Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்18Points87990Posts -
விசுகு
கருத்துக்கள உறவுகள்18Points34974Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts -
சுப.சோமசுந்தரம்
கருத்துக்கள உறவுகள்9Points488Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/19/25 in all areas
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
6 pointsபம்மாத்து (Pretensions) - சுப.சோமசுந்தரம் உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களிடம் தேர்தல் வாக்குக்காக கையேந்தும்போது சமரசம் எனும் தீமைக்குள் வந்துதானே ஆக வேண்டும் ? கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். அவ்வாறு பம்முகிற ஒவ்வொரு தருணத்திலும், "ஆனால் எனக்குத் தெரியும் அந்த ஒரு தேவனும் கிடையாது" என்று அண்ணா தமக்குள் முணுமுணுத்திருப்பார் என்பதை அண்ணாவை அறிந்தவர் அறிவர். அந்தப் பம்மாத்தில் மக்களுக்கு நன்மைகள் விளைந்தன என்பதை அறிவார்ந்தோர் அறிவர். பெரியார் மற்றும் பெரும்பாலான திராவிட கழகத்தினரைத் தவிர்த்து ஏனைய திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் நமக்குத் தெரிந்த ஒரு பிம்மாத்து உண்டு; அதாவது, நமக்குப் பம்மாத்தாகத் தோன்றுகிற ஒன்று உண்டு. அது "நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோமே தவிர பார்ப்பனர்களை அல்ல" என்பதுவேயாம். பார்ப்பனியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை எதிர்க்கும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம். விதிவிலக்குகள் விதி யாது என்பதைச் சொல்பவைதாமே ! அவ்விதிவிலக்குகள் பார்ப்பனியத்தை உதறியவர்கள்; எனவே அவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ?முடிவு செய்துவிட்டு நியாயங்களைத் தேடிக் கற்பிதம் செய்ய அறிவு ஜீவிகளுக்குச் சொல்லியா தர வேண்டும் ? பெரியார் வேறு எந்த சாதிக்காரர்களையும் விமர்சிக்கவில்லையே ! மேற்கூறியது போலவே திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள், "நாங்கள் இந்திய எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்" என்பதுவும். நீங்கள் வேறு எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் ராஜஸ்தானி, போஜ்புரி, மைதிலி, அவந்தி என்று எத்தனையோ மொழிகளைத் தின்று செரித்து விட்டு, அடுத்து மராத்தி, ஒரியா, பெங்காலி என்று காவு கொள்ளத் துடிக்கும் இந்தியை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும் ? நமது பம்மாத்து ஜோடிகளில் அடுத்து வருபவை காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். தமிழ்நாட்டில் (தமிழகத்தில் என்று நம்மைப் பேச விடாமல், எழுத விடாமல் செய்த ஒரு கிராதகனை என்னவென்று சொல்வது !) இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்த அறுபதுகளில் ஒன்றிய அரசான காங்கிரஸ் பணிந்தது. "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் திகழும்" என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே போராட்டத் தீ அணைந்தது. இடதுசாரிகள் தங்களது அகில இந்திய மாநாடுகளில் மொழி பற்றிய விவாதங்களில், 'தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழி, மற்றபடி இந்தியே இணைப்பு மொழி' என்ற நிலைப்பாடு கொள்வது வழக்கம். "மக்கள் விரும்பும் வரை" என்பதன் பொருள் "நாங்கள் விரும்பவில்லை; என்றாவது ஒரு நாள் நீங்கள் ஏற்பீர்கள். அதுவரை நாங்கள் அடக்கி வாசிப்போம்" என்பதே !. இது ஒரு சூளுரை அல்லது கெக்கலிப்பு. தேசியம் எனும் நீரோடையில் கரைந்து போன கட்சிகளுக்கு இந்தப் பிரச்சினை எப்போதும் உண்டு. அந்நீரோடையில் மூழ்காமல் நீந்தக் கற்றுக் கொண்ட எங்களுக்கு என்ன பிரச்சினை ? காங்கிரஸ் தேசியத்தில் கரைந்தது என்றால், இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் உலகவியத்தில் கரைந்தவர்கள். நேற்றைய சோவியத் யூனியனில் பெரும்பான்மையின ரஷ்ய மொழியின் தாக்குதலினால் பல சிறுபான்மையின மொழிகள் தொலைந்து போனதை லாவகமாகக் கடந்து வந்தவர்கள் ஆயிற்றே ! அது நமக்குத் தான் ரணம்; வர்க்கப் போராட்டத்தில் அவர்களுக்கு அதெல்லாம் சாதா'ரணம்' தோழர் !தமிழ்நாட்டில் அன்றைக்குப் போராடிய மக்களிடம் காங்கிரசின் சமரசம் என்பது "உங்களுக்கு இனி இந்தி கிடையாது" என்பதாகத்தானே இருக்க முடியும் ? "நீ செத்த பின்பு பார்த்துக் கொள்கிறேன்" என்பது சமரசமா ? மும்மொழித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதானே இடதுசாரிகளின் மண்ணுக்கேற்ற மார்க்சியமாய் அமையும் ? அப்படி விலக்கு அளிக்கப்பட்டாலும் மதவாத , பாசிச பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அடாவடித்தனமாய் ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைப் போல பின்னர் வரும் அரசுகள் நடந்து கொள்ளா என்பதற்கு உத்திரவாதம் இல்லைதான். ஆனால் சொல்லும்போதே 'தற்காலிகமாக' என்று பொருள்படச் சொல்வது ஒரு பம்மாத்து வேலை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராகத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள். இப்போது ஒன்றியத்தில் உள்ள பாசிச பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தை முன்வைத்து விட்டு, "மும்மொழித் திட்டம் என்றுதானே சொன்னோம் ? இந்தி படி என்று எங்கே சொன்னோம் ?" என்று சொல்வதுதான் உலக மகா பம்மாத்து. ஒரு திரைப்படத்தில் வருவது போல, "நீ எப்படியெல்லாம் டைப் டைப்பா முழியை மாத்துவே !" என்று எங்களுக்குத் தெரியாதா ? நான் கேரளாவில் வேலை கிடைத்துச் சென்றால், தேவை அடிப்படையில் அப்போது மலையாளம் தெரிந்து கொள்வேன். அதுவரை நான் என் மொழியையும், வெளியுலக இணைப்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்காக நமது அடிமை வரலாறு நமக்களித்த வரமான ஆங்கிலத்தையும் படிப்பேன். நீ உன் மொழியையும் ஆங்கிலத்தையும் படி. அப்போது மொழியில் கூட சமநீதி, சமூக நீதி எல்லாம் உருவாகுமே ! எனவே உலகீரே ! மக்கள் நலனுக்காக பம்மாத்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், அறிஞர் அண்ணா போன்றோரிடம் படித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசுவோம். பின் குறிப்பு : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பவற்றிற்கு மாற்றுச் சிந்தனையை ச.தமிழ்ச்செல்வன், தொ.பரமசிவன் ஆகியோரிடம் வாசித்த நினைவு. பழம் பாடல்களின் அவ்வரிகள் இன்று தமிழனின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை அவர்கள் மறுதலிக்கவில்லை. எனினும் அவர்கள் மாற்றுச் சிந்தனையைப் பதிவிடாமலும் விடவில்லை. அந்த அடிப்படையில் அக்காலச் சமூக, அரசியல் சூழல் கருதி மக்கள் நலனுக்காக திருமூலர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரின் பம்மாத்தாக அவ்வரிகளைப் பார்க்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்பார்வை நம் கற்பனையாகவே இருக்கலாம். பல நேரங்களில் கற்பனையும் ரசனைக்குரியதுதானே ! பேரரசுகள் மருத நிலங்களைச் சுற்றியே தோன்றியிருக்கும். நிலவுடமைச் சமூகங்களும் அங்கேதான் உருவாகி அமைந்திருக்க முடியும். அவர்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தே வந்திருப்பர் அல்லது கொண்டு வரப்பட்டிருப்பர். தன் நிலத்தில் தன் சாமியை விட்டு வந்திருப்பவன் கொண்ட ஏக்கம் தீர, "இங்குள்ள சாமியும் உன் சாமிதானய்யா" என்று அவனை ஆற்றுப்படுத்துவதே "ஒன்றே குலம் ஒருவனே தேவ"னாய் முகிழ்த்திருக்கலாம். அன்றைய தேவைக்கேற்ப, பன்முகத்தன்மையை உடைத்து ஓர்மையை உருவாக்கும் பம்மாத்தாக (அன்றைய பாசிசம் எனக் கொள்ளலாமா ?") இதனைப் பார்க்கலாமோ ! மேலும் அவனது நிலத்தில் சாமியின் அருகிலிருந்து பிடி மண் எடுத்து வந்து அவன் புலம்பெயர்ந்த இடத்தில் அதே சாமியை உருவாக்கும் வழக்கம் அப்போது உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் வந்த இடத்துடன் அவன் மனம் ஒன்றியிருக்கச் செய்ய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" !6 points
-
அவளைத்தொடுவானேன்....???
6 pointsஅவளின் பரிசம் பட்டதும் உடல் முழுவதும் சில்லிடுகிறது. கண்களை இறுக மூடி திறந்து அவளது கண்களை பார்க்கிறேன் அது கலங்கி இருக்கிறது. அவள் வாய் திறக்கிறாள். அதே என்னை மயக்கிய குரல் அழகு தமிழ். அவள் பேசும் விடயத்தை என் மூளை உணராத அளவுக்கு அந்த குரலுக்குள் அவளின் தமிழுக்குள்ளும் உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து நான் 80 களுக்கு சென்று மூழ்கத்தொடங்கினேன்..... திடீரென ஒரு பொறி மனதில் நீ யார் இப்பொழுது என்று? கனவில் எங்கோ சென்று மீண்டும் முழிப்போமே அதைப் போன்றதொரு பதட்டம். அவள் கைகளை பிடித்துக் கொண்டு இருப்பதால் அதை பிடுங்கவும் முடியாமல் கனவை தொடரவும் முடியாமல்...... இந்த மனித மூளையின் வேகம் மற்றும் ஞாபக சேமிப்பு கண்டு வியந்ததுண்டு. ஒரு சில செக்கன்களில் 25 வருடங்கள் பின்னால் அழைத்து சென்று அத்தனையும் படங்கள் மற்றும் உணர்வுகளுடன் இரைமீட்டிவிட்டு ஒரு சில செக்கன்களில் மீண்டும் களத்தில் வந்து நிற்கும் விந்தையை என்னவென்று வர்ணிப்பது? எதனுடன் ஒப்பிடுவது? மீண்டும் அவளது கண்களை பார்க்கிறேன் அதில் எந்த வித சலனமோ சபலமோ இல்லை. ஒரு வித ஆழ்ந்த நட்பு மட்டுமே எனக்கு தெரிகின்றது. என் கண்களை பார்த்தவள் நான் கைகளை விடுவிக்க நினைப்பதை புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். கைகளை விட்டு விட்டு என் குடும்பத்தை பார்க்கணும் என்றாள். அழைத்து சென்று காட்டினேன். எனது மனைவிக்கு இவளைப் பற்றி திருமணத்திற்கு முன்பே சொல்லி இருந்தேன். இருவரும் நட்பாக சுகம் விசாரித்து கொண்டார்கள். பிள்ளைகளையும் அரவணைத்து கொஞ்சி மகிழ்ந்தாள். இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். பிள்ளைகளை கண்காணிப்பவர்களாக அல்லது வழி நடாத்துபவர்களாக பெற்றோர்கள் இருப்பார்கள் இருக்கிறார்கள். அப்படியானால் பெற்றோரை கண்காணிப்பது வழி நடாத்துபவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை எங்கள் சமூகம் அதன் கட்டுப்பாடுகள் மதிப்பு மரியாதை எல்லாமே தான். இந்த சமூக கட்டமைப்பை எல்லோராலும் உதறிவிட முடியாது. இதற்கெல்லாம் கட்டுப்பட தேவையில்லை என்பவர்கள் கூட சில முடிவுகளை எடுக்க முன் நிதானிப்பர். ஏனெனில் நாம் செய்யும் தவறுகள் அல்லது சமூகம் ஏற்காத முடிவுகள் எமது பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த சமூக கட்டமைப்பு பல தவிர்க்க வேண்டியதை தன்னுள் இன்றும் சுமந்து கொண்டு இருந்தபோதும் நன்மைகளும் இருக்கின்றன. அவை எம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தி வருகின்றன. இது தமிழர்களுக்கானது என்று இல்லை ஐரோப்பியர்கள் ஏன் உலகுக்கே பொருந்தும். அவள் விடைபெறும் முன் தனது இன்றைய வாழ்க்கை நிலைமை பற்றி சொன்னாள். மிகவும் அடிமட்ட நிலை. முன் பின் முகமே தெரியாத எத்தனையோ மக்களுக்கு உதவி இருக்கிறேன். தூக்கி விட்டிருக்கிறேன். துணையாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் என் உயிரில் கலந்த இவளுக்கு என்னால் எதுவும் செய்து தர முடியவில்லை. தரவும் கூடாது. இங்கே எனது பள்ளித் தோழிகள், வகுப்புத் தோழிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்து முத்தம் தருவார்கள். எனக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வார்கள். அதில் என் வகுப்புத் தோழி ஒருத்தி டேய் என்று என்னை கூப்பிடுவாள். ஆரம்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் இதனைக் கேட்டு முகம் சுழித்தபோது அவள் கொஞ்சம் பின் வாங்கினாள். ஆனால் பின்னர் என் மனைவி மக்களே அவளை மீண்டும் மீண்டும் அப்படி கூப்பிடும்படி சொல்வார்கள். இவரை டேய் என்று கூப்பிட்டு நாங்கள் கேட்பது நீங்கள் மட்டும் தான் என்பார்கள். அவை எதுவும் என் மனைவி பிள்ளைகள் உட்பட எவராலும் தவறாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் இவளுடன் அப்படி பேசமுடியாது முத்தம் கொடுக்க முடியாது உட்கார்ந்து சாப்பிட முடியாது அவளது தொலைபேசியை எடுத்து அவளுடன் தொடர்பு கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் அவளுக்கு உதவ முடியாது. காரணம் தொட்டது. அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்....????? முற்றும் (யாவும் கற்பனை அன்று)6 points
-
அப்பா......
4 pointsஅண்மையில் ஊரில் நடந்த திருமணம் ஒன்றிற்கு பரிசாக பணம் அனுப்பியிருந்தேன். பெண்ணின் தகப்பனார் பெயருக்கே பணத்தை அனுப்பி அவருடன் தொலைபேசியில் சொன்னேன். பணம் அனுப்பி இருக்கிறேன். மணமக்களுக்கு திருமண பரிசாக கொடுங்கள் என்றேன். பக்கத்தில் நின்ற எனது மனைவி மறக்காமல் கொடுங்கள் என்றார். அவருக்கு அது கேட்க கூடாது என்று உடனேயே தொலைபேசியில் இருந்து விடை பெற்றுக் கொண்டேன். மனைவியிடம் அவ்வாறு சொல்லக் கூடாது சொல்ல காரணம் என்ன என்று கேட்டபோது அவர் பிள்ளைகளுக்கு பணத்தை கொடுப்பதில்லையாம். பிள்ளைகளின் சம்பளத்தில் பெரும் பகுதியைக் கூட அவரே வாங்கிக் கொள்கிறாராம் என்றார். எனக்கு தெரிந்து அவர் கமத்தை தோட்டத்தை நம்பி மட்டுமே வாழ்பவர். எந்தவகையான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.. மிகுந்த நாட்டுப்பற்றாளர். எனவே பெரிதாக வருமானம் அற்றவர். எனக்கு தெரிந்து அவர் தனக்கு என்று எதையுமே இதுவரை சேர்த்து வைக்கவில்லை. நான் உட்பட அநேகமான அப்பாக்களின் நிலை இது தான். எமக்கென்று எதுவும் நாம் செய்வதில்லை. சேர்ப்பதில்லை. எமக்கென்று எந்த தனிப்பட்ட சுய தேவைகளோ ஆசைகளோ விருப்பு வெறுப்புகளோ ஏன் தனிப்பட்ட சேமிப்புகளோ கூட இருப்பதில்லை இருக்கவும் முடியாது. ஆனால் மாத முடிவில் வரக் கூடிய கட்டணங்கள் பணக்கொடுப்பனவுகள் செலவுகள் என்று அத்தனையையும் சமாளித்தபடி அத்தனைக்கும் முகம் கொடுத்தபடி அவற்றை எவருக்கும் காட்டிக் கொள்ளாமல் மௌனமாக அழும் அப்பாக்கள் இவ்வுலகில் அதிகம். அதற்கு நன்மை சொல்லாவிட்டாலும் இதனைப் போல் வார்த்தைகளை கேட்கும் போது நெஞ்சு வெடிக்கக்கூடும். அப்பாக்களுக்கு சமர்ப்பணம். முற்றும்.4 points
-
கருத்து படங்கள்
3 points3 points
- அவளைத்தொடுவானேன்....???
3 pointsபுதிய நாடு, நகரம், புதிய புரியாத மொழி, தெரியாத அனுபவமற்ற வேலை, புதிய உறவுகள், நண்பர்கள் என வாழ்க்கை திசை மாறி தன் வழியில் என்னை உள்வாங்கி வழி நடாத்துகிறது இல்லை துரத்துகிறது. அநேகமாக ஊர் நினைவுகள் அனைத்தும் மறந்து போய் விட்டநிலை இல்லை மரத்துப் போன நிலை. கடமைகளும் பொறுப்புகளும் சுமைகளும் சுய வாழ்வை கடந்து அழுத்த நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி வருடங்கள் பல பறந்து விட ... திருமண வயதென்பது நினைவிற்கு வருகின்றபோது அவள் நினைவு மீண்டும் பற்றிக் கொள்கிறது. விசாரித்ததில் எல்லாமே காலதாமதமாகியிருந்தது. சரி நம் வாழ்க்கை எம்மை ஓட்ட திருமணம் பிள்ளைகள் என காலம் தடம் பதித்து செல்ல .. நாம் எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் நினைத்ததை நாம் விரும்பிய வாழ்வை இலக்கை அடைந்து வருவதாக. ஆனால் உண்மையில் வாழ்க்கை தான் எம்மை வழி நடாத்துகிறது. அதில் முட்டி மோதி அலக்கழிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டு வதைக்கப்பட்டு குட்டப்பட்டு வளைந்து நெளிந்து கொண்டே தான் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோமே தவிர அது அவ்வளவு இலகுவானதில்லை. இலகுவாக வாழ்வு கிடைப்பதுமில்லை. இப்படித்தான் வாழ்வேன் என்பவர்கள் தோற்றுப் போக வாழ்வின் இயல்போடு வாழ்பவர்கள் வாழ முயல்பவர்களே ஓரளவேனும் வாழ்வை சந்தோஷமாக ஓடி முடிக்க முடிகிறது. கிடைக்காததை நினைந்து உருகுபவர்களும் கிடைத்ததை வைத்து வாழத்தெரியாதவர்களுமே இவ்வுலகில் அதிகம். ஒரு நாள் ஒரு திருமண இரவு விருந்தில் அவள் என்னை கண்டு கொண்டு ஓடி வந்தவள் அன்றே போல் என் கைகளை பிடித்துக் கொண்டாள்.... தொடரும் (அடுத்த கிழமையுடன் இவளை தொட சீ... தொடரமாட்டேன்)3 points- அவளைத்தொடுவானேன்....???
2 pointsஅவளைத் தொடுவானேன்...? சிறு வயதில் இருந்தே இசை நாடகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம் எனக்கு. சாதாரண தரப் பரீட்சையில் சங்கீதத்தில் செய்முறை அதாவது பாடி 60 க்கு 58 புள்ளி எடுத்து அதி சித்தி (D) எடுத்திருந்தேன். அத்துடன் நகைச்சுவை என்னோடு கூடப் பிறந்தது. இதனால் என்னை சுற்றி எப்பொழுதும் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமும் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் இருக்கும். அந்த நேரத்தில் தான் தென் பகுதியில் படித்து கொண்டு இருந்தவள் எங்கள் ஊருக்கு வந்தாள். அவள் நடக்கும் போது காலடிகளில் இரத்தம் பொக்களிப்பது தெரியும் அந்த அளவுக்கு அவள் வெள்ளையாக இருந்தாள் அத்துடன் தென் பகுதியில் படித்ததால் அவள் தமிழ் இன்னொரு வகை தேனாக இனிக்கும். கேட்க கேட்க கேட்க தோன்றும். அவள் என்னிடம் பாடச்சொல்லி கேட்பாள். நான் அவளை பேசு என்பேன். இப்படி தான் அறிமுகமானோம். அவள் என் கையை எப்பொழுதும் பிடித்துக் கொள்வாள். இதற்கு மேல் தாங்காது நான் அவளை தொட்டேன்..... காலம் என்னை தூக்கி கொழும்பில் போட்டது. தொடர்பு அறுந்தது. தொடரும்.....2 points- அவளைத்தொடுவானேன்....???
2 pointsஆண்மை என்பது ஆண்கள் பல பெண்களை தொடுவது என்று தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்?? என் அனுபவத்தில் கண்ட உண்மை என்னவென்றால் சந்தர்ப்பம் கிடைத்தும் எவன்/எவள் அதை தவிர்க்கிறானோ அதுவே ஆண்மை.2 points- அவளைத்தொடுவானேன்....???
2 pointsஅவர் யாவும் கற்பனை அல்ல என்று சொல்லி கதையை முடித்து விட்டார். இப்ப நீங்கள் தொடரச் சொல்லி கேட்டதால், இது தான் சாக்கு என்று ஓடிப் போய் அவளை (மீண்டும்) தொட்டுப் பார்க்க முயற்சி செய்ய போறார்.2 points- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
தேர்தலில் வென்றபின் ஜேர்மன் வாழ் தமிழர்களைத் திருப்பி எடுக்கும் நோக்கமோ தெரியவில்லை. 😀2 points- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
//பெண்ணின் பெயர் என்ன ???? இலங்கை மொழிகள் சிங்களம் தமிழ் பேசுவாளா ??? என்ன மாற்றங்கள் கொண்டு வர உள்ளார்??? நம்ம நாட்டை ஜேர்மன்காரர். அட்டையை போட்டு விடுவார்கள் போல்லுள்ளது. 🤣🤣. // @Kandiah57 பெண்ணின் பெயர் தெரியவில்லை. அவருக்கு ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் தெரியும். அது போதும்தானே. இனி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்க, சுமந்திரன் தேவையில்லை. 😂 இவவை வைத்தே அலுவல் பார்க்கலாம். 😃 நீங்கள் எல்லாரும் புலம் பெயர் தேசங்களில் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக வரும் போது, ஜேர்மன்காரி நம்ம நாட்டில் போட்டியிடுவதில் என்ன தவறு. 🤣2 points- தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
எந்த ஒரு முஸ்லீமும்… தமிழர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் எமது வாக்கை பெற்று அவர்கள் பதவி பெற்று விடுவார்கள் இது கடந்த காலம் எமக்கு கற்றுத் தந்த பாடம். இதனை புரிந்து கொள்ள தமிழரசு கட்சிக்கு அறிவு போதாது. இன்னும் மக்களை முட்டாளாகவே நினைத்துக் கொண்டு உள்ளது.2 points- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
மொடாக் குடிகாரர் கூட்டத்தில் ஒரு coke குடியனாவது இருக்கத்தான் செய்கிறார்கள். இது உலக நியதி என்னவோ? 😂2 points- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
சிகரெட், மதுப் பழக்கம் இவை குறித்து நீங்கள் பயனுள்ள சீரியஸான கருத்துகளைப் பகிரும்போது நான் வேடிக்கையாக சிலவற்றைப் பகிர்வதற்கு யாழ் சொந்தங்கள் மன்னிக்க வேண்டும். எனக்கு இந்தப் பழக்கங்கள் இல்லாததால் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிறேனோ என்னவோ ! நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் commercial ad ஆக எடுத்துக் கொள்ளவும். எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் (Writer and Humorist) Mark Twain : "Giving up smoking is the easiest thing in the world. I know because I've done it thousands of times". "I never smoke to excess. That is, I smoke in moderation - only one cigar at a time". அடுத்து குடிப்பழக்கம் தொடர்பாக : எனது நண்பர்கள் சிலருக்கு social drinking பழக்கம் உண்டு; அதாவது, மொடாக் குடியர்கள் இல்லை. நான் குடிப்பதில்லை என்று தெரிந்தும் என்னையும் அழைப்பார்கள். பொதுவாக குடிப்பவர்கள் குடிக்காதவனை ஆட்டத்துக்கு சேர்ப்பதில்லை. நான் விதிவிலக்கு. எனக்கு மட்டும் coke தருவிக்கப்படும். ஒருநாள் நண்பன் ஒருவனின் கமென்ட் - "எலேய், குடிக்கிற எங்களுக்கு வைக்கிற snacks ல் பாதியை பேச்சுக்கு இடையில் நீயே காலி பண்ணுற !". என் பதில் - "அடேய், ஒங்க குடிகார பில்லை சில சமயங்களில் நான்தான் settle பண்ணுறேன் தெரியுமில்ல ! போதாக்குறைக்கு எவனாவது ஓவராக் குடிச்சு மலந்துட்டா நான்தான் அவன வீட்ல கொண்டு தள்ள வேண்டியிருக்கு !". ஒருநாள் போதையில் ஒருத்தன் என்னிடம் - "எப்பா, ஏதாவது சங்கப் பாடலை எடுத்து விடுப்பா !". நான் - "ஒனக்கு ஒடம்புக்கு எப்படி வருதுலே ? சினிமாவுல வருமே Bar ல் club dance ! அதுமாதிரி ஒங்க entertainment க்கா நான் வந்திருக்கேன் ?".2 points- தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
ஹக்கீம் தெரிவித்துள்ள இந்த விடயம் பற்றி தமிழரசுக்கட்சி, தமிழ் மக்களுக்கு ஏதும் தெரியப்படுத்தவில்லையே. இதில் அதிக நன்மை அடைவது முஸ்லிம் கட்சிதான். சம்மாந்துறையில் கோவிலுக்கு முன்னால் வளைவு வைக்க முற்பட்டவேளை சண்டித்தனம் காட்டியவர்கள், கல்முனை வடக்குபிரதேச செயலகத்தின் அதிகாரங்களுக்கு முட்டுக்கட்டையாக நிற்பவர்கள், தங்களுக்கு நன்மையில்லா விடயத்தில் கால் வைக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு எதிரி இவர்கள்தான் என்பதை தமிழரசுக்கட்சி அறியவில்லை .2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் போட்டியில் குதித்துள்ளேன். இம்முறை வெற்றி எனக்கே! # Question Prediction 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK CSK DC Select GT Select KKR KKR LSG Select MI MI PBKS Select RR Select RCB RCB SRH Select 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) KKR #2 - ? (3 புள்ளிகள்) MI #3 - ? (2 புள்ளிகள்) CSK #4 - ? (1 புள்ளி) RCB 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team RCB 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator MI 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKR 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Phil Salt 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Adam Zampa 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH2 points- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .1 point- பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்
'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள் பட மூலாதாரம்,JAYARAJ S படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார், 12ம் வகுப்பு படிக்கும் ஜெயராஜ். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத்தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார். "நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும். மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன். ஒரேயொரு புகைப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது தினசரி செயல்பாடு." பட மூலாதாரம்,SHEIK HASAN K ஜெயராஜ் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுமார் 17 அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் 40 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் செய்யும் வேலைகளையும் தங்கள் சுற்றத்தில் உழைக்கும் மக்கள் பலரையும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். உழைக்கும் மக்களின் வலியை உணர்த்தும் வகையிலான படங்களாக அவை உள்ளன. துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை லென்ஸ் வாயிலாக புகைப்படம் எடுத்துள்ளனர். வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்த படங்களில் பிரதிபலிக்கிறது. "செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே புகைப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது. புகைப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்." என்கிறார் ஜெயராஜ். அப்பாராவை 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன? இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் அன்று ஓய்வறியாத மாஞ்சோலை எஸ்டேட்டில் இன்று பேரமைதி - தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? தேசிய அளவில் 42%: ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி? "அம்மா முதலில் அவரை புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், 'சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ'ன்னு சொன்னாங்க. புகைப்படத்தைக் காண்பித்ததும் 'நல்லா இருக்குன்னு' சொன்னாங்க." அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படக் கலை, அரங்கக் கலை, மைமிங், நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலையை கற்பதன் மூலம், நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு கலைகளை அவர்களால் கற்க முடியும் என்பதே இதன் நோக்கம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GOVARTHANAN L S படக்குறிப்பு,இந்த புகைப்பட கண்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் 3 நாட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது 'அப்பா ஒரு ஹீரோ' அப்படி புகைப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, 'உழைக்கும் மக்கள்' எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார். பட மூலாதாரம்,GOPIKA LAKSHMI M படக்குறிப்பு,கோபிகாலெட்சுமியின் தந்தை டயாலிசிஸ் செய்த நிலையிலும் வாகனத்திலேயே சென்று பலசரக்குகளை விற்பனை செய்துவருகிறார் "அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார். டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்." என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி. அவரை பொறுத்தவரை இந்த புகைப்படங்களில் அவருடைய அப்பா 'ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்." அறக்கட்டளை மூலமாக இலவசமாக டயாலிசிஸ் செய்யும் முத்துக்கிருஷ்ணனுக்கு, மாதந்தோறும் ரூ.3,000 வரை மாத்திரைகளுக்கு செலவாகிறது. பட மூலாதாரம்,MUKESH படக்குறிப்பு,கல்குவாரியில் டிரில்லிங் வேலை செய்யும் கதிர்வேலுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500-600 தொழில்முறையிலான டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது ஆரம்பத்தில் இந்த மாணவர்களுக்குக் கடினமானதாக இருந்தாலும், தொடர் பயிற்சியின் வாயிலாக இக்கலை சாத்தியமாகியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகைப்படக் கலை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர். "மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன புகைப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம். உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர், அதை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்." என்கிறார், மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள முத்தமிழ் கலைவிழி. இவர், நீலம் அறக்கட்டடளை நிறுவனராகவும் உள்ளார். பட மூலாதாரம்,SARAN R படக்குறிப்பு,இம்மாணவர்களை பொறுத்தவரை இயற்கை காட்சிகளைவிட மற்றவர்களின் உழைப்பை புகைப்படங்களாக பதிவு செய்வதன் மூலம் அக்கலையின் நோக்கம் நிறைவேறுகிறது கடின உழைப்பும் சொற்ப வருமானமும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார். "புகைப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன். அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்." என்கிறார் முகேஷ். அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் 'டிரில்லிங்' வேலைகளை பார்ப்பதாகக் கூறுகிறார் அவர். 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்14 மார்ச் 2025 கோவையில் மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் - வட மாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?13 மார்ச் 2025 பட மூலாதாரம்,MUKESH K படக்குறிப்பு,தங்களை சுற்றி இருப்பவர்களின், பலராலும் அறியப்படாத அவர்களின் உழைப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் நோக்கமாக உள்ளது "அவர்கள் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது." இந்த டிரில்லிங் வேலையில் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் கிடைக்கும் எனக்கூறுகிறார் முகேஷ். இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். தினசரி கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த புகைப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, "தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;" என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புரிகிறது. பட மூலாதாரம்,KEERTHI S படக்குறிப்பு,சரக்குகளை வாங்க தன் அம்மா முத்துலட்சுமி பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார் கீர்த்தி தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார். "அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்." என்கிறார் கீர்த்தி. "அம்மா வேலை செய்வதை கேமரா லென்ஸ் வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. புரொபஷனல் கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் எப்படி சரிசெய்வது என எல்லாம் தெரியும்." பட மூலாதாரம்,SHEIK HASAN K படக்குறிப்பு,தங்கள் பெற்றோர்களின் கை, கால்களை புகைப்படம் எடுப்பதன் வாயிலாக அவர்களின் கதைகளை சொல்ல முயல்கின்றனர் இந்த புகைப்பட கண்காட்சியை புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார். "நம் கதைகளை எப்படி ஆவணப்படுத்துவது என்பதை இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்." என்கிறார் அவரர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் மரணங்களை தொடர்ச்சியாக தன் புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார் பழனிக்குமார். வேலை செய்யும் அம்மாவின் கைகள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அம்மாக்களையும் சில மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். " வெளியில் சென்று வேலை பார்ப்பது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் காலை முதல் இரவு வரை என் அம்மாவின் கைகள் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது" என தன் அம்மாவின் கைகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார் மாணவி ஒருவர். "இம்மாணவர்களின் அப்பாவோ அம்மாவோ எப்படிப்பட்ட சூழல்களில் வேலை பார்க்கின்றனர் என்பதை முன்பு பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை நேரடியாக பார்க்கும்போது அந்த உழைப்பை உணருகின்றனர். அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. புகைப்படக் கலையில் அவர்களின் திறமையை அவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்" என்றார். பட மூலாதாரம்,RASHMITHA T படக்குறிப்பு,பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் வீடு முழுவதும் புகையிலை வாசனையே நிரம்பியிருக்கிறது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ரக்ஷ்மிதா, தங்கள் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளார். "வீட்டு வாசல் முன்பு அமர்ந்துதான் பீடி சுற்றுவார்கள். அவர்களுடைய வீட்டில் புகையிலை வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியாது. இவர்கள் ஆயிரம் பீடி சுற்றினால்தான் 250 ரூபாய் கிடைக்கும். மிக வேகமாக பீடி சுற்றுபவர்களுக்கே ஆயிரம் பீடி சுற்ற ஐந்து நாட்களாகும். அவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சொல்லப்படாத இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்." என்கிறார் ரக்ஷ்மிதா. சமூகத்தில் அதிகம் அறியப்படாத எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகளாலேயே புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70elj406yzo1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அவர் புலம்பெயர் மக்களிடம் ம்ன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.... அவர்கள் தான் தாயகத்தில் வாழ போறவர்கள் அவர்கள் சிறந்த முன் உதாரணமாக இருக்கவேண்டும்...தமிழ் தேசியத்தை முன் எடுத்து செல்ல வேண்டியவர்கள் அவர்கள்... இவர் இன்று மன்னிப்பு கேட்பார்கள் பிறகு புலம்பெயர் மக்களை திட்டியும் வீடியோ போடுவார1 point- அவளைத்தொடுவானேன்....???
1 pointபலரின் இளமைக்கால நினைவுகள் மெல்ல மெல்ல வெளியில் வரக்காத்திருக்கிறது!1 point- அவளைத்தொடுவானேன்....???
1 pointஒரு பூவின் மீது உண்மையான காதல் கொண்டவன் அந்தப் பூவை செடியில் இருக்கும் போதே ரசிப்பான்..! அதைப் பிடுங்கிக் கையில வைத்து முகர்ந்து பார்ப்பவனுக்கு அந்தப் பூவின் மீது காதல் இல்லை..! நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, விசுகர்…!1 point- அவளைத்தொடுவானேன்....???
1 pointபழக்கத்தில் தொடருங்கள் என்று எழுதி விட்டேன் ......... நீங்கள் கவனித்து விட்டீர்கள் ............ ம் . ...... பரவாயில்லை , விசுகர் இன்னும் ஏதாவது மறந்திருப்பார் அதை எழுதட்டும் .........! 😂1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தான் சிங்கக் கொடிய பிடிச்சதுக்கு புலம்பெயர் தமிழர்ககிடம் கிருஷ்னா மன்னிப்பு கேட்டவர் புத்தன் மாமா தன்ட நண்பன் கூப்பிட்டு தான் போனதாக.....................காணொளி மூலம் தெரிவித்து இருந்தார்..................கிருஷ்னா திருந்துவில் எப்பவோ திருந்தி இருப்பார் , ஏதோ தலைக் கனத்தில் ஆட வெளிக் கிட்டு இப்ப அடங்கி போய் சிறைக்குள் இருக்கிறார்.................................1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இந்த தமிழ் யூ டியுப்பர்ஸ் முன்னாள் புலனாய்வளர்களோ....கஞ்சா கடத்தினவன்,துப்பாக்கி சுடு நடத்துறவங்கள் எல்லாம் முன்னாள் படையினராக இருப்பதால் ....இவர்களும் தமிழ் மக்களுக்கு இடையே ஊடுருவிய முன்னாள் புலனாய்வாலர்களாக இருக்கலாம்...சிங்க கொடியை தூக்கும் பொழுதே புரிந்திருக்க வேணும் ....1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
1 point- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
1 point- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
1 pointநன்றி தமிழ் சிறி அவர்களே ! நான் நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்ய Messages ல் சென்று பார்த்தேன். அதனை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரம் தெரிவிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னும் வந்து சேரவில்லை! புள்ளிகள் திங்கள்/செவ்வாய் மட்டில்தான் வரும்1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தேசபந்துவைவிட பில்டப்பு பலமாயிருக்கு...எந்த செய்தியை நம்புவது...கன்பியூசாயிருக்கே1 point- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
1 pointசுப.சோமசுந்தரம் ஐயா... உங்கள் கட்டுரையை, "யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பதிந்தால் நன்றாக இருக்குமே. உங்களுக்கு விருப்பம் என்றால்... நிர்வாகத்திடம் சொல்லி அங்கு நகர்த்தி விடுங்கள்.1 point- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
1 pointசுப. சோமசுந்தரம் அவர்களே.. நல்லதொரு பம்மாத்து கட்டுரைக்கு நன்றி. 😁1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றி கந்தப்பு. ஒன்றைத் தெரிவு செய்கின்றேன்..................👍. 🤣....... நூற்றுக்கு நூறு எடுக்கப் போகின்றனோ என்று கொஞ்சம் சங்கடமாக இருந்தது.................. அது தான் ஒரு கேள்வியை அப்படியே விட்டனான்....................🤣. @கிருபன் என்னுடைய Fair Play Award தெரிவு CSK.................. சிரமத்திற்கு மன்னிக்கவும்.1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவிறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்த கதையை வாசித்துக் கொண்டிருந்தபோது எப்படி முடியப் போகிறது என்று யோசனையாக இருந்தது. வித்தியாசமான முறையில் கடைசிப் பந்தியில் சிறப்பாக முடித்துள்ளீர்கள்.1 point- இன சார்பு வழக்கு தீர்வுக்காக $28 மில்லியனை செலுத்த கூகுள் ஒப்புதல்!
இன சார்பு வழக்கு தீர்வுக்காக $28 மில்லியனை செலுத்த கூகுள் ஒப்புதல்! கூகுள் நிறுவனம் தனது ஊதியம் மற்றும் தொழில் முன்னேற்ற நடைமுறைகளில் இன சார்பு இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கைத் தீர்ப்பதற்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. ஹிஸ்பானிக், லத்தீன், பூர்வீக அமெரிக்க மற்றும் பிற சிறுபான்மை பணியாளர்களை விட வெள்ளை மற்றும் ஆசிய ஊழியர்களுக்கு சிறந்த ஊதியம் மற்றும் தொழில் வாய்ப்புகளை தொழில்நுட்ப நிறுவனமான நிறுவனம் வழங்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முன்னாள் கூகிள் ஊழியர் ஒருவர் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தார். சில இனப் பின்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரே மாதிரியான வேலையைச் செய்த போதிலும், அவர்களின் வெள்ளை மற்றும் ஆசிய சக ஊழியர்களை விட குறைந்த அடிப்படை சம்பளம் மற்றும் பணி நிலைகள் வழங்கப்பட்டதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கான ஊதியத்தில் முரண்பாடுகளைக் காட்டியதாகக் கூறப்படும் கசிந்த உள் ஆவணத்தின் அடிப்படையில் இந்த வழக்கு கட்டமைக்கப்பட்டது. இந்த நடைமுறை நிறுவனத்தில் ஊதியம் மற்றும் தொழில் முன்னேற்றத்தில் நீண்டகாலமாக நிலவும் இன மற்றும் இன வேறுபாடுகளை வலுப்படுத்துவதாக வழக்குத் தொடுநரின் சட்டத்தரணிகள் வாதிட்டனர். இந்த வகுப்புவாத நடவடிக்கை வழக்கு 2018 பெப்ரவரி 15 முதல் 2024 டிசம்பர் 31 வரை கூகிளில் பணிபுரிந்த குறைந்தது 6,632 நபர்களை உள்ளடக்கியது. https://athavannews.com/2025/14257911 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெரிந்துகொண்டே 3 புள்ளிகளை இழக்கிறீர்கள். கிருபன் சொன்னமாதிரி எதாவது ஒரு அணியை தெரிவு செய்தால் 1/10 வீதம் 3 புள்ளிகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.1 point- தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
நசீர் கொடுத்த மாட்டுபிரியாணியில் தவண்டு கிடந்து உருண்டதில் கிழக்கு மாகாணத்தை கோட்டை விட்டது காணாது என்று , அடுத்த பிரியாணிக்கு அடி போடுகின்றனர் தேசிக்காய்ஸ், தேசிக்காய்ஸா கொக்கா தமிழர்களுக்கு எதிரியே தமிழரசு கட்சிதான் என்பதை தமிழர்களே அறியாதபோது , இது மட்டும் எப்படி சாத்தியம்1 point- தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
சுமந்திரனின் அறிவு புலமை பற்றி பேசியவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.1 point- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள். இதை எப்படி சரிசெய்வது? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது. மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன். மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை. மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள். - எழுத்தாளர் பாலகுமாரன் - Jeeva Murugesan ·1 point- தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
யாழ்மாநகராட்சி ..இனி கக்கிமின் கையில்தான்....சுல்தான் நகர் ...மஸ்தான்வீதி...அசுரப்பு பூங்கா எல்லாம் இனி விழிக்கும்1 point- அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
முகநூலில் இருந்து.. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கிறேன் என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக பா.உ சந்திரசேகரன் அவர்களை சீண்டி மலையக மக்களை இழிவுபடுத்தினார் டாக்குத்தர் அர்ச்சுனா. படிச்சவன் எல்லாம் அறிவுஜீவி என்ற கணக்கில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீ என்ன படிச்சனி? பல்கலைக்கழகம் போனனியா? உன்ரை கல்வித் தகைமை என்ன? என அசல் யாழ்ப்பாண கல்விப் பவுசு மனநிலையின் கைதியாக உழல்கிறார் அவர். இப்போ பெண் அரசியல் செயற்பாட்டாளரை "விபச்சாரி" என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. நமது இயக்கங்கள் ஒழுக்கவாதங்களை கேள்விக்கு உட்படுத்தி முன்னேறாமல் அதற்குள் சுழன்று திரிந்தவர்கள். வறுமை துரத்தி பால்வினைத் தொழிலுக்குள் தள்ளிய பெண்களை 'சமூக விரோதி' என மின்கம்ப தண்டனை வழங்கியவர்கள். அந்த நிலைக்கு தள்ளிய அரசியல் பொருளாதார சமூக காரணிகளை கட்டவிழ்த்து செயற்பட வக்கில்லாமல் தேங்கிய அறிவுடன் இருந்தது மட்டுமன்றி, பால்வினை செயற்பாட்டை நுகரும் ஆண் பட்டாளமின்றி பால்வினைத் தொழில் எவ்வாறு இயங்குநிலையில் இருக்கும் என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் இருந்தனர். அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் சட்டத்தாலும் பெண்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்தியதற்கு அப்பால் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியல் போராட்டம் புலிகளின் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காத்திரமாக இருந்ததில்லை. வளர்ச்சி அடையவுமில்லை. அதனாலேயே தப்பிப் பிழைத்த புலிப் பெண் போராளிகளை இயக்கத்தவர் மட்டுமல்ல சமூகமும் கீழ்நிலைக்கு தள்ளி வாழ்வாதாரத்துக்கு வழியற்றவர்களாக ஆக்கியது. ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக் காட்டிய அவர்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை 'பெண்மை'க்கு எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்ய சமூக ஆண்கள் உட்பட ஆண் போராளிகள்கூட பின்னின்றனர். இதன்வழி வந்த இன்றைய கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை பேசுகிற பேச்சுகளில் அறிவு கிழிந்து தொங்குகிறது. 'பாலியல் வல்லுறவு' என்ற வார்த்தையை பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு எனவும் 'விபச்சாரம்' என்பதை பாலியல் தொழில், பால்வினைத் தொழில் எனவும் இலங்கையின் தமிழ் செய்திப் பத்திரிகைகள்கூட எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. புகலிட மாக்சியர்கள் ஒருசிலர் கூட இப்போதும் 'பாலியல் வல்லுறவு', 'விபச்சாரம்' (அரசியல் விபச்சாரம்) என எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க மொழி, ஆணாதிக்க ஒழுக்கவாதம் என்பவற்றை தாண்ட முடியாமல் அவதிப்படுகிற நிலை அவர்களது. சக மனிதரை உடல் அவமதிப்பு அல்லது அறிவு அவமதிப்பு செய்கிற நிலை இன்னொருபுறம் பெரும்பாலானவர்களிடமும் இருக்கிறது. மிருகங்களை உருவகப்படுத்தி பேசுகிற நிலை காணப்படுகிறது. ஒருவேளை நாயோ குரங்கோ பேசும் வல்லமை கொண்டிருந்தால் மனிதர்களுக்கு அவை -தமது தனித்துவம் குறித்து- வகுப்பெடுக்க வேண்டி வந்திருக்கும். இந்த எல்லா கசடுகளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டு மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய்வருவதற்கு டாக்குத்தருக்கும் வேறு பலருக்கும் கோட்டும் சூட்டும் வெள்ளை வேட்டியும் பவுசும் வேறு தேவைப்படுகிறது. Ravindran Pa நன்றி https://www.facebook.com/share/p/15vnSeGRsx/?1 point- பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்
நச்சென்ற பதிவு . .........நல்லதொரு ஆவணம் ...........! நன்றி ஏராளன் ...........! 👍1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
செவ்வந்தி… மாலதீவுக்கு சென்று விட்டதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதே மாதிரி ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கருதப்படுபவரும், முஸ்லீம் மதத்துக்கு மாறியவருமான புலேந்தினி என்ற பெண்ணையும் பல வருடங்களாக தேடுகின்றார்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஒளிப்பதில்…. பெண்கள் கெட்டிக்காரர் போலுள்ளது. ஆண்கள்தான்… சூடு ஆற முதல் அம்பிட்டு விடுகின்றார்கள்.1 point- இனித்திடும் இனிய தமிழே....!
1 pointகாமத்தை வென்றவர் உண்டோ! | இடைவிடாத நகைச்சுவை காணொளி | புலவர் சண்முக வடிவேல் அவர்களின் நகைச்சுவை உரை1 point- "அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
வாழ்த்துக்கள் தியா…! மேலும் வளருங்கள்….!1 point- "அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
1 point- "அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
உங்களது "அமெரிக்க விருந்தாளி " என்னும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.1 point- "அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
வாழ்த்துகள் @theeya. நூலில் நீங்கள் கொடுத்த தன்னுரையை இங்கே பகிரலாமே? எங்களுக்கும் ஒரு அறிமுகம் கிடைக்கும்.1 point- "அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
1 point- அவளைத்தொடுவானேன்....???
1 pointஆறு மாதங்கள் ஓடிவிட பாடசாலை விடுமுறையில் ஊர் திரும்புகிறேன். பண்ணைப் பாலத்தில் மீன் வாசம் நாசியில் படும் எல்லோருக்கும் ருசி கண்ட பூனை எனக்கோ அவள் வாசம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தீயாய் சுடுகிறது. ஊர் வந்து சேரும் வரை அதே நினைவு அதே கனவு. ஆனால் ஊரும் நண்பர்களும் நகைச்சுவை நடிகராக சென்று கொழும்பால் திரும்பும் என்னை சுப்பர்ஸ்டாராக வரவேற்கிறார்கள். அப்பொழுது தான் நானும் பார்த்தேன் சென்றபோதிருந்ததை விட நான் முழுவதுமாக மாறியிருப்பதை. இந்த வட்டம் மற்றும் பிரபலத்தால் அவளை பார்ப்பது தடங்கல் பட சிறிது சிறிதாக சில செய்திகள் என்னை வந்தடைகின்றன. தொட்டது நான் மட்டுமல்ல ருசி கண்டது நான் மட்டுமல்ல என்பதை அந்த வயதில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது அது ஒரு வித ஈர்ப்பு, நட்பு என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் காதல் பற்றியோ கல்யாணம் பற்றியோ ஏன் எங்கள் எதிர் காலம் பற்றியோ கூட பேசிக்கொண்டதில்லை. என்னை கட்டிக் கொள்வாயா என்று அவளோ கட்டிக் கொள்வேன் என்று நானோ எந்த உறுதியும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனாலும் என் மனதின் ஒரு மூலையில் அவள் என்னை படுத்திக் கொண்டே இருந்தாள். சந்திக்க வேண்டும் என்ற என் விருப்பம் தள்ளி தள்ளி போக கடைசியாக அவள் குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. மீண்டும் காலம் என்னை பிரான்ஸ் கொண்டு வந்து போட்டது. தொடர்பு முற்றாக அழிந்து போனது. தொடரும்....1 point- இன்னொரு சக்கரவர்த்தி
1 pointஇன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடினார்கள் என்னைப் பார் என்னைப் பார் என்று இன்று இன்னொரு சக்கரவர்த்தி இப்பொழுது நடந்து வருகின்றார் அழகோ அழகு என்று சுற்றி நிற்கும் கூட்டமும் கைதட்டுகின்றது பின்னர் வரலாறு சொல்லும் 'ஐயே................... இந்த ராசாவும் இவரின் கூட்டமும் ஆடை அணிந்திருக்கவில்லை.................' என்று.1 point- "நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே"
"நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "நான் வரைந்த முதல் ஓவியம்" "நான் வரைந்த முதல் ஓவியம் நாணம் கொண்ட அவளின் உடல் நாட்டிய தாரகையின் தாமரை முத்திரை நாடித் தேடி கீறிய படம்!" கோடு போட்டு அளந்து பார்த்து ஏடு வாசித்து மனதில் பதித்து நாடு எங்கும் காணாத அழகு ஆடு மகளின் வண்ணக் கோலம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................... "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "உள்ளமெனும் ஊஞ்சலிலே ஆடும் ஆட்டியே கள்ளமற்ற நெஞ்சைத் தேடும் தேவதையே வெள்ளமாக பாயும் அன்பின் அணங்கே குள்ளப்புத்தி உனக்கு வந்தது எனோ?" "மெல்ல நடந்து விலகிப் போறவளே சொல்ல மறந்த வார்த்தைகள் எதுவோ நல்ல இதயம் கொண்ட கோதையே இல்லம் அமைக்க என்னைத் தழுவாயா?" "காதணி இரண்டும் மின்னி ஒளிர காம விழிகள் வித்தைகள் காட்ட கால்கள் நான்கும் பின்னிப் பிணைய காதல் இணைய தாலாட்ட வருவாயா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point - அவளைத்தொடுவானேன்....???
Important Information
By using this site, you agree to our Terms of Use.