Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓடிப் போனவள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

forest+and+moon.jpg

அந்தி சாயும்

அந்த வேளை..

அருவி கீதம் இசைக்க

அணில்கள் குத்தாட்டம் போட

அண்டங் காக்கைகள் ஆர்ப்பரிக்க

அழகிய தோப்பதில்

அன்புடன் நான்..!

ஆதவனின் மறைவோடு

ஆதாம் ஏவாள் நினைவோடு - நிலவை

ஆரத்தழுவும்

ஆதங்கத்துடன்

ஆகி நின்றது செக்கச் சிவந்து வானம்..!

இலைகளின் நடுவே

இளகிய இதழ் விரித்து

இனிமையாய் தேன் சொரிந்து

இளமையின்

இறுதி நேர உச்சம் கண்டு..

இன்புற்றுக் கொண்டிருந்தன பூக்கள்..!

ஈக்களின் கூட்டம்

ஈரம் கண்டு மொய்க்க

ஈகமே கொள்கை என்று

ஈடுகொடுத்து நின்றது காளான்..!

உற்றுப் பார்க்கிறேன்...

உறவுகள் யாரும் இல்லை

உதவிகள் எதுவுமில்லை..

உணவின்றி ஒட்டிய வயிறு

உயிரின் இறுதி முனகல்..

உணர்வுகள் மட்டும் எஞ்சிய நிலையில்....

உயிர்ப்புக்காய் ஏங்கும் புற்களின் நடுவே

உயிர்ப்புள்ள ஓர் நாய்... சுறுண்டே கிடந்தது..!

ஊரின் அழகு கூட்ட - வெட்டித் தொலைத்ததில்

ஊனமே ஆகிப் போன

ஊர் நாவல்

ஊமையாகி

ஊதிப் பொறுக்க நாலு பழங்கள் கொட்டி

ஊதிப் பெருத்து நின்றது தோப்பின் நடுவே..!

எண்ணி அன்னங்கள் ஐந்து

எட்டி அவை பிடிக்க

எவனும் இல்லை

என்ற துணிவில்

எடுப்பாய் அவை

என்னைக் கடந்து

எழில் தடாகம் வீழ்ந்து

எழில் கொஞ்ச நீச்சல் போட்டன

என் மனம் அதில் லயிக்க..!

ஏக்கங்கள் மனதில்

ஏது செய்வது..??!

ஏட்டிக்குப் போட்டியாய்

ஏன் இந்த மனிதன் மட்டும்..!!

ஏன் இந்தப் போட்டி பொறாமைகள்

ஏன் இன்னும் பேராசைகள்...

ஏன் இத்தனை அழிவுகள்..???!

ஐயனின் பார்வையோ

ஐக்கியமாகியது

ஐயம் களைந்து..

ஐந்தாய் வந்த.. அந்த அன்னங்கள் கண்டு..!

ஒருவாறு.. மன அமைதி கண்டு

ஒதுங்க நினைக்கிறேன்..!

ஒத்தடமாய் வீசிய தென்றல்

ஒரு தரம் நில் என்றது..!

ஓடும் வினாடிகள் முந்தி

ஓடியே வந்தாள்

ஓர் அழகு நங்கை.!

ஓடி வந்தவள் என் மடி சேர

ஓரம் கட்டலாம் - மனம் கணக்குப் போட

ஓய்வே இன்றி அவளும்

ஓட்டப் பயிற்சி செய்து...

ஓடும் காலம் போல.. கடந்தே போனாள்..!

ஒளடதம் ஏதும் இன்றி..

ஒளவையின் வரிகளில்

ஒளவையம் படிக்க நானும் முடிவு செய்தேன்..!

ஃதே எல்லாம் அமைய

ஃகேனம் போட்டு எழுதுகிறேன் முடிவுரை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அ,ஆ...ஓள, அருமை, நன்றாக இருக்கு,

தொடருங்கள்

உயிர் எழுத்துக்களைப் பாவித்து எழுதிய கவிதை நன்றாக உள்ளது.

பல விடயங்களை தொட்டுச் சென்ற கவிதைக்கு சில வினாடிகளே பாதித்த உணர்வை தலைப்பாக இட்டது பொருந்தவில்லை எனபது எனது தனிப்பட்ட கருத்து. அப்படியாயின் ஓடிக்கொண்டிருந்தவள் மீதான உணர்வுகளை இன்னும் விபரித்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார்.

ஆகா.. தப்பிலி.. நான் நினைச்சது போலவே நீங்கள் ஏமாந்திட்டீங்க. கிறுக்கலை ஆற அமர இருந்து படிச்சீங்கன்னா.... ஓடிப் போனவள் என்பது எதைக் குறிக்கிறது என்று புலப்படனும்..! (காலத்தை தான் பெண்ணாக உருவகித்து தலைப்புப் போட்டுள்ளேன்.. அந்தக் காலத்தில்.. அந்த மங்கை ஒரு கட்ட கால ஓட்டம்..! அவ்வளவே..!) :):icon_idea:

" ஏக்கங்கள் மனதில்

ஏது செய்வது..??!

ஏட்டிக்குப் போட்டியாய்

ஏன் இந்த மனிதன் மட்டும்..!!

ஏன் இந்தப் போட்டி பொறாமைகள்

ஏன் இன்னும் பேராசைகள்...

ஏன் இத்தனை அழிவுகள்..???! "

உங்கள் நியாயமன ஏக்கங்கள் புரிந்தாலும் , இவைகள் இல்லாவிட்டால் உலகம் அமைதிப்பூங்காவாக ஆகிவிடுமே நெடுக்கர் ? உங்கள் கவியாற்றல் இதில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது . எனது கல்லூரி நண்பனைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை . இதயங்கனிந்த வாழ்த்துக்கள் நெடுக்கர் .

Edited by கோமகன்

அருமையான கவிதை...

ஆச்சரியப்பட வைக்கின்றது!

இனி என்ன என்றபடி...

ஈழத்தை நோக்கியெம் எண்ணங்கள்,

உலகத்தை உலுப்பும் வரை

ஊண் உறக்கமின்றி

எழுந்து போராடி இன்னும்...

ஏக்கத்துடன் எம் இலட்சியங்கள்!!

ஐயமின்றி வெல்லும் எம் போராட்டம்

ஒன்றல்ல நூறாய் எழும்பினும்

ஓடி ஓடி ஒழியினும்,

ஒளடதமாய் அமைந்து வரும் வெற்றி

ஃதே எம் மாவீரர் கனவை நனவாக்கும்!!!

ஓடிப்போன போராட்டக் காலங்கள்

ஒளிந்துபோன எங்கள் வீரத்தை

ஓடிப்பொய் மீட்டுக்கொண்டு வரும்!

காலங்கள் ஓடிப்போவதில்தான்....

பல வரலாறுகள் பிறக்கின்றன!

நல்ல கவிதை நெடுக்ஸ்!

அகர வரிசையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாய் எழுதியிருக்கின்றீர்கள்!

பாராட்டுக்கள்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கள உறவுகளான கோமகன்.. மற்றும் கவிதை. உங்களின் ஆக்கமும் ஊக்கமும் மிக உற்சாகமளிக்கின்றன..! :)

Edited by nedukkalapoovan

...

அந்தி சாயும்

அந்த வேளை..

அருவி கீதம் இசைக்க

அணில்கள் குத்தாட்டம் போட

அண்டங் காக்கைகள் ஆர்ப்பரிக்க

அழகிய தோப்பதில்

அன்புடன் நான்..!

...

காலையில் உங்கள் கவிதையை மேலோட்டமாகப் படிக்கும் போது 'ஆர்ப்பரிக்க' என்பதனை 'ஆப்பிரிக்க' என்று வாசித்துக் ஒரு கணம் குழம்பிப் போனேன்... :lol: :lol: :D

அழகாகக் கவிதை எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள் நெடுக்ஸ்! :)

நன்றி உடையார்.

ஆகா.. தப்பிலி.. நான் நினைச்சது போலவே நீங்கள் ஏமாந்திட்டீங்க. கிறுக்கலை ஆற அமர இருந்து படிச்சீங்கன்னா.... ஓடிப் போனவள் என்பது எதைக் குறிக்கிறது என்று புலப்படனும்..! (காலத்தை தான் பெண்ணாக உருவகித்து தலைப்புப் போட்டுள்ளேன்.. அந்தக் காலத்தில்.. அந்த மங்கை ஒரு கட்ட கால ஓட்டம்..! அவ்வளவே..!) :):icon_idea:

மூன்றாம் தரம் வாசிக்க முழுதாக விளங்கியது. :icon_idea:

இப்படியான ஆக்கங்களுக்கு 'எச்சரிக்கை' அடையாளம் போட்டு விட்டால் நாங்களும் கவனமாக, அமைதியாக வாசிப்பம்தானே. :D

அருமையான கவிதை...

ஆச்சரியப்பட வைக்கின்றது!

இனி என்ன என்றபடி...

ஈழத்தை நோக்கியெம் எண்ணங்கள்,

உலகத்தை உலுப்பும் வரை

ஊண் உறக்கமின்றி

எழுந்து போராடி இன்னும்...

ஏக்கத்துடன் எம் இலட்சியங்கள்!!

ஐயமின்றி வெல்லும் எம் போராட்டம்

ஒன்றல்ல நூறாய் எழும்பினும்

ஓடி ஓடி ஒழியினும்,

ஒளடதமாய் அமைந்து வரும் வெற்றி

ஃதே எம் மாவீரர் கனவை நனவாக்கும்!!!

ஓடிப்போன போராட்டக் காலங்கள்

ஒளிந்துபோன எங்கள் வீரத்தை

ஓடிப்பொய் மீட்டுக்கொண்டு வரும்!

காலங்கள் ஓடிப்போவதில்தான்....

பல வரலாறுகள் பிறக்கின்றன!

நல்ல கவிதை நெடுக்ஸ்!

அகர வரிசையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாய் எழுதியிருக்கின்றீர்கள்!

பாராட்டுக்கள்! :)

நெடுக்ஸ் அண்ணா... நல்லதொரு கவிதை.. உங்கள் கவிதையாற்றல் இதில் தெரிகிறது.... கவி வரிகளின் தொடக்கமாக முதல் வரை பாவித்திருக்கிறீர்கள்... :o :o

இயற்கையை விபரித்துள்ள முறை மிகவும் நன்றாக உள்ளது... பின் கடந்து சென்ற(ஓடிப்போன) காலத்தை பற்றி தொடர்புபடுத்தியுள்ளீர்கள்...

எனக்கு ரசனைகள் பிடிக்கும்... :) உங்கள் கவிதையில் அதை பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டது... நன்றி இந்த கவிதைக்கு... :)

நீங்கள் இன்னும் பல கவிதைகள் எழுத என் வாழ்த்துகள்... :)

ஏக்கங்கள் மனதில்

ஏது செய்வது..??!

ஏட்டிக்குப் போட்டியாய்

ஏன் இந்த மனிதன் மட்டும்..!!

ஏன் இந்தப் போட்டி பொறாமைகள்

ஏன் இன்னும் பேராசைகள்...

ஏன் இத்தனை அழிவுகள்..???!

நல்ல அர்த்தமுள்ள வரிகள்...

ஆனால் நல்லதொரு கவிதைக்கும் இப்படியொரு தலைப்பா கிடைத்தது... ??? :o :o

நீங்கள் காலத்தை பெண் என்று குறிப்பிட்டாலும் தலைப்பை பார்த்து விட்டு நீங்கள் பெண்களை பற்றி கேவலமாக எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தே இந்த கவிதையை வாசிக்காமல் விட்டுவிடுவார்கள்... :(

அருமையான கவிதை...

ஆச்சரியப்பட வைக்கின்றது!

இனி என்ன என்றபடி...

ஈழத்தை நோக்கியெம் எண்ணங்கள்,

உலகத்தை உலுப்பும் வரை

ஊண் உறக்கமின்றி

எழுந்து போராடி இன்னும்...

ஏக்கத்துடன் எம் இலட்சியங்கள்!!

ஐயமின்றி வெல்லும் எம் போராட்டம்

ஒன்றல்ல நூறாய் எழும்பினும்

ஓடி ஓடி ஒழியினும்,

ஒளடதமாய் அமைந்து வரும் வெற்றி

ஃதே எம் மாவீரர் கனவை நனவாக்கும்!!!

ஓடிப்போன போராட்டக் காலங்கள்

ஒளிந்துபோன எங்கள் வீரத்தை

ஓடிப்பொய் மீட்டுக்கொண்டு வரும்!

காலங்கள் ஓடிப்போவதில்தான்....

பல வரலாறுகள் பிறக்கின்றன!

நல்ல கவிதை நெடுக்ஸ்!

அகர வரிசையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்ததாய் எழுதியிருக்கின்றீர்கள்!

பாராட்டுக்கள்! :)

கவிதை அண்ணா,நீங்கள் எழுதிய பதில் கவிதையும் நன்றாக உள்ளது.. பச்சை முடிந்து விட்டது.. நாளைக்கு போடுறன்...

நீங்களும் பல கவிதைகள் எழுத வாழ்த்துகள்.. :) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்கச்சி உங்கட கருத்திற்கு..! :)

அருமையான கவிதை நெடுக்ஸ்.

காலத்தைப் பற்றி எழுதினாலும் எனக்கு தோன்றுவது வேறு.

" உன்னை எண்ணிப்பார்க்கையில் கவிதை கொட்டுது"

" அதே அதே தான். அபிராமி, அபிராமி...... " :lol:

ஜமாயுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை நெடுக்ஸ்.

காலத்தைப் பற்றி எழுதினாலும் எனக்கு தோன்றுவது வேறு.

" உன்னை எண்ணிப்பார்க்கையில் கவிதை கொட்டுது"

" அதே அதே தான். அபிராமி, அபிராமி...... " :lol:

ஜமாயுங்கள்.

நான் யாரையுமே எண்ணிப் பார்க்கல்ல.. நான் என்னிலையை.. மனிதரின் நிலையை..இயற்கையின் நிலையை.. காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தேன்..! அவ்வளவும் தான் அண்ணா. :)

அதற்காக உங்கள் கற்பனைக்கு நான் தடைவிதிக்க மாட்டேன். அதுவும் இந்த இடத்தில் அழகு தான் அண்ணா..! :):lol:

யாழ் களத்தில் நான் வியக்கும் சகலதுறை எழுத்தாளர் நெடுக்கின் மற்றுமொரு நல்ல படைப்பு

ஊரின் அழகு கூட்ட - வெட்டித் தொலைத்ததில்

ஊனமே ஆகிப் போன

ஊர் நாவல்

ஊமையாகி

ஊதிப் பொறுக்க நாலு பழங்கள் கொட்டி

ஊதிப் பெருத்து நின்றது தோப்பின் நடுவே..!

இந்தப் பந்தியில் பொருட்குற்றம் இருப்பது போல எனக்குப் பட்டது. உண்மையில் இருக்கிறதா? அல்லது நான் வாசித்துப் புரிந்து கொண்டது தவறா என்பதை கவிஞர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் நான் வியக்கும் சகலதுறை எழுத்தாளர் நெடுக்கின் மற்றுமொரு நல்ல படைப்பு

ஊரின் அழகு கூட்ட - வெட்டித் தொலைத்ததில்

ஊனமே ஆகிப் போன

ஊர் நாவல்

ஊமையாகி

ஊதிப் பொறுக்க நாலு பழங்கள் கொட்டி

ஊதிப் பெருத்து நின்றது தோப்பின் நடுவே..!

இந்தப் பந்தியில் பொருட்குற்றம் இருப்பது போல எனக்குப் பட்டது. உண்மையில் இருக்கிறதா? அல்லது நான் வாசித்துப் புரிந்து கொண்டது தவறா என்பதை கவிஞர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

நன்றி மணிவாசகன்.

அது ஒரு பொருட் குற்றமா.. இல்லையா என்பதற்கான பதிலை இப்படம் சொல்லும்.. :)

dscn1445.jpg

நாவல் உவமையாகி.. உதாரணமாகி நிற்கிறது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

அருமை

வாழ்த்துக்கள்

தொடருங்கள் :icon_idea:

(தற்போது தான் பார்த்தேன். தாமதத்திற்கு வருந்துகின்றேன்)

ஓ! அந்தளவிற்கு நான் சிந்திக்கவில்லை. பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை

வாழ்த்துக்கள்

தொடருங்கள் :icon_idea:

(தற்போது தான் பார்த்தேன். தாமதத்திற்கு வருந்துகின்றேன்)

நன்றி விசுகு அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் தலைப்பைப் பார்த்ததும் நுனிப்புல் மேய்ந்துவிட்டுச் சென்றுவிட்டேன். :)

இரண்டாம் மூன்றாம் முறை வாசித்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

உணவின்றி ஒட்டிய வயிறு

உயிரின் இறுதி முனகல்..

உணர்வுகள் மட்டும் எஞ்சிய நிலையில்....

உயிர்ப்புக்காய் ஏங்கும் புற்களின் நடுவே

உயிர்ப்புள்ள ஓர் நாய்... சுறுண்டே கிடந்தது..!

இந்தவரிகள் பிடித்திருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

"அ "தொடங்கி " ஃ" வரை எழுதிய கவிதை சூப்பர்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்விற்கு நன்றி வாத்தியார் மற்றும் புத்து..! :)

  • கருத்துக்கள உறவுகள்

ookoo! akaa :) :) neduks hai :lol:

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ookoo! akaa :) :) neduks hai :lol:

Hey boz.. how r u..?! i c u after longtime... :lol::D

வாங்க முனிவர் ஜீ.. ஆளை தான் காணவே கிடைக்குதில்லையே..! நலம்.. நலமறிய ஆவல்..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.