Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

"அவருக்கு கிடையாது.. உங்களுக்கு விருப்பமானால் சொல்லுங்கள்.."

"சரி.. யோசித்துவிட்டுச் சொல்கிறேன்.." :unsure:

புலம்பெயர்ந்த இந்த தலைமுறை பலவிடயங்களில் தயக்கம் என்பதை விட அவதானமாக நிதானித்தே பல முடிவுகளை எடுக்கின்றது. புதியநாடு, கலாச்சாரம், மொழி என்பனவற்றுடன் பரம்பரையாக நாம் பெரிய பதவிகளை வகிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்த தலைமுறை என்றால் உடனடியாகவே 'ஓம்' என கூறும்.

  • Replies 346
  • Views 27.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுயநலமும் தேவைதான். இல்லாவிட்டால் பணத்தில் குறியாக இருக்கும் மேற்குலகக் கம்பனிகள் நமது தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள். என்றாலும் நிறுவனங்களில் சிலரின் போக்கால் அதிகம் பாதிப்புவரும்போது திறமையைக் காட்ட அதிகம் தயங்கக்கூடாது. அதே வேளை உழைப்புக்குத் தகுந்த சன்மானத்தையும் கேட்டே வாங்கிடவேண்டும்!

இன்றுகூட ஒரு வேலை முகவரிடம் பேசும்போது இன்றைய பொருளாதார சூழலில் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது என்றார். அதற்கு நான் நிறுவனங்களுக்குத் தொண்டு செய்யும் வேலை தேடவில்லை என்று சொல்லிக் கதையை முடித்துவிட்டேன்!

பணத்தில், எல்லா நிறுவனங்களுமே... குறியாக இருக்கும் கிருபன்.

கடந்த, இரண்டு மாதங்களில் எங்களுடன் தொடர்பு வைத்திருந்த... 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம் பூட்டப் பட்டது.

அது, பூட்டியவுடன்... அந்த வேலையை... தொடர்ந்து நடப்பதற்கு, எமது நிறுவனத்தை வற்புறுத்திக் கேட்டதன் பின்...

பெரும் பகுதியை..... வாங்கி விட்டார்கள். பழைய நிறுவனத்தில்... வேலை இழந்தவர் 780 ஆட்கள்.

நாம், வேலைக்கு சென்றால்.... உழைக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும், பணம் தரும் நிறுவனத்துக்கு... பலன் கிடைக்கும் வகையில்... வேலை செய்து எமது, திறமையை காட்டுவோம். அந்த இடத்தில்... ஒரு, தமிழனை பாவம் என்று... சேர்த்துவிட்டால், அடுத்த கிழமை உங்களுக்கு வினை பிடிக்கும். அது... எந்த ரூபத்தில் வரும் என்று சொல்வது கஷ்டம்.

கனக்க எழுத வேணும் போலை... இருக்குது.

சைட் டிஷ் தொடரும்..... :o:D

Edited by தமிழ் சிறி

அந்த இடத்தில்... ஒரு, தமிழனை பாவம் என்று... சேர்த்துவிட்டால், அடுத்த கிழமை உங்களுக்கு வினை பிடிக்கும். அது... எந்த ரூபத்தில் வரும் என்று சொல்வது கஷ்டம்.

கனக்க எழுத வேணும் போலை... இருக்குது.

சைட் டிஷ் தொடரும்..... :o:D

இதை நான் கான்னா பின்னா என வழி மொழிகிறேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு வெட்டும் இடத்தில் (Fabrication shop) வேலை செய்தவர்கள், AutoCad இல் வரைபடம் வரைந்துகொண்டிருந்த Draftsperson இவர்கள்தான் இப்ப பெரிய இடங்களில் உள்லார்கள். இவர்களையே non-professionals என்று குறிப்பிட்டேன்.. இவர்களுக்கு யாருடைய தகுதிகளையும் பற்றி அக்கறை இல்லை.. கனடாவில் கனிமவளத்துறையின் சாபக்கேடு இது.. இப்போது கொஞ்சம் மாற்றம் வந்துகொண்டிருக்கிறது..

அப்படி இதுவரை எதுவும் நடைபெறவில்லை.. என் மச்சம் அப்படி.. :D இன்னொருவன் திறமையானவனாக இருந்து வேலைகளைச் செய்தால் அவனுடன் போட்டியிடுவதே என் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும். இருவருக்கும் அதுதான் நன்மை தருவதாக இருக்கும்..

மன்னிக்க வேண்டும் இசை அப்படி என்டால் அவர்களது உதவி இல்லாமல் தனியே பொறியியலாளாரால் மட்டும் சாதிக்க முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த இந்த தலைமுறை பலவிடயங்களில் தயக்கம் என்பதை விட அவதானமாக நிதானித்தே பல முடிவுகளை எடுக்கின்றது. புதியநாடு, கலாச்சாரம், மொழி என்பனவற்றுடன் பரம்பரையாக நாம் பெரிய பதவிகளை வகிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்த தலைமுறை என்றால் உடனடியாகவே 'ஓம்' என கூறும்.

இதில் தயக்கம் என்று எதுவும் இருக்கவில்லை.. :unsure:

ஏற்கனவே மற்றவரை அப்பதவியை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தேன். :D மேலாளர் கேட்டதும் பாய்ந்தடித்து ஓமென்றிருந்தால் பின்னாளில் எனது பில்லுடனான அரசியல் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால்தான் வேண்டுமென்றே சில நாட்கள் எடுத்துக் கொண்டேன்.. :D

கனக்க எழுத வேணும் போலை... இருக்குது.

சைட் டிஷ் தொடரும்..... :o:D

உங்கள் சைட் டிஷ் பிடிச்சிருக்கு தமிழ்சிறி.. :wub: தொடர்ந்து எழுதுங்கோ.. :D

  • கருத்துக்கள உறவுகள்

"உங்களை மேற்பார்வையாளர் நிலைக்கு பதவி உயர்த்துவதாக இருக்கிறோம்.."

எனக்கு யோசனையாக இருந்தது. பில்லுக்கு தன்னை விட்டால் யாருக்கும் எதுவுமே தெரியாது என்கிற நினைப்பு.. இந்தியன் தாத்தாவுக்கு என்னைவிட பல வருடங்கள் வயது கூட.. இவர்களுடன் ஒரு ஜேர்மன்காரப் பெடியன்.. இந்த மூன்றையும் மேய்க்க வேண்டும்.. :unsure:

"என்னைவிட பில்லுக்கு அனுபவம் கூட அல்லவா.. அவரை ஏன் நீங்கள் பதவி உயர்த்தக் கூடாது??"

"அவருக்கு கிடையாது.. உங்களுக்கு விருப்பமானால் சொல்லுங்கள்.."

"சரி.. யோசித்துவிட்டுச் சொல்கிறேன்.." :unsure:

(தொடரும்.)

பலவேளைகளில் மௌனம் மிகவும் பெறுமதியானது. சும்மா இருக்க சம்பாதிக்கக்கூடியது. எனது அனுபவ உண்மை இது.

:icon_idea: :icon_idea:

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் இசை அப்படி என்டால் அவர்களது உதவி இல்லாமல் தனியே பொறியியலாளாரால் மட்டும் சாதிக்க முடியுமா?

முதலில் கனேடிய பொறியியலாளர் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்..

“practice of professional engineering” means any act of planning, designing, composing, evaluating, advising, reporting, directing or supervising that requires the application of engineering principles and concerns the safeguarding of life, health, property, economic interests, the public welfare or the environment, or the managing of any such act; (“exercice de la profession d’ingénieur”)

பொறியியலாளர் வேலையை ஒரு பொறியியலாளர் மாத்திரமே செய்ய முடியும். பொறியியலாளர் வேலை என்னவெல்லாம் என்பதை மேலே உள்ள வரைமுறை விவரிக்கின்றது.

பல துறைகளிலும் பொறியியலாளர்கள்தான் வடிவமைப்பில் ஈடுபடுவார்கள். வரைபவர்கள் பொறியியலாளர்களின் கட்டளைகளுக்கேற்ப வரைந்து கொடுப்பார்கள். கனிமவளத்துறையில் தலைகீழ்.. :blink:

இவர்கள் வரைந்து எல்லாவற்றையும் முடித்து விடுவார்கள். பிறகு அதை ஒரு பொறியியலாளரிடம் கொடுத்து முத்திரை குத்தச் சொல்வார்கள். அதில் பொறியியலாளருக்கு சம்மதம் இல்லாவிட்டாலும் சண்டைக்கு வருவார்கள். :D

ஆக, செய்வது இவர்கள்.. ஏதாவது பிழைத்தால் ஜெயிலுக்குப் போகப்போவது பொறியியலாளர்கள்.. :unsure:

Reason for Editing: எழுத்துப்பிழை

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலவேளைகளில் மௌனம் மிகவும் பெறுமதியானது. சும்மா இருக்க சம்பாதிக்கக்கூடியது. எனது அனுபவ உண்மை இது.

:icon_idea: :icon_idea:

முக்கியமாக எமக்குத் தெரியாத துறைகளில் கால்பதிக்கும்போது தெரியாமல் ஏதையாவது சொல்லிவிடுவதிலும் பார்க்க அமைதியாக இருப்பது நல்லது.. :D

இதில் தயக்கம் என்று எதுவும் இருக்கவில்லை.. :unsure:

ஏற்கனவே மற்றவரை அப்பதவியை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டிருந்தேன். :D மேலாளர் கேட்டதும் பாய்ந்தடித்து ஓமென்றிருந்தால் பின்னாளில் எனது பில்லுடனான அரசியல் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால்தான் வேண்டுமென்றே சில நாட்கள் எடுத்துக் கொண்டேன்.. :D

இடங்களுக்கு, நாடுகளுக்கு, கலாச்சரங்களுக்கு, நிறுவன அளவில் கூட இந்த அலுவலக அரசிளுகள் மாறும். ஆனால் பொதுவாக சந்தர்பங்களை ஒரு தன்னம்பிக்கையுடன் ஏற்கும்பொழுது அது அவரைச்சுற்றி ஒரு பலமான அரசியலை (பின்னர் திறமை, ஆளுமை...) உருவாக்க உதவும், CEO ஆக கூட வர இது தேவை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடங்களுக்கு, நாடுகளுக்கு, கலாச்சரங்களுக்கு, நிறுவன அளவில் கூட இந்த அலுவலக அரசிளுகள் மாறும். ஆனால் பொதுவாக சந்தர்பங்களை ஒரு தன்னம்பிக்கையுடன் ஏற்கும்பொழுது அது அவரைச்சுற்றி ஒரு பலமான அரசியலை (பின்னர் திறமை, ஆளுமை...) உருவாக்க உதவும், CEO ஆக கூட வர இது தேவை :D

நீங்கள் சொல்வதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.. இன்று கனிமவளத்துறையில் எனக்கு இருக்கும் அனுபவம் மூன்று வருடங்களுக்கு முன் (அப்பதவி வந்தபோது) இருந்ததா? - இல்லை.. :D

காரணம் என்ன?

கனிமவளத்துறை மிகவும் பரந்துபட்டது.. அதில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் 20 அல்லது 30 வருடங்களாக இருப்பவர்கள்.. இவர்களுடன் நான் வேலை செய்ய வேண்டும். என்னுடைய அப்போதைய அனுபவ வருடங்கள் 2. :D

ஒருவேளை காலப்போக்கில் நீங்கள் சொல்லும் மனப்பான்மை வரலாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இடத்தில்... ஒரு, தமிழனை பாவம் என்று... சேர்த்துவிட்டால், அடுத்த கிழமை உங்களுக்கு வினை பிடிக்கும். அது... எந்த ரூபத்தில் வரும் என்று சொல்வது கஷ்டம்.

தமிழர்கள் என்று வந்துவிட்டால் முடிவை மூளை எடுக்காது! இரக்கமுள்ள இதயம்தான் எடுக்கும்!!

உண்மையில் நண்பர்களுக்கு கடன் (வட்டியில்லாத) கொடுக்கும்போது அவர்கள் திருப்பித் தரக்கூடிய நிலையில் இருப்பார்களா என்று யோசிக்காமல் கொடுப்பதுபோல், தமிழர்கள் வேலை வேண்டுமென்றால் கேட்டால் அவர்களின் திறமைகளை, அரசியல்களை அதிகம் பார்க்காமல் உதவி செய்வதுதான் சக தமிழர்களின் பழக்கம். சிலவேளைகளில் இது வினையாகவும் முடியும் ஆபத்து உள்ளதுதான்.

தற்போது தமிழ் முதலாளிகள் சக தமிழர்களையே அட்டைபோல உறிஞ்சும் போக்கும் இருக்கின்றதுதானே.. காலப்போக்கில் தமிழர்கள் மேல் தமிழர்கள் இரக்கம் காட்டுவார்களா என்பது கேள்விக்குறிதான்!

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கனேடிய பொறியியலாளர் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்..

“practice of professional engineering” means any act of planning, designing, composing, evaluating, advising, reporting, directing or supervising that requires the application of engineering principles and concerns the safeguarding of life, health, property, economic interests, the public welfare or the environment, or the managing of any such act; (“exercice de la profession d’ingénieur”)

பொறியியலாளர் வேலையை ஒரு பொறியியலாளர் மாத்திரமே செய்ய முடியும்.

ஆக, செய்வது இவர்கள்.. ஏதாவது பிழைத்தால் ஜெயிலுக்குப் போகப்போவது பொறியியலாளர்கள்.. :unsure:

நான் கனடா வந்திருந்தபோது

வேகப்பாதையால் போய்க்கொண்ருந்த போது விமான நிலையத்துக்கு அருககாமையீல் புதிதாக கொஞ்ச வேகப்பாதை சில கிலோ மீற்றர்களுக்கு போட்டிருந்தார்கள். அதன் வடிவமைப்பையும் சுற்று வட்டத்தையும் பார்த்துவிட்டு எப்போது போட்டார்கள் என்று நான் கேட்டபோது ஒரு பேரின்ப தகவலைச்சொன்னார்கள். ந்தப்பாதை கட்டப்பட்டு அது திறந்து விடுவததற்கான அனுமதிக்காக எனது அக்கா ஒருவரின் மகளின் கணவனின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சில நாட்கள் இருந்ததாக. உண்மையில் பெருமையாக இருந்தது. உலகம் பூராகவும் எமது மக்களின் வளர்ச்சி. இசையையும் நான் அப்படித்தான் பபார்த்தேன். பார்க்கின்றேன்

(அவரும் இலங்கையில் பொறியியலாளராக வேலை செய்தவர்.)

.

MTO வில் அல்லது City of Toronto வில் ஒரு பெரும்புள்ளி இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.. :unsure: அவரா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் இசை

அங்குள்ள பதவி முறைகள் தெரியாததால் அவை பற்றி பெரிதாக பேசவில்லை.

தங்களுக்கு தேவை என்றால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் . பெயர் விபரங்கள் தருகின்றேன்.

கனடாவில் வேலை அரசியலில் ஹாக்கி, காலநிலை இரண்டும் முக்கிய இடங்களை பிடிப்பவை. இரண்டையும் காலையில் செய்தித்தாள்களில் / வானொலியில் அறிந்து சென்று அங்கே இவைபற்றி சம்பாசணை செய்வது நண்பர்களை உருவாக்க (அது வேலையில் கைகொடுக்கும்) உதவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 28: எனது முதல் வேலைத்திட்டம் (Project)

மேலாளர் எனது புதிய பதவிக்கான மாதிரி ஒப்பந்தந்தைக் கையில் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதை வீட்டிற்குக் கொண்டு சென்று படித்துப் பார்த்தேன்.. சில வரிகள் கேள்விக்குரியனவாக இருந்தன. unsure.gif

எனது வழிகாட்டலின்கீழ் வேலை செய்பவர்களின் வேலைகளுக்கும் நான் பொறுப்பு என்பதாக இருந்தது. பொறியியலாளர் நிலையில் இல்லாதவர்களை மேய்க்கலாம்.. ஆனால் ஏற்கனவே பொறியியலாளராக இருப்பவர் ஏதாவது பிழைவிட்டால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாளராக முடியும் என்கிற கேள்வி வந்தது. unsure.gif

மேலாளரிடம் பேசியபோது, அவர்களது வேலையை மேற்பார்வை செய்து பிழைகளை குறைக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.. கடினமான நிலை.. இன்னொரு பொறியியலாளரின் வேலையில் தலையிடுவது சங்கடமானது. மேலாளர்களே ஒதுங்கித்தான் இருப்பார்கள்.. unsure.gif

சரி.. என்னதான் நடக்கும்.. நடக்கட்டுமே என்று பதவியை ஏற்றுக்கொண்டேன்.. :rolleyes: வேலை விடுப்பில் இருந்த பொறியியலாளரிடம் இருந்தும் வாழ்த்து மின்னஞ்சல் வந்தது.. வேறு சில மேலாளர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்..! unsure.gif

இப்போது புதிய வேலைத்திட்டம் ஒன்று வந்தது. கனடாவிலேயே முதல்முறையாக ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்துதருவதாகச் சொல்லி வேலையை எடுத்திருந்தோம். வேறு யாரும் செய்வதற்கு இல்லை. இந்தியன் தாத்தா தன்னுடைய வேலைத்திட்டத்தில் பிசியாக இருந்தார். :D இயற்கையாகவே நான் எடுத்துச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. :unsure:

இந்த வேலைத்திட்டத்தின் பல வேலைகளுள் இரண்டு கட்டடப் பணிகளும் அடங்கும். ஒன்று ஏற்கனவே இருந்த இரும்பினாலான கட்டடத்தை உயர்த்துதல்; பெருப்பித்தல்.. இரண்டாவது கொங்கிரீட் வடிவமைப்பு..

முதல் கொங்கிரீட் வடிவமைப்பில் தவறுதலான முடிவுகளை எடுத்து பெயரைக் கெடுத்துக் கொண்டதால் வீம்புக்கென்று இதை கொங்கிரீட்டில் செய்து தருவதாகச் சொல்லி வேலையை எடுத்திருந்தார்கள் மேலாளர்கள். இதிலே தோல்வி என்பது ஒரு தெரிவு அல்ல.. :unsure:

அப்போது நல்ல வேளையாக, ஒரு நல்ல வரைதல் வல்லுனர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். மிகவும் திறமையானவர். வேறு பல இடங்களிலும் வேலை செய்துவிட்டு வந்ததனால் பொறியியலாளர்கள் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தவர். தன்னுடைய எல்லைகளை நன்கு அறிந்தவர். :unsure:

என்னுடைய வடிவமைப்பை அவரைக்கொண்டு வரைந்து கொண்டேன். கட்டடம் கட்டப்படும் இடத்தில் இருக்கும் ரிச்சர்ட் என்பவருடன் நல்ல பழக்கம் இருந்தது. அவரின் தேவைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் திட்டத்தை மெருகேற்றினோம். :unsure:

எல்லாம் ஓரளவுக்கு முடிந்திருந்த சமயத்தில், ஓய்வுபெறும் நிலையில் இருந்த இன்னொரு வரைதல்காரர் வந்து சேர்ந்தார். 30 வருடங்களாக இதிலேயே குப்பை கொட்டியவர். எங்கள் வேலையைப் பார்த்ததும் இது ஏற்கனவே தாங்கள் செய்தது போல இல்லையே என்று உப தலைவரிடம் (Vice President) வத்தி வைத்துவிட்டார். :unsure:

இந்த உப தலைவர் பொறியியலாளர் அல்ல.. அவரும் முந்தி வரைந்து கொண்டிருந்தவர்தான். ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். சிக்கல் வரப்போவதை மனம் உணர ஆரம்பித்தது. :unsure:

(தொடரும்.)

Reason for Editing: எழுத்துப்பிழை

Edited by இசைக்கலைஞன்

இங்கும் பல இடங்களில் அனுபவமுள்ள திறமையான வரைகலைஞர்கள் வடிவமைப்பை தாங்களே செய்வார்கள். இறுதி வடிவத்தை பொறியியலாளர் / முகாமைத்துவம் சரிபார்த்து திருத்தங்கள் செய்வார்கள். அத்துடன் ஒரு திட்டம் (Project ) நடக்கும் போது ஒவ்வொரு கட்டத்திலும் அடிக்கடி அந்தத் திட்ட வடிவமைப்பு முன்னேற்றக் கூட்டம் (Design development meetting ) நடக்கும். அதில் குறை நிறைகளை அலசி ஆராய்ந்து திருத்தங்கள் செய்யப்படும்.

ஒவ்வொரு திட்டமும் (Project ) முடிந்த பின், அதில் இருந்து கற்றுக் கொண்ட / விட்ட பிழைகளை (Lessons Learned Meeting ) அலசி ஆராய்வோம். இதனால் பல 'அலுவலக அரசியல்' விளையாட்டுகளைக் தவிர்க்கக் கூடியதாக உள்ளது.

இங்கிலாந்தில் பொறியியல் துறை ஒழுங்கமைக்கப்பட்டதல்ல.. அதாவது It's not a regulated profession.

வட அமெரிக்காவிலோ, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலோ இது ஒழுங்கமைக்கப்பட்டது. அதாவது சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.. இதை மீறியவர் சட்டத்தை மீறியவர் ஆவார்.

உதாரணத்துக்கு, மருத்துவத்துறையை எடுத்துக் கொள்வோம். இது பல நாடுகளிலும் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.

ஒரு சர்க்கரை வியாதி உள்ளவர் வந்து மருத்துவரைப் பார்க்கிறார் என வைத்துக்கொள்வோம். நோயாளியின் நிலையை ஒவ்வொருமுறையும் கணித்து மருந்துகளைப் பரிந்துரை செய்வார். மருந்துக்கடையில் உள்ளவர் இதைச் செய்யலாமா? :D

இதே போலத்தான் இங்கே நடப்பதும். வரைகலைஞர்கள் முந்தைய வேலைத்திட்டங்களைப் பிரதி பண்ணி வேலைகளை 90% முடித்துவிடுவார்கள். பிறகு எங்களிடம் வரும்போது மாற்றங்களை மேற்கொள்ளவேண்டி வருகிறது. இல்லாவிட்டால் போனால் போகுது என்று மனமில்லாமல் விலத்திப்போக வேண்டி வருகிறது.

நிர்ணயித்த தொகையைவிட கட்டமைப்பு மீறிவிட்டாலோ, அல்லது பாதுகாப்பில் குறை வந்தாலோ பொறியியலாளரின் தலைதான் சிக்கலுக்கு உள்ளாகும்.. :unsure: இது எப்படியென்றால் கம்பவுண்டர் மருந்து கொடுத்ததுக்கு மருத்துவர் ஜெயிலுக்குப் போன கதை.. :blink:

கனடாவில் நிலைபெற்றுவிட்ட பெரிய நிறுவனங்களில் நடப்பது என்னவென்றால் பொறியியல் முடித்துவிட்ட மாணவர்கள் பயிற்சியாளர்களாக (Engineer-in-training) சேர்வார்கள். அவர்கள் ஏற்கனவே உள்ள பொறியியலாளரின் மேற்பார்வையின்கீழ் வேலைசெய்து வரைகலைஞர்களைக் கொண்டு வரைந்து கொள்வார்கள். பொறியியலாளர் ஆலோசனைகளை வழங்கி, இறுதியில் சோதனை செய்து முத்திரை குத்துவார். :unsure:

இதுவே சரியான முறை ஆகும்..

இங்கு வரைகலைஞர்கள் வடிவமைத்தாலும் பொறியியலாளர்களால் திரும்பத் திரும்ப வடிவமைப்பு மாற்றப்பட்டு, கடைசியில் முகாமைத்துவத்தால் பரிசீலிக்கப்பட வேண்டும். இதில் இருப்பவர்கள் வரைகலைஞர்கள் அல்ல. Chartered (?) முடித்தவர்களே இருப்பார்கள். இறுதியான வடிவத்தில் இந்த இந்த 'மூன்று கில்லாடிகளின் கையெழுத்துப் பெறப்படும்.

ஏதும் பிழைத்தால் கடைசியாக கையொப்பம் இட்டவர்களின் தலையிலிலேயே எல்லாம் போய்ச் சேரும்.

ஏன் கனடாவில் பொறியியல் துறையில் 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டாலன்' எனும் நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

எனக்குத் தெரிந்து கனிமவளத்துறையில்தான் இப்படி நடந்துகொண்டிருக்கிறது.. மற்றத்துறைகள் சரியாகத்தான் இருக்கு.. :unsure:

பணம் புழங்கும் துறைகளில்தான் வெள்ளைகள் இருப்பார்கள்.. ஆனால் இங்கே பல வெள்ளைகள் படிப்பைக் குழப்பியவர்கள்.. அவர்கள் பிறகு AutoCad மாதிரி எதையாவது முடித்து உள்ளே வந்து மேலாளர்கள் ஆகிவிடுவார்கள்.. வேறு துறைகளுக்குப் போவதில்லை.. :rolleyes:

இப்போது நிலைமையைக் கொஞ்சம் மாத்தியிருக்கிறம்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைக்கலைஞ்ஞன் அண்ணா நான் உங்கள் தொடரை விடாமல் வாசித்து வருகின்றேன்.என்னைப் போல மாணவருக்கு உங்களது தொடர் பயனுள்ளதாக இருக்குது.மிக்க நன்றீ அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த கிழமை எழுத்தை குறைச்சு போட்டிங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

BBQ வோடை மினக்கெடுகிறார் போல. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞ்ஞன் அண்ணா நான் உங்கள் தொடரை விடாமல் வாசித்து வருகின்றேன்.என்னைப் போல மாணவருக்கு உங்களது தொடர் பயனுள்ளதாக இருக்குது.மிக்க நன்றீ அண்ணா

உங்கள் கருத்துக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் கோகுலன்..! :D

என்ன இந்த கிழமை எழுத்தை குறைச்சு போட்டிங்கள்?

என்னையா இது.. மூச்சைப் பிடிச்சுக்கொண்டு எழுதித் தள்ளுறன்.. இதுவும் காணாது எண்டுறீங்கள்.. :unsure:

BBQ வோடை மினக்கெடுகிறார் போல. :)

இங்கை இப்பவும் சிங்கிள் டிஜிட்தான்.. :D:blink:

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா, தொடர் சிறப்பாகப் போகிறது. இங்கு மேலாளரை வடிவாக கையுக்குள்ள போட்டு வச்சிருந்தால் கன விஷயங்கள் செய்யலாம். நான் ஒவ்வொரு முறையும் வெளிநாடு போய் வரும்போதும் ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது வாங்கி வந்து குடுத்து விடுவேன். புகைப் பிடிப்பவர்கள், தண்ணிப்பாட்டிகளுக்கு எண்டே duty free யில் வாங்கி வருவேன். அத்துடன் வேலை செய்யும் பெண்களுக்கு perfume, எனது மேலாளருக்கு சிறந்த தர தேயிலை எல்லாம் ஒவ்வொரு வருடமும் கொடுத்து விடுவேன். அவர்களும் நான் கேக்க வைக்காமல் சம்பளத்தை வருடாவருடம் கூட்டுவார்கள். இடைக்கிடை கிம்பளமும் கிடைக்கும் :lol: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.