Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்டது..

Featured Replies

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்ட செய்தி உத்தியோக பூர்வமாக அறிவிக்ப்பட்டிருக்கிறது. காரணம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் எமது போராட்டத்தின் காரணமாகவும் நாளை லட்சக்ணகக்கில் தமிழ் மக்கள் கூடுவோம் என எதிர்பார்த்து சங்கடங்களை தவிர்ப்பதற்காக நிறுத்தபப்ட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலதிக செய்திகள் விரைவில்.

http://thaaitamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86/

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும்

செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ் மக்களும் திட்டமிட்டபடி நாளை ஒன்று கூடுமாறு கேட்டுகொள்கின்றோம்.

2ம் இணைப்பு

பிரித்தானிய மகாராணி முடிசூட்டு வைர விழாவுக்காக மான்சன் ஹவுஸ் அரங்கில் நாளை மஹிந்த ராஜபக்‌‌ஷ உரையாற்ற திட்டமிட்டபோதிலும் அது ரத்து செய்யப்பட்டதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.நாளை காலை உரையாற்ற திட்டமிடப்பட்டபோதிலும் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.

புலப்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமானது, தான் உரையாற்ற இடஞ்சலை ஏற்படுத்தும் என்பதனாலும், தற்பாதுகாப்புக்காகவுமே இவ் உரையாற்றும் திட்டத்தை இரத்து செய்ததாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று காலை கொமன்வெல்த் பிஸினஸ் கவுன்சில் அதிகாரப்பூர்வ கலந்துரையாடலில் ஒன்று இருந்தபோதிலும் குறிப்பிட்ட நேரத்தில் அக்கலந்துரையாடல் ரத்துச் செய்யப்பட்டு அதுவும் இன்று மாலை வேளையே இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

“இந்நிலையில் நாளைய நிகழ்ச்சி நிரல்களிலும் மாற்றங்கள் ஏற்படலாம், இல்லை இரத்துச் செய்யப்படலாம் என அறிவித்துள்ள போதிலும், மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கவிருந்த கொமன்வெல்த் பிஸினஸ் கவுன்சில் உரையாடலும் விருந்துபசாரமும் 1மணிக்கு ஆரம்பிக்கப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றுதிரண்டு மஹிந்தவுக்கு எதிராக, பலமான கோசங்களை எழுப்புவோம் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் போராட்டத்தை அடுத்து மான்ஷன் ஹவுசில் நடைபெறவிருந்த நிகழ்சிகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் உறுதி செய்துள்ளது.

இருப்பினும் மதிய போசனமும் ஏனைய நிகழ்வுகளும் திட்டமிட்டபடி Marlborough Houseசில் நடைபெறும் என பொதுநலவாய வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.

இது ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்ட உணர்வுள்ள பிரித்தானியா வாழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.

முதலில் தமிழ் அமைப்புக்களின் மகஜர் மற்றும் கடிதங்களின் காரணமாக மகிந்த ராஜபக்சேவின் பேச்சு நிற்பாட்டப்பட்டிருந்த நிலையில், தொடர் போராட்டங்களின் காரணமாக பாதுகாப்புக் கருதி அந் நிகழ்வே ரத்து செய்யப்பட்டிருப்பது, முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த சான்றாகும்.

நாளை ஐரோப்பாவிலிருந்து உணர்வாளர்கள் வரவிருக்கும் நிலையில், பிரித்தானியா வாழ் உணர்வுள்ள தமிழர்கள் யாவரையும் அணி திரண்டு வந்து, இனிமேலும் பிரித்தானியா ராஜபக்சே போன்ற இன வெறியர்களை தங்களது நாட்டிற்கு வரவழைக்காது இருப்பதற்கும், ராஜபக்சே இனிமேல் தனது வாழ்நாளில் பிரித்தானியாவிற்கு வருவதை கனவிலும் நினைத்து பார்க்காமல் இருப்பதற்கும் தமது எதிர்ப்பினை காட்டுமாறு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் அழைக்கின்றது.

http://www.cbcglobal.org/events/details/commonwealth-economic-forum

Edited by chinnavan

  • Replies 93
  • Views 7.4k
  • Created
  • Last Reply

மஹிந்த உரையாற்றவிருந்த கூட்டம் ரத்து

பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில் இலங்கை ஜனாதிபதி பங்குபெறவிருந்த ஒரு அமர்வு ரத்தாகியுள்ளது.

புதன்கிழமை(6.6.12) அன்று காலை காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில், உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய வகையில் முதலாளித்துவத்தை வடிவமைப்பது என்பது தொடர்பிலான ஒரு கருத்தரங்கு நடைபெறவிருந்தது.

அந்தக் கருத்தரங்கில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் உட்பட மூவர் உரையாற்றவிருந்தனர்.

அதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரையாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன.

எனினும் மிக கவனமாக பல விஷயங்களை ஆராய்ந்த பிறகு அந்த அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் காலை அமர்வு இடம்பெறாது என்றும் காமன்வெல்த் பொருளாதார அமைப்பு செவ்வாய்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், மதிய அமர்வுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/06/120605_mahinda_seminar_cancelled.shtml

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

உழைத்த உறவுகளுக்கு நன்றிகள்

மிக்க மகிழ்ச்சி ,பிரித்தானிய உறவுகளே தொடருங்கள் ,ராணியுடனான விருந்துபசாரமும் இதுபோல் நிறுத்தப்படவேண்டும்.இந்த காலத்தின் தேவைக்கு உறுதுணை புரிந்த அனைத்து உறவுகளுக்கும் நானும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் அவருக்குள்ள நிகழ்ச்சி நிரல்கள் முழுவதையும் நிறுத்தவேண்டும்..அவமானப் பட்டு ஊர் திரும்ப வேண்டும்..

இதுக்கு மேலை மகிந்தவுக்கு என்ன அவமானம் வேணும்...???

... நாளை தினம் போர்க்குற்றவாளிக்கு எதிராக மிகபிரமாண்டமாக திட்டமிடப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக/குழப்புவதற்காக .. இத்தகவல்கள் சில தமிழ் ஊடகங்கள் ... GTV / IBC ... கையடக்க தொலைபேசி குறுந்தகவல்கள் மூலம் வேகமாக பரப்பப்படுகின்றது! ... ஆனால் இவ்வெதிர்ப்பு நடவடிக்கை திட்டமிட்ட முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும், இவ்வூடகங்கள், ஏன் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தவர்களை தொடர்பு கொண்டு உண்மை நிலைமையினை அறியாமல் பரப்புகிறார்கள்??????????? ... இப்படியான நடவடிக்கைகளை இவ்வூடகங்களை சந்தேகம் கொள்ள வைக்கின்றது?????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியானசெய்தி..மகிந்தாவை வாயே திறக்காமல் செய்து அனுப்பி வைக்கவேணும்.

... திட்டமிட்டபடி நாளை எதிர்ப்பு நடவடிக்கை நடைபெறவுள்ளதாக குறிப்பிடுகிறார்கள்!

http://tunein.com/tuner/?StationId=133204&

  • கருத்துக்கள உறவுகள்

... நாளை தினம் போர்க்குற்றவாளிக்கு எதிராக மிகபிரமாண்டமாக திட்டமிடப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக/குழப்புவதற்காக .. இத்தகவல்கள் சில தமிழ் ஊடகங்கள் ... GTV / IBC ... கையடக்க தொலைபேசி குறுந்தகவல்கள் மூலம் வேகமாக பரப்பப்படுகின்றது! ... ஆனால் இவ்வெதிர்ப்பு நடவடிக்கை திட்டமிட்ட முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும், இவ்வூடகங்கள், ஏன் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தவர்களை தொடர்பு கொண்டு உண்மை நிலைமையினை அறியாமல் பரப்புகிறார்கள்??????????? ... இப்படியான நடவடிக்கைகளை இவ்வூடகங்களை சந்தேகம் கொள்ள வைக்கின்றது?????????

அவ்வூடகங்களுடன் தொடர்பு கொண்டு பேசலாமே!!

மகிந்த பங்குபற்றவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஆனால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டம் நடக்க வேண்டும்... சர்வதேச கவனத்தை ஈர்க்கும் இடமாக அது நாளை இருக்கும்...

நெல்லையன் குறிப்பிட்டதைப் போல இது ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாகக் கூட இருக்கலாம்.

இந்த உரை நிறுத்தப்பட்டிருப்பினும் கூட மகிந்தவின் இனப்படுகொலையை முக்கியமான ஒரு அரங்கத்தில் பறைசாற்றக் கிடைத்த சந்தர்ப்பமாக இதைக் கருதலாம்.

எனவே மகிந்தவினதும் சிங்கள அரசாங்கத்தினதும் இனப் படுகொலைகளை இன அடக்குமுறையையை வெளிக்கொணரும் விதமான ஒரு பாரிய கவனயீர்ப்பை நடத்த லண்டன் வாழ் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.

தாயகத்தில் உரிமை மறுக்கப்பட்டு பேச்சுச் சுதந்திரம் நசுக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்காய் எமது கடமையைச் செய்ய பல்லாயிரக்கணக்கில் அணி திரளுங்கள்.

Edited by Manivasahan

பல உறவுகள் கூறியுள்ளது போன்று மக்கள் 'விழிப்புணர்பு' போராட்டம் நடந்தே ஆகவேண்டும். காரணம் இவர் ஒரு போர்க்குற்றவாளி.

எமது உறவுகளை கொன்று தண்டனை எதுவும் இல்லாமல் தொடர்ந்து இனவழிப்பை செய்யும் 'தலைவர்'.

இவரை பிரித்தானியா கைதுசெய்யவேண்டும் இல்லை நாட்டுக்குள் வரத்தடை விதிக்க வேண்டும் இல்லை தமிழர் சுயநிர்ணய உரிமையை ஏற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தரவுகள் மக்களைச்சென்றடைவது மேலும் மக்களை ஊக்கப்படுத்தும். பயன் கிடைத்ததை நினைத்து மக்களை அது மேலும் மேலும் உற்சாகப்படுத்தி பெரும் திரளானோர் திரள உதவும்.

எனவே சந்தேகம் கொள்ளாது மற்றவர்களும் அனுப்புங்கள். போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள்.

குழப்பங்கள் வேண்டாம். பிரிவுகள் வேண்டாம்.

திருத்தம் : எழுத்துப்பிழை

சுட்டிக்காட்டிய உறவுகளுக்கு நன்றிகள்

Edited by விசுகு

லண்டன் வாழ் மக்கள் அனைவரும் நாளையும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். ஏற்கனவே போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கும் எமது நன்றிகள்.

மகிந்தவை ஒரு நிகழ்விலும் பங்குபற்ற விடாமல் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

Edited by காதல்

அவ்வூடகங்களுடன் தொடர்பு கொண்டு பேசலாமே!!

உண்மையில் நாளை இவ்வெதிர்ப்பு நடவடிக்கை, மகிந்தவின் Mansion House இல் உரையாற்ற இருக்கிறார். அங்கு மகிந்த மட்டுமல்ல பல தலைவர்கள் பிரசன்னமாவார்கள் என்பதை கொண்டே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ... என்ன நடைபெற்றது/பெறுகிறது ... கடந்த இரு தினங்களாக GTV / IBC உட்பட்ட ஊடகங்கள் அதை ஒலிபரப்பியது. தற்போது மகிந்தவின் உரை நிறுத்தப்பட்டது என்று வந்த செய்தியை வைத்து ... உடனடியாக IBC நிமிடத்துக்கு நிமிடம் "நிறுத்தப்பட்டது ..." நிறுத்தப்பட்டது என்ற செய்தியை மிக முக்கியப்படுத்தி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் GTV ஆனது மகிந்தவின் உரை நிறுத்தப்பட்டதையும் கூறி மேலதிகமாக Mansion House இற்கு முன் நடைபெற இருந்த எதிர்ப்பு நடவடிக்கை Hilton Hotel க்கு முன் மாற்றப்பட்டிருப்பதாக ஒலி/ஒளிபரப்புகிறார்கள். யார் அங்கு மாற்றியதாக இவர்களுக்கு கூறினார்கள்? அச்செய்தி உண்மையா? யாரை பாதுக்காக்க இக்கூத்துக்களை ஆடுகிறார்கள்???? .... இவைகள் தமிழ்த்தேசிய ஊடகங்களா?????????????

... GTV தொடர்பு கொள்ள தொலைபேசியை தூக்க மறுக்கிறார்களாம்!!!!!!!!!! ... IBC யோ தம்மில் பிழையில்லையென சத்தம் போடுகிறார்களாம்!!!!!!!!

... சில நினைவுகளில் இருந்து ... 85, 86 களில் யாழில் ஓர் வானொலி! தொடக்கத்தில் புலிபுராணம் ... கேட்காதவர்கள் இல்லை ... நாளடைவில் போட்ட குழப்பங்கள்!!!!!!!!! ... பின்புதான் தெரிந்தது பலாலியில் இருந்து சிங்கள இராணுவமே அதை செய்தது என்று!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நாளை இவ்வெதிர்ப்பு நடவடிக்கை, மகிந்தவின் Mansion House இல் உரையாற்ற இருக்கிறார். அங்கு மகிந்த மட்டுமல்ல பல தலைவர்கள் பிரசன்னமாவார்கள் என்பதை கொண்டே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ... என்ன நடைபெற்றது/பெறுகிறது ... கடந்த இரு தினங்களாக GTV / IBC உட்பட்ட ஊடகங்கள் அதை ஒலிபரப்பியது. தற்போது மகிந்தவின் உரை நிறுத்தப்பட்டது என்று வந்த செய்தியை வைத்து ... உடனடியாக IBC நிமிடத்துக்கு நிமிடம் "நிறுத்தப்பட்டது ..." நிறுத்தப்பட்டது என்ற செய்தியை மிக முக்கியப்படுத்தி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் GTV ஆனது மகிந்தவின் உரை நிறுத்தப்பட்டதையும் கூறி மேலதிகமாக Mansion House இற்கு முன் நடைபெற இருந்த எதிர்ப்பு நடவடிக்கை Hilton Hotel க்கு முன் மாற்றப்பட்டிருப்பதாக ஒலி/ஒளிபரப்புகிறார்கள். யார் அங்கு மாற்றியதாக இவர்களுக்கு கூறினார்கள்? அச்செய்தி உண்மையா? யாரை பாதுக்காக்க இக்கூத்துக்களை ஆடுகிறார்கள்???? .... இவைகள் தமிழ்த்தேசிய ஊடகங்களா?????????????

... GTV தொடர்பு கொள்ள தொலைபேசியை தூக்க மறுக்கிறார்களாம்!!!!!!!!!! ... IBC யோ தம்மில் பிழையில்லையென சத்தம் போடுகிறார்களாம்!!!!!!!!

... சில நினைவுகளில் இருந்து ... 85, 86 களில் யாழில் ஓர் வானொலி! தொடக்கத்தில் புலிபுராணம் ... கேட்காதவர்கள் இல்லை ... நாளடைவில் போட்ட குழப்பங்கள்!!!!!!!!! ... பின்புதான் தெரிந்தது பலாலியில் இருந்து சிங்கள இராணுவமே அதை செய்தது என்று!

இதுகளைப் பிறகு பார்க்கலாம். இப்ப நாளை நிகழ்வு பற்றி எப்படி சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கலாம் என யோசிக்கலாம். இளையோர் அதிகம் பாவிக்கும் முகநூலில் இதுகளைத் தெளிவு படுத்துங்கோ. அதுவே முக்கியம்!

  • தொடங்கியவர்

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும்

செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ் மக்களும் திட்டமிட்டபடி நாளை ஒன்று கூடுமாறு கேட்டுகொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பங்களிப்பவர்களுக்கு

மிக்க வாழ்த்துக்கள்

மாவீரர் தினம் மற்றும் மிலேனியம் நிகழ்வு அப்புறம் மார்ச் ஐநா நிகழ்வு அப்புறம் மே 18 நிகழ்வு, இப்ப லண்டன் நிகழ்வு இப்பிடியே ஜி டிவி ,ibc குழப்பங்கள் வளரட்டும். இன்னும் அவர்கள் தேசியத்தின் பக்கம் என்று நம்புபவர்கள் நம்பட்டும்

மஹிந்த ராஜபக்சவின் உரை இரத்துச் செய்யப்பட்டாலும் அங்கு தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நிச்சயம் 6-ம் திகதி காலை நடைபெறும் என்று ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மகிந்தாவின் (பொய்)உரை நிறுத்தப்பட்டுள்ளது என சனல் நாலு கூறுகின்றது. ஆனாலும் விழிப்புணர்வு போராட்டம் நடக்க வேண்டும்.

A meeting in the City of London, due to have been addressed on Wednesday morning by the president of Sri Lanka, has been cancelled, owing to concerns over policing amid the threat of large demonstrations by Tamil rights groups.

But Mahinda Rajapakse – whose presidency has been tainted by persistent allegations of war crimes committed by Sri Lankan armed forces – will still attend a lunch for the Queen, hosted by the Commonwealth secretary general at Marlborough House on Pall Mall.

The president was first to have given the keynote speech at a special Diamond Jubilee meeting of the Commonwealth Economic Forum, at 10am. On its website, the event’s organisers, the Commonwealth Business Council, simply states that “After careful consideration, the morning sessions of the Forum… will not take place.” It had pre-sold tickets to the event at £795 +VAT each.

Channel 4 News was unable to obtain a response from the CBC. A spokesman for Scotland Yard told Channel 4 News that while it had agreed to guarantee the president’s security, the CBC had “decided it was not in their interest to stage the event” due to excessive policing requirements and the likely disruption to business in the City of London.

Sen Kandiah, founder of the British Tamil Forum, said: “Common sense has prevailed. There is now enough evidence that allegations of war crimes in Sri Lanka lead directly to the president himself. That is why British government officials are reluctant to meet him. He is not welcome here.”

http://blogs.channel4.com/world-news-blog/rajapakse-speech-cancelled-over-tamil-protest-fears/22319

நாளை பல இடங்களில் பலநாட்டு தலைவர்கள் கூடுவார்கள். இவர்களை நம்பித்தான் நமது கவன ஈர்ப்பு போரட்டங்கள் நடைபெறுகின்றன. தயவு செய்து எந்த காரணத்திற்கும் அசரப்பட்டு போராட்டங்களுக்கு போகாமல் விட்டுவிடாதீர்கள். ஜெனீவாவுக்கு மகிந்தா வரவில்லை. ாஅனால் அங்கு உறவுகள் எல்லோரும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு ஒருமாதமாக போய்வந்தார்கள். இது நமது கரை நியாயங்களை எடுத்து சொல்ல நல்ல நாள். எனவே எல்லோரும் திட்ட மிட்டபடி பல இடங்களிலும் குவியுங்கள். இப்போது நமக்கு நாம் வாழ்த்து சொல்லி, நன்றி சொல்லி நமது நிலையை இழக்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

But Mahinda Rajapakse – whose presidency has been tainted by persistent allegations of war crimes committed by Sri Lankan armed forces – will still attend a lunch for the Queen, hosted by the Commonwealth secretary general at Marlborough House on Pall Mall.

it should not happen.....

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்சவின் பேச்சை நிறுத்துவதல்ல... மக்களின் போராட்ட இலட்சியம். மக்களின் போராட்ட இலட்சியம்.. போர்க்குற்றவாளிகளை சர்வதேசம் தண்டிக்க.. மக்கள் சர்வதேசத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க.. மகிந்தவின் பயணங்களைப் பயன்படுத்துவது தான்.

மகிந்த அழைக்கப்படுவதும்.. பேச்சை ரத்தாக்கி.. ஓடுவதும்.. அவரை காப்பாற்ற வெளிநாட்டு புலனாய்வாளர்கள் முனைவதும்.. அவர்களுக்கு உதவியாக நம்மில் சிலரும் உதவியாக இருப்பதும்.. நடந்து கொண்டே தான் இருக்கும்.

மக்கள் இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இலட்சியம் எதுவோ அதை நோக்கி நடை போடும் போது.. இடையில்.. நிகழும் சாதக பாதகங்களைப் பற்றி அதிகம் கவலைப்படக் கூடாது.

மக்கள்.. சர்வதேசத்திற்கு போர்க்குற்றவாளியை தண்டிக்க.. நடவடிக்கை எடுக்க தங்கள் பலத்தைக் காட்ட வேண்டும். இதுதான் இன்றைய தேவை. இந்தப் போராட்ட சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும்.. அதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிரியா விவகாரத்தில்.. துரிதமாக தடைகளை கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் பிரிட்டன்.. மகிந்த விடயத்தில்.. மிக மெத்தனமாக நடந்து கொண்டிருப்பதோடு.. உலகிற்கு.. தவறான அரசியல் ஒழுங்கையும் கற்றுக்கொடுக்க முனைகிறது. இது படுகொலையாளர்கள்.. ராணிவின் விருந்துண்டு படுகொலை செய்யும் கலாசாரத்தையே இந்தப் பூமிப் பந்தில் வளர்க்கும்.

எமது போராட்டம் எமது மக்களுக்காக மட்டுமல்ல.. முழு மானிடத்திற்குமானது. மானிடப் படுகொலையாளர்கள்.. எந்த வகையினராக இருந்தாலும்.. தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அவர்களுக்கு இராஜ மரியாதை வழங்கி கெளரவிப்பதும்.. அவர்களை வைத்து பூலோக அரசிய நலன் பெறுவதும் நிறுத்தப்பட வேண்டும். அந்த வகையில்.. தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ச போன்ற கொடும் மனிதப் படுகொலையாளர்களை சர்வதேசம் தண்டிக்கச் செய்வதன் மூலம் மனிதப்படுகொலையாளர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சர்வதேசம் தண்டிக்கும் என்ற நிலையையை உறுதி செய்யும் வரை உறுதியாகப் போராடிக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

இடையில் நிகழும் தற்காலிக சாதக பாதகங்கள் எல்லாம் மக்களின் போராட்டத் தீவிரத்தை குலைப்பதாக.. குறைப்பதாக இருக்க.. இறுதி இலட்சியம் வெல்லப்படும் வரை மக்கள் அனுமதிக்கவே கூடாது. மகிந்தவும் பரிவாரங்களும் சிங்களப் பேரினவெறியர்களும் மானுப்படுகொலைக்கு எதிராக தண்டிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதியும்... சமத்துவமான சம வாழ்வும் சம உரிமையும் அவர்களின் சொந்த மண்ணில்.. எட்டப்படும் வரை அது சர்வதேசத்தால் உறுதி செய்யப்படும் வரை.. போராட்டங்கள்.. தொடரப் பட வேண்டும். மகிந்த பேச்சை நிறுத்தலாம்.. தப்பி ஓடலாம். அது அல்ல.. போராட்டம் இலட்சியம். அவை போராட்டம் பெற்றுத் தரும் தற்காலிக ஊக்க சக்திகள். அவ்வளவே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.