Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1. 1986இல் ரெலோ இயக்கத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

2. முஸ்லிம் மக்கள் முழுமையாக தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை

தமிழீழப்போராட்டத்தில் பெரும்தாக்கங்களை செய்த இந்த இரு கறைபடிந்த நிகழ்வுகளுக்கும் புலிகள் மட்டுமே காரணமா???

அவர்கள் மட்டுமே பதில் சொல்லணும் என எதிர்பார்க்கின்றீர்களா?

  • Replies 205
  • Views 28.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் பதிவை மட்டுப்படுத்தப்பட்ட சுய தணிக்கையுடனேயே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் இன்றைய அரசியல் சூழல். இதன் காரணமாகவே இசைக் கலைஞனால் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு தனிமடலில் பதிலளித்திருந்தேன். அவரும்; ஏன் கருத்துக் களத்தில் பதிலளிக்கவில்லை என்று எதிர்க் கேள்வி கேட்காமல் என்னைப் புரிந்து கொண்டார்.

சிங்கள இனவெறி அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தாயகத் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குமு; அவர்களுக்கு இழைக்க்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியாக நியாயம் கிடைப்பதற்குமான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில் சில விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதற்கான காலம் கனிந்து விடவில்லை என நினைக்கிறேன்.

ஆனாலும் தமிழர் விடுதலைப் போராட்டாத்தின் போது தொடர்ச்சியாக நான் வெளிப்படையாக முன்வைக்கின்ற விமர்சனங்களாக இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.

1. 1986இல் ரெலோ இயக்கத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

2. முஸ்லிம் மக்கள் முழுமையாக தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை

இந்த விடயங்களை நான் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறேன். போராட்டக் களத்திலிருந்த பலரிடம் கூட வெளிப்படையாக முன்வைத்திருக்கிறேன்.

இன்றைய சூழலில் இந்த விடயம் குறித்து மேலதிகமாக அலச விரும்பவில்லை.

ஆனாலும் மனச்சாட்சியுள்ள தமிழர்கள் அனைவர் மனதிலும் இந்த விடயங்கள் குறித்த சரியான ஒரு பார்வை இருக்கும் என்பதே என்னுடைய நம்பிக்கை.

நீங்கள் பாவிக்கின்ற அநேக சொல்லாடல்களோடு.. எனக்கு யதார்த்த சூழலில் வாழ்ந்தவன் என்ற வகையில் உண்மைக்குப் புறம்பாக உடன்பட முடியவில்லை.

1986 இல் ரெலோ இயக்கத்தினர் மீதான தாக்குதல்.. என்ற பதமே தவறானது..! ரெலோ உள் முரண்பாடு (பொபி குறூப்.. தாஸ் குறூப்) பற்றியும்.. யாழ் வைத்தியசாலையில் வைத்து அவர்கள் மோதிக் கொண்டது தொடர்பிலும்.. பின்னர் அந்த முரண்பாட்டை விடுதலைப்புலிகள் மீதான வெறியாட்டமாக மாற்ற முற்பட்டதும்.. அதன் தொடர்ச்சியாக ரெலோ மீதான தடை கொணரப்பட்டதும்.. மக்கள் இவற்றை காரணம் இன்றி ஏற்றுக் கொள்ளவில்லை. காரணத்தோடு தான் ஏற்றுக் கொண்டு.. 1986 இல் இருந்து 2009 வரை சுமார் 23 வருடங்கள் ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ரெலோ மீதான தடை கொண்டு வரப்பட்டு.. சரணடைய கால அவகாசமும் வழங்கப்பட்டு.. பின்னர் ரெலோ.. அந்த கால அவகாசத்தை புலிகள் மீதான எதிர்தாக்குதலுக்கு பயன்படுத்தப் போய்.. அது.. இரு தரப்பு சகோதரப் படுகொலைகளில் போய் முடிந்தது. இந்த நிலையை ரெலோ.. இதய சுத்தியோடு மக்கள் நலனோடு கருதி அன்று செயற்பட்டிருந்தால் நிச்சயம் தடுத்திருக்க முடியும். ஆனால்.. அன்று யார் பெரிசு என்ற வெறி.. இந்த நிலையை அங்கு தோற்றிவித்தது. அது துர்ப்பாக்கியமான ஒன்று. இன்று அவர்கள் அதனை காலம் பிந்தி உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது.

முஸ்லீம்கள் 1990 இல் சிங்களச் சூழ்சியில் இருந்து எழுந்ததான ஆபத்தில் இருந்து.. அவர்களின் பாதுகாப்புக் கருதி வெளியேறக் கேட்கப்பட்ட நிலையில்.. வந்த சூழலை.. இதய சுத்தியோடு ஆராயாத வரை.. எவரும் எதனையும் எழுதிச் செல்லலாம்.

சிவன் பண்ணை வீதிச் சம்பவம் தொடர்பில்.. அந்த வீதி தென்னங்குத்திகளால் மறிக்கப்பட்டு.. உள்ளூர் ஊரடங்கு முஸ்லீம் இளைஞர்களால் போடப்பட்டது.. வரை.. எவ்வளவே கஸ்டங்கள் அந்தப் பகுதி தமிழ் மக்கள் சார்பில் நாங்களும் தரிசித்தே இருக்கிறோம். அதேபோல் அடாத்தாக தமிழ் மக்களின் வீடுகளில் வந்து மிரட்டி குடியிருக்க முற்பட்ட பல சம்பவங்களும்.. கஸ்தூரியார் வீதிப் பகுதியில் நிகழ்ந்திருந்தது.

நிச்சயம்.. நாங்கள் எதனையும் வெளிப்படையாக எழுதத் தயங்கமாட்டோம். ஏனெனில்.. நாங்கள் கண்டதை அனுபவித்ததைத் தான் எழுதுகிறோம். திரிபுகளை அல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப்போராட்டத்தில் பெரும்தாக்கங்களை செய்த இந்த இரு கறைபடிந்த நிகழ்வுகளுக்கும் புலிகள் மட்டுமே காரணமா???

அவர்கள்  மட்டுமே  பதில் சொல்லணும் என  எதிர்பார்க்கின்றீர்களா?

இப்ப புலிகள் இல்லாதபடியால் அவர்கள்தான் பொறுப்பு என பல முன்னாள் தேசிய தூண்களும் விரும்புகிறார்கள் ....தமிழன்மட்டும் நேர்மையாகவும் நியாயமாகவும் போராடியிருக்க வேண்டும் என்பது பலரின் தற்போதைய எண்ணம்.....</p>

Edited by putthan

  • தொடங்கியவர்

குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை என்பது வேறு. ஒட்டு மொத்த குழு மீதான தாக்குதல் என்பது வேறு.

டெலோ இயக்கத்தில் இன்று கொல்லப்பட்ட அத்தனை தமிழ் இளைஞர்களும் குற்றவாளிகளா? இவர்களில் எத்தனை பேர் தமிழ் இனம் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக மட்டும் டெலோவில் இணைந்து கொண்டவர்கள்?

அன்றைய தினம் விடுதலைப் புலிகளின் கைகளில் அகப்பட்டிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தலைவர் பிரபாகரனின் தாயாரை இறுதியில் வைத்துப் பராமரித்த சிவாஜிலிங்கம் ஆகியோரின் கதியென்ன?

83ம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழீழமே ஒரு தீர்வு என்ற வெறியோடு இயக்கங்களில் இணைந்து கொண்ட பலர் பல்வேறு இயக்கங்களைத் தெரிந்தெடுத்தார்கள். அவ்வாறே அவர்களின் தெரிவு டெலோவாக இருந்திருக்கக் கூடும். இத்தகைய கொலைகள் விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்தன

அது மட்டுமன்றி அவ்வாறு கொல்லப்பட்ட பலர் எத்தகைய விதத்தில் கொல்லப்பட்டனர். இதனையெல்லாம் நீங்கள் ஒத்துக் கொள்கிறீரகளா? அதிலும் டெலோ இயக்கத் தலைவர் நான் வாழ்ந்த கொக்குவில் பகுதிக்கு மிக அண்மையில் வைத்துக் கொல்லப்பட்டதால் அவர் எவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.

தவறுகளே செய்யாதவர்கள் உலகத்திலே யாருமே இருக்க முடியாது. அதுவும் பலதரப்பட்டவர்களை இணைத்துக் கொண்ட ஒரு இயக்கத்திலே தவறுகள் இடம்பெறத்தான் செய்யும். டெலோ இயக்கம் மீதான தாக்குதல் என்பது தலைவரால் அல்ல இன்னொருவரின் கட்டளையி;ன் பேரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்த பல விடயங்களை அந்தக் காலத்தில் இயக்கத்தில் இணைந்திருந்த பலர் நிச்சயம் அறிந்திருப்பார்கள். இவ்வாறான ஒரு தவறினாலேயே அந்த அழிவு ஏற்பட்டது. நிகழ்ந்த தவறுகள் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகள் என்பவற்றை ஆய்ந்தறிந்து மீண்டும் ஒருமுறை அந்தத் தவறைச் செய்யாமல் தவிர்ப்பதே முன்னேற்றத்திற்கான வழி.

அதை விடுத்து தவறுகளை நியாயப்படுத்த முயல்வது விமோசனத்திற்கான வழியாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப்போராட்டத்தில் பெரும்தாக்கங்களை செய்த இந்த இரு கறைபடிந்த நிகழ்வுகளுக்கும் புலிகள் மட்டுமே காரணமா???

அவர்கள் மட்டுமே பதில் சொல்லணும் என எதிர்பார்க்கின்றீர்களா?

இவற்றால் பெரிய தாக்கங்கள் என்று சொல்ல முடியாது.

முஸ்லீம்களுக்குள் இருந்த போலி சகோதரத்துவக் கோசத்தை ஒன்று வெளிக்கொணர்ந்தது. இன்றேல் இன்றும் அந்தப் பதங்களூடு.. துரோகங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கவே வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஏமாற்றங்களே மிஞ்சி இருக்கும். இன்று இவர்கள் தொடர்பில் அவதானமாக நிதானமாக செயற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிங்களவர்களும் இவர்களைப் பற்றி நன்கே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

தங்கள் உள் முரண்பாடுகளை மக்களின் போராட்டத்தை இலட்சியக் கனவை சிதைப்பதனூடு கூட வளர்க்கலாம் என்று நினைத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பாடமாகவும் ரொலோவின் அன்றைய நிலைப்பாடும் அதற்கு காலம் இட்ட பதிலும் அமைந்திருந்தது..! ஆனால் சகோதரப் படுகொலைகள் ஒரு சிறிய இனமான எம் மத்தியில் ஏற்றுக் கொள்ளக் கூடிவை அல்ல.

1986 இல் இருந்து.. 2009 வரை தலைவர் எத்தனையோ சவால்களை விஞ்சித்தான் போராட்டத்தை நகர்த்தி வந்தார். ஒருவேளை.. இந்த இரண்டு நகர்வுகளும் செய்யப்பட்டிராவிட்டால் போராட்டம் இதற்கு முன்னரே முடிந்து போயும் இருக்கலாம்..! அப்படியான ஒரு திசை குறித்தும் நாம் சிந்திக்க ஆராயத் தவறக் கூடாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

நீங்கள் பாவிக்கின்ற அநேக சொல்லாடல்களோடு.. எனக்கு யதார்த்த சூழலில் வாழ்ந்தவன் என்ற வகையில் உண்மைக்குப் புறம்பாக உடன்பட முடியவில்லை.

1986 இல் ரெலோ இயக்கத்தினர் மீதான தாக்குதல்.. என்ற பதமே தவறானது..!

நெடுக்ஸ் குறுக்கிடுவதற்கு (அல்லது நெடுக்கிடுவதற்கு) மன்னிக்கவும். 1986ம் ஆண்டு உங்களுக்கு ஒன்பது வயது இருக்குமா? அதாவது மூன்றாம் வகுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் தமது தவறுக்காக மன்னிப்பு கோரி வடக்கில் மீண்டும் குடியேறுமாறு முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டனர்.எந்த ஒரு இனப்படு கொலைக்கும் கிழக்கில் முஸ்லிமாக இருக்கட்டும் அல்லது தெற்கில் சிங்களவராக இருக்கட்டும் இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை.அத்தோடு கிழக்கில் பல தமிழ் கிராமங்களில் முஸ்லிம்களால் விரட்டப்பட்ட மக்கள் அகதிகளாக இன்றும் வாழ்கிறார்கள்.புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் வடக்கில் வாழ எந்த தடையும் இல்லை.

புத்தகசாலைக்கு முன்னுள்ள சாவகச்சேரியில் மிகப்பெரிய முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையத்தில் இருந்து அரசுக்கு தகவல்கள் வழங்கிய உரிமையாளர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டார்.

பல ஈ.பி.டி.பியின் தீவிர ஆதரவாளர்கள் தொடக்கம் உறுப்பினர்கள் வரை குடும்பமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.அவர்களாகவும் இந்திய இராணுவத்துடன் சென்றார்கள்.

  • தொடங்கியவர்

ஆயுத ரீதியான எமது போராட்டம் விஞ்சிக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டிருந்த போதிலும் நான் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் சர்வதேச ரீதியில் எமக்கெதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் பெரும் துணையானது என்பது உண்மை.

ஒட்டு மொத்த சர்வதேசமும் எமது போராட்டத்தை நசுக்கத் துணைநின்றதற்கு இதுவும் ஒரு காரணம். (இது மட்டும் காரணமல்ல)

எனவே தவறுகளிலிருந்து பாடங்கற்றுக் கொண்டு எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே தாயகத் தமிழர்களின் விடிவிற்கான வழியாக இருக்க முடியும்.

  • தொடங்கியவர்

கருத்துக்களிற்கு நன்றி நுணாவிலான்.

விடுதலைப் புலிகள் அதற்காக மன்னிப்புக் கேட்ட பின்பும் அதனை நியாயப்படுத்துபவர்கள் பற்றியே நான் குறிப்பிட்டிருந்தேன்

.ஈபிடிபி உறுப்பினர்கள் வெளியெற்றப்பட்டது போல குற்றமிழைத்த முஸ்லிம்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதிலோ அல்லது வெளியேற்றப்படுவதிலோ எந்தத் தவறும் கிடையாது. ஆனால் ஒட்டுமொத்தமாக இயக்கத்திலிருந்தவர்கள் கூட வெளியேற்றப்பட்டது தான் தவறு.</p>

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை என்பது வேறு. ஒட்டு மொத்த குழு மீதான தாக்குதல் என்பது வேறு.

டெலோ இயக்கத்தில் இன்று கொல்லப்பட்ட அத்தனை தமிழ் இளைஞர்களும் குற்றவாளிகளா? இவர்களில் எத்தனை பேர் தமிழ் இனம் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக மட்டும் டெலோவில் இணைந்து கொண்டவர்கள்?

அன்றைய தினம் விடுதலைப் புலிகளின் கைகளில் அகப்பட்டிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தலைவர் பிரபாகரனின் தாயாரை இறுதியில் வைத்துப் பராமரித்த சிவாஜிலிங்கம் ஆகியோரின் கதியென்ன?

83ம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழீழமே ஒரு தீர்வு என்ற வெறியோடு இயக்கங்களில் இணைந்து கொண்ட பலர் பல்வேறு இயக்கங்களைத் தெரிந்தெடுத்தார்கள். அவ்வாறே அவர்களின் தெரிவு டெலோவாக இருந்திருக்கக் கூடும். இத்தகைய கொலைகள் விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்தன

அது மட்டுமன்றி அவ்வாறு கொல்லப்பட்ட பலர் எத்தகைய விதத்தில் கொல்லப்பட்டனர். இதனையெல்லாம் நீங்கள் ஒத்துக் கொள்கிறீரகளா? அதிலும் டெலோ இயக்கத் தலைவர் நான் வாழ்ந்த கொக்குவில் பகுதிக்கு மிக அண்மையில் வைத்துக் கொல்லப்பட்டதால் அவர் எவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும்.

தவறுகளே செய்யாதவர்கள் உலகத்திலே யாருமே இருக்க முடியாது. அதுவும் பலதரப்பட்டவர்களை இணைத்துக் கொண்ட ஒரு இயக்கத்திலே தவறுகள் இடம்பெறத்தான் செய்யும். டெலோ இயக்கம் மீதான தாக்குதல் என்பது தலைவரால் அல்ல இன்னொருவரின் கட்டளையி;ன் பேரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்த பல விடயங்களை அந்தக் காலத்தில் இயக்கத்தில் இணைந்திருந்த பலர் நிச்சயம் அறிந்திருப்பார்கள். இவ்வாறான ஒரு தவறினாலேயே அந்த அழிவு ஏற்பட்டது. நிகழ்ந்த தவறுகள் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகள் என்பவற்றை ஆய்ந்தறிந்து மீண்டும் ஒருமுறை அந்தத் தவறைச் செய்யாமல் தவிர்ப்பதே முன்னேற்றத்திற்கான வழி.

அதை விடுத்து தவறுகளை நியாயப்படுத்த முயல்வது விமோசனத்திற்கான வழியாக இருக்க முடியாது.

தவறுகளை நியாயப்படுத்துவதல்ல நோக்கம். தவறுகளுக்கான வாய்ப்புக்களை ஏன் ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று ஆராய்வதனூடு தவறுகள் பெருகக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம்.

புலிகள் மட்டும் தவறு செய்ததாகச் சொல்லிக் கொண்டிருப்பதால்.. இல்லாத புலிகளால் என்ன பலன் உங்களுக்கு விளையப் போகிறது.

இன்று ரெலோ.. மிஞ்சி இருக்கிறது. ஈபி இருக்கிறது. புளொட் இருக்கிறது. ஈபிடிபி இருக்கிறது. கருணா இருக்கிறார். பிள்ளையான் இருக்கிறார். ஈரோஸ் இருக்கிறது. புலிகள் இல்லை.

முடிஞ்சது எல்லாம் முடிஞ்சுது. இவர்களின் பெருந்தடை.. என்று நீங்கள் வர்ணிக்க விளையும் புலிகளும் தலைமையும் இல்லை..!

இந்தச் சந்தர்ப்பத்திலாவது.. இவர்கள் மக்களின் விருப்பைப் பெற்று.. மக்களின் பொது விருப்பான தமிழீழத்தை அடைய உழைக்க உங்களால் இவர்களை ஒற்றுமைப்படுத்த முடியுமா..??!

இதனை உங்களுக்கான சவாலாக விடுகிறேன்..! இவர்களை தமிழ் மக்கள் இன்றும் அடைய விரும்பும்.. தமிழீழத்தை அமைத்துக் கொடுக்க உங்களால் இணைக்க முடியும் என்றால்.. ஒரு அமைப்பின் கீழ் இவர்கள் எல்லோரையும் உங்களால் இணைக்க.. புலிகள் மீதான விமர்சனங்களை நீங்கள் பாவிப்பீர்கள் என்றால்.. நிச்சயம்.. அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். உங்களால் அது முடியுமா..??!

நிச்சயம் முடியாது என்பது தான் யதார்த்தம். காரணம்.. இவர்களின் நோக்கம் இலட்சியம் காப்பதோ அடைவதோ அல்ல. மக்கள் மீது சவாரி செய்வது மட்டுமே. இந்த வகையில் தான் மக்கள் புலிகளை நோக்கி ஒரு கேள்வி கூடக் கேட்டதில்லை.. ஏன் பிள்ளையள் இப்படி செய்யுறீங்கள் என்று.

ஆம் ரெலோவின் சண்டையின் போது.. கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்று சொல்லி கவலைப்படும் தாங்கள்.. சரணடையச் சொல்லியும் மறுத்து சண்டையில் ஈடுபட்டு.. விடுதலைப்புலிகளைக் கொன்றது பற்றி ஏன் உங்களால் கருத்துச் சொல்ல முடியவில்லை..! சமரசம் பேசக் கூப்பிட்டு வைச்சு போட்டுத்தள்ளினது பற்றி ஏன் உச்சரிக்க முடியவில்லை..???! அல்லது பயப்பிடுறீங்க..???!

இப்படியான ஒரு நிலையில்.. இந்த வாதங்கள் அனைத்துமே புலிகள் மீதான ஒரு பக்க பாதக விமர்சனங்களாக கொட்டப்படுகின்றனவே தவிர உண்மைகளை சரியான திசையில் இருந்து.. வெளிக்கொணரவும்.. தவறுகளை சரியான நடுநிலையோடு.. இனங்கண்டு திருத்தி.. ஒற்றுமைப்படுத்தி அடைய வேண்டிய இலக்கை அடையவும்.. இவை எள்ளளவும் உதவப் போறதில்லை.

புலிகளை விமர்சித்துக் கொண்டிருப்பதால்.. சிங்களம் படை விலக்கி தீர்வை தரும் .. முன்னாள் இயக்கங்கள்.. துரோக நிலை களைந்து.. ஒற்றுமைப்பட்டு தமிழீழம் அமைக்கும் என்பது எல்லாம் பகற் கனவு. சிங்கள அரசு இந்த விமர்சனத்தில் இருந்து தான் தப்பிக்க வழி தேடும். துரோகிகள்.. தங்களை நியாயப்படுத்திக் கொண்டு மக்கள் முன் வெள்ளை வேட்டியோடு வந்து பிழைப்பையும் துரோகத்தையும் தொடர்வார்கள். அதற்கான வரிகளையே யாழ் களம் இன்று அடுக்கிக் கொண்டிருக்கிறது. புலிகள் மீதான மீள் பார்வையின் நோக்கமும் இதுவே. இது முள்ளிவாய்க்காலில் ஈழக்கனவோடு மரணித்துப் போன ஜீவன்களுக்கு நிரந்தர குழி தோண்டும் முயற்சியின் தொடர்ச்சி என்பது மட்டும் தெளிவு..!

தொடருங்கோ...! கேட்பம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனவே தவறுகளிலிருந்து பாடங்கற்றுக் கொண்டு எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே தாயகத் தமிழர்களின் விடிவிற்கான வழியாக இருக்க முடியும்.

இனிமேல் ஒரு ஆயுதப்போராட்டம் எம்மத்தியில் உருவாகப்போவதில்லை எனவே இப்படியான தவறுகளும் நடைபெற சந்தர்ப்பமும் இல்லை...இந்த தவறுகளை நாம் இரைமீட்டு எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்ல என்பது எனது கருத்து....

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களிற்கு நன்றி நுணாவிலான்.

விடுதலைப் புலிகள் அதற்காக மன்னிப்புக் கேட்ட பின்பும் அதனை நியாயப்படுத்துபவர்கள் பற்றியே நான் குறிப்பிட்டிருந்தேன்.

முஸ்லீம்களை தனியே பிடித்து வைத்து விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் விடுதலைப்புலிகளால் முடியவில்லை. இந்தியப் படைகளின் காலத்தில் பிள்ளை பிடித்த கும்பல்களுக்கு எதிராக முஸ்லீம்கள் ஒற்றுமையாக நின்றதால்.. TNA க்கு ஆட்பிடிக்க.. இந்தியப் படைகள் கூட சிவன் பண்ணை வீதிப்பக்கம் போக பயப்பிட்டன..!

இப்படியான ஒரு சூழலில்... விடுதலைப்புலிகள்.. குற்றவாளிகளைப் பிடிச்சு தண்டிக்கிறது என்பது.. முழு முஸ்லீம்களையும் பிடிச்சு தண்டிப்பதாகவே காட்டப்பட்டிருக்கும்.

அந்த நிலையில் தான்.. விடுதலைப்புலிகள் மாற்று வழி பற்றி யோசித்து முடிவெடுத்தார்கள்.

விடுதலைப்புலிகள் மன்னிப்புக் கேட்க வேண்டிய அளவிற்கு பிரச்சாரங்களை சிங்கள அரசும்.. துரோகிகளும்.. முஸ்லீம்களை திசை திருப்பி.. முன்னெடுத்திருந்தார்களே ஒழிய.. புலிகள் செய்தது தவறு என்பதற்காக மன்னிப்புக் கேட்ட வேண்டி இருந்திருப்பின்.. அதனை 1990 இலேயே கேட்டிருப்பார்கள். 2002 தாண்டி காத்திருக்க வேண்டியோ.. அதனால் ஏற்பட்ட பாதகங்களை சந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையோ அவர்களுக்கு இருந்திருக்காது..!

ஏன் நீங்கள்... இதனை உணர.. ஏற்க மறுக்கிறீர்கள்..???! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் குறுக்கிடுவதற்கு (அல்லது நெடுக்கிடுவதற்கு) மன்னிக்கவும். 1986ம் ஆண்டு உங்களுக்கு ஒன்பது வயது இருக்குமா? அதாவது மூன்றாம் வகுப்பு?

அதை விடக் குறைவு தான். கேள்விப்பட்ட சம்பவங்களை வைத்து... பின்னர் நான் கேட்டு.. தேடி அறிந்து கொண்டவை அதிகம்..! உண்மைகளை நாங்கள் தெரிந்து கொண்டமை அதிகம். அதற்கான தொடர்புகள் இருந்தன.

யாழ் இந்துக் கல்லூரியில் எங்கள் ஆசிரியர்கள் நிறையவே விடயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் அதிகம் உண்மைகள் இருந்தன..! சான்றுகள் இருந்தன..! :icon_idea:

இங்கு பதியப்படும் பல கருத்துக்களை வாசிக்க சிங்களவன் தமிழர்களுக்கு செய்யும் அநியாயங்களை

நியாயப்படுத்துவதற்கு ஒப்பானதாக இருக்கின்றது.

பிழை செய்தால் அது பிழைதான் ,அதில் நியாயப்படுத்தல் ,தேவைக்காக செய்தல் என்றெல்லாம் ஒன்றுமில்லை .

சிங்களம் இன்று அதைத்தான் செய்கின்றது .

இன்னும் ஒன்றை விட்டுவிட்டீர்கள்,

ராஜீவை கொலை செய்ததை விட மோட்டுத்தனம் வேறொன்றுமில்லை .(அதையும் புலிகள் செய்யவில்லை என்று தயவு செய்து வந்து சொல்லவேண்டாம்)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சர்வதேசத்தை நோக்கி ஒர் அரசியல் தீர்வுக்காக நகர்ந்து கொண்டு இருக்கிறோம் பிழை விட்டால் பிழையை ஒத்துக் கொள்ளுங்கள்...மகிந்த அரசு எங்கே பிழை விட்டது,புலிகள் எங்கே பிழை விட்டார்கள் என சர்வதேசத்திற்கு தெரியும்...விட்ட பிழையையும் மறுத்து நாங்கள் பிழையே விடவில்லை என சொல்வதால் தான் நாங்கள் உண்மையைச் சொன்னாலும் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள் அத்தோடு அதை ஏற்றுக் கொள்கிறார்களும் இல்லை...உண்மையில் புலியின் தீவிர எதிரி புலியின் தீவிர ஆதரவாளர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்வோர் தான் அதை அவர்கள் இத்தனை அழிவுக்கு பின்னரும் உணரவில்லை என்பது தான் வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் ஏற்றுக் கொள்ளனும் என்பதற்காக.. செயற்பட்ட நோக்கத்தை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. அமெரிக்காவின் பல செயற்பாடுகள் ஒன்றும் மற்றைய நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அல்ல. இருந்தாலும் அமெரிக்கா அவற்றை இராணுவ மற்றும் பொருண்மிய பலத்தால் செய்கிறது.

உங்கள் சிலருக்கு.. புலிகளின் தவறு தான் கண்ணுக்குத் தெரிகிறது. புலிகளை விட மற்றவர்கள் செய்த தவறுகளும் எமது போராட்டத் திசையை மாற்றி அமைத்த கொடுமைகளும் உங்களுக்குத் தெரிவதில்லை. அதைத்தான் நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஏதோ புலிகளால் தான் எல்லாம் அழிந்தது என்பது போல.. கற்பனை உலகில் நீங்கள் சிலர் தவிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எமது ஆயுதப் போராட்ட தோல்விக்கு புலிகள் ஒற்றைக் காரணம் என்று சொல்லி நீங்கள் தப்பிக்க நினைக்கலாம். ஆனால் அதன் பின்னால் எம்மவர்களின் சுயநல பொருண்மியம் தேடும்.. அசைல வாழ்வில் இருந்து பல காரணங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. துரோகிகளின் துரோகங்கள் இன்றும் எமது அரசியல் நிலையை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றை எடுத்துச் சொல்பவர்கள்.. கடும் போக்கு தேசியவாதிகள் ஆக்கப்படுகின்றனர். இது ஒன்றும் எம்மவர்களில் புதிதும் அல்ல..!

இப்போது கூட நீங்கள் எல்லாம் அரசியல் செய்ய செத்துப் போன போராளிகளின் மரணங்களும் அந்த போராளிகளோடு மடிந்து போன மக்களினதும் மனித உரிமைகள் தான் உதவி நிற்கின்றன. ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வும் புகலிடத்திலும் புலத்திலும் ஆகோ ஓகோ என்று இருக்கிறது. இதெல்லாம் நீங்களாக முயன்று உருவாக்கியவை அல்ல. போராட்டம் என்ற ஒன்றை ஆதாயமாக்கி நீங்கள் பெற்றுக் கொண்டவை..!

விடுதலைப்புலிகள் மீது தவறு காண்பவர்கள்.. தங்கள் மீதான தவறுகளை மீளாயவோ.. தங்களைச் சரி செய்யவோ தயார் இல்லை. அது முஸ்லீம்களாகட்டும் சிங்களவர்களாகட்டும். துரோகிகள் ஆகட்டும். அவர்கள் இப்போதும்.. புலிகள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சாதிக்க முனைய அவர்களுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு.. நியாயத்தை குழிதோண்டிப் புதைக்கும் அறிவிலித் தனமே இங்கெல்லாம் விஞ்சி நிற்கிறது. துரோகங்களும்.. போராட்ட சீரழிவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன விடுதலை என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அது பற்றிய எந்த ஆராய்தலும் எவரிடமும் இல்லை. இருப்பதெல்லாம் புலிகள் பற்றிய மீளாய்வும்.. குற்றச் சுமத்தலும் அடிக்கடி விவாதப் பொருளாகின்றன.

சர்வதேசம் கூட விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களை முதன்மைப்படுத்தாமல் விட்டுள்ள நிலையில்.. எம்மவர்கள் அதுவும்.. போராட்ட காலத்தில் புலிக்கொடி ஏந்தி புலி வால் பிடித்தவர்களே இன்று எதிரிகளுக்கும் சர்வதேசத்திற்கும் தங்களின் போராட்ட சுயத்தை திறந்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மறுக்க யாருமற்ற நிலையில்.. உண்மைகள் வெளிப்பட வாய்ப்பற்ற நிலையில்.. புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்பது.. மிக இலகுவானது. ஆனால் அதன் விளைவுகள் என்பது மிக மோசமானவையாக இருக்கும் என்பதை உணர முடியாதவர்கள்.. நிச்சயம்.. விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களின் மீதான போலித் தன்மைகள் குறித்து ஆராய முன்வர மாட்டார்கள்.

ஆராய்பவர்களையும் தேசிய வாதிகளாக இனங்காட்டிக் கொண்டு.. அவற்றை தங்களுக்குரிய அறிவு மட்டத்தில் மறுதலித்துக் கொண்டு.. தங்கள் அன்றாட வாழ்வின் சுகபோகங்களுக்குள் கட்டுண்டே கிடப்பார்கள். இவர்களுக்கு தங்கள் மட்டில் பாதிப்பு வந்தால் அன்றி.. புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களூடு.. சமத்துவம்.. இன செளயண்ணியமும் பேசி பொழுது கழிப்பதை விட வேறு எதனையும் செய்யவும் வராது. இதுதான் இங்கு உண்மை ஆகும்..! இவர்களால் நன்மை பெறுவது எதிரியும்.. துரோகிகளுமே ஆவர். மக்களோ.. விடுதலையோ அல்ல..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இனிமேல் ஒரு ஆயுதப்போராட்டம் எம்மத்தியில் உருவாகப்போவதில்லை எனவே இப்படியான தவறுகளும் நடைபெற சந்தர்ப்பமும்  இல்லை...இந்த தவறுகளை நாம் இரைமீட்டு எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்ல என்பது எனது கருத்து....

உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது புத்தன்.இனியொரு ஆயுதப் போராட்டம் உருவாகக் கூடாது என்பத தான் என் விருப்பமும். ஆனால் தற்போதைய கள நிலைமையில் படையினரின் மோசமான அடக்குமுறைக்கு மத்தியில் சிங்கள அரசாங்கத்தின் கோரமான இன அடக்குமுறைக்கு மத்தியில் எதுவும் நடக்கலாம்.அடுத்ததாக ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் எமது உரிமைக்கான போர் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கும் பழைய போராட்டத்தின சில தவறுகள் பாடமாக அமையும்.

பெரும்பாலான நேரங்களில் யதார்த்தமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் என்ற வகையில்

..முடியல.....சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது வாசித்ததால் பிரக்கேறிப் போட்டுது :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவை கொலை செய்ததை விட மோட்டுத்தனம் வேறொன்றுமில்லை .(அதையும் புலிகள் செய்யவில்லை என்று தயவு செய்து வந்து சொல்லவேண்டாம்)

ராஜீவைக் கொன்றதை விட மோட்டுத்தனம்.. றோவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாலைதீவைப் பிடித்தது.

அதன் மூலம் ஈழப் போராட்டமும் போராட்ட சக்திகளும் பிராந்திய அச்சுறுத்தல் உள்ள பயங்கரவாதமாக புளொட்டின் மூடத்தனமான நடவடிக்கையால் எழுதி வைக்கப்பட்டது.

அதன் பின் விளைவுகளில்.. முள்ளிவாய்க்காலும் ஒன்று..! இதையெல்லாம் நுட்பமாக ஆராய நமக்கு தெரியவும் மாட்டுது.. புலிக் காய்ச்சல் அதற்கு இடமளிக்கவும் போறதில்லை..!

ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கிய கொடுமையை செய்தவர் டக்கிளஸ் தேவனந்தா. அவர் தான் அமெரிக்க அலன் தம்பதிகளை கடத்தி வைத்து கொண்டு.. பேரம் பேசி.. எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை அமெரிக்கா அடியோடு நிராகரித்து.. பயங்கரவாதமாக உச்சரிக்கச் செய்த பெருமைக்குரியவர்.

இப்படி.. எல்லா மாற்று இயக்கங்களும் தங்களால் ஆன அதிஉச்ச பங்களிப்போடு எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கிவிட்டு.. இறுதில்.. எல்லாம் பழியையும் புலிகள் மீது போட்டுவிட்டு... தாங்கள் என்னவோ.. ஜனநாயவாதிகள் போல வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால்.. சர்வதேசம் இவர்களை சரியான இனங்கண்டுள்ளது. அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபை.. புளொட்டின் வவுனியா சித்திரவதை முகாம்கள்.. மற்றும் ஈபிடிபி கொலைகள் ஆட்கடத்தல்கள்.. கிழக்கில்.. கருணா பிள்ளையானின் ஆட்கடத்தல்கள் கொலைகள் குறித்து எச்சரித்திருந்தது. அதுமட்டுமன்றி சிறீலங்கா வெளியிட அமெரிக்கா முதன்மைப்படுத்திய LLRC அறிக்கையில்.. இந்த குழுக்களின் மக்கள் விரோத செயற்பாடுகள் விலாவாரியாக விபரிக்கப்பட்டுள்ளன. இவை குறித்த மீளாய்வுகளும் கிடையா.. பார்வைகளும் கிடையா. அதெல்லாம் அப்படியே துரோகங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கலாம். ஆனால்.. புலிகள் மட்டும் மீளாயப்பட்டு தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம்.. துரோகிகள் தங்கள் மக்கள் விரோத அரசியல் செய்து.. வயிறு வளர்த்துக் கொள்ள வேண்டும்..!

உங்களின் நிலைப்பாடு என்பது..மக்கள்.. விடுதலையோ.. தமிழீழமோ.. கேட்கக் கூடாது. சிங்களவனோடு இணக்கப்பாட்டுக்குப் போய் கிடைப்பதை பெற்று வாழ்ந்து கொள்ள வேண்டியதுதான். இதுதான் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து விட்டு.. ஊர் ஊரா அசைலம் அடிச்சு பிழைப்பு நடத்தும் உங்கள் போன்ற அறிவாளிகளின் அறிவுரை. இதனை நீங்களே கேட்க மாட்டீர்கள். சர்வதேசம் கேட்குமாக்கும். போய் வேற.. வேலை இருந்தாப் பாருங்க சார்.

சர்வதேசத்திற்கு யார் பலசாலி.. யார் பயங்கரவாதி.. யார் என்ன அரசியல் செய்யினம் என்பது நல்லாவே தெரியும். மக்களுக்கும் அது தெரியும். எனியும் கிலோ கணக்கில் அவிக்கலாம் என்று நினைப்பது வீண்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சர்வதேசம் ஏற்றுக் கொள்ளனும் என்பதற்காக.. செயற்பட்ட நோக்கத்தை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. அமெரிக்காவின் பல செயற்பாடுகள் ஒன்றும் மற்றைய நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அல்ல. இருந்தாலும் அமெரிக்கா அவற்றை இராணுவ மற்றும் பொருண்மிய பலத்தால் செய்கிறது.

உங்கள் சிலருக்கு.. புலிகளின் தவறு தான் கண்ணுக்குத் தெரிகிறது. புலிகளை விட மற்றவர்கள் செய்த தவறுகளும் எமது போராட்டத் திசையை மாற்றி அமைத்த கொடுமைகளும் உங்களுக்குத் தெரிவதில்லை. அதைத்தான் நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஏதோ புலிகளால் தான் எல்லாம் அழிந்தது என்பது போல.. கற்பனை உலகில் நீங்கள் சிலர் தவிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எமது ஆயுதப் போராட்ட தோல்விக்கு புலிகள் ஒற்றைக் காரணம் என்று சொல்லி நீங்கள் தப்பிக்க நினைக்கலாம். ஆனால் அதன் பின்னால் எம்மவர்களின் சுயநல பொருண்மியம் தேடும்.. அசைல வாழ்வில் இருந்து பல காரணங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. துரோகிகளின் துரோகங்கள் இன்றும் எமது அரசியல் நிலையை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றை எடுத்துச் சொல்பவர்கள்.. கடும் போக்கு தேசியவாதிகள் ஆக்கப்படுகின்றனர். இது ஒன்றும் எம்மவர்களில் புதிதும் அல்ல..!

இப்போது கூட நீங்கள் எல்லாம் அரசியல் செய்ய செத்துப் போன போராளிகளின் மரணங்களும் அந்த போராளிகளோடு மடிந்து போன மக்களினதும் மனித உரிமைகள் தான் உதவி நிற்கின்றன. ஆனால் உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வும் புகலிடத்திலும் புலத்திலும் ஆகோ ஓகோ என்று இருக்கிறது. இதெல்லாம் நீங்களாக முயன்று உருவாக்கியவை அல்ல. போராட்டம் என்ற ஒன்றை ஆதாயமாக்கி நீங்கள் பெற்றுக் கொண்டவை..!

விடுதலைப்புலிகள் மீது தவறு காண்பவர்கள்.. தங்கள் மீதான தவறுகளை மீளாயவோ.. தங்களைச் சரி செய்யவோ தயார் இல்லை. அது முஸ்லீம்களாகட்டும் சிங்களவர்களாகட்டும். துரோகிகள் ஆகட்டும். அவர்கள் இப்போதும்.. புலிகள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சாதிக்க முனைய அவர்களுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு.. நியாயத்தை குழிதோண்டிப் புதைக்கும் அறிவிலித் தனமே இங்கெல்லாம் விஞ்சி நிற்கிறது. துரோகங்களும்.. போராட்ட சீரழிவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன விடுதலை என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அது பற்றிய எந்த ஆராய்தலும் எவரிடமும் இல்லை. இருப்பதெல்லாம் புலிகள் பற்றிய மீளாய்வும்.. குற்றச் சுமத்தலும் அடிக்கடி விவாதப் பொருளாகின்றன.

சர்வதேசம் கூட விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களை முதன்மைப்படுத்தாமல் விட்டுள்ள நிலையில்.. எம்மவர்கள் அதுவும்.. போராட்ட காலத்தில் புலிக்கொடி ஏந்தி புலி வால் பிடித்தவர்களே இன்று எதிரிகளுக்கும் சர்வதேசத்திற்கும் தங்களின் போராட்ட சுயத்தை திறந்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மறுக்க யாருமற்ற நிலையில்.. உண்மைகள் வெளிப்பட வாய்ப்பற்ற நிலையில்.. புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்பது.. மிக இலகுவானது. ஆனால் அதன் விளைவுகள் என்பது மிக மோசமானவையாக இருக்கும் என்பதை உணர முடியாதவர்கள்.. நிச்சயம்.. விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களின் மீதான போலித் தன்மைகள் குறித்து ஆராய முன்வர மாட்டார்கள்.

ஆராய்பவர்களையும் தேசிய வாதிகளாக இனங்காட்டிக் கொண்டு.. அவற்றை தங்களுக்குரிய அறிவு மட்டத்தில் மறுதலித்துக் கொண்டு.. தங்கள் அன்றாட வாழ்வின் சுகபோகங்களுக்குள் கட்டுண்டே கிடப்பார்கள். இவர்களுக்கு தங்கள் மட்டில் பாதிப்பு வந்தால் அன்றி.. புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களூடு.. சமத்துவம்.. இன செளயண்ணியமும் பேசி பொழுது கழிப்பதை விட வேறு எதனையும் செய்யவும் வராது. இதுதான் இங்கு உண்மை ஆகும்..! இவர்களால் நன்மை பெறுவது எதிரியும்.. துரோகிகளுமே ஆவர். மக்களோ.. விடுதலையோ அல்ல..! :):icon_idea:

போரட்ட காலத்தில் இடம்பெற்ற சில தவறுகளைப் பற்றித் தொட்டுப் பேசியதுமே துரோகிப் பட்டம் சு+ட்டுவதையும் புலிகளுக்கு எதிரானவர்கள் எனப் பறைசாற்றுவதிலும் உங்களைப் போன்ற சில காகிதப் புலிகள் ஈடுபட்ட காரணத்தால் தால் பல விமர்சனங்கள் முடங்கிப் போயின. அதன◌ால் தமிழினம் இழந்தவை அதிகம். துதி பாடிப் பெயர் சேர்த்தவர்களும் பின்னர் அடங்கிப் போயினர். ஆனால் நான் இந்த விமர்சனங்களை நேரடியாகச் சம்பந்தப்பட்டிவர்களிடமே முன்வைத்திருக்கிறேன். அதுவும் அவர்பபள் பலமாக இருந்த சந்தர்ப்பத்திலேயே முன்வைத்திருக்கிறேன்.சர்வதேசத்தின் கருத்துக்களைச் செவிமடுக்காது சிறிதளவு நெகிழ்வுத் தன்மையின்றி நாம் செயற்பட வேண்டும் என்னும் உங்களுடைய கூப்பாட்டை சர்வதேச அரசியல், இராஜதந்திரம் என்பவற்றின் ஆரம்ப அரிச்சுவடு தெரிந்தவர்களே எந்தளவு ஏற்றுக் கொள்வார்கள் என்பது புரியவில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேசத்தின் மிகப் பெரும் வல்லரசு செயற்படுவதைப் போல தமிழ் மக்களும் செயற்பட வேண்டும் என்ற உங்களின் அங்கலாய்ப்பிற்கு என்னிடம் பதில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

..முடியல.....சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது வாசித்ததால் பிரக்கேறிப் போட்டுது :icon_idea: :icon_idea:

நீங்கள் ஒரு மட்டுறுத்தினர்.. களப் பொறுப்பாளர்.. நீங்களே உங்களை நீங்களே இயற்றிய களவிதிக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை.. இதற்குள்.. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது..!

நீங்கள் மட்டும் நக்கல் அடிக்கத் தெரிந்தவர் என்பது உங்களுக்கே கொஞ்சம் ஓவரான விடயம். தலைப்புக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாது நீங்கள் இன்றைய நாளில் எழுதும் இரண்டாவது கருத்து இது. முதலாவது கருத்து.. உங்கள் கவிதைத் தலைப்பில்..!

நீங்கள் எல்லாம் உங்களையே மீளாய்வு செய்து பார்க்க முடியவில்லை. போராட்டத்தைப் புலிகளை மீளாய்வு செய்ய முண்டி அடிப்பதுதான்.. வேதனைக்குரிய அவலம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

போரட்ட காலத்தில் இடம்பெற்ற சில தவறுகளைப் பற்றித் தொட்டுப் பேசியதுமே துரோகிப் பட்டம் சு+ட்டுவதையும் புலிகளுக்கு எதிரானவர்கள் எனப் பறைசாற்றுவதிலும் உங்களைப் போன்ற சில காகிதப் புலிகள் ஈடுபட்ட காரணத்தால் தால் பல விமர்சனங்கள் முடங்கிப் போயின. அதன◌ால் தமிழினம் இழந்தவை அதிகம். துதி பாடிப் பெயர் சேர்த்தவர்களும் பின்னர் அடங்கிப் போயினர். ஆனால் நான் இந்த விமர்சனங்களை நேரடியாகச் சம்பந்தப்பட்டிவர்களிடமே முன்வைத்திருக்கிறேன். அதுவும் அவர்பபள் பலமாக இருந்த சந்தர்ப்பத்திலேயே முன்வைத்திருக்கிறேன்.சர்வதேசத்தின் கருத்துக்களைச் செவிமடுக்காது சிறிதளவு நெகிழ்வுத் தன்மையின்றி நாம் செயற்பட வேண்டும் என்னும் உங்களுடைய கூப்பாட்டை சர்வதேச அரசியல், இராஜதந்திரம் என்பவற்றின் ஆரம்ப அரிச்சுவடு தெரிந்தவர்களே எந்தளவு ஏற்றுக் கொள்வார்கள் என்பது புரியவில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேசத்தின் மிகப் பெரும் வல்லரசு செயற்படுவதைப் போல தமிழ் மக்களும் செயற்பட வேண்டும் என்ற உங்களின் அங்கலாய்ப்பிற்கு என்னிடம் பதில் இல்லை.

இதுவும் இன்றைய வழமை. ஒருவர் நீங்கள் புலிகள் மீது முன்வைக்கும் விமர்சனத்துக்கு எதிராக பதில் அளித்தால்.. அவர் தேசியவாதி..! துரோகிகளின் பண்பை இனங்காட்டி எழுதினால்.. அதில் நீங்களே உங்களை அடக்கிக் கொண்டு.. துரோகி என்று பட்டம் கொடுக்கிறான். காகிதப் புலி.. கண்ணாடிப் புலி... என்று கொண்டு... வழமையா புலிகளை விமர்சிப்பவர்கள்.. செய்யும் அதே தப்பிக்கும் தந்திரோபாயத்தையே நீங்களும் கையாள்கிறீர்கள்.

இதையெல்லாம் விட்டு வெளில வாருங்கள். செயல் அளவில் உங்களுக்கு உங்களில் நியாயம் இருப்பின்.. எவனோ ஒருவன் துரோகி என்பதால் நீங்கள் துரோகி ஆகிவிடப் போவதில்லை என்ற உளமார்ந்த நிஜச் சிந்தனை இருக்குமாயின்.. இப்படியான கருத்துக்கள் முளைக்கவே மாட்டா..! இவை பலவீனத்தின் அறிகுறிகளாகவே கணிக்கப்படும்..!

இராஜதந்திரம் என்பது.. பெரியாக்கள் குந்தி இருந்து கதைக்கிற விசயம் அல்ல. இராஜதந்திரம் என்பது கள யதார்த்தத்தை சரியாக விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் இருந்து களம் பற்றிய எதிர்காலத்தை சரிவர எதிர்வு கூறும் தன்மையில் இருந்து பிறக்கிறது. இதற்கு பெரிய அறிவாளியா இருக்கனும் என்ற அவசியம் இல்லை..! 8 வகுப்பு படித்த கருணாநிதி செய்கின்ற அளவு இராஜதந்திரத்தை மெத்தப் படிச்ச மேதாவிகள் செய்ய முடியாது..!

அமெரிக்காவிற்கு அடுத்தவனின் குறை கேட்டுக் கொண்டிருப்பதல்ல.. வேலை. தனது இலக்கு நோக்கி பயணிப்பதே குறிக்கோள். ஆனால் நீங்கள் பலரோ அடுத்தவன் முன் வைக்கும் உங்கள் மீதான குறைகளை அலசி ஆராய்ந்து கொண்டு.. அடுத்த இலக்கை மறந்து போய் விடுகிறீர்கள். அதுதான் இன்றைய தமிழர்களின் அரசியல் அவல நிலைக்கு முக்கிய காரணம். இதையே தான் தமிழர்கள் அமெரிக்காவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

..முடியல.....சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது வாசித்ததால் பிரக்கேறிப் போட்டுது :icon_idea: :icon_idea:

ஐயோ சாமி உதுக்குத்தான் சொல்றது தண்ணியை பக்கத்தில வைச்சிருக்கச் சொல்றது. :o:lol:

பிரபாகரனிற்கும் ஸ்கொலசிப் கிடைத்திருந்தால் இலண்டனில் வந்திருந்து புனைபெயரில் இணையத்தில் போராட்டத்தை நடத்தியிருப்பார். பாவம் அவருக்கு ஒழித்திருந்து எப்படி இணையத்தில் போராட்டம் நடத்துவது என்று தெரியாமல் போய் விட்டது

எழுதுபவர் ஈழ தேசத்தில் இருந்தால் கோயில் கட்டுவன் நான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.