Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தாரய்யா நம்ம இந்திர..... என்னும் ஏழு அடி வாத்தி வர்த்தகம் கற்பிக்க.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மாறி போயிருந்த காலம்.

அறிமுகங்களும் பலவகை கெடுபிடிகளுடன் பகிடி வதைகளும் அமர்க்களமாய் இருந்தநேரம்.

நான் போன போது அந்த சி வகுப்பு என்றால் ஒரு படி கீழே தான் இருந்தது. குளப்படியில பாடசாலையில் முதல் ரகம். ஏதாவது ரிப்போட் செய்யப்போனால் அதிபர் கூட எட்டடி தள்ளி நிற்பார். பயம் வரும் வகையில் இருந்தது படிப்பு விடயம்.

ஒரு நாளைக்கு ஒருவர் என்றாலும் தண்டிக்கப்பட்டு மைதானத்தில் வெய்யிலில் காயாத நாளில்லை.

படிப்பிக்க வந்த புது வாத்திமாரெல்லாம் இந்த வகுப்புக்கு போகமாட்டோம் என ஒப்பாரி வைக்கத்தொடங்கிவிட்டனர். அதிலும் பெண் ஆசிரியைமாருக்கு விசேச கவனிப்பு. பொருளியல் பாடத்தில் சரக்கு வந்தடைடந்தது என்று அவர் சொன்னதற்காக போட்ட கூச்சலில் அந்த ஆசிரியை நேரே அதிபர் அறைக்குத்தான். அழுகை அளவு ஊருக்கே கேட்டுவிடும். அதற்கு தண்டனை எல்லோரும் வெயிலில். அதற்குப்பிறகும் அடிக்கி வாசிப்போமா என்றால் இல்லை. அடுத்த நாள் அவர் வகுப்புக்கு வரும்போது ஒருவனை அள்ளி எடுத்த புரட்டி அவனது உள்ளாடையை கழட்டி மேசைக்கு மேல் தொங்கவிட்டாச்சு. வந்தவர் மீண்டும் ஓடியவர்தான் அதன் பின் வகுப்புக்கே வருவதில்லை. இதில் ஒற்றுமை வேறு. எவரையும் எவரும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். யாருடைய உள்ளாடை என்று எல்லோரையும் கழட்டியா பார்க்கமுடியும்?

இவ்வளவு தொல்லைகளும் ரவுடித்தனங்களும் அவமானப்படுத்தல்களும் அடிபாடுகளும் இருந்தாலும் அங்கே ஒரு அன்பு இருந்தது. அதை உயர்தரம் படித்தவர்கள் எல்லோரும் உணரமுடியும். வயசு அப்படி. அடுத்த வகுப்புக்காறர் ஏதாவது எமது வகுப்புக்காறருக்கு செய்து விட்டால் அவ்வளவும் பட்டாளமாக செல்லும். குளவிக்கூட்டுக்குள் கை வைத்தநிலைதான்.

சிலர் தண்ணியடிப்பர். சிலர் சிகரெட். சிலர் பெண்கள் சேட்டை. சிலர் வாகனம் ஓடுவர். சிலர் நன்றாக வெத்திலை போடுவர். சிலர் நன்றாக சாப்பிடுவர். நான் கடைசி ரகம். அவர்கள் தண்ணியடிக்க ருசிக்கு எடுத்த இறைச்சியையும் கலக்க எடுத்த கோலாவையும் முடித்திருப்பேன் நான். ஒன்றுமே சொல்லமாட்டார்கள். பாவம் அதையாவது அனுபவிக்கட்டுமே என்ற ஏளனம்.

எனக்கு பாடம் நடக்கும்போது எவரும் கரைச்சல் கொடுக்கக்கூடாது. எனது படிப்பு வகுப்பில் மட்டும்தான். வீட்டில் போய் புத்தகம் தட்டுவதெல்லாம் எனது அகராதியிலேயே கிடையாது. இரவு முழிப்பது தண்ணியை காலுக்குள் வைத்தபடி இரவிரவாகப்படிப்பது இதெல்லாம் மிகவும் பிரயோசனமற்றவை எனது பார்வையில்.

வாத்தி சொல்லச்சொல்ல ஐந்தொகையை பதிந்து அவர் முடிக்கும்போதே கணக்கு சரியா பிழையா என சொல்லிவிடுவேன். அவரும் அதைத்தான் என்னிடம் எதிர்பார்ப்பார். ஐந்தொகை சமப்படாது விட்டால் அவர்தானே தலையை உடைக்கணும்? விடை சரி என்றதும் அவர் எல்லோரும் செய்யுங்கோ என்றுவிட்டு புத்தகம் ஒன்றில் மூழ்கிவிடுவார். காது மட்டும் எம்முடன் இருக்கும். அவருக்கு மட்டும் ஒரு பயம் இருந்தது.

அவர் வகுப்புக்குள் வந்த முதல் நாள் சொன்னது. நான் படிப்பிக்கத்தான் வந்திருக்கிறன். எது வேணுமானாலும் நாம் நட்புடன் பேசலாம். படிப்பிக்கும் நேரம் மட்டும் அமைதியாக இருக்கணும். அப்படி விருப்பமில்லாதவர்கள் எனது பாடத்தின்போது வெளியில் செல்லலாம். இல்லை இங்குதான் இருப்போம் வகுகுப்பை குளப்புவோம் என யாராவது தீர்மானித்தால் அதுக்கு நான் அனுமதியேன். எதுக்கும் நான் தயாராகவே வந்துள்ளேன். இன்றும் நான் போற்றும் அந்த ஆசிரியர் பெயர் ராயரத்தினம். நெல்லியடியைச்சேர்ந்தவர்.

எனக்கு படிக்கும் வெறி. எதையாவது சாதிக்கணும் என்னும் உணர்வு.

இதே போல் உணர்வு உள்ளவர் எத்தனைபேர் இதற்குள்? பலர் உள்ளனர். ஆனால் சிலருக்கு பயம். சிலருக்கு வெட்கம். சிலருக்கு ஒற்றுமையை உடைக்க விருப்பமின்மை.

இதற்குள் ஏதாவது வெடிப்பு வரணும். நல்லது நடக்கணும். அந்த நாளும் வந்தது.

கணக்கியல் பாடத்தில் .

வாத்தி சொல்லச்சொல்ல செய்த ஐந்தொகையை சமன் படவில்லை.

வாத்தி திரும்ப செய் என்று விட்டு எங்கேயோ போய் விட்டார். எனக்கு ஐந்தொகை பிழைக்கக்கூடாது.

தலையை பிச்சுக்கொள்வேன். இந்த நேரத்தில் ....

பின்னாலிருந்து புங்... புங்... புங்...

கணக்கு செய்கிறேன் குளப்பாதை இது நான்.

நாங்க மட்டும் கணக்கு விடுகிறமாக்கும். இது அவன்.

மீண்டும் ஐந்தொகையில் மூழ்கிவிடுகின்றேன்.

மீண்டும் பின்னாலிருந்து புங்... புங்... புங்...

எழும்பி

சேட்டுக்கொலருடன் கழுத்தைப்பிடித்து தூக்கி சுவருடன் ஒரு குத்து. அப்படியே மயங்கி விழுந்து விட்டான்.

அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படிக்கவிரும்பியோர் ஒன்றாகத்தொடங்கினோம்.............

அதற்குள் கணக்கியலுக்கும் பொருளியலுக்கும் கிசு கிசு பத்தி நெருப்பாக வந்தாலும் இருவரும் தூணாக நின்று உடைத்து உதவினர் அதையும்.

வகுப்புக்கு நல்ல பெயரும் படிப்பிலும் விளையாட்டிலும் கால் பதித்து நிமிர்ந்து நடந்தது சி வகுப்பு......

வந்தாரய்யா நம்ம இந்திர..... என்னும் ஏழு அடி வாத்தி வர்த்தகம் கற்பிக்க.............

தொடரும்...

புத்துக்குளால இருந்து வெளிக்கிட்டாலும் விசையம் தூள் . ஆனால் எனக்கு உங்கடை தொடருகள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து கனகாலம் . வாழ்த்துக்கள் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் எனக்கு வணக்கம் சொல்ல மாட்டார்.

எப்படி போகுது புகையில வியாபாரம் என்பார். இந்த உங்கட கடைகளில் தரும் இடியப்பம் காத்தடிச்சா பறக்கும்போல கிடக்கு? என்பார்.

சரி படிப்பிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.

வரும்போது ஒரு புத்தகம் அல்லது ஒரு கொப்பியுடன் வருவார்.

ஒருவரை எழுப்பி வாசிக்க விட்டுவிட்டு நித்திரை கொள்வார். ஆள் மட்டும் ஏழு அடி. கேள்வி கேட்பது என்றால் 100 தரம் யோசிக்கணும்.

படிப்பிக்கத்தான் வருகுதில்லை என்றால் இம்சை தாங்கமுடியாது.

ஒரு நாள்

ஒரு கிழமை

ஒரு மாதம்....

நானும் பொறுமை இழந்திருந்த நேரம்.

அன்றும அப்படித்தான் வந்தார்

வழமையாகக்கேட்துடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொண்டார்.

அது சரியடாப்பா

இந்த முருகன் என்ன கேட்டவன் உங்களை? அவனை ஏன் கோவணத்துடன் கொண்டு போய் மலையில விட்டனீர்கள்? என்றார்.

அப்படியே எழும்பினேன்.

முருகனை கோவணத்துடன் என்றாலும் விட்டோம். நீங்கள் தொடர்ந்து என்னை இப்படி அழைத்தால் அதுவும் தங்கள் உடம்பில் தங்காது. கவனம் என்றேன். அந்த ஏழு அடி அதிர்ந்து அடங்கியது தெரிந்தது.

சிறிது காலம் படிப்போடு ஒன்றி விட்டோம். ஆவணியில் பரீட்சை. எல்லோரும் பரீட்சைக்கு தயாராக இருந்தோம். யூலைக்கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. சில நாள் ஒழிந்திருந்து வெளியில் வந்து எமது பாடசாலை அகதி முகமாக இயங்குவதாக அறிந்து அங்கு சென்றேன். அங்கு அதே இந்திர......... வாத்தியும் அகதியாக இருந்தார். நமக்குள் எத்தனை வேற்றுமைகள். எத்தனை பிரிவுகள்.

சிங்களவனுக்கு நாமெல்லோரும் தமிழர்கள்.......................

முற்றும்.

( இக்கதை காதலுக்கு சமர்ப்பணம்

ஒற்றுமைக்கு கடுமையாக உழைக்குது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103971 )

Edited by விசுகு

http://www.yarl.com/...howtopic=103971 )

நன்றி அண்ணா,

எனக்கு சமர்ப்பித்தது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு. :o

நீங்கள் பாவம் பாக்கிற அளவுக்கு நான் ஒண்டும் செய்யேல்லை அண்ணா. :o இதுக்கெல்லாம் பாவம் பார்த்தால் நீங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டியது தான். :lol: கவனம் கவனம்.

நீங்கள் படிக்கும் காலத்தில் தாக்குதலுக்குள்ளானதாக கூறியிருந்தீர்கள். அதனை தெளிவுபடுத்தி கூறியமைக்கு நன்றி.

இப்படியானவர்கள் திருந்த மாட்டார்கள் தான். அப்படி கேட்டவருக்கு நீங்கள் அப்படி பதில் கொடுத்தது தவறல்ல. உங்கள் பதில் தாக்குதல் அவருக்கானதாக மட்டுமே இருந்தது.

அவரை திட்டுவதாக நினைத்துக்கொண்டு ஒட்டுமொத்த அவர் சாதி மக்களை அல்லது அவர் பிரதேச மக்களை இழுத்து கதைத்திருந்தால் அதே வகுப்பில் படித்த அவர் சாதி, பிரதேசத்தை சேர்ந்த பலரையும் சேர்த்து அது தாக்கியிருக்கும். அதன் பின் அவர்களும் உங்களுடன் பழகியிருக்க மாட்டார்கள்.

ஆனால் உங்கள் பதில் அப்படி அமையாததால் அவர்களுடன் நீங்களும் நட்பை தொடரக்கூடியதாக இருந்திருக்கும். :)

இந்திர.... வாத்திக்குகடவுளாக பார்த்து தண்டனை கொடுத்து விட்டார்.

இன்றைய காலத்தில் அப்படியான சம்பவங்கள் குறைந்து வருகின்றது. (ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படவில்லை என்பதையும் ஏற்கிறேன்)

நான் படித்த பாடசாலையில் பல இடத்து மாணவிகள், பல சாதி மாணவிகள் ஒன்றாக படித்தாலும் நாம் அனைவரும் நட்பாகவே இருந்து வந்துள்ளோம். அவை எதுவும் எமக்கு தடையில்லை.

பாடசாலை முடிந்ததும் நாங்கள் science hall க்கு போவது வழமை. இடையில் ஒரு நண்பி வீட்டில் சென்று ரீகுடித்து விட்டு செல்வோம். சிலவேளை சாப்பிட்டு விட்டும் செல்வோம். முதல்முறையாக அந்த நண்பி வீட்டுக்கு சென்றபோது அவர் என்னிடம் கேட்டது, நீங்கள் எங்கள் வீட்டில் ரீ குடிப்பீங்களா சாப்பிடுவீங்களா என்று. வீட்டில் சொன்னால் பேச மாட்டார்களா என்றும் கேட்டார்? இத்தனைக்கும் நான் என்ன சாதி என்று அவர்களுக்கு சொன்னதில்லை.

உண்மையில் நான் என் வீட்டிலேயே ரீகுடிப்பதில்லை. ஆனால் அவர் கேட்ட பிறகு அடிக்கடி அந்த நண்பி வீட்டை ரீகுடிக்க போறனான்.

நான் அங்கு சாப்பிட்டால் அம்மம்மா பேசுவா. (கதைப்பதற்கு ஒன்றும் சொல்ல மாட்டா, அவாவும் நன்றாக கதைப்பா ஆனாலும் சாப்பிட விட பயம்) அம்மம்மா நல்லவா. ஆனால் இந்த விடயத்தில் மட்டும் இப்படி. அம்மம்மாவுக்கு எவ்வளவோ சொல்லி களைத்து விட்டேன். ஆனாலும் அவா மாறவில்லை.

ஆனால் அம்மா இதற்கு ஒன்றும் சொல்ல மாட்டா. பிறகு அம்மம்மாவுக்கு சொல்லாமல் அம்மாவுக்கு மட்டும் சொல்லி போட்டு போவன்.

இடைக்கிட என் வீட்டிற்கும் 4,5 நண்பிகளை கூப்பிட்டு சாப்பாடு கொடுத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் சாப்பிட கூப்பிட்டால் அதற்கு யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

பிறகு பிறகு அம்மம்மாவும் மற்றைய சாதியினர் வீட்டில் சாப்பிடுவா. ஆனாலும் திருமண விடயத்தில் இன்னும் சாதி பார்ப்பதை நிறுத்தவில்லை. ஆனால் அம்மா, நாங்கள் அதிலும் முன்னேற்றம். :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா,

எனக்கு சமர்ப்பித்தது கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.

நீங்கள் பாவம் பாக்கிற அளவுக்கு நான் ஒண்டும் செய்யேல்லை அண்ணா. இதுக்கெல்லாம் பாவம் பார்த்தால் நீங்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டியது தான். கவனம் கவனம்.

நீங்கள் படிக்கும் காலத்தில் தாக்குதலுக்குள்ளானதாக கூறியிருந்தீர்கள். அதனை தெளிவுபடுத்தி கூறியமைக்கு நன்றி.

இப்படியானவர்கள் திருந்த மாட்டார்கள் தான். அப்படி கேட்டவருக்கு நீங்கள் அப்படி பதில் கொடுத்தது தவறல்ல. உங்கள் பதில் தாக்குதல் அவருக்கானதாக மட்டுமே இருந்தது.

அவரை திட்டுவதாக நினைத்துக்கொண்டு ஒட்டுமொத்த அவர் சாதி மக்களை அல்லது அவர் பிரதேச மக்களை இழுத்து கதைத்திருந்தால் அதே வகுப்பில் படித்த அவர் சாதி, பிரதேசத்தை சேர்ந்த பலரையும் சேர்த்து அது தாக்கியிருக்கும். அதன் பின் அவர்களும் உங்களுடன் பழகியிருக்க மாட்டார்கள்.

ஆனால் உங்கள் பதில் அப்படி அமையாததால் அவர்களுடன் நீங்களும் நட்பை தொடரக்கூடியதாக இருந்திருக்கும்.

இந்திர.... வாத்திக்குகடவுளாக பார்த்து தண்டனை கொடுத்து விட்டார்.

இன்றைய காலத்தில் அப்படியான சம்பவங்கள் குறைந்து வருகின்றது. (ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படவில்லை என்பதையும் ஏற்கிறேன்)

நான் படித்த பாடசாலையில் பல இடத்து மாணவிகள், பல சாதி மாணவிகள் ஒன்றாக படித்தாலும் நாம் அனைவரும் நட்பாகவே இருந்து வந்துள்ளோம். அவை எதுவும் எமக்கு தடையில்லை.

பாடசாலை முடிந்ததும் நாங்கள் science hall க்கு போவது வழமை. இடையில் ஒரு நண்பி வீட்டில் சென்று ரீகுடித்து விட்டு செல்வோம். சிலவேளை சாப்பிட்டு விட்டும் செல்வோம். முதல்முறையாக அந்த நண்பி வீட்டுக்கு சென்றபோது அவர் என்னிடம் கேட்டது, நீங்கள் எங்கள் வீட்டில் ரீ குடிப்பீங்களா சாப்பிடுவீங்களா என்று. வீட்டில் சொன்னால் பேச மாட்டார்களா என்றும் கேட்டார்? இத்தனைக்கும் நான் என்ன சாதி என்று அவர்களுக்கு சொன்னதில்லை.

உண்மையில் நான் என் வீட்டிலேயே ரீகுடிப்பதில்லை. ஆனால் அவர் கேட்ட பிறகு அடிக்கடி அந்த நண்பி வீட்டை ரீகுடிக்க போறனான்.

நான் அங்கு சாப்பிட்டால் அம்மம்மா பேசுவா. (கதைப்பதற்கு ஒன்றும் சொல்ல மாட்டா, அவாவும் நன்றாக கதைப்பா ஆனாலும் சாப்பிட விட பயம்) அம்மம்மா நல்லவா. ஆனால் இந்த விடயத்தில் மட்டும் இப்படி. அம்மம்மாவுக்கு எவ்வளவோ சொல்லி களைத்து விட்டேன். ஆனாலும் அவா மாறவில்லை.

ஆனால் அம்மா இதற்கு ஒன்றும் சொல்ல மாட்டா. பிறகு அம்மம்மாவுக்கு சொல்லாமல் அம்மாவுக்கு மட்டும் சொல்லி போட்டு போவன்.

இடைக்கிட என் வீட்டிற்கும் 4,5 நண்பிகளை கூப்பிட்டு சாப்பாடு கொடுத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் சாப்பிட கூப்பிட்டால் அதற்கு யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

பிறகு பிறகு அம்மம்மாவும் மற்றைய சாதியினர் வீட்டில் சாப்பிடுவா. ஆனாலும் திருமண விடயத்தில் இன்னும் சாதி பார்ப்பதை நிறுத்தவில்லை. ஆனால் அம்மா, நாங்கள் அதிலும் முன்னேற்றம்.

:o :o :o

  • கருத்துக்கள உறவுகள்
:o :o :o same to me வாத்தியார் :lol:

:o :o :o

:o :o :o same to me வாத்தியார் :lol:

அண்ணா, இங்கு நான் குறிப்பிட்டு கூறிய காரணம் சாதி பார்ப்பது பார்க்காமல் விடுவதென்பது எமக்கு முன்னைய சந்ததியில் அதிகமாக இருந்தாலும் எம் சந்ததியில் குறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே அன்றி அதனை அதிகப்படுத்துவதற்காக அல்ல.

இங்கு மற்றவர்கள் என்ன சாதி என்பது அவர்களாக எம்மிடம் சொன்னார்கள். தமக்குள்ள தாழ்வு மனப்பான்மையால். (அது நிறுத்தப்பட வேணும்). நான் யாரையும் கேட்கவோ அல்லது அவர்கள் இடத்தை வைத்து கணிக்கவோ இல்லை.

அதேபோல் அது தெரிந்தபின் நான் என் போக்கில் மாற்றத்தை கொண்டுவரவில்லை. கொண்டுவந்திருந்தால் நீங்கள் என்னில் பிழை சொல்லலாம். நாம் மற்றவர்களின் சாதியை தெரிந்தாலும் அதை காரணமாக வைத்து அவர்களுடன் பழகுவதில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்பதனையே அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

அது தவறா? அறியத்தரவும். தவறென்றால் என்னை நான் திருத்திக்கொள்கிறேன். :)

Edited by காதல்

இங்கு "நீங்கள் என்ன சாதி" என்று நாங்களாக கேட்காத போதும் சிலர் தாம் இந்த சாதி என்று சொல்கிறார்கள். அதே போல் நாங்கள் என்ன சாதி என்று நாங்கள் சொல்லாதபோதும் நாங்கள் இந்த சாதி என்று சிலர் கணிக்கிறார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நான் எழுதியுள்ளேன்.

என்னை பொறுத்தவரை எவர் என்ன சாதி என்பது இங்கு பிரச்சினை இல்லை. அவர்களை நீ இந்த சாதியா என்று கேட்பதும் பிழை. நாம் அவர்களுடன் பழகும் விதம் மாறினாலும் அது பிழை.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரியடாப்பா

இந்த முருகன் என்ன கேட்டவன் உங்களை? அவனை ஏன் கோவணத்துடன் கொண்டு போய் மலையில விட்டனீர்கள்? என்றார்.

அப்படியே எழும்பினேன்.

முருகனை கோவணத்துடன் என்றாலும் விட்டோம். நீங்கள் தொடர்ந்து என்னை இப்படி அழைத்தால் அதுவும் தங்கள் உடம்பில் தங்காது. கவனம் என்றேன். அந்த ஏழு அடி அதிர்ந்து அடங்கியது தெரிந்தது.

சிறிது காலம் படிப்போடு ஒன்றி விட்டோம். ஆவணியில் பரீட்சை. எல்லோரும் பரீட்சைக்கு தயாராக இருந்தோம். யூலைக்கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. சில நாள் ஒழிந்திருந்து வெளியில் வந்து எமது பாடசாலை அகதி முகமாக இயங்குவதாக அறிந்து அங்கு சென்றேன். அங்கு அதே இந்திர......... வாத்தியும் அகதியாக இருந்தார். நமக்குள் எத்தனை வேற்றுமைகள். எத்தனை பிரிவுகள்.

சிங்களவனுக்கு நாமெல்லோரும் தமிழர்கள்....................

எனக்கும் விடுதியில் இருந்தபோது, இப்படியான அனுபவங்கள் நிரம்ப உண்டு!

அடிதடி அளவுக்குப் போறது கிடையாது!

நாங்கள் ஏதோ தவமிருந்து, தீவில் பிறக்கவேண்டும் என்று பிறந்தது மாதிரி!

ஆனால் இது, மனித இனத்தின் குணாதிசியங்களின் ஒன்று என நினைக்கின்றேன்!

மனிதர்கள் கறுப்பு, வெள்ளை என்று அடிபடுகின்றனர்!

எல்லாம் வெள்ளை என்றால், தங்களுக்குள் யூதர்கர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று பிரிந்து நின்று அடிபடுகின்றார்கள்!

அல்லது ஏழை,பணக்காரன் என்று அடிபடுகின்றார்கள்!

அல்லது இருக்கும் இடங்களைப் பற்றிப் பெருமை பேசுகின்றனர்.

நான் இங்கே இருக்கும் இடத்தின் பெயரைச் சொன்னால், பிறந்தது என்ன பிள்ளை என்று கேட்கும்போது, 'பொம்பிளைப் பிள்ளை' என்று பதில் சொன்னால், ஒரு இளக்காரச் சிரிப்பு வருமே, அப்படி ஒரு சிரிப்பும் சிலர் சிரிப்பார்கள்! அவர்கள் பானையில் இருப்பது அவ்வளவு தான் என்று சிரித்து விட்டுப் போய்விடுவேன்!

ஆனால் இப்போது அவர்கள், இந்தப் பகுதியில் வீடு வாங்கத் தலை கீழாக இப்போது முயற்சிக்கின்றார்கள்! அது வேற கதை!

கதை 'அந்த மாதிரி' விசுகர்!

நாங்கள் ஏதோ தவமிருந்து, தீவில் பிறக்கவேண்டும் என்று பிறந்தது மாதிரி!

அண்ணா, நானும் தவமிருந்து யாழ்ப்பாணத்தில் பிறக்கவில்லை. :( அப்படியிருக்கும் போது நான் யாழ்ப்பாணம் என்று கூறி பலர் என்னுடன் பழகாமல் விட்டார்கள். :( அவர்களுடன் நான் பழக என்ன செய்ய வேண்டும்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மனதை நோக வைத்த, கதை விசுகு.

முள்ளை, முள்ளால... தான் எடுக்க முடியும்.

என் குடும்பத்தில் நடந்த கதை, என் நண்பர்களுடன் எனக்கான அனுபவத்தை மேலே பகிர்ந்து கொண்டேன். அதே விடயத்தை சாதி என்ற சொல்லோ பிரதேசம் என்ற சொல்லோ அல்லது அது சம்பந்தமாக எந்தவொரு சொல்லோ வராமல் இருவரும் எனக்காக ஒரு தடவை எழுதி பிரசுரியுங்கள். நீங்கள் சொல்வதை பார்த்து நான் எப்படி எழுத வேண்டும் என்று உங்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்.

பதில் எழுத நேரமில்லை. நாளைக்கு இரவு தான் இனி எழுதுவன். அதுவரை பொறுமை காத்து கொள்ளுங்கள்.

Edited by காதல்

[size=5]இப்படியான சம்பவங்கள் தாக்குதல்களின் பின்னும் அதை வைத்து மற்றவர்களும் அப்படி என்று நினைக்காமல் அனைவருடனும் ஒற்றுமையாக பழகும் விசுகு அண்ணாவுக்கு என் நன்றிகள்.[/size][size=5] [/size][size=5] :)[/size][size=5] [/size][size=5] :)[/size][size=5] [/size][size=5] :)[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் விடுதியில் இருந்தபோது, இப்படியான அனுபவங்கள் நிரம்ப உண்டு!

அடிதடி அளவுக்குப் போறது கிடையாது!

நாங்கள் ஏதோ தவமிருந்து, தீவில் பிறக்கவேண்டும் என்று பிறந்தது மாதிரி!

ஆனால் இது, மனித இனத்தின் குணாதிசியங்களின் ஒன்று என நினைக்கின்றேன்!

மனிதர்கள் கறுப்பு, வெள்ளை என்று அடிபடுகின்றனர்!

எல்லாம் வெள்ளை என்றால், தங்களுக்குள் யூதர்கர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று பிரிந்து நின்று அடிபடுகின்றார்கள்!

அல்லது ஏழை,பணக்காரன் என்று அடிபடுகின்றார்கள்!

அல்லது இருக்கும் இடங்களைப் பற்றிப் பெருமை பேசுகின்றனர்.

நான் இங்கே இருக்கும் இடத்தின் பெயரைச் சொன்னால், பிறந்தது என்ன பிள்ளை என்று கேட்கும்போது, 'பொம்பிளைப் பிள்ளை' என்று பதில் சொன்னால், ஒரு இளக்காரச் சிரிப்பு வருமே, அப்படி ஒரு சிரிப்பும் சிலர் சிரிப்பார்கள்! அவர்கள் பானையில் இருப்பது அவ்வளவு தான் என்று சிரித்து விட்டுப் போய்விடுவேன்!

ஆனால் இப்போது அவர்கள், இந்தப் பகுதியில் வீடு வாங்கத் தலை கீழாக இப்போது முயற்சிக்கின்றார்கள்! அது வேற கதை!

கதை 'அந்த மாதிரி' விசுகர்!

புங்கையூரானின் எழுத்துக்கள்.... வர,வர மெருகு ஏறிக் கொண்டு வருகின்றது.

அடிக்கடி, நல்ல உதாராணங்களை பாவிப்பதை... பல இடங்களில் கண்டுள்ளேன்.

புங்கையூரான் அவுஸ்திரேலியாவில்... தமிழ் ரியூசன் எடுக்கிறனீன்களா? :D:lol::icon_idea:

அதே சூசியம்!

அதே லம்பம்!

விளங்கினால் சொல்லுங்கள்,தமிழ் சிறி!

இப்போதாவது 'யாழ் களம்' அடையாளத்தைத் தொலைத்த தமிழனுக்கு, அவனது அடையாளத்தைக் கொஞ்சமாவது, நினைவு படுத்துகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா?

யாழ் களம் எமது 'கல்லூரி".

கொஞ்ச நாளைக்குப் பிறகு, இதையே 'குண்டனுக்கும்' எழுதுவீர்கள் என எண்ணுகின்றேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"லம்பம்" விளங்கிவிட்டது, புங்கையூரான்.

சொல்லி, பிடி கொடுக்க நான்... தயாரில்லை.

:D:lol::icon_idea:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதி விருப்பு வாக்களித்து ஊக்கம் தந்த உறவுகளுக்கு பின்னர் கருத்து எழுதுகின்றேன்.

இது கதையல்ல. ஒவ்வொரு மாணவர்களதும் வாழ்க்கை.

எவரது வாழ்விலும் மறக்க முடியாதவைகளில் முதலிடத்தில் இருப்பவை இந்தக்கல்லூரி வாழ்க்கையே. காரணம் பருவ மாற்றங்களைச்சந்திக்கும் வயதில் அது வருகிறது.

அவற்றிற்குள் வரும் அனுபவங்களும் சாதனைகளும் படிப்பினைகளும் அவற்றை எதிர் கொண்டு நாம் ஈட்டும் வெற்றிகளுமே வாழ்நாள் முழுவதும் எமக்கு வழிகாட்டியாக அமைகிறது. நான் எனது மக்களுடன் பேசும் போது சொல்வதுண்டு இந்த வயதில்ததான் படிக்கணும் இந்த வயதில் தான் காதலிகக்கணும் என்ற இருண்டும் உண்டு என்று எனக்கும் தெரியும். ஏனெனில் அதைத்தாண்டித்தான் நானும் வந்துள்ளேன். ஆனால் ஒன்றை விட்டால் மீண்டும் பிடிக்கமுடியும் இன்னொன்றை விட்டால் மீண்டும் பிடிக்கமுடியாது. எதை தற்போது தவிர்ப்பது உனது எதிர்காலத்துக்கு நல்லது என்பதை நீயே தெரிவு செய் என்று.

அதன்படி

படிக்கும்போதும் ஒரு பொது நோக்கோடு எவ்வாறு சிக்கல்களுக்கும் சீண்டுதல்களுக்கும் புறந்தள்ளுதல்களுக்கும் ரவுடித்தனங்களுக்கும் முகம் கொடுத்து எமதும் எம்மோடு சேர்ந்தவர்களதும் பாதையை செப்பனிடுகின்றோம் என்பதே முக்கியமானது.

அந்த வகையில் இந்த சி வகுப்பு என்னால் மறக்கமுடியாதது. அதனை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர நாங்கள் சிலர் சேர்ந்து போராடினோம். வெற்றியும் பெற்றோம். அத்துடன் கடைசிவரை ஒரு சிலர் திருந்தவே இல்லை என்றாலும் எம்மை மதித்து எமது வாழ்க்கையை செப்பனிட அனுமதிப்பதையாவது அவர்களிடம் பெற்றுக்கொண்டோம்.

இதற்காக நாங்கள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டோம். புறக்கணிப்புக்களில் ஈடுபட்டோம். இவை மறுக்கப்பட்டால் வன்முறைக்கும் தயாராக இருந்தோம் (கராட்டி பழகினோம்). அவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் படிக்க ஆசைப்படுகின்றோம் என்பதை காட்ட நாங்கள் திறமைசாலிகள் என பரீட்சை பேறுகளில் நிரூபிக்க வேண்டியும் இருந்தது. கொஞ்சம் சறுக்கினாலும் இவர் எங்களுக்கு படிப்பைப்பற்றி சொல்கிறார் என்ற நிலைமை. அநேகமாக எல்லா பாடசாலைகளிலும் இது இருந்திருக்கும். எல்லோரும் முகம் கொடுத்திருப்பீர்கள். முடிந்தால் அவற்றையும் பதியுங்கள்.

பொது வாழ்க்கையில் ஈடுபடுவதென்பது வீட்டில் அதைத்தொடர்ந்து கல்லூரிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றது. எனது பொது வாழ்க்கையும் இந்த சி வகுப்பிலிருந்தே ஆரம்பித்தது. இன்றுவரை தொடர்கிறது.

அந்தவகையில் இந்த சி வகுப்பு என் வாழ்வில் மறக்கமுடியாதது.

பகிர்வுக்கு நன்றி வி அண்ணா . உண்மை............ என் தற்போதைய வாழ்க்கையில் கூட எனக்கு ஏற்படும் பிரச்சனைகள், இன்பங்கள், துன்பங்கள் ,கவலைகள் சோகங்கள் ,இவற்றை எதிர்கொள்ளும் பொது நான் திரும்பிப்பார்ப்பது. எனது பாடசாலை வாழ்க்கை அனுபவம்தான்.இன்று கூட ஒவ்வோர் ஆசிரியர் [யை] பெருந்தகைகளின் ஒவ்வொரு வசனங்களும் திரும்பத்திரும்ப என் காதில் எதிரோளித்தவண்ணம் தான் உள்ளது. அதுவும் நான் பத்திரிசியார் கல்லூரி விடுதிசாலையில் செய்த அடாவடித்தனங்களும். அதற்கு கிடைத்த அடிகளும் சொல்லில் அடங்காதவை. உங்கள் இந்த அனுபவத்தை படித்தவுடன் நானும் பின் நோக்கி சென்று விட்டேன் . இன்று இந்த அனுபவங்கள் தான் எம் வாழ்க்கைக்கு நாம் இட்ட அத்திவாரங்கள் .........தொடர்வோம் எங்கள் வாழ்க்கைப்பாதையை ,அருமையான .சுவாரசியமான அனுபவங்கள் மூலம்............. :rolleyes:

நிச்சயமாக விசுகு அண்ணா, உங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை நீங்கள் எழுதுங்கள். மற்றவர்களும் அதுபோல் உங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை எழுதுங்கள்.

உங்கள் பிரச்சினையை நீங்கள் எழுதியது போல் என் வீட்டில் உள்ள பிழையை ஒத்துக்கொண்டு நான் எழுதியிருந்தேன்.

நான் ஏதாவது பிழையாக எழுதினேனா இல்லையா? :unsure: அது பிழை என்றால் எவ்வாறு திருத்தி எழுதுவது என்பது எனக்கு தெரியவில்லை. :unsure: எனவே பிழையாக எழுதியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். :(

என் வீட்டில் இருந்தது போல் பலர் வீட்டில் யாராவது ஒருவர் என்றாலும் "அந்த வீட்டுக்கு போகாதே இந்த வீட்டில் சாப்பிடாதே" என்று சொல்பவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களின் பேச்சை கேட்காமல் இந்த சந்ததியினர் அனைவரும் ஒன்றாக பழகுங்கள். (உங்கள் பெற்றோருக்கு தெரியாமல் தன்னும்).

அதே போல் என் நண்பர்கள் போல் பலர் இன்னும் தாழ்வு மனப்பான்மையில் உள்ளீர்கள். விசுகு அண்ணா அந்த நபரை எதிர்த்து பேசினார். ஆனால் இதே நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவர் இருந்திருந்தால் அவர் எதிர்த்து கதைக்காமல் தனக்குள்ளே அழுதிருப்பார். எனவே உங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும்.

[size=5]ஏனென்றால் இங்கு எவரும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. அனைவரும் பூலோகத்தில் தான் பிறந்தார்கள். அனைவரும் மனிதர்களே.[/size]

[size=5]ஏனென்றால் இங்கு எவரும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. அனைவரும் பூலோகத்தில் தான் பிறந்தார்கள். அனைவரும் மனிதர்களே.[/size]

i like this

உயர்தரக் கல்வி எல்லோருக்கும் ஒரே தரமாகத்தான் இருந்துக்கிறது. :D

நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திர... எந்த இடம், அவரிற்கு பிள்ளைகள் உண்டா?

இந்திர... எந்த இடம், அவரிற்கு பிள்ளைகள் உண்டா?

கேட்கக் கூடாத கேள்வி உடையார். :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அனுபவபகிர்வுக்கு நன்றிகள்...அடுத்த கதை எப்போ?

நன்றி உங்கள் அனுபவபதிவிற்கு விசுகு அண்ணா. நீங்கள் மேலும் எழுத வேண்டும். உங்கள் கால அனுபவங்கள் எங்களை புடம் போட நிச்சயம் உதவும்.

இன்னும் எழுதுவீங்கள் என்று நம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.