Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19109
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7044
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3049
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/07/25 in all areas

  1. இப்படியான அரசியல் கலந்த மடை மாற்றல்களால் பல பிரச்சினைகளுக்கன தீர்வுகளை விட்டு வெகுதூரம் விலகிப் போயிருக்கிறோம். வடக்கின் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் சில சமயம் நிற்காமல் போய் தமிழர்கள் பலியான போதும் "இது அரசின் திட்டமிட்ட இன அழிப்பு" என்று வாதிட்டவர்கள் இருக்கிறார்கள். போக்கு வரத்து விதிகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் படி மக்களை ஊக்குவிப்பதே தீர்வு என்று இருக்கும் போது, "இல்லை, அரசு பாதுகாப்பான கேற் போட வேண்டும்" என்று வாதிடுவோர் இருக்கிறார்கள். இலங்கை முழுவதும் இருக்கும் ரயில் கடவைகளில் கதவு போட்டு, திறந்து மூட ஆள் கூலிக்கு வைப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று யோசிக்க மாட்டார்கள். அதே போலத் தான் இதுவும். சிங்கள இராணுவம் போதை வஸ்து விற்பதும், ஊழல் காவல் துறை காணாதது போல இருப்பதும் உண்மையாக இருக்கலாம். அப்படி இருந்தால் கூட, நாம் தான் எங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள் என்று பார்த்து, போதைக்கு அடிமையானால் காலம் கடக்க முதல் சிகிச்சையும் வழங்க வேண்டும். இவையிரண்டையும் தூர வைத்து விட்டு, "ஐயோ சிங்களம் சதி செய்யுது" என்றால் என்ன பயன்? சிங்களம் உடனே வெட்கப் பட்டு நிறுத்தி விடுமா😂?
  2. விசாரணயின் பின்பே எதையும் சொல்ல முடியும் என்பது சரியே. ஆனால் தலையோடு பொலிஸ் நிலையம் போய் கொலையை ஒப்பு கொண்டதால் - கொலையை இன்னார், இன்ன காரணதுக்காக செய்தார் என்பது வெள்ளிடமலை ஆகவே அந்த கொலையை கண்டிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். அந்த இளைஞர் இப்படி போட்டோக்களை அனுப்பி சீண்டி இருந்தால் கொலையில் அவரின் பங்கும் உள்ளது. ஆனால் அவர் கொலையாளியை கொலை செய் என நேரடியாக தூண்டியிராத விடத்து, அவர் வழக்கில் ஒரு சாட்சியே ஒழிய குற்றவாளி அல்ல. நீங்கள் கூறியது போல் அவருக்கு அறிவுரை செய்ய மட்டுமே முடியும். வாசித்த சம்பவங்கள் உண்மையானல் - திருமணம் முடித்து விட்டு கொழும்பில் தனியாக போய் இருந்த கணவன் கணவனிடம் மணவிலக்கு பெறாமல் அவர்களை விட வயது குறைந்த இளைஞரிடம் உறவு வைத்து, கருவையும் உருவாக்கி கொண்ட மனைவி அப்படி ஒரு உறவில் இருந்தது மட்டும் அல்லாமல் கணவனுக்கே போட்டோ அனுப்பி சீண்டிய காதலன் இவர்கள் யாருமே சுத்தம் இல்லை. ஆனால் கணவன் பல நாட்களாக திட்டமிட்டு கொலை செய்தது இதை வேறு கட்டத்துக்கு கொண்டு போய்விட்டது. ஒரு நல்ல நண்பன் இருந்து - அவனிடம் மனம் விட்டு பேசி இருந்தால் கூட “தூக்கி போட்டு விட்டு, உன் வாழ்க்கையை பார்” என அவன் சொல்லி இருந்தால் கொலையை தடுத்திருக்கலாம். ஆனால் சமூகமே “வெட்டுடா, கொல்லுடா, உன் மானத்தை மீள பெறுடா” என பினூட்டம் இடுகிறதெனில் அந்த சமூகத்தில் இப்படி ஒரு அறிவுரை கணவனுக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் குறைவு. பிகு இங்கே பலர் சொல்வது போல இந்த மனைவி முழு அப்பாவியாகவும் இருக்கலாம். இவை எல்லாம் கணவனின் கட்டுகதைதாகவும் இருக்கலாம்.
  3. இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது. மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால் - இவரின் தன்மானம் பாதிக்கப்பட்டதல்லவா? மனைவியை கொலை செய்து அந்த தன்மானத்துக்கு ஏற்பட்ட அழுக்கை, மனைவியின் ரத்தத்தால் கழுவி நீக்கி உள்ளாராம். இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது. அல்பேனியாவில் இரத்த- சண்டை blood feud என பரம்பரை பரம்பரையாக மாறி மாறி கொல்லுவார்கள். ஒரு குடும்பத்தின் உறுப்பினரை மறு குடும்பம் கொன்றதால் அந்த அகெளரவத்தை போக்க, மறு குடும்ப ஆணில் ஒருவரை கொல்வது. இப்படி சங்கிலி போல் மாறி மாறி கொல்வது. இதை நடைமுறை செய்ய அங்கே கானூன் எனும் மரபுவழி சட்டம் கூட உள்ளது. மாபியாங்கள், காங்குகள் மாறி மாறி கொல்வது கூட இப்படி ஒரு அடிப்படையில்தான். இப்படி ஒரு தனிநபர் கொல்லுவது அவரின் மனநிலை சம்பந்த பட்ட விடயம் என கருதி கடந்து போனாலும், இதை சமூகமாக பெருமளவில் ஆதரிக்கும் போக்கு - அந்த சமூகம் தாலின்பானிய படுத்தபடுகிறது என்பதன் அறிகுறியே.
  4. இது மிகவும் தவறான அபாயகரமான கருத்து, ஆணோ பெண்ணோ திருமண ஒப்பந்தத்தை மீறும் போது உரிய சட்ட நடவடிக்கையோ அல்ல விவாகாரத்தையோ பெற்று அவரவர் வாழ்க்கையை வாழ முயல வேண்டும். இதில் சிலருக்கு மனக்காயங்கள், பொருளாதார சங்கடங்கள் ஏற்படும் ஆனால் அதற்கு ஒருவரது உயிரை பறிப்பது பெரும் குற்றம் மற்றும் யாருக்கும் எவ்வித பயனும் ஏற்படப்போவதும் இல்லை. அப்பெண்ணின் பக்க உண்மைகளோ, நியாயமோ இனி தெரியப்போவதில்லை, உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கும் இம்மாதிரியான குற்றநடவடிக்கைகளுக்கு என்றும் ஆதவளிக்ககூடாது மாறாக கண்டிக்கப்படவேண்டும்.
  5. பெற்றோர்கள் வெளியே செல்லும் பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. அன்று போல் இல்லாமல் இன்றைய காலத்து பிள்ளைகள் மொடேர்னாக,புத்திசாலிகளாக இருக்கின்றார்கள்.பிள்ளைகள் போதைப்பொருள் பாவிக்கின்றார்களா என்பதை கண்டு பிடிப்பது மிக மிக கடினம். அவர்கள் தங்கள் படுக்கை அறையிலும்,படிப்பு மேசையிலும் பாவிக்கக்கூடியதுதான் இன்றைய போதைப்பொருட்கள். புகையும் வராது போத்தில் சத்தமும் வராது.இனிப்பு வகைகள்,குளிசை வகைகளை போன்று போதை பொருட்கள் வந்து விட்டது.எவ்வித அசுமாத்தங்களும் இல்லாமல் போதை பாவிக்கலாம்.😂 ஜேர்மனியில் எனது நண்பனின் மகன் தன் படுக்கையறையில் அளவிற்கதிகமாக போதை பொருள் உட்கொண்டு......படுக்கையிலேயே வாந்தியெடுத்து காலமாகி விட்டார். அதன் பின்னர்தான் பெற்றோருக்கு தங்கள் பிள்ளை போதை பாவிப்பது தெரிய வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருப்பது கைத்தொலைபேசிகள். அதில் இரகசிய சைகள் மூலம் தங்கள் போதை பொருள் வியாபாரத்தை செவ்வனே செய்கின்றார்கள். இந்த போதை பொருள் விற்பனையை காவல் துறையால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும்.அவர்கள் நேர்மையாக இருந்து செயல்பட வேண்டும். மற்றும் படி இன்றைய இலங்கை அரசியல்வாதிகளுக்கும்/ அரசிற்கும் இதற்கெல்லாம் நேரமில்லை.☹️ உன்ரை வேலையை பாத்துக்கொண்டு போவியா எண்ட பீலிங்கில் இருக்கிறார்கள். 🤣
  6. பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமல்ல. பாடசாலை வாசலில் போதைப்பொருள் விற்பதைத் தடுக்க எல்லோரும் நடவடிக்கை எடுக்கலாம். இதில் காவல்துறை, தமிழ் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என்று எல்லொரும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
  7. போதை மாத்திரைகள் என்றால் இவை fentanyl மாத்திரைகளா......... அழிந்தது முழுநாடும். இவை பவுடர் அல்லது ஹெரோயினை விட 50 மடங்கு வீரியமானவை. இதை பல நாடுகள் இன்று உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். சீனாவே பெருமளவில் இவற்றை உற்பத்தி செய்கின்றது. சிரியா செய்து கொண்டிருந்தது. அமெரிக்காவிலும் இது ஒரு பெரும் பிரச்சனை. சமீபத்தில் கண்மூடித்தனமாக அமெரிக்கா கனடாவை இந்த விடயத்தில் குற்றம் சாட்டியது. இது இலங்கை அரசையே மீறிய ஒன்று. அமெரிக்காவில் இது அமெரிக்க அரசையே மீறிய ஒன்று. இந்த விடயங்களில் அவரவர்களே அவரவர் குடும்பங்களுக்கு பொறுப்பும், காவலும். அந்த நாட்களில் கஞ்சா, கறுப்பு அல்லது அபின், பவுடர் அல்லது ஹெரோயின்........... இப்படியானவற்றை இலங்கை அரசோ அல்லது சிங்கள மக்களோ நாட்டுக்குள் கடத்தி வரவில்லை. அவை வேறு வழிகளிலேயே நாட்டுக்குள் வந்தன. இங்கு இருக்கும் பலர் இவற்றை உங்களின் வாழ்க்கைகளில் ஒரு தடவை கூட கண்டிருக்கமாட்டீர்கள். ஆனாலும் அவை வந்து போய்க் கொண்டிருந்தன.
  8. எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் வந்ததில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு.
  9. யார் போதைப்பொருள் விற்கிறார்கள் என்பது அநேகமானவர்களுக்குத் தெரியும். எங்கே எப்படி விற்கிறார்கள் என்பதும் தெரியும். சிங்களத்தின் திட்டமிடலாக இருக்கலாம், போதைப்பொருள் இறக்குமதியை மறைமுகமாக ஆதரிப்பது சிங்களமாக இருக்கலாம். ஆனால் உள்ளூரில் வினையோகம் செய்வது தமிழர்கள். தமிழ் அரசியல் வாதிகள் பலர் இந்த முக்கிய பிரச்சனையாகிய போதைப்பொருளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
  10. சீனாவின் EV சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய BYD விலைக் குறைப்பு! BYD பல மொடல்களின் விலையைக் குறைத்து சீனாவில் மற்றொரு மின்சார வாகன விலைப் போரைத் தூண்டியுள்ளது. இதனால், சீனாவில் மின்சார வாகன உற்பத்தியாளர்களின் பங்குகள் சரிந்தன. உலகின் மிகப்பெரிய புதிய ஆற்றல் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் (NEV), பல மொடல்களில் 10-30% வரை விலைகளைக் குறைத்துள்ளதாக cnevpost அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மலிவு விலையில் கிடைக்கும் BYD சீகல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் போன்ற மொடல்களுக்கு, இப்போது குறிப்பிட்ட காலத்திற்கு $A7,736க்கும் குறைவான விலையில் விலை தொடங்குகிறது. அதாவது அதன் வழக்கமான தொடக்க விலையான சுமார் $A9,670 இலிருந்து கிட்டத்தட்ட $A1,934 விலைக் குறைப்பு. சீனா உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாகும். சீன மின்சார வாகன உற்பத்தியாளர்கள் பல சந்தைகளில் போட்டியிட அனுமதிக்கப்படாததால், இது மிகப்பெரிய மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மின்சார வாகன சந்தையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433421
  11. யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை. அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது. நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது. அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம். முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர். அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள். பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை. எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் - கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர். இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர். ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன். ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன். குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி. நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம். அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது. https://www.virakesari.lk/article/216581
  12. Published By: DIGITAL DESK 2 07 JUN, 2025 | 02:58 PM உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் வெள்ளிக்கிழமை (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், 1315 மீற்றர் நீளத்தைக் கொண்டது. நில அதிர்வுகளையும், அதிக காற்று அழுத்தங்களையும் தாங்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் இப்பாலத்தின் வழியாக பயணிக்கக்கூடியதாகும். இந்தப் பெருமைமிகு புதிய பாலம், ஜெர்மனியின் லியோன்ஹார்ட் ஆண்ட்ரா & பார்ட்னர் மற்றும் வியன்னா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216860
  13. நான் எவரையும் நம்பவில்லை இது பைத்தியக்காரத்தனமான கோரமான கொலை. ஆனால் இங்கே நீங்கள் தீர்ப்பு வழங்கும் போது எனக்கெளும் கேள்விகளை மட்டுமே வைத்தேன். மற்றும் படி தீர்ப்பு எப்பொழுதும் கொலைக்கு சார்பாக இராது. இதன் உண்மையான தரவுகளும் வெளியே வராது. எனவே எல்லாம் லாம்.....??? என்பதுடன் முடிவுறும்.
  14. ரசோதரன், உங்களின் இந்த வரிகளை வாசிக்கும் போது, எழுபதுகளின் பிற்பகுதியில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அவருக்கு என்னைவிட இருபது வயது அதிகம். வாழ்க்கையில் ஒருமுறையாவது அபின் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கிருந்தது. "உமக்கு கனக்க ஆட்களைத் தெரியும்தானே, கொஞ்சம் எடுத்துத் தாருமன்" என்று என்னைக் காணும் போதெல்லாம் கேட்பார். நீண்ட நாட்களாக அவர் நச்சரித்துக் கொண்டிருந்ததால், ஒரு நாள் அவருக்கு அது கிடைக்க ஏற்பாடு செய்தேன். "இலந்தைப் பழம் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக எடுத்து விடாதீர்கள்" என்ற எச்சரிப்புடன் தான் அவருக்கு அது கொடுக்கப்பட்டது. மனுஷன் நல்ல திடகாத்திரமான பேர்வழி. அன்று அவர் வீட்டில் பங்கு இறைச்சிக் கறி. சொன்ன மாதிரியே, இலந்தைப் பழ அளவிலான அபினை மதிய உணவுக்கு முன் எடுத்துக் கொண்டார். அவருக்கு எந்தவித மாற்றமும் தெரியவில்லை. "அபின்னு ஏதோ லேகியத்தைத் தந்து ஏமாத்திட்டான்" என்று அவரது மனைவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாராம். மனுஷன் அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இன்னொரு இலந்தைப் பழ அளவிலானதை விழுங்கிக் கொண்டார். அங்கேதான் பிரச்சனைகள் ஆரம்பமானது. "காத்தில மிதக்குற மாதிரி இருக்கு... விழப்போறேன்... அழுத்திப் பிடிங்கோ... தலையெல்லாம் சுத்துது. வேர்க்குது, தொண்டை வறண்டு போச்சு" என்று சத்தம் போட ஆரம்பித்தார். அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரது கை கால்களைப் பிடித்துக் கொண்டார்கள். மூத்த மகன் இரண்டு செவ்விழநீர் வெட்டிக் கொடுக்க, அதை மனுஷன் ‘மடக் மடக்’ என்று குடித்தார். இப்பொழுது இன்னும் அந்தரத்தில் வேகமாக பறப்பது போன்ற பிரமை ஏற்பட, மனுஷன் வீட்டையே கலவரப் பூமியாக மாற்றி விட்டிருந்தார். இவ்வளவு அமளிகளுக்கு மத்தியிலும், "என்னைக் கொள்ளுறதுக்குத்தான் இதைத் தந்திருக்கிறான், ராஸ்கல்!" என்றும் சொல்லிக் கொண்டாராம். அன்று சாராயக் கடை இருந்தது. கள்ளுத் தவறணை இருந்தது. கசிப்பு, கஞ்சா, அபின் ஆகியவையும் இருந்தன. ஆனாலும் அவை, தம்பாட்டில் சிலருடன் மட்டுமே இருந்தன. காவல்துறை எதுவுமே தெரியாதது போல் கண்களை மூடிக் கொண்டு தங்களது பிழைப்பைப் பார்த்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு எங்கே சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன?
  15. அந்த பெண் தவறு செய்தாரா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல. கணவனின் வாக்குமூலத்தின் பிரகாரம், அந்த பெண் செய்தது ஒரு தவறு என்றால், கணவன் செய்தது கொடூர குற்றச்செயல். (Crime) அந்த கொடூர க்கொலையை இனத்தின் கூட்டு உளவியல் கொண்டாடும் மனநிலை கேவலமானது என்பதே இங்கு முக்கியமானது இறந்த பின்னர் தலையை வெட்டி சென்ற கொடூர கொலை பெருமளவு மக்களால் கொண்டாடப்படுகிறது என்பதும் அந்த கொலையை செய்தவன் கதாநாயகனாக புகழப்படுவது என்பதும் ஒரு சைக்கோ மனநிலை. அந்த சமூகத்தில் வளர்ந்துவரும் குழந்தைகள் கொடூரக் கொலைகளை ஒரு முன்மாதிரியாக பார்கக தொடங்குவர். தலைவர் இருந்திருந்தால் எதை செய்திருப்பாரோ அதை அந்த வீரத்தமிழன் செய்து தமிழரின் வீரத்தை மானத்தை காப்பாற்றி உள்ளார் என்பதான பல பதிவுகள் சமூக வலைத்தளமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. இது எமது இனத்திற்கே அவமானம் இல்லையா? அதற்கு பல லைக்குகள் வேறை. இந்த கொலையை கண்டிபவர்களை நோக்கி உனது மனைவியும் இவளைப் போன்ற வே … தானே என்று அவர்களது குரல்களை அடக்கும் யுக்தி எவ்வளவு வக்கிரமானது. இதை ஒரிருவர் மட்டுமல செய்தால் கடந்து போகலாம். ஆனால் இவ்வாறானவர்களே எமது மக்களின் சமூக வலைதளங்களில் பெரும்பான்மையினர். அத்துடன் ஒருவர் தனது முகநூலில் கொலை செய்யப்பட்ட சுவர்ணலதாவின் இறுதிக்கிரிகைகளில் எடுக்கப்பட்ட உடலின் புகைப்படத்தை பகிர்ந்து தனது பிரதேசமான ஆலையடி வேம்பு பிரதேசத்திலும் விரைவில் இப்படியான ஒரு சம்பவம் நிகழவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ( இந்த முகநூல்பதிவின் Screenshot ல் அந்த பெண்ணின் உடலும் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று அவரால் சுட்டிக்காட்டப்பட்ட பெண்கள் பற்றிய சில தனிநபர் விபரங்களும் இருப்பதால் அதை இங்கு இணைப்பது உசிதமல்ல) அடுத்த கொலையை ஆவலுடன் எதிர்பார்ககும் அவருக்கும் பல லைக்குகள் வந்திருந்தன என்றால் இந்த சைக்கோ மனநிலை அதிகளவான எமது மக்களுக்கு இருப்பதானது இவர்களுக்கெல்லாம் சட்டவாக்க அதிகாரம் கிடைத்தால் ஷரியா சட்டம் போன்ற காட்டுமிரண்டி சட்டங்களை உருவாக்குவர் என்பதை காட்டுகிறது.
  16. இப்போ கிடைத்துள்ள பத்திரிகை தகவல் அடிப்படையில், எனது ஊகமானது: கொலையாளி சொன்ன கொலைக்கான சூழமைவு உண்மையாக இருக்க வாய்புகள் உள்ளது. அல்லது அவர் அந்த 21 வயது இளைஞனின் பொய்கதையை கேட்டு மனைவி மேல் சந்தேகம் பட்டும் இருக்கலாம். இங்கே அந்த இளைஞன் ஏன் இவருக்கு அப்படியான மெசேஜ் அனுப்பினார் என்பது மிக முக்கியமான கேள்வி. வழமையாக இப்படியான உறவில் இருக்கும் ஆண்கள் அதை ரகசியமாக வைத்து ஓசியில் இன்பம் அடைந்து விட்டு, வேறு ஒரு பெண்ணை கலியாணம் கட்டி செட்டில் ஆகி விடுவார்கள். அல்லது இந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடி வாழ தலைப்படுவார்கள். இவை இரெண்டும் இல்லாமல் இந்த இளைஞன் கணவருக்கே போட்டோவை அனுப்பி, அத்தோடு வயிற்றில் உள்ள சிசுவும் தனது என்பதாக சொல்லியதாக தெரிகிறது. ஏன் ? தன் ஆசைக்கு இணங்காத இந்த அப்பாவி பெண் மேல் பழி போடுவதற்காக இருக்கலாம் அல்லவா? ஆகவே எதையும் தீரவிசாரிக்காமல் சொல்ல முடியாது.
  17. நல்லகாலம் , பாலம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் கட்டபட்டிருப்பது சிறப்பு . ..........! 😁
  18. எட்டாவது திரை - தெய்வீகன் அடைமழை பொழிவது எல்லாத் திரைகளிலும் தெரிந்தது. ஒரு சில துளிகள் கமராக்களின் கண்களில் தெறிந்து விழுந்து வீங்கிப் பின் வடிந்தன. நகரத்தின் வாகன நெரிசல் பெரும்பாலும் அத்தனை திரைகளிலும் நிறைந்திருந்தது. எனக்கருகிலிருந்த தொலைத்தொடர்பு ரேடியோ கருவண்டு போல அவ்வப்போது இரைந்து முனகியது. பாதுகாப்பு அதிகாரிகளின் குரல்கள், அந்த ரேடியோவில் விழுவதும் ஓய்வதுமாயிருந்தன. களத்திலிருந்து உத்தியோகத்தர்கள் அறிவித்த சங்கேதக் குரல் வழியான செய்திகளுக்குப் பதில் கொடுத்தேன். அதனை பதிவேட்டில் நேர விவரத்தோடு எழுதினேன். “Spring Street Security vehicle moving” கட்டுப்பாட்டு அறையிலுள்ள பெருந்திரைக்கு மேலுள்ள மணிக்கூட்டில் சரியாக மாலை ஐந்து மணி காண்பித்தது. முன்னைய இரவுப் பணியின் சோம்பலை பகல் தூக்கம் ஓரளவு துடைத்தெடுத்திருந்தாலும், மிதமான அசதி உடம்பில் இன்னும் மீதமிருந்தது. கட்டுப்பாட்டு அறைக்குள் வருவதற்குச் சற்று முன்னர், தயாரித்த சூடான தேனீர், ஆவியை எந்தியபடி மேசையில் வீற்றிருந்து உற்சாகமளித்தது. மெல்பேர்ன் நகரின் கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாலுள்ள அத்தனை கமராக்களும் காட்சிகளின் துரிதத்தை எனது கண்களுக்குள் வார்த்தபடியிருந்தன. கமரா 1 – ஜொலிமென்ற் ரயில் நிலைய வாயில் கமரா 2 – புல்மென் ஹோட்டல் வாயில் கமரா 3 - ஸ்பிறிங்க வீதி (தெற்கு நுழைவாயில்) கமரா 4 – திறைசேரிப்பூங்கா நுழைவாயில் கமரா 5 – திறைசேரிப்பூங்கா விருந்தினர் மேடை கமரா 6 – திறைசேரிப்பூங்கா நிகழ்வரங்கு கமரா 7 – ட்ராம் தரிப்பிடம் - இலக்கம் 174 மெல்பேர்ன் பெருநகரின் பாதுகாப்பிற்காகப் பல்லாயிரக்கணக்கான கமராக்கள், ஒவ்வொரு மூலையிலும் பொருத்தப்பட்டிருந்தாலும், நகர் மையத்திலுள்ள ‘அக்மி’ மண்டபத்தின் கட்டுப்பாட்டு அறையில் எட்டுக் கமராக்களின் வழியாக, கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியிலுள்ள பகுதியின் வெளிக்கள நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான மெல்பேர்ன் நகர் கவுன்ஸிலின் பிரதான உத்தியோகத்தர்களில் ஒருவனாக நான் பணியாற்றி வந்தேன். என் முன்னாலிருக்கும் இந்த எண்-திரைகள் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் சுற்றாடலில் பொருத்தப்பட்டிருக்கும் கமராக்களின் வழியான காட்சிகளை நேரடியாகத் தருபவை. நகரின் மத்திய பிரதான தெருக்கள், அங்காடிகளுடன் ஒப்பிடும்போது நெரிசல் மிக்கவை இல்லாவிட்டாலும், இந்தக் கமராக்கள் ஒவ்வொரு நொடியும் புதிய காட்சிகளை திரைக்கு அனுப்பிக்கொண்டிருப்பவை. மெல்பேர்ன் எனும் பெரு நகரின் ஒரு துண்டை, இந்தக் கமராக்களின் வழியாகக் காவல் காக்கும் நான், இருளுக்குள் ஒளி மேயும் பசு. வாழ்வின் அசதியான காலங்கள் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்த நாட்களில் இந்த வேலையில் இணைந்தேன். பதினைந்து வருடங்களை நிறைவுசெய்துவிட்டேன். திரைகளுடன் நானும் என்னுடன் இத்திரைகளும் பேசுகின்ற முடிவுறாப் பயணமாய் இந்தப் பணி ஆண்டுக் கணக்கில் விரிந்து பரந்தது. பின் அந்திப்பொழுதில் நகர் கலையும் மணித்துளிகளை நரைவிழுந்த இந்தத் திரைகள் ஆக்ரோஷமாகக் காண்பிக்கும். இந்தக் கமராக்களின் கண்களையும் அவற்றின் களைப்பையும்கூட நான் அறிவேன். இந்தப் பெருந்திரையின் முன்னால் இரவெனும் இனிய புலர்வுக்காகத் தினமும் காத்திருப்பேன். தவிர்க்கப்பட்டத் தெருக்களில் தரித்து நிற்கும் வாகனங்களை அகற்றும்படி களத்தில் பணிசெய்யும் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்வேன். காட்சிகளில் ஏதாவது புதிராய் நிகழ்ந்தால், அவற்றை எழுதிவைப்பேன். அவற்றின் தன்மை குறித்து மேலதிகாரிகளிடம் தகவல் சொல்வேன். இரவுச் சோதனைகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் தகவல்களை எழுதிவைப்பேன். களத்திலுள்ள பணியாளர்கள் தொடர்ச்சியாக ரேடியோ மூலம் எனக்கு அனுப்புகின்ற தகவல்களைக் குறிப்பதும், தேவையேற்படும்போது பதிலளிப்பதும், அவர்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு நகர்த்தும் அறிவுறுத்தல்களை அனுப்புவதுமாக - ஒரு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொண்டு அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் அரூப அடையாளம் நான். கட்டடக் காடுகளுக்கு இடையில் பூத்திருக்கும் இந்தப் பெருநகரின் ஒவ்வொரு இரவும் புதிய இரவே. அவை முன்னைய இரவோடு ஒத்திருப்பதில்லை. இந்த இருளின் பெரு நடனம் மந்தகாசமானது. அடர் இருளில் ஒளித்திவலைகளாய் இடர்படும் மனிதர்களின் அழகும் வித்தியாசமானது. திரையில் காணும் அவர்களது அவசரமற்ற அசைவுகளையும் நிதானத்தையும் வியப்பேன். இருளுக்கு அவர்கள் அழிக்கும் மதிப்பையும் இருளால் அவர்கள் அடையும் அச்சத்தையும் கண்டு ரசிப்பேன். திறைசேரிப்பூங்காவில் ஓங்கி நிற்கும் ஒலிவ் மரங்களின் அசைவும், வீதி விளக்குகளின் அசையாமையும், நேரம் தவறாத ரயில் - ட்ராம் வண்டிகள் என நகரில் இடர்படும் வாகனங்கள் என்று சகல காட்சிகளும் என்னைச் சலிப்பின்றித் தாலாட்டுபவை. திரை ஒளியில் பூக்கின்ற என் விழிகள் இரண்டும் ஒவ்வொரு இரவையும் பத்திரமாய் ஏந்தும். பகல் பொழுதில் தூங்கும். மனிதர்கள் எனக்கு எப்போதும் திரையில் மாத்திரம் தோன்றும் உறவுடையவர்கள். என் தனிமையான வாழ்வுக்குத் தூரமானவர்கள். வீட்டிலிருந்து காரில் கிளம்பும்போதும் மனிதர்கள் கண்ணாடிக்கு வெளியில் தெரிபவர்கள். அவர்களுக்கான எனது பெறுமதி அவர்களது உருவங்கள் மாத்திரமே. இரவுப் பணியை ஆரம்பிக்கும்போது மாத்திரம், பகல்பணியை முடித்து வெளியேறும் ஹரால்ட்டைச் சந்திப்பேன். அவனைப் பார்க்கும்போது எனக்கு விநோதமாக இருக்கும். நான் திரைகளில் பார்க்கும் மனிதர்களுக்கு சற்று விநோதமானவனாக, பெரிய மூக்கும் வீங்கிய காதுகளும் உடையவன் அவன். அவனது கண்கள் மிகவும் அகன்றவை. அவன் அருகில் நிற்கும்போது சிலவேளைகளில் அச்சமாகவுமிருக்கும். இவன் ஏன் கமராக்களில் தெரிபவர்களைப்போல இயல்பானவனாக இல்லை என்றெண்ணுவதுண்டு. வாரத்தில் ஆறு நாட்கள் இரவுப்பணி செய்யும் ஒருவனுக்கும் இந்த மானிட ஆராய்ச்சி தேவையற்றது என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன். ஆனால், எனது இருளில் இதழ் விரிக்கும் ஏழு கமராக்களும் எனக்கு ஏழு வகையான உலகைப் படைக்க வல்லவை. இந்த அறை எனக்கு ஒரு கருந்தடாகம் போன்றது. என் முன்னால் மலர்ந்திருப்பவை ஏழு கரு மலர்கள். ஒரு கமரா மாத்திரம் கரிய திரை. அது இயங்குவதில்லையா, அல்லது அதன் கண்களின் முன்னால் ஏதாவது நிரந்தர மறைப்பா? கடந்த பதினைந்து வருடங்களில் எத்தனையோ தடவைகள் எனது மேலாளரிடம் கேட்டுவிட்டேன். கவலைப்படவேண்டியதில்லை என்பதுதான் பதிலாகக் கிடைத்தது. அந்த எட்டம் திரை என் இரவுக்கு அப்பாலுள்ள ஏதோ மர்மமானது என்று விட்டுவிட்டேன். 2017 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் திகதி. எனது பதினைந்து வருட நிறைவில் - தொடர் இரவுப் பணியைப் பாராட்டி – கட்டாயப் பணி ஓய்வு அறிவிக்கப்பட்டது. அது எனது உடல்நலத்தைக் கருத்திற்கொண்ட மேலிடத்தின் முடிவு. பணி செய்யும்போது வழங்கப்பட்ட அதேயளவு பணம் ஓய்வூதியமாக அறிவிக்கப்பட்டது. எனது பணியின் நேர்த்தியும் நேர்மையும் மெச்சப்பட்டது. ஆனால் என் உலகினால் அதனை ஓய்வாக ஏற்கமுடியவில்லை. நான் ஒரு புதிய இருளுக்குப் புலம்பெயர்ந்தேன். அங்கேயும் விழித்திருந்தேன். புத்தகங்கள் படித்து எனக்குள் புதிய திரைகளைத் திறந்தேன். என் முன்னால் கமராக்களற்ற இரவு எனக்கு அச்சத்தைத் தந்தது. நிகரில் நான் கண்ட இரவின் கருமை எரிச்சலாயிருந்தது. என் வீட்டின் ஜன்னலின் வழி தெரிந்த புதிய இருளை நாள்தோறும் காணப் பயின்றேன். இரவெல்லாம் அதில் புதிய வாசம் கிளர்ந்தது. என் படுக்கை அறையைத் தழுவிச் சரிந்திருக்கும் தைல மரக்கிளைகளின் அசைவுகளை கட்டிலில் உட்கார்ந்து பார்த்தேன். அவை திறைசேரிப்பூங்காவிலுள்ள கமராக்களில் தெரிந்த சிறிய கிளைகளைவிட மிகப்பெரியவை. விசித்திரமான ஒலிகளை எழுப்பக்கூடியவை. போகப்போக, பின் அந்திப்பொழுதில் தூக்கம்விட்டு எழுந்தபோது, நான் பல நாட்களாகக் காணாத ஜொலிமென்ற் ரயிலின் நினைவுகளால் தொந்தரவானேன். ஸ்பிறிங்க வீதியில் நேரம் தவறாது ஊர்ந்து வரும் ட்ராம் வண்டியின் முகத்தைக் காணாது துயருறத் தொடங்கினேன். சிறிய கை - கால்களை வீசியெறிந்து நகரிலோடும் மனிதர்களைக் காணாது எனது நினைவுகள் கொந்தளிக்கத் தொடங்கின.. அனைத்தும் என் முன்னால் திரண்ட காட்சிகளாய் கூடி நில்லாதது பெரும் களைப்பை ஏற்படுத்தியது. இரவு எனக்குள் கோபங்களால் கூடுகட்டத்தொடங்கியது. இரவின் வாசத்தை நுகர்வதற்காக, நடுநிசி தாண்டிய பிறகு வீட்டிலிருந்து இறங்கி வெளி வீதியில் கருமை அடர்ந்த பாதையில் நடைபோனேன். காலடியில் மிதிபட்ட சருகுகளின் சத்தம் முதலில் அச்சமூட்டின. மரங்களின் அசைவும் அதில் வளைந்து வீழ்ந்த காற்றும் அரியண்டமாயிருந்தது. இரவுக்குருவியொன்று தீடீரென்று வெட்டி வெட்டிக் கத்திக்கொண்டு தலைக்கு மேல் பறந்துபோனது. உடல் நடுங்கிப்போனேன். தூரத்தில அடர்ந்த வெளிச்சமும் மின்கம்ப ஒளிவிளக்குகளும் தெரிந்தன. ஜீரணிக்க மறுத்த ஒளிப்பந்துகள் பெருந்திரளாய் நெஞ்சை அழுத்தின. மீண்டும் வீட்டை நோக்கி நடந்தேன். வழி காட்டும் ஏழு திசைகளுமற்ற ஒரு வெட்டவெளியில் நான் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன். அன்றிரவு கண்ட அடர் வெளிச்சம் வெளியே செல்வதற்கு பயங்கர அச்சத்தைத் தந்தது. அந்த நினைவிலிருந்து மீண்ட ஒருவாரத்தின் பிறகு, பின்னிரவுப்பொழுதில் மீண்டும் நடைபோனபோது அவளைக் கண்டேன். எனது வீட்டுக்கு அடுத்த தெருவிலிருந்து பிரியும் சிறு ஒழுங்கையிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் வெளி விறாந்தையில் தற்செயலாக அவள் எதிர்ப்பட்டாள். அவள் மெல்லிய வெளிச்சத்தில் ஒல்லியான உடலை அசைத்து அசைத்து தன் நினைவை நெட்டுருக்கும் இசையோடு நடனமாடிக்கொண்டிருந்தாள். அவளை எனக்குக் காண்பித்த சிறு வெளிச்சம் அந்த வீட்டில் எங்கிருந்து ஒளிர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், அது அவளுக்கென அளவாக உருவான ஒளியின் ஒத்தடம். நான் பணியிலிருந்து ஓய்வடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ஐந்தாவது கமராவில் ஒரு நாளிரவு திறைசேரி விருந்தினர் மேடையில் கண்ட அழகிய பெண்ணின் முகத்தை ஒத்திருந்தது அவள் சாயல். அன்று அவள் அந்த விருந்தினர் மேடையில் தனியாக இருந்தாள். மங்கிய ஒளியில் அங்குமிங்கும் மெதுவாக நடந்தாள். நீண்ட யோசனையில் ஆழ்ந்தவளாகத் தெரிந்தாள். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. அன்றிரவு நான் வேறு எந்தத் திரையையும் பார்க்காமல், அவள் மீது லயித்திருந்தேன். ஒரேயொரு திரையில் மாத்திரம் ஒளிர்ந்துகொண்டிருந்த அவளது உருவம், அதுவரை நானறியாத புது ரேகைபோல் ஒருகணம் எனக்குள் பதிந்தது. திடீரென அவள் மறைந்துபோனாள். என் கண்கள் அவசர அவசரமாக மிகுதி அனைத்துத் திரைகளைப் பாய்ந்து பாய்ந்து தேடின. எங்கேயும் காணவில்லை. எட்டாவது கருந்திரைக்குள் வீழ்ந்துவிட்டாளா? எப்படிப் பார்ப்பது? இதயம் வேகமாக அடித்தது. அவள் மறைந்துவிட்டாள். அங்கு மறைந்தவள் இங்கெப்படித் தோன்றினாள். வீட்டிற்கு மிக அருகில் சென்றேன். அவள் தன்னை மறந்து தொடர்ந்து நடனமாடியபடியே இருந்தாள். ஒளி விரல் தீண்டிய இருளின் இதழ்கள்போல நாணிச் சரிந்தாள். பின் எழுந்தாள். அவள் அசைவில் இசை அசைந்தது. மெல்லிய விரல்கள் சூடிய கைகளைத் தலைக்கு மேல் அசைத்து அசைத்து, அபிநயத்தோடு ஆடினாள். மெல்ல மெல்ல அவ்விசை எனக்குள்ளும் கேட்கத் தொடங்கியது. கரகரப்பில்லாமல் தொடர்ச்சியாக இசைக்கும் மெல்லிய ஒலி. இரவின் கருமையை ஒளியெனும் சிறு வாளால் ஓசையின்றிச் சீவுகின்ற அசாத்தியமான ஒலி. ரேடியோக்களின் இரைச்சலினால் துருப்பிடித்திருந்த எனது செவித்திரைகளை ஊடுருவிய அவ்வொலி, பாறைகளில் வழுக்கி விழுகின்ற சிறு நதியாய் எனக்குள் நிறைந்து குளிர்ந்தது. திடீரென அங்கு ஒரு இருள் வீழ்ந்தது. எதையும் காணமுடியவில்லை. மேலே அழகிய கருஞ்சுடராய் அசைந்துகொண்டிருந்தவளைக் காணவில்லை. அவளின் பின்னால் நாணத்தோடு ஒளிர்ந்துகொண்டிருந்த மெல்லிய வெளிச்சம் அணைந்துவிட்டது. இசையும் அஸ்தமித்துவிட்டது. என்னைச் சூழ இருட்டிருந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த இருட்டு எங்கேயும் வியாபித்திருந்தது. அவள் எங்கே? அவளை இரண்டாவது தடவையும் தவறவிட்டுவிட்டேனா? மறுபடியும் எட்டாம் திரைக்குள் அவள் வீழ்ந்துவிட்டாளா? எனக்காக ஒரு கணம் - ஒரேயொரு கணம் - இவ்வுலகு ஒரு துளி வெளிச்சம் தாராதா? அண்ணாந்து பார்த்தபோது, அருகிலிருந்த கம்பத்தில் ஒரு கமரா என்னையே உற்றுநோக்கியபடியிருந்தது. "கலைமுகம்” இதழின் 2025 - ஜனவரி - மார்ச் பதிப்பில் இச் சிறுகதை வெளியானது. https://www.theivigan.co/post/10017?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR57gaY84h7_qVGGUphN678Y6GsJ__YhKIGRLn4xgNEJTGXD-yZ4PyPX31Ck4w_aem_mctltdFu3dl1rkZqRBtwng
  19. பெற்றோர்கள் தங்கள் பிளளைகளைக் கண்காணிக்க வேண்டும். எங்கு போகிறார்கள் யார்யாருடன் சேர்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து போதை மருந்துகளினனால் ஏற்படு; தீமைகளை எடுத்துச்சொல்லிப்பக்குவப்படுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய விளக்கங்கள் வகுப்புகள்தொடர்சியாக நடத்தப்படல்வேண்டும்.
  20. த்ரிஷா இருக்கா! அந்த நம்பிக்கையில்தான் படம் பார்க்கப் போகின்றேன்🥰
  21. vஅறை அந்த மாதிரி எல்லா "நெட்ஒர்க் உம ஓபன் ஆகும்". சிறி சிரி என்று சிரித்தேன்
  22. ஒரு இளைஞன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான். அது ஒரு பழைய புத்தகக் கடை. ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு. பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு... தலை நிறையா வெள்ளை முடி. சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு.. இளைஞனுக்கு ஒரே பயம். இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான். கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி. இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான். “பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு. இளைஞன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான். தாத்தா அவனை கோபமா பார்த்தார். “இந்த புத்தகம் பயங்கரமானது. இதோட விலை ரூ. #500 ஆனா இந்த புத்தகத்தை வாங்கி படிச்சவங்கள பேய்கள் சும்மா விடாது. இதைப் படிச்ச இரண்டு பேர் இருதயம் வெடிச்சு செத்துட்டாங்க. நீ இந்த புத்தகத்தைப் படி. ஆனா ஒரு நிபந்தனை. கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காத”. இளைஞன் புத்தகத்துடன் வீடு திரும்பினான். நிசப்தமான இரவு. 11 மணி. இளைஞன் புத்தகம் முழுவதும் படித்து விட்டான். கடைசி பக்கம் மட்டும் படிக்கவில்லை. மேஜையில் அந்த புத்தகம் காற்றில் ஒவ்வொரு பக்கமாக புரண்டது. கடைசி பக்கம் படிக்கலாமா வேண்டாமா என்ற பயம் கலந்த ஆசை அவனுக்கு. விதி அவனையும் விடவில்லை. காற்று புத்தகத்தை புரட்டி கடைசி பக்கத்தை நெருங்கியது. இளைஞனுக்கு பயத்தால் வியர்த்தது. கடைசி பக்கத்தை படித்த இளைஞனின் இருதயம் வெடித்தது அதில் இருந்த ஒரு வரியால்....... . ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ????? ? ? ? ? ? ? விலை ரூ.#15
  23. செல்வம் அருளானந்தம்- நேர்காணல் திராவிடமணி மே 25, 2025 செல்வம் அருளானந்தம் எனும் இயற்பெயரையுடைய இவர் ‘காலம் செல்வம்’ என்றே இன்று எல்லோராலும் அழைக்கப்பெறுகின்றார். இவர் 1953ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாள் யாழ்ப்பாணம் சில்லாலையில் சவேரிமுத்து, திரேசம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தமது தொடக்கக்கல்வியை சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், பின்பு புனித ஹென்றி கல்லூரியிலும் முடித்தார். மேலும், பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் உள்ள செயின்ட் அகஸ்டின் பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பிரெஞ்சு மொழியையும் கற்றுத் தேர்ந்தார். பிற்பாடு கனடாவில், டொரொண்டோவில் உள்ள செயின்ட் டேனியல் கல்லூரியில் நர்சிங் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் தேவராணி என்பரை மணந்தார். இவர்களுக்கு நிரூபன், என்ற மகனும், செந்தூரி, கஸ்தூரி என இரண்டு மகள்களும் உள்ளனர். மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தார். இலங்கையிலிருந்து பாரிஸிக்குப் புலம்பெயர்ந்த இவர் எட்டு ஆண்டுகளுக்குப் பிற்பாடு அங்கிருந்து கனாவிற்குப் புலம்பெயர்ந்தார். 32 ஆண்டுகளாக கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் தம் குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார். இவர் பல்வேறு இலக்கிய அமைப்புகளுக்கு அடித்தளமிட்டதோடு அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். பாரிஸிலிருந்து கனடாவிற்குக் குடிபெயர்ந்த பொழுது அங்கு மான்றியல் எனும் நகரத்தில் வாழ்ந்தார். அங்கே தமிழ்ஒளி எனும் அமைப்பில் வேலைசெய்தார். அங்கிருந்த காலத்தில் “பார்வை“ எனும் இலக்கிய இதழைத் 1987 இல் தொடங்கி நடத்தினார். அதில் 17 இதழ்கள் வெளிவந்துள்ளன. அங்கிருந்து டொரொண்டோ நகரத்திற்குக் குடிபெயர்ந்த சூழலில் இவ்விதழ் 1989இல் நின்றுபோனது. டொரொண்டோவில் “தேடல்” எனும் இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்த நிலையில், 1990இல் “காலம்” எனும் இலக்கிய இதழை டொரொண்டோவில் தொடங்கி நடத்திக்கொண்டு இருக்கிறார். இது 30 ஆண்டுகளுக்கு மேலாக வெகுசிறப்பாக இயங்கிவருகின்றது. 60க்கு மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஈழம், தமிழக புலம்பெயர்ந்த படைப்பாளர்கள் தமது ஆக்கங்களைப் படைத்தளித்து வருகின்றனர். காலம் இதழ் வெளியிட்டுள்ள தமிழ் படைப்பாளர்கள் பற்றிய சிறப்பிதழ்கள் குறிப்பிடத்தக்கவை. கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு இதழிலும் இவர் தொடர்ந்து எழுதிவருகின்றார். எஸ் பொன்னுதுரை, ஜெயகாந்தன், ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றோரை தமது இலக்கிய முன்னோடிகளாகக் கொண்டுள்ள செல்வம் அவர்கள், தொடக்க காலத்தில் கவிதைகளையே விரும்பி எழுதினார். பாரிஸில் வாழந்த பொழுது இவரது நண்பர் உமாகாந்தன் நடத்திய “தமிழ்முரசு” இதழில்தான் முதன்முதலில் கவிதைகளை எழுதத்தொடங்கினார். ”கட்டிடக் காட்டிற்குள்“ எனும் கவிதைத் தொகுப்பையும், தமது புலம்பெயர் வாழ்வை மையப்பொருளாகாக் கொண்டு ”எழுதித் தீரா பக்கங்கள்” (தமிழினி, காலச்சுவடு வெளியீடு), சொற்களில் சூழலும் உலகம்” (காலச்சுவடு வெளியீடு) என்ற இரு தன்வரலாற்று நூல்களைப் படைதளித்துள்ளார். மேலும் “பனிவிழும் பனைவனம்” (காலச்சுவடு வெளியீடு) எனும் நூலையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களிலும் அதன் வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு உடைய இவர். கடந்த 30 ஆண்டுகளாக “வாழும் தமிழர்“ எனும் புத்தகக்கண்காட்சியை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடத்திவருகின்றார். மேலும், இலங்கை, இந்தியா எனப் பல்வேறு நாடுகளில் வாழும் இலக்கிய ஆளுமைகளைக் கொண்டு 300 மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளார். தற்போதும் நடத்திக்கொண்டும் இருக்கிறார். சிறுவயது முதலே யாழப்பாண கத்தோலிக்க மரபு கூத்துகளில் மிகுந்த ஈடுபாடு உடைய இவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து தாய்வீடு, காலம் இதழ்களின் சார்பாக ஏழு கூத்துகளை நிகழ்த்தியுள்ளார். “காலம்“ பதிப்பகத்தின் வாயிலாக கிட்டதட்ட 25 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் N.K. மகாலிங்கத்தினுடைய “சிதைவுகள்“, மணிவேலுப்பிள்ளையின் “மொழியினால் அமைந்த வீடு” “போன்ற நூல்கள் மிகவும் பேசப்பட்ட நூல்களாகும் “தேடகம்“ மற்றும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்“ போன்ற அமைப்புகளில் தொடக்க காலம் முதல் உறுப்பினராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். நேர்காணல் தங்கள் படைப்புகளின் ஊற்று எது? அது எவ்வாறு காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கிறது? எனது படைப்புகளின் ஊற்று என்பது உண்மையில் எனது வாழ்க்கையும், அது உணர்த்திய உண்மைகளும்தான். இதில் எனது அன்னையிடமிருந்து பெற்றவையும், கற்றவையும் அதிகம் என்றே நம்புகிறேன். வாழ்க்கை என்பது என்னளவில் உடல் தேவை மற்றும் மகிழ்ச்சி சார்ந்த லௌகீக வாழ்க்கை பற்றியதல்ல. இது பிற மனிதர்களுடனான தொடர்புகளும் உறவுகளும் அவை உணர்த்தியவற்றையுமே வாழ்க்கை என இங்கு குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக எனது அன்னையின் உறவும், அவரது வாழ்க்கைப்பாங்கும் எனக்கும், என் படைப்புகளுக்கும் ஆதாரமாக இருந்திருக்கின்றன. அம்மா மிகச்சிறந்த வாசகி. கிராமம் நன்கறிந்த அம்மானைப் பாடகி. அதில் அதீத ஈடுபாடு கொண்டவர். அம்மானைப் பாடல்களை மனனம் செய்துவைத்திருந்தார்; உணர்ந்து பாடுவார். கிராமத்து எளிய மனிதர்கள், முதின் பருவத்து மாந்தர்கள் பலரையும் குதூகலப்படுத்தும் வகையில் பாடுவார். இவற்றைச் சிறுவயதிலிருந்தே கேட்டு எனக்கு நானே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இது என்னுள்ளே மெல்ல மெல்ல கவிதை புனையும் ஆற்றலை உருவாக்கி இருக்க வேண்டும். இலங்கையில் இருந்தவரை நான் எதுவுமே எழுதவில்லை. நான் பாரிசுக்கு அகதியாக வந்த பிற்பாடு எனக்கு ஏற்பட்ட அலைச்சலும், சில அனுபவங்களும், சில ஆதங்கங்களும் ஒரு கவிஞனாக என்னை இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தின. ஒரு மொழியின் உன்னதம் அல்லது உச்சம் கவிதை என்றே நம்புகிறேன். இப்போது நான் கவிதை எழுதுவதில்லை. காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் பேராற்றல் கவிதைக்கு உண்டு என நம்புகிறேன். “மோகமுள்“ நாவலை வெவ்வேறு வயதுகளில் பல தடவைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது அதில் ஒரு சொல் கூட என் நினைவில் இல்லை. ஆனால் கம்பனின் கவிதைகளையும் இளமையில் படித்திருக்கிறேன். அவை அப்படியே பசுமரத்தாணி போல அப்படியே நிற்கின்றன. இதுதான் கவிதையின் வெற்றி என நான் நினைக்கின்றேன். ”வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைத்துக் கொம்பிழை மானின் பின்போய்க் குலப் பழி கூட்டிக் கொண்டீர் அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயுங்காலை உம்பிழை என்பதல்லால் உலகம்செய் பிழையும் உண்டோ?” இது எங்கள் போராட்டத்துக்கும் பொருத்தமாகவேயுள்ளது. இதுதான் கவிதை மொழியின் சிறப்பு என்று நினைக்கிறேன். சில புலமையாளர்கள் உரைநடை வந்த பின்பு கவிதை தேவையில்லை என்கின்றனர். ஆனால் கவிதைதான் தமிழர்தம் வரலாறு; அதுதான் தமிழர்தம் தொன்மை ; அதுதான் தமிழர்தம் சிறப்பு. தங்கள் படைப்புகளுக்கும் தன்னனுபவங்களுக்கும் இடையே இருக்கும் உறவு, ஊடாட்டம் என்ன? உங்கள் படைப்புகளைத் தன்வரலாறு சார்ந்தவை எனச் சொல்வீர்களா? நீங்கள் சொல்வது சரிதான். தன்னனுபவங்கள்தான் என் படைப்புகள். எனது நாடும், எனது வாழ்வும், எனது சிந்தனையிலும், உணர்விலும் முடிவில்லாத துயர்மிகு அனுபவங்களைத் திணித்துக்கொண்டே இருந்தன; இப்போதும் அது முடியவில்லை. இளைஞர்கள் அரசியலைத் தங்கள் கையில் எடுக்கத்தொடங்கிய காலத்தில் எங்கள் மண்ணில் சிறுவனாய், இளைஞனாய் அலைந்தவன்; கோபமும், வேகமும் நிறைந்த இளைஞர்களுடன் பழகியவன்; பல சம்பவங்களைப் பார்த்தவன். ஆயுத அரசியல் தொடங்கியபோது புதியவர்களாய் மனிதர்கள் வேற்று வடிவங்கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடனான உறவுகள் அவற்றை நான் பார்த்த முறைகள் அவற்றுள் புதைந்து கிடந்த பொய்மைகள், போலிகள், துரோகங்கள் இனப்பற்று போன்ற பலவற்றையும் மிக அருகில் பார்த்தவன். இவைதான் எனது “எழுதித் தீராப் பக்கங்கள்“ என்ற என் முதல் நாவல். இவை என் வரலாற்றின் ஒரு பக்கம்தான். இன்னும் நிறையவே இருக்கிறது என் வாழ்வின் பல நிலைகள் பற்றி எழுதுவதற்கு. என் வரலாறு மூன்று கட்டங்கள் கொண்டது. முதலில் புலம் பெயர்வதற்கு முந்திய கிராமிய வாழ்வு. புலம் பெயர்ந்து தொடக்ககாலத்தில் அச்சத்துடனும், பசியுடனும், அவநம்பிக்கைகளுடனும் ஐரோப்பிய நகரங்களில் அலைந்த வாழ்வு இரண்டாவது வாழ்க்கை. கனடாவில் குடும்பமாகவும் நண்பர்களோடும் காலம் இதழ் சார்ந்த பணிகளோடும் வாழ்வது மூன்றாவது வாழ்வு. தங்கள் படைப்புகளில் பிறரது வாழ்வனுபவங்களின் தாக்கம் எவ்விதம் வசப்படுகிறது? மற்றவர்களுடைய அனுபவங்களை அடியொற்றியும் படைப்புத் தரக்கூடிய ” படைப்பாக்க உணர்வுத் தோழமை” என்ற வகையில் எழுத முயற்சித்திருக்கிறீர்களா? எடுத்துக் காட்டாக பலஸ்தீன மக்கள், இனப்படுகொலைகள், ஆதிகுடிகள், பெண்கள் போன்றோரது அனுபவங்கள்? பிறரது வாழ்வனுபவங்களின் நீட்சி, பல மூலங்களிலிருந்து என்மீது தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. 2000- இல் கனடாவுக்கு வந்து சேர்ந்த நான் அதன்பின் தாயகத்துக்குப் பலதடவைகள் சென்று வருவதுண்டு. அங்கு வாழ்கின்ற உறவினர் , நண்பர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரையும் சந்தித்து உரையாடியுள்ளேன். அவர்களது அனுபவங்கள் பல்வேறு வகையானவை. உள் நாட்டிலேயே பல தடைகள், இடம்பெயர்ந்து, குடும்பங்கள் சிதைந்து, சொந்த கிராமங்களை மறந்து வாழ்பவர்களது அனுபவங்கள் பலவற்றை கேட்டுள்ளேன். மனதில் அதிக சுமையோடு அவை நிறைந்து கிடக்கின்றன. சொந்த கிராமங்கள் பலவற்றில், அக்கிராமத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்கள் அங்கில்லை. கிராமங்களின் பண்பாட்டு முகம் சிதைந்து அங்கொன்று இங்கொன்றுமாக சிலர் வாழ்வது; விரக்தியோடும் பல்வேறு துயர்மிகு அனுபவங்களோடும்; அவநம்பிக்கையோடும் பலர் வாழ்கின்றனர். அவற்றை என் பார்வையில் எழுதியது சிறியதுதான். எனது “பனி விழும் பனைவனம்” நாவல் அத்தகைய ஒருவகை வாழ்வனுபவங்களின் தாக்கம் என்றே கூறவேண்டும். மூன்று தசாப்தங்களாக பல நாட்டு இராணுவத்தினரை எதிர்கொண்ட எளிய மக்கள் உணர்வுகளில் வரட்சியும், கையறுநிலையும் நிறைந்துகிடந்தன. எனது மண், எனது மக்கள், எனது பண்பாட்டு வாழ்க்கை, எனக்குத் தெரிந்த துயரங்கள் என்ற வகையில் அவை கற்பனைகளாவதில்லை. பல இயக்கங்கள் ஒரே இலக்கோடு எனப் போராட்டங்களைத் தொடங்கினாலும் தாய் மண்ணிலும், புலம் பெயர்ந்து தஞ்சமடைந்த நாடுகளின் நகரங்களிலும் அவர்களிடையிலான முரண்பாடுகளும், உட்பகைமையும், இழப்புக்களும் என ஏராளமான கதைகள் சொல்வதற்கு உள்ளன. மனதை முட்டிக் கிடக்கின்றன. பெண்களும், குழந்தைகளும் அங்க வீனர்களான போராளிகளும், தலைவனை இழந்த குடும்பத் தலைவியரும், நீண்ட காலம் வசதிகள் ஏதுமின்றி, வாழ்வை நிலைநிறுத்துவதற்குப் போராடும் குடும்பங்களின் அவநம்பிக்கை நிறைந்த வாழ்க்கையனுபவங்களையும் கேட்டிருக்கிறேன்; அத்தகையவற்றை எழுதும் ஊக்கமும் ஆசைகளும் நிறையவே உள்ளன. கனடாவில் நிரந்தரமாக குடியேறிய பின் இருபது ஆண்டுகளுக்கு முன்பு காலூன்ற முயற்சிகள் மேற்கொண்ட பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளேன். பல பழைய எனது வாழ்விடங்களையும், பழைய நண்பர்கள் சிலரையும் காணும்போதெல்லாம் துயர் நிறைந்த பழைய வாழ்வின் நிகழ்வுகள் வந்து போகும். என்மீதே நான் கழிவிரக்கம் கொள்வதுண்டு. இறந்து போன பல இளைஞர்களையும் அவர்களுடன் பிணைந்திருந்த அக்கால சோகங்களும் நினைவுக்கு வரும். அதிலிருந்து விடுபட சில தினங்கள் ஆகும். காலத்தால் ஆற்ற முடியாத துயரங்களின் கதைக் குவியல்கள் நிறையவே என் மனதில் நிறைந்து கிடக்கின்றன. சிலவற்றை எழுதுகிறேன். எழுதித் தீராதவை ஏராளம் உள்ளன. புலப்பெயர்வால் தங்களது கதை அல்லது பா பொருண்மையில், மொழிநடையில், படிமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? எனக்கு எண்ணங்கள் வரும்போது எழுதுகிறேன். கல்வி கற்ற புலமையாளர்கள் எழுதுவதுபோல அல்லது அரசியல் தலைவர்கள் எழுதுவது போல எழுதுவதற்கான தனி ஏற்பாடுகள் என ஏதுமில்லை. கதைகளின் மொழி என்பது இயல்பாக எழுதும் போது வந்துவிழுகின்ற எனது மக்களது மொழி, நான் மொழி பயின்ற எனது பண்பாட்டுச் சூழலின் மொழி. இயல்பாகவே என்னுடைய உணர்வுகளை, அனுபவங்களைக் கவிதையாக்கும் போது தானாக வந்து விழுகின்ற மொழிதான் எனது கவிதை மொழி. எனது கவிதைக்கான மொழிநடை கூட அவ்வாறுதான் வடிவம் கொள்கிறது. எங்கள் தொல்தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் பண்பாடு சார்ந்த ஆய்வாளர்களது மொழியின் வழியாகவும், இனப்படுகொலை பற்றிய புனைவுகளை எழுதியவர்களது உணர்வு வழியான மொழி வழியாகவும்; உரைநடைகளைப் பல மாதிரிகளில் கற்றிருக்கிறேன். இரசித்து வருகிறேன். எனது முதல் நாவலான எழுதித்தீராப் பக்கங்கள் முழுவதும் செயற்கையானதல்ல. நான் வலிந்தும் தேடிப் பாவித்த சொற்களும் அல்ல. ஒவ்வொரு கதாபாத்திரமும் எங்கள் கழனியில் எப்படிப் பேசினார்களோ அப்படியே உள்வாங்கி எழுதியிருக்கிறேன். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ் இலக்கிய படைப்புகளுக்குத் துணை செய்வதில்லை, வாசிப்பவர்களுக்குப் புரிவதில்லை என்றெல்லாம் 1960 களில் தமிழக இலக்கியவாதிகள் சொல்வதுண்டு. இன்று முத்துலிங்கம், ஷோபாசக்தி, டானியல் போன்றோர்களது எழுத்துக்களும் , புனைவுகளும் தமிழக மக்களாலும், உலகத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனது கதாபாத்திரங்களின் உரைநடையும், பேச்சு மொழியும் விளங்கிக் கொள்ளப்பட்டிருப்பது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. இயன்றளவு எனது கிராமத்து மொழியை வாசிப்பின் வாயிலாக மாற்றியுள்ளேன். அதேபோல் பொருண்மையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு எனது வாழ்க்கை நகர்ந்துள்ளது. இதேபோல வேலைக்குப் புறம்பான சமூகவாழ்க்கை எனது தாய் மண்ணில் முதன்மையாயிருந்தது. கனடா தொழிலை மையப்படுத்திய வாழ்வு. தொழில் பற்றிய சமூக உணர்வு, தனிமனிதனைப் பாதிப்பிலிருந்து விடுவிக்கிறது; இது கனடிய வாழ்வு பிள்ளைகள் மீதான பெற்றோர் கட்டுப்பாடு சமூக பண்பாட்டிலிருந்தது. கனடாவில் பிள்ளைகளின் முடிவுகளுக்கு இணங்குகின்ற பெற்றோராக வாழ்தல் அவசியமாகிவிட்டது. இத்தகைய புலம் பெயர் வாழ்வு கற்பித்துவருகின்ற சமூகப் பண்பாட்டு அசைவுகள் பற்றியதான பொருண்மைகளில் உடன்பாடு எனக்குண்டு. எனது சம்பாசனைகளில், உரையாடல்களில் மாத்திரமன்றி எனது கதைகளிலும் அவற்றைப் பின்பற்றுகிறேன். பா அல்லது கவிதை அல்லது நாவல்களில் ஊடாடும் மனிதர்கள் மாறும்போது, அவர்களது வாழ்வியலுக்குரிய பண்பாட்டுச் சூழல் மாறும் போது நிச்சயமாக பொருண்மை, மொழி நடை, படிமம் என்பவற்றில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று நம்புகிறேன். அனுபவ முதிர்ச்சி பெற்ற அநேக எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த மாற்றங்கள் இயல்பாக நிகழ்வதாக நான் நம்புகிறேன். ஒரு படைப்பாளராய்த் தாங்கள் உணர்ந்த தருணம் எது? எனது முதல் நாவல் “எழுதித்தீராப் பக்கங்கள்“ பல தடவைகள் மறுபதிப்புச் செய்யப்பட்ட போதும், பல நாடுகளில் படைப்பாளர்களின் கலந்துரையாடல்களில் அதுபற்றி சிலாகித்துப் பேசப்பட்ட போதும், மின்னியல் ஊடகங்களில் பலமாதிரி விமர்சனங்கள் அதுபற்றி வந்தபோதும் ஒரு உணர்வு, தன்னம்பிக்கை துளிர்த்தது. புலம் பெயர் இலக்கியம் என்ற அடையாளத்துடன் இலக்கியங்கள் வகையீடு செய்யப்பட்டபோது, அதற்குள் ஒதுங்குகின்ற படைப்பாக பலரும் பேசுகிறபோது தள்ளி நின்று ரசித்தேன். மெல்ல மெல்ல படைப்பாளனாக உணரத் தலைப்பட்டேன். அநேகமான நண்பர்கள் என்னைக் கவிஞர் செல்வம் என்று அழைப்பதை உள் மனதில் அதிகம் ரசிப்பேன். இதே போல கூத்துக்களை எழுதும்போதும், அதற்கான இசைப் பாடல்களைப் பாடும் போதும் கூட அதிக மனநிறைவை நான் பெறுவதுண்டு. ஆனால் ஏராளமான தொழில்நுட்ப ஆற்றல் மிக்கவர்கள் பலரது துணையோடு ஒரு திரைப்பட நடிகர் பெறுகின்ற அங்கீகாரத்துடன் ஒப்பிடும்போது இலக்கியப் படைப்பாளர்கள் பாவம்தான். அறிவும் தர்க்கமும் ஆக்க இலக்கியத்துக்கு ஊறு செய்யலாம். உணர்வே இன்றியமையாதது எனும் கருத்தியலைப் பற்றிய உங்கள். எண்ணம் என்ன? ஆக்க இலக்கியம் என்பதில் அறிவு, தர்க்கம், உணர்வு போன்றன தொடர்பான கருத்தியல் பற்றி ஏராளமான விவாதங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆக்க இலக்கியம் என்பதன் பரப்பு தொடர்ந்து அகலப்படுத்தப்பட்டே வருகிறது. தலித் இலக்கியம், பெண் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், மின்னியல் இலக்கியம் என்றவாறு ஆக்க இலக்கிய வகையீடு விரிந்து செல்கிறது. இதற்கு அதிகம் தர்க்கமும் துணை செய்ததா? ஊறு விளைவித்ததா? என்ற ஒரு கேள்வி எழுகிறது. உணர்வுகள் பற்றி பேசுகிறபோதுதான் கல்விமான்களின் கட்டுரைகளிலிருந்து ஆக்க இலக்கியம் வேறுபடுகிறது. உணர்வுகள்தான் இலக்கியப் படைப்புகளுக்குத் தனியான அடையாளங்களையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளன. வாசகர்களின் வழியாகவே ஆக்க இலக்கியங்கள் கவனத்தையும், கணிப்பையும் பெற்று வருகின்றன. நியதிகள் எதற்கும் அகப்படாமல், மனிதர்கள் தம் போக்கில் வாழ்க்கையில் குதூகலம் நிறைவாகும் நிலைமைகளிலும், துன்பமும், தோல்வியும் மனித வாழ்வைக் கடித்துக் குதறும் போதும் உணர்வுகள்தான் மேற்கிளம்புகின்றன. அதன் வழியாகவே மொழியும் நடத்தைகளும் வடிவம் பெறுகின்றன. படைப்புச் சூழலின் தனித்தன்மை அதிலிருந்துதான் கட்டமைக்கப்படுகிறது. எங்கள் வாழ்வியல் அனுபவங்களும் சூழல்களும் அச்சமும், அவநம்பிக்கையும், ஏக்கமும், வடிந்துவிடாத துயர்களும் நிறைந்ததாகவே இன்றும் காணப்பட்டுவருகின்றன. யுத்த பூமியிலிருந்து அகதியாக புலம் பெயர்ந்த பிறகு கூட தனது சிதைந்துபோன குடும்ப உறவுகளை ஒன்றிணைப்பதற்கும், புதிய சூழலில் கால் ஊன்றுவதிலான தடைகளும், அதற்குமேல் மாற்றங்களுடன் இசைந்து செல்வதிலான செயல்களும் பலமாதிரி உணர்வுகளையே முன்னிறுத்துகின்றன. இந்தப் போக்கில் உணர்வே முதன்மையானது. குறிப்பாகக் கவிதைகளை எழுதும்போது அறிவு பூர்வமானதைப் பின்தள்ளி உணர்வே சொற்களைத் தருகிறது. தர்க்கம் என்பது பிரிக்கமுடியாத உணர்வுகளின் படிமுறை ஒழுங்கும் நியாயமும். அதை உணர்வின் வழி சொல்லும்போது தர்க்க சிந்தனையில்லாவிடில் கவிதை நிற்காது; நிராகரிக்கப்பட்டுவிடும். அறிவையும், தர்க்க அணுகுமுறையையும் மனித உணர்வுகளின் வழியாக எளிமைப்படுத்தலாம் அப்போது அந்தக் கவிதையோ சிறுகதையோ வாசகர்களின் அதிகரித்த கவனவீச்சைப் பெறுகின்றன. சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன், புதுமைப்பித்தன் படைப்புகளில் உணர்வும், அறிவும், தர்க்கமும் பிரிக்கமுடியாமல் பிணைந்துக் கிடப்பதை அவதானிக்கலாம். இதில் எனக்கு உடன்பாடு உண்டு. தர்க்கம் எதுவுமேயில்லாமல் உணர்வுகளின் வழி படைக்கப்படும் ஆக்க இலக்கியம் தன்னை எப்படி நிலைநிறுத்தமுடியும்?. சிலப்பதிகாரத்திலும் கண்ணகி வழக்குரை காதையில் “தேரா மன்னா?“ என்கிறாள். இது உணர்வுதானா? தர்க்கம் தானா? இரண்டுமே இணைந்ததா? சில பேரிலக்கியங்கள் அறிவு தர்க்கம் என்பவற்றைப் பின்தள்ளி உணர்வு வழியாக சம்பவங்களை விரிப்பதாகவேயுள்ளன என்ற ஒரு விமர்சனப் பார்வையும் உண்டு. என் பார்வையில் தர்க்கமும் உரியவாறு உணர்வுகளைச் சுமந்து மனித உரையாடல்களிலும், சமூக நிகழ்வுகளிலும் படைப்பிலக்கிய மொழியாக எப்போது விரிகிறதோ அப்போது ஆக்க இலக்கியங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். உணர்வு முரண்களே இலக்கிய இரசனைகளில் ஆதிக்கம் செலுத்துவுது இயல்பு என்றே உணர்கிறேன். மாக்சிய இலக்கிய பார்வை கொண்டவர்கள் சிலப்பதிகாரத்தைக் கற்பின் மேன்மை பற்றியதாக பார்க்காமல் சத்திரியர், வைஷியர் போட்டியாக அணுகி, அதன்வழி கண்ணகியின் குரலையும், கோபத்தையும் விளக்குவதை இங்குத் தொடர்புபடுத்தலாம். இது அறிவு மற்றும் தர்க்க சிந்தனை சார்ந்த கருத்தியலுக்கு உட்பட்டதாக இளங்கோவடிகள் காவியத்தை அணுகுவதாகும். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் கதாநாயகியின் பேச்சும் செயலும் எத்துணை அறிவு பூர்வமானவை; எத்துணை தர்க்க ரீதியானவை; அதற்காக உணர்வு வழி நின்று பாத்திரங்கள் பேசவில்லையா? இலக்கிய படைப்பாளிகளில் அறிவு நிலைப்பட தர்க்கிப்பதும், அதேசமயம் உணர்வுகளின் வழி சமுதாய பிரச்சினைகளையும் தனிமனித முரண்பாடுகளையும் இரசனைக்குரியதாக வெளிப்படுத்துவதும் நியாயமான ஒன்றே என நம்புகிறேன். இது ஆக்க இலக்கியத்துக்கு ஊறு செய்வதாகாது என்பது எனது உறுதியான கருத்துநிலை. முரண்பாடுள்ள விவாதங்கள் இவை தொடர்பாக விரிவடைந்தால், ஆக்க இலக்கியம் புதிய பாதையைக் கட்டமைக்கமுடியுமல்லவா? தமிழின் சொற்களஞ்சியங்களுக்குள்ளும் சொற்கிடங்குகளுக்குள்ளும் உரிய சொற்களைத் தேடுவதுண்டா? எப்படி? ஆக்க இலக்கியங்களைப் படைக்கின்ற படைப்பாளிகளது வாழிடங்கள் இன்று தமிழகத்துக்கு வெளியே விரிந்துகிடக்கின்றன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் வெளியே பரந்து கிடக்கின்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற பல வேற்றுமொழிப் பேசும் நாடுகளிலிருந்தும் தமிழ் மொழியில் ஆக்க இலக்கியங்களும், பத்திரிகைகளும் வெளிவருகின்றன. எங்கள் இலங்கைத் தமிழர்களது பண்பாட்டுச் சூழலில் பயன்படும் தமிழ்ச் சொற்கள் பல வகைகளில் மாறிவந்துள்ளன. புதியவகை சொற்கள் சரியாகவும் அல்லது சிதைவடைந்த மாதிரியிலும் புனைவுகளில் நிறைந்து வருகின்றன. பிரெஞ்சு, ஜெர்மனிய, போர்த்துக்கீசியச் சொற்கள் அந்தந்த நாடுகளின் சிறுகதைகளில் தமிழ்ச் சொற்கள் போலவே பேச்சுமொழியாகியிருக்கின்றன: தமிழ்மொழி போலாகின்றது. இலங்கையில் கொழும்பு மற்றும் மலை நாடுகளில் வாழ்கின்ற தமிழ்ப் படைப்பாளிகளின் மொழியில், சொற்களஞ்சியங்களில் சிங்களச் சொற்கள் இயல்பாக விரவிக்கிடக்கின்றன. தமிழ்ச் சொற்களஞ்சியங்களுக்குள்ளிருந்தும் உரிய சொற்களை நான் தெரிவு செய்வதுண்டுதான். திருக்குறள், நாலடியார், பைபிள், திருமந்திரம் போன்றவற்றில் நிறைந்துகிடக்கும் எளிய கருத்தாழம் மிக்க தமிழ்ச் சொற்கள் என்னில் அதிக ஆதிக்கம் செலுத்துவதுண்டு. அவை எனது உடன்பாடில்லாமலேயே எனது புனைவுகளில் ஆங்காங்கே வருவதுண்டு. அது நல்லதென்றே எண்ணுகிறேன். வேண்டுமென்றே சொற்களஞ்சியங்களில் சொற்களைத் தேடுவதில் விருப்பமில்லை : உடன்பாடுமில்லை. ஆயுத கலாச்சாரம் வளர்ந்த சூழலில் அநேக புதுவகைச் சொற்களை இயக்கங்கள் கையாண்டு, அச்சூழலில் வாழ்ந்த புதிய தலைமுறையினரின் பிரயோகங்களாகியுள்ளன. அவை எனது புனைவுகளில் வந்திருக்கலாம். அது தவறானதென்று நான் உணர்ந்ததுமில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபடுவோர்க்கானச் சொற்தொகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் உள்ளன. இலக்கியவாதிகளுக்கு அப்படி எதுவும் தேவையில்லை. மக்களின் மொழியும், அவர்களது பயன்பாட்டுச் சொற்களும் எனக்கு எப்போதுமே சொற்களஞ்சியங்களாகவும், சொற்கிடங்குகளாகவும் பயன்படுகின்றன. அதில் நான் நிறைவு காண்கின்றேன். தமிழிலக்கிய படைப்புலகம் இன்று எல்லாக் கண்டங்களின் பல நகரங்களிலும் பரந்து கிடக்கின்றது. எல்லாப் பிரதேச பண்பாட்டின் வழிவந்த பல மொழிச் சொற்கள் தமிழாகி வருகின்றன. எனது வாசிப்பின் வழியாக அவை என் படைப்புகளில் வந்துவிடலாம். படைப்பாளிகள் சமூகத்தின் சூழல்களிலிருந்து வளர்கின்ற தாவரங்கள், பயன்தரு மரங்கள், படைப்பாளிகளுக்குரிய, கதைக்குரிய கருவையும், பாத்திரங்களையும், ஊடாட்டங்களின் தனி இயல்புகளையும் பேசுகின்ற மொழியையும் சூழலிலிருந்துதான் படைப்பாளி பெறுகின்றான். அகதிமுகாமில் வாழ்கின்ற படைப்பாளியின் எழுத்து, நியூயோர்க் பெருநகர நவீன ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் ஒருவனது படைப்பாளிக்குரிய எழுத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதாகவேயிருக்கும். படைப்பாளிகளின் படைப்புகளுக்குரிய கருப்பை சமூகம்தான் இதனால் அவன் கவிதையோ, கதையோ, நாவலோ, புனைகின்றபோது அதிக பொறுப்புணர்வுடன்தானே படைக்கவேண்டும். காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பேராற்றல் நல்ல படைப்புகளுக்கிருக்கிறது. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்லது சேக்ஸ்பியரின் மெர்ச்சன்ட் ஓஃப் வெனிஸ் இன்றும் நிலைக்கிறது; இரசிக்கப்படுகிறது. படைப்பாளியின் கூர்ந்த அவதானங்களும், சமூகசெயற்பாடுகள் பற்றிய தொலைநோக்கும் பொறுப்புணர்ச்சியும் இதற்கு அடிப்படையாகின்றன. சுந்தர ராமசாமியின் ஜே .ஜே யின் குறிப்புக்கள் எத்துணை விவாதங்களை எத்தனை வருடங்கள் நீட்சியுறச் செய்து வருகின்றன. இதில் படைப்பாளிகளின் பொறுப்புணர்ச்சி மிக மிக முக்கியமானதல்லவா? எனது படைப்புக்கள் செல்வச் செருக்கில் வாழ்கின்ற மேட்டுக்குடியினரை மையப்படுத்தியதல்ல. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை உரிமைகள் மறுக்கப்படுகிற இனத்தின் இன்னல்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் பற்றிய புனைவுகளையே செய்து வருகின்றேன். எங்கள் இனத்தின் போராட்ட வரலாறு நேர்மையாக வரலாற்று படைப்பிலக்கியங்களில் பதியப்படவேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும், பொறுப்புணர்ச்சியும் எனக்குண்டு. கடந்த கால சமூக அனுபவங்களும், வரலாறுகள் தானே! படைப்பாளி என்ற வகையில் உங்கள் பொறுப்புணர்வு என்ன? எங்கள் வாழ்விடங்கள்தான் எங்கள் நிகழ்கால மற்றும் எதிர்கால புனைவுகளின் தேவையையும், மரியாதையையும் நிலைநிறுத்தும். இதன்படி எனது “காலம்“ சஞ்சிகையில் பிரசுரத்திற்காகக் கதைகளையோ, கட்டுரைகளையோ, நாவல்களையோ, கவிதைகளையோ தெரிவு செய்யும்போது அதிக சமூகப் பொறுப்புடன் செயற்படுகிறேன். எனது படைப்பு சிறிதானால் என்ன, பெரிதானால் என்ன வாசிக்கவும், விமர்சிக்கவும் கண்டனம் தெரிவிக்கவும் கனடாவிலேயே நல்ல இலக்கியவாதிகள் உள்ளனர். இலக்கிய இதழ்களும் உயிர்ப்புடன் இயங்குகின்றன. அவை என்னை எப்போதுமே பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு எச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில படைப்புகள் மேற்குலகில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. படைப்பாளி இறந்து பல வருடங்களின் பின்பே வாசகருக்குக் கிடைக்கத்தக்கதாக அவை பிரசுரமாகியிருக்கின்றன. இவை சில எச்சரிக்கைகளைத் தருகின்றன. பள்ளிச் சிறுவன் கையெழுத்துப்பிரதியில் எழுதுவதுபோல் நான் எழுதமுடியாது. எழுதக்கூடாது எனத் தெளிவாக இருக்கின்றேன். பலவாறான மாற்றுச் சிந்தனையுடன் பல இயக்கங்கள் போராட்டங்களில் தூய இலட்சியங்களோடு ஈடுபட்டன. அவை பற்றிப் புனைவுகளைப் படைக்கும்போது பொறுப்புணர்வுப் பற்றிய விமர்சனங்கள் மாறுபட்டத் தளங்களிலிருந்து வெளிவந்துள்ளன; நிச்சயம் வெளிவரும். எங்கள் படைப்பிலக்கிய சூழல், கடந்த நான்கு தசாப்தங்களாக ஒடுக்கப்படும் இனம் சார்ந்த வாழ்வியல் பற்றியதாகவேயுள்ளது. இதில் என்னைப் போன்று இச்சூழலிலிருந்து விலகிவிடாமலே வாழ்கின்ற ஒரு எழுத்தாளன் நிச்சயமாக சமூகபொறுப்புடன்தான் எழுதுவான்; செயற்படுவான். உங்கள் படைப்புக்களின் தலைப்புகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இது ஒரு நல்ல கேள்வி. இப்போதுதான் யோசிக்கிறேன். எப்படித்தான் தலைப்புகளைத் தெர்ந்தெடுத்தேன்? என்னுடன் பழகுகின்ற சாதாரண மனிதர்களின் உரையாடல்களிலிருந்துதான் தலைப்புகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இயல்பாக நண்பர்களுடன் படைப்புக்கள், படைப்பாளர் பற்றி உரையாடும்போது சில தொடர்கள் இயல்பாக வெளிப்படும். அவை எனது இதயத்தில் அல்லது மூளையின் எங்கோ ஓரிடத்தில் பதிவாகிவிடுகிறது. உரியபோது அவை என்னை மீறி தானாக வெளியே வந்து விழுந்துவிடுவதுண்டு. திக்குத்தெரியாத காட்டில் அலைகின்ற ஒரு எளிய மனிதனது பயம், உணர்வு, நாதியற்ற நிலை போலவே நான் “கட்டிடக் காடுகள்“ எனும் முதல் கவிதைத்தொகுப்பை வெளியிட்டபோதும் உணர்ந்தேன். உதவியில்லாமல், நம்பிக்கை ஒளி தெரியாமல் சின்னஞ் சிறுவனாக பிரான்சின் நகரங்களில் அலைந்தபோது கட்டிடக்காடுகளுக்குள் அலைகின்ற உணர்வுதான் ஏற்பட்டது. வியப்பும், பயமும், அவநம்பிக்கையும் கட்டிடகாடுகள் என்று பெயர்வைக்க தூண்டின. இப்படித்தான் ஏனைய படைப்புகளுக்குரிய தலைப்புக்களும்; இலக்கியங்களிலிருந்து தலைப்புக்களைத் தேடும் மன ஓட்டமோ, நாட்டமோ எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. எளியவர்களிடமிருந்து பெற்று அவர்களுக்கே சமர்ப்பிக்கும்போது அவர்களது மொழியிலிருந்தே என் தலைப்புக்கள் பிறக்கின்றன. மற்றைய படைப்பாளிகளின் ஆக்கங்களை வாசித்து விட்டு, அட, இதனை நான் எழுதியிருக்கலாமே என ஆதங்கப் பட்டிருக்கிறீர்களா? அப்படியானால் என்ன படைப்பு அது? மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்ல முடியுமா? எந்தவொரு படைப்பாளிக்கும் இத்தகைய ஏக்கம் அல்லது ஆசை அல்லது தன்னிலை ஒப்பீடு இயல்பாக வரக்கூடியதுதானே! வியப்பு மேலிடச் செய்யும் ஆற்றலும் புனைவுகளின் ஒருவகை வெற்றிதான்! புனைவுகளின் கருவோ கையாளப்படுகின்ற சொற்களோ, சொற்களின் ஒட்டுமுறைகளோ, வெளிப்படும் சந்தங்களோ, ஒத்திசைவோ, கையாள்கின்ற உதாரணங்களின் ரசிப்புக்களோ, தாங்கள் கூறுவது போன்ற ஆதங்கத்தை ஏற்படுத்தலாம். எனக்கும் பல தடவைகள் அவ்வாறு ஏற்பட்டதுண்டு. மீண்டும் மீண்டும் வாசிக்கும் துடிப்பை, ஆவலை இத்தகைய ஆக்கங்கள் ஏற்படுத்தலாம் சிலர் சில நூல்களைத் தமக்கென சொந்தமாக வைத்திருக்கும் ஆசையைக்கூட இத்தகைய நினைப்புக்கள் உருவாக்குவதுண்டு. கட்டிளமைப் பருவத்தில் நான் ஜெயகாந்தனின் “உன்னைப்போல் ஒருவன் “ நாவலை வாசித்தேன். அப்போது எனக்குள் எழுந்த உணர்வு “அட என்னைப் பற்றியல்லவா எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் என்று எண்ணி வியப்படைந்தேன். பிற்காலத்தில் ஜெயகாந்தன் படைப்புகள் மீது பெரிய உடன்பாடுகள் வளரவில்லை. ஆனாலும் அவரது உன்னைப் போல் ஒருவனின் படைப்பாக்கத்தில் பல அம்சங்கள் என்மீது பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியிருந்தன என்பது உண்மைதான்.. கதாபாத்திரத்தின் பண்புநலன்கள் மற்றும் மொழிநடை என்ற இரண்டுமே என்மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. என்னை அதிக பாதிப்புக்குள்ளாக்கியவன் கம்பன்தான். அவனது சொல்லுகின்ற மானிட மேம்பாடு சார்ந்த கருத்துக்களும் என்னிடம் இத்தகைய இரசனையையும் வியப்பையும் இன்று வரை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. ”அறையும் ஆடு அரங்கும் மடப்பினைகள் தறையில் சீறிடில் தச்சரும் காய்வரோ இறையும் ஞானம் இலாத என்புன்கவி முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ” இந்தப் பாடலில் கம்பனின் கண்ணோட்டம், பொறாமையற்ற பார்வை அதனுள் புதைந்துகிடக்கும் கருத்தாழம் என்பன வியக்கத்தக்கவை. சுந்தரராமசாமியின் கட்டுரைகளின் தனித்தன்மை என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது. பலர் கற்றுக் கொள்ளக்கூடிய சிறப்புப் பண்புகள் கொண்ட புலமைப்பள்ளியாக அவரைப் பார்க்கிறேன். கட்டுரைகளில் கையாளும். சொற்சிக்கனமும் கருத்துக்களின் தொடர்புகளில் நிறைந்துகிடக்கும் ஒழுங்கும், தர்க்கமும் என்னை அதிகம் ஆட்கொள்வதுண்டு. தளைய சிங்கத்தின் சுய சிந்தனையும், ஏ.ஜே. கனகரட்னாவின் இலக்கிய ஞானமும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏ.ஜே.வை எனது நண்பராகவும், வியக்கத்தக்கச் சிந்தனையாளராகவும், மறக்கமுடியாத மேதையாகவும் உணர்வதுண்டு. இந்த உருவகம் அவரது உரையாடல்களின் வழியாக உருவானதொன்றுதான். முத்துலிங்கம், கவிஞர் சேரன், ஷோபசக்தி போன்றவர்களது எழுத்துகளும், படைப்புகளும் எங்கள் மண்ணின் துயரங்கள், தமிழ் மக்களது துயர் சுமந்த வாழ்வின் அப்பழுக்கற்ற பல மாண்புகள் பற்றியதாக உள்ளமை தனித்தன்மைதான். தமிழ் மக்கள் பற்றியும், பிரச்சினைகள் பற்றியும் ஏராளமானவர்கள் எழுதுகிறார்கள். இன்னும் எழுதவருவார்கள். ஆனால் இவர்கள் தனியான அடையாளங்களைப் பதித்திருக்கின்றார்கள் என்பது என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியமைக்குக் காரணமாகின்றது. எஸ்.பொ. முத்துலிங்கத்தின் படைப்புகள் பற்றி இப்படிச் சொல்கிறார், துன்பம் எனும் நாளில் மகிழ்ச்சி எனும் பூக்களைத் தொடுத்த மாலைதான் என்ற அர்த்தப்பட எழுதியிருந்தார். எனக்கு நெருங்கிய நண்பராயுள்ள எழுத்தாளர் முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் பற்றி இதே உணர்வும், கருத்தும் எனக்குண்டு. புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் அணியொன்று உருவாகிக்கொண்டு வருகிறது. ஆர்வமும், ஆற்றலும் கொண்டவராகவும், எதிர்காலத்தில் இலக்கியம், புனைவுகள் தொடர்பான நம்பிக்கையை விதைப்பவர்களாகவும் அவர்கள் வளர்ந்துவருகிறார்கள் என்பதும் மகிழ்ச்சியானதாகும். https://solvanam.com/2025/05/25/செல்வம்-அருளானந்தம்-நேர/
  24. ஆமாம் அது ஒரு சிறந்த இலக்கம். .......இந்த இலக்கத்தில். மற்ற இலக்களில். எண்களில் இருப்பது போல். பிச்சைகரனுமுண்டு படிப்பு அறிவு இல்லாதவனுமுண்டு ..இது எண்ணின். பிரச்சனை இல்லை மேற்படி நபர்கள் முயற்சி அற்றவர்கள். 9 99=9+9=18=1+8=9 999=9+9+9=27=2+7=9 ... ....எப்போதும் 9 தான் வரும் மற்ற எண்களை கூட்ட. அப்படி வாராது 77=7+7=14=1+4=5. 777=7+7+7=21=2+1 =3. இங்கே 7. வரவில்லை இந்த 9 இலக்கம். பற்றி ஒரு புத்தகமுண்டு
  25. நீங்கள் எப்படி ஒப்பந்தம் எழுதியிருந்தாலும், சிவஞானம் சொல்லியிருக்கிறார், அதாவது தமிழரசுக்கட்சியை இல்லாமல் அழிப்பதற்காக, மட்டந்தட்டுவதற்காக, திட்டமிட்டு தாங்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். கள்ளன் நினைக்கிறது, மற்றவர்களும் தங்களைப்போல் தானென்று. தமிழரசுக்கட்சியை யாரும் வெளியிலிருந்து வந்து அழிக்கத்தேவையில்லை. அவர்களே போதும் அதை அழிப்பதற்கு, பெரும்பாலும் அழித்தே விட்டார்கள். தாங்கள் தான் மக்களின் ஏகோபித்த ஆதரவாய்ப்பெற்ற பெரும்பான்மை கட்சி என்று பீற்றிக்கொண்டு தெரிந்தவர்கள், மக்களால் வெறுத்தொதுக்கப்பட்ட கட்சியின் அலுவலகம் சென்று ஆதரவு தாருங்கள் என்று கெஞ்சியதும், பழம் முற்றி பாலில் விழுந்ததுபோல் டக்கிளஸ் ஒரு கேலிப்புன்னகையோடு, பெருமையாய், அகம்பாவமாய் நின்றதை பார்த்து தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் வெட்கி தலைகுனிந்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. தான் ஏற்கெனவே சொன்னதுதானாம், தமிழ்கட்சிகளோடு இணைந்து செயற்படுவோம் என்று ஆதாரம் வேறு சொல்கிறார். இருக்கட்டும்... அப்போ ஏன் இவ்வளவுகாலமும் இணைந்து செயற்பட முடியவில்லை? ஒருவரை ஒருவர் விமர்சித்து மக்களை ஏமாற்றினார்கள்? அரிய நேந்திரனின் கூட்டத்தில் பேசியவர்கள், ஆதரித்தவர்கள் எல்லோருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியவர்கள், இதற்கு என்ன சொல்லபோகிறார்கள்? பாராளுமன்றத்தேர்தலில் ஒரு விமர்சனம் வைத்தார்கள், அதாவது சில உறுப்பினர் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைந்தவர்கள் அது கிடைக்கவில்லை என்றவுடன் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று. இன்று சிவஞானம் சொல்கிறார், ஆட்சி என்பது பவர், அதிகாரம், பதவி, அரசியல். அது இல்லையென்றால் என்னத்துக்கு வாய் பாத்துக்கொண்டிருப்பதற்கா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்போ சொல்லுங்கள்! யார் பதவியாசை பிடித்தவர்களென்பதை. தனக்குப்பின்னால் தனது பதவிக்கு ஆபத்து இருக்கிறது என்பதையே மறந்து பேசுகிறார். இவர்கள் மக்களுக்காகவா, பதவிக்காகவா அரசியல் செய்கிறார்கள் என்பதை போட்டுடைத்து விட்டார். இனி வருங்காலத்தில் தமிழரசுக்கட்சி மக்களுக்காகவோ அவர்களது இலட்சியத்துக்காகவோ அல்லது அவர்களின் விடிவுக்காகவோ செயற்படாது. மக்களின் தேவைக்காக உழைக்கும் தலைவர்கள், கட்சியை உருவாக்கி செயற்படவேண்டும். ஆயனை அழித்தார்கள், துணைபோனார்கள், மக்களை அடிமைகளாக்குவதற்கு. அதனால் பல ஓநாய்கள் உருவாகி அவர்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழரசு என்று கனவு காண்பவர்களுக்கு அனுதாபங்கள். கஜேந்திரனோடோ அல்லது சுமந்திரனுக்கு சவாலானவர்களோடோ தமிழரசுக்கட்சி ஒருபோதும் இணையாது. சுமந்திரன் சொல்வதை, செய்வதை வாய்பொத்தி, காது பொத்தி அவரின் வாய் பாத்து கேட்டுக்கொண்டிருப்பவர்களோடேயே அவர்கள் கூட்டிணைவார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. இப்போ, கஜேந்திரனுக்கு ஒரு வாய்ப்பு, மக்களின் உணர்வறிந்து செயற்பட. தவறினால் எழுபத்தாறு ஆறுகால ஆண்டு அவகாசமெல்லாம் கிடைக்காது. தன்னலம் மறந்து மக்களுக்கு சேவை செய்தால்; மக்கள் உங்களை தாங்கிக்கொள்வார்கள் என்பது கடந்தகால அனுபவம்.
  26. Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 11:19 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. நால்வரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகளை இலக்குவைத்து செயற்பட்ட நீதிபதியொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான இந்த நால்வரும் அமெரிக்காவையும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலையும் இலக்குவைத்து ஐசிசியின் சட்டவிரோத ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்து என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நீதிமன்றத்தின் முன் விசாரணை மற்றும் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலபினி கன்சோ மற்றும் பெட்டி ஹோஹ்லர் ஆகியோர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை குறிவைத்து பிடியாணைகளை பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சி என தெரிவித்துள்ள ஐசிசி பொறுப்புக்கூறலிற்காக பாடுபடுபவர்களை இலக்குவைப்பதுமோதலில் சிக்குண்டுள்ள மக்களிற்கு எந்த வகையிலும் உதவாது என தெரிவித்துள்ளது. ஐ.சி.சியின் மேல்முறையீட்டுப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் உகாண்டாவைச் சேர்ந்த சோலோமி பலுங்கி போசா மற்றும் பெருவைச் சேர்ந்த லஸ் டெல் கார்மென் இபனெஸ் கார்ரான்சா ஆகியோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் அமெரிக்க படையினர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து ஐ.சி.சி விசாரணையைத் தொடங்க வழி வகுத்த குழுவில் இடம்பெற்றனர் நவம்பர் 2024 இல் ஐ.சி.சி தலைமை வழக்கறிஞர் கரீம் கான் நெதன்யாகு மற்றும் கேலன்ட் மற்றும் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்தார். இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றது முன்னாள் ஜனாதிபதி இதை "மூர்க்கத்தனமானது" என்று அழைத்தார். ஐ.நா தலைமையிலான பாலியல் துஷ்பிரயோக விசாரணைக்கு மத்தியில் கான் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார் ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் அமெரிக்க அரசாங்கம் ஐ.சி.சி வழக்கறிஞர் ஃபடோ பென்சவுடா மற்றும் மூத்த அதிகாரி ஃபாகிசோ மோச்சோச்சோகோ ஆகியோர் மீது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரித்ததற்காக தடைகளை விதித்தது - பின்னர் பைடன் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்ற ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்தார். இந்த நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்க வாய்ப்புள்ளது - மார்ச் 2023 இல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. ஐ.சி.சி-யை நிறுவிய ரோம் சட்டத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ கைச்சாத்திடவில்லை.. https://www.virakesari.lk/article/216747
  27. உலகம் எங்கே போகிறது? அவர்களை தண்டிக்கக்கூடாது, மற்றவர்களை அவர்கள் தண்டிக்கலாம், தடை செய்யலாம். யார் இவர்கள்? அடாவடி புரியும் வல்லரசுகளின், வாலரசுகளின் சட்டம், நீதியது.
  28. இன்னொரு சோதிடம் நம்பிக்கை ஒன்று உள்ளது நாங்கள் நிற்கின்ற புகைபடம் ஒன்றை பார்த்துவிட்டு இன்னொருவர் கோபபட்டாலோ அல்லது சபித்தாலோ எங்களுக்கு கான்சர் போன்ற நோய்கள் வரலாம் அல்லது கார் விபத்து விமான விபத்து கூட வரலாம் .அதனால் நான் நிற்கின்ற குரூப் படங்களை ஒருவருக்கும் அனுப்பி போடாதையுங்கோ என்று நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு சொல்லிவைத்துள்ளேன்.
  29. எப்படி திறமைசாலிகள் வித்தைகள்(மஜிக்) செய்து உங்கள் கண்களே நம்பும்படியாக உங்களை ஆச்சரியப்பட வைக்கின்றார்களோ அப்படித்தான் ஜோதிடமும் உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் வைத்து அவர்கள் உங்கள் நிலையைக் கணித்து உங்கள் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொண்டு உங்களை தன்வசமாக்கிவிடுவார்கள் பின்னர் அவர் கூறியது எல்லாமே சரியாக இருக்கும்
  30. ஒருவர் உலகில் அதிக செல்வம் மிக்கவர். மற்றவர் உலகில் அதிக அதிகாரம் மிக்கவர். டொனால்ட் டிரம்ப் அவர்களின் கொள்கைகள் புதிய விடயங்கள் இல்லை. குறிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், பூமி வெப்பம் அடைதல் போன்ற விடயங்களில் அவருக்கு ஈடுபாடு இல்லை. இவை எல்லாம் தெரிந்துகொண்டே மாஸ்க் டிரம்ப்புடன் கை கோர்த்தார்.
  31. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Travis Head போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Pat Cummins போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா
  32. 'ரஷ்ய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சிறுவர்கள் போல சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சில காலம் சண்டை பிடிக்க விட்டுவிட்டு பின்னர் வழிக்கு கொண்டு வருகின்றேன்.................' என்பது போல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்தாநாள் சொல்லியிருந்தார். ட்ரம்ப் சொல்பவைகளுக்கு மூன்று நாட்கள் ஆயுள் இருந்தாலே அதிசயம். அதனால் தான் அவருடைய புதிய பெயரான TACO என்பது மிகப் பிரபலமாக வந்துவிட்டது. ஆனால் இரு சிறுவர்கள் தெருவில் சண்டை பிடிப்பது என்பது சில நாட்களாவது நிலைத்து நின்று விடும் போல. ஒரு சிறிய மாற்றம் - எலானும் ட்ரம்பும் தான் அந்த இரு சிறுவர்கள். எலானின் அந்த சல்யூட்டையோ, மரம் அரியும் வாளை மேடையில் தூக்கிக் காட்டியதையோ, அரச வேலைகளில் பணி நீக்கம் செய்ததையோ, தொண்டு நிறுவனங்களை இல்லாமல் ஆக்கியதையோ, எப்போதும் எடுத்தெறிந்து பேசும் இயல்புகளையோ, இன்னும் பல விடயங்களை இங்கு எவரும் மறந்துவிடப் போவதில்லை. எலான் தற்போது ட்ரம்பிற்கு எதிராக சொல்லும் கருத்துகள் தன் நலன் சார்ந்ததே அன்றி, ஒரு துளியேனும் அமெரிக்க மக்களின் அல்லது உலக மக்களின் நன்மை கருதி இல்லை. தன்னைத்தானே stable genius என்று சொல்லிக் கொள்ளும் ட்ரம்ப் எலானை mediocre Musk என்று இறுதியில் சொல்ல வேண்டிய ஒரு நிலைமை இவ்வளவு விரைவாக வந்துவிட்டது. அமெரிக்காவை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று எலானை கொண்டாடிய ட்ரம்பின் மஹா (MAGA) குழுமம் இன்று எலானை நீ செவ்வாய் கிரகத்துக்கு பின்னர் போகலாம், நீ இப்பொழுது முதலில் ஆபிரிக்காவிற்கு திரும்பி போ என்று சொல்லுகின்றார்கள். நேற்று எடுத்த கெட்டமைனின் தாக்கம் இறங்க, எலான் இன்று பணிய ஆரம்பித்துவிட்டார். எலான் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் போகலாம். நீலத்திலிருந்து சிவப்பாக மாறலாம். ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து வேறு எங்கும் போகமுடியாது. ட்ரம்புடன் சேர்ந்து நிற்கும் போது அவருடைய நிறுவனங்கள் சந்தையில் தளம்பின. வெளியேறி ட்ரம்பை எதிர்க்கும் போது இன்னும் அதிகமாக தளம்புகின்றன. மொத்தத்தில் இவை எதுவுமே இவருக்கு தேவையில்லாத விடயங்கள். நிகோலா டெஸ்லா அவருடைய தாயாருக்கு எழுதிய கடைசிக் கடிதம் நன்கு பிரபலமானது. டெஸ்லா என்னும் பெயரையே எலானும் தொடர்கின்றார்.
  33. இது ஒரு புலத்தில் இருந்து சென்ற நபரின் கட்டுரை. மேலே யாயினியும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது, உள்ளூர் பயனர்களை விட வெளிநாட்டுப் பயனர்களை வித்தியாசமாகக் கவனிக்கிறார்கள் என்ற என் எண்ணம் வலுப்படுகிறது. வடக்கின் ஒரு அரச மருத்துவ மனையில் தந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்த வேளையில் என் அனுபவமும் இப்படித் தான் இருந்தது. "மகன் வெளிநாட்டில் இருந்து வருகிறார், மகன் வெளிநாட்டில் டொக்ரர்" (நான் என்ன செய்கிறேன் என்றே என் சிறிலங்கா உறவுகளுக்குத் தெளிவில்லை😂) இப்படி முதல் இரு நாளும் சகோதரிகள் சொல்லியிருக்கிறார்கள். நானும் அங்கே இருந்த ஒரு மருத்துவ நண்பர் மூலமாக நிலைமையை விசாரிக்க வைத்தேன். 3 ஆம் நாள் நான் மருத்துவ மனை போய் அப்பாவைப் பார்த்த போது என்னோடு அக்கறையாக அப்பாவின் நிலைமையைப் பற்றி உரையாடினார்கள். கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அதே வேளை, ஏனைய 6-7 ICU நோயாளிகள் பற்றிய நிலையை அவர்களின் உறவுகளுக்கு கேட்டாலும் தெளிவாகச் சொல்லாமல் நடந்து கொள்வதை அவதானித்தேன். ஒரேயொரு சிங்கள மருத்துவர் மட்டும் எல்லோரோடும் ஒரே விதமாக பண்பாக நடந்து கொண்டார். இளம் மருத்துவர்களாவது எல்லா நோயாளிகள், உறவுகளோடு ஒரே மாதிரிப் பண்பாக நடந்து கொள்ளும் வகையில் பழக்கப் பட வேண்டும். வெளிநாடு, அரச அதிகாரி, விஐபி நோயாளி ஆகியோருக்கு மட்டும் விசேட கவனிப்புகள் கொடுப்பது நல்லதல்ல!
  34. சொல்லாமலே அறிவார் கிழவர். அஜித் படம் போட்டாலே அன்ரிமாரைப் பார்க்கப் போகிற ஒருவர், விண்வெளி நாயகன் படம் போட்டால் பாட்டிமாரைப் பார்க்க கண்டிப்பாகப் போகத்தானே செய்வார். கிருபன் இது உள்ளங்கை நெல்லிக்கனி.
  35. யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Steven Smith போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Mitchell Starc போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்ரேலியா
  36. எனக்குச் சிரிப்பாய் இருக்கு இந்தக்கருத்தை வாசிக்கும்போது காரணம், கூறியது யாழ் வைத்தியசாலையின் அதிகாரி வருபவர்கள் அநேகமாக குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் ஒன்னும்தெரியாத பாப்பாக்கள் சிங்களம் திட்டமிடுகிறதாம். எல்லோருக்கும் சுயமாக சிந்திக்கத் தெரியாதாம் அப்பன் ஆத்தை சரியில்லை வளர்ப்பு சரியில்லை.
  37. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) உஸ்மன் கவஜா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) கேசல்வோட் போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்ரேலியா
  38. படம் பார்த்து நொந்து நூலாகிப் போன சசி வர்ணம், அடுத்து படம் பார்த்து வந்து விம்மி விம்மி அழப் போகும் கிருபன் போன்றோருக்கும் ஒரு ஆறுதலாக இருக்க ஏதோ என்னால் முடிந்தது,
  39. 1 தொடக்கம் 9 வரையிலான எண் சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. காரணம் எனது அனுபவத்தில் அந்தந்த எண்களுக்குரியவர்களுக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு என்பதை அவதானித்துளேன். உதாரணத்திற்கு திகதி எண் 1ல் பிறந்தவர்கள் எல்லா விடயங்களிலும் உச்சத்தில் இருப்பார்கள். இதே போல் ஏனைய திகதிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களை நான் பார்த்துள்ளேன். ஐரோப்பியர்கள் 13ம் இலக்கத்தை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார்கள்.பல விடுதிகளில் 13ம் இலக்க அறை இருக்காது.
  40. காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான். தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.