Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பள்ளிச் சிறுமி ஸ்ருதி பரிதாப பலி- தாம்பரத்தில் கடையடைப்பு- மக்கள் கண்ணீர் அஞ்சலி-உடல் இன்று தகனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிச் சிறுமி ஸ்ருதி பரிதாப பலி- தாம்பரத்தில் கடையடைப்பு- மக்கள் கண்ணீர் அஞ்சலி-உடல் இன்று தகனம்

26 ஜூலை 2012

பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்ததது-

school-bus_CI.jpg

குழந்தையை ஏற்றிச் சென்ற ஓட்டை பஸ்

ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமாக தனது பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடல் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து வீடு வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னை மக்களை பெரிய அளவில் உலுக்கி விட்டது ஸ்ருதியின் பரிதாபச் சாவு. சென்னையின் மிகப் பெரிய பள்ளிகளில் ஒன்று பெயர் வாங்கிய ஜியோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி, தனது பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் ஓட்டையிலிருந்து கீழே விழுந்து கொடூரமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் கடும் கோபத்துடன் பஸ்சை தீவைத்து எரித்து விட்டனர். ஸ்ருதியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஊர்வலமாக ஸ்ருதியின் வீடு உள்ள வரதராஜபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது உடலுக்கு தற்போது நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் பல்வேறு தரப்பையும் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தாம்பரத்திலிருந்து வரதராஜபுரம் வரை மெளன ஊர்வலம் நடத்தினர். இதையடுத்து முடிச்சூர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டமாக இருப்பதால் போலீஸார் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

shruti-child.jpg

நான் ஏற்றிச் சென்ற பள்ளிக் குழந்தைகளை விட்ட பின்னரே மகள் பிணத்தைப் பார்த்தேன்-ஸ்ருதியின் தந்தை

நானும் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் டிரைவர்தான். எனது மகள் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து கோரமாக இறந்து போன செய்தி எனக்கு வந்ததும், நான் உடனே ஓடவில்லை. மாறாக, எனது காரில் இருந்த அத்தனை பள்ளிக் குழந்தைகளையும் பத்திரமாக அவர்களது வீடுகளில் விட்டு விட்டுத்தான் நான் எனது மகளின் பிணத்தைப் பார்க்கப் போனேன் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.

முடிச்சூரைச் சேர்ந்த சேதுமாதவனின் மகள் ஸ்ருதி, சேலையூர் ஜியோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் ஓட்டையில் விழுந்து கோரமான முறையில் பலியானாள்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன் கண்ணீர் மல்கக் கூறுகையில், பள்ளிக்கூட நிர்வாகத்தை நம்பித்தான் பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். எனது மகளைப் போல ஏராளமான சிறு சிறு பிள்ளைகளை இப்படிப்பட்ட வாகனத்தில் நம்பித்தான் அனுப்பி வைக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று பார்க்க வேண்டாமா.

நானும் பள்ளிக்குழந்தைகளை எனது ஆம்னி வேன் மூ்லம் அழைத்துச் செல்லும் டிரைவர் பணியில்தான் இருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையையும் எனது குழந்தை போல நினைத்துத்தான் நான் தினமும் அழைத்துச் சென்று வருகிறேன்.

நேற்று கூட பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தபோதுதான் எனது மகள் இறந்த செய்தி எனக்கு வந்தது. ஆனால் நான் பதறிப் போகவில்லை. மாறாக, என்னை நம்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்த அத்தனை குழந்தைகளையும், அவரவர் வீட்டில் பத்திரமாக விட்டு விட்டுத்தான் நான் எனது மகள் உடலைப் பார்க்கப் போனேன்.

எனது மகள் சாவுக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே கோரிக்கை என்றார் அழுதபடி.

ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?- ஆர்டிஓ அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று வழக்காக எடுத்துக் கொண்டது. இன்று காலை நீதிமன்றம் கூடியதும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது. இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

தெரிவித்தார். 20 நா்களுக்கு முன்புதான் அஏநுமதி தந்துள்ளார்கள் என்று கூறிய நீதிபதி, எப்படி கொடுத்தனர் என்று கேட்டார். பொறுப்பான அனைவரும் நாளை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் தர உத்தரவிட்டார்.

இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் யார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் கமுக்கமாக உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உயர்நீதிமன்றமே இதை தானாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நன்றி-oneindia

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80728/language/ta-IN/article.aspx

ஒருவர் முழுதாக விழக்கூடிய அளவுக்கு துவாரம் பெரிதாக இருந்ததை அலட்சியம் செய்து வாகனத்தை தொடர்ந்து பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தியமை அதிர்ச்சி அளிக்கின்றது.

இதுக்குள்ளை வருங்கால வல்லரசாம் கண்டியளோ மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ஆனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயமாக ஒரு சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இதில் சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளும் சிறையில் அடைக்கப்படவேண்டும்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தையை, பாடசாலையில் சேர்க்கும் போது பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை டொனேஷனாக கேட்டும் பாடசாலை நிர்வாகம், தனக்குச் சொந்தமான பாடசாலைப் பேரூந்தில் இவ்வளவு பெரிய ஓட்டையுடன் பிள்ளைகளை ஏற்றிச்சென்றது மன்னிக்க முடியாத குற்றம்.

இதற்காக அந்தப் பாடசாலை நிர்வாகம், வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பெரியவர்களின் தவறால்... தனது உயிரை இழந்த சிறுமி ஸ்ருதிக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

26-shruti-child.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்த மாணவி பலி: பொதுமக்கள் பேரணியாகச் சென்று அஞ்சலி (படங்கள்)

bus-school-001.jpg

bus-school-002.jpg

bus-school-004.jpg

bus-school-005.jpg

bus-school-006.jpg

bus-school-009.jpg

bus-school-015.jpg

bus-school-017.jpg

bus-school-021.jpg

படங்கள் நக்கீரன்.

வாகனங்கள் ஓட்டுவோர் சட்டதிட்டங்களை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி தமது வாகனத்தை சோதனை செய்து திருத்தங்களை செய்ய வேண்டும்.

சிறுமி ஸ்ருதிக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.

:( :( :(

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்சீனக்கடலில் துளைபோடும் கனவை விட்டுவிட்டு பஸ் ஓட்டைகளை அடைத்தால் நல்லது.

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தவிர்த்திருக்கப் பட வேண்டிய, மரணம்!

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.