Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Featured Replies

என்னபா பெயர் மாறிகொன்டு போகிது???????????????????????????????????? :unsure::rolleyes::wub:

  • Replies 205
  • Views 28.7k
  • Created
  • Last Reply

மனசாட்சிக்கு விரோதமாக எழுதுவதிலும் பார்க்க எழுதாமல் இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகனுக்கும் மனச்சாட்சிக்கும் இடையிலான உரையாடல்

மணிவாசகன் : சில பேர் சொல்வது போல நீயும் துரோகியா?

மனச்சாட்சி: இன்றைக்குப் புலம்பெயர் தேசத்தில் மிக இலகுவாகக் கிடைக்கக் கூடிய பட்டம் அதுதான். இந்தப் பட்டத்தை எனக்கு வழங்கத் தயாராயுள்ள ஒருவர் தனது மேதாவித்தனத்தைக் காட்ட அப்படி நடந்து கொள்கிறாரே தவிர உண்மையில் என்னைப் பற்றி அவருக்க அப்படியான ஒரு எண்ணம் இருக்காது.

என்னைப்பொறுத்தவரை

தமிழீழ மக்களின் விடுதலை மூச்சு பற்றிய தெளிவுள்ள எவருக்கும் இதுபோன்ற பயங்கள் வரா.

எம்மை விட்டுவிட்டு தமிழரது தாயகம் சம்பந்தமாக உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்.

அவன் இப்படிச்சொல்கின்றான் இவன் இப்படிச்சொல்கின்றான் என்பதல்ல தங்கள் சிக்கல். நீங்கள் எதைச்சொல்ல வருகின்றீர்கள்? ஏன் சொல்ல வருகின்றீர்கள்? அதனால் தமிழுக்கும் மாவீரர் கனவுக்கும் பலன் அல்லது பாதகம் என்ன?

உங்களுக்கே நான் செய்வது துரோகத்தனமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. வேறு யாரும் தங்களுக்கு துரோக பட்டம் கொடுத்ததைத நான் இங்குகு காணவில்லை. இதுவும் ஒரு பசன் தற்போது ? நானும் துரோகியா என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்மானின் தம்பி யேம்ஸ் பொறுப்பேற்று மறுநாள் நீர்வேலியில் கெலி அடித்து வீரமரணம் ஆனார் (அவர்களின் ஒரு தங்கையும் பின்பு ஒருதாக்குதலில் வீரமரணம் ஆனார்)

Major.James, captain Vasu,captain suthari( valvettithurai)

நன்றி திருத்ததிற்கு.

பொன்னம்மான் அவர்களுடன் வீர மரணமான வாசு என்றுதான் எழுத வந்தேன்..............

பொன்னம்மான் என்று எழுதிவிட்டு . அதை திரும்ப வாசிக்காமலும் விட்டுவிட்டேன்.

மனசாட்சிக்கு விரோதமாக எழுதுவதிலும் பார்க்க எழுதாமல் இருக்கலாம் .

நாங்கள் பலமுறை எழுதியது............

அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் . தருணத்தில் உங்களுக்கு கொப்பி அடிக்க ஆவது பயன்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்து விட்டு யாரோ மணிவாசகனுக்கு போட்டியாக கதை எழுதத் தொடங்கிட்டார்களோ என நினைத்தேன்...எல்லோரும் வந்து எழுதச் சொல்லி கெஞ்சினாலா எழுதுவீர்கள் திரு மணிவாச‌கன் அவர்களே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

யாம் பெற்ற இன்பம் பெறுக மணிவாசகா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

எழுத வந்ததை எழுதுங்கள், எனக்கும் இங்கு யாழ் களத்தில் என இனரிதியாக, இனவாதத்துடன் வரும் கருத்துகளை பலரும் வலு இலகுவாக எழுதுகிறார்கள் என்ற ஆதங்கம் உள்ளது. எங்களின் பொது எதிரி சிங்கள பேரினவாதமே தவிர சாதாரண சிங்களமக்கள் கூட இல்லை. அந்த சிங்கள பேரினவாதமே எங்களை மற்ற இன மக்களுடன் முரண்பட வைத்து தனது இலக்கை அடைகிறது. நாங்கள் பிழைகளில் இருந்து பாடம் படிக்காவிடில் நட்டம் எமக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

மணி,

நிறையவே மனச்சாட்சியோடு போராடுகிறீர்கள் என்று தெரிகிறது. உண்மையான படைப்பாளியால் மனச்சாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு எழுத்துக்களில் விலாசம் தேடமுடியாது மனச்சாட்சியுடன் நியாயத்திற்கான தேடலை இலாவகமாக எழுதுவது என்பது ஒரு கலை,. அக்கலை எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. வார்த்தைகளில் பொறுமையும் நீண்ட சகிப்புத்தன்மையும் இல்லாவிட்டால் இத்தகைய விடயங்களில் வெற்றியடைய முடியாது. துரோகிப்பட்டம் என்பது மிகவும் மலிவானது ஒரு சதத்திற்கேனும் பெறுமதியற்றது. எவரும் எவரையும் துரோகிப்பட்டியலில் இட்டு விளம்பரம் செய்யலாம். இது அரிய செயல் இல்லை ஆளுக்கால் நாளாந்தம் ஒவ்வொரு நிமிடமும் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பதம் அவ்வளவே.... அண்மையில் ஒரு நண்பர் என்னை மாற்றுக்கருத்தாளர்களுடைய ஒரு நிகழ்வுக்குச் சென்றதற்காக.... சகாறா என்கிற அதி புத்தியீவியும் கலந்து கொண்டார் என்று மிகவும் ஏளனமாகக் கதைத்தார். எனக்குப் புரியவில்லை. மாற்றுக்கருத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஒரு படைப்பாளியாக அறிந்து வைப்பதில் தவறென்ன இருக்கிறது? படைப்பாளிகளை பொத்திவைக்க முடியாது...தம்மைச்சுற்றியிருக்கும் நன்றும் தீதும்அவர்களே அறிவார்கள். நன்றை அணைக்கவும், தீதை விலத்தவும் அவர்கள் பொது வெளிக்கு வந்தால்தான் அவர்களுக்குப் புரியும். பொதுவெளிக்கே போவது தவறு என்று எவரும் தடைபோடமுடியாது..... மணி எழுதுங்கள்.... ஒரு விடயத்தை ஏற்புடையதாக ஆக்குவதும் அற்றதாய் ஆக்குவதும் உங்கள் திறனாய்வில் இருக்கட்டும்.... நீண்ட இடைவெளிக்குப்பின்னர் எழுத முற்பட்டீர்கள்...நிறுத்தவேண்டாம் தொடருங்கள்.

மணிவாசகன், எனது பதிவால் உங்கள் திரி திசை மாறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

உங்கள் பதிவு தொடரட்டும்.

  • தொடங்கியவர்

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த நான்கு தினங்களாக வேலைப் பழு காரணமாகவும் யாழ் களம் இயங்காத காரணத்தாலும் (எனது கணணியில்) களத்திற்கு வர முடியவில்லை.

கருத்திட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி.

இன்னும் சில பதிவுகளை விரைவில் பதிவிடுகிறேன். ஒரு விடயம் நம்மில் பலர் அறிந்து வைத்திருக்கிற அல்லது ஒரு இனம் குறித்து மனதில் பதிந்திருக்கிற எண்ணத்திலிருந்து விடுபட்டு ஒரு இனக்குழுமத்திற்கு என ஒரு குணம் இல்லை. மனிதர்களின் பல்வேறு குண இயல்புகள் காரணமாக பல்வேறு விதத்தில் நடந;து கொள்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கப்பட்ட பதிவு இது என்பதால் ஏனைய இனத்தவர்களின் வெள்ளைப் பக்கங்களையே இந்தத் திரி அதிகமாகத் தாங்கி வருகிறது. இதனைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இனங்களின் குறிப்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களால் (குறிப்பாகப் படையினர்) நாம் சந்தித்த கறுப்புப் பக்கங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத கொடூரங்கள் கொலைகள் பாலியல் வல்லுறவுக்கள் சித்திரவதைகள் பற்றி நான் எழுத வேண்டிய அவசியமில்லை. இலங்கையின் வடக்கில் கிழக்கில் வாழ்ந்த ஒவ்வொரு சகோதரனிடமும் சகோதரியிடமும் இது குறித்த ஒரு அனுபவமாவது இருக்கும்.

வடக்கு கிழக்குத் தமிழர்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் முழுமையான தப்பபிப்பிராயங்களைக் கொண்டிருந்தார்கள். கொண்டிருக்கிறார்கள். இதற்கு பிரதான காரணம் ஊடகங்கள். அவை தமிழர் தொடர்பான கறுப்படையாளங்களையே சிங்களவர்களிடம் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதன் விளைவு பெரும் கொடியது.

இது பற்றிய பதிவுடனும் கருத்தாளர்களிட்ட பதிவுகளுக்கான பதில்களுடனும் விரைவில் சந்திக்கிறேன்.

நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில பதிவுகளை விரைவில் பதிவிடுகிறேன். ஒரு விடயம் நம்மில் பலர் அறிந்து வைத்திருக்கிற அல்லது ஒரு இனம் குறித்து மனதில் பதிந்திருக்கிற எண்ணத்திலிருந்து விடுபட்டு ஒரு இனக்குழுமத்திற்கு என ஒரு குணம் இல்லை.

மனிதர்களின் பல்வேறு குண இயல்புகள் காரணமாக பல்வேறு விதத்தில் நடந;து கொள்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கப்பட்ட பதிவு இது என்பதால் ஏனைய இனத்தவர்களின் வெள்ளைப் பக்கங்களையே இந்தத் திரி அதிகமாகத் தாங்கி வருகிறது. இதனைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

இதற்கான தேவை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளதா மணிவாசகன்???

தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்து வாழ எந்த ஒரு நியாயமும் இல்லாத அளவுக்கு வெகுதூரம் சென்றுவிட்டவேளையில் தமிழர் மட்டும் மீண்டும் அவர்களுக்குள்ளும் நல்லதும் இருக்கும் என்று வாய் பிழந்து நிற்பதால் என்ன பயன்??? இது மேலும் மேலும் தமிழரரின் மீதான கொடுமைகளுக்கு தலை குனிந்து குட்டுவாங்குவதற்கே வழி சமைக்கும்.

புலிகளும் ஒவ்வொருஆட்சியும் மாறிமாறி வர தங்களை மாற்றி வளைந்து கொடுத்து எதையாவது எடுத்துவிட எவ்வளவு முயற்சி செய்தார்கள். பலன்...........???? அழிவைச்சந்தித்ததை தவிர.?

  • தொடங்கியவர்

இதற்கான தேவை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளதா மணிவாசகன்???

தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்து வாழ எந்த ஒரு நியாயமும் இல்லாத அளவுக்கு வெகுதூரம் சென்றுவிட்டவேளையில் தமிழர் மட்டும் மீண்டும் அவர்களுக்குள்ளும் நல்லதும் இருக்கும் என்று வாய் பிழந்து நிற்பதால் என்ன பயன்??? இது மேலும் மேலும் தமிழரரின் மீதான கொடுமைகளுக்கு தலை குனிந்து குட்டுவாங்குவதற்கே வழி சமைக்கும்.

புலிகளும் ஒவ்வொருஆட்சியும் மாறிமாறி வர தங்களை மாற்றி வளைந்து கொடுத்து எதையாவது எடுத்துவிட எவ்வளவு முயற்சி செய்தார்கள். பலன்...........???? அழிவைச்சந்தித்ததை தவிர.?

வணக்கம் விசுகு அண்ணா!நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததைப் போல அண்மைக்காலமாக யாழ் களம் உள்ளிட்ட இணையத் தளங்கள் சிலவற்றில் வெளிவரும் கருத்துக்கள் சிலவே இந்தத் திரியை ஆரம்பிக்க வேண்டும் என என்னைத் தூண்டின. தலைவிரித்தாடும் சிங்கள இனவாதமும் முஸ்லிம் இனவாதமும் எவ்வளவு ஆபத்தானதோ அல்லது எவ்வளவு அருவருப்பானதோ அல்லது எவ்வளவு தூரம் மனித நேயத்திற்கு அப்பாற்பட்டதோ அதே போன்றதே தமிழ் இனவாதமும் ஆகும்.ஒரு இனக் குழுமம் குறித்த அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்கள் யார் வாயில் இருந்து வந்தாலும் யாருடைய எழுத்துக்களில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே என் கருத்து.சிங்களவரும் தமிழரும் இனி இணைந்து வாழ முடியாது என்பதன் மூலம் தமிழீழமே தீர்வு எனக் கூற வருகின்றீரர்கள் என நினைக்கிறேன். தமிழ் மக்களுக்கெனத் தனியான ஒரு நாடு அமைவதை அனைவருமே விரும்புகின்றோம். ஆனால் தற்போதுள்ள அரசியல் கள நிலமையில் சர்வதேச ரீதியாக வெளியிடப்படும் கருத்துக்களில் இருந்து அது எந்த அளவிற்கு உடனடியாகச் சாத்தியம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.காலப்போக்கில் சிங்கள அரசாங்கங்கள் தமிழருக்கு எந்தவிதமான உரிமைகள் தருவதையும் மறுத்து தொடர்ந்து இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் நிலமை மாறலாம் என்றாலும் தற்போதைக்கு தமிழீழத்திற்கான ஆதரவு என்பது மிக மிகக் குறைவே என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  • தொடங்கியவர்

போர் முனைப்புற்றிருந்த காலப்பகுதிகளில் விடுதலைப் போரின் காரணத்தை நியாயத்தன்மையை சிங்கள மக்களிடம் கொண்டு செல்வதில் பெரும்பாலான சிங்கள ஊடகங்கள் தயாராயிருக்கவில்லை.

அதனால் வட கிழக்குப் பகுதிகளில் என்ன நடைபெறுகின்றது. அங்கு எத்தகைய அழிவு நடவடிக்கைகளில் சிங்கள இராணுவம் ஈடுபட்டிருக்கிறது என்பது குறித்த விடயங்கள் சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. தமது பக்க நியாயத்தை சிங்கள மொழியில் கொண்டு வருவதற்கு தமிழ் இயக்கங்கள் எடுத்த முயற்சிகளும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனால் விடுதலைப் புலிகள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்துடன் கூடிய கற்பனைகளே அதிகளவில் இருந்தன. புலிகள் மனிதாபிமானமே இல்லாதவர்கள். சிறுவர் பெரியவர் என்ற வேறுபாடின்றி அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பவர்கள் என்றெல்லாம் தம் மனதில் பட்டவாறு கற்பனை செய்து கொண்டனர். அவர்களுக்குப் போதைப் பொருட்களைக் கொடுத்தே கொலைக் களத்திற்கு அனுப்புவார்ளாம் அதனால் அவர்கள் மிருகங்கள் போன்று நடந்து கொள்வார்களாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டார்கள்.

இதை விட மிகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால் தற்கொடைப் போராளிகள் குறித்து எமது காரியாலயத்தில் வேலை செய்த ஒருவர் கொடுத்த விளக்கம் தான்.

தற்கொடைப் போராளிக்குத் தான் தற்கொடையாளியாய் மாற்றப்பட்டிருப்பது தெரியாதாம். அவருடைய வயிற்றில் ஆயுதம் எனக் கூறி தற்கொடைக் குண்டு கட்டப்படுமாம். பின்னர் குறித்த இலக்கு இருக்கும் இடத்தில் அவரைச் சென்று விடயம் அறிந்து வரும்படி அவரை அனுப்பிவைப்பார்களாம். குறித்த இலக்கை அவர் அண்மித்ததும் தூரத்தில் இருந்து இன்னொருவர் றிமோட் கொன்றோல் மூலம் குண்டை வெடிக்க வைத்து விடுவாராம். தான் இறக்கப் போகிறேன் என்று தெரியாமல் அந்தத் தற்கொடைப் போராளி இறந்து விடுவாராம். எப்படியிருக்கிறது இந்தக் கற்பனை.

இந்த அச்சம் கலந்த பிரமிப்பின் இன்னொரு அனுபவம் இது.

2000ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் புத்தளம் மன்னார் மாவட்டங்களின் எல்லைப் பகுதிக் காவலரண் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது, அந்தத் தாக்குதலில் மாவீரரான போராளி ஒருவரின் உடலம் சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டு வண்ணாத்திவில்லு என்னுமிடத்திலுள்ள சிறிய வைத்தியசாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது,

இதனை அறிந்து புத்தளம் மாவட்ட செயலகத்தில் வேலை செய்யும் பல சிங்கள் ஊழியர்கள் ஒரு வாகனத்தில் அந்த வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர். அந்த உடலத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய ஒரு பெண் ஊழியர் ஆச்சரியத்துடன் கூறிய விடயம் 'அந்தப் புலியும் சாதராண இளைஞர்களைப் போலவே இருந்தார்" என்பதே

இந்தப் பெண் ஊழியர் உள்ளிட்ட பலரின் எண்ணம் விடுதலைப் புலிப் போராளி என்பவன் முரட்டுத் தனமாக நாம் படங்களில் காண்கிற அல்லது எங்கள் இதிகாசங்களில் இணைக்கப்பட்டுள்ள அரக்கன் போன்ற பல் வெளித்தள்ளிய முரட்டுத்தனமான உருவத்தையுடையவனாக இருந்திருப்பான் என்பதே.

அது மட்டுமன்ற தமிழர் தரப்பால் தென் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படும் போது இது குறித்த விபரங்கள் அனைத்துத் தமிழர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு விடும். அதனால் அவர்கள் பாதுகாப்பாக இருந்து விடுவர். சிங்களவர்களை மட்டுமே அவர்கள் இலக்கு வைப்பர் என்ற சந்தேகமும் சிங்கள மக்களிடம் நிறைந்திருந்தது.

இது வெளிப்பட்ட ஒரு சம்பவம் அடுத்த பதிவில்......

Edited by Manivasahan

வளைந்து நெளிந்து எழுதுபவன் படைப்பாளி இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து மணிவாசகன் . தான் நினைத்ததை எதுவித சமரசமும் இன்றி வெளிப்படுத்துபவன் தான் உண்மையான படைப்பாளியாக இருக்கமுடியும் . உங்கள் பதிவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது உங்கள் பதிவைப் பார்க்கும் வாசகர்கள் மட்டுமே . உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் உங்கள் பதிவை மெருகூட்டும் , அவ்வளவே . எனவே எதுவித தயக்கமும் இல்லாமல் நீங்கள் உங்கள் தொடரைத் தொடரவேண்டும் என்பதே எனது ஆசை .

உங்களுடைய எந்த கண்ணால் கண்டீர்கள் என்று எழுதின்னல் நன்று?

அனேகமாக அது மன கண்ணாகத்தான் இருக்கும்.

அத்தனை வீதிகளும் புலிகளால் மறிக்கபட்டு இருந்தது. யாரும் உள்போக முடியாது.... யார் சூறையாடினார்கள் என்று எழுதினால் நன்று.

எல்லா பொருட்களையும் புலிகள் அந்த பள்ளிவாசலுக்குள் குவித்துகொண்டிருந்தார்கள்.

(ஒரே ஒரு உண்மையை சொல்லிகொள்கிறேன் ஒரே ஒரு சென்ட் போத்தலை (வாசனை) புலிகளிடம் நான் லாவகமாக திருடிவந்து காதலை டெவலப் செய்ய பயன்படுத்தினேன் )

எனது முஸ்லிம் நண்பனின் நிலை அறியவே அங்கு சென்று அவனிடம் இரண்டாயிரம் ரூபாவும் கொடுத்தேன் அது மட்டுமே என்னிடம் இருந்தது.

அங்கு இருந்த பல புலிகளும் மனம் உடைந்தே நின்றனர்...........

(தொப்பிகளை அடித்து கலைக்க வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் எப்போதோ இருந்தது அதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் நானும் எனது நண்பன் ஒருவனும் பண்ணை பலத்தில் மயிர் இழையில் உயிர் தப்பினோம் அதை ஒரு தொப்பிதான் தொப்பியை பிரட்டிவிட்டான்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறிய நேரம் கண்களில் கண்ணீர்தான் வந்தது..........

புலிகளிடம் அதை தவிர வேறு எந்த தெரிவும் அந்த நேரம் இருக்கவில்லை .......... அது புலிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. புலிகள் பலவீனத்தின் உச்சியில் இருந்த நேரம் அது. யாழ் நகரே ஒரு இரவில் பறிபோகும் திட்டங்கள் முஸ்லிம்களால் பின்னபட்டு கொண்டிருந்தது. புலிகளின் யாழ் வலிகாமம் பொறுப்பாளராக அப்போது யாருமே இருக்கவில்லை..... ஐந்து நாட்களுக்குள் மூன்று பேரை தெரிவு செய்தனர்

கிளி என்பவர் சுன்னாகம் சூரவத்தையை சேர்ந்தவர் அவரே வலி பொறுப்பாளராக இருந்தார் கோட்டையில் காயமுற்று மறுநாள்

வல்வெட்டி பொன்னம்மானின் தம்பி யேம்ஸ் பொறுப்பேற்று மறுநாள் நீர்வேலியில் கெலி அடித்து வீரமரணம் ஆனார் (அவர்களின் ஒரு தங்கையும் பின்பு ஒருதாக்குதலில் வீரமரணம் ஆனார்)

மறுநாள் சிறுபிட்டியை சேர்ந்த பைப் அவர்கள் தெரிவு செய்யபட்டார்

இரண்டு நாட்களில் கிளைமோர் தாக்குதலில் அவரும் ஒரு காலை இழந்து போனார்.

புலிகள் அப்போது விரக்த்தியிலையே திரிந்தார்கள்.

வெளியில் இருக்கும் நாங்கள் சகோதரத்துவம் பற்றி தத்துவாந்தம் பேசலாம்...........

அனைத்தையும் இழந்தவர் புலிகளே)

மருது நீங்கள் மனதில் எடுக்காவிட்டால் , ஒருவிடையத்தைச் சொல்ல விரும்புகின்றேன் . பொன்னம்மான் யாழ் இந்துவில் கா பொ தா உயர்தரம் என்னை விட ஒருவருடம் சீனியராக , 1982ம் ஆண்டு உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் படித்தார் . இவரின் மறு பெயர் குகன் . சொந்த இருப்பிடம் யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடி . கைதடியில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தில் இவர் வீரமரணமானார் . இவரது தம்பிதான் முன்னாள் அரசியல் பேச்சாளரும் பொறுப்பாளருமான யோகி . இதற்கு ஆதாரம் நான் தான் . எனது கல்லூரி நண்பர்களது வரலாறு திரிபு அடைவது எனக்கு மனக்கஸ்ரமாக உள்ளது . தயவு செய்து மாற்றி விடமுடியுமா ?

Edited by கோமகன்

கோமகன், வல்வெட்டி பொன்னம்மான் என்றுதான் இருக்கு (அவர் வேறொருவர் ).

மணிவாசகன் தொடர்ந்து எழுதவும், தேசியம் குரல் கொடுப்பவர் தேவர்கள் போலவும் மற்றவர்கள் அரக்கர்கள் போலவும் எமது போராட்டம் தமிழர்களை இரண்டாக பிரித்துவிட்டது.அரக்கர்களை நீங்கள் எந்த வசையும் பாடலாம் (இப்போ சம்பந்தரும் அந்த பட்டியலில் ).தேவர்களை நீங்கள் துதி மட்டும் தான் பாடலாம் .இது எழுதாத விதி.

யாழிலேயே எத்தனையோ பேரை மிக மிக இழிவாக எழுதுவார்கள்,அவர்கள் நாட்டுக்கு செய்ததில் ஒரு ஐந்து சதவீதம் இவர்கள் செய்திருக்கமாட்டார்கள் ஆனால் தொடர்ந்து துதி பாடிக்கொண்டிருப்பார்கள் .அதனால் தாங்கள் ஏதோ தியாகிகள் போல தம்மை தாமே நினைத்து பெருமை பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் .

இந்த நிலைக்கு காரணம் சுயநலமும் ,படிப்பறிவின்மையும் ஆகும் இதையே தான் கருணாநிதி தொட்டு ராஜபக்சாவரை செய்கின்றார்கள் .

நாட்டில பிரச்சனை தீருவதைவிட தேவாரம் பாடுவதுதான் இவர்களுக்கு முக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே நீங்கள் எழுதிக்கொடுத்தால் மணிவாசகனுக்கும் வெட்டி ஒட்ட சுலபமாக இருக்கும். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே நீங்கள் எழுதிக்கொடுத்தால் மணிவாசகனுக்கும் வெட்டி ஒட்ட சுலபமாக இருக்கும். :(

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மணி உங்கள் தெடரை படிக்கும் பாழுது சில சிந்தேகங்கள் நீங்கள் உண்மையிலேயே புத்தளமா?? புத்தளம் என்றால் புத்தளம் வரவேற்கிறது என்கிற பெயர் பலகைக்கு முன்னால் எடுத்த படம் அல்லது உங்கள் வீட்டு காணி உறுதி எதையாவது இணைக்வேண்டும். அடுத்தது உங்கள் வீடு கொழுத்தப் பட்டது என்றால் அது எரியும் போது எடுத்த படம். அல்லது ஜயோ வீடு எரியுதே எண்டு நீங்கள் கத்தியபோது எடுத்த வீடியோ கிளிப். அடுத்தது உங்கள் குடும்பம் உண்மையில் முஸ்லிம் குடும்பஙள்களால்தான் பராமரிக்கப் பட்டது என்றால் உங்களை முஸ்லிம்கள் பாராமரித்ததற்கான அத்தாட்சி கடிதம் புத்தளம் விதானையிடமிருந்து பெற்று இணைக்கவும். அடுத்தாக நீங்கள் போராளிகளையும் அவர்களது தியாகங்களையும் தலைவரையும். அவரது சிந்தனைகளையும் கேவலப்படுத்து விதமாக எழுதுவதாக எனக்கு தோன்றுகிறது எனவே நீங்கள் தமிழர்தானா என்பதனை உங்கள் குடும்ப பெயர் பட்டியல் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களுடன் இங்கு நிருபித்து விட்டு மிகுதி தொடரை எழுதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மணி..

தலையங்கம் போன போக்கில் மாறிக்கொண்டு இருக்கு..நம்மாளுகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பேர்ல பாஸ்போர்ட் வைத்திருப்பது மாதிரி..இல்லாட்டி நீங்கள் புத்தளத்திலும் இருந்தநீர்கள் என்பதை "காட்டுவதற்கான" ஒரு முயற்சியோ தெரியவில்லை- சாத்திரி கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன மாதிரியும் போச்சு.

கோமகன்;

எனக்கு தெரிய உங்கள் காலத்தில் படித்த இந்துகல்லூரி நண்பர் ஒருவர் உள்ளார்..அவருடன் அந்த காலத்து கதைகளை கதைக்க அவலாக இருக்கும்...இதில எழுதலாமோ தெரியாது ....

ஆனால் இது மருதங்கேணிக்கு சான்று அல்ல என்றாலும், முந்திய பதிவு ஒன்றிலும் பார்த்தனான் ..அவர் ஒரு கதை இயக்குனர் அல்ல--அதற்காக மற்ற எல்லாரும் கதை இயக்குனர் என்று கருத்தல்ல.

கோமகன், மருதங்கேணி கூறியது வல்வெட்டி பொன்னம்மான் பற்றி.

மற்றவர், கலட்டி அம்மன் கோவிலடியைச் சேர்ந்தவர். எமக்கு ஓரளவு பழக்கமான குடும்பத்தைச் சேர்ந்தவர். யோகி - அவரது அண்ணன்.

வல்வெட்டி பொன்னம்மான் பற்றி நான் அதிகம் அறியவில்லை.

  • தொடங்கியவர்

வளைந்து நெளிந்து எழுதுபவன் படைப்பாளி இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து மணிவாசகன் . தான் நினைத்ததை எதுவித சமரசமும் இன்றி வெளிப்படுத்துபவன் தான் உண்மையான படைப்பாளியாக இருக்கமுடியும் . உங்கள் பதிவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது உங்கள் பதிவைப் பார்க்கும் வாசகர்கள் மட்டுமே . உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் உங்கள் பதிவை மெருகூட்டும் , அவ்வளவே . எனவே எதுவித தயக்கமும் இல்லாமல் நீங்கள் உங்கள் தொடரைத் தொடரவேண்டும் என்பதே எனது ஆசை .

கருத்துக்கு நன்றி கோமகன் அண்ணா!உண்மையில் ஒரு சமூகம் சார்ந்த விடயம் என்றாலோ அல்லது ஏனைய விடயங்களிலோ நான் சமரசங்களுக்கு இடமளிப்பதே இல்லை. உன் குறைகளை உன்னிடம் சொல்பவனே உண்மையான நண்பன் என்ற கருத்தில் எனக்கு அலாதி பிரியம்.ஆனால் விடுதலைப் போராட்டம் என்ற விடயத்தில் சில நெகிழ்வுத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அதன் காரணமாகவே சில விடயங்கள் குறித்து அடக்கி வாசிக்கிறேன். இருந்தாலும் சில கேள்விகளுக்குத் குறித்த உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலமாக விளக்கமளிக்கிறேன்.என்றாலும் படைப;பாளி குறித்த உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

என்ன மணி..

தலையங்கம் போன போக்கில் மாறிக்கொண்டு இருக்கு..நம்மாளுகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பேர்ல பாஸ்போர்ட் வைத்திருப்பது மாதிரி..இல்லாட்டி நீங்கள் புத்தளத்திலும் இருந்தநீர்கள் என்பதை "காட்டுவதற்கான" ஒரு முயற்சியோ தெரியவில்லை- சாத்திரி கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன மாதிரியும் போச்சு.

கோமகன்;

எனக்கு தெரிய உங்கள் காலத்தில் படித்த இந்துகல்லூரி நண்பர் ஒருவர் உள்ளார்..அவருடன் அந்த காலத்து கதைகளை கதைக்க அவலாக இருக்கும்...இதில எழுதலாமோ தெரியாது ....

ஆனால் இது மருதங்கேணிக்கு சான்று அல்ல என்றாலும், முந்திய பதிவு ஒன்றிலும் பார்த்தனான் ..அவர் ஒரு கதை இயக்குனர் அல்ல--அதற்காக மற்ற எல்லாரும் கதை இயக்குனர் என்று கருத்தல்ல.

கருத்திற்கு நன்றி வல்கானோ!புதிதாக ஒரு விடயத்தை இணைக்கும் போது அதற்கேற்ப தலையங்கத்தை மாற்றிக் கொள்கிறேன். இது கள உறவுகளுக்கு உதவியாயிருக்கும் என நினைத்தேன்.வேறு முறைகள் ஏதாவது இருக்கின்றனவா எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.இந்துவின் நண்பர் குறித்து தனிமடலில் உரையாடுகிறேன். நன்றி

மணி உங்கள் தெடரை படிக்கும் பாழுது சில சிந்தேகங்கள் நீங்கள் உண்மையிலேயே புத்தளமா?? புத்தளம் என்றால் புத்தளம் வரவேற்கிறது என்கிற பெயர் பலகைக்கு முன்னால் எடுத்த படம் அல்லது உங்கள் வீட்டு காணி உறுதி எதையாவது இணைக்வேண்டும். அடுத்தது உங்கள் வீடு கொழுத்தப் பட்டது என்றால் அது எரியும் போது எடுத்த படம். அல்லது ஜயோ வீடு எரியுதே எண்டு நீங்கள் கத்தியபோது எடுத்த வீடியோ கிளிப். அடுத்தது உங்கள் குடும்பம் உண்மையில் முஸ்லிம் குடும்பஙள்களால்தான் பராமரிக்கப் பட்டது என்றால் உங்களை முஸ்லிம்கள் பாராமரித்ததற்கான அத்தாட்சி கடிதம் புத்தளம் விதானையிடமிருந்து பெற்று இணைக்கவும். அடுத்தாக நீங்கள் போராளிகளையும் அவர்களது தியாகங்களையும் தலைவரையும். அவரது சிந்தனைகளையும் கேவலப்படுத்து விதமாக எழுதுவதாக எனக்கு தோன்றுகிறது எனவே நீங்கள் தமிழர்தானா என்பதனை உங்கள் குடும்ப பெயர் பட்டியல் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களுடன் இங்கு நிருபித்து விட்டு மிகுதி தொடரை எழுதவும்.

சாத்திரி அண்ணை !நல்லா நொந்து போயிருக்கிறியள் போலக் கிடக்கு!

  • தொடங்கியவர்

கோமகன், வல்வெட்டி பொன்னம்மான் என்றுதான் இருக்கு (அவர் வேறொருவர் ).

மணிவாசகன் தொடர்ந்து எழுதவும், தேசியம் குரல் கொடுப்பவர் தேவர்கள் போலவும் மற்றவர்கள் அரக்கர்கள் போலவும் எமது போராட்டம் தமிழர்களை இரண்டாக பிரித்துவிட்டது.அரக்கர்களை நீங்கள் எந்த வசையும் பாடலாம் (இப்போ சம்பந்தரும் அந்த பட்டியலில் ).தேவர்களை நீங்கள் துதி மட்டும் தான் பாடலாம் .இது எழுதாத விதி.

யாழிலேயே எத்தனையோ பேரை மிக மிக இழிவாக எழுதுவார்கள்,அவர்கள் நாட்டுக்கு செய்ததில் ஒரு ஐந்து சதவீதம் இவர்கள் செய்திருக்கமாட்டார்கள் ஆனால் தொடர்ந்து துதி பாடிக்கொண்டிருப்பார்கள் .அதனால் தாங்கள் ஏதோ தியாகிகள் போல தம்மை தாமே நினைத்து பெருமை பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் .

இந்த நிலைக்கு காரணம் சுயநலமும் ,படிப்பறிவின்மையும் ஆகும் இதையே தான் கருணாநிதி தொட்டு ராஜபக்சாவரை செய்கின்றார்கள் .

நாட்டில பிரச்சனை தீருவதைவிட தேவாரம் பாடுவதுதான் இவர்களுக்கு முக்கியம் .

கருத்திற்கு நன்றி அர்யுன் அண்ணா!தியாகங்களையே உயர்வாய்க் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தில் பல விடயங்கள் குறித்து வெளிப்படையாய் விவாதிக்க காலம் கனியவில்லை.குறிப்பாக தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கு நீதியான தீர்வொன்றை அனைவரும் ஒன்றுபட்டு பெற்றுக் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் அதற்காக புலத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டு செயற்பட்டு செயல்பட வேண்டிய காலகட்டத்தில் சில விடயங்கள் குறித்து பகிரங்கமாக விவாதிப்பதை தவிர்க்க விரும்புகின்றேன்.

  • தொடங்கியவர்

அரைக்கிலோ கோழியை ஆறுபேருக்குச் சமைக்கும் லண்டன் தமிழன்

நான் எடுத்துக் கொண்ட விடயத்திலிருந்து சற்றே விலகி ஒரு விடயத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன். இன்னொரு பதிவை வாசித்த போது அதில் இடம்பெற்றிருந்த ஒரு விடயம் சார்ந்த பதிவு இது.

தாயகத்திலிருந்து சிங்கள இனவெறி அரசாங்கத்தினதும் படைகளதும் கொடூரங்களிலிருந்து தப்புவதற்காகவும் இன்னும் பல காரணங்களாலும் பலரும் இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறோம்.

ஆனாலும் வந்த இடத்திலும் கனடாத் தமிழன் இப்படிப்பட்டவன், ஜெர்மன் தமிழன் இப்படிப்பட்டவன் லண்டன் தமிழன் இப்படிப்பட்டவன் என ஒரு குழு அடையாளத்தை வழங்கி எள்ளலும் கேலியும் எதற்காக?

ஒரு நாட்டிலே குடியேறி விட்ட அனைத்து மக்களும் ஒரே குணத்துடன் தான் வாழ்வார்களா? இதுவும் ஒரு இனக்குழுவைச் சேர்ந்த அனைவரும் ஒரே குணத்தையுடையவர்கள் தான் என்ற எமது கருத்துருவாக்கத்தை ஒத்ததல்லவா?

லண்டன் தமிழர் என்றாலென்ன அவுஸ்திரேலியத் தமிழர் என்றாலென்ன கனேடியத் தமிழர் என்றாலென்ன அவர்கள் எம் தாய் மண்ணில் வாழ்ந்து ஏதேதோ காரணங்களால் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தானே? ஒரே மண்ணில் வாழ்ந்தவர்களின் குணங்கள் ஊருக்கேற்ப மாறி விடுமா?

இந்த வகையில் லண்டனில் வாழும் தமிழர்கள் குறித்த எள்ளல்கள் பரவலாகப் பேசப்படுபவை தான். அவர்கள் விருந்தோம்பலில் பின்நிற்பவர்கள். பணத்தைச் செலவிடுவதில் பின்னிற்பவர்கள் உறவினரைக் கூட வீட்டிற்கு அழைத்து விருந்திமாதவர்கள் என இன்ன பல பேச்சுக்கள் செவிவழி உங்களுக்கும் எட்டியிருக்குமு:. இதன் தொடரச்சிதான் அரைக் கிலோ கோழியை ஆறு பேருக்குச் சமைக்கும் லண்டன் தமிழன் என்னும் பதம். (இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது என்றாலும் கூட)

சரி லண்டனில் வாழும் தமிழர்கள் அனைவரும் அப்படித்தானா? ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவருமே விருந்தோம்பலில் ஈடிணை இல்லாதவர்களா? இது குறித்த எனது அனுபவப் பகிர்வொன்றை இங்கே இணைக்கிறேன்.

நான் லண்டனுக்குச் செல்வதென்று முடிவு செய்ததுமே யாரிடம் செல்வது? எங்கு தங்குவது உள்ளிட்ட ஏராளம் கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருந்தது? அதிலும் எனது பின்புலத்தை அறிந்தவர்கள் என்னை வைத்துப் பராமரிப்பதற்குச் சம்மதிப்பார்களோ என்ற சந்தேகமும் எனக்கிருந்தது. இந்த நேரத்தில் அம்மாவின் தூரத்து உறவினர்களான ஒரு குடும்பத்தின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்று அவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை இடுகிறேன். நேரடியாகத் தொலைபேசியில் பேசி அவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டால் ஏற்படும் சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காகத் தான் இந்த மின்னஞ்சல் ஏற்பாடு. நான் மின்னஞ்சலிட்டு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த உறவினரிடமிருந்து எனக்குப் பதில் வருகிறது. நீங்கள் லண்டன் வருவது குறித்து மகிழ்ச்சி. வந்ததும் எங்கள் வீட்டிலிருந்து கல்வியைத் தொடரலாம். வரும் திகதி நேரம் விமான விபரங்களை அறியத் தாருங்கள். நாங்கள் விமான நிலையத்திற்கு வருகிறோம். இது தான் அந்த மின்னஞ்சல். நான் என்னை ஒரு முறை கிள்ளிப் பார்க்கிறேன். என்னுடைய சகோதரின் வற்புறுத்தலுக்காகத் தான் நான் அந்த மின்னஞ்சலை அனுப்பினேனே தவிர அவர்களிடம் இருந்து சாதகமான பதில் வரும் என்ற நம்பிக்கையே எனக்கிருக்கவில்லை.

இவ்வாறு பதில் வந்த பின்னரும் என்னுடைய மனதில் பல சங்கடங்கள். லண்டன் சென்ற பின்னர் அவர்களது வரவேற்பு எப்படியிருக்கும். அதிலும் லண்டனில் புகழுடனும் வசதியுடனும் வாழும் அவர்களது ஆடம்பரத்திற்கு முன்னால் என்னை ஒரு ஜந்தைப் போலப் பார்ப்பார்களோ? சரி போனதும் ஒரு பகுதி நேர வேலையை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுவோம் என்ற எண்ணத்துடன் விமானமேறுகிறேன்.

ஒரு கிழமை நாளில் மாலை மூன்று மணிக்கு நான் ஹீத்றோ விமான நிலையத்தில் கால் பதிக்கிறேன். வைத்தியர்களான அவர்கள் இருவருமே விமான நிலையம் வந்திருந்தனர். அவர்கள் வரவேற்ற விதமே எனக்கிருந்த சங்கடத்தைப் போக்கியிருந்தது. அவர்களுக்குமு; எனக்கும் இடையிலான உறவு முறை என்னுடைய அம்மம்மாவும் அந்த அக்காவின் அப்பாவும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அவ்வளவு தான். அதனால் அவர்கள் என்ன முறை என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை. இன்றுவரை அவர்களை அண்ணா அக்கா என்றே அழைத்து வருகிறேன்.

லண்டன் சென்று ஒரு வாரம் அவர்களது வீட்டில் தங்கியதுமே நான் ஒரு வேலையைத் தேடிக் கொண்டு வேறோர் இடத்தைத் தேடிக் கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் அந்த அண்ணாவும் அக்காவும் தடுத்து விட்டார்கள். முதலில் வந்த வேலையைக் கவனியுங்கோ. படித்து முடித்து விட்டு பிறகு வேலைக்குப் போகலாம். என்று தடுத்து விட்டார்கள். அவர்களது வேண்டுகோளைத் தட்ட முடியாது ஆறு மாதங்கள் அவர்களது உழைப்பிலேயே முழுமையாகத் தங்கி வாழ்ந்தேன். பின்னர் குடும்ப சு+ழல்களை எடுத்துக் கூறி நான் வேலைக்குப் போகத் தொடங்கினேன். ஆனாலும் நான் லண்டனில் வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதியி;ல அவர்களின் வீட்டிலேயே ஒரு சதம் கூடக் கொடுக்காமல் தங்கியிருந்தேன். நான் பணம் பெற்றுக் கொள்ளும் படி வற்புறுத்திக் கொண்டிருந்த போது சரி நீ ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் அவலப்படும மக்களுக்கு உதவி செய் . இப்போது உனது கவனம் படிப்பில் மட்டமு: இருக்கட்டும் என்பதே அவர்களது பதிலாக இருக்கும்.

இப்படி ஏதோ ஒரு தூரத்து உறவுக் காரனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட 'லண்டன் தமிழர்களும்' இருக்கின்றார்கள். இவர்கள் எப்படி அரைக் கிலோ கோழியை ஆறுபேருக்குச் சமைக்கும் குழுமத்திற்குள் வருவார்கள். அது மட்டுமன்றி அந்த அண்ணா தாயத்தில் வாழும் பத்திற்கு மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து மாதாமாதம் பணமனுப்பி வந்தார்.ர

லண்டன் தமிழர்களை மட்டுமல்ல ஏனைய பிரதேச தமிழர்கள் குறித்தும் இது போன்ற எள்ளல் நிறைந்த கருத்துக்கள் வெளிப்படுவதுண்டு. ஜேர்மன் தமிழர்கள் தற்பெருமை பேசுபவர்கள். கனடாத் தமிழர்கள் பகட்டுக்காகச் செலவழித்து விட்டு பகல் இரவென்று வேலைக்கு அலைபவர்கள் இப்படிப் பல விதமான தவறான கருத்துக்கள் எம்மிடையே நிலவுவதுண்டல்லவா?

நான் இந்தப் பதிவை இட்டதன் நோக்கம் ஒரு பிரதேசத்தில் வாழும் நம் தமிழ் மக்கள் அனைவரின் குணமும் ஒரே மாதிரியானதல்ல. லண்டனிலும் கனடாவிலும் ஜெர்மனியிலும் பிரான்சிலும் விருந்தோம்பலில் உயர்நத தமிழர்கள் இருக்கிறார்கள். அதேபோல அனைத்துப் பகுதிகளிலும் தனது சொந்தங்களையே அணைத்துக் கொள்ளாத ஒரு சதமும் ஈயாத தமிழர்கள் இருக்கிறார்கள்.

ஈகைக் குணமும் கோரக் குணமும் ஒரு இனம் சார்ந்ததோ ஒரு பிரதேசம் சார்ந்ததோ அல்ல. அது தனிநபர்களுக்கேற்ப மாறுபடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.