Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38754
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19122
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/11/25 in all areas

  1. நாளை சனி 12 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 22 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ரசோதரன் இந்தப் போட்டியில் 22 பேர் முட்டைகளைப் பெறுவார்களா அல்லது ஒருவருக்கு மாத்திரம் முட்டைகளா?
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 25வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஐபிஎல் போட்டி என்பதை மறந்து விளையாடியதால் விக்கெட்டுகளை வேகமாகப் பறிகொடுத்துப் பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு தொடரின் 103 ஓட்டங்களையே எடுத்தது. இது தொடரின் அதிகுறைந்த ஓட்டங்களாக வரச் சாத்தியம் உள்ளது! பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகக் குறைந்த வெற்றி இலக்கை விரைவில் அடையும் நோக்கில் வேகமாக அடித்தாடினர். சுனில் நாரயனின் மின்னல் வேக அடியுடனான 44 ஓட்டங்களின் உதவியுடன் 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 107 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. நாங்கள் கோயில்களில் மாதவிலக்கான பெண்களை தீட்டு என்ற சொல்லி அனுமதிக்க மறுத்துக் கொண்டு, இந்த தமிழக சம்பவத்தை பார்த்து கோபம் கொள்கின்றோம்.
  4. 🫢.......... சென்னை சாம்பியன்ஸ் ஆகும் என்று போட்டவர்கள் தான் அதிகம் என்று நினைக்கின்றேன்.........☹️.
  5. இங்கே இப்ப வெள்ளிக்கிழமை காலை, நேரம் 8:10............. இந்த நேரத்தில் நான் இந்தக் கொடுமையை பார்க்க வேண்டும் என்று என் தலையில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்று என்னை நானே சமாதனப்படுத்துவதை தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை..............🤣.
  6. உண்மையை ஒப்புக் கொண்ட பொன்முடிக்கு நன்றி. 👍 திராவிடத்தை பரப்ப... எத்தினை மதில் ஏறி, குதிக்க வேண்டி இருந்திருக்கு. 21´ம் பக்கத்திற்கு பிறந்தவர்கள்.
  7. நாங்கள் இப்பவும் ரஜினி படம் என்னா “தலீவா” என்று தியேட்டர்வரை போய்க் கொண்டாடுகிறோம்! சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு தோனி “தல”. அந்தக் கொண்டாட்டம் வற்றும் மட்டும் வயசாளி விளையாடுவார்😜
  8. பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம்: அதிபர் இமானுவெல் மெக்ரோன் தகவல் பாரிஸ்: பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவெல் மெக்ரோன் நம்பிக்கை தெரிவித்தார் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் அனைத்துலக கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்று அவர் கூறினார். இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு செய்யப்படும் என்று பிரான்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது சவூதி அரேபியாவுடன் பிரான்ஸ் இந்த கூட்டத்தை நடத்தும் வேளையில் அனைத்துலக சமூகத்தின் பார்வைகளைக் கொண்டு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முனைப்பு காட்டுவோம் என்று மெக்ரோன் சொன்னார் ஐநாவில் உறுப்பியம் கொண்ட 193 நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளன. -மவித்திரன் https://nambikkai.com.my/detail/34838
  9. காலத்துக்கு ஏற்ப மாறி கொள்ளனும் இங்குள்ள புல்லு வெட்டும் மெசினை அங்கு கொண்டு போய் வாடகைக்கு விடலாம் அதேபோல் சிறு ரக இயந்திரம்களை கொண்டு போய் இறக்கி வாடகைக்கு விட்டு காட்ட பின்னால உங்கடை கொப்பி பண்ணிக்கொண்டு ஒரு நூறு பேர் வருவார்கள் உடனே உங்கடை வாடகை கொம்பனியை நல்ல விலைக்கு வித்து விட்டு அடுத்த சந்தர்ப்பத்தை தேட தொடங்குகள் .
  10. எனது 10 புள்ளிகளையா சொல்றீங்க?
  11. வயது போனாலே இந்த அறளை ஒரு பெரிய பிரச்சனை. என்ன எழுதுகிறோம்/பேசுகிறோம், ஏது எழுதுகிறோம்/பேசுகிறோம் என்பது தெரியாமல் கீழ்த்தரமாக பொது இடங்களில் கூட எழுதி/பேசி விடுவார்கள். இங்கே திரியில் மேலே கூட இதை காணலாம் (சிலர் பதினைந்து வருடம் முன்பே இப்படித்தான் என்பது வேறு விடயம் 🤣). கீழ்த்தரமான பேச்சை, கீழ்தரமான பேச்சால் கண்டிக்கிறோம் என்ற முரண்நகை கூடவா விளங்காது🤣. பொன்முடி மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே. தூசண திருமுருகன், செக்ஸ் சைக்கோ சீமான் போல பொதுவெளியில் யார் ஆபாசமாக பேசினாலும் அதை கண்டிக்க வேண்டியது அவசியம்.
  12. குடும்ப ஆட்சியைக் கொண்டு நடத்துவது என்பது எளிதானது அல்ல பாவம் சரியாக கஷ்டப்படுகின்றார்😂
  13. எதுக்கும் இப்போதே மன்னராட்சிக்கு எதிராக கவர்னரிடம் ஒரு முறைப்பாட்டை கொடுத்து விடுங்கள் ,😃 பதவியேற்பு நிகழ்வில் குண்டக்க மண்டக்கா தளபதியை அனுப்பி 😇 குழப்பம் விளைவிக்கலாம் என ஒரு புலன் ஆய்ந்த செய்தி கூறுகின்றது🫠
  14. ஜயகோ. என்ன நடந்தது. யார் செய்த வேலை இது. சுவி நந்தன் இணைப்பாட்டம் தகர்க்கப்பட்டது. எங்கள் பழைய மேற்கிந்தியத் தீவுகளுக்கு இப்பிடி ஒரு நிலைமையா.
  15. இன்னுமா இந்த உலகம் என்னை தூக்கி வைத்து கொண்டாடுது . ......... இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் . ........ ! 😁
  16. நான் இன்று கோரஸ் பாடுவதிலிருந்து வெளிநடப்பு செய்யப்போகின்றேன் 😃 😹
  17. வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு ஆண் : { என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான் } (2) என் கண்கள் தேடிடும் காதல் நீதான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான் ஆண் : உயிாில் பூப்பறித்த காதலியும் நீதான் உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீதான் பெண் : இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான் இளமை நனையவரும் பூமழையும் நீதான் ஆண் : வோ்க்க வைத்தாய் நீதான் நீதான் விசிறி விட்டாய் நீதான் நீதான் பெண் : தேடி வந்தாய் நீதான் நீதான் தேட வைத்தாய் நீதான் நீதான் ஆண் : புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான் பெண் : தொியாமல் என் மனதைப் பறித்ததும் நீதான் ஆண் : என்னை மூடிவிடும் வெண்பனியும் நீதான் குளிரும் மாா்கழியில் கம்பளியும் நீதான் பெண் : என்னைத் உறங்க வைக்கும் தலையணையும் நீதான் தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான் ஆண் : மோகங்களும் நீதான் நீதான் முத்தங்களும் நீதான் நீதான் பெண் : புன்னகையும் நீதான் நீதான் கண்ணீரும் நீதான் நீதான் ஆண் : கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான் பெண் : ஒளிந்தவளை அருகில் வந்து அனைத்ததும் நீதான் .......! --- என்னவளே என்னவளே எங்கிருந்தாய் ---
  18. விழியால் காதல் கடிதம் ....... ! 😍
  19. குறைந்த ஓட்டங்கள் சென்னை என்று யாராவது போட்டிருக்கிறீர்களா?
  20. இதுக்கு பெயர் ஜெயிலோ-போபியா. இந்த நோய் தாக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். நோயாளியை ஊழல் வழக்கில் மத்திய அரசு நிர்வாகம் திரத்தினால் - ஆஸ்பத்தியில் போய் படுக்க வேண்டி வரும். நோயாளியை பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநில அரசு நிர்வாகம்/ஹைகோர்ட் துரத்தினால் சுப்ரீம்கோர்ர்ட்டுக்கு சில பாஜக வக்கீல்கள் சகிதம் போய் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டி வரும் 🤣. ஆனால் தோழன் பாலனுக்கு இதில் ஒருவகை மட்டும்தான் தெரியும். ஏன் என்றால் அவருக்கு செலக்டிவ்-மாலைகண்🤣
  21. ஆஹா இரண்டு விக்கெட் போட்டுது. அடுத்த முட்டை ரெடி! இதுக்கு சென்னை முதியோர் அணி என்றுதான் பெயர் வைக்கவேண்டும்!
  22. KKR நாணயச் சுழற்சியில் வென்று கலைப்பதற்கு முடிவு செய்திருக்கினம். திரிப்பாதி விளையாடுகிறார். யாழ்களத்தின் விருப்பிற்கு எதிராகவே எல்லாம் நடக்குது. ஆதலினால், சென்னை வெல்வது உறுதி.
  23. அவர் நடந்த உண்மை சம்பவங்களை தான் சொல்கிறார். கடவுள் மறுப்பு உட்பட அனைத்து திருகு தாளங்களும் தமிழர்களை பிரித்து திராவிடராக்கி ஆளவே. ஜான் பாண்டியனின் கருத்து : பெரியார் ஒழுக்கமற்றவர். சீமான் சொல்வது சரியே https://www.facebook.com/share/r/16M1iyPkFe/
  24. Published By: DIGITAL DESK 3 09 APR, 2025 | 03:40 PM சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்து அழிந்துபோன ஓநாய் இனத்திற்கு விஞ்ஞானிகள் உயிர் கொடுத்துள்ளனர். டையர் ஓநாய் உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டையாடும் திறன்கொண்ட விலங்குகளில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000 - 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், குளோனிங் மற்றும் மரபணு திருத்தம் தொழில்நுட்பங்களை (cloning and gene-editing technology)பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் விஞ்ஞானிகள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். கோலஸ்ஸால் பயோசயின்சஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது. உலகில் அழிந்து போன உயிரினம் ஒன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஏனைய அழிந்துபோன உயிரினங்களையும் கூட நாம் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அறிவியல் துறையில் இது மிக முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது. எப்படி சாத்தியம்? இதற்காக விஞ்ஞானிகள் குழு அழிந்துபோன டையர் ஓநாய் புதைபடிவங்களிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் பல் மற்றும் இடாஹோவிலிருந்து 72,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டிஎன்ஏவை விஞ்ஞானிகள் பிரித்து எடுத்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த மரபணு சிதையாமல் பத்திரமாக இருந்துள்ளது. இதனால் அந்த டிஎன்ஏவை எடுத்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர். ஓநாய் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்டோடெலியல் செல்களை (EPCs) பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர். இந்த செல்கள் டையர் ஓநாய் வகைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டு, அணுக்கரு நீக்கப்பட்ட சாம்பல் ஓநாய் முட்டைகளில் அவை பொருத்தப்பட்டன. பின்னர் அந்த கருக்கள் நாய்களுக்கு மாற்றப்பட்டன. அந்த நாய் தான் இப்போது மூன்று ஆரோக்கியமான டையர் ஓநாய் குட்டிகளான ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி ஆகியவற்றை ஈன்றுள்ளது. இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இது வெறும் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் மேலும் பல விலங்குகளுக்கு இதுபோல உயிர் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211592
  25. இந்த அபாயத்தை உணர்ந்து தான் அங்கே ஒருவர் தமிழ்நாட்டில் இந்திய தேசியம் வளர்கின்றது என்று நிகழ்த்து காட்டிய அன்பு இளவல் அண்ணாமலை என்றும் உலகில் தமிழை வளர்க்கின்ற பாரத பிரதமர் என்றும் புகழாரம் பாடுகின்றார் .
  26. தாராளமாக வெளிநாட்டினர் சொத்து வைத்திருக்கலாம். நாம் வீடோ நிலமோ வாங்கும்போது இருமடங்கு வரி செலுத்தியே வாங்கவேண்டும். மற்றப்படி ஒன்றும் இல்லை. நான் விசாரித்துவிட்டுத்தான் வாங்கினேன்.
  27. இருக்கிற சொத்தை விக்கலாம். ஆனால் அந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள். Non resident கணக்கு தொடங்க வேணும். இல்லாட்டி நகை வாங்கலாம். அங்கேயே செலவழிக்கலாம்.
  28. தமிழ் தேசியம் பேசும் தமிழ் நாட்டில் மாநில சுயாட்சிக்கு இவ்வளவு மதிப்பா?மனசு பொறுக்குதில்லை ..தமிழன் மாநில சுயாட்சியில் அதிகாரங்களை அனுபவிப்பதா....நான் சிறிலங்கா தமிழனாக வாழும் பொழுது இவர்கள் எழுது மாநில சுயாட்சிக்கு எதிராக கருத்து....வரும் காலத்தில் இதனால் பெரிய ஆபத்து இந்தியா தேசியத்திற்கு ஏற்பட போகின்றது..என மோடிக்கு தந்தி அடிக்க வேண்டும்.
  29. வாரம் செய்தறி, வழி நடந்தறி, தோழமை கூடியறி என்பார்கள். அனுபவமே சிறந்த ஆசிரியர். இனி ஊரிலை வசிக்கிற எண்ணம் இருந்தால்; எதற்கும் அவசரப்படாமல் நன்றாக விசாரித்து அறிந்து வேலைக்கு ஆட்களை அமர்த்துங்கள், பழகுங்கள். பழையவர்களை பகைமை பாராட்டாமல் விலத்தி நடவுங்கள். உங்களை ஏமாற்றியவர்கள் உங்களுடன் நட்பாக இருப்பவர்களை உங்களுக்கு எதிராக திருப்புவார்கள். கவனம்!
  30. நானும் சென்னையை தெரிவு செய்துள்ளேன். ஆனால் சென்னை அணியில் அதிக ஓட்டங்கள் பெற்ற ருத்துராஜ் இனி விளையாடமாட்டார். மீண்டும் எனக்கு சோதனை. ஆனால் தோனி இனி அணித்தலைவர் . சென்னை தொடர் வெற்றிகளை குவிக்குமா?
  31. இப்பவும் லோகம் நம்பிக் கொண்டிருக்கோ. நீங்கள் என்னைக் கரைசேக்கிறதில் மும்முரமா இருந்ததால, இதைக் கோட்டை விட்டிட்டியல் போல. இப்ப பாருங்கோ அவர்களின் பாய்ச்சலை. படிச்சுப் படிச்சுச் சொன்னேனே. கேட்டியலா கேட்டியலா கேட்டியலா
  32. மார்ச் 30 இல் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் Tushar Deshpand வீசிய பந்து முழங்கையில்( unprotected elbow) பட்டதால் வலியுடன் ருத்துராஜ் விளையாடி 63 ஓட்டங்கள் பெற்றார். இதனால் பிறகு வந்த போட்டி ஒன்றில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என செய்திகள் வந்தது. பிறகு டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக வலியுடன் விளையாடினார். பிறகு எக்ஸ்ரே(X ray), எம் ஆர் ஐ ( MRI scan) எடுத்து பார்க்கும் போது முழங்கை எழுப்பில் சிறிய முறிவு (fracture in his elbow in the radial neck) ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவ்வருடம் ஐபிஎல்லில் ருத்துராஜ் அவர்கள் தொடர்ந்து விளையாடமாட்டார். இதனால் தோனி அணித்தலைவர் ஆகிறார். ( 2022 இல் சிலபோட்டிகளில் ஜடேஜா தலைமை வகித்தார். பெரும்பாலான போட்டிகள் தோல்வியில் முடிவடைந்தன.) ருத்துராஜின் இடத்தில் இன்று யார் விளையாடபோகிறார்? மறுபடியும் ராகுல் திருப்பதியா? ராகுல் திருப்பதி 2024 ஐபிஎல்லில் SRH அணியில் 3 வது இடத்தில் துடுப்பாடினார் . அதில் சிறப்பாக விளையாடினார். ஆனால் சென்னை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடினார். அதில் பெரிதாக அடிக்கவில்லை.
  33. இதை கூறியவர் அறிஞர் அண்ணா. அண்ணா கூறியதாக நேரடியாக கூறாமல் அவர் காலத்தில் இருந்து நாம் கூறுகிறோம் என்று அதை கூறியது தான் என்பது போல் கூறியுள்ளார்.
  34. சிறிமாவோ காலத்தில் பாணுக்குக் கூப்பன் காட்டை அடுக்கி வைத்து விட்டுக் காவல் இருந்த நாங்கள் தன்னிறைவு இன்மையும் இறக்குமதித் தடையும் தான் காரணம் தன்னிறைவு இல்லாவிட்டால் இறக்குமதி கட்டாயம் தேவை ட்ரம்பின் வரிக் கொள்கையால் அமெரிக்க துரைமார் குளித்துவிட்டு மாத்த ஜட்டி இல்லாமல் போட்டதையே காய போட்டுக் காவல் இருக்க வேண்டி வரப்போகின்றது 😂😇
  35. இல்லை என நினைக்கிறேன். அனைவரும் 12 புள்ளியில் நின்றாலும் கடைசியாக சேர்ந்த போட்டியாளர் என்பதால் நாந்தான் கீழே நிற்பேன்? அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்தால்…. கோஷானின் நிலை👇🤣🤣🤣
  36. ஐபிஎல் 2025 இன் 24வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ற்றினதும் இறுதியில் வந்த ரிம் டேவிட்டினதும் அதிரடி ஆட்டங்களைத் தவிர மற்றைய வீரர்கள் வேகமாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களையே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் மூன்று வீரர்களும் மிகவும் குறைந்த ஓட்டங்களுடன் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் தோல்விக்கான அபாயம் இருந்தது. எனினும் கேஎல் ராகுலின் ஆட்டமிழக்காது பெற்ற 93 ஓட்டங்களுடனும் ட் ரிஸ்ரன் ஸ்ரப்ஸின் வேகமான 38 ஓட்டங்களுடனும் 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு கோரஸ் கூட்டத்தில் இருந்து சற்று மேலே முன்னேறியுள்ளார் 😁
  37. புத்தி உள்ள மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
  38. அரசியலை விஞ்சி விட்டது இந்த ஐ பி எல் எனும் சூதாட்டம் 🤣
  39. மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு . ......! 😁
  40. இது மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றவாளி சொன்ன “சார்” ஆளுனர் ரவிதான் என மறைமுகமாக ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார் டாக்டர் காந்தராஜ். பார்ப்போம் ரவி களி தின்னும் காலம் கூட வரலாம்.
  41. சீமான் இப்படியான வழக்கை நிச்சயம் வித்தியாசமாகத் தான் கையாண்டிருப்பார். 1. வழக்கைப் போட்டிருக்க மாட்டார். 2. பின்கதவால் ஆளுனரிடம் டீல் பேசி, ஏதாவது செய்ய முயன்றிருப்பார். 3. ஆளுனர் அதை எதிர்த்து வழக்குப் போட்டிருப்பார். 4. நீதி மன்றம் அழைத்தால் போகாமல், ஊர் ஊராக சுற்றித் திரிவார். 5. அழைப்பாணையை வாங்காமையால் அவர்கள் கதவில் ஒட்டினால் "தூள் தூளாகக் கிழித்து" சீமான் குழு ஆணையை வாசிக்க முற்படும்😂. 6. பிறகு வழக்கைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் போவார், யாராவது பிரபல வட இந்திய வழக்கறிஞர்கள் உதவுவர்! 7. கேஸ் ஓவர்! Trivia: இதே போல நடந்து கொள்ளும் இன்னொரு பிரபலம் மேற்குலகில் இருக்கிறார், யார் சொல்லுங்கோ பார்க்கலாம்😂?
  42. இது எல்லாம் ஒரு சாதனையா? நம்ம அண்ணன் ஒரு கூட்டத்தில் கூறினார், தான் முதலமைச்சராக வந்த பின்னர் ஆளுநர் மசோதாவுக்கு கையெழுத்து போடவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை பூட்டி திறப்பை தலையணைக்கு கீழ் வைத்து தூங்கி விடுவாராம். ஆளுநர் அதற்கு பயந்து கையெழுத்து போட்ட பின்னரே திறந்து அவரை வெளியே போக விடுவாராம். அந்த அறிவார்ந்த ஆலோசனையை கேட்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வென்றது ஒரு சாதனையா? 😁
  43. ஒருபக்கம் சிங்களவருக்கு ஆதரவு... இன்னொரு பக்கம் இப்படி ஒரு அறிக்கை... பொய் பித்தலாட்டம் என்டு நசல் வேலை எல்லாவற்றிலும் சிறந்த அமைப்பு தான் ctc.
  44. 'தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்' - 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஏப்ரல் 2025, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அந்த வகையில், ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. "10 மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. நீண்ட காலமாக மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல. ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை." என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதம் என்ன? வழக்கு விசாரணையின் போது, மாநில அரசின் சார்பில் வாதாடிய ராகேஷ் திவேதி சில விஷயங்களை முன்வைத்தார். "மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ள விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்றினால் அதை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆனால், மாநில பட்டியலில் உள்ளவற்றுக்காக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் அனைத்தையும் ஆராய்ந்து மசோதா நிறைவேற்றப்படுவதாகக் கூறிய ராகேஷ் திவேதி, "ஆளுநர் நிராகரிக்க வேண்டும் என்பதற்காக மசோதா அனுப்பி வைக்கப்படுவதில்லை. ஆனால், எந்த விளக்கமும் கொடுக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல" என வாதிட்டார். "மாநில அமைச்சரவையின் அறிவுரைகளின் படியே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்" எனவும் தமிழ்நாடு அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அப்போது நீதிபதிகள், "ஆளுநர் விளக்கம் அளிக்காமல் திருப்பி அனுப்பினால் அவர் மனதில் என்ன உள்ளது என எப்படி அறிந்து கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்பினர். மேலும், 2023 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்ட பிறகு தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் ஆளுநரிடம் உள்ளதா? ஒப்புதல் அளிக்க முடியாது என அவர் எப்போது உணர்ந்தார்? ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா என்று நீதிபதிகள் கேட்டனர். ஆளுநர் தரப்பு வாதங்கள் என்ன? ஆளுநர் சார்பாக வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, "அனைத்து சூழ்நிலைகளிலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்றார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது என நான்கு அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளதாகவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 'மாநில அரசின் மசோதாக்களில் சில முரண்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் அரசும் ஆளுநரும் இணைந்து முடிவெடுக்கும் வகையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்' எனவும் ஆளுநர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு ஆளுநரை மாநில அரசு கேட்கலாமே தவிர, இது எந்த வகையிலும் மாநில உரிமைகளைப் பறிப்பது அல்ல எனவும் ஆளுநர் தரப்பில் வாதிடப்பட்டது. "சட்டவிதிகளுக்கு எதிராக இருந்தது" துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஆளுநர் தரப்பு, துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் நடைமுறை, மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக வாதிட்டது. அதேநேரம், மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக மாநில அரசின் நடவடிக்கை இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "அரசுக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். மசோதா விவகாரம் தொடர்பாக ஆளுநர் முட்டுக்கட்டை போட முடியாது" எனத் தெரிவித்தனர். ஆனால், ஆளுநர் தரப்போ, "மசோதாவை திருப்பி அனுப்பினாலோ அல்லது நிராகரித்தாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக் காட்ட வேண்டும் என்ற அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், அதைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதாக இல்லை" என ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் தீர்ப்பை வழங்கிய போது உச்ச நீதிமன்ற நீதிபதி பர்டிவாலா கூறுகையில், "தன்னிச்சையான அதிகாரம் (absolute veto) என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநருக்கு மசோதா அனுப்பப்படும் போது, அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்." என தெரிவித்தார். "ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை. மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. பிரிவு 200-ன் கீழ் தன்னிச்சையான அதிகாரம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது. மாநில சட்டமன்றத்தால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் போது அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளது. இரண்டாவதாக அனுப்பப்பட்ட மசோதா முதலில் அனுப்பியதிலிருந்து வேறுபடும் போதுதான் இதற்கு விதிவிலக்கு உள்ளது. மசோதாக்களை நிறுத்தி வைக்கும் போதோ அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் போதோ ஆளுநர் அம்மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், ஆளுநர் அதுகுறித்து அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்." என்று நீதிபதி பர்டிவாலா குறிப்பிட்டார். "ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பது பொது விதியாக உள்ளது. (இந்திய அரசு சட்டம்) 1935-ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு விருப்புரிமையும் அரசியலமைப்பை செயல்படுத்தும் போது இல்லாமல் ஆகிறது. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நலன் மற்றும் மாநில அரசின் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் கூறுகிறோம். சட்டப் பிரிவு 200ன்கீழ் அவருக்கு என தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது" என்றார் நீதிபதி பர்டிவாலா. இந்த வழக்கில் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளை நீதிபதி ஜே.டி.பர்டிவாலா மேற்கோள் காட்டியுள்ளார். 'ஓர் அரசியல் அமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துகிறவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாக அமையும்' என்ற வார்த்தைகளை அவர் குறிப்பிட்டுள்ளார். 10 மசோதாக்கள் என்ன? தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. கறுப்பு திங்கள்: இந்திய பங்குச் சந்தையில் ரூ 19 லட்சம் கோடி இழப்பு – இனி என்ன நடக்கும்?7 மணி நேரங்களுக்கு முன்னர் ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல்8 ஏப்ரல் 2025 ஹர்திக் தடாலடியால் மும்பை பக்கம் திரும்பிய ஆட்டத்தை ஒரே ஓவரில் மாற்றிக் காட்டிய சகோதரர் க்ருணால்6 மணி நேரங்களுக்கு முன்னர் வழக்கின் பின்னணி தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்கள் மீது ஆளுநர் மாளிகை எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தது. இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது. இதையடுத்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதற்குப் பிறகு, இதே போன்ற வழக்குகளை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் தொடர்ந்தன. இந்த வழக்குகளை ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ஆளுநர்கள் இதுபோலச் செயல்படுவது, "நெருப்போடு விளையாடுவதைப் போல" என்று 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கு அந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக நவம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நவம்பர் 20ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அந்த மசோதாக்கள் மீண்டும் ஆளுநர் மாளிகையிலேயே இருக்க வேண்டும் எனக் கருதிய தமிழ்நாடு அரசு உடனே சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது. பட மூலாதாரம்,DIPR உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஸ்டாலின் கருத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்ப்பு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும், "ஒரு முறை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆளுநர் தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி வந்தார்." என முதலமைச்சர் குறிப்பிட்டார். உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பைக்குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின்," தமிழ்நாடு அரசின் வாதத்திலிருந்த நியாயத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் எனவும், ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdjlyn82vjzo
  45. “அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை!” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு திருவனந்தபுரம்: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், "மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்துகிறது. அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த தீர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இந்தத் தீர்ப்பு அமைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கேரளா எழுப்பிய இதுபோன்ற பிரச்சினைகளின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார். கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது கவனிக்கத்தக்கது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது. முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அல்லது, குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம். சட்டப்பேரவை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும். அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துறைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது. அந்த வகையில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது. 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, எனவே அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம். ஆளுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் சில கருத்துகள்: > ஆளுநர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்ப விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் > அரசியல் நோக்கங்களால் வழிநடத்தப்படாமல், ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும், தத்துவஞானியாகவும் தனது செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் > ஆளுநர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முன்னோடி. அவர் ஒரு ஊக்கியாக இருக்க வேண்டும், தடுப்பவராக இருக்கக்கூடாது. > ஆளுநர்கள் அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும் > ஆளுநர்கள் தங்களது அரசியலமைப்பு பதவிப் பிரமாணத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் > ஆளுநர்கள் தங்கள் நடவடிக்கைகள் மக்களின் அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளதா என்பதை தங்களுக்குத் தாங்களே ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர்களுக்கு காலக்கெடு: ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநர்களிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ஒப்புதலை நிறுத்தி வைத்தால், ஒரு மாதம். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக ஒப்புதலை நிறுத்தி வைத்தால், மூன்று மாதங்கள். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள். ஆளுநர்களால் மறுபரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு. ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை!” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு | Upholds federal system: Kerala CM welcomes SC verdict RN Ravi witholding bills - hindutamil.in
  46. இது தோழி கட்டுவிச்சியிடம் (குறி சொல்பவளிடம்) கூறுவதாக வருகிறது. தலைவியின் காதலை தலைவியின் தாய்க்கும், செவிலித்தாய்க்கும் குறி சொல்லும் அகவன் மகள் மூலமாக மறைமுகமாக எடுத்துரைக்க முனைகிறாள் (தானும் தலைவியின் வயதொத்தவள் ஆதலின் மூத்தோரிடம் நேரடியாகக் கூறக் கொண்ட நாணத்தின் காரணமாக). முன்னர் நான் வேறு ஊடகத்தில் இப்பாடலுக்கு எழுதிய உரையை இத்துடன் படியெடுத்துப் பதிகிறேன் : பாடற் களம் : குறிஞ்சி நிலத்தலைவி தலைவனிடம் கொண்ட காதல் ஏக்கத்தில், மெலிதல் போன்ற உடல் மாற்றங்கள் அவளிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே தாயும் செவிலித் தாயும் கவலையுற்று, குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் அறிய முற்படுகிறார்கள். உடனிருக்கும் தலைவியின் தோழி அக்கட்டுவிச்சியிடம் பாடும் அகவலோசைப் பாடல். குறி சொல்பவளை 'அகவன் மகளே!' என விளிக்கிறாள் தோழி. பாடற் பொருள் : அகவன் மகளே ! அகவன் மகளே ! சங்குமணி(மனவு)யால் தொடுக்கப்பட்டதைப் போன்ற (கோப்பு அன்ன) நல்ல நெடிய கூந்தலையுடைய அகவன் மகளே ! பாடலைப் பாடுக ! இன்னும் பாடலைப் பாடுக ! அவரது நல்ல நெடுங்குன்றம் பற்றிப் பாடிய பாடலைப் பாடுக ! பின் குறிப்பு : (1) சங்குமணி போல் வெண்மையான கூந்தல் என்றதன் மூலம், குறி சொல்பவள் வயதில் மூத்தவள் என்று அறிகிறோம். (2) தோழியைப் பொறுத்தமட்டில் தான் சொல்லத் தயங்குகிற தலைவியின் காதற் செய்தி, குறி சொல்பவள் மூலம் தலைவியின் தாயிடமும் செவிலித்தாயிடமும் சென்றடைய வேண்டும் என நினைக்கிறாள். கட்டுவிச்சி வழக்கம் போல் குறிஞ்சித் தலைவன் சேயோனின் நெடுங்குன்றச் சிறப்பினைப் பாடியிருப்பாள். அவள் குறி அறிந்து நம் தலைவனின் நெடுங்குன்றத்தைப் பாடியதைப் போல, தோழி நாடகமாடுகிறாள், "முன்னர் பாடிய 'அவரது' குன்றம் பற்றிப் பாடு". இதன் மூலம் 'அவர்' பற்றிய குறிப்பைத் தாய்க்கும் செவிலிக்கும் தர முயற்சிக்கிறாள் தோழி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.