Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட அமெரிக்காவின் Basilica of the National Shrine of the Immaculate Conception பெருந்தேவாலயத்தில் தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Featured Replies

உலகப் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றான அமெரிக்காவின் [size=1]Basilica of the National Shrine of the Immaculate Conception [/size]தேவாலாயத்தில், தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், உலகத் தமிழர்கள் தேசங்களெங்கும் முன்னெடுக்கபட்டுவரும் சர்வமத வழிபாட்டு வழிப்புணர்வு போராட்டத்தின் ஒர் அங்கமாக, இத்தேவாலயத்தில் தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனை இடம்பெறுகின்றது.

தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும், அத்தமீறல்களையும் கவனத்தில் கொண்டு, இந்த சர்வமத மதவழிபாட்டு ஒன்றுகூடல்கள் இடம்பெற்று வருகின்றன.

வட அமெரிக்காவின் இந்த பெருந்தேவாலயம் தவிர்ந்த Ganesha Temple, New York, / Lutheran Church, New York / Bharatiya Hindu Temple ,3671 Hyatts Rd ,Powell, Ohio ஆகிய வழிபாட்டுத் தளங்களிலும் , பிரார்த்தனை ஒன்கூடல்கள் இடம்பெறுகின்றன.

இதேவேளை பிரான்சில் 124 Bis, Rue de Bagnolet, 75020 Paris அமைந்துள்ள தேவாலயத்திலும் மற்றும் ஜேர்மனியில் சென்-அந்தோனியார் முன்ஸ்ரர் தேவாலயத்திலும் என, உலகின் பல்வேறு பாகங்களிலும் தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களாக உலகத் தமிழர் தேசங்களெங்கும் இப்பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

ஒரு அரசு இப்படி பிரார்த்தனை நிகழ்வுகளை நடத்துவது நகைப்புக்கு இடமானது. அரசு ஒரு அமைப்பு என்கின்ற நிலைக்கு கீழே இறங்கி விட்டது.

கனடாவில் யாகம் நாடாத்துவது, லண்டனில் பூசை செய்வது, அமெரிக்காவில் ஜெபம் செய்வது இதைத் தவிர வேறு எதை நா.க அரசு கடந்த்த மூன்று வருடத்தில் செய்துள்ளது?

இதில் பலரை வெறுப்படையச் செய்து, மக்களால் தேர்வு செய்யப்பாடாதவர்களை நியமித்து, தவறானவர்களுக்கு பதிவிகளை வழங்கி என அடுக்கடுக்கான பிழைகளின் வரலாற்றைத் தவிர உருப்படியாக எதையுமே சாதிக்கவில்லை.

இருக்கும் ஊடகங்களைக் குழப்புவதையும், உண்மையாக உழைப்பவர்களை வெளியேற்றியும், காவடிகளுக்குக் களம் கொடுத்ததையும் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை.

  • தொடங்கியவர்

இந்த அறிக்கையினை அன்புகூர்ந்து படியுங்கள் :

தமிழர்வாழும் தேசங்களில் மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்கள் ஏற்பாடு

தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும், அத்தமீறல்களையும் கவனத்தில் கொண்டு, தமிழர்கள் வாழும் நாடுகளில், மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.

எதிர்வரும் (யூன்) 15 – 16 – 17ம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பல்வேறு நாடுகளிலும், சர்வமத வழிபாட்டுத் தலங்களில் , இதற்கான ஒழுங்குகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு ,அனைத்து தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தவாரம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டித்து, சாத்விகவழியிலான பிரார்த்தனை வடிவிலான போராட்டமொன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அடக்குமுறைகளுக்கும், இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும், தமிழீழத் தாயக மக்கள் மேற்கொள்ளும் இத்தகைய போராட்டங்களுக்கு வலுச் சேர்க்க வேண்டிய கடமை, புலத்தில் வாழும் மக்களுக்கு இருக்கிறதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்களினால் , மதரீதியாக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இச்செயற்பாடுகளை இனவொழிப்பின் தொடர்சியாக கருதவேண்டியுள்ளதென தெரிவித்துள்ளார்.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிக்க, தமிழர் வாழும் பல்வேறு நாடுகளிலுமுள்ள கிறீஸ்தவ, இஸ்லாமிய இந்து கோவில்களிலும் வழிபாட்டிடங்களிலும் மதவழிபாட்டுடன்கூடிய விழிப்புணர்வு போராட்டங்களாக இதுஅமையுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------------

நில அபகரிப்புக்கு எதிராக தமிழர் வாழும் தேசங்களிலும் போராட்டங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கபடுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைத்தீவில், தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரத்து நிற்கின்ற சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், இத்தகைய நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கஙை நடாத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, தமிழர் வாழும் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை, சமாந்திரமாக முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டித்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்றிருந்த சாத்விகவழியிலான போராட்டத்திற்கு வலுவூட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும், தோழமையோடு சர்வத வழிபாட்டு விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், இதன் தொடர்சியாக தமிழர் தாயகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்திரமாக, இப்போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்கின்றது.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிப்பதோடு, தாயகத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல, உலகத் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென நா.தஅரசாங்கம் தெரிவித்துள்ளது.

Edited by அகரன்

இப்பிடியான யாகங்கள் பிரார்த்தனைகள் போன்ற செயற்பாடுகள் மூலம் நாடுகடந்த அரசின் மீதான நம்பிக்கைகளை சிதறடிக்கிறீர்கள்.. நாடு கடந்த அரசுக்கு செய்வதற்கு வேற எதுமே இல்லையா..?

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ அவங்களால் எம் மக்களுக்கு என்று ஒன்றுமே செய்ய இயலாது ஏதோ அவர்களால் இயன்றது கட‌வுளை உதவிக்கு கூப்பிடுவது :D

  • கருத்துக்கள உறவுகள்

முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதத்துடனும் தான், முள்ளி வாய்க்கால், அவலம் நடந்தேறியது!

இதற்குப் பின்னும், யாகங்களும், வேள்விகளும் நடத்துவது, புலம் பெரும் தமிழரின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தில் போலவே உள்ளது!

பெரிய மரங்கள், சாயும்போது தான், சிறிய மரங்கள் பெரிய மரங்களாக முடியும்!

முடிந்தால் உருப்படியாக ஏதும் செய்வது நல்லது!

அல்லது, வழிவிட்டு விலகுவதே எமது இனத்திற்கு, விடிவைக் கொண்டு வரும்!

நாடுகடந்த அரசு என்ன செய்யவேண்டும் என நீங்கள் ஒரு பட்டியலை தந்தால் நான் இங்குள்ள நாடுகடந்த அரசு உறுப்பினர்களிடம் அதை அனுப்பிவைப்பேன். அவர்கள் அதற்கு தரும் பதிலை உங்களுக்கு பகிரங்கமாக யாழில் தெரிவிக்கிறேன்.

எனக்கும் TGTE இக்கும் எதுவித தொடர்பும் இல்லை. UKல் உள்ள சில உறுப்பினர்களுடன் நட்புரீதியான பழக்கம் மட்டுமே.

Edited by Gajen

.... ஆலயங்கள், சர்சுகளுக்கு வழமையாக போகும்/வரும் சனத்தை வைத்து ... படம் காட்டப்போகின்றனர்????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

... ஓர் நண்பர் சொன்னார் ...... சில வருடங்களுக்கு முன்னர் ... அவரின் நண்பனின் தந்தையார் ஊரில் இறந்த பின், அவரின் தந்தையின் அந்தியேட்டி ... வீட்டுக்கு தொலைபேசி அழைப்பிதல், "மச்சான், அப்பாவின் அந்தியேட்டி, இந்தக்கோயிலில், வாற ஞாயிற்றுக்கிழமை வைக்கிறோம், குடும்பத்தோடு மத்தியான பூசை, பின் சாப்பாடு, வந்து விடு"! ... என் நண்பருக்கோ ஆச்சரியம், என்னடாப்பா அஞ்சு சதத்துக்கு கணக்கு பார்ப்பவன், அந்தியேட்டி செய்யப்போகின்றான், அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் (ஞாயிறுகளில் வழமையாக கோயிலில் பல நூறுபேர் வருவார்கள், அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத்தான் போவார்கள், அனேகமாக கோயில் செலவில்தான் சாப்பாடுகள் இருக்கும்)!! அன்று வரும் எல்லோருக்கும் சாப்பாடு இவன் போடப்போகிறானா???? ... பெரும் ஆச்சரியத்துடன் அந்த ஞாயிறு கோயிலுக்கு குடும்பமாக சென்றால், பல நூறு பக்தர்கள்! அங்கு அந்தியேட்டிக்கு விசேசமாக ஏதாவது நடைபெறுவது போல தெரியவில்லையாம்! நேரம் செல்லச்செல்ல சனமும் கோயிலில் நிரம்பி வழியத் தொடங்கீட்டுதாம், அங்கு அந்தியேட்டி செய்யப்போவதாக சொன்ன நண்பன், ஒரு பத்துப்பவுனுக்கு ஒரு அர்ச்சனை ரிக்கட் வாங்கி அர்சனை செய்து விட்டு, பின் கோயில் கொடுத்த சாப்பாடிலேயே அந்தியேட்டிக்கு வந்தவர்களையும் சாப்பிட வைத்து விட்டு ... அந்தியேட்டி செய்து முடித்தானாம்! ... வழமையாக ஞாயிறுகளில் கோயிலில் போடும் சாப்பாடு, இவனது அந்தீயேட்டி சாப்பாடாகியும் விட்டது!

... கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த ...

நாடுகடந்த அரசு என்ன செய்யவேண்டும் என நீங்கள் ஒரு பட்டியலை தந்தால் நான் இங்குள்ள நாடுகடந்த அரசு உறுப்பினர்களிடம் அதை அனுப்பிவைப்பேன். அவர்கள் அதற்கு தரும் பதிலை உங்களுக்கு பகிரங்கமாக யாழில் தெரிவிக்கிறேன்.

எனக்கும் TGTE இக்கும் எதுவித தொடர்பும் இல்லை. UKல் உள்ள சில உறுப்பினர்களுடன் நட்புரீதியான பழக்கம் மட்டுமே.

... நமக்கும் சிலரை தெரியும், பெரிய புள்ளிகள் உட்பட ... பலர் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் ... அதில் ஒருவர் ... ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம் ....

.... அவர் கோயில் உண்டியல் அதிபரின் வாரிசு! உண்டியல் அதிபரின் ஓர் ஆலயம் அண்மையில் கவுன்ஸில் கட்டடத்துக்கு கொடுத்த லீஸ் காலம் முடிவடைய, கவுன்ஸில் கட்டத்தை கேட்கவும், அதனை எதிர்த்து வழக்கு போட்டு தோற்று விட்டவுடன் ... கதையை திருப்ப ... அதுவும் சர்வதேசம் எங்கும் பரப்பி அனுதாபத்தை தேட ... உண்டியல் அதிபரின் வாரிசோ, தனக்கு நாகதஅ மூலம்(?) கிடைத்த தமிழக ஊடக தொடர்புகளை பயன்படுத்தி ... லண்டனில் உள்ள சிங்கள தூதரகம், அவ்வாலயம் மாவீரர்களை வணக்கும் ஆலயமாதலால், ஆலயத்தை பூட்ட சதி ... என ஓர் பெரிய உல்டாவை கட்டவிழ்த்து விட்டார்! ... எம் மக்களுக்கு செய்ய வேண்டியவைகளுக்கு ஊடகங்களை பயன்படுத்தாது, தம் உண்டியல் வருமானத்தில் வீழ்ச்சி அடையப்போவதை தடுக்க ... அவ்வூடகங்களை பலிக்கடா ஆக்கினார்!

... பதில் சொல்வார்கள்தான்???????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வட அமெரிக்காவின் இந்த பெருந்தேவாலயம் தவிர்ந்த Ganesha Temple, New York, / Lutheran Church, New York / Bharatiya Hindu Temple ,3671 Hyatts Rd ,Powell, Ohio ஆகிய வழிபாட்டுத் தளங்களிலும் , பிரார்த்தனை ஒன்கூடல்கள் இடம்பெறுகின்றன.

இன்று பிள்ளையார் கோவிலில்(Flushing,NY. http://www.nyganeshtemple.org/) நா.க.அரசால் இறந்தவர்களுக்கும். துன்பட்டவர்களுக்குமாக ஒரு பூசை ஒழுங்கு செய்யப்படிருந்தது. பூசை நேரம் 1:00PM. நான் போக 1:30PM . ஆனால் பல ஈழத்தமிழர் பூசையில் பங்குபற்றியிருந்தார்கள். இது தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு காட்ட செய்யபட்டது. வழமையான் ஆதரவுகள் தெருக்களில் அல்லது கட்டங்களுக்கு முன்னால் பாதுகைகளை தாங்கிய வண்ணம் நடத்தப்படுவது. இவற்றின் நோக்கம் புலம் பெயர் நாடுகளின் தேசிய இனங்களின் கவனஈர்ப்பாக அவர்கள் ஏற்றுக்கொளும் ஜனநாயக பாதையில் நடை பெறுவது. இன்றைய நிகழ்வு தாயக மக்களின் மன உற்சாகங்களும், ஆறுதலுக்குமாக செய்ததால், மாவீரர் தினம் மாதிரி வணக்கத்திற்கு முன்னிடம் கொடுக்க பட்டிருந்தது. ஆர்ப்பாட்டமோ, பாதுகைகளோ இருக்கவில்லை.

Edited by மல்லையூரான்

அவர்கள் செய்த நல்ல விடயங்களை இங்கு வந்து இணைத்தாலும் அதனை நிர்வாகம் முழுதாக வாசித்தறிந்து கொள்ளாமல் நீக்கி விடுகிறதே. அவர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் செய்திகள் என்றால் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

நாடுகடந்த அரசு என்ன செய்யவேண்டும் என நீங்கள் ஒரு பட்டியலை தந்தால் நான் இங்குள்ள நாடுகடந்த அரசு உறுப்பினர்களிடம் அதை அனுப்பிவைப்பேன். அவர்கள் அதற்கு தரும் பதிலை உங்களுக்கு பகிரங்கமாக யாழில் தெரிவிக்கிறேன்.

எனக்கும் TGTE இக்கும் எதுவித தொடர்பும் இல்லை. UKல் உள்ள சில உறுப்பினர்களுடன் நட்புரீதியான பழக்கம் மட்டுமே.

[size=4]தாயக மக்கள் ஒன்ரினைம்து காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தும்பொழுது அதை சர்வதேச அரசுகளின் கண்ணில் கொண்டுவர நாம் என்ன செய்யலாம்? [/size]

[size=1]

[size=4]சிங்களம் இன்று மத கலவரங்களை தூண்டி விடுகின்றது. இதை வெற்றிகரமாக முறியடிக்க தாயக மக்களுக்கு எவ்வாறு உறுதுணையாக செயல்படலாம்?[/size][/size]

[size=1]

[size=4]அணிசேரா மாநாட்டை மேற்குலக நாடுகள் புறக்கணிக்க என்ன செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்?[/size][/size]

இந்த அறிக்கையினை அன்புகூர்ந்து படியுங்கள் :

தமிழர்வாழும் தேசங்களில் மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்கள் ஏற்பாடு

தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும், அத்தமீறல்களையும் கவனத்தில் கொண்டு, தமிழர்கள் வாழும் நாடுகளில், மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.

எதிர்வரும் (யூன்) 15 – 16 – 17ம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பல்வேறு நாடுகளிலும், சர்வமத வழிபாட்டுத் தலங்களில் , இதற்கான ஒழுங்குகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு ,அனைத்து தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தவாரம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டித்து, சாத்விகவழியிலான பிரார்த்தனை வடிவிலான போராட்டமொன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அடக்குமுறைகளுக்கும், இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும், தமிழீழத் தாயக மக்கள் மேற்கொள்ளும் இத்தகைய போராட்டங்களுக்கு வலுச் சேர்க்க வேண்டிய கடமை, புலத்தில் வாழும் மக்களுக்கு இருக்கிறதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்களினால் , மதரீதியாக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இச்செயற்பாடுகளை இனவொழிப்பின் தொடர்சியாக கருதவேண்டியுள்ளதென தெரிவித்துள்ளார்.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிக்க, தமிழர் வாழும் பல்வேறு நாடுகளிலுமுள்ள கிறீஸ்தவ, இஸ்லாமிய இந்து கோவில்களிலும் வழிபாட்டிடங்களிலும் மதவழிபாட்டுடன்கூடிய விழிப்புணர்வு போராட்டங்களாக இதுஅமையுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------------

நில அபகரிப்புக்கு எதிராக தமிழர் வாழும் தேசங்களிலும் போராட்டங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கபடுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைத்தீவில், தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரத்து நிற்கின்ற சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், இத்தகைய நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கஙை நடாத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, தமிழர் வாழும் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை, சமாந்திரமாக முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டித்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்றிருந்த சாத்விகவழியிலான போராட்டத்திற்கு வலுவூட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும், தோழமையோடு சர்வத வழிபாட்டு விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், இதன் தொடர்சியாக தமிழர் தாயகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்திரமாக, இப்போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்கின்றது.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிப்பதோடு, தாயகத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல, உலகத் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென நா.தஅரசாங்கம் தெரிவித்துள்ளது.

//நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கபடுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.//

அகரன் உங்களிடம் ஒரு கேள்வி, மேல் உள்ளது தான் உங்கள் நோக்கம் எனில், சைவக் கோவில் களிலும், தமிழ் மக்கள் கூடும் சேர்ச்சுக்களிலும் பிரார்த்தனை வைத்து நீங்கள் யாரின் கவனத்தை ஈர்க்கப் போராட்டம் நாடாத்துகிறீர்கள்? நா க அரசு என்று இருக்கிறம் என்று சொல்லவா போராட்டம் நடாத்துகிறீர்கள்?

நீங்கள் இது பற்றி எந்த எந்த ` மத வழி பாட்டுச் சுதந்திரதிற்காக குரல் கொடுக்க வல்ல அமைப்பிக்களிடம், அவ் அவ் நாட்டு மக்களிடம் தேவாலயங்களிடம் இதனைக் கவனுத்துக்குக் கொண்டு வந்து இருகிறீர்கள்?

மேலும் பல கேள்விகள் இருக்கின்றன,

நா க அரசு மனித உரிமை அமைச்சு இது வரை எதனைச் செய்திருக்கிறது? அடுத்து வரும் மனித உரிமைக் கூட்டத் தொடருக்குச் செல்கிறதா ?

அண்மையில் இசுலாமிய மக்களின் வணக்கத் தலங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து அதனை இசுலாமிய நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதா? இசுலாமிய , பவுத்த வணக்கத் தலங்களிலும் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுமா?

[size=4]

தாயக மக்கள் ஒன்ரினைம்து காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தும்பொழுது அதை சர்வதேச அரசுகளின் கண்ணில் கொண்டுவர நாம் என்ன செய்யலாம்?

சிங்களம் இன்று மத கலவரங்களை தூண்டி விடுகின்றது. இதை வெற்றிகரமாக முறியடிக்க தாயக மக்களுக்கு எவ்வாறு உறுதுணையாக செயல்படலாம்?

அணிசேரா மாநாட்டை மேற்குலக நாடுகள் புறக்கணிக்க என்ன செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்?

நாம் பங்குபற்றத்தக்க எதிர்ப்பு நிகழ்வுகளில் நாம் பங்குபற்றலாம். இவை ஆஸ்திகத்தை ஏற்றுகொள்ளாதவர்களுக்கு சலிப்பை தருவதாக இருக்கும். பங்கு பற்றாமல் இருப்பதால் மனம் ஆறுதலடையலாம்.

சிங்களம் அண்மையில் மதங்களையும் குறிவைத்து அழிப்புகளை முடுக்கிவிட்டுள்ளது. இதில் தமிழர் பின்பற்றும், கிறிஸ்த்தவ,முஸ்லீம், இந்து மதங்கள் ஒரேமாதிரித்தான் சிங்கள அரசால் நடத்தப்படுகிறது. இது மதக்கலவரதுடன் மத அழிப்பும் ஆகும்

கோவிலுக்கு போகாதவர்களுக்கு புத்தர் பள்ளிவாசலுக்குள், தேவாலத்தில், கோவிலில் புகுவது சாதாரண காணி அபகரிப்பு மட்டுமே. ஆஸ்திகர்களுக்கு இது அதற்கும் மேலேயும் போகிறது. அதனால்த்தான் இது தனிய பிராத்தனைகளாக முடிக்கப்பட்டிருக்கிறது. பாலியல் குற்றங்களை ஆயுதமாக பாவிப்பது, சாதாரண ஆயுதங்கள் உடம்புவரைதான் தாக்கமுடியும், இது ஒரு படிமேலேயும் போய் மனங்களையும் தாக்கும் என்பதாலேயே. அதாவது புண்மாற கவலை மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதே நோக்கம். அதே போன்றதுதான் சிங்களத்தின் அண்மைய மதங்களை குறிவைத்து முடுக்கிவிடப்பட்ட அழிப்புகள். இப்படி மதம் மாற்றப்படும் தமிழர், ஆயிரம்மாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடாத்துப்பட்டது போன்று ஒரு அந்தஸ்து குறைந்த புத்தர்களாகத்தான் சிங்களுத்துடன் இணைக்கப் படுவார்கள். எனவே இந்த புதிய மதம்மாற்ற முன்னெடுப்ப்புக்களை நிறுத்த வேண்டும். சிங்களம் மற்றய மதங்களை போன்றே நாஸ்திகத்தையும் மதிப்பதில்லை. எனவே அவர்களுக்கும் இந்த போராடத்தில் பங்கு பற்ற ஒரு நியாயம் இருக்கு.

நாங்கள் நா.க.அரசு எந்தப் பாதையில் போகவேண்டும் என்பதை நாம் செல்வாக்குகளை பயன்படுத்தி நெறிப்படுத்த முயலவேண்டும்.

உதாரணத்திற்கு யாழில் நாம் திரிகளை திறந்து "அணிசேரா மாநாட்டை மேற்குலக நாடுகள் புறக்கணிக்க என்ன செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்?" என்பதை விவாதிக்க வேண்டும். இது பல இடங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்தும். வழமையாக உங்கள் பாணி மின்னல் அஞ்சலை நாதம்நியூசஸ், பிரதமர் போன்றோருக்கும் அனுப்பிவைக்கல்லாம். நாம் என்ன நினைக்கிறோம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவிரும்பாமல் அடுத்த தேர்தலில் வாக்குக்கு வர முடியாது.[/size]

Edited by மல்லையூரான்

... சில வருடங்களுக்கு முன்னர் .. 2008 இற்கு முன்னர் ... ஓர் பிறந்தநாள் விழாவோ/ஊர் ஒன்று கூடலோ/ஏதோ சரியாக தெரியவில்லை, அங்கு ஓர் இடையில் கூடிக்கதைத்துக் கொண்டுருந்தோம், அப்போ ... எங்கே பேபி அண்ணாவை காணவில்லை? ... ஒருவர் கேட்க, இன்னொருவர் .. போனகிழமை பேபியின் ஜீப்பை எரித்துப் போட்டாங்களாம், அவங்களிட்டை காசு வாங்கித்தானாம் தொழில் செய்தது, இப்ப புலனாய்வுத்துறை வந்து கேட்க, கதை விளையாட்டு விட்டிருக்கிறார், கொழுத்திப்போட்டாங்கள்! வர வெட்கப்படுகிரார் போல? ... அப்படியானவர் இன்று ... 2008 இற்கு முன்னம் இருக்கும் போது அங்கிருந்து இறுதியாக தொடர்பே வைக்க கூடாது என்று கட்டளையும் போடப்பட்டதாம் ... இன்று ஹென்றி கீஷிங்கரின் இடத்திலாம்!!!!!!!!!!!!!!!!!!!! ... யாரை நோவது????????

Edited by Nellaiyan

விடுங்கோ அவங்களால் எம் மக்களுக்கு என்று ஒன்றுமே செய்ய இயலாது ஏதோ அவர்களால் இயன்றது கட‌வுளை உதவிக்கு கூப்பிடுவது :D

... இயலாது என்ற சொல் ...!

... ஞாபகத்திற்கு வருவது சென்ற வருடம் லண்டனில் நடைபெற்ற போட்டி மாவீரர்நாள் கூத்து! ... இரவு பகலாக கூட்டங்கள், நிதி திரட்டல்கள், வானொலி/தொலைக்காட்சி பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் இணைந்து பாய்ந்து பாய்ந்து அலுவல்கள்! ஆனால் இறுதி நேரத்தில் போட்டி மாவீரர்நாள் கூத்து நடைபெற இருக்கும் மண்டபத்தை, அம்மண்டப நிர்வாகம் சில காரணங்களை கூறி அனுமதியை மறுத்திருந்தது. எல்லோரும் சொன்னார்கள், பலர் நினைத்தோம் இந்த போட்டி மாவீரர்நாள் கூத்துக்கள் இத்துடன் முடிபிற்கு வந்துவிட்டது என்று! ஆனால் அதுவரை பாய்தவர்கள் எல்லாம் புயல் வேகத்தில் பறந்தார்கள் ... புது இடம், காசெல்லாம் தூசாக எறியப்பட்டு, மாவீரர்நாள் கூத்தை இறுதியாக செய்து முடித்தார்கள்!!

ஆமா, அந்த மாவீரர்நாள் கூத்தை ஆட, புலமெங்கும் புயலாக பறந்த உங்களுக்கா, ...இயாலாது ...????? ... இல்லை உங்களை இயக்குபவர்கள் உதைச்செய்தால் காணும் என்ற கட்டளையை நிறைவேற்றுகிறீர்களா??????????????

Edited by Nellaiyan

542263_446638555355625_1763621345_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மதவழிபாடுகளைத் தனிநபர்கள் செய்யலாம். மதம் பிரார்த்தனை இவையெல்லாம் தனி மனித செயல்பாடுகள் தான். ஒரு அரசு இப்படிப் பிரார்த்தனைகளையும் யாகங்களையும் முன்னின்று நடாத்துவது பிழையான செய்தியை வெளிஉலகுக்கும் எதிரிகளுக்கும் கொடுக்கும். இதிலிருந்து நா.க அரசு விலகியிருக்க வேண்டும். செய்ய வேலை இல்லையா? இங்கே பலர் எழுதியிருக்கும் நா.க அரசு உறுப்பினர்கள் பற்றிய குறைபாடுகளைக் கவனிக்க ஆரம்பியுங்கள். பொருளாதாரத்தை வளம்படுத்த brain storming செய்யுங்கள். கிராமத்துப் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களே இதெல்லாம் செய்து கொண்டிருக்க இதென்ன ஒரு சதத்திற்கும் பயனில்லாத வேலை?

ஜனநாயக அரசு தனது அரசியல் அமைப்பில் மதம் சாராமல் இருக்க வேண்டும். அரசு முழுமையாக தொழில் படத்தொடங்கியவுடன் இந்துமத பரிபாலன அமைச்சு, கிறிஸ்தவ மத பரிபாலன அமைச்சு, இஸ்லாமிய மத அமைச்சு எல்லாம் தொடக்கி வைக்க இடம் கொடுக்க கூடாது. இந்த செயல் பாடுகள் இப்போதைய பிரச்சனைகளான, இலங்கை அரசால் தூண்ட்டபட்டுகொண்டியுக்கும் மத கலவரம், மதமாற்றம் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கவாகும். கவனஈர்ப்பு, சாலை மறியல், பாதுகை பிடிப்பு எல்லாம் தொடரும். ஆனால் இந்தவகை வழிபாடுகள் தொடருமா என்பது எங்கும் சொல்லப்படவில்லை. கிடைக்கும் பலனைப்பொறுத்து தொடருவார்கள், அல்லது கைவிட்டுவிடுவார்கள். புலம் எங்கும் கோவில்கள் பல்கி பெருகுகின்றன. இருக்க எபாட்மெண்ட் இல்லாவிட்டாலும் கோவில் கட்ட காசு கொடுக்கிறோம். இந்த ஆர்வத்தை போராட்டத்திறுகு பாவிப்பதில் ஏதும் தப்பொன்றுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தூதுவராயங்களில் சென்று மகிந்தாவுக்கு பூசை செய்கிறார்கள். ஒருதடவை தமிழர் விடிவுக்காக யாகமும் செய்யட்டுமேன். மக்களைத்திருப்பியும் போராட்டம் நடத்தலாம், மக்களின் பாதையிலும் போராட்டம் போகலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.