Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்16Points87988Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20012Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்5Points19122Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/11/25 in all areas
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025 குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK NZ BAN 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS SA ENG AFG 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், AUS அ ணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் AUS அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AUS 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rohit Sharma 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Mitchell Starc 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? J. BUMRAH 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் டுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? ROHIT SHARMA 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND4 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG 😁 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், AUS அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் AUS அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AUS 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rohit Sharma 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Mitchell Starc 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rohit Sharma 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND4 points
-
வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்! Mathivanan MaranUpdated: Tuesday, February 11, 2025, 7:21 [IST] ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளவன், அவரது தந்தை குயில்தாசன் உள்ளிட்டோர் அனைவருமே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பின்னர் எந்த ஒரு பொதுமேடையிலும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் பங்கேற்பது இல்லை. Also Read பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட குயில்தாசன் பொதுவாக அரசியல் மேடைகளில் பேசுவதும் இல்லை. திருப்பத்தூரில் பெரியாரிய ஆய்வறிஞர் ஆனைத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் பங்கேற்று பேசினார். "EPS ஆட்டம் முடிஞ்சது.. அடுத்து நடக்கப்போகும் பிரளயம்" - Theni Karnan பகீர் | ADMK | Sasikala | OPS இவ்விழாவில் பேசிய குயில்தாசன், பேரறிவாளன் கைது செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டார். அந்த துயர காலங்களில் துணையாக இருந்த பலரையும் நினைவுபடுத்தி பேசினார் குயில்தாசன். மேலும் திருப்பத்தூர் நகரம் எப்படி எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியாக இருந்தது என்பதையும் விவரித்தார் குயில்தாசன். அப்போது, தந்தை பெரியாரையும் ஆனைமுத்துவையும் எதிர்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; தங்களது பிள்ளைகளுக்கோ தங்களுக்கோ அரசு கல்வியிலும் பணியிலும் இடஒதுக்கீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள். பெரியாரையும் ஆனைமுத்துவையும் திட்டினால் அவங்க செய்ததை மட்டும் ஏற்றுக் கொள்வீர்களா? அதனால்தான் நீங்கள் விட்டுவிடுங்கள்.. மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். Recommended For You சினிமாவில் ஒரு நகைச்சுவை காட்சி வரும்..கொய்யால.. காசு கொடுத்ததற்கு மேல பேசுகிறார் என்கிற வசனம் வரும்.. அந்த மாதிரி பேசுகிறார்கள் (சீமான் பெயரை குறிப்பிடாமல்).. பெரியார் எனும் கிழவனும் சரி.. ஆனைமுத்து எனும் கிழவனும் சரி.. செய்துவிட்டு போன பணிகளால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்..ஏனெனில் நாய்களோடும் நரிகளோடும் பெரும் போராட்டம் நடத்துகிறோம்..ஒரு காலை நாய் கடிக்குது.. இன்னொரு காலை நரி கடிக்குது.. பெரியார் எனும் கிழவன் ஏன்தான் பிறந்து இப்படி சமூக சீர்திருத்தம் செய்தாரோ என நினைக்கத் தோன்றும் அளவுக்கு பேசுகின்றனர். https://tamil.oneindia.com/news/chennai/perarivalans-father-kuyildasan-slams-ntk-chief-seeman-for-remarks-against-periyar-679043.html டிஸ்கி புலம்பெயர் நாம்தற்குறிகள் நவ்: பேரறிவாளன் அப்பாவுக்கு சுடச் சுட ஒரு தெலுங்கன் பட்டம் பார்சல்!!!!2 points
-
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
இல்லை, அண்ணா, நான் இப்ப எதுவும் குடிப்பது இல்லை. ஆனால் பின்னுக்கு போய்ப் பார்த்தால், ஒரு பாட்ஷா இருந்தார், பம்பாயில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று ஒரு வரலாறும் இருக்கின்றது................🤣. 'நான் வேறு ஒன்றுமே கேட்கவில்லை. இதை மட்டும் தானே உங்களிடம் கேட்கின்றேன்.................' என்பது ஒரு தமிழ் வசனம் அல்ல, இது அவர்களின் ஒரு ஆயுதம்..........................🤣.2 points
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
அழைப்பிற்கு நன்றி சிறீ.🙏 குரங்கு மின்சாரம் செல்லும் கம்பியை தொட்டு அதன் உடல் மூலம் கடத்தும் இணைப்பு ஏற்பட்டால் மின்சாரம் பாய்ந்து(Arc discharge) இறக்க வாய்ப்பு அதிகம். மின் துண்டிப்பு(Trip) ஏற்பட்டால் மாற்று வழியில் மின்சாரம் வருமாறுதான் மின்சார வலையமைப்பு இருக்கும். ஓரிரு இடங்களில் குரங்கு சேட்டையால் மின் தடை ஏற்பட்டால் நகரங்களே இருளில் மூழ்கும்படியான மிக மோசமான மின்சார வலையப்பா(Electrical Transmission and Distribution Network) இலங்கையில் இருக்கு..? வாய்ப்பே இல்லை. எந்த நாட்டிலும் அப்படி வடிவமைக்க மாட்டார்கள்.2 points
-
‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!
உங்க ஊரில் முட்டை கிடைக்குதோ? விலையையும் ஏத்திவிட்டு முட்டையை கண்ணிலும் காட்டுறாங்கள் இல்லை. சரித்திரத்தில் தனது பெயர் பொறிக்கப்கடணும் என்று ரம் துடியா துடிக்கிறார்.2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்படித் தான் தம்பி முன்னரும் முனகிவிட்டு பஸ்சைத் தவறவிட்டு புறப்பட்ட பஸ்சை பயணிகள் கத்திக் குளறி ரைவர் @கிருபன் இடையில் நின்று ஏத்திக் கொண்டு போனது.2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் 5 நாட்களே உள்ளன. போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்த/ஆர்வம் உள்ள பலரை இந்தத் திரிப்பக்கம் காணவில்லை.. உங்கள் பதில்களை விரைந்து தந்தால்தான் பதில்களைத் தரவேற்றி போட்டி நடத்தமுடியும். இறுதி நேரத்தில் வந்தால் எல்லாம் பிந்தித்தான் நடக்கும்😀 @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி @ரசோதரன் @நந்தன் @பிரபா @நிலாமதி @சுவைப்பிரியன் @Ahasthiyan, @கந்தப்பு, @தமிழ் சிறி, @vasee, @வாதவூரான், @வாத்தியார், @kalyani, @புலவர், @theeya @கறுப்பி @P.S.பிரபா @முதல்வன் @நீர்வேலியான் @ரதி2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- பெயர் மாற்றம்
2 pointsஐயன்களே, அம்மைகளே, பொறுத்தருள்க. 🙏 கடந்த தடவை யாழ் களத்தின் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டின் பின்னர் எனது ""Kapithan"" எனும் பெயரில் நுளைவு செய்ய முடியவில்லை. அதற்கு எனது password மறந்துவிட்டதே மிகப் பெரும் காரணம். ஆதலினால் மீண்டும் கபித்தான் என்று தமிழில் உங்களுடன் சண்டையிட வரிந்து கட்டிக்கொண்டு வருகிறேன். பிழைகள் குழப்பங்கள் இருந்தால் மன்னிக்கவும். 🙏2 points- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
2 points- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.1 point- The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்!
The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்! எந்த போலித்தனமான, சினிமாத்தனமான template களும் இல்லாத, நல்லதொரு படம். அநேகமான அப்பாக்களும் மகன்களும் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் கட்டி இணைப்பதில்லை.. கொஞ்சுவதில்லை.. சேர்ந்து ஒரு வேளை சாப்பிடுவது கூட இல்லை. அப்படி அணைக்கும், hug பண்ண மனசு விரும்பும், சேர்ந்து உண்ணும் தருணங்களை போலி ego நிராகரித்து விடும். ஆனால் அப்படி செய்யாமல் விட்டு, அப்பாவை புரிந்து கொள்ளும் முயற்சிகளை வேண்டும் என்றே ego காரணங்களால் மறுத்தமையால் உருவாகும் காயங்கள் வலி மிகுந்தவை. ஆயுள் வரைக்கும் ஆறாதவை. நான் அந்த வலியை அனுபவிக்கின்றவன். இப் படத்தை பார்க்கின்ற ஒவ்வொரு மகன்களுக்கும் அந்த வலியை கடத்திச் செல்கின்றது இப் படம். Amazon Prime இல், IPTV யில் தமிழ் ஒலிப்பதிவுடன் உள்ளது. பாருங்கள்1 point- இடியப்பமும்.. முரல் மீன் சொதியும்.
மாசி மாதம் எண்டாலே... மாதகல் முரல் மீனுக்கு நாக்கு தவியா தவிச்சிடும்... ஓம் என் அன்பு மனைவீட பிறந்த கிராமம்... மாசி மாதம் வந்திட்டா பட்டுவோட அம்மப்பா சொல்லிட்டு திரிவார் தம்பி ஒரு நாளைக்கு முரல் வாங்குவம் எண்டு ஆனா என்ன விலையெண்டாலும் அஞ்சாறு நாள் வாங்கீடுவார்... சரி வாங்கோ கடக்கரைக்கு போவம்... அங்க தம்பி மார் கூம்பு வலைய கொண்டு ஏழுமணிக்கு கடலுக்கு போவினம் ஒரு ரெண்டுகடல் மைல் தூரம் போக நேரம் சரியா இருக்கும்... அப்ப பாத்து இளம் முரல் மீனுகள் வெளிச்சத்துக்கு துள்ளி பாய்வினம். அந்த நேரத்தில கச்சிதமா வலைய வீசி அள்ளீடுவாங்கள் தம்பி மார்...பிறகு ஒரு எட்டுமணி மட்டில கரைக்கு வரவே வாங்கின மீன் மாயமாகீடும்... அவைக்கு அவ்வளவு கிராக்கி.... சரி மீனை வாங்கிக்கொண்டு வீட்டை ஓடி வந்து மீனை கோடிப்பக்கம் கொண்டுபோய் ஒரு சட்டீல போட்டு அலசீட்டு அரிவாளில இருந்து செதில் அடிச்சு செட்டைய மண்ணில தடவி(வழுக்காம இருக்க) வெட்டி சொண்டையும் வெட்டி போட்டு பூவோட சொட்டு மேல் குடல உருவீட்டு வயித்த நெரிச்சு சரிமானகடையல உருவிட்டு நல்லா நாலு தண்ணீல அலசி கழுவினா மீன் சமையலுக்கு தயார்... சரியெண்டு குசுனீக்க போனா மனிசி சின்னவெங்காயம் இரு இருவது பல்லு ரெண்டா பிளந்த பச்சமிளகாய் ஒரு பத்து ஒரு தேங்காயில புழிஞ்சரரெண்டு வகை பால்(முதல் பால் கப்பிப்பால்) தயாரா இருக்கும்... அங்கால வெள்ளை புட்டு சிவத்தை புட்டு இடியப்பம் எண்டு அதுவும் சைட்டா கமகமத்துக்கொண்டு வேகும்.... 😍😍 இப்ப பெரிய மீன் ஒரு பதினஞ்சு முழுசா சொத்திக்கு எடுத்து வைச்சிட்டு பிஞ்சு மீன் ஒரு இருவது பொரியலுக்கு...😊😊😊 நான் அளவா உப்பு மஞ்சல் தூள் போட்டு பொரியல் மீனை பிரட்டி வடிய போட்டிருவன்.... அதுக்கு பிறகு கணக்கான மண்சட்டி ஒண்ட அடுப்பில வைச்சு அதுக்க வெட்டின வெங்காயம் மிளகாய் ரெண்டு பேணி கப்பிப்பால விட்டு மூடி போட்டு வேக விடுவன்... அதுக்க இதமான ரெண்டு பாட்டு பாட விட்டிருவம் பட்டுவும் அம்மப்பாவும் அம்பது தடவை குசுனீக்க வந்து நோட்டம் விட்டிட்டு போவினம்... சரி இப்ப மூடிய திறந்து உப்பு அளவா போட்டு மெல்ல மீனை அடுக்கு கப்பி பால முழுவதையும் விட்டு திறந்த படி மீனை வேக விடுவம்... முரல் வாசம் மூக்கை துளைக்கும் அப்பிடியே மனிசீட முகத்தை பாத்து லைட்டா சிரிச்சா காதலும் கூடவே ருசி சேர்த்திடும்... கொதிச்சு வர முதல் பாலை விட்டு அதில புற அகப்பையால மஞ்சல் தூள அமத்தி சாடயா துலாவிவிட்டா ஒரு தரம் கலர் வரும் பாருங்கோ... இப்ப ஒரு கொதியோட சொதிய இறக்கி அதுக்க ரெண்டு தேசிக்காய வெட்டி நல்லா புழிஞ்சு புழி விட்டா ஆ சொதி அசத்தீடும்... லைட்டா உள்ளங்கைல சுடச்சுட விட்டு நக்கினா அடடே அமிர்தமெல்லோ. மனிசியும் ஓரமா கைய நீட்டுவா கொஞ்சமெடுத்து ரொம்ப ஊதிட்டு அவவிட கையில விட்டா ஒரு குட்டிக் கையும் மேல நீளும் ஆருமில்ல பட்டுவோட குட்டிக் கை... சுடுமாத்தை மெல்ல எண்டு சொல்லு பக்குவமா அவாக்கு ஒரு சொட்டு மருந்து... பிறகு அடுப்பில ஒரு தாச்சி சட்டிய வைச்சு நல்லா காய விட்டிட்டு செக்கில ஆட்டின நல்ல நல்லெண்ணை மீனை மூடுற அளவுக்கு விட்டு கொதிக்க வைச்சிட்டு உப்பு மஞ்சல் ஊறி வடிஞ்ச மீனில ஒரு அஞ்ச ஒண்டா மெல்லமா அடுக்கி மூடி விட்டா... "டுப்பு டுப்பு எண்ட சத்தத்தோட தரமா பொரிஞ்சுவர மெல்ல அகப்பையால பிரட்டி விட்டு மத்தப்பக்கமும் பொரிய விட்டு எடுத்தா மீன் பொரியலு ரெடி... அப்பிடியே எல்லாரும் நான் மனிசி பட்டு அம்மப்பா தங்கச்சி எல்லாரும் ஒண்டா இருந்து புட்டு நிறைய சொதி ரெண்டு சொதி மீன் ரெண்டு பொரியல் எண்டு போட்டு வெளுத்து கட்டுறப்ப சொர்க்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்... இப்ப சீசன்... வாழ்க்கை வாழ்வதற்கே ஆதலால் நீங்களும் வாழ்ந்திடுங்கள் தோழர்களே... அன்புடன் கலைவாணன். Organic Farm-Jaffna1 point- காற்றாடி
1 point- காற்றாடி
1 pointகாற்றாடி - அத்தியாயம் நான்கு ----------------------------------------------- தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா, மாமி, அண்ணா, அக்கா, அப்பாச்சி, அம்மாச்சி, இப்படி ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லி அழைப்பதே வழக்கம் என்றாகியிருந்தது. முறை தெரிந்த சொந்தக்காரர்களை அவர்களின் முறையை வைத்தே அழைத்துக் கொண்டார்கள். ஒரு சில அரச உத்தியோகத்தர்களைத் தவிர, வேறு எவரையும் ஒரு உறவுமுறையில் இல்லாமல் குறிப்பட்டதாகவோ அல்லது அழைத்ததாகவோ ஞாபகமில்லை. தனம் மாமி சொந்தத்தில் மாமி இல்லை. இதே ஒழுங்கையில் அவரும் குடியிருக்கின்றார். வீடு நிறைய ஆண் பிள்ளைகளை பெத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றார். அவர்களில் இருவரைத் தவிர மற்ற எல்லோருமே அவனை விட வயது கூடியவர்கள். பெண் பிள்ளை ஒன்று வேண்டும் என்றே, அடுத்து அடுத்து ஆண்பிள்ளைகளை சளைக்காமல் பெற்றதாக தனம் மாமி சொல்லியிருக்கின்றார். அவனின் வீட்டில் ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் மாறி மாறிப் பிறந்திருந்தார்கள். அவனின் வீட்டில் வேறு ஒரு கொள்கை வழியில் பெற்றிருக்கின்றார்கள் போல. 'என்ன, மூத்தவன் படிப்பை நிற்பாட்டி விட்டானாம்.................' என்று ஆரம்பித்தார் தனம் மாமி. அவனின் அம்மா பரீட்சை அன்று கடுமையாக மழை பெய்ததால், அவன் பரீட்சைக்கு போகவில்லை, அதனால் படிப்பு நின்று போனது என்று ஒரு வெள்ளந்தியாக கதைக்கவில்லை. அம்மா அப்படிக் கதைக்கவேமாட்டார். அவர் பிடி கொடுக்கவேமாட்டார். ஒரு ஆணாக பிறந்திருந்தால், அவர் எப்படியோ ஒரு பெரியாளாக ஆகியிருப்பார். பெண்ணாகப் பிறந்தபடியால், ஓட்டைகளில்லாத கறுப்பு புல்லாங்குழல் போல இருக்கும் ஒன்றால் சர்வ காலமும் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கின்றார். அவனும் அதை ஊதிப் பார்த்திருக்கின்றான். ஒரு தடவை ஊதுவதற்கு பதிலாக, அடுப்புப் புகையை உள்ளே இழுத்துவிட்டான். இருமிக் கொண்டே ஊதுகுழலை கீழே போட்டு விட்டு, அதை திருப்பி எடுக்கும் போது, அதன் அடுத்த பக்கத்தில் பிடித்து தூக்கியும் விட்டான். எந்த வேலைக்கும் அனுபவம் மிகவும் முக்கியம். 'படிப்பு என்ன படிப்பு, படிக்காதவர்கள் தான் இன்று உலகத்தை ஆளுகின்றார்கள்............' என்று தொடர்ந்தார் தனம் மாமி. ஏட்டுச் சுரைக்காயில் எங்கே கறி வைப்பார்கள், கழனிப் பானைக்குள் யார் கவிழ்ந்து விழுகின்றார்கள், இப்படி இன்னும் சில உதாரணங்கள் ஒரு மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டன. அவரின் பிள்ளைகள் எவருக்கும், இதுவரை, இந்தப் பழமொழிகளையும், முதுமொழிகளையும் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேவையும் வரவில்லை. நாலு மனிதர்களுடன் மட்டும் பழகுகின்றோம், அந்த நால்வரும் ஒன்றையே சொல்கின்றனர் என்றால் முழு உலகமே ஒத்த குரலில் அதையே சொல்வது போன்றே இருக்கும். இன்று இலங்கையின் பெரிய பணக்காரராக இருப்பவர், அவர் படிக்கவேயில்லை, கொழும்பில் தெருத்தெருவாக பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தாராம் என்று தனம் மாமி இலங்கையில் உள்ளவர்களிலேயே பெரிய சாட்சியாக ஒருவரை கொண்டு வந்து நிறுத்தினார். 'பிறகு............... அவருக்கு என்ன லொத்தரே விழுந்தது...............' என்று அவனின் அம்மா ஆச்சரியம் காட்டினார். அம்மா கேட்பதைப் பார்த்தால், அந்தப் பணக்காரருக்கு லொத்தர் விழவில்லை என்பது அம்மாவிற்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது போன்றே அவனுக்கு தெரிந்தது. கடுமையாக உழைத்து, படிப்படியாக அவர் முன்னேறினார் என்று தனம் மாமி சொன்னார். தன்னுடைய மூத்த பிள்ளைகளும் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அதில் மூத்த அண்ணன் போன மாதம் இதே ஒழுங்கையில் இருக்கும் அக்கா ஒருவருக்கு கடிதம் கொடுத்து, அது பெரிய வாக்குவாதம் ஆகியது. அன்று இரவு அந்த அக்காவின் வீட்டிற்கு கல்லெறி கூட விழுந்தது. இரவு வெளியே வரப் பயந்து இருந்த அவர்கள், விடி விடியென ஆள் சேர்த்துக்கொண்டு அடிக்கப் போனார்கள். தனம் மாமி வீட்டில் என்ன நடந்தது என்றே தெரிந்திருக்கவில்லை. வேற யாரோ ஒரு கணக்குப் பண்ணி, அந்த அக்காவின் வீட்டிற்கு இரவு கல்லை எறிந்து விட்டுப் போயிருக்கின்றார்கள் போல. கொழும்பில் பேப்பர் பொறுக்கி, பின்னர் பெரும் பணக்காரராக ஆனவரும் முதலில் அவரின் சொந்த ஊரில் ஒரு கடிதப் பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பாரோ என்று அவன் நினைத்தான். அவனை அப்பொழுது தான் கண்ட தனம் மாமி, 'என்ன வேலைக்கு போகின்றாய்..................' என்றார். அவனின் அம்மா வயரிங் வேலைக்குப் போகின்றான் என்று சொன்ன அதே நேரத்தில், அவன் தான் தியேட்டரில் வேலை செய்வதாகச் சொன்னான். சில பின்னேரங்களிலும், இரவுகளிலும் அங்கே போய் தியேட்டரிலும் சும்மா நிற்கின்றவன் என்று அவனின் அம்மா, அப்படியே அவனை முறைத்துக் கொண்டே, சமாளித்தார். 'தியேட்டருக்கு எல்லாம் போகவே கூடாது, அங்கே தான் எல்லா கெட்ட பழக்கங்களையும் இந்தப் பிள்ளைகள் பழகுதுகள்...............' என்று சொல்லிக்கொண்டே மாமி நல்ல வசதியாக பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டார். மேடைப்பேச்சாளர் ஒருவர் தொண்டையைக் கணைத்து முழுவீச்சில் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பது போன்ற ஒரு நிலையில் மாமி இருந்தார். இன்று இரவு மாமி வீட்டிற்கு யாரும் கல்லால் எறிந்தால் பரவாயில்லை என்று எண்ணம் ஒரு மின்னல் போல தோன்றி மறைந்தது. புகை, குடி, கூத்து என்று பல கெட்ட பழக்கங்கள் வரிசையாக அடுக்கப்பட்டன. எல்லாமே தியேட்டரிலேயே ஆரம்பிக்குது என்றார். ஆனால், காதல், கடிதம் என்ற சொற்கள் மட்டும் வரவேயில்லை. நல்லதோ, கெட்டதோ வெளியில் தான் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. எந்த மனிதனும் கொஞ்சமாக கண்ணை மூடி அவனுக்குள்ளே எவைகளையும் தேடுவதில்லை. (தொடரும்.........................)1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல் பதிஞ்ச பதிவை கொப்பி பண்ணி விட்டு அந்த மூன்று கேள்விக்கும் கலர தெரிவு செய்தால் சரி ஈசியா செய்யலாம் அண்ணா👍................1 point- சுழற்சி முறையில் இனி நாடெங்கும் மின்வெட்டு!
புத்தர் உலக மக்களுக்கு ஒளி கொடுக்க உழைத்தார்....நம்ம சிறிலங்கன்ஸ் புத்தருக்கே ஒளி கொடுக்கிறாங்கள் ...1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரோசக்கண்டு சொன்னவுடன் களத்தில் குதித்து விட்டார்.1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Bank transfer ஆ மணிஓடரா என்பதை தனிமடல் இடவும்🤣1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆனால் நெடுநாட்கள் ரைவருக்கு அருகில் முன் சீட்டுகளில் இருந்து எல்லோரையும் கதிகலங்க வைத்தவர் என்பதையும் மறக்கக் கூடாது .......... வீரப்பையனே வீரம் எல்லாம் தொலைத்து போர்க்களத்தில் இராவணன் போல் பம்மிக் கொண்டு இருந்தவர் ..........! 😂1 point- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
நமது யாழ்.களத்து... மின்சார பொறியியலாளர் @ராசவன்னியன் அவர்களை, உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂 ஸ்ரீலங்காவில் மின்தடை ஏற்பட்டால்.... குரங்குகளில் பழியை போட்டு அரசியல்வாதிகள் தப்பித்து விடுகின்றார்கள். இது உண்மையா... என கண்டறிந்து சொல்லுங்கள் வன்னியன் சார். 🤣1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
1 point- பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
1 pointபெரியாரிய சிந்தனையாளர் பிரபு அவர்களின் முகநூலில் இருந்து.. புத்தகங்களும் சில கோழி முட்டைகளும் – நிகழ்வின் முதல் பகுதி இலண்டனில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வரும் தோழர்கள் இணைந்து, “பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள்” குறித்த ஒரு உரையாடலை கடந்த சனிக்கிழமை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளோம் என்பதை முதலில் பெருமையுடன் பகிர்கின்றோம். இந்த நிகழ்வு தடுத்த நிறுத்தப்பட்டதாகப் பொய்யான் பிரச்சாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் தாங்கள் இந்த நிகழ்வை தடுத்து நிறுத்தி வெற்றிக் கண்டுவிட்டதாகவே கூச்சலிடுகின்றனர். ஒரு சனநாயகமற்ற தன்மையை மேற்கோள்காட்டி அதுவே தங்களது வெற்றியென கூறும் இவர்கள் யார்? வேறு யார் சீமானின் ஆட்கள்தாம். இலண்டனில் உள்ள பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் மற்றும் தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்புகள் இணைந்து தமிழர் தலைவர் – தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள் – விளக்கமும் உரையாடலும் என்ற தலைப்பில் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். இலங்கைச் சார்ந்த தோழர்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த தோழர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சமகால அரசியல் சூழலில் பெரியாரிய சிந்தனைகள் குறித்து உரையாடுவது தங்களது கடமை என்ற நிலைப்பாட்டில் நண்பர்கள் ஒன்றுகூடினோம் என்றே சொல்ல வேண்டும். நிகழ்வில் எம். பெளசர் (பதிப்பாளர், செயற்பாட்டாளர்- இலங்கை), கல்வியாளரும் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான மலையகத்தின் பதுளைப் பகுதியைச் சேர்ந்த மு.நித்தியானந்தம் அவர்கள், நித்தியானந்தம் தோழரின் துணைவியார் மீனா அவர்கள், சிறார் எழுத்தாளர் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர் பிரபு அவர்கள், ராகவன் (பெரியார், அம்பேத்கர் ஈடுபாட்டாளர்- செயற்பாட்டாளர்- இலங்கை), மயூரன் (பெரியாரிய செயற்பாட்டாளர்- இலங்கை) , தோழர் வேலு(இடதுசாரி செயற்பாட்டாளர்-தமிழ்நாடு) அவர்கள், தோழர் பாரதி அவர்கள் அங்கு கூடியிருந்தோம். நிகழ்வு தொடங்கும் நேரத்தில் கும்பலாக(20-25 நபர்கள்) அந்தப் புத்தக அரங்கில் வந்து அமர்ந்துகொண்டு நக்கல் செய்யும் தொணியில் பேசிக்கொண்டிருந்தனர். அனுமதிகூட கோரமால் அங்கு தங்களது போனில் வீடியோவும் எடுத்தனர். “தமிழர் தலைவர்” என்ற தலைப்பின் மீது தங்களுக்கு விமர்சனம் இருப்பதாகவும் அதுகுறித்து உரையாட வந்துள்ளதாகவும் கூறினர். நிகழ்வின் ஏற்பாடுகளை நாங்கள் தொடர, அவர்கள் எங்களது செயல்களை கிண்டல் செய்யும் தொணியில் பேசிவந்ததை நாங்கள் ஆரம்பம் முதலே எச்சரித்துக் குறிப்பிட்டோம். நாங்கள் நடத்தும் இலக்கிய நிகழ்விற்கும் அல்லது அரசியல் சார்ந்த உரையாடல் நிகழ்விறகும் எந்த ஒரு நிகழ்விற்கும் ஒரு ஒழுங்கியல் உண்டு என்பதையும் அதனை இந்த நிகழ்விலும் நாங்கள் கடைப்பிடிப்போம் என்று அறிவித்தோம். இன்றைய நிகழ்வில் ஐந்து ஆளுமைகள் வெவ்வேறு தலைப்புகளில் பேச இருக்கின்றனர், உரைகளில் எந்த ஒரு குறிக்கீடும் இருக்க கூடாது என்றும், உரை முடிந்த பிறகு கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கப்படும், அதில் ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு மட்டும் இடமளிப்போம் என்ற அறிவிப்போடு நிகழ்வைத் தொடங்கினோம். நிகழ்வின் தொடக்கவுரையை எம். பெளசர் (பதிப்பாளர், செயற்பாட்டாளர்- இலங்கை) அவர்கள் தொடங்கியதுமே, நிகழ்வை “அகவணக்கம்” செய்து தொடங்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். நிகழ்வின் ஏற்பாட்டளர்களான தோழர்கள் அனைவரும் “இது நாங்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வு, இதை நாங்கள் எங்கள் வழியிலே வழிநடுத்துவோம்” என்று பதிலை கூறியபோதும். அவர்களது அகவணக்கத்தை உரக்க கூற முயறிசித்தனர். ஆனால் அதனை நாங்கள் அனுமதிக்கவில்லை. இதனிலிருந்து அவர்களது கூச்சல் தொடங்கியது. வந்தவர்கள் தங்களை சீமானின் நாம் தமிழர் ஆதரவாளர்களான ஈழ தமிழர்கள் என்றனர். இந்த நிகழ்வை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அவர்கள் அங்கு வந்திருந்தனர். சீமானின் சமீபத்தின் பெரியாரிய அவதூற்களின் மறு ஒளிப்பரப்பு செய்யும் வேலைக்காகவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். உண்மையில் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களின் காட்சியே அவர்களது நோக்கங்களைச் சற்று ஆட்டம் அடைய வைத்தன என்றே சொல்ல வேண்டும். அக வணக்கம் வைக்காத நீங்கள் தமிழரா? இந்ந்தப் பெரியார் தமிழரா? என்ற கூச்சலிட ஆரம்பித்தனர். தமிழராகிய எங்களுக்கு பெரியார் தலைவரே என்று நாங்கள் பேச. அவர்கள் பிறப்பின் கூறுகளை ஆராயத் தொடங்கிவிட்டனர். ஒருவரை மலையாளி என்றும், ஒருவரை தெலுங்கர் என்றும், “சரியான தமிழச்சிக்கும் தமிழனகுக்கும் பிறந்த” என்ற சீமானின் அந்த நாகரீகமற்ற பேச்சுகளை மட்டுமல்லை தூய்மைவாதம் இனவாதம் என அவர்கள் எந்தவித அடிப்படை நாகரீகமுமின்றி கத்த ஆரம்பித்தனர். அங்கிருந்த பேச்சாளர்கள் யார்? மூத்த எழுத்தாளர், மலையக மக்களுக்கு செயல்படும் மு. நித்தியானந்தம் போன்றவர்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரியார் வேசி என்கிறார்…நீங்கள் எல்லாம் தமிழரா என்ற ஒரே கூச்சலிட, அந்த கூட்டத்திடம் மனுதர்மம் என்று நாங்கள் நிதானமாகக் கூறியது எதுவும் அவர்கள் காதுகளுக்கு எட்டவில்லை. நமது குழிவிலிருந்த பெண் தோழர்கள் விடாது அவர்களை எதிர்த்து பேசியதையும் அவர்களால் பொறுத்துகொள்ள இயல்வில்லை. இறுதியில் பெண்கள் மீதான வசைச் சொல்லையும் நடத்தைகளுமே அவர்களிடமிருந்தது. நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த சில பார்வையாளர்களை இந்தக் கூட்டம் உள்ளே நுழையவிடாமல் வெளியிலே நிறுத்தியுள்ளனர். நிறுத்தியவர்களிடம் முட்டைகள் இருந்ததாகவும் நண்பர்கள் எங்களுடன் பகிர்ந்தனர். நாங்கள் பலநூறு புத்தகங்களுடன் உரையாட காத்திருக்க அவர்களிடமோ சில கோழி முட்டைகளே இருந்தன என்பதே நிதர்சனம். தமிழ் மொழி மீது யார் அக்கறைக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதில் பங்குபெறுபவர்க்களின் தமிழ் பங்களிப்பு என்ன? என எதையும் இந்தக் கூட்டம் அறிந்திருக்காத போது, பெரியாரின் எழுத்துகளை இவர்கள் எங்கு அறிந்திருக்க முடியும். அங்கு நடந்த அனைத்தும் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தின் சனநாயகத்தன்மையற்ற போக்கிற்கு அவர்களது உடல்மொழியும், கூச்சலும் கூப்பாடும் சாட்சியாக இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். அவர்களின் அடாவடித் தனத்தினை நமது தோழர்கள் மிகுந்த பக்குவமாகக் கையாண்டிருப்பதும் அந்த வீடியோவிலையே இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் மனித மாண்பின் எல்லைகளை மதித்து நடந்த நமது தோழர்கள் சனநாயக முறையிலே இந்தக் கூட்டத்தைக் கையாண்டோம். இலண்டன் காவல் துறையினருக்கு தகவல் அளித்தோம். காவல் துறையினர் அங்கு வரும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. காவல்துறை வந்தபிறகான அவர்களது உடல்மொழி முற்றிலும் மாறியிருப்பதையும் கவனிக்க முடியும். காவல்துறையும் புத்தகங்களோடு நாங்கள் இருப்பதைப் பார்த்ததுமே கூச்சிலிடுபவர்களை விலக்கினர். அதில் சீமான் குழுவில் ஒருவர் தான் நிகழ்வு ஒருங்கிணப்பாளரின் நண்பர் என காவல்துறையிடம் கூறுவதையும் கவனிக்க முடியும். காவல்துறையினர் எங்களிடம் விசாரித்த போதும், சமூகவியல் சார்ந்து உரையாடும் வாசகர் வட்டத்தின் எங்களது உரையாடலை தொடர்ந்த நடத்தவே நாங்கள் முற்படுகிறோம் என்றதும். அவர்கள் அவர்களை வெளியே அனுப்பினர். அதன்பிறகு எங்களது நிகழ்வு திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது. ஆனால் சனநாயகத்தின் எந்தவித அடிப்படை மாண்பையும் அறியாத இந்தக் கூட்டத்தின் போக்கு அவர்களின் கூச்சலோ எங்களது நிகழ்வை தடுக்கவில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம். எங்கள் தலைவர்..தமிழர் தலைவர் பெரியார் குறித்து நாங்கள் மட்டுமல்லை உலகத்திலும் இன்னும் ஆயிரக்கணக்கான தோழர்கள் உரையாட வரப்போகிறார்கள் என்ற அறிவிப்போடு இந்தப் பகிர்வை நிறைவு செய்கிறேன். https://www.facebook.com/share/15qQVghJxC/?mibextid=wwXIfr1 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
ஆக மொத்தத்தில் நமது மூன்று வருட H1B கனவு காலி. திரும்ப சிங்கையின் PR இற்கு தவமிருக்கவேண்டியது தான்1 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
ஆபிரகாம் காலத்தில் தொடங்கிய சண்டை ( கிட்டத்தட்ட 3800 வருடம் ) இன்றும் தொடர்ந்துகொண்டு உள்ளது. எங்கள் காலத்துக்குள்ளும் இது முடியாது.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- காற்றாடி
1 pointஎனக்கு ஆபிரிக்காவில் இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. கேள்விக்கும் விடைக்கும் தொடர்பே இருக்காது. தொடருங்கள் ரசோதரன்…!1 point- பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை!
1 pointபெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை! Yogeshwaran MoorthiUpdated: Saturday, February 8, 2025, 14:47 [IST] ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 63,984 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 13,945 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் திமுக முன்னிலை பெற்றுள்ளது. Also Read இதனால் திமுக தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தவில்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும். நிச்சயம் ஈரோடு பகுதியில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம்தான். இந்த இடைத்தேர்தல் மக்களிடையே எழுச்சி இல்லாத, உற்சாகமில்லாத தேர்தல். என்னை பொறுத்தவரை வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விடவும் மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாக பார்க்கிறோம். ஏற்கனவே திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்று தான். தொடக்கம் முதலே இந்த இடைத்தேர்தலுக்கு திமுகவும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் தான், மக்களை பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் நிகழவில்லை. Recommended For You இந்த தேர்தல் களத்தில் நான் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதேபோல் பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று நிச்சயம் கிடையாது. அந்த காலம் மாறிவிட்டது. பெரியாரை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். பெரியாரை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதற்காக வாக்கினை மாற்றி போடும் அளவிற்கு சக்தி இருக்கா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன் வைத்தார்கள். பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைதான் ஈரோடு உணர்த்தி இருக்கிறது. பெரியாரை கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது. ஒருவேளை பெரியாரால் தான் நாம் தமிழர் தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன். யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால் திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seeman-has-spoken-a-bit-too-much-against-periyars-thoughts-says-bjp-state-president-annamalai-after-678343.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=678465-p8 டிஸ்கி தட் “வாங்கின காசுக்கு மேலாலயே கூவீட்டாண்டா கொய்யால” மொமெண்ட்1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
The ICC has set February 11 as the deadline for teams to submit their final 15 after which any replacement needs the approval of the tournament's technical committee. இன்று தெரியும் ஆஸ்திரேலியாவின் காயப்பட்ட வீரர்களுக்கு பதிலாக யார் தெரிவு செய்யப்படுவார்கள். இந்தியாவின் Bumara விளையாடுவரா?1 point- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
இந்த ஊடகப் பேச்சாளரின் படம் அச்சா....அந்த உணர்வு...அச்சொட்டாக வெளிப்படுகிறது..1 point- "ஏனிந்தக் கோலம்"
1 point- "ஏனிந்தக் கோலம்"
1 point"உண்மையை உணர்ந்து உலகை அறிந்து பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி கண்கள் போகும் வழிகளில் போகாமல் பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!" இந்த வரிகள் பிடித்திருக்கு . ..........! 😁1 point- தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன, மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர்
சந்து மாமா சொன்னதன் சுருக்கம்: 1. விகாரை அப்படியேதான் இருக்கும். 2. மூச்சு காட்டாமல் இருந்தால் காணிகாரருக்கு ஏதேனும் தூக்கி போடுவோம், கவ்வி கொண்டு ஓட வேண்டும். 3. எதிர்த்து கதைப்பவர் எல்லாம் இனவாதி, மதவாதி அனுரகாவடிகள் விரைவில் அனுர தூக்குகாவடி ஆகுவார்கள் போல உள்ளது🤣.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் AUS 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND NZ PAK BAN 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ENG AFG SA 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், AUS அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? ENG 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? ROHIT SHARMA 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? BUMRAH 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்?VIRAT HOLI 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? BUMRAH 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? HARDIK PANDYA 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND1 point- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
1 point- பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
1 pointநன்றி சகோ1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா!
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா! உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50 சதவீதமும், பிரித்தானியாவில் 12 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளின் அரசியல் விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடுவதாலும், அந்நாட்டு அரச தலைவர்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்வதாலும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், டெஸ்லா கார்களை வாங்க மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அண்மையில் ஜேர்மனியின் சான்சிலர் ஓலாப் ஷோல்ஸை முட்டாள் என்றும், ஜனாதிபதி வால்டர் ஸ்டெய்ன்மியரை சர்வாதிகாரி என்றும் மஸ்க் சாடியிருந்தார். அதேபோல், ஜேர்மனியின் வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி.இ கட்சிக்கு மஸ்க் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இவரை ஐரோப்பிய அரசியலில் தலையிடுவதாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் பிரித்தானியாவிலும், அந்நாட்டு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கைகள் மற்றும் பிரக்சிட் தொடர்பாகவும் மஸ்க் விமர்சனம் செய்தார். இதுபோன்ற விமர்சனங்கள், இந்த நாடுகளின் மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக, டெஸ்லா கார்களை மக்கள் புறக்கணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகன சந்தையில், சீன நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டி, மின்சார வாகனங்களுக்கான மானியம் குறைப்பு ஆகியவையும் இந்நாடுகளில் டெஸ்லா கார்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. இதனால், டெஸ்லா கார்களுக்கு பதிலாக, போக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யூ.இ ஜாகுவார் மற்றும் மினி மின்சார கார்களை வாங்குவதில் ஐரோப்பிய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/14205841 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
2008 வேலையிடத்தில் ஒரு கண்டி சிங்கள பெண்மணி கூறினார், அனைத்து பிரச்சினைக்கும் காரணம் யு என் பி தான் என, அவர் ஒரு கடும் இனவாதியாக இருந்தார், அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதனை நியாயப்படுத்துவராக இருந்தார் எதனை ஆதரிக்கிறாய் என்பதில் கவனமாக இல்லாவிட்டால் இவ்வாறான அழிவுகளை தவிர்க்க முடியாது என தவறுகளை நியாயப்படுத்தும் ஒருவர். தற்போது புதிதாக வந்துள்ள அரசினை குற்றம் சாட்டுவதன் மூலம் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அநீதிகளை கடந்து செல்லும் முயற்சி, ஆனால் இதே மாதிரி ஒரு சூழ்நிலைக்கு உட்பட்ட எம்மவர்களால் கூட இவ்வாறான மனப்பான்மைக்குள் எவ்வாறு செல்ல முடிகிறது?1 point- பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம்
மனிதன் தன்னை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் விலங்குகளிடம் உள்ள ஒழுக்கமாவது இருக்கவேண்டும்!1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
அப்படி நீங்கள் பலடி அடிக்காது வாழ்ந்தால்தான் அதிசயம். இங்கிலீஸ் காரன் அதை ஒரு மொழியாகத்தான் பார்க்கிறான் அரைகுறைகள்தான் அதை அறிவாக பார்க்கிறார்கள். இந்த திரி முழுதுமே நீங்கள் செய்தது தனிமனித தாக்குதலதான் ஒரு உருப்படியான கருத்துகூட இல்லை. இந்த லட்ஷணத்தில்தான் தகுதி அறிவு பற்றியெல்லாம் பேசி இருக்கிறீர்கள்.1 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. sudumanalNovember 4, 2023 அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது! இவளவு இஸ்ரேலியக் குண்டுவீச்சுக்குள்ளும் மனிதவதைகளினுள்ளும் உணவு, நீர், மின்சாரம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வதைத்தும், கூட்டமாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு காஸாவுக்குள் துரத்தி அலையவிட்டும்கூட இன்னமும் அந்த மண்ணில் மக்கள் வாழ்கிறார்கள். வாழ்வை மீண்டும் கட்டியமைக்க அவர்கள் கட்டியமைக்கும் நம்பிக்கையோடு இடப்பெயர்வுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நிலம். இங்கிருந்து போக மாட்டோம் என்கிறார்கள். அது வாழத் தகுந்த நிலமா இல்லையா என்பதை அவர்கள் இரத்த சாட்சியாக உலகத்தின் முன் நிரூபித்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவோ இஸ்ரேலோ தீர்மானிப்பது ஜனநாயகமா என்ன. ஐநா உட்பட உலகின் பெரும்பான்மை நாடுகளும் சமூகப் புத்திஜீவிகளும் இந்த பழைய காலனிய ஒழுங்கின் மீள்வரவை எதிர்த்து கருத்துச் சொல்லியபடி இருக்கிறார்கள். ஜேர்டானும் எகிப்தும் இந்த 2 மில்லியன் பலஸ்தீன மக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ட்றம் கட்டளையிடுகிறார். அந் நாடுகள் மறுத்திருக்கின்றன. நெத்தன்யாகுவோ சவூதி அரேபியாவிடம் பெரும் தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அங்கு பலஸ்தீன நாட்டை அமைத்துக் கொள்ளலாம் என இன்னொரு கோமளித்தனத்தை முன்வைக்கிறார். இவ்வாறு ட்றம்ப் இன் அறிவித்தல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி தன்னும் இதற்கு எதிராக மூச்சு விடவில்லை. இது ஏன்?. பல்கட்சி ஆட்சிமுறை என்பது ஜனநாயகக் கட்டமைப்பில் அவசியமான ஒரு முறைமைதான். அது deep state நிலவுகிற அமெரிக்கா போன்ற நாடுகளில் எதையும் பிடுங்காது. ஏனெனில் அந்த deep state தான் வெளிநாட்டுக் கொள்கையை மாறாமல் வைத்திருக்கவோ அதன்வழியில் இற்றைப்படுத்தவோ செய்கிறது. அரசாங்கங்கள் அல்ல. அது பலம்படைத்த உளவு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள், சியோனிச லொபிகள், இலுமினாட்டிகள், இனமேலாதிக்க புத்திசீவிகள் போன்றவர்களால் state என்பது deep state வடிவம் எடுக்கிறது. அமெரிக்கா உலகம் பூராக நடத்திய போர்கள் இரு கட்சிகளாலும் நடத்தப்பட்டன. பல கட்சி ஆட்சிமுறையின் பன்மைத்துவம் என்பதை அந்த அரசு வடிவம் பொய்மையாக்கிவிடுகிறது. சுவிஸ் போன்ற நாடுகளில் பல்கட்சி ஆட்சிமுறை மேன்மைப்பட்ட நிலையில் இருப்பதற்குக் காரணம் இந்த deep state அற்ற தன்மைதான். 7 பேர் கொண்ட உயர் சபைதான் சுவிஸை ஆள்கிறது. அதுவும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு தலைவராக தேர்வு அடிப்படையில் வருகிறார்கள். மக்களுக்கான நேரடி ஜனநாயகம் கொண்டதாகவும் இருக்கிறது. சில விமர்சனங்கள் இருக்கிறபோதும் அந்த முறைமை பயனளிக்கும் வகையிலேயே செயற்படுகிறது. இந்த deep state முறைமைதான் இருபெரும் வல்லரசாக இருந்த அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையில் சமாதானம் என்பதை நிலைநாட்டிய கெனடியைக் கொன்றொழித்தது. 1962 இல் சோவியத் யூனியனின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் துருக்கியில் அமெரிக்கா நிறுவிய (அணுவாயுதம் உட்பட்ட) தளத்துக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் அணுவாயுத்தை நிறுவியது. அப்போது அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க சிஐஏ கெனடியை வற்புறுத்தியோது அதை அவர் மறுத்தார். சமாதான முயற்சியை முன்வைத்தார். அவரும் குருச்சேவ் உம் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். துருக்கியிலிருந்தும் கியூபாவிலிருந்தும் அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்பட்டன. அது அமெரிக்க deep state இனை மீறிய செயலாக அமைந்ததால் அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதுமான ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள், தலைவர்களை கொலை செய்தல் என இயங்குகிற deep state இன் முக்கிய தூண்கள் சிஐஏ உம் எப்.பி.ஐ உம் ஆகும். இப்பே ட்றம்பின் வருகைக்குப் பின் ஒரு சுவாரசியமான முரண் எழுந்துள்ளது. ட்றம் deep state க்கு எதிரானவராக இருக்கிறார். state என்ற வடிவத்தை அவர் பேண விரும்புகிறார். அதேநேரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை முழு அளவில் தனது கையில் மட்டுமே வைத்திருக்க விரும்புகிறார். சிஐஏ இலிருந்து பலரை வேலைநீக்கம் செய்திருக்கிறார். அந்த கட்டமைப்பினுள் ஊழல் நிலவுவதாகவும் பெருமளவு நிதியை அது விழுங்குகிறது என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். தனது முதலாவது ஆட்சிக் காலத்தின்போது தன்னை சுயாதீனமாக இயங்க விடாமல் செய்தது என்கிறார். இருந்தபோதும் அதையும் மீறி இந்த deep state வடிவத்துக்கு எதிராக அவரது முதல் ஆட்சிக்காலத்திலும் இருந்திருக்கிறார். அதனால் அவர் போர் எதையும் செய்யவில்லை. புட்டினோடு உறவாக இருந்தார். வடகொரியாவுக்கு விஜயம் செய்தார். இம்முறை ட்றம் கையில் எடுத்திருப்பது பொருளாதாரப் போரைத்தான். சீனாவினதும் ப்ரிக்ஸ் அமைப்பினதும் வளர்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தை சாய்த்துவிடலாம் என்ற அச்சம் அது. மீண்டும் அமெரிக்காவை மேல்நிலையில் நிறுத்துவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். இந்தப் பொருளாதாரப் போர் அரசியல் போர்களில்தான் முடியும் என பொருளாதார நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமான ஜெப்ரி சக்ஸ் கூறுகிறார். சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்த ட்றம்ப் தாய்வானை இன்னொரு உக்ரைனாக மாற்றும் நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. deep state இனை மறுத்து, அதற்கு பதிலீடாக தனிப்பெரும் தலைவராக தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து ட்றம்ப் செயற்படுவதும்கூட ஒன்றும் ஜனநாயகப் பெறுமதியைத் தரப்போவதில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். பொருளாதாரப் போர் அரசியல் போராக பரிணமிக்கும நிலைக்கு சாத்தியம் இருப்பதால், deep state முறைமைக்கும் ட்றம்ப் க்குமுள்ள முரண்பாடுகள் புஸ்வாணமாகியும் போகலாம். கனடா, மெக்சிக்கோ, சீனா என தொடங்கும் மோசமான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வந்தடையலாம் என ஏற்கனவே தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகிவிட்டன. டென்மார்க்கின் கிர்ின்லாண்ட் இனை வாங்க அல்லது அழுத்தம் கொடுத்து தனதாக்க ட்றம் புற்பட்டிருக்கிறார். பனாமாக் கால்வாயை மீள எடுக்கப் போகிறோம் என்கிறார். யமேய்க்கா BRICS இல் சேர தடைவிதிக்கிறார். தென்னாபிரிக்காவில் காணிச் சீர்திருத்த சட்டத்தை பயங்கரமானது என வர்ணித்து அந்த அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார். ட்றம்பின் வலதுகையும் தென்னாபிரிக்காவில் பிறந்தவருமான எலான் மஸ்க் இந்தச் சட்டத்தை இனவெறிச்சட்டம் என கேலிக்குரிய வியாக்கியானம் கொடுத்திருக்கிறார். 7.7 வீத வெள்ளையர்கள் தென் ஆபிரிக்காவின் 78 வீதமான விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர். நெல்சன் மண்டேலா சாதித்த அரசியல் விடுதலை காலத்திலிருந்து இன்றுவரை காணி மீள் பகிர்தல் என்பதை எந்த தென்னாபிரிக்க அரசும் சாத்தியமாக்க முடியாமல் திண்டாடுகிறது. அந்தளவுக்கு வெள்ளையின அதிகாரம் தென்னாபிரிக்க அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில் இப்போ தென்னாபிரிக்க அரசு கொண்டுவந்திருக்கிற காணிச் சீர்திருத்தச் சட்டத்தை இனவெறிச் சட்டம் என்று மஸ்க் சொல்வதையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. https://sudumanal.com/2025/02/07/கேட்டுத்-தொலைக்க-வேண்டிய/1 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
1 point- "கரை கடந்த புயல்"
1 pointதட்டச்சு தான், எனக்கு குரல் பதிவு பெரிதாக வராது, என் உச்சரிப்பு ஆங்கிலமோ, தமிழோ கொஞ்சம் பிழை உதாரணமாக ல, ழ, ள , அப்படியே ர, ற வித்தியாசமே இல்லை. சின்ன வயதில் அதைத் திருத்தக்கூடிய வசதி இருக்கவில்லை, என் அப்ப ஒரு சுருட்டுத் சுத்தும் கூலித் தொழிலாளி, எட்டு பிள்ளைகள், நான் ஏழாவது. என்றாலும் எல்லா ஐந்து ஆண்களும் சிறந்த பணிக்கு உயர்ந்தார்கள். நானே என் பாட்டில் மனதில் வாசித்து, விளங்கி ஒரு எல்லையைத் தாண்டினேன். ஓய்வின் பின்புதான் எழுதத் தொடங்கினேன். நன்றி1 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்! "....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020, it was a Democratic Party stronghold. This year, it flipped for President-elect Trump. For many in Dearborn, the war in Gaza played a deciding factor in their votes" https://www.npr.org/2024/11/08/nx-s1-5183216/how-trump-was-able-to-win-support-from-many-muslim-voters-in-michigan அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் 15 வாக்குகள் முக்கியமானவை. அமெரிக்க மாநிலங்களில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு நகரம், கவுன்ரி ஆகியவை மிச்சிகனில் இருக்கின்றன. கடந்த ஜனாபதித் தேர்தலில் பைடனோடு கோவித்துக் கொண்டு "மிகுந்த தூர நோக்கோடு" 😎 ட்ரம்பை பகிரங்கமாக இந்த மாநிலத்தின் சில முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்தார்கள். இம்மாநில முஸ்லிம் அமெரிக்கர்கள் சிலர், ட்ரம்புக்குப் போடாமல், ஆனால் கமலாவுக்கும் போடாமல் மூன்றாம் தரப்பிற்கு வாக்கை அளித்து, இறுதியில் ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்தார்கள். விளைவு இது தான்! ஒரு வருடம் அல்ல, ஒரு மாதத்திலேயே வீட்டு வாசலில் டெலிவரி! என் மனக் குரல் சொல்வது: "சாவுங்கடா".1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- பெயர் மாற்றம்