Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    38770
    Posts
  2. villavan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    137
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/05/25 in all areas

  1. இவ்வளவு பெரிய நாயா? திடுக்கிட்டுப் போனேன். அது ரொம்ப சாது, சொன்னார்கள் உறவினர்கள், நண்பர்கள், பெரியவர்கள். எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. உது தற்செயலாய் மிதிச்சாலே ஆபத்து அல்லவா? சாச்சாய், அப்பிடி நடக்கவே நடக்காது அரசியல் வல்லுநர்கள் ராஜதந்திரிகள் பாடம் எடுத்தனர். அதற்கு ஒரு மணம் இருந்தது. அது எங்கு போனாலும் அதன் மணம் முன் தோன்றியது பிறகு அதன் பின்தொடர்ந்தது... ஒரு நாள் அதன் எசமான் சூக்காட்டியதும் பாய்ந்து விறாண்டியது கடித்துக் குதறியது மற்றும் பல சொல்ல முடியாத அவலங்களையும் அரங்கேற்றியது. அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது... இப்போதெல்லாம் அது உலா வரும்போது, ஊரடங்குது, கதவடைக்குது, மூச்சும் அடைக்குது. இது நடந்து 38 வருசமாச்சு ஆனா அந்த மணம் இருக்கே இப்பவும் மூச்சடைக்குது. @ரசோதரன் அண்ணனுடைய ராணுவ ரகசியத்தின் மூலமாய் உந்தப்பட்ட சிறு படைப்பு .
  2. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ரச்சின் ரவிந்திராவினதும் கேன் வில்லியம்ஸினதும் செஞ்சுரிகளுடனும் க்ளென் பிலிப்ஸின் அதிரடியான 49 ஓட்டங்களுடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி சவாலான ஓட்ட இலக்கை அடித்தாட முடியாதவாறு நியூஸிலாந்து சுழல் பந்துவீச்சு இருந்தது. டேவிட் மில்லர் மாத்திரம் அடித்தாடி செஞ்சுரி அடித்தாலும் பிற வீரர்களின் ஒத்துழைப்பின்மையால் 312 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்த @சுவைப்பிரியன் க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. பாடும் போது நீ தென்றல் காற்று அவள் துன்பத்தின் குவியலாகக் காணப்பட்டாள். சீரற்ற முறையில் அள்ளிப் போடப்பட்டிருந்த போர்வைகளும், சில பைகளும் நிறைந்த ஒரு நீல நிற ஷொப்பிங் டிரொலிக்குப் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது உடலை ஒரு தடிமனான ஜக்கெட் மூடியிருந்தது. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள அவெலினோ நகரத்தின் வீதியில் யாருமற்று அவள் அநாதையாக இருந்தாள். என்ஸோ கோஸ்டான்சா என்பவர், வீதியில் வீடற்றவளாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை தற்செயலாகக் கண்டு கொண்டார். அவருக்கு அவளை யாரென்று தெரியாது. ஆனாலும் அவளுக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டுமென நினைத்தார். அவள் வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த கோலத்திலேயே ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். அவள் தெருவிலேயே தூங்கி அல்லல் படாமல் இருக்க, வீடற்றவர்களைப் பொறுப்பேற்று பராமரிக்கும் நிலையத்துக்கு அழைப்பை மேற்கொண்டு, அவளுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார். அவர்களும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள். ஆனால் அவள் யாருடனும் தான் போக மாட்டேன் என பிடிவாதமாக மறுத்து விட்டாள். அவளிடம் பேச்சை வளர்த்ததில் அவள் நெதர்லாந்தைச் சேர்ந்தவள் என்ற விபரம் மட்டும் தெரிய வந்தது. வேறு வழிகளில் அவளுக்கு உதவலாமா என, என்ஸோ அவளிடம் கதைக்க எத்தனித்த போது, அவள் அந்த இடத்தைவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள். "இன்று காலையிலிருந்து இவள் இலக்கின்றி அலைந்து திரிந்து கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறாள். தெற்கு இத்தாலியில் கடும் குளிர் நிலவும் காலம் இது. குளிரைத் தாங்கப் போதுமான உடைகளை அவள் அணிந்திருக்கவில்லை. என்னைப் போன்று பலரும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள். எல்லாமே வீணாகிப் போனது. யாருடைய உதவியையும் அவள் ஏற்பதாக இல்லை. என்னுடைய நகரத்தில் ஒரு பலவீனமான பெண் இத்தகைய சூழ்நிலையில் பல நாட்கள் வாழ்வது வேதனையைத் தருகின்றது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய இந்த நிலையை நான் அவமானமாக உணர்கிறேன்” என்ற நிலைத்தகவலை, தான் எடுத்த அவளது புகைப்படத்துடன் என்ஸோ பிப்ரவரி 21 அன்று முகநூலில் பதிவிட்டார். என்ஸோ பதிவிட்ட அந்தத் தகவல் பலன் கொடுத்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ரொபின் என்பவர் நெதர்லாந்தில் இருந்து என்ஸோவின் முகநூல் பதிவுக்குப் பதில் போட்டிருந்தார். அந்தப் பதிவில், “அவளது பெயர் ராணியா ஜெரிரி (39). 2008இல் யேர்மனியத் தொலைக்காட்சி ஒன்றில், ’யேர்மனி சுப்பர்ஸ்ராரைத் தேடுகின்றது’ என்ற பாடகர் நிகழ்ச்சியில், தெரிவு செய்யப்பட்ட பத்துப் பேரில் ஐந்தாவதாக வந்திருந்தவள்தான் ராணியா ஜெரிரி. ராணியா பாடகி மட்டுமல்ல ஒரு வானொலித் தொகுப்பாளரும் கூட. ராணியாவின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட அவள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டாள். அவளுக்கு ஒரு சகோதரன் இருக்கின்றான். அவன் நெதர்லாந்தில் வசிக்கின்றான். அல்ஜீரியரான அவளது தந்தைக்கு அவளுடன் எந்த தொடர்பும் இல்லை. மனச்சோர்வில் அவள் உட்கொண்ட மாத்திரைகளே அவளது இந்த நிலைக்கு காரணம் எனக் கருதுகிறோம்” என்றிருந்தது. ராணியா ஜெரிரியின் நண்பர் ரொபின், என்ஸோவுக்கு ஒரு வீடியோ பதிவையும் அனுப்பியிருந்தார். அதில், “உன்னைப் பெரிதும் தவறவிட்டு விட்டோம். நாங்கள், உன்னை நெதர்லாந்தில் பெரிதாகத் தேடினோம். நீ கிடைக்கவில்லை. உனக்கு உதவி ஏதும் தேவையெனில் நாங்கள் அவற்றைத் தரத் தயாராக இருக்கின்றோம். உனக்கு எங்களது உதவி ஏதும் தேவையில்லை என்று நீ கருதினால் கூட அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நீ எங்களுடன் உரையாடினால் போதும். அதனால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி கொள்வோம். உனது குரலைக் கேட்க பெரிதும் விரும்புகின்றோம்” என்றிருந்தது. அந்த வீடியோவை ராணியாவி டம் என்ஸோ காட்டிய பொழுது அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் என்ஸோ, அந் நகர மேஜரைத் தொடர்பு கொண்டு அவளது நிலைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். மீண்டும் ராணியாவிடம் இருந்து மறுப்பு வந்தது. “நான் என் சுய விருப்பில்தான் தெருவில் வசிக்கிறேன்” என்பது அவளது பதிலாக இருந்தது. பெப்ரவரி 24,25 இல் இரவு மீண்டும் கடுமையான குளிர். ராணியா குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளது மோசமான நிலையைப் புகைப்படம் எடுத்து மீண்டும் என்ஸோ முகநூலில் பதிய, அவரது நட்பு வட்டங்கள் ஒன்று சேர்ந்து உதவ முன் வந்தார்கள். இந்தமுறை ராணியா அசைந்து கொடுத்தாள். அவளுக்கான மருத்துவ உதவிகள், சூடான உணவு, தங்குவதற்கு ஹோட்டல் வசதிகள் கிடைத்தன. ராணியாவின் நிலையில் இப்பொழுது நல்ல முன்னேற்றம் வந்திருக்கின்றது. மார்ச் 1இல் இருந்து தொழில் அதிபர் ஒருவரின் வீட்டைப் பராமரிக்கும் வேலையை அவள் ஏற்றிருக்கின்றாள். இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் அவள் பாடலாம், நல்லதொரு வாழ்வை அவள் தொடரலாம். வீதிகளில் வீழ்ந்திருப்போருக்குப் பின்னால் பல வலிமிக்க கதைகள் இருக்கும். நாங்கள் அவர்களைக் கடந்து போகும் போது, எங்கள் அவசரங்களில் இதை எல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. என்ஸோ போன்றவர்களால் மட்டும் அது முடிகிறது. படங்கள் விக்கிபீடியா, முகநூல்
  4. முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி வீரர்கள் தொடர்ந்து நிலைத்து ஆடமுடியாததால் 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதாரணமான இலக்கை விராட் கோலியின் 84 ஓட்டங்களுடனும், கேஎல் ராகுலின் அதிரடியான 42 ஓட்டங்களுடனும் 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களை எடுத்து எட்டியது. முடிவு: இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 17 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. முதலாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @Eppothum Thamizhan மீண்டும் முதல்வராகியுள்ளார்! நிலைத்து நிற்பாரா?
  5. இலண்டனைச் சேர்ந்த ஈழப்பற்றாளரும்.. மார்ஸல் ஆர்ட்ஸ் வீரருமான, கென் சுதாகரன் அண்மையில் ஐரோப்பாவில் நடைப்பெற்ற Fight Star Championship போட்டியின் இறுதி போட்டியில் மிகப் பலமாக விளையாடி வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டார்! சகோதரருக்கு எமது வாழ்த்துகள் 👏 ஈழ மங்கை. -
  6. அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.. நம் கனவு அண்ணன் தயவால் பலிக்கும்🥳
  7. என்ன பொசுக்குன்னு இப்பிடி சொல்லி புட்டீக…. அண்ணைமார், தம்பி எல்லாம் ஆசுபத்திரி போகாத குறை🤣… மந்திரத்தை மறந்துட்டீங்க போல… “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எங்கே சொல்லு… திராவிடத்தால் வீழ்ந்தோம்… சிக்குமங்கு சிக்கு மங்கு சிக்கு பப்பா… உழைத்து வாழவேண்டும், திரள்நிதியில் வாழ்ந்திடாதே… யோவ் சும்மா இருங்கையா…ஒரு அளவுக்கு மேல நானே உண்மையை உளறிடுவேனோன்னு பயமா இருக்குயா…அவ்….
  8. இவர்களுக்கு இப்பதான் தெளிந்து இருக்கு. யாழ் இணையம் இதனை எப்பவோ வெளிப்படையாக அறிவித்து விட்டு ஒவ்வொரு வருடமும் மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்திக் கொண்டு வருகின்றது. போராடி வீழ்ந்த தலைவரின் மகள் துவரகாவினது சாவு பற்றியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லாவிடின் போலிகாக்களது பெருக்கம் கூடி விடும்.
  9. அந்த விளக்கத்தில் ஏதாவது உங்களுக்கு புரிஞ்சுதா? எனக்கு வாசித்ததும் சாக் அடிச்ச மாதிரி ஆச்சுது ........ கருத்துக்கு இத்தனை வறுமை இருக்கிறவர்கள் வேறு எதை எழுத முடியும்? இனி அப்பிடியே ஊரோடு சேர்த்து உள்ளே அடைக்க வேண்டியதுதான்
  10. ரசோவின் ராணுவ ரகசியத்தின் கசிவு வில்லவனையும் கவிதை புனையும் வல்லவன் ஆக்கி விட்டதை எண்ணி வியப்புறுகின்றேன் ....... இனியென்ன ஆரம்பம் நல்லா இருக்கு தொடருங்கள் ........! 👍
  11. ஏனய்யா..27ஆம் ஆண்டு சுய ஆக்கங்கள் பகுதிக்குள் பகிரலாம் தானேல.பரும் பார்ப்பார்கள் தானே.✍.,போற , வாற இடத்தில் யாரும் இப்படி நின்றால் யாரோடும் பேச மாட்டேன் ஆனால் வாத்தியங்கள் வாசித்துக் கொண்டு பக்கத்தில் ஏதாவது சின்ன பை வைத்திருந்தால் என்னிடம் எவ்வளவு இருக்கோ அவ்வளவையும் அவர்களது பைக்குள் வைத்து விட்டு போய் விடுவேன்.இது பொய், புரட்டு அல்ல உண்மை.
  12. ஆகஸ்ட் 2ம் திகதி அந்த நாள்.... எழுதி எழுதி தீராத ஒரு நாள் அது....... வள்ளங்கள் செய்யும் இடம், அங்கே மரம் அரியும் பெரிய கிடங்கு ஒன்று. சிறுவயதில் அங்கே தான் ஒளித்து பிடித்து விளையாடுவோம். மரம் அரியும் கிடங்கின் மேல் நீட்டுப் பக்கமாக பெரும் மரங்களைப் போட்டு, கிடங்குக்குள் ஒருவரும் மரத்தின் மேல் ஒருவரும் நின்று கொண்டு, பெரிய வாளால் மரங்களை நீண்ட பலகைகளாக அரிவார்கள். மரத்தூள் பல நிறங்களில் அந்தக் கிடங்குக்குள் அடுக்கு அடுக்காக படியும். அப்படியே கீழே நின்று வெட்டுபவரின் மீதும் அது படியும். படுத்திருக்கும் பெரிய வெட்டிய மரங்கள், பலகைகள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விறகுகள், செய்து கொண்டிருக்கப்படும் வள்ளங்கள், தளபாடங்கள், ஆயுதங்கள், கிடங்கு, கூரை என்று எல்லா இடங்களும் பதுங்க வசதியான ஒரு இடம் அது. அந்த மேத்திரியார்கள், அங்கு வேலை செய்பவர்கள் எங்களை தடுப்பதும் இல்லை. ......... கடைசியில், வேறு வழியே இல்லாமல், அந்த கிடங்குக்குள் கொல்லப்பட்ட சிலரை போட்டு எரித்தார்கள்...............
  13. எக்ஸ்யூஸ்மி விசுகர்😎? யாருக்கு, யார் உதவவில்லையென முறைப்பாடு செய்கிறீர்கள்? பிரபாகரன் படத்தை, புலிக்கொடியை வைத்து தனக்கு வாக்கு சேகரிக்கும், திரள் நிதி சேர்த்து தன் குடும்பத்திற்கு மாட மாளிகை கட்டும், பிள்ளைகளை ஆங்கில, தனியார் பாடசாலைகளில் படிப்பிக்கும் ஒரு தமிழக சராசரி அரசியல் வாதிக்கு உதவவில்லையென்கிறீர்களா? புலத்திலும், வெளிநாடுகளிலும் உதவி தேவையான எத்தனை ஈழமக்கள் இருக்க, பத்தோடு பதினொன்றாக இருக்கும் இன்னொரு தமிழக அரசியல் வாதிக்கு , அவரது குற்றங்களை நியாயம் செய்ய நாம் உதவ வேணுமா? ஏன்?
  14. அண்ணே நான் சொன்னது இந்த போராட்டங்களை அல்ல. தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் இவ்வாறான பிரச்சனைகள் குறித்து இதை போன்ற பல போராட்டங்களை நடத்தி இருக்கு. அவை எல்லாம் அரசியல் கட்சிகளாக இயங்கின. ஆகவே அவர்கள் இப்படிபட்ட பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் உங்க நொண்ணன்னைப் போல நான் நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள். வீட்டை திருத்த நாம் வரவில்லை இடித்து புதிதாக கட்ட வந்த பிள்ளைகள் என று பீலா விடவில்லை. பிரபாகரன் பிள்ளைகள் நாம் என்று கூறிய வாயால் “எனது போராட்டம்” என்ற நூலை ஹிட்லர் எனக்காக தான்டா எழுதி வைத்துவிட்டு சென்றான் என்றும், முசோலினி இப்படி கூறினான் அப்படி கூறினான் என்று நரம்பு முறுக்கேற சீமானைப் போல் மற்றைய கட்சிகள் காட்டுக்கத்து கத்தவில்லை. நாங்கள் மாபெரும் புரட்சியை உருவாக்க வந்தவர்கள் என்று 15 வருடங்களாக மேடை மேடையாக காட்டுக்கத்திக்கொண்டிருப்பவர் சீமான். அதை நிலை நாட்டவேண்டுமானால் இந்திய தேசியத்தை எதிர்தது பல தொடர் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும். அதை செய்தாரா என்பது தான் எனது கேள்வி. மற்றப்படி அவரை யாரும் போராட சொல்லவில்லை. அப்படி போராடி தனது சுகவாழ்வை அவர் இழக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர் தான் தன்னை மாபெரும் புரட்சியாளர் என்றும், ஒரு நாள் என் கையில் இந்த நிலம் சிக்கினா பாரு நீ செத்தாய் என்று காட்டு கத்து கத்துபவர். அப்படியாக தன்னை அரசியல் கட்சியாக இலாமல் மாபெரும் புரட்சிய நடத்த வந்த புரட்சியாளராக மேடைகளில் மட்டும் காட்டிக் கொண்டவர் அந்த புரட்சியை உருவாக்கக 15 வருடங்களில் செய்த போராட்டம் என்ன என்பதே கேள்வி. தமிழ் தேசியத்தை எதிர்தத இந்திய தேசிய தேசியத்திற்கு விசுவாசமாக இருந்த அனைவரையும் தனது வழிகாட்டிகளாக கொண்டாடுவது ஏன்? நீங்கள் மாற்றத்திற்கானவர்கள் என று நரம்பு முறுக்கேற கத்தினால் மட்டும் போதாது அதற்கான தொடர் போராட்டங்களையும் நடத்தி இருக்க வேண்டும். அதை நடத்தவில்லை என்றால் நானும் மற்றயவர்களை போல பத்தோடு பதினொன்றான அரசியல் கட்சி தான் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். சும்மா இளைஞர்களை உசுப்பேற்றி விட்டு ஆளும் தரப்போடு டீல் செய்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதியே இந்த சீமான் என்ற வெத்து வேட்டு ஆசாமி.
  15. நான் சுயநலம் என்று சொன்னது, ஒரே ஒரு ரிவியூ இருக்கும்போது அதை கடைசி recognize பாட்ஸ்மனுக்கு பயன்படுத்த விடாமல் தடுத்ததை! அத்துடன் ஒருவர் மிக மெதுவாக ஓட்டங்களை எடுக்கும்போது மற்றவர்கள் ரிஸ்க்கான அடிகளை அடித்து ஓட்டமெடுக்க முனைவர். அதுவே அவர்களின் ஆட்டமிழப்பிற்கு காரணமாகி விடுகிறது! அவர் அவுட் ஆனமுறையும் தேவையற்றது! அக்ஸாரின் கடைசிப்பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து அடுத்த ஓவரை ஆடியிருக்க வேண்டும்!!
  16. அங்கே போய் ஒளிந்துகொள்ளலாம் என்றால் ஏன் உச்ச நீதிமன்றம் என்று ஒன்று இருக்கவேண்டும். அதுவும் எல்லா நீதிமய்யங்களுக்கும் முதன்மையானதாக? சீமான் தான் இந்திய இராணுவ விங் என்று புதிதாக தொடங்கியிருப்பதாக சொன்னாரா? அல்லது அது NTK இணையதளத்தில் இருக்கிறதா? யாரோ ஐந்துபேர் சேர்ந்து வீடியோ போட்டால் அது NTK விங் ஆகி விடுமா? கோர்ட்டே அவரை பாலியல் குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது என்றுவிட்டு அதைச்சொல்லி ஒரு தனி விங் தொடங்க போகிறேன் என்று சொல்லும் உங்கள் மனநிலை என்ன என்பது நன்றாகவே புரிகிறது. சீமானும் ஒரு தனி மனிதர் நீங்களும் ஒரு தனி மனிதர்தான்! ஏன் சீமானுக்கு குடும்பம் இல்லையா? உங்களுக்கு மட்டுந்தான் இருக்கிறதா? சீமானின் அரசியலை விமர்சியுங்கள் அதில் எந்த பிரச்சனையுமில்லை! மேலே சொல்லப்படும் பிரச்சனைகள் எல்லாம் நடந்தது அவர் கட்சி தொடங்க முன் நடந்தவை !! உங்கள் குடும்பம் என்று வரும்போது சுடுகிறதல்லவா? இதையே உங்கள் விஜி அண்ணி சீமானின் தாயாரை எவ்வளவு கேவலமாக பேசினார்? அப்போதெல்லாம் அவர் எதிர்வினையாற்றவில்லையே! பொறுமைக்கும் எல்லைகளுண்டு!! மற்றும்படி தமிழ் எனக்கு நன்றாகவே தெரியும்!!
  17. அன்று நியூஸிலாந்து தோற்றதற்கு காரணம் வில்லியம்சனின் சுயநலமான ஆட்டம். எல்லோருக்கும் ப்ரஸ்வெல்லின் lbw அவுட் இல்லை எனத்தெரியும்போது எதிர்புறத்தில் இருந்த அவர் அதனை ரிவியூ பண்ண விடவில்லை. அத்துடன் அவரது மிக மெதுவான ஆட்டம் மற்றவர்களை தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவைத்தது! விளையாட்டுத்திரியில் அரசியல் பேசக்கூடாது! 😜
  18. சுமந்திரன் என்பவர் மக்களின் ஆணையை மதித்து சிறிது ஓய்வெடுத்து, தனது செயலை மாற்றி, எல்லோரையும் மதித்து, கட்சியின் கொள்கைகளோடு சேர்ந்து செயற்பட்டிருந்தால்: பின்னாளில் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவரோ, மக்களின் ஆணைக்கு சவால் விடுவதுபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை வெளியே தள்ளி, சர்வாதிகாரிபோல் இல்லாத பதவிகளை உருவாக்கி கையகப்படுத்திக்கொண்டிருந்தால், என்ன அர்த்தம்? கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில் மாவையர் தோற்றபோது என்ன நடந்தது? அவர்க்கு அறிவிக்காமல், அவரோடு கலந்து பேசாமல், அவருக்கெதிரான கருத்துக்களை ஊடகங்களில் தன்னிச்சையாக பகிரங்கமாக அறிவித்து, சிறிதரனை மாவைக்கெதிராக கொம்பு சீவி அவரை அவமானப்படுத்தவில்லையா? இப்போ இவர் தோற்றபோது எப்படி செயற்படுகிறார்? இதுதான் கட்சியின் கொள்கையா? சட்டத்தரணியின் சமநிலை பேணும் தன்மையா? இவரது சர்வாதிகார செயலெல்லாம் அவரது திறமையில் உள்ள பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார், ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தான் ஒருபோதுமே மக்களால் தெரிவு செய்யப்படமாட்டேன் என எண்ணுவதினாலேயே குறுக்கு வழிகளை அவசரமாக தேடுகிறார்.
  19. ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட அரபு லீக் தலைவர் அகமட் அபூல் கெய்ட், “எகிப்துத் திட்டம் இப்போது ஒரு அரபுத் திட்டமாகும்” என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்களை குறிப்பிடாமல், “தன்னார்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ எந்தவொரு இடப்பெயர்ச்சியையும் நிராகரிப்பதே அரபு நிலைப்பாடு” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எந்தவொரு முன்மொழிவுகள் அல்லது யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதிக்கான ஒரு பெரிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். அரபுத் திட்டம் என்றும் அழைக்கப்படும் எகிப்தின் திட்டம், 2030 ஆம் ஆண்டுக்குள் காசாவை அதன் மக்கள்தொகையை அகற்றாமல் மீண்டும் கட்டியெழுப்புவதை முன்னறிவிக்கிறது. முதல் கட்டத்தில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் எஞ்சியிருக்கும் 50 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றுவதும், வெடிக்காத குண்டுகளை செயலிழக்கம் செய்வதைத் தொடங்குவதும் அடங்கும். இந்தத் திட்டம், அடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் “நிலையான, பசுமையான மற்றும் நடக்கக்கூடிய” வீடுகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளை முழுமையாக மறுவடிவமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இது விவசாய நிலங்களைப் புதுப்பித்து, தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பெரிய பூங்கா பகுதிகளை உருவாக்குகிறது. இது ஒரு விமான நிலையம், ஒரு மீன்பிடி துறைமுகம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்கவும் அழைப்பு விடுக்கிறது. 1990 களில் ஒஸ்லோ அமைதி ஒப்பந்தங்கள் காசாவில் ஒரு விமான நிலையம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்க அழைப்பு விடுத்தன, ஆனால் அமைதி செயல்முறை சரிந்ததால் திட்டங்கள் கைவிடப்பட்டன. காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசங்களிலிருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை அரபுத் தலைவர்கள் நிராகரிப்பதை மதிப்பதாகக் கூறி, ஹமாஸ் வரவேற்ற இந்தத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது. இதற்கிடையில், வெள்ளை மாளிகை அரபு நாடுகளின் உள்ளீடுகளை வரவேற்பதாகக் கூறியது, ஆனால் ஹமாஸ் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்க முடியாது என்றும் வலியுறுத்தியது. போருக்குப் பிந்தைய காசாவுக்கான தனது துணிச்சலான தொலைநோக்குப் பார்வையில் ஜனாதிபதி உறுதியாக நிற்கும் அதே வேளையில், பிராந்தியத்தில் உள்ள எங்கள் அரபு கூட்டாளிகளிடமிருந்து உள்ளீடுகளை அவர் வரவேற்கிறார். அவரது திட்டங்கள் இந்தப் பிரச்சினையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்குப் பதிலாக பிராந்தியத்தை பேச்சுவார்த்தைக்கு வரத் தூண்டியுள்ளன என்பது தெளிவாகிறது – என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ் கூறினார். அரபு நாடுகள் அங்கீகரித்த திட்டத்தில், சீர்திருத்தப்பட்ட பாலஸ்தீன ஆணையம் கட்டுப்பாட்டை ஏற்கும் வரை, ஹமாஸ் அரசியல் சுயேச்சைகளின் இடைக்கால நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கும். கடந்த மாதம், காசாவில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் முன்மொழிந்து, பிராந்தியத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ட்ரம்ப்பின் கூற்றுப்படி, அமெரிக்கா அந்த நிலத்தை மீட்டு மத்திய கிழக்கில் ஒரு “ரிவியரா”வாக மாற்றும். பாலஸ்தீனியர்கள், அரபு நாடுகள் மற்றும் மனித உரிமை நிபுணர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட அவரது திட்டம், இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று கூறியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=314890
  20. தென்னாபிரிக்கா கப் தூக்குது என்று எழுதியிருந்தேன். எல்லாம் தொப்பி தான். இனி எனக்கு புள்ளிகளுக்கே இடமில்லை. இந்தப் பெரிசின் @குமாரசாமி முகத்தில் எப்படி விழிப்பது என்று தான் யோசிக்கிறேன்.
  21. தென்னாப்பிரிக்கா வென்று இருந்தால் 3 புள்ளிகள் கிடைத்திருக்கும். அத்துடன் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற அணியாக தென்னாப்பிரிக்கா இருந்திருக்கும். நினைப்பதெல்லாம் நடந்திருந்தால் 🤔
  22. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வெல்ல வேண்டும். இந்தியா தோற்க வேண்டும் என்று எழுதினால் இந்தியா வெல்லுது. அதுதான் கொங்சம் மாத்தி யோசிப்பம்.
  23. 🤣 வெளிநாட்டில் நாங்கள் கதைக்கின்ற தமிழில் எழுதி இருக்கிறார்கள் அக்கினி குஞ்சு நடத்துபவர்களும் வெளிநாட்டில் இருப்பவர்களாக இருக்கலாம்
  24. @Eppothum Thamizhan தான் இப்போதும் முதல்வர். வாழ்த்துக்கள் சகோதரம்.
  25. இந்த வழியாக தலதா மாளிகைக்கு சென்று கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி இருந்தால் போலீஸ் காரர்கள் இன்னமும் குழம்பி இருப்பார்கள்
  26. உண்மைதான் இந்த சட்டங்கள் அதுவும் பெண்களை முதன்மை படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டது உண்மையில் துன்புறுத்தப்படும் உதவி அற்ற பெண்களுக்காக.. ஆனால் இந்த சட்டங்களின் நன்மைகள் கிராமப்புறங்களில் குடித்து விட்டு வந்து தினம் தினம் கணவன்மாரால் துன்புறுத்தப்படும் சீதனக்கொடுமை மாமியார் கொடுமை என்று துன்புறுத்தப்படும் படிக்காத கிராமப்புற பெண்களை சென்றடைவதில்லை மாறாக நகர்ப்புறங்களில் பணக்காற, சினிமா போன்ற புகழ்பெற்ற மற்றும் படித்து நல்ல நிலையில் சம அந்தஸ்த்துடன் வாழும் பெண்களால் தவறாக பயன்படுத்தப்படவே இப்பொழுது எல்லாம் அதிகம் பயன்படுகிறது.. மறுவளமாக விஜலட்சுமியும் ஏன் வாபஸ் வாங்கி வாபஸ் வாங்கி விளாடுரார்..? உறுதியாக நின்று கேசை நடத்தலாமே..? ஆக அவர் நோக்கமும் நீதி பெறுவதல்ல நிதி பெறுவதே.. ஆகவே இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் மூன்றாம் நபராகிய நாம் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு “பாலியல்குற்றவாளி” என்று தீர்ப்பெழுதாமல் நீதிமன்றத்திடம் விட்டுவிட்டு மூடிட்டு இருப்பதுதான் சரியாக இருக்கும்..
  27. உங்களுக்கா? நான் நினைக்கவில்லை😎! எனவே, உங்களுக்காக அமெரிக்காவின் புதிய "உத்தியோக பூர்வ மொழியான" ஆங்கிலத்தில்: Relevant sections: Sections like 370 of the IPC encompass different forms of coercion, including using threats, force, or deception. Consent under deception: If someone is deceived into giving consent, it is not considered valid consent in the eyes of the law. Recent amendments: The Criminal Law Amendment Act of 2013 further strengthened the legal framework 👉regarding consent and sexual assault, including considering deception as a form of coercion. விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டு இது தான். இதை இல்லையென்று கோர்ட்டில் போய் நிறுவக் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கேசை தள்ளுபடி செய்யவும், குற்றம் சாட்டுபவரை செல்வாக்கினால் அகற்றவும் முயன்றமையால் தான் உங்களிடம் கேட்கிரேன்: ஏன் சீமான் எதிர்கொள்ளத் தயங்குகிறார்? ஒரு விளக்கம் தானே இருக்க முடியும் இதற்கு? மடியின் கனம்!
  28. உக்ரைன் ரசிய போர் நடந்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நன்று என்றே நான் எண்ணுகிறேன். ஒன்று இதில் நேரடியாக எந்த ஆள் சேதமும் அமெரிக்காவிற்கு இல்லை. மற்றது அமெரிக்காவோ மற்ற மேற்கு நாடுகளோ உதவி என்று சொல்லி யாருக்கும் செக் எழுதி பணத்தை கொடுப்பதில்லை. மாறாக உள்ளூர் உற்பத்திகளைத்தான் கொடுக்கிறார்கள். இங்கே அமேரிக்கா இங்கே தயாரிக்கும் ஆயுதங்களைத்தான் கொடுக்க போகிறது உள்ளூர் ஆயுத உற்பத்தி தொழிவாய்ப்பு என்பன முன்னேற்றம் காணும். டிராம் இதை நிறுத்த முடிவெடுத்தது உக்ரைனில் இருக்கும் லித்தியத்தை பெற்றுக்கொள்ளவே அமெரிக்காவிற்கு லித்தியம் மற்றும் ரர் மெட்டல் இரண்டுக்கும் பாரிய தட்டுப்பாடு உள்ளது அதை சீனவிடம் இருந்தே பெற வேண்டி இருக்கிறது. அது தவிர இங்கு யாழ்களத்திலும் மற்றும் மேற்கு ஊடங்களிலும் வெற்றிவேல் வீரவேல் என்று படம் காட்டிக்கொண்டு இருக்க ... புட்டின் கைப்பற்றிய 20 வீத உக்ரைன் நிலப்பரப்பும் செழிமையான லித்தியம் மற்றும் தைத்தானியம் நிறைந்த நிலப்பரப்புகள் ஆகும் இப்படியே போனால் மிகுதியையும் புடின் கைப்பற்றலாம் எனும் எண்ணமாகவும் இருக்கலாம். அதுதான் இப்போ பிரிடிஷ் காரர் தாம் இராணுவத்தை அனுப்ப போவதாக கூறி இருக்கிறார். போனது போக மீதி லித்தியம் தைத்தானியத்தை அள்ளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இப்போதைய ( அப்போதைய திடடமும் அதுதான்) ட்ராமின் திடடம்
  29. சூழல் சுத்தம் மிக நல்ல விடயம், வரவேற்கத் தக்கது, தொடர வேண்டும். ஆனால் பெரிய விடயங்களில் ஒழுக்கமில்லாமல் சிறிய விடயங்களில் கவனம் செலுத்துவதால் பயன்கள் இல்லை. உதாரணமாக, தன் தம்பிகளுக்கு மரியாதையாகப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்கம் வலியுறுத்தப் படுமா? இல்லை. ஏனெனில் கட்சியின் மூலதனமே அந்த றௌடியிசம் தான்!
  30. மில்ல‌ர் 100 அடிச்ச‌து ம‌கிழ்ச்சி தென் ஆபிரிக்கா க‌ப்ட‌ன் ம‌ட்டைய‌டி வ‌ரிசைய‌ மாற்ற‌ம் செய்து இருக்க‌னும் தொட‌க்க‌ வீர‌ராய் தான் வ‌ராம‌ அக்ர‌ம‌ தொட‌க்க‌ வீர‌ராய் விளையாட‌ விட்டு இருந்தால் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ந‌ல்ல‌ ர‌ன்ஸ் அடிச்சு இருக்க‌லாம்.................. கிடைக்க‌ இருந்த‌ மூன்று புள்ளியும் கிடைக்காம‌ போய் விட்ட‌து நியுசிலாந் இந்தியாவிட்டை தோத்து நாடு திரும்ப‌ ச‌ரி இண்டையான் தோல்விக்கு தென் ஆபிரிக்காவின் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் க‌ட‌சி 5ஓவ‌ரில் அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌வை...........................
  31. சீமான் ஒரு வெத்து வேட்டு ஆசாமி என நீங்கள் சொல்ல, அதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறதா..? இருந்தால் ஆதாரங்களை கொடுங்கள்… அதுவுமில்லாமல் வெறும் உணர்ச்சி வெறி மற்றூம் காழ்ப்பின் அடிப்படையிலான விமர்சனங்கள் எதற்கும் பயன்படாது… மற்ற கட்சிகள் போராட்டம் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்... அவர்களின் போராட்டங்கள் எங்கே? கூடவே மத்திய அரசை நேரடியாக எதிர்த்த எந்த கட்சி உண்மையாக போராடியது…? பாஜகவுடன் மறைமுக உடன்படிக்கையில், திமுக, அதிமுக, பாமக, விசிக உட்பட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செயல்படவில்லை என்று நிரூபிக்க முடியுமா..? தொடர் போராட்டங்கள் இல்லாமல் எப்படி ஒரு கட்சி தனது அடிப்படை நிலைப்பாட்டை நிலைநாட்ட முடியும்..? நீங்கள் கூறும் லாஜிக்கால், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியும் போராடவில்லை என்பது தான் முடிவு ஆகும்... அப்படி இருந்தால், அவர்கள் அனைவரும் வெத்து வேட்டு ஆசாமிகள் தான் அல்லவா…? சீமான் தான் ஒரு வெத்து வேட்டு அரசியல்வாதி என்றால், மத்திய அரசை நேரடியாக எதிர்த்த மற்ற கட்சிகள் யார்..? அவர்கள் எப்படி போராடினார்கள்..? அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக எந்த அளவுக்கு செயல்பட்டார்கள்..? உண்மையில் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டு போடுவது, ஒரு அரசியல் ஆய்வை விட, ஒரு உணர்ச்சி வசப்பட்ட விமர்சனமாகவே தெரிகிறது… நீங்கள் சொன்னதற்கான ஆதாரங்களை கொடுங்கள்... அல்லது, ஒரு வெற்று விமர்சனமாக நீங்கள் எழுதியதை ஒப்புக்கொள்ளுங்கள்… அத்துடன் உங்கள் நாட்டில் ஒரு அஞ்சாறு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கிறார்கள்.. சீமான் போல் தமிழ்தேசியம் பேசுகிறார்கள்.. அவர்கள் எதற்கு அரசியலில் இருக்கிறார்கள்..எத்ற்கு உங்கள் மக்கள் வாக்குப்போடுகிறார்கள் 95வீதத்துக்கும் அதிகமாக.. அரசியலில் சில நெளிவு சுழிவுகள் இருக்கத்தான் வேண்டும்.. அப்பத்தான் கொஞ்சமாவது இன அக்கறை உள்ள கட்சிகள் தன் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும்.. இல்லை என்றால் இனத்தை அடைவைக்கும் கட்சிகள் வந்து கோவணத்தையும் உருவி விடுவார்கள்..
  32. 24 பந்துகளில் 104 ஓட்டங்களை தென்னாபிரிக்கா எடுக்குமா?
  33. கொஞ்சம் பொறுத்திருங்கள்: போன கட்சிகள் எல்லாம் ஒத்துக் கொண்ட நிலைப்பாட்டை மத்திய அரசு நிராகரித்து அறிக்கை விட்டால், சீமான் முகாம் விடும் யூ ரியூப் காணொலியின் தலைப்பு: "பகிஷ்கரித்த நாதக, பிசுபிசுத்துப் போன தமிழக கட்சிகள் தீர்மானம்"😂
  34. தொகுதி பங்கீட்டில். எப்படி தொகுதிகள். குறையும் தமிழ்நாட்டில் மக்களின் எண்ணிக்கை குறைத்து விட்டதா.?? நாடு முழுவதும் ஒரே மாதிரி தானே தொகுதி பங்கீடு நடக்கும் அல்லது செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்தால் தொகுதி எண்ணிக்கை குறையும் தானே ?? தமிழ்நாட்டு தமிழர்களின் குழந்தை பெறும் வீதம் குறைத்து விட்டாதா??? எனவே… எதிர்ப்புகள் நியாயம் அற்றது மக்கள் தொகை கூடினால். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 விட கூட உதாரணமாக 45 கிடைக்குமென்றால். எதிர்க்க மாட்டார்கள் இல்லையா?? இந்த நேரத்தில் அயல் மாநிலத்தில் உள்ள தமிழ் கிராமங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும்படி கோரலாம். கோரிக்கை வைக்கலாம் ஆமாம் சரி தான் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டிலிருங்கள். 🤣
  35. இந்த விளையாட்டை எவருமே கவனிப்பதில்லை.
  36. காசாவிலிருந்து மக்களை வெளியேற்றாமல் இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் - அராபிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் Published By: Rajeeban 05 Mar, 2025 | 11:35 AM காசாவிலிருந்து மக்களை வெளியேற்றி அதனை புனர்நிர்மானம் செய்யும் அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்திற்கு பதில் காசாவில் இரண்டுலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அராபிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எகிப்திய தலைநகரில் இடம்பெற்ற அராபிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் இது குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. 53 பில்லியன் டொலர் செலவில் இரண்டுலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கே அராபிய தலைவர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர். பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றாமல் காசாவை புனரமைக்கும்திட்டத்தினை அராபிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எகிப்து இந்த திட்டத்தினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. எகிப்தின் திட்டம் தற்போது அராபிய திட்டம் என அராபிய லீக்கின் செயலாளர் நாயகம் அஹமட் அபொல் கெய்ட் தெரிவித்துள்ளார். அராபிய உலகை அச்சத்திற்குள்ளாக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தினை எதிர்கொள்வதற்காக எகிப்து மரங்கள் நிறைந்த சுற்றுப்புறங்கள் மற்றும் பிரமாண்டமான பொதுகட்டிடங்கள்காணப்படும் காசாவை காண்பிக்கும் ; படங்களை உள்ளடக்கிய 91 பக்க வரைபடமொன்றை தயாரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த திட்;டம் குறித்து விபரங்கள்; வெளியாகலாம் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. காசாவை புனரமைக்கும்திட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களின் தற்காலிக குழுவொன்று நியமிக்கப்படலாம் என டெலிகிராவ் யுகே தெரிவித்துள்ளது. ஹமாசினை இந்த குழுவிற்குள் உள்வாங்குவது குறித்து அராபிய தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை பாலஸ்தீன அதிகார சபையின் கீழ் இந்த நிபுணர்கள் குழு செயற்படும் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அதிகாரசபை தற்போது மேற்குகரையை நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. காசாவை அபிவிருத்தி செய்யும் திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.முதல் கட்டம் ஆரம்ப மீட்பு நிலை என அழைக்கப்படுகின்றது இந்த கட்டத்தில் முதல் ஆறு மாதங்களிற்கு காசாவில் உள்ள மிகப்பெருமளவு இடிபாடுகளையும் வெடிக்காதவெடிபொருட்களையும் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அடுத்த இரண்டு கட்டங்களும் பல வருடங்களிற்கு நீடிக்கும், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள 15 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தற்காலிக கொள்களன்களில் குடியமர்த்தப்படுவார்கள். https://www.virakesari.lk/article/208328
  37. ஆம் ஆனால் பதவியில். அமர்ந்து விட்டார் ......இந்தியா சீமான் ஒருபோதும் பதவியில் அமரமாட்டார்.
  38. ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபித் தொடரின் இறுதிப் போட்டிக்கு 5-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடக்கும் நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதும். வரும் ஞாயிற்றுக்கிழமை துபையில் இறுதிப் போட்டி நடக்கிறது. இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்று அதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்தியா-இலங்கை அணிகள் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. மற்ற இருமுறையும் பைனலில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. கோலி அசத்தல், ஷமி அற்புதம்! 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா - 14 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய கனவு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கு தலைவலியாக திகழும் 5 முக்கிய பலவீனங்கள் நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் - இந்தியா வெற்றி பெற இந்த உத்திகள் கைகொடுக்குமா? ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி 2017-ம் ஆண்டுக்குப் பின், இரு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை பைனல், 2024 டி2உலகக் கோப்பை பைனல் ஆகியவற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் 2024 டி20 உலகக் கோப்பையை மட்டும்தான் இந்திய அணி வென்றுள்ளது. மற்ற 3 ஐசிசி போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. 2013-ஆம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை இந்திய அணி வெல்லவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின் அந்த பட்டத்தை வெல்ல இந்த வாய்ப்பை இந்திய அணி பயன்படுத்தும். துபையில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 264 ரன்களை அநாசயமாக சேஸ் செய்து இந்திய அணி அசத்தியது. 2011-ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய அணியை ஐசிசி நாக்அவுட்டில் முதன் முறையாக இந்தியா தோற்கடித்துள்ளது. இந்திய அணியின் நேற்றைய அரையிறுதி வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாகக் கூறப்பட்டாலும் அதில் முக்கியமான 5 அம்சங்கள் உள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம். ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன்'4 மார்ச் 2025 இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி?4 மார்ச் 2025 'சேஸ் மாஸ்டர்' கோலியின் ஆட்டம் போட்டிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில் "ஒருநாள் போட்டிகளில் நான் பார்த்த வகையில் மிகச்சிறந்த சேஸ் மாஸ்டர் விராட் கோலி மட்டும்தான். இதில் விவாதத்துக்கு இடமே இல்லை, அவரின் புள்ளிவிவரங்களே அவரின் முக்கியத்துவத்தை சொல்லும்" என புகழாரம் சூட்டியிருந்தார். உண்மையில் விராட் கோலியின் நேற்றைய முத்தாய்ப்பான ஆட்டம் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து ஆகச்சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்திய கோலி நேற்றும் மிகுந்த பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 84 ரன்கள் சேர்த்தார். விராட் கோலியின் நேற்றைய ஆட்டத்தில் எந்தவிதமான பதற்றமோ, ரன் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தமோ, தவறான ஷாட்களை அடிக்க முயன்றதோ என ஏதும் இல்லை. 30 ரன்களில் இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தவுடன் களமிறங்கிய கோலி, அணியின் சூழலை உணர்ந்து பொறுப்புடன் பேட் செய்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றி, அவர்களுடன் "மைண்ட் கேமில்" விளையாடிய கோலி, பவுண்டரி, சிக்ஸர் என பெரிதாக அடிக்கவில்லை. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஒரு ரன், 2 ரன் என ரன் சேர்த்தார். விராட் கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்தவர்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதத்தையும், இந்த ஆட்டத்தில் சிறந்த இன்னிங்ஸையும் விளையாடி பதில் அளித்துள்ளார். இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களின் 45 பந்துகளை சந்தித்து 44 ரன்களை எடுத்துள்ளார். அதில் 13 டாட் பந்துகளாகும். அதுமட்டுமல்லாமல் கிடைக்கின்ற இடைவெளியில் ஒரு ரன், இரு ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறவிட்டார். கோலி 26 சிங்கிள்களையும், 3 இரு ரன்களையும் சேர்த்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி ஜொலித்தார். பட மூலாதாரம்,Getty Images தன்னுடைய ஆட்டம் குறித்து கோலி பேசுகையில் " பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் போலத்தான் இந்த ஆட்டமும் இருந்தது. இந்த ஆட்டத்தில் சூழலை அறிந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என அறிந்து ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். அரையிறுதி, பைனல் போன்றவற்றில் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நம் கைவசம் அதிகமான விக்கெட்டுகள் வைத்திருந்தாலே எதிரணியினர் தாங்களாகவே ரன்களை நமக்கு வழங்குவார்கள். எனக்கு சதம் அடிப்பது முக்கியமல்ல, பீல்டர்களுக்கு நடுவே ஒரு ரன், 2 ரன்கள் எடுப்பதில்தான் மகிழ்ச்சி. பாகிஸ்தானுக்கு எதிரான இன்னிங்ஸ், இந்த இன்னிங்ஸில் என்னுடைய ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார். சர்வதேச அளவில் சேஸ் மாஸ்டர் என்று இன்றைய காலகட்டத்தில் விராட் கோலியை மட்டுமே அழைக்க முடியும். சேஸிங்கில் மட்டும் 8 ஆயிரம் ரன்களை கோலி கடந்து, சச்சினுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டி சேஸிங்ஸில் 64 ரன்கள் சராசரி வைத்து ஏபி டிவில்லியர்ஸுக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் கோலி அடித்த 51 சதங்களில் 28 சதங்கள் சேஸிங்கின் போது அடிக்கப்பட்டவை, சச்சின் அடித்ததைவிட 11 சதங்களை கூடுதலாக சேஸிங்ஸில் கோலி அடித்துள்ளார். சேஸிங்கில் கோலியின் ஆட்டம் இந்திய அணிக்கு பலமுறை வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது. பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?3 மார்ச் 2025 ஹெட்டை சாய்த்த வருண் சக்ரவர்த்தி பட மூலாதாரம்,Getty Images இந்திய அணிக்கு எப்போதுமே தலைவலியாக இருப்பவர் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட். கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக 1000 ரன்களுக்குமேல் அடித்து குடைச்சல் கொடுத்து வந்தவர் டிராவிஸ் ஹெட். ஐசிசி டெஸ்ட் சாம்பியஸ்ஷிப், உலகக் கோப்பை, பார்டர்-கவாஸ்கர் தொடர் என அனைத்திலும் டிராவிஸ் ஹெட் ஆட்டம் இந்திய அணிக்கு தலைவலியாகவே இருந்தது. இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் நிதானமாக ஆடி 11 பந்துகளில் ஒரு ரன் சேர்த்திருந்த ஹெட், அதன்பின் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கத் தொடங்கி, தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினார். அக்ஸர், குல்தீப் பந்துவீசியும் டிராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. 9-வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ஸ்மித் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஹெட்டிடம் வழங்கினார். சர்வதேச அரங்கில் வருண் பந்துவீச்சில் முதல் பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தார். டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த இந்த தருணம் இந்திய அணி அடுத்த அடி எடுத்துவைக்க நம்பிக்கையை அளித்தது, பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கத்தை அளித்து உற்சாகத்துடன் பந்துவீசவைத்தது. பிளாஸ்டிக் தாளில் இட்லியை வேக வைத்தால் என்ன ஆபத்து?மருத்துவர்கள் தகவல்3 மார்ச் 2025 இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 மீண்டு(ம்) வந்த ஷமி பட மூலாதாரம்,Getty Images காயத்திலிருந்து ஓராண்டுக்குப்பின் அணிக்குத் திரும்பிய ஷமியின் பந்துவீச்சு குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இங்கிலாந்து தொடரில் பெரிதாக பந்துவீசாத ஷமி, சாம்பியன்ஸ் டிராபியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டார். ஒவ்வொரு போட்டியிலும் ஷமியின் பந்துவீச்சு மெருகேறிக் கொண்டே வந்துள்ளது. துபை மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காது, அதிலும் முதல் 10 ஓவர்களுக்குப் பின் ஸ்விங் செய்ய சிரமமாக இருக்கும் நிலையில் 10 ஓவர்களுக்குள் ஷமி விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டார். இந்த ஆட்டத்திலும் தொடக்கத்திலேயே கனோலி விக்கெட், செட்டில் பேட்டர் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்ததுடன் நேதன் எல்லிஸ் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். அதிலும் முதல் இரு விக்கெட்டுகள், ஸ்மித்தை வெளியேற்றியது ஆகியவை ஷமியின் மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சுக்கு உதாரணம். இந்தத் தொடரில் 4 போட்டிகளில் ஆடிய ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதில் வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?2 மார்ச் 2025 புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து1 மார்ச் 2025 திருப்புமுனையை ஏற்படுத்திய பார்ட்னர்ஷிப் இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் விரைவாகவே சுப்மன் கில், ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்ததும் தடுமாறியது. அப்போது 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-கோலி கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றி, இந்திய அணியின் கையை ஓங்கச் செய்தனர். இருவரும் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தி கோலியை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அமைத்த வியூகங்களை கோலி தகர்த்தார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சை அவர் எளிதாக சமாளித்து ஆடினார். ஸ்ரேயாஸ் அய்யர் சுழற்பந்துவீச்சை ஆடுவதில் வல்லவர் என்பதால் அவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வி அடைந்தனர். இருவரின் பேட்டிங்கால் இந்திய அணி சரிவில் இருந்து நிமிர்ந்தது. ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த பின் அக்ஸர் படேலுடன் 44 ரன்கள், ராகுலுடன் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கோலி, இந்திய அணியின் இன்னிங்சை அருமையாக கட்டியெழுப்பினார். இந்த 3 பார்ட்னர்ஷிப்புகளும்தான் இந்த ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக திருப்பின. உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,Getty Images நிரூபித்த ராகுல் சாம்பியன்ஸ் டிராபிக்கு ரிஷப் பந்தை ப்ளேயிங் லெவனில் களமிறக்கலாமா அல்லது கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கலாமா என தொடக்கத்தில் இந்திய அணியில் பெரிய ஆலோசனை நடந்தது. ஆனால் ஐசிசி தொடர்களில் அனுபவம் மிகுந்த ராகுல் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கையை நேற்று கே.எல்.ராகுல் நிறைவேற்றிவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியையும் செவ்வனே செய்து முடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி வந்த கே.எல்.ராகுல், நடுவரிசையில் ஆங்கர்ரோல் எடுத்து விளையாடவும் முடியும் என்பதை இந்தத் தொடரில் நிரூபித்துள்ளார், இந்திய அணியின் பேட்டிங்கை நடுவரிசையில் வலுவாகக் கொண்டு செல்வதில் முக்கிய பேட்டராக ராகுல் இருந்து வருகிறார். 84 ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை நேற்று ராகுல் கடந்தார், இதில் ஸ்ட்ரைக் ரேட் 88ஆக வைத்துள்ளார். இந்த ஆட்டத்திலும் 34 பந்துளில் 42 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார். ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் ஆடியுள்ள ராகுல், இதுவரை 919 ரன்களை குவித்து 61.26 சராசரி வைத்துள்ளார். ராகுலின் பொறுப்பான பேட்டிங், இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தது, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் சேர்த்து சேஸிங்கில் இருந்த அழுத்தத்தை குறைத்தார். பட மூலாதாரம்,Getty Images - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce98x4z97xyo
  39. எங்களை சுற்றி இருந்த விளையாட்டு திடல்கள்/மைதானங்களுக்கு நெற்கொழு, தீருவில், சிதம்பரா, நெடியகாடு, எள்ளங்குளம் என்றெல்லாம் பெயர்களை வைத்த நாங்கள் இதற்கும் ஒரு நல்ல பெயராக அப்பவே வைத்திருக்க வேண்டும்................ 🤣......... உங்களுக்கு பனை ஓலை, எனக்கு பனம்பாத்தி............. பாடசாலையில் எனக்கு ஆங்கில வகுப்பில் ஆசிரியையாக வந்து இருந்து விட்டுப் போன குலசேகரம் டீச்சரே இதை மொழிபெயர்க்க கஷ்டப்பட்டிருப்பார்....................🤣.
  40. இந்த வெற்றி பல ஊடகங்களில் பேசு பொருளாகவும், விவாதங்களாகவும் இருக்கின்றது.
  41. இந்தியாவே வெல்லும் என எல்லோரும் சொன்னால் ஒரு சுவாரசியம் இருக்காதல்லவா?🤣 ஆனால் நான் கூறியது நடந்தால் அதனை பற்றி நான் எப்போதும் சிலாகிப்பதில்லை.🤣
  42. இதிலிருந்து என்ன தெரிகிறது எந்த வகை பாத்திரமானாலும் உணவு வெந்தால் சரி ....பசிவந்தால் பண்டமென்ன பாத்திரமென்ன ?
  43. அரையிறுதிக்கு போகும் 4 அணிகளையும் சரியாக கணித்தும். ஓடர் மாறியதால் எனக்கு அரையிறுதியில் எந்த புள்ளிகளும் இல்லை. ஆனால் யாரும் 1,2 அணிகளை சரியான ஓடரில் கணித்தால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். இதைதான் விதி விளையாடியது என்பார்கள் போலும் 🤣. எப்போதும் தமிழன் இப்போது வெல்லலாம்….ஆனால் 2026 இல் புலவர்தான் ஆட்சி அமைப்பார். பிகு T20 WC 2026 🤣
  44. அடுத்தவன் சொல்லைக் கேட்டு ஆடினால் இது தான் நடக்கும். இத்தோட விட மாட்டாங்கள். தேர்தல் வரும் நேரங்களில் ஏதாவது சொல்லி ஏமாற்றி கூட்டி வருவார்கள்.
  45. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் - அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் அவருடைய காதல் மனைவி வினிதா சமரசிங்க குணசேகர பற்றி நிசங்க கட்டுகம்பொல (Nissanka Katugampola) என்ற சிங்கள நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிக்கு அண்மித்த நாளொன்றில் நடேசன் படுகொலை செய்யப்பட்டபோது வினிதா, நடேசன் மீது கொண்ட காதலுக்காகத் தன்னைத் தியாகம் செய்தாள் என்ற தொனியில் அவருடைய பதிவு அமைந்துள்ளது. இவர்களுடைய சிறந்த காதல் கதையை எதிர்காலச் சந்ததிக்கு எழுதி வைக்க வேண்டாமா என்று மற்றொரு சிங்கள நண்பரிடம் இவர் கேள்வி தொடுத்துள்ளார். தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு... அற்புதமான, அன்பான இந்த காதல் ஜோடியை நாங்கள் முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சந்தித்தோம். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட நடேசன் (மகேந்திரன்) மற்றும் மாத்தறை கும்புறுபிட்டியவை பிறப்பிடமாகக் கொண்ட வினிதா சமரசிங்க குணசேகரவின் காதல் கதை நான் எனது வாழ்நாளில் படித்த சிறந்த காதல் கதைகளில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதிக்கு அண்மித்த திகதி ஒன்றில் வாயில் சுடப்பட்டு கொலை செய்யப்படும் போதும் அவள் அவனுடைய காதலுக்காக முன் நின்றாள். அவன் அவளுடைய காதலுக்காக நிபந்தனைகள் எதுவுமின்றி முன் நின்றான். தனது வாழ்நாள் முழுவதும் சிங்களவர்களுக்கு எதிராக போராடியவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவருடைய சாப்பாட்டு மேசையில் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் காணப்படும் முக்கியமான உணவு வேளையில் சிங்கள பெண் ஒருவர் இருப்பது எவ்வளவு விசித்திரமான ஒரு வழக்கம்? ஆக, வினிதாவும் நடேசனும் எங்களுக்கு கூறிய அவர்களுடைய காதல் கதையை எப்படியாவது எதிர்கால சந்ததியினருக்கு எழுதி வைக்க வேண்டாமா? (நந்தன வீரரத்ன) ---- என்று அப் பதிவு அமைந்துள்ளது. அதேநேரத்தில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை மையமாகக் கொண்டும் நடசேன் பற்றிய கவிதை ஒன்றையும் இவர் மற்றொரு பதிவில் எழுதியுள்ளார். அ.நிக்ஸன் பத்திரிகையாளர் கொழும்பு -06 Monisha Kokul
  46. மேலேயே ஏமாற்று என்று எழுதி இருக்கிறேன். அவை உங்கள் கண்களில் படாது. விளங்க நினைத்தால் போதாது விளங்க முயலணும். அவர்கள் மக்கள் முன் வந்தால் மட்டுமே இவை முடிவுக்கு வரும் என்று தான் அன்றிலிருந்து சொல்லி வருகிறேன். ஒழித்து விளையாடுவது எம்மை மேலும் மேலும் பிளவு படுத்தி பலவீனமாக்கும்.
  47. வெளிநாடு என்ற உடன கேட்பது கிடைக்கும் என எண்ணியிருக்கலாம். உதவி கேட்கும்போது எவ்வளவு காலத்திற்கு என்பதும் என்ன மாதிரியான உதவி எனவும் அறிந்து செய்யவேண்டும் அண்ணை. கல்வி கற்பதற்கான(சூம்) ஸ்மார்ட் போன்கள் 50-60 ஆயிரம் ரூபாவுக்குள் வாங்கலாம், ஆனால் ஐபோன் புதிது புதிய மொடல் எனில் அவர்கள் உழைத்துத் தான் வாங்கவேண்டும் என கறாராக சொல்லவேணும்.
  48. என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக்கிளறுவது சமய நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருது கிறார்கள் என்பதே! நீங்கள் எடுத்துக் காட்டியது போல, எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்த தார்கள். கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். 'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாக கூறினான். இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார். இந்த எல்லா சாஸ்தி ரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்று கிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும். பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். 'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்தி கத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார்.கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார். ஒரு பவுல் [Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது மற்றும் ஒரு பவுல் பாடல்: "இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொரு வனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் . எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ' [Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது. சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப் படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்த தாக கருதப் படுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.