Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக டஎழுதியுள்ளீர்கள்

நான் பிரான்சிற்கு வந்தபோது பல பாரிகளைப்பார்த்தேன்.

மற்றவர்களுக்காக பட்ட கடன்களாலும்

மற்றவர்களுக்காக உழைத்ததாலும்

நிம்மதியாக நித்திரை கொண்ட இடத்தை மற்றவர்களுக்காக விட்டதனாலேயும்

பலர் இன்று உயிருடன் இல்லை.

அந்த பாரிகளை ஏணிகளை இன்றும் கனம் பண்ணுகின்றேன்.

ஆனால் அரைக் கிலோ கோழியை ஆறுபேருக்குச் சமைக்கும் என எழுதியவருக்கு அப்படித்தான் எழுதவரும்.

அதிலுள்ள பகிர்ந்துண்ணும் பண்பும் நாலுபேரை வாழ்வைத்த தர்மமும் தெரியாது.

  • Replies 205
  • Views 28.7k
  • Created
  • Last Reply

மனிதன் என்பவன் ஒரு சூழ்நிலை விலங்கு.ஒரே இடத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தாலும் வாழும் சொல்நிலைக்கேற்ப தன்னை மாற்றிகொள்கின்றான்.

இரண்டாவது பொய்யாக எம்மை நாமே திருப்தி படுத்தமட்டும் எழுதிக்கொண்டிருக்க கூடாது.

ஆரம்பத்தில் லண்டனை தவிர ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழனுக்கு அந்த அரசுகளால் கொடுக்கப்பட்ட வசதிகள் பல பல.ஆனால் லண்டன் வந்து தனது கல்வி முதல் அனைத்து தேவைகளுக்கும் தனது உழைப்பிலேயே தங்கியிருந்தவர்கள் மிக கட்டுப்பாடாக காசை அளவாக செலவழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள் .அதை வேறு பழக்க படுத்திவிட்டார்கள் . 83 இற்கு பின் வந்தவர்கள் லண்டன் வந்து வாழ்ந்த நிலைக்கு கூட அவர்களால் திரும்பமுடியவில்லை என்பதுதான் உண்மை .(இது ஒரு பொதுமை பட்ட கருத்து ,அதற்காக எல்லோரும் அப்படி என்று இல்லை )

நான் கனடா வந்தபின் மூன்று முறை லண்டன் போய் வந்தேன் ,பல தரப்பட்ட உறவினர்கள் ,நண்பர்களை சந்தித்தேன் .மூத்த குடிகள் பல இன்னமும் மாறவில்லை என்பதுதான் எனது கருத்து .

மற்றது உங்களுக்கு உதவிய உறவினர்களை போல் ஊருக்கும் உதவும் பல உறவுகளை எனக்கு தெரியும் ,நான் எழுதியது வாழ்க்கை முறை பற்றி மட்டுமே .ஈகை பற்றி அல்ல .

அடுத்து விசு அண்ணை,எழுதியது என்ன என வாசித்து விளங்கிய பின் நாடகத்தை தொடக்கவும் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் பதிவை இட்டதன் நோக்கம் ஒரு பிரதேசத்தில் வாழும் நம் தமிழ் மக்கள் அனைவரின் குணமும் ஒரே மாதிரியானதல்ல. லண்டனிலும் கனடாவிலும் ஜெர்மனியிலும் பிரான்சிலும் விருந்தோம்பலில் உயர்நத தமிழர்கள் இருக்கிறார்கள். அதேபோல அனைத்துப் பகுதிகளிலும் தனது சொந்தங்களையே அணைத்துக் கொள்ளாத ஒரு சதமும் ஈயாத தமிழர்கள் இருக்கிறார்கள்.

ஈகைக் குணமும் கோரக் குணமும் ஒரு இனம் சார்ந்ததோ ஒரு பிரதேசம் சார்ந்ததோ அல்ல. அது தனிநபர்களுக்கேற்ப மாறுபடும்.

இதுதான் யதார்த்தம் . :)

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் என்பவன் ஒரு சூழ்நிலை விலங்கு.ஒரே இடத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தாலும் வாழும் சொல்நிலைக்கேற்ப தன்னை மாற்றிகொள்கின்றான்.

இரண்டாவது பொய்யாக எம்மை நாமே திருப்தி படுத்தமட்டும் எழுதிக்கொண்டிருக்க கூடாது.

ஆரம்பத்தில் லண்டனை தவிர ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழனுக்கு அந்த அரசுகளால் கொடுக்கப்பட்ட வசதிகள் பல பல.ஆனால் லண்டன் வந்து தனது கல்வி முதல் அனைத்து தேவைகளுக்கும் தனது உழைப்பிலேயே தங்கியிருந்தவர்கள் மிக கட்டுப்பாடாக காசை அளவாக செலவழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள் .அதை வேறு பழக்க படுத்திவிட்டார்கள் . 83 இற்கு பின் வந்தவர்கள் லண்டன் வந்து வாழ்ந்த நிலைக்கு கூட அவர்களால் திரும்பமுடியவில்லை என்பதுதான் உண்மை .(இது ஒரு பொதுமை பட்ட கருத்து ,அதற்காக எல்லோரும் அப்படி என்று இல்லை )

நான் கனடா வந்தபின் மூன்று முறை லண்டன் போய் வந்தேன் ,பல தரப்பட்ட உறவினர்கள் ,நண்பர்களை சந்தித்தேன் .மூத்த குடிகள் பல இன்னமும் மாறவில்லை என்பதுதான் எனது கருத்து .

மற்றது உங்களுக்கு உதவிய உறவினர்களை போல் ஊருக்கும் உதவும் பல உறவுகளை எனக்கு தெரியும் ,நான் எழுதியது வாழ்க்கை முறை பற்றி மட்டுமே .ஈகை பற்றி அல்ல .

அடுத்து விசு அண்ணை,எழுதியது என்ன என வாசித்து விளங்கிய பின் நாடகத்தை தொடக்கவும் .

லண்டனிலும் சில வேறுபாடுகள் 90 களில் இருந்தது அகதியகவந்தோர் கல்விகற்க வந்தோர் என்று இதில் ஸ்ருடன்ஸ் விசாவில் வந்தவர்கள் அகதியாக வந்தவர்களை வித்தியாசமாகவே பார்த்தார்கள் சில இடங்களில் அவர்கள் (இதுகள் வந்து ஸ்ரீலங்கன் என்ற பெயரையே கெடுக்குதுகள்) இப்படி பேசியதை நான் கேட்டு இருக்கின்றேன் பின்னர் படிப்படியாக அந்தப்பேச்சு குறைந்து இப்போது அப்படி யாரும் பேசுவதில்லை என்று நினைக்கின்றேன் அதற்க்கான காரணம் அகதியாக வந்து இந்த நாட்டில் அவர்களின் கடுமையான உழைப்பார் உயர்ந்த நிலைக்கு அவர்கள் வந்ததும் ஒரு காரணம் பல ஸ்ருடன்ஸ் பின்னர் தாமும் அகதி என்று கூறி அசேலம் எடுத்தும் இருக்கின்றார்கள்.

மணிவாசகனிடம் இரண்டு கேள்வி கேட்கவிரும்புகின்றேன் . முதலாவது ஏன் அடிக்கடி தொடரின் தலைப்பை மாற்றுகின்றீர்கள் ? நோக்கம் உங்கள் தொடரைப் பரபரப்பாக்குவதானால் அது விபச்சாரத்துக்கு ஒப்பானது . இரண்டாவது நான் லண்டனில் ஏறத்தாள 4 வருடங்கள் இருந்திருக்கின்றேன் . ஒருசில கதைகள் மிகைப்படுத்தப்பட்டாலும் . 3 பிரிவினர் லண்டனில் இருப்பதைக் கண்கூடாகப் பாத்திருக்கின்றேன் . 60 -70 ற்குள் வந்தவர்கள் . 70 - 83 ற்குள் வந்தவர்கள் . 90 களிற்குப் பிறகு வந்தவர்கள் . இந்த மூன்று பிரிவினரும் ஒருவரையொருவர் சபைசந்திகளில் அடுக்குவதில்லை . இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் என்பவன் ஒரு சூழ்நிலை விலங்கு.ஒரே இடத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தாலும் வாழும் சொல்நிலைக்கேற்ப தன்னை மாற்றிகொள்கின்றான்.

இரண்டாவது பொய்யாக எம்மை நாமே திருப்தி படுத்தமட்டும் எழுதிக்கொண்டிருக்க கூடாது.

ஆரம்பத்தில் லண்டனை தவிர ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழனுக்கு அந்த அரசுகளால் கொடுக்கப்பட்ட வசதிகள் பல பல.ஆனால் லண்டன் வந்து தனது கல்வி முதல் அனைத்து தேவைகளுக்கும் தனது உழைப்பிலேயே தங்கியிருந்தவர்கள் மிக கட்டுப்பாடாக காசை அளவாக செலவழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள் .அதை வேறு பழக்க படுத்திவிட்டார்கள் . 83 இற்கு பின் வந்தவர்கள் லண்டன் வந்து வாழ்ந்த நிலைக்கு கூட அவர்களால் திரும்பமுடியவில்லை என்பதுதான் உண்மை .(இது ஒரு பொதுமை பட்ட கருத்து ,அதற்காக எல்லோரும் அப்படி என்று இல்லை )

நான் கனடா வந்தபின் மூன்று முறை லண்டன் போய் வந்தேன் ,பல தரப்பட்ட உறவினர்கள் ,நண்பர்களை சந்தித்தேன் .மூத்த குடிகள் பல இன்னமும் மாறவில்லை என்பதுதான் எனது கருத்து .

மற்றது உங்களுக்கு உதவிய உறவினர்களை போல் ஊருக்கும் உதவும் பல உறவுகளை எனக்கு தெரியும் ,நான் எழுதியது வாழ்க்கை முறை பற்றி மட்டுமே .ஈகை பற்றி அல்ல .

அடுத்து விசு அண்ணை,எழுதியது என்ன என வாசித்து விளங்கிய பின் நாடகத்தை தொடக்கவும் .

எல்லோரும் லண்டன்,லண்டன் என வாறதால் தான் அண்ணா அவர்களும் குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கி கொண்டு இருக்கிறார்கள்...லண்டனிலும் பார்க்க மற்ற நாடுகளில் வசதி வாய்ப்பு கூட என்டால் ஏன் எல்லோரும் லண்டனை நோக்கி வருகிறார்கள்? ஆங்கிலம் படிக்க மட்டும் என நொண்டி சாக்கு சொல்லக் கூடாது :) ...தமிழ் பெண்களை எடுத்துக் கொண்டால் ஜரோப்பாவோடு ஒப்பிடுகையில் லண்டனில் இருக்கும் பெண்கள் தான் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஆனால் ஜரோப்பாவில் எங்கள் பெண்கள் வேலைக்கு போவதேயில்லை அல்லது குறைவு...வேலைக்கு போயிட்டு வந்து பிள்ளைகள் படிப்பு அது,இது கூட்டித் திரியவே நேரம் போய் விடும் ஆனால் ஜரோப்பாவில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை.கன்டாக்காரர் சமைக்கவே தேவையில்லை சாப்பாடு அவ்வளவு மலிவாக இருக்கும் :lol: உடனே எல்லோருக்கும் லண்டன்காரர் சீப்பாய் போயிட்

டினம் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

நோக்கம் உங்கள் தொடரைப் பரபரப்பாக்குவதானால் அது விபச்சாரத்துக்கு ஒப்பானது . ?

கோ

எனது முதல் அனுபவம் என்று தலைப்பு வைத்த தாங்களா இப்படி............??? :o :o :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை மாற்றியதால் ஆரம்பத்திலிருந்து மீண்டும் வாசிக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இடையிலுள்ள கருத்தாடல்களிலும் மாற்றம் வந்திருக்கலாமல்லவா? அதிலும் எதுவித முன்னறிவித்தலும் இல்லாமல் இப்படி செய்வது அழகல்ல.எனது இந்த கருத்து தவறென்றால் முன்னெச்சரிக்கையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணாவின் கருத்து தான் என்னதும் நானும் இது என்ன புதுக் கதையோ என்று தான் வந்து பார்த்த்தேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

மணி அண்ணா, தலைப்பை அடிக்கடி மாற்றாதேயுங்கோ. முன்னர் போட்டிருந்த மாதிரி ஒரு பொதுவான தலைப்பை போட்டிட்டு உப தலைப்புகளை (sub headings) ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் போடலாம். மற்றும்படி தொடர்ந்து எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணி அண்ணா, தலைப்பை அடிக்கடி மாற்றாதேயுங்கோ. முன்னர் போட்டிருந்த மாதிரி ஒரு பொதுவான தலைப்பை போட்டிட்டு உப தலைப்புகளை (sub headings) ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் போடலாம். மற்றும்படி தொடர்ந்து எழுதுங்கோ.

அடுத்த தலைப்பு "லைட் கலருக்கேற்ற உடுப்பு"

  • கருத்துக்கள உறவுகள்

மணி அண்ணா, தலைப்பை அடிக்கடி மாற்றாதேயுங்கோ. முன்னர் போட்டிருந்த மாதிரி ஒரு பொதுவான தலைப்பை போட்டிட்டு உப தலைப்புகளை (sub headings) ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் போடலாம். மற்றும்படி தொடர்ந்து எழுதுங்கோ.

மணி அண்ணைக்கு,

புதிய விதிகள் தெரியாது போல் கிடக்குது.

நிர்வாகம், கேள்விப்பட்டால்.... நார்,நாராக.... பிச்சுப் போடுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மணி அண்ணை, அடிக்கடி தலைப்பை... மாற்றுவதால்,

அவருக்கு, "சுத்து, மாத்து திலகம்" என்னும்.... பட்டத்தை வழங்குகின்றோம்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-.

Mஅணி அண்ணையின் புத்தியை,

முதலே ஊகித்து, அவரின் தலைப்பில் மினக்கெடாததால்... நேரம் மிச்சம். :D:lol::icon_idea:

லண்டன்காரர் சிக்கனமானவர்கள் என்ற கருத்துருவாக்கம் வந்ததற்கான காரணம் ஆரம்பத்தில் வந்த மாணவர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் கல்விப் பணம் செலுத்துவதற்காகவும் (தற்பொழுது வருடத்திற்கு பத்தாயிரத்திற்கு மேல்) வாழ்க்கைச் செலவிற்காகவும் நிறைய உழைக்க வேண்டும். பகலில் பாடசாலைக்குப் போய் வந்து இரவிலும் வார விடுமுறைகளிலும் வேலைக்குப் போக வேண்டும். மிகக் கஷ்டப்பட்டார்கள். அரச உதவிப் பணம் ஏதுமில்லை. அதனால் அவர்களுக்கு பணத்தின் அருமை தெரியும். இவர்கள் வசதி வந்த பின்பும் மற்றவர்களுக்கு 'ஷோ' காட்டுவதற்காக வீண் ஆடம்பரச் செலவுகளைச் செய்வதில்லை. அகதிகளாக வந்தவர்களுக்கு அவர்கள் அளவுக்கு கஷ்டமான சீவியம் இருந்ததில்லை.

மற்றும்படி இப்படியான சுயவிமர்சனங்களை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் கலாச்சாரம்தான் இங்கிலாந்தில் உள்ளது. 'அரைக் கோழியை வாங்கி.......' என்பதை வாசித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி,

மணி ஏன்... தலைப்பை மாத்துறார்.

இதற்கு, மேலிட சம்மதம் உள்ளதா?

தப்பிலி,

மணி ஏன்... தலைப்பை மாத்துறார்.

இதற்கு, மேலிட சம்மதம் உள்ளதா?

எனக்குத் தெரியவில்லை சிறி.

தலைப்பைப் பார்த்து விட்டு எனக்கும் குழப்பம் ஏற்பட்டது. உள்நுழைந்து வாசிக்கத்தான் பழைய திரிஎன்று தெரிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விதி என்ன சொல்கிறது எனத்தெரியவில்லை.

ஆனால் இது ஒரு புது முறையாக எனக்குப்பட்டது.

நீங்கள் அந்த திரிமேல் தட்டினால் கடைசியாக எழுதியது தானே வருகிறது.

ஆதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது எனது கருத்து.

பல திரிகள் 1, 2, 3, 4, 5, 6, ......... என நீளுகின்றனவே.

அதைவிட இது பரவாயில்லை என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை மாற்றுவதைவிடப் புதிய திரிகளைத் தொடங்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

அரைக்கிலோ கோழியை ஆறு பேருக்குச் சமைப்பது பற்றி அர்ஜுனின் கதையிலும் இந்தத் திரியிலும் வாசித்தபோது "எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்" என்று முதுமொழிதான் நினைவுக்கு வந்தது.

தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு எப்போதும் வியப்பையும் பெருமையையும் தந்துகொண்டுதான் இருக்கின்றது. எனது அனுபவத்தில் இந்த விருந்தோம்பல் பண்பைக் கடைப்பிடிக்காத தமிழர்களை இதுவரை காணவில்லை!

இதைத்தான் நானும் குறிப்பிட்டேன் கிருபன்

நான் பிரான்சுக்கு வந்து சில மாதங்களுக்கிடையிலேயே தனியாக ரூமெடுத்து போய்விட்டேன். அதன்பின் இங்கு வந்த பல உறவுகள் என்னிடம் தான் வருவார்கள்.

அவர்களுக்கு விசா எடுப்பதற்காக எனது ரூமின் விலாசத்தைக்கொடுத்து அதை உறுதிப்படுத்த ஒரு கடிதமும் கொடுப்பேன்.

ஒரு நாள் PARIS 14 (Gaîté) காவல்துறையிடமிருந்து ஒரு நாள்க்குறித்து என்னை வந்து சந்திக்கும்படி ஒரு கடிதம் வந்திருந்தது.

போன போது தான் எனக்கே தெரிந்தது எவ்வளவு பேருக்கு கடிதம் கொடுத்துள்ளேன் என்று.

அவர்கள் ஒரு கொப்பியைக்காட்டி

இந்தக்கொப்பி முழுவதும் நிரம்பி விட்டது. இனி எழுத இடமில்லை .

இனிமேல் எவருக்கும் கடிதம் எழுதக்கூடாது என எச்சரித்து வெளியில் விட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அரைக்கிலோ கோழியை ஆறுபேர் சமைப்பது போலத் தெரியவில்லை. அறுபது பேருக்கு மேல் சமைக்க வெளிக்கிட்டிருப்பது போலத் தெரிகிறது

"வந்தாரை யாரென்று இல்லை இன்முகம் கொண்டு கூழ் காச்சவா என வரவேற்கும் கனடா ,ஆரப்பா நீ என்ற ஆயிரம் கேள்விகளுடன் அரை கோழியை ஆறு பேருக்கு சமைக்கும் லண்டன் ".

இதுதான் நான் எழுதியது.

லண்டன் பழம்குடிமக்களை கொஞ்சம் நக்கலாக . ஏதோ காசில்லாமல் இருப்பவர்கள் இருக்கும் அரைகோழியையாவது பங்கிட்டார்களே? என்ற ரீதியில் பின்னூட்டங்கள் போகின்றது .முதலில் எழுதியதை வாசியுங்கள் .

தனி வீடு அதுவும் அவர்கள் இஸ்டத்திற்கு பிளான் போட்டு கட்டி அதுவும் நாலு வீடுகள் தான் அந்த ஒழுங்கையில்,ஒரு மூன்று மில்லியன் பவுன்ஸ் வரும். அப்படியானவர்கள் அரை கோழியை ஆறுபேருக்கு சமைப்பது பற்றித்தான் நான் எழுதியது.

Edited by arjun

  • தொடங்கியவர்

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

இதனை தொடராக எழுதுவதனால் புதிதான ஒரு பதிவை இடும் போது அதன் தலைப்பை மாற்றியிருந்தேன். அதாவது புதிதாக பதிவு இடப்பட்டுள்ளதா என பதிவிற்குள் வந்து பார்க்காமலே புரிந்து கொள்வதற்காக. இந்த நடைமுறையை இனிமேல் தவிர்க்கிறேன்.இது தொடர்பான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி. ஆனால் கோமகன் அண்ணா கூறுவது போல இது விபச்சாரத்தை ஒத்த குற்றம் என்று நான் எண்ணவில்லை.

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

மணிவாசகனிடம் இரண்டு கேள்வி கேட்கவிரும்புகின்றேன் . முதலாவது ஏன் அடிக்கடி தொடரின் தலைப்பை மாற்றுகின்றீர்கள் ? நோக்கம் உங்கள் தொடரைப் பரபரப்பாக்குவதானால் அது விபச்சாரத்துக்கு ஒப்பானது . இரண்டாவது நான் லண்டனில் ஏறத்தாள 4 வருடங்கள் இருந்திருக்கின்றேன் . ஒருசில கதைகள் மிகைப்படுத்தப்பட்டாலும் . 3 பிரிவினர் லண்டனில் இருப்பதைக் கண்கூடாகப் பாத்திருக்கின்றேன் . 60 -70 ற்குள் வந்தவர்கள் . 70 - 83 ற்குள் வந்தவர்கள் . 90 களிற்குப் பிறகு வந்தவர்கள் . இந்த மூன்று பிரிவினரும் ஒருவரையொருவர் சபைசந்திகளில் அடுக்குவதில்லை . இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?

அண்ணா!நான் எனது ஆக்கத்தில் குறிப்பிட்ட தம்பதியினர் 80களின் ஆரம்பத்தில் லண்டனுக்கு வந்தவர்கள். நான் 2003இல் இங்கிலாந்து வந்தவன். நாட்டில் வாழ முடியாத இக்கட்டான சுழலில் திடீரென புறப்பட்டு வந்த என்னை 80 களில் வந்தவர்களே ஆதரித்தார்கள். அதே போல எனக்கு இலக்கிய ரீதியான அங்கீகாரத்தைத் தந்து பொது மேடைகளில் என்னை அறிமுகம் செய்து வைத்தவரும் 80 களில் இங்கிலாந்து வந்த ஒரு பொறியியலாளர் தான்.எனவே இந்த ஆண்டுப் பிரிவினை குறித்து நான் அறியவுமில்லை. அனுபவப்படவுமில்லை.அடுத்ததாக 90 களில் அல்லது அதன் பின்னர் புலம்பெயர்ந்தவர்களில் சிலரே நான் படிக்க வந்தவன் நீ அகதியாக வந்தவன் அல்லது திருமணம் முடிக்க வந்தவள் என அடுத்தவரை நோக்கி எள்ளி நகையாடியதையும் கண்டிருக்கிறேன்.

கோ

எனது முதல் அனுபவம் என்று தலைப்பு வைத்த தாங்களா இப்படி............??? :o :o :o

நண்பா மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறிங்களே ? என்னால் ஆரம்பிக்கப்பட்ட நெருடிய நெருஞ்சியில் இருந்து இற்றைவரையிலுள்ள நெடும் , குறுந் தொடர்களது தலைப்பின் பெயர்களை அடிக்கடி மாற்றி வாசகர்களை முட்டாள்களாக்கியிருக்கின்றேனா ? சொல்லுங்கள் . எனது முதல் அனுபவத்தின் நோக்கம் அதில் ஒரு கதையை மையமாக வைத்துத் தெட்டத்தெளிவாகவே அதன் நோக்கம் சொல்லப்பட்டுள்ளது .

கள உறவுகளை முட்டாளாக்கும் தேவை எனக்கிருக்கில்லை அண்ணா!மாறாக தொடராக ஆக்கங்கள் பதிவிடப்படும்போது நான் அவற்றிற்கு இடப்படும் பின்னூட்டங்களை வாசிப்பதை விட ஆக்கத்தை வாசிக்க பல தடவைகள் ஆர்வம் காட்டுவதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் பின்னூட்டம் காரணமாக முன்னணிக்கு வந்திருக்கும் குறித்த தலைப்பை புதிதாக பதிவு இடப்பட்டிருப்பதாக எண்ணி மீண்டும் உள்நுழைந்து பார்த்து ஏமாந்திருக்கிறேன். அதன் காரணமாகப் புதிய பதிவொன்று இடப்படும் போது அந்தத் தலைப்பை மாற்றுவதன் மூலம் புதிய பதிவு இடப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்த விரும்புகிறேன்.புதிதாக ஒரு திரியைத் தொடங்கி புதிய பெயரை இடுவதற்கும் தொடராக ஒரே திரியில் எழுதி அதன் பெயரை மாற்றியதற்கும் இடையில் என்ன பெரிய முட்டாளாக்கும் காரியத்தைச் செய்தேன் எனப் புரியவில்லை.எனினும் இங்கு கருத்திட்ட பலரதும் ஆலோசனைக்கமைய தொடர்ந்து ஒரே தலைப்பில் எனது பதிவுகளை இடத்திட்டமிட்டுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.