Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்?: ஜெயமோகனின் கேள்வி

Featured Replies

எனது தந்தையையும் சகோதரியையும் இந்திய இராணுவமே படுகொலை செய்தது அதுபற்றி 2009 ம் ஆண்டு ஒரு பேப்பரில் நான் எழுதிய பதிவு ஜெயமேகனிற்கு சமர்ப்பணம்.இதனை யாழிலும் இணைத்திருந்தேன் இப்பொழுது காணவில்லை

கீழே உள்ள இணைப்பில் அழுத்தி படிக்கலாம்

http://sathirir.blog...og-post_15.html

இந்திய இராணுவம் பற்றிய என்னுடைய இன்னுமொரு பதிவு

http://sathirir.blog.../2006/10/2.html

சாத்திரி, மேலே இணைத்த இரு பதிவுகளும் இன்று தான் படித்தேன், அன்று உங்கள் உறவுகளுக்கு ஏற்பட்ட கொடிய சம்பவங்களை மூன்றாமவராக இன்று நாம் அறியும் போதே நெஞ்சு கனத்துப் போகிறது... ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • Replies 174
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் 18 வயது

அவர் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கினார் என தேடிவந்தபோது அவரும் அவரது நண்பனும் பக்கத்தில் உள்ள காணியொன்றில் இருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். இருவரையும் கைது செய்து சில கேள்விகள் கேட்டபின் இருவரையும் சுட்டுக்கொன்றபின் பக்கத்தில் குழி தோண்டி அதற்குள் போட்டு மூடிவிட்டு எவரும் வெளியில் எடுக்கக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டு சென்றனர். எமது ஊரில் நடந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு இது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் பற்றிய என்னுடைய இன்னுமொரு பதிவு

http://sathirir.blog.../2006/10/2.html

தற்போதுதான் பார்த்தேன் சாத்திரி

பல வருடங்களுக்குப்பின் கட்டுப்படுத்த முடியாத கண்ணீர்

கீ போட்டை நனைத்துவிட்டது

சில மணித்துளிகள் அழுதுவிட்டே எழுதுகின்றேன்.

அந்தக்கொலை பற்றி சிறிது மாற்றங்கள் என் மனதில் சில நாட்களாக நடந்தன.

தங்கள் பதிவுடன் மீண்டும் பழைய நிலைக்கே வந்துள்ளேன்.

நன்றி தனு...........

திரிசங்கு நிலையில் இருக்கும் என்னை போன்றோர் பல காலங்கள் திரிசங்கு நிலையையே எடுக்க வேண்டிய கட்டயதிற்குள் மீண்டும் மீண்டும் தள்ளுவதால் எந்த பலனும் இல்லை .இங்கு நாங்கள் தேடுவது பயணிப்பது விடிவை நோக்கி . உங்களின் பயணம் கூட அதை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும் என உரிமையோடு கட்டாயப்படுத்துகிறோம் . மூன்று வருடங்கள் முடிந்து விட்டது . நாம் தமிழ் நாட்டு கரனும் சரி ஈழ உறவுகளும் சரி உருப்படியாக எதையும் ஈழத்திற்காக செய்ததாக எனக்கு தெரியவில்லை .

ஒரு குழு ராஜ தந்திர ரீதியில் செயல்படுகிறது . நல்லது . அவர்கள் அப்படியே பயணிக்கட்டும் . ( நாடு கடந்த )

ஒரு குழு போரினால் பாதிக்கபட்டவகளுக்கு உதவுகிறது நல்லது அவர்களும் அப்படியே செய்யட்டும் ( சில தன்னார்வ தொண்டு அமைப்புகள் )

ஒரு குழு இந்தியாவின் சொல்லுக்கு ஜிங்கு ஜக்கா அடிக்கிறது நல்லது அப்படியே நடக்கட்டும் .

ஒரு குழு போர்குற்றம் மீது கவனம் செலுத்துகிறது . நல்லது அப்படியே நடக்கட்டும் .

மேலும் பல செய்யா கூடிய வேலைகள் நிறைய உள்ளது .

தொழில் ,கல்வி , பொருளாதாரம் , மனவியல், மீள் வாழ்வு, மறுவாழ்வு, சுகாதாரம், புனரமைப்பு அடிப்படை தேவைகள் என பல இன்னும் முடிக்க படாது அப்படியே கிடக்கின்றன . குழுக்களாக பிரிந்து இவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டியதே தற்போதைய தேவை . இந்திய விரோதம் மட்டும் கதைத்து காலத்தை வீணடிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

இந்தியாவை பற்றி இப்போது கதைத்து ஒன்றும் ஆக போவது இல்லை .கதைத்தாலும் என்னை போலவே உலகமும் சாட்சி கேட்கும் . சாட்சி இல்லா குற்றங்கள் தண்டிக்க பட போவதில்லை . குற்றம் செய்தவர் வாயால் ஒப்புகொண்டால் ஒழிய . இந்தியா பற்றி கதைப்பதனால் பலன் ஒன்றும் இல்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் . உங்களுக்கும் களம் வரும் அப்போது பார்த்துகொள்வோம் என்கிறீர்கள் . அது நிஜமே . ஆனால் அந்த உங்களின் காலம் இதுவல்ல . ஈழத்தின் தலை விதியே இப்போது ஈழ தமிழர்களின் கையில் இல்லை . வெளிநாட்டுகாரன் ஏதாவது செய்தால் தான் உண்டு என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ள பட்டு விட்டோம் . இந்தியா விரோதம் என்பது இந்தியர்கள் மட்டும் ஈழ தமிழர்கள் மேல் கோபம் கொள்வார்கள் . சிலர் இந்தியா ஒன்றும் புடுங்க தேவையில்லை என்று கூட சொல்வீர்கள் . ஆனால் இங்கு இந்தியா என்பது இந்தியா நட்பு நாடுகளையும் சேர்ந்து குறிக்கும் . இந்தியா ஆதரவு இல்லையென்றால் நட்பு நாடுகளின் ஆதரவும் இல்லாமல் போகும் .

ஏதோ அத்தி பூத்தாற்போல இந்தியாவின் செய்கைகளின் மாற்றம் தெரியும் போது அதை பயன் படுத்திகொண்டு ஈழ மக்களுக்கு குறிப்பாக அங்கு வாழும் மக்களுக்கு தம்மால் ஆன உதவியை செய்வதே தற்போது தேவை . ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு உங்களின் வெறுப்புகளை கழுவி கழுவி ஊற்றிகொள்ளலாம் என கூறுகிறேன்

ராஜீவ் கொலைக்கு நியாயம் கற்பித்தும் ஒன்றும் நடக்க போவது இல்லை . ராஜீவ் கொலை ஆனதும் புலிகளின் ஆதரவு கட்சியை மண்ணை கவ்வ வைத்தவர்கள் தமிழ் நாட்டு மக்கள். ராஜீவ் கொலையை நியாய படுத்தும் எந்த கட்சியுமே தமிழ் நாட்டில் ஆட்சியை ஏன் தனியாக நின்னு டெபாசிட் கூட வாங்க முடியாது . தமிழனுக்கு பிடிக்காத கட்சி காங்கிரஸ் கட்சி . அதைவிட பிடிக்காதது சந்தர்ப்பவாதமும் ராஜீவ் கொலையை நியாயபடுத்துவதும் . தமிழ் நாட்டான் செம்மறி ஆடுகள் அல்ல . நன்கு சிந்தித்து சீர்தூக்கியே செயல்படுபவர் .உண்மையின் நீங்கள் தமிழக உறவுகளை உண்மையாக மதிப்பதாக இருந்தால் துவேசத்தை ஒதுக்கி வைத்து ( ஒதுக்கி மட்டும் வையுங்கள் . மறந்து விடாதீர்கள் . வலிகள் வருங்காலத்தை செப்பனிட உதவும் வழிகள். ). ஆக்க பூர்வமாக ஒன்றிணைந்து செயல் படுவோம்

இணையத்தில் தேடிய போது கிடைத்தவை...

RAPE OF TAMIL WOMEN

BY INDIAN ARMY

"After its forces entered Sri Lanka on 30 July, the IPKF was increasingly accused of raping Tamil women and of deliberately killing dozens of unarmed Tamil civilians, among them elderly people, women and children...in several cases there was eye witness evidence that the victims were non combatants shot without provocation...

Several dozen Tamil women, some of whom needed hospital treatment, testified that they were raped by IPKF personnel. A local magistrate in the north reportedly found the IPKF had been responsible for seven cases of rape in December." - Amnesty International Annual Report, 1988 for period January to December 1987

"The Indian Army has court martialled four of its men serving in the Jaffna peninsula for rape, a senior Indian military officer said here yesterday...He also conceded that several complaints of theft had been made against Indian soldiers. 'The Indian army are not angels. We are not devils either. We are just human' Brigadier Kahlon said when pressed for details. 'Rape happens even in the West'." - Sri Lanka Sun, 15 January 1988

"Two Indian soldiers serving in Batticaloa are to be court martialled for rape, authoritative sources in Batticaloa said yesterday... The two soldiers to be court martialled, allegedly raped two girls during a cordon and search operation at Ariyampathi on Friday" - Sri Lanka Sun, 19 January 1988

Charges against IPKF include rape, murder and looting says Indian Sunday Observer...

"A number of Indian soldiers face dismissal from military service besides rigorous imprisonment for committing excesses, including raping of women and looting of civilian property while deployed for peace­keeping role in Sri Lanka, it is learnt.

So far, the government had denied that the IPKF soldiers had committed any excesses. The denials came in the wake of allegations by human rights organizations, including Amnesty International, a few months ago. The instances were kept under wraps by the army authorities who, however, did initiate punitive action against the guilty. But legal experts feel that the manner in which the army has handled the whole issue raises vital points of law which may not stand the scrutiny of Indian law courts later.

The most serious case relates to an incident which occurred on November 21, 1987 near Trincomalee when Naik Baldev Singh of the 270 Engines a' Regiment ran berserk and killed seven civilians and injured another four by indiscriminate firing from his services rifle. He committed this crime following the death of his brothers law during a combing operation the previous day.

The army authorities propose to try him by a General Courts Martial (GCM) in Sri Lanka under section 69 of the Army (Civil offence) contrary to sections 302 and 307 of the Indian Penal Code. This is the first time in recent years that a trial of this nature under sections of the Indian Penal Code will take place in a foreign country.

Section 124 of the Army Act provides that, "Any person subject to this Act who commits any offence may be tried and punished for such offence in any place whatever". Even the Indian Penal Code provides for punishments to Indians for offences committed to Indians for offences committed beyond the limits of India. But the vital point of law is whether a trial by the IPC for civil offences committed abroad against nationals of that country can be held out of Indian soil.

Legal experts say that while a trial for a purely military offence can be held anywhere, a trial for a civil offence under the IPC could be held only in India unless it was specifically agreed by the countries concerned and the agreement has been duly ratified by the respective parliaments.

Army officers of the judge advocate general's feel that if the trial was held in India, Sri Lankan civilians would not be able to depose as witnesses. A senior lawyer said that the IPC provides for extradition and the trial could be held in held in Sri Lanka according to the laws of that country. Army authorities, however, are not keen to follow this course as stringent punishment by a Sri Lankan court to assuage local sentiments could demoralise Indian troops deployed there.

Several soldiers face dismissal , on charges of rape, sodomy and looting of civilian property for which the Army A t along with the provisions of the IP C provides severe punishment. In fact they also face action for violating the regimental orders passed recently which directed army personnel to abstain from frisking women without the presence of women personnel of the Central Reserve Police Force (Mahila CRPF).

Almost all cases of rape and looting are being tried Summary Courts Martial (SCM), which is conducted by the concerned commanding ­ officers. The trials are held under section 69 or the Army Act contrary to sections 375 and 376 of the IPC.

However, lawyers point out that the soldiers guilty of such crimes should have been tried by GCM which after deliberation could sentence the accused to long terms of imprisonment and even life imprisonment.

They point out that since section 376 of the IPC provides for sentences up to 10 years of rape, etc. the trials could not be held by SCM which is empowered to sentence the guilty to only one year's imprisonment, besides dismissal from service.

In many cases the sentences of SCMs have been reduced considerable following appeals to senior officers. Sources said that ­ ­ two soldiers­ - Latur Lal and Babu Lal of 12 Grenadiers­­ face a year's imprisonment and dismissal from service for allegedly raping a married woman at Karavedi during Operation Pawan on May 27, 1988. The incident was reported by the vice principal of Varani Mahavidyalaya and the army authorities decided to take immediate cognizance as the local people who had gathered started condemning the entire IPKF.

Another soldier of 12 Grenadiers ­­Khem Raj Meena­­ faces dismissal and four month's imprisonment for attempting to rape another married woman when the unit was conducting cordon and search of a house at Thunnalai south (Point Pedro, Jaffna) on February l, 1988.

Sepoy Kamail Singh of 14 Sikh Light Infantry faces dismissal and one year's RI for allegedly raping a woman of village Idaikkurichy during a search on December 17, 1987. Similar punishment is also being given to A Mani, the barber of 93 Field Regiment for allegedly raping an unmarried woman of a place near Kodikaman on December 24, 1987 when conducting a search operation. He has also been tried for stealing two wrist watches. Similarly, Naik Kulwant Singh of 16 Sikh has been sentenced to nine months imprisonment and faces dismissal for committing theft of gold ornaments from a house in village Mandaitivu near Jaffna on January 13, 1988. Highly placed sources said that there were numerous complaints from different agencies, including RAW, of excesses by Sikh troops. However, inquiries later did not substantiate many of these allegations.

Six jawans, including a havildar of 5 Rajputana Rifles face dismissal and one year's RI for disobeying regimental orders and indulging in sexual relations with women while frisking them at Visumaddu village on April 11 1988. These six whose involvement was also proved by a staff inquiry, are havildar Mewar Singh, Naik Subhash Chander, Suresh Kajar and riflemen Harvair Singh, Ramphool Singh and Bhagirath Ram. The incident occurred during Operation Viraat However, the court of inquiry brought out that the four complainants were women of easy virtue and their main grouse was that they were not paid for their services.

Naik Banwari Lal and rifleman Gugan Ram of 18 Garhwal Rifles too, face dismissal and six months' imprisonment each for trying to outrage the modesty of married women at Kathadi on December 25, 1987.The army authorities were very embarrassed by the behaviour of havildar Badan Singh posted in an infantry brigade headquarters who in January 1988 committed sodomy 'against four male activists of the LTTE during their detention at Jaffna fort.

There have also been allegations of some LTTE activists dying in army custody.

Lance Naik SK Bose of 146 Air Defence Regiment has been dismissed and given four months imprisonment for picking up electronic goods and other civilian items in November 1987 while on duty between Palady air field arid Jaffna. In fact, his commanding officer recommended deterrent punishment as such actions were bound to "tarnish the image of the army and the IPKF and earn ill will of the local populace."

Sources said that about one dozen similar instances had also been reported against troops of other battalions of Kumaon, Mahar and Madras regiments. But details are not yet available. (Kanwar Sandhu reporting in the Indian Sunday Observer, December 18-24, 1988)

http://tamilnation.c...t/indict050.htm

  • கருத்துக்கள உறவுகள்

திரிசங்கு நிலையில் இருக்கும் என்னை போன்றோர் பல காலங்கள் திரிசங்கு நிலையையே எடுக்க வேண்டிய கட்டயதிற்குள் மீண்டும் மீண்டும் தள்ளுவதால் எந்த பலனும் இல்லை .இங்கு நாங்கள் தேடுவது பயணிப்பது விடிவை நோக்கி . உங்களின் பயணம் கூட அதை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும் என உரிமையோடு கட்டாயப்படுத்துகிறோம் . மூன்று வருடங்கள் முடிந்து விட்டது . நாம் தமிழ் நாட்டு கரனும் சரி ஈழ உறவுகளும் சரி உருப்படியாக எதையும் ஈழத்திற்காக செய்ததாக எனக்கு தெரியவில்லை .

ஒரு குழு ராஜ தந்திர ரீதியில் செயல்படுகிறது . நல்லது . அவர்கள் அப்படியே பயணிக்கட்டும் . ( நாடு கடந்த )

ஒரு குழு போரினால் பாதிக்கபட்டவகளுக்கு உதவுகிறது நல்லது அவர்களும் அப்படியே செய்யட்டும் ( சில தன்னார்வ தொண்டு அமைப்புகள் )

ஒரு குழு இந்தியாவின் சொல்லுக்கு ஜிங்கு ஜக்கா அடிக்கிறது நல்லது அப்படியே நடக்கட்டும் .

ஒரு குழு போர்குற்றம் மீது கவனம் செலுத்துகிறது . நல்லது அப்படியே நடக்கட்டும் .

மேலும் பல செய்யா கூடிய வேலைகள் நிறைய உள்ளது .

தொழில் ,கல்வி , பொருளாதாரம் , மனவியல், மீள் வாழ்வு, மறுவாழ்வு, சுகாதாரம், புனரமைப்பு அடிப்படை தேவைகள் என பல இன்னும் முடிக்க படாது அப்படியே கிடக்கின்றன . குழுக்களாக பிரிந்து இவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டியதே தற்போதைய தேவை . இந்திய விரோதம் மட்டும் கதைத்து காலத்தை வீணடிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

இந்தியாவை பற்றி இப்போது கதைத்து ஒன்றும் ஆக போவது இல்லை .கதைத்தாலும் என்னை போலவே உலகமும் சாட்சி கேட்கும் . சாட்சி இல்லா குற்றங்கள் தண்டிக்க பட போவதில்லை . குற்றம் செய்தவர் வாயால் ஒப்புகொண்டால் ஒழிய . இந்தியா பற்றி கதைப்பதனால் பலன் ஒன்றும் இல்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் . உங்களுக்கும் களம் வரும் அப்போது பார்த்துகொள்வோம் என்கிறீர்கள் . அது நிஜமே . ஆனால் அந்த உங்களின் காலம் இதுவல்ல . ஈழத்தின் தலை விதியே இப்போது ஈழ தமிழர்களின் கையில் இல்லை . வெளிநாட்டுகாரன் ஏதாவது செய்தால் தான் உண்டு என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ள பட்டு விட்டோம் . இந்தியா விரோதம் என்பது இந்தியர்கள் மட்டும் ஈழ தமிழர்கள் மேல் கோபம் கொள்வார்கள் . சிலர் இந்தியா ஒன்றும் புடுங்க தேவையில்லை என்று கூட சொல்வீர்கள் . ஆனால் இங்கு இந்தியா என்பது இந்தியா நட்பு நாடுகளையும் சேர்ந்து குறிக்கும் . இந்தியா ஆதரவு இல்லையென்றால் நட்பு நாடுகளின் ஆதரவும் இல்லாமல் போகும் .

ஏதோ அத்தி பூத்தாற்போல இந்தியாவின் செய்கைகளின் மாற்றம் தெரியும் போது அதை பயன் படுத்திகொண்டு ஈழ மக்களுக்கு குறிப்பாக அங்கு வாழும் மக்களுக்கு தம்மால் ஆன உதவியை செய்வதே தற்போது தேவை . ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு உங்களின் வெறுப்புகளை கழுவி கழுவி ஊற்றிகொள்ளலாம் என கூறுகிறேன்

ராஜீவ் கொலைக்கு நியாயம் கற்பித்தும் ஒன்றும் நடக்க போவது இல்லை . ராஜீவ் கொலை ஆனதும் புலிகளின் ஆதரவு கட்சியை மண்ணை கவ்வ வைத்தவர்கள் தமிழ் நாட்டு மக்கள். ராஜீவ் கொலையை நியாய படுத்தும் எந்த கட்சியுமே தமிழ் நாட்டில் ஆட்சியை ஏன் தனியாக நின்னு டெபாசிட் கூட வாங்க முடியாது . தமிழனுக்கு பிடிக்காத கட்சி காங்கிரஸ் கட்சி . அதைவிட பிடிக்காதது சந்தர்ப்பவாதமும் ராஜீவ் கொலையை நியாயபடுத்துவதும் . தமிழ் நாட்டான் செம்மறி ஆடுகள் அல்ல . நன்கு சிந்தித்து சீர்தூக்கியே செயல்படுபவர் .உண்மையின் நீங்கள் தமிழக உறவுகளை உண்மையாக மதிப்பதாக இருந்தால் துவேசத்தை ஒதுக்கி வைத்து ( ஒதுக்கி மட்டும் வையுங்கள் . மறந்து விடாதீர்கள் . வலிகள் வருங்காலத்தை செப்பனிட உதவும் வழிகள். ). ஆக்க பூர்வமாக ஒன்றிணைந்து செயல் படுவோம்

பாதிக்கப் பட்டவனால், அந்தப் பாதிப்பின் தாக்கங்களை எவ்வாறு மறக்க முடியும்?

ஒரு தனிமனிதனின், கொலைக்குப் பழிவாங்கத் தானே, ஒரு இனத்தையே ஓம குண்டத்தில் ஆகுதியாக்கியது, நீங்கள் கூறும் இந்தியா?

இன்னும் தனது பாவங்களைக் கழுவும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து, தனது செயலை நியாயப் படுத்திக் கொண்டிருக்கின்றது, இந்திய தேசம்!

காந்தியின் சிலைக்கு, இந்தியர்கள் செருப்புமாலை சாத்திய காலத்தில் மலர் மாலை சாத்தியவன், ஈழத் தமிழன்!

ஒன்று செய்யுங்கள்! உங்கள் அகிம்சை, முகமூடியைக் கழட்டித் தூர எறியுங்கள்!

உங்கள் தேசியக் கொடியில் இருக்கும் அசோகச் சக்கரத்தையும் அழித்து விடுங்கள்!

அதன் பின்பு, உங்கள் உண்மை முகம் உலகத்துக்குத் தெரியட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது கூட இந்ததியா எங்களை எங்கள் பாட்டுக்கு விட்டுவிட்டால் போதும்.

இந்தியாவிடம் எதையும் எமக்காக செய்யும்படி எதிர்பார்க்கவில்லை.

தயவு செய்து கெஞ்சிக்கேட்கிறோம் எம்மை வைத்து எலி பூனை விளையாட்டு விளையாடுவதை நிறுத்துங்கள்

எம்மை வைத்து சிங்களவனுடன் சீனா பற்றி பேரம் பேசுவதை நிறுத்துங்கள்.

தமிழகத்த்தின் மீதான பழிவாங்குதல்களை எம்மீது மேற்கொள்வதை மத்திய ஆட்சியாளரர்களே கைவிடுஙங்கள்.

தமிழக உறவுகள் நீங்கள் எமக்காக செய்ய வேண்டியது எம்மை இந்தியாவிடமிருந்து காப்பதே.

1987 - 1990 காலப்பகுதியில் இந்திய அழிவுப்படை செய்த அக்கிரமங்கள் Sri Lanka's Killing Fields போல் ஆவணப்படமாக சாட்சிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இதுவரை மாண்டுபோன நேரடி சாட்சியங்கள் தவிர, சில பத்து ஆண்டுகளின்பின் நேரடிசாட்சியங்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும். இது வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவதற்கும், எதிர்காலத்தில் போர்க்குற்றங்கள் தொடர்ந்தும் செய்யப்படுவதற்கும் வழிகோலும். 

மிக சிறந்த உயரிய கருத்து . இதை தானே நான் சொல்கிறேன் . நிரூபியுங்கள்.அதன் பின் இந்திய அரசு அல்லது மக்களின் போக்கை கவனியுங்கள் . அதன் பின் தெளிவாக இந்தியா பற்றி முடிவெடுங்கள்

இப்போது கூட இந்ததியா எங்களை எங்கள் பாட்டுக்கு விட்டுவிட்டால் போதும்.

இந்தியாவிடம் எதையும் எமக்காக செய்யும்படி எதிர்பார்க்கவில்லை.

தயவு செய்து கெஞ்சிக்கேட்கிறோம் எம்மை வைத்து எலி பூனை விளையாட்டு விளையாடுவதை நிறுத்துங்கள்

எம்மை வைத்து சிங்களவனுடன் சீனா பற்றி பேரம் பேசுவதை நிறுத்துங்கள்.

தமிழகத்த்தின் மீதான பழிவாங்குதல்களை எம்மீது மேற்கொள்வதை மத்திய ஆட்சியாளரர்களே கைவிடுஙங்கள்.

தமிழக உறவுகள் நீங்கள் எமக்காக செய்ய வேண்டியது எம்மை இந்தியாவிடமிருந்து காப்பதே.

இல்லை நண்பரே இதில் கூட மாற்று கருத்து உலவுகிறது . இந்தியா இடையில் இருந்ததால் தான் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள் .இல்லையேல் லட்சங்களின் இறந்து இருப்பார்கள் எனவும் கருத்து இருக்கிறது.

நீங்கள் கூறும் இன்னொரு கருத்து சும்மா இருந்தால் போதும் .இந்தியா சும்மா இருந்திருந்தால் புலிகள் வென்று இருப்பார்கள் . முள்ளிவாய்க்கால் என்ற சம்பவமே நடந்து இருக்காது இதுவும் ஒப்புக்கொள்ள கூடிய கருத்தே .இதை மனதார ஒப்புகொள்கிறேன்

எதிலும் தலையிட வேண்டியதில்லை என்பதை இப்போது சொல்ல முடியாது . ஏனெனில் பிரச்சினை இவ்வளவு இடியாப்ப சிக்கலானதற்கு காரணமே இந்தியா தான் . என் கருத்தும் இதுதான் .இலங்கை விவகாரத்தில் தலையிட்ட போது இந்தியா பல வாக்குறுதிகளை தமிழகத்திற்கு கொடுத்தது . அதை நிறைவேற்ற சொல்லித்தான் கத்துகிறோம் . அது நிறைவேறும் வரையிலாவது இந்திய விரோதம் வேண்டாம் . பொறுமை காப்போம் . எதுவும் செய்யா வில்லை எனில் பிறகு புதிய முடிவெடுங்கள்

இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.

ஜெ

http://www.jeyamohan.in/?p=27320

பேரழிவு போரிலே சிரிலங்காவுகு முன்டு குடுதது இன்தியா

ஆயுதம் குடுதான்

இன்தியா ஆமியும் சின்களவனோடே நின்டான்

விசபுகை நச்சு குன்டு எல்லாம் குடுதுபோட்டு

உண்மையே ஒளிச்சு ஐநாவையும் அமுகி விழுன்கிபோட்டு

என்னபா ஜெயமோகன் சொல்லிது?????????????????????????????????????????????????????????????????

சரியான லூசு பயல் போலே இருகானே???????????????????

  • கருத்துக்கள உறவுகள்

மிக சிறந்த உயரிய கருத்து . இதை தானே நான் சொல்கிறேன் . நிரூபியுங்கள்.அதன் பின் இந்திய அரசு அல்லது மக்களின் போக்கை கவனியுங்கள் . அதன் பின் தெளிவாக இந்தியா பற்றி முடிவெடுங்கள்

பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டால் கொலைகள் நிரூபணமானதாகக் கொள்ளப்படுமா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ் நாட்டில் எழுந்திருக்கும் தமிழரின் கோவமே ,இந்திய ஆளும் வர்க்கத்தை நிலைகுலையச் செய்கிறது.அதனை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளைத் தான் உங்களைப் போன்றவர்கள் செய்கிறார்கள்.

தமிழ் நாட்டில் யார் யார் எமக்காக வேலை செய்கிறார்கள், யார் யார் எமக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும்.

இதில் எமக்கு எதிரானவர் செயமோகன் ,அவரை உலகில் எங்கு சென்றாலும் புறக்கணிப்பதும் கண்டிப்பதும் எமது வேலை.

அதே போல் நடந்த கொடுமைகளை மறைக்க முயலும் உங்க்ளையும் நாங்கள் அறிவோம்.

தமிழ் நாட்டில் காங்கிரசையும் பிஜேபியையும் கம்முயூனீச்ட்டுக்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லா பூனூலிஸ்டுக்களையும் நாங்கள் அறிவோம்.

இந்துத்வாவை தமிழ் நாட்டில் புகுத்த முயலும் செயமோகனும் தேசியக் கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்.

தமிழர்கள் உலகெங்கும் ஒன்று படுவோம்.

தமிழ் நாட்டில் காங்கிரசையும் பிஜேபியையும் கம்முயூனீச்ட்டுக்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லா பூனூலிஸ்டுக்களையும் நாங்கள் அறிவோம்.

belly-laugh.gifbelly-laugh.gifbelly-laugh.gif

என்னபா செயமோகனும் பூனூலிஸாஆபா??????????????????????????????????

பூனூலிஸ்டுதானபா கொலகளுகு பின்னால நிக்கிது :unsure::(

இதில் எமக்கு எதிரானவர் செயமோகன் ,அவரை உலகில் எங்கு சென்றாலும் புறக்கணிப்பதும் கண்டிப்பதும் எமது வேலை.

இதுகளுக்குக் கடிதம் எல்லாம் நீளமாக எழுதிப் பயன் இல்லை. பழைய காலணிகள், சப்பாத்துக்களை எறிந்து விடாமல் சேர்த்து வைத்திருங்கள். ஈழத் தமிழர் இருக்கும் பக்கம் வராமல் போய் விடுவானா?

தமிழ்பயித்தியம்,

இங்கு எத்தனை பேர் ஆளுக்கு ஆள் எதிரெதிராய் எழுதிக் குவித்தாலும், ஒன்றில் மாத்திரம் கருத்துக்கள் ஒற்றுமையாக இருக்கிறது. காரணம் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்கள். மக்கள் மனதில் ஆறாத வடுக்கள் நினைவில் பதிந்துள்ளன.

எண்பதுகளில் இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க சோவியத்- காந்தியக் குடியரசு பாவித்தது ஈழத் தமிழர்களை. அதனைத்தான் இன்று நாங்கள் அனுபவிக்கிறோம்.

வன்புணர்வு செய்யும் பொழுது வீடியோக் கமராக்களை இந்திய இராணுவம் பூட்டவில்லை. இதெற்கெல்லாம் அத்தாட்சிப் பத்திரம் எங்களிடமில்லை. இல்லாவிட்டால் உலகமயமாக்களில் செல்லுபடியாகாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

ஜெயமோகனின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். அவரின் வாசகன். பதினெட்டு மைகளுக்கு அப்பால் நடந்த சுய இன அழிப்புக் கூட தெரியாமல் எழுதுகிறார் என்று இதுவரை நினைக்கவில்லை.

இந்தியா' தன்னைக் வாழவைக்க ஈழமக்களை எருவாக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அலோ நாங்கள் தெலுங்கு தேசத்தில் இருந்து உரையாடுரம் ..(ஏன்னா தமிழ்நாட்டில் இருந்து பேசுறம் என்று குஜராத்தில் இருந்து டைப்படிக்கிறார்கள்) விலைமாதுக்கு கூட கொஞ்சம் தொழில் தரமம் உண்டு... கிந்தியாவை நம்பினால் கோவணம் கூட கிடைக்காது..

அடிப்படையில் தமிழ்நாடு வேறு கிந்தியா வேறு .. தமிழீழம் வேறு.. மூன்றும் வெவ்வேறு நாடுகள்.. மூன்றுக்கும் நடுவில் ரெயில் போக்குவரத்து .. கப்பல் போக்குவரத்து என தனித்தனிய விட்டுக்கலாம்..ஆனால் ஒவ்வொருத்தரும் நாங்கள் சொன்னால் கேட்பார்கள் என ஈழத்தின் மேல் உரிமைகள் போட போடாது.. அது அவர்கள் தேசம். அங்க பூந்து உள்ளடி பண்ண கூடாது. கிந்தியாக்கரன் மானஸ்தனாக இருந்தால் அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிடபாடாது.. அவன் அடிச்சுப்பான் செத்துப்பான்.. நீங்கள் உங்கள் உடம்பில் உள்ள 9 ஓட்டைகளை அடைத்து கொள்ளணும்.. இவன் தெற்காசிய ரவுடி.. உலகம் பஞ்ச்யாத்திற்கு இவனத்தாக் கூப்பிடும்.. பெரியதாதாவுக்கு சின்ன தாதா பதில் சொல்ல்லணை என்றால் கேவலம்.. தெரு நாய்களுக்கு ஏரியா தகறாரு இருக்கம்.. அது எல்லோரும் பார்க்கிற விசயம்தான் ..

டிஸ்கி:

சில பேர் கீழ்பாக்கம் கோஸ்டிகள் ... கிந்தியா எப்படியாவது தீர்வை பெற்றுதரவேண்டும்.. அப்புடி இப்புடி என்று ஈழ தோழர்கள் கதறுகிறார்கள்.. என ஜில்மால் வேலை காட்டிக்கொண்டு கிந்தியதின் வேலையை வடகிந்தியத்தின் வால்கள் இங்கிட்டு காட்ட வேண்டாம்.. ஈழம் சுடு காடாயிட்டுத்து என்னவோ உண்மைதான் .. அவுங்க வேலைய அவுங்க பார்த்துப்பாங்க.. அடுத்தது என்ன செய்யணும் என்று அவர்களுக்கு தெரியும். உதவி செய்யலாலை என்றாலும் அவர்களுக்கு உபத்தரவம் கொடுக்காமல் இருந்தாலே அவர்கள் அவர்களுக்கான நாட்டை கட்டி அமைத்து கொள்ளுவார்கள்

ரொம்ப நேரமா காணோமே என நினைத்தேன் . வந்து விட்டீரா . நண்பரே இப்போது நான் உள்ள ஊர் எது என்று தெளிவாக சொல்லி இருக்கிறேனே . நீங்கள் குஜராத் என தப்பாய் அடித்து இருக்கிறீர்கள் . தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தட்டுகிறேன் என நான் எப்போதும் சொன்னதே இல்லை . இந்தியாவில் இருந்து தட்டுகிறேன் என மட்டுமே கூறி இருக்கிறேன் . மேலும் போயி ஒன்றும் செட்டில் ஆகி விடவில்லை . சம்பாரித்து நில புலன் எல்லாம் வாங்குவது தமிழ்நாட்டில் தான் .

நீங்கள் உண்மையில் தமிழ் மேல் அக்கறை உள்ளவராயிருந்தால் நான் இருக்கும் இடத்தை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் . நான் இருக்கும் மாநிலத்தில் மட்டுமே தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் எம்பி ஆக அதுவும் தேர்தலின் ஜெயித்து இருக்கிறார் . நிகழ் காலம் பேசுகிறேன் . இப்போதும் அவர் எம்பி தான் . எங்க ராசா தெளிவா சொல்லு பார்க்கலாம்

இந்தியா எதுவும் செய்ய தேவையில்லை என்பதே எனது கருத்தும் நண்பரே .தமிழ் நாட்டு தமிழர் ஆகிய நாம் என்ன செய்தோம் ??? அவர்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி படுகுழியில் தள்ளியது பத்தாதா??? இன்னும் உசுப்பேற்றி அவர்களை ஏன் அழிக்க நினைக்கிறீர் .??? இன்னும் அவர்கள் இழக்க என்ன இருக்கிறது ??? இப்போதாவது அவர்களை நல் வழிக்கு அழைத்து செல்லலாமே . முடிந்தால் . இல்லாவிட்டால் தமிழ் நாட்டு காரனும் உசுப்பெற்றாமல் சும்மா இருப்பதே நல்லது

உமக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் இங்கே தமிழ் நாடா இந்தியாவா என புது கரடியை அல்லவா புகுத்துவீர் . வேறு ஒரு திரியில் நம் சண்டையை வைத்து கொள்ளலாம்

எவரும் எவரையும் உசுப்பேத்துவதால் எவரும் போராடுவதில்லை.

அவர் அவர் தமக்காகவே போராடுகிறார்கள்.

இந்திய ஆளும் வர்க்கமும் இந்திய தேசியக் கட்சிகளைச் சார்ந்தவர்களும் ஈழத் தமிழரின் போராட்டத்துக்கான இந்த அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை.

தமது அடிப்படை வாழும் உரிமைக்காக ஈழத்தில் மக்கள் போராடுகிறார்கள்.வைகோ சொன்னார் சீமான் சொன்னார் என்பதற்காக அவர்கள் போராடவில்லை.

போராட்டத்துக்கு ஆதரவு தருகிறவர்கள் சொல்லி எவரும் போராடுவதைல்லை.போராட்டத்தின் நியாயம் கருதியே ஆதரவு தருபவர்கள் தமது ஆதரவை வழங்கிறார்கள்.

நியாயம் நீதி இவை எதுவும் இன்றி போராடும் மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப் படுத்தி அவர்களின் ஆதாரவாளர்களைத் தனிமைப்படுத்தி போராட்டத்தைப் பலவீனப் படுத்த முயலும் உங்களைப் போன்ரவர்களே இந்திய அரசின் ஏவலாளர் சொல்வதைப் போல் , ஈழ மக்கள் தமீழம் கேட்கவில்லை என்று சொல்வார்கள்.

முடிந்தால் தமீழத்தில் ஒரு சுயாதீன வாக்கு நடாத்தி அவர்கள் தமீழம் கேட்கிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வோம்.

முடிந்தால் அந்த உரிமையாவது அவர்களுக்குக் கொடுங்கள்.அவர்கள் சார்பாக நீங்கள் பேசாதீர்கள்.அதற்க்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் புரிந்த அட்டூழியங்களையும், குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் மீது புரிந்த பாலியல் வல்லுறவுகளையும் ஒரு கட்டுரை/கடிதம் மூலம் இந்திய இராணுவ கேர்னல் தரத்தில் உள்ளவர் சொன்னதை வைத்துக்கொண்டு யாரும் (ஜெயமோகன் உட்பட) தட்டிக் கழித்து விட முடியாது. சிறந்த நாவலாசிரியர் என்றாலும் ஜெயமோகனுக்கும் சில உள்நோக்கங்கள் இருக்கும் என்பது எப்போதும் மனதில் இருக்கும்!

வல்லுறவுகளை ஆவணப்படுத்திய முறிந்த பனை நூலகத்தில் கிடைக்கும்: http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்

திரிசங்கு நிலையில் இருக்கும் என்னை போன்றோர் பல காலங்கள் திரிசங்கு நிலையையே எடுக்க வேண்டிய கட்டயதிற்குள் மீண்டும் மீண்டும் தள்ளுவதால் எந்த பலனும் இல்லை .இங்கு நாங்கள் தேடுவது பயணிப்பது விடிவை நோக்கி . உங்களின் பயணம் கூட அதை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும் என உரிமையோடு கட்டாயப்படுத்துகிறோம் . மூன்று வருடங்கள் முடிந்து விட்டது . நாம் தமிழ் நாட்டு கரனும் சரி ஈழ உறவுகளும் சரி உருப்படியாக எதையும் ஈழத்திற்காக செய்ததாக எனக்கு தெரியவில்லை .

ஒரு குழு ராஜ தந்திர ரீதியில் செயல்படுகிறது . நல்லது . அவர்கள் அப்படியே பயணிக்கட்டும் . ( நாடு கடந்த )

ஒரு குழு போரினால் பாதிக்கபட்டவகளுக்கு உதவுகிறது நல்லது அவர்களும் அப்படியே செய்யட்டும் ( சில தன்னார்வ தொண்டு அமைப்புகள் )

ஒரு குழு இந்தியாவின் சொல்லுக்கு ஜிங்கு ஜக்கா அடிக்கிறது நல்லது அப்படியே நடக்கட்டும் .

ஒரு குழு போர்குற்றம் மீது கவனம் செலுத்துகிறது . நல்லது அப்படியே நடக்கட்டும் .

மேலும் பல செய்யா கூடிய வேலைகள் நிறைய உள்ளது .

தொழில் ,கல்வி , பொருளாதாரம் , மனவியல், மீள் வாழ்வு, மறுவாழ்வு, சுகாதாரம், புனரமைப்பு அடிப்படை தேவைகள் என பல இன்னும் முடிக்க படாது அப்படியே கிடக்கின்றன . குழுக்களாக பிரிந்து இவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டியதே தற்போதைய தேவை . இந்திய விரோதம் மட்டும் கதைத்து காலத்தை வீணடிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

இந்தியாவை பற்றி இப்போது கதைத்து ஒன்றும் ஆக போவது இல்லை .கதைத்தாலும் என்னை போலவே உலகமும் சாட்சி கேட்கும் . சாட்சி இல்லா குற்றங்கள் தண்டிக்க பட போவதில்லை . குற்றம் செய்தவர் வாயால் ஒப்புகொண்டால் ஒழிய . இந்தியா பற்றி கதைப்பதனால் பலன் ஒன்றும் இல்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் . உங்களுக்கும் களம் வரும் அப்போது பார்த்துகொள்வோம் என்கிறீர்கள் . அது நிஜமே . ஆனால் அந்த உங்களின் காலம் இதுவல்ல . ஈழத்தின் தலை விதியே இப்போது ஈழ தமிழர்களின் கையில் இல்லை . வெளிநாட்டுகாரன் ஏதாவது செய்தால் தான் உண்டு என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ள பட்டு விட்டோம் . இந்தியா விரோதம் என்பது இந்தியர்கள் மட்டும் ஈழ தமிழர்கள் மேல் கோபம் கொள்வார்கள் . சிலர் இந்தியா ஒன்றும் புடுங்க தேவையில்லை என்று கூட சொல்வீர்கள் . ஆனால் இங்கு இந்தியா என்பது இந்தியா நட்பு நாடுகளையும் சேர்ந்து குறிக்கும் . இந்தியா ஆதரவு இல்லையென்றால் நட்பு நாடுகளின் ஆதரவும் இல்லாமல் போகும் .

ஏதோ அத்தி பூத்தாற்போல இந்தியாவின் செய்கைகளின் மாற்றம் தெரியும் போது அதை பயன் படுத்திகொண்டு ஈழ மக்களுக்கு குறிப்பாக அங்கு வாழும் மக்களுக்கு தம்மால் ஆன உதவியை செய்வதே தற்போது தேவை . ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு உங்களின் வெறுப்புகளை கழுவி கழுவி ஊற்றிகொள்ளலாம் என கூறுகிறேன்

ராஜீவ் கொலைக்கு நியாயம் கற்பித்தும் ஒன்றும் நடக்க போவது இல்லை . ராஜீவ் கொலை ஆனதும் புலிகளின் ஆதரவு கட்சியை மண்ணை கவ்வ வைத்தவர்கள் தமிழ் நாட்டு மக்கள். ராஜீவ் கொலையை நியாய படுத்தும் எந்த கட்சியுமே தமிழ் நாட்டில் ஆட்சியை ஏன் தனியாக நின்னு டெபாசிட் கூட வாங்க முடியாது . தமிழனுக்கு பிடிக்காத கட்சி காங்கிரஸ் கட்சி . அதைவிட பிடிக்காதது சந்தர்ப்பவாதமும் ராஜீவ் கொலையை நியாயபடுத்துவதும் . தமிழ் நாட்டான் செம்மறி ஆடுகள் அல்ல . நன்கு சிந்தித்து சீர்தூக்கியே செயல்படுபவர் .உண்மையின் நீங்கள் தமிழக உறவுகளை உண்மையாக மதிப்பதாக இருந்தால் துவேசத்தை ஒதுக்கி வைத்து ( ஒதுக்கி மட்டும் வையுங்கள் . மறந்து விடாதீர்கள் . வலிகள் வருங்காலத்தை செப்பனிட உதவும் வழிகள். ). ஆக்க பூர்வமாக ஒன்றிணைந்து செயல் படுவோம்

இது எனது கதை,

1987 ஆம் ஆண்டு. இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் இடையே யுத்தம் ஆரம்பித்த முதலிருவாரங்கள் சென்று விட்டன. இந்திய இராணுவம் பலாலி வீதியால் முன்னேறி உரும்பிராய் இந்துக்கல்லூரியில் முகாமிட்டிருந்தது. அங்கிருந்து கோண்டாவில் நோக்கியும், திருநெல்வேலி நோக்கியும் கடுமையான எறிகணைத் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. இடைக்கிடையே விமானக் குண்டுவீச்சும் நடந்துகொண்டிருந்தது. நாங்கள் (நான், தம்பி, அப்பா, சிற்றன்னை)மதியம் சாப்பிட்ட பின்னர் என்ன செய்வதென்று பேசிக்கொன்டிருந்தோ. அயலிலுள்ளவர்கள் சிலமணிநேரம் வந்திருந்து பேசிவிட்டுப் போனார்கள். "நாங்கள் நல்லூர்க் கோயிலுக்குப் போறம், சனமெல்லாம் அங்கதான் போகுது, அங்க பெரிய அகதி முகாம் அமைச்சிருக்கிறாங்களாம், அங்க போனால் பாதுகாப்பாக இருக்கும்" என்று சொல்லிவிட்டுப் போனார்கள். ஆனால் நாங்கள் அவர்களுடன் போகவில்லை. இருந்து பார்ப்போம் என்று இருந்துவிட்டோம். நேரம் ஆக ஆக செல்ச் சத்தங்களும் வெடிப்புக்களும் அருகருகேயும் கிட்டவாகவும் கேட்கத் தொடங்கின. என்களின் வீட்டுக்கு மேலால் கூவிக்கொண்டு போகும் எறிகணைகளை எண்ணிக்கொண்டிருந்தோம். அவற்றில் ஒன்று எங்கள் வீட்டில் விழுந்திருந்தால்க் கூட நாங்கள் நால்வரும் அன்றிரவே கொல்லப்பட்டிருப்போம். வீட்டின் பாதுகாப்பான ஒரே சிறிய றைக்குள் நாங்கள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி குந்தியிருந்தோம். அந்த அறைக்குள் மட்டும்தான் கூரையின் கீழ் சிமேந்தினால் பிளேட் போட்டுக் கட்டியிருந்தார்கள். அதனால் செல் விழுந்தாலும் சேதம் குறைவு என்று அப்பா சொன்னார். பின்னேரம் இரவாகி கடும் இருட்டு, இடைவெளி இல்லாது எங்கள் மேலால் பறந்து போகும் உயிர்குடிக்கும் செல்கள் கோண்டாவில் சந்தி, விவசாயக் கல்வி நிலையம் போன்ற இடங்கலில் வீழ்ந்து வெடித்திருக்க வேண்டும், ஒவ்வொரு வெடிப்பிற்கும் வீடு குழுங்கி நின்றது.

இரவாக ஆக, செல் வீழ்ந்து வெடிக்கும் தூரங்கள் கூடிக்கொண்டு போனது, ஆனால் இப்போது இடைக்கிடையே இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்கத் தொடங்கின. எங்களுக்கு நன்றாகப் பழக்கப்பட்ட ஏ. கே துப்பாக்கிச் சத்தமும், ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து நடத்தப்படும் கனரக துப்பாகிச் சத்தமும் கேட்டது. இடைக்கிடையே தூரத்தில் சங்கிலி இழுபடுமால் போல சத்தமும் கேட்டது. எமக்கு எதுவுமே விளங்கவில்லை.இரவு பத்துமணியிருக்கும், எங்கள் முன் விறாந்தையில் படு பயங்கரச் சாத்தத்துடன் செல் வீழ்ந்து வெடித்தது. முழுவீடு எங்கள் மேல் இடிந்து வீழ்ந்ததுபோல உணர்ந்தேன். அந்த பகுதியெங்கும் மின்னல் போல வெளிச்சம் எழுந்து அடங்கியது. எங்கள் உடலெல்லாம் சீமேந்துத் துகள்கள். முன் வீடு எரியத்தொடங்கியிருந்தது.

இனி வீட்டினுள் இருக்க முடியாது என்று எண்ணிய அப்பா , "வாங்கோ பின்னால் வாழைத் தோட்டத்துக்குள்ள போய் இருப்பம், இங்க இருந்தால் கட்டாயம் சாக்காட்டிப் போடுவாங்கள்" என்று சொல்லிவிட்டு என் தம்பியின் கைய்யைப் பிடித்துக்கொண்டு பின்கதவைத் திறந்துகொண்டு கொல்லைப் புறத்தால் இறங்க நானும், சிற்றன்னையும் அவரைத் தொடர்ந்து பின் தோட்டத்துக்குள் சென்றோம். மத்தியானம் தன்னி இறைக்கப்பட்டு தோட்டமெல்லாம் சேரறாக இருந்தது, என்றாலும் உயிரைக் கைய்யில் பிடித்துக்கொண்டு படுத்திருந்து நடப்பவற்றை அவ்தானிக்கத் தொடங்கினேன்.

செச் சத்தங்கள் இப்போது நீண்ட தூரத்தில் வெடிப்பது கேட்டது, ஆனால் அவை குத்தப்படும் சத்தம் எங்கள் வீட்டிலிருந்து சில நூறு மீற்றர்கள் தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். கடுமையான துப்பாகிச் சத்தமும், இடைக்கிஃபடையே கைக்குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்டது.

இரவு 12 மணியிருக்கும், சூட்டுச் சத்தங்கள் சிறிது குறைந்து இடைக்கிடயே மட்டும் கேட்கத் தொடங்கின. நாங்கள் அசையவில்லை.திடீரென்று எங்கள் வீட்டின் முன்னால் யாரோ ஆங்கிலத்தில் கத்தும் சத்தம் கேட்டது. உள்ளிருப்பவர்கள் வெளியே வரச்சொல்லிக் கூப்பிடுகிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. அப்பாவோ, நாங்களோ அந்த நேரத்தில் படுத்திருந்த இடத்தை விட்டு நகரக் கூட விரும்பவில்லை. சில காட்டுக் கத்தல்களுக்குப் பின்னர் கடுமையான வெடிப்புடன் எங்கள் வீடு சுவாலை விட்டு எரியத் தொடங்கியது. அங்கிருந்தால் எமக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே இப்போதும் நடுங்குகிறது, சரி கதைக்கு வருகிறேன், எங்கள் வீட்டைக் கடந்து ஒரு கூட்டம் பக்கத்து இராசரத்தினம் ஐய்யா வீட்டிற்குப் போவது தெரிந்தது. புரியாத மொழியும் ஆங்கிலமும் கலந்து அவர்கள் காட்டுக் கத்தல் கத்திக்கொண்டு ஐய்யாவின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். "நாங்கள் பொதுமக்கள், எங்களைச் சுடாதேயுங்கோ என்று ஐயாவின் மனைவியும், அவரது இரண்டு பெண்களுக் கதறும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கவே இயந்திரத் துப்பாக்கிகள் இயங்கத் தொடங்கின. சுமார் ஐந்து நிமிடங்களாவது தொடர்ச்சியாகக் கேட்ட துப்பாகிச் சத்தத்துடன் எல்லா அழுகுரல்களும் அடங்க்யிருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் தமிழ் பைத்தியத்துக்கு இது அதிகம், இவருக்கு உண்மையில் புரியவில்லையா? அல்லது புரிந்தும் இந்திய செய்த தவறுகளை இவரால் ஏற்க்கமுடியவில்லையா ??

துன்பங்களையும் துயரங்களையும் கொடுமைகளையும் அனுபவித்தவன் ஈழத்தமிழன் அந்த ரணங்களும் வேதனைகளும் அவனுக்கே புரியும் மற்றவர்களுக்கு இது ஒரு கதையாகவோ செய்தியாகவோதான் தெரியும் அது உங்களின் தவறு கிடையாது யதார்த்தம் அதுதான் இந்தளவு கொடூரங்கள் நடைபெற்ற பின்னரும் கூட எம்மில் சிலருக்கே புரிந்தும் புரியாதவர்கள் போன்று சிங்கள அரசுடன் கை கோர்த்து இருக்கின்றார்கள் என்று பார்க்கும்போது நீங்கள் எவ்வளவோ மேல் என்ன தமிழ் சகோதரர்களா இந்தியதேசியமா என்னும்போது உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை .......

  • கருத்துக்கள உறவுகள்

:( :( :(:unsure:

ஜாலியன்வாலாபாக்கில் சீக்கியர்கள் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார்கள் என்று கதை கட்டியதுபோலதான் இதுவும் என்று நினைத்துவிட்டாராக்கும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைத்தியம், இவை யாவும்... தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், தொலைக்காட்சியில் வந்திருந்தால்... தான், நீங்கள் நம்புவீர்களா?

மூன்று வருடத்துக்கு முன் நடந்த, முள்ளிவாய்க்கால் போரையே.... வெளியிட தயக்கம் காட்டியவர்கள் அவர்கள்.

சனல் - 4 மிருந்து செய்திகளைச் சேகரிப்பது, எப்படி என்னும் பால பாடத்தை... அனைத்து தொலைக்காட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.