Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க டில்லி பணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக காவல்துறை ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி காவல்துறை ஆணையர், கியூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போன்றோருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார்.

தமிழருக்கு என தமிழீழம் உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சட்ட விரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது.

தோல்வியடைந்த பின்னர் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கைவிடாமல், ஐரோப்பாவில் நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகள் வழியாகவும், தனி ஈழம் அமைப்பதற்காக, மறைமுகமாக செயல்பட்டு வருவதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அல்லது போராளிகள், சிதறிக் கிடக்கிற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரிவினைவாத தமிழ் பற்றார்வக் குழுவினரும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், மக்களிடையே பிரிவினைவாத போக்கினை தொடர்ந்து வளர்த்து வருவதுடன், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது.

அதனால், பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல், குந்தகம் விளைவிப்பதாக கருதி, சட்டவிரோதமான அமைப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், உடனடியாக செயலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: http://www.eelanatha...-டில்லி-பணிப்பு

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும், தீக்கோழிக்கும் வித்தியாசம் இல்லை, நெடுக்கர்!

தலை மண்ணுக்குள், இருந்தாலும், போர்க்குற்றங்கள், வெளியே தள்ளிக்கொண்டு நிற்கின்றன!

ostrich.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. போர்க்குற்றம் ஆறின கஞ்சியாவே ஆகிடும் போலத் தெரியுது. எதிரிகள் நல்லா காய் நகர்த்திறாங்க. அந்தளவுக்கு நம்மவர்கள்.. தாயகத்திலும் சரி வெளிலும் சரி காய் நகர்த்திறதா தெரியல்ல. அதுகள்.. பதவிக்கு... தலைமைக்கு.. தகுதிக்கு.. அந்தஸ்துக்கு.. அங்கீகாரத்துக்கு.. அடிப்பட்டுக்கிட்டு இருக்குதுங்க..! :icon_idea::(

Edited by nedukkalapoovan

[size=4]ஜனநாயக ரீதியில் தனி ஈழம் அமைக்க முயற்சிப்பதில் எந்த தவறும் இல்லை. இது தமிழக அரசுக்கு தெரியும், அதை உணர்ந்து அது செயல்படும் வரையில் டெல்லியால் ஒன்றும் செய்ய முடியாது. [/size]

[size=4]

தோல்வியடைந்த பின்னர் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கைவிடாமல், ஐரோப்பாவில் நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகள் வழியாகவும், தனி ஈழம் அமைப்பதற்காக, மறைமுகமாக செயல்பட்டு வருவதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அல்லது போராளிகள், சிதறிக் கிடக்கிற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
[/size]

இது புலிகளைப்பற்றியதல்ல. இலங்கை விமானப்படை வீரர்களைப்பற்றியது.

ஜெயலலிதா கொள்ளை அடித்திருந்தாலும் புலிகளை காப்பாற்றியிருந்தாலும், சிங்மொட்டையை வைத்து சோனியாவால், அவவை ஆட்டுவிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

ஆயுதம் ஏந்தியோ ஜனநாயக வழியிலோ தமிழர் தங்கள் உரிமைக்காக போராடியே தீரவேண்டும். இந்தியாவை காப்பாற்றுவதற்காக அவர்கள் தமைத்தாம் இலங்கை சிறைகளில் போட்டு அடித்து நொறுக்கி கொலைகள் செய்ய பார்த்துக்கொண்டிருகப் போவதில்லை.

இந்தியா இந்தியாவைக்காப்பாற்ற வேண்டுமாயின் அது சீனாவிடமிருந்துதான் கப்பற்றப்படவேண்டும். பேடிப்புரோகிதர் சர்மாவும் கன்னட ஆபாச பட மந்திரிகளும் இந்தியாவை இலங்கையிடமிருந்து காப்பாற்ற முயல்வது நகைப்புக்கிடம்.

Edited by மல்லையூரான்

ஒண்டு மட்டும் ஒட்டுக்குழுக்கள் அல்லது இந்தியாவிற்கு காவடி தூக்குபவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் தமிழனுக்கு ஆயுத ரீதியாகவோ அகிம்சை ரீதியாகவோ உரிமையோ தனி நாடோ கிடைக்க இந்த பாழாய் போன இந்தியா விடாது. இந்தியா இருக்கும்வரை ஈழத்தமிழனுக்கு விடிவு இல்லை. இனியும் தமிழனுக்கு உரிமை கிடைக்க இந்த இந்தியன் விடான். புலிகள் அல்ல எந்த போராளி அமைப்பு போராடினாலும் இந்தியன் விடான். முடிவெடுங்கோ இந்தியா என்ற ஒரு தேசம் வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு என தமிழீழம் உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சட்ட விரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது.

தோல்வியடைந்த பின்னர் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கைவிடாமல், ஐரோப்பாவில் நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகள் வழியாகவும், தனி ஈழம் அமைப்பதற்காக, மறைமுகமாக செயல்பட்டு வருவதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அல்லது போராளிகள், சிதறிக் கிடக்கிற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரிவினைவாத தமிழ் பற்றார்வக் குழுவினரும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், மக்களிடையே பிரிவினைவாத போக்கினை தொடர்ந்து வளர்த்து வருவதுடன், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது.

அதனால், பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல், குந்தகம் விளைவிப்பதாக கருதி, சட்டவிரோதமான அமைப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், உடனடியாக செயலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்டை கசாயம் அறிவிப்பை பார்த்து அப்படியே சாக்கயிட்டன்..

பொடா.. குடா.. அடா ..தடா ..

சட்டங்கள் ரெடி .. உள்ள போக களி தின்ன உணர்வாளர்கள் ரெடி..(ஜெயிலில் களிதான் போடுவான்.. புரியாணியா போடுவான்)

கிந்திய ஆதரவாளர்கள்... கிந்தியத்தின் ஆதரவு கருத்துக்கள் எழுத இங்குட்டு ரெடியா..?

பிளீஸ் கம்... :icon_idea: :icon_idea:

டிஸ்கி:

பெரியவங்க வந்து ஒரு பழமொழி சொல்கிறார்கள் என்றால் அது வந்து பல நூற்றாண்டுகளாக ரெஸ்ட் செய்து அதை அனுபவத்தில் சொல்கிறார்கள்..

உதாரணத்திற்கு:

ஆமை புகுந்த கிணறும் அமினா புகுந்த வீடும் உருபடாது..

ஆமையானது ஒரு கிணற்றில் (கேணி) புகுந்து போட்டால் அந்த கிணற்றின் பக்கவாட்டு சுவற்றில் பள்ளங்களை தோண்டி மண்சரிவு ஏற்பட்டு கிணற்றை மூடிவிடும்.. அமினா( கோர்ட்டில் இருந்து வழக்கின் விபரத்தை கொண்டு வருபவன்) அவன் வீட்டுக்குள் புகுந்தால் வீட்டின் செல்வங்கள் அனைத்தும் கோர்ட்டு கேசு கச்சேரி என போகபோகுது என்று அர்த்தம்..

போகட்டும்

நாய் வாலை நிமிர்த்த முடியாது

இந்த பழமொழியும் பல தடவை பல நூறாண்டுகளாக முயற்சித்து பார்த்துதான் சொல்லி இருப்பார்கள்

இப்போ எதற்கு இந்த பழமொழி என கட்டாயம் உங்களுக்கு புரியும்.. :icon_idea: :icon_idea:

இந்த பாட்டை சரியாக உல்டா பண்ணி எழுதுபவர்களுக்கு புரட்சியின் வாழ்த்துக்களும் பரிசும் கட்டாயம் உண்டு..

சாம்பிளுக்கு நானே எடுத்து தாறன்..

கொள்ளை அடித்திடு... கொள்ளை அடித்துடு.. ஜெய்கிந்து..

ஊழல் புரிந்திடு ஊழல் புரிந்திடு ஜெய்கிந்து..

என் கிந்திய தேசம் இது..

ஊரை உலையில் போட்ட தேசம் இது..

:) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

...கிந்திய ஆதரவாளர்கள்... கிந்தியத்தின் ஆதரவு கருத்துக்கள் எழுத இங்குட்டு ரெடியா..?

பிளீஸ் கம்... :icon_idea: :icon_idea:

கூப்பிட்டீங்களா தேசி...? என்ன மகாத்மா காந்தி செத்துட்டாரா..?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டை சரியாக உல்டா பண்ணி எழுதுபவர்களுக்கு புரட்சியின் வாழ்த்துக்களும் பரிசும் கட்டாயம் உண்டு..

டேய்... கிந்த், டேய்... கிந்த்.

மிச்சம், என்னுடைய பாசையில்... மொழி பெயர்த்தால்... நாறீடும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. போர்க்குற்றம் ஆறின கஞ்சியாவே ஆகிடும் போலத் தெரியுது. எதிரிகள் நல்லா காய் நகர்த்திறாங்க. அந்தளவுக்கு நம்மவர்கள்.. தாயகத்திலும் சரி வெளிலும் சரி காய் நகர்த்திறதா தெரியல்ல. அதுகள்.. பதவிக்கு... தலைமைக்கு.. தகுதிக்கு.. அந்தஸ்துக்கு.. அங்கீகாரத்துக்கு.. அடிப்பட்டுக்கிட்டு இருக்குதுங்க..! :icon_idea::(

நான் பெரிது , நீ பெரிது என்று போட்டி போடும் தமிழர்களினால் போர்க்குற்றம் ஆறின கஞ்சியாகப் போய் விடும் என்ற எண்ணம் எனக்கும் சில மாதங்களாக ஏற்பட்டிருக்கிறது.

போர் குற்றத்தை முன்னெடுக்க போவது எம்மவரல்ல,எம்மவர் இங்கு ஊக்கியாக செயல் பாடலாமே ஒழிய வேறொன்றும் செய்ய முடியாது .போர்க்குற்றத்தை சர்வதேசம் என்றோ ஒருநாள் கையில் எடுக்கும் .

இந்த என்றோ ஒருநாள் எதுவென்று தான் கேள்வி .சர்வதேசம் அனைத்து பிரச்சனைகளிலுமே நேரம் காலம் பார்த்துக்கொண்டு இருக்கும் .எனக்கென்னவோ ராஜபக்சா குடும்பம் பதவியில் உள்ள வரை அது நடக்காது போலிருக்கு .

"முடிவேடுங்கோ இந்தியா என்றொரு தேசம் வேண்டுமா "? .இது சிலேட்டில் இந்தியா என்று எழுதி போட்டு அழிக்கும் விளையாட்டல்ல .எங்கட இயக்கங்கள் சிலவும் இப்படிதான் சிந்தித்தன .தமிழ் நாட்டை ஒருக்கா சுற்றி வந்தாலே மண்டை வெடித்துவிடும். அப்ப இந்தியா அது ஒரு பென்னாம் பெரிய நாடு அதை அவர்களுக்கு தெரிந்த விதத்தில் ஜனநாயக ரீதியில் ஆள்கின்றார்கள் .பல தமிழ் நாட்டவர்களுக்கே இந்தியாவின் விஸ்தீரணம் தெரியாது .

எங்கட பிரச்சனை அவர்களுக்கு ஒரு நகம் வெட்டுவது மாதிரி .(இதை புரியாமல் அவர்களுக்கும் அலுவல் பார்ப்போம் என்று நினைப்பதில் நட்டம் ஏதுமில்லை )

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு ஏன்... பிளட் என்னும்... பெயரில்.

ஆயுதம் தூக்கினீர்கள்.

இன்றும்... உங்கள், குணம் மாறவில்லையே...

அப்பன் அங்க இப்ப இருண்டிட்டுத்து போல .

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பனுக்கு, எப்பவும்...

நாய்க்குணம் தான்.

[size=4]பதினேழு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரன் என்று 7 லட்சம் இராணுவத்தை காஷ்மீரில் முடக்கி, ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படவும் காணாமல் போகவும், பெண்கள் மானபங்கப் படுத்தப் படுவதற்க்கும் நேரடியாக பங்காற்றும் இந்திய மத்திய அரசிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? [/size]

[size=5]ஈழத்திலிருந்து 1990இல் IPKF விலக்கி கொள்ளப்பட்டபோது, லண்டன் The Guardian[/size][size=5]இல் [/size][size=5]எழுதியிருந்தார்கள் "தமிழர்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட இந்தியப்படை நேரே காஷ்மீருக்கு அனுப்பிவைக்கப் படுகிறார்கள்" [/size]என்று.

http://www.channel4....rture-trail/4od

[size=6]Kashmirs Torture Trail[/size]

[size=6]- Channel 4[/size]

[size=5]11.10pm Tue 10 July 2012[/size]

[size=1][size=5]C4[/size]

[size=5]DURATION: 48:06[/size][/size]

[size=1][size=5]In the most militarised place on earth, one man is standing up to the armed might of the world's largest democracy. Kashmir's Torture Trail follows a Kashmiri lawyer as he uncovers India's best kept secret.[/size]

[size=5]With the world's media attention focused on repression in Syria and the threat to the Euro, the Indian state of Kashmir, nestling in the shadow of the Himalayas, is in danger of becoming a forgotten conflict.[/size]

[size=5]But in 2010 this valley in the shadow of the Himalayas erupted in some of the most violent street protests it has ever seen. Hundreds of thousands of stone-throwing teenagers took aim at heavily armed Indian Security Force troops, who returned live fire, with 118 demonstrators killed, many of them children, followed by a lock-down in which no one could get in or out of the state.[/size]

[size=5]Kashmiri lawyer Parvez Imroz has never filed a divorce or defended a thief. Instead, this veteran Supreme Court advocate has spent his entire legal career dressed in a grey morning suit and working pro-bono.[/size]

[size=5]Broke but determined, with two young children and a wife who complain he has yet to take them on a picnic, Imroz has always risked his life to keep the Indian authorities accountable in this disputed mountain state where, unseen by most of the world, an insurgency has rumbled on since 1989, claiming an estimated 70,000 lives.[/size][/size]

[size=1][size=5]Meeting the rioters to find out why they risked their lives, and accompanying a local human rights lawyer determined to investigate how India restored an uneasy peace, this powerful and shocking film uncovers a state-sanctioned torture programme that has set India on a collision course with the international community.[/size][/size]

http://www.channel4....rture-trail/4od

Kashmir’s Torture Trail - video excerpt

[size=5]Qadir Dar was a militant commander who led 10,000 men in the Muslim Janbaz Force, and who fought India until the mid-1990s, when he was captured. In this clip from a new documentary, he recounts the torture meted out to surrendered militants[/size]

[size=5]http://www.guardian....rail-video/json[/size]

[size=5]* Kashmir's Torture Trail is broadcast on Tuesday 10 July on Channel 4[/size]

http://www.guardian....o?newsfeed=true

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஈழத்தமிழருக்கு ஈழம் வேண்டுமா?

அவர்கள் அதற்கு ஒற்றுமையாக உழைக்கிறார்களா?

அவர்கள் தமக்குள் இருக்கும் சிறுசிறு பிரச்சினைகளை வறட்டுக்கௌரவங்களை மறந்து தேசம் சார்ந்து ஒரு நிலை எடுத்துள்ளார்களா?

புலிகள்

நா.க. அரசு

பேரவைகள்

.......??

..........???

இவை அனைத்தும் தத்தமது பிரச்சினைகள் வறட்டுக்கௌரவங்களை மறந்து இலட்சியம் நோக்கி ஒன்றாக பயணிப்பது எப்போது???????????????????????

அதன் பின் இது போன்ற திரிகளுக்கு கருத்து எழுதலாம்???????? :( :( :(

ஒருவருக்கும் வரட்டு கவுரவம் இல்லை விசுகு அண்ணா. ஒருஅமைப்பு அமெரிக்காவின் செல்ல பிள்ளை அது தமிழருக்கு அமெரிக்க என்ன கொடுக்க விரும்புமா அதை மட்டுமே திணிக்கும். இன்னொன்று நோர்வே இங்கிலாந்தின் செல்லபிள்ளை அது நோர்வே தமிழருக்கு எதை கொடுக்க விரும்புமா அதையே மக்கள் மீது திணிக்கும் . கிட்ட தட்ட இந்திய கூலிகள் தமிழருக்கு எதை கொடுக்க விரும்பிச்சினமோ அப்பிடியே இவர்களும். இப்போதைக்கு வடக்கு நிர்வாகம் மட்டும் போதும் ஆமி இருந்தாலும் பரவாய் இல்லை. போலிஸ் அதிகாரம் பத்து வருஷம் கழிச்சு அமெரிக்கா வாங்கி தரும். காணி அதிகாரம் முக்கியம் இல்லை குடியேற்றம் பரவாய் இல்லை நோர்வே சொல்லுது அதெல்லாம் காலப் போக்கில் சரி வரும் என்று. நம்புங்கோ என்றா யாரை நம்புவது. இந்தியா எங்களுக்கு எல்லாம் பெற்று தரும் என்று நம்பிய மாதிரி சமாதான திட்டம் மூலம் இலங்கை படைப்பலப் படுத்தலை தடுக்காமல் புலிகளின் வளர்ச்சிய மட்டுமே சர்வதேசம் தடுத்து போரில் தோல்விய தந்து யுத்தத்தை நிறுத்த முடியாத இந்த நாடுகள் ............ என்ன செய்யலாம் .???? இவளவு அழிவிற்கு பின்னரும் நாம் ஜனநாயக வழியில் போராடாமல் இப்பிடியே இருக்கலாமா? அனைத்து புலம்பெயர் அமைப்புகளும் வெளிப்படையாக இதுதான் எங்கள் கொள்கை இதுதான் எம் கோரிக்கை தமிழர் எதிர்பார்ப்பது இந்த தீர்வை தான் என்று ஒரு முடிவெடுத்தால் தான் ஒற்றுமை பலப்படும். ஓரளவு நல்ல தீர்வு கிடைக்கும் இல்லையேல் எஜமான விசுவாசம் மட்டுமே மிஞ்சும். தாயகத்தில் உள்ளவர்களுக்கு உயிர் ஆபத்து உள்ளது எமக்கு என்ன பயம்??

சிங்களப் பயங்கரவாதிகளிடம் இந்தியக் காட்டுமிராண்டிகளின் விசுவாசம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! மலையாள ஓநாய் மேனனின் அண்மைய பிச்சைப்பாத்திர விஜயத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய அரச பயங்கரவாதிகள் தமிழ்நாடு இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கத் தகுதியில்லை என்று சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள்! தமிழ்நாட்டு மக்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நேரம் நெருங்குவதை இது குறிக்கிறது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் குற்றத்தை முன்னெடுக்க போவது எம்மவரல்ல,எம்மவர் இங்கு ஊக்கியாக செயல் பாடலாமே ஒழிய வேறொன்றும் செய்ய முடியாது .போர்க்குற்றத்தை சர்வதேசம் என்றோ ஒருநாள் கையில் எடுக்கும் .

இந்த என்றோ ஒருநாள் எதுவென்று தான் கேள்வி .சர்வதேசம் அனைத்து பிரச்சனைகளிலுமே நேரம் காலம் பார்த்துக்கொண்டு இருக்கும் .எனக்கென்னவோ ராஜபக்சா குடும்பம் பதவியில் உள்ள வரை அது நடக்காது போலிருக்கு .

"முடிவேடுங்கோ இந்தியா என்றொரு தேசம் வேண்டுமா "? .இது சிலேட்டில் இந்தியா என்று எழுதி போட்டு அழிக்கும் விளையாட்டல்ல .எங்கட இயக்கங்கள் சிலவும் இப்படிதான் சிந்தித்தன .தமிழ் நாட்டை ஒருக்கா சுற்றி வந்தாலே மண்டை வெடித்துவிடும். அப்ப இந்தியா அது ஒரு பென்னாம் பெரிய நாடு அதை அவர்களுக்கு தெரிந்த விதத்தில் ஜனநாயக ரீதியில் ஆள்கின்றார்கள் .பல தமிழ் நாட்டவர்களுக்கே இந்தியாவின் விஸ்தீரணம் தெரியாது .

எங்கட பிரச்சனை அவர்களுக்கு ஒரு நகம் வெட்டுவது மாதிரி .(இதை புரியாமல் அவர்களுக்கும் அலுவல் பார்ப்போம் என்று நினைப்பதில் நட்டம் ஏதுமில்லை )

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளில் ஒருவர் முன்னால் மாமாத் தொழில் மன்னன், ஒரு சமயம் தன் சொந்தப் பிள்ளைக்கு கூட அந்தத் தொழிலை வஞ்சகம் இல்லாமால் செய்திருக்கின்றார். மானத்திற்கு புண்களான இவர்கள் பதவியின் பொருட்டு காலில் என்ன மலத்தில் கூட விழுபவர்கள். இதுவே மானில அரசியல் வாதிகளின் தராதரம் என்றால் மானிலத்தின் ஊழல்களுக்கு வசதிவாய்ப்பு செய்து கொடுத்து மகுடம் தரிக்கும் மத்தியின் அரசியல்வாதிகள், அவர்கள் மட்டும் வேற்று தேசவாதிகளா ஐயா?

இனத்திற்கு இனம் துடிக்கின்றது என்ற வேதமா தங்கள் தவிப்பிற்கு காரணம் கொய்யா?

Edited by தேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கனவாகும் நாயகன்" என்ற தலைப்பிட்ட "இந்தியா டுடே"

ல்

ஒரு கட்டுரை

எழுதியிருக்கிறார்கள்.

417740_10151026604622074_1047549303_n.jpg

Edited by Queen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கனவாகும் நாயகன்" என்ற தலைப்பிட்ட "இந்தியா டுடே"

ல்

ஒரு கட்டுரை

எழுதியிருக்கிறார்கள்.

417740_10151026604622074_1047549303_n.jpg

இல்லாமை மூன்றாண்டுகளைக் கடந்தும் கிந்தியாவின் புலித்தடை நரித்தடத்தின் சுவடாமோ?

புலியின் ஆயுதபாணி அரசியல் கிந்தியாவின் விபச்சார அரசியலுக்குள் நுளைந்துவிடும் என்ற அச்சத்திலா சோனியாவின் நாட்டாமை இலங்கைக்குள் அடிஎடுத்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.