Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    3118
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19643
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39311
    Posts
  4. தூயவன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8404
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/25/25 in all areas

  1. "கால மாற்றத்தில் காணாத புள்ளினம்" "கால மாற்றத்தில் காணாத புள்ளினம் கோலம் வேறாக அழிந்த பண்பாடு உலகம் சுருங்க தழைத்த இணையம் ஓலம் வேண்டாம் உண்மை உணர்வாய்!" "பச்சை வெளிகள் வறண்டு காயுது நதிகள் உடைத்து நாட்டுக்குள் பாயுது வானத்தில் கேட்ட புள்ளுவம் காணோம் வண்ணச் சிறகுகள் பறப்பது மறையுது!" "காற்று கொடூரமாக வானம் வெறுமையாக கருணை குறைவாக கானம் வெளியாக காடுகள் அழிந்து கட்டிடங்கள் தோன்ற கார்மேகம் கூட மாசு படுகுது!" "பறவைகள் வாழ வழி தெரியவில்லை உறவுகள் கூடிக்குலாவ கிளைகள் இல்லை சிறகுகள் விரித்து பறப்பது எங்கே இறப்பதை தவிர முடிவு வேறுண்டா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. ஈழத்தை வைத்து தமிழகத்தில் என்ன அரசியல் எப்படிப் பண்ணலாம்?? சும்மா வாயில் வந்தததை எல்லாம் பிதற்றக் கூடாது. அதையும் மீறிச் சீமான் செய்கின்றார் என்றால் வாழ்த்தப்பட வேண்டியவர் தான். ஈழத்தில் போர் உச்சத்தை அடையும்போது தமிழகத்தில் போராட்டங்கள் செய்து தமிழர் அழிப்பை நிறுத்தப் புலிகள் முயன்றார்கள். அதற்காகத் தான் தமிழகத்தில் இருந்து பிரபல்யமான இயக்குனர்கள், அரசியல்வாதிகளை வன்னிக்கு அழைத்தனர். வந்தவர்களில் சீமான் மட்டுமே உண்மையாகவும், நேர்மையாகவும் இன்று வரை நிற்கின்றார். ஒரு வேளை தமிழக மக்கள் அன்று ஆதரவுப் போராட்டங்களை விரிவுபடுத்தியிருந்தால் இந்தளவு ழப்பு நடந்திருக்காது. காசா மக்களுக்கு இஸ்லாமிய மக்கள் செய்த போராட்டங்களால் எப்படி அழிவு குறைக்கப்பட்டபோதோ அது போல எமக்கும் நடந்திருக்கும்.
  3. ஒரு கை தட்டி ஓசை வராது. சீமான் வரும் வரை ஈழத்தமிழர் நாம் தமிழக அரசியலில் தலையிடாமல்தான் இருந்தோம். சீமான் வந்து பெரியார் vs பிரபாகரன் என ஒரு பொய்சமன்பாட்டை நிறுவும் போது… திமுக, அதிமுக, திக, இன்னும் பல கோடி அனுதாபிகள் கொண்ட அமைபுக்களை எமக்கு எதிராக நிறுத்தும் போது… 600 வருடமாக தமிழக்கதில் இருப்பவனை பார்த்து நீ அயலான், ஆனால் ஈழத்தமிழன் என் உறவு என சிண்டு முடியும் போது… நாம் சும்மா இருக்க முடியாது. கூடாது. அப்படி இருப்பின்… தமிழக மக்களையும் ஈழத்தமிழரையும் நிரந்தர பகைவராக்கும் றோ/ஆர் எஸ் எஸ் சதிக்கு நாமும் துணைபோகிறோம் என்பதே அர்த்தம்.
  4. @வீரப் பையன்26 பையன் சார், முதலில், தமிழில் விடாமல் எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் கைதட்டல்கள்...........👍. இங்கு களத்திற்கு பங்கெடுப்பவர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் வருவதேயில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், இப்படியான களங்கள் அப்படித்தான் இருக்கும். இங்கு வந்து சில பந்திகளை தொடர்ச்சியாக எழுதுவது அல்லது வாசிப்பது ஒரு இலகுவான செயல் அல்ல. பரவலான வாசிப்பும், பல்வேறு அனுபவங்களும், கிரகிக்கும் தன்மையும், முயற்சியும் இருந்தால் மட்டுமே அது முடியும். இன்று உலகில் தமிழ் சமூகம் வாசிப்பதில் மிகவும் அடிமட்ட நிலையில் இருக்கும் ஒரு சமூகம். தமிழில் வரும் உலகத்தரமான புத்தகங்கள், கட்டுரைகளைக் கூட ஒரு 200 பேர்கள் வாசித்தாலே, இருக்கும் ஒன்பது கோடித் தமிழர்களில், அது ஒரு பெரிய விடயம். இங்கு களத்தில் 200 பேர்கள் ஒன்றைப் பார்வையிடுகின்றார்கள் என்றால் அதையிட்டு அதிகம் கவலையில்லாமல் நாங்கள் முன்னே சென்று கொண்டிருக்கலாம். எங்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் ஒரு விதிவிலக்கு. பொதுவான சமூக விதிகள் அந்த காலகட்டத்திற்குப் பொருந்தாது. கேளிக்கைகள் எப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவில் வந்து கொண்டேயிருக்கும். ஆனால் அவற்றின் இறுதி முடிவு பெரும் சலிப்பாகவே முடியும். இந்தப் பொருளற்ற கேளிக்கைகளால் வாழ்வே ஒரு நாள் சலிப்பாக மாறும். ஒவ்வொரு தனிமனிதனும் இதிலிருந்து வெளியே வருவது அவரவர் பொறுப்பே. புதைமணலில் சிக்கி போய்க் கொண்டிருப்பது போல போய்க் கொண்டிருக்கும் சமூகம். இப்படியான களங்கள், உரையாடல்கள் சில மனிதர்களையாவது மீட்டெடுக்கும் ஒரு முயற்சி என்றும் சொல்லலாம். ஒருவர் தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சி இது என்றும் சொல்லலாம். அறம் - பொருள் - இன்பம் - வீடு என்று சொல்லப்படுவதில் வீடு என்பது விடுதலை. அறிவதால் வரும் விடுதலை அது. ஒன்றை தெளிவாக அறிந்தவுடன் அதிலிருந்து விடுதலை கிடைத்துவிடுகின்றது. கேளிக்கைகளால் விடுதலை வருவதில்லை. வாசிப்பதாலும், உரையாடல்களாலும் அது கிடைக்கக்கூடும். அடுத்த தலைமுறையின் இன்றைய உலகம் வேறு. எனக்கு இரு பிள்ளைகள் - மகன் 28 வயது, மகள் 25 வயது (எனது வயது 56). அவர்களின் உலகமும், என்னுடைய உலகமும் வேறுவேறானவை. ஆனால், 'எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தார்......................' என்பது போல, பின்னொரு காலத்தில் என் பிள்ளைகளின் தேடுதல்களும், உங்கள் பிள்ளைகளின் தேடுதல்களும் எங்களுடயது போன்றே வரப் போகின்றது. இவர்கள் இன்று யாழ் களங்கள் போன்றவற்றுக்கு வரமாட்டார்கள். ஆனால், பின்னர் ஒன்றைத் தேடுவார்கள். நானே அப்படித் தானே யாழ் களத்திற்கு வந்தேன்..............🤣. நிர்வாகம் அதன் பொறுப்பில் இருக்கட்டும், நாங்கள் எங்களின் பொறுப்பில் இருப்போம். சில சொற்கள், தனிமனித தாக்குதல்கள், சீண்டல்களைத் தவிர்த்து விட்டால், இங்கே நிர்வாகம் ஒருவரையும் ஒன்றும் சொல்வதில்லையே. போராளிகளையும், போரட்டத்தையும் இழிவு செய்யும் கருத்துகளை தவிர்த்து, வேறு எந்தக் கருத்தையும் நாங்கள் முன்வைக்க இங்கு தடை ஏதும் இல்லையே. எதையும் இழிவு செய்யாமல், நாகரிகமாக உரையாடுவதும் ஒரு விடுதலையே.........................🙏.
  5. பையன் சார், நீங்கள் சொல்வது மற்றைய இடங்களுக்கு பொருந்தும் என்றாலும் யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம் என்றும் நினைக்கின்றேன். மிக இலகுவாக பல்வேறு காணொளிகளையும் வேறு இடங்களில், தங்கள் தங்கள் வசதிக்கேற்ப மிக இலகுவாக பார்த்துக் கொள்ளலாம் அல்லவா, அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும். ஒருவர் ஓயாமல் தன்னுடைய கருத்துகளாக வேறு மனிதர்களின் காணொளிகளை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் ஒரு கருத்தாளர் என்றில்லாமல் ஒரு பிரச்சாரகர் அல்லது கழகப் பேச்சாளர் போன்று ஆகின்றார். ஒரு பிரச்சாரத்தையோ அல்லது கொள்கை பரப்பையோ ஒரு தடவைக்கு மேல் அந்தக் கட்சியைச் சாராதவர்கள் கேட்கத் தேவையில்லை. அவர் சொல்ல வருவதில் எதுவும் புதுமையாகவோ அல்லது சிந்தனையை வளர்ப்பதாக தொடர்ந்தும் இருக்கமாட்டாது. இது ஒரு ரசிகனின் மனநிலை. தேசியம், திராவிடம் என்று மட்டும் இல்லை, இதே போக்கு அமெரிக்கா, ரஷ்யா, விளையாட்டுகள், அரசியல் கட்சிகள், நடிகர்கள், ஆளுமைகள் போன்ற பல விடயங்களிலும் பலரால் பொதுவெளிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. சிறிய காலப்போக்கிலேயே அவர்களுடன் விவாதிப்பதிற்கு எதுவும் கிடையாது என்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு ரசிகனின் முன்னாலும் ஒரு இரும்புத்திரை உள்ளது. அதைத் தாண்டி எதுவும் அந்த ரசிகனை அடைவதேயில்லை. அவர்கள் சார்ந்த காணொளிகள் மட்டுமே அவர்களின் ஊடகம் என்றாகிவிடுகின்றது. உதாரணமாக, திமுக கழக பேச்சாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்களை எத்தனை தடவைகள் கேட்க வேண்டும்.......... ஒரு தடவை மட்டும் போதுமல்லவா. அதையே தான் இந்த காணொளிகளைப் பற்றியும் நான் சொல்லுகின்றேன். காணொளிகளுக்கும், வாசிப்புக்கும் இருக்கும் இடைவெளி மலையும், மடுவும் போன்றது என்று கூட சொல்லமுடியாது. இரண்டும் தொடர்பு அற்றவை. காணொளிகள் அவற்றைப் பார்ப்பவர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே சுய சிந்தனை எதுவுமின்றி இழுத்துச் செல்லும். ஒரு சினிமா போல. வாசிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி. வாசிப்பவரும், வாசிக்கப்படுவதும் சேர்ந்தே பொருளை உண்டாக்குகின்றன. வரிகளுக்கிடையில் அனுபவங்கள் வந்து போகும். சிந்தனைகள் சிதறும். காட்சி ஊடகம் என்பது ஓடும் ஆறு போல, அதன் திசையில் நிற்காமல் ஓடி அது முடிந்துவிடும். வாசிப்பவற்றை தொகுத்து சுருக்கமாக எழுதுவதோ அல்லது சொல்லுவதோ இன்னும் ஒரு படி. புரிதல் இல்லாமல் தொகுத்து எழுதவே முடியாது. இவை தான் ஒரு கருத்துக்களத்தின் அடிப்படைகளாக இருக்கவேண்டும். காணொளிகளும் ரசிக மனநிலையும் நல்ல காத்திரமான கருத்தாடலுக்கு ஏற்றவை அல்ல, அவை நல்ல கருத்தாடலுக்கு துணை புரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது, இன்றைய பெரும்பான்மையினர் என்ன செய்கின்றனர் என்பது நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இன்றைய பெரும்பான்மையினர் நுகர்வோர் போன்றோர். ஆயிரம் ஆயிரம் வருடங்களாக அப்படித்தான் உலகம் இருக்கின்றது. நுகர்வோர்கள் நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக ஒரு சிறு பிரிவு எப்போதும் இருக்கும். அவர்கள் சித்தசுவாதீனம் அற்றவர்கள், போராளிகள், முசுறுகள், கற்பனாவாதிகள் போன்று அவர்கள் வாழும் நாட்களில் தோன்றக்கூடும். ஆனால் அவர்களே நாளைய உலகை என்றும், எங்கும் வடிவமைக்கின்றார்கள். டிக்டாக் அதிகம் பார்க்காத, ஃபேஸ்புக் அவ்வளவாக உபயோகிக்காத சிலரும் இளைய தலைமுறையில் இருப்பார்கள். அடுத்து வரும் உலகத்தை அவர்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு வகையில் தியாகம் தான். ஆனால் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். டிக்டாக் வீடியோ ஒன்றைத் தன்னும் பார்க்க வேண்டிய தேவையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டிய தேவையோ எனக்கு இதுவரை வரவில்லை. அதனால் தானோ என்னவோ, எழுத ஆரம்பித்தால் அது நீளம் நீளமாகவே வருகின்றது...................🤣.
  6. காலமாற்றம் கடுகளவும் மாறுவதில்லை அது தடம்மாறாது ஓடுகிறது. மனிதன் மாறுகிறான் அதனால் மனிதமும் மாறுகிறது. அளவற்ற ஆசையும், அகங்காரமும் இதயத்தை நஞ்சாக்குகிறது. அதன் புதிய கண்டுபிடிப்புகள் இயற்கையைச் சீண்டுகிறது. இதற்கு இறப்புத்தான் முடிவல்ல, இயற்கையோடு இணைந்து இதயத்தில் அன்பை மலரவைக்க முனைவதும் முடிவாகும்.
  7. நெடுமாறன் ஐயாவுக்கு வயது நன்றாக முதிர்ந்துவிட்டது. நான் சிறுவனாக இருந்தபோதே விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் அல்லது புளட், ஈரோஸின் பிரசுரங்கள் மூலம் கொலம்பிய FARC கெரில்லாப் போராட்டத்தில் பெண்போராளிகள் இருந்ததை முதன்முதலாக அறிந்துகொண்டேன். இது முற்றிலும் தவறு. அப்படி ஒரு ஆணையும் இல்லை. யாரும் யாரையும் திருமணம் செய்யலாம். ஒரு போராளி இன்னோர் போராளியை அல்லது பொதுமக்களில் ஒருவரை திருமணம் செய்யும் விருப்பத்தைத் தெரிவித்தால் திருமணத்திற்கான குழு இரு பக்கமும் பேசி திருமணத்தை நடாத்திவைக்கும். கட்டாயப்படுத்துவதும், அழுத்தம் கொடுப்பதும் கிடையாது என்பதுதான் எனது அறிதல்.
  8. ஈழத்தமிழர்கள் பற்றிய தமிழநாட்டுத் தமிழரின் பார்வையை சீமானுக்கு முன், பின் என்று பிரிக்கலாம். இலங்கைத் தமிழரின் படிப்பறிவு, தமிழ் உச்சரிப்பு, தமிழ் பண்பாட்டியலில் எங்களவரின் பங்களிப்பு, வயது குறைந்தவர்களையும் பண்புடன் அழைக்கும் பண்பு, போராட்டம், தியாகம், எமது உணவு முறை என்று தமிழ் நாட்டு மக்களின், அரசியல் தலைவர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட வர்கள் நாம். பிரபாகரனின் அரசியலை நிராகரித்தவர்கள் கூட அவரை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தனர். ஆனால் இன்று நிலைமை அதோகதி! கேவலமான எங்கள் தலைமுறையில் ஒரு பகுதி வக்கிர மனமும், வெறியும், தீவிர வலது சாரி நிலைப்பாட்டையும் கொண்ட சீமான் என்னும் மனிதனை எப்பொழுது தன் மீட்பனாக கொண்டதோ அன்றே எம் மீதான படித்த பண்பட்ட தமிழ் நாட்டு மக்களின் பார்வை மாறி விட்டது. நாங்கள் சிங்கள அரசால் போரில் தோற்கடிக்கப்பட்டோம் தான், ஆனால் மானத்தை இழக்கவில்லை. அதை சொந்த தொப்புள்க் கொடி உறவுகளிடமே இழக்கவைத்த பெருமை சீமானையும் அவரின் ஈழத்தமிழ் விசிறிகளையே சாரும். ஈழத்தமிழராக நாம் செய்த தவறு வீட்டில் பெற்ற தாயையே கெட்ட வார்த்தையில் ஏசும் கூட்டத்தை, நன்னெறி அற்ற கூட்டத்தை, ஊரில் சந்தியில் ரவுடித்தனம் செய்த கூட்டத்தை வெளிநாட்டுக்கு எடுத்து அனுப்பி அவர்களைப் பெரிய ஆள் ஆக்கி விட்டது தான்.
  9. இது எம்மவர்களுக்கும் சேர்த்துத்தான் கூறப்பட்டிருக்கிறது. தமிழக அரசியலில் தலையிடாதிருப்பதே எமக்குக் கெளரவமானதும் பயன் தரக்கூடியதுமாகும்.
  10. உண்மை தான் .......தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இந்தியா மத்திய அரசின் அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக சட்டசபையில் அமைச்சர் வெளிநாடுகளில் இந்தியா அரசின். தூதுவர் இப்படி பல பதவிகள் வகித்து. மிகப்பெரும் பணக்காரராக வந்து இருக்க முடியும் தேவையில்லாமல் பிரபாகரனை பலதடவைகள் காப்பற்றி உதவிகளை செய்து புலிகளை வளர்த்து விட்டதில். மிக முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவர் பிரபாகரனை பிடித்து கொடுத்து இருக்கலாம் இந்தியா படைகளிடம். அல்லது ரொவிடம். இன்று சீமான் ஒவ்வொரு கூட்டங்களுக்கும். பிரபாகரன் படத்துடன். திரியும். வாய்ப்புகள் இருந்து இருக்காது..... சீமான் வன்னிக்கு. போய் படமெடுத்து இருக்க முடியாது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்று இருந்து இருக்காது சீமான் தலைவர் ஆக. முடிந்து இருக்காது இலங்கை தமிழர்கள் சீமானை தலைவர் என்று அழைத்து இருக்க முடியாது கயல்விழி மனைவி ஆகி இருக்க மாட்டார் தொடரும் 🙏🙏🙏. வணக்கம்…
  11. இது சரியான தகவல் தான்! குப்பனும் சுப்பனும் (மேலே ஏகலைவன் வந்த வாக்கில் அமரர் ஒரிசா பாலுவின் கண்டு பிடிப்புகள் பற்றி வீடியோ போட்டிருப்பது போல😎) யூரியூபில் கொட்டுவது தான் இனி நூல்களுக்கு இணையான ஊடகம்! இது போன்ற மாற்றங்களால் எதையும் சொந்தமாகத் தேடிப் பார்க்க வேண்டுமென நினைக்காத ஒரு சோம்பேறி, முட்டாள் தலைமுறையொன்று உருவாகிறது. இந்த மாற்றம் தான் தமிழ் நாட்டில் சீமான் போன்றோரையும், மேற்கில் ட்ரம்ப் தரவழிகளையும் பிரபல தலைவர்களாக வர வைக்கிறது!
  12. அமெரிக்கா ஒரு விசித்திர நாடு.ஒரே நேரத்தில் ஒரு பக்கம் புயல் அழிவு. இன்னொரு பக்கம் காட்டுத்தீ அழிவு. அடுத்த பக்கம் பனிப்புயல் அழிவு. விசித்திர நாடல்ல.அதிசய நாடு. 😂
  13. பாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே --------------------------------------------------------------------------- ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது. கொஞ்ச தூரத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. ஆனால் என்னை வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் பாடசாலையிலேயே சேர்த்தார்கள். என்னை மட்டும் இல்லை, எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாடசாலைக்கு தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். அது தான் எங்களின் பரம்பரைப் பாடசாலை என்று காரணம் கூறப்பட்டது. சார்பட்டா பரம்பரைக் கதைகள் போல பரம்பரைப் பெருமைகள் எதுவும் வெளி வந்திருக்காத அந்த நாளில், இது என்ன பெரிய பரம்பரை, இதற்காக நான் ஏன் நேர்த்திகடன் போல தினமும் நடக்க வேண்டும் என்று அலுப்பாக இருந்தது. அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. சில நாட்களில் நான் போகும் பொழுது பாடசாலையின் கதவுகள் திறந்திருக்காது. அவ்வளவு முன்னரே அங்கு போயிருக்கின்றேன். படிப்பில் எக்கச்சக்கமான ஆர்வம் என்றோ, பாடசாலையில் விருப்பமோ என்றில்லை. இது ஒரு பிறவிப் பழக்கம். இன்றும் இது தொடர்கின்றது. பாடசாலைக்கு அருகிலேயே ஒரு ஆசிரியரின் வீடு இருந்தது. அவர் வீட்டில் போய்க் கேட்டால், வந்து கதவைத் திறந்துவிடுவார்கள். ஆசிரியர் அலுத்திருக்கமாட்டார், ஆனால் அவர் வீட்டில் இருந்தவர்களுக்கு இது அலுப்பாக இருந்திருக்கக்கூடும். பாடசாலை முடிந்தால் வீட்டை எப்போதும் போய்க் கொள்ளலாம். தேடவே மாட்டார்கள். ஒரு நாள் பூரா போகாமல் இருந்தால் கூட, அப்படி ஒரு நாளும் நடக்கவில்லை, அடுத்த நாள் வந்து விடுவான் என்று இருந்திருப்பார்களோ தெரியாது. எப்போதும் பாடசாலைக்கு வருவது ஒரே வழியில் தான் என்றாலும், திரும்பிப் போவதற்கு மூன்று வழிகள் இருந்தன. வந்த வழியிலேயே, தெருக்களினூடாக, திரும்பிப் போவது முதலாவது வழி. இரண்டாவது வழி கடற்கரையின் வழியே நடந்து போய், பின்னர் ஒரு ஒழுங்கையினூடாக பிரதான வீதியைக் கடந்து வீட்டுக்கு போகும் வழி. மூன்றாவது வழி கடலினூடாக நடந்து போவது. முழங்கால் ஆழம் வரை இருக்கும் கடலுக்குள் போய், பின்னர் அப்படியே நடப்பது. இது ஒரு பெரிய உடற்பயிற்சியாக இன்று உலகெங்கும் செய்யப்படுகின்றது. நாங்கள் அன்று முழங்கால் அளவு ஆழக் கடலில் பறந்திருக்கின்றோம். பவளப்பாறைகள் காலைக் கிழித்து இரத்தம் சொட்டச் சொட்ட எதுவுமே நடக்காத மாதிரி இருந்திருக்கின்றோம். கடல் பொங்குவதும், கடல் வற்றி நீர் உட் போவதும் ஒரு சுழற்சியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. சில நாட்களிலேயே இந்த அறிவு அனுபவத்தில் வந்துவிட்டது. எந்த நேரம் கடல் பொங்கும், எப்போது நீர் வற்றும் என்று தெரிய ஆரம்பித்திருந்தது. பாடசாலை விடும் நேரத்தில் கடல் பொங்கும் என்று தெரிந்தால், அன்று அந்தப் பாதையை தவிர்த்து, வந்த வழியிலேயே தெருக்களினூடாக வீட்டுக்கு போக வேண்டும். அப்படியே உடனேயே நேரே போய் வீட்டை என்ன தான் செய்வது. போகும் வழியில் மூன்று வாசிகசாலைகள் இருந்தன. சந்தியில் இருந்த வாசிகசாலை பெரியது. ஆங்கில, தமிழ் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற இந்திய வார வெளியீடுகள், டொமினிக் ஜீவாவின் மல்லிகை என்று எல்லா வகையானவைகளும் அங்கே போடப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த வயதில் எப்போதும் என்னை ஈர்த்தது சினிமாச் சஞ்சிகைகளான பொம்மையும், ஜெமினி சினிமாவும் தான். ஒரு பத்து வயது அளவில் இருக்கும் பையனுக்கு இவை தான் அன்றைய டிக்டாக். ஜெமினி சினிமாவில் நடுப்பக்கத்தில், இரண்டு பக்கத்தையும் சேர்த்து, ஒரு நடிகையின் படம் இருக்கும். ஆனால் அதை யாரோ புதிதாக ஜெமினி சினிமாவை போட்ட அன்றே கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இதை ஒரு பிரச்சனையாக பெரியவர்கள் கதைத்தார்கள். எல்லோரும் அந்தப் படத்தை பார்த்த பின், அந்தப் படத்தை கிழித்துக் கொண்டு போனால் பரவாயில்லை என்று நினைத்தார்களோ என்னவோ. அதனால் ஜெமினி சினிமாவிற்கு கிட்டே போய் வருபவர்களை எல்லோரும் கொஞ்சம் கவனமாகவே பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொம்மைக்கு அவ்வளவு காவலும், கண்காணிப்பும் இருக்கவில்லை. அன்று பொம்மையில் வரும் கேள்வி - பதில் பகுதி மிகவும் பிடிக்கும். அன்று ஆகப்பெரிய அறிவாளிகள் என்று நான் நினைத்திருந்தது எம்ஜிஆரையும், சிவாஜியையும் தான். ஒரு பொம்மையில் கேள்விகளுக்கு சிவாஜி பதிலளித்து இருந்தார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் எது என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 'செந்தூர பூவே செந்தூர பூவே...........' என்று அவர் பதில் சொல்லியிருந்தார். நான் இந்த பாடலை அதுவரை கேட்டிருக்கவில்லை. இந்தப் பாட்டை எப்படியாவது கேட்டு விடவேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டேன். அடுத்த நாள், வழமை போலவே, நான் பாடசாலை போன பொழுது, பாடசாலைக் கதவு பூட்டியிருந்தது. மெதுவாக ஆசிரியரின் வீட்டுக்குள் போனேன். 'சரி வா.................' என்று ஆசிரியர் திறப்புக் கொத்துடன் வந்தார். அந்த நேரம் அவர்களின் வானொலியில் 'செந்தூர பூவே செந்தூர பூவே..........' என்று ஆரம்பித்தது. நான் அசையவேயில்லை. ஆயிரம் தடவைகள் அல்லது அதற்கு மேலும் இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டேன். இந்தப் பாடல் அசைய விடுவதேயில்லை. காணொளியாகப் பார்த்தாலும் அப்படியே. ஶ்ரீதேவியை அவரின் வீட்டில் இருந்து கூட்டி வந்து, இந்தப் பாடலில் அப்படியே நடிக்க வைத்திருப்பார்கள். அவர் இந்தப் பாடலில் கொஞ்சம் கறுப்பாக இருப்பது போல இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் மிக அழகான பெண் போன்று தான் இருப்பார். ஒரு நடிகை போன்று இந்தப் பாடலில் அவர் இருக்கவில்லை. இப்போது எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் அப்படியே அவரின் கடைசி நாட்களும் ஞாபகத்திற்கு வரும். அது வேற ஶ்ரீதேவி, செந்தூரப் பூ ஶ்ரீதேவி வேற என்றும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கின்றது.
  14. அவர்களிடம் புத்த விகாரைகள் கட்டச் செங்கற்களும் சீமேந்தும் நிறையவே இருக்கு.அல்வாயன் அவர்களே!!😳
  15. டிசே இளங்கோவின் முகநூலில் இருந்து.. இரவி (கனடா) இலங்கைக்குச் சென்றபோது காலமாகிவிட்டார் என்பதை இன்னமும் நம்பமுடியாது இருக்கின்றது. ஒரு காலத்தில் நான், இரவி, போல் அவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கின்றோம். அந்தக்காலங்களில் நாம் அடிக்கடி கோப்பிக்கடைகளில் சந்திப்பதோடு, பல இடங்களுக்கு சேர்ந்து பயணித்தும் கொண்டிருந்தோம். இவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்பதால் எப்போதும் என்னில் தனிப்பட்ட கவனமெடுத்து என்னைப் பத்திரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலங்களில் என் தனிப்பட்ட வாழ்வின் தளம்பல்கள் பற்றிப் பகிரும் நண்பர்களாக இவர்களே இருந்தார்கள். பின்னர், காலத்தின் நீட்சியில் சில காரணங்களால் எமக்குள் இடைவெளிகள் ஏற்பட்டபோது, அதையும் வாழ்வின் இயல்பென எடுத்து நகரவும் செய்திருந்தோம். இதையெழுதும் இந்தக் கணத்திலும் இரவி நம்மிடையே இல்லையென்பதை மனம் மறுதலிக்கவே செய்கிறது. கீழே வருவது இரவியின் பிறந்தநாள் ஒன்றின்போது எழுதியது. ------------------------------------------------------------------ இரவியை அவரது பெயரால் தனிததுச் சொன்னால் நிறையப் பேருக்குத் தெரியாது. செல்வத்தை 'காலம்' செல்வம் என்று அழைப்பது போல, இரவியை 'வைகறை' இரவியெனச் சொன்னால்தான் அவர் யாரென்று பலருக்கு விளங்கும். 'வைகறை' கனடாவிலிருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகை. எனக்கு 'வைகறை'யுடனும், இரவியுடனும் உறவு எப்படி மலர்ந்தென்பதே சற்றுச் சுவாரசியமானது. நமது சினிமாக் காதல்களில் முதலில் சண்டைபிடித்து பிறகு காதல் வருவதுபோல, எனக்கும் இலக்கியம்/அரசியல் சார்ந்து வந்த அநேக நட்புக்கள் முரணிலிருந்து தொடங்கி பிறகுதான் நட்பாக முகிழ்ந்திருக்கின்றன. அப்படித்தான் எனக்கும் 'வைகறை'யோடான உறவும் தொடங்கியது. எனது கதையொன்றை ('கதைசொல்லியும், Gang Fights'ம்?) 'வைகறை' தாமாகவே தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தபோதும், கதையின் தொடர்ச்சி இன்னொரு பக்கத்தில் தொடர்வதைச் சரியாகக் குறிப்பிடாததில் சற்றுக் கோபம் வந்து (பத்திரிகையில் இருந்த தொடர்பிலக்கத்திற்கு) அழைத்தேன். கவனயீனம் காரணமாக பிழையாகிவிட்டது என மன்னிப்பைக் கோரியபடிதான் இரவி முதன்முதலாகப் பேசியது ஞாபகம். பிறகு, வைகறையில் தொடர்ந்து எழுதும்படியும், காரியாலயத்திற்கு வந்து சந்திக்கும்படியும் அவர் அழைப்பு விடுத்ததும் கடந்த காலம். கனடாவில் பத்திரிகை நடாத்தி இலாபமீட்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் 'வைகறை' நின்றபோது இரவிக்கு நிறையக் கடன்கள் இருந்தது என்பது தெரியும். அதுவல்ல முக்கியம், வைகறை வந்துகொண்டிருந்த காலத்தில் அரசியல் காரணங்களால் வைகறை மிரட்டப்பட்டிருந்ததும், சிலர் தம்மை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்ததும், காரின் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டதுமென பல்வேறு அழுத்தங்களினூடாகவே பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. ஒருமுறை இங்கிருக்கும் ஒரு தமிழ் வைத்தியர் மீது வேற்றின நோயாளியினால் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு செய்யப்பட்டபோது, மற்றப் பத்திரிகைகள் எல்லாம் அதைப் பிரசுரிக்கத் தயங்கி பின்வாங்கியபோது, எவ்விதத் தயக்கமுமின்றி அந்தச் சம்பவத்தை 'வைகறை' வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்தச் செயதி பிரசுரிக்கப்பட்ட காரணத்தாலேயே பல்வேறு இடங்களில் 'வைகறை' கடைகளிலிருந்து பலவந்தமாக தூக்கியெறியப்பட்டுமிட்டிருக்கிறது. இவ்வாறு ஒருமுறையல்ல, வேறு சில சந்தர்ப்பங்களிலும் பிரதிகள் கடைகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் இரவி தனிப்பட்ட பேச்சிலே எம்மோடு உரையாடியிருக்கின்றாரேயன்றி 'வைகறை'யில் பொதுப்படையாக இந்தச் சம்பவங்கள் எதையும் எழுதியதுமில்லை. உண்மையில், இந்த நிதானமே வைகறையை அதை நடத்தியவர்களின் அரசியல் பிடிக்காதபோதும், பல்வேறு மாற்றுக் கருத்துடையவர்களையும் வாசிக்க வைத்திருக்கின்றது. அதை நேரடியாக நானும் நண்பர்களும் பல்வேறிடங்களில் கேட்டிருக்கின்றோம்/ கேள்விப்பட்டுமிருக்கின்றோம். ஒரு பத்திரிகையை நடத்துவது மட்டுமில்லை, அதில் எழுதப்படும் கருத்துக்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் அறம் சார்ந்த விடயங்களிலும் 'வைகறை' மிகுந்த கவனம் காட்டியிருக்கின்றது. எத்தனையோ நல்ல கட்டுரைகளை பிரசுரிக்க விரும்பியும், எமது போராட்டம் சார்ந்து 'பாஸிசம்' போன்ற (அதன் அர்த்தத்தை எவ்வகையில் பாவிப்பதென்ற கிஞ்சித்தும் அக்கறையில்லாத பலரே நம் அரசியல் கருத்தாளர்கள் என்பது வேறுவிடயம்) சொற்கள் பாவிக்கப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரிக்காமலே தவிர்த்துமிருக்கின்றார். இயன்றளவு நமது கருத்துக்களை, நம்மோடு முரண்படுபவர்களையும் பொறுமையாக வாசிக்க வைக்கவேண்டுமென வைகறை நிறைய பாடுபட்டிருக்கின்றது. 'வைகறை'யின் இந்த நிதானமான அணுகுமுறையை நானிங்கே வந்த வேறெந்தப் பத்திரிகையிலும் பார்த்ததில்லை. ஆகவேதான் பல்வேறுபட்ட அரசியல்/இலக்கிய கருத்துக்களையுடைய எல்லோராலும் தயக்கமின்றி வைகறையில் எழுத முடிந்திருக்கின்றது. எழுதப்பட்ட ஆசிரியத்துவம் (editorial) எல்லாம் மிகவும் கவனம் எடுத்தே எழுதப்பட்டிருக்கினறன. அவ்வாறிருந்தும் சிலவேளைகளில் ஆசிரியத்துவம் தவறாக விளங்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் இன்னும் கவனமாக நாம் அதை எழுதியிருக்கலாமென இரவி சொல்லிக் கவலைப்பட்டதும் எனக்கு நினைவிலுண்டு. வைகறை சார்ந்து இரண்டு தனிப்பட்ட என் அனுபவங்களை நான் சொல்லியாக வேண்டும். வைகறையில் கட்டுரைகள், பத்திகள் போல சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்குமென தனிப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருமுறையும் யாரேனும் கவிஞரொருவரின் நான்கைந்து கவிதைகளோடு அவர்களைப் பற்றிய அறிமுகம் வந்துகொண்டிருக்கும். அவ்வாறு என் கவிதைகள் வெளிவநத்போது, அதற்குப் பொறுப்பாயிருந்தவர் - என் வலைப்பதிவிலிருந்து- வெட்டி ஒட்டியபோது சில கவிதைகள் மாறி வெட்டி ஒட்டப்பட்டு பிரசுரமாயிருந்தன. பத்திரிகையைக் கடையில் எடுத்தவுடனேயே இவ்வாறு வந்திருப்பதைக் கண்டு - வழமை போல இரவிக்கு தொலைபேசியில் அழைத்து- இப்படி கவனமில்லாது பிரசுரிப்பதென்றால் அதைவிடப் பிரசுரிக்காமலே இருந்தாலே நல்லது, அதுவே கவிதைக்கு தரும் மரியாதையாக இருக்குமென தாறுமாறாய்ப் பேசியதும் நினைவிலிருக்கிறது. அடுத்த வாரம் கவிதைகள் உரிய முறையில் -தவறுக்கு மன்னிப்புக் கேட்டு - பிரசுரமாயிருந்தன. அது போல பாலஸ்தீனம் பற்றிய என் கட்டுரையில் இஸ்ரேலிய மக்கள் அனைவரையும் குற்றஞ்சாட்டும் தொனியிருப்பது அவ்வளவு சரியில்லை, இஸ்ரேலிய அரசு என மாற்றட்டுமா என - ஒரு வார்த்தையாயினும்- என்னிடம் அனுமதி கேட்டு மாற்றியிருந்த பத்திரிகைப் பண்பு அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாய்க்காது. இவ்வாறான காரணங்களே இது எங்கள் 'வைகறை' என உணரச் செய்திருக்கின்றது போலும். ஒருகட்டத்தில் 'வைகறை' நின்றபோது, உடனே எதற்காகவது எதிர்வினை எழுதிப் பிரசுரிப்பதற்கு எங்களுக்கென ஒரு பத்திரிகை இல்லையேயென பல தடவைகள் கவலைப்பட்டதுண்டு. அதேபோல 'வைகறை' நின்றபின், வேறு சில பத்திரிகைகளிலிருந்து எழுத அழைப்பு வந்தபோதும், அவை சார்ந்த கருத்துநிலைக்காக மட்டுமின்றி, வைகறை போல எதையும் எழுதுவதற்கு பூரண சுதந்திரம் தரப்படுமா என்கின்ற தயக்கங்களினாலும் பிற பத்திரிகைகளில் எழுத அவ்வளவாய் விரும்பியதுமில்லை. இரவியைப் பற்றியெழுத வந்து இறுதியில் 'வைகறை'யைப் பற்றியே நிறைய எழுதவேண்டியதாகிவிட்டது. இரவி ஏதோ ஒரு இயக்கத்தில் சேரப்போய் பிறகு வேறு இயக்கத்தில் சேர்ந்தவர் என்பதும், நாமெல்லாம் நீங்கள் அப்படிச் சொன்னாலும், அந்த இயக்கத்திற்காய் உளவு பார்க்கத்தான் இந்த இயக்கத்தில் சேர்ந்தனீர்கள் என அடிக்கடி நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. இரவி இயக்கத்திலிருந்த நண்பர்களோடு முல்லைத்தீவுக் காட்டிற்குள் புகையில்லாது சமைத்த கதை எங்களிடையே பிரசித்தமானது. சிலவற்றை எவ்வளவு முயன்றாலும் ஏற்கனவே முடிந்தவற்றை மீளக் கொண்டுவருதல் என்பது கடினமானது. எனினும் 'வைகறை' ஏதேனும் ஒருவடிவத்தில் மீள வந்தால் மகிழ்ச்சியாகவே இருக்கும். 'வைகறை'யில் எழுதியவன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையுண்டு. *************
  16. இன்னுமொரு திருவள்ளுவர் மண்டபம் மாவிட்ட புரத்தில் அடுத்த மாதம் திறக்கின்றனர் அதற்கு பிரதம விருந்தினர் டெல்லி உச்சநீதிமன்ற நீதியரசர் ....என்ன தான் நடக்கின்றது வட மாகாணத்தில் கடைசியில பதில் தலிவர் சொல்லி இந்தியா பெயர் மாற்றிவிட்டினம் என புரூடா விடுயினம் ...இவையின்ட அறிக்கைதான் கடைசியில் வந்தது ..இன்னும் 13 திருத்தத்தை அமுல் படுத்த முடியவில்லை அதில வேற பெயரை மாற்றி போட்டினமாம் என்று கொக்கரிப்பு ..
  17. யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பது போல் உக்ரேன் யுத்தம் நிறுத்தப்படணும். மத்திய கிழக்கில் அமைதி நிலவணும். அதுதான் உலக பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கும் 🙏
  18. எப்புடி...கனடாவைப் பற்றி குறி சொல்ல முடிகிறது
  19. தொடராக வாசிப்பது, அதையொட்டி சிந்திப்பது, பின்னர் சுருக்கமாக, ஆனால் தெளிவாக அதை வெளிப்படுத்துவது என்பது ஒரு பெரிய செயற்பாடு. அவை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், எங்களின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத்துகள் உடையவர்களிடம் இருந்து வந்தாலும் கூட, மிகவும் மதிக்கப்பட வேண்டிய, கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய கருத்துகள். அதே வேளையில், காணொளிகள் தான் கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படைகளும், ஊடகங்களும் என்றால், அதை இலகுவாகக் கடந்து போய்விடலாம். பாரிசாலனும், ஒரிசா பாலுவும், மன்னர் மன்னனும் தான் தமிழ் ஆய்வாளர்கள் என்றால், அது நாங்கள் ஐராவதம் மகாதேவன் போன்ற முன்னோடிகளுக்கு மட்டும் இல்லை, தமிழ் இனத்திற்கே செய்யும் நிந்தனை.
  20. சரி…சரி… பழைய ஆட்களை எல்லாம் கூட்டி வந்து, புதிய ஐடிக்களை உருவாக்கி, சீமான் ஆதரவு அலை 2 ஐ யாழில் உருவாக்கும் ஒரு திட்டம் கைவருவது போல தெரிகிறது🤣. எத்தனை பேரையும் கூட்டீட்டு வாங்க, ஒத்த ஐடியில் நிண்டு ஓட, ஓட விரட்டுவோம்🤣
  21. பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை! Jan 24, 2025 பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். பெரியார் குறித்து தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய ஆதரவு அமைப்புகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டின் முன் முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்படி இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில் பழ.நெடுமாறன் இன்று (ஜனவரி 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை. 2009ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது. சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/please-stop-defaming-against-periyar-and-prabhakaran-pazha-nedumaran-warning/
  22. 🤣................ இதை பல திரிகளில் பார்த்திருக்கின்றேன், பையன் சார்.............. இப்படி இலேசான விடயங்களும் இடையில் வந்து போகும் போது, சில வேளைகளில் திரிகளில் மனக்குறைகள் ஏதும் ஏற்பட்டிருந்தால், அவை காணாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு போல........... என்னுடைய சுய ஆக்கங்களுக்கும் இப்படி நடக்கின்றது............ அது எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.................❤️.
  23. குருநாதா யாழில் என்ன‌ காமெடி தெரியுமா திரி தொட‌ங்கும் போது திரி ப‌ற்றி விவாதிப்ப‌து திரி ப‌ல‌ ப‌க்க‌த்தை தாண்டின‌ பிற‌க்கு திரிக்கு ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாத‌ க‌தைக‌ளை க‌தைப்போம் லொள்😁............................
  24. 👍............... இப்படித்தான் சொல்லுகின்றார்கள், கிருபன். ஆனால், ஏதோ பிரச்சனையாகி விட்டதே என்று எல்லா வாடிக்கையாளர்களும் கதறிக் கொண்டிருக்கும் போது, என்னவென்று விழுந்தடித்து போய் பார்த்தால், சில சர்வர்களில் சிபியு 90 வீதத்திற்கும் மேலே போய் கடைசி மூச்சை அவை விட்டுக் கொண்டிருக்கும். இது என்ன கோலம் என்று உள்ளே தோண்டிக் கொண்டு போனல், மூல காரணம் அநேகமாக ஒரு long running SQL/Database query ஆக இருக்கும். 28 வருடங்களாக இங்கு வேலை செய்கின்றேன், எந்த தொழில்நுட்பம் வந்தும் இது மட்டும் மாறவே இல்லை...............
  25. Salesforce கேள்விப்பட்டீர்களா? ChatGPT யிடம் கேளுங்கள். நல்ல மார்க்கற். நான் அங்க பாய்ந்து விட்டேன்.
  26. சுக நலத்துக்கு குறைவில்லை. ஆனால் வேலைப் பளுதான் அதிகம். மீள் வரவுக்கு மகிழ்ச்சி.
  27. அட, சரியா சொன்னியள். திண்ணை மூடீன கடுப்பீல தான், ஒருவருசமா வரேல்ல!! 🤗
  28. அன்று சுவிஸ்நியோநாசிகளினால் வெறுக்கப்பட்ட தமிழர்களின் பிள்ளைகள் நல்ல முறையில் படித்து சுவிஜ் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  29. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு Published By: VISHNU 25 JAN, 2025 | 09:57 PM மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாகவும் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மாணவர்கள் அனைவரும் இன்று துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுகள் மற்றும் மாணவர்கள் பழிவாங்கப்படுதல்கள் தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவை தனது கூடுதல் கவனத்தை வரும் காலத்தில் செலுத்தும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் போது பேரவை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204892
  30. விஜி அண்ணின்னு யாரோ பெரியவாள் வீடியோ ரிலீசாம் கூட்டம் அங்க அலைமோதுது. நீங்க புள்ளினம், வல்லினம், வண்ணத்து பூச்சி பத்தி பேசுறீங்க... தொடரட்டும் இந்த மென்மை ✍️
  31. இவர்களைப் பார்த்தா பணயக்கைதிகள் மாதிரி தெரியலையே. ஒலிம்பிக் மெடல் வென்றவர்கள் போலல்லவா இருக்கிறார்கள். வாடிவதங்கிப் போய் வருவார்கள் என்று தான் எண்ணியிருந்தேன்.
  32. உலகில் நாட்டுடன் நாடு போர் செய்வதால் ....பிணந்தின்னிக் கழுகுகளும் காத்திருக்கின்றன வகை தொகையின்றி
  33. சரியாக சொன்னீர்கள்…. சிலர் அவர்களையே சீமான் கேவலமாக தே.பை என பேசினாலும் முட்டு கொடுக்க தயராகவே இருப்பார்கள் என நினைக்கிறேன் 🤣. # முரட்டு முட்டு
  34. 1. எப்போதும் ரெக்கோர்ட் டான்சிற்கு சேரும் கூட்டம், திருக்குறள் பேச்சு போட்டிக்கு கூடுவதில்லை. இது வழமையான ஒன்றே 2. தேவைக்கு அதிகமாக காணொளிகளை இணைப்பது - வாசிக்க வருவோரையும் வராது பண்ணி விடும். 3. எனக்கு 50 க்கு கீழேதான் (அதிக வருடங்கள் இல்லை) - ஆனால் 30 வயது ஆட்களும் யாழில் இருக்கிறார்கள். ஆனால் யாழ் அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்களுக்கானது, 30 க்கு கீழ் பட்ட புலம்பெயர் பிள்ளைகள், 2ம் தலைமுறை. அவர்கள் டிக்டொக், இன்ஸ்டாவில் கூட தமிழ் சம்பந்தமாக, ஈழம் சம்பந்தமாக மினெகெடுவதில்லை. அவர்கள் வாழ்க்கை, போக்கு, சூழல் வேறு. யாழில் தமன்னாவை கொண்டு வந்து நடனம் ஆடவிட்டாலும் இது மாறப்போவதில்லை. 4. சும்மா, சும்மா நிர்வாகத்தை குறை சொல்லி பயன் இல்லை. மிக தெளிவான விதிகள் உள்ளன. அவற்றை மீறி விட்டு அல்லது நாம் கொட்டும் குப்பைகளை நிர்வாகம் தூக்கினால் - ஓடுவது, பின்னர் நிர்வாகத்தை குறை சொல்லும் ஒரே நோக்கத்துக்கு மட்டும் லாக்-இன் ஆவது. நிர்வாகம் ஆரம்பத்தில் தூக்கிய என் கருத்துகளை சேர்த்தால் ஒரு சின்ன புத்தகமே அடிக்கலாம். அந்தளவுக்கு என் உழைப்பு மண்ணாகியுள்ளது. பலத்த உழைப்பின் பின் முறிந்த பனை தரவேறிய போது சில நொடிகளில் அழிக்கப்பட்டது. நீதிபதியின் தீர்ப்பு எப்போதும் சகல தரப்பையும் திருப்தி படுத்த முடியாது. அப்படித்தான் இதையும் எடுக்க வேண்டும். குறித்த நிர்வாகி பாரபட்சமாக நடந்தால் - அதை உள்ளே இருந்தபடியே கேள்வி கேட்கலாம். நான் கேட்டிருக்கிறேன்.
  35. வார்த்தை தடித்தமைக்கு மன்னிப்பு கோருகிறேன், கருத்துக்கு அல்ல. யாரையும் சேறடிப்பதோ, நாறடிப்பதோ, விரட்டுவதோ என் நோக்கம் அல்ல…. ஆனால்…அவர்களாகவே தம் agenda வை காட்டி அதன் பின் யாழில் முகம் காட்டமுடியாது ஓடிப்போனால் அதற்கு நான் பொறுப்பல்ல.
  36. முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கத்தின் செயற்பாடுகள் சரியா இல்லை. அவர்கள் நல்ல நோக்கம் கொண்டவர்களாக இருந்தால் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை அப்படியே இருக்க விட்டுட்டு இந்தியா திருவள்ளுவர் பெயரை யாழ்பாணத்தில் பதிக்க விரும்பினால் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்று புதிதாக மண்டபம் ஒன்று கட்டும் படி போராடி இருக்க வேண்டும்
  37. இதை தான் ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்கிறேன். தேவையற்று நாம் பிரிந்து எனக்கு இசையும் நீங்களும் முக்கியம் பெரியார் சீமானை விட. அதனால் தான் யார் என்ன சொன்னாலும் மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்கிறேன். அவை சால்வையாகவோ விளம்பரங்களாகவோ நீங்கள் சேறடித்தால் நாறப்போவது விசுகு அல்ல. எமது ஒற்றுமை மட்டுமே.
  38. புது வரவு நல்வரவாகட்டும். யாழை அபசுரம் வராது இனிமையாக மீட்டுங்கள்.🙌
  39. மேலும் பல செயலதிசயங்களும் வரவிருப்பதாக புதிய அரசினது விசிறிகள் காத்திருக்கிறார்கள்.
  40. சீமான் அரசியல் செய்கிறார் என்று நான் கூறவில்லை. அரசியல் வியாபாரம் செய்து பிழைக்கிறார் என்று தெளிவாக கூறியுள்ளேன். காசாவின் அண்மைய அழிவுகளுக்கு கமாஸ் பயங்கரவாதிகள் கொள்ளிக்கட்டையை சொருகியதும் காரணம். இத்த பட்டறிவு கமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும். இஸ்லாமிய நாடுகள் பொருளாதாரத்தில் பலமாக இருந்ததும், அதன் அடிப்படையில் தமது அரசியல் ஆளுமையை பயன்படுத்தியதுமே காசாவில் யுத்த நிறுத்தம் ஏற்பட காரணமே தவிர மக்கள் போராட்டம் அல்ல. இத்தனை பலமாக இஸ்லாமிய நாடுகள. இருந்தும் பாரிய அழிவுகளின் பின்னரே யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. அரசியல் அதிகாரமற்ற ஒரு மாநில மக்களால் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியும் என்உ நம்புவது வடிகட்டிய அரசியல் பேதைத்தனமே. இந்த வகையான அரசியல் பேதைத்தனமே தமிழருக்கு அழிவுகளை கொடுத்தது.
  41. நீங்களே உங்கட தலையில கொள்ளிகட்டையை சொருகி அழிந்ததற்கு அடுத்தவர் எவரும் பொறுப்பு இல்லை. எவராலும் காப்பாற்ற முடியாது. இப்போது கூட சீமான் உங்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார் என்பதை கூட புரிந்து கொள்ள தெரியாத அரசியல் பேதைகள் அழிவை நோக்க செல்வதை உலகில் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
  42. புலிகள் இல்லை மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது புலிகள் இருக்கிறார்கள்..பயங்கரவாதச் சட்டம் தேவை....இலங்கை எங்கு போகிறது
  43. இதற்குப் பின்னர் மின்னம்பலம் இன்னொரு செய்தியை மேலதிக விபரங்களுடன் வெளியிட்டிருக்கின்றனர்: https://minnambalam.com/political-news/vengaivayal-chargesheet-cbcid-shocking-information/ கீழடியும், வேங்கைவயலும் அருகருகே இருக்கும் இடங்கள்............... இந்த சம்பவத்தால், இந்தப் பிரதேசம் எங்களின் தொன்மை என்று பெருமைப்படுவதா அல்லது இது என்ன கொடுமை என்று கூனிக்குறுகுவதா என்ற வினா கேட்கப்பட்டிருந்தது. இது பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட சாதியக் கொடுமை என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது. ஆனால் இறுதியில் பட்டியலினத்தவர்களே இதைச் செய்தார்கள் என்று முடிவு விசாரணையில் வந்திருக்கின்றது................😌.
  44. நான் யாழ்களத்திற்கு வர தொடங்கியதே இலங்கை தமிழ் செய்திகள் தமிழ் கட்டுரைகள் படிப்பதற்கு. காணொளிகள் வட்சப்பில் எனக்கு குழுவினர் அனுப்பினால் அவர்கள் குறிப்பிடும் நிமிடங்களை மட்டும் பார்ப்பது அல்லது ஓடவிட்டு சில நிமிடங்கள் மட்டும் பார்ப்பது தான்.மற்றய காணொளிகளை நீக்கிவிடுவேன்.
  45. இயற்கையின் அருமை புரியாதவர்கள் தடை செய்யப்பட்ட trawl boats னால் வரும் இயற்க்கை அழிவை தெரிந்து கொண்டும் செயற்படுகிறார்கள் . ஒரு நாள் மீன் வளம் அற்ற கடலை அந்த கடல் காண்பித்து கையை விரிக்கும் அப்ப தெரியும் ஏண்டாtrawl boats பயன்படுத்திய விளைவு . ஒ அந்த விழிப்பு உணர்வில் தான் இலங்கையின் வடகிழக்கு கடற்கரையோரம்உங்கள் மீனவர்களால் சூறையாடபடுகிறதா? ஆமை இறப்பை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது ஆர்வமுள்ளவர்களுக்கு https://www.independent.co.uk/asia/india/sea-turtles-olive-ridley-dead-tamil-nadu-chennai-b2682604.html
  46. பையன் சாரும், கோஷானும் நல்ல ஒரு காம்பினேஷன்............. வேலையில் தலைக்கு மேல வேலை என்று சொல்லி விட்டு, என்ன ஈ......... என்று சிரித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று கேட்டு விட்டுப் போயிருக்கா.............. இதோட ஜஸ்டினும், வாலியும் சேர்ந்தால், கமலின் சிரிப்பு படங்கள் கூட கிட்டவும் நிற்காது....................🤣.
  47. உது இப்பத்த தலைமுறைய போய்ச்சேராது.. 80/90 களுக்கு முன்னம் பிறந்தவர்களுக்கு ஓகே.. இப்பத்தே ஜெனெரேசனுக்கு வீடியோதான் ஈசியா போய்ச்சேரும் எண்டு நினைக்கிறன்.. இளைய தலைமுறையை அரசியல் மயப்படுத்த பழைய ரெக்னிக்கில மட்டும் தொங்கிக்கொண்டு இருக்கலாம் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொள்பவர்கள்தான் பிழைப்பார்கள்.. தக்கன பிழைக்கும்.. மாற்றம் ஒன்றே மாறாதது.. தலை உங்களில சந்தேகமா இருக்கு.. நேரம் கொடிக்கிடக்கிற ஒரே ஆள் நீங்கல்தான்..😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.