Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யோனி பொருத்தம் என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோனி பொருத்தம் என்றால் என்ன?

ஜாதகப் பொருத்தத்தில் யோனி(பெண்குறி)ப் பொருத்தம் என்றால் என்ன? சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள். - பொருத்தமில்லையே!

யோனி என்றால் பெண்குறி. திருமணப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் சூத்திரர்களுக்கு உரியது என்கின்றார்கள்.

10 வகை திருமணப் பொருத்தத்தில் சில பொருத்தங்களை சில சாதிகளுக்கு கட்டாயம் என்கின்றார்கள்.

தேர்வுகளில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டியவை என்று சில கேள்விகள் இருக்கும், அதைப்போல சில சாதிகளுக்கு சில கல்யாணப் பொருத்தங்கள் கட்டாயம்.

பார்ப்பனர்களுக்கு தினப் பொருத்தம், சத்திரியர்களுக்கு கணப் பொருத்தம், வைசியர்களுக்கு ராசிப் பொருத்தம்,சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள்.

சரி யோனிப் பொருத்தம் என்றால் என்ன? யோனி என்றால் பெண்குறி.

ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள்.

அசுவனியும் சதயமும் - குதிரை யோனி,

பரணி,ரேவதி- யானை யோனி,

பூசம்,கார்த்திகை - ஆடு யோனி,

ரோகினி,மிருகசீருடம் - சர்ப்பம்(பாம்பு ) யோனி,

மூலம், திருவாதிரை- நாய் யோனி,

இப்படியே பிரித்திருக்கின்றார்கள்.

இதிலும் மூலமும் திருவாதிரையும் நாய் யோனி என்றால் முதலில் வரும் மூலம் ஆண் நாய் எனக் கொள்க, இரண்டாவதாக வரும் திருவாதிரை பெண் நாய் எனக் கொள்க. இப்படி இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள்.

சரி,இதோடு விட்டார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகை- எதிரி மிருகம் - நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள்.

அசுவனிக்கும் சதயத்திற்கும் எருமை பகை.

அசுவனி, சதயத்திற்கு - சுவாதியும் கஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது. அசுவனி,சதயம் சுவாதியும் கஸ்தம் என்கின்றார்கள்.

உலக வழக்கப்படியே பார்த்தால் குதிரையும், எருமையும் பகை மிருகங்களா? ஒன்றையொன்று பார்த்தால் மோதவா செய்கின்றன- சண்டையா போடுகின்றன- எருமை எருமையாக நிற்கின்றது, பார்த்துக் கொண்டே குதிரை ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் ஜாதகப் பொருத்தத்தில் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் குதிரை யோனியாம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், கஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் எருமை யோனியாம். குதிரை யோனியும் எருமை யோனியும் பகையாம். அதனால் ஜாதகம் பொருந்தவில்லையாம் - திருமணம் நடக்கக் கூடாதாம்!

ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு பொருத்தம் பார்த்துச் சொல்லுங்கள் என்று எந்த ஜோதிடக்காரனிடமும் போகலாமா?

எப்படி நட்சத்திரத்தையெல்லாம் மிருகங்களாகப் பிரித்தார்கள்.?

குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பூனை, பெருச்சாளி, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 14 மிருகங்களுக்கு 27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள்.

ஏன் இந்த மிருகங்களில் கடவுள் அவதாரமான பன்றியைக் காணவில்லை, கழுதையைக் காணவில்லை. காளை மாட்டைக் காணவில்லை? ஜோதிடக்காரர்கள் ஒன்றும் செய்வதில்லை.

வா. நேரு.

SOURCE: viduthalai.com

  • Replies 73
  • Views 80.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வட அமெரிக்காவில் பனிக்கரடி............. கரிபு என்று அழைக்கப்படும் ஒருவகை மரை இனத்தை சேர்ந்த மிருகம் எல்லாம் இந்த யோனி பொருத்தத்தில் உண்டு. அந்த அந்த நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப மூதையர்கள் அதை வகுத்துள்ளார்கள்.

ஜாதக பொருத்தம் என்பது இந்திய இலங்கையில் மட்டுமே புழக்கத்தில் உள்ளதால் மற்றைய நாடுகளுக்கான பொருத்த மாற்றங்களை யாரும் கற்பதில்லை.

ஜோதிடத்தில் உள்ள அனைத்தையும் முறைப்படி கற்கும் ஓர் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதுதான் எனது வாழ்வில் எனக்கு கடவுள் தந்த ஒரு பெரிய வரமாக எண்ணுகிறேன்.

மேலைநாடுகளில் பலருக்கு ஜாதகம் எழுதுவதில்லை. மேலை நாடுகளில் வசிக்கும் பலருடைய ஜாதகம் தொலைந்திருப்பதட்கு பல சாத்தியங்கள் உண்டு, அதவிட முக்கியமானது பலருக்கு சரியான முறையில் ஜாதகம் எழுதவடுவதில்லை. இவர்களுக்கெல்லாம் எந்த சிரத்தையும் இன்றி யோனியை பார்த்து சரியான முறையில் பொருத்தம் பார்ப்பதோடு ஜாதகமும் எழுதிகொடுத்து வருகிறேன்.

இதற்கு எந்த பணமும் அறவிடுவதில்லை..........

எனது கல்வியை சமூக சேவைக்கே பயன்படுத்ஹ்டுகிறேன் என்பதையும் அறிய தருகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி, நீங்கள் எழுதியது சுவாரசியமாக உள்ளது.மேலும் உங்களுக்கு தெரிந்த பல தகவல்களை எங்களுடன் பகிர முடியுமா?

மருதங்கேணி

பலரும் பல மாதிரி எழுதுவதால் இந்த சாத்திரத்தில் நம்பிக்கையில்லை.

சாத்திரம் என்பது மூட நம்பிக்கை அல்லது சாத்திரம் என்பது அறிவியல் ரீதியான உண்மை, அதைப் பலரும் பலவிதமாகப் புரிந்து கொண்டு எழுதுவதால் சாத்திரம் பிழைத்துப் போகின்றது என நினைக்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்ததை எழுதுவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் எண்ட அம்மப்பாட்ட எத்தனையோ தரம் எனக்கு சாதகம் சொல்லித்தாங்கோ எண்டு கேட்டு அலுத்துப்போட்டு, அவரும் இப்ப இல்ல :( ஆனால் எவ்வளவோ அரிய புத்தகங்களை விட்டுட்டு போயிருக்கார். ஒருநாள் படிக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மருது உங்கள் சரக்கை இங்கையும் கொஞ்சம் கொட்டுறது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் யோனிப் பொருத்தம் என்பது உடலுறவுக்கான பொருத்ம் என்டு :) ...யோனிப் பொருத்தம் கணவனுக்கும்,மனைவிக்கும் இருந்தால் தான் குழந்தைகள் பிறக்குமாம் :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபது பவுண்ட்ஸ் உருவலாம்.  லண்டன் சாத்திரியார் ஒருவர் மெரீனா பீச்சில் மாளிகை வேண்டி போட்டிருக்கிறார். 

எருமை, கழுதைகள் தான் சாத்திரம் பார்க்க வருவதால் அவற்றை  தவிர்த்திருக்கலாம். 

இங்கொருவர் விடுமுறையில் செல்லலாமா என்று கூட சாத்திரம் பார்த்து தான் முடிவெடுப்பார். 

Edited by KuLavi

நான் நினைக்கிறேன் யோனிப் பொருத்தம் என்பது உடலுறவுக்கான பொருத்ம் என்டு :) ...யோனிப் பொருத்தம் கணவனுக்கும்,மனைவிக்கும் இருந்தால் தான் குழந்தைகள் பிறக்குமாம் :icon_idea:

யோனிப் பொருத்தம் என்பது நான் அறிந்த வரையில், அந்தந்த மிருகங்களுக்குள்ள பாலியல் உணர்சிகளின் வீரியத்தைக் குறிக்கும்.

உதாரணமாக பாலியல் உணர்ச்சி வீரியம் கூடிய குதிரை யோனி உள்ளவர்கள், பாலியல் உணர்ச்சி வீரியம் குறைந்தவர்களை (வேறு ஒரு மிருகத்தின்) மணம் முடிப்பதால், அவர்களின் தாம்பத்திய வாழ்வில் பிரச்சனைகள் உண்டாகச் சாத்தியம் இருப்பதாலே யோனிப் பொருத்தம் பார்ப்பார்கள்.

தெளிவான விளக்கத்தை மருதங்கேணி எழுதுவார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வட அமெரிக்காவில் பனிக்கரடி............. கரிபு என்று அழைக்கப்படும் ஒருவகை மரை இனத்தை சேர்ந்த மிருகம் எல்லாம் இந்த யோனி பொருத்தத்தில் உண்டு. அந்த அந்த நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப மூதையர்கள் அதை வகுத்துள்ளார்கள்.

ஜாதக பொருத்தம் என்பது இந்திய இலங்கையில் மட்டுமே புழக்கத்தில் உள்ளதால் மற்றைய நாடுகளுக்கான பொருத்த மாற்றங்களை யாரும் கற்பதில்லை.

ஜோதிடத்தில் உள்ள அனைத்தையும் முறைப்படி கற்கும் ஓர் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதுதான் எனது வாழ்வில் எனக்கு கடவுள் தந்த ஒரு பெரிய வரமாக எண்ணுகிறேன்.

மேலைநாடுகளில் பலருக்கு ஜாதகம் எழுதுவதில்லை. மேலை நாடுகளில் வசிக்கும் பலருடைய ஜாதகம் தொலைந்திருப்பதட்கு பல சாத்தியங்கள் உண்டு, அதவிட முக்கியமானது பலருக்கு சரியான முறையில் ஜாதகம் எழுதவடுவதில்லை. இவர்களுக்கெல்லாம் எந்த சிரத்தையும் இன்றி யோனியை பார்த்து சரியான முறையில் பொருத்தம் பார்ப்பதோடு ஜாதகமும் எழுதிகொடுத்து வருகிறேன்.

இதற்கு எந்த பணமும் அறவிடுவதில்லை..........

எனது கல்வியை சமூக சேவைக்கே பயன்படுத்ஹ்டுகிறேன் என்பதையும் அறிய தருகிறேன்!

அதை விளக்கமாக எழுதுவதில் எனக்கு எந்த வில்லங்கமும் இல்லை.

அதன் அடிப்படையை அறிந்திராதவர்கள் புரிந்துகொள்வது என்றால் .............. படங்களை போட்டு எழுதினால் மட்டுமே எல்லோராலும் புரிய முடியும்.

படங்களை போடுவதிலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால்................................ மட்டுறுத்தினர் இந்த திரியை பூட்டினால் கூட கவலைப்பட ஏதும் இல்லை. யாழ் களத்தையே பூட்டிவிடுவோம் என்ற நிலைக்கு அவர்களை தள்ளிவிடும்.

வட அமெரிக்காவில் பனிக்கரடி............. கரிபு என்று அழைக்கப்படும் ஒருவகை மரை இனத்தை சேர்ந்த மிருகம் எல்லாம் இந்த யோனி பொருத்தத்தில் உண்டு. அந்த அந்த நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப மூதையர்கள் அதை வகுத்துள்ளார்கள்.

ஜாதக பொருத்தம் என்பது இந்திய இலங்கையில் மட்டுமே புழக்கத்தில் உள்ளதால் மற்றைய நாடுகளுக்கான பொருத்த மாற்றங்களை யாரும் கற்பதில்லை.

ஜோதிடத்தில் உள்ள அனைத்தையும் முறைப்படி கற்கும் ஓர் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதுதான் எனது வாழ்வில் எனக்கு கடவுள் தந்த ஒரு பெரிய வரமாக எண்ணுகிறேன்.

மேலைநாடுகளில் பலருக்கு ஜாதகம் எழுதுவதில்லை. மேலை நாடுகளில் வசிக்கும் பலருடைய ஜாதகம் தொலைந்திருப்பதட்கு பல சாத்தியங்கள் உண்டு, அதவிட முக்கியமானது பலருக்கு சரியான முறையில் ஜாதகம் எழுதவடுவதில்லை. இவர்களுக்கெல்லாம் எந்த சிரத்தையும் இன்றி யோனியை பார்த்து சரியான முறையில் பொருத்தம் பார்ப்பதோடு ஜாதகமும் எழுதிகொடுத்து வருகிறேன்.

இதற்கு எந்த பணமும் அறவிடுவதில்லை..........

எனது கல்வியை சமூக சேவைக்கே பயன்படுத்ஹ்டுகிறேன் என்பதையும் அறிய தருகிறேன்!

உங்களுக்கு வேறு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கத்தெரியும்? இது சம்மந்தமாக வியாபார ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு உங்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வேறு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கத்தெரியும்? இது சம்மந்தமாக வியாபார ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு உங்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கின்றேன்.

அவைகளை பழம்பெரும் கோவில்களிலும் ...........

மலை அடிவாரங்களில் தங்கியிருக்கும் முனிவர்களிடமும். எமது மூதையார் எழுதிவைத்துள்ள ஏடுகளை புரட்டி புரட்டி படித்ததுமே நான் கற்றுக்கொண்டேன்.

பின்பு இன்டர்நெட் கொடுத்த கொடை படங்களை பார்த்தே படிக்க கூடிய சந்தர்ப்பங்களை தந்துதவியுள்ளது.

இவைகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கற்றுக்கொள்ள முடியாது.

குறைந்தது ஒரு இருபது வருடங்களை என்றாலும் உங்கள் வாழ்கையில் நீங்கள் இதற்காக செலவிட துணிந்தாலே குறைந்த பட்ச அடிப்படையை புரிந்துகொள்ள முடியும்.

காரணம் ............. "பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்"

.

மருதங்கேணியிடம் யோனிப் பொருத்தம் பார்க்க வரும் வாடிக்கையாளர் அனைவருமே ஆண்களாம். :D :D

measuring-tape.jpg

  • கருத்துக்கள உறவுகள்

.

மருதங்கேணியிடம் யோனிப் பொருத்தம் பார்க்க வரும் வாடிக்கையாளர் அனைவருமே ஆண்களாம். :D :D

measuring-tape.jpg

சுயமாக பிளைக்கதெரியாதவர்கள்

பொறாமை கொண்டு இப்படி அடுத்தவன் பிழைப்பில் மண்ணை போடுவது என்பது காலம் தொட்டே நடந்து வருவதால்.

என்னுடைய விளம்பரங்கள் உரியவர்களை சென்றடைய கூடிய வகையில் உரிய முறையில் செய்து வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி ஏதோ சுத்துறார்.. :D இதை நம்பிக் கெடப்போயினம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி ஏதோ சுத்துறார்.. :D இதை நம்பிக் கெடப்போயினம்..! :lol:

ஏன் என்னுடைய பிழைப்பில மண் அள்ளி போட குழுவாய் கிளம்பியிருக்குறீங்கள்?

அப்படி என்ன செய்துவிட்டேன் உங்களுக்கு?

பத்துப் பொருத்தம் பார்த்தும் - சில மணங்கள் முறிந்து போய்விடுகின்றன . பொருத்தம் பார்க்காமல் மணந்தவர்கள் கூட , மனம் ஒருமித்து வாழ்வதால் , வெற்றிகரமான தாம்பத்ய வாழ்வு வாழ்கின்றனர். பூர்வ புண்ணியம் பலமாக இருந்தால் , இறை அருள் என்றும் துணை நிற்கும். விதிப் படி நடக்கட்டும் என்று விட்டு விட்டால் , நல்லதோ , கெட்டதோ எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தானே.

வீட்டில் முதல் திருமணம் பொருத்தம் பார்க்காமல் செய்துவிட்டு, ஏதோ காரணத்தால் - மண முறிவு ஏற்பட்டு விட்டால், அடுத்த திருமணம் அவ்வாறு செய்ய துணிவு வராது. பொருத்தமில்லா ஜாதகமாக இருந்ததும் ஒரு காரணமோ? என்று நொந்து போகின்றனர்.

என் அனுபவத்தில், ஜாதகம் உண்மையோ , பொய்யோ - ஆனால் இவர் தான் மனைவி / கணவன் என்று அமைவது இருக்கிறதே , அது நிச்சயம் ஜென்மாந்திர தொடர்பு தான். திருமணம் ஆனா அன்பர்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன். அதே போல் , தான் குழந்தை பிறப்பும். கணவன் , மனைவி கையில் மட்டும் இல்லாத ஒரு விஷயம் . திருமணம் முடிந்து , உடனே / ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து இருந்தால் , அவர்களுக்கு இந்த உண்மை தெரியாது. ஒரு ஆறு மாதம், ஒரு வருடத்திற்கு பிறகு கரு உருவாகி இருந்தால், அவர்களுக்கு இது புரியும்.

சரி எதற்கு , இவ்வளவு பில்ட் அப் என்று கேட்கிறீர்களா? நம் முன்னோர்கள், சித்த புருஷர்கள் கூறிய படி , ஜாதகப் பொருத்தம் பார்ப்பது - இதற்கு ஒரு பொருத்தமான அணுகுமுறை என்று தோன்றுகிறது. சரி, பாடத்தைப் பார்ப்போம்.

திருமணப் பொருத்தம் என்பது; கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல் .

விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

இன்பமான குடும்ப வாழ்க்கைக்கு; மனப் பொருத்தம், புரிந்துணர்வு, அன்பு , பெருந்தன்மை, பரஸ்பர நம்பிக்கை, பிள்ளைப் பேறு, மகிழ்ச்சியான சிற்றின்ப வாழ்க்கை, அதிர்ஷ்டம் ஆகியன அடிப்படைத் தேவைகளாகும். இவற்றுடன் மாரக தோஷம் அற்றவர்களாகவும் அமையப் பெற்றவர்களின் குடும்ப வாழ்க்கை ஆயுட் காலம் வரை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

எனவே திருமணத்திற்கு மன பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் மிக முக்கியமானதாகும். கிரகப் பொருத்தம் இல்லாத மன பொருத்தம் தற்காலிகமானது. காலப் போக்கில் கிரகநிலை மற்றங்களினால் மனம் மாற்றமடைந்து குழப்பங்கள் ஏற்படலாம். ஆதலினால், நீடித்த மகிழ்ச்சியான தி்ருமண வாழ்க்கையை உறுதி செய்வதற்கு " ஜாதகப் பொருத்தம்" மிக கட்டாயமாகின்றது.

முக்கியமான பத்துப் பொருத்தங்களாவன:

1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.

1. நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி)

இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.

பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம். இந்த அமைப்பில் இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.

ஜன்ம நட்சத்திரம் முதல்:

10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்

7-வது நட்சத்திரம் வதம்

19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்

22-வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்

27-வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்

27-வது நட்சத்திரம் வேறு ராசி எனில் நீக்கவும், ஒரே ராசியாகில் உத்தமம்

ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.

பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.

ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.

மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லை. விலக்கப் படவேண்டும்.

ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின், வதம் என்றும், புருஷ நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின், வைநாசிகம் என்றும் சொல்லப்படும். இந்த வதம், வைநாசிகம் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால்; திருவாதிரைக்கு - உத்திரமும், பூரத்திற்கு - அனுஷமும்; பூசத்திற்கு - சித்திரையும்; புனர்பூசத்திற்கு - ஹஸ்தமும்; பூரட்டாதிக்கு - ரோகினியும் வதம்; வைநாசிகமானால் சுபம். கெடுதல் இல்லை.

உத்தராடத்திற்கு - ரேவதியும்; மூலத்திற்கு -பூரட்டாதியும்; பரணிக்கு - பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.

ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்ல. ஏக-ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.

சதயம், அசுவினி, ஹஸ்தம், ஸ்வாதி, கிருத்திகை,பூராடம், ரோகினி, மகம் இந்த 8ம் ஏக ராசிகளாகில் ஸ்திரீ முன்வந்தால் செய்யலாம்.

2. கணப்பொருத்தம்: (மங்களம்)

இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.

இதை; குணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள். பரந்த மனப்பான்மை, உயர்ந்த லட்சியங்கள், நன்னடத்தை, நல்ல குணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்; சாதாரணமான குணமும், புத்தியும், லட்சியங்களும், நோக்கங்களும் உடையவர்களை மனுஷகணம் என்றும்; முரட்டு குணமும், மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை ராட்சத கணம் என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது.

ஸ்திரீ, புருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. ஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய் இருந்தால் பொருந்தும்.

ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும். ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும், தேவ கணமும் பொருந்தாது.

(நட்சத்திரங்களும் அவற்றிற்கான கண விபரங்களையும் பஞ்சாங்கத்தில் பார்க்கவும்)

3. மகேந்திரப் பொருத்தம்: (சம்பத்து விருத்தி)

இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும். சம்பத்து கொடுக்கும்.

4. ஸ்திரீ தீர்க்கம்: (சகல சம்பத் விருத்தி)

இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.

பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால் பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)

5. யோனிப் பொருத்தம்: (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)

இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளாகில் ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:

குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு - ஆடு; பாம்பு - கீரி; மான் - நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.

6. ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)

இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.

பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்; பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு மேற்படினும் உத்தமம்.

பெண் ராசிக்கு புருஷன் ராசி 2-ஆயின் மிருத்து; 3-ஆயின் துக்கம்; 4-ஆயின் தரித்திரம்; 5-ஆயின் வைதவ்வியம்; 6-ஆயின் புத்திர நாசம். ரிஷபம் முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும் மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.

பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது.

7. ராசி அதிபதிப்-பொருத்தம்: (சந்ததி விருத்தி)

இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். இப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும. பொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

இருவர் இராசிகளும் ஒருவராயினும்; ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். மித்துருக்கள் அல்லாதவை சத்துருக்கள் - பொருந்தாது.

யார் யாருக்கு நண்பர்கள்..? பழைய பாடம் --- again ..!!

8. வஸ்யப்-பொருத்தம்: (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு)

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம். புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியமில்லாதது பொருந்தாது. இதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.

பெண் ராசி : ஆண் ராசி

மேஷம் : சிம்மம் , விருச்சிகம்

ரிஷபம் : கடகம், துலாம்

மிதுனம் : கன்னி

கடகம் : விருட்சிகம், தனுசு

சிம்மம் : மகரம்

கன்னி : ரிஷபம், மீனம்

துலாம் : மகரம்

விருச்சிகம் : கடகம், கன்னி

தனுசு : மீனம்

மகரம் : கும்பம்

கும்பம் : மீனம்

மீனம் : மகரம்

9. ரச்சுப் பொருத்தம்: (தீர்க்க சுமங்கலியாய் இருப்பது) ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.

கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.

சிரோ ரச்சு (சிர்ச்சு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

கண்ட ரச்சு (கழுத்து): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

நாபி ரச்சு (உதரம்) : கிருத்திகை , புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி

ஊரு ரச்சு (துடை) பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி

பாத ரச்சு (பாதம்): அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி

ஸ்த்ரீ, புருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம்.

ஒரே இரச்சுவானால்: பொருந்தாது.

சிரோ ரச்சு: புருஷன் மரணம்

கண்ட ரச்சு: பெண் மரணம்

நாபி ரச்சு: புத்திர தோஷம்

ஊரு ரச்சு: பண நஷ்டம்

பாத ரச்சு: பிரயாணத்தில் தீமை

10. வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)

தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது மாறி இருப்பின் பொருத்தம் உண்டு. ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.

அஸ்வினி - கேட்டை

பரணி - அனுஷம்

கார்த்திகை - விசாகம்

ரோகினி - சுவாதி

திருவாதிரை - திருவோணம்

புனர்பூசம் - உத்திராடம்

பூசம் - பூராடம்

ஆயிலியம் - மூலம்

மகம் - ரேவதி

பூரம் - உத்தராட்டாதி

உத்திரம் - பூரட்டாதி

அஸ்தம் - சதயம்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை

இந்த 10-பொருத்தங்களையும், ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

Read more: http://www.livingextra.com/2011/05/020.html#ixzz1sAiceTEH

கள்ள குறிப்புகள் மற்றும் தவறான கணிப்புகள் உள்ள் குறிப்புகளுக்கு இது பொருந்தாது.

ஒரே இராசிக்காரர்களை திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை காரணம் இருவருக்கும் ஒரே பலன்கள் நடப்பதால் நல்ல காலத்தில் ஓகோவெனவும் கஸ்ரகால நேரங்களில் மிகுந்த கஸ்டங்களையும் அனுபவிப்பார்கள்.உ+ம்:- இந்த வருடம் குடும்பம் பிரிய வேண்டிய பலன் இருந்தால் சுலபமாகப்பிரிந்துவிடும்.அதேபோல இரத்தவகைகள் முக்கியமாக ஆர் எச் அணுக்களின் தாக்கம் செவ்வாய் குற்றத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.செவ்வாய்போல மூலம் மற்றும் ஆயிலியம் நட்சதிரமுடையவர்களை மாமன் உள்ள வீட்டுக்கு ஏற்கமாட்டார்கள் (சரியான விளக்கம் தெரியாது)யோனிப்பொருத்தம் விளங்கி கொள்வது சரியான சுலபம் அதற்கு விவாதம் போடத்தேவையில்லை.ஆணுக்கு பெண் யோனியாகினும் பெண்ணுக்கு ஆண்யோனியாகினும் புணர்சியில் அந்த அந்த தன்மையுடன் நடந்துகொள்வார்கள்.அதேபோல இருவருக்கும் ஒரே யோனியாகின் ஒரினச்சேர்க்கை போன்றது. சிலருக்கு சுகம் குறைவு. ஒரு நாயையும் பாம்பையும் எடுத்துகொண்டால் அதன் உறவு கொள்ளும் நேரம் ஒரே அளவாகிருந்தாலும் அமைப்புகள் மற்றும் அளவுகளில் வித்தியாசம் உண்டு.ஆகவே பொருந்தாது.ஆகவே அளவும் நேரமும் முக்கியம். ஒரு ஆணுக்கு அவரின் தொப்புளில் இருந்து அரை வரையுள்ள துரத்தை அளந்து குறியின் அளவையும்,பெண்களுக்கு அவர்களின் வாய் மற்றும் உதடுகளை வைத்து குறியின் அமைப்பையும் தெரிந்துகொள்ளலாம்.எமக்கு பொருத்தம் பார்பதால் தான் முன்பின் தெரியாத ஒருத்தரோடு வாழ முடிகிறது.வெளி நாட்டில் எல்லாரும் தாங்களாய்தான் பொருத்தங்ளை தேடித்தேடி கன்னித்தன்மையை இழந்து நோய்வாய்பட்டு மற்றும் நீதிமன்றுகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர் வடிவேலுவின் குறிப்புகளில் திருடியவை.

(எல்லாவற்றிற்கும் மன்னிக்கவும்)

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

வட அமெரிக்காவில் பனிக்கரடி............. கரிபு என்று அழைக்கப்படும் ஒருவகை மரை இனத்தை சேர்ந்த மிருகம் எல்லாம் இந்த யோனி பொருத்தத்தில் உண்டு. அந்த அந்த நாட்டு நடப்புகளுக்கு ஏற்ப மூதையர்கள் அதை வகுத்துள்ளார்கள்.

ஜாதக பொருத்தம் என்பது இந்திய இலங்கையில் மட்டுமே புழக்கத்தில் உள்ளதால் மற்றைய நாடுகளுக்கான பொருத்த மாற்றங்களை யாரும் கற்பதில்லை.

ஜோதிடத்தில் உள்ள அனைத்தையும் முறைப்படி கற்கும் ஓர் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதுதான் எனது வாழ்வில் எனக்கு கடவுள் தந்த ஒரு பெரிய வரமாக எண்ணுகிறேன்.

மேலைநாடுகளில் பலருக்கு ஜாதகம் எழுதுவதில்லை. மேலை நாடுகளில் வசிக்கும் பலருடைய ஜாதகம் தொலைந்திருப்பதட்கு பல சாத்தியங்கள் உண்டு, அதவிட முக்கியமானது பலருக்கு சரியான முறையில் ஜாதகம் எழுதவடுவதில்லை. இவர்களுக்கெல்லாம் எந்த சிரத்தையும் இன்றி யோனியை பார்த்து சரியான முறையில் பொருத்தம் பார்ப்பதோடு ஜாதகமும் எழுதிகொடுத்து வருகிறேன்.

இதற்கு எந்த பணமும் அறவிடுவதில்லை..........

எனது கல்வியை சமூக சேவைக்கே பயன்படுத்ஹ்டுகிறேன் என்பதையும் அறிய தருகிறேன்!

எனக்கு சாமுந்திரிகா இலட்சணம் தெரியும். ஒரு பெண்ணின் கண் காது மூக்கு வாய் மற்றும் இன்ன பிற உறுப்புக்களை பார்பது இதை பார்த்தே அவர்களின் குண இயல்புகளை சொல்லி விடுவேன் இது எனது பாட்டனார் எனக்கு சொல்லித் தந்தவை நீங்களும் நானும் இணைந்த சேவையை வழங்கினால் பலரிற்கும் எமது அறிவும் சேவையும் பகிரப் படலாம். உங்கள் அனுமதி கிடைத்தால் தொடங்கலாம்.

இவருடைய கல்வித்துறையும் வேறு வேறாக இருந்தாலும் விடயம் ஒன்றாகி விடுவதால் நாங்கள் இணைந்து இந்த சேவையை சமூகத்திற்கு செய்வத் எனக்கும் நல்லதென படுகிறது.

அத்தோடு நீங்கள் கண் மூக்கு வாய் என்று........... நிற்பதால் எனக்கு எந்த இழப்பும் இல்லை.

நான் நேரடியாகவே களத்திலே இறங்கிவிடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவைகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கற்றுக்கொள்ள முடியாது.

குறைந்தது ஒரு இருபது வருடங்களை என்றாலும் உங்கள் வாழ்கையில் நீங்கள் இதற்காக செலவிட துணிந்தாலே குறைந்த பட்ச அடிப்படையை புரிந்துகொள்ள முடியும்.

"

இன்றிலிருந்து இவரை அண்ணா என்று மரியாதையாக அழைக்கவிருக்கின்றேன். அத்துடன் இத்தனை நாள் கொடுக்காத மரியாதைக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பு: இவருக்கு கல்யாணம் பேசப்படுகின்றது என இவரே எங்கா எழுதியதாக ஞாபகம் அந்தப்பொண்ணுக்கு எனது அனுதாபங்கள் :lol::D :D

ஒருநாளில் பதினைந்து மணித்தியாலங்களை கல்விக்காக செலவிட்டதால்..........

இருபது வருட படிப்பை ஒரு ஐந்து வருடத்திற்குள் முடிக்க கூடியதாக இருந்தது.

அதைவிட தற்போது இன்டர்நெட் பெரும் உதவியாக இருக்கிறது.

அதைத்தவிர ஒரு வயதிற்குள்தான் நிற்கிறோம்.

தமிழர் ஜாதகத்தை வைத்துக்கொண்டு யோனிப் பொருத்தம் எப்படி இருக்கும் என் யூகிக்கின்றனர். வெள்ளைக்காரர்கள் (ஏன் சில தமிழரும் தான்) செய்முறையில் கண்டு பிடிக்கிறார்கள்! :lol: :lol:

இதென்ன கோதாரி! :blink: பள்ளிக்கூட அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணுற பேப்பர் மாதிரி இருக்கு.... :huh::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.