Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிபோகும் நிலங்களும் துணைபோகும் சில தமிழரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறிபோகும் நிலங்களும் துணைபோகும் சில தமிழரும்

சாத்திரி ஒரு பேப்பர்.

அண்மைக்காலமாக தமிழர் தாயகப் பகுதிபற்றி பரபப்பானதும் கவலையானதுமான அனைத்து ஊடகங்களையும் நிறைத்து நிற்கும் செய்தியொன்று அதுதான் பறிபோகும் தமிழர் நிலங்கள் என்பது.. அதனை எதிர்த்து பாதிக்கப் பட்ட மக்கள் தனியாகவும் அமைப்புக்களோடு இணைந்தும் போராட்டங்களை நடாத்துவதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்களோடு இணைந்து போராட்டங்களை தொடங்கியுள்ளது. ஆனாலும் இலங்கையரயோ இராணுவமோ அந்த போராட்டங்களிற்கு அசைந்து கொடுப்பதாயில்லை. மக்களின் அரசியல் ரீதியானதும் அமைதிவழியிலான போராட்டங்களிற்கு இலங்கைத் தீவில் எந்த மதிப்பும் இல்லையென்பது உலகறிந்த விடையம்தான். அதனால்தான் உலக நாடுகள் சிலவும் இந்த தமிழர் தாயத்தின் நிலப் பறிப்புகளிற்கு எதிராக கண்டனங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

நிலப்பறிப்பு என்பது வன்னியிலும் யாழ் மாவட்டத்தினை அண்டிய பகுதியிலும் நடை பெறுபவையே பெரும்பாலும் தமிழ் செய்தி ஊடகங்களில் வெளியாகின்றது ஆனால் மன்னாரிலும் மட்டக்கிளப்பு அம்பாறை பகுதிகளில் பறிபோகும் நிலங்களை பற்றி அதிகளவு செய்திகள் வெளியாவதும் இல்லை அதனைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதாகவும் இல்லை. தமிழர் தரப்பின் போராட்ட சக்தியாகவும் பலமாகவும் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவிற்கு பின்னர் அடுத்ததாக நிலப் பறிப்பும் மதப்பரம்பலும் சமூக் சீர்கேடுகளும் தாரளமாக்கப்பட்டு மேலும் மேலும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தி இலங்கைத் தீவில் தமிழ் பேசும் இனமொன்று இருந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போகச் செய்வதற்கான அனைத்து வழிகளும் இலங்கையரசால் மேற்கொள்ளப் படுகின்றது. ஆனால் இவற்றை எதிர்த்து மக்கள் எவ்வளதூரம் போராடப் போகின்றார். எத்தனைபேர் ஒன்றாக அணி திரளப் போகின்றார்கள் .யார்பின்னால் அணி திரளப் போகின்றார்கள். அல்லது யார் போராடும் மக்களை சரியான பாதையில் வழிநடாத்தப் போகின்றார்கள் என்பது பெரும் கேள்விக்குறியே??? ஏனெனில் தமிழர்களை பொறுத்தவரை ஒரு கருத்துடன் ஒட்டுமொத்த தமிழினமும் ஓரணியில் இணைந்து போராடுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்தமாதிரி.

எனவே ஒட்டு மொத்த மக்கள் போராட்டம் என்பதை எமது இனத்தில் எதிர்பார்க்க ஏன் நினைத்துப்பார்க்க கூட முடியாத ஒன்று ஆனாலும் பாதிக்கப் பட்டவர்கள் மட்டும் அவ்வப்பொழுது சிறு சிறு குழுக்களாக போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நிலைமை இப்படியிருக்க எம்மவரின் நிலங்களை இலங்கையரசு பறிப்பதற்கு எம்மவர் சிலரே துணை போவதை என்னவென்று சொல்வது??அப்படியொரு இலங்கையரசிற்கு துணைபோகும் ஒருவர்தான் கிழக்கு மகாணத்தை சேர்ந்த நித்தியானந்தராஜா பிரசாந்தன் என்பவர். சிங்கப் பூரில் தனது படிப்பினை முடித்துக்கொண்டு கடந்த வருடம் இலங்கை திரும்பிய இவர் றியல் எஸ்ரேற் வியாபாரம் என்கிற போர்வையில் இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் புலநாய்வு அதிகாரிகளுடன் இணைந்து இலங்கைரசின் நிலப் பறிப்பிற்கு துணை போகின்ற ஒருவராக இருக்கின்றார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிற்கு நெருங்கிய உறவினரும்கூட.. நிலப்பறிப்பிற்கு துணைபோகும் பிரசாந்தன் அதனை சாதுரியமாக வியாபரம் என்கிற வகையறைக்குள் அடக்கி விடுகிறார் அதனை இரண்டு வகையாக்கலாம்.

அது எப்படியெனில் கிழக்கு மாகாணத்தின் மட்டு அம்பாறை மாவட்டங்களில் இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து முகாம்கள் அல்லது காவலரண்கள் அமைத்துள்ள காணிகளின் விபரங்களை திரட்டுவார். அதன் பின்னர் அந்த காணிகளின் உரிமையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவார். இரண்டாவது தங்கள்: காணிகளை திரும்ப பெறுவதற்காக சட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருப்பவர்கள் அல்லது அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவார். தொடர்புகளை ஏற்படுத்தியவர் உங்கள் காணிகளை திரும்ப பெற்றுதருவதற்காக முயற்சிக்கிறேன் அதற்குரிய ஆவணங்களை அல்லது பிரதிகளை தரும்படி கேட்டு பெற்றுக்கொள்வார். காணி உரிமையாளர்களும் தங்களிற்கு காணி எப்படியாவது கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் விபரங்களை கொடுப்பார்கள் . அதன்பின்னர் அந்த பகுதி இராணுவ அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சம்பந்தப் பட்ட காணியை விற்பதற்குரிய ஆவணங்கள் கிடைத்து விட்டதாகவும் அதற்குரிய அனுமதியையும் அங்குள்ள படை நிலைகளை அகற்றுமாறும் கேட்டுக் கொள்வதோடு அவர்களிற்குரிய வழைமையான பங்கையும் பேசி முடித்துவிடுவார். அதன்பின்னர் காணி உரிமையாளரை தொடர்பு கொண்டு படையினர் உங்கள் காணிகளில் இருந்து விலக மறுக்கிறார்கள் நீங்கள் நீதிமன்றம் வழக்கு என்று போயும் பிரயோசனம் இல்லை.அதனால் போசாமல் வருகிற விலைக்கு விற்று விடுங்கள் அதற்கும் நானே ஏற்பாடு செய்கிறேன் என்று அடுத்த திட்டத்தை போடுவார் .

veenayarl.jpg

காணி உரிமையாளரும் ஏதோ வந்தவரை லாபம் என்று நினைத்து சம்மதம் தெரிவித்து விடுவார். பின்னர் பிரசாந்தன் மிக குறைந்த அடிமாட்டு விலை ஒன்றை நிர்ணயம் செய்து காணி உரிமையாளரிடம் கையெழுத்தை வாங்கிவிடுவார். பின்னர் என்ன... படை நிலைகளை விலக்கிவிட்டு காணி சிங்களவர்களிற்கோ அல்லது பெரும் முஸ்லிம் வியாபாரிகளிற்கோ பெரும்தொகை பணத்திற்கு விற்றுவிட்டு படையதிகாரிக்கும் புலனாய்வாளர்களிற்கும் அவர்கள் பங்கை கொடுத்துவிட்டு தானும் பெரும் இலாபம் சம்பாதித்துகொள்கிறார். இதெல்லாம் கிடக்கட்டும் ஊரிலை காணி வாங்கிலாலென்ன வித்தாலென்ன அதை ஏன் ஒரு பேப்பரிலை எழுதிறீங்கள் எண்டு இதை படிக்கிறவை யோசிக்கலாம். காரணம் பிரசாந்தன் அடுத்து குறி வைத்து இயங்க தொடங்கியிருப்பது புலம் பெயர்ந்து வாழும் கிழக்கு மாகாணத்தவர்களை நோக்கியே ..ஊரில் காணிகள் உள்ளவர்களின் விபரங்களை திரட்டிய பின்னர் புலம்பெயர் தேசங்களில் அவர்களின் தொடர்புகளை எடுத்து உங்கள் காணிகளை விற்றுத்தரலாம் நீங்கள் ஆவணங்களையும் அனுப்பி கையெழுத்து மட்டும் போட்டால் போதும் உங்கள் வெளிநாட்டு வங்கியில் பணம் போடப்படும் என்று பேசி இது வரை பலரது காணிகளிற்கு பேசப்பட்ட விலையைவிட குறைந்தளவு பணத்தையோ வங்கிகளிலும் இட்டிருக்கிறார். புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் இனி யார் ஊருக்கு போய் ஆளை பிடிச்சு காணி விக்கிறது என்கிற மெத்தனப் போக்கில் இவரது வலையில் வீழ்ந்துள்ளனர்.எனவே புலம்பெயர் தமிழர்களோ நீங்களும் பறிபோகும் நிலங்களிற்கு துணையாகப் போகின்றீர்களா?? உங்கடை விருப்பம்

பி.கு. இந்தக் கட்டுரை ஒரு பேப்பரிற்காக எழுதியது சம்பந்தப் பட்டவரின் வலையில் புலம்பெயர் தமிழர்களும் விழுந்து தங்கள் காணிகளை பேரினத்தின் கைகளிற்கு கொடுத்து விடாமலிருப்தற்காகவே இங்கும் இணைத்திருக்கிறேன். இககட்டுரையை நீக்கச் சொல்லி யாழ் நிருவாகத்திற்கு அழுத்தங்கள் வரலாம் காரணம் சம்பந்தப் பட்டவர் யாழ்கள உறுப்பினராகவும் இருக்கிறார்.இதனை நீக்குவதும் விடுவதும் நிருவாகத்தை பொறுத்தது ஆனால் இவர்கள் போன்றவர்களை அடையாளம் காட்டுவது மட்டுமே எனது வேலை நன்றி

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினராக இருந்து கொண்டு...

இராணுவம், ஒட்டுக்குழுக்களின் துணையுடன், தமிழர் காணிகளை ஏமாற்றி....

முஸ்லீம்களுக்கு விற்பது அவமானம். அந்த உறுப்பினர், இனியாவது அந்தப் பாவமான செயலை நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினரா?

இவரை எங்கையோ பாத்தமாதிரி இருக்கே...............

  • கருத்துக்கள உறவுகள்

பிரசாந்தன் என்று ஒரு உறுப்பினர் இருக்கிறார்.. திண்ணையில் கதைத்ததுண்டு.. அவரா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினராகவும் இருக்கிறார்

யாரந்த உறுப்பினர்?? இப்படியானவர்களின் முகத்திரையை நார் நாராக கிழிக்க வேண்டும்.

ஓ விளங்குகிறது.

veena.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தாரக்கி என்று ஒருவர் இருந்தார் அவரோ தெரியாது :unsure: அவரும் கிழக்கு மாகணம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

தாரக்கி என்று ஒருவர் இருந்தார் அவரோ தெரியாது :unsure: அவரும் கிழக்கு மாகணம் தான்

அனேகமாக படத்தின் பெயரை பெயராக கொண்டவராக இருக்கலாம்.

QT_thesamnet_20Aug11_01.jpg... இங்கு லண்டனிலும் இவரொருவர் ... டக்லஸின் மச்சானும், ஈபிடிபி கும்பலின் முக்கியஸ்தகர் .. அங்குள்ள காணிகளை, சந்தை விலையிலும் பார்க்க பரப்பிற்கு 5 லட்சம் கூடத்தாறம், டீலை இங்கேயே முடிக்கிறம் ...

... பெண்களை வாழ்க்கையில் தொடாத ... கற்புக்கரசன் ... பிரமச்சாரியார் குத்தியரின் வாரிசுகளுக்கா? இக்காணிகள்?????? ... குத்திக்கு ஓடர் வந்திருக்கும், ஆடுது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினராக இருந்து கொண்டு...

இராணுவம், ஒட்டுக்குழுக்களின் துணையுடன், தமிழர் காணிகளை ஏமாற்றி....

முஸ்லீம்களுக்கு விற்பது அவமானம். அந்த உறுப்பினர், இனியாவது அந்தப் பாவமான செயலை நிறுத்த வேண்டும்.

நிறுத்துவார் என எதிர் பாப்போம். நிறுத்திவிட்டு வியாபாரம் செய்து பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது அதில் ஏதாவது ஒன்றினை செய்வது தமிழினத்திற்கு செய்யும் உதவியாக இருக்கும்.

யாராயிருந்தாலும் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்.

யாழ்கள உறுப்பினர் என்கிறீர்கள், யாரென்று சிலதரவுகள் தந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி நான் நினைக்கிறேன் நுணாவிலான் இணைத்த படத்திற்குரிய பெயரை கொண்டவர் என்று :unsure: ஆனால் சாஸ்திரி எந்த ஆதாரத்தை வைத்து இக் கட்டுரை எழுதினார் என சொன்னால் நல்லது...நன்றி

Edited by ரதி

யாரந்த உறுப்பினர்?? இப்படியானவர்களின் முகத்திரையை நார் நாராக கிழிக்க வேண்டும்.

ஓ விளங்குகிறது.

veena.jpg

அனேகமாக படத்தின் பெயரை பெயராக கொண்டவராக இருக்கலாம்.

நுணாவிலான் ஒருவரை பற்றி சரியாக உறுதியாக தெரியாமல் அவரை நோக்கி சுட்டு விரலை நீட்டாதீர்கள்...நீங்கள் குறிப்பிடுபவர் (வீணா) மட்டக்களப்பினை சொந்த இடமாக கொண்டவர் இல்லை அவரின் சொந்த இடம் கிளிநொச்சி அவர் சிங்கப்பூரில படிக்கவும் இல்லை இதை என்னால் உறுதியாக (100%) சொல்ல முடியும் அவரால் தாயகம் திரும்பி செல்லவும் முடியாது

விரும்பினால் சாத்திரியாரிடம் தனிமடலில தொடர்பு கொண்டு அவர் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்க

ஒரு பேப்பரில் ஒரு கட்டுரை வெளியிட்டால் பின்னூட்டம் இருக்காது. ஆனால் இணையம் அப்படி அல்ல. பின்னூட்டம் இடும் போது, உங்களுக்கு 100 இற்கு 100 வீதம் சரியாக தெரிந்தால் மட்டுமே ஒருவர் பெயரை சந்தேகிக்கவும். 99% தெரிந்தால் கூட 1% சந்தேகத்துக்கு மதிப்பு கொடுத்து பேசாமல் இருங்கள். இதில் நுணா போட்ட படம் வீணையை பெயராகக் கொண்டவரை சுட்டிக் காட்டுகின்றது. அது மிகத் தவறு.

வீணா எனும் கள உறவுக்கு ஏற்பட்ட / ஏற்படப் போகும் மன வருத்தத்திற்காக யாழ் நிர்வாகம் சார்பில் என் மன்னிப்பு

தமிழில் investigation journalism ஏன் இல்லை என்று விளங்குகின்றது.

உங்கள் எழுத்து மற்றவர்களை காயப்படுத்த விடும்போது, தோற்றுப் போவது நீங்கள் தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக் கட்டுரையில் சம்பந்தப் பட்டவரின் முழுப்பெயர் விபரம் புகைப்படம் இணைத்துள்ளேன்.அவரின் பிறந்த திகதி வருடம் இடம் கூட இணைக்முடியும். அது மட்டுமல்ல அவரின் நெருங்கிய உறவினரான த.தே.கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினரையும் இக் கட்டுரை எழுதமுன்னர் தொடர்பு கொண்டு செய்திகளை உறுதி செய்தபின்னரே இதனை எழுதியிருந்தேன். வேண்டுமானால் அந்த பாராளுமன்ற உறுப்பினரின் அனுமதி பெற்று அவரின் பெயரை இங்கு தெரியப் படுத்துகிறேன். அதேவேளை பிரசாந்தன் யாழில் என்ன புனைபெயரில் எழுதுகிறார் என்று பகிரங்கப்படுத்தி அவரை அவமானப்படுத்துவது எனது நோக்கமல்ல. அதனை செய்யப் போவதுமில்லை.அவர் இதனை படித்து தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும் எனபதுதான் எனது நோக்கம்.எனவே யாழ் உறவுகள் அவராக இருக்குமா இவராக இருக்குமா என மற்றவர்களை சந்தேகிக்காமல் செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டு்க்கொள்கிறேன் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை கிளிக் பண்ணியபோது(save as) veena என வந்ததால் அவரோ என சந்தேகப்பட்டேன்.வீணாவிடம்,யாழ் களத்திடமும் மன்னிப்பு கேட்கின்றேன்.

படத்தில் இருப்பவர் யாழ் கள உறுப்பினராக இருக்குமிடத்து அவர் பகிரங்கப்படுத்த வேண்டியவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படத்தை கிளிக் பண்ணியபோது(save as) veena என வந்ததால் அவரோ என சந்தேகப்பட்டேன்.வீணாவிடம்,யாழ் களத்திடமும் மன்னிப்பு கேட்கின்றேன்.

படத்தில் இருப்பவர் யாழ் கள உறுப்பினராக இருக்குமிடத்து அவர் பகிரங்கப்படுத்த வேண்டியவர்.

அது என்னுடைய தவறும்தான் நான் இப்பிடித்தான் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதாவது பெயரை கோப்புகளிற்கு போடுவது வழைமை வே னா எண்டதை ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன்.

... எனக்கும் ஒரு முன்னால் நண்பர் ... யாழ்கள துப்பறியும் சிங்கமும் ... இப்போ கேபியின் வலதுகரமாம்!!!!!!!! ... அவரது நீண்ட கால நண்பர் சொன்னார் "கேபி தற்காலிக தங்குமிடம் தான், கேபியின் கயானா காலியாக வேறிடம் அவர் தாவுவார்"!!!!! ... உண்மை ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, .. முன்னர் அவர் புலி .. அதன் பின் அவர் தீப்பொறி ... இடைநாளில் அவர் ஈஎன்டிஎல்எப் முஸ்தப்பாவின் வலதுகரம் .. பின் மீண்டும் பொட்டரின் இடதுகரம் ... முள்ளிவாய்க்கால் முடிய நாகதஅ இன் ஆரம்பகால தூண் ... இப்போ கேபி ... ம்ம்ம்ம் நாளை மீண்டும் புலியாகலாம் .. புலிகளின் கைகளில் பணம் புரள????????

... ... பணம் என்றால், பிணமும் வாயை பிளக்குமாம் ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரை எங்கையோ பாத்தமாதிரி இருக்கே...............

பார்த்திருப்பிங்கள்,சிலவேளை உங்களோடை பேஸ்புக்கிலை இருப்பார் பாருங்கோ.. :unsure::(

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிக்கு சாத்திரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.