Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்பு தாங்கமுடியாமல் பேஸ்புக்கை விட்டு கருணாநிதி ஓட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karuna-17812-150.jpg

[size=4]தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர்.[/size]

[size=4]துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.[/size]

[size=4]நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி மிக கடுமையான பதிவுகள் பதியப்பட்டன. இந்த பதிவுகளுக்கு, இந்த பக்கத்தில் இணைந்து இருந்த, பல தி.மு.க.,வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர்.[/size]

[size=4]இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியை பற்றி கடுமையான விமர்சனங்கள் அதிகமாயின. இதனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில், விமர்சனங்களை பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர், மாலை 6 மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல் போனது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே... :D

இப்படியெல்லாம் நடக்குதா? :D :D

[size=4] [/size][size=1][size=4]தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம்[/size] :rolleyes:[/size]

[size=3]FACE BOOK - ஐ விட்டே தூக்கி எறியப்பட்ட மு.கருணாநிதி..! டாட்.காம் - ல் இருந்து தூக்கி எறியப்படுவது எப்போது..? ஈழதேசம் செய்தி..![/size]

[size=3]

தி.மு.க., தலைவர் மு.கருணாநிதி அவர்கள் நேற்று முன்தினம் கலைஞர் கருணாநிதி என்ற பெயரில் FACE BOOK கணக்கை துவங்கினார். பெரிய பெரிய பீடிகைகளுடன் இந்த முக நூலில் நுழைந்தார். எப்போ எப்போ என்று காத்துக் கிடந்த புலம் பெயர் இளைஞர்கள், தமிழர்கள், உலகத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் என்று அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே புகுந்தனர். கணக்கு துவக்கிய அன்றே சுமார் 2700 பேர் தங்களை பதிவு செய்து உள்ளே புகுந்து கேள்விக் கணைகளை என்று சொல்ல முடியாத அளவிற்கு கருத்துக்களை அள்ளி வீசினார்கள். தி.மு.க.வின் இணையதள அடிமைகளும், அடிவருடிகளும் எவ்வளவோ முயன்றும் பதில் சொல்ல முடியவில்லை. பிடித்தார்கள் ஓட்டத்தை. முக நூல் என்ற கணக்கை விட்டே தூக்கி எறியப்பட்டார்கள். [/size]

[size=3]

நேற்று மாலை வரை சுமார் 5000 பேர் கருணாநிதியின் முக நூல் பக்கத்தில் இணைந்தார்கள். மு.க.வின் முக நூல் பக்கத்தில் டெசோ மாநாட்டுத் தீர்மானம் மற்றும் அவரது பேச்சுக்கள், மாநாட்டு தீர்மானங்கள், அறிக்கைகளை போட்டு இருந்தார்கள். மு.க.வின் அடிமைகள் என்ன நினைத்தார்கள் என்றால், இணையதளத்தில் புகுவதன் மூலம் உலகத் தமிழர்களையும் புலம் பெயர் தமிழர்களையும் மாங்காய் மடையர்களாக மாற்ற முடியும் என்று நம்பினார்கள். முக நூல் பக்கம் என்ன சன் டி.வி. கும்பல் நடத்தும் நிறுவனம்..? என்று நினைத்து விட்டார்கள் போலும். [/size]

[size=3]

எப்போ எப்போ என்று காத்திருந்த ஈழத் தமிழர்கள் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்கள். முக நூலில் கருத்துக்களை சொல்லி தப்பிபதற்கு இதென்ன ஜெ அம்மையாரிடம் நடத்தும் அரசியலா..? என்றார்கள் இணையதள எழுத்தாளர்கள். தி.மு.க.வின் அடிமைகளும், ரவுடிகளும் எவ்வளவோ பதில் சொன்னார்கள்.மிரட்டினார்கள்,திட்டினார்கள்.ஒரு கட்டத்திற்கு மேல் மு.க.வின் சொந்த வாழ்க்கை, ஊழல், அரசியல் மோசடித் தனம், அளவுக்கு மீறிய சொத்துக்குவிப்பு என்று போட்டு தாக்கியதில் மு.க.வின் கொள்ளைக் கூட்டமும் அடிமைகளும் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள். நேற்று மாலை ஆறு மணிக்கு இணையதளத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்டார் மு.கருணாநிதியும் அவரது கும்பலும். [/size]

[size=3]

இன்றைய செய்திகளில் இவ்வாறு கூறினார்கள் மு.க.வின் அடிமைகள். மு.கருணாநிதி FACE BOOK - ல் இணைந்ததின் மூலம் அதாவது முக நூல் கணக்கு தொடங்கியதின் மூலம் இன்றைய இளைஞர்களுடன் நவீன இணைய தள ஊடகங்களின் வழியாகவும் தனது கொள்கைகளை விளககி, உலக தமிழ் இளைஞர்களை கவர ஆரம்பித்து விட்டார் என்று உரக்க கூச்சலிட்டார்கள். [/size]

[size=3]

ஒரு கட்டத்தில் கருணாநிதியின் அடிவருடிகள் பதில் சொல்ல முடியாமல் மூச்சு திணறி ஓட்டம் பிடித்தார்கள். இனிமேலும் நாம் இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கருதி, முக நூல் அக்கவுன்ட் - டை க்ளோஸ் பண்ணி விட்டு தலைமறைவானார்கள். இந்த மேற்கண்ட காரணங்களால் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு தலை தெறிக்க ஓடிய மு.க.,வும் அவரது கும்பலும், ரொம்ப நேரம் யோசித்து தான் வாங்கிய அடிகளை மறந்து கருணாநிதி .காம் என்ற பெயரில் புதிதாக ஒரு கணக்கை துவங்கியுள்ளது. முக நூல் கணக்கை விட்டே துரத்தியடிக்கப்பட்ட மு.க.வை டாட்.காம் - ஐ விட்டே துரத்துவதற்கு தயாராகுங்கள் புலம் பெயர் இளைஞர்களே..உலகத் தமிழர்களே என்று அறைகூவல் விடுக்கின்றன ஈழதேசம் இணையம். [/size]

[size=3]

மாயாண்டிக்கருப்பு [/size]

உண்மையில் முதல்வருக்கு face book ஆள் உள்ள ஆபத்துக்களும் ,சங்கடங்களும் தெரியாதுபோல் ..........

youtube இலும் இணைந்திருக்கிறார்.

http://www.youtube.com/thalaivarkalaignar

முதலாவது காணொளி

( Comments are disabled for this video. , 8 likes, 9 dislikes)

ரவுடித்தனத்தை காட்டி அபகரித்த காணிகளை பாதுக்காக தன்னை சுற்றி தி.மு.க இரும்புத் திரையை போட்டிருந்தது. இப்போ அதை கடந்து வெளியே வந்தால் தனக்கு கொலைதான் விழக்காத்திருக்கிறது என்பதை மெல்ல மெல்ல உணரத்தொடங்குகிறது.

அண்ண அந்த காலத்திற்கு புதுமையாக இருந்த சினிமாவை பாவித்து கிந்திய மேலாதிக்கவாதிகளிடம் தம்மை அர்ப்பணித்து களத்தில் தூங்கிய மக்களின் சுதந்திர உணர்வுகளை எழுப்பி தி.மு.கா வை கட்டி எழுப்பினார். கருணாநிதி ஒட்டு மொதமாக அந்த திரை அரங்குகள் எல்லவற்றையும் அடிமைப்படுத்தி தனது பணக்குதிரைகளை தட்டி எழுப்பி பறக்க வைத்தார். அதனால் அகிலம் முழுவதும் காலை வெய்யில் கணனிவலையில் அலையாடும் போது தான் தனது பணத்தலையணையில் உல்லாசமாக துயில்கொண்டுடிருந்துவிட்டார். கலைரசனையான கற்பனையுடன் அந்த நாளைய புதிய அலையான சினிமாவை அரசியலுக்கு பாவிப்பதில் தனித்துவம் பெற்றிருந்த தி.மு.க. கருணாநிதி காலத்தில் களவெடுப்பதில் தனிதுவம் அடைந்து அதில் காலத்தை செலவழித்துவிட்டு இப்போ கற்பனை இல்லாத ஒரு காட்டுமிராண்டி, ரவுடிகளின் கட்சியாக மாறியிருக்கிறது. என்ன வண்டி கடந்து போய்விட்டதா? இல்லை இன்னமும் தொற்றிகொள்ள இடமிருக்கிறதா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரூப்பிளிகேட் ஐடி போய் கும்மாங்குத்து குத்தினேன்.. நோ ரெஸ்பான்ஸ்... :) :)

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

நன்றி புரட்சி

அதை நீங்கள் செய்வது தான் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பு தாங்கமுடியாமல் பேஸ்புக்கை விட்டு கருணாநிதி ஓட்டம்!

பேஸ்புக்கிலேயே அரசாங்கம்,அமைச்சுக்கள்,பாராளுமன்றம் எல்லாம் இருந்தால் எவ்வளவு நல்லது..எதிர்ப்புக்காட்டியே கலைச்சுப்போடலாம்...lol... :D

Edited by சுபேஸ்

உலகெங்கும் தமிழர் போராட்டத்துக்கு எதிரான அபிப்பிராயங்களை தோற்றுவித்துக் கொண்டும், போர்க் குற்றங்களை மறைக்க தம் இராணுவ சாகசங்களை காட்டி தம்மை நியாயப்படுத்த வல்லரசுகளுக்கு பயங்கரவாத எதிர்ப்பு முறியடிப்பு கருத்தரங்கு என்று இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்க அதை முறியடிக்க முயலாத, கையாலாகாத நாம் தாம் செயலற்ற அதிகாரத்தில் இருக்கும் கருணாநிதியின் முகப்புத்தக மூடலை வெற்றி என்று கொண்டாடுகின்றோம்.

வெட்கப்பட வேண்டிய நேரங்களிலும் வீர பிரதாபங்களை மெச்ச எம்மால் தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் கணக்கு ஒரே நாளில் முடங்கிவிட்டதாக வதந்திகள் பரவியுள்ள நிலையில், அந்தக் கணக்கு 7,500 ஃபாலோயர்ஸுடன் நன்றாகவே இயங்கி வருகிறது.

சமூக வலைத் தளங்களில் திமுக குறித்து கடுமையான விமர்சனங்கள் இடம் பெற்று வருகின்றன.

ஆரம்பத்தில் அசட்டையாக இருந்த திமுக, இப்போது சமூக வலைத் தளங்களில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

பல ஆயிரம் திமுகவினர் தங்கள் சொந்தப் பெயர்களில், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகங்களின் பெயர்களில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து, திமுக எதிர்ப்பாளர்களை வெளுத்துக் கட்ட ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதி ட்விட்டர், பேஸ்புக், யுட்யூப் போன்றவற்றில் கணக்கு தொடங்கி, திமுக மற்றும் தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை எழுத ஆரம்பித்தார். அவரது அறிக்கைகளும் இவற்றில் இடம்பெற்றன. நேற்று முரசொலி மாறன் பிறந்த நாளில் தனக்கான தனி இணையதளத்தையும் கருணாநிதி தொடங்கினார்.

இதற்கிடையே, கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் தொடங்கிய ஒரே நாளில் முடங்கிவிட்டதாக ஒரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டனர். பேஸ்புக்கில் உள்ளவர்களின் எதிர்ப்பு மற்றும் கமெண்ட்களுக்கு பயந்து கணக்கை முடக்கி விட்டதாக செய்தியும் வெளியிட்டுள்ளனர்.

கோயிங் ஸ்டெடி....

ஆனால் உண்மையில் 7500 ஃபாலோயர்ஸுடன் அவரது பக்கம் லைவாகவே உள்ளது. http://www.facebook.com/Kalaignar89 எனும் அந்த பக்கத்தில், நேற்று முரசொலி மாறன் பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செய்த படம் மற்றும் செய்தியையும் கருணாநிதி பதிவேற்றியுள்ளார்.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

கடும் விமர்சனம்: கண்காணிப்பில் கருணாநிதியின் ஃபேஸ்புக்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் ஃபேஸ்புக் வலைதளத்தில் மிகக் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து,விமர்சனங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ட்விட்டரை (www.twitter.com/kalaignar89)தொடர்ந்து,ஃபேஸ்புக்கிலும் (www.facbook.com/kalaignar89) கணக்கு தொடங்கிய கருணாநிதி,தனக்கென பிரத்யேக இணைய தளத்தையும் (www.kalaignarkarunanidhi.com) நேற்று தொடங்கினார்.

இந்நிலையில், கருணாநிதியின் ஃபேஸ்புக் வலைதளத்தில் நேற்று மிகக் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அது தற்காலிகமாக மூடப்பட்டது.

[size="2"] [/size]

பிறகு கண்காணிப்பு வசதியோடு இன்று கருணாநிதியின் பேஸ்புக் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது. மிகக் கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அந்த பதிவர்களுக்கு பேஸ்புக்கில் நுழைய தடை செய்யப்பட்டு, விமர்சனங்கள் அனைத்தும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

vikatan News

293165_4378484738548_291547597_n.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=2] [/size]

பிறகு கண்காணிப்பு வசதியோடு இன்று கருணாநிதியின் பேஸ்புக் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது. மிகக் கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அந்த பதிவர்களுக்கு பேஸ்புக்கில் நுழைய தடை செய்யப்பட்டு, விமர்சனங்கள் அனைத்தும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

vikatan News

இப்படி தடைசெய்யப்பட்ட கணக்கில் என்னுடையதும் ஒன்று.. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் விடயத்தில் கருணாநிதி அழியாவடுவை தந்தவர்.இதை உலகத்தமிழினம் என்றுமே மன்னிக்காது.ஆனால் தமிழ்நாடு மன்னிக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.