Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87988
    Posts
  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8557
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3313
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/22/25 in all areas

  1. ஒன்று எனக்குச் சொந்தமா ஒரு வீடு இருந்தது. என் கணவருக்கு தோட்டக்காணியும் உண்டு. 2012 வரை அந்த நாட்டுக்குப் போய் வாழமுடியும் என்ற எண்ணம் பலருக்குமே இருக்கவில்லைத்தானே. அதனால அந்த வீட்டை விற்பம் விற்பம் என்று என் கணவர் ஒரே கரைச்சல். அம்மாவும் அப்பாவும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை விற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் கணவர் கரைச்சல் கொடுத்ததுக்கும் ஒரு காரணம் இருந்தது. அம்மாவின் தங்கை ஒருத்தி. அவவுக்கு அக்காவின் பிள்ளைகள் இனி இங்கு வந்து இருக்கப் போவதில்லை. தன் பிள்ளைகளுக்குத் தான் அக்காவின் வீடுகளும் வந்து சேரும் என்ற பேராசை. புலிகள் முன்னர் சில வீடுகளில் வசித்தபோது தொலைபேசி வசதிகள் இல்லாத காலத்தில் “புலிகள் உன் வீட்டைத் தரும்படி கேட்டார்கள். நான் என் நகையை விற்று ஐம்பதாயிரம் கொடுத்து வீட்டை மீட்டுள்ளேன்” என்று என சித்தியிடம் இருந்து ஒரு கடிதம் வர, உடனே நான் என்னைக் கேட்காது நீங்கள் ஏன் பணம் கொடுத்தீர்கள். வீட்டைப் புலிகளிடம் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அப்பா அம்மாவுடன் கதைக்க, அப்பா “அவசரப்படாதை நான் விசாரிக்கிறேன்” என்று கூறி விசாரித்தால் அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்று தெரியவர, அம்மாவுக்கு அப்பதான் தான் தன் தங்கையின் நாடகம் புரிகிறது. மற்றப்பக்கம் கணவரின் மூத்த சகோதரர் குடும்பம் எங்கள் வீட்டில் இடப்பெயர்வின்போது சில ஆண்டுகள் குடும்பத்துடன் வந்து வசித்தனர். அம்மாவின் தங்கைக்கோ அட இந்த வீட்டை நாம் எடுக்கலாம் என்று பார்த்தால் இவர்கள் ஆட்டையைப் போட்டுவிடுவார்கள் போல என எண்ணி என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மருமகன் வீட்டைத் தமயனுக்குக் கொடுக்கப் போறாராம் என்று உசுப்பேற்ற, அம்மா எனக்கு போன் செய்து நாங்கள் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை உன் மச்சான் குடும்பத்துக்கா கொடுக்கப் போகிறாய் என்று ஒரே கரைச்சல். அவர்களுக்குச் சொந்தவீடு இருக்குத்தானே. இப்ப பிரச்சனை முடிஞ்சுதுதானே. உன் மச்சானை வீட்டைவிட்டு எழுப்பு என்று அம்மா தொணதொணக்க எனக்கு இரு பக்கத்தாலும் தலைவலி வர நானும் பேசாமல் வீட்டை விற்றுவிட முடிவுசெய்து புரோக்கர்களிடம் கூறி ஆட்களை ஒழுங்கு செய்யச் சொன்னேன். அந்த நேரம் வீட்டின் பெறுமதி 90 இலட்சம் என்று புரோக்கர் கூற எனக்கோ வீட்டை வைத்திருப்போம் என்ற எண்ணம் தலை தூக்கத்தொடங்க, மீண்டும் கணவரிடம் வீட்டை வைத்திருப்போம் என்கிறேன். கணவரோ நாங்கள் அங்கை போய் இருக்கப் போவதில்லை. விசர்க் கதை கதைக்காமல் வில் என்கிறார். போகும் நேரம் எங்கே நிற்பது என்கிறேன். என் தங்கை வீடு இருக்குத்தானே. நான் தானே அவளுக்கு வீடு கட்டிக் குடுத்தனான். ஐந்து அறைகள் உள்ள வீட்டில ஒருமாதம் தங்க ஒரு அறை தரமாட்டாளா என்கிறார். ஏன் உங்கடை காணியை மட்டும் விக்காமல் என் வீட்டை விக்கச் சொல்கிறீர்கள் என்றதற்கு வெறும் காணி கிடந்தால் ஒரு காலத்தில போய் இருக்கப்போறம் எண்டால் பிறகு நிலமைக்கு ஏற்றமாதிரி சின்ன வீடு ஒன்றைக் காட்டிக் கொள்ளலாம் என்று ஆசை காட்ட நானும் சரி என்று சொல்கிறேன். மனிசன் ஒன்றை நினைத்தால் முடிக்கும் மட்டும் விடாப்பிடியாய் நிப்பார். அதனால ஒரு யோசனை வர எல்லாச் சகோதரர்களுடனும் வீட்டை விற்பது பற்றிக் கூறி யாராவது வாங்கப்போகிறீர்களா என்று கேட்க, ஒரு வீட்டையே பாதுகாக்க ஏலாமல்க் கிடக்கு. இதுக்குள்ள உதை வாங்கி என்ன என்கின்றனர். ஒரு தங்கை மட்டும் கணவருடன் கதைத்துவிட்டுச் சொல்வதாகக் கூற மனம் நிம்மதி அடைகிறது. தங்கை ஒரு வாரத்தின் பின்னர் தம்மிடம் இவ்வளவு காசு இப்ப இல்லை. நாற்பத்தைந்து இலட்சம் என்றால் நான் உடனே வாங்க முடியும் என்கிறாள். கணவருக்கு புரோக்கர் சொன்ன விலையைச் சொல்லாமல் ஐம்பது இலட்சம்தான் வீட்டின் பெறுமதி என்று கூறுகிறேன். அப்போது நாம் கடை நடத்திக்கொண்டு இருந்தபடியாலும் கணவருக்கு தொலைபேசியில் கதைக்க நேரம் இல்லை என்பதனாலும் கணவர் தன் தங்கையிடமோ தங்கையிடமோ தமையனிடமோ காணிவிலை குறித்து விசாரிக்க நேரம் இருக்கவே இல்லை. இவ்வளவு குறைவாக இருக்கு. வேறு இரண்டு மூன்று பேரிடம் சொல்லி விக்கப்பார் என்கிறார். இது நாங்கள் வளர்ந்த வீடு. வேறை ஆருக்கு விற்றாலும் மீண்டும் போக முடியாது. தங்கைக்குக் கொடுத்தால் நாம் போகும் நேரம் போய் நிக்கலாம் என்று கணவரின் மண்டையைக் கழுவிக் காதும் காதும் வைத்ததுபோல் கணவரின் சகோதரர்கள் காதுக்கு விடயம் போகாமல் வீட்டைத் தங்கைக்குக் எழுதியாச்சு. அதன் பின்னர் கணவர் மட்டும் 2015 இல் நாட்டுக்குச் சென்றபோது நாட்டிலும் மனிதர்களிடமும் பல மாற்றங்கள். கணவருக்கே தங்கை வீட்டில் தங்கி இருந்தது மகிழ்வைத் தரவில்லை. நான் விற்ற தங்கையின் வீட்டில் அம்மாவின் திருமணமாகாத தங்கை – தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் - தன் வீட்டைத் தங்கையின் ஒரு மகளுக்குக் கொடுத்துவிட்டு எம் வீட்டில் இருந்தார். அவரைத்தான் அந்த வீட்டுக்குப் பொறுப்பாகத் தங்கை தங்கும்படி கூறியிருந்தாள். அவர் தனியாக இருப்பதனால் உதவிக்காக இராமநாதன் அக்கடமியில் கல்வி கற்கும் வெளி மாநிலப் பிள்ளைகள் சிலரை குறைந்த வாடகையில் வீட்டில் வைத்திருந்தார். எனவே கணவர் பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டில் நான் இல்லாது அங்கு சென்று தங்க மானமின்றிப்போக கணவருக்கு அந்த விடுமுறை மகிழ்வாக இருக்கவில்லை. நாடு திரும்பிய கணவர் எமக்கு என்று ஒரு வீடு இருக்கவேணும். ஆற்றையன் வீடு ஆற்றையன் வீடுதான் என்று புலம்ப, கூட இருந்த மகளும் “எங்கள் வீட்டை விக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இணுவிலுக்குப் போற நேரம் நிம்மதியா நிண்டிருக்கலாம்” என்று கூற மனிசன் ஒண்டுமே கூறவில்லை. சரி பிரச்சனை இல்லை. அப்பாவின் காணி இருக்குத்தானே. அதில ஒரு வீட்டைக் கட்டுவம் என்று ஆறுதலுக்காய்க் கூறினாலும் நாட்டில போய் வாழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும்பட நாட்டில் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
  2. பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்குமிடையேயான இன்றைய போட்டி மழையினால் பாதிப்புள்ளாகும் என கூறப்படுகிறது. ஈடன் கார்டனில் இந்த போட்டி நடைபெறவுள்ளது இந்த மைதானம் குறுகிய எல்லைகள் கொண்ட அதிக ஓட்டங்களை எடுக்க கூடிய மைதானம், பெங்களூரு அணியின் முதல் இரு போட்டிகளும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் இடம் பெறவுள்ளது ஆனால் பெங்களூரு அணியில் குருணல் பாண்டியாவும் பகுதி நேர பந்து வீச்சாளரான லிவிங்ஸ்டனும் சுழல் பந்து வீசும் நிலை காணப்படுகிறது. பெங்களூருவின் இரண்டாவது போட்டி சென்னையில் இடம் பெறுகிறது. பெங்களூரு அணியில் சுயாஸ் எனும் ஒரு இளம் மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர் உள்ளார் என கூறப்படுகிறது, அவருக்கு பெங்களூரு அணி போட்டிகளில் வாய்ப்பளிக்குமா என தெரியவில்லை. பொதுவாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து வீச்சின் ஆதிக்கம் அதிகளவில் மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர் போட்டிகளில் காணப்படுகின்ற நிலையில் பெங்களூரு அணி சுழல் பந்து வீச்சில் பின் தங்கிய நிலையில் காணப்படுவது அதன் அரையிறுதி போட்டிகளின் தகுதிகாண் போட்டிகளில் மேலதிக அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். மறுவளமாக கொல்கத்தா அணி மிக சமனிலை கொண்ட அணியாக காணப்படுகிறது, இந்த போட்டி பெங்களூரு அணி எவ்வாறு மத்திய ஓவர்களில் சுழல் பந்து வீச்சினை பயன்படுத்துகிறது என்பதனை பொறுத்தி சென்னை அணியினுடனான தனது அணித்தெரிவில் கவனம் செலுத்தக்கூடும், ஆனால் முக்கிய மத்திய ஓவர்களில் சரியான சுழல் பந்து வீச்சில்லாமல் இந்த தொடரை பெங்களூரு எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. மற்றைய அணிகளை விட பெங்களூரு அணி 20 ஓட்டங்களை அதிகம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன்.
  3. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு ஃபில் சால்ட்டினதும் விராட் கோலியினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.
  4. கனக்க நினைச்சு துள்ளிக்குதிக்க வேண்டாம்.🤸 நான் பிறந்து நாலு வருசத்துக்கு பிறகுதான் பதிஞ்சதாம்
  5. பம்மாத்து (Pretensions) - சுப.சோமசுந்தரம் உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களிடம் தேர்தல் வாக்குக்காக கையேந்தும்போது சமரசம் எனும் தீமைக்குள் வந்துதானே ஆக வேண்டும் ? கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். அவ்வாறு பம்முகிற ஒவ்வொரு தருணத்திலும், "ஆனால் எனக்குத் தெரியும் அந்த ஒரு தேவனும் கிடையாது" என்று அண்ணா தமக்குள் முணுமுணுத்திருப்பார் என்பதை அண்ணாவை அறிந்தவர் அறிவர். அந்தப் பம்மாத்தில் மக்களுக்கு நன்மைகள் விளைந்தன என்பதை அறிவார்ந்தோர் அறிவர். பெரியார் மற்றும் பெரும்பாலான திராவிட கழகத்தினரைத் தவிர்த்து ஏனைய திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் நமக்குத் தெரிந்த ஒரு பிம்மாத்து உண்டு; அதாவது, நமக்குப் பம்மாத்தாகத் தோன்றுகிற ஒன்று உண்டு. அது "நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோமே தவிர பார்ப்பனர்களை அல்ல" என்பதுவேயாம். பார்ப்பனியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை எதிர்க்கும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம். விதிவிலக்குகள் விதி யாது என்பதைச் சொல்பவைதாமே ! அவ்விதிவிலக்குகள் பார்ப்பனியத்தை உதறியவர்கள்; எனவே அவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ?முடிவு செய்துவிட்டு நியாயங்களைத் தேடிக் கற்பிதம் செய்ய அறிவு ஜீவிகளுக்குச் சொல்லியா தர வேண்டும் ? பெரியார் வேறு எந்த சாதிக்காரர்களையும் விமர்சிக்கவில்லையே ! மேற்கூறியது போலவே திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள், "நாங்கள் இந்திய எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்" என்பதுவும். நீங்கள் வேறு எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் ராஜஸ்தானி, போஜ்புரி, மைதிலி, அவந்தி என்று எத்தனையோ மொழிகளைத் தின்று செரித்து விட்டு, அடுத்து மராத்தி, ஒரியா, பெங்காலி என்று காவு கொள்ளத் துடிக்கும் இந்தியை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும் ? நமது பம்மாத்து ஜோடிகளில் அடுத்து வருபவை காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். தமிழ்நாட்டில் (தமிழகத்தில் என்று நம்மைப் பேச விடாமல், எழுத விடாமல் செய்த ஒரு கிராதகனை என்னவென்று சொல்வது !) இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்த அறுபதுகளில் ஒன்றிய அரசான காங்கிரஸ் பணிந்தது. "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் திகழும்" என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே போராட்டத் தீ அணைந்தது. இடதுசாரிகள் தங்களது அகில இந்திய மாநாடுகளில் மொழி பற்றிய விவாதங்களில், 'தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழி, மற்றபடி இந்தியே இணைப்பு மொழி' என்ற நிலைப்பாடு கொள்வது வழக்கம். "மக்கள் விரும்பும் வரை" என்பதன் பொருள் "நாங்கள் விரும்பவில்லை; என்றாவது ஒரு நாள் நீங்கள் ஏற்பீர்கள். அதுவரை நாங்கள் அடக்கி வாசிப்போம்" என்பதே !. இது ஒரு சூளுரை அல்லது கெக்கலிப்பு. தேசியம் எனும் நீரோடையில் கரைந்து போன கட்சிகளுக்கு இந்தப் பிரச்சினை எப்போதும் உண்டு. அந்நீரோடையில் மூழ்காமல் நீந்தக் கற்றுக் கொண்ட எங்களுக்கு என்ன பிரச்சினை ? காங்கிரஸ் தேசியத்தில் கரைந்தது என்றால், இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் உலகவியத்தில் கரைந்தவர்கள். நேற்றைய சோவியத் யூனியனில் பெரும்பான்மையின ரஷ்ய மொழியின் தாக்குதலினால் பல சிறுபான்மையின மொழிகள் தொலைந்து போனதை லாவகமாகக் கடந்து வந்தவர்கள் ஆயிற்றே ! அது நமக்குத் தான் ரணம்; வர்க்கப் போராட்டத்தில் அவர்களுக்கு அதெல்லாம் சாதா'ரணம்' தோழர் !தமிழ்நாட்டில் அன்றைக்குப் போராடிய மக்களிடம் காங்கிரசின் சமரசம் என்பது "உங்களுக்கு இனி இந்தி கிடையாது" என்பதாகத்தானே இருக்க முடியும் ? "நீ செத்த பின்பு பார்த்துக் கொள்கிறேன்" என்பது சமரசமா ? மும்மொழித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதானே இடதுசாரிகளின் மண்ணுக்கேற்ற மார்க்சியமாய் அமையும் ? அப்படி விலக்கு அளிக்கப்பட்டாலும் மதவாத , பாசிச பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அடாவடித்தனமாய் ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைப் போல பின்னர் வரும் அரசுகள் நடந்து கொள்ளா என்பதற்கு உத்திரவாதம் இல்லைதான். ஆனால் சொல்லும்போதே 'தற்காலிகமாக' என்று பொருள்படச் சொல்வது ஒரு பம்மாத்து வேலை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராகத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள். இப்போது ஒன்றியத்தில் உள்ள பாசிச பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தை முன்வைத்து விட்டு, "மும்மொழித் திட்டம் என்றுதானே சொன்னோம் ? இந்தி படி என்று எங்கே சொன்னோம் ?" என்று சொல்வதுதான் உலக மகா பம்மாத்து. ஒரு திரைப்படத்தில் வருவது போல, "நீ எப்படியெல்லாம் டைப் டைப்பா முழியை மாத்துவே !" என்று எங்களுக்குத் தெரியாதா ? நான் கேரளாவில் வேலை கிடைத்துச் சென்றால், தேவை அடிப்படையில் அப்போது மலையாளம் தெரிந்து கொள்வேன். அதுவரை நான் என் மொழியையும், வெளியுலக இணைப்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்காக நமது அடிமை வரலாறு நமக்களித்த வரமான ஆங்கிலத்தையும் படிப்பேன். நீ உன் மொழியையும் ஆங்கிலத்தையும் படி. அப்போது மொழியில் கூட சமநீதி, சமூக நீதி எல்லாம் உருவாகுமே ! எனவே உலகீரே ! மக்கள் நலனுக்காக பம்மாத்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், அறிஞர் அண்ணா போன்றோரிடம் படித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசுவோம். பின் குறிப்பு : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பவற்றிற்கு மாற்றுச் சிந்தனையை ச.தமிழ்ச்செல்வன், தொ.பரமசிவன் ஆகியோரிடம் வாசித்த நினைவு. பழம் பாடல்களின் அவ்வரிகள் இன்று தமிழனின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை அவர்கள் மறுதலிக்கவில்லை. எனினும் அவர்கள் மாற்றுச் சிந்தனையைப் பதிவிடாமலும் விடவில்லை. அந்த அடிப்படையில் அக்காலச் சமூக, அரசியல் சூழல் கருதி மக்கள் நலனுக்காக திருமூலர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரின் பம்மாத்தாக அவ்வரிகளைப் பார்க்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்பார்வை நம் கற்பனையாகவே இருக்கலாம். பல நேரங்களில் கற்பனையும் ரசனைக்குரியதுதானே ! பேரரசுகள் மருத நிலங்களைச் சுற்றியே தோன்றியிருக்கும். நிலவுடமைச் சமூகங்களும் அங்கேதான் உருவாகி அமைந்திருக்க முடியும். அவர்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தே வந்திருப்பர் அல்லது கொண்டு வரப்பட்டிருப்பர். தன் நிலத்தில் தன் சாமியை விட்டு வந்திருப்பவன் கொண்ட ஏக்கம் தீர, "இங்குள்ள சாமியும் உன் சாமிதானய்யா" என்று அவனை ஆற்றுப்படுத்துவதே "ஒன்றே குலம் ஒருவனே தேவ"னாய் முகிழ்த்திருக்கலாம். அன்றைய தேவைக்கேற்ப, பன்முகத்தன்மையை உடைத்து ஓர்மையை உருவாக்கும் பம்மாத்தாக (அன்றைய பாசிசம் எனக் கொள்ளலாமா ?") இதனைப் பார்க்கலாமோ ! மேலும் அவனது நிலத்தில் சாமியின் அருகிலிருந்து பிடி மண் எடுத்து வந்து அவன் புலம்பெயர்ந்த இடத்தில் அதே சாமியை உருவாக்கும் வழக்கம் அப்போது உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் வந்த இடத்துடன் அவன் மனம் ஒன்றியிருக்கச் செய்ய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" !
  6. துரோகி ஒரு ஊரில், சிறு தொழில் செய்யும் வியாபாரி பறவைகளைப்பிடித்து சந்தையில் விற்கும் தொழில் செய்து கொண்டு இருந்தான். வழக்கமாக சந்தை கூடும் ஒரு நாளில் தன் விற்பனைக்காக ஐந்து கெளதாரி பறவைகளை கொண்டு சென்று இருந்தான் . நான்கினை ஒரு கூட்டிலும் ஒன்றை தணிக் கூட்டிலும் வைத்திருந்தான். அந்த வழியே வந்த ஒருவன் பறவைகளின் விலை என்ன என்று கேட்க நான்கு பறவைகள் இருந்த கூட்டினை காட்டி ஒன்று நான்காயிரம் ரூபா என்றான் . மாற்றியதை காட்டி ஐந்தாயிரம் ரூபா என்றான். என் அதற்கு விலை அதிகம் என்று கேட்க்க ..எல்லாவற்றுக்கும் உணவு கொடுப்தேன் அதற்கு விசேடமாக தயாரித்து உணவு கொடுக்கிறேன் . என்றான் ..ஏன் அப்படி என்று கேட்க இதை தனியே வைத்து பழக்கி ஒரு கூட்டிலை விட அது தன் குரல் எழுப்பி ஏனையவற்றை அழைக்கும். அவைகளும் நான் விரித்து வைக்கும் வலையில் விழும் . பின் அவற்றை விற்பனைக்கு கொண்டுவருவேன் என்றான். வாங்க வந்தவனும் அதை ஐயாயிரம் கொடுத்து வாங்கி சற்று அப்பால் சென்று அதன் கழுத்தை திருகி கொன்றான். வியாபாரியும் அயலில் உள்ளவர்களும் திகைத்து நின்றனர்.ஏன் என கேடடதற்கு ...தன் இனத்தையே கட்டிக்க கொடுத்த துரோகி என பதில் சொல்லி வந்த வழியே சென்று விடடான். உலகம் ரொம்ப கேட்டு விட்ட்து மனித இனத்திலும் இப்படிபடட துரோகிகள் பலர் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
  7. இது உண்மை ..இது நுனி நாக்கு ஆங்கிலமும் ...சிங்கள்வரிடமும்சேர்ந்து வேலை செய்த குணமும்..இது நடுத்தர வயதினரிடமும்...வயது போனவர்களிடமும் இருக்கிறது...கோயிலுக்கு பக்தனாய் வருவார் ..பினர் கோயிலுகு தலவராகிவிடு ..சிங்கள தூதுவரை கூப்பிடுவார்....தூதராலயத்தில் நடைபெறும் பார்ட்டிகளீள் முதல் ஆளய் நிற்பினம் ..அங்கு சமத்து குடி ..நடனமும் ஒரு காரணம்...இதனைவிட இப்ப சி.ரி சி பணிப்பாளர் மலையக பாடசாலையொன்றுக்கு போயிருப்பதாக கேள்வி...அவர் வரும்போது ..புதிய பார்சலுடன் வருவார் பாருங்கள்
  8. வித்தியாசமான கதை,வித்தியாசமான இசை,பாடல்கள். முற்றிலும் புது முகங்கள்நடிப்புக்கும் பஞ்சமில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய படம்.காதல் தோல்வியால் துவண்டவர்கள் கண்ணீர் விட்டு பார்த்த படம்.😂 ஒரு தலை ராகம்.🎵
  9. இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை. தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல் " அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே; இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" (குறுந்தொகை 23) என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல். "மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே". (குறுந்தொகை 111) பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று. "......................வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன உருகெழு பேய்மகள்" (புறநானூறு 371) என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார். இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம் பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன். நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் : "வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம் உள்ளம் மகிழ அமுதுசெய இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க் கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளைபிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப்பெறின் என்றார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54) பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார். அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை : "இனிய மழலைக் கிண்கிண்கால் இரண்டும் மடியின் புடைஇடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனிநீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத் தனி மாமகனைத் தாதையார் கருவி கொடுதலை அரிவார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63) பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார். அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று : "அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக்கழித்து மன்றத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு முளை திறத்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாயம் அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65) பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள். இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம். சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ? மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே ! உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார். "முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது" (இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5) "என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்றஅக் கைதவ மறையோர் கொன்றைவார் சடையர் அடியார்கள் குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6) பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார். இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல். "என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7) பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார். "இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறுஎனக்கு" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு) பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார். இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது. "சென்று அவர் தடுத்தபோதில் இயற்பகையார் முன் சீறி வன்துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றுஅடு புலிஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21) பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார். இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது. நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?
  10. ஒரு தலை ராகம் .......................... ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்... 1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்... கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்... அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு... கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ. இந்தத் திரைப்படம் வெளி வந்த உடன் எத்தனை இளம்பெண்கள் அவர் மேல் காதற்வயப்பட்டார்கள் என நன்கறிவேன்... சோகத்தை வெளிக் காண்பிக்கும் நடிப்பில் பின்னி எடுக்கிறார்... ஆனால் அந்த கால பெல்பாட்டமும், காதை மறைத்த தலை முடி அலங்காரமும், நெஞ்சில் பேன்ட்டை டக் இன் செய்யும் விதம்தான் கொஞ்சம் சிரிப்பு மூட்டியது... ஒவ்வொரு நடிகரும், நடிகையும், சந்திரசேகராகட்டும், உஷாவாகட்டும், ரவீந்தராகட்டும், தியாகுவாகட்டும், தன் கதாபாத்திரத்தை செவ்வனே செதுக்கியிருந்தார்கள்... 80 களில் இருபாலார் படிக்கும் கல்லூரியை அப்படியே கண்முன் நிறுத்தினார்கள்... எனக்கு நான் படித்த சிவகங்கை மன்னர் கல்லூரி, எங்கள் தோழிகள், கூட படித்த மாணவர்கள் என நினைவு சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது.. வசனங்கள்...நோ சான்ஸ்...அவ்வளவு அருமை...இப்போதைய பெரும்பான்மையான படங்களில் தேவையில்லாத நேரத்தில் வண்டி வண்டியாக நடிகர்கள் வசனம் பேசுகிறார்களே? கதாநாயகன் கோவிலில் பக்கத்தில் நிற்கிறான்.. அவனுடன் பேச முடியாத நிலை..தங்கை அருகிலிருக்கிறாள்...எண்ணெய் கிண்ணத்தை தவற விடுகிறாள்... " எண்ணயவே (என்னய) கொட்டிட்டேன்...திருப்பி அள்ள முடியல" என்கிறாள் அவன் உணரும் வகையில்... நாயகிடம் நாயகன் என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்க பதிலுரைக்காமல் மவுனமாக அங்கிருந்து அகல்கிறாள்... அவன், அவள் , தோழி என மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒன்றிருக்கையில் தோழியிடம் அவன் சொல்கிறான்" கேட்காத கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்க...கேட்ட கேள்விக்கே சிலர் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க" அப்போது சுழற்றி சுழற்றி ரூபாவின் விழிகள் நர்த்தனமாடும் பாருங்கள்...மிக அழகு அக்காட்சி, வசனம் அத்தனையும்... இறுதி காட்சி...நாயகி நாயகனிடம் தன் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த காதலைப் பேசித் தீர்க்க வேண்டுமென நெடும் போராட்டத்திற்கு பின் கல்லூரி முடிந்த மறுநாள் முடிவெடுத்து கிளம்புகிறாள்.. அவள் மிகவும் அக்கறையுடன் தன்னை அலங்கரித்து கொள்வதை கவலை கலந்த வெறுப்புடன் தாய் பார்க்கிறாள்.. நாயகியின் அம்மா " காலைல எழுந்திரிச்ச, குளிச்ச, பேசாம போய்ட்ருக்க? எங்க போற?" "பேசத்தான் போறேன்" நாயகி.. "என்னடி உளர்ற?" அம்மா "உளறலம்மா இப்பத்தான் நிதானமா பேசறேன்" நாயகி.. இந்த இடத்தில் என்னையும் மீறி வசன அபாரத்திற்கு கரங்கொட்டி மகிழ்ந்தேன்... வசன கர்த்தாக்கள் படத்தை நகர்த்தும் விதம்தான் படத்திற்கு அழகூட்டும் என்பேன் நான்... பாட்டுக்கள் அத்தனையும் தேனினிமை.... என்ன பொருட்சுவை... என்ன காட்சிப் பொருத்தம்... "ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்" வாசமில்லா மலரிது பாடலில்.. "கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி" கடவுள் வாழும் கோவிலிலே பாடலில்.. 'வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்.. வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" குழந்தை பாடும் தாலாட்டு பாடலில்.. மிகைப்படுத்தப் பட்ட சண்டைக் காட்சிகள் இல்லை... அபத்தமான வசனங்கள் இல்லை... நகைச்சுவை என்ற பெயரில் முகஞ்சுளிக்க வைக்கும் தனித்தடம் இல்லை... அழகு, யதார்த்தம், இயல்பு, இவையன்றி வேறேதும் இல்லை... ஆனால் படம் முடிந்த வுடன் மனம் முழுதும் சோகம் கவ்வியது.. 80 களில் பட்டையை கிளப்பிய படம்...200 நாட்கள் தாண்டி ஓடிய படம்... Hats off ராஜேந்தர் சார்... இதே போல் இன்னுமொரு அழகான படம் கொடுங்களேன்... Lakshmi RS
  11. எங்க‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அண்ணைக்கு சிங்சாங் இசையுட‌ன் வ‌ந்து முத‌ல‌மைச்ச‌ர் வாழ்த்து சொல்லாட்டி அவ‌ருக்கு தூக்க‌ம் வ‌ராது லொள் நீங்க‌ளும் கே கே ஆர‌யா தெரிவு செய்திங்க‌ள் பாவி ப‌ய‌லுங்க‌ள் எங்க‌ளுக்கு முட்டைய‌ வேண்டி த‌ந்து விட்டாங்க‌ள்☹️...........................
  12. இன்றைய முதலமைச்சர் @vasee க்கு வாழ்த்துக்கள்.
  13. ஐங்கரன் ராமநாதன் சுதந்திரக் கட்சி புத்தர் மறந்தாலும் நாங்கள் எடுத்துக் கொடுப்பம்
  14. நாங்கள் எந்த நாட்டிலும் கோயில்களைக் கட்டுவோம். வாழும் நாடுகளில் பாராளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பற்றுவோம். எங்களிடம் எந்தவித உள் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் எல்லாவற்றிலும் சமரசம் காண்பவர்கள்.
  15. மலையகத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி தமிழரான இவரால் என்ன துன்பத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர் என அறியத் தர முடியுமா? நன்றி
  16. சந்திரசேகர என்ற தமிழ் அமைச்சர் தமிழ் படிச்சதனால் தமிழர்கள் அனுபவிக்கிற துன்பம் காணாது என்று இன்னும் பத்தாயிரம் பிக்குகளா தாங்காதடா சாமி ...
  17. நாளை ஞாயிறு (23 மார்ச்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI இப்போட்டியில் யாழ்களப் போட்டியாளர்களில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை திங்கள் அன்று தெரிந்துகொள்வோம்!
  18. பட்டலந்தை அறிக்கையுடன் தமிழரின் இனாழிப்பும் , பட்ட கஸ்டங்களும் ...பாரிய கிடங்குவெட்டிப் புதைக்கப்படும் பாருங்கள்..
  19. தேசிய மக்கள் சக்தி சார்பாக, யாழ். மேயர் பதவிக்கு போட்டியிடும், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் தனது வீட்டு விலாசத்தை.... தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தின் முகவரியை கொடுத்து விண்ணப்பித்ததை ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாம். விதியின் படி... போட்டியிடுபவர் யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்க வேண்டுமாம். இவர் அந்த விதிக்குள் அடங்காத படியால்... கட்சி அலுவலகத்தை, தனது வசிப்பிடமாக குறிப்பிட்டுள்ளாராம்.
  20. நாங்கள் இன்னும் கனக்க முன்னேறணும்.....😭
  21. மாத்திரை விலையை கேட்டாலே, ஒரே ரென்ஷனா வருகுது டாக்டர். 😂
  22. அதுதான் இங்குள்ள நன்மையே. நமக்குத் தெரிந்ததை கிறுக்கலாம். ரசிக்கலாம். அப்ப என்ன RCB தனது கணக்கை தொடங்குது இறுதிப் போட்டியை நோக்கி. 18 வருட தவம். "கப் நம்தே" உங்களுக்கு குல்தீப்புடன் என்ன வாய்க்கால் தகராறோ. பாவம். குல்டீப்புக்குத் தெரியுமோ தெரியா. குல்டீப் ஒரு முறையான சுழல் பந்துவீச்சாளர். வருண் அப்பிடி இல்லை. ஒரு போட்டி அவரின் வாழ்க்கையையே மாற்றும். ஒரே ஒரு மட்டையாளர் அவரின் சுழல்களை சமாளித்து வெளு வெளு என்டு வெளுத்தா, வருண் காலி. குல்டீப் அப்பிடி இல்லை. ண
  23. சட்டத்தில் இருப்பதை விட மேலதிகமாக தேர்தல் ஆணையாளர் தனது இஸ்டத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளதாக மணிவண்ணன் குற்றம் சாட்டுகிறார். அதாவது ஒரு வேட்பாளர் தவறு செய்திருந்தால் அந்த வேட்பாளரை மட்டுமே நிராகரிக்க முடியும். ஒட்டுமொத்த குழுவையோ கட்சியையோ நிராகரிக்கக் கூடாது என்று சட்டத்தில் உள்ளதாக சொல்கிறார். கடந்த தேர்தல்களிலும் பலர் நிராகரிக்கப்பட்டார்கள். ஆனாலும் அவர்களை மாத்திரமே நிராகரித்தார்கள். இப்போது நல்லூரில் கையெழுத்தில்லாமல் தாக்கல் செய்த தமிழரசின் வேட்புமனு எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? தமிழரசுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?
  24. ஆமாம் உண்மை தான் அவா. எந்த வேலையை தான் புத்திசாலித்தனமாகா. செய்து உள்ளார் 🤣🤣🤣🤣. அடைடா. நீங்கள் இன்னும் பென்சன். எடுக்கவில்லையா தம்பி ....🤣🤣. நான் பென்சன். எடுத்து இரண்டு வருடங்கள். பூரணமாக முடித்து விட்டது தம்பி. குறிப்பு,......எனக்கு ஒரு தம்பி யாழ் களத்தில் கிடைத்து விட்டார் 🙏 நல்லது நானும் ஒரு தொழிலாளராக. விண்ணப்பிக்கிறேன். .....வேலை ஒப்பந்தை. பதியுங்கள். பார்ப்போம்
  25. என்னுடைய வாலிப வயதில் அப்போது ஏஎல் படிக்கும் போது வந்த படம் பாடல்கள் எல்லாம் அருமை. இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தல் தனியாக நின்று அந்தப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியதற்கு அர்த்தம் பொதிந்த வரிகளே காரணம். அருமையான படம்.ராஜேந்தர் பாடல்களுக்கு ம்டமு; தனித்தனிக் கசட்டுக்கள் வைத்திருந்தேன். என்னதான் இளையாராஜா இசை மனதை வருடினாலும் ராஜேந்தரின் வரிகள் அந்த வரிகளை மூழ்கடிக்காத இசை கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கும்.
  26. மனிதன்விடும் ஒவ்வொரு பிழையும் அவற்றைத் திருத்திக் கொண்டு அவன் மேலே செல்வதற்கான படிக்கட்டுகள் இப்போது அசச்சுனா சரியான வழியில் செல்லாவிட்டால் இன்னும் சறுக்குவார் நரேந்திரனைதனது அரசியலிலிருந்து ஓய்வுக்கு அனுப்பியது அவருடைய எதிர்காலத்திற்கு சிறந்தது
  27. இந்த படத்தில் வந்த அத்தனை பாடல்களும் சூப்பார்👍
  28. நெஞ்சு திக் திக் என்று அடிக்குது, ஏதோ ஏமாற்றம் வருமோ என்று. இருந்த வீட்டை அறாவிலைக்கு குடுத்துப்போட்டு உது தேவையா?
  29. பத்தாயிரம் பிக்குகள் தமிழ் படித்தால் பிரச்சினை சுமுகமாய் தீருமோ ...பார்ப்பம் அட இப்படியும் ஒரு பிரச்சினை கிடக்கா...நம்ம மொழி நம்முடனே இருக்கட்டும்
  30. இவருக்கு பதவிகளையும் பாதுகாப்பையும் கொடுத்தவர்கள் யாரென்று வெளியில் வந்தால், அது இன்னும் வெட்கக்கேடு. அதையும் சரி என்று வாதாடுவார்கள். நாடு முழுவதுமே வெட்கக்கேட்டால் நிறைந்துள்ளது. இவர் அதிகாரத்தில் இருக்கும் போது அளித்த சாட்சியங்கள் மீண்டும் விசாரணை செய்யப்படவேண்டும், இவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவரது நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படவேண்டும். இவர் ஒன்று தற்கொலை செய்துகொள்ளலாம் அல்லது கொலை செய்யவும் படலாம். இவருக்கு உதவியவர்கள் யாவரும் விசாரணை, தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இவர் முறையாக மன்றில் ஆயராகி தன் பக்க நிஞாயத்தை எடுத்துக்கூறியிருந்தால்; இவ்வளவு சிக்கல் வந்திருக்காது. இவர் மறைந்தது, இவருக்குப்பின் நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பதையே நிரூபிக்கின்றன.
  31. இரஸ்சிய ஏங்கில்ஸ் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இணையத்தில் உலாவருகின்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், குறித்த விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள அதே அளவு ஆயுதங்களுடன் மேலதிகமாக அதே அளவு ஆயுதம் வந்து சேர்ந்த போதே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இரஸ்சியா ஒரு பெரும் தாக்குதலை திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறையினூடாக குறித்த உளவுத்தகவல் உக்கிரேனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரஸ்சிய உக்கிரேன் போர்க்களம் உக்கிரேன் தரப்பில் சடுதியாக ஏற்படுகின்ற பின்னடைவை தடுத்து நிறுத்தி உக்கிரேன் தரப்பிற்கு ஒரு குறைந்த பட்ச நியாயமான தீர்வினை எட்ட மேற்கின் உதவிகள் அவசியமாக உள்ளது, ஆனால் ஆளணியில் பின்னடைவை சந்தித்துள்ள உக்கிரேன் தரப்பிற்கு தேவைப்படும் வீரர்களை திரட்டுவதில் உக்கிரேன் தரப்பு தன்னால் இயன்றளவில் வன்முறைகளை கூட பயன்படுத்துவதாக கடந்த காலத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆளணி பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உக்கிரேனால் கோடைகால தாக்குதலை எதிர்கொள்ளமுடியாது என கூறப்படுகிறது, அதற்குள்ளாக ஒரு தீர்வு எட்டப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் உலகுள்ளது. இந்த போரின் முடிவில் போரிடும் இரு தரப்பிற்கும் இலாபம் இருக்க போவதில்லை, ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பதே உறுதி.
  32. இவாறான ரஷியன் ப்ரோபஹாண்டா வீடியோக்களை யாழில் பதிவு செய்யாதீர்கள். தீண்டாமை அடிப்படை அறிவுகளை தீண்டும் செயல்கள் இவை. என்ன நடக்கிறதோ அதை உள்ளது உள்ளபடி பிபிசி சின்ன் போன்ற செய்தி ஊடகங்கள் எங்களுக்கு காட்டுகிறார்கள் தவிர யாழ்கள அரசியல் ஆலோசகர்கள் சரியாகவும் நேர்த்தியாகவும் நடந்த நடக்கப்போகும் விடயங்களை கூறுகிறார்கள். முதலில் இதில் எந்த மூலமும் இல்லை இது யாழ்கள விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அதை சரி பார்த்து உரியவர்கள் இந்த திரியை நீக்கிவிடவும். நேற்று ஸ்திரேலிய வீரர்கள் வெற்றிகரமாக காசாவில் செய்த தாக்குதலில் இரண்டு காமாஸ் பயங்கரவாதிகள் ஒழித்து இருந்த ஹோஸ்பிடல்கள் தரைமடடம் ஆக்கப்பட்டு இருக்கிறது அதில் 316 காமாஸ் பயங்கரவ்திக்கள் 2 ஆறுமாத பயங்கரவாதிகள் உடபட கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
  33. ஐபிஎல் 2025 போட்டிகள் நாளை ஆரம்பிக்கவுள்ளது. நாளை சனி (22 மார்ச்) முதலாவது போட்டி நடைபெறவுள்ளது. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB இப்போட்டியில் யாழ்களப் போட்டியாளர்களில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை திங்கள் அன்று தெரிந்துகொள்வோம்!
  34. தமிழ் கட்சிகள் விட்ட பிழையை சுட்டிக் காட்டிய காணொளி. ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் கேளுங்கள். நன்றி ஈழப்பிரியன்.
  35. Tவேட்புமனுக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன. உதவிக்காக போட்டிருந்த மேசைக்கு கெளரவம் கருதி யாரும் போய் சரி பார்ப்பதில்லை. நல்ல சுவாரிசியமான கலந்துரையாடல்.
  36. வெளிநாடுகளில் "அர்ச்சனை" வாங்குவது பல விதங்களில் பரவாயில்லை. தும்புத் தடி பாரம் குறைந்த பிளாஸ்ரிக்கினால் ஆனது, ஊரில் போல மரத்தடியால் ஆனதல்ல😎!
  37. நன்கொடையாக பெற்றோர், பெற்றோர் வழி உறவுகள் மூலம் காணி/நிலம்/வீடு/வயல்/தோட்டம்/கடை இவை கிடைத்தால் இதுதான் பிரச்சனை. சொந்த உழைப்பில் சேர்த்ததை உதாசீனம் செய்யமாட்டோம்.
  38. தான் பட்ட கஷ்டங்கள் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது என நினைப்பவர் அப்பா. வலி மிகுந்த பாதைகள்.... நன்றி விசுகர்🙏
  39. நாட்டில் பல வருடங்களாய் ஆர்பாட்டமின்றி தங்கள் இலட்சனையை பொறித்து தேசம் முழுவதும் சேவையாற்றியவர்கள் .........! 👍
  40. அப்பாக்களின் பாசம் பாறைக்குள் கசியும் நீரைப் போன்றது........... வெளியில் தெரியாது, உள்ளே வற்றாது ......... ! 😁
  41. இது நிஜம்....அப்பாக்கள் என்றாலே தியாகத்தின் உருவங்கள்...அளவான எழுத்தில் அழகாக க்தை சொல்கின்றீர்கள்..வாழ்க
  42. நம்ம நாட்டிலும் முன்பு இப்படித்தான் நடத்துனர் பற்றுசீட்டு கொடுப்பார்கள் . ...... நன்றி தோழர் . .........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.