.. 😎
  43. சுமந்திரனுக்கு இப்போதாவது தெரிந்து இருக்க வேண்டும், அவற்றிலும் பார்க்க தமிழரசு கட்சி game விளையாடும் என்று. கட்சியில் உள்ள அநேகமானவர்கள், குடும்பம் குடும்பமாக, சந்ததி சந்ததியாக இரத்தத்தை ஊற்றி வளர்த்தவர்களின் சந்ததிகள் , அல்லது அந்த சந்ததிகளோடு நேரடி உறவு, தொடர்பு உள்ளவர்கள். எனவே தமிழரசு பிரிவது , விழுவது ஓருவருக்கும் மனம் வராது. ஆயினும், புதியவர்கள் ஆக்கபூர்வமாக செயற்றப்பட்டால், கட்சி வழிவிடும், அப்படி சுமந்திரனும் கட்சியில் முக்கிய அங்கத்தவராக மாறலாம். இப்போதும் வாய்ப்பு சுமந்திரன் கையில் அடுத்து முழுமையாக அகலவில்லை. அனால், செய்த வேலைக்கு பரிகாரம் என்பது இருக்கிறது என்பதையும் சுமந்திரன் உணர வேண்டும். அனால் , சகுனி வேலை பார்த்தால், எவர் உள்ளிருந்து கொள்ளும் வியாதி என்பது முடிவிலேயே தெரியும்.
  44. வடக்கு கிழக்கில் சுனாமி அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான பணிகளைச் செயல்படுத்த, அரசாங்கமும் விபு இயக்கமும் Post-Tsunami Operational Management Structure (P-TOMS) என்கின்ற பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டிருந்தனர். இந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு அரசியல் அதிகாரம் இருக்கவில்லை . அதே போல P-TOMS உருப்படியான எந்த நிர்வாக வலிமையும் கொண்டிருக்கவில்லை மாறாக, இது மிக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட மிக ஒரு தற்காலிக மனிதாபிமான ஒழுங்கமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது ஆழி பேரலையில் உயிர், உடைமைகள், வீடு வாசல்கள், தொழில் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகி நின்ற அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வளிக்கவே P-TOMS உருவாக்கப்பட்டது ஆனால் ஜேவிபி மேற்படி பொது இணக்கப்பாட்டை தனிநாடு நோக்கிய வரைபடமாக சித்தரித்தது நாடு பூராகவும் பெருமெடுப்பில் போராட்டங்களை நடத்தியது ஜேவிபியின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை இன்றைய அமைச்சர் திரு சுனில் ஹந்துநெத்தி அவர்களே ஒழுங்கமைத்தார் ஜேவிபியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு கிளிநொச்சியில் இயங்க தடை விதித்தது அதே போல P-TOMS திட்டங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் தடை விதித்தது P-TOMS நிதியம் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது இதுமாத்திரமின்றி திட்ட முகாமைத்துவ குழு செயற்படவும் அனுமதி மறுக்கப்பட்டது இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் P-TOMS முழுமையாக நீர்த்து போக செய்யப்பட்டது இயற்கை பேரழிவில் ஒரே நாளில் 6,000 உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களுக்கான மறுவாழ்வு பொறிமுறை முற்றாக முடக்கப்பட்டது தீர்ப்பு வெளியாகிய வேளையில், நீதிமன்ற வாயிலில் இன்றைய அமைச்சர்களான திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துநெத்தி, திரு சந்திரசேகரர் உள்ளிட்டோர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஜேவிபி நேர்மையாக அணுகும் என எதிர்பார்க்கும் சில தரப்புகள், இன்றைய ஆழிப்பேரலை நினைவு நாளிலாவது, அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்கு எதிராக ஜேவிபி ஆடிய சன்னதங்கள் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். வரலாறே உண்மையான வழிகாட்டி. நன்றி - முகநூல்
  45. சுமந்திரன் யாரை வைத்து தனது திட்டங்களை நிறைவேற்ற பாவிக்கிறாரோ, அவர்களை வைத்து நிறைவேற்றிய பின் அவர்களை தூக்கி எறிந்து விடுவார். காரணம்; அவர்கள் சாட்சியாக இருந்துவிடுவார்கள் என்பதற்காக. முதலில் மாவையரையும் சம்பந்தரையும் பாவித்தார், அடுத்து ஆனோல்ட், முறையே சிறிதரன் சி வி கே சிவஞானம். அடுத்து தொடரப்போவது, சத்தியலிங்கம் இறுதி சாணக்கியன். அதற்கிடையில் சுமந்திரனை எல்லோரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். நாம் ஏற்கெனவே எச்சரித்தோம், அப்போவெல்லாம் மௌனம் காத்தவர்கள், இப்போ காய் தமக்கெதிராக திரும்பும்போது கருத்து தெரிவிக்கிறார்களாம். இவர்கள் சோரம்போகாமல் இருந்திருந்தால்; அவர் தானாகவே வெளியேறியிருப்பார். இந்தியப்புலனாய்வு? இல்லை, அவருக்கு ஏற்கெனவே தெரியும், அந்த சதிவலையில் அவருக்கும் பங்குண்டு. பதவிக்காக காத்திருந்திருக்கிறார், இப்போ அது வேறு திசை மாறுவதால் இவர் தனது ஏமாற்றத்தை எச்சரிக்கையாக கொட்டுகிறார்.
  46. அர்ச்சுனாவை யாரோ பப்பாவில் ஏற்றி விட்டு இருக்கிறார்கள்; கூத்து பார்க்கிறார்கள். அனால் , அர்ச்சுனாவின் horizon (அறிவு, அனுபவப் புலம், தமிழ் சரி என்று நினைக்கிறன், வர வர ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் தேட அல்லது ஆக்க வேண்டி உள்ளது, என் தமிழ் தேய்கிறதோ?) அவ்வளவு விரிவடையவில்லையா? அல்லது, அர்ச்சுனவின் ஆர்வ அவசரத்தை, சிங்கள அரசு அர்ச்சுனவுக்கு தெரியாமல் பாவிக்கிறதா? புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.