Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    87988
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46783
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14675
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/11/25 in all areas

  1. இந்த திருட்டு யூடியூப் காரருக்கு அறிவே இல்லை…. இதுல இடைக்கிடையே, மானே தேனே, பொன்மானே போல… தலைவர், மாவீரர், தமிழண்டா போன்ற வீராவேசங்களை தூவி விட்டு இருந்தால்.. இப்ப ஏசுற புலன்பெயர் சனம் எல்லாம் மரண முட்டு கொடுத்திருக்கும் 🤣
  2. சரியான கருத்து👍. நன்மையான விடயங்களைப் பகிரும் யூ ரியூபர்களை ஊக்குவிக்கலாம். அவசியமில்லாத அலட்டல்களை வெளியிடுவோர், இப்படி திருட்டு வேலைகள் செய்வோரை முறைப்பாடு செய்து சனலைப் பூட்ட வைக்கலாம். அப்படி செய்ய நேரமில்லா விட்டால் கூட , குறைந்த பட்சம் இப்படி பட்டவர்களது சனல்களைப் பார்க்காமல், பகிராமல் சும்மா இருந்தாலே இவர்களை ஒதுக்கலாம். பி.கு: மேலே 1200 பவுண்ஸ் திறன்பேசியை வாங்கி யூ ரியூபருக்குப் பரிசளித்த வெளிநாட்டுத் தமிழரை நினைத்து வியக்கிறேன்: சிலருக்கு "சந்தனம்" மெத்தித் தான் விட்டது😂!
  3. படக்குறிப்பு, தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வெளிப்படுத்தினார். 45 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பு பாலைவனமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர். பிபிசி தமிழுக்காக இலங்கையில் இருந்து செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதைக் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதன்போது வெளிப்படுத்தினார். கேள்வி: இந்தியா-இலங்கை மீனவப் பிரச்னை, மிக முக்கியமான பிரச்னையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான பாரிய பொறுப்பு உங்கள் வசம் காணப்படுகிறது. இது தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது? பதில்: இலங்கை இந்தியா இடையிலான மீனவப் பிரச்னை என்பது மிக நீண்ட நாட்களாக புரையோடிப் போயுள்ள பிரச்னையாகக் காணப்படுகின்றது. இதைத் தீர்ப்பதற்காக அல்லது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காகக் கடந்த காலங்கள் முழுவதுமே இங்கிருக்கின்ற மீனவர்கள், மீனவ சங்கங்கள், அரசியல்வாதிகள் எல்லோருமே பல்வேறு பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட போதிலும்கூட எந்தவித இணக்கப்பாடும் இல்லாது தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றது. அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதன் காரணமாக இன்று அது திருப்புமுனையாக மாறியுள்ளது என நான் நினைக்கின்றேன். அதற்குக் காரணம் என்னவென்றால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பிறகு அது மாத்திரமல்ல, கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கணிசமான மக்கள் வாக்களித்தார்கள். யாழ் மாவட்டத்திலும் எங்களை முதலாவது கட்சியாக மக்கள் உயர்த்தி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. எங்களை நம்பிய மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய முடியாது. மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் மீனவர்களுடைய பிரச்னை தொடர்பில் பல தடவை சொல்லியிருப்பேன். பெருமளவான மீனவர்கள் என்னிடம் சொல்வது ஒன்றுதான். முடியுமானால், இந்த இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துங்கள். தடுத்து நிறுத்த முடியாவிட்டால் நாங்கள் எல்லோருமே இந்தக் கடலில் குதித்து செத்துப் போகின்றோம் என்ற வார்த்தையைப் பல மீனவர்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். அந்த அளவுக்கு இன்றைக்கு இது உச்சக்கட்டமான பிரச்னையாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இந்திய அரசிடமும் சரி, தமிழ்நாட்டு அரசிடமும் சரி, நாங்கள் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்வது, 'எங்களுடைய கடற்பரப்பு, இது சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட கடல் பரப்பு, இலங்கைக்குச் சொந்தமான கடல். இந்தக் கடல் எல்லையை மீற வேண்டாம், தாண்ட வேண்டாம் என்று இந்திய மீனவர்களுக்குச் சொல்லும் படி,' நாங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழக மீனவர்கள் தங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கேரளா கடல் பரப்பிற்குச் செல்லமாட்டார்கள். ஆந்திராவுக்கு செல்ல மாட்டார்கள். பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால், எங்களுடைய கடற்பரப்புக்குள் வந்து முற்று முழுதாக எங்களுடைய மீன்வளங்களைக் கொள்ளையடித்து விட்டு, எங்களுடைய கடல் வளங்களை நாசம் செய்துவிட்டு, எங்களுடைய கடல் தொழிலாளர்களின் வலைகள், வளங்கள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு கொள்ளையடித்துக் கொண்டு, போகும் வழியில் நாங்கள் தொப்புல்கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு போகின்றார்கள். இதுதான் இன்றைக்கு இவர்களுடைய நிலைமை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. அதற்கான நடவடிக்கைகள் நகர்வுகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். இலங்கை: 2 வயது குழந்தையை தத்தெடுத்து சித்ரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன? இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி? கச்சத்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கூறக்கூடிய ஒரு விடயம், கச்சத்தீவு நிலப்பரப்புக்கு அண்மித்த பகுதியில்தான் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதைத் தாண்டி நாங்கள் செல்வதில்லை எனக் கூறுகின்றார்கள். அப்படி கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடிக்கின்ற அந்த மீனவர்களை இலங்கை கடற்படை ஏன் கைது செய்கின்றது? பதில்: இதற்கான பதிலை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. இலங்கையில், ஒரு சில இந்திய ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். விசேடமாக ஆங்கில பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான செய்திகளை இந்தியாவுக்கு கொண்டு செல்கின்ற வலிமையான பத்திரிகைகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் சென்று கேட்டுப் பார்க்கின்றபோது, மிகத் தெளிவாக அவர்கள் சொல்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. நாங்கள் நேரடியாக வந்து பார்த்திருக்கின்றோம். இந்திய ட்ரோலர்கள் வந்து, எங்களுடை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து எங்களுடைய கடல் பரப்பில் இருந்துகொண்டு எங்கள் மீன் வளங்களையும், கடல் வளங்களையும் கொள்ளையடிப்பதை நாசமாக்குவதையும் நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். அதனால், இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. கச்சத்தீவுக்குக்கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. நாங்கள் ஏதோ இணக்கப்பாட்டிற்கு வந்து கொடுத்தாலே தவிர, அவர்கள் அங்கு வர முடியாது. அவர்களுக்குச் சொந்தமான கடலில் அவர்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும் பரவாயில்லை. அதேபோன்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் கடல் பரப்பில் அவர்கள் மீன் பிடிப்பார்களாக இருந்தால், அதற்கு எங்களுடைய கடற்படை எந்தவிதத்திலும் தலையீடு செய்யாது. அவர்கள் எங்களுடைய கடற்பரப்பு அல்ல, எங்களுடைய எல்லையையும் தாண்டி, எங்களுடைய கரையையும்கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள். கச்சத்தீவுக்கு அந்தப் பக்கம் அவர்களின் கடலில் இருந்துகொண்டு மீன்பிடிக்கின்றோம் என்பது பொய்யான விடயம். அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம். கேள்வி: இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்னையாகக் காணப்படுவது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை தமிழக அரசாங்கம், மத்திய அரசாங்கம் இலங்கையிடம் மீளக் கோரியிருந்தன. இலங்கை அரசாங்கத்திற்குக் கச்சத்தீவை கொடுப்பதற்கான எண்ணம் எதுவும் இருக்கின்றதா? பதில்: கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது. இது ஐக்கிய நாடுகள் சபையில் கடல் எல்லை தொடர்பான விடயத்தில் எங்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், கச்சத்தீவை என்றைக்குக் கொடுத்தார்கள், யார் கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்பது வரலாற்று ரீதியில் வேறு விடயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது எங்களுக்குச் சொந்தமானது. ஆனால், எங்கள் எல்லோருக்குமே தெரியும். நேற்று இன்று அல்ல. இந்தியா, தமிழ்நாட்டில் தேர்தல் காலங்கள் வருகின்றபோது காளான் பூத்ததைப் போன்று தொடர்ந்து கச்சத்தீவு பிரச்னையை இவர்கள் கையில் எடுப்பது வழமை. ஆனால், கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. இதை யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயார் இல்லை. புத்தகயா: புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் உருவான மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து - பெளத்தர் மோதல்3 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் யோசனைகள் உள்ளதா? படக்குறிப்பு,"அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்" என்கிறார் இராமலிங்கம் சந்திரசேகரன். கேள்வி: கடந்த காலங்களில் நாங்கள் கண்ட ஒரு விடயம். அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் வரக்கூடிய இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. சில வேளையில் அவர்களை விரட்டுவதற்காக வானை நோக்கி துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியா தரப்பினர், தங்களை நோக்கியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் சொல்கின்றார்கள். உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் அவர்கள் குற்றசாட்டுகளை முன்வைக்கின்றார்கள். இது உங்களின் அரசாங்கம் அல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசுகளின் காலப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நேர்ந்தன. உங்களின் ஆட்சியில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கும் பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றதா? பதில்: இல்லை. எங்களுடைய அரசாங்கத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களைத் துன்புறுத்துவதோ, அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. ஆனால் உங்களுக்கு தெரியும். ஒரு நாட்டின் கடல் எல்லையை மீறுகின்றபோது அந்தக் கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு உண்டு. யுத்த காலத்தில் அது வேறு கதை. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் சம்பங்கள் இடம்பெற்று இருக்கின்றது. ஆனால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சி பீடத்திற்கு வந்ததற்குப் பிறகு நாங்கள் இந்திய படகுகளைக் கைது செய்வது உண்மை. ஆனால் கடற்படை அவர்களைத் துப்பாக்கி பிரயோகம் செய்து, தடுக்க வேண்டும் என கோரிக்கையோ கட்டளையோ யாரும் விடவில்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவமொன்று இருக்கின்றது. அந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்றால், அந்தச் சம்பவம் இடம்பெற்றபோது எங்களுடைய கடற்படையினர் கைது செய்வது வழமை. பலவந்தமாக அவர்களுடைய படகுகளில் ஏறிக் கைது செய்கின்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவ்வாறு நடவடிக்கைகளை எடுக்கின்றபோது அவர்கள் படகுகளில் ஏற முடியாதவாறு சுற்றி வர ஓயில் போட்டிருப்பார்கள். அதையும் மீறி ஏறினால் சுடுநீரைக் குழாய் மூலம் பாய்ச்சுவார்களாம். கடற்படைக்குத் தீங்கு செய்கின்ற நடவடிக்கைகளை அவர்கள் செய்கின்றார்கள். அதையும் மீறி அன்றைய தினம் எங்களுடைய ஒரு சிப்பாய் படகிற்குள் ஏறிவிட்டார். ஏறிய பிறகு அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு, அவரை தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அவர்களின் தலையில் சுட்டிருக்கலாம் அல்லது ஏனைய பாகங்களில் சுட்டிருக்கலாம். ஆனால், முழங்காலுக்குக் கீழேதான் சுடப்பட்டது. மீன்பிடிப் படகுகளில் வருகின்றவர்கள் கூலித் தொழிலாளர்கள் அப்பாவிகள். அங்குள்ள ஒரு சில பெண்கள் கதறி அழுவதையும் நான் பார்த்திருக்கின்றேன். நான் இந்திய மீனவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். ஒரு மீனவர் என்னிடம் சொன்னார், "ஐயா நான் இனி இந்தப் பக்கம் வர மாட்டேன். இது எங்களுடைய வாழ்க்கைப் பிரச்னை. இந்த வாழ்க்கைப் பிரச்னைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாக இருந்தால், இந்திய கடற்பரப்பில் மீன்கள் உற்பத்தியாவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமானால், அல்லது இந்திய கடற்பரப்பின் ஏனைய பகுதிகளில் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்குமானால், சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான சலுகைகளைச் செய்து கொடுத்து இருக்குமானால், நிச்சயமாக நாங்கள் இவ்வாறானதொரு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க மாட்டோம்" என்றார். தங்களுக்கு முடியாத பட்சத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளை எடுப்பதாக அவர்கள் தரப்பில் கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த வகையில் அந்த மீனவர்களை நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதோ அவர்களைத் துன்புறுத்துவதோ அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. அவர்களைச் சிறையில் அடைக்கின்றபோது தங்களுக்குத் தெரியும் என்று கூறி அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். "நாங்கள் சட்டவிரோதம் எனத் தெரிந்து கொண்டுதான் இலங்கை கடல் எல்லையை மீறி இருக்கின்றோம். அதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றோம்" என்று கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. எங்களால் அல்ல. நீதிமன்றத்தால். அந்த நிலைமையின் கீழ் நாங்கள் சொல்கின்றோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல. இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பதுதான். இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர்21 பிப்ரவரி 2025 இலங்கை: 2025-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய 10 விடயங்கள்17 பிப்ரவரி 2025 இந்திய பிரதமர் மோதியுடன் மீனவர் பிரச்னை குறித்து பேசப்பட்டதா? படக்குறிப்பு,"இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல, இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பது தான்." கேள்வி: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றார். நரேந்திர மோதியை சந்தித்தார். குடியரசுத் தலைவரைச் சந்தித்திருந்தார். இப்படியான சந்திப்புகளில் இந்த மீனவப் பிரச்னை தொடர்பாக எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன? பதில்: ஒரு விடயம் இருக்கின்றது. இந்திய விஜயத்தின்போது தோழர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மோதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்னை முதன்மையான பிரச்னையாகப் பேசப்படவில்லை. அதைவிட வேறு விதமான தேவைகள் இந்தியாவிற்கு இருக்கின்றன என்பதே அதற்குக் காரணம். இந்தியாவுக்கும் தெரியும் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், நான் அண்மையில் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது இந்திய அரசாங்கம் 42 லட்சம் ரூபா நட்ட ஈடாக அல்லது மானியமாக வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அங்கிருக்கின்ற மீனவர்கள் தொடர்பான புத்திஜீவிகள் சிலர் என்னிடம் கூறினார்கள். இது ட்ரோல் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கை. அப்படி இருந்தும், தமிழ்நாட்டு மீனவர்கள் அந்தப் பொடம் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக எங்களுடைய கடல் பரப்பை நாசமாக்குகின்றார்கள் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். அதனால், இது சம்பந்தமாக தோழர் அநுர குமாரவோடு வேறு விதமான ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால், இது பேசப்பட்டது. எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் ஒரு தீவு. இலங்கை என்பது ஒரு தீவு. இந்தத் தீவு அழகாக இருக்கின்றது. அது தீவாக இருப்பதன் காரணமாக நாங்கள் இறைமையுள்ள நாடு, தன்னாதிக்கம் உள்ள நாடு. மோதியுடனான சந்திப்பின்போது நாங்கள் கூறியுள்ளோம். இது, இந்திய பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்புகளிலும் நானும்கூட அடித்துக் கூறுகின்ற ஒரு விடயம்தான். இந்திய படகுகள் எங்களுடைய கடல் எல்லையை மீறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?9 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 தமிழ்நாடு, இலங்கை மீனவப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: இந்திய மீனவர்களைக் கைது செய்யும்போது, அவர்களின் உடைமைகள், சொத்துகள் இலங்கையில் அரசு உடையாக்கப் படுகின்றன. அந்த நடவடிக்கை இனி வரும் காலங்களில் எப்படியான விதத்தில் முன்னெடுக்கப்படும் என்பதுடன், இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை இந்த அரசாங்கம் எப்படிப் பார்க்கின்றது? பதில்: இந்த நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும். இப்போதும்கூட 124 படகுகள் அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. 24 படகுகள் தொடர்பில் வழக்கு நடக்கின்றது. சுமார் 20 படகுகளை அவர்கள் கொண்டு செல்ல முடியும். அவர்கள் வருவதில்லை. 124 படகுகள் என்பது விளையாட்டு இல்லை. பெரிய படகுகள். லட்சக்கணக்கான பெறுமதிமிக்க படகுகள். இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் இன்றைக்கு அவை அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய படகுகளால் எங்களுடைய கடல்வளம் அழிக்கப்படுகின்றது. அந்தக் கடல் வளத்தை மீள உருவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இதை இந்தியாவுக்கும் நாங்கள் அறிவித்து இருக்கின்றோம். இந்திய தூதுவர்களுக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்னவென்றால்,வேறு எதுவும் அல்ல. இது எங்களுடைய வீடு.எங்கள் வீட்டில் வேறு ஒருவர் வந்து புகுந்து விளையாடுவாராக இருந்தால், அவருக்குத் தேவையான வகையில் வளங்களை நாசம் செய்வாராக இருந்தால், அதை நாங்கள் கண்மூடிப் பார்த்துக் கொண்டு இருப்போமாக இருந்தால், நாங்கள் ஒன்று குருடர்களாக அல்லது செவிடர்களாக அல்லது மூடர்களாக, ஊமைகளாகவே இருக்க வேண்டும். அல்லது இதைக் கண்டு அஞ்சும் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் அப்படியல்ல. இந்திய அரசாங்கத்தை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். இந்திய மீனவர்களை நாங்கள் நேசிக்கின்றோம். மீன்பிடி அமைச்சர் என்ற வகையில் இந்திய மீனவர்கள் மீதான பாசம் நேசம் அதிகரித்திருக்கின்றது. அந்த நேசம் பாசம் எல்லாமே இருக்கின்றது. அதனால், நேசம் பாசம் தொடர வேண்டும் என்றால், அல்லது நீங்கள் சொல்கின்ற அந்தத் தொப்புள் கொடி உறவு உண்மை என்றால் அந்தத் தொப்புள் கொடி உறவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களாகும். கடலையே நம்பி வாழ்கின்றார்கள். கடந்த 30 வருடத்திற்கு மேல் யுத்தம். பாதிக்கப்பட்டது வாழ்க்கை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாக இன்னமும் தங்களால் எழ முடியவில்லை. தங்களின் வாழ்க்கையில் மேல் எழ முயன்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கட்டி எழுப்புகின்ற அந்த வாழ்க்கையில், மண்ணை வாரிப் போடுவது, தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொள்ளும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களே. எங்களுடைய மீனவர்களின் வாழ்க்கையை அவர்களே நாசமாக்கின்றார்கள். எங்களுடைய கடல் வளத்தை நாசமாக்கின்றார்கள். இவ்வாறு கடல் வளம் நாசமாக்கப்படுவது தொடருமாக இருந்தால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களுடைய கடல் பரப்பு பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பாலைவனத்தில் நாளை இந்தியாவுக்கும் இடம் கிடையாது. எங்களுக்கும் இடம் கிடையாது. இந்திய மீனவர்களுக்கும் அன்றைக்கு எந்த விளையாட்டையும் விளையாட முடியாது. அதனால், நாங்கள் நீங்கள் எல்லோருமே சேர்ந்து இந்தக் கடலைப் பாதுகாக்க வேண்டும். கடல் எங்களுக்குச் சொந்தமானது அல்ல. உங்களுக்கும் சொந்தமானது அல்ல. நாளைய தலைமுறைக்குச் சொந்தமானது. அந்த வகையில்தான் இதற்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வு, இந்திய படகுகள், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒரு சில படகு உரிமையாளர்கள் எங்களுடைய கடல் எல்லையை மீறாதிருப்பதே இதற்கான நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வு என்று நான் நினைக்கின்றேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8ydyeqkdyo
  4. சீ சீ ...அதெல்லாம் ஒரு காலம் ...இப்ப வல்வையில் வராமல் வந்த அதிரடி நாயகன் அண்ணன் அனுரா வன்னியில் வந்து உதித்த அக்கா ஹாரனி சந்தியில் முடங்கி கிடக்கும் சஙக தமிழன் சரித்திர‌ நாயகன் சந்திர சேகரம் மாவீரன்(ர்) யார் என்றால் ரோகணா ..இடதுசாரி கொள்கைக்காக உயிர்நீத்த ஏனைய சிஙகள இளைஞர்கள் தலீவன் என்றால் அனுரா (இவரின்ட தம்பி தான் அந்த தமிழ் மல்லி பயங்கரவாதி) தமிழன்டா என்றால் சிறிலங்கன் 😆
  5. மற்ற ஆட்கள் எண்ணை கேட்டு விடுவார்களோ என்று, பிரான்ஸ் அடக்கி வாசிக்குது போலை உள்ளது. ஜேர்மனியை மறக்காமல்.... எங்களுக்கு ஒரு எண்ணைக் குழாயை போட்டு விடுங்கள். இனி என்ன... @இணையவன், @விசுகு, @suvy எல்லாரும் "ஷேக்" உடுப்பு போட வேண்டியதுதான். 😂
  6. அண்ணனின் கையைபிடிச்சுக்கொண்டுதான்....உந்த இடமெல்லாம் போனனான்...அண்ணனுக்கு சிவாசியில் அலாதி பிரியம்...அதாலை சேர்ந்துபோன எனக்கும் மாலினி கவர்ச்சியாகத் தெரிந்தா ...நம்பினால் நம்புங்கோ
  7. செய்தி உண்மை, ஆனால் வாசி சுட்டிக் காட்டியாது போல மிகவும் பழசு: 2023 இல் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. https://www.cnn.com/2023/10/29/climate/white-hydrogen-fossil-fuels-climate/index.html இந்த பழைய செய்தியை இந்தியாவின் இன்னுமொரு காப்பியடி இணையத் தளம் பிரசுரிக்க, ஆதவனும் காப்பியடித்து அதிரடியாக வெளியிட்டிருக்கிறது! அதி வேகமாக செய்தி கொப்பியடிக்கும் ஆதவன் ரீமுக்கு இப்ப தான் "அதிரடியாக" தெரிய வந்திருக்கிறது! "கற்பூர ரீம்" தான் வைத்திருக்கிறார்கள்😂! Times NowIndia's Ally In Europe Hits Jackpot Worth $92 Trillion, U...France has discovered a massive 46-million-ton white hydrogen reserve in the Moselle region, valued at $92 trillion. Unlike gray and green hydrogen, white hydrogen requires no industrial production...
  8. அண்ணை ஏற்கெனவே இந்தச் செய்தியை பார்த்து விட்டு, மாலினியை பார்க்க... சிலோனுக்கு போக முடியாமல் இருக்கே.. என்ற கவலையில், பிரஷர் குளிசையை போட்டுட்டு, படுத்து இருக்கின்றார். 😂
  9. @குமாரசாமி அண்ணே.... உங்கடை ஆளுக்கு சுகமில்லையாம் என்னது அண்ணை வைத்தியசாலையில் என்று கேள்விப்பட்டு அம்மணியும் வைத்தியசாலையிலா? அண்ணன் சுகமாக வீடு வந்து சேர்ந்து விட்டார் என்று தகவல் அனுப்புங்கப்பா. இதுகளை இப்போதைக்கு அண்ணனுக்கு சொல்லி பிபியை ஏத்த வேண்டாம் பிளீஸ்.
  10. ஆபிரஹாம் சுமந்திரனின் சொந்த இடம் கொழும்பு தானே... தனது இடத்திலேயே.... போட்டியிடாமல், பயந்தாங் கொள்ளி மாதிரி... பம்மிக் கொண்டு பின்வாங்கும் அரசியல்வாதி சுமந்திரனாகத்தான் இருக்கும். கொழும்பில் போட்டி போட்டு... தனது பலத்தை காட்டினால் தானே, மக்கள் இவரின் செல்வாக்கை அறிய முடியும். @பெருமாள், @alvayan, @satan
  11. தொடருங்கள், விசுகர்…! மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற காலத்தின் நினைவுகள், அரும்ப முதலே கருகிப் போகும் முகிழ்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் மிகவும் வலி மிகுந்தவை..! ஆனால் அந்த வலிக்குள்ளும் ஒரு சுகம் மறைந்திருக்கும் பாருங்கள்..! அது தான் வாழ்க்கையின் புதிர்…!
  12. மோசடி, கொலை, கொள்ளை செய்தவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. அரகலய போராட்டம் யாருக்கு எதிராக நடந்தது? தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் யார்? என்பது ஒன்றும் இவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், மக்களுக்கு நன்றாகத் தெரிந்துதான் உரியவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கத்தான் ஓடி ஒளிகிறார்கள் ஊழல் மோசடி செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களின் ஏவலர்கள். நாட்டுக்கு யாராவது ஒருவர் சேவையாற்றி இருந்தால்; நாடு பாதாளத்திற்கு போயிருக்காது, இவ்வளவு ஊழல்வாதிகள் பெருகியுமிருக்க வாய்ப்பில்லை. உதயன் கம்மன்பில கூறினார் "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950 ல் இருந்து கடன் வாங்கியே வாழ்ந்த தேசம்." மைத்திரி சொன்னார் "நிரந்தர பகிர்வு பொறி முறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." அப்படி யாராவது நாட்டுக்கு சிறந்த சேவையாற்றியிருந்தால்; அவரை நீங்கள் வெளிப்படுத்துங்கள் மக்களுக்கு.
  13. விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையடிக்க வேண்டாம் என்று சொல்வதே. கடல்வள கொள்ளையர்கள் தம் செயல்களை நிறுத்துவதைத் தவிர இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் இல்லை. ஸ்டாலினில் இருந்து, சீமான் மற்றும் விஜய் வரைக்கும் இதைச் சொல்லும் துணிவு அற்றவர்கள்.
  14. கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்கும் காசை ம‌க்க‌ளிட‌த்தில் சென்று கொடுத்தார் ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்ல மாதிரி செய்து விட்டு இடையில் த‌ன‌து இன்னொரு முக‌த்தை காட்ட‌ அதோட‌ இவ‌ரை பல‌ர் வெறுக்க‌ தொட‌ங்கிட்டின‌ம்...............இப்ப‌ த‌ன‌து பாதுகாப்புக்காக‌ மூன்று பேருட‌ன் போய் தான் உத‌வி வீடியோ போடுறார் முந்தி த‌னி ஆளாய் சென்று கூட‌ உத‌வி வீடியோ போட்ட‌வ‌ர்....................வெளி நாட்டு ம‌க்க‌ளின் ப‌ண‌ங்க‌ளை இவ‌ர் சுருட்டி விட்டார் என்று ப‌ல‌ர் குற்ற‌ச் சாட்டு வைக்கின‌ம்................. 1000ரூபாய்க்கு வ‌ழி இல்லாம‌ இருந்த‌ இன்னொரு யூடுப்ப‌ர் இப்ப‌ 1கோடி 30 ல‌ச்ச‌த்துக்கு கானி வேண்ட‌ வெளிக்கிட்டு பிடி ப‌ட்டு போனார் , ஆட்க‌ளை வீடியோ பிடிச்சு போடுவ‌து பிற‌க்கு அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு அந்த‌ உத‌வி போய் சேருவ‌தில்லை ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்து ப‌ல‌ரை ஏமாற்றி விட்டார் அவ‌ர் வ‌சிப்ப‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் சிறி அண்ணா விழிப்புன‌ர்வு தேவை புல‌ம் பெய‌ர் ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு இன்னொரு சின்ன‌ யூடுப்ப‌ர் வ‌ய‌தான‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ மூதாட்டிய‌ வீடியோ பிடிச்சு போட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் அந்த‌ யூடுப்ப‌ரை தொட‌ர்வு கொண்டு காசை கொடுத்த‌வை அந்த‌ மூதாட்டிக்கும் அவான்ட‌ ஊன‌முற்ற‌ பேர‌ப்பிள்ளைக‌ளுக்கும் கொடுக்க‌ சொல்லி , வீடியோவில் காசை கொடுப்ப‌தை காட்டி விட்டு கொடுத்த‌ காசை திருப்ப வேண்டி விட்டு அந்த‌ இடத்தை விட்டு ஓடி விட்டார் ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் என்ற‌து போல் க‌ட‌சியில் பிடி ப‌ட்டு விட்டார் அதே யூடுப்ப‌ர் மூல‌ம் க‌ன‌டாவில் வ‌சிக்கும் அண்ணா க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பெண் பிள்ளைக்கு 3ல‌ச்ச‌ம் அனுப்ப‌ , 3ல‌ச்ச‌த்தை அந்த‌ பிள்ளையிட‌ம் கொடுக்கிற‌ மாதிரி கொடுத்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌ம் காசை வேண்டி விட்டார் காசு அனுப்பின‌ க‌ன‌டா அண்ணா ம‌ட்ட‌க்க‌ள‌ப்புக்கு வ‌ந்த‌ பிற‌க்கு அந்த‌ யூடுப்ப‌ருக்கு போன் பண்ணி இருக்கிறார் வா த‌ம்பி வெளியில் போயிட்டு வ‌ருவோம் என்று , இந்த‌ யூடுப்ப‌ர் உட‌ன‌ போக‌ அந்த‌ அண்ணா கேட்டு இருக்கிறார் அந்த‌ 3ல‌ச்ச‌ம் காசு கொடுத்த‌ பிள்ளையின் வீட்டை த‌ன்னை கூட்டிட்டு போக‌ சொல்லி , இந்த‌ யூடுப்ப‌வ‌ரும் கூட்டிட்டு போக‌ , க‌ன‌டா அண்ணா அந்த‌ பிள்ளையிட‌ம் கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின‌ 3ல‌ச்ச‌ம் காசு இவ‌ர் த‌ந்த‌வ‌ரா என்று அந்த‌ பிள்ளை உண்மைய‌ சொல்லிச்சு மூன்று ல‌ச்ச‌ம் த‌ந்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌த்தை திருப்பி வேண்டி விட்டார் என்று...................கன‌டா அண்ணா அந்த‌ யூடுப்ப‌ருக்கு அந்த‌ இட‌த்திலையே ந‌ல்ல‌ அடி கொடுத்தார்💪...................... இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌க்குது த‌மிழ் சிறி அண்ணா இப்ப‌ ச‌ம்முக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் காசு பார்க்க‌ ப‌ல‌ர் கில‌ம்பிட்டின‌ம் , புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் வ‌லு க‌வ‌ன‌மாக‌ இருக்க‌னும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌னும் என்றால் யூடுப்ப‌ர் மார் மூல‌ம் உத‌வாம‌ல் அந்த‌ க‌ஸ்ர‌ம் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வ‌ங்கிய‌ வேண்டி விட்டு நேர‌டியா அவையின் வ‌ங்கிக்கு காசு அனுப்ப‌லாம் , அல்ல‌து தெரிந்த‌ ஊர் அல்ல‌து சொந்த‌ ஊர் என்றால் சொந்த‌ங்க‌ள் மூல‌ம் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌லாம்..........................
  15. இவ‌ர் பெரிய‌ ர‌வுடி அண்ணா ரிக்ரொக்கில் இவ‌ரை க‌ழுவி ஊத்தாத‌ ஆட்க‌ளே இல்லை எங்க‌ட‌ புல‌ம்பெய‌ர் ம‌க்க‌ளுக்கு இப்ப‌ த‌ன்னும் ந‌ல்ல‌ புத்தி வ‌ந்து இருக்கே என்று பெருமை ப‌ட‌னும் இவ‌ர் ப‌ய‌ங்க‌ர‌ மோச‌டி வேலைக‌ள் செய்யும் ந‌ப‌ர் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் ஒரு பெண் பிள்ளையின் வாழ்க்கைய‌ நாச‌ம் ஆக்கின‌ த‌றுத‌லை , இத‌ற்கான‌ ஆதார‌ம் என்னிட‌ம் இருக்கு👍 ஆர‌ம்ப‌த்தில் இவ‌ரின் காணொளிக‌ள் பார்ப்பேன் , இப்ப‌ பார்க்காம‌ விட்டு இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது இவ‌ன்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ள் ஆளுக்கு ஒரு யூடுப் வைச்சு புல‌ம்பெய‌ர் நாட்டு ம‌க்க‌ளின் ப‌ண‌த்தில் சொகுசு வாழ்க்கை வாழுகின‌ம் , இவேன்ட‌ ச‌கோத‌ர‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்குள் பிடிக்கும் ச‌ண்டைக‌ளை பொது வெளியில் கொண்டு வ‌ந்து போடுங்க‌ள்......................... கிருஷ்னா ச‌ம்முக‌ சேவை செய்யும் நோக்கில் தொட‌ங்க‌ வில்லை த‌ன‌து ந‌ண்ப‌னை பார்த்து தானும் காசு உழைக்க‌லாம் என்று தொட‌ங்கின‌வ‌ன் , மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் 1ல‌ச்ச‌ம் ரூபாய் கூட‌ இல்லாம‌ இருந்த‌வ‌னுக்கு , 2அர‌ வ‌ருட‌த்தில் இல‌ங்கை காசுக்கு 6 கோடி எப்ப‌டி வ‌ந்த‌து , ப‌ருத்திதுறையில் இவ‌ன் வேண்டின‌ கானி க‌ட்டின‌ வீட்டின் பொரும‌தி 6 கோடிக்கு மேலாம்...............இதை என‌க்கு சொன்ன‌து இவ‌னின் ஒன்ட‌ விட்ட‌ த‌ம்பி................இந்த‌ 6 , 7 கோடி வீட்டு க‌தை ரிக்ரோக்கிலும் ப‌ல‌ர் க‌தைச்சும் இருக்கின‌ம் இவ‌னின் குள‌று ப‌டிக‌ளை சொன்னால் யாழ்ப்பாண‌த்தில் ர‌வுடிக‌ளை வைச்சு ஆட்க‌ளை மிர‌ட்டுவாராம் இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு பெண் பிள்ளைக‌ளுட‌ன் க‌தைக்கும் வித‌ம் ச‌ரியே இல்லை அதுக‌ள் வ‌ள‌ந்து ந‌ல்ல‌ குடும்ப‌த்தில் வாழ‌ப் போர‌ பிள்ளைக‌ளை உத‌வி என்ர‌ பெய‌ரில் அதுக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து தான் இந்த‌ பொம்பிளை பொருக்கியின் வேலை பிடிச்ச‌ ம‌க்க‌ள் ஊமை குத்து குத்தி விட்டு காவ‌ல்துறையிட‌ம் பிடித்து கொடுத்து இருக்க‌னும்................. ஒரு வ‌ரியில் சொல்ல‌ப் போனால் இவ‌ன் ஒரு பிராடு😁................................
  16. SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்தம் ஆகக்குறைந்தது ஐயாயிரம் பேராவது இந்த வகை ‘வக்கிரக’ வீடியோக்களை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் சராசரியாக ஆயிரம் பேர் இதெல்லாம் பிரமாதம் என்று லைக் இடுகிறார்கள். ஆதலால், இங்கு மனப்பிறழ்வு ஒருவருக்கல்ல! நம்முடைய பாதிச் சமூகம் இப்படித்தானிருக்கிறது. இவருடைய அத்தனை வீடியோக்களின் கென்டன்ட், வறியவர்களுக்கு உதவி செய்தல். இப்படி உதவி செய்வதன் மூலம் இலகுவாக பரபல்யம் அடைதல். அந்த பிரபல்யத்தால் தலைக்குள் ஏறும் கனத்தில் இப்படி அயோக்கிய அதிகாரம் பண்ணுதல். இதுதான் இவர்களுடைய பிழைப்பு. இந்த உதவிகளுக்குரிய மொத்த பணத்தையும் லட்சக் கணக்கில் வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களே தாரைவார்க்கிறார்கள். அப்படி அனுப்பும் பெருந்தகைகள் கணக்குக் கேட்பதுமில்லை, அது எப்படி வறியவர்களின் தன்மானத்தையும், சுயகெளரவத்தையும் அழித்தொழிக்கிறது என்பது மட்டில் அக்கறைகொள்வதுமில்லை. ஆக இந்த அயோக்கிய யூடியூப்பர் போன்றவர்களின் பிரபல்யம் என்பதும், அதனால் வெளிப்படும் அடாவடித்தனம், அயோக்கியத்தனம் என்பதும் ஆயிரக்கணக்கான தமிழர்களால் கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சமூகப் பொறுப்பற்ற, accountability to affected victims என்கிற ஒன்று கிஞ்சித்தும் இல்லாத புலம்பெயர் தமிழ் தனவந்தர்களால் கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு அறிவு மயிர் வரும்வரை, இந்த நச்சுப் புழுக்களை இங்கிருந்து ஒருபோதும் நசுக்கித்தள்ள முடியாது. நன்றி - https://www.facebook.com/share/p/1ZifUXekXu/?mibextid=wwXIfr டிப்பர்ல பாவம் அப்பாவிகள் எவன் எவனோல்லாம் அடிபட்டு சாகிறான்... இவனும் அதே ரோட்ல தான் போய் வாறான்... ஒரு கேடு வருதில்லையே..👇 https://www.facebook.com/share/v/168fX8nFdu/?mibextid=wwXIfr
  17. அவளைத் தொடுவானேன்...? சிறு வயதில் இருந்தே இசை நாடகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம் எனக்கு. சாதாரண தரப் பரீட்சையில் சங்கீதத்தில் செய்முறை அதாவது பாடி 60 க்கு 58 புள்ளி எடுத்து அதி சித்தி (D) எடுத்திருந்தேன். அத்துடன் நகைச்சுவை என்னோடு கூடப் பிறந்தது. இதனால் என்னை சுற்றி எப்பொழுதும் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமும் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் இருக்கும். அந்த நேரத்தில் தான் தென் பகுதியில் படித்து கொண்டு இருந்தவள் எங்கள் ஊருக்கு வந்தாள். அவள் நடக்கும் போது காலடிகளில் இரத்தம் பொக்களிப்பது தெரியும் அந்த அளவுக்கு அவள் வெள்ளையாக இருந்தாள் அத்துடன் தென் பகுதியில் படித்ததால் அவள் தமிழ் இன்னொரு வகை தேனாக இனிக்கும். கேட்க கேட்க கேட்க தோன்றும். அவள் என்னிடம் பாடச்சொல்லி கேட்பாள். நான் அவளை பேசு என்பேன். இப்படி தான் அறிமுகமானோம். அவள் என் கையை எப்பொழுதும் பிடித்துக் கொள்வாள். இதற்கு மேல் தாங்காது நான் அவளை தொட்டேன்..... காலம் என்னை தூக்கி கொழும்பில் போட்டது. தொடர்பு அறுந்தது. தொடரும்.....
  18. சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள். அதன் பிறகு அவளது தந்தையே அவளுக்கு எல்லாமுமாக இருந்தார். எத்தனை பேர் கேட்டும், தனக்கு இன்னுமொரு கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து தனக்காக வாழும் தந்தையை எப்போதும் அவள் உயரத்திலையே வைத்திருந்தாள். அவரது வார்த்தைக்கு அவள் மறு பேச்சு சொன்னதும் இல்லை. சீதனமாக ஒரு இலட்சம் யூரோ, நகை, ஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமி, சிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவு… என்று ஏகப்பட்ட செலவுகளுடன் எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா. கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான். விடுமுறை முடிந்து விட்டது. பிரச்சினையும் தொடங்கி விட்டது. அன்று வேலை முடிந்து வீட்டுக்கதவைத் திறந்த போதே வீட்டில் புயல் மையம் கொண்டிருந்ததை காஞ்சனா விளங்கிக் கொண்டாள். “நேரம் என்ன எண்டு தெரியுதோ?” “நீங்கள்தானே கையிலை Mobile வைச்சிருக்கிறீங்கள். Mobile இலை நேரம் என்ன display செய்யேல்லையோ?” “எனக்குத் தெரியுது? உனக்குத்தான் தெரியேல்லை. ஒரு பொம்பிளை வீட்டுக்கு வாற நேரமே இது? “ “இப்பத்தானப்பா வேலை முடிஞ்சுது” “இரவு ஒன்பது மணிக்கோ? எல்லாரும் office முடிஞ்சு ஐஞ்சு ஆறு மணிக்குள்ளை வீட்டை போயிடுவாங்கள். உனக்கு மட்டும் ஒன்பது பத்து மணியாகுது” “இண்டைக்கு வேலை கூட. அதை முடிக்காமல் வரேலாது. அப்பிடி வந்து மிச்ச வேலையைச் செய்ய நாளைக்குப் போனால், ஒவ்வொரு நாளும் போக வேணுமோ எண்டு புராணம் பாடத் தொடங்கீடுவிங்கள்” “மகள் home office தான் செய்யிறாள். எப்போதாவது மாதத்திலை ஒண்டு இரண்டு நாட்களுக்குத்தான் officeக்குப் போவாள் எண்டு சொல்லித்தானே கலியாணம் செய்து வைச்சவை. “உண்மை. ஆனால் என்ரை வேலை அப்பிடி. சில வேலைகளை office க்குப் போய்த்தான் செய்யோணும்” “எனக்கென்னவோ நீ வேலைக்காக office க்குப் போறதாத் தெரியேல்லை” “மாதவன், களைச்சுப் போய் வந்திருக்கிறன். நல்லமுறையிலை கதையுங்கோ. சிறீலங்காவிலை இருக்கிற ஊர் வாழ்க்கையை இங்கை உள்ள வாழ்க்கை முறையோடை ஒப்பிட்டுப் பார்க்காதையுங்கோ. அங்கை உள்ள சூழல் வேறை. இங்கை வேறை. “நாங்கள் தமிழர்கள். எங்கை வாழ்ந்தாலும் எங்களின்ரை பண்பாடுகளை மாத்தேலாது. இரவு ஒன்பது பத்து மணிக்கு வீட்டுக்கு வாறதை என்னாலை ஒத்துக் கொள்ளேலாது” “முதலிலை நானும் மனித இனம் எண்டதை ஒத்துக் கொள்ளுங்கோ. எங்கடை கலாச்சாரம், பண்பாடுகள்... என்னை அடிமைப் படுத்தும் எண்டால் எனக்கு அது தேவையில்லை” “கலியாணம் பேசக்கை நீ நல்ல பிள்ளை, பண்பான பிள்ளை எண்டெல்லாம் எனக்குச் சொல்லிச்சினம். உடுப்பு, ஆளின்ரை நடை, செயல்பாடு எல்லாம் இஞ்சை வேறையாக் கிடக்கு” மனம் ஒரு நிலையில் இல்லாமல் கட்டிலில் நித்திரையின்றி தவித்துக் கொண்டிருந்த காஞ்சனா, அலைபேசியில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்“ பாடலைக் கேட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்தப் பாடலை தனது தந்தையின் தொலைபேசி அழைப்பாக அவள் அலைபேசியில் பதிவு செய்திருந்தாள். கட்டிலில் இருந்த படியே அலைபேசியைக் கையிலெடுத்து “சொல்லுங்கோ அப்பா” என்றாள். “மாதவன் ரெலிபோன் எடுத்தார்” “எடுப்பார் எண்டு எனக்குத் தெரியும்” “கதவைத் திறக்கேலாதாம் உனக்கு போன் எடுத்தால் answer இல்லையாம்” “அவராலை கதவைத் திறக்க ஏலாது. நான் கதவின்ரை பூட்டை முழுசா மாத்தீட்டன். Phoneஇலையும் அவரை block செய்திட்டன். எனக்கும் அவருக்கும் ஒத்து வரேல்லை. அவருக்கும் எனக்குமான கலியாண ஒப்பந்தம் முடிவுக்கு வருகுது. நான் lawyer ஓடை எல்லாம் கதைச்சிட்டன். நீங்கள் கலியாணம் என்று கேட்டபோதே நான் வேண்டாமெண்டு சொல்லியிருக்கோணும். அந்த நேரம் நான் உங்களின்ரை சொல்லை மதிச்சனே தவிர மற்றதையெல்லாம் சிந்திச்சுப் பாக்கேல்லை. இங்கை ஒவ்வொருநாளும் சண்டை. அவரின்ரை சந்தேகப் பார்வை, பேச்சு…… அப்பா, நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். மாதவனுக்கு சீதனமா ஊரிலை இருக்கிற சொத்துகள், பிறகு காசு, நகை எல்லாம் குடுத்தீங்கள். வேணுமெண்டால் ஒரு நட்ட ஈடாக மாதவனும் அவரின்ரை குடும்பமும் அதுகளை எடுத்துக் கொள்ளட்டும். என்னைக் கட்டினதாலை அவருக்கு யேர்மனி விசாவும் கிடைச்சிருக்கு. நல்ல வேலையையும் அவருக்கு ஏற்ற பொம்பிளையையும் அவர் தேடிக் கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை இனி அவர் எனக்கு வேண்டாம். மாதவனின்ரை சகல பொருட்களையும் கட்டி கராஜ்ஜுக்குள்ளை வைச்சிருக்கிறன். கராஜ் திறந்துதான் இருக்கு. எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கோ” அலைபேசியை வைத்து விட்டு காஞ்சனா கட்டிலில் படுத்தாள். நிம்மதியாக இருந்தது. இனி வீட்டுக் கட்டிலில் சுகமான தூக்கம் அவளுக்கு க் கிடைக்கலாம்.
  19. நினைவூட்டிவிட்டீர்களே வில்லவன் தமிழ்நாட்டு கொள்ளை அடிக்கும் மீனவர்களுக்கு ஆதரவாக அதிரடி போராட்டம் என்றுஅறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஜய் கச்சதீவை மீட்போம் என்பதையும் சேர்த்து கொள்ள போகின்றார் 😂
  20. அண்ணை உங்கள் கிணத்தில எனக்கு பங்கு உரிமை தருவியளே🤣 இதே போல் வடக்கு இங்கிலாந்து, தெற்கில் கேட்விக்குக்கு கீழே எல்லாம் ஷியில் காஸ் எனப்படும் எரிவாயு எக்கசக்கம். ஆனால் எடுத்தால் பெரிய இயற்க்கை அழிவுகள் வரும். பிரான்ஸ் ஓக்கே - இங்கே யூகேயில் என்ன வளம் எடுத்தாலும் தனியார் கைக்குத்தான் போகும். நோர்வேயும் பிரிதானியாவும் ஒரே நேரத்தில் வடகடலில் எண்ணையை கண்டுபிடித்தன. நோர்வேயின் வளம் அரச நிதியம் ஆகியது. அதனால் இன்று சாதராண நோர்வேஜியர்கள் பணக்காரார். பிரிதானிய வளம் BP எனும் நிறுவனத்துக்கு. அதனால் பங்குதாரார்கள் அதீத பணக்காரார்கள்.
  21. என்னப்பா உயர் நீதிமன்றில் பட்ட பகலில் சிறைக்கைதி சுட்டு கொல்லப்பட்டது பயங்கரவாதமில்லையா... அதை தொடர்ந்து பல கொலைகள் நடந்தது ... பாதுகாப்பு படையினர் இதில் ஈடுப்பட்டுள்ளனர்.. நாட்டில பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நீக்கவில்லை.. அதாவது உல்லாச பயணத்துறையை அதிகரிக்க யாரோ அறிக்கை விடுயினம் என்பது மட்டௌம் உண்மை
  22. இது வேற பிரச்சினை. "சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல்" பிரச்சினையென்றால் இங்கே சிறுபான்மை மதங்களை நேரடியாகவே தாக்கிய திரிகளில் அல்லவா அவர் முன்னின்று எழுதியிருக்க வேண்டும்😂?
  23. கொழும்பிலிருந்து புத்தூரை துவிச்சக்கரவண்டியில் சென்றடைந்து 74 வயது சிரேஷ்ட பிரஜை சாதனை! 11 Mar, 2025 | 04:52 PM கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வடபகுதி புத்தூர் நகரை துவிச்சக்கரவண்டியின் மூலம் மூன்றே நாட்களில் சென்றடைந்து பருத்தித்துறையைச் சேர்ந்த 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் - புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற் மிஷன் வைத்தியசாலைக்கு (St.Luke's Methodist Mission - hospital, Puttur) அத்தியாவசிய சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியை திரட்டுவதற்காக இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 3 தசாப்த காலத்துக்கு முன்பு அவுஸ்திரேலியா நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற செல்வத்தம்பி குலராசா பருத்தித்துறை - புலோலி கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவரது துவிச்சக்கரவண்டி சவாரியில் அவரது இரண்டு ஆண்பிள்ளைகள் உட்பட 70 துவிச்சக்கரவண்டி செலுத்துநர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன் மூலம் 1,30,000 பவுண்ட் நிதி திரட்டப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து புத்தூரை துவிச்சக்கரவண்டியில் சென்றடைந்து 74 வயது சிரேஷ்ட பிரஜை சாதனை! | Virakesari.lk
  24. ஆபிரஹாம் சுமந்திரனின் சொந்த ஊர் கொழும்பு. ஆகவே அவர் தாராளமாக, பயப்பிடாமல் போட்டியிடலாம். 😂 Kunalan Karunagaran
  25. உலகத்திற்கு 16 வருடங்களுக்கு முதல் தெரிந்த உண்மை இப்போது தான் இவர்களுக்கு தெரித்திருக்கிறது. அதாவது Reality ல் இருந்து பல வருடங்கள் பின்னோக்கி உள்ளவர்கள் பலர் இப்போதும் புலம் பெயர் நாடுகளில் உள்ளார்கள். இந்த பிற்போக்குவாதிகள் மக்களை வழிநடத்த போவதாக வேறு கப்சா. 😂
  26. வுடு ராசா.... எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும். பாவம் மனிசன்.🤣
  27. உள்ளதையும் கெடுத்தான் ஆண்டி இந்த கிருஷ்ணா. சாதாரண பாமர மக்களுக்கு கிடைத்த புலம்பெயர் உதவிகளையும் சின்னாபின்னமாக்கி விட்டுள்ளார். சட்டபிரகாரம் புலம்பெயர் மக்களின் உதவிகள் எல்லா மக்களையும் போய் சேராது என்பது நான் கண்டறிந்த அனுபவம்.
  28. தொடருங்கள் விசுகு ஐயா. உரைநடைக் கவிதை போல இருக்கின்றது உங்களின் எழுத்து நடை......👍.
  29. இங்கு அமெரிக்காவில் நான் இருக்கும் பகுதியில் இப்படியான திருமணங்கள் நடப்பது மிகவும் அரிது. கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வருடங்களின் முன்னர் ஒன்று நடந்தது நினைவில் இருக்கின்றது. அவர்கள் இருவரும் சில வருடங்களில் பிரிந்து போனார்கள். இன்று எனக்கு இரண்டு பிள்ளைகள் இந்த வயதுகளில் இருக்கின்றார்கள். இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், மகன் ஒருவர் மகள் ஒருவர். இப்படியான ஒன்று சரிவரும் என்று எனக்கு தோன்றவில்லை......... நல்லது கூடாது என்பதையும் தாண்டி, கல்லில் எழுதிய எழுத்து போல பழக்கவழக்கம் என்ற ஒன்று ஒவ்வொரு பிரதேசத்திற்கும், சூழலுக்கும் அமைந்தும் விட்டது........... ஒருவர் அவருக்கு பரிச்சயமில்லாத இன்னொன்றை தனது வாழ்க்கைப் பாதையாக ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்............
  30. அதிரடியாக பிரேக் போட்டு விபத்தை தடுத்துவிட்டார் ...அனுரா அரசின் அதிரடி நடவடிக்கை
  31. வீரப்பையன், இந்தத் திரியிலே அதிக குப்பை கொட்டினதும் நாமதானாம்.😁
  32. ட்றம்பின் வரி மிரட்டலுக்கான தாக்கம் இன்று அமெரிக்க பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. இதில் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்றைய வீழ்ச்சியுடன் கடந்த 3 மாதங்களில் டெஸ்லா நிறுவனம் 800 பில்லியன் டொலருக்கும் (மில்லியன் அல்ல) அதிகமான பங்குச் சந்தை முதலீட்டினை இழந்துள்ளது. டெஸ்லாவின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக மஸ்க் - ட்றம்ப் கூட்டு மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவான மஸ்கின் அண்மைய கருத்துக்கள் குறிப்பிடப்படுகிறது. இப்படியே சென்றால் டெஸ்லா நிறுவன முதலீட்டாலர்கள் மஸ்கை நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்கலாம். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இறுமாப்புடன் ஆட்டம் போட்ட இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் உலகம் தக்க பதில் கொடுக்கிறது.
  33. என்னப்பா வீடுவளவு விற்று பரிசில் தொகையும் வழங்கியாச்சு இப்போது புதிதாக பதவி ஏற்பவர்களை என்ன செய்வது? முதலில் பரிசில்கள் வாங்கிய 3 பேரும் கெளரவமாக கொண்டுவந்து ஒப்படைக்கவும். அப்புறம் ராணுவத்தை விட்டு சொத்துக்கள் பறி முதலாக போகுது. புதிதாக பதவி ஏற்ற @வீரப் பையன்26 @செம்பாட்டான் @Eppothum Thamizhan மூவருக்கும் வாழ்த்துக்கள். கல்லோ @குமாரசாமி நான் எங்க நிற்கிறன் தெரியுதோ? மேல அண்ணாந்து பாருங்க.
  34. ஏன் உங்களின் தீர்மானத்தை அணைத்து மாவட்டங்களுக்குமாய் விஸ்தரிக்கக் கூடாது ........ ! 😁
  35. முதல் , இரண்டாவது , மூன்றாவதாக மூவருக்கும் வாழ்த்துக்கள் ..........! பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் ............! போட்டியை சிரத்தையுடன் திறம்பட நடாத்திய கிருபனுக்கு ஒரு சல்யூட் .......! எல்லோரும் சேர்ந்து குலாவி கும்மியடிக்க வழியமைத்துக் குடுத்த யாழ் நிர்வாகத்துக்கு நன்றிகள் பல ..........! தொடற்சியாக திரியை கலகலப்பாக்கிக் வந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் .........! பழையபடி கலகலப்பான கருத்துக்களுடன் வந்த கு . சா . கண்டதும் மகிழ்ச்சி ..........! மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் . .........! 😂
  36. ந‌ன்றி ந‌ண்பா நான் நேர‌லைய‌ பார்க்க‌ வில்லை இது சும்மா பொழுது போக்குக்கு நட‌த்த‌ப் ப‌டும் போட்டி தானே , நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஒரு போட்டியில் கூட‌ விளையாட‌ வில்லை சில‌து சிங் விளையாடி அதிக‌ விக்கேட் எடுத்து இருந்தால் நான் தான் முத‌லாம் இட‌ம் ந‌ண்பா🙏👍...............................
  37. போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட... @புலவர், @நீர்வேலியான், @நியாயம் ஆகியோருக்கும், போட்டியில் உற்சாமாக கலந்து கொண்டவர்களுக்கும், போட்டி நடந்து கொண்டிருந்த நிலையில்.... புதிய யாழ். களமாற்றம் வந்த போது ஏற்பட்ட சிரமங்களை திறமையாக சமாளித்து, போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன்ஜீ க்கும், போட்டியை... தொய்வில்லாமல், கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கும்... பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். 🙂
  38. போட்டியில்முதல் மூன்று இடங்களை பிடித்த புலவர், நீர்வேலியான், நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். போட்டியை வழமை போல் இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. பல போட்டிகளை தொடர்ந்து நடாத்தும் கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவரும் ஐபிஎல் போட்டியில் சந்திக்கலாம்.
  39. முதன் முதலாகப் பங்கு பற்றி, முதல் ஜவரில் ஒருவராக வந்ததில் பகிழ்ச்சி. வெற்றியாளர்கள் @புலவர் மற்றும்@நீர்வேலியான் க்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் அவர்களுக்கும் நன்றிகள்.
  40. காலங்களில் அவள் வசந்தம் . ............! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.