Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38770
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/04/25 in all areas

  1. பகிடிவதை என்பது இன்னொரு மனிதன் மீது, தனக்கிருக்கும் வக்கிரத்தை, சீனியர் என்ற தகுதியினை மட்டுமே வைத்துக்கொண்டு கட்டவிழ்த்துவிடுவது என்பது எனது கணிப்பு. சாதாரண சூழ்நிலையில் ஒரு மனிதன் மீது செய்ய முடியாத சில வக்கிரங்களை சீனியர் எனும் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட பதவியினை வைத்து அவிழ்த்துவிட்டு சுய இன்பம் காணுவது. இது ஒரு மனோவியாதி என்பதைத்தவிர வேறு வழியில் விளக்கமுடியாது. 1995 இல் இருந்து 2000 வரை மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் நான் அனுபவித்த, நேரால் கண்ட வக்கிரங்களில் இருந்து நான் உணர்ந்துகொண்டது இதனைத்தான். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வரும் தமிழ் மாணவர்களும், தெற்கின் கிராமப் புரங்களில் இருந்து வரும் சிங்கள மாணவர்களும் பகிடிவதைக்கு அதிகம் முகம் கொடுப்பதோடு, இவர்களே அடுத்தவருடம் நடக்கும் பகிடிவதைகளுக்குத் தலைமையும் தாங்குவார்கள். நான் கொழும்பு மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தமையினால் என்மீது விசேட கவனம் செலுத்தினார்கள் எனது சீனியர்கள். "கொழும்பெண்டால் பெரிய கொழுப்போ உனக்கு, உனக்கிருக்கு, மாட்டுவாய்தானே, அப்ப பார்த்துக்கொள்ளுவோம்" என்று ன் நான் அவர்களின் பிடியில் இருந்து நழுவித் தப்பித்துச் சென்ற தருணங்களில் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டுமாத காலம் அவர்களின் வக்கிரங்களைத் தாங்கிக்கொள்ளவில்லை என்பதற்காகவே வெகு சிலரைத் தவிர‌ பல தமிழ் மாணவர்கள், எனது ஆண்டில் படித்தவர்கள் உட்பட, இன்றுவரை என்னுடன் பேசுவதில்லை. பல்கலை முடிந்தவுடன் நேராக வீட்டிற்குச் சென்றுவிடும் வசதி எனக்கிருந்தது. ஆனால் வட கிழக்கில் இருந்து வந்திருந்த பல மாணவர்களுக்கு அந்த வசிதியில்லை. ஆகவே சீனியர்கள் கட்டளையிட்டதற்கு அமைய மாலை 5 மணிக்கெல்லாம் அவர்களின் சித்திரவதைக் கூடங்களில் தவறாது ஆஜராகி, வக்கிரங்களைத் தாங்கி, உடலிலும் மனதிலும் வலிகளைச் சுமந்து தமது அறைகளுக்கு வரும் பல தமிழ் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த வக்கிரங்களை வாரி வழங்குவதில் மாணவர்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பதில்லை. எஞ்சினியரிங்கில் இருந்து ஆரம்பித்து, குவான்ட்டிட்டி சேவயரிங், என் டி டி என்று எல்லாப் பாடநெறிகளிலும் இது நடந்தது. சில வேளைகளில் எஞ்சினியரிங் மாணவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு, அறைதிரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் மாணவர்களோ அல்லது என்.டி.டி மாணவர்களோ தமது பங்கிற்கு இழுத்துச் செல்வதும் நடந்திருக்கிறது. எஞ்சினியரிங்கிற்கு வரும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் அல்லது என்.டி.டி மாணவர்களே அதிகம் கொடுமைப்படுத்துவது நடந்திருக்கிறது. இப்படி இவர்கள் நடந்துகொள்வதற்கு தமக்குக் கிடைக்காத பொறியியல்ப் பீடம் இவனுக்குக் கிடைத்துவிட்டதே என்கிற பொறாமையும் காரணமாக இருக்கலாம். இன்னும் சில சீனியர்களுக்கு பகிடிவதைக் காலமே பெண்களுடன் பேசுவதற்குக் கிடைத்திருக்கும் பொற்கால‌ம். ஆகவே சொற்களால் பெண்களைச் சித்திரவதை செய்து சுய இன்பம் காணுவார்கள். சாதாரண சூழ்நிலையில் தம்மைப் பெண்கள் ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை என்கிற நிலையில் பகிடிவதைக் காலத்தை தமது வக்கிரங்களைக் கொட்டும் காலமாகப் பாவிப்பது இவர்களின் வழமை. வரப்பிரகாஷின் படுகொலையின்போது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்திலிருந்து பகிடிவதைக்குப் பெயெர்பெற்ற வக்கிரப் புத்தி கொண்டோர் ஒரு பேரூந்தினை வாடகைக்கு அமர்த்தி பேராதனைக்குச் சென்றுவந்தார்கள். அப்படிச் சென்றுவந்தவர்களில் எனது ஆண்டில் படித்துக்கொண்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவருமான ஒருவரும் இருந்தார். பகிடிவதையின் உச்சமான பாலியல் வதையினைப் புரிவதில் இவர் பிரசித்தமானவர். பாலியல் வன்புணர்வைத்தவிர மீதி பாலியல் வக்கிரங்கள் இவரது சித்திரவதைக் கூடத்தில் நடைபெறும். வலியில் மாணவர்கள் அலறும்போது சிரித்துக்கொண்டு அதனை அனுபவிப்பவர். இவரது பிடிக்குள் அகப்பட்ட சில மாணவர்களை பகிடிவதையினை ஆதரிக்கும் இன்னும் சில மாணவர்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறார்கள். கொழும்பிலிருந்து தெரிவான சில மாணவர்கள் மீது இவர் தெரிரியாமல் கையை வைக்க, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மயூராபதி அம்மண் கோயில் என்று பலவிடங்களில் அடிவாங்கியவர். 1990 ஆம் ஆண்டில் என்று நினைக்கிறேன். முன்னர் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் உயர்தரக் கணிதத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ஆசிரியரான பிரேம்நாத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றார். பிரேம்நாத்திடம் முன்னர் கல்விகற்ற ஒரு பழைய மாணவர் அப்போது பேராதனையில் பொறியியல்ப் படித்துக்கொண்டிருந்தார். பிரேம்நாத்திற்கும் தனக்கும் இருந்த பழைய பகமை ஒன்றிற்காக அந்த புதிய மாணவரைக் கடுமையாகச் சித்திரவதை செய்து தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டார். பகிடிவதையின்போது இரு முழங்கால்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பார்த்தீபன் என்கிற அந்த புதிய மாணவர் அனுமதிக்கப்பட்டார். தன்னால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பார்த்தீபன் இறந்துபோகலாம் என்கிற செய்தியை தனது சகமாணவர்கள் மூலம் சித்திரவதை செய்த மாணவர் அறிந்துகொண்டபோதிலும், அவரைச் சென்று பார்க்கவோ, தனது ஈனச்செயலுக்கு மன்னிப்புக் கோரவோ அவருக்கு மனம் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல பார்த்தீபன் உடல்நிலை மோசமாகி வருவதாகவும், இதற்காக சித்திரவதை செய்தவர் சிறை செல்ல நேரலாம் என்கிற செய்திகள் பரவத் தொடங்கியபோது வேறு வழியின்றி வைத்தியசாலைக்குச் சென்றார். ஆனால் மன்னிப்புக் கோர அவரது மனம் முன்வரவில்லை. சற்றுநேரம் அமைதியாக நின்றுவிட்டு, கூடவிருந்த சொந்தங்களின் மனக்குமுறலை கேட்டுவிட்டு வந்துவிட்டார். பார்த்தீபன் நீண்டகால சிகிச்சையின் பின்னர் பிழைத்துக்கொண்டார். அன்று மனோவியாதியால் சக மாணவனை சித்திரவதை புரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிய அந்த மாணவர் இன்று குடும்பத்துடன் சென்று புத்த சமயத்தைத் தழுவி, கண்டியில் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தையார் எனது தகப்பனாரின் சொந்தச் சகோதரன் என்பது வேறு விடயம். இவர்கள் வக்கிரம் கொண்டவர்கள். மனோவியாதியினால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
  2. ஐபிஎல் 2025 இன் 16வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மிச்சல் மார்ஷினனதும் எய்டன் மார்கத்தினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஹார்டிக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 17 ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேற பின்னர் வந்த சூரியகுமார் யாதவின் அதிரடியான 67 ஓட்டங்களுடன் வெற்றியை நோக்கி நகர்ந்தாலும் திலக் வர்மா மெதுவாகவே ஓட்டங்களை எடுத்து பந்துகளை வீணாக்கியதாலும் இறுதி ஓவர்களின் ஓட்டங்களை எடுக்கத் திணறியதாலும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 191 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் பதவியை @alvayan ஓரடி முன்னகர்ந்து கைப்பற்ற @செம்பாட்டான் பின்னே கால்வைத்து அடுத்த நிலையில் தற்காப்பு வேலியைப் போட்டுள்ளார்! கூடவே மூக்குச் சாத்திரம் பார்த்த @நந்தன் உம் நிற்கின்றார்.
  3. இது எனக்கும் நடந்தது. நான் பகிடிவதையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக தமிழ் யூனியனிலிருந்தும், தமிழ் மாணவர்களின் பட்ஜ் ட்ரிப் உள்ளிட்ட இன்ன பிற நிகழ்வுகளிலிருந்தும் ஒதுக்கிவிட்டார்கள். கூடவே "அன்டி" ரஞ்சித் எனும் நாமமும் எனக்குச் சூட்டப்பட்டது. கூட்டமாகக் கதைத்துக்கொண்டிருக்கும் என்னுடன் கூடப்படித்தவர்களே "அன்டி வாறான்" என்று பேச்சை மாற்றிய பல தருணங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு மூன்று அல்லது நான்கு சக மாணவர்களைத் தவிர வேறு எவருமே என்னுடன் பேசியதில்லை. பகிடிவதையினை ஏற்றுக்கொள்ளாதது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை. நீங்கள் கூறியதுபோலவே, என்னை பிந்தொடர்ந்து வந்து, பஸ்ஸில் ஏறி கட்டுப்பெத்தை வரை வந்து மிரட்டியவர் என்.டி.டி எனும் கற்கை நெறியைச் சார்ந்த, மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தன் என்பவர். அவர் படிக்கும் கற்கை நெறிக்கும் எனது பொறியியல் கற்கை நெறிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அன்று தன்னுடன் வரவில்லையென்றால் "உனக்குக் கோஸ் வேர்க் தரமாட்டேன்" என்று கூட கூறிப்பார்த்தார். நாம் மசியவில்லை. சில வாரங்களுக்குப் பின்னர் அவரை பல்கலை வாயிலில் சந்தித்தேன். "நீ படிப்பது என்.டி.டி, நீ எப்படி எனக்கு கோஸ் வேர்க்கில் உதவுவாய்?" என்று அவரைப் பார்த்துக் கேட்டேன். பதில் இல்லை. இவரைப்போன்றே ரஜீவ் என்று என்னுடன் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரியில் கல்விகற்று மொறட்டுவையில் குவான்ட்டிட்டி சேவயரிங் படித்துவந்த எனது முன்னால் நண்பரும் என்னை துன்புறுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். "நீ என்னுடன் படித்தவன் தானே? என்னைத் தெரியவில்லையா உனக்கு ?" என்று கேட்டேன். தெரியாதவர் போலவே நடந்து கொண்டார். ராக்கிங் காலம் முடிந்தவுடன் ஒருநாள் கன்டீனில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது வந்து முன்னால் அமர்ந்து, "மச்சான்" என்றார். "என்னட்ட அடிவாங்க முதல் போயிடு" என்று சொல்லவும், கண்கள் கலங்கி அருகில் இருந்த எனது நண்பனிடம், "பாரடா இவனை, ராக்கிங்கில செய்ததையெல்லாம் வைச்சுச் சாதிக்கிறான்" என்று முறையிட்டார். "அவனைப் போகச் சொல்லு" என்றுவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டேன். இறுதிவரை அவருடன் பேச விரும்பவில்லை. என்னுடன் பாடசாலைக் காலத்தில் படித்தவர்கள், என்னை நன்றாக அறிந்திருந்த உறவினர்கள் என்று பலர் என்னை பகிடிவதைக்கு உட்படுத்த விரும்பினார்கள். ஏனென்று எனக்குத் தெரியவில்லை. இதற்கெல்லாம் என்னிடம் இருக்கும் ஒரே பதில் மனநோய்தான். அப்படியில்லையென்றால் இவர்களால் இதனைச் செய்ய முடியாது.
  4. Offensive ? So What ? - சோம.அழகு நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால் திணிக்கப்படாவிட்டால் முற்றிலும் மறைந்து விடும் தன்மையானதாக ஏன் இருக்கிறது? ஒரு குழந்தை ஐரோப்பா/இந்தியா/இஸ்ரேல்/ சவுதி அரேபியாவில் பிறக்குமாயின் அது பெரும்பாலும் கிறித்தவ/இந்து/யூத/இசுலாம் மதத்தைச் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். எனில் மதம் என்பது முற்றிலும் புவியியல் சார்ந்தது. எனவே இறை நம்பிக்கை என்பது தானாகக் கிட்டும் தெய்வீக அனுபவமோ ஒரு நிலையான உண்மையோ அல்ல. எனவே ஒரு குறிப்பிட்ட தலைமுறையில், அனைத்து குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களான பின் சுமாராக இருபது வயதிற்குப் பின்னர் தான் அவர்களுக்கு மதமும் கடவுள் நம்பிக்கையும் சொல்லித்தரப் பட வேண்டும் என உலகம் முழுக்க ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டால் அத்தலைமுறையோடு அனைத்து மதங்களும் அழிந்துவிடும். ‘ஓர் ஆசுவாசத்தைத் தருகிறது’, ‘மன அமைதியைக் கொடுக்கிறது’… என பிறருக்குத் தொல்லை தராத வரை ஒரு தனிநபரது கடவுள் நம்பிக்கையில் எப்பிரச்சனையும் இல்லை. ஆனால் உடன்பாடு இல்லாத பிறர்மீதும் அர்த்தமற்ற சடங்குகளைத் திணிக்கும் போதும் பெரும்பாலான பக்திப் பரவச உரையாடல்களில் “அப்டிங்களா… ரொம்ப சந்தோசம்… நன்றி” என்று வெறுமனே கடந்து செல்ல முனையும் என்னைக் கிட்டத்தட்ட ‘சண்டைக்கு வா’ என அழைப்பு விடுக்கும் போதும் அவர்களின் மடமையை நான் பரிகசிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் வம்படியாக வந்து என்னுள் கடவுள் நம்பிக்கையை விதைக்கும் நற்பொறுப்பை ஏற்று அதை ஏதோ தாம் இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகக் கருதி அதில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு, பின்னர் மலங்க மலங்க முழித்தவாறே திரும்பிச் சென்ற சுவாரஸ்யமான தருணங்கள் சில உண்டு. அவ்வப்போது வாசிக்கக் கிடைத்த பெரும் ஆளுமைகள் பதிலுரைக்கும் போது மிகச் சரியாக வந்து கை கொடுத்திருக்கிறார்கள்! “நம்மை மீறிய அற்புத சக்தி ஒன்று நிச்சயம் இருக்கிறது. நம்பு, நம்பிக்கைதானே எல்லாம்” “சரி. நிரூபியுங்கள்” “உனக்குத்தானே சந்தேகம்? நீ இல்லைன்னு நிரூபி, பார்ப்போம்” “ஓ! நீங்க அப்பிடி வர்றீங்களா? அப்ப சரி. நான்தான் அந்த அற்புத சக்தி” “அது எப்படி?” “உங்கள் தர்க்க படி, உங்களுக்கு சந்தேகம்னா இப்போ நீங்கதான் நிரூபிக்கணும், நான் அற்புத சக்தி இல்லனு!” “கடவுள் சர்வ வல்லமை படைத்தவர்” “நானும்தான்” “உன்னால கடவுள் செய்யுறத எல்லாம் செய்ய முடியுமா?” “நடக்குறதெல்லாம் பாத்துட்டு கம்முன்னு கல்லாட்டம் இருக்கணும்தான? கொஞ்சம் கஷ்டம்தான்” “பகுத்தறிவாளர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” “மருத்துவர்கள் ஏன் நோய்களைப் பற்றிப் பேசுகிறார்கள்?” “இறையின் இடத்தை எதைக் கொண்டு சமன் செய்வாய்?” “புற்றுநோய்க் கட்டியை அகற்றிய பின் அவ்விடத்தை எதைக் கொண்டும் நிரப்ப வேண்டியதில்லை” “கடவுள் நம்பிக்கையே இல்லாவிட்டால் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?” “ ‘எஜமானர்களே இல்லாவிட்டால் நான் யாருக்கு அடிமையாக இருப்பது?’ என கவலைப்படுகிறீர்களா?” (உபயம் : Dan Barker) “பொதுவுடைமை, பகுத்தறிவாதம்லாம் கேட்க நல்லாருக்கும்; நடைமுறைக்கு சரி வராது” “முதலாளித்துவம், மதம்லாம் கேட்கவே நல்லா இல்லையே” “ ‘ஒரு’ கடவுளின் மீது கூடவா நம்பிக்கை இல்லை?” “மடமை எவ்வுருவில் எப்பெயரில் வந்தால் என்ன?” “என்ன நடந்தால் நம்புவாய்?” “பெரியார் சொன்னதைப் போல் நேரில் வந்தால் நம்பி விடுவேன்” “நம்பிக்கையற்ற உனக்கு ஏன் தரிசனம் தர வேண்டும்?” “என்னை நம்ப வைக்க!” “அதீத பக்தியுடன் இருக்கும் எங்களுக்கே தரிசனம் கிட்டியதில்லை” “Exactly. அப்புறம் எதுக்கு நம்பிகிட்டு?” “புனித நூல்களைக் கொஞ்சம் வாசி. அப்போதாவது உன்னில் மனமாற்றம் வருகிறதா, பார்க்கலாம்” “பேசும் பாம்புகள், ஏழு தலை உயிரினங்கள், சூரியனை விழுங்கும் குட்டி குரங்கு, எலியின் மீது அமர்ந்து வலம் வரும் யானை, மலையைச் சுமக்கும் பறக்கும் குரங்கு…. – இவை இடம் பெற்றிருப்பவற்றை புனித நூல்கள் என்பதை விட ‘புனைவுகள்’ என்று கூறினால் சாலப் பொருத்தமாயிருக்கும். அவற்றைக் கொஞ்சம் வாசித்த பிறகுதான் கடவுள் இருப்பு குறித்த சந்தேகங்கள் முற்றிலும் அகன்று, ‘கருப்பு’ மனதிற்கு நெருக்கமாகிப் போனது” “ப்ச்… எவ்வளவு நன்னெறி ஒழுக்கங்கள் மதிப்பீடுகள் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?” “அதற்கெல்லாம் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறதா? சரி எது தவறு எது என்று பிரித்தறியக் கூடவா தெரியாது?” “இவ்வளவு பெரிய அண்டம் இத்தனை அற்புதங்களுடன் தானாக உருவாகியிருக்கவே இயலாது. அனைத்து உயிரினங்களும் தாமாக உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை” “ஹ்ம்ம்… பூமியை உருவாக்கி பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரத்தையும் அதிலேயே விட்டு அதை கண்டறியும் அறிவையும் நமக்குத் தருவானேன்? நாம் சந்தேகம் கொண்டு இறையின் இருப்பைக் கேள்வி கேட்டு நரகத்திற்குச் செல்ல வேண்டியா? நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்து அதைப் பயன்படுத்துவதற்குத் தடையும் விதித்து வினோதமான வழிமுறைகளுடன் இயங்குகிறார் கடவுள்” “கடவுள் அன்பே உருவானவர். நீ ஏன் அவரை வெறுக்கிறாய்?” “முதலாவதாக நீங்கள் இந்த உருவகத்தின் மூலம் அன்பைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். இரண்டாவதாக, இல்லாத ஒன்றை எப்படி நான் வெறுக்க இயலும்? கடவுள் என்னும் பெயரில் உலவும் கருத்தாக்கத்தைத்தான்(concept) வெறுக்கிறேன்” “நீ அவரது அன்பை உணர மறுக்கிறாய்” “ஆமாமா! இஸ்ரேலியர்கள் மனிதத் தன்மையுள்ளவர்கள்; இந்திய ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை நேசிக்கிறது; பார்ப்பனர்கள் சனாதனத்தை அடியோடு வெறுப்பவர்கள்;…. கடவுளும் அன்பானவர்தான். உணர்ந்துட்டேன்” “சரி! உன்னைப் பொறுத்த வரை கடவுள்னா என்ன?” “பசியில் வாடும் குழந்தைகளின் முனகல்கள், புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளின் வலி மிகுந்த அழுகைகள், வன்புணர்வு செய்யப்படும் குழந்தைகளின் ஓலங்கள், காஸாவில் தனது ஏழு வயது மகனின் தலை மட்டும் தனியாகக் கிடைக்க அதைக் கையில் ஏந்தியபடி வெளிப்பட்ட ஒரு தந்தையின் கேவல்கள், பிரசவித்த மறுநொடியே தன் குட்டியைச் சிங்கக் கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற முயன்று போராடி இறுதியில் இயலாமல், தாயும் (நிற்கப் பழகுவதற்குக் கூட நேரம் கிட்டாத) மான்குட்டியும் இரையாகிப் போகும் போது காடு அதிர கேட்கும் வெற்றி கர்ஜனை - இவை அனைத்தும் விண்ணை முட்டி வெளியை (space) அடையும் போது இவற்றிற்குப் பதிலாகக் கிடைக்கும் காதைக் கிழிக்கும் குரூரமான அமைதியின் பெயர்தான் ‘கடவுள்’!” இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாக எரிச்சலூட்டும் ஒரு வாதம் உண்டு. “நானும் ஒரு காலத்தில் உன்னை மாதிரிதான் இருந்தேன்” - “மொதல்ல தெளிவாதான் இருந்தேன்; அப்புறம்தான் மண்ட கோளாறு வந்துச்சு” என்பதில் என்ன பெருமை? இப்படிச் சொல்வதன் மூலம் தமது மடமையை இன்னும் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே அன்றி வேறென்ன? ஏதோ இப்போது உலகம் புரிந்துவிட்டதாகவும் தான் ஞானி ஆகி விட்டதாகவும் நம்மை நம்ப வைக்கும் பரிதாப முயற்சிகள் எதற்கு? கொள்கை பிடிப்புள்ள பகுத்தறிவாளர் யாரும் எந்தக் கட்டத்திலும் மனமாற்றம் அடைந்து இறையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எனவே இவ்வாறு பேசுபவர்களுள் துவக்கத்திலிருந்தே ஆத்திகமும் ஒருபிடி அடிப்படைவாதமும் உறைந்தே இருந்திருக்கிறது என்றுதான் பொருள். “நானும் (சிறுவயதில்) உங்களைப் போல்தான் இருந்தேன். நீங்கள் பொய்களை நம்பத் தொடங்கிய காலத்தில் நான் அதைக் கைவிடத் துவங்கியிருந்தேன்” என பதிலுக்குச் சொல்லச் சொல்லி அரித்தெடுக்கும் மனதைப் பல முறை அமைதிபடுத்தியிருக்கிறேன். எல்லாரும் நாத்திகர்களாகத்தான் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள் - பயமும் மதமும் விதைக்கப்படும் வரை. “வளர வளர புரியும்” என்கிறார்கள். வளர வளர என்னிடம் கேள்விகள்தாம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அடுத்ததாக இன்னும் ஒரு படி மேலே சென்று சிலர் “கடைசி காலத்தில் இறையை உணருவாய்” என்று சாபம் விடும் தொனியில் கூறும் போதுதான் சிரிப்பை அடக்க இயலாது எனக்கு. என் மரணப் படுக்கையில் இல்லாத கடவுளைப் பற்றி ஏன் எண்ணிக் கொண்டிருக்கப் போகிறேன்? அப்பாவிடம் இன்னும் ஒரு ரசனையான சங்கப் பாடலைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கலாம்; அம்மாவின் கையால் இன்னும் ஒரு நெய் தோசை சாப்பிட்டிருக்கலாம்; என் மகளை இன்னும் ஒரு முறை இறுக அணைத்து அன்பைப் பொழிந்திருக்கலாம்; என்னவனுடன் இன்னும் ஒரு பயணம் சென்றிருக்கலாம்; இன்னும் ஒரு புத்தகம், ஒரு நல்ல சினிமா, இசைக்கோர்வை என ரசித்திருக்கலாம்… இப்படித்தான் நீளும் என் சிந்தனைகள். மேலும், ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட (வாய்ப்பில்லை! சும்மா ஒரு பேச்சுக்கு) அத்தருணத்தில் இறையை உணார்ந்துதான் என்ன ஆகப் போகிறது? You have the right to believe in what you want; I have the right to believe it’s ridiculous – Ricky Gervais ஒரு முறை வீட்டில் நான் தலை சீவிக் கொண்டிருக்கையில் சாமி கும்பிட வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே என்ன தோன்றியதோ? விளையாட்டாக இவ்வாறாக பதில் கூறினேன் – “இச்சீப்பின் வழியாக ஆண்டவனாகிய கடவுளிடம் எல்லாம் வல்ல இறைவனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்”. “பைத்தியம்! சீக்கிரம் வா” என்று சிரித்தவாறே சென்றுவிட்டார் அழைக்க வந்தவர். அவ்வாக்கியத்தில் ‘சீப்பு’ என்ற சொல் ஒன்றுதான் பிரச்சனையாகப் பட்டிருக்கிறது, பாருங்களேன்! மற்றபடி அடுத்த அறைக்கு சென்று சில வண்ண வண்ணப் படங்களைப் பார்த்துப் பேசுவது, கல்லைப் பார்த்துப் பேசுவது, உத்திரத்தை நோக்கிப் பேசுவது, சுவற்றுடன் பேசுவது, நெடுஞ்சாண் கிடையாகவோ மண்டியிட்டோ விழுந்து தரையுடன் பேசுவது – இவையெல்லாம் நல்ல மனநிலையில் உள்ளவர் செய்வதற்கு ஏற்றவைதானாம். “நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள்; நான் அவ்வாறு செய்வதாக நடிக்கிறேன்” – இரண்டிற்குமான பலன்களில் என்ன வித்தியாசம் என்று காண விருப்பம். கோவில் வாசலில் இரப்பவனின் தட்டில், உள்ளே செல்லும் சாமானியன் இடும் அதே அலட்சியமும் மௌனமும் கருவறையில் வீற்றிருக்கும் கல்லிடம் இருந்து அச்சு பிசகாமல் அப்படியே சாமானியனுக்கும் கிட்டுவதுதான் இயற்கையின் சமநிலை! “எனது நம்பிக்கையால் நான் இதைச் செய்கிறேன்/செய்ய மாட்டேன்” என்ற அளவில் இருப்பது “எனது நம்பிக்கையால் நீ இதையெல்லாம் செய்/செய்யாதே” என்றாகும் போதுதான் பிரச்சனையே! ஒரு கட்டத்தில் ‘சரி! செய்துவிட்டுத்தான் போவோமே! இச்செய்கைகள் என்னில் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடப் போகின்றன?’ என பிறரது நம்பிக்கைகளை மதிக்கும் பொருட்டு விளக்கேற்றி பூஜை செய்தாலும் ‘கடமைக்குன்னு செய்றதுக்கு எதுக்கு செய்யணும்?’ என்ற அஸ்திரம் வரும். பகுத்தறிவாத நங்கைகளிடம் “உன் நம்பிக்கையில் நான் தலையிட மாட்டேன்” என்று கூறும் ஆத்திகர்களை ஓரளவு முற்போக்குவாதிகளாக நான் அனுமானித்து வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. அதாகப்பட்டது ஓர் இறை மறுப்பாளரின் நம்பிக்கையைத் தவறென்று நேரடியாகப் பழித்துரைக்காது இச்சமூகம். சடங்குகள், வழிபாட்டு முறைகள் என எல்லாவற்றையும் அவர் ஒழுங்காகப் பின்பற்றிவிட வேண்டும் என்று மட்டுமே எதிர்ப்பார்க்கப்படும். (என்னே உங்கள் சனநாயகம்!) அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் எனது பிம்பம் கண்ணாடியில் எதிரொளிக்கும் போது எனக்கு ஊன்றுகோலாயிருக்கும் பகுத்தறிவுப் பகலவனின் கைத்தடியும் என் பார்வையை விசாலமாக்கித் தெளிவுபடுத்தித் தரும் அன்னாரது கண்ணாடியும் கொஞ்சம் கொஞ்சமாக என்னில் இருந்து தூரமாக விலக ஆரம்பித்தது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் புதைந்திருக்கிறது என் ஆளுமை! ஒரு தனிமனிதனின் மதிப்பீடுகள் வாழ்வியல் நெறிமுறைகள் ஒழுக்கங்கள் ஆகியவற்றை இறை நம்பிக்கையோடு சிக்கலான முடிச்சு போட்டே பார்த்துப் பழகிய சமூகத்திற்குப் புரியாத புதிராக விளங்கும் ஒன்று – இறை மறுப்பாளர்களால் எவ்வித கண்காணிப்பு சாதனமும் இன்றி தாமாகவே நல்லவர்களாகவும் கற்பனையான உந்துதலின்றி தன்னம்பிக்கையாளர்களாகவும் இயங்க இயலும் என்பதே! எவ்வித ஆதாரங்களும் இன்றி நம்பப்படுவது எனில் மதத்திற்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட பொய்களால் ஆன ஒரு ஸ்தாபனத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? மதம் என்பது மனிதத்திற்கும் மனித குலத்தின் மதிநுட்பத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம், மாபெரும் அவமதிப்பு. அறிவுக்கு நேர்மையாக நடந்து கொள்வதன் இயற்கை விளைவாகிய பகுத்தறிவாதம் என்பது உண்மையும் நம்பிக்கையும் ஒரே புள்ளியாகி ஒன்றாக சங்கமிக்கும் இடம். நாம் முன்வைக்கும் ஒரு வாதத்திற்கு ஏரணத்திற்குட்பட்ட ஒரு சரியான எதிர்வாதம் இல்லாதவர்களின் கடைசி புகலிடம் - ‘It’s offensive’. இதன் பின்னால் ஒளிந்து கொண்டால் தாம்தான் சரியென்றும் ஒரு படி மேலே சென்றுவிட்டதாகவும் இவர்களுக்கு யார் சொல்லித் தந்தது? ‘That’s offensive’ is not an argument – Christopher Hitchens இனி ‘offensive’ஐ தூக்கிக் கொண்டு வருபவர்களுக்கு எனது பதில், “So What?” "One day Atheism will disappear as a concept. Instead there will be normal people and some weirdo believers" – Frank Zappa நன்றி - 'கீற்று' இணைய இதழ். https://www.facebook.com/share/r/1AaTbmWWi1/
  5. 2 சிங்கங்கள் சோடியாய் வந்திருக்கினம். 21 ____ கூட்டமாய் வந்திருக்கிறம். நிலமையை பாக்க சிங்கங்கள் கடிச்சு குதறப் போகுது போல.
  6. முதல்வர் alvayan க்கும் துணை முதல்வர் செம்பாட்டானுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் நந்தனாருக்கும் வாழ்த்துக்கள் அமெரிக்கன் அய்யாவின் சபதம் வெற்றியில் முடிந்தது 😂
  7. படக்குறிப்பு, ''இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்'' கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 14 மார்ச் 2025 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது. பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன? தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் (பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம்) உள்ளது. இந்த பழமை வாய்ந்த சோழர் கால கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலை தூய்மைப்படுத்தி தளம் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடமுழுக்கு விழா பணிகள் படக்குறிப்பு, பட்டீஸ்வரத்தில் உள்ள சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் கடந்த திங்கள்கிழமை (10-03-2025) பிரகாரப் பகுதியில் தளம் போடும் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்கள் மண்வெட்டி கடப்பாரை கொண்டு தரையில் குத்தியபோது வித்தியாசமான ஓசை கேட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தட்டிய போது எழுந்த ஓசை மாறுபடவே பணிகளை உடனடியாக நிறுத்தினர். கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவியிடம் தகவலைக் கூறி அவரையும் அழைத்து வந்து தரையைத் தோண்டினர். ''அப்போது அப்பகுதி உள்வாங்கியது. பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்த பொருட்களை அகற்றியபோது அங்கு கருங்கல்லில் கட்டப்பட்டு மூடப்பட்ட பாதாள அறை வெளிப்பட்டது.'' என்றார் இக்கோவிலின் செயல் அலுவலர் நிர்மலா தேவி. ''விரைவில் பாதாள அறையின் உள்ளே இறங்கி ஆய்வு மேற்கொள்ளப்படும்" எனவும் அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் தகவல் தரப்பட்டுள்ளதாகவும், வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் வந்து பார்வையிட்டதாகவும் நிர்மலா தேவி பிபிசி தமிழிடம் கூறினார். படக்குறிப்பு, கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு சீரமைக்கும் பணி நடைபெறுகிறது பிபிசி தமிழிடம் பேசிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், "இக்கோவில் ராஜராஜசோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளிப்படை கோயிலாகும்" என்று கூறினார். "பஞ்சவன்மாதேவி தனது கணவரான ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் மீது அதீத பாசம் கொண்டு அவரை தனது சொந்த மகனாக வளர்த்து வந்தார். அந்த அளவற்ற பாசத்தின் வெளிப்பாடாக தனது சிற்றன்னையின் நினைவாக (பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம்) மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயிலை ராஜேந்திரசோழன் கட்டியதாக கூறிய பேராசிரியர் ரமேஷ் தொடர்ந்து கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய பாதாள அறை குறித்து விவரித்தார். பாதாள நிலவறை படக்குறிப்பு,"இந்த பாதாள அறை எதிரிகள் படையெடுப்புகளின்போது விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்" "கோவிலில் தற்போது வெளிப்பட்டுள்ள பாதாள அறை தரைப்பகுதி மட்டத்திலிருந்து சுமார் 8 அடி ஆழத்தில் உள்ளது. இதன் நீளம் 15 அடியாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கண்டறியப்பட்டுள்ள இந்த பாதாள அறை எதிரிகள் படையெடுப்புகளின் போது விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் ரமேஷ். இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். "தொல்லியல்துறையினர் ஆய்விற்கு பின்பு, பாதாள அறையில் உள்ள மண்ணை வெளியே எடுத்தால் தான் அறையில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா? இது எதுவரை செல்கின்றது உள்ளிட்ட பிற தகவல்கள் தெரியவரும்" என்றார் பேராசிரியர் ரமேஷ். பள்ளிப்படை என்றால் என்ன? படக்குறிப்பு, ராஜேந்திர சோழனின், ஏழாம் ஆட்சியாண்டில் ( கி.பி .1021) கட்டப்பட்ட இந்த கோவில் கருவறை பகுதியில் மிகப்பெரிய கல்வெட்டு காணப்படுகிறது ''பள்ளிப்படை என்பது சைவ சடங்குகளின்படி, இறந்தவரின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்தின் மேல் சிவலிங்கம் வைத்து வழிபடுவதாகும். பள்ளிப்படையை மிக நெருக்கமான, நேசிக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டால் அவர்களுக்காக கட்டப்படும் கோவில் என்றும் கூறலாம்'' என்கிறார் பேராசிரியர் ரமேஷ்‌. ''ராஜேந்திர சோழனின், ஏழாம் ஆட்சியாண்டில் ( கி.பி .1021) கட்டப்பட்ட இந்த கோவில் கருவறை பகுதியில் மிகப்பெரிய கல்வெட்டு காணப்படுகிறது. கோவிலில் பூஜைகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்றதை இந்த கல்வெட்டு மிக விரிவாக தெரிவிக்கின்றது" என்கிறார் ரமேஷ். தொடர்ந்து பேசிய அவர், "தினமும் பூஜை நடத்துவதற்காக ஓதுவார்கள், மேளம் வாசிப்பவர்கள், சைவ பிராமணர் ஒருவர், கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர் ஒருவர், பொருளாளர் ஒருவர், காவலர் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணிகள், கொடுக்க வேண்டிய ஊதியம் ஆகியவை இந்த கோவிலில் அமைந்துள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது" என்றார். ராஜேந்திரன் மற்றும் அவரது சிற்றன்னை பிறந்த நட்சத்திரமான திருவாதிரை நாளில் விஷேசப் பூஜை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது சாமிக்குப் படைக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்பது கல்வெட்டில் கூறப்பட்டு இருக்கிறது என்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார். படக்குறிப்பு,கருவறையின் அர்த்தமண்டபத்தில் உள்ள நந்தியும் கல்தூணும் பழுவேட்டரையர்களின் கலைப்பாணியில் அமைந்த படைப்பாகும் பழுவேட்டரையர் மகள் பிபிசி தமிழிடம் பேசிய கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன், "சோழ மன்னர்கள் வரிசையில் முதலாம் ராஜராஜனின் மனைவியே பஞ்சவன்மாதேவி. இவர் சேர குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள். திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவூரே இவரின் ஊராகும். இந்த கோயில், பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றன்னைக்காக கட்டிய பள்ளிப்படை கோவிலாகும்'' என்றார். "பழுவேட்டரையரின் மகள் என்பதால் பஞ்சவன்மாதேவி பிறந்த மண்ணின் கலைத்திறன் இக்கோவிலில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த காலங்களில் 'பஞ்சவன் மாதேவிஈஸ்வரம்' என்று அழைக்கப்பட்டது" என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2er47rzekvo
  8. இஞ்சை வெளிநாடுகளில இருந்து கொண்டு ஊரிலை வீடு கட்டி,வீடு வைச்சிருக்கிற ஆக்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். இதுக்குள்ள வீட்டுக்குள்ள நடக்கிறத சூம் பண்ணி பாக்கினமாம்.🤣 நானும் ஊரில வீடு வைச்சிருக்கிறன்.ஆனால் சிஷ்டம் வேற 😎
  9. ஏழு கணவரை வரும்படி கேட்டால் மனிசன் கணக்குப் பார்த்திட்டு நீ மட்டும் போட்டுவா. நான் நெடுக லீவு எடுக்கேலாது என்றுவிட, எனக்கு மட்டும் ஏர் லங்காவில் டிக்கற் போடுகிறேன். நேரம் அதிகம் என்றாலும் 40 கிலோ கொண்டு போகலாம். அங்கு வருவதாக மச்சாளுக்கும் அன்ரிக்கும் மட்டும் சொல்கிறேன். ரதி அக்காவுக்கோ வீட்டில் இருக்கும் பெடிக்கோ எதுவும் சொல்லவில்லை. விடியக் காலை ஐந்து மணிக்கு இணுவிலில் போய் இறங்கி குளித்து மச்சாள் வீட்டில் சென்று உணவருந்திவிட்டு ஓட்டோவில் மச்சாளிடம் திறப்புகளை வாங்கிக்கொண்டு என் வீட்டுக்குச் செல்கிறேன். கேற் பூட்டாமல் சாத்தியிருக்க திறந்துகொண்டு ஓட்டோக்காரரையும் உள்ளே வரும்படி கூறிவிட்டு செல்கிறேன். வீட்டுத்திண்ணையில் இருவர் கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதில் எவர் வீட்டில் இருப்பவர்? அனேகமா இவராகத்தான் இருக்கும் என்று எண்ண, அக்கா நீங்கள் வீட்டுக்காற அக்காவா வாங்கோ என்று மற்றவர் என்னை எழுந்து வரவேற்கிறார். இவர் என் நண்பர் அஜந்தன் என்று அறிமுகம் செய்தும் வைக்கிறார். “இவர் வேலைவெட்டிக்குப் போறதில்லையோ” “நான் வேலைக்குப் போறதில்லை அக்கா. எட்டு மாடுகள் வளர்க்கிறன். அதோடையே நேரம் போயிடும்” “ஓ அப்பிடியே” ரஜிதன் – அவர்தான் என் வீட்டில் இருப்பவர், கதிரை ஒன்றைக் கொண்டுவந்து போட நான் ஓட்டோக்காரருக்கும் ஒரு கதிரை கொண்டு வாங்கோ என்கிறேன். ஒரு கதிரை தானக்கா இருக்கு என்கிறார். ஏன் நான் இரண்டு கதிரைகளை வெளியே வைத்துவிட்டுத்தானே சென்றேன் என்கிறேன். நான் இதிலேயே இருக்கிறேன் என்று திண்ணையில் அமர்கிறார் ஓட்டோக்காரர். அவர் எம்மூரவர். அவரின் ஓட்டோவில் தான் நாம் எப்போதும் திரிவது. கொஞ்சநேரம் வீட்டைப் பார்த்துவிட்டு அவருடனேயே திரும்பிப் போவதாக எண்ணம். ரஜிதன் தேநீர் போட்டுக்கொண்டு வருவதாகக் கூற வேண்டாம் என்கிறேன். பரவாயில்லை அக்கா குடியுங்கோ என்று என்வீட்டிலேயே என்னை உபசரிக்க, நான் சுற்றிவரப் பார்க்கிறேன். முன்பக்க வளவு சுத்தமாக இருக்க நான் என் பூங்கன்றுகள் மற்றும் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். மீண்டும் வரத் தேனீரைக் கொண்டுவந்து எல்லோருக்கும் தருகிறார். நீங்கள் வந்தது ரதி அன்ரிக்குத் தெரியுமோ என்கிறார். இன்னும் சொல்லவில்லை. போகும்போது அவவிடம் போய்விட்டுத்தான் போவேன் என்கிறேன். அவர் ஊற்றிய தேநீர் நன்றாக இருக்கிறது. ஓட்டோவை அனுப்பிவிடுங்கோவன் அக்கா என்கிறார். நான் ரதி அக்காவோட கதைச்சிட்டுப் போகபோறன். நாளை வாறன் என்கிறேன். நான் காலை ஆறரைக்கு வேலைக்குப் போய் 11 மணிக்கு வருவன். பிறகு 3 மணிக்குத் திரும்ப வேலை. 2.30 இக்கு போயிடுவன் என்கிறார். நீங்கள் உங்கள் அலுவலைப் பாருங்கோ. என்னட்டைத் திறப்பு இருக்கு. நான் என்பாட்டில வருவன் என்கிறேன். தனிய நிக்கப் பயம் இல்லையோ என்கிறார். என் வீட்டில் நிக்க என்ன பயம் என்றுவிட்டு தேநீர் கோப்பைக் கழுவ சமையலறைக்குச் செல்ல, என்னட்டைத் தாங்கோ அக்கா என்கிறார். நான் குடித்த கப்பை நானே கழுவிகொள்கிறேன் என்றபடி குசினுக்குள் செல்கிறேன். குசினி சுத்தமாக இருக்க மனம் நிம்மதியாகிறது. அதன் பின்னர் ரதி அக்காவிடம் சென்று அவருடன் பேசிவிட்டு நாளை வருவதாகக் கூற, பெடியன் என்ன மாதிரி என்கிறா. ஒரு அரை மணித்தியாலம் பாத்து முடிவு செய்ய ஏலாது தானே அக்கா என்றுவிட்டுக் கிளம்புகிறேன். நாம் லண்டன் வரும்போது மனிசன் ஸ்கூட்டியின் பற்றியைக் கழற்றிவிட்டு வந்தார். முன் வீட்டில் இரண்டு ஆண்கள் இருக்கின்றனர். அவர்களை பற்றியைப் பூட்டித் தரும்படி கேட்க, தமக்குத் தெரியாது என்கின்றனர். தாயார் முன்னால் வந்து ஓடுற வாகனம். அரைகுறையாய்ப் பூட்டி ஏதும் நடந்தாலும் வீண்பழி. எதுக்கும் மெக்கானிக் ஆரையன் கூப்பிட்டுப் பூட்டுங்கோ என்கிறா. எனது ஸ்கூட்டியின் மெக்கானிக் சுண்ணாகத்தில் இருக்கிறார். அவருக்குப் போன் செய்ய, தான் எலெக்சன் வேலையில் மும்மரமாக இருப்பதாகக் கூற, எந்தப் பார்ட்டிக்கு ஆதரவாக வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு “நான் சுயேட்சையா நிக்கிறன் அக்கா. அதனால வேறு யாரையும் கூப்பிடுங்கோ” என்கிறார். அடுத்தநாள் மீண்டும் ஓட்டோவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறேன். போகும் வழியில் மருதனார் மடத்தில் உள்ள கடையில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவை மீண்டும் மாலை 5 மணிக்குவரும்படி கூறிவிட்டு கேற்றைத் திறந்து மீண்டும் பூட்டால் பூட்டிக்கொண்டு வீட்டையும் திறந்து உள்ளே செல்கிறேன். சுவாமி அறை, மற்ற அறை எல்லாம் சுத்தமாகவே இருக்கு. எங்கள் அறையைத் திறக்கிறேன். அது பூட்டி இருந்தபடியால் கொஞ்சம் காற்றோட்டம் இன்றி இருக்க யன்னல்களைத் திறந்துவிட்டு கூட்டுகிறேன். கட்டில் விரிப்பை அலம்பி வெளியே காயவிடச் சென்றால் நாம் கட்டியிருந்த கயிற்றைக் காணவில்லை. ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துவிட்டு 11.00 இக்கு பெடிப்பிள்ளை வருவார் தானே கேட்போம் என்றுவிட்டு அலுவல்களைப் பார்க்கிறேன். எமது இரண்டாவது அறையையும் திறந்து யன்னல்கள் எல்லாம் திறந்துவிட்டு மேலோட்டமாகப் பார்க்க எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கிறது. மீண்டும் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்று கன்றுகளைப் பார்க்க இரண்டு தென்னங்கன்றுகளை மாடு கடித்து மொட்டையாக்கிவிட்டிருக்கு. இரண்டு வாழைகள் குலையுடன் முறிந்துகிடக்கின்றன. பின்பக்கம் முழுதும் புற்கள் காடாய் வளர்ந்துபோய் கிடக்கின்றன. 11.30 மணி போல் பெடியன் வருகிறார். அக்கா என்ன சாப்பிடுறியள்? நானே சமைக்கிறன் என்கிறார். நான் வரும்போதே இடியப்பம் உமக்கும் சேர்த்து வாங்கி வந்தனான் என்கிறேன். நான் மத்தியானம் சோறுதான் சாப்பிடுறனான் என்கிறார். சரி நீர் உமக்கு மட்டும் சமையும். எனக்கு வேண்டாம் என்கிறேன். ”நாளைக்கு கட்டாயம் என்ர கையாலதான் நீங்கள் சாப்பிடவேணும்” “எனக்கு நான் சமைத்து சாப்பிடுவதுதான் விருப்பம்” “அக்கா நான் லீவு எடுத்துவிட்டு உங்களை எங்க வேணுமெண்டாலும் என்ர ஸ்கூட்டியில கூட்டிக்கொண்டு போறன்” “அதுக்கு அவசியமே இல்லை. என்னட்டையும் ஸ்கூட்டி இருக்கு” “அப்ப உங்கட ஸ்கூட்டியிலேயே போவம்” நான் மனிசனைத் தவிர வேறை யாருக்கும் ஸ்கூட்டியைக் குடுக்கமாட்டன். அதோடை எனக்கு ஒரிடமும் போகத் தெரியாது எண்டு நீர் எனக்கு ஊர் சுத்திக்காட்டப் போறீரோ? என்னைப் பற்றி உமக்குத் தெரியேல்லை” “இல்லை அக்கா நீங்கள் வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கிறியள்.. அதுதான்” “அதுசரி பிலாமரத்துக்கும் மாமரத்துக்கும் இடையில கட்டியிருந்த கொடியைக் காணேல்லை. நான் பெட்சீற்றை அலம்பிப்போட்டுப் பார்த்தால் ஒண்டும் இல்லை” “எனக்கு அதைப்பற்றித் தெரியாது அக்கா. நான் அந்தக் கறாச்சுக்குள்ளதான் கொடி கட்டி காயப் போடுறன்” நான் கறாச்சுக்குள் போய் பார்க்கிறேன். இரு பக்கத் தூண்களிலும் வயர் கட்டியபடி இருக்கு. இந்த வயரை எங்கிருந்து எடுத்தீர் என்று கேட்க உதில் கொழுவி இருந்தது என்கிறார். என்னை ஒருக்காக கேட்டிருக்கலாமே. உது கமராவுக்குப் போடுற வயர். உதின்ர விலை தெரியுமே உமக்கு. அருமந்ததை வீணாக்கிப்போட்டீர். அப்பவும் உள்ளே கொண்டுபோய் வையுங்கோ எண்டு இந்த மனிசனுக்குச் சொன்னனான் என்கிறேன் கடுப்புடன். அவர் எதுவும் பேசாமல் அப்பால் செல்ல நான் சீற்றைக் காயவிட்டுவிட்டு உள்ளே வருகிறேன். வரும்போது பார்த்தால் மாமரத்தில் ஊஞ்சலையும் காணவில்லை. ஊஞ்சல் எங்கே என்று கேட்கத் தனக்குத் தெரியாது என்கிறார். முன்பு இருந்த சனங்கள் அதையும் அறுத்துக்கொண்டு போய்விட்டார்கள் போல என்று சொல்ல, இருக்கும் அக்கா என்கிறார். சரி தம்பி நீர் உம்மடை சமையல் அலுவலைப் பாரும் நான் ரதி அக்காவிடம் போட்டு வாறன் என்று சொல்லிவிட்டுக் கிளம்ப, அவருக்கு ஒரு போன் வருகிறது. “அக்கா வந்து நிக்கிறபடியால் நான் இண்டைக்கு வரேலாது. இப்ப நான் சமைக்கப்போறன் என்று அவர் சொல்வது எனக்குக் கேட்கிறது.
  10. @alvayan அவர்களின் வேண்டுகோளை நீங்கள் ஏற்கலாம். பாத்துப் பண்ணுங்க. எனக்கு உண்மையிலேயே புரியாத புதிர். எந்த வீரரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எல்லாரையும் கரிச்சுக் கொட்டினா, பிறகு ஒருத்தரும் மிஞ்சமாட்டினமே. 🫣 இது ஒரு அணியின் விளையாட்டு.
  11. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.
  12. உதைத்தான் நான் அப்பவே சொல்லிப் போட்டன். ஏத்துறது விழுத்துறதுக்குத்தான் என்று. இவ்வளவு நாள் அனுபவிச்சது காணும். மீண்டும் எங்களின் வேலையை ஆரம்பிப்போம். அவரும் நானும். நானும் அவரும். பிரபா சொன்னமாதிரி இரு சிங்கங்களாக, வீறுநடை போட்டு.....
  13. கிருபன் சார் ..இது என்னங்க ..எனக்கு விளங்கவில்லை..எப்படி...மன்னார் ஆலமரம் மாதிரி நின்ற செம்பாட்டான்..எப்புடி பின்வந்தார்... ரணில் போல எல்லோரும் சேர்ந்து பப்பா மரத்தில்... கிருபன் ...உங்கள் உயர்ந்த உள்ளத்தையும்..உயர்மிகு புள்ளியிடும் திறனையும் வரவேற்கின்றேன்
  14. GMT நேரப்படி நாளை சனி 05 ஏப்ரல் முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 02:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி செம்பாட்டான் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 14 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ சுவி வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  15. பொறுங்கோ...இப்பதன் புது உடுப்பு வாங்கப் போறன்...சனத்தைக் சற்று அமைதிப் படுத்துங்கள்... அதுக்கு ஒரு வழியிருக்கு..மேடையில் ஏறி நாலு பாட்டுப் பாடுங்கோ...பிரியன் கிருபன் சார் இப்ப முடிவை வெளியிடமாட்டார்☹️
  16. 13 ஆவது ஓவரில் களத்தடுப்பினை wide yorker, back of length ஏற்படுத்தியிருந்தார்கள் பின்னர் சரியான மற்றும் அளவு கூடிய பந்துகளை வீசிவிட்டு எதிர்பார்த்த மெதுவான அளவு குறைந்த பந்தில் விக்கெட் எடுக்கும் முயற்சியில் பந்து வீச்னினார்கள் ஆனால் நிறைவேறவில்லை. 19 ஆவது ஓவரும் ஓட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பாக வீசினார்.
  17. தில‌க் வ‌ர்மா என்ன‌ செய்யுது ப‌ந்தை வீன் அடிக்குது😁......................
  18. இந்த விடயத்தில் நானும் உங்களைப் போல அதிர்ஷ்டக் காரன் தான். யாழ்ப்பாண இடம்பெயர்வு, புலிகளின் பாஸ், பின்னர் ஆமியின் பாஸ் போன்றவை காரணமாக தாமதமாக நான் போய்ச் சேர்ந்த போது பகிடிவதை முடிய 2 வாரங்கள் இருந்தன. மிருக வைத்திய பீடத்திலும் ஒரு "சைக்கோ" தமிழ் சீனியர் இருந்தார். மதிய சாப்பாட்டு வரிசையில் முதல் நாள் நின்று கொண்டிருந்த போது, அவரது எச்சில் தெறிக்கும் தூரத்தில் முகத்திற்கு கிட்டவாக வந்து "நீ இண்டைக்கு 6 மணிக்கு இன்ன இடத்துக்கு வாறாய், தப்பியோட எண்ணம் இருந்தால் நாளைக்கு வராமலே போயிரு, தப்பியோடி நாளைக்கு நீ இங்க வந்தால், நீ செத்தாய்!" என்றார். அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு தமிழ் மாணவரை இவர் பல முறை இப்படி அழைத்துப் போய் வன்முறை செய்ததில், அவரது சிறு நீரில் இரத்தம் (hematuria) போயிருக்கிறது என அறிந்தேன். இந்த சக கனிஷ்ட மாணவர் தற்போது என்னையும் சைக்கோவிடம் மாலை அழைத்துப் போவதில் அக்கறையாக இருந்தார். "ஏன் தேடிப் போய் ராக்கிங் வாங்கிறாய்?" என்று நான் அப்பாவியாகக் கேட்டேன் இவரிடம். "சீனியர்களிடம் நோட்ஸ் வாங்கிப் படிக்காமல் பாஸ் ஆகி வெளியே செல்ல முடியாது" என்ற புளிச்சுப் போன பல்லவியைப் பதிலாகச் சொன்னார். அன்று மாலையும், அடுத்த 9 மாலைகளும் நான் இந்த சைக்கோவிடம் போகாமல், ஒவ்வொரு வழிகளால் தப்பி, என் தங்குமிடம், நண்பனொருவரின் அறை, கண்டி ஏரிப் பகுதி என்று போய் வந்து கொண்டிருந்தேன். யாருடைய நோட்சும் எனக்குத் தேவைப் படவில்லை. ராக்கிங் காலம் முடிந்த பின்னர் "சைக்கோ" சீனியரை நான் ஏனையோரை விட ஒரு மட்டம் கீழே வைத்துத் தான் பழகி வந்தேன். தற்போது இந்த "சைக்கோ" சீனியர் கட்டுநாயக்காவில் சுங்க உதவி ஆணையாளராக இருக்கிறார். கடந்த முறை ஒரு நண்பன் போன போது கண்ணாடி அறையினுள், அலுவலக நாற்காலியில் இருந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தாராம்😂!
  19. பதவியில் இருக்கும் போது செய்த ஊழல்களுக்கு புதிய முதலமைச்சர் @alvayan னின் விசாரணைக்குழு விசாரிக்க தயாராக உள்ளது.
  20. நானும் இந்த பகிடிவதைக்குள் அகப்பட்டு பல பழிவாங்கல்கள் ஓரங்கட்டல்கள் (இரண்டாம் ஆண்டு மாணவர்கள், மற்றும் ஒரு மூன்றாம் ஆண்டு மாணவன்) எல்லாவற்றையும் எதிர்கொண்டேன் (இது வரப்பிரகாஸுக்கு பிந்திய காலம்). எனக்கு பகிடி வதை செய்தவர்கள் எந்த வகையிலும் எனக்கு பிற்காலத்தில் உதவவில்லை (அதுக்குப்பிறகு என்னோடு கதைப்பது கூட இல்லை). பகிடிவதை செய்யும் போது தாங்கள் எங்களுடன்நெருங்கிப் பழகுவதற்காகவே இதைச்செய்வதாக சொன்னார்கள். ஒரேஒரு ஆறுதல் எங்கள் சக மாணவர்களும் மிகுதி மூன்றாம் வருட மாணவர்களும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை சிங்கள மாணவர்களும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை (இதில் தமிழ் சிங்கள வேறுபாடு என்று இல்லை). மட்டக்களப்பு மாணவர்கள் தான் கூட அனுபவித்தது தமிழ் மாணவர்களைப்பொறுத்தவரையில். வரப்பிரகாசுக்கு பின்னர் சிறிது குறைந்தகாலத்தில் அகப்பட்டதால் பல்கலைக்கழகத்திலும் சிறிது இறுக்கம் கூட (இது பொறியியல் பீடத்தில் மற்றப்பீடங்களில் சிறிது வித்தியாசமாக இருக்க்டலாம்)
  21. பேச்சுவார்த்தைக்கு வந்த பின்புதான் உள்ளூராட்சிசபை தேர்தல் பற்றிய ஞாபகமே வந்தது. கொழும்பில் இருந்து புறப்படும் போது எவனுமே சொல்லல்லையாடா?
  22. பொதுவாக பாம்புகள் தீண்டும் போது எதிரியை பயமுறுத்த தன் விசத்தை மேலோட்டாமாகவே உட் செலுத்தும். எதிரியிடம் மாட்டுப்பட்டு தப்பிக்க முடியாத சந்தர்ப்பங்களில் தான் முழு விசத்தையும் உட் செலுத்தும். குருக்கள், பாம்மை பிடித்து முறுக்கியிருக்கின்றார் போலிருக்கு. உடனடியாக சிசிச்சைக்கு போயிருந்தால் தப்பியிருப்பார்.
  23. கறுப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் முதல் 6 ஓவர்களில் அடித்தாட வேண்டும், பின்னர் ஓட்டங்கள் எடுப்பது கடினமாகிவிடும், சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக காணப்படும், ஆடுகளம் பெரிதாக உடையாதென்பதால் அணிகள் அணிகள் முதலில் பந்து வீசவே விரும்புவார்கள், வேகப்ந்து வீச்சாள்ர்கள் மெதுவான ஒஅந்து வீசுவார்கள். ஆடுகளத்தில் பெரிதாக பிடிப்பு இருக்காது மணிக்கட்டினால் சுழல் வீசுபவர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும் சைட் ஸ்பின் முறை இதில் சிறப்பாக இருக்கும் 170 ஓட்டங்கள் நல்ல ஓட்டம். ஆரம்ப ஓவர்களிலிலேயே வேக பந்து வீச்சாளர்கள் மெதுவான பந்து வீச்சுக்களை மேற்கொள்ளுவார்கள். https://www.indiatoday.in/sports/cricket/story/ipl-2025-lsg-vs-mi-match-pitch-report-weather-forecast-ekana-stadium-lucknow-2703579-2025-04-04 மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்தான் சிகப்பு மண் என குறிப்பிட்டிருந்தார்கள்.
  24. உங்களை போல் இரண்டு ஐடியில் நாங்கள் கருத்து எழுதும் கந்தசாமிகள் அல்ல .
  25. கருப்பு மண் உள்ள மைதானத்தில் விளையாடுவார்கள் என்று வாசித்த ஞாபகம். சூழல் பந்து வீச்சாளர்களுக்கு கருப்பு மண் சாதகம்
  26. மரம் வளர்ப்போம், மனசை வளமாக்குவோம் ......... ! 😁
  27. இன்று லக்னோ ஏக்கனா விளயாட்டு மைதானத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்த ஆடுகளம் பஞ்சாப்புடன் விளையாடிய சிகப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், அதனால் ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்து மற்றும் சுழல் பந்திற்கு சாதகமாக இருக்கும், முதல் 6 ஓவர்களில் பந்து மட்டைக்கு வருவது இலகுவாகவும் பின்னர் கடினமாகவும் மாறும் ஆனாலும் ஆரம்ப ஓவர்களில்(0-6) வேகபந்திற்கு சாதகமாக இருப்பதால், அவசரமாக ஆடி அதிக விக்கெட்டுக்களை(ஒரு விக்கெட்டிற்கு அதிகமாக) இழந்தால் அணி நெருக்கடிக்குள் உள்ளாகும். இந்த ஆடுகளத்தில் 180 -190 ஒரு நல்ல ஓட்டமாகும், முதல் 10 ஓவர்களில் 80/2 அடுத்த 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை எடுத்தால் குறித்த இலக்கை எட்டலாம், இறுதியாக லக்னோ அணி அண்ணளவாக 170 ஓட்டங்களை எடுத்திருந்தும் அதனை மிக இலகுவாக பஞ்சாப் அணி விரட்டியதாக நினைவுள்ளது. இங்கு மைதான ஈரலிப்பு இருக்காது என கூறப்படுகிறது, அதனால் முதலில் துடுப்பெடுத்தாடுவது சாதகமானது, சிகப்பு மண் ஆடுகளம் வேகமாக உடையும் அதனால் இரண்டாவதாக ஆடும் அணிக்கு மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் கடினமாகிவிடும். இந்த ஆடுகளங்களில் 7-10 ஓவர்கள் முக்கிய பங்கு வகிக்கும், ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை எடுப்பதற்கு சிரமப்படும் அணி இந்த பகுதியில் ஓட்டங்களை துரிதப்படுத்த முயலும் போது விக்கெட்டுக்களை இழக்கும் இந்த பகுதியில் விக்கெட்டுக்களை தக்கவைத்து சராசரியான ஓட்டங்களை எடுத்தால் இறுதி ஓவர்களில் அதிக ஓட்டங்களை எடுக்க முடியும். பவர் பிளேயில் வேகபந்து வீச்சாளர்களிற்கு பந்து சுவிங் ஆகாவிட்டால் அளவு கூடிய (Full) பந்து வீச்சுகளை தவிர்ப்பார்கள் ஏனெனில் இந்த ஆடுகளத்தில் செலுத்தி ஆடுவது சிறப்பான தெரிவு, அளவு குறைந்த பந்துகளை பந்து வீச்சாளருக்கு மேலாக தூக்கி இலகுவாக அடித்து ஓட்டங்களை குவித்து விடுவார்கள் இந்த முதல் 6 ஓவர்களில் நல்ல அளவுகள் (good) மற்றும் அளவு குறைந்த (back of length) பந்து வீச்சுகளுக்கு இரண்டு தடுப்புகளுடன் பந்து வீசுவார்கள் (mid on mid off பிடி எடுப்பதற்காக).
  28. இது தெற்கு மாநிலங்களால் உள்நுழைந்து நடுவில் இருக்கும் மாநிலங்களை பதம் பார்க்கிறது. வருடாவருடம் பல சூராவளிகள் வந்து போகின்றன. உயிருக்கும் உடமைகளுக்கும் சேதங்கள் வரவே தான் செய்கிறது.
  29. இதெல்லாம் போலி செய்தி என்று அமெரிக்காவில் இருந்து குரங்குக்கு வைத்தியம் செய்பவர் வந்து சொல்வார் நம்புங்க மக்களே நம்புங்க .😄
  30. நாளைக்கு 17 கட்சிகள் சேர்ந்த மெகா கூட்டணியோடு களத்தில் இறங்குகின்றோம்............. லக்னோவை உண்டு இல்லை என்று செய்கின்றோம்.............. இந்த மும்பை இன்டியன்ஸூம், சென்னை சூப்பர் கிங்ஸ்ஸும் கிரிக்கெட் விளையாடுவதை விட படம் காட்டுவதில் தான் முன்னுக்கு நிற்கின்றார்கள்........... அது தான் ஒரு சின்ன யோசனை............🙂. யார் கண் பட்டதோ, இன்றைக்கு கதையை ஹைட்ராபாத் முடிச்சிட்டார்களே.............🤣. நாக்கில் கறுப்பு இருக்கும் சில உறவுகள் இங்கு களத்தில் இருக்கின்றார்கள்............😜.
  31. மீன்குஞ்சுகளை வளர்த்து மீண்டும் இந்தியர்கள் வந்து மீன்பிடிக்க உதவி செய்யினம் போல ...இரண்டு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம்.... இதில மாட்டுப்பட்டு தவிப்பது அப்பாவி தொழிலாளிகள் ... இந்திய பிரதமர் நாட்டில நிற்கும் பொழுதே இப்படி அறிக்கை விடுகிறோம் பார்த்தீங்களா என மக்களை உசுப்பேத்தி வாக்கு கேட்க இந்த நாட்கம் ..போல‌ அப்படி செய்தால் இரண்டு பகுதியைனரின் ரகசிய ராஜதந்திர நகர்வு அமபலப்பட்டு விடும்...
  32. ஐபிஎல் 2025 இன் 15வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை 16 ஓட்டங்களிலேயே இழந்திருந்தாலும் பின்னர் வந்த வீரர்களாக அய்ங்கியா ரஹானே, அரைச் சதங்களை எடுத்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள் எல்லோரும் மிகவும் குறைந்த ஓட்டங்களிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பியதால் 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 120 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  33. நாய்களை இவர்கள் நேசிப்பது என்றால்... தங்கள் வீடுகளில், கட்டி வளர்க்கட்டும். சும்மா தெருவில் அவிட்டு விடுவதால்... அதுகள் போறவன், வாறவன் எல்லாரையும் திரத்திக் கொண்டு போய் கடிக்கின்றது அல்லது விபத்தை ஏற்படுத்துகின்றது. மோட்டார் சைக்கிள், துவிச் சக்கரவண்டிகளில் போனவர்கள் எத்தனை பேர் கை கால் முறிந்து இருக்கின்றார்கள் என்று இந்த ஆர்வலர்களுக்கு தெரியுமா? அரசாங்கம் நன்மை செய்ய வெளிக்கிட்டால், சில வெருளிகள்.... வேண்டாம் என்று மட்டையை தூக்கிக் கொண்டு வந்து தெருவில் நிற்குதுகள். அதிலை... இரண்டு மூன்று வெள்ளையளும் நிற்குதுகள். இதுகளை தெருநாய் உள்ள இடத்தில் கொண்டு போய் விட்டு.. கடி வாங்க விடவேணும். பிறகு பொக்கிளை சுத்தி 21 ஊசி போடும் போதுதான் புத்தி வரும்.
  34. அண்ணை, எங்கள் வீட்டில் பசு வளர்த்த காலங்களில் 20 நாட்களுக்கு மேல் கன்று மட்டுமே ஊட்டும், ஆனால் கடும்புப் பாலை கன்றுக் குட்டியால் முழுதும் அருந்த முடியாத சூழலில் மடி கட்டாமல் இருக்க கடும்புப்பாலை எடுப்பார்கள்.
  35. கே.கே.ஆர்..200 முதல் ஓவரின் 2 வ்து பந்தில் ..காவ்யாவின் தலை கழண்டுவிட்டது 2வ்து ஒவரில் அபிசேகம் முடிந்துவிட்டது வேகப் பந்துக்கு அடித்துத்தான் இருவர் போய் விட்டினம்
  36. சுமைதாங்கியாக இருக்கும் கோஷானை ஆறுதல்படுத்தி சிரிக்கவைக்க, https://www.youtube.com/watch?v=5UAg3fcm0iE https://www.youtube.com/watch?v=lH86z6iC1rA இப்படியே போனால் நானும் விரைவில் உங்கள் பக்கத்தில் வர சாத்தியம் இருக்கிறது!
  37. 🤣........... இங்கு பர்மா பூகம்பமே வந்தாலும் அத்திவாரம் இப்போதைக்கு அசையாது போல..........
  38. மரணத்தின் வலி யாவர்க்கும் ஒன்றே .........! 😪
  39. இப்படியான பகிடி வதைகளை செய்து ஊக்குவித்தவர்கள்/ தொடர வழி வகுத்தவர்கள் அன்றைய பழைய மாணவர்கள் தான்.அன்றைய பழைய மாணவர்கள் அன்றே நினைத்திருந்தால்/மாற்று நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இன்று இந்த நிலைமைகள் வந்திருக்காது.
  40. ஒரு கையில் புத்த பகவானின் தர்ம‌ போதனைகளையும் மறு கையில் தூப்பாக்கி வைத்து தர்மத்தை காப்பற்றும் சிறிலங்காவிலா இது நடந்தது நம்ப முடியவில்லை ... 1977 ஆம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்திலிருந்து சென்ற புத்திஜீவி சிங்கள மாணவர்கள் சிங்கள பகுதியில் செய்த தமிழர் விரோத பிரச்சாரங்களையும் மறந்து விடமுடியாது ....(1977 ஆம் ஆண்டு இனக்கலவர்த்திற்கு மேலும் வலு சேர்த்த விடயங்களில் இதுவும் ஒன்று) இதையும் நாங்கள் சொல்லத்தான் வேணும் யாரவது திட்டி எழுதினாலும் பிரச்சனை இல்லை சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேணும் ...
  41. எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் படித்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று படிக்க வரும் சக மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதை செய்யும் இந்த காட்டுமிராண்டிகள் தான் நாளைக்கு மருத்துவர்களாகவோ, வழக்கறிஞர்களாகவோ, ஆசிரியர்களாகவோ சமூகத்தில் வலம்வரப் போகின்றனர். அல்லது, அரச வேலை தா என்று அரசிடம் பிச்சை எடுக்க போகின்றனர். எத்தனை அரசுகள், கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் திருந்தாத காட்டுமிராண்டிக் கூட்டங்களைத் தான் இலங்கை கல்வி அமைப்பு உற்பத்தி செய்து அனுப்புகின்றது.
  42. அ.முத்துலிங்கத்துக்கு விருது jeyamohanFebruary 6, 2025 அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கனடாவின் டொரெண்டோ பல்கலைக் கழகம் வழங்கும் மதிப்புமிக்க விருந்தான ARBOR AWARD வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பண்பாட்டுக்கும் பல்கலையின் கல்விப்பணிக்கும் அளித்த பங்களிப்புக்காக அளிக்கப்படும் விருது இது. அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் https://www.jeyamohan.in/211914/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.